Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி?

  • 23 நிமிடங்களுக்கு முன்னர்
பகிர்க

தொலைந்துபோனப் பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது சலிப்பையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு செயல்.

150506135234_theft_lostphone_gch_640x360கைத் தொலைபேசிகளை தொலைப்பது சுலபம் ஆனால் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் வல்லுநர்கள்

அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த கைத் தொலைபேசி என்றால் அது உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும்.

சரி, தொலைந்துபோன தொலைபேசியை சுலபமாக கண்டுபிடிக்க முடியுமென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே.

அவ்வகையில் காணாமல்போன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சில வழிமுறைகளை பிபிசி கிளிக் ஆராய்கிறது.

ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள்

கடந்த ஏப்ரல் மாதம் ‘Find my phone’ அதாவது எனது தொலைபேசியை கண்டுபிடியுங்கள் என்று தட்டச்சு செய்து கண்டறியும் புதிய வழியை கூகிள் அறிமுகப்படுத்தியது.

150506134803_android_lostphone_gch_640x3ஒவ்வொரு தொலைபேசியிலும் பல வசதிகள் உள்ளன

கூகிள் இயங்குதளமான ஆண்ட்ராய்ட் மூலம் செயல்படும் செயலியுடன் உங்கள் தொலைபேசி தொடர்புபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதை நீங்கள் உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்யாவிட்டாலும் அல்லது அதை செயல்படுத்தாவிட்டாலும் கூட அது உதவும்.

இதன் மூலம் உங்கள் கைத் தொலைபேசி எங்குள்ளது என்பதை அறிந்து கொள்வது மட்டுமன்றி, அதை முழு அளவில் அலற வைக்கவும் முடியும். நீங்கள் அமர்ந்திருந்த சோஃபாவின் இடுக்கில் தொலைபேசி மறைந்திருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம்.

அதுமட்டுமல்ல கூகிள் இணையதளத்திலுள்ள டிவைஸ் மானேஜர் பக்கத்துக்கும் சென்று காணாமல்போன தொலைபேசியைக் கண்டுபிடிக்க மட்டுமல்ல அதை முடக்கவும் முடியும்.

ஆப்பிள் தொலைபேசிகள்

ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கலாமோ அதேபோல் ஆப்பிள் கைத் தொலைபேசிகளையும் ஐ க்ளவுடுக்குள் லாகின் செய்து அதை கண்டுபிடிக்க முடியும்.

150506134942_iphone_lostphone_gch_640x36காணாமல் போன கைப்பேசி எங்குள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்

அப்படி லாகின் செய்யும்போது காணாமல் போன தொலைபேசியை கண்டுபிடிக்கவெனவுள்ள செயலியின் மூலம் கண்டுபிடிக்கலாம்.

ஆனால் உங்களது ஆப்பிள் உபகரணத்திலுள்ள ஐ கிளவுடில் லாகின் செய்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

விண்டோஸ்

மற்ற இரண்டும் போலத்தான் விண்டோஸ் தொலைபேசியைக் கண்டுபிடிக்கும் முறையும். இதிலும் லாகின் செய்திருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் எல்லாவற்றுக்கும் முக்கியமானது, தொலைந்துபோன தொலைபேசி ஆன் செய்யப்பட்டு இணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

எனவே தொலைபேசி காணாமல் போய் அதிலிருந்து மின்கலமும் சக்தி இழந்து போனால், அதைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.

150506135106_windows_lostphone_gch_640x3இணையத்துடன் தொடர்பிருந்தால் மட்டுமே காணாமல்போன தொலைபேசியை கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளைப் பொறுத்தவரை பாட்டரி முற்றாக தீர்ந்து போனாலும், அதைக் கண்டுபிடிக்கலாம்.

“signal flare” எனும் தொழில்நுட்பத்தின் மூலம் அது சாத்தியமாகும்.

அந்தத் தொழில்நுட்பமானது காணாமல் போன தொலைபேசி கடைசியாக எப்போது இணையத்துடன் தொடர்பில் இருந்தபோது எங்கிருந்தது என்பதை குறித்துக் கொள்ளும்.

ஆகவே அதை வைத்து ஓரளவுக்கு அது எங்கிருந்தது என்பதை கணிக்க முடியும்.

எனவே கைத்தொலைபேசி தொலைந்துவிடும் என்று நீங்கள் கவலை கொண்டால், அதிலுள்ள சிறப்பம்சம் ஒன்றை இயக்கினால், அது சந்தேகத்துக்குரிய வகையில் உங்கள் தொலைபேசியை யாராவது கேடு ஏற்படுத்த முயற்சித்தால் அதை படம் எடுத்து உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடும். அதோடு தொலைபேசி எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இது காவல்துறையினரிடம் தகவல்களை அளிக்க ஏதுவாக இருக்கும்.

டிஜிட்டல் காமிரா

தொலைபேசிகளை இப்படி கண்டுபிடிக்கலாம் என்றால், டிஜிட்டல் காமிராக்களை எப்படி கண்டுபிடிப்பது?

