Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் - வாசு சபையில் கடும்சொற்போர்! ஆளும் - எதிர் தரப்புகளின் எம்.பிக்களும்

Featured Replies

ranil%20vs%20vasu%202015%2025562552.jpg

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்குமிடையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை கடும் சொற்போர் மூண்டது. நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்­ஷ தலைமையில் கூடியது.
 
சபாநாயகர் அறிவிப்பு, மனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 17/1ஆம் பிரிவின் கீழ் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. அவசர பிரேரணையொன்றை முன்வைத்தார்.
 
மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துமாறு கோரியே சபை ஒத்திவைப்பு பிரேரணையாக மேற்படி விடயத்தை பீரிஸ் எம்.பி. முன்வைத்தார். இதற்கு ஆதரவளிக்கும் வகையில் 20இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் எழுந்து நின்றனர்.
 
எனினும், இதை அரசு உடன் ஏற்கவில்லை. இதனால் எதிரணி உறுப்பினர்கள் விவாதம் கோரி கருத்து வெளியிட ஆரம்பித்தனர். எம்.பிக்களான பந்துல குணவர்தன, அநுரகுமார் திஸாநாயக்க ஆகியோருக்குப் பின்னர், கருத்து வெளியிடுவதற்கு வாசுதேவ நாணயக்கார எழுந்தார். பிரதமர் சபையில் பதிலளித்துக்கொண்டிருக்கையிலேயே ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுவதற்கு முற்பட்டார் வாசு எம்.பி. இதனால் வாசு எம்.பியை நோக்கி பிரதமர் ஏதோ கூறினார். கோபமடைந்த வாசு எம்.பி., "என்னை அமருமாறு கூறுவதற்கு உமக்கு என்ன அதிகாரம் உள்ளது'' என்று பிரதமரிடம் வாதிட்டார்.
 
அத்துடன், சபைக்கு உதவாத சொற்பிரயோகங்களையும் அவர் மேற்கொண்டார். அவர் கோபமாக பேசுகையில், எதிரணி உறுப்பினர்கள் மேசையில் கை தட்டி சிரித்தனர். இதனால் சபையில் பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது. பதிலுக்குப் பிரதமரும் ஏதேதோ கூற இருவருக்குமிடையிலான சொற்போர் சிறிது நேரத்துக்கு சூடுபிடித்தது. பிரதமருக்கு ஆதரவாக ஆளுங்கட்சி உறுப்பினர்களும், வாசுவுக்கு ஆதரவாக எதிரணி உறுப்பினர்களும் குரல் எழுப்பியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
 
ஒரு கட்டத்தில் சபாநாயகர் தலையிட்டு கலரியில் பாடசாலை மாணவர்கள் இருப்பதால் ஒழுக்கமாக பேசுமாறு அறிவுரை வழங்கினார். இறுதியில் ஒருவாறு சர்ச்சை முடிவுக்கு வந்தது. அத்துடன், 17/1இன் கீழ் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. முன்வைத்த பிரேரணைகளையும் இரண்டு மணித்தியாலங்களுக்கு விவாதிப்பதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். -
 
 
 
 

"நீ யார் என்னை அமரச்சொல்வதற்கு, நீ உட்காரு ஓய், பைத்தியகாரனே.." பாராளுமன்றத்தில் பிரதமர் மீது வாசு கெட்டவார்த்தைப்பிரயோகம்

 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும் இடையிலான வாதத்தின் போது வாசுதேவ நாணயக்கார பிரதமர் ரணில் விக்கிரசிங்க மீது கடுமையான கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தார்.

 
ஆவேசமடைந்த வாசுதேவ நாணயக்கார எம்.பி "நீ யார் என்னை அமரச்சொல்வதற்கு?" " நீயா சபாநாயகர்?" " நீ சபாநாயகர் இல்லை ஒழுங்குப் பிரச்சினையின் நிமித்தமே எழுந்துள்ளேன் பைத்தியக்காரன்" என்று கூறியவாறு கெட்டவார்த்தை ஒன்றையும் மீண்டும் மீண்டும் கூறி நீ உட்காரு ஓய் என்றும் கூறினார்.
 
வாசுதேவ நாணயக்கார எம்.பி இவ்வாறு கெட்டவார்த்தைகளால் பிரதமரை திட்டியபோது எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மேசையில் தட்டியும் சத்தம் எழுப்பியும் சிரித்தனர். 
இதன்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் வாசுதேவ எம்.பியைக்கட்டுப்படுத்தாது அமைதியாக இருந்த அதேவேளை கலரியில் பாடசாலை மாணவர்கள்  இருப்பதாக மட்டும் சுட்டிக்காட்டினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நாணயக்கார நாணயம் இல்லாதவர் என்று அடிக்கடி நிரூபிக்கின்றார்.
எல்லாம் அம்பாந்தோட்டையில் இருந்து வரும் பணத்திற்காகவே நடக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.