Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

FIFA அதிகாரிகள் 7 பேர் சுவிற்சலாந்தின் ஆடம்பர விடுதியில் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்

Featured Replies

fifa%20officers%20arrest_CI.jpeg

 சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக ஒரு ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு பொறுப்பான துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப்பும் அடங்குகிறார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்காக அவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120212/language/ta-IN/article.aspx

ஊழலில் ஈடுபட்ட பிஃபா உயர் அதிகாரிகள்: அதிரடி கைது செய்த சுவிஸ் அரசு
[ புதன்கிழமை, 27 மே 2015, 01:48.02 PM GMT ]
fifaswiss.jpg
பல மில்லியன் டொலர்களை கையூட்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச கால்பந்து அமைப்பின் ஆறு சிரேஷ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சர்வதேச கால்பந்து( பிஃபா) நிர்வாகிகள் 6 பேரை சுவிட்சர்லாந்து அரசு கைது செய்துள்ளது.

சுவிஸின் சூரிச் நகரில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் அலுவலகம் இயங்கி வருகிறது. உலகிலேயே மிகபெரிய விளையாட்டு அமைப்பான இதன் தலைவராக, சுவிஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் பிளேட்டர் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.

2018ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடந்த ரஷ்யாவுக்கும் 2022ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பினை கத்தார் நாட்டுக்கும் வழங்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த நாடுகளுக்கு சாதகமாக வாக்களிக்க லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தது.

இந்த ஆதாரங்களை சுவிட்சர்லாந்து பொலிசிடம் அளித்த அமெரிக்க அரசு, அவர்களை கைது செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதற்கிடையே சூரிச் நகரில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள 65வது பிஃபா காங்கிரசில் கலந்து கொள்ள உறுப்பினர்கள் அங்கு குவிந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில்தான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெறவிருந்தது. இதற்காக சூரிச் நகரில் உள்ள பார் ஆ லாக் ஹொட்டலில் தங்கியிருந்த பிஃபா நிர்வாகிகளில் 6 பேரை சுவிட்சர்லாந்து பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் பிஃபா அமைப்பின் துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எனக் கூறப்படுகிறது. 

தற்போதைய பிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/show-RUmtyFRbSUhx6D.html

 

கால்பந்து நிர்வாகிகள் கைது: ஊழல் வழக்கில் திருப்பம்

 

 

ஜூரிச்: கிரிக்கெட்டில் மட்டுமல்ல கால்பந்து நிர்வாகத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கு உரிமை வழங்குதல், ‘டிவி’ ஒளிபரப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக ரூ. 984 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த வழக்கில் ‘பிபா’ துணைத்தலைவர் இருவர் உட்பட, 7 நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சுவிட்சர்லாந்து தலைநகர் ஜூரிச்சில் உள்ளது.

வரும் 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தாருக்கு உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த அனுமதி தந்ததில் முறைகேடு நடந்ததாக ‘பிபா’ மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்

 

 

இரண்டாவது வழக்கு:

தவிர, ‘பிபா’ நிர்வாகிகள் மீது, அமெரிக்காவில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 1990ல் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் சர்வதேச கால்பந்து தொடர்கள் நடந்த போது, ‘டிவி’ ஒளிபரப்பு உரிமத்தை தங்களுக்கு சாதகமான நிறுவனங்களுக்கு வழங்கியதன் மூலம் நிர்வாகிகள் ரூ. 984 கோடி வரை ஊழல் செய்ததாக வழக்கு பதியப்பட்டது.

இதில் தொடர்புடைய நிர்வாகிகள் ஜூரிச்சில் இருப்பதால், அவர்களை கைது செய்யுமாறு அமெரிக்க புலனாய்வுத் துறை(எப்.பி.ஐ.,) கேட்டுக் கொண்டது.

 

 

திடீர் ‘ரெய்டு’:

இதன் படி சுவிட்சர்லாந்து போலீசார், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு, ‘பிபா’ நிர்வாகிகள் தங்கியிருந்த ஜூரிச் ஆடம்பர ஓட்டலில் ‘ரெய்டு’ நடத்தினர்.

இதில், ‘பிபா’ துணைத்தலைவர்கள் ஜெப்ரி வெப், ஈகுனியே பிகுயரடோ மற்றும் நிர்வாகிகள் எடுவார்டோ லி, ஜூலியோ ரோச்சா, கோஸ்டாஸ் டகாஸ், ரபெல் எஸ்குய்வல், ஜோஸ் மரியா மரின் என, 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இத்துடன் சேர்த்து, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 14 ‘பிபா’ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

 

 

நாடு கடத்தல்:

தவிர, அங்கிருந்த பல்வேறு பொருட்கள், வங்கி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும், ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக, அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படவுள்ளனர்.

 

 

நல்ல விஷயம்:

சம்பவம் குறித்து ‘பிபா’ செய்தித் தொடர்பாளர் வால்டர் டி கிரிகோரியோ கூறியது:

‘ரெய்டு’ நடத்தப்பட்ட நேரம் சரியானது அல்ல. இது ‘பிபா’வின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும். எனினும், ‘பிபா’வை சுத்தம் செய்யும் முயற்சி நல்லது தான் என்பதால், நடவடிக்கையை வரவேற்கிறோம். இருவேறு வழக்கு தொடர்பாக விசாரணை நடக்கிறது. இதற்கு எங்களால் முடிந்தவரை முழு ஒத்துழைப்பு தருவோம்.

