Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
மீண்டும் அன்டர்சன்
 

article_1439226232-3.jpg

இங்கிலாந்து கியா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கும் இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பதின்நான்கு பேர் கொண்ட குழாமில் ஜேம்ஸ் அன்டர்சன் உள்ளடக்கப்பட்டுள்ளார். 


நான்காவது போட்டியில் அறிவிக்கப்பட்ட குழாமில் இருந்த மார்க் பூட்டிட்டுக்கு பதிலாகவே அன்டர்சன் குழாமில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளார். அன்டர்சனுக்கு பதிலாக கடந்த டெஸ்ட் போட்டிக் குழாமில் அறிவிக்கப்பட்ட லியம் பிளங்கெட் அணியில் நீடிக்கிறார். 

இங்கிலாந்து குழாம் – அலஸ்டெயர் குக் (தலைவர்), அடம் லைத், இயன் பெல், ஜோ றூட், ஜொனி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஸ்டுவர்ட் ப்ரோட், மார்க் வூட், ஸ்டீவன் ஃபின், ஜேம்ஸ் அன்டர்சன், லியம் பிளங்கெட், அடில் ரஷீட்.

 

- See more at: http://www.tamilmirror.lk/151779#sthash.SETFT5QS.dpuf

Edited by நவீனன்

  • Replies 82
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆஸி., அணியில் பிளவா *கேப்டன் கிளார்க் மறுப்பு

Australia captain Michael Clarke amid off field strife reports

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அடைந்த தோல்விக்கு களத்துக்கு வெளியில் நடந்த பிரச்னைகள் தான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி, 1–3 என, ஆஷஸ் கோப்பையை கோட்டை விட்டது. கடைசி மற்றும் 5வது போட்டியுடன் டெஸ்ட் (ஓவல்) அரங்கில் இருந்து விடைபெற உள்ளார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க். இதனிடையே அணியில் ஒற்றுமை இல்லாதது தான் ஆஷஸ் தோல்விக்கு காரணம் என பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

அணியின் மூத்த வீரர்கள் இருவரின் மனைவிகள் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறதாம். தவிர, வீரர்களுடன் சுமூக உறவு இல்லாமல் உள்ள கிளார்க், 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் முடிந்ததும் அணியுடன் சேர்ந்து பஸ்சில் செல்ல மறுத்தார். மாறாக தனி காரில் தான் ஓட்டல் திரும்பினார். 

வீரர்கள் ‘பார்ட்டியிலும்’ அபூர்வமாகத் தான் பங்கேற்பார். 3வது டெஸ்டில் மூத்த விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், குடும்ப காரணங்களுக்காக நீக்கப்பட்டார் என்ற செய்தி இதனால் தான் நடந்ததாம். கிளார்க் மற்றும் அணி வீரர்கள் இப்படி ஒற்றுமை இல்லாமல் இருந்ததால் தான் இந்த தோல்வி கிடைத்தது.

டெஸ்ட் ஓய்வை அறிவித்த அன்று இரவு வீரர்களுடன் பார்ட்டியில் பங்கேற்றது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதில் தற்போதுள்ள வீரர்கள் யாரும் பேசவில்லை. முன்னாள் வீரர் ஷேன் வார்ன் மட்டும் தான் இறுதியாக பேசினார்.

இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கிளார்க் மறுப்பு:

இந்த செய்தியை மறுத்து கிளார்க் கூறியது:

எனது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் கிரிக்கெட் தான் நிறைந்து இருந்தது. இதைக்குறித்து தான் தினமும் நினைத்துக் கொண்டிருப்பேன். இந்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.

மற்றபடி நான்காவது டெஸ்ட், 2வது நாள் முடிந்ததும் எனது மனைவி கெய்லேயிடம் பேசினேன். பின் நேராக முன்னாள் வீரர் ஷேன் வார்ன் அறைக்கு செல்ல விரும்பினேன்.

