Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனவர்கள் குறித்த நல்ல பதிலை வழங்க கோருகிறார் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தாய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காணாமற்போனவர்கள் குறித்த நல்ல பதிலை வழங்க கோருகிறார் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தாய்! Top News
[Tuesday 2015-08-25 07:00]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களினதும் காணாமல்போனவர்களினதும் குடும்பங்கள் தினமும் வேதனையுடனும் கண்ணீருடனுமே வாழ்ந்து வருகின்றன. அவர்களுக்கு காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் நல்ல முடிவு வரும் என்றே வந்துள்ளதாக மூன்று பிள்ளைகளை இழந்த வாழைச்சேனை, புதுக்குடியிருப்பினை சேர்ந்த யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களினதும் காணாமல்போனவர்களினதும் குடும்பங்கள் தினமும் வேதனையுடனும் கண்ணீருடனுமே வாழ்ந்து வருகின்றன. அவர்களுக்கு காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் நல்ல முடிவு வரும் என்றே வந்துள்ளதாக மூன்று பிள்ளைகளை இழந்த வாழைச்சேனை, புதுக்குடியிருப்பினை சேர்ந்த யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார்.

  

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு 3 ஆம் கட்டமாக தமது விசாரணைகளை மேற்கொண்டு மூன்றாவது தினமான நேற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடத்தியது. இந்த விசாரணையில் கருத்து தெரிவித்த வாழைச்சேனை, புதுக்குடியிருப்பினை சேர்ந்த யோகமலர், நான் புதுக்குடியிருப்பு, வாழைச்சேனையை சேர்ந்தவர். எனது மூன்று மகன்கள் இல்லாமல் போய்விட்டனர். ஒரு மகன் வாகரை கண்டலடியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தவர் 1994ம் ஆண்டு காணாமல் போனார். யார் கடத்திக்கொண்டு சென்றார்கள் என்பது தெரியாது.

அக்காலப்பகுதியில் இராணுவத்தினரும் இருந்தார்கள் விடுதலைப் புலிகளும் இருந்தார்கள் யார் கொண்டு போனார்கள் என்று தெரியாது. இதுவரையில் அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. கண்டலடி தரவைப்பகுதியில் வயல் வேலைசெய்து கொண்டிருந்த போது எனது மற்றைய மகன் காணாமல் போனார்.அவருக்கு இதுவரையில் என்ன நடந்தது என்பது கூட தெரியாத நிலையே இருக்கின்றது. இதுவரையில் நான் பொலிஸ் நிலையத்திலும் முறையிடவில்லை. மரணச் சான்றிதழும் பெறவில்லை.

எனது மூன்றாவது மகன் 2006ம் ஆண்டு புதுக்குடியிருப்பில் உள்ள ஸ்ரூடியோவில் வேலைசெய்து விட்டு வரும்போது இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.நான் எனது மூன்று மகன்களை இழந்து நிற்கின்றேன். நான் கண்ணீரோடும் துன்பத்தோடுமே எனது காலத்தினை கழித்து வருகின்றேன். எனக்கு ஒரு நல்ல முடிவினை இந்த ஆணைக்குழு பெற்றுக்கொடுக்க வேண்டும். இங்கு வந்துள்ளவர்கள் பலர் மகனை கணவனை தொலைத்தவர்களும் கடத்தப்பட்டுள்ளவர்களும் வந்துள்ளார்கள். அவர்களுக்கு நல்லமுடிவினை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

என்னைப்போல் எத்தனை தாய்மார்கள் உள்ளார்கள். அவர்களுக்கு இந்த ஆணைக்குழு சிறந்த தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என நம்பியே வந்துள்ளேன். நான் மூன்று பேரை இழந்துள்ளேன்.நான் மட்டும் இழக்கவில்லை. இன்று எத்தனையோ பேர் இங்கு வந்துள்ளார்கள்.கண்ணீரோடும் துன்பத்தோடும் உள்ளார்கள். கடத்திச் செல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக மக்கள் வேதனையுடனும் கண்ணீருடனும் வாழ்கின்றனர்.” என்று தெரிவித்தார்.

நேற்று காலை 9 மணி தொடக்கம் 05 மணி வரை நடைபெற்ற காணாமல் போனோர்களை கண்டறியும் ஜனாபதி ஆணைக்குழு அமர்வில் சுமார் 175 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக் குழு தெரிவித்துள்ளது. இதன்போது கோறளைப் பற்று வடக்கு வாகரை, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று என 5 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 255 பேருக்கு இந்த அமர்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

 

missing-relatives-250815-seithy%20%281%2

 

 

missing-relatives-250815-seithy%20%282%2

 

 

missing-relatives-250815-seithy%20%283%2

 

 

missing-relatives-250815-seithy%20%284%2

 

 

missing-relatives-250815-seithy%20%285%2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.