Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு

Featured Replies

  • தொடங்கியவர்

கொல்கத்தா வீரர் போஸ்டிகா விலகல்

 

அட்லெடிகோ டி கொல்கத்தா அணி யின் நட்சத்திர வீரரான ஹெல்டர் போஸ்டிகா காயம் காரணமாக அடுத்த 3 அல்லது 4 வாரங்கள் வரை விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டிகாவின் விலகல் கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல் அணிக்காக 3 முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவரான போஸ்டிகா, கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணிக்கு எதிராக இரு கோலடித்தார்.

அதன்பிறகு தசைப்பிடிப்பு ஏற் பட்டதைத் தொடர்ந்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட் டார். இந்த நிலையில் காயத்துக்கு தனது தனிப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக போஸ்டிகா போர்ச்சுகல் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக அட்லெடிகொ அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “போஸ்டிகாவுக்கு தசைநார் முறிவு ஏற்பட்டிருப்பதால், அது தொடர்பாக அணி உரிமை யாளர்களின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அவர் விரைவாக குணமடைய வேண்டுமெனில் உடனடியாக நாடு திரும்ப வேண் டும் என அவருடைய தனிப்பட்ட மருத்துவர் கேட்டுக்கொண்டார்.

அதனால் அடுத்த 3 அல்லது 4 வாரங்கள் போஸ்டிகா விளையாட மாட்டார். வரும் 29-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள கொல்கத்தா-டெல்லி இடையிலான போட்டியில் அவர் விளையாடுவார்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article7733580.ece

  • Replies 52
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: சென்னை அணிக்கு 2-வது தோல்வி

 
இன்றைய ஆட்டம் கோலடித்த மகிழ்ச்சியில் சிகாவ் (வலது).
இன்றைய ஆட்டம் கோலடித்த மகிழ்ச்சியில் சிகாவ் (வலது).

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது. டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் அதேவேளையில் சென்னை அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த பின்கள வீரர் மெய்ல்சனுக்குப் பதிலாக பெர்னாட் மென்டியும், ரஃபேல் அகஸ்டோவுக்குப் பதிலாக மானுவேல் பிளாசியும் சேர்க்கப்பட்டனர். முன்கள வீரர்களில் கடந்த போட்டியில் விளையாடிய ஜேஜே லால்பெக்குலா இந்திய அணிக்காக உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் விளையாட சென்றுவிட்டதால் அவருக்குப் பதிலாக மென்டோஸா சேர்க்கப்பட்டார். மற்றொரு முன்கள வீரர் பிக்ருவுக்குப் பதிலாக பல்வந்த் சிங் இடம்பெற்றார்.

8-வது நிமிடத்தில் கோல்

டெல்லி அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பின்களத்தில் அன்வர் அலிக்குப் பதிலாக அனாஸ் இடாதோடிகாவும், மிட்பீல்டில் டிசவுசாவுக்குப் பதிலாக குஸ்டாவ் டாஸ் சேன்டோவும் சேர்க்கப்பட்டனர். ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆட, 8-வது நிமிடத்தில் டெல்லி கேப்டன் ஹான்ஸ் முல்டர் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்தை பெனால்டி பாக்ஸுக்குள் நின்ற சென்னை பின்கள வீரர் பிளாசி முழங்கையால் இடிக்க, டெல்லி அணிக்கு ஸ்பாட் கிக் வாய்ப்பை வழங்கினார் நடுவர். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிகாவ் அதில் கோலடிக்க, டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு டெல்லி அணி மிகுந்த நம்பிக்கையோடு ஆட, சென்னை அணி ஸ்கோரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் ஆடியது. சென்னை அணிக்கு 25-வது நிமிடத்தில் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தபோதும், அதை டெல்லி வீரர்கள் அற்புதமாக முறியடித்தனர்.

30-வது நிமிடத்தில் டெல்லி ஸ்டிரைக்கர் ரிச்சர்ட் காட்ஸே, சென்னையின் 3 பின்கள வீரர்களை வீழ்த்திவிட்டு கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்தார். ஆனால் சென்னை கோல் கீப்பர் இடெல் அதை அற்புதமாக முறியடித்தார். இதையடுத்து டெல்லி அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் புளோரென்ட் பந்தை உதைக்க, கோல் கம்பத்தின் முன்னாள் நின்ற சான்டோஸ் மிக அற்புதமாக பந்தை தலையால் முட்டி கோல் கம்பத்தை நோக்கி திருப்பினார். ஆனால் அதையும் அற்புதமாக தகர்த்தார் இடெல்.

34-வது நிமிடத்தில் மென்டோஸா கோல் கம்பத்தை நோக்கி உதைத்த பந்து, கோல் கம்பத்தின் இடது புறத்தில் பட்டு வெளியேறியதால், நூலிழையில் கோல் வாய்ப்பு நழுவியது. இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் சென்னை அணி கோலடிக்க தீவிரமாக போராடினாலும், டெல்லியின் பின்கள வீரர்களை தாண்டி செல்ல முடியவில்லை. 61-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஹர்மான்ஜோத் கப்ரா கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அபிஷேக் தாஸ் அதில் கோலடிக்க முயன்றார். ஆனால் அதை டெல்லி கோல் கீப்பர் சஞ்ஜிபன் அற்புதமாக முறியடித்தார்.

