Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: நாயாக மாறிய ஆடு!

 

 
27chskomasalapic

கம்ப்ரியா நாட்டைச் சேர்ந்த அலி வாக்ஹன், ஆதரவின்றி கிடந்த ஓர் ஆட்டுக்குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்தார். மெர்லி என்று பெயரிட்டு தன் நாய் ஜெஸ்ஸுடன் சேர்த்து வளர்த்து வந்தார். நாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி, தன்னையும் நாயாக நினைத்துக்கொண்டது. ஆட்டுக்கு வைத்த புல், இலைதழைகளைச் சாப்பிடுவதில்லை. நாய்க்கு வைக்கும் பாத்திரத்தில் உள்ள உணவைத்தான் சாப்பிடுகிறது. வீட்டுக்கு வெளியே தங்குவதில்லை. நாய் வசிக்கும் மெத்தையில்தான் உறங்குகிறது. நாயைப் போலவே கழுத்தில் கயிற்றைக் கட்டி வெளியே அழைத்துச் செல்வதை விரும்புகிறது. மொத்தத்தில் உணவு, பழக்க வழக்கம் அனைத்திலும் நாயாகவே நடந்துகொள்கிறது. “இந்த ஆட்டுக்குட்டி நாயை பின்பற்றும் என்று நினைக்கவே இல்லை. நாயும் இதைப் போட்டியாக நினைக்காமல் விட்டுக் கொடுத்து விடுகிறது. இரண்டும் ஒன்றாகவே திரிகின்றன. உடல் முழுவதும் கம்பளி இருந்தாலும் நாயைப் போல படுக்கையில்தான் உறங்குகிறது. ஆட்டின் பழக்கத்தை மாற்ற நினைத்துப் பல முயற்சிகளை மேற்கொண்டேன். எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதனால் இப்போது ஒரு ஆட்டை வாங்கியிருக்கிறேன். இந்த ஆட்டுடன் மெர்லியையும் சேர்ந்து வெளியே அனுப்புகிறேன். மெர்லி சுற்றிவிட்டு, வீட்டுக்கு வந்து நாயின் உணவைத்தான் சாப்பிடுகிறது. காலப்போக்கில் இந்தப் பழக்கம் மாறும் என்று காத்திருக்கிறேன்” என்கிறார் அலி வாக்ஹன்.

ஆடு, நாயாக முடியுமா?

நியூசிலாந்தைச் சேர்ந்த கேம்ப்பெல் தீவில் இருக்கிறது உலகிலேயே தனிமையான மரம். இங்கிருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ள ஆக்லாந்து தீவில்தான் இன்னொரு மரத்தைப் பார்க்க முடியும். உலகிலேயே மிகவும் கடினமான பகுதி கேம்ப்பெல் தீவுதான். எப்போதும் இங்கே வலுவான காற்று வீசிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு 600 மணி நேரம்தான் சூரிய ஒளி இருக்கும். ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே மழை இருக்காது. இது வாழத் தகுதி இல்லாத இடம். ஆராய்ச்சியாளர்கள் அரிதாக இங்கே வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இந்தத் தீவு பாலைவனமாக மாறி வருகிறது. இங்கே மரங்கள் வளர்வதற்கான சூழல் இல்லை. புற்கள் மட்டுமே காணப்படுகின்றன. இந்தத் தீவில் இருக்கும் ஒரே மரம் சிட்கா ஸ்ப்ரூஸ்தான். நியூசிலாந்து கவர்னர் ஒருவர் 1901-1907-ம் ஆண்டுக்குள் இங்கே மரங்களை நட்டு, தீவைச் சோலையாக மாற்ற எண்ணியிருக்கிறார். அப்போது நட்ட மரங்களில் இந்த மரமே புயல், மழை எல்லாவற்றையும் தாக்குப் பிடித்து, நூறு ஆண்டுகளையும் கடந்திருக்கிறது! இது உயரமான மரமாக இல்லை. ஒரு காலிப்ளவர் வடிவில் இருக்கிறது. இப்படித் தன்னை மாற்றிக்கொண்டதால்தான் தப்பியிருக்கிறது. 1958-ம் ஆண்டு இங்கே வானிலை ஆய்வுக் கூடம் ஒன்று நிறுவப்பட்டது. தானியங்கி நிலையம் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மட்டும் ஆட்கள் வருவார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இந்த மரத்தை யாரும் வெட்டவில்லை. உலகிலேயே தனியாக இருக்கும் மரம் என்று அறிவித்துவிட்டனர்.

தனிமையில் வாழும் மரம்!

http://tamil.thehindu.com/world/article22863453.ece

  • Replies 1k
  • Views 150.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: பணம் கொடுக்காத பெற்றோரை கொல்ல துணிந்த மகன்

 

 

28chskomasalapic

ரஷ்யாவைச் சேர்ந்த 22 வயது இளைஞரைக் கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை. கைதுக்கான காரணத்தை அறிந்ததும் உலகமே அதிர்ந்துவிட்டது. இளைஞரின் குடும்பம் வசதியானது. இவருக்கு ஒரு தங்கையும் உண்டு. தன் செலவுக்குப் பெற்றோர் பணம் கொடுப்பதில்லை என்ற வருத்தம் இளைஞருக்கு இருந்திருக்கிறது. அதனால் அம்மா, அப்பா, தங்கையைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். வீட்டை இருட்டாக்கி, கட்டை யால் தாக்கிக் கொல்வதற்கு முதல்முறை தயாரானார். ஆனால் விருந்தினர்கள் வந்தவுடன் அன்று அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது முறை தேநீரில் விஷம் கலந்து மூவருக்கும் கொடுத்தார். ஒரு துளி சுவைத்தவுடன் இளைஞரின் அப்பா நன்றாக இல்லை என்று மொத்த தேநீரையும் கொட்டிவிட்டார். மூன்றாவது முறை மெர்குரி மீட்டரை காரில் வைத்து, கொல்லும் முயற்சியில் இறங்கினார். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தன்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தவர், தொழில்முறை கொலைகாரர்களைச் சந்தித்தார். தன் குடும்பத்தாரைக் கொலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விஷயம் எப்படியோ காவல் துறைக்குத் தெரிந்துவிட்டது.

அடுத்த சந்திப்பில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், கொலைகாரர்களைப்போல் இளைஞரைச் சந்தித்தனர். தன்னுடைய வீடு எப்படி இருக்கும், எங்கே கண்காணிப்பு கேமரா இருக்கிறது, எந்த நேரத்தில் வந்தால் கொலை செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றெல்லாம் விளக்கமாகக் கூறினார் இளைஞர். இதைச் சரியாகச் செய்து முடித்தால் 35 லட்சம் ரூபாய் தருவதாகவும் சொன்னார். காவல் துறையினர் ஒப்புக்கொண்டனர். .

இளைஞரின் பெற்றோரைச் சந்தித்து, விஷயத்தைக் கூறினர். ஆனால் பெற்றோர் இதை நம்ப மறுத்தனர். கொலை செய்யும் அளவுக்குத் தங்கள் மகன் மோசமானவன் இல்லை என்று சொல்லிவிட்டனர். உடனே காவல் துறை ஒரு நாடகத்துக்கு ஏற்பாடு செய்தது. இளைஞர் சொன்ன நாளில், சொன்ன நேரத்தில் மூவரும் கொலை செய்யப்பட்டதுபோல் ஒப்பனை செய்துகொள்ள வேண்டும் என்று முடிவானது. அதற்குப் பெற்றோரும் ஒப்புக்கொண்டனர். குறிப்பிட்ட நாளில் மூவரும் வெவ்வேறு அறைகளில் கழுத்தில் வெட்டுப்பட்டு, ரத்தம் வெளியேறியதுபோல் ஒப்பனை செய்யப்பட்டனர். படங்களும் எடுக்கப்பட்டன. பிறகு இளைஞரைச் சந்தித்தார்கள் காவல் துறையினர். குடும்பத்தினரும் இளைஞருக்குத் தெரியாமல் அந்த இடத்தில் பதுங்கி இருந்தனர். படங்களைப் பார்த்த இளைஞர் மகிழ்ந்தார். தாம் சொன்னபடியே விரைவில் சொத்துகளை விற்று, 35 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிடுவதாகக் கூறினார். இதைக் கேட்டதும் இளைஞரின் குடும்பம் அதிர்ந்துபோனது. காவல் துறை உடனே இளைஞரைக் கைது செய்தது.

“விசாரணையில் எங்கள் மகன் சொன்ன தகவல்கள் இன்னும் அதிர்ச்சியளித்தன. எங்கள் குழந்தைகளை இயல்பாகத்தான் வளர்த்தோம். தேவையான சுதந்திரம் கொடுத்தோம். கட்டுப்பாடு விதிக்க வேண்டிய விஷயங்களுக்குக் கட்டுப்பாடு விதித்தோம். ஏராளமான அன்பைச் செலுத்தினோம். எப்படிப் பெற்றவர்களையே கொலை செய்யும் அளவுக்கு மாறினான் என்பது புரியவில்லை. ஒரு பெற்றோருக்கு இதை விடத் தண்டனை என்ன இருந்துவிட முடியும்?” என்கிறார் இளைஞரின் அப்பா.

குற்றவாளியான இளைஞருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

பணம் என்றால் பெற்றோரையும் கொல்லச் சொல்லுமா?

http://tamil.thehindu.com/world/article22875004.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: துப்பாக்கிகளுடன் நடந்த பிரார்த்தனை

 

02chskomasalapic

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில், துப்பாக்கிகளைக் கையில் ஏந்தி, குண்டுகளைக் கிரீடமாக அணிந்துகொண்டு பிரார்த்தனை நடைபெற்றிருக்கிறது! ஃப்ளோரிடாவில் உள்ள பள்ளியில் குண்டு வெடித்து பலர் உயிர் இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அமெரிக்கர்கள் மீளவில்லை. அதற்குள் தேவாலயத்தில் அதே வகை AR–15 ரைஃபிள்களை எல்லோரும் கையில் பிடித்தபடி பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ‘அமைதி மற்றும் ஒற்றுமை சரணாலய தேவாலயம்’ என்ற பெயரை வைத்துக்கொண்டு, பாதிரியார் சியான் மூன், துப்பாக்கி இன்றி யாரும் இந்தப் பிரார்த்தனைக்கு வரக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்! திருமண ஆடைகளை அணிந்துகொண்டு, தலையில் கிரீடமும் கையில் துப்பாக்கியையும் பிடித்துக்கொண்டு இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஏராளமான ஜோடிகள் கலந்துகொண்டனர். இதைக் கேள்விப்பட்டவுடன் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் தேவாலய வாயிலில் கூடி, எதிர்ப்புக் கோஷங்களை முழங்கினார்கள். “சாத்தானை விரட்டியடிக்கவே இந்தத் துப்பாக்கிப் பிரார்த்தனை. ஒவ்வொருவருக்கும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கினோம். இதைக் கொடுத்து, கடையில் இருந்து துப்பாக்கிகளை வாங்கிக்கொண்டனர். பார்ப்பதற்கு பயங்கரமான துப்பாக்கிகளாகத் தெரிந்தாலும், இவை அனைத்தும் குண்டு போடாத துப்பாக்கிகள். அதைப் பரிசோதித்த பிறகே தேவாலயத்துக்குள் அனுமதித்தோம். அதனால் ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறது தேவாலயம் தரப்பு. “இவ்வளவு பேர் ஓரிடத்தில் மிகப் பெரிய துப்பாக்கிகளுடன் இருப்பதைப் பார்க்கும்போது, அது சிலருக்கு ஆர்வத்தைத் தூண்டலாம் என்பது கூடவா இவர்கள் யாரும் உணரவில்லை? அன்பே உருவான இறைவனை வழிபடும் தேவாலயத்துக்குள் எதற்கு இந்தத் துப்பாக்கி?” என்று கேட்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

தேவாலயம் இப்படிச் செய்யலாமா?

 

இந்தோனேசியாவைச் சேர்ந்த அக்மல் என்ற 14 வயது சிறுவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டைப் போடுவதாகச் சொல்கிறார்கள். இந்த விஷயத்தை யாரும் நம்பவில்லை. சமீபத்தில் மருத்துவமனைக்குச் சென்றார் அக்மல். அங்கே மருத்துவர்களின் முன்னிலையில் இரண்டு முட்டைகளை வாய் வழியே துப்பினார். மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். உடனே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். ஒரு முட்டை இருப்பது தெரிந்தது. “மனித உடலுக்குள் இருந்து முட்டை வருவது சாத்தியமே இல்லை. மலக்குடலிலிருந்து எப்படி முட்டை வரும்? முழுமையாக முட்டையை முழுங்கினால் தவிர வேறு வழியில்லை. முழு முட்டையும் மலக்குடல்வரை எப்படி உடையாமல் இருக்கும் என்பதும் புரியவில்லை” என்கிறார் மருத்துவர். “அவன் ஒருநாளும் முட்டைகளை விழுங்கியதில்லை. ஒரு தடவை இட்ட முட்டையை உடைத்துப் பார்த்தபோது முழுவதும் மஞ்சள் கருவாக இருந்தது. இன்னொரு முறை முட்டையை உடைத்துப் பார்த்தபோது முழுவதும் வெள்ளைக் கருவாக இருந்தது” என்கிறார் அக்மலின் தந்தை. அக்மலின் முட்டைகளை ஆய்வு செய்ததில், அது கோழி முட்டை என்று தெரியவந்துள்ளது.

