Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் எதிர் தென்ஆப்ரிக்கா டெஸ்ட்

Featured Replies

4 பந்துகளில் 3 விக்கெட்டுகள்: தென் ஆப்பிரிக்காவை மிரட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான்

 

 
டெஸ்ட் அறிமுக போட்டியிலும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: ஏ.எஃப்.பி.
டெஸ்ட் அறிமுக போட்டியிலும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் முஸ்தபிசுர் ரஹ்மான். | படம்: ஏ.எஃப்.பி.

சிட்டகாங்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கல் அறிமுகம் கண்ட முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது டெஸ்ட் போட்டியில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முதல் நாளான இன்று டாஸ் வென்ற ஆம்லா தலைமை தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்து வருகிறது. 59 ஓவர்கள் முடிவில் 173/3 என்று நல்ல நிலையில் இருந்தது.

அப்போது 60வது ஓவரை வீச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் வந்தார். முஸ்தபிசுர் ரஹ்மானின் 14-வது ஓவர் அது.

ஆம்லா 13 ரன்களில் முஸ்தபிசுர் பந்தை ஆம்லா தனது உடலுக்கு தொலைவில் மட்டையைக் கொண்டு சென்று ஆடினார் அதனால் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனது.

2-வது பந்து ஜே.பி. டுமினி எதிர்கொண்டார். ஃபுல் லெந்த்தில் உள்ளே வந்த பந்து டுமினி கால்காப்பை தாக்கியது. முறையீட்டை நடுவர் மறுக்க, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மேல்முறையீடு செய்தார். பந்து மட்டையில் படவில்லை என்பது உறுதியானதோடு, லெக் அண்ட் மிடிலுக்கு நேராக டுமினி வாங்கியது தெரியவந்ததால் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். குவிண்டன் டி காக் கடும் நெருக்கடியில் ஸ்டம்புக்கு வந்த பந்தை தடுத்தாடி ஹேட்ரிக்கை முறியடித்தார்.

ஆனால் அடுத்த பந்தே ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. தடுப்பாட்டத்தில் குவிண்டன் டி காக் தாமதமாக செயல்பட்டதால் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கலக்கினார் முஸ்தபிசுர் ரஹ்மான்.

முன்னதாக தொடக்க வீரர் வான் சில் 34 ரன்களுக்கு லெக் திசையில் விழுந்து சென்ற பந்துக்கு மஹமுதுல்லாவிடம் அனாவசியமாக விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார். டீன் எல்கர் 47 ரன்களுக்கு பொறுமையாக ஆடினார், ஆனால் அவரும் தைஜுல் இஸ்லாம் திரும்பாத, ஆனால் சற்றே எழும்பிய சுழற்பந்தை எட்ஜ் செய்ய அதனை தட்டுத் தடுமாறி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் பிடித்தார். ஆனால் 2-வது முறையாக அவர் பிடிக்க செய்த முயற்சி பாராட்டுக்குரியது.

டுபிளெஸ்ஸிஸ் 48 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தில் எல்.பி.ஆனார். வங்கதேசம் தீவிரமாக ஆடிவருகிறது தென் ஆப்பிரிக்கா பயந்து பயந்து ஆடுகிறது.

தற்போது டெம்பா பவுமா 32 ரன்களுடனும், வெர்னன் பிலாண்டர் 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர், இன்று இன்னமும் 24 ஓவர்கள் மீதமுள்ளன. தென் ஆப்பிரிக்கா தாக்குப் பிடிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/4-பந்துகளில்-3-விக்கெட்டுகள்-தென்-ஆப்பிரிக்காவை-மிரட்டும்-முஸ்தபிசுர்-ரஹ்மான்/article7447681.ece?ref=omnews

  • தொடங்கியவர்

4 பந்துகளில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய முஸ்தாபிசுர் : ஒரே நாளில் தென்ஆப்ரிக்கா ஆல்அவுட்!

