Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

மாற்றத்தை ஏற்படுத்தவல்ல மருந்து

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p54.jpg

நாம் பொதுவாக ஒரு காரியத்தைத் தொடங்கும்போதே `செய்யலாமா... வேண்டாமா?' எனப் பயங்கர குழப்பத்தில் இருப்போம். அப்படிப்பட்ட நேரத்தில், டாஸ் போட்டு பூவா, தலையான்னு பார்த்து முடிவெடுக்கிறது நம்மில் பலருக்கும் இருக்கும் வழக்கம். கோயிலில் பூ போட்டுப் பார்த்து முடிவெடுக்கிறதும்கூட இந்த வகைதான். இந்த டாஸ் போட்டு முடிவெடுக்கிற பழக்கம் இன்னைக்கு நேத்து இல்லை... ரோமானியர்கள் காலத்தில் இருந்தே மக்கள்கிட்ட இருந்திருக்கு. `எல்லாம் சரி! எதுக்கு இப்போ இந்த விளக்கம்?'னு கேட்கிறீங்களா? படிங்க பாஸ்.

p54a.jpgஉங்களோட பாஸ் ஏதாவது ஒரு வேலை சொல்லி அதை எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவெடுக்கிறதுக்காக, காயினைச் சுண்டிவிட்டு ட்யூப்லைட்டை உடைக்க வேண்டாம் பாஸ். உட்கார்ந்த இடத்தில் கையடக்க ஆண்ட்ராய்ட் மொபைல்லேயே அதுக்கு ஒரு வழி இருக்கு. 'யெஸ் ஆர் நோ' அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுங்க. முடிவெடுக்க நினைக்கும்போது குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு இந்த அப்ளிகேசனைத் திறந்தீங்கனா... ஸ்டார்ட் பட்டன் இருக்கும். அதை க்ளிக் பண்ணிட்டு உங்க ஆட்காட்டி விரலைத் திரையில் தொட்டா இந்த அப்ளிகேஷன் உங்க கைவிரலை ஸ்கேன் பண்ணும் (அட! எல்லாம் சும்மா பில்டப்தாங்க!). அப்புறம் அலசி ஆராய்ஞ்சு ரேண்டம் முறையில் ஆமா, இல்லைனு உங்க அதிர்ஷ்டப்படி இரண்டில் ஒன்றைக் காட்டும்.

ஆமான்னு சொன்னா மனசைத் தேத்திக்கிட்டு வேலையைத் தொடங்குங்க. இல்லைனு சொன்னா, மனசைத் தளரவிடாம மறுபடி முயற்சி பண்ணுங்க. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்குனு யோசிக்காதீங்க  இந்த முறையானது மன அழுத்தத்தைக் குறைத்து, ஒரு காரியத்தில் முடிவெடுக்க உதவும் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்புறம் இந்த அப்ளிகேஷன் சும்மா ஜாலிக்குதான். இது சொல்ற முடிவை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு ஆபீஸ் வேலையை ஒத்திவைக்கிறது, ரொம்ப நாளா ப்ரொபோஸ் பண்றதை தள்ளிப்போடுறது மாதிரியான சீரியஸான முடிவெல்லாம் எடுக்காதீங்கனு இந்த அப்ளிகேஷனை வடிவமைச்சவங்களே சொல்றாங்க. அதனால சும்மா ஜாலி பண்ணுங்க பாஸ்!

டவுன்லோடு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.klimbo.yesorno&hl=en

vikatan

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியம்: ஸ்யாம்

 

p74a.jpg

புளூ டிக்:

``புளூ டிக் வருது.  எல்லாரும்  என் மெசேஜைப் படிச்சுட்டாங்க.  ஆனா, ஒருத்தர்கூட ரிப்ளை பண்ணலை'' - கோபத்தில் வாட்ஸ்அப் குரூப்பைவிட்டு வெளியேறினாள் சுந்தரி.  `சுந்தரி லெஃப்ட்  குரூப்' என்ற  மெசேஜைப் பார்த்து `சுந்தரி ஏன் குரூப்பைவிட்டுப் போயிட்டா?' என அனைவருக்கும் மெசேஜ் அனுப்பினார்கள்.

-  சுஜாதா ஜி


பேசுபொருள்

``அப்பா... ஆபீஸ்ல பேசவேண்டியதை எல்லாம் போன்ல பேசுறியே, அப்ப ஆபீஸுக்குப் போய் என்னதான் பேசுவே?'' என்று கேட்டாள் ஸ்வேதா.

-  மணிகண்டன்


பார்றா!

திருட்டு வி.சி.டி-யைப் பறிமுதல் செய்த போலீஸ்காரர், தன் மகனிடம் கொடுத்து, படம் பார்க்கச் சொன்னார்.

-  ஜெயசந்திரன்


நம்பிக்கை

`யாராவது தன்னைக் காப்பாற்றுவார்'  என,  கடைசி வரையிலும் நம்பினான், தற்கொலை செய்துகொண்ட சபரீசன்.

-  அஜித்


ஷாக்

ட்ரீட்மென்ட் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சைக்கு கிரெடிட் கார்டில் பணத்தைக் கட்டியவன், வழுக்கைத் தலையுடன் வந்த டாக்டரைப் பார்த்து அதிர்ந்தான!

-  சதீஷ்


ஏமாற்றம்:

``அப்பா என்னோட செல்ஃபி எடுத்துக்கிட்டார் ஃபேஸ்புக்ல  போட...  எனக்கு சாக்லேட்கூட வாங்கித் தரல'' - செல்ல மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் விவாகரத்து வாங்கிய கீதா.

-  திருமாளம் எஸ்.பழனிவேல


ஃப்ரெண்ட்

``இவர்தான் என்  பெஸ்ட் ஃப்ரெண்ட்'' என, அப்பா தன் கல்யாண ஆல்பத்தைக் காட்டினார். மகன் தருண் அப்பாவியாகக் கேட்டான்...  `ஃபேஸ்புக்லயா... ட்விட்டர்லயா?''

-  பா.ஜெயக்குமார்


வீடியோ

``டி.வி-யில கண்டதையும் பார்க்காதே... உட்கார்ந்து படி!'' என மகனைத் திட்டியபடியே வாட்ஸ்அப்பில் வந்த வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தாள் பவித்ரா!

-  மணிகண்டன்

ஏரியா


``இந்த ஏரியா நல்லாயிருக்கு''

``ஒரு காலத்துல நல்லா இருந்த ஏரிதான் சார் இது!''

-  கிணத்துக்கடவு ரவி


போதை

``ஓடிப்போன மனைவியை நினைத்துக் குடிக்கிறேன்'' என்றான்.

``அவன் தினமும் குடிப்பதால்தான் வந்துவிட்டேன்'' என்றாள் மனைவி!

-  பரணிசூர்யா

vikatan

  • தொடங்கியவர்

 

சக்தி தருமா தலைப்பாகை?
அமெரிக்கர்கள் தலைப்பாகையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அந்த நினைப்பை மாற்ற புகைப்படங்களால் முடியுமா? முடியும் என்றொரு முயற்சி நடக்கிறது.
  • தொடங்கியவர்

சொல்வனம்

ஓவியம்: எஸ்.இளையராஜா

 

p78a.jpg

வாசம் மாறும் மல்லி

ஒரே வாசமாயிருந்த
மல்லிகைச் சரம்
மூன்றாகப் பகிரப்பட்டு
தலைவி, சகோதரி, தோழி
இவர்களின் கூந்தலில்
குடியேறிய பின்
மூன்று வெவ்வேறு
வாசங்களைத் தருகின்றன எனில்
அவை வெவ்வேறு மல்லி என்றறிக.

- நாகராஜ்

என்னைப்போலவே ஒருவன்

பால்ய காதல் தந்தவளை
அன்று சந்தித்தேன்.
என் போன்று ஆயிரம் மேகங்களை
வெட்டி வீழ்த்திய அந்தப் பளீர் மின்னலை
எண்ணெயின்றி தள்ளாடி
மங்கத் துவங்கும் சிம்னி விளக்காய்
ஆக்கியிருந்தான்
என்னைப்போலவே ஒருவன்.

- ஸ்ரீராம்

மழைக் கவிதை

காகிதக் கப்பல்கள்
செய்துதரச் சொல்லிக் கேட்கிறாய்.
பாதியில்விட்ட மழைக் கவிதை எழுதிய
காகிதங்களைத் தருகிறேன்.
ஒவ்வொன்றாய் மடித்து
கப்பலாக்கித் தந்த பின்
உன் கையிலிருந்து
நீரில் மிதந்துபோகையில்
மின்னும் உனதிந்த
சின்னச் சந்தோஷத்தில்
மிக அழகாக முடிகிறது
மறுபாதி மழைக் கவிதை.

- பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

பள்ளிக்கூட வாசலிலேயே...