இவ்வாறு வால்டர் டி கிரிகோரியோ கூறினார்.

 

ஆபத்து இல்லை

வரும் 2018(ரஷ்யா), 2022(கத்தார்) உலக கோப்பை தொடருக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்தததால், கால்பந்து நிர்வாகிகள் கைதாகினர். இருப்பினும், மறு ஓட்டெடுப்பு நடத்தப் போவதில்லை என, ‘பிபா’ விளக்கம் அளித்தது. இதனால், திட்டமிட்டபடி இத்தொடர்கள் நடக்கும்.

 

 

கருப்பு நாள்

‘பிபா’ தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹுசைன் கூறுகையில்,‘‘ சம்பவம் குறித்து இப்போது தான் செய்திகள் வருகின்றன. இதற்கு முன் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. எப்படி இருப்பினும், கால்பந்து உலகை பொறுத்தவரையில் இது கருப்பு நாள்,’’ என்றார்.

 

 

திட்டமிட்டபடி தேர்தல்

நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட போதும், ‘பிபா’ தலைவர் தேர்தல் திட்டமிட்டபடி நாளை நடக்கும் என ‘பிபா’ செய்தித் தொடர்பாளர் வால்டர் டி கிரிகோரியோ தெரிவித்தார். இதில், தற்போதைய தலைவர் செப் பிளாட்டர், 5வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

 

 

20 ஆண்டு சிறை

நேற்று கைது செய்யப்பட்ட துணைத்தலைவர் ஜெப்ரி வெப், 50, கடந்த 24 ஆண்டுகளாக கெய்மேன் தீவுகள் கால்பந்து சங்கத் தலைவராக உள்ளார். 2012ல் வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபியன் கால்பந்து கூட்டமைப்பு (‘கான்காசப்’) தலைவர், ‘பிபா’ துணைத்லைவராகவும் நியமனம் ஆனார். இவர் மீது மிரட்டி பணம் பறித்தல், சதியில் ஈடுபடுதல் மற்றும் ஊழல் வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஜெர்ரி வெப் உள்ளிட்டோருக்கு 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

 

 

http://sports.dinamalar.com/2015/05/1432744073/fifaraid.html

உலகை உலுக்கும் கால்பந்து ஊழல்: பிஃபா தலைவர் பிளாட்டர் மீது ஊடகங்கள் ஆவேசம்
 

 

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு கால்பந்து போட்டிகளில் சுமார் ரூ.641 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) துணைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து உலகக் கால்பந்து கூட்டமைப்பான பிஃபா தலைவர் செப் பிளாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உலக நாடுகளின் பல்வேறு ஊடகங்கள் விளாசியுள்ளன.

 

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த பல்வேறுபோட்டிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக ஊடகங்கள், விளையாட்டு விளம்பர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், பிஃபா நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். அதற்கு ஈடாக போட்டியைஒளிபரப்பும் உரிமை, மார்க்கெட்டிங், ஸ்பான்சர்ஷிப் உரிமைஉள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார்கள்.

 

2018, 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான உரிமை ரஷ்யா மற்றும் கத்தாருக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு நிகழந்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஸ்விட்சர்லாந்து போலீஸார்,

பிஃபா தலைமை அலுவலகத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் இ-மெயில்தகவல்களை போலீஸார் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

மேலும் 2010 உலகக் கோப்பை கால்பந்தை தென் ஆப்பிரிக்காவுக்கு அளித்துள்ளதிலும் லஞ்சம் விளையாடியுள்ளதாகவும் வெளியான செய்திகள் கால்பந்து உலகினை உலுக்கியுள்ளது.

 

இந்நிலையில், ஜோசப் பிளாட்டர் விலக வேண்டும் என்று பல்வேறு ஊடகங்கள் விளாசியுள்ள விவரம் வருமாறு:

பிஃபா தலைமைச் செயலகம் உள்ள சுவிட்சர்லாந்தின் பத்திரிகையான லே மாடின் “பிளாட்டர் வெளியேற வேண்டும்” என்று கூச்சல் தலைப்பிட்டுள்ளது.

அவர் மீதான நம்பகத்தன்மை இழக்கப்பட்டுள்ளது. சக பத்திரிகையான லே டெம்ப்ஸ் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இத்தனையாண்டு காலம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்த தண்டனையிலிருந்து விலக்கு பெறும் நிலைக்கு முடிவு கட்டப்பட்டது என்று கைதுகளை கொண்டாடியுள்ளது.

