Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்!

Featured Replies

ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்!

ரிபிசி வானொலி நிலையம் நேற்று இரவு (24.11.06) தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூதரகம் போன்று ரிபிசி இயங்குவது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனம் உண்டு.

இந்த நிலையில் ரிபிசி வானொலி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ரிபிசி வானொலி ஏற்கனவே இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி ரிபிசி தாக்குதலுக்கு உள்ளாகின்ற ஒவ்வொரு முறையும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் பழியைப் போட்டு வந்தது. ஆனால் அதை ரிபிசி தரப்பினரால் நிரூபிக்க முடியவில்லை. மக்களும் அதை நம்பவில்லை. மாறாக காப்புறுதிப் பணம் பெறுவதற்காக அவர்களே தங்களுடைய நிலையத்தை சேதப்படுத்தியிருப்பார்கள் என்ற சந்தேகமே மக்கள் மனதில் மேலோங்கி இருந்தது.

இப்பொழுது மீண்டும் ரிபிசி வானொலி நிலையம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

மாவீரர் தினத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்ற நிலையில் இது நடந்துள்ளது. இலண்டனில் மாவீரர் தினம் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இந்த மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு சிறிலங்காவின் தூதரகமும், ஒட்டுக்குழுக்களும் பல முயற்சிகளில் இறங்கி உள்ளனர். பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்துறை போன்றவற்றிற்கு புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு கெடுபிடிகள் வருவது போன்ற ஒரு செயலை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிபிசியில் நடந்த ஒரு கைகலப்பு சம்பந்தமான வழக்கும் சென்ற வாரமே லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கைகலப்பிலும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆகவே விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு மாவீரர் தினத்தை குழப்புகின்ற அல்லது அதிக கெடுபிடிகளை உருவாக்குகின்ற நோக்கோடு, ரிபிசி வானொலி மீதான தாக்குதலை சிறிலங்கா அரசுக்கு சார்பானவர்களே மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமே வலுத்துக் காணப்படுகிறது.

இந்த இடத்தில் சிலரால் இன்னும் ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக ரிபிசி வானொலி சிறிலங்கா இராணுவத்தின் துணைக் குழு ஒன்றின் தலைவராகிய கருணாவின் உரையை மாவீரர் தினத்தில் ஒலிபரப்பி வந்தது. ஆனால் கருணா குழுவுக்குள் ஏற்பட்ட பிளவு ரிபிசியிலும் எதிரொலித்தது. ரிபிசி வானொலியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருணா குழுவில் இருந்து பிரிந்த பரந்தன்ராஜன் குழுவை சேர்ந்தவர்கள். ஆகவே இம்முறை கருணாவின் உரையை ஒலிபரப்ப மறுத்துவிட்டார்கள். கருணாவின் உரையை ஒலிபரப்ப வேண்டும் என்று கருணா குழுவால் ரிபிசிக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அத்துடன் ரிபிசி வானொலியில் உள்ள கருணாவின் ஆதரவாளர்களும் அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இதனால் ரிபிசிக்குள்ளேயே அடிதடி நடக்கின்ற அளவிற்கு சென்றதாகவும், ஆயினும் கருணாவின் உரையை ஒலிபரப்ப முடியாது என்று பரந்தன்ராஜன் குழுவினர் உறுதியாக கூறிவிட்டார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த கருணா குழுவினரே ரிபிசி மீதான தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றும், அனேகமாக இதை ரிபிசியில் இருக்கின்ற கருணாவின் ஆதரவாளர்களே செய்திருப்பார்கள் என்றும், அவர்கள் தங்களின் கருத்தை உறுதியான முறையில் சொன்ன பொழுது, அதில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை எம்மால் மறுக்க முடியவில்லை.