 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான்,  அறிமுக ஆட்டக்காரராக களமிறங்கி  4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

musi.jpg

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிரட்டிய முஸ்தபிசுர் ரஹ்மான், தற்போது தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். சிட்டாங்கில் நடந்து வரும் இந்த போட்டியில் முதல் நாளான இன்று, 59 ஓவர்கள் முடிவில் 173 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, ஆம்லாவும் டுமினியும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் முஸ்தாபிசுர் ரஹ்மான் தனது 14-வது ஓவரை வீச வந்தார். இந்த ஒரே ஓவரிலேயே தென்ஆப்ரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்துக்கு உலை வைத்து விட்டார் முஸ்தாபிசுர்.

mus.jpg

இந்த ஓவரில் ஆம்லா 13 ரன்கள் எடுத்தந்தபோது,  முஸ்தபிசுர் பந்தை அடிக்க முயல அது  எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனது. 2-வது பந்து  டுமினி எதிர்கொள்ள பந்து அவரது  கால்காப்பை தாக்கியது. நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மேல்முறையீடு செய்தார். பந்து நேராக டுமினியின் கால்காப்பை தாக்கியது உறுதி செய்ததையடுத்து டுமினி எல்.பி. டபிள்யூ ஆனார்.

அடுத்த பந்து ஹாட்ரிக் வாய்ப்பாக இருந்தது. ஆனால் குயின்டன் டி காக் அந்த பந்தை தடுத்து விட்டார். ஆனால் 4வது பந்தில்  டி காக்கின் ஸ்டம்ப் எகிறியது. ஒரே ஓவரில் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் திளைத்தார் ரஹ்மான்.

அது மட்டுமல்ல 54 ரன்கள் எடுத்திருந்த பவுமா விக்கெட்டையும் முஸ்தாபிசுர்தான் வீழ்த்தினார். இதனால் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பெற்றார் முஸ்தாபிசுர். தென்ஆப்ரிக்க அணி முதன் இன்னிங்சில் 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

http://www.vikatan.com/news/article.php?aid=49836

  • தொடங்கியவர்

தோள்களால் இடித்துக் கொண்டு தமிம் இக்பால்-குவிண்டன் டி காக் மோதல்

 
 
சிட்டகாங் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது மோதலில் ஈடுபட்ட தமிம் இக்பால்-குவிண்டன் டி காக். | படம்: ஏ.எஃப்.பி.
சிட்டகாங் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது மோதலில் ஈடுபட்ட தமிம் இக்பால்-குவிண்டன் டி காக். | படம்: ஏ.எஃப்.பி.

சிட்டகாங்கில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பாலும், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக்கும் தோள்பட்டை இடிப்பில் ஈடுபட்டனர்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக கடைசி ஓவரை சைமன் ஹார்மர் வீச, தமிம் அந்தப் பந்தை விளையாடிவிட்டு உணவு இடைவேளைக்காக ஓய்வறைக்குத் திரும்பினார்.

அப்போது தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் மற்றும் தமிம் இக்பால் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்ற இருவரும் ஒருவரையொருவர் தோள்பட்டையால் இடித்தனர்.

உடனேயே கேப்டன் ஹஷிம் ஆம்லா தலையிட்டு மோதலை தணித்தார்.

இரு அணி வீரர்களும் தனித்தனியாக ஓய்வறை நோக்கி நடக்கும் போது தமிம் இக்பால் மீது தன் கையை தோழமையாகப் போட்டுக் கொண்டு டேல் ஸ்டெய்ன் பேசிக்கொண்டு வந்தார்.

மோதல் சம்பவம் மைதானத்தின் பெரிய திரையை ஆக்ரமித்தது. இதனால் இருவருக்கும் அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க வீரர் ரைலி ரூசோவ், 2-வது ஒருநாள் போட்டியின் போது தமிம் இக்பால் விக்கெட்டை கொண்டாட முயன்ற போது அவர் தோள்மீது இடித்தார். நடுவர்கள் இதனை பார்த்துவிட ரூசோவுக்கு அவரது ஆட்டத் தொகையிலிருந்து 50% அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

ஆட்டத்தின் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி சற்று முன் மழையால் ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. தமிம் இக்பால் 57 ரன்களையும், மஹ்முதுல்லா 67 ரன்களையும், எடுத்தனர். கேப்டன் முஷ்பிகுர் 16 ரன்களுடனும் ஷாகிப் அல் ஹசன் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், ஹார்மர், வான் ஸில், டீன் எல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஸ்டெய்ன், மோர்கெல் விக்கெட் இல்லை.

http://tamil.thehindu.com/sports/தோள்களால்-இடித்துக்-கொண்டு-தமிம்-இக்பால்குவிண்டன்-டி-காக்-மோதல்/article7451896.ece

  • தொடங்கியவர்

தென்ஆப்ரிக்க வீரர்களை இனம் குறித்த வார்த்தைகளால் திட்டிய வங்கதேச 'மைனர்கள்' கைது!

