Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இன்று மோதல்

Featured Replies

6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இன்று மோதல்

 

 

6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 போட்டியில் பாகிஸ்தானும், ஜிம்பாப்வேவும் மோதுகின்றன. 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. பாதுகாப்பு கருதி அனைத்து போட்டிகளும் லாகூர் கடாபி மைதானத்திலேயே நடைபெறவுள்ளன.

 

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வந்த நிலையில், 2009-ல் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் சென்ற பஸ்ஸின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

 

அதில் அதிர்ஷ்டவசமாக இலங்கை வீரர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். அதன்பிறகு அங்கு சென்று விளையாட டெஸ்ட் அந்தஸ்து கொண்ட எந்த அணியும் முன்வராததால் கடந்த 6 ஆண்டுகளாக அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடை பெறவில்லை.

 

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து விளையாட வைப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த தொடர் முயற்சிகள் காரணமாக இப்போது ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு பெரிய அளவில் போட்டிகள் கிடைக்காததும் அந்த அணியின் இந்த துணிச்சலான முடிவுக்கு ஒரு காரணமாகும். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம், சொந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரையையும் மீறி கடினமான முடிவை எடுத்துள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்.

 

10 நாள் நடைபெறவுள்ள இந்தத் தொடர், பாகிஸ்தானில் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகள் நடைபெறு வதற்கான வித்தாக அமையும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. வெற்றி வாய்ப்பு எப்படி? சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் படுதோல்வி கண்ட பாகிஸ்தான், சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தொடரில் எப்படியும் வெற்றி பெற பாகிஸ்தான் போராடும். அஹமது ஷெஸாத், முக்தார் அஹமது, முகமது ஹபீஸ், உமர் அக்மல், ஷோயிப் மாலிக், கேப்டன் அப்ரிதி, சர்ஃப்ராஸ் அஹமது, அன்வர் அலி, வஹாப் ரியாஸ், முகமது சமி, பிலவால் பட்டி ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

 

பேட்டிங்கில் அஹமது ஷெஸாத், முகமது ஹபீஸ், உமர் அக்மல், ஷோயிப் மாலிக், கேப்டன் அப்ரிதி, விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அஹமது ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே பாகிஸ்தானின் ரன் குவிப்பு அமையும். முன்னணி பந்துவீச்சாளர்களான சயீத் அஜ்மல், உமர் குல் ஆகியோர் இல்லாத நிலையில், வேகப்பந்து வீச்சில் வஹாப் ரியாஸையே நம்பியுள்ளது பாகிஸ்தான். பிலவால் பட்டி, முகமது சமி ஆகியோர் ரியாஸுக்கு பக்கபலமாக பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கேப்டன் அப்ரிதி, முகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக் ஆகியோரை நம்பியுள்ளது பாகிஸ்தான்.

 

 

ஜிம்பாப்வே அணியைப் பொறுத் தவரையில் சிபாண்டா, சிக்கந்தர் ராஸா, ஹாமில்டன் மஸகட்ஸா, சார்லஸ் கவென்ட்ரி, கிரேக் இர்வின், எல்டான் சிகும்பரா (கேப்டன்), சீன் வில்லியம்ஸ், ரிச்மாண்ட் முதும்பாமி (விக்கெட் கீப்பர்), கிரீம் கிரெமர், கிறிஸ் மோபு / முபாரிவா / பன்யங்காரா / பிரையன் விட்டோரி ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் போட்டி நடைபெறவுள்ள கடாபி மைதானத்தில் கடந்த 6 ஆண்டு களாக சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

லாகூரில் பகல் பொழுதில் வெப்பநிலை 43 டிகிரியாக இருந்தாலும், மாலையில் 20 டிகிரியாக குறைந்துவிடும் என்பதால் போட்டியின்போது வெயிலின் தாக்கம் பெரிதாக இருக்காது.

