Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது – பசில்

Featured Replies

மஹிந்தவை மீளக் கொண்டுவருவதாக தொிவிக்கும் சிலர் அவருக்கு பாதகத்தன்மைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
 
basil_CI.jpg

இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவை அண்மையில் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் சந்திக்கச் சென்றிருந்த போது, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தியா எமக்கு வழங்கிய சில உதவிகளை அவர்களினால் பகிரங்கமாக வெளியிட முடியாது எனவும் அவ்வாறான உதவிகள் காரணமாகவே யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது எனவும் பசில் ராஜபக்ஸ, முன்னாள் சிரேஸ்ட அமைச்சரிடம் கூறியுள்ளார்.

அந்த உதவிகளை மறந்து விட்டு செயற்பட்டதுதான் நாம் செய்த பெரிய பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்விக்கு தம்மையே பலர் குற்றம் சுமத்திய போதிலும், இந்தியாவை பகைத்துக் கொண்டமை முக்கிய ஏதுவாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலவச அடிப்படையில் இந்தியா உதவிகளை வழங்கியதாகவும், சீனா பணத்தைப் பெற்றுக்கொண்டே உதவிகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தோல்விக்கான குற்றச்சாட்டை தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், உண்மை அதுவன்று எனவும், இன்று மஹிந்த வேண்டும் வேண்டும் என குரல் கொடுத்து வருவோரே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் இவர்களின் அனைத்து விளையாட்டுக்களும் நின்று விடும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரியுடன் போடும் விளையாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது எம்மில் சிலருக்கு புரியவில்லை எனவும், மைத்திரி சுதந்திரக் கட்சியின் தலைவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்களை மறந்து விட்டு செயற்படுவது முட்டாள்தனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் ஜனாதிபதி எனவும், மஹிந்தவை மீளக் கொண்டுவருவதாக தொிவிக்கும்  சிலர் அவருக்கு பாதகத்தன்மைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ஆதரவாளர்கள் பசிலை சந்திக்க செல்லும் போது மைத்திரியுடன் இதனைச் செய்ய முடியாது எனவும், தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டுமெனவும் கூறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்மையும் தமது மனைவியையும் பழிவாங்கி வருவதாகவும், தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போதே தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ஸ கூறியதாக கொழும்பு ஊடகமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120403/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்தியா எமக்கு வழங்கிய சில உதவிகளை அவர்களினால் பகிரங்கமாக வெளியிட முடியாது எனவும் அவ்வாறான உதவிகள் காரணமாகவே யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது எனவும் பசில் ராஜபக்ஸ, முன்னாள் சிரேஸ்ட அமைச்சரிடம் கூறியுள்ளார்.

 

 

கிந்தியாவின் கொலைக்கரங்களின் உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற அச்சமே மனித உரிமைச் சபையில் நீதிக்காண குரல்களைச் செயலிக்கச் செய்யும் நடவடிக்கையென்பது உலகறியும். அனால் உண்மைகள் கிந்தியாவையும் ஒருநாள் நீதியின்முன் நிறுத்தும். துடிதுடித்து வீழ்ந்த ஒவ்வொரு ஆத்மாவினது சாபமும் சோனியாவினுடைய வம்சத்தை  சுட்டெரிக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே சீமான்.. வை.கோ போன்ற தலைவர் அப்பவே சொல்லிட்டினமே. நம்ம மறுத்தவை.. ஹிந்தியாவைப் பாராட்டினவை.. இப்பவும் உலா வருகினம். பசில்.. சீனப் பணத்துக்கு ஆசைப்பட்டு.. ஹிந்திய ருப்பியை கைவிட்ட பாவத்தை அனுபவிக்கிறார். பாவம். :o:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.