Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்நிய மீட்புக்குழுவினர் தனது மகளை தொடவிடாமல் நீரில்மூழ்கி இறப்பதற்கு அனுமதித்த தந்தை

Featured Replies

அந்நிய மீட்புக்குழுவினர் தனது மகளை தொடவிடாமல் நீரில்மூழ்கி இறப்பதற்கு அனுமதித்த தந்தை
 

11505Lt--Col-Ahmed-Burqibah.jpgமறக்­க­மு­டி­யாத அதிர்ச்சி சம்­பவம் என்­கிறார் துபாய் பொலிஸ் அதி­காரி
நபர் ஒருவர் தனது மகளை அந்­நிய நபர் ஒருவர் தொடு­வதை விரும்­பா­ததால், மீட்­புக்­கு­ழு­வினர் அவரை நெருங்­கு­வதை அனு­ம­திக்­காமல் அந்த யுவ­தியை நீரில் மூழ்கி மர­ண­ம­டைய அனு­ம­தித்த சம்­பவம் துபாயில் இடம்­பெற்­றுள்­ளது.

 

துபாய் கடற்­க­ரை­யொன்றில் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக துபாய் பொலிஸின் தேடுதல், மீட்புப் பிரிவின் பிரதி பணிப்­பா­ள­ரான லெப். கேணல் அஹமட் புர்­கிபாஹ் தெரி­வித்­துள்ளார்.

 

“எனக்கும் இதில் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ருக்கும் இது பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. இச்­சம்­ப­வத்தை என்னால் மறக்­கவே முடி­யாது” என லெப். கேணல் அஹமட் புர்­கிபாஹ் கடந்த வாரம் கூறி­யுள்ளார். 

 

இது தொடர்­பாக அவர் ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் ஊட­க­மொன்­றிடம் பேசு­கையில், “ஆசிய நாடொன்றைச் சேர்ந்த நபர், ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்­ளை­களை அழைத்­துக்­கொண்டு கடற்­க­ரைக்கு வந்­தி­ருந்தார்.

 

அவரின் பிள்­ளைகள் கரை­யோ­ரத்தில் நீந்­திக்­கொண்­டி­ருந்­தனர். திடீ­ரென அவரின் பிள்­ளை­களில் ஒரு­வ­ரான 20 வயது யுவதி நீரில் மூழ்கத் தொடங்­கினார்.

 

1150511.jpg

அந்த யுவதி உதவி கோரி கூக்­கு­ர­லிட்­ட­தை­ய­டுத்து, கடற்­க­ரையில் இருந்த மீட்பு ஊழி­யர்கள் இருவர், உத­விக்கு விரைந்தனர். 

 

ஆனால், அந்த யுவ­தியை மீட்­புக்­கு­ழு­வினர் நெருங்­கு­வதால் ஒரு தடங்கல் இருந்­தது. 

 

அந்­நிய ஆட­வர்கள் தனது மகளை தொடக்­கூ­டாது என அந்த ஆசிய நபர் கரு­தினார்.

 

அந்த தந்தை மிக உய­ர­மான, வலி­மை­யான நபர் ஆவர், மீட்பு ஊழி­யர்­களை தள்­ளி­விட்டு, அவர்­க­ளுடன் வன்­மு­றை­யாக நடந்­து­கொள்ள ஆரம்­பித்தார். தனது மகள் இறந்­தாலும் பர­வா­யில்லை.

 

அவளை அந்­நிய ஆட­வர்கள் தொடக்­கூ­டாது” என அவர் கூறினார். 

 

அதனால் அந்த யுவதி நீரில் மூழ்கி உயி­ரி­ழந்தார். மீட்பு ஊழி­யர்கள் அந்த யுவ­திக்கு மிக அருகில் இருந்­தனர்.

 

ஆனால், துர­திஷ்­ட­வ­ச­மாக அவரை காப்­பாற்ற முடி­ய­வில்லை” எனத் தெரி­வித்­துள்ளார். 

 

பின்னர் மேற்படி ஆசிய நபர் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் லெப். கேணல் அஹமட் புர்கிபாஹ் தெரிவித்துள்ளார்.

 

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=11505#sthash.LQlDkgFp.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.