Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை பாதுகாக்க சீனா இராஜதந்திர ரீதியாக முயற்சி

Featured Replies

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை பாதுகாக்க சீனா இராஜதந்திர ரீதியாக முயற்சி MAR 09, 2015by கார்வண்ணன்in செய்திகள்

Yi-Xianliang-300x200.jpgசிறிலங்கா அரசாங்கத்தினால், இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டைப் பாதுகாப்பதற்கு, சீனா தனது இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை கடந்த புதன்கிழமை முடிவெடுத்திருந்தது.

இதையடுத்து, அண்மையில் பொறுப்பேற்ற சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதையடுத்து. கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,   சீன- சிறிலங்கா உறவுகள் குறித்து இருதரப்பும் நட்புரீதியாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், சீன – சிறிலங்கா பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புத் தொடர்பாக, குறிப்பாக, பிரதான திட்டங்களில் ஒத்துழைப்பது பற்றிய வெளிப்படையான கருத்துக்களை சீனத் தூதுவர் பரிமாறிக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Yi-Xianlian-ranil.jpg

Yi-Xianlian-mangala.jpg

ஆனால், கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்தே இந்தச் சந்திப்புகளில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, தனது பெயரை வெளியிட விரும்பாத சீனத் தூதரக உயர் அதிகாரி ஒருவர், தான் செய்து கொண்ட இருதரப்பு மற்றும் வர்த்தக உடன்பாடுகளை மதிக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தினால் சிறிலங்காவுக்கு எந்த செலவும் ஏற்படாது. ஆனால்,  நாட்டின் பொருளாதாரத்துக்கும், மக்களுக்கும் நன்மையை மட்டுமே அளிக்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களை நிறுத்துவதன் மூலமும்,  ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி,  கொள்கையை மாற்றிக் கொள்வதன் மூலமும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தி அனுப்பப்படுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு, ஒரு நாட்டின் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடுகள், வர்த்தக உடன்பாடுகளை  புதிய அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டியது, அதன் கடமை. இது ஒரு அனைத்துலக நெிறிமுறையாகும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சட்டரீதியான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

துறைமுக நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளதால், சிலர் இந்த திட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இது துறைமுகத் திட்டம் அல்ல.  இது ஒரு நகர அபிவிருத்தி திட்டம்.

இந்த திட்டம் நிறைவடையும் போது, பரந்தளவிலான பொருளாதார சமூக நன்மைகளுடன் கூடிய, சிறிய சிங்கப்பூர் போன்று இருக்கும்.” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/03/09/news/4251

 

  • கருத்துக்கள உறவுகள்
சொறிலங்கா இந்தியாவை நம்பி சீனாவை விட்டால் அதோ கெதிதான்!
இந்திய அரசியல் வாதிகளால் இந்தியாவே முன்னேற முடியாது தவிக்கிறது. 
 
சுஷ்மா கஸ்மா என்று அப்பப்ப வந்து ஓசியிலே சாப்பிட்டுவிட்டு போகத்தான் அவர்கள் லாயக்கு. 
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இப்போது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீனாவைக் கைவிட்டு வெளியேறமுடியாது. தொலைத்தொடர்புகளுக்கான வலைப்பின்னல்களில் சீன நிறுவனங்கள் மிகவும் நிதானமாகவும் உறுதியாகவும் தென்கிழக்காசிய நாடுகளில் காலூன்றிவிட்டன, huawei தொலைத்தொடர்பு நிறுவனம் போன்றவை இப்போது அமெரிக்காவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது.

 

சிறீலங்காபோன்ற சிறிய நாடுகளை அடிபணியவைக்க சீனாவுக்கு ஒருமணிநேரம் போதும் கொழும்புப் பங்குச்சந்தையில் சீரழிவை ஏற்படுத்தி இவ்விடையத்தைச் சாதிச்சுக்கொள்ளனாம்,

 

"நெற்றின்றி சுழராது இப்பூவுலகு"

 

தொலைத்தொடர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நவநீதகிருஸ்ணன் மற்றும் மகிந்தவின் கட்டுமானங்கள் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

 

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனா ஒன்றும் ஆபத்தான நாடாக எனக்குப்படவில்லை. தவிர சீனாவைத் தவிர்த்து உலகில் இனிமேல் எந்த நாடும் இருந்துவிட முடியாது.

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.