68-வது நிமிடத்தில் கொல்கத்தாவின் கோல் வாய்ப்பு நூலிழையில் நழுவ, 69-வது நிமிடத்தில் இலானோவுக்குப் பதிலாக புருனோ பெலிசாரியை மாற்று வீரராக களமிறக்கியது சென்னை. அதற்கும் பலன் கிடைக்காததைத் தொடர்ந்து பிளாசிக்குப் பதிலாக பிக்ருவை இறக்கிவிட்டார் சென்னை பயிற்சியாளர் மெட்டாரஸி. ஆனாலும் கடைசி வரை கோல் எதுவும் விழாததால் டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-சென்னை-அணிக்கு-2வது-தோல்வி/article7741943.ece

  • தொடங்கியவர்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புனேவுக்கு 2-வது வெற்றி

 
பந்தை வசப்படுத்தும் முயற்சியில் நார்த் ஈஸ்ட், புனே வீரர்கள்.
பந்தை வசப்படுத்தும் முயற்சியில் நார்த் ஈஸ்ட், புனே வீரர்கள்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் புனே அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

புனேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி 4-3-3 என்ற பார்மட்டிலும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தாலும், கோலடிக்க முடியவில்லை. 15-வது நிமிடத்தில் புனே அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை நார்த் ஈஸ்ட் கோல் கீப்பர் ஜென்னாரோ தகர்த்தார்.

இதன்பிறகு நார்த் ஈஸ்ட் அணியின் சியாம், 22-வது நிமிடத்தில் கோலடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். 41-வது நிமிடத்தில் புனே அணிக்கு நல்ல கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் ஸ்டிரைக்கர் அட்ரியான் வசம் பந்து செல்ல, மிக எளிதாக கோல் அடிக்க வேண்டிய நிலையில், இடது காலால் அவர் பந்தை உதைத்தார். ஆனால் அந்த ஷாட் மெதுவாக சென்றதால் நார்த் ஈஸ்ட் கோல் கீப்பர் எளிதாக தகர்த்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தீவிரமாக போராட, 73-வது நிமிடத்தில் புனே அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் பின்கள வீரர் நிக்கி ஷோரே கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார். கோல் கம்பத்தின் முன்னால் நின்ற நார்த் ஈஸ்ட் அணியின் பின்கள வீரர் ரால்டே பந்தை தலையால் முட்டி வெளியில் திருப்ப முயன்றார். ஆனால் அது எதிர்பாராதவிதமாக கோல் வலைக்குள் புகுந்ததால் ஓன் கோல் ஆனது. இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

http://tamil.thehindu.com/sports/இந்தியன்-சூப்பர்-லீக்-கால்பந்து-புனேவுக்கு-2வது-வெற்றி/article7746217.ece

  • தொடங்கியவர்

கால்பந்து: தேறுமா சென்னை அணி

Elano, chennai

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் இன்று சென்னை அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் கோவாவை சந்திக்கிறது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. இதில் சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா, மும்பை, புனே உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

கோவாவின் படோர்டாவில் இன்று நடக்கும் லீக் போட்டியில், தோனி சக உரிமையாளராக உள்ள சென்னையின் எப்.சி., அணி, கோவாவை அதன் சொந்தமண்ணில் எதிர்கொள்கிறது. 

இதுவரை நடந்த இரு லீக் போட்டிகளிலும் தோற்ற சென்னை அணி இன்னும் புள்ளிக்கணக்கைத் துவக்கவில்லை. கடந்த முறை அதிக கோல் அடித்து அசத்திய எலானோ, இம்முறை இன்னும் கோல் கணக்கைத் துவக்காதது ஏமாற்றம் தான்.

தவிர, கோல்கட்டா அணிக்கு எதிராக கலக்கிய ஜீஜே, இந்திய அணிக்கு விளையாட சென்றதும் இழப்பாக உள்ளது. இந்த ஆண்டு புதிய வரவாக வந்த பிக்ருவும் ஏமாற்றுகிறார்.

மற்றபடி பந்துகளை பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், சரியான ‘பினிஷிங்’ இல்லாததும் தோல்விக்கு காரணமாகிறது. 

மென்டி, தோய் சிங், அகஸ்டோ, ஹர்மன்ஜோத் கப்ரா, ரால்டேவுடன் பயிற்சியாளர் மெடராசி ஏதாவது செய்தால் தான் முதல் வெற்றி பெற முடியும்.

கடந்த இரு போட்டிகளில் எதிரணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு விட்டுத் தந்தது போல, இன்றும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

சொந்தமண் பலம்:

கோவா அணியை பொறுத்தவரையில் இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளில் டில்லிக்கு எதிராக வெற்றி, வலிமையான கோல்கட்டாவை ‘டிரா’ செய்தது என, உற்சாகமாக உள்ளது. நட்சத்திர வீரர்கள் டி ஆலிவெய்ரா, கோல்கட்டாவுக்கு எதிராக மாற்று வீரராக களமிறங்கி கோல் அடித்த கீனன் அல்மெய்டா, கொன்சாலஸ், லக்கா உள்ளிட்டோர் அசத்த காத்திருக்கின்றனர்.

http://sports.dinamalar.com/2015/10/1444493954/Elanochennai.html

  • தொடங்கியவர்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கோலின்றி டிராவில் முடிந்தது கேரளா-மும்பை ஆட்டம்

 
 
பந்தை வசப்படுத்த போராடும் கேரளா-மும்பை வீரர்கள்.
பந்தை வசப்படுத்த போராடும் கேரளா-மும்பை வீரர்கள்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் கேரளா அணி 5-3-2 என்ற பார்மட்டிலும், மும்பை அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆரம்பத்திலேயே மும்பை அணி தாக்குதல் ஆட்டத்தை கையாண்டது.