மனிதனுக்குள் எப்பட கோழி முட்டை?

http://tamil.thehindu.com/world/article22903869.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: விநோத விடுதி!

03chskomasalapic

சிங்கப்பூரில் இருக்கும் மாரியட் டாங் ப்ளாசா தங்கும் விடுதியில் வித்தியாசமான கோரிக்கையை வைக்கிறார்கள். அங்கே தங்குவதற்கு அனுமதி கேட்கும்போதே, தங்கும் அறையின் படுக்கைக்கு அருகே ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் நடித்த ஜெஃப் கோல்ட்ப்ளம் நடிகரின் படம் வைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். அதற்குச் சம்மதிப்பவர்களுக்கே விடுதியை அளிக்கிறார்கள். தங்க வருபவர்கள் ஆச்சரியமடைகிறார்கள். அறைக்குள் நுழைந்தவுடன் சுவர், படுக்கைக்கு மேல், தொலைக்காட்சி பெட்டி, தலையணை உறை, குளியலறை என்று எங்கு பார்த்தாலும் ஜெஃப் வெவ்வேறு விதமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறார்! ‘ஜெஃப் கோல்ட்ப்ளம் எலியட்டை வரவேற்கிறார்’ என்று தங்குபவரின் பெயருடன் வரவேற்பு வாசகமும் வைக்கப்பட்டிருக்கும். “எங்கள் விடுதிக்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். அவர்களின் அத்தனை தேவையையும் எதிர்பார்ப்பையும் வசதியையும் நாங்கள் வழங்கிவிடுவோம். வாழ்நாள் முழுவதும் விடுதியை நினைவில் வைத்துக்கொள்வதற்காக இந்தப் படங்களை அறை முழுவதும் வைத்திருக்கிறோம்” என்கிறார் விடுதியின் இயக்குநர்களில் ஒருவரான டேனியல் பர்ஸ்டீன்.

விநோத விடுதி!

 

இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது ஜுனைத் அஹமது, மாடலாக இருக்கிறார். தினமும் 3 மணி நேரம் செலவு செய்து, 200 ஒளிப்படங்களை எடுக்கிறார். அவற்றிலிருந்து மிகச் சிறந்த சில படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். ‘செல்ஃபி கிங்’ என்று அழைத்துக்கொள்ளும் இவரை, 50 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். வாரம் ஒருமுறை ஃபேஷியல் செய்கிறார், புருவங்களைத் திருத்திக்கொள்கிறார். தினமும் விதவிதமாக ஒப்பனை செய்துகொள்கிறார். கடந்த ஆண்டு மட்டும் பற்கள், புருவங்கள், உதடு, கண்கள், தலை என்று அழகுக்காகப் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார். “சமூக வலைதளங்களில் தொடர்ந்து நாம் கவனிக்கப்பட வேண்டும் என்றால் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும். ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் போட்ட முதல் நிமிடத்தில் 100 பேர் விருப்பக்குறி இட்டிருப்பார்கள். என் ஸ்மார்ட்போனில் விருப்பக்குறியிடுபவர்களின் தகவல் வந்துகொண்டே இருக்கும். ஒரு படம் வெளியிட்டு குறைந்தது 500 விருப்பக்குறிகளாவது இருந்தால்தான் அந்தப் படத்தைத் தொடர்ந்து வைத்திருப்பேன். அதைவிடக் குறைவாக இருந்தால் படத்தை நீக்கிவிடுவேன். ஓராண்டுக்கு முன்புவரை நான் இயற்கையாகவே இருந்தேன். ஆனால் சமூகவலைதளங்கள் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் விளைவால் இப்படி என்னை மேம்படுத்திக்கொண்டேன். பெரும்பாலானவர்கள் என் முயற்சிகளைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு மாற்றத்துக்கும் நிறைய உழைப்பு, நேரம், பணம், வலி எல்லாம் தேவைப்படுகிறது. இதைப் புரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். என்னை விமர்சிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். நான் இயற்கையாக இருந்தபோது பள்ளியிலும் கல்லூரியிலும் என் உருவத்தைக் கிண்டல் செய்தவர்களிடம் உங்கள் விமர்சனத்தைக் காட்டுங்கள்” என்கிறார் ஜுனைத் அஹமது.

அளவுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ஆபத்து!

http://tamil.thehindu.com/world/article22916678.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நம்பிக்கை மோசடி செய்யலாமா?

 

 
04chkanjapan

ஜப்பானைச் சேர்ந்த 28 வயது தொழிலதிபர் மிட்சுடோகி ஷிகெடா. வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டு வருகிறார். இந்திய வாடகைத் தாய் மூலம் பெற்ற 2 குழந்தைகள் இவருக்கு ஏற்கெனவே இருக்கின்றனர். 2014-ம் ஆண்டு தாய்லாந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற, குழந்தை உருவாக்கும் மையத்தைத் தொடர்புகொண்டார். நேரில் சென்று விந்தணுவைக் கொடுத்தார். திடீரென்று ஒரு நாள் தாய்லாந்து குழந்தை உருவாக்கும் மையத்தில் ஊழல் நடைபெறுவதாக அறிந்தார். உடனே தாய்லாந்துக்கு வந்து விசாரித்தார். அதில் இவருக்கு 17 குழந்தைகள் பிறந்திருப்பதைக் கண்டுபிடித்தார். தீவிரமாக ஆராய்ந்ததில் ஒரு குடியிருப்பில் 9 குழந்தைகள், ஒரு பெண்ணால் பராமரிக்கப்பட்டு வந்தன. குடியிருப்பு மிகவும் மோசமாக இருந்தது. குழந்தைகள் 9 பேரையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் அவரது குழந்தைகள்தான் என்பது உறுதியானது. இன்னும் சில இடங்களில் வசித்த மேலும் 4 குழந்தைகளையும் கண்டுபிடித்தார். குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒவ்வொரு வாடகைத் தாய்க்கும் 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை கொடுத்தார். இதில் 4 தாய்கள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்தார்கள். அந்த 13 குழந்தைகளையும் சட்டப்படி ஜப்பானுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். குழந்தை உருவாக்கும் மையங்கள், யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை அதிகமாக உருவாக்கி விற்கின்றன என்ற குற்றம் சுமத்தினார்.

“மிட்சுடோகி கோடீஸ்வரர். ஒவ்வொரு வருஷமும் 10 முதல் 15 குழந்தைகள் வரை வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார். அவர் இறக்கும்வரை குழந்தைகளை உருவாக்கித் தரும்படி விந்தணுவைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் நாங்கள் இத்தனை குழந்தைகளை உருவாக்கினோம். மற்றபடி நாங்கள் குழந்தைகளைக் கடத்தும் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவருக்கு அரசியலில் ஆர்வம் அதிகம். எதிர்காலத்தில் தேர்தலில் நிற்கும்போது கணிசமான ஓட்டுகள் தன்னுடைய பெரிய குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்” என்கிறார் குழந்தை உருவாக்கும் மையத்தின் நிறுவனர் மரியம் குகுனஷ்விலி.

“மிட்சுடோகி பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அதனால் அவருக்கும் குழந்தைகள் அதிகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த எண்ணைத்தை குழந்தை உருவாக்கும் மையம் தவறாக பயன்படுத்திக்கொண்டது. மையத்தின் மீது தவறில்லை என்றால் குழந்தைகள் உருவானதையோ, பிறந்ததையோ ஏன் தந்தைக்கு தெரிவிக்கவில்லை என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இதனால் நீதிமன்றம் குழந்தைகளை மிட்சுடோகியிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டது. 13 குழந்தைகளுக்கும் டோக்கியோவில் மிகச் சிறந்த பங்களா தயாராக இருக்கிறது. இப்போது மீதி 4 குழந்தைகளையும் கண்டுபிடித்துவிட்டோம். அவர்களையும் ஒப்படைத்துவிடுவோம்” என்கிறார் மிட்சுடோகியின் வழக்கறிஞர்.

தன்னையும் தன் குழந்தைகளின் அடையாளத்தையும் வெளியிட வேண்டாம் என்று ஜப்பானிய ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார் மிட்சுடோகி. ஆனாலும் கஸ்டம்ஸ் துறையிலிருந்து ஒன்றிரண்டு படங்கள் வெளியாகிவிட்டன.

நம்பிக்கை மோசடி செய்யலாமா?

http://tamil.thehindu.com/world/article22923555.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மகளை 11 ஆண்டுகளாக தேடும் தந்தை

06chskomasalapic

இங்கிலாந்தைச் சேர்ந்த கேட் மெக்கனின் முதல் மகள் மெட்லின் 4 வயதில் காணாமல் போய்விட்டார். 11 ஆண்டுகள் கடந்த பின்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் காலம் கரைந்தாலும் கேட் இன்னும் நம்பிக்கையுடனும் துயரத்துடனும் தேடிக்கொண்டிருக்கிறார்.

“கடந்த 11 ஆண்டுகளாகத் துயரமான வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறேன். நண்பர்கள் குடும்பத்துடன் விடுமுறைக்காகப் போர்ச்சுகல் சென்றோம். அங்கே ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தோம். மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மகள் திடீரென்று காணாமல் போனாள். தேடாத இடமில்லை. கேட்காத ஆட்கள் இல்லை. ஒரு பலனும் கிடைக்கவில்லை. போர்ச்சுகல் காவல் துறை விபத்தில் மகள் இறந்துவிட்டாள் என்று சொல்லிவிட்டது. ஆனால் அதற்கான சாட்சி எதையும் காட்டவில்லை. அதனால் எங்களால் நம்ப முடியவில்லை. இங்கிலாந்து காவல் துறை மூலம் விசாரித்தபோது, யாரோ ஒருவர் எங்கள் மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. எங்களுக்கு நம்பிக்கை வந்தது. நாங்களே பணம் கொடுத்து தேடச் சொன்னோம். மகள் தொலைந்ததிலிருந்து என்னால் ஒருநாள் கூட நிம்மதியாகத் தூங்க முடிந்ததில்லை. எங்கே இருப்பாள், எப்படி இருப்பாள் என்ற சிந்தனையிலேயே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறேன்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பிறந்த நாட்கள், அன்னையர் தினம் போன்ற சிறப்பு நாட்களில் என் துயரம் பல மடங்காக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கடந்த மாதம் எங்களுடைய இரட்டைப் பெண் குழந்தைகளுக்குப் பிறந்தநாள். இந்த மாதம் என்னுடைய 50-வது பிறந்த நாள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த நாட்களில் என்னால் அப்படி இருக்க முடியவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று எவ்வளவோ பேர் வருகிறார்கள். ஆறுதல் கூறுகிறார்கள். துக்கத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. அவளின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இப்படி வளர்ந்திருப்பாள் என்று டிஜிட்டலில் உருவத்தை உருவாக்கி வருகிறேன். இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம்.

இன்னும் ஒன்றரைக் கோடி ரூபாய் கொடுத்து, நானும் கணவர் ஜெர்ரியும் தேடுதலைத் தொடரச் சொல்லியிருக்கிறோம். என் மகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறேன். மகள் தொலைந்த நிகழ்ச்சி எங்களுக்குத்தான் முக்கியமானது. மற்றவர்களை இந்தப் புத்தகம் ஈர்க்குமா என்று தெரியாது. ஆனாலும் இந்தப் புத்தகம் படிக்கும் யார் மூலமாவது மகள் எங்களுக்கு மீண்டும் கிடைத்து விடுவாள் என்ற காரணத்துக்காகவே புத்தகத்தை வெளியிட்டேன். இதுவரை இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனாலும் மகள் இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் உயிருடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் எங்களைவிட்டுப் போகவில்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என் மகளின் படத்தைக் காட்டி, இந்தக் குழந்தையைப் பார்த்தீர்களா என்று இன்றுவரை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய விடா முயற்சியும் நம்பிக்கையும் பிரார்த்தனையும் விரைவில் மகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறேன்” என்கிறார் கேட் மெக்கன்.

