Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த மக்களை மீண்டும் வரவளைப்பது ஆபத்தானது: டிலான் பெரேரா எச்சரிக்கை

Featured Replies

dilan-perera-1

புலம்­பெயர் இலங்­கை­யர்­களை நாட்­டுக்குள் மீண்டும் வர­வ­ழைப்­பதும், அவர்­க­ளுக்­கான வாக்­கு­ரி­மையை வழங்­கு­வதும் சிக்­க­லான விட­ய­மாகும். இலங்­கைக்கு வெளியில் வாழும் இலங்­கை­யர்­களை மீண் டும் நாட்­டுக்குள் வர­வ­ழைக்கும் போது நாட்டின் பாது­காப்­பையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் தெரி­வித்­தனர்.

எமது எதிர்­கால அர­சாங்­கத்­திலும் புலம்­பெயர் இலங்­கையர் தொடர்பில் ஆராய்ந்தே நட­வ­டிக்கை எடுப்போம் எனவும் ஐ.ம.சு.மு.வின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை காரி­யா­லயத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்­டி­ருந்த கட்­சியின் ஊடகப்பேச்­சாளர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நல்­லாட்­சியை உரு­வாக்­கு­வ­தாகக் கூறியே ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சியை அமைத்­தது. ஆனால் இந்த அர­சாங்கம் முழு­மை­யாக ஏமாற்று நட­வ­டிக்­கை­களை மட்­டுமே செய்­துள்­ளது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வைத்து ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கான ஆத­ரவை பெற்றுக்கொண்­டுள்­ள­னரே தவிர, நேர­டி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு மக்கள் ஆத­ரவு வழங்­க­வில்லை. அதேபோல் இப்­போதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ரவை வைத்­துக்­கொண்டே ரணில் மக்­க­ளிடம் வாக்கு கேட்­கின்றார். ஆகவே மக்­களை ஏமாற்றும் செயற்­பாட்­டினை ரணில் விக்­கி­ர­ம­சிங்க முதலில் கைவி­ட­வேண்டும்.

மேலும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைமை இன்று பிச்­சைக்­காரி கர்ப்­ப­மா­ன­தைப்போல் ஆகி­விட்­டது. தனக்கு ஒரு­வேளை உணவு இல்­லாத நிலையின் வயிற்றில் வளரும் பிள்­ளைக்கும் உணவு கொடுக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­ப­டு­வ­தைப்­போல ஐக்­கிய தேசியக் கட்­சியும் இன்று தாம் சுய­மாக ஆட்சியமைக்க முடி­யாது போயுள்ள நிலையில் யானையில் வேறு சில­ரையும் ஏற்­றிக்­கொண்டு செல்ல முயற்­சிக்­கின்­றனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இன்று மஹிந்­தவே பிர­தான சிக்­க­லாக உள்ளார். அவரை இலக்கு வைத்தே அனைத்து விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால் இந்த நாட்டில் ஜன­நா­யக ரீதியில் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­ய இந்த நாட்டை அமை­தி­யான நாடா­கவும் ஊடக சுதந்­தி­ரத்தைப் பலப்­ப­டுத்­திய தலை­வரும் மஹிந்­த­வே­யாவார். அன்று எமது ஆட்­ச்சியில் இருந்த ஊடகச் சுதந்­திரம் இன்று உள்­ளதா என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் தமது மன­ச்சாட்­சி­யிடம் கேட்­டுப் ­பார்க்கவேண் டும்.

மேலும் புலம்­பெயர் இலங்­கை­யர்­களை நாட்­டுக்குள் மீண்டும் வர­வ­ழைப்­பதும், அவர்­க­ளுக்­கான வாக்­கு­ரி­மையை வழங்­கு­வதும் சிக்­க­லான விட­ய­மாகும். இலங்­கையின் பிர­ஜைகள் பலர் இன்று தொழில் நிமித்தம் வேறு நாடு­களில் வாழ்ந்து வரு­கின்­றனர். அதேபோல் யுத்த கால­கட்­டத்தில் புலம்­பெ­யர்ந்த பலரும் உள்­ளனர். ஆகவே இலங்­கைக்கு வெளியில் வாழும் இலங்­கை­யர்­களை மீண்டும் நாட்­டுக்குள் வர­வ­ழைக்கும் போது அவர்கள் தொடர்பில் சரி­யான தக­வல்­களை பெறவேண்டும். நாட்டின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் எமது அரசாங்கத்தில் நாம் அவர்களை மீண்டும் இணைந்துக்கொள்ளும் நடவடிக்கைள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப் போம் எனக் குறிப்பிட்டார்.

http://tamilleader.com/?p=50591

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.