Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பருக்கு முன் புதிய அரசு – ஜனாதிபதி ஐ.நா செயலரிடம் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செப்டெம்பருக்கு முன் புதிய அரசு – ஜனாதிபதி ஐ.நா செயலரிடம் உறுதி

Moon-Sirisena-300x169.jpg

 

தனது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே நிலவும் உட்கட்சி அரசியல் பிணக்குக் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மையை நிவர்த்திசெய்யும் நோக்கில், எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்கு முன்னர் புதிய அரசொன்று தெரிவுசெய்யப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா செயலர் பான் கீ மூனுக்கு உறுதியளித்திருக்கிறார்.

 

நேற்று வியாழக்கிழமை ஐ.நா செயலாளருடனான தொலைபேசி உரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி சிறிசேன இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

 

ஐ.நா வின் 70வது பொதுச் சபை செப்டெம்பர் 15 ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா கட்டிடத்தில் கூடவுள்ளது. இதில் தான் பங்கேற்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி சிறிசேன, அதற்கு முன்பதாக இலங்கையில் புதிய அரசொன்று பதவியேற்றுவிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் வெற்றுபெற்று மறுநாளே பதவியேற்றுக்கொண்ட மைத்திரிபால சிறிசேன, உடனேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் பிரதமராக நியமித்தார்.

இலங்கையின் தற்போதைய பாராளுமன்றின் ஆயுட்காலம் அடுத்தவருடம் ஏப்பிறில் 20 உடன் நிறைவுறுகிறது.

 

ஆனாலும், நூறு நாட்கள் ஆட்சியின் பின்னர் புதிய தேர்தலுக்கு முகம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்திருந்த ஜனாதிபதி சிறிசேன, 150 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் பாராளுமன்றைக் கலைத்துத் தேர்தலொன்றினை அறிவிப்பதற்குப் பின்னடித்துவருகிறார்.

 

இந்தநிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆளும் பெரும்பான்மை பாராளுமன்றில் இல்லை என்றுகூறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பலர் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை இன்று முன்வைத்திருக்கிறார்கள்.

 

மறுபுறத்தில் இந்த உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்குவதற்குத் தயாராகிவருகிறார்கள். இதன் பின்னணியிலேயே ஜனாதிபதி இவ்வாறானதொரு வாக்குறுதியை ஐ.நாவின் செயலாளர் நாயகத்திடம் வழங்கியிருக்கிறார்.

 

சில நிமிடங்கள் நீடித்த இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து, மக்களுக்கிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி  சிறிசேன தலைமையிலான அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கி மூன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

“19வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த பொது செயலாளர் பான் கீ மூன் அதற்காக ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களையும் பாராட்டினார்”.

 

அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திப், புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் வகையில் 20வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தையும் துரிதகதியில் அமுல்படுத்தப்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

 

http://www.colombomirror.com/tamil/?p=4936

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.