Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கு செல்வது என்பது குறித்து தெரியாத நிலையில் உள்ளேன் -ரணில் விக்­கி­ர­ம­சிங்க

Featured Replies

5001080-3x2-940x627_2.jpg
 
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் வழக்கு மீதான நீதி­மன்றத் தீர்ப்­பினால் எங்­கு­செல்­வ­தென தெரி­யா­துள்ளேன்.
 
இந்த வழக்கு தொடர்பில் எம்­மிடம் பதில் இருந்தும் அதனை கூறு­வ­தற்கு நீதி­மன்றம் சந்­தர்ப்பம் வழங்­க­வில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆதங்கம் வெளி­யிட்­டுள்ளார்.
 
உயர் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பின் பிர­காரம் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக அர­சியல் பழ­வாங்கல் இடம்­பெற்­றுள்­ளதா அல்­லது நீதித்­துறை பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா என்ற கேள்­விக்­கான பதிலை அறிந்து கொள்­வ­தற்கு ஆர்­வ­மாக உள்­ள­தா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்டார்.
 
இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் இடம்­பெற்ற வெகு­சன ஊட­கங்கள் சீர்­தி­ருத்தம் தொடர்­பி­லான தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்­நி­கழ்வில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் நிமல் சிறி பால டி சில்வா, இலங்கை பத்­தி­ரிகை
ஸ்தாப­னத்தின்
 
தலைவர் குமார் நடேசன், சர்­வ­தேச ஊடக ஒத்­து­ழைப்பு அமைப்பின் தலைவர் ரங்க கலன்­சூ­ரிய, ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத், மாகாண சபை உறுப்­பி­னர்கள், சர்­வ­தேச ஊடக அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­தர்கள், தகவல் மற்றும் ஊட­கத்­துறை அமைச்சு, ஊடக சீர்­தி­ருத்­தத்­திற்­கான தேசிய உச்­சி­மா­நாட்டு செய­லகம், இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம், மற்றும் சாட் அமைப்பின் பிர­தி­நி­திகள், ஊடக கற்கை மாண­வர்கள் என பலர் கலந்து கொண்­டனர்
 
இங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் தெரி­விக்­கையில்,
 
நாட்டின் ஊடகச் சுதந்­திரம் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஊட­கங்­களின் மூல­மா­கவே நாட்டு மக்கள் தக­வல்­களை பெற்­றுக்­கொள்­கின்­றனர். இந்­நி­லையில் ஊட­கங்கள் பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­பட வேண்டும். நாட்டில் நல்­லாட்சி நில­வு­வ­தற்கு அமை­வாக ஊடக சுதந்­தி­ரத்தை முழு­மை­யாக அனு­ப­விக்க முடியும். இந்­நி­லையில் ஊட­கத்­து­றையை சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் புரண ஆத­ர­வினை வழங்க தயா­ரா­க­வுள்­ளது.
தற்­போது ஊடங்­க­ளி­னூ­டாக முக்­கிய தக­வல்கள் கிடைக்­கின்­றன. நேற்­றுக்­காலை மிக முக்­கி­ய­மான செய்­தி­யொன்றை பத்­தி­ரி­கை­களை பார்த்தே அறிந்து கொண்டேன். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்­வ­தற்கு தடை உத்­த­ர­வினை நீதி­மன்றம் பிறப்­பித்­துள்­ளது.
 
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் தொடர்­பி­லான வழக்­கிற்கு நீதி­மன்­றத்­தினால் எனக்கு அழைப்­பாணை விடுக்­கப்­ப­ட­வில்லை. ஆகவே உயர் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பின் முழு­மை­யான விப­ரத்தை நான் இன்று(நேற்று) காலை ஊட­கங்­க­ளி­னூ­டா­கவே அறிந்து கொண்டேன். இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கோ பிர­த­ம­ரா­கிய எனக்கோ எது­வுமே தெரி­யாது.
 
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு அடிப்­படை உரிமை மீறல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அது ஜன­நா­யக உரி­மையும் கூட. அந்த விட­யத்தை என்னால் ஒரு போதும் கேள்­விக்­குட்­ப­டுத்த முடி­யாது. ஆனால் அர­சியல் பழி­வாங்­கலை மையப்­ப­டுத்தி உயர் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. அத்­தீர்ப்­புக்­காக நீதி­மன்­றத்­தினால் கேள்­விக்­குட்­ப­டுத்தும் அம்­சங்கள் தொடர்பில் பதி­ல­ளிக்கும் பொறுப்பு அர­சாங்­கத்­திடம் உள்­ளது. எனினும் இது தொடர்பில் தௌிவு­ப­டுத்­து­வ­தற்கு உயர்­நீ­தி­மன்றம் எமக்கு சந்­தர்ப்பம் வழங்­க­வில்லை. சந்­தர்ப்பம் வழங்­கி­யி­ருந்தால் அர­சாங்­கத்தின் தரப்பின் வாதத்­தினை எம்மால் முன்­வைத்­தி­ருக்க முடியும்.
 