 

சிட்டாகாங் : தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.சிட்டாகாங் நகரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

bang.jpg

வங்கதேச அணி நேற்று பேட்டிங் செய்து வந்தது. பீல்டிங்கில் ஈடுபட்ட தென்ஆப்ரிக்க வீரர்கள் சிலர்,  மைதானத்தில் உள்ள பெரிய டி.வி. அருகேயிருந்த சில ரசிகர்கள் இனம் குறித்த வார்த்தைகளை பயன்டுத்தி தங்கள் மனம் புண்படும்படி திட்டுவதாக போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்தனர்.

உடனடியாக இந்த பிரச்னை வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த கூட்டத்தில் இருந்தவர்களை பிடிக்க முயற்சித்தனர். கூட்டத்தில் இருந்த கொஞ்ச பேர் அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டனர். எனினும் அந்த கூட்டத்தில் இருந்த 11 வயது சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். இருந்தாலும் அவர்கள் மைனர்கள் என்பதால் 2 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விட்டு விடுவித்து விட்டனர்

இது குறித்து வங்தேச கிரிக்கெட் வாரிய பாதுகாப்புத்துறை செயலாளர் முகமது அலி கூறுகையில், '' கிரிக்கெட் விளையாட்டில் எந்த ரூபத்திலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி அந்த ரசிகர்கள் தென்ஆப்ரிக்க வீரர்களை கிண்டலடித்துள்ளனர். ஐ.சி.சி. இனம் குறித்து வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிரான வார்த்தைகளை அவர்கள்  பயன்டுத்தியுள்ளனர். அந்த ரசிகர்கள் தங்கள் தவறை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும் மைனர்கள் என்பதால் எச்சரித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்'' என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=49933

  • தொடங்கியவர்

326 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்தது: 78 ரன்கள் முன்னிலை

 
  • அரைசதம் எடுத்த வங்கதேச வீரர் லிட்டன் தாஸ். | படம்: ஏ.எஃப்.பி.
    அரைசதம் எடுத்த வங்கதேச வீரர் லிட்டன் தாஸ். | படம்: ஏ.எஃப்.பி.
  • டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 399-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். | படம்: ஏ.எஃப்.பி.
    டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 399-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். | படம்: ஏ.எஃப்.பி.

சிட்டகாங்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 78 ரன்கள் முன்னிலை பெற்றது.

நேற்று 2-ம் நாள் ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட 179/4 என்று இன்று தொடங்கிய வங்கதேசம் தொடக்கத்தில் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 28 ரன்களில் இழந்தது. 5 பவுண்டரி 1 சிக்சர் அடித்திருந்த அவர் டேல் ஸ்டெய்ன் பந்தில் கால்காப்பில் வாங்கினார்.

நடுவர் ஜோ வில்சன் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா மேல்முறையீடு செய்ய, பந்து மட்டையின் உள்விளிம்பில் படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு ஸ்டம்பை தாக்கும் பந்து அது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஸ்விங் எதுவும் இல்லாததால் ஷார்ட் பிட்ச் பவுலிங்குக்குத் தஞ்சமடைந்தார் ஸ்டெய்ன். லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் மிகவும் நிதானமாக, பொறுப்புடன் ஆடி 6-வது விக்கெட்டுக்காக 82 ரன்களைச் சேர்த்தனர்.

ஷாகிப் அல் ஹசன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரான 47 ரன்களை எடுத்து ஆஃப் ஸ்பின்னர் ஹார்மரின் அவ்வளவாக ஷார்ட் பிட்ச் அல்லாத பந்தை புல் ஆட முயன்றார் ஆனால் அவர் கொடியேற்றினார். டுமினியிடம் எளிதான கேட்ச் ஆனது.

விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸின் தடுப்பாட்டமும், ரன்கள் எடுக்க அவர் எடுத்துக் கொண்ட பந்து தேர்வும் அபாரம். அதுவும் பிலாண்டரின் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பிலிருந்து பிக் செய்து, லெக் திசையில் அடித்த பவுண்டரி இந்த வீரரிடம் வேறு வகையான பேட்டிங் திறமை இருப்பதைக் காட்டியது. 102 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஹார்மர் பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷாகித் களமிறங்கி பேட்டை சுழற்றினார், ஹார்மரின் ஒரே ஓவரில் ஒரு எட்ஜ் பவுண்டரியுடன் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் விளாசினார். அவர் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.