இந்தத் தாயின் துயரம் விரைவில் மறையட்டும்…

http://tamil.thehindu.com/world/article22940089.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: சமூக அவலம்

 

 
htyupng

வியட்நாமின் வடக்கு பகுதியில் கருக்கலைப்புகள் மிக அதிகமாக நடந்து வருகின்றன. ஆண்டுக்கு 3 லட்சம் கருக்கலைப்புகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. இதில் உலக அளவில் 5-வது இடத்திலும் ஆசிய அளவில் முதல் இடத்திலும் இருக்கிறது வியட்நாம். பெரும்பாலான கருக்கலைப்புகள் சமூக அழுத்தங்களால்தான் நிகழ்த்தப்படுகின்றன. திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகிவிடுவதால் 20 முதல் 30 சதவீத கருக்கலைப்புகள் நிகழ்கின்றன. சிலர் மிக இளம் வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பதாலும் கருக்கலைப்பு செய்கின்றனர். கருக்கலைப்பு தவறு என்று நினைப்பவர்களும் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களும் சமூகத்துக்குப் பயந்து, போலித் திருமணத்தைச் செய்துகொள்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த போலித் திருமணங்கள், இன்று மிகப் பெரிய தொழிலாக வளர்ந்துவிட்டது. அவரவர் வசதிக்கு ஏற்ப, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப போலித் திருமணங்கள் நடத்திக் கொடுக்கப்படுகின்றன. மாப்பிள்ளை, அவரின் பெற்றோர், உறவினர்கள், விருந்தினர்கள் என்று அனைவருமே போலியானவர்கள். போலி மாப்பிள்ளைகள் சில மாதங்களிலிருந்து வருடங்கள்வரை கணவனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். வெளியுலகம் இந்த மாப்பிள்ளை நிஜம் என்று நம்பிக்கொண்டிருக்கும், குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு கருத்து வேற்றுமையால் பிரிந்துவிட்டதாகச் சொல்லி, போலி மாப்பிள்ளைகளை அனுப்பி வைத்துவிடுகிறார்கள். இவர் அடுத்து வேறு யாருக்காவது போலி மாப்பிள்ளையாக நடிக்கச் சென்றுவிடுவார்.

“நான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் என் காதலன் ஓடிவிட்டான். அம்மாவுடன் கருக்கலைப்பு மையத்துக்குச் சென்றேன். 5 மாதக் குழந்தையைக் கலைக்க என் அம்மா சம்மதிக்கவில்லை. அதனால் போலித் திருமணம் செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். திருமணம் ஆகாமல் குழந்தை உண்டாவதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் எங்கள் சமூகத்தில் மிக மோசமாகப் பார்க்கப்படுகிறது. அதைத் தாங்கும் சக்தி இல்லாததால், நாங்கள் இந்த முடிவை எடுக்கிறோம். விளம்பரத்தைப் பார்த்து ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொண்டேன். போலி மாப்பிள்ளையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, கட்டணத்தையும் செலுத்தினேன். திருமண விழாவை இலவசமாகச் செய்துகொடுத்தனர். மகன் பிறந்தான். என் அம்மா தன் பேரனை எல்லோரிடமும் மகிழ்ச்சியாகக் காட்டினார். ஓராண்டுக்குப் பிறகு அவர் சென்றுவிட்டார். எங்களைப் பொறுத்தவரை 3 லட்சம் ரூபாய்க்குள் எந்த அவமானத்தையும் சந்திக்காமல் ஒரு குழந்தையைப் பெற்று, நன்றாக வளர்த்து வருகிறோம். இனி தனியாக வளர்ப்பதில் சிரமமில்லை” என்கிறார் வான் தீன்.

“போலித் திருமணச் சேவையில் 1,000 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் போலித் திருமணங்கள்தான் நடந்தன. ஆனால் இந்த ஆண்டு மாதத்துக்கு 15 போலித் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை அவரவர் வசதிக்கு ஏற்ப கட்டணங்களை வைத்திருக்கிறோம். சிலர் மிகவும் ஆடம்பரமாக நடத்த விரும்பினால், அவர்களுக்குத் தனிக் கட்டணம். நாங்கள் மக்களுக்கு உதவி செய்வதற்கே போலித் திருமணச் சேவையில் இறங்கியிருக்கிறோம். இதில் சட்டத்துக்குப் புறம்பான எந்தக் காரியத்திலும் நாங்கள் ஈடுபடுவதில்லை. இதுவரை வாடிக்கையாளர்கள் எங்கள் மீது குறை சொன்னதில்லை. எல்லோரும் போலித் திருமணத்தை விரும்புகிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட பெண்கள், நாட்டின் வேறு பகுதிகளுக்குச் சென்று வாழ ஆரம்பிக்கிறார்கள்” என்கிறார் போலித் திருமணச் சேவை மையத்தை நடத்தும் நுகுயென் வான் தியன்.

சமூக அவலம்..!

http://tamil.thehindu.com/world/article22956445.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அரசியல்வாதிகளை தண்டிக்கும் மக்கள்

 

 
mayor-in-stocks2

பொதுவாக அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யாவிட்டால், அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை எதுவும் அளிப்பதில்லை. அடுத்த தேர்தலில் மக்கள் தோற்கடித்தால்தான் உண்டு. ஆனால் பொலிவியாவின் வட பகுதியில் ஒழுங்காகப் பணியாற்றாத அரசியல்வாதிகளுக்கு, மக்கள் பாரம்பரிய முறைப்படி தண்டனை அளித்துவருகிறார்கள். சான் புனவென்ச்சுரா என்ற நகரத்தின் மேயராக இருக்கிறார் ஜாவியர் டெல்காடோ. இவரது பணி மக்களுக்குத் திருப்தியாக இல்லை. இரண்டு கம்பங்களுக்கு இடையே ஓர் அகலமான பலகையை இணைத்து, அதில் துளைகள் போட்டு வைத்திருக்கிறார்கள். நிலத்தை விட்டுச் சற்று மேலே இருக்கும் இந்தப் பலகையின் துளைகளுக்குள் கீழே அமர்ந்தவாறு கால்களை நுழைத்துக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். பாரம்பரியமான இந்தத் தண்டனை, இன்றளவும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது. மேயர் மீது மிகுந்த கோபத்தில் இருந்த மக்கள், அவருக்கும் அந்தத் தண்டனையை விதித்தனர். ஒரு மணி நேரம் பலகையில் கால்களை நுழைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மேயர். இந்தக் காட்சியைத் தென் அமெரிக்க ஊடகங்களும் சமூக வலைதளங்களும் உலகம் முழுவதும் பரப்பிவிட்டன.

பிப்ரவரி 25-ம் தேதி மேயர் ஒரு பாலத்தைத் திறந்து வைப்பதற்காக வந்தார். வழியில் மக்கள் கூடி நின்றனர். அந்த விழாவில் பங்கேற்க விடாமல், தாங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளும்படி கூறினர். “எனக்கு எதற்காகத் தண்டனை என்பதை யாரும் விளக்கவில்லை. என் தரப்பு நியாயத்தையும் அவர்கள் கேட்கவில்லை. மக்களிடம் எதிர்த்து வாதிடுவதைவிட, தண்டனை பெற்றுச் செல்வதுதான் அந்தச் சூழலுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை ஏற்றுக்கொண்டேன்” என்கிறார் மேயர்.

‘‘மேயர் பொய் சொல்கிறார். இவரைப் போன்று மிக மோசமான மேயரை நாங்கள் சந்தித்ததில்லை. இவர் பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளில், மூன்றாவது முறையாக இந்தத் தண்டனையைப் பெற்றிருக்கிறார். பதவியேற்ற சில மாதங்களிலேயே அவர் நடவடிக்கை சரியில்லாததால், தண்டனை அளிக்கப்பட்டது. சிறிது காலத்துக்குப் பிறகு, 2 மாதங்கள் இந்த நகரை விட்டுச் சென்றுவிட்டார். பணிகள் அனைத்தும் முடங்கிவிட்டன. அவர் திரும்பிவந்த போது இரண்டாவது முறை தண்டனை பெற்றார். வேலை ஒழுங்காகச் செய்யாதது, பொய் சொன்னது போன்ற குற்றங்களுக்கு மட்டுமே இந்தத் தண்டனை. ஊழல் போன்ற பெரிய குற்றங்களுக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது எங்கள் வழக்கம்” என்கிறார் உள்ளூர்க்காரர் டேனியல் சல்வடார்.

‘‘நான் இந்த நகரின் மேயராகி, நன்றாக மாட்டிக்கொண்டேன். ஒரு சிலர்தான் இப்படி தண்டனைகளை அனுபவித்து வருகிறோம். இதை எப்படியாவது நீக்க வேண்டும்” என்கிறார் ஜாவியர் டெல்காடோ. பொலிவியாவின் பல நகரங்களில், ‘சோம்பேறியாக இருக்கக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது’ என்ற 3 கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றை மீறுகிறவர்கள் மக்களின் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

அடடா! அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் மக்களுக்கு ஒரு பூங்கொத்து!

http://tamil.thehindu.com/world/article22974353.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கார்ட்டூன் குதிரை

09chskohorse

எல் ரே மேக்னம் என்ற இளம் அரேபியக் குதிரையின் முகம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மிகப் பெரிய தட்டையான மூக்குத் துவாரங்கள், அகலமான கண்கள் என்று பார்ப்பதற்கு கார்ட்டூன் குதிரை போன்றே தோற்றமளிக்கிறது. வாஷிங்டனில் உள்ள ஓரியன் பண்ணை இந்த வித்தியாசமான குதிரையை உருவாக்கியிருக்கிறது. 9 மாதங்களான மேக்னம் குதிரையின் படங்களும் வீடியோக்களும் வெளிவந்தவுடன் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்தக் குதிரை உருவாக்கத்துக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். “செயற்கையாக ஓர் உயிரினத்தை உருவாக்குவது இயற்கைக்கு விரோதமானது. இது அந்தக் குதிரையின் உடல் நலத்துக்கும் ஆபத்து. மனிதர்களும் நாய்களும் வாய் மூலமும் சுவாசிக்க முடியும். ஆனால் குதிரைகளால் மூக்கின் மூலம் மட்டுமே சுவாசிக்க இயலும். அதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இனப்பெருக்கமும் பாதிக்கப்படலாம். உங்கள் கற்பனை வளத்துக்கு ஏற்றபடி வித்தியாசமான உருவங்களை, கார்ட்டூனில் கொண்டு வந்து கொள்ளுங்கள். உயிருடன் இருக்கும் ஒரு குதிரையிடம் காட்டாதீர்கள்” என்கிறார் கால்நடை மருத்துவத் துறை நிபுணர் அடெல் வாட்டர்ஸ்.

மனிதன் எல்லை மீறலாமா?

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் இயங்கிவரும் ஸ்விட்ச் நிறுவனத்தில், ஆப்பிள் சாதனங்கள் தள்ளுபடி விலையில் தருவதாக அறிவிக்கப்பட்டது. ஐபோன், மேக்புக், ஐமேக் என்று 200 சாதனங்களுக்கு மட்டும் கணிசமாக விலை குறைக்கப்படுவதாக அறிந்தவுடன், மக்கள் ஆர்வத்துடன் குவிந்துவிட்டார்கள். “புதிய மாடல்களை வாங்க, பழைய மாடல்களை விற்றுவிட தள்ளுபடியை அறிவித்தோம். மொத்தமே 200 சாதனங்களுக்குத்தான் தள்ளுபடி. ஆனால் 11 ஆயிரம் பேர் வரிசையில் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டது. இந்த வணிக வளாகத்தின் பல தளங்களிலும் மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். தள்ளுபடியில் சாதனங்கள் விற்பனையாகிவிடும் என்று மகிழ்ச்சியாக நினைத்த எங்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் முதல் நாள் இரவே வந்து வரிசையில் நின்றுவிட்டனர். மறுநாள் காலை கடை திறக்க வந்த எங்களுக்கு பேரதிர்ச்சி. கடை ஊழியர்கள் கடைக்கு முன் நின்றிருந்தவர்களை ஒழுங்குபடுத்தி, தள்ளுபடி கூப்பன்களை வழங்கினார்கள். மிகவும் சிரமப்பட்டு கடையைத் திறக்க முயன்றோம். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டமாக உள்ளே வர முயன்றார்கள். ஒரு பெரிய விபத்து நிகழப் போவதை அறிந்துகொண்ட நாங்கள், வேறு வழியின்றி கடையை மூடினோம். தள்ளுபடி விற்பனை கிடையாது என்று அறிவித்தோம். உறங்காமல், சாப்பிடாமல் மணிக்கணக்கில் காத்திருந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டோம். 11 ஆயிரம் பேரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இந்த அனுபவத்தால் எதிர்காலத்தில் தள்ளுபடியை யோசிக்கக்கூட மாட்டோம் என்று தோன்றுகிறது” என்கிறார் ஸ்விட்ச் கடை மேலாளர்.

