Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங்!

Featured Replies

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங்!

 

ஹராரே: ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. டோணி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது.

 

அவ்வாறு வெற்றி பெற்றால்தான் ஒருநாள் தரவரிசையில் இந்தியாவால் 2வது இடத்தில் நீடிக்க முடியும்.  ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில், வழக்கமான கேப்டன் டோணி, டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, தவான், அஸ்வின் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரஹானே தலைமையிலான 2வது கட்ட அணி இந்த தொடரில் விளையாடுகிறது. 35 வயதான ஹர்பஜன்சிங் 4 ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். கடைசியாக அவர் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஆடினார்.

 

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசிய நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய மனிஷ் பாண்டே, உத்தப்பா மற்றும் முரளிவிஜய் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். சிங்கும்புரா தலைமையிலான ஜிம்பாப்வே அணி இந்தியாவை சந்திக்கிறது. சொந்த மண்ணில் அந்த அணி சிறப்பாக விளையாட முயற்சிக்கும். இந்திய அணி கடைசியாக ஜிம்பாப்வே அணியை உலக கோப்பையில் எதிர்கொண்டது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசியாக 2013ம் ஆண்டு இந்திய அணி ஜிம்பாப்வேயில் விளையாடியது.

 

5 போட்டிக்கொண்ட தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இரு அணிகளும் இதுவரை 57 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்தியா 45 போட்டியில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 போட்டி ‘டை' ஆனது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகியது.

11 பேர் கொண்ட இந்தியா அணி விவரம்: ரஹானே (கேப்டன்), முரளி விஜய், ராபின் உத்தப்பா (விக்கெட் கீப்பர்), மனோஜ் திவாரி, அம்பதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, கேதர் ஜாதவ், ஹர்பஜன்சிங், குல்கர்னி, புவனேஸ்வர்குமார், அக்ஷர் பட்டேல்,

. ஜிம்பாப்வே அணி விவரம்: சிங்கும்புரா (கேப்டன்), சிக்கந்தர் ரசா, முடும்பாமி, வில்லியம்ஸ், சிகாபா, மசகட்சா, சிபாண்டா, கிரீமர், விடோரி, திரிபநோ, பயன்ங்கரா.

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி : கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டார் தமிழக வீரர் முரளி விஜய் !

ந்திய அணி, கேப்டன் ரஹானே தலைமையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரே நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் இந்திய அணியை பேட் செய்ய கேட்டுக் கொண்டது.

mur.jpg

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரஹானேவும், முரளி விஜயும் களமிறங்கினர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் தொடரில் விளையாட முரளி விஜய்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை அவர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய முரளி,  9 பந்துகளை சந்தித்து  ஒரு ரன்னை மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  விட்டோரி பந்தில் சிபண்டாவிடம் பிடிகொடுத்தார் முரளி விஜய். தொடர்ந்து அம்பாத்தி ராயுடு, ரஹானேவுடன் இணைந்தார்.

இந்நிலையில் 5 ஓவர்களில் இந்திய அணி 14 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=49252

  • தொடங்கியவர்

ராயுடு அபார சதம்; பின்னி 77: முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள்

 
ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது சதம் அடித்த அம்பாத்தி ராயுடு ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஷாட் ஆடும் காட்சி. | படம்: ஏ.பி.
ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது சதம் அடித்த அம்பாத்தி ராயுடு ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஷாட் ஆடும் காட்சி. | படம்: ஏ.பி.

ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 87/5 என்ற நிலையிலிருந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.

கடும் நெருக்கடியில் இறங்கிய ராயுடு சிரமம் எதுவும் இல்லாமல் மிகவும் லாவகமாக ஆடி 133 பந்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 124 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ, ஸ்டூவர்ட் பின்னி 76 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 77 ரன்கள் சேர்க்க, இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 160 ரன்களை சுமார் 24 ஓவர்களில் சேர்க்க சரிவிலிருந்து இந்திய அணி மீண்டது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். கேப்டன் ரஹானேயும், முரளி விஜய்யும் களமிறங்கினர். பன்யாங்கரா ஓவர் த விக்கெட்டில் ஸ்டம்ப்களை விட்டு விலகி வைடு ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை வீசி ரஹானேயை குழப்பத்தில் ஆழ்த்தினார். பந்து அந்த கோணத்திலிருந்து உள்ளே வருகிறதா அல்லடு வெளியே செல்கிறதா என்பதை கணிக்க ரஹானே விஜய் இருவருமே திணறினர்.

முதல் ஓவர் அபாரமான மெய்டனாக அமைந்தது. விஜய் 9 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்த நிலையில் இடது கை ஸ்விங் பவுலர் விட்டோரியிடம் அவுட் ஆனார். மிகச் சாதாரணமான இடது கை ஸ்விங் பவுலரின் வெளியே செல்லும் பந்து, அதனை சாதாரணமாக விட்டுவிடுவார் விஜய், இங்கு சபலம் தட்ட அதனை தொட்டார் 2-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. 4-வது ஓவரில் அம்பாத்தி ராயுடு வந்துதான் முதல் பவுண்டரியே வந்தது. இடையே பன்யாங்கரா தனது கோணத்தால் ரஹானேயை தொடர்ந்து இன்ஸ்விங்கர், அவுட்ஸ்விங்கர் குழப்பத்தில் ஆழ்த்தி தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.