இப்படி ரிபிசி மீது நடந்த தாக்குதல் குறித்த பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் எது உண்மை என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

- நமது லண்டன் நிருபர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பாட்டெல்லாம் போகுது மெய்மறந்து கேளுங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

இவையளே சேதப்படுத்திப்போட்டு கதை விடுவினம்

க..பி

அப்பிடி சொல்லக்கூடாது..

எவ்வளவு மில்லியன் செலவில ரவர் எல்லாம் கட்டி இருந்தவை.. எப்பிடியம் ஒரு 25 மில்லியன் இன்சூரன்ஸ் கிளைம் ஆவும்.. :lol:

லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி சூறையாடப்பட்டது

லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சூறையாடப்பட்டது

லண்டனில் இருந்து செயற்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்(ரிபிசி) என்னும் வானொலி நிலையம் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களினால் சூறையாடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

இங்கு பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் இந்த வானொலி இதற்கு முன்பும் இவ்வாறு தாக்கப்பட்டிருக்கிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்த வானொலியின் நிர்வாகியான தம்பா அவர்களைத் தொடர்புகொண்டு கேட்ட போது விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களே இந்த சம்பவத்துக்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தாம் சந்தேகிப்பதாகக் கூறினார்.

இதற்கு முன்னரும் தமது வானொலி இவ்வாறு தாக்கப்பட்டதகாவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போதைக்கு ஒரு திருட்டுச் சம்பவமாகக் கருதியே தாம் விசாரணைகளை நடத்திவருவதாகவும், ஆயினும், விசாரணைகளின் பின்னரே இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்று முடிவாக கூறமுடியும் என்றும் தெரிவித்தனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

சகோதர வானோலி கொள்ளையடிக்கப்பட்டதாக பிபிசி புலம்பல்

ஒருத்தரும் உந்த ரேடியோவிலை பாட்டு கேக்கிறதில்லையாம் அதுதான் தாங்களே உடைச்சுப்போட்டினமாக்கும்....

புதுசா விளம்பரம் தேடுற வாளியில இதுவும் ஒண்டாப்போச்சு உந்த ரேடியோக்காறருக்கு...

புலிகளின் குரல் ஒலிபரப்பு நிலையம் தாக்கப்பட்ட போது புலம்பாதவை எல்லாம் இப்ப, ஊடக உரிமை, ஜனநாயகம் பற்றி எல்லாம் புலம்ப போறாங்களப்பா அந்த நாசத்தை எல்லாம் நாங்கள் பாக்கவும் கேக்கவும் வேணும்.... எல்லாம் எங்கட தலையெழுத்து....

Edited by Thala

தேசத் துரோகக் கும்பல்களின் கூட்டு வானொலி நிலையம் ரிபிசி.

Edited by YARLVINO

இது ஒரு உள்வீட்டு நாடகம்.

இது ஒரு உள்வீட்டு நாடகம்.

ithu ilankai arasukkum rowvukkum nadakkira paniporaka irukkum...aanaal emmavarkal sontha kaaranangkalukkaka vilai poividukirargale? ithanal thaane pali ellam Ltte meethu varukirathu.(ithu en aathangam)sariyo thappo theriyathu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரீ.பி.சி ரேடியோ தாக்குதல் … சில தகவல்கள் ..

ரீபிசி வானொலியானது கடந்த வெள்ளி இரவு தாக்குதலுக்கு உள்ளானதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்திகள் உண்மையானால் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். ஒருவரினது அல்லது ஒரு சிறு குழுவினரது கருத்து சுதந்திரத்தினை அச்சுறுத்துவதை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது. ரீபிசி நாகரிகமான முறையில் கருத்தாடல்களை செய்தாதா இல்லையா என்பது முக்கியமானதல்ல. அதன் கருத்துக்களை செவிமடுக்கவேண்டும் என்ற கட்டாயம் எவருக்கும் இல்லையோ அது போலவே ரிபிசி காரரின் கருத்து சுதந்திரத்தை தடுப்பது நியாயமாகாது.