பள்ளிக்கூட வாசலில்
ஜவ்வுமிட்டாய் விற்பவருக்கு
ஒரே ஒரு மூங்கிலில் கடை.
மூங்கிலுக்குக் கீழிருக்கும் வளையத்தை
காலால் இழுக்க
உச்சியில் இருக்கும் பொம்மை
ஜிங் ஜிங் எனக் கைதட்டிக் கூப்பிட
வேடிக்கை பார்க்கக்கூடும் குழந்தைகள் கூட்டம்.
ஜவ்வுமிட்டாயில்
கொக்கு பிடித்து கையில் தருவதை
‘அய் கொக்கு...’ எனக் குதூகலிப்பான் ஒருவன்.கடிகாரம் செய்து கையில் மாட்டிவிட்டால்
அதில் நேரம் பார்த்துக்கொண்டு
ஓடுவான் இன்னொருவன்.
ஓசி கேட்டால் சிறு மிட்டாய் இழுத்து
கன்னத்தில் ஒட்டிவிடுவார்...
குதூகலிப்பார்கள்.
கடிகாரத்துக்கும் கொக்குக்கும்
கால் ரூபாயை வாங்கிக்கொள்வார்.
‘அண்ணே அஞ்சு பைசா குறையுது’ என்றாலும்
அதையும் வாங்கிப் போட்டுக்கொள்வார்.
மகிழ்ச்சியையும் சேர்த்து
ஜவ்வுமிட்டாய்க்குக் கொடுத்துவிட்டே
பள்ளிக்குள் நுழைவார்கள் குழந்தைகள்.

- நாகராஜ்

பதில்

தொலைக்காட்சி
நகைச்சுவைப் போட்டி நிகழ்ச்சிகளில்
மனைவியிடம் அடிவாங்கும் கணவன்
துணுக்குகளைப் பார்த்து,
வாய்விட்டுச் சிரிக்கையில்
சலனமின்றி எழுந்து
சமையலறைக்குப்
போய்விடுவாள் அம்மா.

 - ந.சிவநேசன்
 

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று..... 

செப்டெம்பர் - 30

 

1399 : இங்கிலாந்தின் மன்னராக நான்காம் ஹென்றி முடி சூடினார்.

 

1744 : பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின் இணைந்து சார்டீனியா பேரரசை தோற்கடித்தன.

 

1840 : பிரித்தானியரால் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 

818M_Id_393936_Vishwanathan_Anand.jpg1882 : தோமஸ் அல்வா எடிஸனின் முதலாவது வர்த்தக நீர்மின் நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்ஸின் மாநிலத்தில் செயற்பட ஆரம்பித்தது.

 

1895 : மடகஸ்கார், பிரெஞ்சினால் பாதுகாக்கப்பட்ட அரசாக அறிவிக்கப்பட்டது.

 

1901 : ஹியூபேர்ட் செசில் பூத் தூசுறிஞ்சிக்கான காப்புரிமம் பெற்றார்.

 

1935 : அரிசோனா, நெவாடா மாநிலங்களின் எல்லையில் அமைக்கப்பட்ட ஹுவர் அணை திறக்கப்பட்டது.

 

1938 : “பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்" நடத்தப்படுவது நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.

 

1945 :  இங்கிலாந்தில் ரயில் விபத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

 

1947 : பாகிஸ்தான், யேமன் ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.

 

1965 : இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்தார். இதன்போது  சுமார் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

 

1966 : “பெக்குவானாலாந்து" பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக அறிவித்து பொட்ஸ்வானாக் குடியரசு ஆகியது.

 

1967 : இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாகியது.

 

1968 : போயிங் 747 விமானம் முதல் தடவையாக, காட்சிப்படுத்தப்பட்டது.

 

1993 : இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லட்டூர் மற்றும் ஒஸ்மனாபாத் நகரங்களில் இடம்பெற்ற பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

 

2001 : இந்தியக் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார்.

 

2007 : இந்திய சதுரங்க (செஸ்) வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்ஸிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சம்பியன் ஆனார்.

 

2009 : இந்தோனேஷியாவின் சுமத்தரா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1,115 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சென்னைக்கு மிக அருகில் இப்படியொரு அழகான தீவு இருக்குனு தெரியுமா? #ChennaiTravel

சென்னைவாசியோ, சென்னையின் பூர்வகுடியோ... வீக்  எண்ட் அவுட்டிங் என முடிவானதும் பெரும்பாலும் டிக் அடிப்பது மெரினா அல்லது பெசண்ட் நகர், ஏதாவது ஓர் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர். ”சென்னைல வேற என்னப்பா இருக்கு...” என்ற சலிப்பு வருவது உண்மைதான். ஆனால், இந்தப் படத்தை பாருங்கள். 

ஆலம்பரை

பேங்காக்கோ, மொரீஷியஸோ... என்கிறீர்களா? இந்த இடம் இருப்பது சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில். ரியல் எஸ்டேட்காரன் மாதிரி சொல்வதென்றால் சென்னைக்கு மிக அருகில்...இன்னும் சரியாக சொன்னால், சென்னை  மகாபலிபுரத்தில் இருந்து  50 கிமீ 

ஆலம்பறை கிராமத்தில் முதலில் நம்மை வரவேற்பது 1000 ஆண்டுகள் பழமையான  முகலாயர்களின் துறைமுகம் .இதை 1700-ம் நூற்றாண்டில் செங்கல்  மற்றும்  எலுமிச்சை பழச்சாறு கொண்டு உறுதியாக கட்டியது  முகலாய பேரரசு .பின்னார் 1750 களில் கடைசி நவாப்புக்கும் ஆங்கிலேயர்க்கும் நடந்த போரில் இந்த கோட்டை இடிக்கப்பட்டு தற்போது அதனுடைய சிதைந்த பாகங்களே எஞ்சி இருக்கின்றன

மூன்று புறமும் தண்ணீரால்  சூழப்பட்டுள்ள இக்கோட்டையின் பின் புறத்தில் ஆறு கடலுடன் கலக்கும் காட்சியை பார்க்கலாம். ஆறு, கடல் என தண்ணீரால் சுழப்பட்ட இங்கு   500க்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்க்கின்றனர். மீன் பிடித்தல் இவர்களுக்கு பாரம்பரிய  தொழில். கோட்டையில் இருந்து 20 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது வெள்ளை நிறம் மணல்களை கொண்ட இளைட்  தீவு. மிக அழகான தனிமை வாய்ந்த  இந்தத் தீவு சட்டென நம் மனதை இலகுவாக்குக்கிறது. 

பார்க்கும் திசை எல்லாம் தண்ணீர். அதில் ஒரு கரையில் கம்பீரத்தோடு விளங்கும் கோட்டை, வெளிநாட்டு தீவினை போன்று அழகுற காட்சி அளிக்கும் தனித்தீவு என இங்கு வரும்  சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த  பொழுது போக்கும் இடமாகவும் புகைப்படங்கள்  எடுக்கும் ஸ்பாட்டாகவும் விளங்கிறது இந்த இடம்  .

ஆலம்பரை ஃபோட்டோ ஆல்பத்துக்கு இங்கே க்ளிக் செய்யவும். 

இனி என்ன நீங்களும்... வீக் கேண்டில் உங்க குடும்பம் ,நண்பர்களுடன் ஜாலியா ஒர் விசிட் போய்ட்டு வாங்க!! 

 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

இந்தியாவின் முதல் 'டிராஃபிக்' சிக்னல் ஸ்கூல்! #TrafficSignal

signalschool1.jpg

டிராஃபிக் சிக்னலில் எப்படா க்ரீன் லைட் எரியும்னு நாம் காத்திருப்போம்! ஆனால் கொஞ்சம் நேரம் ரெட் லைட்டே இருக்கட்டும்னு நினைப்பவர்கள், அங்கு பிச்சை எடுப்பவர்கள். அவர்களில் பலர் சிறுவர்களாக இருப்பது பெரும் அவலம். வறுமை, பசி காரணமாக பெற்ற பிள்ளைகளையே பிச்சை எடுக்க விடுகின்றனர். (சிலர் கடத்தி வரப்பட்டு இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்) அவர்களில் சிறுவர்களைத் தவிர மற்றவர்கள் பள்ளிக்கூடத்தின் வாசலையே மிதிக்காதவர்களாக இருப்பார்கள். தற்போது நம் நாட்டில் 1.2 மிலியன் சிறுவர்கள் இன்னும் பள்ளிக்குச் செல்லாதவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லாம் 6 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள். அந்தச் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என தோன்றுகிறது அல்லவா... ஒரு தொண்டு நிறுவனம் அதற்கான முதல் முயற்சியை எடுத்துள்ளது.

aarti_f.jpg

சிக்னல்களில் பிச்சை எடுக்கும், பொருட்கள் விற்கும் சிறுவர்களுக்காக Samantha Bharat Vyaspith (SBV) என்ற தொண்டு நிறுவனம் 'சிக்னல் ஷாலா' (Signal Shala) என்ற பெயரில் ஒரு பள்ளியைத் திறந்துள்ளது. இந்தியாவிலேயே பதிவு செய்யப்பட்ட முதல் டிராஃபிக் சிக்னல் ஸ்கூல் இதுதான். ''மும்பையில் உள்ள அதிக டிராஃபிக் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுக்கும், பொருட்களை விற்கும் சிறுவர்களைப் பற்றி சில மாதங்களில் தகவல்களைச் சேகரித்த இந்தத் தொண்டு நிறுவனம்.

signalschool_f.jpg

''சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து பேசியதில் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சி நிலவும் கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக மும்பை நகரத்துக்கு வந்ததாக தெரிவித்தனர். கல்வியினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விவரித்து சிறுவர்களை படிக்கவைக்க பெற்றோர்களிடம் சம்மதம் பெற்றோம். ஆனால் அவர்கள் எளிதாக சம்மதிக்கவில்லை, பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது'' என்கிறனர் தொண்டு நிறுவன நிர்வாகிகள். ஷிப்பிங் கன்டெய்னர் ஒன்றை வாங்கி, மும்பையில் உள்ள 'தானே' பகுதியில் ஒரு பாலத்தின் கீழே அழகான வகுப்பறையாக மாற்றி கடந்த ஜூன் 15-ம் தேதி 'சிக்னல் ஷாலா' என்ற பெயரில் பள்ளி தொடங்கப்பட்டது.

school2.jpg

சிக்னல்களில் இருக்கும் சிறுவர்களிடம் பேசி சமாதானம் படுத்தி, அடம் பிடித்தவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிகொடுத்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். தொடக்கத்தில் ஆர்வம் காட்டமல் இருந்த சிறுவர்கள் நாளடைவில் தானாகவே ஆர்வத்துடன் பள்ளிக்கு வரத்தொடங்கினார்கள். இங்கு படிப்பு மட்டும் அல்ல; நல்ல பழக்க வழக்கங்களையும் சொல்லித் தரப்படுகிறது. பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தர முழு நேர ஆசிரியர்கள் நான்கு பேர் மற்றும் ஓர் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்டெய்னரில் ஃபேன் வசதியோடு கிளாஸ் ரூம், ஆசிரியர் அறை, கழிவறை எனப் பல வசதிகள் உள்ளன. மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது.