கடைசியில் ஒரு ஓவர் பிட்ச் பந்தில் விட்டோரியை நேராக பவுண்டரி அடித்தார் ரஹானே. சரியான முறையில் சுறுசுறுப்பாக ஆட முடியாத இந்திய அணி 10 ஓவர்களில் 32/1 என்று இருந்தது. அதன் பிறகு ரஹானே 49 பந்துகளீல் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கல் எடுத்திருந்த போது திரிபானோ வீசிய ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை, தேர்ட்மேனில் தட்டி விட நினைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மீண்டும் ஒரு கடின உழைப்புடன் தொடங்கிய ரஹானே பாதியில் கோட்டைவிட்டார்.

மனோஜ் திவாரி, இவர் வாய்ப்புக்காக ஏங்கியவர், ஆனால் 14 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிபாபா பந்தில் எல்.பி.ஆனார். ஃபுட்வொர்க்கும் இல்லை, ஒன்றும் இல்லை. கால்கள் இந்த 14 பந்துகளில் நகரவேயில்லை. இதனால் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராபின் உத்தப்பா சிங்கிளை கணிக்க முடியாமல் டக் அவுட் ஆனார். அவர் விட்டோரி பந்தை ஷார்ட் கவரில் தட்டி விட்டு விரைவு சிங்கிளை எடுக்க நினைத்தார், ஆனால் சிகந்தர் ரசா வலது புறம் துரிதமாக நகர்ந்து பந்தை நேராக ஸ்டம்பில் அடிக்க ரன்னர் முனையில் உத்தப்பா ரன் அவுட்.

கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்து கிரீசில் நின்ற படியே சிபாபா பந்தை கட் செய்ய முயன்றார், எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 87/5 என்ற நிலையில் ராயுடுவுடன் ஸ்டூவர்ட் பின்னி சேர்ந்தார்.

ராயுடு-பின்னியின் 6-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச ரன்கள்:

87/5 என்ற நிலையில் அணியை மீட்டெடுக்க பின்னி, ராயுடு இணைந்தனர். ராயுடு ஏற்கெனவே நன்றாக ஆடிவந்தார், அவருக்கு ஜிம்பாப்வே பந்து வீச்சு ஒன்றும் பெரிய கஷ்டத்தைக் கொடுக்கவில்லை.

72 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார் ராயுடு. 34-வது ஓவரில் கிரீமர் வீசிய ஓவரில் ஸ்டூவர்ட் பின்னி மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்து தன்னம்பிக்கையை எட்டினார். பன்யங்காராவையும் மேலேறி வந்து ஒரு பவுண்டரி அடித்தார்.

பிறகு 63 பந்துகளில் 3பவுண்டரி ஒரு சிக்சருடன் பின்னி அரைசதம் எடுத்தார். அதே ஓவரில் பன்யன்ங்கராவின் பந்தை சக்தி வாய்ந்த ஸ்லாக் ஸ்வீப் மூலம் சிக்சர் அடித்து 96 வந்த ராயுடு அடுத்து பவுண்டரி அடித்து 117 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் சதம் கண்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது 2-வது சதமாகும் இது.

பின்னி மேலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து, 77 ரன்களில் இருந்த போது டிவில்லியர்ஸ் பாணியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒதுங்கிக் கொண்டு ஒரு சுழற்று சுழற்றினார் பந்து எட்ஜில் பட்டு கேட்ச் ஆக வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்காக 160 ரன்களைச் சேர்த்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த 6-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்தியா 255 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வேயில் சிபாபா 10 ஓவர்கள் வீசி 2 மெய்டன்களுடன் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

256 ரன்கள் வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கவுள்ளது.

http://tamil.thehindu.com/sports/ராயுடு-அபார-சதம்-பின்னி-77-முதலில்-பேட்-செய்த-இந்திய-அணி-255-ரன்கள்/article7407837.ece?homepage=true

  • தொடங்கியவர்

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

ஜிம்பாப்வே எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ந்திய அணி, கேப்டன் ரஹானே தலைமையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரே நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் இந்திய அணியை பேட் செய்ய கேட்டுக் கொண்டது.

rayu.jpg

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரஹானேவும், முரளி விஜயும் களமிறங்கினர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் தொடரில் விளையாட முரளி விஜய்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை அவர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய முரளி,  9 பந்துகளை சந்தித்து  ஒரு ரன்னை மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  விட்டோரி பந்தில் சிபண்டாவிடம் பிடிகொடுத்தார் முரளி விஜய். தொடர்ந்து அம்பாத்தி ராயுடு, ரஹானேவுடன் இணைந்தார்.கேப்டன் ரஹானே பொறுமையுடன் ஆடினார். 49 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்திருந்த போது, ரஹானே அவுட் ஆனார். மறுமுனையில் அம்பாத்தி ராயுடுவுடன் மணிஷ் திவாரி இணைந்தார்.

amba.jpg

மணீஷ் திவாரி 2 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். ஒருகட்டத்தில் இந்திய அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்து கொண்டிருந்தது. அம்பாத்தி ராயுடுவும் பின்னியும் இணைந்துதான் ரன்களை உயர்த்த போராடினர். 72 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டியில் அம்பாத்தி ராயுடு அடித்த 6வது அரை சதம் ஆகும்.