 

கால்பந்து ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 14 பேரில் 9 அதிகாரிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள். இந்த ஊழலில் சுமார் 150மில்லியன் டாலர்கள் தொகை லஞ்சமாக கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

17 ஆண்டுகளாக பிஃபா-தலைவராக இருந்து வரும் பிளாட்டர் வெள்ளியன்று நடைபெறும் தேர்தலில் மறுதேர்வுக்காக நிற்கவுள்ள நிலையில் அவரது பெயர் ஊழல் செய்தவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

 

2010-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை நடத்த தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் பிஃபா அதிகாரிகளுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்கள் தொகை லஞ்சம்பாக கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

தென் ஆப்பிரிக்க டைம்ஸ் பத்திரிகை, “மோசடி உலகக் கோப்பை, தென் ஆப்பிரிக்கா போட்டியை நடத்த வென்றிருந்தாலும் மோசடி மோசடியே” என்று செய்தி வெளியிட்டுள்ளது

பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை தலையங்கத்தில் பிஃபாவுக்கு “ரெட் கார்ட்” வழங்கியுள்ளதோடு, செப் பிளாட்டர் உலகக் கால்பந்து விளையாட்தின் மரியாதையைக் கெடுத்து விட்டார். அவர் ராஜினாமா செய்து பெரிய மாற்றங்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியுள்ளது.

 

தி கார்டியன் இதழ், “ஊழலின் துர்நாற்றம்” என்று சாட, சன் டாப்லாய்ட் “செப்டிக் பிளாட்டர்” என்று வர்ணித்து “அழகான கால்பந்தாட்டத்தின் இருதயத்தில் புற்று நோயை வளர்த்திருக்கிறார் பிளாட்டர்” என்று சாடியுள்ளது. மேலும் சன் பத்திரிகை 2018 உலகக் கோப்பையை பிரிட்டனுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த தி பில்ட் என்ற இதழ் ‘கெட் அவுட் பிளாட்டர்’ என்று கொதித்துப் போயுள்ளது.

 

மேலும் இந்தப் பத்திரிகையில் பிளாட்டருக்கு இதில் தொடர்பில்லாவிட்டாலும், இதனை வளர்த்து விட்டதன் மூலம் அவர் தனது அதிகாரத்தை தக்க வைத்துள்ளார் என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

 

கால்பந்து வெறி பிடித்த நாடான இத்தாலியின் லா ரிபப்ளிகா பத்திரிகை, “பிளாட்டரின் பிஃபாவை பூகம்பம் ஒன்று சாய்த்துள்ளது. இது அதிகாரபூர்வமானது: உலக் கால்பந்து உலக திருடர்களின் கூட்டணியாகிவிட்டது என்று ஆவேசக் கூச்சலிட்டுள்ளது.

 

பிளாட்டருக்கும் பிஃபாவுக்கும் எதிராக பல ஊடகங்களும் கொதிப்படைந்தாலும், ரஷ்ய அரசு இதழில், “பிஃபாவை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பார்க்கிறது. ஒரு சர்வதேச விளையாட்டு அமைப்பாக பிஃபா சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது. மேலும் 2018 உலகக் கோப்பையை ரஷ்யாவுக்கு வழங்கியதை தடுக்க அமெரிக்க செனேட்டர்கள் செய்த முயற்சி பலிக்கவில்லை என்றும் இதனால் பிஃபா மீது கரி பூசப்படுகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article7255524.ece

ஃபீஃபா சர்ச்சை சூடுபிடிக்கிறது ப்ளட்டரை பதவி விலகுமாறு வலியுறுத்தல் - ப்ளட்டருக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆதரவு
 

சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளன (ஃபீஃபா) அதி­கா­ரிகள் எழுவர் நேற்­று ­முன்­தினம் கைது செய்­யப்­பட்­டதை அடுத்து சம்­மே­ளனம் பெரும் நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ளது.

 

இந்த சம்­ப­வத்தை அடுத்து சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலைவர் பத­விக்­கான தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கான முயற்­சியில் ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றியம் இறங்­கி­யுள்­ளது.

 

சிரேஷ்ட அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக இலஞ்சம், பணப்­ப­ரி­மாற்றம் போன்ற குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு அவர்கள் கைதா­னதை அடுத்து இன்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள தலைவர் பத­விக்­கான தேர்தல் நடத்­தப்­ப­டக்­கூ­டாது என்­பதில் ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றியம் குறி­யாக இருக்­கி­றது.

‘‘இந்த சம்­ப­வங்­க­ளா­னது, ஃபீஃபா கலா­சா­ரத்தில் ஊழல்­மோ­ச­டிகள் ஊறிப்­போ­யுள்­ளதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது’’ என ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றியம் குறிப்­பிட்­டுள்­ளது.

 

இதே­வேளை ஃபீஃபா தலை­மைத்­து­வத்தில் மாற்றம் அவ­சியம் என்­பதில் ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்கள் ஒன்­றி­யத்தின் நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­னர்கள் கரு­து­கின்­றனர்.

மேலும் வெள்­ளி­யன்று (இன்று) நடை­பெ­ற­வுள்ள ஃபீஃபா உறுப்­பி­னர்­களின் கூட்­டத்தை தாம் பகிஷ்­க­ரிக்­கக்­கூடும் எனவும் ஒன்­றியம் குறிப்­பிட்­டுள்­ளது.

நடப்பு ஃபீஃபா தலைவர் செப் ப்ளட்­டரை எதிர்த்து ஜோர்தான் இள­வ­ரசர் அலி பின் அல் ஹுசெய்ன் தவ­லைவர் பத­விக்கு போட்­டி­யி­டு­கின்றார்.

ஃபீஃபா தலை­மைத்­து­வத்தில் மாற்றம் அவ­சியம் என இள­வ­ரசர் அலி, அறிக்கை ஒன்­றின்­மூலம் தெரி­வித்­துள்ளார்.

