Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமதாஸ் - மனோகணேசன் நேற்று சந்திப்பு

Featured Replies

ராமதாஸ் - மனோகணேசன் நேற்று சந்திப்பு

தமிழகம் சென்றிருக்கும் மேலக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று புதன்கிழமை இரவு திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்து சிறிலங்கா தமிழர் பிரச்சினை குறித்து விரிவாக உரையாடியுள்ளார்.

குறிப்பாக வடக்கு,கிழக்கு பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்த டாக்டர் ராமதாஸ், சிறிலங்காவின்; வடக்கு,கிழக்கிற்கு அப்பால் பரந்துபட்டு வாழும் வேறுபட்ட தமிழ் சமுதாயப் பிரச்சினைகளை மிகவும் அந்நியோன்யமாக கேட்டறிந்தார்.

இலங்கைப் பிரஜையான தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதும் இதற்கப்பால் தமிழ் வர்த்தகர்கள் மீதான அச்சுறுத்தல், கடத்தல், கப்பம், கொலைகள் பற்றி எடுத்துரைத்த மனோகணேசன், அவருக்கு தலைநகர் வாழ் தமிழ்மக்களின் பிரதிநிதி எனும் வகையில் இவற்றுக்கெதிராக சிவில் கண்காணிப்புக் குழு அமைத்து செயற்பட்டதால் ஏற்பட்டுள்ள உயிருக்கான அச்சுறுத்தல், தலைநகரிலிருந்து குரலெழுப்பிய ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னணி, எதிர்காலத்தில் தமிழகதத்தின் கடமை பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

இதேவேளை, மனோ கணேசன் நாளை வெள்ளிக்கிழமை மறுமலர்ச்சி திராவிடர் கழகத்தலைவர் வைகோவை சந்தித்துப் பேசவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உணர்வை புரியாத மத்திய அரசு - ராமதாஸ் குற்றச்சாட்டு

இலங்கை பிரச்சனையில் தமிழர்களின் உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முல்லை பெரியாறு பிரச்சனையில் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது ஏற்கனவே எதிர்பார்த் ததுதான். உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பை தமிழக அரசுஇ அரசு ஆணையாக வெளியிட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்பிரச் சனைக்கு தீர்வு காண ஒரே வழி நதிகளை நாட்டுமையாக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. மாநில நதிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு ஆணையம் அமைக்க வேண்டும். இது போன்ற அதிகாரம் ஆணையத்திற்கு இருக்க வேண்டும். முல்லைபெரியார் அணை நிலநடுக்கத்தை தாங்கக் கூடிய அளவுக் உள்ளது என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

பிப்ரவரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு 142 அடி உயரம் உயர்த்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அப்போது என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முதல்வர்கள் பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதபோதுஇ அமைச்சர்கள் பேசி என்ன ஆகப்போகிறது. விலைவாசிகளை கட்டுப்படுத்த மத்தியஇ மாநில அரசுகள் இரண்டுமே முயற்சிக்க வேண்டும். கரும்பு விலையை டன்னுக்கு ரூ.1,025 என அறிவித்ததை வரவேற் கிறேன். ஆனால் கரும்பு விவசாயிகள் போதுமான விலை அல்ல என்று கூறுகின் றனர். விவசாயிகள் டன் கரும்புக்கு ரூ. 2000 கொடுக்க வேண்டும்.

இது தொடர்பாக கரும்பு விவசாய பிரதிநிதிகள்இ ஆலை தரப்பினரையும் ஒன்றாக கூட்டி பேசி முடிவு எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய அணுகுமுறையில் மாற்றம் தேவை. இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மற்ற நாடுகளை விட இந்தியா அதிக ஆர்வம் காட்ட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்கிறது இந்தியா. இலங்கை தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்பளித்து செயல்படவேண்டும். இலங்கை தமிழர்கள் என்ன விரும்பு கிறார்கள் என அறிய இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அளவில் நமது வெளியுறவு கொள்கையை செயல்படுத்துகிறார்களா என சந்தேகம் வந்துள்ளது.