ஆனால் இந்தச் செய்தியை சுதந்திரமான ஊடகங்களில் செய்பாட்டுக்கான அச்சுறுத்தல் என ஒப்பாரி வைக்கு முன் மேற்படி சம்பவத்தை ரீபிசியின செய்பாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்ப்போம்.

ரீபிசி எனப்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற நிறுவனம் 3.3.1999 ல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் இயக்குனர்hக் சிவாஜினி ராமராஜ் இன் பெயர் பிரித்தானிய கம்பனிகளை பதிவு செய்யும் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது தாபன முகவரி: 166-168 GREENFORD ROAD, HARROW, MIDDLESEX HA1 3QZ, Company No. 03725077.

சிறிது காலத்தின் பின்னர் நிதி முறைகேடுகளை காரணங்காட்டி மேற்படி நிறுவனத்தை; மூடிவிடும்படி நீதிமன்றம கட்டளை பிறப்பித்த சில நாட்களில் இவ்வானொலி நிலையம் முதல் தடவையாக சூறையாடப்பட்டது.

மீண்டும் 27 மே 2002 இந்நிறுவனம் THAMIL BROADCASTING CORPORATION UK. LTD என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது (Company No. 04448141) வானொலிக்கு UBC எனப்பெயரிட்ப்பட்டது. இயக்குனர் வீரைய்யா ராமராஜ் தாபன முகவரி 37 Whittington Way Pinner Harrow Middx HA5 5JS. இந்த முகவரியில் உள்ளது ஹரோ கவுன்சிலுக்கு சொந்தமான குடியிருப்பதற்கான வீடு. இங்கு ராமராஜ் வீடற்றவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த கட்டண வாடகையில் தங்கியிருந்தார். கொள்ளை போனதாக குறிப்பிடப்பட்ட அதே உபகரணங்களே வானொலி நிலையத்தில் திரும்பவும் பாவிக்கப்பட்டதை அங்கு பணிபுரிந்தவர்கள் உறுதிப்படத்தினர்.

வானொலி நிலையம் 245 D Imperial Drive, Rayners Lane, Middlesex எனும் இடத்தில் இயங்கி வந்தது.

எந்த விதமான விளம்பரங்களோ அமைப்பு ரீதியான உதவிகளோ இல்லாமல் இயங்கி வந்த ரீபிசி 2005 ல் மீளவும் கொள்ளையிடப்பட்டது. ஆனால் ஆயிரக்கணக்கில் காப்புறுதி பணததை பெற்றுக் கொண்டு சில வாரங்களிலேயே ஒலிபரப்பை ஆரம்பித்தது.

இம்மாதம் 14ம் திகதி மேற்படி நிறுவனம் சட்டரீதியாக கலைக்கப்பட்டதன் பின்னர் 25ம் திகதி அதிகாலையில் கொள்ளையிட்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காப்புறுதி பணத்தை பெறுவதற்கும் அனுதாபத்தை பெறுவதற்கும் உள்வீட்டாரால் நடாத்தப்பட்ட நாடகம் இது என்று மிக அண்மைக்காலம் வரை ரீபிசியுடன் சேர்நதியங்கிய ஒரு அறிவிப்பாளர் தெரிவித்தார்.

இவங்கள் புலிகளை விமர்சிக்கிறது இல்லை பாருங்கொ அது ஒரு தந்திரம்.