2-வது நிமிடத்தில் மும்பை ஸ்டிரைக்கர் சோனி நோர்டே, பந்தோடு வேகமாக கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினார். ஆனால் கேரளா பின்கள வீரர் பீட்டர் ரேமேஜ் அதை முறியடித்தார். தொடர்ந்து 4-வது நிமிடத்தில் மும்பையின் கேபிரியேல் கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார். ஆனால் அது கோல் கம்பத்துக்கு மேலே பறக்க அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது.

இதன்பிறகு 11-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை சோனி நோர்டே கோட்டைவிட்டார். 25-வது நிமிடத்தில் மும்பை மிட்பீல்டர் பிரதேஷ் ஷிரோத்கர், கேரளா பின்கள வீரர் வினீத்தை கீழே தள்ளினார். இதையடுத்து கேரளா அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் புருனோ பெரோன் பந்தை உதைத்தார். ஆனால் அதை மும்பை ஸ்டிரைக்கர் சிங்கம் சுபாஷ் அற்புதமாக தகர்க்க, கேரளாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கோலடிக்க தீவிரம் காட்டிய கேரளா, 56-வது நிமிடத்தில் ஸ்டிரைக்கர் மனன்தீப்புக்குப் பதிலாக இஷ்ஃபாக் அஹமதுவை களமிறக்கியது. தொடர்ந்து கேரளா அணி மாற்று வீரர்களை களமிறக்கியும் பலன் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் மும்பை அணிக்கும் கோல் கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

இன்றைய ஆட்டம்

கோவா-சென்னை
இடம்: படோர்டா
நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.

http://tamil.thehindu.com/sports/இந்தியன்-சூப்பர்-லீக்-கால்பந்து-கோலின்றி-டிராவில்-முடிந்தது-கேரளாமும்பை-ஆட்டம்/article7749712.ece

  • தொடங்கியவர்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: வெற்றிக் கணக்கை தொடங்கியது சென்னை

 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி கோவா அணியை 4-0 என்ற கோல்கணக்கில் தோற் கடித்தது. இப்போட்டியில் சென்னை அணியின் மென்டோசா வாலென்ஷியா 3 கோல்களை அடித்தார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று படோர்டாவில் நடந்த போட்டியில் சென்னையின் எ.சி அணி, கோவா அணியை சந்தித்தது. ஏற்கெனவே 2 போட்டிகளில் தோற்றதால் இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை அணியினர் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே மைதானத்தில் சிட்டாய் பறந்து தாக்குதல் நடத்தினர்.

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இலானோ பாஸ் செய்த பந்தை கோலாக மாற்றி சென்னை அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் வாலென்ஷியா. இதைத் தொடர்ந்து 43-வது நிமிடத்தில் இலானோ கோல் அடிக்க சென்னை அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் விஸ்வரூபமெடுத்த வாலென்ஷியா மேலும் 2 கோல்களை அடிக்க சென்னை அணி 4-0 என்ற கோல்கணக்கில் முதல் வெற்றியை ருசித்தது.

http://tamil.thehindu.com/sports/இந்தியன்-சூப்பர்-லீக்-கால்பந்து-வெற்றிக்-கணக்கை-தொடங்கியது-சென்னை/article7752872.ece

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: கொல்கத்தாவுக்கு 2-வது வெற்றி

 
 
கோலடித்த அரட்டா ஸூமியைப் பாராட்டும் சகவீரர் (நடுவில்).
கோலடித்த அரட்டா ஸூமியைப் பாராட்டும் சகவீரர் (நடுவில்).

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள கொல்கத்தா 7 புள்ளி களுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் மிட்பீல்டில் இருந்து கோல் கம்பத்துக்கு வலது புறம் பறந்து வந்த பந்தை மிக அழகாகக் கட்டுப்படுத்திய கொல்கத்தா ஸ்டிரைக்கர் இயான் ஹியூம், அதை கோல் கம்பத்தை நோக்கி யடித்தார். அப்போது கேரளா கோல் கீப்பர் ஸ்டீபன் பைவாட்டர் அந்த பந்தை தடுக்க, அது அவ ருடைய கையில் இருந்து நழுவி முன்னோக்கி சென்றது. அப்போது திடீரென முன்னோக்கி பாய்ந்து வந்த கொல்கத்தா மிட்பீல்டர் அரட்டா ஸூமி அற்புதமாக கோலடித்தார்.

32-வது நிமிடத்தில் கேரள ஸ்டிரைக்கர் சான்செஸ் வாட் கோல் கம்பம் வரை பந்தை எடுத்துச் சென்றார். மிக அருகில் சென்றபோதும் அவருடைய ஷாட்டில் வேகமில்லாததால் மிக எளிதாக முறியடித்தார் கொல்கத்தா கோல் கீப்பர்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய கொல்கத்தா அணி 52-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. ஸ்டிரைக்கர் இயான் ஹியூம், இடதுபுறத்தில் இருந்து வலது புறத்தை நோக்கி கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திய மிட்பீல்டர் ஜேவி லாரா, கேரள பின்கள வீரர்கள் பெரோன், ரேமேஜ் ஆகியோரை மிக எளிதாக வீழ்த்தி அற்புதமாக இந்த கோலை அடித்தார்.