தைஜுல் இஸ்லாம் (9), முஸ்தபிசுர் ரஹ்மான் (3) ஆகியோரை டேல் ஸ்டெய்ன் வீழ்த்தி 399 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

117-வது ஓவர் முதல் பந்தில் வங்கதேசம் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன், மற்றும் ஹார்மர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிலாண்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2-வது இன்னிங்ஸை ஆடிவரும் தென் ஆப்பிரிக்கா இன்று இன்னமும் குறைந்தது 30 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்துள்ளது

http://tamil.thehindu.com/sports/326-ரன்களுக்கு-வங்கதேசம்-ஆட்டமிழந்தது-78-ரன்கள்-முன்னிலை/article7456191.ece

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்கா- வங்கதேசம் முதல் டெஸ்ட்: மழையால் 4வது நாள் ஆட்டம் ரத்து!

 

சிட்டகாங்: தென் ஆப்பிரிக்கா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது.
 

Cricket%20match%20rain.jpg

தென் ஆப்பிரிக்கா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 248 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 326 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

78 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 21.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் நேற்றைய ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. எல்கார் 28 ரன்களுடனும், வான் சைல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்க வேண்டும். ஆனால், இன்றும் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு மழை விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் 1.35 மணியளவில் நடுவர்கள் இன்றைய ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதனால், ஒரு பந்துகூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. நாளை ஒருநாள் மட்டுமே மீதமிருக்கிறது. ஆனால், இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸ் விளையாட வேண்டியிருப்பதால் இந்த ஆட்டம் டிராவில் முடிகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 30ஆம் தேதி டாக்காவில் தொடங்குகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=50018

  • தொடங்கியவர்
பங்களாதேஷ் - தென் ஆபிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று ஆரம்பம்
2015-07-30 09:52:03

113373921956.pngபங்­க­ளா­தேஷுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்­பூரில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

2006க்குப் பின்னர் வேற்று மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்­வி­யு­றாமல் இருக்கும் தென் ஆபி­ரிக்கா பங்­க­ளா­தேஷில் இதற்கு முன்னர் விளை­யாடி டெஸ்ட் தொடர்­களில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

 

ஆனால், முத­லா­வது டெஸ்டில் தென் ஆபி­ரிக்­காவை அதன் முத­லா­வது இன்­னிங்ஸில் கட்­டுப்­ப­டுத்­திய பங்­க­ளாதேஷ் இந்த டெஸ்­டிலும் அதனைத் தொடர எண்­ணி­யுள்­ளது.

 

சித்­தா­கொங்கில் மழை பெய்­ததன் கார­ண­மாக முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 3 தினங்கள் மாத்­திரமே விளை­யா­டப்­பட்டு வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வுக்கு வந்­தது.

 

இதற்கு முன்னர் இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற டெஸ்ட் தொடர்­களில் தென் ஆபி­ரிக்­காவே ஆதிக்கம் செலுத்­தி­வந்­தது.

 

எட்டு தொடர்ச்­சி­யான தோல்­வி­களின் பின்னர் சித்­தாகொங் டெஸ்ட் போட்­டி­யையே பங்­க­ளாதேஷ் வெற்­றி­தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டி­ருந்­தது.

 

113383934275.pngதனது அறி­முக டெஸ்ட் போட்டியில் அதுவும் பலம்­வாய்ந்த துடுப்­பாட்ட வரி­சையைக் கொண்டு தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான போட்­டியில் ஒரு ஓவரில் 3 விக்­கெட்கள் உட்­பட 4 விக்­கெட்­களைக் கைப்­பற்­றிய முஸ்­தாஃ­பிஸுர் ரஹ்மான் ஆட்­ட­நா­ய­க­னானார்.

 

இவர் இந்­தி­யா­வுக்கு எதி­ரான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் தொட­ரிலும் தனது அறி­முகப் போட்­டியில் ஆட்­ட­நா­ய­க­னா­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

19 வயதே நிரம்­பிய இவர் இன்று ஆரம்­ப­மாகும் போட்­டி­யிலும் திற­மையை வெளிப்­ப­டுத்தி தென் ஆபி­ரிக்­கா­வுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

தென் ஆபி­ரிக்­காவைப் பொறுத்த மட்டில் அதன் துடுப்­பாட்ட வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்­கா­தது பெரும் பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது.

 

போதாக் குறைக்கு அதன் ஆரம்பத் துடுப்­பாட்­டக்­காரர் குவின்டன் டி கொக் பிர­சா­கிக்கத் தவ­றி­யுள்ளார்.

