Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏறாவூர் கொலைகளின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Featured Replies

1990ஆம் ஆண்டு இலங்கையின் கிழக்கே ஏறாவவூர் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலின் 25வது ஆண்டு உள்ளுர் முஸ்லிம்களினால் இன்று செவ்வாய்கிழமை நினைவு கூறப்பட்டது.

150811165433_eravur_massacre1_640x360_bb

ஏறாவூர் சம்பவம் தமிழர் - முஸ்லிம் உறவில் மாறாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நள்ளிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 121 பேர் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்தனர்.
காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதல் இடம்பெற்று 7வது நாள் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் கூறுகின்றது.
1990ம் ஆண்டு வாக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காவல் நிலையங்கள் செயலிழந்து போன நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்ததாக சம்மேளனத்தின் தலைவரான ஏ.எல். மொஹமட் ஸயீத் தெரிவித்தார்.

150811170647_eravur_muslim_massacre_bodi

ஏறாவூரில் நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 121 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவம் இடம்பெற்று 25 வருடங்களானாலும் இந்த நிகழ்வு தமது பிரதேச முஸ்லிம்களை பொறுத்தவரை மறக்க முடியாத நிகழ்வாகவே இருந்துவருவதாகவும் அவர் கூறினார்.
இருந்தபோதும், அந்தப் பிரதேசத்தின் சமூக ஆர்வலரான எஸ்.எச். அபூ ஹனிபா, "சம்பவம் பற்றிய பதிவுகள் இருக்க வேண்டும். ஆனால் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கருத்தில் கொண்டு வருங்கால சந்ததியினரை இது சென்றடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்கிறார்.
25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவம், தமிழ் - முஸ்லிம் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/08/150811_eravur

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.