Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவோம் அமைச்சுகளைப் பெற மாட்டோம்; மாவை சேனாதிராஜா

Featured Replies

9714_content_mavai_senathirajah.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்பது தமிழ் மக்களின் பலம். அந்தப் பலத்தைப் பாதுகாத்து எமது தாயகத்தை வளப்படுத்த தாயகத்திலும் புலத்திலும் இருக்கின்ற தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமையப்போகின்ற அரசியல் பலத்தின் ஊடாகவே மத்தியில் அமையப் போகின்ற அரசுடன் பேசி எமது பிரச்சினைக்கு உருப்படியான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடிமென்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். வணிகர் கழகத்தில் வணிகர் சங்கப் பிரதிநிதிகளை கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் கழக மாநாட்டு மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் போது அங்கு உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்த மாவை சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில்;

நடைபெறவிருக்கின்ற இத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  இத் தேர்தலில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் வகையிலும் வாக்கைச் சிதறடிக்கும் நோக்கிலும் திட்டமிட்ட வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.  இதனால் கட்டுக் கதைகளையும் அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் எமது மக்களுக்கு நடந்தவையும் நடக்கின்றவையும் என்ன என்பது தொடர்பில் நன்றாகத் தெரியும். ஆகவே தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உறவை சீர்குலைகப்பதற்கு முயல்கின்றவர்களை மக்கள் இனம் கண்டு கொண்டு செயற்பட வேண்டும்.  

தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த வகையிலேயே சர்வதேச விசாரணையொன்று வர இருக்கின்றது. அந்த விசாரணையூடாக உண்மைகள் கண்டறியப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். இன்று சர்வதேச ரீதியாக எமக்காக ஆதரவு பெருகி வருகின்றது. அதற்கு பக்க பலமாக மக்களின் ஆணையைப் பெற்று மீண்டும் சர்வதேச ரீதியாக நாம் எமது பிரச்சனைகளை வெளிப்படுத்தி அதற்கமைய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வோம்.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பலமிக்க சக்தியாக இருந்த நாம் இன்று அத்தகைய பலத்தை இழந்து ஜனநாயக ரீதியிலான பலத்தை வேண்டி நிற்கின்றோம். அத்தகைய பலம் மிக்க சக்தியாக மக்கள் இத் தேர்தலில் எமக்கு ஆணையை வழங்க வேண்டும். ஏனெனில் அடுத்து அமையப் போகும் அரசாங்கம் பலமானதாக அமையாமல் போகலாம். அதற்கு எமது ஆதரவும் தேவைப்படலாம். ஆகவே அதற்கு ஆதரவை நாம் வழங்கலாம். ஆனால் அமைச்சுக்களைப் பெற்றுக் கொள்ள மாட்டோம். அவ்வாறு நாம் வழங்கும் ஆதரவுடன் எமது பிரச்சினக்கான தீர்வையும் வலியுறுத்தி சர்வதேச ஆதரவுடன் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறான நிலையில் இன்று எம் மீது சேறு பூசுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அது தான் அவர்கள் வாக்குக் கேட்பதற்கு பயன்படுத்தும் கொள்கையா? அல்லது சோகமா என்று தெரியவில்லை. மக்களிடத்தே தவறான கருத்துக்களை பல வழிகளிலும் கொண்டு செல்லப் பார்க்கின்றனர். ஆனால் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர்.  எனவே எமது தேசத்தைக் காப்பாற்றி அதனைக் கட்டியெழுப்புவதற்கு தாயகத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் புலத்திலிருக்கின்ற உறவுகளும் எமக்கான ஆணையை வழங்கி  பலம் மிக்க சக்தியாக கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்  என்றார். -

http://www.thinakkural.lk/article.php?local/hmhl4fcqns25347827d1ec6214782ezgwq6c891d4b61a15c9dff296eiftyb#sthash.M7MwVfCf.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.