Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உதறித் தள்ளிவிட்டு முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு வழங்கினார் வடக்கின் முதலமைச்சர் !!

Featured Replies

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உதறித் தள்ளிவிட்டு முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு வழங்கினார் வடக்கின் முதலமைச்சர் !!
 
cv_wikneswaran.jpg

நடைபெறப் போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில், வடக்கின் முதலமைச்சர் மேற்போந்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக வழிக்கு வந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் கட்சியான ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் கொள்கைகளுக்கு விக்னேஸ்வரன் ஆதரவான வெளிப்பாட்டைத் தெரிவித்து தனது கருத்தை வெளியிடுள்ளார். 

வடக்கு மாகாணத்தில் அதிகளவான அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கி இருக்கும் இவ்வேளையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்காக நான் பிரசாரம் செய்யமாட்டேன் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தை எவரும் சாதாரணமாக கருதிவிடக்கூடாது.

வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் களமிறங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக தேர்தல் பிரசாரம் செய்தால் மட்டுமே கூட்டமைப்பு தப்பித்துக் கொள்ளும் என்ற நிலையில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த அறிவிப்பு தமிழ் மக்களை ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர், தான் சார்ந்த கட்சிக்காக, தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன் என்று சொல்வதற்குள், தேர்தல் பிரசாரம் அவரின் மனச்சாட்சிக்கு விரோதமாக உள்ளது என்பது தெளிவாகின்றது.

என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் இறங்கி அவர்களை ஆதரித்து பக்கச் சார்பாகப் பிரசாரம் செய்வது எனக்கு அழகல்ல.

என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அந்நியோன்னியமாக இயங்குவது எனக்கொரு பிரச்சினையுமில்லை.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கட்சிகளின் நலனைவிட எமது மக்களின் நலனும் உரித்துக்களுமே முதன்மை பெறவேண்டும்.

இவ்வாறு வடக்கின் முதலமைச்சர் கூறியதற்குள் எல்லா அர்த்தமும் அடங்கி உள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியாதவர்களுக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் மிகத்தெளிவான அறிவுரையைக் கூறியுள்ளார்.

எனது கட்சி, என்னை முதலமைச்சராக்கிய கட்சி என்பதற்காக நான் பக்கச் சார்பாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முடிவு ஓய்வுக்குப் பின்னரும் நீதியரசர் நீதியரசர்தான் என்பதை இந்த உலகம் முழுமைக்கும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

கெளரவ சேனையில் இருந்த பீஷ்மர், துரோணர் மீது எனக்கு மதிப்பு இருந்த போதிலும் கெளரவ சேனையில் வில் முறித்த விதுரனே பாரத இதிகாசத்தில் பிடித்தமான பாத்திரம்.

நீதியரசர் முதல்வர் விக்னேஸ்வரனை ஒரு விதுரனாக, அவரின் வாக்கை விதுர நீதியாகப் பார்க்கிறேன். தமிழ்மக்களே! உங்கள் மனச்சாட்சிதான் உங்களுக்கு நீதிபதி என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து பெருமளவு நிதிவாங்கியிருப்பதை விக்கி ஐயா தெளிவாக அறிவார். இவ்வாறானவர்கள் தமிழர்களுக்கு இருதய சுத்தியுடன் சேவையாற்றி தீர்வைப் பெற்றுக் கொடுப்பார்களா? 

தமிழர்களின் நலனுக்காக, தமிழ்த்தேசியத்திற்காக, தமிழர்களின் விடுதலைக்காக கொண்ட கொள்கையில் உறுதியாகவும் அரசியலில் தொலைநோக்குப் பார்வையுள்ளவர்களாகவும் எதற்கும் விலைபோகாத மனோநிலை கொண்டவர்களாகவும் உள்ள முன்னாள் புலிப் போராளிகள் தற்போது தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். அவர்களை அரசியல் பலத்திற்காக நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு வாக்குகளும் பெறுமதியானவை என்பதை தமிழ் வாக்காளர்கள் உணர வேண்டும்.