பின்னி 63 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் ஒரு சிச்சருடன் அரை சதமடித்தார்.ஒருநாள் போட்டியில் பின்னி அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.அம்பாத்தி ராயுடு 117 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிச்சர் விளாசி சதத்தை பூர்த்தி செய்தார்.

பின்னி 77 ரன்களை அதிரடியாக குவித்து அவுட் ஆனார். அம்பாத்தி ராயுடு கடைசி வரை அவுட் ஆகாமல் 124 ரன்களை எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை எடுத்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய 50 ஓவர்களில் 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.vikatan.com/news/article.php?aid=49252

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பராவின் அபார சதம் வீண்: இந்தியாவுக்கு த்ரில் வெற்றி

 
  • ஜிம்பாப்வே பேட்ஸ்மென் சிபாபா அவுட் ஆகிச் செல்கிறார், இந்திய அணி பின்னணியில் விக்கெட்டைக் கொண்டாடுகிறது. | படம்: ஏ.பி.
    ஜிம்பாப்வே பேட்ஸ்மென் சிபாபா அவுட் ஆகிச் செல்கிறார், இந்திய அணி பின்னணியில் விக்கெட்டைக் கொண்டாடுகிறது. | படம்: ஏ.பி.
  • சதம் கண்ட ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா. | கோப்புப் படம்.
    சதம் கண்ட ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா. | கோப்புப் படம்.

ஹராரேயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

256 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஜிம்பாப்வே 251 ரன்கள் வரை வந்து தோல்வி தழுவியது.

ஜிம்பாப்வே கேப்டன் எல்டன் சிகும்பரா 101 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 246/7 என்று இருந்தது ஜிம்பாப்வே, கடைசி ஓவரை புவனேஷ் குமார் வீசினார். யார்க்கர்களை நன்றாக துல்லியத்துடன் வீசினார். இதில் முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் கிடைத்தது. 4-வது பந்தில் சிகும்பரா லாங் ஆஃபில் அடித்து சிங்கிள் எடுக்க மறுத்தார். 5-வது பந்து தாழ்வான புல்டாஸ், கவர் திசையில் பளார் என்று அடித்தார் ஆனால் கவரில் வேகமாக ரஹானேயிடம் சென்றது ரன் இல்லை. கடைசி பந்தில் ஒரு ரன் வந்தது. ஜிம்பாப்வே மிகவும் வேதனையாக 4 ரன்கள் வித்தியாசத்தில் நெருங்கி வந்து தோற்றுப் போனது.

புவனேஷ் குமார் 10 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், தவல் குல்கர்னி 9 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். ஸ்டூவர்ட் பின்னி 10 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தாலும் தொடக்க வீரர் சிபந்தாவை வீழ்த்தி பிறகு விக்கெட் கீப்பர் முதும்பானியையும் வீழ்த்தினார். ஆனாலும் பவுலிங்கில் இன்னமும் சிக்கனம் காட்ட வேண்டிய தேவை உள்ளது.

ஹர்பஜன் சிங் 10 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இவரும் அக்சர் படேலும் நடு ஓவர்களில் கட்டுப்பாடுடன் வீசினர். இன்றைய தின சிறந்த பவுலர் என்றால் புவனேஷுக்குப் பிறகு அக்சர் படேல், இவர் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பந்துகள் நன்றாக கிரிப் ஆகி எழும்பி திரும்பின.

தொடக்கத்தில் புவனேஷ், குல்கர்னி ஆகியோர் சிக்கனம் காட்ட 5 ஓவர்களில் 16/1 என்று இருந்தது ஜிம்பாப்வே, சிபாபா, குமாரின் ஒரு எழும்பிய அவுட்ஸ்விங்கருக்கு எட்ஜ் செய்து ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மசகாட்சா, இவர் அனுபவசாலி. பின்னியை ஒரேஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். 13-வது ஓவரில் பின்னி வீச சிபந்தா, நடந்து வந்து லாங் ஆனில் ஃபிளாட் சிக்ஸ் அடித்தார். ஆனால் முதல் பந்து மேலேறி வந்ததால் பின்னி அடுத்த பந்தை ஷார்ட் பிட்சாக வீச வேண்டும் என்ற கிளிஷேயைக் (தேய்ந்த, வழக்கமான அணுகுமுறை) கடைபிடித்தார். சிபந்தா அந்த ஷார்ட் பிட்சை எங்கு வேண்டுமானாலும் கேட்டு அடித்திருக்கலாம், ஆனால் அவர் சரியாக ஆடாமல் மிட் ஆனில் ஹர்பஜனிடம் கேட்ச் ஆனது. 13 ஓவர்களில் 49/2 என்ற நிலையில் கேப்டன் எல்டன் சிகும்பரா களமிறங்கினார்.

