Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு ஜே.விபி கண்டனம் - தேசிய நிறைவேற்றுப் பேரவையை கூட்டுமாறு ஜே.வி.பி அவசர அழைப்பு

Featured Replies

jvp_CI.jpg

 

நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கு ஜே.விபி தலைவர் அனுரகுமார திசநாயக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சி என்றவொன்றில்லாமல் போயுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டில் தற்போது காணப்படும் செயற்கையான ஜனநாயகத்தை கருத்தில்கொண்டு, சபாநாயகர் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு உதவிய சிவில் அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னர் தேசிய நிறைவேற்று சபையிலிருந்து விலகுவது குறித்த முடிவையெடுக்கப்பபோவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
 
கட்சி, அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளதுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமை மக்கள் வழங்கிய ஆணைக்கு துரோகமிழைக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளது.
 
தற்போதுள்ள ஐக்கிய தேசியகட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணியே எனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இன்று காலை நடைபெறவிருந்த தேசிய நிறைவேற்று சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தனது கட்சி சுட்டிக்காட்டுவதாகயிருந்தது எனினும் திடீர் என அக்கூட்டம் இரத்தாகியுள்ளது. அரசாங்கம் ஊழலில் ஈடுபட்டவர்களை பாதுக்கின்றது, எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
 
 
தேசிய நிறைவேற்றுப் பேரவையை கூட்டுமாறு ஜே.வி.பி அவசர அழைப்பு
 
தேசிய நிறைவேற்றுப் பேரவையை கூட்டுமாறு ஜே.வி.பி அவசர அழைப்பு விடுத்துள்ளது.
 
புதிய அமைச்சரவை நியமனம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது.
 
இன்றைய தினம் தேசிய நிறைவேற்றுப் பேரவை அமவுர்கள் நடைபெறவிருந்ததாகவும் பின்னர் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் ஜே.வி.பி அறிவித்துள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமைக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.