தள்ளுபடி என்றால் இப்படியா குவிவார்கள்?

http://tamil.thehindu.com/world/article22991303.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: சூப்பர் படகு

 

 
10chskoboat

அயர்லாந்தைச் சேர்ந்த சேஃப்ஹெவன் மரைன் நிறுவனம் ‘Thunder Child’ XSV-17 என்ற படகை உருவாக்கியிருக்கிறது. அதிக அழுத்தத்தையும் மிக மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 54 கடல் மைல் வேகத்தில் செல்லும் இந்தப் படகில் சுமார் 10 பேர் அமர்ந்திருக்கலாம். எவ்வளவு மோசமான சூறாவளியாக இருந்தாலும் படகையே திருப்பிப் போடக்கூடிய அலையாக இருந்தாலும் இது சமாளித்துவிடுகிறது. படகு கவிழ்ந்தாலும் சட்டென்று திரும்பி தன்னுடைய இயல்பான நிலையை அடைந்துவிடுகிறது. சமீபத்தில் இந்தப் படகு செயல்படுத்திக் காட்டப்பட்டது. அதில் முதல் தடவை ஆள் இல்லா படகு 180 டிகிரிக்குத் தண்ணீரில் கவிழ்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. இரண்டாவது தடவை மனிதர்களுடன் மூழ்கி, மேலே வந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ராணுவத்துக்காகப் படகுகள் தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டது நிறுவனம்.

பிரெண்ட்ஷிப் மட்டுமில்லை, இனி படகும் மூழ்காது!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏழைகள் சாப்பிடுவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இங்கே ‘பக்பக்’ என்ற உணவு மூலமே ஏழைகள் தங்கள் பசியைப் போக்கிக்கொள்ள முடிகிறது. பக்பக் என்றால் குப்பையில் வீசப்படும் தேவையற்ற துணிகள், போர்வைகள் என்று அர்த்தம். அதேபோல குப்பைகளில் கொட்டும் உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவை ‘பக்பக்’ என்று அழைக்கிறார்கள். மிகக் குறைந்த விலையில் இந்த உணவு ஏழைகளால் தயாரிக்கப்பட்டு, ஏழைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளில் போடப்பட்டுள்ள சமைக்கப்படாத இறைச்சி, சமைத்து வீசப்பட்ட இறைச்சி போன்றவற்றைச் சேகரிக்கிறார்கள். அவற்றைத் தனித்தனி பைகளில் போட்டு ஏழைகள் வசிப்பிடத்துக்கு எடுத்துவருகிறார்கள். 70 ரூபாய்க்கு இறைச்சி பையைக் கொடுக்கிறார்கள். அதை வாங்கி, குப்பைகளை நீக்கி, எலும்புகளை நீக்கி, தண்ணீரில் அலசி, மசாலா, காய்கறிகள் சேர்த்து புது உணவாகச் சமைக்கிறார்கள் உணவகத்தைச் சேர்ந்தவர்கள். சோறும் இறைச்சி குழம்புமாக 35 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

“எங்கள் உணவகத்துக்கு ஏழைகளே சாப்பிட வருகிறார்கள். வேலை செய்து பணம் கிடைத்துவிட்டால், அன்று உணவகத்துக்கு வர மாட்டார்கள். அவர்களே நல்ல உணவைச் சமைத்துச் சாப்பிடுவார்கள். வேலை இல்லாத நாட்களில் பசிக் கொடுமையைச் சமாளிக்க இங்கே வருகிறார்கள். வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட இறைச்சியில் உணவு தயாரித்தாலும் சுவையிலும் சத்திலும் குறை இருக்காது” என்கிறார் ஓர் உணவகத்தின் உரிமையாளர்.

“சாப்பிடக்கூடிய சுவையில் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த உணவைச் சாப்பிடுபவர்கள் விரைவிலேயே மரணத்தைச் சந்தித்து விடுகிறார்கள்” என்கிறார் சலோம் டிகோல்லசியன். “மறுசுழற்சி உணவு விஷத்துக்கு ஒப்பானது. இவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது செய்து, காப்பாற்ற வேண்டும்” என்கிறார் சமூக ஆர்வலர் மெலிஸா அலிபாலோ.

ஐயோ… இந்தக் கொடுமைக்கு விடிவு வராதா?

http://tamil.thehindu.com/world/article23026024.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: இடுப்பு மனிதர் யு யா

 

 
11chskorecord

பெரிய வளையத்தை இடுப் பில் வைத்துச் சுற்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஜப்பானைச் சேர்ந்த யுயா யமுடா, ராட்சத வளையத்தை இடுப்பால் சுற்றி கின்னஸ் சாதனை செய்துவிட்டார்! ‘இடுப்பு மனிதர் யு யா’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், வளையங்கள் மூலம் வித்தைகள் காட்டுவதில் வல்லவர். ஒரே நேரத்தில் தலை, கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளில் ஏராளமான வளையங்களை வைத்து, சுற்றக் கூடியவர். சமீபத்தில் 16 அடி 10 அங்குல அகலமுள்ள வளையத்தை இடுப்பில் வைத்துச் சுற்றி சாதனை படைத்தார். இந்த வளையம் மூன்று பேர் தூக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. அதை ஒரே ஆளாகச் சுற்றிக் காட்டியிருக்கிறார். இதுவரை இதுபோன்ற ஒரு சாதனை உலகத்தில் நடத்தப்பட்டதில்லை. ஏற்கெனவே 4.93 மீட்டர் அகலமுள்ள வளையத்தைச் சுற்றி உலக சாதனை படைத்தார். அஷ்ரிடா ஃபர்மன் என்பவர் அந்தச் சாதனையை முறியடித்தார். தற்போது மீண்டும் சாதனையைத் தன்வசப்படுத்திக்கொண்டார் இவர். “நான் ஏற்கெனவே செய்த சாதனைகள் முறியடிக்கப்பட்டுவிட்டதால், புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். அந்த முயற்சிக்குப் பலன் கிடைத்துவிட்டது” என்கிறார் யுயா யமுடா.

வாழ்த்துகள் யுயா யமுடா!

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், பல்பொருள் அங்காடியிலிருந்து ஓட்ஸ் பாக்கெட்டை வாங்கிவந்தது. பெரிய அங்காடி என்பதால் காலாவதியாகும் தேதியைப் பார்க்காமல் வாங்கிவிட்டனர். வீட்டுக்கு வந்தவுடன் ஜோசியா ஓட்ஸைச் சாப்பிட ஆரம்பித்தார். வழக்கமான ஓட்ஸ்போல் அவ்வளவு சுவையாக இல்லை. ஆனாலும் மோசமில்லை என்பதால் முழுவதையும் சாப்பிட்டு முடித்துவிட்டார். சற்று நேரம் கழித்து அந்தியா கார்ல்ஸ் சாப்பிட ஆரம்பித்தார். இரண்டு ஸ்பூன் சாப்பிட்டதும் சுவை சரியில்லை என்பதை அறிந்துகொண்டார். ஓட்ஸ் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது, அது வித்தியாசமாக இருந்ததைக் கண்டார். காலாவதி தேதியைப் பார்த்தவருக்கு மயக்கமே வந்துவிட்டது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. “21 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியான உணவைச் சாப்பிட்டிருக்கிறோம் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது. என் கணவரின் உடல்நிலை என்னாகுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை. நன்றாகக் கவனித்திருந்தால் காலாவதி தேதி பார்க்காமல் கூட இது பழைய பாக்கெட் என்று கண்டுபிடித்திருக்கமுடியும். இப்போது இதுபோன்ற பாக்கெட்கள் வருவதில்லை. என் கணவருக்கு 21 வயதானபோது இந்த ஓட்ஸ் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் 42-வது வயதில் சாப்பிட்டிருக்கிறார். இது எப்படி இவ்வளவு ஆண்டுகள் அந்த அங்காடியில் இருந்திருக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை மீடியாக்களிடம் தெரியப்படுத்தினோம். இனியாவது எங்களைப்போல் இல்லாமல் உணவு, மருந்து விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்கிறார் அந்தியா.

அமெரிக்கர்களிடமும் விழிப்புணர்வு இல்லையா!

http://tamil.thehindu.com/world/article23039189.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வைரலான சிகை அலங்காரம்

 
13chskopic

ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டீனா பெட்ரென்கோ செனட்டராக இருக்கிறார். அன்றைய சோவியத் ஒன்றியத்திலும் இன்றைய ரஷ்யாவிலும் அரசியல்வாதியாகப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவரது சிகை அலங்காரம் சமீபகாலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் எண்ணிலடங்காத மீம்கள் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகின்றன. தற்போது இவரது சிகை அலங்காரம் உலக அளவில் பரபரப்பாகிவிட்டது. தொப்பிபோல் எப்படிச் சிகை அலங்காரம் செய்யமுடிகிறது? முடிக்குள் என்ன இருக்கிறது என்றெல்லாம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. “எனக்குச் சுருள் முடி. அதைக் கொஞ்சம் மேலே தூக்கி, கொண்டை ஊசிகளைச் செருகி வைத்திருக்கிறேன். இதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை. நான் நீண்டகாலமாக அரசியலில் இருந்து வருகிறேன். என் பணிகள், என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தால் அதை ஆரோக்கியமான விஷயமாகக் கருதுவேன். சிகை அலங்காரத்தை வைத்துப் பேசிக்கொண்டிருப்பதில் ஏதாவது பயன் இருக்கிறதா? நேரம்தான் விரயமாகிறது” என்கிறார் வாலண்டீனா. “எது செய்தாலும் மீம் போடும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாலண்டீனாவைச் சந்திப்பவர்கள் கூட அவரது கண்களைப் பார்த்துப் பேசுவதில்லை. சிகையைத்தான் பார்க்கிறார்கள். உடனே அது குறித்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படித் தனித்துவமான சிகை அலங்காரம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது. எனக்கே கூட வாலண்டீனா என்றதும் அவரது சிகை அலங்காரம்தான் நினைவுக்கு வருகிறது. இதை அவர் இயல்பாகச் செய்திருக்கிறாரா, அல்லது பிறரின் கவனம் பெற வேண்டும் என்பதற்காகச் செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை. இவரது சிகை அலங்காரத்தாலும் உடையாலும் பெண் தன்மை குறைந்து காணப்படுகிறது. இதற்காகக் கூட இவர் இப்படிச் செய்துகொள்ளலாம்” என்கிறார் அனஸ்டாசியா வோலோச்கோவா.

தமிழர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் என்ன ஓர் ஒற்றுமை!

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகுதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் சராசரி யாக ஒரு நாளைக்கு 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு 80 தடவை போனை எடுத்துப் பார்க்கிறார்கள். இந்தப் பழக்கம் நம் மூளையைப் பாதிப்பதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். அதிலும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கிறார்கள். இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஜோ ஹோலியரும் காய் டாங்கும் சேர்ந்து ‘லைட் போன் 2’ என்ற போனை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த போனில் பேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், அலாரம் வைத்துக்கொள்ளலாம். இவற்றைத் தவிர வேறு எந்த வசதியும் இதில் கிடையாது. இந்த போனைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் மிச்சமாகிறது, மூளை பாதிப்பு தவிர்க்கப்படுகிறது. ஆரம்ப கால போனின் வசதியுடன் ஸ்மார்ட்போனைப்போல் எடை குறைவாக இருக்கும் இந்த போனின் விலை சுமார் 26 ஆயிரம் ரூபாய்!

ஸ்மார்ட்போனைவிட விலை அதிகமாக இருந்தால் யார் வாங்குவார்கள்?

http://tamil.thehindu.com/world/article23163080.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மன வலிமை மிக்க பூனை

 

 
14chskopic

லண்டனில் ஜிஞ்சர் என்ற பூனை மாடியிலிருந்து தாவிக் குதிக்கும்போது கம்பி வேலியில் விழுந்துவிட்டது. மூன்று கம்பிகள் பூனையின் உடலைத் துளைத்துக்கொண்டு மேலே வந்துவிட்டன. வலியில் அசையாமல் படுத்திருந்தது பூனை. அந்த வழியே வந்தவர்கள் பூனைக்கு உதவுவதற்காகக் களத்தில் இறங்கினர். மீட்புக் குழு ஒன்று வந்து பூனையை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தது. "சாதாரணமாக மூன்று கம்பிகள் குத்தினால் பூனை உயிர்ப் பிழைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தப் பூனையைத் துளைத்த கம்பிகள் உடலுக்குள் இருந்த எந்த உறுப்பையும் பாதிக்கவில்லை என்பதால் உயிர் பிழைத்திருக்கிறது. மிகவும் ஆச்சரியமான விஷயம் இது. கம்பியில் சொருகியிருந்தபோதும் எடுத்தபோதும் சிகிச்சையின்போதும் ஜிஞ்சர் அழவே இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம். இந்த மன தைரியத்தால் பூனை வேகமாகத் தேறிவருகிறது” என்கிறார் மீட்புக் குழுவைச் சேர்த ப்ரூஸ்டர்.

மன வலிமை மிக்க பூனை!