தற்போது 22 மாணவர்கள் படித்துவரும் இந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு வரை படித்து பாதியிலேயே நின்றுவிட்ட மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு, அவர்களை பொதுத்தேர்வுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

சிக்னல் நமக்கு விழி காட்டுவதுபோல இந்த 'டிராஃபிக்' சிக்னல் பள்ளி மாணவர்களுக்கு நல்ல வழி காட்டி வருகிறது என்றால் பெருமைக்குரிய விஷயம்தானே.

vikatan

  • தொடங்கியவர்

கானுயிர்க் காதலி!

 

“ஒரு இடத்துக்குப் போறதுக்கு யார்கிட்டயும் அட்ரஸ் கேட்காம நம்மளால போக முடியல. ஆனா ஒவ்வொரு வருஷமும் ரஷ்யாவில இருந்து எந்த ஜிபிஎஸ் மேப்பும் இல்லாம பறவைகள் இந்தியா வருதுங்க.  மனிதப்பிறவிதான் எல்லாத்துலயும் உயர்ந்ததுனு நாம நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஐந்தறிவுனு சொல்லிட்டு இருக்கிற இந்தப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கோபமும் இருக்கு, பாசமும் இருக்கு, நம்மளவிட அதிகமாவே அதுங்களுக்குள்ள ஒற்றுமையும் இருக்கு!'' - உற்சாகமாகப் பேசுகிறார் ராதிகா ராமசாமி. இந்தியக்காடுகளில் வலம்வரும் நம்ம ஊர் தேனி பெண். தற்போது டெல்லியில் வசித்துவரும் இவர் இந்தியாவின் முதல் பெண் கானுயிர் புகைப்படகலைஞர் (wildlife photographer). இவர் எடுத்த புகைப்படம் ஒன்றை wwf (world wild fund )நிறுவனம் 2017ம் ஆண்டுக்கான காலண்டரில் அட்டைப்படமாக அலங்கரிக்க உள்ளது.

p4.jpg

“படிச்சது இன்ஜினீயரிங், சின்னவயசுல இருந்தே கேமராவும் கையுமாதான் இருப்பேன். 2004க்குப் பிறகுதான் முழுநேரமா கேமராவோடு சுத்த ஆரம்பிச்சேன். பறவைகளோடும் விலங்களோடும் பயணிப்பது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்குப் போயிருக்கிறேன். தமிழ்நாட்டுல வால்பாறை ரொம்பப் பிடிக்கும். இந்த வேலையில ஆண், பெண் எனத் தனித்தனியாக சவால்கள் எதுவும் இல்லை. சவால்கள் எல்லோருக்கும் பொதுதான்!

இந்த வேலைனு இல்ல, எந்த வேலையா இருந்தாலும் வேலைனு நெனைச்சு செய்யாம, காதலிச்சுப் பண்ணினாத்தான் திருப்தியா செய்ய முடியும்.

இந்தப் பயணத்துல கத்துக்கிட்டது ஒண்ணுதான். இயற்கையை நாம நேசிச்சா இயற்கை நம்மை நேசிக்கும். இந்தக் காடுகளையும்  உயிரினங்களையும் சார்ந்துதான் நாம இருக்கோம். நம்மள நம்பி இயற்கை கிடையாது... காடுகள் நல்லா இருந்தாத்தான் நாம நல்லா இருக்க முடியும்.'' புன்னகையில் மிளிர்கிறார் ராதிகா ராமசாமி!

தன் மனதுக்கு நெருக்கமான சில புகைப்படங்களை, அதன் நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார் அவர்.

p4a.jpg

சர்ப்ரைஸ் சந்திப்பு: ``அது ஒரு டிசம்பர் குளிர்காலம். புலி பார்க்கப் போகலாம்னு ஜிம்கர்னெட் பார்க் போயிருந்தோம். மூணு நாளா புலி கண்ணுலயே படல. சரி அவ்வளவுதான் போல நமக்கு கெடைச்சதுனு கிளம்பப் போறப்ப ஒரு ஓடை மறைவிலிருந்து புலி வர ஆரம்பிச்சது. அந்தப் புலிக்கு இணையாக மானும் நின்னுட்டு இருந்துச்சு. எப்படியும் மான் வேட்டை இருக்கும்னு காத்துக்கிட்டே இருந்தேன். ஆனா புலி அப்படியேதான் நின்னுச்சு. இப்படி எதிரும்புதிருமான இரு விலங்குகளை ஒரே ஃப்ரேமுக்குள்ள கொண்டுவந்ததுக்காவே இந்த போட்டோ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்''

p4c.jpg

எல்லைதாண்டிய பயங்கரவாதம்: ``பரத்பூர் காட்டில் எடுத்த படம் இது. டார்ட்டர்ஸ் பறவைகள் இவை. இந்தப் புகைப்படத்தைப் பார்ப்பதற்கு இரண்டு டார்ட்டர் பறவைகளும் சந்தோஷமா நடனமாடுவதைப் போலத்தான் இருக்கும். ஆனா இது அப்படி இல்லை. நாம சண்டை போட்டுக்குவோம்ல இது என்னோட ஏரியா அது உன்னோட ஏரியான்னு... அது மாதிரி ஆற்றில் மீன் வேட்டையின்போது இரண்டு டார்ட்டர் பறவைகளும் சண்டை போட்டுட்டு இருந்தப்போ எடுத்த போட்டோ இது. இந்த போட்டோதான் தற்போது wwfன் காலண்டருக்காகத் தேர்வாகியுள்ளது!''

p4b.jpg

  தாயின் கோபம்:  ``குழந்தை வளர்ப்பு மனிதர்களுக்கு மட்டுமா? தாய்ப்பாசம் எல்லாருக்கும் பொதுவானதுதானே! இந்தப் பல்லிகள் சோம்பேறிகள்.இவை மரப்பொந்துகளில் உள்ள முட்டைகளைத்  திருடிக்கொள்பவை.ஒரு சாயங்கால நேரத்துல ஓடையில் குளித்துக்கொண்டிருந்த வாத்துகளைப் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் `சடசட'வென சத்தம் வந்ததைக் கேட்டு திரும்பிப் பார்த்தா, இந்தக்கிளி சண்டை போட்டுக்கிட்டு இருந்துச்சு. அதுஒரு தாயின் கோபம், ஆபத்திலிருந்து தன் பிள்ளைகளைக் காப்பாற்ற பெத்தவங்க எடுக்குற முயற்சி. இப்பச் சொல்லுங்க, மனுஷங்களைவிட இந்த உயிரனங்கள் எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டாங்க?''

p4d.jpg

நண்பேண்டா: ``இந்தப் போட்டோவைப் பார்த்தா இரண்டு பறவைகளும் காதல்ல இருக்குற மாதிரி இருக்கும். ஆனா அது தான் இல்ல. இந்தப் போட்டோ மஹாராஷ்ட்ரால எடுத்தது. ஆந்தைகள் இரவுநேரத்துல மட்டும்தானே வெளில தெரியும். ஆனா குளிர்காலத்துல மரப் பொந்துகளில் இருக்கிற ஈரப்பதம் காரணமா வெளில வந்து குளிர்காய ஆரம்பிக்கும். தன்னைத்தானே சுத்தம் செஞ்சுக்கிறதைப் `ப்ரீச்சிங்'னு சொல்லுவாங்க. ஆனா யாராலயும் முழு உடம்பையும் தனக்குத்தானே சுத்தம் செஞ்சுக்க முடியாது இல்லையா? அதனால ஒரு ஆந்தை இன்னொரு ஆந்தைக்கு சுத்தம் செஞ்சுவிடும். நட்பு எல்லா உயிர்களிடத்திலும் இருக்கு!''

p4e.jpg

`குட்டி' ராஜாங்கம்:  ``தன்னோட குட்டிக்கு தாய்ப்புலிதான் எல்லாமே பழக்கிக் கொடுக்கும். அதேநேரத்துல ஒரு புலிக்கும் இன்னொரு புலிக்கும் இடையே வசிப்பிடம் குறைஞ்சது இரண்டு கிலோமீட்டர்னு அதுவே எல்லை தீர்மானிச்சுக்கும். அதனால ஒரே நேரத்துல இப்பிடி சேர்த்துப் புலியைப் பார்க்கிறதுங்கிறது அபூர்வம். அதுவும் அவை ஆறுமாசக் குட்டிகள்! என்னோட ஃபேவரைட்!'' 

vikatan

  • தொடங்கியவர்
 

இந்தியாவின் 'அம்பானி ' நகரங்கள் பட்டியல் ! #wealthiestIndianCities

mumb.jpg

இந்தியாவின் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. இந்த நகரில் 45 ஆயிரம் மில்லியனர்களும் 28 பில்லியனர்களும் உள்ளனர். மும்பை கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 820 பில்லியன் அமெரிக்க டாலர்கள் .