‘‘ஃபீஃபாவில் நெருக்­க­டிகள் தொட­ரப்­ப­டக்­கூ­டாது’’ எனவும் அவர் கூறி­யுள்ளார்.

 

 

அவ­சரக் கூட்டம்

ஃபீஃபாவில் நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்ள நிலையில் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் தலைவர் செப் ப்ளட்டர், அவ­சரக் கூட்டம் ஒன்றை நேற்று நடத்­தினார்.

‘‘கால்­பந்­தாட்­டத்­திற்கும் இர­சி­கர்­க­ளுக்கும் ஃபீஃபா­வுக்கும்  இது மிகவும் நெருக்­க­டி­யான காலம். பலர் தாங்கள் அடைந்­துள்ள ஏமாற்றம் குறித்து கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

சிலர் தங்­க­ளது கருத்­துக்­களின் மூலம் எங்­களை திசை திருப்ப விளை­கின்­றனர்’’ என ப்ளட்டர் குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் பதவி விலகி புதி­ய­வ­ருக்கு இடம் வழங்க வேண்டும் என்ற அழுத்தம் அதி­க­ரித்­துள்ள நிலை­யி­லேயே அவர் நேற்­றைய தினம் அவ­சரக் கூட்டம் ஒன்றை நடத்­தினார்.

இப்பத்­தி­ரிகை அச்­சுக்கு செல்­லும்­வரை அக் கூட்டம் தொடர்­பான பூரண விபரம் வெளி­யா­கி­யி­ருக்­க­வில்லை.

ப்ளட்டர் பதவி விலக வேண்டும் என பிரிட்டிஷ் பிர­தமர் டேவிட் கெமரூன் கோரி­யுள்ள அதே­வேளை, ப்ளட்­டரின் ஐந்­தா­வது தவணைப் பதவிக் காலத்­திற்கு ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமர் புட்டின் ஆத­ரவு வழங்­கி­யுள்ளார்.

ப்ளட்டர் பதவி வில­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றியத் தலைவர் மைக்கல் ப்ளட்­டி­னியும் இருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும் தலைவர் பத­வி­யி­லி­ருந்து வில­கப்­போ­வ­தில்லை என ப்ளட்டர் தெரி­வித்­துள்ளார்.

 

 

அனு­ச­ர­ணை­யா­ளர்கள் விமர்­சனம்

ரஷ்­யாவில் 2018இலும் கத்­தாரில் 2022இலும் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­கான மனு கோரல்கள் தொடர்­பாக எழுப்­பப்­பட்ட சந்­தே­கங்கள் தொடர்­பாக ஃபீஃபா நடத்தும் விசா­ரணை முறைகள் உலக கிண்ண அனு­ச­ரணை நிறு­வ­னங்­களில் ஒன்­றான கொக்கா கோலா கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளது.

அத்­துடன் மற்­றைய சில அனு­ச­ரணை நிறு­வ­னங்­களும் ஃபீஃபா­வுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன.

 

ஃபீஃபாவில் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு மேல் மோசடி இடம்­பெற்­றுள்­ள­தாக குற்றச்சாட்டு சுமத்தப்பட் டுள்ள நிலையில், ஃபீஃபாவில் அவசர சீர்திருத்தங்கள் இடம்பெறத் தவறினால் தனது அனுசரணையை நீக்கிக் கொள்ளப்போவதாக விசா எச்சரித்துள்ளது.

அத்துடன் நைக், அடிடாஸ், கியா, மெக்டொனல்ட்ஸ் ஆகிய மற்றைய வர்த்தக குறியீட்டு நிறுவனங்களும் கடும் வார்த்தைப் பிரயோகங்களுடன் ஃபீஃபாவுக்கு விமர்சனக் கனைகளைத் தொடுத்துள்ளன.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10315#sthash.RvxnreFv.dpuf

கைது செய்யப்பட்ட பீபா அதிகாரிகள் ஏழு பேரும் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுகிறார்கள்
 

 

கால்பந்து உலக கிண்ணத்தை நடத்­து­வ­தற்கு உரிமை வழங்­குதல், தொலைக்காட்சி ஒளி­ப­ரப்பு உரிமம் வழங்­கு­வது தொடர்­பாக ரூ. 2360 கோடி அள­வுக்கு ஊழல் நடந்­துள்­ளது. இந்த வழக்கில் ‘பிபா’ துணைத்­த­லைவர் இருவர் உட்­பட, 7 நிர்­வா­கிகள் நேற்றுமுன்தினம் கைது செய்­யப்­பட்­டனர்.

