Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லால்காந்தவை பின்கதவால் நாடாளுமன்றம் அனுப்புகிறது ஜேவிபி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லால்காந்தவை பின்கதவால் நாடாளுமன்றம் அனுப்புகிறது ஜேவிபி!
[Sunday 2015-08-30 09:00]
ஜே.வி.பி.யின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னே பதவி விலகியவுடன் ஏற்படும் வெற்றிடத்துக்கு கே.டி.லால்காந்த நியமிக்கப்படவுள்ளார். ஜே.வி.பி. கட்சியின் தேசியப்பட்டியல்  உறுப்பினராக  முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத்சந்திர மாயாதுன்னே நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னே பதவி விலகியவுடன் ஏற்படும் வெற்றிடத்துக்கு கே.டி.லால்காந்த நியமிக்கப்படவுள்ளார். ஜே.வி.பி. கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத்சந்திர மாயாதுன்னே நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

  

எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்க அவர் விரும்பவில்லை என்று தெரியவருகின்றது. இதன் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் அவர், பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்துக்கு ஜே.வி.பி.யின் தொழிற்சங்கத் தலைவர் லால்காந்த நியமிக்கப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லால்காந்த, கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது மேல்மாகாண சபைக்குத் தெரிவாகியிருந்தார். எனினும் தொடர்ச்சியாக மாகாண சபை அமர்வுகளுக்குச் சமூகமளிக்காத அவர், அண்மையில் தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார். லால்காந்த கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டே மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்ததாக அப்போது தகவல்கள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=139384&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.