ஹர்பஜன் சிங் மசகாட்சாவுக்கு ஒரு அருமையான ஓவரை வீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். 19-வது ஓவரில் அக்சர் படேல் பந்தில் விக்கெட் கீப்பர் உத்தப்பா ஒரு வாய்ப்பை நழுவ விட்டார். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 77/2 என்று இருந்தது. ஆனாலும் தேவைப்படும் ரன் விகிதம் அப்போது 5.96 ஆக உயர்ந்தது.

மசகாட்சா 64 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அக்சர் படேலின் ஒரு பந்து திடீரென நன்றாகத் திரும்பி நன்றாக எழும்ப எதிர்பார்க்காத நிலையில் பாயிண்டில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது சிகும்பரா 23 ரன்களில் இருந்தார்.

25-வது ஓவரில் அக்சர் படேல் மீண்டும் ஒரு முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். சான் வில்லியம்ஸ், இவர் உலகக் கோப்பையில் கலக்கியவர். இவருக்கு ஒரு அருமையான பந்தை பிளைட் செய்து அருமையான லெந்தில் பிட்ச் செய்ய பேட், பேடு இடைவெளியில் புகுந்து பவுல்டு ஆனது, அற்புதமான பந்து அது. 25 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 94/4 என்று ஆனது.

சிகந்தர் ரசா களமிறங்கி சடுதியில் 3 பவுண்டரிகளை அடித்து உத்வேகம் கொடுத்தார். இதில் மனோஜ் திவாரியை ஒரு பவுண்டரியையும் அக்சர் படேலை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகளும் விளாசினார். பிறகு ஹர்பஜனையும் ஒரு பவுண்டரி அடித்து துரித கதியில் 26 பந்தில் 27 ரன்களுக்கு வந்தார் சான் வில்லியம்ஸ்.

இந்நிலையில் ஆட்டத்தின் 33-வது ஓவரில் ஹர்பஜன் சிங் வர சிகந்தர் ரசா ஒரு அருமையான கட் ஷாட் பவுண்டரியையும், பிறகு மோசமான ஒரு பந்தை மிட்விக்கெட்டிலும் பவுண்டரி அடித்து 37 ரன்களுக்கு முன்னேறினார். ஆனால் இவரும் ஹர்பஜன் சிங்கின் மோசமான அரைக்குழி பந்தை மோசமாக புல் ஆட அது அக்சரிடம் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது. 33-வது ஓவர் முடிவில் ஜிம்பாப்வே 142/5. வெற்றிக்குத் தேவைப்படும் விகிதம் 6.70

விக்கெட் கீப்பர் முதும்பாமி 7 ரன்னில் பின்னி பந்தில் காலியானார். 39-வது ஓவரில் கிரீமர் ஒரு குவிக் சிங்கிள் எடுக்க ஓடினார், ஆனால் ரஹானே பந்தை எடுத்து நேராக ஸ்ட்ரைக்கர் முனையில் அடித்திருக்க வேண்டும், ஆனால் பந்து படவில்லை. சிகும்பரா ரீச் ஆகும் முயற்சியை ஏறக்குறைய கைவிட்டார். இது அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. 65 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அவர் அரைசதம் கண்டார்.

40-வது ஓவரில் ஸ்கோர் 173/6. தேவைப்படும் ரன் விகிதம் 8.09 ஆக உயர்ந்தது. அடுத்த 2 ஓவர்களில் 15 ரன்கள் வந்தது. 43-வது ஓவரில் படேல் 2 ரன்களையே கொடுத்தார். 44-வது ஓவரில் குல்கர்னியை ஒரு அபார சிக்ஸரை சிகும்பரா அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது.

படேல் மீண்டும் 45-வது ஓவரை சிக்கனமாக வீசி 4 ரன்களே விட்டுக் கொடுத்தார். ஜிம்பாப்வேவுக்கு 30 பந்துகளில் தேவை 50 ரன்கள். இந்நிலையில் 47-வது ஓவரில் குல்கர்னி 13 ரன்களையும் 48-வது ஓவரில் புவனேஷ் குமார் 14 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர், இதில் முரளி விஜய் ஒரு கேட்ச் வாய்ப்பை சிகும்பராவுக்கு தவற விட்டார்.