அடிக்கடி புலிகளை கடுமையாக விமர்சிப்பினர் ஆனால் அக்களிடம் பணத்தை வாங்கி ஏமாத்திற்து வீசா இல்லாதவனை ஏமாத்திறது காலமை காசை வாங்கி மதியம் தாறன் என்டு ஏமாத்திறது வேலைக்கு அமர்திபோட்ட காசு கொடுக்காமல் எமாத்திறது இதற்கும் அப்பாலை மற்றவனுடைய மனைவி பிள்ளைகளை பற்றி கேவலமாக வானலையில் விமர்சிக்கிறது தங்களுக்கு பிடிக்காதனை பலி எண்டுறது அவனை புலி என்டு கொழும்பக்க தொலைபெசி எடுத்த சிங்கள ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கிறது இந்த கரங்கு வெலைகளை செய்யுறது தமிழ் தெரியாத சிங்களவனுக்க காந்தனும் பொந்தனும் புலிகள் எண்ட சொன்னால் அவனக்க அது பெரிய செய்தியாக இருக்கும் அவன் சந்தோசமாக செய்தி எழுதுவான்.

இப்படிபட்ட குரங்கு வேலைகளை பாத்துக்கொண்டு இருக்கு பாதிக்கபட்டவன் தொலைபேசி எடுத்து என் இப்படி செய்யுறாய் என்டு கெட்டால் உடனை சொல்லறது நீ புலி புலி எங்களை மிரட்டுது புலி தொலைபேசியிலை மிரட்டுது என்டு உடனை அவன் ஆத்திரத்திலை என்னத்தையும் அடிச்சுடைச்சால் பாத்தியளோ புலி உடைச்சுப்பொட்டது புலி உடைச்சுப்பொட்டுது என்டுறது

மொதத்திலை பாவங்கள் இவங்களின் சுத்தமாத்திலை அகபட்டவர்கள் அதாவது காசு கொடுத்தவனம் கெக்க பொனால் புலி சேவை செய்து சம்பளம் கெட்டவனம் சம்பளம் கெக்க போனால் புலி கடன் கொடுத்தவனும் கெக்க பொனால் புலி மனைவி பிள்ளைகளை பற்றி வானலையில் ஏன் கதைத்தாய் என்று கெக்க பொனால் அவனம் புலி வானொலிக்கு அவர்கள் விரம்பாதவர்கள் யாரும் பொனல் அவர்களும் புலி எல்லாம் புலி

மொதத்திலை புலிகளும் இவர்கள் ஆரோ உண்மையில் புலிகளுக்க எதிர் எண்டு உடைக்கினமேடா எண்டு உடைத்தவர்களை மிரட்டவினம். ஆனால் புலிகளும் சரி வானொலி உடைஞ்சு பொச்சு அல்லது வானொலி காறனு;க அடிச்சு பொட்டாங்கள் எண்டு அறிக்கை விடுகிற எவரும்

ஏன் ஒருவன் அவ்வாறான நிலைக்கு செல்கிறான் என்று சிந்திக்கினம் இல்லை. ஒருவன் தன்னை அல்லது தனது மனைவி குடும்பத்தை அல்லது தனது சகோதரத்தை ஒருவன் அவதூறாக கதைக்கும்பொது நீதி கேட்பான் என்பது எல்லொருக்கும் பரியனம்.

ஆனால் அதையும் புலியாக்கி அவனுக்கு பலியிடம் இரந்தம் இந்த நயவஞ்சகக்கூட்டம் அடிவாங்கி கொடுக்க போடும் திட்டத்தை அனைவரும் அறியவேண்டும்.

இது எனது ஆய்வுகளின் முடிவே தவிர சம்பவங்களுடன் தொடர்பு பட்டவன் இல்லை.

இவங்கள் புலிகளை விமர்சிக்கிறது இல்லை பாருங்கொ அது ஒரு தந்திரம்.