மனது இப்படி கூறினாலும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தன. இருப்பினும் இந்த முடிவை உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எடுக்கவில்லை. சரியான காரணங்களுக்காக சரியான முடிவைத் தான் எடுத்தேன்.

அதை விட்டுவிட்டு பத்திரிகையில் வெளியானது போன்ற செய்திகள் எல்லாம் முட்டாள் தனமானவை. முற்றிலும் தவறானவை. வீரர்களுக்குள் எவ்வித வேற்றுமையும் இல்லை. தனித்தனி பிரிவுகளாக செயல்படுவது கிடையாது. 

வீரர்களுக்கு இடையே உள்ள பிணைப்பு உன்னதமானது. இதற்கு உத்தரவாதம் தர முடியும். வீரர்களின் மனைவிகள், தோழிகள் இருப்பதால் கவனச்சிதறல் ஏற்பட்டது என்பதெல்லாம் ஏற்க முடியாதவை. எனது மனைவி உடன் இல்லையென்றால் நான் பாதி வீரர் தான்.

இவ்வாறு கிளார்க் கூறினார்.

http://sports.dinamalar.com/2015/08/1439227836/AustraliacaptainMichaelClarkeamidofffieldstrifereports.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வரலாறு படைக்குமா இங்கிலாந்து: ஆஷஸ் 5வது டெஸ்ட் துவக்கம்

Ashes Test, England, Australia, Cook, Clarke

ஓவல்: ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில், வெற்றி பெற்று வரலாறு படைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது. இப்போட்டியுடன் ஓய்வு பெறும் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு வெற்றிப்பரிசு தர ஆஸ்திரேலிய அணியினரும் காத்திருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.       

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 3–1 என தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டன், ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.        

இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஆடம் லியாத் ஏமாற்றுகிறார். கேப்டன் அலெஸ்டர் குக் பேட்டிங்கிலும் அசத்த வேண்டும். இயான் பெல் சொதப்பினாலும், ஜோ ரூட் ஜொலிக்கிறார். பேர்ஸ்டோவ் போன்றோர் கைகொடுத்தால் எதிரணிக்கு நெருக்கடி தரலாம்.       

ஆண்டர்சன் ‘அவுட்’: வேகப்பந்துவீச்சில் பிராட் மிரட்டுகிறார். கடந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் இன்றும் அசத்தலாம். கடந்த போட்டியில் காயத்தால் விலகிய (இடுப்புபகுதி தடைபிடிப்பு) ஆண்டர்சன் இடம்பெற மாட்டார். ஸ்டீவன் தன் பங்கிற்கு அசத்தலாம். சொந்த மண்ணில் இதுவரை நடந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஒரு முறை கூட இங்கிலாந்து அணி 4–1 என வென்றது கிடையாது. இதில் வென்று, புதிய வரலாறு படைக்க இங்கிலாந்து வீரர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.  Michael-Clarke-M%281%29.jpg

கிளம்பும் கிளார்க்: ஆஸ்திரேலிய அணி தோல்வியால் துவண்டு போயுள்ளது. ரோஜர்ஸ், வார்னர் சிறப்பான துவக்கம் தந்தாலும், பின் வரும் வீரர்கள் பொறுப்புணர மறுக்கின்றனர். ஸ்டீவ் ஸ்மித் இன்று எழுச்சி பெறுவது அவசியம். மிட்சல் மார்ஷ் வாய்ப்பு பெறலாம். கேப்டன் கிளார்க், ரோஜர்சுக்கு இது கடைசி சர்வதேச போட்டி. இவர்களை வெற்றியுடன் வழியனுப்ப சக வீரர்கள் முயற்சிக்கலாம்.       

 

பந்துவீச்சில் ஸ்டார்க், மிட்சல் ஜான்சன் கூட்டணி அமைத்து எதிரணிக்கு சிக்கல் தர வேண்டும். உடற்தகுதி சரியில்லாத ஹேசல்வுட்டிற்குப்பதில் கம்மின்ஸ் வாய்ப்பு பெறலாம். ‘சுழலில்’ லியான் அசத்தினால் நல்லது.

