Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.காவின் 10 ஆசனங்களே ஐ.தே.க. அரசுக்குப் பலம் சேர்க்கும்! திருமலைக் கூட்டத்தில் ஹக்கீம் சுட்டிக்காட்டு

Featured Replies

மு.காவின் 10 ஆசனங்களே ஐ.தே.க. அரசுக்குப் பலம் சேர்க்கும்! திருமலைக்  கூட்டத்தில் ஹக்கீம் சுட்டிக்காட்டு!!

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது. எமது கட்சி பெறப்போகும் பத்து ஆசனங்களைக் கொண்டுதான் ஐக்கிய தேசியக் கட்சி அரசு பலமடையும்.'' - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலையின் பல இடங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"15 வருடங்களாக நாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் போராடினோம். ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தடவைகள் நாம் பந்தயம் கட்டிய குதிரை வெல்லவில்லை. ஆனால், இந்த முறை நாம் பந்தயம் கட்டிய குதிரை வென்றதோடு அதில் சவாரி செய்யவும் செய்கிறோம். மஹிந்தவின் ஆட்சியில் எமக்குப் போதுமான அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இருந்தும், கட்சியைப் பாதுக்காப்பதற்காக அந்த அரசில் இணைந்திருந்தோம். புலி பதுங்குவது பாய்வதற்கு என்பதுபோல், ஆட்சி அதிகாரத்தை எமது கையில் எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இப்போது வென்றுவிட்டோம். இப்போதுதான் நாம் விரும்பியவாறு எமது பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

எமது கட்சி இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சி அமைக்கமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. நாம் பெறப்போகும் பத்து ஆசனங்கள்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசைப் பலப்படுத்தும். திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை எமது கைகளில் எடுப்பதன் மூலம்தான் இந்த மாவட்டத்தைப் பூரணமாக அபிவிருத்திசெய்ய முடியும். அதற்காக நாம் இந்தத் தேர்தலில் பாடுபடவேண்டும். இப்போதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வசந்த காலம் பிறந்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாம் திருமலை மாவட்டத்தை அபிவிருத்திசெய்வதோடு எமது துரோகிகளையும் தோற்கடிப்போம்''

 http://www.malarum.com/article/tam/2015/08/11/11362/மு-காவின்-10-ஆசனங்களே-ஐ-தே-க-அரசுக்குப்-பலம்-சேர்க்கும்-திருமலைக்-கூட்டத்தில்-ஹக்கீம்-சுட்டிக்காட்டு-.html#sthash.R4B5FtqO.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.