அடிக்கடி புலிகளை கடுமையாக விமர்சிப்பினம் ஆனால்

ஆக்களிடம் பணத்தை வாங்கி ஏமாத்திற்து

வீசா இல்லாதவனை ஏமாத்திறது

காலமை காசை வாங்கி மதியம் தாறன் என்டு ஏமாத்திறது

வேலைக்கு அமர்திபோட்டு காசு கொடுக்காமல் எமாத்திறது

இதற்கும் அப்பாலை மற்றவனுடைய மனைவி பிள்ளைகளை பற்றி கேவலமாக வானலையில் விமர்சிக்கிறது

தங்களுக்கு பிடிக்காதனை புலி எண்டுறது

அவனை புலி என்டு கொழும்புக்கு தொலைபெசி எடுத்த சிங்கள ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கிறது

இந்த வகையான குரங்கு வெலைகளை செய்யுறது

தமிழ் தெரியாத சிங்களவனுக்கு காந்தனும் போந்தனும் புலிகள் எண்டு சொன்னால் அவனுக்கு அது பெரிய செய்தியாக இருக்கும்

அவன் சந்தோசமாக செய்தி எழுதுவான்.

இப்படிபட்ட குரங்கு வேலைகளை பாத்துக்கொண்டு இருக்க

பாதிக்கபட்டவன் தொலைபேசி எடுத்து என் இப்படி செய்யுறாய் என்டு கெட்டால் உடனை சொல்லறது நீ புலி புலி எங்களை மிரட்டுது புலி தொலைபேசியிலை மிரட்டுது என்டு

உடனை அவன் ஆத்திரத்திலை என்னத்தையும் அடிச்சுடைச்சால் பாத்தியளோ புலி உடைச்சுப்பொட்டுது புலி உடைச்சுப்பொட்டுது என்டுறது

மொதத்திலை பாவங்கள் இவங்களின் சுத்துமாத்திலை அகபட்டவர்கள் அதாவது

காசு கொடுத்தவனம் கேக்க பொனால் புலி

சேவை செய்து சம்பளம் கேட்டவனம் சம்பளம் கேக்க போனால் புலி

கடன் கொடுத்தவனும் கேக்க போனால் புலி

மனைவி பிள்ளைகளை பற்றி வானலையில் ஏன் கதைத்தாய் என்று கேக்க பொனால் அவனும் புலி

வானொலிக்கு அவர்கள் விரும்பாதவர்கள் யாரும் போனல் அவர்களும் புலி எல்லாம் புலி

மொதத்திலை புலிகளும் இவர்கள் ஆரோ தங்களுக்கு அவமானம் ஏற்படுது எண்டு உடைத்தவர்களை அல்லது அடித்தவர்களை அல்லது மிரட்டியவர்கள் என்று சந்தேகிப்பவர்களை மிரட்டுவினம்.

ஆனால் புலிகளும் சரி இராணுவமும் சரி அரசியல்வாதிகளும் சரி பொதுவாக எவரும் சரி வானொலி உடைஞ்சு பொச்சு அல்லது வானொலி காறனு;க்கு அடிச்சு பொட்டாங்கள் எண்டு அறிக்கை விடுகிற எவராக இருந்தாலும்

ஏன் ஒருவன் அவ்வாறான நிலைக்கு செல்கிறான் என்று சிந்திக்கினம் இல்லை.

ஒருவன் தன்னை அல்லது தனது மனைவி குடும்பத்தை அல்லது தனது சகோதரத்தை அவதூறாக கதைக்கும்பொது நீதி கேட்பான் என்பது எல்லொருக்கும் புரியனம்.

ஆனால் அதையும் புலியாக்கி அவனுக்கு புலியிடம் இருந்தம் இந்த நயவஞ்சகக்கூட்டம் அடிவாங்கி கொடுக்க போடும் திட்டத்தை அனைத்து தரப்பினரும் அறியவேண்டும்.

இது எனது ஆய்வுகளின் முடிவே தவிர சம்பவங்களுடன் தொடர்பு பட்டவன் இல்லை.

இவங்கள் புலிகளை விமர்சிக்கிறது இல்லை பாருங்கொ அது ஒரு தந்திரம்.

