Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் என்னுடைய தலைவர், ஆனால் நரேந்திரமோடி எனது அரசியல் வழிகாட்டி! - சிறிதரன்

Featured Replies

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால்,  இலங்கை அரசாங்கங்கள் அவரை புலிகளின் முகவர் என கூறிவருகின்றன.

விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேர்ணல் தீபன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மைத்துனர் என்பதும் இதற்கு வலுசேர்க்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விடயத்தில் சிறிதரன் இந்தியா அலட்சியமாக நடந்து கொண்டதாக அவர் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

எனினும் சிறிதரனின் இந்த அரசியல் நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் அவருடன் நடத்திய நேர்காணலில் அறிய முடிந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

“ இன்னும் எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்” சிறிதரன் உறுதியாக கூறினார். “ ஆனால் மோடி எனது அரசியல் முன்மாதிரி” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுபாஸ் சந்திரபோஸ், அன்னை இந்திரா காந்தி, அன்னை தெரேசா போன்ற நீண்டகாலம் நிலையில் நிலைத்து நிற்க கூடிய இந்திய தலைவர்களின் வரிசைக்குரியவர் எனவும் சிறிதரன் கூறியுள்ளார்.

மோடி ஏன் எதற்காக நீங்கள மோடியை அரசியல் முன்மாதிரியாக எடுத்து கொண்டுள்ளீர்கள் என கேட்டதற்கு பதிலளித்துள்ள சிறிதரன், அவரது தெளிவான சிந்தனை கொண்டவர், சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்து மிகவும் உயர் மட்டத்திற்கு வந்தவர் என சிறிதரன் கூறினார்.

எல்லாவற்றிக்கும் மேல் கடவுளின் கருணை வேண்டும். அவர் கீரிமலை கோயிலில் வாழிபாடு செய்த போது அவரது கடவுள் பக்தியை பார்த்தேன்.

அத்துடன் அவர் உள் கண் கொண்டு அவரது எமது பிரச்சி்னைகளை தெளிவாக பார்த்தார் என நான் உணர்ந்தேன்.

மோடி இலங்கை தமிழர்களுக்கு சுய உத்தரவாதத்தையும் அதிக நம்பிக்கையையும் கொடுத்தார்.

தமிழர்கள் மத்தியில் அவர் தைரியமாக இந்தியில் பேசியதன் மூலம் சுய உத்தரவைவாதம் தேவை என்பதை உணர்த்தினார்.

அவரது நாட்டின் மொழியில் பேசியதை நான் பாராட்டுகிறேன். அவர் வணக்கம் போன்ற தமிழ் வார்த்தைகளை கூறிய போது அதில் அதிகமான அர்த்தங்கள் இருந்தன.

தமிழர்களின் பிரச்சினைக்கு குறித்து பேச காலஅவகாசத்தை வழங்குமாறும் மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படுமாறும் மோடி கூறிய அறிவுரையை தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர்.

பிரபாகரனின் கோட்டில் இருந்து பார்ப்பதை இந்தியர்கள் தவிர்த்து கொண்டனர்.

பூகோள அரசியல் எதார்த்தத்தின்படி இந்தியாவின் உதவியின்றி எம்மால் எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அத்துடன் இந்தியாவின் சொந்த பாதுகாப்புக்கு நாங்கள் இந்தியாவுக்கு அவசியமானவர்கள்.

இந்தியாவுக்கு அமைதியான யாழ்ப்பாணம் தேவைப்படுகிறது. காரணம் யாழ்ப்பாணம் என்பது தென் இந்தியாவை அதிரவைக்கும் வெடிப்பொருளின் வெடி திரி எனவும் சிறிரதன் கூறியுள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr6F.html

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் யாழ்ப்பாணம் என்பது தென் இந்தியாவை அதிரவைக்கும் வெடிப்பொருளின் வெடி திரி எனவும் சிறிரதன் கூறியுள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது

சிறிதரா தப்பு தப்பு ...அப்படி சொல்லியிருக்க கூடாது...இப்படி சொல்லியிருக்க வேண்டும்.....யாழ்ப்பாணம் என்பது ஆஞ்யநேயரின் வால் பட்ட இடம் என்று :D

Edited by putthan

எது எப்படியோ தலைப்பு மட்டும் முன்னேற்றத்துக்கான வழி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.