மறுமுனையில் தொடர்ந்து போராடிய கேரள அணி 80-வது நிமிடத்தில் ஆறுதல் கோலை அடித்தது. மிட்பீல்டில் இருந்து வந்த பந்தை கேரளத்தின் மாற்று பின்கள வீரர் சி.கே.வினீத் அற்புதமாக தலையால் முட்ட, அது கோல் கம்பத்தை நோக்கி சென்றது. ஆனால் அங்கு கோல் கீப்பர் இல்லாததால் டாக்னெல் மிக எளிதாக காலால் பந்தை தட்டிவிட்டு கோலடித்தார். இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் கொல்கத்தா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இன்றைய ஆட்டம்: புனே-டெல்லி

இடம்: புனே நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-கொல்கத்தாவுக்கு-2வது-வெற்றி/article7760485.ece

  • தொடங்கியவர்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கோவா அணிக்கு 2-வது வெற்றி

 
கோலடித்த மகிழ்ச்சியில் கோவாவின் லூக்கா.
கோலடித்த மகிழ்ச்சியில் கோவாவின் லூக்கா.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது.

சொந்த ஊரான கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் தோற்றது நார்த் ஈஸ்ட் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, 12-வது நிமிடத்தில் கோலடித்து 1-0 என முன்னிலை பெற்றது நார்த் ஈஸ்ட். வலது புறத்தில் சுஞ்சு கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிரான்ஸிஸ் டேட்ஸி தலையால் முட்டி இந்த கோலை அடித்தார்.

இதைத்தொடர்ந்து 28-வது நிமிடத்தில் கோவா வீரர் ஜோப்ரே கொடுத்த கிராஸில் லூக்கா கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது. இதனால் உத்வேகம் பெற்ற கோவா அபாரமாக ஆட ஆரம்பித்தது.

முதல் பாதி ஆட்டத்தில் 2-1

தொடர்ந்து 30-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது கோவா. ஜோப்ரே கொடுத்த கிராஸில் ரெய்னால்டோ இந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோவா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் லியோ மவுரா கொடுத்த கிராஸில் மந்தார் தேசாய் கோலடிக்க, கோவா 3-1 என முன்னிலை பெற்றது.

இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் கோவா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் தரப்பில் மூன்று பேரும், கோவா தரப்பில் 2 பேரும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப் பட்டனர்.

இன்றைய ஆட்டம்: மும்பை-சென்னை

இடம்: நவி மும்பை நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.

http://tamil.thehindu.com/sports/இந்தியன்-சூப்பர்-லீக்-கால்பந்து-கோவா-அணிக்கு-2வது-வெற்றி/article7769112.ece

  • தொடங்கியவர்

கால்பந்து: சென்னை கலக்கல் வெற்றி

Elano, isl

மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில், மென்டோசா இரண்டு கோல் அடித்து கைகொடுக்க, சென்னை அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த 13வது லீக் போட்டியில், ‘பாலிவுட்’ நடிகர் ரன்பிர் கபூர் சக உரிமையாளராக உள்ள மும்பை அணி, தோனி சக உரிமையாளராக இருக்கும் சென்னை அணியை எதிர்கொண்டது. இம்முறை வீரர்கள் ஏலத்தில் மும்பை அணியில் ஒப்பந்தமான இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி, தனது அறிமுக ஐ.எஸ்.எல்., போட்டியில் களமிறங்கினார்.

கோல் இல்லை:

போட்டியின் முதல் நிமிடத்தில் சென்னை அணியின் தோய் சிங் மஞ்சள் அட்டை பெற்றார். ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் கிடைத்த ‘கார்னர் கிக்’ வாய்ப்பில் சென்னையின் எலோனா அடித்த பந்தை மும்பை கோல்கீப்பர் சுப்ரதா பால் அருமையாக பிடித்தார். மும்பை அணியின் சோனி நார்டி, சென்னையின் மென்டோசா, எலோனா ஆகியோரின் கோல் அடிக்கும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. இதனையடுத்து முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது.

மென்டோசா அசத்தல்:

முதல் பாதியில் அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த சென்னையின் ஆதிக்கம் 2வது பாதியிலும் தொடர்ந்தது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் மும்பை கோல்கீப்பர் சுப்ரதாவை ஏமாற்றி சென்னையின் நட்சத்திர வீரர் எலோனா ‘பாஸ்’ செய்த பந்தில் மென்டோசா முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் மும்பையின் நார்டி அடித்த பந்து ‘கோல் போஸ்டில்’ இருந்து விலகிச் சென்றது.

ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் எலோனா ‘பாஸ்’ செய்த பந்தை ஜேயஷ் ரானே துாக்கி அடித்தார். ஆனால் பந்து ‘கோல் போஸ்டில்’ பட்டு திரும்பியது. அப்போது அருகில் இருந்த மென்டோசா தலையால் முட்டி 2வது கோல் அடித்தார். இந்நிலையில் 73வது நிமிடத்தில் மென்டோசாவுக்கு பதிலாக பிக்ரு களமிறங்கினார். ஆட்டத்தின் 81, 82வது நிமிடத்தில் கிடைத்த கோலடிக்கும் வாய்ப்புகளை மும்பை அணியினர் வீணடித்தனர்.