இவர்கள் அமெ­ரிக்­கா­வுக்கு நாடு கடத்­தப்­பட உள்­ளனர். சர்­வ­தேச கால்­பந்து கூட்­ட­மைப்பு சுவிட்­சர்­லாந்து தலை­நகர் சூரிச்சில் உள்­ளது.
எதிர்வரும் 2018இல் ரஷ்யா, 2022இல் கத்­தா­ருக்கு உலக கிண்ணக் கால்­பந்து தொடரை நடத்த அனு­மதி தந்­ததில் முறை­கேடு நடந்­த­தாக ‘பிபா’ மீது குற்­றச்­சாட்டு எழுந்­தது. இது­தொ­டர்­பாக பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

தவிரஇ ‘பிபா’ நிர்­வா­கிகள் மீது, அமெ­ரிக்­காவில் ஊழல் வழக்கு நிலு­வையில் உள்­ளது. கடந்த 1990இல் அமெ­ரிக்கா மற்றும் லத்தீன் அமெ­ரிக்­காவில் சர்­வ­தேச கால்­பந்து தொடர்கள் நடந்த போது, ஒளி­ப­ரப்பு உரி­மத்தை தங்­க­ளுக்கு சாத­க­மான நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கி­யதன் மூலம் நிர்­வா­கிகள் ரூ. 2360 கோடி வரை ஊழல் செய்­த­தாக வழக்கு பதி­யப்­பட்­டது.

 

இதில் தொடர்­பு­டைய நிர்­வா­கிகள் சூரிச்சில் இருப்­பதால், அவர்­களை கைது செய்­யு­மாறு அமெ­ரிக்க புல­னாய்வுத் துறை(எப்.பி.ஐ.இ) கேட்டுக் கொண்­டது.
இதில்இ ‘பிபா’ துணைத்­த­லை­வர்கள் ஜெப்ரி வெப், ஈகு­னியே பிகு­ய­ரடோ மற்றும் நிர்­வா­கிகள் எடு­வார்டோ லி, ஜூலியோ ரோச்சா, கோஸ்டாஸ் டகாஸ், ரபெல் எஸ்­குய்வல், ஜோஸ் மரியா மரின் என, 7 நிர்­வா­கிகள் கைது செய்­யப்­பட்­டனர்.

 

இத்­துடன் சேர்த்து, இந்த வழக்கு தொடர்­பாக இது­வரை 14 ‘பிபா’ நிர்வா­கிகள் கைது செய்­யப்­பட்டுள்ளனர். கைது செய்­யப்­பட்ட 7 பேரும்இ ஊழல் வழக்கு தொடர்­பான விசா­ர­ணைக்­காக, அமெ­ரிக்­கா­வுக்கு நாடு­ க­டத்­தப்­ப­ட­வுள்­ளனர் என்று தெரி விக்கப்படுகிறது.

 

http://www.virakesari.lk/articles/2015/05/29/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

அசைக்க முடியாத பிளாட்டர்: 5வது முறையாக ‘பிபா’ தலைவர்

 

ஜூரிச்: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவராக 5வது முறையாக செப் பிளாட்டர் தேர்வு செய்யப்பட்டார்.     

சுவிட்சர்லாந்து தலைநகர் ஜூரிச்சில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘பிபா’ தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில், தற்போதைய தலைவரான சுவிட்சர்லாந்தின் செப் பிளாட்டர், 79, மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜோர்டான் இளவரசர் அலி பின் அல்-– ஹூசைன், 39, களம் கண்டார்.      

 

கடந்த 17 ஆண்டுகளாக ‘பிபா’ தலைவராக ஆதிக்கம் செலுத்தி வரும் பிளாட்டருக்கு இம்முறை கடும் எதிர்ப்பு காணப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இவரது பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தன. வரும் 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தாருக்கு உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த அனுமதி தந்ததில் முறைகேடு, ‘டிவி’ ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் ரூ. 984 கோடி வரை ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக, ‘பிபா’ நிர்வாகிகள் 7 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.      

 

இந்த பரபரப்பான சூழலில் நேற்று ‘பிபா’ தலைவர் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 209 உறுப்பு நாடுகளில், முதல் சுற்றில் 140 ஓட்டுகள் பெறுபவர் வெற்றி பெறலாம். ஆனால், பிளாட்டருக்கு 133 ஓட்டுகள் தான் கிடைத்தன. ஜோர்டான் இளவரசர் அலி பின் அல்– ஹூசைன் 73 ஓட்டுகள் பெற்றார். இதையடுத்து இரண்டாவது சுற்று ஓட்டெடுப்பு நடக்க இருந்தது. இதற்கு முன் ஹூசைன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து பிளாட்டர் ‘பிபா’ தலைவராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.

 

தடைகளை தகர்த்தவர்

கடந்த 1936ல் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர் ஜோசப் செப் பிளாட்டர், 79. 1975 முதல், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பில் (பிபா) பணியாற்றி வருகிறார். கடந்த 1975–81ல் ‘பிபா’ தொழில்நுட்ப இயக்குனராக செயல்பட்ட இவர், 1981–98ல் செயலாளராக இருந்தார். 1998ல் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இவர், முதன்முறையாக தலைவரானார். பின், 2002, 2007, 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை தக்கவைத்துக் கொண்டார். கடந்த 17 ஆண்டுகளாக தலைவராக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர், இம்முறையும் வெற்றி கண்டதன்மூலம் 5வது முறையாக தலைவரானார்.     

 

சமீபத்திய சர்ச்சைகள் காரணமாக ‘பிபா’ தலைவர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும், பிளாட்டர் வெளியேற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதனை எல்லாம் தகர்த்த இவர், மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது வியப்பான விஷயம் தான்.

