Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் நடைமுறைக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் நடைமுறைக்கு
844b360e75a2dbdd0ef3d78e0e3c886a.jpg

போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பாவனையில் உள்ளன. இவற்றில் 53 சதவீதமானவை தினமும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும் விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
 
கடந்த 2014.01.01 திகதி முதல் 2014.04.30ஆம் திகதி வரை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்;ந்து பயணித்தவர்கள் 254பேர் உயிரிழந்துள்ளனர்.
 
2015.01.01 திகதியில் இருந்து 2015.04.30 திகதி வரை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.
   
மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுவதற்கான 4 காரணங்கள்
 
•    பாதுகாப்பு தலைக்கவசங்களின் தாடைப் பட்டியினை பொறுத்தாதிருத்தல்
•    பாதுகாப்பு தலைக்கவசங்களை அணியாமை.
•    முன்னால் இலகுவாக பயணிக்கக்கூடியதாக இருந்த போதிலும் ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு பயணிக்க  முயற்சிக்கின்றமை.
•    கட்டுப்படுத்த முடியாதளவு வேகத்தில் பயணிக்கின்றமை
 
இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 2015.06.10ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கீழே கூறப்பட்ட சட்டங்களை பின்பற்றாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
 
•    பாதுகாப்பு தலைக்கவசங்களின் தாடைப் பட்டியினைப் பொறுத்தாமல் ஓட்டுதல்.
•    பலவர்ணம் கொண்ட தலைக்கவச வைசரை உபயோகித்தல்.
•    ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு பயணிக்க முயற்சித்தல்
 
ஆகிய குற்றங்களை மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=717404070406178265#sthash.owtgp0Rb.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.