சீனாவின் ஹர்பின் பகுதியைச் சேர்ந்த 50 வயது சென் என்ற பெண்ணுக்குக் கல்லீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு மதுப் பழக்கம் இல்லை. நீண்ட காலம் மருந்துகளையும் எடுத்துக்கொண்டதில்லை. இவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு முதலில் ஏன் கல்லீரல் பாதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. பிறகு சென்னிடம் நீண்ட நேரம் உரையாடினார்கள். அதில் கடந்த 10 ஆண்டுகளாகத் தலைக்கு டை போட்டு வருவதாகச் சொன்னார். நீண்ட காலமாக டை உபயோகித்து வந்ததால் இவரது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவரது உடலில் வழக்கமாக இருக்கும் அளவை விட 10 மடங்கு பிலிருபின் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு மாடிப் படி ஏறும்போது மிகவும் களைப்பாகவும் மூச்சு விடுவதில் சிரமமாகவும் இருந்திருக்கிறது. ஆனாலும் மெதுவாக ஏறி படுக்கையறைக்குச் சென்றுவிட்டார் சென். இவரைப் பார்த்த கணவருக்கு அதிர்ச்சி. சென்னின் தோல் மஞ்சளாகவும் கண்கள் வெள்ளையாகவும் மாறியிருந்தன. உடனே மருத்துவமனைக்கு அழைத்துவந்தார். 20 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும் கல்லீரலின் பாதிப்பைக் குறைக்க முடியவில்லை. புற்றுநோய் வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். “எனக்கு 30 வயதிலேயே நரைக்க ஆரம்பித்துவிட்டது. 40 வயதில் நரை அதிகமாகிவிட்டதால் டை பயன்படுத்த ஆரம்பித்தேன். பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். அது என் உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடும் என்று நான் நினைக்கவே இல்லை” என்று வருந்துகிறார் சென். ”டைகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிகம் இருக்கின்றன. தலையில் போடும் டை, உச்சந்தலை வழியாகக் கல்லீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இப்போதுதான் தெரிகிறது. டை போடுவது அவசியம் என்று கருதுபவர்கள் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் டையைப் பயன்படுத்தலாம். ரசாயன டைகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் மருத்துவ நிபுணர் ஃபு லிஜுவான்.

நரைக்கு பயந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா?

http://tamil.thehindu.com/world/article23233406.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: என்றென்றும் இளமை!

 

water%20birth
age%20ilamai
water%20birth
age%20ilamai

சீன தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளராக பணியாற்றி வருகிறார் 44 வயது யாங் டான். கடந்த 22 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்துவரும் இவர், அன்றுபோலவே இன்றும் இளமையாக இருக்கிறார். நீண்ட காலமாக ஒரே பணியைச் செய்துவரும் இவருக்கு, சீனா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது வித்தியாசமான பாணியையும் இளமையையும் பாராட்டும் விதத்தில் வானிலை நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இவரைப் பற்றி ஒரு வீடியோவை உருவாக்கினார். ‘இளமை தேவதை’ என்று பெயரிட்டு 1996 முதல் 2018-ம் ஆண்டு வரை இவரது தோற்றங்களைத் தொகுத்து சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிட்டார். இந்த வீடியோ மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. “நான் சில ஆண்டுகளாக இவரது நிகழ்ச்சியை கவனித்து வருகிறேன். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் இவருக்கு 44 வயது என்று தெரிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. 22 ஆண்டுகளாக ஒருவர் எப்படி முதுமையடையாமல் இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 22 வயதில் இருந்ததை விட 44 வயதில் இன்னும் இளமையாகவும் அழகாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. சரியான நபருக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்கிறார் லி யாங்.

என்றென்றும் இளமை!

செங்கடலில் ஒரு ரஷ்ய சுற்றுலாப் பயணி குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்! “கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பில் இருந்து பார்த்தபோது முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ வித்தியாசமாக நடக்கிறது என்று மட்டும் தோன்றியது. உடனே வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். அலைகளுக்கு நடுவே ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. அருகில் ஒரு முதியவரும் ஒரு இளைஞரும் இருந்தார்கள். திடீரென்று வயதானவர் கையில் தொப்புள்கொடியுடன் ஒரு குழந்தை இருப்பதைப் பார்த்தவுடன் பரவசமாகிவிட்டேன். இளைஞர் ஒரு டப்பாவில் தொப்புள்கொடியைப் பிடித்தபடி முதியவருடன் கரைக்கு வந்தார். கரையில் ஒரு குழந்தை இவர்களுக்காகக் காத்திருந்தது. பிறந்த குழந்தையைக் கண்டதும் அந்தக் குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. முதியவர் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, தொப்புள்கொடியை அகற்றினார். சிறிது நேரத்துக்குப் பிறகு அலைகளுக்குள் இருந்து தாய் வெளிப்பட்டார். கரையில் இருந்த தன் குடும்பத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் காட்சியைக் கண்டு நான் நெகிழ்ந்து போய்விட்டேன். பிறகு அவர்களிடம் சென்று உரையாடினேன். நீரில் பிரசவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் எகிப்துக்கு வந்திருக்கிறார்கள். முதியவர் நீர் பிரசவங்களைக் கையாள்வதில் நிபுணர். பிரசவ வலி வந்தவுடன் மருத்துவர், கணவருடன் கடலுக்குள் சென்றுவிட்டார் அந்தப் பெண். சில நிமிடங்களில் அவருக்குக் குழந்தை பிறந்துவிட்டதாக அந்தத் தாய் சொன்னார். பிரசவத்தை ஒரு குடும்பமே எளிதாக எதிர்கொண்டதையும் புதிதாக வந்த குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்ததையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை” என்கிறார் ஹடியா ஹான்சி. நீரில் பிரசவம் நடைபெற்றால் தாய்க்குக் குறைவான வலியும் குழந்தைக்குக் குறைவான மன அழுத்தமும் ஏற்படும். எந்தப் பிரச்சினையும் இல்லாத பெண்களே நீர் பிரசவத்தை நாட வேண்டும். எடை அதிகமான பெண்கள் நீரில் பிரசவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

செங்கடலில் பிரசவித்த தைரியசாலிக்கு வாழ்த்துகள்!

http://tamil.thehindu.com/world/article23250125.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நரிக்கு சைவ உணவு

16chskopic

ஸ்பெயினைச் சேர்ந்த சோனியா சாய் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருடைய சேனலில் வீகன் உணவுப் பழக்கமான தாவர உணவுகளையே உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். சமீபத்தில் இவருடைய செல்லப் பிராணியான ஜுமாஞ்சி என்று பெயரிடப்பட்டுள்ள ஃபென்னக் நரியின் படங்கள் இணையதளத்தில் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தன. கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறார் சோனியா. ஃபென்னக் நரி, தாவரங்கள், விலங்குகள், முட்டை, ஊர்வன, பூச்சிகள் என்று பல வகையான உணவைச் சாப்பிடுகின்றன. ஆனால் ஜுமாஞ்சிக்குத் தாவர உணவை மட்டுமே வழங்கி வந்திருக்கிறார் சோனியா. 3 ஆண்டுகளாக இந்த உணவைச் சாப்பிட்டதால் நரியின் எடை குறைந்துவிட்டது. பார்வையும் பாதி குறைந்துவிட்டது. படங்களைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் உடனடியாக வீகன் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும், இல்லையென்றால் விலங்குகள் காப்பகத்தில் ஜுமாஞ்சியை ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர். “நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம், சோனியா கண்டுகொள்ளவே இல்லை. செல்லப் பிராணி என்ற பெயரில் ஒரு உயிரை வதைத்துக்கொண்டிருக்கிறார். இயற்கையாக ஓர் உயிரினத்துக்கு என்ன உணவுப் பழக்கம் இருக்கிறதோ அதைத்தான் அது பின்பற்ற வேண்டும். ஃபென்னக் நரியை வீட்டில் வளர்ப்பவர்கள் இறைச்சி, நாய், பூனை உணவுடன் பூச்சி, புழுக்களையும் சேர்த்து கலவையாக வழங்க வேண்டும்” என்கிறார் ஆலிஸ் நட்யானா மூரே. “வீகன் உணவை யார் எடுத்துக்கொண்டாலும் உடல் மெலிந்துதான் காணப்படுவார்கள். என்னுடைய ஜுமாஞ்சி உடல் மெலிந்து காணப்பட்டாலும் ஆரோக்கியமாக இருக்கிறது. ரத்தப் பரிசோதனையிலும் பிரச்சினை இல்லை. எனினும் ஜுமாஞ்சி குறித்து உங்களது அக்கறைக்கு நன்றி” என்று பதிலளித்திருக்கிறார் சோனியா.

நரிக்கு வீகன் உணவு என்பதெல்லாம் ரொம்பவே அநியாயம்…

இங்கிலாந்தைச் சேர்ந்த ஏமி க்ரீன், வீட்டிலேயே பிரசவம் செய்துகொள்ள முடிவு செய்தார். இவரது கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் மருத்துவமனையில் பிரசவிப்பதை மறுத்துவிட்டார். ஏமியின் விருப்பம்போலவே வீட்டில் லூனா என்ற பெண் குழந்தை பிறந்தது. திடீரென்று குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே ஏமியின் கணவர் மருத்துவமனைக்கு தாயையும் குழந்தையையும் அழைத்துச் சென்றார். ஆனால் குழந்தை இறந்துவிட்டது. “எல்லோரும் சொன்னதை நான் கேட்கவில்லை. மருத்துவமனையில் பிறந்திருந்தால் எங்கள் மகள் உயிருடன் இருந்திருப்பாள். அறியாமையில் செய்த இந்தத் தாயின் தவறை மன்னித்துவிடு மகளே… அப்பாவுக்கான கனவுகளுடன் வாழ்ந்த ரியான் என்னை மன்னிப்பாரா என்று தெரியவில்லை. என்னைப்போல் யாரும் இப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரியான் அறக்கட்டளை ஆரம்பித்திருக்கிறார். மருத்துவமனைக்குச் செல்ல முடியாத பெண்களின் பிரசவத்துக்கு இந்த அறக்கட்டளை பணம் கொடுக்கும்” என்கிறார் ஏமி க்ரீன்.

இந்தக் காலத்திலும் இப்படியா யோசிப்பார்கள்?

http://tamil.thehindu.com/world/article23267834.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நாய்க்கு தங்க ஆடை

 

 
17chskopic

உங்கள் செல்லப் பிராணியை எவ்வளவு தூரம் நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதற்காகவே உலகின் விலை உயர்ந்த ஆடையை உருவாக்கியதாகச் சொல்கின்றன இரண்டு நிறுவனங்கள். 24 கேரட் தங்கத்தில் வைரங்கள் பதித்த நாய்க்கான உடையை உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றன டாகி ஆர்மர், வெரிஃபர்ஸ்ட்டு.காம் நிறுவனங்கள். தங்கத்தால் துணி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 20 விலை மதிப்புமிக்க வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆடையின் விலை சுமார் 89 லட்சம் ரூபாய். தங்க ஆடையை நாய் அணிந்துகொண்டால், பூச்சிகளால் கடிக்க முடியாது. கத்தியால் கூட காயம் ஏற்படுத்திவிட முடியாது. இரும்பை விட 15 மடங்கு இந்த ஆடை உறுதியானது. தங்க ஆடையைத் தங்கள் நாய்க்கு வாங்குவதற்குப் பலரும் ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

பணத்தைச் செலவு செய்ய வழிகளா இல்லை?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிராஜக்ட் மேனேஜராகப் பணி புரிந்து வருகிறார் 30 வயது ஆஷ்லே மாக்ஸ்வெல். பெண்கள் அணியும் 6 அங்குல உயரம் உள்ள காலணிகளை விரும்பி அணிந்துகொள்கிறார். 9 ஜோடி காலணிகளில் 4 ஜோடி காலணிகள் பெண்கள் அணியக்கூடியவை. கோட், சூட் அணிந்து குதிகால் உயரமான காலணிகளை அணிந்தபடி அலுவலகத்துக்குச் சென்று வருகிறார்.

“கடந்த ஆண்டு ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் பிரான்ஸைச் சேர்ந்த ஆண் நடனக்காரர் பெண்கள் அணியும் குதிகால் உயரக் காலணிகளை அணிந்து ஆடிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் எனக்கும் ஆர்வம் வந்து விட்டது. ஒரு ஜோடி காலணிகளை வாங்கி, அறைக்குள் நடந்து பழகினேன். மனதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரித்தது. பிறகு அலுவலகத்துக்கு அணிந்து சென்றேன். என்னை எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தனர். குதிகால் உயரக் காலணிகளை ஆண்கள் அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தேன்.