 

http://sports.dinamalar.com/2015/05/1432922149/SeppBlatterFIFAPresident.html

‘கெட் அவுட்’ பிளாட்டர்: ‘பிபா’ தலைவருக்கு கண்டனம்

 

ஜூரிச்: ‘பிபா’ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தலைவர் பதவியில் இருந்து செப் பிளாட்டர் விலக வேண்டும் என, உலகின் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

 

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சுவிட்சர்லாந்து தலைநகர் ஜூரிச்சில் உள்ளது. இதன் தலைவராக செப் பிளாட்டர், 79, உள்ளார். கடந்த 1998 முதல் தொடர்ந்து 17 ஆண்டுகள் பதவியில் உள்ள இவர், 5வது முறையாக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

 

செப் பிளாட்டரின் 17 ஆண்டு கால தலைவர் பதவியில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தன. வரும் 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தாருக்கு உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த அனுமதி தந்ததில் முறைகேடு நடந்ததாக, சுவிட்சர்லாந்து  போலீசார் விசாரிக்கின்றனர்.

 

தவிர, கடந்த 1990 முதல் அமெரிக்காவில் நடந்த கால்பந்து தொடர்களில், ‘டிவி’ ஒளிபரப்பு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு வழிகளில் ‘பிபா’ நிர்வாகிகள் 14 பேர் ரூ. 984 கோடி வரை ஊழல் செய்ததாக வழக்கு பதிவானது.

 

இது தொடர்பாக, அமெரிக்க புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.,) கேட்டுக் கொண்டபடி, ‘பிபா’ துணைத்தலைவர்கள் ஜெப்ரி வெப், ஈகுனியே பிகுயரடோ உட்பட 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

 

பலத்த எதிர்ப்பு:

2018 உலக கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை ரஷ்யாவிடம் இழந்த இங்கிலாந்து கால்பந்து சங்க தலைவர் கிரெய்க் டைக் கூறுகையில்,‘‘ செப் பிளாட்டர் தலைவராக இருக்கும் வரை, ‘பிபா’ அமைப்பை சுத்தம் செய்ய முடியாது. இவர் தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும். இதற்கான வேலைகளை நாங்கள் செய்வோம்,’’ என்றார்.

 

நம்பிக்கை இல்லை:

இதேபோல, உலகின் பல நாடுகளில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளிலும், செப் பிளாட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் விவரம்:

 

* ‘லே மடின்’, சுவிட்சர்லாந்து:

செப் பிளாட்டர் மீது நம்பிக்கை இல்லை. இவர் கட்டாயம் பதவி விலக வேண்டும்.

 

* ‘பைல்டு’, ஜெர்மனி:

இந்த பிரச்னையில் செப் பிளாட்டருக்கு நேரடி தொடர்பு இல்லை என்றால், பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஊழல் நிர்வாகிகளை இத்தனை நாள் பாதுகாத்து வந்துள்ளார். ‘கெட் அவுட்’ பிளாட்டர்’.

 

* தி டைம்ஸ்’, பிரிட்டன்:

உலக கால்பந்து விளையாட்டின் மரியாதையை கெடுத்து விட்டார் செப் பிளாட்டர். இவர் பதவி விலகி, ‘பிபா’ அமைப்பில் மாற்றங்களுக்கு வழி விட வேண்டும்.

 

‘தி கார்டியன்’, அமெரிக்கா

ஊழலின் துர்நாற்றம், ‘பிபா’. இது உலகின் அழகிய விளையாட்டான கால்பந்தில் ‘கேன்சர்’ தோன்ற வழி வகுத்து விட்டது.

 

‘தி சன்’, பிரிட்டன்:

2018ல் உலக கோப்பை தொடர் நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்து பறித்து, பிரிட்டனுக்கு தர வேண்டும்.

 

‘லா ரிபப்ளிகா’, இத்தாலி:

உலக திருடர்களின் கூட்டணியாகி விட்ட செப் பிளாட்டரின் ‘பிபா’வை, நிலநடுக்கம் தாக்கி விட்டது.

 

ரஷ்ய அதிபர் கண்டனம்

ரஷ்யாவில் இருந்து வெளியாகும் ‘ரோசிஸ்கயா’ என்ற அரசு பத்திரிகையில்,‘ 2018 உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்த ரஷ்யா அனுமதி பெற்றது. இதை ரத்து செய்ய வேண்டும் என, அமெரிக்க தரப்பில் கொடுத்த நெருக்கடியை ஏற்க செப் பிளாட்டர் மறுத்தார். இதனால், சுதந்திரமாக செயல்படும் ‘பிபா’ அமைப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா முயற்சிக்கிறது,’ என தெரிவித்துள்ளது.

 

ரஷ்ய அதிபர் புடின் இதுகுறித்து கூறுகையில்,‘‘ மற்ற நாடுகளிலும் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த விரும்பும் அமெரிக்காவின் அப்பட்டமான முயற்சி இது, 5வது முறையாக செப் பிளாட்டர் தலைவராவதை தடுக்கவே, நிர்வாகிகளை கைது செய்தது, இது மிகவும் விசித்திரமாக உள்ளது. தான் நினைத்த இலக்கை அடைய சட்ட விரோதமான முறையில் செயல்படுகின்றனர்,’’ என்றார்.