 

http://sports.dinamalar.com/2015/08/1440004964/AshesTestEnglandAustraliaCookClarke.html

 

  • தொடங்கியவர்

ஆஷஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்: வெற்றியோடு விடை பெறுவாரா கிளார்க்?

 
மைக்கேல் கிளார்க்
மைக்கேல் கிளார்க்

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 5 போட்டி கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத் தில் இன்று தொடங்குகிறது.

கடந்த 4 போட்டிகளில் 3-ஐ வென்று தொடரைக் கைப்பற்றி விட்ட இங்கிலாந்து, இந்த போட்டி யையும் வென்று புதிய சகாப்தம் படைப்பதில் தீவிரமாக உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் வென்றதில்லை. அதனால் இந்தப் போட்டியில் வெல்வதில் தீவிர மாக இருக்கிறது. இதுதவிர கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலி யாவிடம் 0-5 என்ற கணக்கில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுப்பதிலும் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

ஆனால் ஆஸ்திரேலிய அணியோ இந்தப் போட்டியோடு ஓய்வு பெறவுள்ள தங்களின் கேப்டன் மைக்கேல் கிளார்க், தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரை வெற்றியோடு வழியனுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது. ஜோ ரூட், கேப்டன் குக், ஜானி பேர்ஸ்டேவ், இயான்பெல், பென் ஸ்டோக்ஸ் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன் முழு உடற்தகுதி பெறாததால் ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் ஃபின் ஆகியோருடன் 3-வது வேகப்பந்து வீச்சாளராக மார்க் உட் களமிறங்குகிறார். சுழற்பந்து வீச்சில் மொயீன் அலியை நம்பியுள்ளது. தொடக்க வீரர் ஆடம் லித்துக்குப் பதிலாக அடீல் ரஷீத்தை களமிறக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. அடீல் ரஷீத் இடம்பெறும்பட்சத்தில் மொயீன் அலி தொடக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் இரு மாற்றங் கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஷான் மார்ஷுக்குப் பதிலாக மிட்செல் மார்ஷும், ஜோஷ் ஹேஸில்வுட்டுக்குப் பதிலாக பட் கம்மின்ஸும் இடம்பெற வாய்ப்புள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-கடைசி-டெஸ்ட்-இன்று-தொடக்கம்-வெற்றியோடு-விடை-பெறுவாரா-கிளார்க்/article7560831.ece

  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடர்: கடைசி டெஸ்ட்டில் கிளார்க் 15 ரன்னில் அவுட்

 
 
கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 15 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் செல்லும் கிளார்க். | படம்: ராய்ட்டர்ஸ்.
கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 15 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் செல்லும் கிளார்க். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஓவலில் வியாழனன்று தொடங்கிய 5-வது, இறுதி ஆஷஸ் டெஸ்ட், ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் இறுதி டெஸ்ட்டும் ஆகும்.

இதில் சற்று முன் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 15 ரன்களுக்கு பென் ஸ்டோக்ஸ் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் போது இங்கிலாந்து வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வரிசையாக நின்று கரகோஷம் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தனர்.

ஆட்டத்தின் 55-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீச 4-வது பந்து அவுட் ஸ்விங் ஆக கிளார்க் அதனை தொட்டார் பட்லரிடம் கேட்ச் ஆனது, தர்மசேனா அவுட் என்றார்.

எதிர்முனையில் இருந்த அடுத்த கேப்டன் ஸ்மித்துடன் ஆலோசனைக்குப் பிறகு மேல்முறையீடு செய்தார். ஹாட்ஸ்பாட்டில் எதுவும் தெரியவில்லை, டிவி நடுவர், ‘தர்மசேனா உங்களது முடிவுக்கு விட்டுவிட்டோம்’ என்று கூறினார், இதனால் தர்மசேனா அவுட் செல்லுபடியாக மைக்கேல் கிளார்க் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 15 ரன்களுக்கு வெளியேறினார்.