 

பலத்த பாதுகாப்பு

இந்தப் போட்டியைக் காண பாகிஸ்தான் ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. லாகூரைச் சுற்றிலும் 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தொடர் முழுவதும் இரண்டு கம்பெனி ரேஞ்சர்களும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 

வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து பயணிகள் இல்லாத இரு பஸ்களை போட்டி நடைபெறவுள்ள கடாபி மைதானம் வரையும், பின்னர் அங்கிருந்து ஹோட்டல் வரையும் இயக்கி பாதுகாப்பு ஒத்திகை பார்த்துள்ளனர் போலீஸார். வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் மைதானங்கள் செல்லும் சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் சரி செய்யப் பட்டுள்ளதோடு, ஆயுதம் ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மைதானம் மற்றும் ஹோட்டலுக்கு செல்லும் சாலைகளில் வாகன ரோந்து போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி நடைபெறும் தினத் தன்றும், வீரர்கள் பயிற்சி பெறும் போதும் மைதானத்துக்கு மேலே ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். துப்பாக்கி ஏந்திய 20 பாதுகாப்பு படை வீரர்கள் மறைவிடத்தில் இருந்து கண்காணிப்பார்கள். கடாபி மைதான வளா கத்தில் 81 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. மைதான வளாகத்தின் வெளிப்புற கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன.

 

மைதான வளாகத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. போட்டியைக் காண வருபவர்கள் கால் நடை யாகவே வர வேண்டும். போட்டியின் போது செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு சட்ட அமலாக்கத்துறை மூலமாக அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடாபி மைதானத்தில் 24 ஆயிரம் பேர் போட்டியை ரசிக்கலாம். ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.93-லிருந்து ரூ.623 வரையும், டி20 போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.187 முதல் ரூ.935 வரையும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

 

போட்டி நேரம்: இரவு 7.30

 

நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்

 

துளிகள்…

2,271 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் நடைபெறும் சர்வதேச போட்டியில் களமிறங்குகிறது. முன்னதாக இங்கு 2009 மார்ச் 2-ம் தேதி இலங்கையுடன் விளையாடியது பாகிஸ்தான். ஜிம்பாப்வே அணி கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய பிறகு வேறு எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை. ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டி20 போட்டியில் களமிறங்குகிறது. கடந்த இரு ஆண்டுகளில் 5 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது ஜிம்பாப்வே. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இரு போட்டிகளிலும் தோற்றுள்ளது ஜிம்பாப்வே.

 

 

2009 தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து மீளாத பஸ் டிரைவர்

2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ்ஸின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அந்த பஸ்ஸை ஓட்டியவர் மெஹர் முகமது கலீல். பஸ்ஸை வேகமாக இயக்கி இலங்கை வீரர்களை காப்பாற்றிய அவர், அப்போது ஹீரோவாக பார்க்கப்பட்டார். இலங்கை அரசு அவருக்கு நிதியுதவி அளித்து பாராட்டியது. அதனால் பஸ் கம்பெனியின் முதலாளியாகவும் உருவெடுத்தார். பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு கடாபி மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 43 வயதாகும் டிரைவர் கலீல் கவுரவிக்கப்பட்டார். அதன்பிறகு 2009 தாக்குதல் சம்பவத்தை நினைவுகூர்ந்த கலீல் கூறியதாவது:

 

அது மிக துயரமான சம்பவம். அதை மறப்பதே நல்லது. அந்த சம்பவம் இப்போதும் எனக்குள் அப்படியே இருக்கிறது. ஆரம்பத்தில் ஏதோ பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் திடீரென இருவர் துப்பாக்கியோடு எனக்கு முன்னால் வந்து நின்று என்னை நோக்கி தாக்குதல் நடத்தியபோதுதான் பயங்கரவாதிகளிடம் சிக்கியதை உணர்ந்தேன். அப்போது வீரர்கள் வேகமாக செல்லுமாறு கத்தியதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமடைந்தேன். அவர்கள் உரக்கக் கத்தியது 440 வோல்ட் மின்சாரம் எனது உடலுக்குள் பாய்ந்ததைப் போன்று இருந்தது. அதன்பிறகு சுதாரித்துக் கொண்ட நான் பஸ்ஸை வேகமாக செலுத்தினேன்.

 

பின்னர் அவர்களை பத்திரமாக மைதானத்துக்கு கொண்டு சேர்த்தேன். இலங்கை வீரர்கள் ஊருக்கு செல்லும்போது என்னையும் அவர்களோடு அழைத்தார்கள். நான் குடும்பஸ்தன். அதனால் வரமுடியாது என்று அவர்களிடம் கூறிவிட்டேன். ஆனால் ஒரு மாதத்துக்குப் பிறகு இலங்கை அதிபர் என்னை அழைத்ததன் பேரில் நான் அங்கு சென்றேன். இலங்கை விமான நிலையத்தை அடைந்தபோது, நான் டிரைவராக இங்கு வரவில்லை. மிகமிக முக்கிய நபராக இங்கு வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அங்கு நான் கடைவீதிக்கு சென்றபோது எல்லோரும் என்னை ஹீரோ என்றே அழைத்தார்கள் என்றார்.