டெல்லிக்கு இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இங்கு 22 ஆயிரம் மில்லியனர்களும் 18 பில்லியனர்களும் உள்ளனர். டெல்லி கோடீஸ்வரர்களின் மொத்த மதிப்பு 450 பில்லியன் அமெரிக்க டாலர்கள் .  பெங்களூருவுக்கு மூன்றாம்  இடம். இந்த நகரத்தின் கோடீஸ்வரர்களின் மொத்த மதிப்பு 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 7,500 மில்லியனர்களும் 8 பில்லியனர்களும் வசிக்கின்றனர்.

4வது இடத்தில் ஹைதரபாத்  உள்ளது. 310 பில்லியன் டாலர்கள் மதிப்புடன் 8,200 மில்லியனர்களும் 7 பில்லியனர்களும் இங்கு உள்ளனர். கொல்கத்தா நகரின் கோடீஸ்வரர்களின் மொத்த மதிப்பு 290 பில்லியன் டாலர்கள். 8,600 மில்லியனர்கள் 10 மில்லியனர்கள் இங்கு வசிக்கின்றனர். கொல்கத்தாவுக்கு இந்த பட்டியலில் 5வது இடம். புனே நகருக்கு 6வது இடம். 3,900 மில்லியனர்கள் 5 பில்லியனர்களும் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் பட்டியலில் சென்னைக்கு 7வது இடம். இங்கு 6,200 மில்லியனர்களும் 4 பில்லியனர்களும் உள்ளனர். சென்னை கோடீஸ்வரர்ரகளின் மொத்த மதிப்பு 150 பில்லியன் டாலர்கள். கிர்கான் 8வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு 3,600 மில்லியனர்களும் 2 பில்லியனர்களும் உள்ளனர். இந்த நகரின் மொத்த மதிப்பு 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

நியூ வோர்ல்டு வெல்த் நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஜுன் மாதம் வரை நடந்த ஆய்வு முடிவில் இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவில் மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரம் மில்லியனர்களும் 95 பில்லியனர்களும் உள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நிதித்துறை, தகவல் தொழில் நுட்பம், ஹெல்த் கேர், மீடியா, ஹெல்த் இன்சூரன்ஸ்த் துறைகள் அதீத வளர்ச்சி காணும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து இருந்தால் மில்லியனர்களாவும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து இருந்தால் பில்லியனர்களாகவும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

Royal Turf Club SLABA Runway 2016 பெஷன் ஷோ கடந்த வாரம் கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

 

1655.jpg

 

1651.jpg

 

The Sri Lanka Apparel Brands Association (SLABA)> The Royal Turf Club ஆகி­யன இணைந்து இப்­பெஷன் ஷோவை ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

 

1652.jpg

 

1653.jpg

 

20 வர்த்­தக நாமங்­களின் (பிராண்ட்ஸ்) 180 இற்கு மேற்­பட்ட ஆடை வடி­வ­மைப்­புகள் இலங்­கையின் முன்­னிலை மொடல்கள் 24 பேரினால் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன. மொடல்­களின் அணி­வ­குப்பை பிரையன் கேர்­கோவன் இயக்­கினார்.

 

1654.jpg

 

165DSC_0823.jpg

 

தேச­மான்ய ஏ.வை.எஸ்.ஞானத்தின் எண்­ணக்­க­ருவின் படி ஸ்தாபிக்­கப்­பட்ட The Sri Lanka Apparel Brands Association (SLABA) அமைப்பில் தற்­போது 60 இற்கு மேற்­பட்ட முன்­னிலை வர்த்­தக நாமங்கள் அங்கம் வகிக்­கின்­றன.

 

165DSC_0896.jpg

 

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p38a.jpg

* `கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒரே எடையில் இருக்கும் நடிகை!' என ட்ரெண்ட் ஆகியிருக்கிறார் த்ரிஷா. அவருடைய உடல் எடை, 55 கிலோவுக்கு மேல் ஒரு கிலோகூட இதுவரை கூடவில்லையாம். தமிழ் சினிமாவின் ஹெவி வெயிட் கதாநாயகிகள் லிஸ்ட்டில், 62 கிலோ எடையுடன் முதல் இடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ஒல்லி கில்லி!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிகில், கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.`கர்நாடகாவில் நம்ம கட்சிக்கு செல்வாக்கு குறைந்துவருகிறது. நம்ம ஆள் சினிமாவில் நடித்தால்தான் கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்' என்ற ஆலோசனைகளின் பேரில் தேவகவுடாவின் ஆசீர்வாதத்தில் நிகில் ஹீரோவாகி இருக்கிறார். ஃபார்முலா பழசு!

மகன் - தம்பி பாசத்துக்கு இடையே சிக்கித் தவிக்கிறார் முலாயம் சிங். உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், தன்னுடைய சித்தப்பா சிவ்பால் யாதவின் ஆட்களை கட்சியில் இருந்து தூக்கியடிக்க, சிவ்பால் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதற்கிடையே சமாஜ்வாதி கட்சித் தலைவர் பதவியில் இருந்து மகன் அகிலேஷைத் தூக்கிவிட்டு, தம்பி சிவ்பால் யாதவைத் தலைவராக அறிவித்தார் முலாயம். இந்தக் குடும்ப மோதலுக்குக் காரணம் அமர்சிங்தான் எனச் சொல்லப்பட, `தேர்தல் நேரத்தில் இந்த சூப்பர் சண்டை!' என எதிர்க்கட்சிகள் உற்சாகத்தில் இருக்கின்றன. குடும்ப அரசியல்

58,000 கோடி ரூபாய்க்கு, 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து வாங்கியிருக்கிறது இந்தியா. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே டீல் பேசப்பட்டு சர்ச்சைக்குள்ளான இந்த ஒப்பந்தத்தை, விலை குறைத்துப் பேசி முடித்திருக்கிறார் மோடி. மணிக்கு 2,000 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்கும் இந்த விமானத்தைக் கண்டறிவதும் தாக்குவதும் சிரமம் என்பதுதான் இதன் சிறப்பு. டீல் இப்போது முடிந்துவிட்டாலும் முதல் விமானத்தின் டெலிவரியே இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்துதான். மோடீல்!

p38b.jpg

பிராஞ்சலீனா ஜோடி பிரிந்துவிட்டது என்பதுதான் கடந்த வார நெஞ்சம் நொறுக்கும் செய்தி. `ஏஞ்சலீனா ஜோலிக்கு, தன்னுடைய அப்பாவைப் பிடிக்காது. அதனால்தான் தனது பெயரில் இருந்தே அப்பாவின் பெயரைத் தூக்கினார். ஆனால் பிராட் பிட், ஏஞ்சலீனாவின் அப்பாவுடன் நட்பானது, குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக்கொள்ளாமல் பிராட் பிட் தொடர்ந்து ஷூட்டிங்குக்காக ஊர்சுற்றுவது என்பதுதான் இருவரின் பிரிவுக்கும் காரணம்' என்கிறது ஹாலிவுட் மீடியா. கண்ணுபட்டுடுச்சோ!

`ஏடிஹெச்டி' எனப்படும் கவனச்சிதறல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வீரர்கள், ஊக்க மருந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது ஊக்க மருந்து தடுப்பு நிறுவனமான WADA. ஆனால், இதையே காரணமாக வைத்து நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க விளையாட்டு வீரர்கள் ஏடிஹெச்டி நோயால் பாதிக்கப்பட்டதாக ஊக்க மருந்து உட்கொண்டு பதக்கம் வென்றிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. இப்படி சிக்கியவர்களில் ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வென்ற சிமோன் பைல்ஸும் இருக்கிறார். சிமோன் பைல்ஸ் தோற்றுபோய் இருந்தால் நம்ம ஊர் திபாவுக்கு ஒரு பதக்கம் கிடைத்திருக்கும். ஆனால், சிமோனோ `நான் சின்னக் குழந்தையில் இருந்தே ஏடிஹெச்டி நோய்க்காக மருந்து உட்கொண்டுவருகிறேன்' எனச் சொல்லியிருக்கிறார். போங்காட்டம்!

vikatan

  • தொடங்கியவர்

 

அதிகம் கடத்தப்படும் பாலூட்டி
===========================
உலகில் அதிகமாக கடத்தப்படும் பாலூட்டி விலங்கினம் எறும்புதின்னிகள். சாதுவான இந்த எறும்புதின்னிகள் ஆப்ரிக்கா ஆசியா போன்ற வெப்ப- மண்டலப் பகுதிகளில் காணப்படும். கடந்த பத்தாண்டுகளில் பத்து லட்சம் எறும்தின்னிகள் வேட்டையாடப்பட்டன.எறும்புண்ணிகளின் செதில்களில் கெரட்டினால் அமைக்கப்பட்டுள்ளன.காண்டாமிருக கொம்புகளிலும் இதுவே காணப்படுகிறது.சீனா மற்றும் வியட்நாமில் பாரம்பரிய மருந்துகளுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.உடனடி நடவடிக்கை இல்லாவிட்டால் இந்த இனமே அழிந்துவிடலாம் என ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

  • தொடங்கியவர்

கண் முன்னால் ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் கார் (Video)

 

கண் முன்னால் ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் கார் (Video)

வாகனங்களில் இருந்து கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிட்டுள்ளனர் துருக்கியைச் சேர்ந்த பொறியியலாளர்கள்.

