Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தின் போர் முடிவின் நினைவு நாளும் அதன் அரசியலும் - சாந்தி சச்சிதானந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசாங்கத்தின் போர் முடிவின் நினைவு நாளும் அதன் அரசியலும் - சாந்தி சச்சிதானந்தன்:-
 
 

 

President%20Speech_Made_by_Ranaviru_Comm

 

கடந்த வாரம் 2009 போர் முடிவின்போது இறந்த மக்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் வடக்கின் பல பாகங்களில் நடந்தேறின. ஆறு வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக பகிரங்கமாகத் தமது சோகத்தை வெளிக்காட்டவும் சடங்குகளில் பங்கு கொள்ளவும் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற ஜனநாயக வெளியினை சகலரும் உபயோகித்தக்கொண்டதை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆயினும், இந்த வாய்ப்பினை கொழும்பு அரசாங்கம் கையாண்ட முறையினையும் அதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்வினையையும் நாம் சற்றே நோக்க வேண்டியிருக்கின்றது.

ஒரு நீண்ட கால யுத்தத்தின்போது தவிர்க்க முடியாதபடி பல அட்டூழியங்கள் நடைபெறுகின்றன. அதுவே உள்நாட்டுப் போராக இருந்து விட்டால் இந்த அட்டூழியங்கள் ஒரு நாட்டின் சக பிரஜைகள் ஒருவருக்கொருவர் இழைக்கும் அநீதிகளாகி விடுகின்றன. போரின் முடிவிற்குப் பின்னர் சகலரும் ஒற்றுமையாய் ஒரு நாடாக ஒரு சமூகமாக வாழ வேண்டுமெனில் அங்கு பரஸ்பர நல்லிணக்கத்திற்கான  ஆழமான பணிகள் முன்னெடுக்க வேண்டியிருக்கின்றன. இந்த நல்லிணக்க முறைவழிகளில் மிக முக்கியமானதாக தமக்கு நேரிட்ட இழப்புக்களை நினைவு கூரல் கருதப்படுகின்றது. யுத்த அழிவுகள் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுத்தும் மனவடுக்கள் மாறவும் மனம் ஆறுதலடையவும் இவ்வகையான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் மிக இன்றியமையாதனவாகும். முனித இனம் குரங்கினத்திலிருந்து முழு பரிணாம வளர்ச்சி அடையும் முன்னரே இறந்த தமது சக உறவுகளுக்கான மரணச்சடங்குகளை உருவாக்கி விட்டதை எமது வரலாறுகள் கூறுகின்றன.  அந்த அளவுக்கு உயிர் வாழ்வனவுக்கு தமக்கு நேர்ந்த இழப்பினைப் பின் தள்ளி முன்னோக்கி ஒரு புது வாழ்வுக்குச் செல்வதற்கு இந்த நினைவு கூரல்களும் சோகங்களைப் பகிர்ந்து கொள்ளலும் அத்தியாவசியமாகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தமது முதலாவது சுதந்திர தின உரையில் நல்லிணக்கத்தினை வலியுறுத்தினார். இன மத பேதமின்றி சகல மக்களும் ஒற்றுமையாய் கட்டியெழுப்பும் இலங்கையைப் பற்றிப் பேசினார். இவ்வாறாகிய இவர் கொள்கைப்பிரகடனங்களைத் தொடர்ந்து மேமாதம் போர் முடிவின் ஆறாவது நினைவு தினம் நெருங்கியபோது இத்தினம் இனிமேல் இராணுவ வெற்றித் தினமாகக் கொண்டாடப்படாது போரில் இறந்த சகல மக்களுக்குமான நினைவு தினம் என நினைவு கூரப்படவேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. மிகச் சந்தோ~ம். ஆனால் அத்துடன் நிற்காது, இது பிரிவினைவாதத்தினைத் தோற்கடித்த தினமாகவும் அனு~;டிக்க அரசாங்கம் வேண்டியது. இங்கேதான் பிரச்சினை எமக்கு ஆரம்பமானது.