மறு முனையில் கிரீமர் 27 ரன்கள் எடுத்து நல்ல சப்போர்ட் கொடுத்து வந்த நிலையில் தேவையில்லாமல் குல்கர்னியின் புல்டாஸை ரிவர்ஸ் ஷாட் ஆடி நேராக பின்னியிடம் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் 49-வது ஓவரிலும் 8 ரன்கள் வந்தது. சிகும்பரா 96 பந்துகளில் தனது சதத்தை எடுத்து முடித்தார்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ் குமாரின் துல்லியமான யார்க்கர்களும், ஓரளவுக்கு ரஹானேயின் களவியூகமும் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றியது. ஜிம்பாப்வே உண்மையில் இந்திய அணியை ஒரு நல்ல விரட்டல் மூலம் அச்சுறுத்தியது என்றே கூற வேண்டும்.

விஜய், கேதர் ஜாதவ், திவாரி, உத்தப்பா ஆகியோர் பங்களிப்பு செய்ய வேண்டும், இவர்கள் பங்களிப்பு செய்திருந்தால் நிச்சயம் ஸ்கோர் 300 ரன்களுக்குச் சென்றிருக்கும். ஆனால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ராயுடுவின் சதமும், பின்னியின் 77 ரன்களும் பிற்பாடு அக்சர் படேல், புவனேஷ் குமார் பந்து வீச்சிலும் இந்தியா வெற்றியை போராடி பெற்றது.

ஆட்ட நாயகனாக அம்பாத்தி ராயுடு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சிகும்பராவும் இவரும் பகிர்ந்து கொண்டிருப்பதுதான் நியாயமாக இருக்கும். ஏனெனில் சிகும்பரா ஆடியது 'வாட் அன் இன்னிங்ஸ்' வகையறாவைச் சேர்ந்தது.

http://tamil.thehindu.com/sports/ஜிம்பாப்வே-கேப்டன்-சிகும்பராவின்-அபார-சதம்-வீண்-இந்தியாவுக்கு-த்ரில்-வெற்றி/article7408206.ece

  • தொடங்கியவர்

'தோனியை பார்த்து கற்றுகொண்டேன்!'- அம்பாத்தி ராயுடு

க்கட்டான சூழலில் எப்படி விளையாட வேண்டுமென்று இந்திய அணியின் கேப்டன் தோனியை பார்த்து கற்றுக்கொண்டதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்து அசத்திய அம்பாத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

amba.jpg

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 85 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த  இந்திய அணியை, அம்பாத்தி ராயுடுவின் ஆட்டம்தான் தூக்கி நிறுத்தியது.

இந்நிலையில் நேற்றையை தனது ஆட்டம் குறித்து அம்பாத்தி ராயுடு கூறுகையில், ''ஐ.பி.எல். போட்டிகளில் இது போன்ற இக்கட்டான சூழலில் விளையாடிய அனுபவம் கைகொடுத்தது. இக்கட்டான நிலையில் அணி இருக்கும்போது எப்படி விளையாடவேண்டுமென்பதை கேப்டன் தோனியை பார்த்து கற்றுக் கொண்டேன்.

தோனி இந்த சமயங்களில் எப்படி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருகிறார் என்பதை நேரடியாக பார்த்துள்ளளேன். மிடிர் ஆர்டரில் களமிறங்கும் நான், அதனை செயல்படுத்தி பார்க்க முனைவேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச் சிறப்பான இன்னிங்ஸ் இது'' எனக் கூறினார்.

இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லையே என்ற கேள்விக்கு அம்பாத்தி ராயுடு பதிலளிக்கையில், இது போன்ற சூழலுக்கும் என்னை நான் தயார்படுத்திக் கொள்கிறேன் என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=49319

  • தொடங்கியவர்

இரண்டாவது 1 நாள் போட்டியில் இந்தியா 115/1  ஓட்டங்கள்.       

  • தொடங்கியவர்

முரளி விஜய்க்கு முத்தான முதல் அரை சதம்... ரஹானே 10வது அரை சதம் !

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முரளி விஜய் ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். கேப்டன் ரஹானே 10வது அரை சதம் அடித்துள்ளார்.

MUR.jpg

ஹராரேவில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்ய கேட்டுக் கொண்டது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ரஹானே களமிறங்கினர். முரளி விஜய் நிதானமாக ஆட ரஹானே சற்று அதிரடி காட்டினார். ரஹானே 73 பந்துகளில் அரை சதமடித்தார். ஒருநாள் போட்டியில் ரஹானே அடித்த 10வது அரை சதம் ஆகும். தொடர்ந்து சிறப்பாக ஆடி 63 ரன்களில் ரஹானே அவுட் ஆனார்.

muri.jpg

கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய அம்பாத்தி ராயுடு பெரும் எதிர்பார்ப்புடன் முரளி விஜயுடன் இணைந்தார். இந்த ஜோடி ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளித்து எளிதாக ரன்களை குவித்தது. முரளி விஜய் 81 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டியில் முரளி விஜய் அடித்த முதல் அரைசதம் இதுதான். ராயுடும் சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணி 34 ஓவர்களில் 160 ரன்களை எடுத்துள்ளது. முரளி 72 ரன்களுடனும் ராயுடு 21 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=49351