சிவப்பு பி.எம்.டபிள்யு கார், கண் முன்னால் ஒரு ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

முழுமையான கார், ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒவ்வொரு பகுதியாக மாற்றம் அடைந்து, இறுதியில் பிரம்மாண்டமான அன்டிமோனாக உருவெடுத்து நிற்கிறது.

தலை, கை, விரல்கள், கால்கள் என்று ஒவ்வொன்றையும் அசைத்து, பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இன்னும் நடக்கும் அளவுக்கு இந்த அன்டிமோன் முன்னேற்றமடையவில்லை. தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த காரை சாதாரணமாக ஓட்டிச் செல்லவும் முடியும். தேவையானபோது அன்டிமோனாக அவதாரம் எடுக்க வைக்கவும் முடியும்.

30 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஒரு கார்ட்டூன் கதாப்பாத்திரத்தை, வாகனத்தில் இருந்து உருவாக்கிக் காட்டும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது.

12 பொறியியலாளர்கள், 4 தொழில்நுட்ப வல்லுனர்கள் சேர்ந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

வெவ்வேறு வித கார்களில் 4 கதாப்பாத்திரங்களைத் தற்போது உருவாக்கி வருகிறார்கள்.

இந்த ரோபோ கார் விற்பனைக்கு வந்தால், வாங்குவதற்குப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

 

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

முதல் செல்ஃபி!

 

தொட்டில் முதல் சுடுகாடு வரை சகலமும் செல்ஃபி மயமாகிவிட்டது. மாய்ந்து மாய்ந்து எடுக்கும் செல்ஃபிக்களின் எண்ணிக்கை உலக மக்கள்தொகையை எல்லாம் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த ட்ரெண்ட் இப்போது தொடங்கியது என்றாலும் விதை 19-ம் நூற்றாண்டில் போடப்பட்டது. உலகின் முதல் சில செல்ஃபிக்களின் தொகுப்புதான் இவை.
 

22p1.jpg


ராபர்ட்: அமெரிக்காவில் பிறந்த ராபர்ட்தான் போட்டோகிராஃபி உலகின் முன்னோடி. சில்வர் பிளேட்டையும் பாதரச ஆவியையும் வைத்து படம் எடுக்கும் Daguerreotype வித்தையைக் கண்டுகொண்ட மகராசன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது தற்செயலாக தன்னைத்தானே அவர் எடுத்துக்கொண்ட படம்தான் இது. எடுக்கப்பட்ட ஆண்டு 1839. இந்தப் படம்தான் உலகின் வயதான போட்டோ என்றும், உலகின் முதல் செல்ஃபி என்றும் கூறப்படுகிறது.

22p3.jpg

 ஜோசப் பைரன்:  உலகின் பழமையான புகைப்பட நிறுவனங்களுள் ஒன்றான பைரன் கம்பெனியின் நிறுவனர் பைரன் எடுத்த படம் இது. மாடியில் நின்று வைட் ஆங்கிள் லென்ஸ் பொருத்திய செல்ஃப் போர்ட்ராய்ட் கேமராவில் எடுக்கப்பட்ட படம் இது. எடுத்தது 1909-ல்.

22p2.jpg

ஸ்டான்லி குப்ரிக்: ‘லோலிட்டா’, ‘க்ளாக்வொர்க் ஆரஞ்ச்’, ‘ஸ்பேஸ் ஒடிஸி’ போன்ற கிளாஸிக் படங்களை எடுத்த ஸ்டான்லி குப்ரிக்கின் செல்ஃபிதான் இது. போட்டோகிராஃபியில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ஸ்டான்லி 1949-ல் கண்ணாடியில் எடுத்துக்கொண்ட படம் இது. 

22p4.jpg

 அனஸ்தஸ்யா: மயக்க மருந்து இல்லை ஜி. ரஷ்ய இளவரசியின் பெயர் இது. போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் இந்த இளவரசிக்கு அதீத ஆர்வம். 1914-ல் கோடக் ப்ரவுனி கேமரா வைத்து கண்ணாடியில் தன்னைத்தானே எடுத்துக்கொண்ட படம் இது. அடுத்த நான்காவது ஆண்டில் புரட்சியாளர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

22p5.jpg



பஷ் அல்ட்ரின்: நிலாவில் இரண்டாவதாகக் காலை வைத்த மனிதர் இவர். நிலாவில் முதலில் கால் வைத்த பெருமை இவரின் சக பயணியான ஆர்ம்ஸ்ட்ராங்கிற்குக் கிடைத்தாலும் விண்வெளியில் முதல் செல்ஃபி எடுத்த பெருமை அல்ட்ரினுக்கே. 1966-ல் ஜெமினி 12 மிஷனின்போது விண்வெளியில் அல்ட்ரின் எடுத்த படம் இது. 

22p6.jpg


டோனி ரே: இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான டோனி ரே 1965-ல் எடுத்த படம் இது. கடலை ஒட்டியிருந்த கடையின் கண்ணாடியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் கடற்கரையில் எடுக்கப்பட்ட முதல் செல்ஃபி எனப்படுகிறது.

22p8.jpg


ஹன்டர் தாம்சன்: அமெரிக்காவின் மூத்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் ஹன்டர். கோன்ஸோ ஜர்னலிஸம் என்ற முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். 1960-ல் கலிபோர்னியாவின் டிஜானா நகரத்திற்குச் செல்லும் வழியில் அவர் தன்னைத்தானே எடுத்துக்கொண்ட படம் இது.

22p7.jpg

 


டெர்ரி பின்சர்: இங்கிலாந்தின் பிரபல போட்டோ ஜர்னலிஸ்டான டெர்ரி 1966-ல் பாராசூட்டில் பறக்க ஆயத்தமானபோது தன் காலில் கட்டியிருந்த ஃபிஷ் ஐ லென்ஸ் கேமராவால் எடுத்துக்கொண்ட செல்ஃபி இது.

vikatan

  • தொடங்கியவர்

தினுசு தினுசா விளையாட்டு: வாங்க குழந்தைகளா, விளையாடுவோம்!

 

 
vilayattu_3017626f.jpg
 

“குழந்தைகளே, பள்ளிக்கூடம் போயிட்டு, இப்பத்தானே வந்தீங்க? அதுக்குள்ளே எங்க அவசரமா கிளம்பிப் போறீங்க?”

ஓ… டியூஷனுக்கா? அங்கப் போயிட்டு வீட்டுக்கு வர ராத்திரி ஆயிடுமே. அப்போ எப்பத்தான் விளையாடுவீங்க? என்ன பதிலையே காணோம்? நல்லவேளை ‘விளையாட்டுன்னா என்ன?’ன்னு நீங்க யாரும் கேக்கலை. அந்த வரைக்கும் சந்தோஷம். ஆனா ஒண்ணு, விளையாட்டுன்னாலே வீடியோ கேம்ஸ், கிரிக்கெட் மட்டும்தான்னு நினைச்சிடாதீங்க. தமிழ்நாட்டுலே உங்களைப் போன்ற குட்டிப் பசங்க விளையாட நிறைய நிறைய விளையாட்டுகள் இருக்கு. உங்க தாத்தா, பாட்டி, அப்பா, அம்மால்லாம் சின்னப் பசங்களா இருந்தப்ப என்ன விளையாடினாங்கன்னு கேட்டுப் பாருங்க.

அவங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்போ, பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் தினமும் விளையாடியிருப்பாங்க. அப்புறமா கொஞ்ச நேரம் படிச்சிருப்பாங்க. இப்பத்தான் உங்களுக்கு விளையாடவே நேரமில்லாமப் போச்சு! பள்ளிக்கூடங்கள்ல ‘பி.டி. பீரியடு’ன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? அப்போல்லாம் இந்தப் பீரியடு வந்தா பசங்கல்லாம் பள்ளி மைதானத்திலேயேதான் உருண்டு புரளுவாங்க. ஆனா இப்பத்தான், படிப்பைத் தவிர வேறெதுக்கும் நேரமே இல்லையே!

இந்த நேரத்துல மகாகவி பாரதியார் எழுதிய பாட்டு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. நீங்களும் படிச்சிருப்பீங்க.

‘ஓடி விளையாடு பாப்பா நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா…

காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா…’

காலையிலே படிக்கணும்னு சொல்லியிருக்கிற பாரதிதான், மாலையில குழந்தைகளை விளையாடவும் சொல்றார். ஏன் தெரியுமா குழந்தைகளே? விளையாடுறதுங்கிறது வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லை. விளையாடுறதுனாலே நம்ம உடலுக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி கிடைக்குது. பலரோடு சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மூலமா, நம் அறிவுக்கும் உடலுக்கும் பல்வகைப் பயிற்சிகள் யாரும் சொல்லித் தராமலேயே கிடைக்குது.