நல்லிணக்க முறைவழியின் இன்னுமொரு முக்கியமான அம்சமானது, இதுவரை ஏற்பட்ட வன்முறையான முரண்பாடுகளானவை மீள ஏற்படாதபடியான கட்டமைப்புக்களை உருவாக்குதலாகும். அவ்வகையான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டுமெனில் அம்முரண்பாடுகளின் மூலகாரணங்கள் அறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்படவேண்டும். மாறாக, அம்முரண்பாட்டினை “பிரிவினைவாதம:;” என்றோ “பயங்கரவாதம்” என்றோ கூறிக்கொண்டிருப்பதில் ஒரு பயனுமில்லையாகும். புயங்கரவாதம் என ஒரு காரணியை நாம் வெறுத்தொதுக்கினால் பின் எவ்வாறு அது தோற்றுவிக்கப்பட்டதன் மூல காரணத்தை அறிந்து பரிகாரங்களை நாம் தேட முடியும்? சரி, இதனைக் கண்டும் காணாமல் விடுவோம் என்றிருந்தால், அடுத்த அறிவிப்பு அரசாங்கத்திடமிருந்து வந்தது. போரில் இறந்த பொது மக்களைத்தான் நினைவுகூரலாம், ஆனால் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது என்கின்ற அதிமேதாவித்தனமான அறிவிப்புத்தான் அது. உண்மையில், சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் முட்டாள்தனத்தின் உச்சக்கட்டத்தினை நாம் இங்கு பார்த்தோம். சிவாஜிஜலிங்கம் போன்ற அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை விடுதலைப் புலிகளின் நினைவேந்தலாக அனு~;டிக்க முயல்கின்றனர் என செய்திகள் கொழும்பிற்குச் சென்றதனால் இந்த அறிவிப்பு வந்திருக்கக்கூடும். ஆனாலும் எவ்வளவு உணர்வின்மையான (iளெநளெவைiஎந) அறிவிப்பு இது.. பயங்கரவாதிகள் என அவர்கள் குறிப்பிடும் விடுதலைப் புலியினர் எமது இனத்தின் தாய்மார்களுக்கு பிற்நத பிள்ளைகளல்லவா? வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றாலும் அவருக்கு இன்னமும் ஒரு அண்ணன் அக்கா தம்பி மச்சான் என உறவுகள் வடக்கில் நிறைந்திருக்குமே. தமிழ் மக்கள் இறந்த தமது அன்பு உறவுகளை நினைவுகூரும்போது பயங்கரவாதிகள் என எவரையும் கழிக்க முடியுமா?

இந்த அறிவிப்பினையும் சட்டை செய்யாது தமிழ் மக்கள் தமது நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆயத்தமாகி விட்டனர். அடுத்து வந்தது அரசாங்கத்தின் நடவடிக்கை. முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்களைவ வட மாகாணசபை அனு~;டிக்கக் கூடாதென காவல்துறை நீதிமன்றத்தில் இருந்து கொண்டுவந்த தடையுத்தரவுதான் அது! இதனை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் இது அவ்வாறானதொரு அரசியல்  நிகழ்வல்ல, உறவுகளை நினைவுகூரும் நிகழ்வே இது என விளக்கி இந்நிலையை சமாளித்ததாக செய்திகள் கசிகின்றன. சரி ஒருவாறாகத் தப்பித்தோம் என்ற நிலையில், அரசாங்கம் தனது கடைசிக் கணையை ஏவியது. மே 19ம் திகதி நினைவு தினம் எனக் கூறியதற்கு மாறாக அது வழக்கம்போல் யுத்த வீரர் தினமாக ஜனாதிபதியினால் அனு~;டிக்கப்பட்டது. முழுக்க முப்படைகள் மட்டுமே பங்குபற்றிய நிகழ்வாக இது மாறியது. உட்பக்கமாக விசாரித்தால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச தான் விகாரமாதேவி பூங்காவில் யுத்த வெற்றித் தினத்தினைக் கொண்டாடும் போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றார் என்கின்ற பயக்கிலேசத்தில்தான் இது இவ்வாறு மாறியது என்கிறார்கள். அப்போ இனி மகிந்த இராஜபக்ச உள்ளளவும் எமது நாட்டுக்கு இதே விதிதானா ஏற்படப்போகின்றது?