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது இலங்கை எந்த நாட்டோடு சண்டை போட தரப்படுகிறது. இவற்றை இலங்கை தமிழர்களை அழித்து ஒழிக்கவே பயன்படுத்துகிறார்கள். இப்படி இலங்கை தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு பயிற்சி தருவது சரியானது தானா? தமிழர்கள் உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

-மாலைச்சுடர்

------------------------------------------------------------------

போர் நிறுத்தம் ஒப்பந்தம் : விடுதலைப் புலிகள் மறுப்பு!

சிறிலங்க அரசுடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர வேண்டும் என்று புலிகள் விரும்புவதாக இலங்கை கண்காணிப்புக் குழுவினர் கூறியதாக வெளியான செய்திகளை விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது!

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக சிறிலங்க அரசிற்கு எந்தவிதமான செய்தியையும் தாங்கள் அளிக்கவில்லை என்றும், தங்களுடைய தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையிலேயே எல்லா செய்திகளும் உள்ளது என்று தாங்கள் தெரிவித்ததாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும், ராணுவ பேச்சாளர் இளந்திரையனும் கூறியுள்ளனர்.

மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உரையாற்றியதற்கு மறுநாள், ஐஸ்லாந்து அயலுறவு அமைச்சகத்தின் இடர் துடைப்பு பிரிவின் தலைவர் அனா ஜோகன்டோடிடர், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தலைமை அதிகாரி ஜோன் ஓஸ்கர் சோல்னஸ், கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் ஆகியோர் கிளிநொச்சியில் தங்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்ததாகவும், அப்பொழுது ஐஸ்லாந்து அதிகாரி கொழும்பிவிற்குத் தெரிவிக்க தகவல் எதுவும் உள்ளதா என கேட்டதாகவும்இ அதற்கு, "தெரிவிக்க வேண்டிய அனைத்தும் எமது தேசியத் தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என தமிழ்ச்செல்வன் அவரிடம் கூறினார் என்றும் கூறியுள்ளனர்.

"சமாதான உடன்படிக்கையைக் கிழித்தெறியாமலேயே அதற்கு ஈமச்சடங்கை கொழும்பு நடத்தியுள்ளதெனவும், எமது நிலைகள் மீது வெளிப்படையாகவே தாக்குதல்களை நடத்துவதன் மூலம் சிறிலங்க அரசு சமாதான உடன்படிக்கையைப் புதைத்துவிட்டது" எனவும் தனது உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

-வெப் உலகம்

PMK wants referendum on Tamil Eelam

Villupuram, Nov 30: Pattali Makkal Katchi (PMK), a constituent of the UPA at the Centre, today demanded that India should press for a referendum in Tamil inhabiting areas of Sri Lanka to know whether they were for a separate nation of Tamil Eelam.

Talking to reporters here, party founder S Ramadoss called for a complete shift in the foreign policy of India towards Sri Lanka. India should try to understand Sri Lankan Tamils' viewpoint and change its policy accordingly.

He charged that policy makers in the Union government were insensitive to the sentiments and emotions of Tamil Nadu people on the Sri Lankan Tamils issue. The training provided by the Centre to Sri Lankan air force personnel would only be used against Tamils in the island, he said.

Terming yesterday's talks between the Chief Ministers of Tamil Nadu and Kerala as a failure, he demanded that the water level in Mullaperiyar dam should be raised to 142 feet as per the Supreme Court verdict.

"The talks between the Ministers of the two states will not produce any solution since the chief ministerial-level talks could not produce anything. It is futile to continue talks with Kerala," he quipped.

He said a separate body should be created for sharing Cauvery water and the responsibility of administrating the dams and irrigation projects on Cauvery should be entrusted with it.

http://www.chennaionline.com/colnews/newsi...NAME=Tamil+Nadu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.