அலுவலகக் கூட்டங்கள், விருந்து போன்ற நாட்களில் குதிகால் உயரக் காலணிகளைத்தான் அணிந்து செல்வேன். என் உயர் அதிகாரி, இந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். என் வேலையில் குறை இருந்தால் சொல்லுங்கள், நான் எதை அணிய வேண்டும், அணியக் கூடாது என்பதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லிவிட்டேன். குதிகால் உயரக் காலணிகளை நான் மட்டுமா பயன்படுத்தி வருகிறேன்? அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், செல்வந்தர்கள், நடனக்காரர்கள், நடிகர்கள் என்று பலரும் குதிகால் உயரக் காலணிகளை அணிந்திருப்பதை நீங்கள் கவனித்ததில்லையா? அவரவர் வசதிப்படி, அவரவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. எடை அதிகமான ஆண்கள் அணியும் காலணிகளைப் பெண்களும் அணியலாம். பெண்கள் அணியும் காலணிகளை ஆண்களும் அணியலாம். குதிகால் உயரக் காலணி அணிவதால் நான் ஆண் இல்லை என்று சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை” என்கிறார் ஆஷ்லே மாக்ஸ்வெல்.

உங்கள் விருப்பம், உங்கள் உரிமை!

http://tamil.thehindu.com/world/article23277979.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மனிதாபிமானமற்ற செயல்…

18chskopic

சிகாகோவிலிருந்து அட்லாண்டா செல்லும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த 24 வயது ஆம்ஸ்ட்ராங் நடந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்து, சமூகவலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். “ஒரு தந்தை தன்னுடைய மகளுடன் விமானத்தில் அமர்ந்திருந்தார். விமானம் கிளம்பும்போது குழந்தை மிகவும் பயந்துவிட்டது. தன் இருக்கையில் அமராமல் தந்தை மடியில் அமர வேண்டும் என்று அழுதது. தந்தையும் சமாதானம் செய்தார். சாப்பிடுவதற்கு பாப்கார்ன் கொடுத்தார். ஆனால் குழந்தை பயத்தில் அழுதுகொண்டே இருந்தது. அருகில் இருந்த சிலர் விமானப் பணிப் பெண்ணிடம் புகார் அளித்தனர். அவர் குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லிக் கேட்டார். அந்தத் தந்தையால் என்ன செய்வதென்று புரியவில்லை. குழந்தை தானாகவே அழுகையைக் குறைத்தது. ஆனாலும் அருகில் இருந்தவர்கள் புகார் கொடுக்கவும், பாதுகாப்பு அதிகாரி வந்தார். விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கே செல்வதாகவும், விமானத்தை விட்டு இறங்கும்படியும் கேட்டுக்கொண்டார். இதைக் கேட்டு அந்தத் தந்தை அதிர்ச்சியடைந்தார். என்னைப் போன்ற சக பயணிகளும் அதிர்ந்தோம். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அப்பாவையும் குழந்தையையும் இறக்கிவிட்டுவிட்டு, விமானம் கிளம்பியது” என்கிறார் ஆம்ஸ்ட்ராங். சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், இந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது.

மனிதாபிமானமற்ற செயல்…

பெல்ஜியத்தின் ப்ருகஸ் நகரில் உள்ள ‘தி பியர் வால்’ மதுபான விடுதியில் அழகிய கண்ணாடி தம்ளர்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தன. இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காக தற்போது, வாயிலில் சென்சார் ஸ்கேனரைப் பொருத்தியிருக்கிறார்கள். “ஒரு நாளைக்கு 1,600 பெல்ஜியம் பியர்கள் விற்பனையாகின்றன. நாங்கள் மிகவும் ரசனையோடு விதவிதமான கண்ணாடி தம்ளர்களைப் பிரத்யேகமாகச் செய்யச் சொல்லி, வாங்கி வைத்திருக்கிறோம். பியர் சாப்பிடுபவர்கள் கண்ணாடி தம்ளர்களின் அழகில் மயங்கி, அதை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு வருடத்துக்கு சுமார் 4 ஆயிரம் தம்ளர்கள் காணாமல் போயின. யாராவது தெரியாமல் எடுத்துச் செல்லும்போது கேட்டால், தம்ளருக்கும் சேர்த்து பணம் கொடுத்திருப்பதாக நினைத்துவிட்டோம் என்றார்கள். அதனால் தம்ளர்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று பல இடங்களிலும் எழுதி வைத்தோம். அப்படியும் தம்ளர்கள் காணாமல் போவதைத் தடுக்க முடியவில்லை. கண்காணிப்பு கேமரா வைத்துப் பார்த்தோம். அதிலும் தடுக்க முடியவில்லை. அபராதம் என்று சொல்லிப் பார்த்தோம். அதுவும் சரிவரவில்லை. எங்கள் பாருக்குப் பக்கத்திலேயே கண்ணாடித் தம்ளர்கள் விற்பனை செய்யும் கடை இருக்கிறது. அங்கே சென்று வாங்கிக்கொள்ளவும் சொன்னோம். அப்படியும் தடுக்க முடியவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களில் சுற்றுலாப் பயணிகளே அதிக அளவில் தம்ளர்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர். இறுதியில் 3.25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சென்சார் ஸ்கேனரைப் பொருத்திவிட்டோம். சென்சார் மூலம் பிடிபடும் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் எந்த விசாரணையும் மேற்கொள்வதில்லை. கடிந்துகொள்வதில்லை. தம்ளரை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு, அனுப்பிவிடுவோம்” என்கிறார் மதுபான விடுதியின் உரிமையாளர்.

தம்ளர்களுக்கு வந்த சோதனை!

http://tamil.thehindu.com/world/article23281683.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் மிகச் சிறந்த ஆசிரியர்

20chskopic

 

 

இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயது ஆண்ட்ரியா ஜஃபிராகவ் உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார். இவருக்குச் சுமார் 6.5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது! ஆண்ட்ரியா இங்கிலாந்தின் மிக மோசமான சமூகச் சூழல் நிலவும் ப்ரென்ட் பகுதியில் புலம்பெயர்ந்தவர்களுக்கான பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு இந்தி, தமிழ், குஜராத்தி, போர்ச்சுகீஸ், அரபிக், உருது, சோமாலி உட்பட 35 மொழிகள் தெரியும்! ஒவ்வோர் ஆண்டும் வர்கி ஃபவுண்டேஷன் ’க்ளோபல் டீச்சர்’ விருதை வழங்கி வருகிறது. 173 நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன. மிகக் கடுமையான போட்டி. இவற்றிலிருந்து இங்கிலாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, பிரேசில், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நார்வே நாடுகளைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்தனர். அவர்களில் இருந்து ஆண்ட்ரியா முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துபாயில் விருது வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

“ஆசிரியர் பணியையும் தாண்டி பல விஷயங்களை ஆண்ட்ரியா செய்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் வீட்டுக்கும் சென்று அவர்களுடைய கல்வியிலும் வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களிடம் உரையாடும் அளவுக்கு அடிப்படை மொழியறிவைக் கற்று வைத்திருக்கிறார். இதனால் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு மேம்பட்டிருக்கிறது” என்கிறார் விருது அமைப்பைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர்.

“பள்ளி காலை 6 மணிக்குதான் ஆரம்பமாகும். ஆனால் குழந்தைகள் 5 மணிக்கே வந்து காத்திருப்பார்கள். எங்கள் பள்ளியில் ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் சேர்ந்த மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள்தான் படிக்கிறார்கள். பள்ளிப் பாடங்களுடன் நடனம், இசை, ஓவியம் என்று பலவற்றையும் நான் சேர்த்திருக்கிறேன். பலருக்கும் நல்ல உணவு வீட்டில் கிடைப்பதில்லை. அதனால் ஒருவேளை சத்தான உணவைத் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பெரும்பாலான குழந்தைகளுக்குப் பள்ளி முடிந்தவுடன் வீட்டு வேலைகள் அதிகம் இருக்கின்றன. அதனால் அவர்களால் வீட்டில் எழுத, படிக்க நேரம் இருப்பதில்லை. அவர்களைப் பள்ளியிலேயே கூடுதல் நேரம் தங்க வைத்து, எல்லாவற்றையும் செய்யச் சொல்லிவிடுவேன். இது என் தனிப்பட்ட சாதனை இல்லை. மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இதில் இருக்கிறது. அதனால் எங்கள் பள்ளிக்கும் சக ஆசிரியர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். பரிசுப் பணத்தை உலகக் குழந்தைகளின் கல்விக்காகச் செலவிட இருக்கிறேன். இன்னும் 5 ஆண்டுகளாவது ஆசிரியப் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் ஆண்ட்ரியா.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உட்பட பலரும் ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஆசிரியருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

உலகின் மிகச் சிறந்த ஆசிரியருக்கு ஒரு பூங்கொத்து!

http://tamil.thehindu.com/world/article23299104.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: ட்ரம்ப் பெயரால் வந்த சோதனை

 

 
21chskopic

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 28 வயது சையத் அசாதுல்லா போயா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தன்னுடைய மகனுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என்ற நம்பிக்கையில் ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்று பெயர் வைத்தார். ஆனால் பெயர் வைத்த நாள் முதல் இன்றுவரை பெரும் சங்கடத்தைச் சந்தித்து வருகிறார். 2016-ம் ஆண்டு சையதின் மனைவி ஜமிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கோடீஸ்வரரான ட்ரம்ப் அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பாக இருந்தார். கொந்தளிப்பான இவரது அரசியல் வாழ்க்கையைப் பற்றி சையத் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு வெற்றி பெற்ற தொழிலதிபர் என்ற முகம் மட்டுமே கண் முன் தெரிந்தது. ‘ட்ரம்ப் எப்படிப் பணக்காரரானார்’ என்ற மொழிபெயர்ப்பு நூலையும் படித்து முடித்தார். இதனால் மகன் பிறந்தால் ட்ரம்ப் பெயர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். குழந்தை பிறந்தவுடன் இன்ப அதிர்ச்சியடைந்தார். ட்ரம்ப்பை போலவே குழந்தை யின் தலை முடி செம்பழுப்பு நிறத்தில் இருந்தது. உடனே தான் பெயர் வைக்க முடிவெடுத்தது மிகச் சரி என்ற முடிவுக்கு வந்தார்.

இதைச் சொன்னபோது மனைவிக்கு விருப்பமில்லை. சையதின் பெற்றோரும் இஸ்லாமியப் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். சையத் கேட்கவில்லை. அதனால் இஸ்லாமிய குருமாரிடம் அழைத்துச் சென்றனர். அவர் வேறு மதப் பெயரை வைப்பது இஸ்லாமை அவமதிப்பது என்றார். ஆனாலும் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார் இவர். நாட்கள் செல்லச் செல்ல ஓர் அமெரிக்கரின் பெயர் சூழலை மோசமாக்கிக்கொண்டே சென்றது. உடனே வேலையை உதறிவிட்டு, காபூலில் குடியேறினார் சையத்.

“நான் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, உத்வேகம் பெற்றுதான் என் மகனுக்குப் பெயரைச் சூட்டினேன். ட்ரம்ப்பை மிகவும் நேசிக்கிறேன். பொருளாதாரத்தில் அவர் மிகச் சிறந்தவர். அரசியலிலும் உலகைக் கலக்கி வருகிறார். அதனால் நான் அவரை மிகச் சிறந்த மனிதராகக் கருதுகிறேன். நான் ஒவ்வொரு தடவை ட்ரம்ப் என்று கூப்பிடும்போதும் என் அப்பா மிகவும் கோபமடைகிறார். அவரால் இந்தப் பெயரைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. சென்ற வாரம் ஒரு கூட்டம் வந்து இந்தப் பெயருக்காகவே எங்களை மிரட்டிச் சென்றது. என் மனைவி ஃபேஸ்புக்கில் குழந்தையின் பெயரைப் பயன்படுத்தும்போது மிக மோசமான பின்னூட்டங்கள் இடப்படுகின்றன. சிலர் மிரட்டவும் செய்கிறார்கள். மிக மோசமான ஒரு மனிதரின் பெயரை எப்படிக் குழந்தைக்கு வைத்தீர்கள் என்று கேட்காதவர்களே கிடையாது. குடும்பத்தினர் எப்போதும் அச்சத்தில் இருக்கிறார்கள். என்ன ஆனாலும் சரி, குழந்தையின் பெயரை மாற்றுவதாக இல்லை. நான் பெற்ற குழந்தைக்கு எனக்குப் பிடித்த பெயரைக் கூட வைக்க முடியவில்லை என்றால் அநியாயம் இல்லையா? என் குழந்தை வளர்ந்து, தன் பெயரை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளட்டும். அதுவரை டொனால்ட் ட்ரம்ப் என்ற பெயரே இருக்கட்டும்” என்கிறார் சையத்.