29 பந்துகளைச் சந்தித்த கிளார்க் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக டாஸ் வென்ற அலிஸ்டர் குக், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார். ராஜர்ஸ் (43), வார்னர் (85) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 110 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ராஜர்ஸ், மார்க் உட் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். அதுவரை நன்றாக கணித்து ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை ஆடிவந்த ராஜர்ஸ் கவனச் சிதறல் காரணமாக வெளியே போகும் பந்தை தொட்டார், இவருக்கும் இது கடைசி டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் வார்னர் 131 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 85 ரன்களில் இருந்த போது மொயீன் அலி பந்தை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த லித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தற்போது ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இன்னமும் 29 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஸ்மித் 51 ரன்களுடனும், ஆடம் வோஜஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் உட், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-தொடர்-கடைசி-டெஸ்ட்டில்-கிளார்க்-15-ரன்னில்-அவுட்/article7562248.ece

  • தொடங்கியவர்

ஸ்டீவ் ஸ்மித்தின் 100-ம், ஸ்டீவ் ஃபின்னின் 100-ம்

 
 
  • சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ்.
    சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ஸ்டீவ் ஃபின். | படம்: ராய்ட்டர்ஸ்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ஸ்டீவ் ஃபின். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஷஸ் தொடர் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் சதம் எடுத்து விளையாடி வருகிறார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் தனது 11-வது டெஸ்ட் சதத்தை எடுத்து ஒரு முனையில் 110 ரன்களுடன் நாட் அவுட்டாக நிற்கிறார்.

கிளார்க் நேற்று ஆட்டமிழந்த பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித், வோஜஸ் 4-வது விக்கெட்டுக்காக 146 ரன்களைச் சேர்த்தனர். இன்று 287/3 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, வோஜஸ் 47லிருந்து 76 ரன்களுக்கு முன்னேறினார், அப்போது பென் ஸ்டோக்ஸ் ஒரு பந்தை உள்ளே கொண்டு வர எல்.பி. ஆனார். வோஜஸ் ரிவியூ பலனளிக்கவில்லை.

78 ரன்களில் தொடங்கிய ஸ்மித் தனது அற்புதமான ஆட்டத்தை இன்றும் தொடர்ந்தார். மொயீன் அலி பந்தை மிட் ஆனில் தட்டி விட்டு தனது சதத்தை எட்டினார் ஸ்மித். கிளார்க் பெவிலியனிலிருந்து கரகோஷம் செய்தார். சதம் எடுத்ததை கொண்டாடும் விதமாக மொயீன் அலியை அதே ஓவரில் மேலேறி வந்து அபாரமான சிக்ஸர் ஒன்றை அடித்தார், லாங் ஆஃபில் பந்து பறந்தது.

மிட்செல் மார்ஷ் மீண்டும் சோபிக்கவில்லை. அவர் 3 ரன்கள் எடுத்து ஸ்டீவ் ஃபின்னின் விட்டு விடவேண்டிய பந்தை ஆட முற்பட பந்து எட்ஜ் ஆகி பெல்லிடம் கேட்ச் ஆனது. ஸ்டீவ் ஃபின் தனது 100-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

இவர் ஸ்டீவ் ஸ்மித்தையே வீழ்த்தியிருப்பார், ஆனால் அது நோ-பாலானது. 100-வது விக்கெட்டாக ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை தவற விட்டார் ஸ்டீவ் ஃபின்.

மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு மொயீன் அலி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் 18 ரன்களில், ஷார்ட் பிட்ச் பந்தை மோசமாக ஆடி லெக் திசையில் பட்லரிடம் கேட்ச் கொடுத்தார்.

அதே ஓவரில் மிட்செல் ஜான்சன் பவுல்டு ஆனார். ஜான்சன் பந்தை தவறான லைனில் ஆடி மிடில் ஸ்டம்பை இழந்தார். இத்துடன் உணவு இடைவேளை.