உண்மையில் போரில் இறந்தவர்களுக்கான நிகழ்வுதினமெனில் போரில் பாதிக்கப்பட்ட சகல தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களை முன்னிலைப்படுத்திய நிகழ்வாகவல்லவா இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். இந்த அரசாங்கம் தான் சிங்கள மக்களுக்கானது மட்டுமல்ல ஏனைய இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் எனத் தெளிவாக நாட்டுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய தருணமல்லவா இது? சகல மக்களையும் குறித்து தீபங்களை ஏற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டிய சந்தர்ப்பமல்லவா? ஆனால், முழுதாக கோட்டை விட்டு விட்டது. கடைசியாக, தமிழ் மக்களள் வடக்கிலும் சிங்கள இராணுவம் தெற்கிலும் இரண்டு வௌ;வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி கடந்த முப்பதாண்டு (அதிலும்விட அதிகம்) அரசியலிலிருந்து நாம் இம்மியளவும் நகரவில்லை என்பதைக் காட்டி விட்டது. இந்த அரசியல் தொடர்ந்தால், தமிழ் மக்களிள் தமக்கென அரசியல் தீர்வொன்றினைப் பெறுவது குதிரைக்கொம்பு விடயமாகத்தான் மாறப்போகின்றது. வரப்போகின்ற புதிய அரசாங்கத்திலும் இந்தக் கருத்தியல் பெரிதாக மாறும் என நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் மகிந்த இராஜபக்ச அப்போழுதும் இருக்கத்தானே போகின்றார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பெறப்படுவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய எமது அரசியல் தலைமைத்துவம் இந்தப் பின்னணியில் செய்தது என்ன? முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பிரிவினைவாதத்தினைத் தோற்கடித்த நாள் என்ற அரசாங்க அறிவிப்பினை வரவேற்று தான் ஒரு அறிக்கை வெளியிட்டார்! அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றாத தன்மையினாலேயே தனிநாடு கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்கின்ற தமிழர் வரலாறு இங்கு எம்மாலேயே அழிக்கப்பட்டதே. அதையும் கூறிவிட்டு பின்னர் அரசாங்கம் திரும்பத் திரும்பப் பல்டி அடிக்க கூட்டமைப்புத் தரப்பினரிடமிருந்து ஒரு மூச்சுமில்லை பேச்சுமில்லை. தமிழ் மக்களின் உணர்வலைகளைப் பார்த்தாவது அதற்கான தகுந்த எதிhவினைகளை அவர்கள் கொடுத்திருக்கலாம்.

கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியலை முன் தள்ளுவதற்கு இதனை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். இதற்கெல்லாம் அரசாங்கத்தோடு  பொருத நாம் கூறவில்லை. சர்வதேச சமூகமும் ஜனாதிபதியும் திரும்பத் திரும்பப் பரிக்கும் சொல்லாடலான நல்லிணக்கம் என்கின்ற கருப்பொருளை வைத்தே இதனைப் பந்தாடியிருக்கலாம். தமது பகிரங்க அறிக்கையினை சர்வதேச சமூகத்தையும் இலக்கு வைத்து வெளியிட்டிருக்கலாம். நல்லிணக்கத்தின் அம்சங்களைக் குறிப்பிட்டு எவ்வாறு அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதற்கு எதிராகச் செல்லுகின்றதென்பதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். கடந்தவார நினைவுதினமானது, ஒரு அரசின் இறைமைக்குப் பாத்திரமாயிருக்கின்ற அதன் பிரஜைகளின் மீதே தனது படைகளைக் கட்டவிழ்த்த குற்றத்தினை இனிமேலும் புரியாதிருக்கும் சங்கற்பம் பூணும் நாளாக எடுத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கலாம். எமது நாட்டில் நல்லிணக்கம் பற்றிய முற்றான விளக்கம் இன்றிய நிலையில் அதனை அரசு தரப்பிலானவர்கள் செயற்படுத்துவதற்கான வினைத்திறன்களைக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியிருக்கலாம். அவர்கள் வந்து பார்த்து வெறுமனே “ அரசாங்கத்தின் கொள்கைகள் எமக்குத் திருப்தி அளிக்கின்றன” எனக்கூறிவிட்டுப் போகாது அரசாங்கத்துடன் அதன் நல்லிணக்க சமிக்ஞைகளைப் பற்றிப் பேச வைத்திருக்கலாம். ஏன், நாம் சிங்கள தமிழ் அரசியல்வாதிகளைக் கொண்ட ஓர் தேசிய கலந்துரையாடலினை (யெவழையெட னயைடழபரந) இது பற்றி ஏற்பாடு செய்யலாமே. இது பற்றிய செய்திகளும் கருத்தாடல்களும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வினைக் கொண்டு வந்திருக்கும் என்பதோடு நாம் தன்மையாக ஆனால் உறுதியாக எமது அரசியல் இலக்குகளில் கவனமாக இருக்கின்றோம் என்பதனையும் சிங்களத் தலைவர்களுக்கு உணர்த்தியிருக்கும்.  ஆனால் இதொன்றும் செய்யாமல் இன்று எம்முடைய நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி நிற்கின்றோம். இந்த அடிப்படையில், எதிர்காலத்தில்  ஓர் முறையான அதிகாரப் பகிர்விற்காக நாம் எப்படி வாதாட முடியும்?
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
 

 

 

anusha.sachithanandam@gmail.com

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120105/language/ta-IN/article.aspx

 

 

என்னப்பா சம்பந்தன் சிங்களத்தின் அடிவருடி ...  அவரா தமிழனுக்கு நல்லது செய்வர் .... எங்கட தலைஎழுத்து ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.