இந்தியா 233/5  45.5 ஓவர்களில்

  • தொடங்கியவர்

தொடரை வென்றது இந்தியா: ஜிம்பாப்வே மீண்டும் தோல்வி

rahane, india

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2–0 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ‘சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் ரகானே தலைமையில் இளம் இந்திய அணி விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ஹராரேவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் சிகும்பரா ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரகானே, முரளி விஜய் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. சீன் வில்லியம்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே அரை சதம் எட்டினார். இவர் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். தன் பங்கிற்கு முரளி விஜய்யும் அரை சதம் அடித்தார். இவர் 72 ரன்கள் எடுத்தார். சிக்கந்தர் பந்தில் ராயுடு (41) அவுட்டானார். மனோஜ் திவாரி (22), உத்தப்பா (13) சோபிக்கவில்லை. பின்னி 25 ரன்களில் திரும்பினார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் (5) அவுட்டாகாமல் இருந்தார். 

ஜிம்பாப்வே அணிக்கு சிபாண்டா (2), மசகட்சா (5), கேப்டன் சிகும்பரா (9) சொதப்பினர். பொறுப்பாக ஆடிய சிபாபா (72) அரைசதம் கடந்தார். வில்லியம்ஸ் (20), சிக்கந்தர் ராஜா (18), முடும்பாமி (32), கிரீமர் (27) ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 209 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2–0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் ஜூலை 14ல் நடக்கிறது.

http://sports.dinamalar.com/2015/07/1436632531/rahaneindia.html

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே புறப்பட்டார் : இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன்!

காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து அம்பத்தி ராயுடு விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

SANJU.jpg

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. முதல் போட்டியில் 124 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அம்பத்தி ராயுடு இரண்டாவது போட்டியின் போது காயமடைந்தார்.

அம்பத்தி ராயுடு தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  அவருக்கு 2 முதல் 3 வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இணையவுள்ளார். இதற்காக ஜிம்பப்வே புறப்படுகிறார். 3வது ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் நடைபெறுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=49371

  • தொடங்கியவர்

அழுதவர் அரை சதம் ...கேதர் ஜாதவ் அபார சதம்... இந்தியா 276 ரன்கள் குவிப்பு!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் அறிமுக வீரர் மணீஷ் பாண்டேஅரை  சதமடித்துள்ளார்.கேதர் ஜாதவ் சதமடித்து அசத்தினார்.

manisg.jpg

ஹாராரே நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பீல்டிங்கில் ஈடுபட்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜொலிக்கவில்லை. ரஹானே 15 ரன்னிலும், முரளி விஜய் 13 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த உத்தப்பா 31 ரன்களும், திவாரி 10 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டேவும், கேதர் ஜாதவும் இணைந்துதான் ஜிம்பாப்வே பந்துவீச்சை விளாசி தள்ளி ரன்களை குவித்தனர்.

my.jpg

இதில் மணீஷ் பாண்டே இந்திய அணிக்காக களமிறங்கிய முதல் சர்வதேச போட்டி இதுதான். இந்திய அணியில் இடம் கிடைத்த ஆனந்தத்தில் மைதானத்திலேயே கண்ணீர் விட்ட  மணீஷ் பாண்டேவை சக வீரர்கள் தேற்றினர்.

ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணியை, பாண்டே மீட்டெடுத்தார். 67 பந்துகளை எதிர்கொண்ட மணீஷ் பாண்டே, அரைசதமடித்தார். இதில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். அதே போல் கேதர் ஜாதவும் 64 பந்துகளில் அரைசதமடித்தார்.

முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மணீஷ் பாண்டே 71 ரன் எடுத்திருந்த போது, சிபாபா பந்தில் அவுட் ஆனார். அதே வேளையில் ஜாதவ் அபாரமாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். கேதர் ஜாதவ் அடித்த முதல் இதுவாகும். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை குவித்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=49452

  • தொடங்கியவர்

தொடரை முழுமையாக வென்றது இந்தியா

India eye whitewash, Zimbabwe play for pride

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் கேதர் ஜாதவ் சதம் அடிக்க இந்திய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற ரகானே தலைமையிலான இளம் இந்திய அணி 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்தது.. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடந்தது. இந்திய அணியில் ராயுடு (காயம்), குல்கர்னி நீக்கப்பட்டு மனிஷ் பாண்டே, மோகித் சர்மா வாய்ப்பு பெற்றனர். டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் சிகும்பரா பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரகானே (15), முரளி விஜய் (13) ஏமாற்றினர். உத்தப்பா 31 ரன்களில் திரும்பினார். மனோஜ் திவாரி 10 ரன்கள் மட்டும் எடுத்தார். இதன் பின் இணைந்த மனிஷ் பாண்டே, ஜாதவ் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. அரை சதம் அடித்த பாண்டே 71 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக செயல்பட்ட ஜாதவ் சதம் விளாசினார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. ஜாதவ் (105), பின்னி (18) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஜிம்பாப்வே அணிக்கு மசகட்சா (7) நிலைக்கவில்லை. சகபோவா (27), சிகும்பரா (10) விரைவில் வெளியேறினர். சிபாபா (82) மட்டும் ஆறுதல் தந்தார். ஹர்பஜன் ‘சுழலில்’ சிக்கந்தர் (13), கிரீமர் (0) சிக்கினர். மற்றவர்களும் சொதப்ப, ஜிம்பாப்வே அணி 42.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல்–அவட்டாகி தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பின்னி 3 விக்கெட் வீழ்த்தினார். 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3–0 என முழுமையாக கைப்பற்றியது. 