ஸ்மித் 110 ரன்களுடன் உள்ளார். ஸ்டீவ் பின் தனது 26-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்து தரப்பில் மீண்டும் மொயீன் அலி 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்ற, ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://tamil.thehindu.com/sports/ஸ்டீவ்-ஸ்மித்தின்-100ம்-ஸ்டீவ்-பின்னின்-100ம்/article7566132.ece

  • தொடங்கியவர்

ஆஷஸ்: 149 ரன்களுக்குச் சுருண்டு இங்கிலாந்து பாலோ ஆன்

 
  • மார்க் உட், மொயீன் அலியை ஒரே ஓவரில் வீழ்த்திய மிட்செல் ஜான்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
    மார்க் உட், மொயீன் அலியை ஒரே ஓவரில் வீழ்த்திய மிட்செல் ஜான்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு உட்கார வைக்கப்பட்ட பீட்டர் சிடில் நிரூபித்தார். | படம்: ராய்ட்டர்ஸ்.
    இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு உட்கார வைக்கப்பட்ட பீட்டர் சிடில் நிரூபித்தார். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஓவலில் நடைபெற்று வரும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்குச் சுருண்டது, இதனையடுத்து 332 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை பாலோ ஆன் ஆட பணித்தது.

ஃபாலோ ஆனிலும் லித் விக்கெட்டை உடனடியாக பீட்டர் சிடிலிடம் இழந்தது இங்கிலாந்து, தற்போது 25/1 என்ற நிலையில் அலிஸ்டர் குக், இயன் பெல் ஆடி வருகின்றனர்.

நேற்று 481 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தவுடன், இங்கிலாந்து களமிறங்கியது. நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட்டுகளை 107 ரன்களுக்கு இழந்தது இங்கிலாந்து, காரணம் பேட்டிங்கில் சொதப்பிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், பந்து வீச்சில் 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தின் முதுகெலும்பை காலி செய்தார். பீட்டர் சிடிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன.

ஸ்டீவ் ஸ்மித் 143 ரன்களை எடுக்க, மிட்செல் ஸ்டார்க் அதிரடி அரைசதம் காண ஆஸ்திரேலியா 481 ரன்களை எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து தேநீர் இடைவேளைக்கு சற்று முன் நேதன் லயனின் அருமையான லயனுக்கு அலிஸ்டர் குக்கை பவுல்டு மூலம் இழந்தது.

மோசமான ஆஷஸ் தொடரைச் சந்தித்த லித் 19 ரன்களில் பீட்டர் சிடில் பந்தை புல் ஷாட்டை தவறாக ஆடி அருகிலேயே ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மீண்டும் ஆபத்பாந்தவன் ஜோ ரூட் களமிறங்கினார், ஏற்கெனவே 2 சதங்களுடன் ஆஸ்திரேலியாவை பாடுபடுத்தி வந்த இவர் இறங்கியவுடன் கிளார்க் அருமையாக பீல்ட் செட்டப்பை மாற்றினார், மிட்செல் மார்ஷைக் கொண்டு வந்தார், இதனால் 6 ரன்களில் மார்ஷ் பந்தில் பின்னால் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இயன் பெல் 10 ரன்களில் பீட்டர் சிடிலின் அருமையான பந்துக்கு பவுல்டு ஆனார். பந்து சற்றே நின்று ஸ்விங் ஆக பெல்லின் மட்டையை கடந்து கில்லியை தட்டியது.

பேர்ஸ்டோ, ஜான்சனின் பவுன்சருக்கு டீப் ஸ்கொயர் லெக்கில் லயனிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் வெளியேறினார். கிறிஸ் பட்லருக்கு கிளாசிக் ஆஃப் ஸ்பின் பந்தை வீசினார் லயன், அவர் முன்னால் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தை ஆட, பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து லெக் அண்ட் மிடிலைத்தாக்கியது, 1 ரன்னில் பட்லர் அவுட்.