 

எனவே இந்தப் போட்­டியில் தென் ஆபி­ரிக்கா பிர­கா­சிக்கத் தவ­றினால் பங்­க­ளாதேஷ் தனது சொந்த மண்ணில் முதல் தட­வை­யாக தென் ஆபி­ரிக்­காவை தொடரில் வெற்றி கொண்ட பெரு­மையைப் பெற வாய்ப்பு இருக்­கின்­றது.

 

இதே­வேளை, தென் ஆபி­ரிக்க வேகப்­பந்­து­வீச்­சாளர் டேல் ஸ்டேன் 400ஆவது விக்­கெட்­டிற்கு குறி­வைத்து இன்று களம் இறங்­கு­கின்றார்.

 

இவர் இது­வரை 399 விக்­கெட்­களை மொத்­த­மாக கைப்­பற்­றி­யுள்ளார்.

 

பங்­க­ளாதேஷ் குழாம் :

 

தமிம் இக்பால், இம்ருள் காயஸ், மொனிமுள் ஹக், முஷ்ஃ­பிக்குர் ரஹிம் (அணித் தலைவர்), ஷக்கிப் அல் ஹசன், மஹ்­மு­துல்லாஹ், லிட்டன் தாஸ், தய்ஜுல் இஸ்லாம், ஜுபைர் ஹொசெய்ன், மொஹமத் ஷஹித், முஸ்­தாஃ­பிஸுர் ரஹ்மான்.

 

தென் ஆபிரிக்க குழாம்:

 

ஸடியான் வென் ஸில், டீன் எல்கர், ஃபவ் டு பிளெசிஸ், ஹஷிம் அம்லா (அணித் தலைவர்), ஜீன் போல் டுமினி, டெம்பா பவுமா, குவின்டன் டி கொக், வேர்னன் ஃபிலாண்டர், சைமன் ஹார்மர், டேல் ஸ்டேன், மோர்னி மோர்க்கல்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11338#sthash.5TO8tD7H.dpuf
  • தொடங்கியவர்

ஸ்டெய்ன், டுமினி பந்துவீச்சுக்கு கட்டுப்பட்டது வங்கதேசம்

 
2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு பெவிலியன் செல்லும் தென் ஆப்பிரிக்க அணி. | படம்: ஏ.எஃப்.பி.
2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு பெவிலியன் செல்லும் தென் ஆப்பிரிக்க அணி. | படம்: ஏ.எஃப்.பி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.

டேல் ஸ்டெயினின் 3-30 மற்றும் ஜே.பி.டுமினியின் 3-27 வங்கதேச அணியின் ரன் குவிப்பை தடுத்தது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மட்டுமே அரைசதம் கண்டார், இவரும், மஹமுதுல்லாவும் 4-வது விக்கெட்டுக்காக 94 ரன்களைச் சேர்த்தனர்.

ரஹிம் 125 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இது அவரது 15-வது டெஸ்ட் அரைசதமாகும். கடந்த 12 இன்னிங்ஸ்களில் முதல் அரைசதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் தமிம் இக்பாலின் எட்ஜைத் தூண்டி டேல் ஸ்டெய்ன் தனது 400வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

2-வது ஓவரிலேயே ஸ்டெய்ன், தமி இக்பாலை வீழ்த்தியிருப்பார் ஆனால் டீன் எல்கர் 2-வது ஸ்லிப்பில் கேட்சை விட்டார். ஆனால் அடுத்த முறை தமிம் கொடுத்த கேட்சை மார்புயரத்தில் முதல் ஸ்லிப்பில் பிடித்தார் ஹஷிம் ஆம்லா.

தமிம் இக்பால், ஸ்டெய்னின் 400-வது விக்கெட்டாக வீழ்ந்து ‘பெருமை’ தேடிக் கொண்டார். இப்போது விளையாடும் வீரர்களில் ஆண்டர்சன், ஹர்பஜன் ஆகியோருக்கு அடுத்ததாக ஸ்டெய்ன் 400 விக்கெட்டுகள் கிளப்பில் சேர்ந்தார்.

இம்ருல் கயேஸும், மோமினுல் ஹக்கும் இணைந்து கொஞ்சம் மீட்பு வேலைகள் செய்தனர், ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு டுமினி இருவரையும் அடுத்தடுத்து காலி செய்தார். 40 ரன்களில் இருந்த மோமினுல் எட்ஜ் செய்து வெளியேறினார். பிறகு 30 ரன்கள் எடுத்திருந்த போது இம்ருல் கயேஸும் டுமினியிடம் எல்.பி.ஆனார்.