நகரங்கள்ல மட்டுமில்ல; இப்பெல்லாம் கிராமங்கள்லேயும் குழந்தைகள் விளையாடுறது குறைஞ்சு போச்சு. அப்போதெல்லாம் தெருக்கள்ல குட்டிப் பசங்க கூடிக்கூடி விளையாடுவாங்க. ஒவ்வொரு விளையாட்டும் ஜாலியாவும் உடலுக்குப் புத்துணர்ச்சி தர்றதாகவும் இருக்கும். அந்தக் கால குட்டிப் பசங்க விளையாடின விளையாட்டை எல்லாம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா? இனி ஒவ்வொரு வாரமும் அந்த விளையாட்டுகளத்தான் நாம பார்க்கப் போறோம்.

இதை வாசிக்கிறதோட நிறுத்திடாதீங்க. கொஞ்சமாச்சும் நேரம் ஒதுக்கி, உங்க கூட்டாளிகளோடு சேர்ந்து இந்த விளையாட்டுகள விளையாடணும்.

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

இசைக்குப் பின்னாலும் அறிவியல் இருக்கிறது!!!

 
Kein automatischer Alternativtext verfügbar.
Niroshan ThillainathanAbonnieren

இசைக்குப் பின்னாலும் அறிவியல் இருக்கிறது!!!

உங்களுக்குப் பிடித்த பாடல் என்ன? அம்மம்மாவைக் கேட்டால் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ பிடிக்கும் என்பார். அப்பாவிடம் கேட்டால் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ என்பார். அதுவே ஒரு இளைஞரிடம் கேட்டால் „போற போக்கில் ஒரு லுக்க விட்டு என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே“ என்பான். தமிழர்களிடம் மட்டும் இல்லை, இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சரி, இசையைப் பிடிக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்த பாடல்கள், பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர் என இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏன் எல்லோருக்கும் இசை என்றால் பிடிக்கிறது? சிலருக்கு இசை ஒரு போதை போன்று மகிழ்ச்சியைக் கொடுக்கிறதே. இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்ன தான் இருக்கிறது?

இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவதைத் தான் இசை என்று கூறுகின்றோம். நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியைச் செயலாக்கம் செய்கின்றன. உண்மை சொல்லப்போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன நண்பர்களே, புரியவில்லையா? நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையை ரசித்துக்கொண்டு தான் இருந்தோம். அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டு போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

மனித உடலில் இருக்கும் ஒரு சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா? உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் நமது உடலுக்குள் நடைபெறும்போது நமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது. உதாரணத்திற்குப் பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் நமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம். ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமீன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் நமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்தச் சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது. இதேப்போன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபமீன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்தப் போதைப்பொருள் குறையும்போது டோபமீன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்தப் போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும். அத்துடன் நமது உடலும் அந்தப் போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா? நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபமீன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அதாவது, நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்கவில்லை. போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசைச் சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

டோபமீன் வெளியிடுவது மட்டும் இல்லாமல் இசை கேட்கும் போது நமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக நமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஒரு தாளத்தில். நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஒரு தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது. அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்தத் தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது. பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்தத் துடிப்பை 72 பீட்ஸ் பேர் மினிட் (Beats per Minute, BPM) என்று சொல்வார்கள். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான். 72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம்.

இசையில் இன்னும் ஒரு மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது. சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியைத் தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள். அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள். எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள விடுங்கள். அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

உண்மை சொல்லப்போனால் இப்படி அடுத்து அடுத்தாக இசையினால் நாம் பெறும் பயன்களைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். இருந்தாலும் இத்துடன் நிறுத்தி விடுகின்றேன்.

https://www.facebook.com/SciNirosh/?fref=ts

  • தொடங்கியவர்

சருமத்தில் இளமையைத் தக்கவைத்துக்கொள்ள 10 டிப்ஸ்!

saraaaaraaaa.jpg
 

‘‘வயது 30-யைத் தாண்டியதும், நம் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புகள் கரையும். இதனால் சருமம் தளர ஆரம்பிக்கும். முகத்தில் சுருக்கங்கள் தோன்றும் என்பதுடன், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும். இப்படியாகத்தான் வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும். இத்துடன், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு போன்ற காரணங்களும் சேரும்போது, ‘ஏஜிங்’ விரைவுபடுத்தப்படுகிறது’’ என்று சொல்லும் சேலம் ‘ஸ்மிதா பியூட்டி & ஸ்பா’வின் அழகுக்கலை நிபுணர் ரம்யா, அதைத் தள்ளிப்போடுவதற்கான இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளைச் சொல்கிறார்.

1. ‘‘விளக்கெண்ணெய், சருமப் பிரச்னைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.  

2. வாரம் ஒருமுறை, சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்ஸைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும்.

3. உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது கூழை முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்.

4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் போட்டு வர, முதுமைத் தோற்றம் எளிதில் அண்டாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனைத் தடவி வரலாம்.

sssaaraara.jpg

 

5. காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் நெற்றி, கண்களின் ஓரம் என முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும்.

6 கடலை மாவு, தேன் மற்றும் பால் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும்.

7 நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும்; வறட்சியும் தொய்வும் தவிர்க்கப்படும். இதேபோல ஆலிவ் ஆயிலையும் இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவலாம்.

8 உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும்.

 

 

9 கேரட், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும்.

10 தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்துவர, உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்!’’

vikatan

  • தொடங்கியவர்
குறையை உணர்வதே மேன்மை தரும்
 

article_1475218546-635917038311632174-37காலம் தங்களுக்குக் கெடுதல் செய்துவிட்டதாகப் பலர் சொல்வதுண்டு. உண்மையில் காலங்களைக் கருக விட்டவர்களே பலகோடி மக்களாவர்.

இருக்கும் காலத்தில் இயங்காமலும் மேலும், எதிர்காலத்தினைக் கருதாமல் இயங்க மறுத்து, எதிர்காலத்தையும் மறந்து வாழ்கின்றவர்கள் காலத்தை எப்படிக் குறைகூற முடியும்? 

கால, நேரம் எல்லோருக்குமே பொதுவானது. ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டதுமல்ல; அவரவர்கள் அதனைப் பயன்படுத்தும் விதத்தில் வெற்றி, தோல்விகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

சில சமயங்களில் இடர்கள் வந்திடும். ஒருவரின் தொடர்ந்த அயராத உழைப்பு, இதனைத் தகர்த்து, மேல் நோக்கிய நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்து விடுகின்றது.  

குறை எங்கே என உணர்வதே மேன்மை தரும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் எப்படி மொழிபெயர்க்கிறது தெரியுமா? #WorldTranslationDay

வெள்ளிக்கிழமை வெளியாகும் தோனி படத்தையே சப் டைட்டிலோடோ அல்லது தமிழ் டப்பிங்கிலோ பார்க்க ஆசைப்படும் நபர் என்றால் இன்றைய தினம் உங்களுக்காக தான். உலக மொழிபெயர்பு தினம் . நமக்கு புரியாத மொழியில் ஒரு வரி உள்ளது. அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இப்போது நாம் நண்பர்களை தேடுவதில்லை. கையில் உள்ள செல்போன் தானாக கூகுள் ட்ரான்ஸ்லேட்டரை தான் தேடுகிறது. நமக்கு தேவையான வார்த்தைகளை கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் எப்படி சரியாக மொழி பெயர்க்கிறது தெரியுமா?

2007ம் ஆண்டுக்கு முன் Rule-based machine translation முறையில் இயங்கி வந்தது. அதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு இது தான் சரியான மொழிபெய்ர்ப்பு என்ற விதிகள் நிர்ணயிக்கப்பட்டு அந்த வார்த்தைகள் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின் 2007ம் ஆண்டு வெளியான மேம்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பு '' statistical machine translation'' முறையில் இயங்க துவங்கியது. இதன் மூலம் நம் கணினியில் இருந்தே மொழிபெயர்ப்பை ஆரம்பிக்கிறது கூகுள். அதிகப்படியாக பயன்படுத்தும் வார்த்தைகளை அதன் மற்ற மொழிகளோடு ஒப்பிட்டு வார்த்தைகளை பெற ஆரம்பிக்கிறது.

 

அதேபோல் நாம் கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் ஒரு வார்த்தையை தேடுகிறோம் என்றால், அதற்கு பின்னால் கூகுள் கிட்டத்தட்ட பல மில்லியன் பதிவுகளை படித்து மனிதர்களால் மொழிபெயர்க்கப்பட்ட பதிவுகளை ஆராய்ந்து இந்த வார்த்தைக்கு இந்த மொழியில் இந்த வார்த்தை தான் சரியான மொழிபெயர்ப்பு என வழங்குகிறது. அது மட்டுமின்றி மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள், வலைதளங்கள் ஆகியவற்றில் இருந்தும் தகவல்களை பெற்று சரியான வார்த்தையை வழங்குகிறது கூகுள். இதிலிருந்து பெறப்படும் பேட்டர்ன்களை அதிகம் பயன்படுத்தப்படும் பேட்டர்ன்களோடு ஒப்பிட்டு மொழிபெயர்ப்பை நொடிக்கு நொடி அப்டேட் செய்கிறது கூகுள். 