 

அப்போது அவருக்கு ரூ.13 லட்சம் ரொக்கப் பரிசு இலங்கை சார்பில் வழங்கப்பட்டது. சில தனி நபர்களும் அவருக்கு நன்கொடை அளித்தனர். அதன்மூலம் இப்போது லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு பஸ் சேவை அளித்து வருகிறார் கலீல்.

 

http://tamil.thehindu.com/sports/6-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7238416.ece

  • தொடங்கியவர்

6 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் முதல் வெற்றி: ஜிம்பாப்வேயை வீழ்த்திய பாகிஸ்தான்
 

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட் நடைபெற்றது.

 

லாகூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக பேட் செய்து சவாலான 173 ரன்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முக்தர் அகமதுவின் 45 பந்தில் 83 ரன்கள் என்ற அதிரடி இன்னிங்ஸினால் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆனால் ஜிம்பாப்வே பந்து வீச்சில் எந்த வித தாக்கமும் இல்லை என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், பாகிஸ்தான் அணியும் எந்த நிலையிலிருந்தும் சடசடவென சரியும் போக்கு கொண்டது. அதனால் முக்தரின் இன்னிங்ஸ் நேற்று முக்கியத்துவம் பெற்றது.

 

முக்தர் அடித்த 12 பவுண்டரிகளில் 9 பவுண்டரிகள் ஃபைன் லெக் திசையில் வந்தது என்றால் ஜிம்பாப்பே பந்துவீச்சின் அளவு மற்றும் திசை எப்படி இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த அதிரடியின் 34 பந்துகளில் அரைசதம் கண்டார் முக்தர்.

 

அகமது ஷெசாத்தும் சில முரட்டு ஷாட்களை ஆடி 39 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்தார். முக்தர் அகமது 45 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிச்கர்களுடன் 83 ரன்கள் எடுத்தார். இருவரும் 14 மற்றும் 15-வது ஓவர்களில் வெளியேறினாலும் ஸ்கோர் 144/2 என்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தவுடன் பாகிஸ்தான் மொகமது ஹபீஸ், உமர் அக்மல், ஷோயப் மாலிக் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்த 25 ரன்களில் இழந்தது. 20-வது ஓவரின் 3-வது பந்தில் கேப்டன் ஷாகித் அப்ரீடி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

 

நேற்று 6 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் திரும்பியதால் ரசிகர்களின் ஆதரவு நிறைய இருந்தது. முழு ஸ்டேடியமும் 2 மணி நேரங்களுக்கு முன்னதாக நிரம்பியது.

மஸகாட்சா 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். பிலாவல் பட்டியை ஸ்கொயர் லெக்கில் ஒரு அபார சிக்ஸ் அடித்தார். பாயிண்ட், மிட்விக்கெட் ஆகிய திசைகளில் பவுண்டரி விளாசினார்.

 

மாறாக மறுமுனையில் சிபந்தா 13 ரன்களை மட்டுமே எடுத்து 7-வது ஓவரில் மொகமது சமி பந்தில் டாப் எட்ஜ் எடுத்து அவுட் ஆனார். ஆனால் இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 58 ரன்களைச் சேர்த்தனர். மசகாட்சாவும் மட்டையின் உள்விளிம்பில் பட்டு சமியிடம் பவுல்டு ஆனார்.

 

கேப்டன் எல்டன் சிகும்பரா 2 லைஃப்களுடன் 8 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்தான் இவர் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸ் 16 ரன்களையும், சிகந்தர் ராஸா 17 ரன்களையும் எடுக்க ஜிம்பாப்வே 172/6 என்று முடிந்தது. சமி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாலிக் 3 ஓவர்களில் 12 ரன்களுக்கு 1 விக்கெட் கைப்பற்றி சிக்கனம் காட்டினார். வஹாப் ரியாஸ் 4 ஓவர்களில் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

ஆட்ட நாயகனாக முக்தர் அகமது தேர்வு செய்யப்பட, 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று வெற்றி பெற்றது.

