Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி எங்கே? - சர்ச்சையைக் கிளப்பும் கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி எங்கே? - சர்ச்சையைக் கிளப்பும் கொழும்பு ஊடகம்

[saturday 2015-06-06 09:00]
prabakaran-380-seithy.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை மாயமாகியுள்ளது. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி எங்குள்ளது என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்று சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி நந்திக்கடலில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது, அவரது பிரத்தியேக ஆயுதங்களுக்கு என்னவாயிற்று என்பது பற்றிய விபரங்கள் இல்லை.

  

 

GLOCK 17 ரக 9 மில்லிமீற்றர் ரக கைத் துப்பாக்கியை பிரபாகரன் விரும்பி பயன்படுத்தினார் எனவும் அதனை அநேக சந்தர்ப்பங்களில் இடுப்பில் வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த வகை கைத்துப்பாக்கி மிகவும் விலை உயர்ந்ததாகும். M16A2 ரக ரைபில் ஒன்றையும் பிரபாகரன் பிரத்தியேக ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார். இதற்கு மேலதிகமாக உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்காக கழுத்தில் கட்டப்படும் இலக்கத் தகட்டையும் காணவில்லை. பிரபாகரனின் உறுப்புரிமை இலக்கம் 001 ஆகும்.

 

பிரபாகரன் பயன்படுத்திய இரண்டு ஆயுதங்கள் மற்றும் இலக்கத் தகடு என்பனவற்றுக்கு என்னவாயிற்று என்பது புரியாத புதிராகியுள்ளது என பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பிரபாகரன் கொல்லப்பட்ட போது உயர்பதவிகளை வகித்த பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் நினைவுச் சின்னமாக இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றார்களா அல்லது அழிக்கப்பட்டு விட்டதா என்பது மர்மமாகவே நீடிக்கின்றது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=133454&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.