http://www.newjaffna.com/moreartical.php?newsid=39676&cat=nnews&sel=current&subcat=14

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக போராளிகள் கட்ச்சியின் வரவு ஆர்வம் தருகிறது. ஆனால் வடகிழக்கு தாய்மண்ணில் பன்முக போட்டியை ஏற்ப்படுத்துவது அரசு அசார்பு சக்திகளுக்கு குறிப்பாக  யூ என்,பி சின்ன வேட்ப்பாளர்களுக்கு வாய்பாக முடிந்துவிடும். ஜனநாயக போராளிகளின் கட்சி அடுத்தேர்தல் வரைக்கும் பொறுமையாக மக்கள் மத்தியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு அடுத்த நாடாளுமன்ற அரசியலுக்கு தங்களைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.இந்த தேர்தலில் விமர்சனங்கள் நிபந்தனைகளோடு  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவை வளங்குவதே பொருத்தமானது. அவர்கள் எனது பணிவான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் மதிபுக்குரியவர். அவர் கூட்டமைப்பை ஏற்க்காவிட்டால் பதவி விலகி  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுருக்க வேண்டும் என்கிற வாதம் உள்ளது. ஆயினும் கள நிலமைகள் முதலமைச்சரின் ஒத்துழையாமையோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்போ து  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை பெரிதும் பாதிக்காது.என்பதையே உறுதிப்படுத்துகிறது.

மக்கள் தீர்ப்பு எதுவோ அதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கீகரித்து ஆதவை வளங்க வேண்டும்.  

 

Edited by poet

  • தொடங்கியவர்

ஜனநாயக போராளிகள் கட்ச்சியின் வரவு ஆர்வம் தருகிறது. ஆனால் வடகிழக்கு தாய்மண்ணில் பன்முக போட்டியை ஏற்ப்படுத்துவது அரசு அசார்பு சக்திகளுக்கு குறிப்பாக  யூ என்,பி சின்ன வேட்ப்பாளர்களுக்கு வாய்பாக முடிந்துவிடும். ஜனநாயக போராளிகளின் கட்சி அடுத்தேர்தல் வரைக்கும் பொறுமையாக மக்கள் மத்தியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு அடுத்த நாடாளுமன்ற அரசியலுக்கு தங்களைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.இந்த தேர்தலில் விமர்சனங்கள் நிபந்தனைகளோடு  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவை வளங்குவதே பொருத்தமானது. அவர்கள் எனது பணிவான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் மதிபுக்குரியவர். அவர் கூட்டமைப்பை ஏற்க்காவிட்டால் பதவி விலகி  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுருக்க வேண்டும் என்கிற வாதம் உள்ளது. ஆயினும் கள நிலமைகள் முதலமைச்சரின் ஒத்துழையாமையோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்போ து  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை பெரிதும் பாதிக்காது.என்பதையே உறுதிப்படுத்துகிறது.

மக்கள் தீர்ப்பு எதுவோ அதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கீகரித்து ஆதவை வளங்க வேண்டும்.  

 

மிகவும் பொறுப்புள்ள பதிலை எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.....


தாயகத்தில் உள்ளவர்களுக்கே வேட்பாளர்கள் பற்டி அதிகம் தெரியும் அவர்கள் தெரிவுசெய்யட்டும், அதட்குப்பின்னர் இணைந்து செயல்படுவதே முக்கியம்.

விக்னேஸ்வரன் அவர்களுக்கு மண்பற்று அதிகமாக இருக்கு....

ஐயா அவர்களும் கூட்டமைப்பில கேட்டு வென்றார்.....ஆனால் கூட்டமைப்பில கேக்காமல் வெல்லமுடியாது என்று 18ம் திகதி புரியும் 

18ம் திகதி கூட்டமைப்பு வெற்றிபெறும் இடத்து ஐயா தான் விரும்பும் கட்சிக்கு தாவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இல்லாவிட்டால் ஊருக்கு போய்விடுங்கள் ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.