http://sports.dinamalar.com/2015/07/1436807177/IndiaeyewhitewashZimbabweplayforpride.html

  • தொடங்கியவர்

மகள் பிறந்த அதிர்ஷ்டத்தால் சதமடித்தேன்- கேதர் ஜாதவ் பெருமிதம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இந்திய வீரர் கேதர் ஜாதவ், மகள் பிறந்த அதிர்ஷ்டத்தால் சதமடித்ததாக தெரிவித்துள்ளார்.

ked.jpg

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹராரேவில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் மணீஷ் பாண்டே மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் அசத்தினர். இதில் ஜாதவ்    87 பந்துகளில் 105 ரன்களை அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து கேதர் ஜாதவ் கூறுகையில், ''சதமடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பெற்றோர் , மனைவி, செல்ல மகள் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகள் பிறந்த நேரம் எனக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது'' என்றார்.

தற்போது 30 வயது நிரம்பிய ஜாதவ், இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். மொத்தமே 146 ரன் அடித்துள்ள அவரது கணக்கில், இந்த சதமும் அடங்கும்.

http://www.vikatan.com/news/article.php?aid=49475

  • தொடங்கியவர்

இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா: ஜிம்பாப்வேயுடன் இன்று முதல் ‘டுவென்டி–20’

India, Zimbabwe, Internatioinal T20 Cricket, Rahane

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ‘டுவென்டி–20’ போட்டி இன்று ஹராரேவில் நடக்கிறது. ஒருநாள் தொடரில் அசத்தியது போல இன்றும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று ஹராரேயில் நடக்கிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு துவக்கம் தந்த கேப்டன் ரகானே, முரளி விஜய் ஜோடி இன்றும் அதே பணியை தொடரலாம். ஆனால் இம்முறை அதிவேக துவக்கம் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பவுலிங்கில் நெருக்கடி தரும் ஜிம்பாப்வே பவுலர்களிடம் இது அவ்வளவு எளிதான செயல் அல்ல. 

‘டுவென்டி–20’ போட்டி ‘ஸ்பெஷலிஸ்ட்’ உத்தப்பா, இன்று திறமை வௌிப்படுத்தலாம். கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, மனோஜ் திவாரி, ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டூவர்ட் பின்னியுடன் இன்று சஞ்சு சாம்சனுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. 

புவனேஷ்வர் நம்பிக்கை: வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் ‘பார்மிற்கு’ திரும்பியது பெரும் பலம். இவரது ‘யார்க்கர்’ பந்துவீச்சு எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தும். தவிர, மோகித் சர்மாவுடன் சந்தீப் சர்மா இடம் பெறுவாரா என இன்று தெரியும். சுழலில் ‘ஜூனியர்’ அக்சர் படேல் அல்லது ‘சீனியர்’ ஹர்பஜன் என, இருவரில் ஒருவருக்குத் மட்டும் இடம் கிடைக்கலாம்.

சிகும்புரா ‘பெஸ்ட்’: ஜிம்பாப்வே அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் சிகும்புரா, சிபாபாவை (157 ரன்) மட்டுமே நம்பியுள்ளது. மற்றபடி மசகட்சா, சிக்கந்தர் ராஜா, சீன் வில்லியம்ஸ் பொறுப்பற்ற முறையில் விளையாடுவது அணியின் வெற்றிக்கு தடையாக உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மசகட்சா  ஒருநாள் தொடரில் உதவவில்லை. வேகப்பந்துவீச்சில் டிரிபானோ, விடோரி, உட்செயா, பன்யன்கரா எழுச்சி பெறுவது அவசியம்.  

திறமை உள்ளது: ஜிம்பாப்வே பயிற்சியாளர் வாட்மோர் கூறுகையில்,‘‘ எங்கள் வீரர்களிடம் போதுமான திறமை உள்ளது. களத்தில் வெற்றிக்கு தேவையான வகையில் இதை வெளிப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. ‘டுவென்டி–20’ தொடரில் நன்கு செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.

மழை வருமா      

போட்டி நடக்கும் ஹராரே நகரின் இன்றைய வானிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 25 டிகிரி, குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸ் இருக்கும். மழை வர ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.       

எல்லாம் வெற்றி தான்

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இதுவரை 2 ‘டுவென்டி–20’ போட்டிகளில் மோதின. ஹராரேயில் நடந்த இந்த இரண்டிலும் (2010) இந்திய அணி வெற்றி பெற்றது.

http://sports.dinamalar.com/2015/07/1437054761/IndiaZimbabweInternatioinalT20CricketRahane.html

  • தொடங்கியவர்

முதல் டி20 போட்டி: டாஸ் வென்று இந்தியா பேட்டிங்

 

ஹராரேயில் தொடங்கியுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடி வருகிறது.