உங்க பெயரை வைக்க முடியாத அளவுக்குச் சிக்கலான மனிதராக இருக்கிறீர்களே, ட்ரம்ப்!

http://tamil.thehindu.com/world/article23308528.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: மரண பயம் தரும் கஃபே

 

 
22chkanDeath%20cafe

உலகம் முழுவதும் வித்தியாசமான கஃபேக்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தாய்லாந்தைச் சேர்ந்த ‘கிட் மாய் டெத் கஃபே’ சற்று பயத்தையே ஏற்படுத்தி விடுகிறது. கஃபே முழுவதும் சவப்பெட்டி, அடர் வண்ண மலர்கள், ஒன்றிரண்டு எலும்புக்கூடுகள் என்று அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. சாப்பிடக்கூடிய பொருட்களுக்கு ‘முதுமை, வலி, நோய், மரணம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள சவப்பெட்டியில் படுத்து, எலும்புக்கூடோடு அமர்ந்து படம் எடுத்துக்கொள்பவர்களுக்கு தள்ளுபடியும் உண்டு. ‘இன்று இரவு நீங்கள் உறங்கி மீண்டும் விழிக்கவே முடியாத நிலைக்கு செல்லத் தயாரா?’, ‘நீங்கள் எதையும் கொண்டுவரவில்லை, அதனால் எதையும் எடுத்துச்செல்ல முடியாது’, ‘நீங்கள் உயில் எழுத விரும்பினால், எழுதி வைத்துவிடுங்கள்’ போன்ற வாசகங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. “உண்மையில் மரணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கே இந்த கஃபேயை ஆரம்பித்திருக்கிறோம். இங்கே இருக்கும் பொருட்களை எல்லாம் பார்க்கும் போது மரணம் பற்றிய சிந்தனை வரும். உயிரோடு இருப்பது எவ்வளவு அற்புதமானது என்று தோன்றும். வாழும் நாட்களில் ஒவ்வொரு நொடியையும் மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் வாழத் தோன்றும். சவப்பெட்டியில் 3 நிமிடங்கள் படுத்திருந்தால் அவர்களுக்கு 40 ரூபாய் தள்ளுபடி தருகிறோம். ஆரம்பத்தில் எங்கள் கஃபேக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. இங்கே வந்து செல்கிறவர்களின் அனுபவம் வெளியே பரவி, இப்போது தைரியமாக வருகிறார்கள்” என்கிறார் கஃபேயின் நிறுவனர்.

இளைப்பாற வருகிறவர்களை இப்படி மிரட்டலாமா?

பிரான்ஸைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் புதுமையான முறையில் வீடுகளை விற்கிறது. வாடிக்கையாளர்கள் வீட்டையும் குடியிருப்பையும் நன்கு புரிந்துகொள்ள விளையாட்டுகளை நடத்துகிறது. இதில் ‘எஸ்கேப் ரூம்’ என்ற விளையாட்டு எல்லோரையும் சுவாரசியப்படுத்தி விடுகிறது. “இந்த விளையாட்டுகள் மூலம் எங்கள் குடியிருப்பில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது தெரிந்துவிடும். வாடிக்கையாளர்களுக்கு எல்லாவற்றையும் அறிந்துகொண்ட திருப்தி கிடைக்கும். இளம் வயதினரே அதிகமாக வீடுகளை வாங்குகிறார்கள் என்பதால் இந்த விளையாட்டுக்கு ஆர்வத்துடன் ஒத்துழைக்கிறார்கள். ‘எஸ்கேப் ரூம்’ விளையாட்டில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களின் கண்களைக் கட்டிவிடுவோம். எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களை வழிநடத்தியபடி வீட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டே செல்வார். ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் விளக்கை அணைத்துவிட்டு, அவர்களை உள்ளே வைத்துவிட்டு வெளியேறிவிடுவார். பிறகு கண்களைத் திறக்கும்படி குரல் கொடுப்பார். அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் சாவியைத் தேடி எடுத்து, கதவைத் திறந்துகொண்டு வெளியே வரவேண்டும். இதில் பங்கேற்பவர்களில் பலர் வீடுகளை வாங்கி விடு கிறார்கள்” என்கிறார் எஸ்கேப் ஹவுஸ் ரியல் எஸ்டேட் நிறுவனர்.

புதுமையான உத்தி!

http://tamil.thehindu.com/world/article23318190.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: இப்படியும் டாட்டூ போடலாமா?

 

 
23chskopic

போலந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது ஆடம் கர்லிகேலின் இன்ஸ்டாகிராம் படங்களைப் பார்ப்பவர்கள் ஆச்சரியமடைகிறார்கள். படங்களை நெகடிவ் ஃபில்டர் போட்டு எடுத்திருக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால் ஆடம் படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் அப்படியேதான் இருக்கிறார்! முகம், உடல், கண் உட்பட அனைத்து இடங்களிலும் அடர் சாம்பல் வண்ணத்தில் டாட்டூ போட்டுக்கொண்டிருக்கிறார். தலை, புருவம், இமை முடி களுக்கு டை அடித்து வெள்ளையாக மாற்றிவிட்டார். “நான் இருபது ஆண்டுகளாக டாட்டூ பயன்படுத்தி வருகிறேன். ஆரம்பத்தில் சில எழுத்துகளைத்தான் எழுதி வைத்திருந்தேன். காலம் செல்லச் செல்ல டாட்டூ மீது ஆர்வம் அதிகரித்துவிட்டது. இன்று என் உடலில் 90% டாட்டூவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கூட டாட்டூவை நிறுத்தும் எண்ணம் வரவில்லை. 99% வரை டாட்டூ போடும் திட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய கடினமான காலகட்டங்களை இந்த டாட்டூகளால்தான் எளிதாகக் கடந்து வந்திருக்கிறேன். 22 வயதில் பெருங்குடலில் புற்றுநோய் வந்துவிட்டது. நோயிலிருந்து மீளவும் கடினமான சிகிச்சையிலிருந்து வெளிவரவும் எனக்குத் துணையாக நின்றது டாட்டூதான். என்னுடைய இந்த டாட்டூ விருப்பத்தை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனக்கு மன அழுத்தம், சாப்பிடுவதில் குறைபாடு, தற்கொலை எண்ணம் போன்றவையும் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து என்னை மீட்டெடுத்ததும் டாட்டூகள்தான்” என்கிறார் ஆடம்.

மிரட்டும் தனித்துவம்!

பிரிட்டனின் வில்ட்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் அன்தியா ரிங். இவர் கடந்த 1937-ம் ஆண்டு ஒரு ப்ளாக்பெர்ரி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டார். 9 மாதக் குழந்தையான அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன. உடல் முழுவதும் பூச்சிக்கடிகள். குழந்தையின் பெற்றோர் யார் என்று நாடு முழுவதும் தேடியது அரசாங்கம். யாரும் குழந்தையைத் தேடி வராததால், 6 மாதங்களுக்குப் பிறகு ஒரு குடும்பத்திடம் தத்து கொடுக்கப்பட்டது. 25 வயதில் ப்ளாக்பெர்ரி தோட்டத்திலிருந்து தான் கண்டெடுக்கப்பட்ட விஷயம் இவருக்குத் தெரியவந்தது. உடனே தன் பெற்றோரைத் தேட முடிவெடுத்தார். 35 ஆண்டுகள் தீவிரமாகத் தேடியதில் லீனா ஓ டோன்னெல் இவரது அம்மாவாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். 1945-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு 4 குழந்தைகள் இருந்தனர். லீனா உயிருடன் இல்லாததால் மகன்களில் ஒருவரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் லீனா தன்னுடைய அம்மா யார் என்று அறிந்துகொண்டார் அன்தியா. அடுத்தது அப்பாவைத் தேடும் பணி ஆரம்பித்தது. அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர்தான் இவரது அப்பாவாக இருக்கமுடியும் என்ற முடிவுக்கு வந்தனர். ஒரு குடும்பத்தையும் கண்டுபிடித்தனர். 6 மகன்கள் இருந்த அந்தக் குடும்பத்தில் அவரது தந்தை ஏற்கெனவே மறைந்துவிட்டார் என்ற விவரம் அறிந்தனர். அன்தியாவுக்காக ஒரு மகன் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டார். 30 ஆண்டுகளுக்கு முன்பு பாட்ரிக் கோய்ன் எழுதிய கடிதத்தில் இருந்த தபால் தலையை எடுத்தனர். எச்சில் தடவி ஒட்டிய தபால் தலையிலிருந்தும் அவரது மகனின் எச்சிலில் இருந்தும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் அன்தியாவுடன் ஒத்துப்போயின. 81 வயதான இவர், தன்னுடைய அப்பா, அம்மா யார் என்ற உண்மையை அறிந்துகொண்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால் ஏன் கைகளைக் கட்டி தனியாக விட்டனர் என்ற கேள்விக்கு மட்டும் விடை இன்னும் தெரியவில்லை.

பெற்றோரைத் தேடிய ஒரு பெண்ணின் போராட்டம் ஆச்சரியம் அளிக்கிறது!

http://tamil.thehindu.com/world/article23329820.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மலைப்பாம்புக்கு ஸ்கேன்!

 

 
24chskopic

அமெரிக்காவின் கொலம்பஸ் விலங்குகள் பூங்காவில் வசித்த ஹன்னா என்ற மலைப்பாம்புக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. நோய்த்தொற்றால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள் மருத்துவர்கள். மலைப்பாம்பை ஸ்கேன் செய்து பார்த்துவிட முடிவெடுத்தனர். 19 அடி நீளமும் 63.5 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை 6 பேர் தூக்கி, ஒரு பெட்டியில் வைத்து, ஸ்கேன் மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கே மலைப்பாம்புக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, ஸ்கேன் கருவியில் வைக்கப்பட்டது. மிக நீளமான மலைப்பாம்பு என்பதால் இரண்டாக மடித்து படுக்க வைத்தனர். முன்பக்கம் ஒன்றும் பின்பக்கம் ஒன்றுமாக இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட்டது. “எங்கள் ஊழியர்தான் மலைப்பாம்பின் முகம் வீக்கமாக இருப்பதைக் கண்டறிந்தார். அடிப்படை மருத்துவம் செய்து பார்த்தோம். சரியாகவில்லை. விலங்குகளுக்கு எக்ஸ்ரே மிகச் சிறந்த பலனை அளிப்பதில்லை. அதனால் சிஏடி ஸ்கேன் செய்ய முடிவெடுத்தோம். ஸ்கேனில் பிரச்சினை தெரிந்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் குணப்படுத்திவிடுவோம். ஒரு மலைப்பாம்புக்கு ஸ்கேன் செய்தது இதுதான் முதல்முறை. அந்தச் சிறப்பைப் பெற்றிருக்கிறாள் ஹன்னா” என்கிறார் பூங்காவின் நிர்வாகி.

அட! மலைப்பாம்புக்கு ஸ்கேன்!

வியட்நாமின் ஹானோய் நகரில் நோயுற்ற காட்டுப்பன்றியை நாய்கள் வேட்டையாடும் நிகழ்ச்சியை ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விஷயத்தைச் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியது. வேட்டையை நேரில் காண்பதற்காகக் குறிப்பிட்ட நாளன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஸ்மார்ட்போன்கள், கேமராக்களுடன் குவிந்தனர். ஒரு பெரிய மைதானத்தில் கூண்டில் கொண்டுவரப்பட்ட காட்டுப் பன்றியை வெளியேவிட்டனர். விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் காட்டுப்பன்றி வேகமாக நடக்க ஆரம்பித்தது. திடீரென்று மிகப் பெரிய வேட்டை நாய்களை அவிழ்த்துவிட்டனர். அவற்றைக் கண்டவுடன் காட்டுப்பன்றி பயந்து ஓட முயற்சி செய்தது. ஆனால் நோயாலும் ஒற்றையாக இருப்பதாலும் நாய்களைக் காட்டுப்பன்றியால் சமாளிக்க முடியவில்லை. வலியில் கதறியது. அங்கும் இங்கும் ஓடியது. நாய்களும் துரத்தி, துரத்தி வேட்டையாடின. கூடியிருந்த மக்களும் காட்டுப்பன்றியின் பின்னாலேயே சென்று வீடியோ, ஒளிப்படங்கள் எடுத்தனர். இறுதி யில் காட்டுப்பன்றி உயிரை விட, வேட்டை நாய்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டுத் திரும்பின. வீடியோக்களும் ஒளிப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. உலகமே அதிர்ச்சியடைந்தது. விலங்குகள் நல ஆர்வலர் வு நகோக் தான், “இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை என்னவென்று சொல்வது? காட்டுமிராண்டித்தனமான நாகரிகமற்ற செயல். மனிதர்கள் தங்களுடைய தனித்துவத் தன்மையான மனிதத்தைத் தொலைத்துவிட்டார்களா? திட்டமிட்டுச் செய்த இந்தச் செயலை மன்னிக்கவே கூடாது” என்கிறார். இது தன்னிச்சையாக நடந்த நிகழ்ச்சி, எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்போம் என்றும் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கிறது காவல் துறை.