 

மகிழ்ச்சியில் மாரடோனா

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, ‘பிபா’ நிர்வாகிகள் கைது சம்பவத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சியுடன் மாரடோனா கூறுகையில்,‘‘ கால்பந்தை நிர்வகிக்கும் ‘பிபா’ அமைப்பில் ஊழல் நடப்பதாக பல ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். ஆனால், என்னை அவர்கள் பைத்தியக்காரன் என்றனர். இன்று அமெரிக்க புலனாய்வுத் துறையினர் இதை உண்மை என்று நிரூபித்து விட்டனர். ஊழலில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட செய்தி மகிழ்ச்சி தருகிறது. அடுத்து செப் பிளாட்டர் தான்,’’ என்றார்.

 

வார்னர் ‘சரண்’

அமெரிக்க ஊழல் வழக்கில் தொடர்புடைய டிரினிடாட் அண்டு டுபாகோவை சேர்ந்த ‘பிபா’ முன்னாள் துணைத்தலைவர் ஜாக் வார்னர், நேற்று போர்ட் ஆப் ஸ்பெயின் கோர்ட்டில் சரண் அடைந்தார். ஜாமின் பெற தாமதம் ஆனதால், வார்னர் ஒரு நாள் இரவு முழுவதும் டிரினிடாட் சிறையில் அடைக்கப்பட்டார். பின் நேற்று காலை ரூ. 2.5 கோடி செலுத்தி, ‘கோர்ட்டில் ‘பாஸ்போர்ட்’ ஒப்படைப்பது, வாரத்துக்கு 2 நாட்கள் போலீசார் விசாரணைக்கு ஆஜராவது,’ என்ற நிபந்தனையின் பேரில் ‘ஜாமின்’ பெற்றார்.

 

தலைமையகத்தில் ‘ரெய்டு’

வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபியன் கால்பந்து கூட்டமைப்பு (‘கான்காசப்’) தலைவர் ஜெப்ரி வெப் நேற்று கைதானார். இதன் முன்னாள் தலைவர் ஜாக் வார்னர் மீதும் வழக்கு உள்ளது. இதனிடையே, மியாமியில் உள்ள ‘கான்காகப்’ தலைமையகத்தில் நேற்று அமெரிக்க போலீசார் ‘ரெய்டு’ நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

 

‘ஸ்பான்சர்’ மிரட்டல்

‘பிபா’ அமைப்பில் முக்கிய ‘ஸ்பான்சர்’ ‘விசா’ அமைப்பு வெ ளியிட்ட அறிக்கையில்,‘நடந்த சம்பவம் மிகவும் ஏமாற்றமாக உள்ளது. உடனடியாக ‘பிபா’ இழந்த நன்மதிப்பை மீண்டும் பெறும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதை செய்யவில்லை எனில், எங்களது ஒப்பந்தத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டியது இருக்கும்,’ என, தெரிவித்தது. இதேபோல, ஹூண்டார் நிறுவனமும் கூறியுள்ளது.

 

தேர்தல் வேண்டாம்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியில்,‘ இன்று தலைவர் தேர்தல் நடக்கக் கூடாது. இதை 6 மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், ‘பிபா’ அமைப்பில் ஊழல் கலாசாரம் வேரூன்றி விடும். இப்போதைய நிர்வாகத்தை ஒட்டு மொத்தமாக மாற்றி அமைக்க வேண்டும்,’ என, தெரிவித்துள்ளது.

 

இது துவக்கம் தான்

அமெரிக்க வக்கீல் கெல்லி கூரியே கூறுகையில்,‘‘ 7 ‘பிபா’ நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட மிக முக்கியமான விஷயம். அதேநேரம், இது துவக்கம் தான், முடிவல்ல, எங்களது நடவடிக்கைகள் தொடரும்,’’ என்றார்.

 

 

http://sports.dinamalar.com/2015/05/1432830319/SeppBlatterfifa.html

"அமெரிக்காவின் சதி"
 

 

2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்­பந்து போட்டி, ரஷ்­யாவில் நடை­பெ­றாமல் தடுப்­ப­தற்­காக­த்தான் அமெ­ரிக்கா பிபா மீது ஊழல் குற்றச்சாட் டை சுமத்­து­வ­தாக ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புடின் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

 

ஊழலில் ஈடு­பட்­ட­தாக பிபா நிர்­வா­கிகள் 7 பேரை, அமெ­ரிக்க அரசின் வேண்­டு­கோ­ளின்­படி சுவிட்­ஸர்­லாந்து பொலிஸார் சூரிச்சில் கைது செய்­தனர்.
கால்­பந்து உலகில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் இந்த சம்­பவம் குறித்து கருத்து தெரி­வித்­துள்ள ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புடின், '' எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்­யாவில் உலகக் கிண்ணம் நடை­பெ­று­வதை அமெ­ரிக்­காவால் பொறுத்துக் கொள்ள முடி­ய­வில்லை.

 

 

ரஷ்­யாவில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணக் கால்­பந்து போட்­டியை வேறு நாட்­டுக்கு மாற்ற வேண்டும் என்று அமெ­ரிக்­கா­ மு­யற்­சிக்­கி­றது. அதற்­கா­கத்தான் இத்­த­கைய வேலை­களில் ஈடு­ப­டு­கி­றது'' என்றார்.