கடைசி நிமிடம் வரை போராடிய மும்பை அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை விளையாடிய 4 லீக் போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியை பெற்ற சென்னை அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. முதலிரண்டு இடங்களில் கோல்கட்டா (7 புள்ளி), கோவா (7) அணிகள் உள்ளன. இரண்டாவது தோல்வியை பெற்ற மும்பை அணி ஒரு புள்ளியுடன் 7வது இடத்தில் உள்ளது.

http://sports.dinamalar.com/2015/10/1445014836/Elanoisl.html

  • தொடங்கியவர்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தில் கேரளாவை வீத்தியது டெல்லி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 1-0 என்ற கோல்கணக்கில் கேரளாவை வென்றது. இதன்மூலம் டெல்லி அணி புள்ளிபட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

டெல்லி - கேரளா அணிகளிடையேயான கால்பந்து போட்டி கொச்சி நகரில் நேற்று நடந்தது. இதில் தங்கள் சொந்த மண்ணில் விளையாடிய கொச்சி அணி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே டெல்லி அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது. ஆனால் டெல்லி அணியும் விட்டுக்கொடுக்காமல் போராடியது. 2 அணிகளும் எதிரணிகளின் கோல் அடிக்கும் முயற்சிகளை முறியடிக்க முதல் பாதி ஆட்டம் 0 - 0 என்று சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் சக வீரர் மலவுடா பாஸ் செய்த பந்தை கோலுக்குள் திணித்து டெல்லி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ரிச்சார்ட் கட்ஸே. கடைசி நேரத்தில் தங்களுக்கு எதிராக கோல் விழுந்ததால் கேரள அணி திணறியது.

ஆட்டத்தை சமன்செய்யும் முயற்சியில் கேரள வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் கடைசி வரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லி அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கேரள அணி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/இந்தியன்-சூப்பர்-லீக்-கால்பந்து-பரபரப்பான-ஆட்டத்தில்-கேரளாவை-வீத்தியது-டெல்லி/article7779677.ece

  • தொடங்கியவர்

‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா சென்னை

 
 
ISL Football, Chennai, Northeast United

கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் 16வது லீக் போட்டியில், தோனி சக உரிமையாளராக உள்ள சென்னை அணி, ‘பாலிவுட்’ நடிகர் ஜான் ஆபிரஹாம் சக உரிமையாளராக இருக்கும் வடகிழக்கு யுனைடெட் அணியுடன் மோதுகிறது.      

இதுவரை: இத்தொடரில் இவ்விரு அணிகள் இரண்டு முறை மோதியுள்ளன. இதில் வடகிழக்கு யுனைடெட் அணி ஒரு போட்டியில் வென்றது. ஒரு போட்டி ‘டிரா’ ஆனது. கடந்த ஆண்டு கவுகாத்தியில் நடந்த போட்டியில் வடகிழக்கு அணி 3–0 என வெற்றி பெற்றது. சென்னையில் நடந்த போட்டி 2–2 என ‘டிரா’வில் முடிந்தது.      

‘ஹாட்ரிக்’ வெற்றி: இம்முறை கோல்கட்டா, டில்லி அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்த சென்னை அணி, பின் எழுச்சி கண்டு கோவா, மும்பை அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. இன்றைய போட்டியில் மீண்டும் அசத்தும் பட்சத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யலாம்.      

ஒரு ‘ஹாட்ரிக்’ உட்பட 5 கோல் அடித்துள்ள சென்னை அணியின் மென்டோசா நல்ல ‘பார்மில்’ இருப்பது பலம். இவருக்கு புளூனர் எலானோ, ஜேஜே, பிக்ரு, தோய் சிங், ஜெயேஷ் ரானே, அகஸ்டோ  உள்ளிட்டோர் ஒத்துழைப்பு கொடுத்தால் சுலப வெற்றி பெறலாம்.      

முதல் வெற்றி: முதல் மூன்று போட்டிகளில் கேரளா, புனே, கோவா அணிகளிடம் ‘அடி’ வாங்கிய வடகிழக்கு யுனைடெட் அணி சொந்த மண்ணில் எழுச்சி பெறும் பட்சத்தில் முதல் வெற்றி பெறலாம்.      

கடந்த போட்டிகளில் தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்த நிகோலஸ் லீன்டிரோ வெலஸ், பிரான்சிஸ் டாட்ஜி ஆகியோர் இன்றும் கைகொடுத்தால் நல்லது. இவர்களை தவிர, புரூனோ, சிலாஸ், ராபின் குரங் உள்ளிட்டோர் எழுச்சி காண வேண்டும்.

http://sports.dinamalar.com/2015/10/1445267322/ISLFootballChennaiNortheastUnited.html

  • தொடங்கியவர்

கால்பந்து: சென்னை அணி தோல்வி

ISL Football, Chennai, Northeast United
கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் லீக் போட்டியில் சென்னை அணி, வடகிழக்கு யுனைடெட் அணியிடம்  வீழ்ந்தது.

 

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது.  அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்த 16வது லீக் போட்டியில், தோனி சக உரிமையாளராக  உள்ள சென்னை அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை சந்தித்தது.

சென்னை வீரர்கள் கோல் அடிப்பதை விட எதிரணியினரை ‘பவுல்’ செய்வதில் தான் அதிக அக்கரை  காட்டினர். இதனால் போட்டியின் 39வது நிமிடம் எதிரணிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது.

இதை கோல்கீப்பர் அபவுலா, அசத்தலாக தடுத்தார். தொடர்ந்து மீண்டும் தவறு செய்ய, கடைசி  நிமிடத்தில் மற்றொரு  ‘பெனால்டி’ வாய்ப்பு கொடுக்க நேர்ந்தது.

இம்முறை வடகிழக்கு வீரர் ஷிமாவோ கோலாக மாற்றினார். தொடர்ந்து அசத்திய இந்த அணிக்கு  ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் வெலாஜ் ஒரு கோல் அடித்தார். முடிவில், சென்னை அணி 0–2 என்ற கோல்  கணக்கில் வீழ்ந்தது. 

http://sports.dinamalar.com/2015/10/1445267322/ISLFootballChennaiNortheastUnited.html

  • தொடங்கியவர்

கால்பந்து: கோவா அணி வெற்றி

socccer, isl

கோவா: கேரளா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோவா அணி வெற்றி பெற்றது. 

