Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா படுகொலை வழக்கு நால்வருக்கு நேரடித் தொடர்பு

Featured Replies

புங்­குடுதீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொ­லை­ செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கத்தில் கைதுசெய்­யப்­பட்ட ஒன்­பது சந்­தேக நபர்­களில் நால்­வ­ருக்கு நேரடி தொடர்­புள்­ள­தா­கவும் ஏனையோர் அந்த கொடூ­ரத்­துக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­வர்கள் எனவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்­றுக்கு அறிக்கை சமர்­பித்­துள்­ளது.

punkuduthivu-vithya.jpg

வித்­தியா படு­கொலை வழக்கு நேற்று ஊர்­கா­வற்­றுரை நீதிவான் நீதி­மன்றில் நீதி­பதி எஸ்.லெனின் குமார் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன் போதே இரு வேறு அனு­ம­தி­களின் பேரில் இரு மாதங்கள் சந்­தேக நபர்­களை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்­தமை தொடர்­பி­லான அறிக்­கையை நீதிமன்­றுக்கு சமர்­ப்பித்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான மேற்­படி விட­யத்தை நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் சந்­தேக நபர்­க­ளான பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் (வயது 40),பூபா­ல­சிங்கம் ஜெய­குமார் (வயது 34), பூபா­ல­சிங்கம் தவ­குமார் (வயது 32) , மகா­லிங்கம் சஷீந்­திரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹாஷன், சிவ­தேவன் குஷாந்தன், பழனி ரூப­சிங்கம் குக­நாதன், ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணன் சுவிஸ் குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசி­குமார் ஆகி­யோரை விசா­ரணை செய்­ததில், இந்த கொடூரம் திட்­ட­மிட்ட வகை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளதை உறுதிப் படுத்­தி­யுள்­ள­தா­க புல­னாய்வுப் பிரி­வினர் இதன் போது மன்றில் சுட்­டிக்­காட்­டினர்.

அத்துடன் வித்­தி­யாவின் மூக்குக் கண்­ணா­டி­யையும் இந்த விசா­ர­ணை­களின் இடையே தாம் மீட்­டுள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரி­வினர் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

அரச இர­சா­யண பகுப்­பாய்­வு­க­ளுக்கும், டி.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கும் அனுப்­பட்ட தட­யங்கள் தொடர்­பி­லான ஆய்வு அறிக்கை இன்னும் தமக்கு கிடைக்­க­வில்லை என தெரி­வித்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­காரி, அவை கிடைத்­ததும் மேலும் பல விட­யங்­களை உறுதிப் படுத்தக் கூடி­யதாய் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மாணவி வித்­தியா படு­கொலை வழக்கு நேற்று ஊர்­கா­வற்­றுரை நீதிவான் எஸ். லெனின் குமார் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டபோது கடந்த தவணை வழக்கின் போது பது­காப்பு பிரச்­சி­னை­யையை மேற்கோள் காட்டி கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட சந்­தேக நபர்கள் ஒன்­பது பேரும் நேற்று புல­னாய்வுப் பிரிவின் விஷேட பஸ் வண்டி ஊடாக ஊர்­கா­வற்­றுரைக்கு எடுத்துவரப்பட்டு நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இதன் போது நீதிமன்றில் படு கொலை செய்­யப்­பட்ட வித்­தி­யாவின் தாய் உள்­ளிட்ட உற­வி­னர்­களும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

எனினும் கடந்த தவ­ணையின் போதும் அதற்கு முன்­னரும் பாதிக்­கப்­பட்ட தரப்பு என்ற ரீதியில் வித்­தி­யாவின் குடும்­பத்­தவர் சார்பில் ஆஜ­ரான எந்த சட்­டத்­த­ர­ணி­யும் நேற்று நீதிமன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.

கடந்த தவணை சிரேஷ்ட சட்­டத்­த­ரணி தமக்­கு­ரிய அச்­சு­றுத்­தலை மேற்கோள் காட்டி இந்த வழக்கில் இருந்து வில­கி­யி­ருந்­த­துடன் கடந்த தவணை முதல் தலை நகரில் இருந்து சென்ற சகோ­தர இன சட்­டத்­த­ர­ணிகள் மூவர் வித்­தி­யாவின் குடும்­பத்­தவர் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். எனினும் அவர்­க­ளையும் நேற்று மன்றில் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை.

இந் நிலையில் சந்­தேக நபர்­களை கூண்டில் ஏற்­றி­யதும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சார்பில் நீதிமன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் உப பொலிஸ் பரி­சோ­தகர், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் செய்த விசா­ர­ணையின் அறிக்­கையை நீதி­வா­னிடம் கைய­ளித்தார்.

சுவிஸ் குமார் அல்­லது பிரகாஸ் என அழைக்­கப்­படும் மகா­லிங்கம் சிவ­குமார், நிசாந்தன், சந்­தி­ர­காசன், ஜெயக்­குமார், தவக்­குமார் ஆகி­யோரின் ஆலோ­ச­னை­யின்­படி இந்த படு பாதக செயல் இடம்­பெற்­றுள்­ளது. இந்த பாதக செய­லுடன் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள நால்­வ­ருக்கு நேரடி தொடர்பு உள்­ளது. ஏனையோர் அதற்கு உதவி ஒத்­தாசை செய்­துள்­ளனர்.

கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்கள் எமது விசா­ர­ணை­களின் போது இதனை ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். அவர்கள் மிகத் திட்­ட­மிட்டு இந்த குற்­றத்தை அரங்­கேற்­றி­யுள்­ளனர்.

இந் நிலையில் இவர்­களை விசா­ரணை செய்யும் போது பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான குஷாந்­தனின் வீட்­டி­லி­ருந்து மாணவி வித்­தி­யாவின் மூக்குக் கண்­ணா­டியை நாம் கைப்­பற்­றி­யுள்ளோம். இது இந்த வழக்கின் பிர­தான தடையப் பொருட்­களில் ஒன்­றா­கவே நாம் பார்க்­கின்றோம்.

சந்­தேக நபர்கள் தொடர்­பிலும் தட­யங்கள் தொடர்­பிலும் டி.என்.ஏ. மற்றும் அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு அனுப்­பட்ட மாதி­ரிகள் மற்றும் தட­யங்கள் தொடர்­பி­லான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்­க­வில்லை. எனவே சந்­தேக நபர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோரு­கின்றோம். என குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் ,நீதி மன்றில் கோரிக்கை முன்­வைத்­தனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவினர் விசாரணை சுருக்­கத்தை நீதிமன்றத்தில் முன்­வைத்­ததைத் தொடர்ந்து கூண்டில் இருந்த சந்­தேக நபர்­களை நீதிவான் நோக்கினார். இதன் போது சந்­தேக நபர்கள் ஒன்­ப­து­பேரும், குற்றப் புல­னய்வுப் பிரிவு பொலிஸார் தம்­மிடம் சிங்­க­ளத்­தி­லேயே கதைத்து தங்­களை வற்­பு­றுத்­தியே வாக்­கு­மூ­லமும், கையெ­ழுத்தும் பெற்­றுக்­கொன்­ட­தாக குறிப்­பிட்­டனர்.

இதன் போது இடை­ம­றித்த பொலிஸார் மேற்­படி ஒன்­பது சந்­தே­க­ந­பர்­க­ளுக்கும் சிங்­களம் ஓர­ளவு நன்­றா­கவே தெரியும் எனவும், இவர்­க­ளிடம் ஒழுங்­கான முறை­யி­லேயே விசா­ரணை இடம்­பெற்­ற­தா­கவும் அதன் பிர­கா­ரமே வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­தனர்.

இந் நிலையில் ஆறா­வது சந்­தே­க­நபர் டீ.என்.ஏ பரி­சோ­த­னையை மீண்டும் மேற்­கொள்ள வேண்­டு­மென்று நீதி­வா­னிடம் கோரிக்கை முன்­வைத்­துள்ளார்.

அதே­நேரம் மற்­று­மொரு சந்­தே­க­ந­ப­ரான குஷாந்தன் என்­பவர் வித்­தி­யாவின் கண்­ணாடி தனது வீட்­டி­லி­ருந்து எடுக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது அப்­பட்­ட­மான பொய் எனவும் எனவும், தன்னைப் பொலிஸார் அழைத்துச் சென்று ஒரு கடையில் வைத்தே அந்த கண்­ணா­டியை வாங்கி வந்து தனக்கு முன்­னா­லேயே தனது வீட்டில் வைத்து விட்டு எடுத்­த­தா­கவும் நீதி­வா­னுக்கு தெரி­வித்தார்.

இந்த குற்றச் சாட்­டுக்­களை சுமத்­திய சந்­தேக நபர்கள் தம்மை பிணையில் விடு­தலை செய்ய கோரினர். எனினும் நீதி­பதி எஸ். லெனின்­குமார் , தமக்­குள்ள அதி­கா­ரத்­துக்கு அமைய குற்­றத்தின் பார­தூ­ரத்தை கருத்தில் கொண்டும் பிணை வழங்க முடி­யா­தெ­னவும், இந்த வழக்கு மேல்­நீ­தி­மன்­றத்­திற்கு மாற்­றப்­படும் போது அங்கு பிணை பெறு­வ­தற்கு முயற்சி செய்­ய­லா­மெ­னவும் கூறினார்.

அதே­வேளை சந்­தே­க­ந­பர்கள் ஒன்­ப­து­பேரும் தமக்­காக எந்த ஒரு சட்­டத்­த­ர­ணியும் ஆஜ­ரா­வ­தற்கு தயங்­கு­வ­தோடு, பயப்­ப­டு­கின்­றார்கள் என நீதிமன்றில் ஒரு­மித்த குரலில் தெரி­வித்­தனர். இதனைச் செவிமடுத்த நீதவான், உங்களுக்காக சட்டத்தரணிகளை ஆஜராகும் விடயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும் ஆயினும் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு யாராவது அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை மேற்கொண்டால் அது குறித்து தான் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

இந் நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை எதிர்வரும் 26.08.2015 அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் எஸ்.லெனின் குமார் அதுவரை சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் 26ஆம் திகதிக்கு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாகவும் கூறி ஒத்தி வைத்தார்.

http://www.virakesari.lk/articles/2015/08/13/வித்தியா-படுகொலை-வழக்கு-நால்வருக்கு-நேரடித்-தொடர்பு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.