மனிதர்களையே அடித்துக் கொல்லும் இரக்கமற்ற உலகம், காட்டுப்பன்றிக்குக் கருணை காட்டுமா?

http://tamil.thehindu.com/world/article23339927.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பொம்மை மறு உருவாக்கம்

 
25chskomasala%202

உக்ரைனைச் சேர்ந்த ஆல்கா கமனெட்ஸ்கயா அழகான பொம்மைகளைச் செய்து உலகத்தின் பார்வையைத் தம் பக்கம் திருப்பி யிருக்கிறார். விலை மலிவான பொம்மைகளை வாங்கி, அதைத் தன் கற்பனைத் திறனாலும் கலைத்திறனாலும் முற்றிலும் வேறு ஒரு பொம்மையாக உருவாக்கி விடுகிறார். இந்தப் பொம்மைகள் நிஜ மனிதர்களைப்போல் அத்தனை நேர்த்தியாக இருக்கின்றன! சின்ன வயதில் பொம்மைகளுடன் பொழுதைக் கழித்தவர், வளர்ந்த பிறகு அதை மறந்து போனார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மான்ஸ்டர் ஹை பொம்மைகளைப் பார்த்தார். உடனே சிலவற்றை வாங்கி வீட்டில் வைத்தார். அப்போது இணையதளத்தில் ஏற்கெனவே இருக்கும் பொம்மையை வேறு ஒரு பொம்மையாக மாற்றும் கலைஞர்களைப் பற்றிப் படித்தார். ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து பொம்மைகளை மறு உருவாக்கம் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டார்.

2013-ம் ஆண்டு முதல் பொம்மையை மறு உருவாக்கம் செய்தார். அது மிக அழகாகத் தோன்றியது. ஆனால் மற்றவர் பார்வையில் அப்படி இல்லை. தொடர்ந்து 3 மாதங்கள் பயிற்சி செய்து, மிகப் பிரமாதமான பொம்மையை உருவாக்கிவிட்டார். அன்று ஆரம்பித்த பொம்மை விற்பனை இன்றளவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. “என்னுடைய பொம்மைகள் பிரபலமான பிறகு எனக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. சில நேரங்களில் ஆர்டர்களைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு வேலைகள் குவிந்துவிடும். சாதாரண பொம்மைகளில் இருந்து பிரபலமானவர்களின் உருவங்களைக் கூட உருவாக்கிவிடுகிறேன்” என்கிறார் ஆல்கா.

கலக்கலான பொம்மைகள்!

அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் செர்கியோ லாஸாரோவிச். இவர் ஆணாக இருந்தாலும் சமீபத்தில் தான் ஒரு பெண் என்றும் தன் பெயரை செர்கியா என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் தென் அமெரிக்கா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. சிலர் இவர் திருநங்கையாக இருக்கலாமோ என்று எண்ணுகிறார்கள். இல்லை, இவருக்குத் திருமணமாகி 25 ஆண்டுகளாகிவிட்டன.

இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். அர்ஜென்டினாவில் ஆண்கள் 65 வயதிலும் பெண்கள் 60 வயதிலும் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்பதற்காகவே தன்னைப் பெண் என்று அறிவித்துக்கொண்டார் இவர். இவரது குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டாம் என்றார்கள். ஆனால் பாலினத்தை மாற்றும் முன் வழக்கறிஞரைச் சந்தித்தார்.

அவர் வேலை செய்யும் காலகட்டத்தில் இருக்கும் பாலினப் பாகுபாட்டை எதிர்த்து வழக்கு தொடுப்போம் என்றார். செர்கியோவும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கால் எந்தவிதப் பலனும் ஏற்படவில்லை. பிறகுதான் தானே பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொண்டார். மாற்றுப் பாலினத்தவருக்கு இங்கே சட்டப்படி பாதுகாப்பும் சலுகைகளும் கிடைப்பதால், அதைத் தவறாக இவர் பயன்படுத்திவிட்டார் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். “எல்லோருக்கும் ஓய்வு பெறும் வயது 65 என மாற்றுங்கள். அல்லது 60 என்று மாற்றுங்கள். ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் செர்கியோ. இவரது செயலால் ஓய்வு பெறும் வயதில் நிலவும் பாலினப்பாகுபாடு எதிர்காலத்தில் களையப்படலாம் என்கிறார்கள்.

ஓய்வு பெறும் வயதில் எதுக்கு இந்தப் பாகுபாடு?

http://tamil.thehindu.com/world/article23346750.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பூனை மீட்பர்!

 

 
cat-rescue-guy2
3d-printed-babies-768x432
TAMILTHTemplateLibrarynation21clIMG2
 
 

அமெரிக்காவின் லூசியானா பகுதியைச் சேர்ந்த ரான்டல் கோல்ப், மரங்களில் மாட்டிக்கொண்ட பூனைகளை மீட்கும் பணியை 4 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். ‘‘2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தேன். அப்போது ஒரு பூனையின் துன்பக் குரல் கேட்டது. தோட்டத்தில் இருந்த மரத்தில் பூனை மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. பூனையை மீட்க ஆட்களை அழைத்தேன். ஆனால் 2 நாட்களுக்குப் பிறகே வந்து பூனையை மீட்டெடுத்தனர். அதனால் நானே மரம் ஏறும் பயிற்சியை எடுத்துக்கொண்டேன். தினமும் ஒருமுறை நகரைச் சுற்றி வருவேன். ஏதாவது பூனை மரத்தில் மாட்டிக்கொண்டிருந்தால், அவற்றை உடனே மீட்டுவிடுவேன். பூனைகளுக்கு மரம் ஏறவும் தெரியும்; இறங்கவும் தெரியும். ஆனால் சில பூனைகள் மரக்கிளைகள், பொந்துகளில் சிக்கிக் கொள்வதுண்டு. சில பூனைகளுக்கு உயரமான இடத்திலிருந்து இறங்கத் தெரியாது. யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று காத்திருக்கும். நான் பூனைகளை அதிகம் நேசிக்கிறேன். என்னால் பூனைகள் கஷ்டப்படுவதைச் சகித்துக்கொள்ள இயலாது. இப்போதெல்லாம் பூனைகளை மரங்களில் பார்த்தாலோ, தெருக்களில் ஆதரவு இன்றி சுற்றிக்கொண்டிருந்தாலோ என்னை அழைக்கிறார்கள். சிலர் நான் செய்யும் பணிக்குப் பணம் கொடுப்பார்கள். பணத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு பூனையை மீட்க குறைந்தது அரை மணி நேரம் ஆகும். சில பூனைகள் பயந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அவற்றை மீட்க சில மணி நேரங்களாகும். பலரும் ஆபத்து நிறைந்த இந்தப் பணியை ஏன் செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பூனைகளின் துயர் துடைக்கும் பணி ஆபத்தை விட முக்கியமானது என்று நினைக்கிறேன். இதில் எனக்குத் திருப்தி கிடைக்கிறது. என்னுடைய ஓய்வுக் காலம் மிகவும் உபயோகமாக இருக்கிறது. 4 ஆண்டுகளில் இதுவரை 150 பூனைகளை மீட்டிருக்கிறேன்” என்கிறார் ரான்டல் கோல்ப்.

பூனை மீட்பர்!

 

பெண்கள் தங்கள் வயிற்றிலிருக்கும் குழந்தையை எப்போது கைகளில் ஏந்துவோம் என்று ஆர்வமாகக் காத்திருப்பார்கள். அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, வயிற்றில் இருக்கும் குழந்தையை முப்பரிமாணத்தில் பொம்மையாக உருவாக்கித் தருகிறது ஒரு ரஷ்ய நிறுவனம். இதுவரை வயிற்றில் இருக்கும் குழந்தையை முப்பரிமாண பிளாஸ்டிக் பொம்மையாகத்தான் பலரும் உருவாக்கி வருகிறார்கள். ஆனால் இந்த நிறுவனம் தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்கப் பொருட்களைப் பயன்படுத்தி பொம்மையை உருவாக்குகிறது. முகம், கைகள், கால்கள், நச்சுக்கொடி முதல் கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘‘என் தோழி தன் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிவந்தார். அப்போதுதான் பிறக்காத குழந்தையை முப்பரிமாணத்தில் செய்துகொடுக்கும் யோசனை தோன்றியது. நாங்களும் ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளைத்தான் உருவாக்கினோம். ஆனால் பெற்றோர் விலை மதிப்புமிக்கப் பொம்மைகளாகச் செய்துதரும்படிக் கேட்டனர். அதனால் தங்கம், வெள்ளியால் பூசப்பட்ட பொம்மைகளைச் செய்ய ஆரம்பித்தேன்” என்கிறார் இவான் க்ரிடின். “ஸ்கேன் செய்தபோது குழந்தையின் உருவம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பொம்மை கைக்கு வந்தபோது விவரிக்க இயலாத உணர்வைப் பெற்றேன். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை” என்கிறார் யுலியான ரெகன்.

பிறக்காத குழந்தை பொம்மைகள்!

http://tamil.thehindu.com/world/article23361546.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: விரைவில் மீண்டு(ம்) வருவீர்கள் டைனமோ!

 

 
28chkandynamo

இங்கிலாந்தைச் சேர்ந்த மேஜிக் கலைஞர் டைனமோ உலகப் புகழ்பெற்றவர். தண்ணீரில் நடப்பார், அந்தரத்தில் பறப்பார், பாய்ந்துவரும் நீரைப் பனிக்கட்டியாக மாற்றுவார். மேஜிக் கலைஞர்களுக்குரிய ஆடைகளோ பேச்சோ ஆர்ப்பாட்டமோ இன்றி, வெகு எளிமையாக, அதே நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் மேஜிக் செய்வதில் வல்லவர். 2011 – 2014 வரை உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘டைனமோ: மேஜிசியன் இம்பாசிபிள்’. மிகச் சிறந்த நிகழ்ச்சிக்கான விருதை வென்றது. இந்தத் தொடருக்காக இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, ஏழை எளிய மக்களை நேரடியாக சந்தித்து, மேஜிக் செய்து காட்டினார். இதன்மூலம் ஏராளமான மக்களின் மனதைக் கொள்ளைகொண்டார். இவருக்கு சிறு வயதிலிருந்தே குரோன் (Crohn’s disease) நோய் என்ற ‘குடலிய அழற்சி’ இருந்து வருகிறது. இந்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு இல்லை. 17 வயதில் வயிற்றுப் பகுதியில் பாதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டனர். கடினமான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் ஓரளவு நோயின் தீவிரத்திலிருந்து தப்பி வந்தார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் வயிற்று வலியுடன்தான் கண் விழிப்பார். இவரது தாத்தா மூலம் கற்றுக்கொண்ட மேஜிக் கலையிடம் வலியிலிருந்து தப்பிப்பதற்கு தஞ்சமடைந்தார். கொஞ்சம் கொஞ்சமாக புகழ்பெற்றார். இன்று உலக அளவில் ‘ஸ்டீவன் ஃப்ரேன்’ என்ற இயற் பெயர் மறைந்து ‘டைனமோ’ என்ற பட்டப்பெயர் நிலைபெற்றுவிட்டது. 34 வயதில் தற்போது மீண்டும் குரோன் நோய் தீவிரமாக தலைதூக்கி இருக்கிறது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். “கடுமையான நோய்தான். ஆனால் நேர்மறையான எண்ணங்களால் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியும். எந்த நோயும் நம் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் பாதித்துவிடாமல் பார்த்துக்கொண்டால் சமாளித்துவிடலாம்” என்று ஒருமுறை சொல்லியிருக்கிறார் டைனமோ. சிகிசைக்காக வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்தவர், தன்னுடைய சமீபத்திய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

விரைவில் மீண்டு(ம்) வருவீர்கள் டைனமோ!

 

அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியைச் சேர்ந்த பகாரி வாரென் என்ற பெண்ணுக்கு இறை நம்பிக்கை அதிகம். கடவுள் இருக்கிறார் என்பதைத் தன் இரு குழந்தைகளுக்கு நிரூபிக்க நினைத்தார். காரின் பின் இருக்கையில் குழந்தைகளை அமர வைத்தார். பிறகு, “நான் காரை தந்திக் கம்பத்தில் மோதுவேன், நாம் உண்மையான கடவுள் விசுவாசிகள் என்பதால் இறைவன் நம்மை சிறு காயம் இன்றி காப்பாற்றிவிடுவார்” என்று கூறினார். சொன்னதுபோலவே வேகமாக காரை மோதினார். போக்குவரத்து காவலர்கள் ஓடிவந்தனர். பகாரி வாரெனை விசாரித்தனர். காரணத்தை என் ஃபேஸ்புக்கில் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். சற்று கோணம் தவறியதால் பெரிய விபத்து ஏற்படவில்லை, இல்லையென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற காவலர்கள், பகாரி வாரெனை சிறையில் அடைத்துவிட்டனர். குழந்தைகள் தாத்தா வீட்டில் விடப்பட்டிருக்கிறார்கள்.

ஐயோ… இப்படியா யோசிப்பார்கள்!

http://tamil.thehindu.com/world/article23369915.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.