இதற்­கி­டையே லண்­டனில் இருந்து வெளிவரும் 'சன்' இதழ், எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்­பந்து போட்­டியை நடத்தும் வாய்ப்­பினை ரஷ்­யா­விடம் இருந்து பறித்து இங்­கி­லாந்­துக்கு அளிக்க வேண்­டு­மென்று கோரி­யுள்­ளது.

 

 

லஞ்சம் அளித்தே ரஷ்யா 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்­டியை நடத்தும் வாய்ப்பை பெற்­றி­ருப்­ப­தாக அப்­பத்­தி­ரிகை குற்றம் சாட்­டி­யுள்­ளது.
2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்­பந்து போட்­டியை நடத்த இங்­கி­லாந்தும் போட்­டி­யிட்­டது. இதில் 2 வாக்குகளுடன் முதல் சுற்­றி­லேயே இங்­கி­லாந்து தோல்­வியடைந்­தது.

ரஷ்யா முதல் சுற்றில் 9 வாக்குகளும், 2ஆவது சுற்றில் 13 வாக்குகளும் பெற்று உலகக் கிண்ணக் கால்­பந்து போட்­டியை முதல் முறை­யாக நடத்தும் வாய்ப்பை பெற்­றது.
கடந்த 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்­பந்து போட்­டியை நடத்தும் வாய்ப்­பினை பெற தென்­னா­பிரிக்கா, 10 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை லஞ்­ச­மாக வழங்­கி­ய­தாக பிபா மீது எப்.பி.ஐ. குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

 

 

அதேபோல் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்­பந்து போட்­டியை நடத்த ரஷ்­யா­வுக்கும், 2022ஆம் ஆண்டு போட்டியை நடத்தும் வாய்ப்பினை குட்டி நாடான கத்தாருக்கு வழங்கியதிலும் பெரும் தொகை லஞ்சமாக கைமாறியிருப்பதாக எப்.பி.ஐ குற்றஞ்சாட்டி யுள்ளது.

 

 

http://www.virakesari.lk/articles/2015/05/30/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF

‘மன்னித்து விடுவேன், மறக்க மாட்டேன்’: பிளாட்டர் ஆவேசம்

 

ஜூரிச்: ‘‘கால்பந்து அமைப்புக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை செயல்பட்ட விதம் அதிர்ச்சியாக உள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கத் தலைவர்களும் எனக்கு எதிராக செயல்பட்டனர். இவர்களை மன்னித்து விடுவேன். ஆனால் மறக்க மாட்டேன்,’’ என, ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்தார்.      

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சுவிட்சர்லாந்து தலைநகர் ஜூரிச்சில் உள்ளது. இதன் தலைவர் தேர்தலில், சுவிட்சர்லாந்தின் செப் பிளாட்டர், 79, ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார்.      

 

இதுகுறித்து செப் பிளாட்டர் கூறியது: ‘பிபா’ தேர்தல் நடக்க இருந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்க ஊழல் தடுப்பு பிரிவு கொடுத்த உத்தரவு அடிப்படையில், துணைத்தலைவர் உட்பட 7 பேரை கைது செய்தனர். இது தற்செயலான நடவடிக்கை அல்ல, ‘பிபா’ நிர்வாகத்துக்கு எதிராக வேண்டுமென்றே இப்படிச் செய்துள்ளனர். ஏனெனில், 2022 உலக கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை, அமெரிக்கா இழந்துள்ளது. இதனால் தான், அமெரிக்கா இப்படி நடந்து கொண்டுள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.      

‘பிபா’ குறித்து அமெரிக்க நீதித்துறை, அட்டர்னி ஜெனரல் லொரெட்டா லின்ச் கூறுகையில்,‘ கால்பந்தில் பரவலாக ஊழல் மலிந்து கிடக்கிறது,’ என்கிறார். மற்றொருவர் ‘பிராடு’ உலக கோப்பை என்கிறார்.உண்மையில் இது அதிர்ச்சி தருகிறது. என்ன நடக்கின்றது, எது உண்மை என்று தெரியாமல், மற்றொரு நிர்வாகம் குறித்து இப்படி ஒருபோதும் நான் பேசியது கிடையாது.   

   

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பிளாட்டினி மட்டுமல்ல பலரும் என்னை பதவி விலக வேண்டும் என்கின்றனர். இது வெறுக்கத்தக்க செயல். இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவர்களை மன்னித்து விடுவேன். ஆனால் எப்போதும் மறக்க மாட்டேன்.      

இவ்வாறு செப் பிளாட்டர் கூறினார்.

 

நான் தான் தலைவன்

செப் பிளாட்டர் கூறுகையில்,‘‘தேர்தலுக்கு முன் சற்று நெருடலாக இருந்தது. ஆனால், இப்போது அனைவருக்கும் நான்தான் தலைவன். ஒட்டுமொத்த ‘பிபா’ அமைப்புக்கும் தலைவன் நான் தான். இது எனது அமைப்பு,’’ என்றார்.

 

உலக கோப்பை புறக்கணிப்பா

செப் பிளாட்டர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இங்கிலாந்து உட்பட பல்வேறு அணிகள், வரும் உலக கோப்பை தொடரை புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

http://sports.dinamalar.com/2015/05/1433000875/FIFAPresidentSeppBlatter.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.