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. கோவாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா, கோவா அணிகள் மோதின. போட்டியின் 24வது நிமிடத்தில் கேரளா அணியின் முகமது ரபி ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக 45வது நிமிடத்தில் கோவா அணியின் லியனார்டோ ஒரு கோல் அடித்தார். முதல் பாதி 1–1 என சமநிலையில் இருந்தது.

போட்டியின் 84வது நிமிடத்தில் கோவா அணியின் அர்னாலின் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத்தந்தார். முடிவில், கோவா அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

http://sports.dinamalar.com/2015/10/1445533400/socccerisl.html

  • தொடங்கியவர்

சென்னை அசத்தல் வெற்றி

Elano, isl
சென்னை: சென்னையில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி 2–1 என்ற கோல் கணக்கில் புனேவை வீழ்த்தியது.

 

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. இதில் சென்னை நேரு மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில், தோனி சக உரிமையாளராக உள்ள சென்னை அணி, புனேவை சந்தித்தது.

இங்கு விளையாடிய முதல் போட்டியில் தோற்றிருந்ததால் இம்முறை சென்னை வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தினர். போட்டியின் 34வது நிமிடத்தில் மெண்டி, தலையால் முட்டி கோல் அடிக்க, முதல் பாதியில் சென்னை அணி 1–0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி துவங்கிய சிறிது நேரத்தில் (48வது) எலானோ கொடுத்த பந்தை பெற்ற சென்னையின் மென்டோசா, தனி நபராக சென்று கோல் அடித்து அசத்தினார். இது இத்தொடரில் இவர் அடித்த 6வது கோலாக அமைந்தது.

ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் புனே அணியின் உசே ஒரு கோல் அடித்தார். முடிவில் சென்னை அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில், இது சென்னை அணி பெற்ற 3வது வெற்றி.

http://sports.dinamalar.com/2015/10/1445707402/dhonichennai.html

  • தொடங்கியவர்

மும்பை அணி மீண்டும் வெற்றி

ISL Football, Mumbai, Goa

 மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மும்பை அணி 2–0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. மும்பையில் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை, கோவா அணிகள் மோதின. இதில் அபாமாக ஆடிய இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பில் சுனில் செத்ரி (33வது நிமிடம்), பிகுயான்னே (48வது) தலா ஒரு கோல் அடித்தனர். கடைசியாக டில்லி அணியை வீழ்த்திய மும்பை அணி, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றது. இதுவரை விளையாடிய ஐந்து லீக் போட்டியில் மும்பை அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு ‘டிரா’வை பதிவு செய்தது.

http://sports.dinamalar.com/2015/10/1445795860/ISLFootballMumbaiGoa.html

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: சுனில் ஷேத்ரி அபாரம்; மும்பை அணி வெற்றி

 
கோல் அடித்த மகிழ்ச்சியில் சுனில் ஷேத்ரி.
கோல் அடித்த மகிழ்ச்சியில் சுனில் ஷேத்ரி.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணிகள் மோதின. 25து நிமிடத்தில் மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய சுனில் ஷேத்ரி எதிரணியின் கோல்கீப்பரை ஏமாற்றி அருமையாக கோல் அடித்தார். இதனால் மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த 4வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணி பதில் கோல் அடித்தது. இந்த கோலை அந்த அணியின் போய்தாங் 29வது நிமிடத்தில் அடித்தார். 40வது நிமிடத்தில் மும்பை அணி 2வது கோலை அடித்தது. இந்த கோலையும் சுனில் ஷேத்ரியே அடித்தார். சோனி நார்டி கொடுத்த கிராஸை கோல்கம்பம் அருகே நின்ற சிங்கம் சுபாஸ் தலையால் முட்டி சுனில் ஷேத்ரிக்கு கொடுத்தார். அதை அவர் கோலாக மாற்றினார்.

முதல் பாதியில் மும்பை அணி 2-1 என முன்னிலை வகித்தது. 2வது பாதியின் ஆட்டத்தை மும்பை அணி தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. 48வது நிமிடத்தில் மும்பை அணிக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதையும் நேர்த்தியாக பயன்படுத்தி சுனில் ஷேத்ரி கோலாக மாற்றினார். 51வது நிமிடத்தில் மும்பை வீரர் நார்டி கோல் அடித்து அசத்தினார். அடுத்தடுத்த கோல்களால் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணி அதிர்ச்சிக்குள்ளானது. 86வது நிமிடத்தில் மும்பை அணி 5வது கோலை அடித்தது. இந்த கோலை பெர்டின் அடித்தார். முடிவில் மும்பை அணி 5-1 என என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-கால்பந்து-சுனில்-ஷேத்ரி-அபாரம்-மும்பை-அணி-வெற்றி/article7817586.ece

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: கோவா-புனே ஆட்டம் டிரா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று படோர்டாவில் கோவா-புனே அணிகள் மோதின. கோவா அணி 3-4-3 பார்மட்டிலும், புனே அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 47வது நிமிடத்தில் ரோஜர் ஜாண்சன் சேம் சைடு கோல் அடித்தார். இதனால் கோவா அணி 1-0 என முன்னிலை வகித்தது. 64வது நிமிடத்தில் புனே பதில் கோல் அடித்தது. அந்த அணியின் வெஸ்லே கொடுத்த கிராஸை அருமையாக தலையால் முட்டி லிங்டோ கோல் அடித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-கால்பந்து-கோவாபுனே-ஆட்டம்-டிரா/article7826215.ece

 

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தியது கோவா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னையின் எப்சி-கோவா அணிகள் மோதின. சென்னை 4-4-2 என்ற பார்மட்டிலும், கோவா 5-3-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பலமுறை வாய்ப்பு கிடைத்தும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தவறினர்.