ரஹானே முரளி விஜய் களமிறங்கியுள்ளனர்.

இந்திய அணி: ரஹானே, முரளி விஜய், ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஸ்டூவர் பின்னி, அக்சர் படேல், ஹர்பஜன் சிங், புவனேஷ் குமார், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா.

ஜிம்பாப்வே அணி: மசகாட்சா, சிபாபா, சான் எர்வின், கோவெண்ட்ரி (வி.கீ), சிகும்பரா, சிகந்தர் ரஸா, உத்சேயா, கிரீமர், மட்சீவா, மபஃபூ, முசரபனி

http://tamil.thehindu.com/sports/முதல்-டி20-போட்டி-டாஸ்-வென்று-இந்தியா-பேட்டிங்/article7434325.ece

  • தொடங்கியவர்

முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!

ஹராரே: முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இரு போட்டிகள் கொண்ட முதல் 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடந்தது. இதில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்திருந்தது.

இதில், உத்தப்பா 39, முரளி விஜய் 34, ரஹானே 33 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த கிரிஸ் போஃபு 3, கிரீமர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

cricket-india01.jpg

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்த தோல்வியடைந்தது. இதில், இந்திய அணியைச் சேர்ந்த அக்சர் படேல் 3, ஹர்பஜன் சிங் 2, மொஹித் சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து, 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, இரு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=49645

  • தொடங்கியவர்

இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

India, Zimbabwe, T20, Uthappa, Cricket

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. 

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி ‘டுவென்டி–20’ போட்டி இன்று ஹராரேயில் நடந்தது.  டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.  காயம் காரணமாக சிகும்புரா விலக, கேப்டன் பொறுப்பை சிக்கந்தர் ஏற்றார்.  இந்திய அணியில் ஹர்பஜனுக்கு ஓய்வு தரப்பட, சாம்சன் அறிமுகமானார்.        

ஜிம்பாப்வே அணிக்கு மசகட்சா (19), சிக்கந்தர் (8), சீன் வில்லியம்ஸ் (17) ஏமாற்றினர்.அதிரடியாக விளையாடிய சிபாபா (67) அரை சதம் கடந்தார். பின் வந்தவர்கள் சொதப்ப,  ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், மோகித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

இந்திய அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. கேப்டன் ரகானே (4), முரளி விஜய் (13) நிலைக்கவில்லை. மணிஷ் பாண்டே டக்–அவுட்டானார். அதிரடி காட்டிய உத்தப்பா 42 ரன்கள் எடுத்தார். ஜாதவ் (5), பின்னி (24), சாம்சன் (19) விரைவில் கிளம்பினர். மற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மோகித் (3), சந்தீப் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் தொடர் 1–1 என ‘டிரா’ ஆனது. 

http://sports.dinamalar.com/2015/07/1437234073/IndiaZimbabweT20UthappaCricket.html

  • தொடங்கியவர்

டி20 தோல்வி ஏமாற்றமளிக்கிறது: ரஹானே

 
அஜிங்கிய ரஹானே. | படம்: ஏ.பி.
அஜிங்கிய ரஹானே. | படம்: ஏ.பி.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கேப்டன் ரஹானே ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

"ஜிம்பாப்வே அணியின் ஆட்டத்தை பாராட்ட வேண்டும். தொடர் முழுதும் அவர்கள் நன்றாக விளையாடினாலும் 2-வது டி20 போட்டியில் அவர்களது பந்துவீச்சு, மற்றும் பீல்டிங் அபாரமாக இருந்தது. தோல்வி ஏமாற்றமளிக்கிறது. ஆனால் தொடர் முழுதும் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். டி20-யில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஜிம்பாப்வே அணியின் ஆற்றல் சிறப்பாக அமைந்தது. அவர்கள் ஸ்பின்னர்கள் சரியான லெந்த்தில் வீசினர். 2 அருமையான ரன் அவுட்கள் மற்றும் 2 கேட்ச்களையும் அருமையாகப் பிடித்தனர்.

தொடர்ந்து விக்கெட்டுகளை அவர்கள் கைப்பற்றினர், பீல்டிங்கும் அவர்கள் வெற்றிக்கு ஒரு காரணம். பேட்டிங் ஓரளவுக்கு இருந்தாலும் அவர்கள் பந்து வீச்சும், பீல்டிங்கும் அபாரமாக இருந்தது.

எங்களால் ஒரு பார்ட்னர்ஷிப்பை கூட அமைக்க முடியவில்லை. 6 ஓவர்களுக்குப் பிறகு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில்தான் தேவைப்பட்டது, ஆனால் சரியாக பேட் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/டி20-தோல்வி-ஏமாற்றமளிக்கிறது-ரஹானே/article7443651.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.