அடிக்கடி புலிகளை கடுமையாக விமர்சிப்பினம் ஆனால்

ஆக்களிடம் பணத்தை வாங்கி ஏமாத்திற்து

வீசா இல்லாதவனை ஏமாத்திறது

காலமை காசை வாங்கி மதியம் தாறன் என்டு ஏமாத்திறது

வேலைக்கு அமர்திபோட்டு காசு கொடுக்காமல் எமாத்திறது

இதற்கும் அப்பாலை மற்றவனுடைய மனைவி பிள்ளைகளை பற்றி கேவலமாக வானலையில் விமர்சிக்கிறது

தங்களுக்கு பிடிக்காதனை புலி எண்டுறது

அவனை புலி என்டு கொழும்புக்கு தொலைபெசி எடுத்த சிங்கள ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கிறது

இந்த வகையான குரங்கு வெலைகளை செய்யுறது

தமிழ் தெரியாத சிங்களவனுக்கு காந்தனும் போந்தனும் புலிகள் எண்டு சொன்னால் அவனுக்கு அது பெரிய செய்தியாக இருக்கும்

அவன் சந்தோசமாக செய்தி எழுதுவான்.

இப்படிபட்ட குரங்கு வேலைகளை பாத்துக்கொண்டு இருக்க

பாதிக்கபட்டவன் தொலைபேசி எடுத்து என் இப்படி செய்யுறாய் என்டு கெட்டால் உடனை சொல்லறது நீ புலி புலி எங்களை மிரட்டுது புலி தொலைபேசியிலை மிரட்டுது என்டு

உடனை அவன் ஆத்திரத்திலை என்னத்தையும் அடிச்சுடைச்சால் பாத்தியளோ புலி உடைச்சுப்பொட்டுது புலி உடைச்சுப்பொட்டுது என்டுறது

மொதத்திலை பாவங்கள் இவங்களின் சுத்துமாத்திலை அகபட்டவர்கள் அதாவது

காசு கொடுத்தவனம் கேக்க பொனால் புலி

சேவை செய்து சம்பளம் கேட்டவனம் சம்பளம் கேக்க போனால் புலி

கடன் கொடுத்தவனும் கேக்க போனால் புலி

மனைவி பிள்ளைகளை பற்றி வானலையில் ஏன் கதைத்தாய் என்று கேக்க பொனால் அவனும் புலி

வானொலிக்கு அவர்கள் விரும்பாதவர்கள் யாரும் போனல் அவர்களும் புலி எல்லாம் புலி

மொதத்திலை புலிகளும் இவர்கள் ஆரோ தங்களுக்கு அவமானம் ஏற்படுது எண்டு உடைத்தவர்களை அல்லது அடித்தவர்களை அல்லது மிரட்டியவர்கள் என்று சந்தேகிப்பவர்களை மிரட்டுவினம்.

ஆனால் புலிகளும் சரி இராணுவமும் சரி அரசியல்வாதிகளும் சரி பொதுவாக எவரும் சரி வானொலி உடைஞ்சு பொச்சு அல்லது வானொலி காறனு;க்கு அடிச்சு பொட்டாங்கள் எண்டு அறிக்கை விடுகிற எவராக இருந்தாலும்

ஏன் ஒருவன் அவ்வாறான நிலைக்கு செல்கிறான் என்று சிந்திக்கினம் இல்லை.

ஒருவன் தன்னை அல்லது தனது மனைவி குடும்பத்தை அல்லது தனது சகோதரத்தை அவதூறாக கதைக்கும்பொது நீதி கேட்பான் என்பது எல்லொருக்கும் புரியனம்.

ஆனால் அதையும் புலியாக்கி அவனுக்கு புலியிடம் இருந்தம் இந்த நயவஞ்சகக்கூட்டம் அடிவாங்கி கொடுக்க போடும் திட்டத்தை அனைத்து தரப்பினரும் அறியவேண்டும்.

இது எனது ஆய்வுகளின் முடிவே தவிர சம்பவங்களுடன் தொடர்பு பட்டவன் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.