Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வரமாட்டார்! -அடித்துச் சொல்கிறார் சிங்களச் ஜோதிடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வரமாட்டார்! -அடித்துச் சொல்கிறார் சிங்களச் ஜோதிடர்
[Wednesday 2015-07-15 19:00]
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிய கடவுள் அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வர இடமளிக்கமாட்டார் என பிரபல சிங்கள ஜோதிடர் இந்திக தொட்டவத்த ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி ஆரூடங்களை வெளியிட்ட கண் பார்வையற்ற ஜோதிடர் இந்திக தொட்டவத்த, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என்பதை உறுதியாக கூறியிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிய கடவுள் அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வர இடமளிக்கமாட்டார் என பிரபல சிங்கள ஜோதிடர் இந்திக தொட்டவத்த ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி ஆரூடங்களை வெளியிட்ட கண் பார்வையற்ற ஜோதிடர் இந்திக தொட்டவத்த, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என்பதை உறுதியாக கூறியிருந்தார்.

  

மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவார் என்று பகிரங்கமாக ஆரூடம் கூறிய ஒரே ஜோதிடரும் இவரே.தாம் எப்போது உண்மையையே கூறுவதாகவும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கில் ஆரூடங்களை தான் விற்பனை செய்வதில்லை எனவும் தொட்டவத்த குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் மக்களை ஏமாற்ற மாட்டேன். நான் மக்களின் எதிர்காலம் குறித்த தகவல்கள் வெளியிடுவேன். நாட்டில் தம்மை ஜோதிடர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களை போல் பணத்திற்கு ஆசைப்பட்டு மகிந்த ராஜபக்சவுக்காக பொய்யான ஜோதிட ஆரூடங்களை கூற மாட்டேன். மகிந்த ராஜபக்சவின் கிரக பலம் சிறப்பாக இருப்பதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் வெல்வார் என்று ஜோதிடர்கள் சிலர் கூறுவதை கேட்டு ஆச்சரியமடைந்தேன் அத்துடன் அருவருப்பாகவும் இருந்தது.

மகிந்த ராஜபக்சவுக்கு ராஜயோகம் இருப்பதாக அவர்கள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மகிந்தவுக்கு தவறான லக்னத்தை வழங்கியிருக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கில் தவறான ஆரூடங்களை கூறுகின்றனர். ஜனவரி 8 ஆம் திகதி மக்களால் வீட்டுக்கு அனுப்பட்ட மகிந்த ராஜபக்ச, எப்படியாவது அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று முயற்சிப்பதாகவும் பொதுத் தேர்தலில் மக்கள் அவருக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள் எனவும் இந்திக தொட்டவத்த தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135921&category=TamilNews&language=english

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.