Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமராக ரணில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

Featured Replies

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை காலை சுபநேரமான 10.3க்கு,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கையின் 19ஆவது பிரதமாராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். - See more at: http://www.tamilmirror.lk/152496#sthash.k1FvibfJ.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக பதவியேற்றார் ரணில்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
 
ரணில் விக்கிரமசிங்க நான்காவது தடவையாக பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
 
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com

சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்றார் ரணில் – மகிந்தவும் பங்கேற்றார்

AUG 21, 2015by கி.தவசீலன்in செய்திகள்

ranil-sworns (2)சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்ற காலை புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை 10.03 மணியளவில், ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்றார்.

இந்த நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எனினும் இன்றைய நிகழ்வில் அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறவில்லை. தேசிய அரசாங்கமே அமைக்கப்படவுள்ளதால், அமைச்சர்கள் பதவியேற்பு தாமதமாகியுள்ளது.

ranil-sworns (1)ranil-sworns (2)ranil-sworns (3)

ranil-sworns (4)அதேவேளை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்கவும், ஐதேக பொதுச்செயலர் கபீர் காசிமும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

http://www.puthinappalakai.net/2015/08/21/news/9037

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.