மஹமுதுல்லா 18 ரன்களில் ஸ்டெய்னிடம் எல்.பி. ஆனபோது, மேல்முறையீடு செய்யப்பட்டதில் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டது தெரியவந்ததால் அவுட் இல்லை என்று தீர்ப்பு மாற்றப்பட்டது.

ஆனால் அவர் 35 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டெய்ன் பந்தை நேராக ஷார்ட் மிட்விக்கெட்டில் பிளிக் செய்து டெம்பா பவுமாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரஹிம் நன்றாக ஆடிவந்த நிலையில் பகுதி நேர ஸ்பின்னர் எல்கரின் பந்து ஒன்று கடுமையாகத் திரும்ப கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பர் டேன் விலாஸிடம் கேட்ச் ஆனது.

லிட்டன் தாஸ், டுமினி பந்தை ஷார்ட் மிட்விக்கெட்டில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 35 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன் மோர்னி மோர்கெல் பந்தை கல்லியில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, மொகமது ஷாகித்தை இன்றைய தின கடைசி பந்தில் ஸ்டெய்ன் பவுல்டு செய்தார்.

இந்த போட்டிக்கு குவிண்டன் டி காக் நீக்கப்பட்டு விலாஸ் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாமுக்குப் பதிலாக நசீர் சேர்க்கப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/ஸ்டெய்ன்-டுமினி-பந்துவீச்சுக்கு-கட்டுப்பட்டது-வங்கதேசம்/article7481909.ece?homepage=true

  • தொடங்கியவர்

வங்கதேசம்- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது: டாக்கா டெஸ்ட் டிரா

 
 
 

வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டி ஏற்கெனவே டிராவான நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்ததால் இரு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் சமனில் (0-0) முடிந்தது.

வங்கதேச தலைநகர் டாக்கா வில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 88.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு தொடர் மழை காரணமாக அடுத்த 3 நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்டன. 5-வது நாளான நேற்று மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இதை யடுத்து போட்டி டிராவில் முடிந்தது.

வழக்கமாக வங்கதேசத்தில் ஜூன் 15-ம் தேதி முதல் மழைக்காலம் தொடங்கிவிடும். அது ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்தக் காலங்களில்தான் 80 சதவீத மழைப் பொழிவு இருக்கும். அதுவும் இந்த முறை புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் முழுமையாக பாதிக்கப்பட்டது.

ஆம்லா ஏமாற்றம்

இந்தத் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா கூறுகையில், “நான் விளையாடிய தொடர்களில் இது வழக்கத்துக்கு மாறான ஒன்று ஆகும். 10 நாட்களைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 6 நாட்கள் மழையால் பாதிக்கப்படும் என நான் நினைக்கவில்லை” என்றார்.

வேறு வழியில்லை

மழைக்காலத்தில் இந்தத் தொடரை நடத்திய தங்களின் முடிவு சரியே என வங்கதேசம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில், “இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஏராளமான தொடர்களில் விளையாடி வருவதால் வேறு தேதிகள் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்தத் தொடரை மழைக்காலத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முறை இந்தத் தொடரை நடத்தாவிட்டால், அடுத்த தொடரை நடத்துவதற்காக 2023-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

இந்திய அணியை இங்கு அழைத்து விளையாட வைப்பது கடினமான விஷயமாகும். ஏனெனில் அவர்கள் ஏராளமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடிக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். அதனால் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை ஜூன் மாதத்தில் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

முஷ்பிகுர் ரஹிம்

வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், “எங்களுடைய கிரிக்கெட் சீசனான அக்டோபர் முதல் மே வரையிலான காலத்தில் பெரிய அணிகளுடன் விளையாட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்தக் காலங்களில் பெரிய அணிகள் வேறு தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பெரிய அணிகளுடன் நிறைய போட்டிகளில் விளையாடும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

தரவரிசையில் மாற்றமில்லை

வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் 0-0 என டிராவில் முடிந்திருந்தாலும், தரவரிசையில் மாற்றமில்லை. தென் ஆப்பிரிக்க அணி 5 ரேட்டிங் புள்ளிகளை இழந்தபோதிலும், தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது. எனினும் தென் ஆப்பிரிக்காவுக்கும், மற்ற அணிகளுக்குமான ரேட்டிங் புள்ளி இடைவெளி குறைந்துள்ளது. 6 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற வங்கதேச அணி தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/வங்கதேசம்-தென்-ஆப்பிரிக்கா-டெஸ்ட்-தொடர்-சமனில்-முடிந்தது-டாக்கா-டெஸ்ட்-டிரா/article7498829.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.