Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் விக்கினேஸ்வரன் புலத்தையும் தாயகத்தையும் இறுகப் பிணைப்பாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் விக்கினேஸ்வரன் புலத்தையும் தாயகத்தையும் இறுகப் பிணைப்பாரா?

கலாநிதி சர்வேந்திரா

 

<p>முதல்வர் விக்கினேஸ்வரன் புலத்தையும் தாயகத்தையும் இறுகப் பிணைப்பாரா?</p>
 

 

வடமகாகாண முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன் கடந்த மூன்று வாரங்களாக ஐக்கிய அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் தங்கியிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடனும் அரச தரப்புகளுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். வடஅமெரிக்க தமிழச் சங்கப் பேரவை (FETNA) வருடாவருடம் அமெரிக்க சுதந்தரநாளை ஒட்டிய நாட்களில் தமிழ்விழாவினை நடாத்துவது வழமை. இவ் வருடம் FETNA அமைப்பு தனது 28வது வருட விழாவில் முதலமைச்சரையும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைத்திருந்தது. இவ் விழாவில் பங்குபற்றுவதனை முதன்மை நோக்காகக் கொண்டே முதலமைச்சர் அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்தார்.

FETNAவில் கூடுதலாக அங்கம் வகிக்கும் தமிழ் அமைப்புக்கள் தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து வாழும் தமிழர்களினால் உருவாக்கப்பட்டவையாகும். இதனால் இவ் விழாவில் கூடுதலான தமிழகத் தமிழ் மக்கள் பங்குபற்றியிருந்தனர். இவ் விழா அமர்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் பேசச் செல்லும் போதும் பேசி முடிந்த பின்னரும் சபையினர் எழுந்து நின்று வரவேற்பும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்.

தமிழ் மக்களுக்கெதிரான சிறிலங்கா அரசின் இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை தேவை என வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தையும் நியாயப்படுத்தி, இத் தீர்மானத்துக்கான காரணத்தையும் முதலமைச்சர் தனது பேச்சில் உள்ளடக்கியிருந்தார். இதற்கு சபையினரிடம் பெரும் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. FETNA தமிழ் விழா நடந்த மண்டபத்திலும் வேறு இடங்களிலும் தமிழ் மக்களுடனான வெவ்வேறு சந்திப்புக்களில் முதலமைச்சர் பங்கு கொண்டிருக்கிறார். பிரித்தானியாவிலும் முதலமைச்சர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் அமைப்பு ஏற்பாடு செய்யும் நிகழ்விலும் கலந்து கொள்கிறார். இப் பத்தியை எழுதும் போது இந்த நிகழ்வு இடம் பெற்றிருக்கவில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையில் தாயகத்தில் இருந்து வழங்கப்பட்ட வழிகாட்டுதலுடன்தான் புலத்தில் ஈழத் தமிழ் மக்களின் தேசம் நோக்கிய செயற்பாடுகள் இடம் பெற்று வந்தன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின் தாயகத்தின் செயற்பாடுகளும் புலத்தின் செயற்பாடுகளும் வெவ்வேறு அமைப்புக்களால் தலைமை தாங்கப்படும் நிலைமைகள் உருவாகின. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் செயற்பட, புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத் தமிழர் தேசிய மக்கள் அவைகள், உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் தேசம் நோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. முன்னர் உலகத் தமிழர் பேரவையில் அங்கம் வகித்த பிரித்தானியத் தமிழர் பேரவை முரண்பாடுகள் காரணமாக வெளியேறி தனித்து இயங்கி வருகிறது.

தாயகத்தில் தலைமை அமைப்பாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் உலகத் தமிழர் பேரவை தவிர்ந்த ஏனைய புலத்து அமைப்புக்களைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவர முடியவில்லை. ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே புலத்துத் தேசிய அமைப்புக்களின் நிலைப்பாடுகளுக்கு நெருங்கி நிற்கிறது. ஆனால் தமிழத் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இதனால் தாயகமும் புலமும் பலமாகக் கைகோர்த்து தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடும் நிலை இதுவரை தோற்றம் பெறவில்லை. இந்நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் புலம் நோக்கிய வருகை தாயகத்தையும் புலத்தையும் நெருக்கமாகப் பிணைக்கும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளதா என்பது அக்கறைக்குரியதொரு விடயமாக உள்ளது.

நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்வந்தபோது தாயகத்திலும் புலத்திலும் அவர் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இருந்த போதும் அவர் முதல்வாராகிய பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை, தமிழகம் ஈழத் தமிழர் பிரச்சினையில் சற்றுத் தள்ளியிருக்க வேண்டும் என்ற தொனியில் வெளிப்படுத்திய கருத்துக்கள் போன்றவை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் பலர் மத்தியில் அவர் மீதான அதிருப்தியினை உருவாக்கியிருந்தன.  ஆனால் வடமாகாணசபையால் கொண்டுவரப்பட்ட தமிழின அழிப்புத் தீர்மானமும், அதன் பின்னர் தமிழ் மக்களின் தேசிய நிலைப்பட்டு அவர் தெரிவித்து வரும் கருத்துக்களும், முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கத்துக்கு தலைமை தாங்கிச் செயற்பட்டதும் அவருக்கு தாயகத்திலும் புலத்திலும் மக்களின் ஆதரவை வலுப்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோரது செயற்பாடுகளால் கவலையும் கோபமும் அடைந்திருந்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களுக்கு இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓர் ஆறுதலாகத் தென்படுகிறார். விக்னேஸ்வரன் தற்போது எடுத்திருக்கும் தேசிய நிலைப்பாடுதான் அவருக்கு FETNA விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்கான அழைப்பையும் விழாவில் பெரும் வரவேற்பையும் வழங்கியிருக்கிறது.

முதலமைச்சரும் தமது சந்திப்புக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார். முதலமைச்சர் உண்மையைப் பேசுகிறார் என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தனர். சிங்கள இனவாதக் கட்டமைப்பின் சிக்கல்களைப் பற்றியும் முதலமைச்சர் மனந்திறந்து பேசியுள்ளார். பல்வேறு வகையான கேள்விகளுக்கும் பொறுமையுடன் திருப்தியான பதில்களை அளித்திருக்கிறார். அவரது உடல்மொழியும் இயல்பானதாக இருந்திருக்கிறது. உரையாடல்களில் தனது நீதித்துறை அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்ந்திருக்கிறார். சிறிலங்காவின் நீதித்துறை இனவாதத்தால் கறைபட்டிருப்பதனைச் சுட்டிக்காட்டி அனைத்துலக ஈடுபாடே தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர வழிகோலும் எனவும் தெரிவித்திருக்கிறார். 150,000 க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் வடக்கில் நிலை கொண்டிருப்பதாகவும் அனைத்துலக அழுத்தத்தின் ஊடாக அது குறைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடனான சந்திப்புத் தொடர்பானதொரு கேள்விக்கு அச் சந்திப்பு தமக்குத் திருப்தி அளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு சார்ந்த மனப்பாங்கு ஒரு பிச்சினைதான் என்றும், தானும் கொழும்பைச் சார்ந்தவன்தான், ஆனால் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் மக்களுடன் வாழத் தொடங்கியமை மக்களுக்கு கூடுதல் பொறுப்புள்ளவனாகத் தன்னை மாற்றியுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.

மேம்பாடு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், தாயக மக்களினது வாழ்க்கைச் சூழலுக்கும் பிரதேசத்தினது தேவைக்கும் ஏற்ற வகையிலான மேம்பாட்டுத் திட்டங்களின் தேவைபற்றிப் பேசியிருக்கிறார். 1.2 மில்லியனாக இருந்திருக்க வேண்டிய யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை 6 இலட்சமாக வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையைக் குறிப்பிட்டு மக்கள் மேலும் புலம்பெயர்ந்து போகாத வகையில் தாயகத்தை பொருளாதாரச் செழிப்புள்ளதாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகளையும் வீடுகளையும் வடக்கு மாகாணசபை குத்தகையுடன் பொறுப்பேற்று அவற்றை நிர்வகிப்பதன் ஊடாகக் காணிகளும் சொத்துக்களும் கண்டபடி விற்பனையாகாமல் தடுக்க முடியும் எனவும் கூறியிருக்கிறார். முதலமைச்சர்  நிதியத்துக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளதாவும், இதற்குரிய உட்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாணசபை புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளைக் கோரும் எனவும் தெரிவித்திருக்கிறார். தனது சந்திப்பில் பங்கு கொண்டவர்களின் புலமைப் பின்னணி முதல்வருக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. உங்களது பங்களிப்பு கட்டாயம் தேவை, நாட்டுக்கு திரும்பி வாருங்கள் என்ற அழைப்பினையும் விடுத்திருக்கிறார்.

முதலமைச்சருக்கு இருக்கும் ஆதரவும் அங்கீகாரமும் அவர் தாயகத்தையும் புலத்தையும் இணைத்துச் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைத் தரும் என்றே தோன்றுகிறது. புலம்பெயர் தமிழ் மக்களை தாயக மேம்பாடு குறித்து பங்களிக்கத் தூண்டுவதற்கு முதலமைச்சரின் பயணம் துணை செய்திருக்கிறது. ஆனால் அரசியல்ரீதியான நெருக்கத்தை முதலமைச்சரால் ஏற்படுத்த முடியுமா என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைக்கு புலத்தில் பலத்த எதிர்ப்பு உண்டு. முதல்வரின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவு இருக்கின்ற போதிலும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே கூடுதல் நெருக்கமாக உள்ளது. தமிழ் மக்களிடையே அரசியல்ரீதியில் நெருக்கம் ஏற்படுவதற்குரிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றியமைக்க முதலமைச்சரால் முடியுமா என்பதில்தான் இக் கேள்விக்கான பதில் தங்கியுள்ளது. 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=6feb0514-b61e-4947-9e0a-e8c3c7cf5570

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.