Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்படி சிக்கினார் பிரகீத் : இலங்கை இராணுவம்,முன்னாள் போராளி போட்ட அதிரடி ஸ்கெட்ச்

Featured Replies

praketh q

ஊடகவியலாளர் பிரகீத் கடத்தப்பட்டதும் கிரிதெல இராணுவ முகாமில் விசாரிக்கப்பட்டார் என்ற செய்தியை முன்னர் படித்தோம். இப்போது பிரகீத் கிரிதெல இராணுவ முகாமுக்கு எப்படி ரகசியமாக அழைத்துவரப்பட்டார் என்பது குறித்து அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு கிரிதெல இராணுவ முகாமுக்கு பிரகீத்தை அழைத்து வந்து, இராணுத்திடம் சிக்க வைத்ததன் பின்னணியில் முன்னாள் போராளி ஒருவரும் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரகீத் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரையும் விசாரித்த போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் விசாரணை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்து இராணுவத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சுமதிபால சுரேஸ்குமார். மற்றையவர் கிரிதல இராணுவ முகாமில் பணியாற்றிய, ஓய்வுபெற்ற ஷ்ரவ் சார்ஜன்ட் சுதுபண்டா.

கைது செய்யப்பட்ட சுரேசின்  தந்தை ஒரு சிங்களவர்.தாய் தமிழர். இவர்கள் இருவரும் இராணுவத் தாக்குதல் ஒன்றில் இறந்து விட்டனர்.

16 வயதில் -1985ஆம் ஆண்டு இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.

இந்தியப் படையினரின் கண்ணிவெடியில் இவர் கால் ஒன்றை இழந்தார். புலிகள் இயக்கத்தில் தவேந்திரன் என்று அழைக்கப்பட்ட அவர், காலை இழந்த பின்னர், புலனாய்வுப் பிரிவில் பணியாற்றினார்.

போரின் போது அவர், ராமின் தலைமையில் கிழக்கில் செயற்பட்ட அவர், திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

2009ஆம் ஆண்டு போரின் முடிவில் ராம் மற்றும் சுரேஸ் ஆகியோர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தனர். அவர்களை இரண்டரை ஆண்டுகளாக தமது புலனாய்வு நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தியது.

சுரேசின் தொலைபேசி பதிவேடு ஒன்றில் எக்னெலிகொடவின் இலக்கம் இருந்தது குறித்து கிரிதல இராணுவ முகாம் அதிகாரிகள் சுரேசிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அமைதி உடன்பாட்டுக் காலத்தில் அந்த ஊடகவியல்லாளரை ஜெயலத் ஜெயவர்த்தன மூலம் மடுவில் சந்தித்து அறிமுகப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, எக்னெலிகொடவுக்கு தொலைபேசியில் அழைத்து பேசுமாறு இராணுவத்தினர் கூறினர். அந்த உரையாடலை இராணுவத்தினர் இரகசியமாக ஒட்டுக்கேட்டனர்.

அப்போது இராணுவத்தை எக்னெலிகொட கடுமையாக விமர்சித்தார்.

பின்னர், அந்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியான தம்மிக குமார வின் உத்தரவின் பேரில், எக்னெலிகொடவைச் சந்தித்த கோப்ரல் பிரியந்த, தன்னை சுரேசின் சகோதரன் என்று அறிமுகப்படுத்தினார்.

அந்தச் சந்திப்பு சிகிரியாவில் உள்ள எக்னெலிகொடவுக்குச் சொந்தமான பண்ணைக் காணியில் இடம்பெற்றது.

அப்போது, தானும் சகோதரன் சுரேசும், இராணுவத்திடம் இருந்து தப்பி வந்துள்ளதாகவும், தாம் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிரியந்த.

அதற்கு தான் உதவுவதாக குறிப்பிட்ட எக்னெலிகொட தேவையான ஆவணங்களைத் தருமாறு கேட்டார்.

அவர் கேட்ட ஆவணங்களுடன், 2010 ஜனவரி 24ஆம் நாள் ராஜகிரியவில், எக்னெலிகொடவைச் சந்தித்த பிரியந்த, அவரை அங்கிருந்து கிரிதல இராணுவ முகாமுக்கு கொண்டு வந்தார்.” என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

http://www.colombomirror.com/tamil/?p=5373

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.