64வது நிமிடத்தில் கோவா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் லியோ முரா கோல் அடித்தார். இதனால் கோவா 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு சென்னை அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

78வது நிமிடத்தில் கோவா அணிக்கு மீண்டும் பொனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி லூக்கா கோல் அடித்தார். கடைசி வரை சென்னை அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-கால்பந்து-சென்னை-அணியை-வீழ்த்தியது-கோவா/article7849454.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஐஎல்எல் கால்பந்து: கொல்கத்தா-டெல்லி ஆட்டம் டிரா

 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்- அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் கொல்கத்தா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஹூமி தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதற்கு டெல்லி அணியால் உடனடியாக பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதியில் கொல்கத்தா 1-0 என முன்னிலை வகித்தது.

61வது நிமிடத்தில் டெல்லி வீரர் காட்ஸி கோல் அடித்தார். இதனால் டெல்லி அணி 1-1 என சமநிலை பெற்றது. அதன் பின்னர் இரு அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராடிவில் முடிந்தது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/article7880399.ece

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி

 
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் பிரிகிக்கை சுவர் போல் நின்று தடுத்த மும்பை அணி வீரர்கள்.
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் பிரிகிக்கை சுவர் போல் நின்று தடுத்த மும்பை அணி வீரர்கள்.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று கவுகாத்தியில் மும்பை சிட்டி எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இரு அணிகளும் 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கின. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் ஹமரா பந்தை கோல் கம்பத்தை நோக்கி கொண்டு சென்றபோது மும்பை அணியின் ராவில்சன் தடுக்க முயன்றார்.

இதில் அவரது கால்பட்டு ஹமரா கீழே விழுந்தார். இதனால் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் ஹேர்ரிரோ கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் 1-0 என முன்னிலை வகித்தது. 85வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் 2வது கோலை அடித்தது. இந்த கோலை ஹமரா அடித்தார். மும்பை அணியால் கடைசி வரை பதில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7903305.ece

  • தொடங்கியவர்

சென்னையின் எப்.சி. இன்று மோதல்

 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது தான்.

10 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சென்னை 10 புள்ளிகளுடன் புள்ளி கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு முன்னே றும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால் இந்த ஆட்டம் மற்றும் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி யில் உள்ளது சென்னை அணி.

எஞ்சிய ஆட்டங்களில் சென்னை அணி 24ம் தேதி டெல்லியையும், டிச.1ம் தேதி மும்பையையும், 5ம் தேதி புனேவையும் சந்திக்கிறது. கேரள அணியின் நிலைமையும் இதேபோன்று தான் உள்ளது. அந்த அணி 10 ஆட்டங்களில் பங்கேற்று 11 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7903131.ece

சென்னை - கேரளா ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் சென்னையின் எஃப்.சி அணி வெற்றி. சென்னை அணியின் மெண்டோசா அடித்த அபார கோல்!

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது சென்னை அணி

 
கேரள வீரர் ஜெர்மானிடம் இருந்து பந்தை பறிக்க முயலும் சென்னை வீரர் பெலிஸ்ஷாரி
கேரள வீரர் ஜெர்மானிடம் இருந்து பந்தை பறிக்க முயலும் சென்னை வீரர் பெலிஸ்ஷாரி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. சென்னை அணி 4-3-3 என்ற கணக்கிலும், கேரளா அணி 4-3-1-2 என்ற கணக்கிலும் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே சென்னை அணி முதல் கோலை அடித்தது.

இந்த கோலை தானா அடித்தார். 13வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மென்டோஸா தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இந்த கோல் அடிக்கப்பட்ட போது சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரான அபிஷேக் பச்சன் கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

மெண்டோஸா அபாரம்

சென்னை அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. 79 மற்றும் 81வது நிமிடத்தில் மெண்டோஸா மேலும் இருகோல்கள் அடித்தார்.

கேரள அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் ஜெர்மான் இந்த கோலை அடித்தார். முடிவில் சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணிக்கு இது 4வது வெற்றியாகும். இந்த வெற்றியால் கடைசி இடத்தில் இருந்து புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. மேலும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article7905353.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தியது கொல்கத்தா- பட்டியலில் முதலிடம் பிடித்தது

 
 
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவாவுக்கு எதிராக முதல் கோலை அடித்து மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் போடும் கொல்கத்தாவின் சமீக் டௌட்டி.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவாவுக்கு எதிராக முதல் கோலை அடித்து மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் போடும் கொல்கத்தாவின் சமீக் டௌட்டி.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கோவா அணியை கொல்கத்தா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மேற்கு வங்க தலைநகர் கொல் கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதா னத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியும், எப்.சி. கோவா அணியும் மோதின.

பலம் பொருந்திய இரண்டு அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்திருந்தனர்.

கொல்கத்தா அணி 4-3-2-1 என்ற வரிசையில் வீரர்களை நிறுத்தியிருந்த நிலையில், கோவா அணி அதிரடியாக 5-3-2 என்ற வரிசையில் தாக்குதல் வியூகத்தை கையாண்டது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே கொல்கத்தா அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ஜெய்ம் கேவின் தந்த அஸிஸ்டை நடுக்கள வீரரான தென்னாப்பிரிக்காவின் சமீக் டௌட்டி அற்புதமாக கோலாக்கினார். கோலடித்த மகிழ்ச்சியில் அவர் மைதானத்தில் அடித்த குட்டிக்கரணம் உள்ளூர் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

அடுத்த 2-வது நிமிடத்திலேயே கொல்கத்தாவின் போர்ஜா பெர்ணான்டஸ் மேலும் ஒரு கோலை அடித்தார். இதையடுத்து ஆட்டம் முழுவதும் கொல்கத்தாவின் வசம் சென்றுவிட்டது. அடுத்தடுத்த கோல்கள் தந்த அதிர்ச்சியில் இருந்து இறுதிவரை கோவா அணியினரால் மீள முடியவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்திலாவது கோவா வீரர்கள் மாயாஜாலம் நிகழ்த்துவர் என்று நினைத்த கோவா ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது.

ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் ஐயன் ஹ்யூமும், 78-வது நிமிடத்தில் டௌட்டியும் கோல் அடித்து கொல்கத்தாவின் வெற்றி யை உறுதி செய்தனர்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article7908067.ece

  • தொடங்கியவர்

ஐ.எஸ். எல் கால்பந்து: தோனி முன்னிலையில் டெல்லியை பந்தாடியது சென்னை

 

ந்தியன் சூப்பர் லீக் தொடரில் சென்னை அணி 4 கோல்கள் அடித்து, டெல்லி டைனமோஸ் அணியை பந்தாடியது. இந்த வெற்றியையடுத்து சென்னை அணி, புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது.

isl%20.jpg

சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தை காண, 26 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியும் போட்டியை ரசிக்க நேரில் வந்திருந்தார்.

இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமானது. அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த இக்கட்டான நிலையில், சென்னை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. முன்களத்தில் மெண்டோசா, ஜீஜே கூட்டணி டெல்லி தடுப்பாட்டத்தை முறியடித்து, அடிக்கடி கோல் கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தது.

ஓயாத மெண்டோசா அலை

இந்த சீசனின் கோல் அடிக்கும் மெஷின்  என்று வருணிக்கப்படுபவரான ஜான் மெண்டோசா,  நேற்றைய ஆட்டத்திலும் சென்னையின் கோல் கணக்கைத் தொடங்கினார். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஜீஜே கொடுத்த பாசை, அவர் அபாரமாக கோலாக்கினார் . இது இத்தொடரில் அவர் அடிக்கும் 10 வது கோல் ஆகும். முதல் கோலுக்கு உதவிய ஜீஜேதான், சென்னை அணி இரண்டாவது கோலடிக்கவும்
துணைபுரிந்தார். ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் ஜீஜே அடித்த பந்தை,  டெல்லி வீரர்கள் தடுக்கத் தவற அதை எளிதில் கோலாக்கினார் பெலிசாரி.

மீண்டும் நான்கு கோல்கள்

ஜீஜேவின் அபார ஆட்டம் அதனோடு ஓயவில்லை. போட்டியின் 40-வது நிமிடத்தில் டெல்லி கோல்கீப்பர் டொப்லசை ஏமாற்றி,  அவரும் தன் பங்குக்கு ஒரு கோலடிக்க, முதல் பாதியிலேயே சென்னை அணி மூன்று கோல்கள் முன்னிலை பெற்றது. சென்னை அணியின் இந்த ஆக்ரோஷ ஆட்டத்தை எதிர்பாராத டெல்லி வீரர்கள் தடுமாறிப்போயினர். இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து மாற்று வீரர்களைக் களமிறக்கினார் டெல்லி பயிற்சியாளாரான ராபர்டோ கார்லோஸ். ஆனால் அவர்களால் சென்னையின் தடுப்பரணை உடைக்க முடியவில்லை.

do%20.jpg

இதற்கிடையே  டெல்லி அணிக்கு ஜீஜேவால் மீண்டுமொரு அடி விழுந்தது. வலது புறமிருந்து மெண்டோசா கோல் நோக்கி அடித்த பந்தை, டெல்லி கோல்கீப்பர் தடுக்க முற்பட்டார். ஆனால் எதிர்பாராமல்  அது ஜீஜேவுக்கு கிடைக்க, அவர் அதனை மீண்டும் எளிதாக கோலாக மாற்றினார்.  இந்த ஆட்டத்தில், இறுதி வரை டெல்லி வீரகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில், சென்னை அணி 4-0 என்ற கணக்கில் டெல்லியயை வென்றது.

கோவா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்திலும், சென்னை அணி 4 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது  சென்னை அணி, 16 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், டெல்லி அணி 18 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

http://www.vikatan.com/news/article.php?aid=55550

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: புனே அணியை வீழ்த்தியது கொல்கத்தா

 
 

ஐஎஸ்எல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெட்டிகோ டி கொல்கத்தா - எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின. கொல்கத்தா அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும், புனே அணி 4-3-3 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கொல்கத்தா தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஹூமி இந்த கோலை அடித்தார். அராட்டா ஷூமிடம் இருந்து இடது புறத்தில் இருந்து பந்தை பெற்று எளிதாக கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் கொல்கத்தா 1-0 என முன்னிலை வகித்தது.

2வது பாதியிலும் பந்தை கொல்கத்தா தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. 48வது மற்றும் 83வது நிமிடத்தில் ஹூமி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை யயன்படுத்தி கோல் அடித்தார். 86வது நிமிடத்தில் புனே அணி பதில் கோல் அடித்தது. இந்த கோலை அந்த அணியின் முட்டு அடித்தார்.

கடைசி நிமிடத்தில் கொல்கத்தாவின் லிகிக் கோல் அடித்தார். முடிவில் கொல்கத்தா 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 6வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. புனே அணிக்கு இது 5வது தோல்வி ஆகும். அந்த அணி 15 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/article7926726.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.