 

http://tamil.thehindu.com/sports/6-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7238939.ece

  • தொடங்கியவர்

பாகிஸ்தானின் சாதனை இலக்கு: விரட்டலில் லேசாக மிரட்டிய ஜிம்பாப்வே

 

லாகூரில் புதனன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 375 ரன்கள் குவித்த பாகிஸ்தான், ஜிம்பாப்வேயை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி மட்டை ஆட்டக்களத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களான 375 ரன்களை வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து எடுக்க, தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது.

 

அதாவது பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்த 2-வது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும் இது. பாகிஸ்தானின் அதிகபட்ச ரன் எண்ணிக்கை 385 என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் நேற்று ஹபீஸ் (89), அசார் அலி (79), ஷோயப் மாலிக் (112), ஹாரிஸ் சோஹைல் (89) ஆகியோர் 70க்கும் மேல் ஒருநாள் போட்டி ஒன்றில் எடுத்த வகையில் சாதனை நிகழ்த்தினர். அதாவது ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல் 4 வீரர்கள் 70+ ஸ்கோர்களை அடித்ததில்லை.

 

மட்டை ஆட்டக்களத்தில் பன்யாங்கரா, விட்டோரி, மபஃபூ, சான் வில்லியம்ஸ், உத்சேயா, சிகந்தர் ரசா ஆகிய ஜிம்பாப்பே பந்து வீச்சாளர்கள் படு சாதாரணமாக வீசினர்.

பாகிஸ்தான் மட்டையாளர்கள் எந்த விதமான ஆக்ரோஷமான ஷாட்டையுமே விளையாடாமல், கோபமே படாமல் பதட்டமடையாமல் இந்த பெரிய இலக்கை எட்டியுள்ளனர்.

அசார் அலி, மொகமது ஹபீஸ் தொடக்க விக்கெட்டுக்காக 179 ரன்களைச் சேர்த்தனர். உள்நாட்டில் பாகிஸ்தானின் 3-வது சிறந்த ஒருநாள் தொடக்க ஜோடி ரன்களாகும் இது.

சதம் எடுப்பார்கள் என்று நினைத்த போது, 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 83 பந்துகளில் 86 ரன்கள் எடுத்த ஹபீஸ், பிறகு 76 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 76 ரன்கள் எடுத்த அசார் அலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

 

ஷோயப் மாலிக் அதிரடி சதம்:

கடந்த 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் அவர் 43 ரன்களைத் தாண்டியதில்லை. ஆனால் நேற்று 76 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 112 ரன்கள் விளாசினார்.

மாலிக், ஹாரிஸ் சோஹைல் கூட்டணியில் சற்றே நிதானமாக தொடங்கியவர் மாலிக், ஆனால் 33-வது ஓவரில் சிகந்தர் ரசாவின் பந்தை அவர் மேலேறி வந்து சிக்சருக்குத் தூக்கியவுடன் ஆக்ரோஷத்தை கூட்டினார்.

 

பவர் பிளேயில் 41 ரன்கள் எடுக்கப்பட்டது. 40வது ஓவரில் ஸ்கோர் 263/2 என்று இருந்தது. ஜிம்பாப்வே பவுலர்கள் மட்டை ஆட்டக்களத்தில் பரிதாபமாக முடிந்தனர். யார்க்கர்கள் விழவில்லை. பீல்டிங் படுமோசம். இதனால் கடைசி 10 ஓவர்களில் 112 ரன்கள் வந்தது.

49-வது ஓவரில் ஷோயப் மாலிக் சதம் கண்டார். ஹாரிஸ் சோஹைல் 66 பந்துகளில் 89 ரன்கள் விளாச பாகிஸ்தான் 375 ரன்களை குவித்தது.

 

 

எல்டன் சிகும்பராவின் சுவாரசியம் ஏற்படுத்திய சதம்:

இலக்கைத் துரத்த களமிறங்கிய ஜிம்பாப்வே அனவர் அலி, மொகமட் சமியின் மோசமான பந்து வீச்சை நன்றாகப் பயன்படுத்தினர். சிபந்தா, சிகந்தர் ஜோடி 10-வது ஓவரில் 56 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இருவரும் அவுட் ஆக 13-வது ஓவரில் ஸ்கோர் 65 ஆக இருந்தது.