அதற்கும் வழியுள்ளது. அந்த காமிரா மூலம் எடுக்கப்பட்ட படத்தை ஆராய்வதன் மூலம், அதற்குள் மறைந்திருக்கும் தகவல்கள் மூலம் காணாமால் போன காமிரா எங்குள்ளது என்பதை கண்டறிய முடியும்.

150506134610_phone_lostphone_gch_640x360கூடுதல் கவனம் இருந்தால் கைத் தொலைபேசி காணாமல் போவதை தடுக்க முடியுமென காவல்துறையினர் கூறுகிறார்கள்

இதற்கு எக்சிஃப் டேட்டா(exif data) என்று பெயர். அந்தக் காமிரா மூலம் எடுக்கப்பட்ட படத்தை stolencamerafinder.com இணையத்திலுள்ள தேடு மென்பொருளில் இழுத்துவிட்டால், அது இணையதளத்தில் தேடி அந்தக் புகைப்படத்தில் மறைந்திருக்கும் தரவை அந்தக் காமராவின் சீரியல் எண் தரவுகளுடன் தொடர்புபடுத்தி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும்.

ஆனால் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு காவல்துறையினர் விடுக்கும் எச்சரிக்கை என்பது, நீங்களாகவே திருடர்களை எதிர்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்பதே. இருக்கும் தகவல்களை அவர்களிடம் அளித்துவிட்டு காத்திருப்பது மட்டுமே பொருளைத் தொலைத்தவர் செய்ய வேண்டியதெல்லாம்.

bbctamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஸ்தூரி தேவதாசி முறைபற்றி மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன், கோவில் தொண்டு செய்யவும், நடன மாதுக்களாகவும், பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்களாகவும் நித்ய சுமங்கலிகளாகவுமென பிரிவுகள் ஆந்திரா ஒடிசா கர்நாடகா உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் 1947 வரை  ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயரில் இருந்ததாகவும் பின்னரே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதாகவும், இன்றும் கர்நாடகாவில் சில இடத்தில் நடைமுறையிலிருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்நாளில் மன்னர்கள் ,சிற்றரசர்கள், பண்ணையார்கள் அவர்களை ஜமீன்தார்கள் தமது அந்தப்புரநாயகிகளாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்  தமிழகத்தில் பிராமணர் வேளாளர், மறவர்என அனைத்து  குலங்களிலிருந்தும் தேவதாசிகள் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன, அப்படியிருக்க தெலுங்கர்கள் மட்டும் தேவதாசிகள் என்று பிராமண பிரிவை சேர்ந்த ’ஆச்சாரமான’’ கஸ்தூரி எவ்வாறு கூறினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். முதலில் கஸ்தூரி எனும் பெயர் ஆச்சாராமானதா? இமயமலை  பகுதிகளீல் வாழும் ஒருவகை மானின் ஆணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தின் பெயரே கஸ்தூரி என்கிறார்கள் , அதிலிருந்துதான் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது என்கிறார்கள், மனிதர்களில் ஆச்சாரமாக நிறம் பார்க்கும் கஸ்தூரி தன் பெயரிலும் ஆச்சாரம் பார்க்கவேண்டும். கஸ்தூரிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை பிறக்கும்போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் சிகிச்சைக்காகவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்கிறார்கள், தனது குழந்தையை வெளியே காண்பிக்காது கவனமாயிருப்பார் கஸ்தூரி, அதனால்தான் பிக்பாஸ் போனபோதுகூட குழந்தைகளின் குரலை மட்டும் ஒலிபரப்பியதாக நினைவிலுண்டு. கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் வெறிதனமான ஆதரவாளர், ஆனால் மனிதரில் நிறம்பார்க்காத என் தலைவனின் ஆதரவாளராயிருந்துகொண்டு மனிதரில் குலம் பார்க்கும் கஸ்தூரியின் செயல் மன்னிக்கப்பட முடியாத குற்றமே.
    • அடுத்த பொது தேர்தல் நடைபெறும்போது மாவையர் இருப்பாரோ தெரியாது. பெருந்தலைவர் சம்பந்தர் போல் மாவையருக்கு பாராளுமன்ற உறப்பினர் எனும் கெளரவ பட்டத்துடன் சாவை அணைக்க ஆர்வமோ யார் அறிவார். ஆசை யாரை விட்டது.
    • இணையவழங்கி மாற்றம் எதிர்பார்த்த வெற்றியைத்தரவில்லை என்பதால் இன்றைய தினம் மாற்றிக் கொள்ள முடியவில்லை.  
    • உறவினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் கைதட்டி என் ஜாய் பண்ணுகின்றார்கள். தவறு என சொல்வதற்கில்லை. ஐ பி சி இந்த காணொளியை வெளியிட்டு உள்ளது. ஐபிசி காரரின் எதிர்பார்ப்பு என்னவோ?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.