என்ன தான் கூகுள் தனது மொழிபெயர்ப்பை சரியாக கையாண்டாலும் பிராந்திய மொழிகளில் இன்னும் சரியாக தனது மொழிபெயர்ப்பை மேம்படுத்தவில்லை. ஆங்கத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் போது இடம்பெற்ற சில ஜாலி மொழிபெயர்ப்புகள் இதோ...

123.JPG

1231.JPG

1232.JPG

1233.JPG

1234.JPG

 

Chinese : 9月30日,烈士纪念日向人民英雄敬献花篮仪式在北京天安门广场隆重举行。 新华社记者 王晔 摄

Tamil: செப்டம்பர் 30, மக்கள் ஹீரோஸ் வலையங்கள் விழா தியாகிகளின் ஆண்டு நிறைவு பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்றது. ஜின்ஹுவா செய்தி நிறுவனம் நிருபர் வாங் Yeshe

 


உதாரணமாக  நாம் பயன்படுத்தும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் ஒருவர் ஆங்கிலத்தில் ''லவ்'' என டைப் செய்தால் அன்பு, காதல், காதலிக்கிறாய், காதலிக்கிறேன் என்ற பரிந்துரைகளையும் அதில் எது அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதனை முதல் பரிந்துரையாக வழங்குகிறது கூகுள். அதேசமயம் முழுமையான வரிகளை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அப்படியே வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்ப்பது கூகுளின் சிறிய மைனஸ். உலகின் 103 மொழிகளில் மொழிபெயர்ப்பை செய்து வரும் கூகுள், மேலும் புதிய 14 மொழிகளை ஆராய்ந்து அதிலும் மொழிபெயர்ப்பை வழங்கவுள்ளது.

 

 

தற்போது மேம்படுத்தப்பட்ட அமைப்பில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் கூட இந்த ட்ரான்ஸ்லேட்டரை பயன்படுத்த முடியும். அரே டேப் செய்தால் போது தானாகவே உங்களுக்கு அனுப்பப்பட்ட மற்ற மொழி செய்தியை நீங்கள் விரும்பும் மொழியிலும், உங்களது பதிலை அந்த மொழிக்கும் மாற்றி தந்துவிடுகிறது கூகுள்.

 

 

நீங்கள் படிக்கும் இந்த கட்டுரையில் உள்ள வார்த்தைகளை கூட கூகுள் இந்நேரம் யாரோ ஒருவருக்கு சீன மொழியிலோ அல்லது ஜப்பானிய மொழியிலோ மொழிபெயர்த்து கொண்டிருக்கும். பல நேரங்களில் நமக்கு சப்டைட்டிலாக இருக்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இப்படித்தான் இயங்குகிறது.

vikatan

14523037_1142522035796489_75694933314465

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்..
International Translation Day 2016

உலகம் முழுதும் சமூகங்களை இணைக்கும் இணைப்புப் பாலமாக மொழிபெயர்ப்புத் தொழிலில் / கலையில் ஈடுபடும் அத்தனை மொழிபெயர்ப்பாளருக்கும் எமது வாழ்த்துக்கள்.

 
  • தொடங்கியவர்

14463171_1243427759049345_15540034442778

 
 
சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று...

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam

mgr%20sivaji%20young.jpg

தமிழ்சினிமாவின் பல்கலைக்கழகம் என புகழ்கொண்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 89 வது பிறந்தநாள் இன்று...

தமிழ்சினிமா பாடல்களால் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் அதை தன் வசனநடிப்பால் மறக்கடித்து முற்றிலும் காட்சியமைப்பு மற்றும் வசனங்களின்பால் சினிமா மீது மக்கள் ஈர்க்கப்பட காரணமானவர்களில் தவிர்க்கவியலாதவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். 60களில்  தொழிற்முறை போட்டி நடிகர்களாக இருந்த சிவாஜி- எம்.ஜி.ஆர்  இருவரும் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியே வந்தனர். ஆரோக்கியமான அந்த நட்பை இருவருமே கடைபிடித்தனர்.

எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி இறப்புக்கு யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னபோது அழுகையை அடக்கி நின்ற எம்.ஜி.ஆருக்கு சிவாஜி வந்தபோது அதை கட்டுப்படுத்த முடியவில்லை. வாய்ப்புகளைத் தேடி யானைக்கவுனி சாலைகளில் சுற்றித்திரிந்த நண்பர்கள் அவர்கள். 'சிவாஜி வந்தபோதுஒரு பிரளயம் வந்ததுபோல் என்னிடம் அழுகை வெடித்து வந்தது' என அந்த சம்பவத்தை தன் வாழ்க்கை கட்டுரை ஒன்றில் உருக்கமாக தெரிவித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது, ஒரே தாயின் வயிற்றில் உண்டு வளர்ந்த எங்களை அரசியல் பிரித்துப்பார்த்துவிட்டது என கண்ணிரோடு கட்டுரை எழுதினார் ஒரு சினிமா சஞ்சிகைக்கு.

தம்பி சிவாஜி அமெரிக்க சென்று திரும்பியபோது அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்தவர் எம்.ஜி.ஆர். தான் பொறுப்பாசிரியராக இருந்த  நடிகர் சங்கத்தின் இதழான நடிகன் குரலில் சிவாஜி பற்றி அருமையானதொரு கட்டுரை எழுதினார்.  சக போட்டியாளர் என்ற ஈகோவின்றி சிவாஜியை புகழ்ந்து எம்.ஜி.ஆர் எழுதிய இந்த கட்டுரை அவரது பிறந்தநாளில் இன்று உங்களுக்கு....



mgr%20sivaji%20leftttt.jpg“ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.


நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், பல்லாண்டுகளுக்கு முன்னரே, முன்னேற்றத்தின் முன்னோட்டமான அடிப்படைத்திறமைகள் பெற்றிருந்தார் என்பதை நான் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

அந்த நாளில், கவியின் கனவு நாடகத்தைப்பலரும் பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் அனுதாபமோ, பாராட்டுதலோ பெறத்தக்க பாத்திரமல்ல. மேலும், இப்போது போல அப்போது விளம்பரம் பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்க்கும் மக்கள் அவரை மறக்க முடியாத நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடித்து, அவரது நடிப்பால் மக்கள் மனதில் நிலைநிறுத்திகொண்டுவிடுவார் அவர்.

மனோகரா நாடகத்தை எடுத்துக்கொள்வோம். பத்மாவதி வேடம் ஏற்றுக்கொண்டு, தாய்மையுணர்வையும், பாசத்தையும் நெஞ்சுருகப் பொழிந்து. வீறுகொண்டெழும் மகனை அடக்கி. “ஏந்தியவாளை இறக்கு; மறுப்பாயாகில், இதே வாளால் உன்னைப் பெற்றெடுத்த தாயான என்னை முதலில் வெட்டி வீழ்த்தி விட்டு உன் விருப்பம் போல் செய்” என்று அவர் கூறுகிற கட்டம் ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாது. ஆண் ‘ஆண்’ ஆக நடிப்பது இயற்கை. பத்து அல்லது பன்னிரண்டு வயதில் ஆசிரியர் சொல்லிக் கொடுத் தப்படி பெண் வேடம் தாங்கி நடிப்பது, ஓரளவுக்குப் பொருத்தமாகவும் தோன்றலாம். மேலும், அலங்காரம் செய்து, பூச்சூடி, சிறுவனைச் சிறுமி போலத் தோற்றுவிப்பது இயற்கையான நடிப்புக்கு உதவி செய்ய முடியும். அதோடு இனிமையான இளங் குரலுக்கூடச் சிறுவர்களுக்கு ஒத்துழைக்கும். ஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண் ‘பெண்’ணாக நடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

இனிமையான குரல்மாறி, கடினமான குரல் மாறியுள்ள பருவத்தில் இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக நடித்துப் புகழ்பெற்றார் அவர் என்றால் அது மிகப்பெரிய சாதனையே ஆகுமல்லவா? அன்று நாடக மேடையில் எல்லாத்தரப்பு வேடங்களிலும் தனிச் சிறப்போடு நடித்துத் தனது நடிப்பால், ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கும், நாடகத்திற்குமே பொலிவூட்டியவர் தம்பி கணேசன். மேடையில் பயங்கரச் சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்தவர். பெரும் புகழும், பெருமையும் எதிர்காலத்திலும் அவரை அடையப்போகின்றன என்பதற்கும் முன்னறிவிப்பான தகுதிகளாக இருந்தவை இவை.

நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம்பெறுவது இயற்கை என்று சொல்லப்படலாம். ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார்.

mgr%20anniversary%20600%20jaya%203.jpg

பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

ஆங்கிலப் பாணியின் சாயல் ஆங்காங்கே இருக்குமானால், அது ஆங்கிலப் படங்களைப் பார்த்துத்தான் பிறந்ததென்று எப்படிக் கூறமுடியும். சிறப்புக்குரிய பயிற்சியாலும், உழைப்பாலும் அப்படிப் போற்றத்தக்க திறமை உண்டாயிற்று என்று உணர்வது தானே முறையும், பண்புமாகும்.