 

அதன் பிறகு ஜோடி சேர்ந்த மசகாட்சா (73 ரன்கள் 73 பந்துகள் 4 பவுண்டரி 2 சிக்சர்), சிகும்பரா ஜோடி 19.5 ஒவர்களில் 124 ரன்களை விரைவில் சேர்த்தனர்.

33-வது ஓவர் முடிவில் தேவைப்படும் ரன் 186 ரன்களாக இருந்தது. அதாவது 17 ஓவர்களில் 186 ரன்கள் தேவை. அதன் பிறகு சிகும்பரா சிறப்பாக ஆடினார். ஆனால் இவர் ஒரு முறை எல்.பி.யிலிருந்து தப்பித்தும், 2 கேட்ச்கள் விடப்பட்டதினால் 2 முறை மறுவாழ்வும் பெற்றார். மொகமட் சமியை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்த சிகும்பரா, பிறகு இன்னொரு ஓவரில் 22 ரன்கள் விளாசி விரட்டலின் சுவாரசியம் கூட்டினார். 95 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 பவுண்டரிகளுடன் 117 ரன்களை எடுத்து வஹாப் ரியாஸ் யார்க்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

 

சான் வில்லியம்ஸ் 36 ரன்களைச் சேர்த்தார். ஆனால் சிகும்பராவுடன் இணைந்து இருவரும் 10 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தனர். சிகும்பரா அவுட் ஆகும் போது ஸ்கோர் 44.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசியில் முடும்பமி 21 ரன்களையும், உத்சேயா 21 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர். 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் என்று ஜிம்பாப்வே முடிந்தது. வஹாப் ரியாஸ் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

வஹாப் ரியாஸ் தவிர மற்றவர்கள் சரியாக வீசாத நிலையில் 375 ரன்களை எடுக்கவில்லையெனில் பாகிஸ்தான் தோல்வி தழுவியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால்தான் விரட்டலில் ஜிம்பாப்வே மிரட்டியது.

 

ஷோயப் மாலிக் ஆட்டநாயகன் விருது பெற, 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று முன்னிலை பெற்றது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/article7251279.ece

  • தொடங்கியவர்

சிம்பாப்வே அணித் தலைவர் சிகும்புராவுக்கு போட்டித் தடை!
 

 

சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பாகிஸ்­தானில் சுற்றுப் பயணம் செய்து விளை­யாடி வரு­கி­றது. அந்த அணிக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியில் நிர்­ண­யிக்­கப்­பட்ட நேரத்­தை­விட பந்­து­வீச அதிக நேரத்தை சிம்­பாப்வே எடுத்து கொண்­டது.

இதை­ய­டுத்து சிம்­பாப்வே அணி தலைவர் சிகும்­புரா தண்­ட­னைக்கு உள்­ளாகி இருக்­கிறார். அவ­ருக்கு 2 போட்­டியில் தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது. அந்த அணி வீரர்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் போட்டி கட்­ட­ணத்தில் இருந்த 40 சத­வீதம் அப­ராதம் விதிக்­கப்­பட்டு உள்­ளது. இதனால் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான எஞ்­சிய 2 போட்­டியில் சிகும்­புரா விளை­யாட முடியாது. மசகட்ஷா தலைவர் பொறுப்பு ஏற்கிறார்.

 

http://www.virakesari.lk/articles/2015/05/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88

  • தொடங்கியவர்

அசார் அலி சதம்: தொடரை வென்றது பாகிஸ்தான்
 

 

ஜிம்பாப்பேவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

 

பாகிஸ்தானின் லாகூரில் நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஜிம்பாப்வேயை முதலில் பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் சிக்கந்தர் ராஸா ஆட்டமிழக்காமல் 100 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் சிபான்டா 99 ரன்களும் எடுக்க, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் அசார் அலி 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆசாத் ஷபிக் 39 ரன்களில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹாரிஸ் சோஹைல்-ஷோயிப் மாலிக் ஜோடி சிறப்பாக ஆட, 47.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது பாகிஸ்தான்.

 

ஹாரிஸ் சோஹைல் 49 பந்து களில் 52 ரன்களும், ஷோயிப் மாலிக் 20 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அசார் அலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றிருந்த பாகிஸ்தான், இந்தப் போட்டியிலும் வென்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை கைப்பற்றியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7267236.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.