 
அர­சியல் பழி­வாங்கல் செய்­யப்­ப­டு­வ­தாக கூறும் குற்­றச்­சாட்டு எந்­த­வொரு அடிப்­ப­டை­யு­மற்­றது. எவ்­வா­றா­யினும் இந்த வழக்கு ஒக்­டோபர் மாதம் வரை தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளது. அது வரைக்கும் எம்மால் பொறுத்­தி­ருக்க முடி­யாது. குறித்த தீர்ப்பின் தோற்­றத்­தன்மை எவ்­வா­றா­னது என்­ப­தனை அறி­ய­வேண்­டி­யுள்­ளது. உயர் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பின் பிர­காரம் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக அர­சியல் பழி­வாங்கல் இடம்­பெற்­றுள்­ளதா அல்­லது நீதித்­துறை பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா என்ற கேள்­விக்­கான பதிலை அறிந்து கொள்­வ­தற்கு நான் ஆர்­வ­மாக உள்ளேன்.
 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் தலைவர் மாத்­தி­ர­மின்றி பொது­ந­ல­வாய அமைப்பின் தலை­வ­ரா­கவும் செயற்­ப­டு­கிறார். ஆகையால் இவ­ரது பெரு­மையை நாங்கள் பாது­காக்க வேண்­டி­யுள்­ளது. பொது­ந­ல­வாய அமைப்பின் கொள்­கையை பாது­காக்கும் வகையில் எங்­க­ளு­டைய செயற்­பா­டுகள் காணப்­பட வேண்டும்.
இதன்­பி­ர­காரம் குறித்த தீர்ப்பு தொடர்பில் பொது­ந­ல­வாய அமைப்பின் நீதி­மன்­றத்­தி­னூ­டா­கவும் அதன் சட்ட அறி­ஞர்­களின் மூல­மா­கவும் ஆலோ­ச­னையை பெற்று குறித்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வினை முன் நகர்த்தவுள்ளேன். இதனூடாக சர்வதேசத்தினை நாடவில்லை. மாறாக ஆலோசனை மாத்திரமே பெறவுள்ளேன்.
 
மேலும் செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் குறித்த வழக்கிற்கு புதிதாக அமையும் அரசாங்கம் பதிலளிக்க முடியாது. அதேநேரம் அக்காலத்தில் 2015ஆண்டிலிருந்து அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்க முடியும் போன்ற நடைமுறைப்பிரச்சினைகளும் காணப்படுகின்றன என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது

 

 

glperies3.jpgஅரசியல் நோக்கங்களுக்காக சட்டத்தைப் பயன்படுத்த முனை வோருக்கு கோட்டாய ராஜபக்ஷ தொடர்பில் நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பதிலடியாக அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பலமுள்ள அரசியல்வாதிகளை பலமிழக்கச் செய்து அவர்களை மெளனிக்கச் செய்து செயற்பட விடாமல் செய்வதும் பொதுமக்கள் மத்தியில் அவர்களை கெட்டவர்களாகக் காட்ட முனைவதுமே சிலரது நோக்கம் என குறிப்பிட்ட ஜீ. எல். பீரிஸ், இத்தகைய செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராமவில் நடைபெற்றது.

இம் மாநாட்டில் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல. பீரிஸ் எம்.பி, பந்துல குணவர்தன எம்.பி. மற்றும் மனுஷ நாணயக்கார எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

இங்கு பேராசிரியர் பீரிஸ் தொடர்ந்தும் விளக்குகையில்,

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் வழக்கில் நேற்று உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

அவரை விவாரணை செய்த விசேட நிதி மோசடிகள் சம்பந்தமான பிரிவு அரசியல் சார்ந்தது என்பதையே நாம் குறிப்பிட விரும்புகின்றோம். குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

எனினும் அரசியல் நோக்கங்களுக்காக இத்தகைய விடயங்களை மேற்கொள்வதை ஏற்க முடியாது. குற்றங்கள் விசாரிக்கப்பட்டு குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட நபருக்கு எதிராக தண்டனை வழங்குவதன்றி அரசியல்வாதிகளை அவர்கள் அரசியல் செய்வதற்குள்ள சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளை வெளிப்படையாக இந்நாட்களில் காண முடிகிறது.

இதனைக் கவனத்திற் கொண்டே உயர் நீதிமன்றம் கோதாபய ராஜபக்ஷவின் வழக்கு முடியும் வரை அவரைக் கைது செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. இதற்கிணங்க ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை அவரைக் கைது செய்யக்கூடாது என்பதே அந்த தீர்ப்பு. அவ்வாறு கைது செய்வது சட்டவிரோதமான செயல் என்பதே நீதிமன்றத்தின் கூற்றாகும்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை கோதாபய ராஜபக்ஷவை சிறைத் தண்டனைக்கு உட்படுத்துவது சட்டத்துக்கு விரோதமானது என்பதையே நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பொலிஸ் சட்டத்துக்கு அமைய பொலிஸ் துறையில் பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு மட்டுமே உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை.

இங்கு நடந்தது என்ன? பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து என்றால் அமைச்சரவை உப குழுவிடமிருந்து. அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இவர் மூலமே இந்த குழு நிர்வகிக்கப்படுகிறது.

சட்டப்படி அரசியல் அழுத்தங்கள் இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ள போதும் கோதாபய ராஜபக்ஷவின் விடயங்களில் அரசியல் தலையீடுகளே உள்ளன.

மே மாதம் தேசிய நிறைவேற்றுச் சபை தன்னிச்சையாக அவரை கைதுசெய்யுமாறு கூறியுள்ளது. எனினும் எமது சட்டத்தில் அது போன்றதொரு சபைக்கு அத்தகைய அதிகாரங்கள் இல்லை என்பது உறுதியாகிறது. இந்த வகையில் இது அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளி வாகின்றது.

அரசியல் பலமுள்ளவர்களை மெளனிக்கச் செய்து அவர்களுக்கு பாதிப்பு எற்படுத்தி அவர்களை வீழ்ச்சியடையச் செய்து நாட்டு மக்கள் மத்தியில் அவர்கள் தொடர்பில் போலி குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதே இதன் நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றும் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

http://www.thinakaran.lk/2015/05/15/?fn=n1505154

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.