மேலும், நடிப்பு என்பது என்ன? கற்பனை தானே! ஏதோ ஒன்றிலிருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை. நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பனவற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாதவற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றிருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.

sivaji%20350%201.jpgதம்பி கணேசன் நாடகத்தில் நடித்தபோது அந்த நடிப்புக்குப் பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்கு முன்பு வேறு நடிகர்களுக்குக் குரல் கொடுத்தபோது அந்தக் குரலுக்குப் பெருமை. பிறகு சினிமாவில் நடிக்கத் துவங்கியபோதும் வெற்றிப் படிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன. எந்த நிலையிலும் தான் ஏற்கும் கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு ஸ்தானத்தைப் பெறக்கூடிய தகுதி அவரிடம் வேரூன்றியிருந்தது. அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.

உண்மையைப் புரிந்துக் கொள்ளாத சிலரால் எழுப்பப்பட்ட அதுபோன்ற கேள்வி களுக்கு, ஆனந்த விகடனைப் போன்ற பத்திரிகைகள் நேர்மையான பதிலைத்தர முனைந்ததற்காக, நடிகர் சங்கத்தின் சார்பில் நன்றி செலுத்திக் கொள்கிறேன். இன்னின்னார் இப்படியிப்படிப் பேசியதாகப் பகுத்து உரையாடலின் வடிவத்திலே தம்பி கணேசனின், சிறப்புப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எல்லோருக்கும் பொதுவில் நான் ஒன்றிரண்டு சொல்லிகொள்ள விரும்புகிறேன்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் அல்ல இப்போது இருப்பவர்கள்; அதாவது, மக்களின் விருப்பம், தேவை, ஆசைக் கனவுகள் இவையாவும், முன்பு இருந்ததைப் போலில்லாமல், வெவ்வேறு வகையில் மிகமிக வளர்ந்து பெருகியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஆசைகளில் ஒன்றுதான் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டவரும், தங்கள் தொழில் போற்றப் படவேண்டும், மற்றத்தொழில் வல்லுநர்களால் கவுரவிக்கப்பட வேண்டும் என்று கொள்ளும் ஆசையும்.

மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளின் மீது தோன்றி, அவற்றைச் சார்ந்ததாக விளங்குவதே நடிப்புக்கலை, நாடகத்திலோ, சினிமாவிலோ நடிக்கிற ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பாரானால், அவருக்கு வருகிற பெருமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற அத்தனை பேர்களுக்கும் வருகிற பெருமையாகும். அவர் தமிழைத்தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார் என்னும்போது, ‘தமிழன்’ என்ற இனத்தைச் சார்ந்தவராகிறார். தமிழ் இனத்தைச் சேர்ந்த அவருக்குக் கிடைக்கக்கூடிய பெருமைகள் யாவும் தமிழினத்திற்கு, அதாவது, நமக்கு வழிகாட்டியாக விளங்கிய முன்னோருக்கும், இன்று நம்முடன் இருந்து வாழ்வோருக்கும், இக்கலையை இனி பின்பற்றப்போகும் எதிர்காலத்தவருக்கும் உரிய பெருமையாகும்.

sivaji%20re%2044.jpg

தமிழ்ப்பண்பாடு உலகத்திலேயே மிகச் சிறந்த பண்பாடு என நல்லோர்களாலும், வல்லோர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டைத் தாய்மொழியாம் தமிழில் தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழன் எடுத்துச்சொல்லி, அதற்காகப் பாராட்டப்பட்டால், அது தமிழ்மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு ஆகும் அல்லவா? இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் “சிவாஜி கணேசன் யார்?” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு!

வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் கலாசாரக் குழுவினருள் தமிழர்களுக்கு ஏன் இடமளிப்பதில்லை என்றெல்லாம் பலகாலமாகவே இந்திய அரசினரிடம் கேட்டு வந்தோம். தந்திகள் கொடுத்தும் கேட்டோம். கடிதங்கள் அனுப்பியும் வினாவினோம். நல்ல தரமுள்ள பல்வேறு பத்திரிகைகள் கூட இந்தக் கருத்தை வற்புறுத்தின. அவைகளுக்கெல்லாம் வெற்றியாக, உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானதெனக் குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ள அமெரிக்க அரசாங்கம், ஒரு தமிழ் மகனை, அதிலும் ஒரு நாடக சினிமா நடிப்புக் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப் படுத்தியது இதுவரை எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத ஒரு பெரும் பேறு. அதனைப்பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு யாரை வரவேற்பது? அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது? அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச் சூட்டுவது?

sivaji%20550%201.jpg

எதிலும் குறை காண்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறவர்கள்! அந்தத் துணைதான் இன்றைய தினம் சிவாஜி கணேசன் அவர்களை அமெரிக்கா வரை அழைத்துச் சென்றிருக்கிறது.

முன்னர் கலைவாணர் அவர்கள் முதன்முதலாக ரஷ்ய விஜயம் செய்து திரும்பியபோது, சென்னைக் கடற்கரையிலும், மற்றப் பொதுவிடங்களிலும் பெரும் பாராட்டு விழாக்கள் நடத்தி மகிழ்ந்தோம். அதற்குப் பிறகு அவ்வப்போது சில நடிகமணிகள் ஒருசில அயல்நாடுகளுக்குச் சென்று திரும்பிவந்த போது, பெரும் விழாக்கள் நடத்தவில்லை என்றாலும், நமது நன்மதிப்பைத் தெரிவித்தோம். இப்போது சிவாஜி கணேசன் அவர்களோ, சரித்திரத்திலேயே முதன் முறையாக அமெரிக்க அரசினரால் அழைக்கப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி மிகவும் போற்றத்தக்கதால் விஷேமாக விழா நடத்தினோம். இனி அடுத்தடுத்துச் செல்பவர்களையும், பாராட்டவே விரும்புகிறேன். முதன் முறையாகச் சென்று நம்மவருக்குப் புகழ்திரட்டி வந்த காரணத்தால் தம்பி கணேசனுக்கு இப்பெரும் விழாவை நடத்தினோம். இந்த அளவுக்கு விரிவாகச் செய்யமுடியாவிடினும் இதயங்கனிந்த பாராட்டுக்களை இனிச் செல்வோருக்கு எப்போதும் வழங்கக் காத்திருக்கிறேன்.

sivaji%20550%202.jpg

தம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும்! அவர் நீடூழி வாழ என் அன்னையை இறைஞ்சுகின்றேன்.
அமெரிக்கா சென்று வந்த சிவாஜியைப் பாராட்டும்விதமாக

(‘நடிகன் குரல்’ வெளியிட்ட சிறப்பு மலரிலிருந்து...)

vikatan

  • தொடங்கியவர்

நேர்மைக்குப் பரிசு பீட்சா!

 

p18a.jpg

லிஃபோர்னியாவில் வசிக்கும் செலினா அவலோஸ் என்பவர் கடந்தவாரம், டொமினோஸ் பீட்சா கம்பெனிக்கு போன் செய்து சிக்கன் விங்க்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார். சிறிதுநேரத்தில் பணியாளர் கொண்டுவந்து கொடுத்த அட்டைப்பெட்டியைப் பிரித்துப் பார்த்தவருக்குப் பேரதிர்ச்சி. ஏனெனில், அந்தப் பெட்டியில் இருந்தது 5000 டாலர் பணக்கட்டுகள். அதை அப்படியே மறைத்து வைத்துவிட்டுத் திரும்பவும் சிக்கனை ஆர்டர் செய்து கூலாகச் சாப்பிட்டிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அங்கேதான் செலினா தன் நேர்மையை நட்டுக்குத்தலாக நிற்கவைத்திருக்கிறார்.

p18.jpg

பலமணிநேரம் முயற்சி செய்து தொடர்புகொண்டு அந்தப் பணத்தை டொமினோஸ் கம்பெனியிடமே திருப்பி வழங்கியிருக்கிறார். அதற்குச் சன்மானமாக, அந்த நிறுவனம் ஒரு வருடம் முழுவதும் இலவசமாக பீட்சா கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் அம்மணி இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டார். கடந்த வருடமும் இதேமாதிரி ஒரு சம்பவம் அங்கே நடந்திருக்காம்...

கம்பெனி விளையாட்டா இருக்குமோ?

vikatan

  • தொடங்கியவர்

 

வேகமான சாசெஜ் வகை நாய்கள்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்த சாசெஜ் வகை நாய்கள்
  • தொடங்கியவர்

14520372_10155041725589578_5888329960323

Celebrating International Music Day..

  • தொடங்கியவர்

அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

Netizens.png

ரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...?

அடுத்த தேர்தலில் கர்நாடகாவில் சித்தராமையா வென்றார் என்றால், அதற்கு தமிழ்நாட்டு நெட்டிசன்கள்தான் காரணம்.... ஏனென்று தெரியுமா...?

அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்ய நெட்டிசன்களுக்கு அருகதை இருக்கிறதா...?

முன்பு முழக்கம் போட்டதற்கும், தற்போது நெட்டிசன்கள் ஸ்டேட்டஸ் போடுவதற்கும் ஓர் ஒற்றுமையும் உண்டு... வேற்றுமையும் உண்டு. அது, என்னவென்று தெரியுமா...?

நெட்டிசன்கள், எல்லோரையும் கலாய்க்கிறார்கள்... எல்லோருக்கும் கருத்துச் சொல்கிறார்கள்... தினம் 100 ட்வீட் போடுகிறார்கள். இப்படிச் செய்யும் உங்களால், ‘காவிரி விஷயத்தில் ஓர் ஆக்கப்பூர்வமான விஷயத்தைச் செய்து இருக்க முடியும்.’ அது என்ன தெரியுமா...?

 

 

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.