ஆக்ரோஷ பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரிகளை அடித்து 15 ரன்களில் புல் ஷாட்டில் நெவிலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதே ஓவரில் ரன் எடுக்காமல் பிராட் எட்ஜ் செய்து ஸ்டோக்ஸ் பின்னாலேயே நடையைக் கட்டினார். நேற்று 107/8 என்று முடிந்தது

மார்க் உட், மொயீன் அலி இணைந்து ஸ்கோரை 92/8 லிருந்து 149 வரை இன்று உயர்த்தினர். மார்க் உட் இன்று ஜான்சனின் பவுன்சரை ஹூக் செய்து மிட்விக்கெட்டில் பிடிபட்டு 24 ரன்களில் வெளியேறினார்.

மொயீன் அலி அடுத்த பந்தே ஜான்சன் பந்தை நிக் செய்து 30 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து 149 ரன்களுக்குச் சுருண்டது. இதனையடுத்து 332 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு பாலோ ஆன் கொடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜான்சன், மார்ஷ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சிடில், லயன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சிடிலை முந்தைய டெஸ்ட்களிலேயே அணியில் சேர்த்திருக்கலாம் என்ற அளவுக்கு நல்ல வேகத்துடன் துல்லியமாக வீசினார். 2-வது இன்னிங்ஸிலும் முதல் விக்கெட் அவருடையதே.

முதல் நாள் பிட்சில் கொஞ்சம் புல் இருந்தாலும், ஈரப்பதம் இருந்துள்ளது, இதில் பேட்டிங்கையே இங்கிலாந்து தேர்வு செய்திருக்க வேண்டும், காரணம், அந்த நிலையில் பவுலிங்கில் பெரிய தாக்கம் இருக்காது, பிறகு நல்ல வெயில் அடித்து பிட்ச் காய்ந்து இறுகியதால் ஆஸ்திரேலியா பிட்ச் போல் ஆனது, கிட்டத்தட்ட முதல் நாள் பிரிஸ்பன் பிட்ச் போல் தற்போது உள்ளது ஓவல் பிட்ச், இதுவே இங்கிலாந்தின் துன்பத்துக்கு காரணம்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-149-ரன்களுக்குச்-சுருண்டு-இங்கிலாந்து-பாலோ-ஆன்/article7569501.ece

  • தொடங்கியவர்

ஆஸிக்கு இனிங்ஸ் வெற்றி

 

Ashes%20Update.jpg

 

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் 5ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகுவான இனிங்ஸ் வெற்றியொன்றைப் பெற்றுள்ளது.

 


6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களுடன், இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 129 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் 4ஆவது நாளில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 286 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் இனிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 


இரண்டு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்த போதிலும், அதன் பின்னர் மழை குறுக்கிட்டதன் காரணமாக, போட்டியின் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர், போட்டி மீள ஆரம்பிக்கப்பட்ட போது ஏனைய இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.

 


துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அலஸ்டெயர் குக் 85 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 42 ஓட்டங்களையும் மொயின் அலி 35 ஓட்டங்களையும் ஜொனி பெயர்ஸ்டோ 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

 


பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, பீற்றர் சிடில் 4 விக்கெட்டுகளையும் நேதன் லையன், மிற்சல் மார்ஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், மிற்சல் ஜோன்சன், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி 481 ஓட்டங்களைப் பெற, இங்கிலாந்து அணி 149 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டிருந்தது.

 


இப்போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலியா சார்பாக சதம் பெற்ற ஸ்டீவன் ஸ்மித் தெரிவானார்.
இத்தொடரின் இங்கிலாந்து சார்பான நாயகனாக ஜோ றூட்டும், அவுஸ்திரேலியா சார்பாக நாயகனாக கிறிஸ் றொஜர்ஸ§ம் தெரிவாகினர்.

 


இப்போட்டியே அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோரின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.wisdensrilanka.lk/article/1905

11907209_1078723352146760_29168238605761

11950220_1078783015474127_86017419234646

11950205_1078782945474134_6196985895728011875142_1078783058807456_49785207358258

11120516_1078782925474136_64002484067929

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.