Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
ஸ்பெய்னில் மனிதக் கோபுர நிர்மாணப் போட்டி
 

மிக உய­ர­மான மனிதக் கோபு­ரங்­களை நிர்­மா­ணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்­கோனா நகரில் நேற்­று ­முன்­தினம் நடை­பெற்­றது. 

 

197012016-10-02T144613Z_1146897384_S1BEU

 

18 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து வரு­டாந்தம் இரு தட­வைகள் இப்­போட்டி நடை­பெ­று­கி­றது.

 

197012016-10-02T133442Z_841434595_S1BEUE

 

இம்­முறை பல நக­ரங்­களைச் சேர்ந்த 32 அணிகள் இப்­போட்­டியில் பங்­கு­பற்­றின. சுமார் 20 பார்­வை­யா­ளர்கள் இப்­போட்­டி­களை நேரில் பார்­வை­யிட்­டனர்.

 

197012016-10-02T135945Z_1435956691_S1BEU

 

விலா­பி­ராங்கா நகரைச் சேர்ந்த அணி தொடர்ச்­சி­யாக 8 ஆவது தடவையாக இப்போட்டியில் முதலிடம் பெற்றது. 

metronews.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாடல் பாடி வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் (வைரலாகும் வீடியோ இணைப்பு)

 

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க தான் பாடிய பாடலொன்றை நேற்று (03) வெளியிட்டுள்ளார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது முதல் பாடலை வெளியிட்ட இவர் தனது இரண்டாவது பாடலான “ ருஹிரு பிந்து கிரி ரசட்ட”   என தொடங்கும் பாடலை வெளியிட்டுள்ளார்.

குறித்த பாடலை தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஒக்டோபர் - 06

 

1683 : வில்­லியம் பென் தன்­னுடன் 13 ஜேர்மனியக் குடும்­பங்­களை அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னி­யா­வுக்கு அழைத்­து­வந்து குடி­யேற்­றினார். இவர்­களே முதன்முத­லாக அமெ­ரிக்­காவில் குடி­யே­றிய ஜேர்­ம­னிய மக்­க­ளாவர்.

 

1762 : பிரித்­தா­னி­யா­வுக்கும் ஸ்பெயி­னுக்கும் இடையில் மணி­லாவில் இடம்­பெற்ற ஏழாண்டுப் போர் முடி­வுக்கு வந்­தது. இப்போர் முடி­வ­டையும் வரையில் மணி­லாவை பிரித்­தா­னியா  தன் பிடியில் வைத்­தி­ருந்­தது.

 

1789 : பிரெஞ்சுப் புரட்சி: முன்­னைய நாள் பெண்­களின் போராட்ட அணியை வேர்சாய் அரண்­ம­னையில் எதிர்­கொண்ட பிரான்ஸின் பதி­னாறாம் லூயி மன்னன் அங்­கி­ருந்து பாரிஸ் திரும்­பினார்.

 

822varalaru---sadate_anwar.jpg1854 : இங்­கி­லாந்தில் நியூ­காஸல் மற்றும் கேற்ஸ்ஹெட் நக­ரங்­களில் பர­விய பெருந்தீயில் 54 பேர் கொல்­லப்­பட்டு நூற்­றுக்­க­ண­க்கானோர் காய­ம­டைந்­தனர். 

 

1870 : ரோம், இத்­தா­லியின் தலை­ந­க­ரா­னது.

 

1889 : ஜேர்­ம­னியைச் சேர்ந்த கலா­நிதி ஹான்ஸ் மேயர் தான்­சா­னி­யாவின் கிளி­மஞ்­சாரோ மலையின் உச்­சியை அடைந்த முதல் ஐரோப்­பி­ய­ரானார்.

 

1889 : தோமஸ் அல்வா எடிசன் தனது முத­லா­வது அசையும் திரைப்­ப­டத்தைக் காண்­பித்தார்.

 

1903 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் உயர் நீதி­மன்­றத்தின் முத­லா­வது அமர்வு இடம்­பெற்­றது.

 

1908 : பொஸ்­னியா ஹெர்­செ­கோ­வி­னாவை ஆஸ்­தி­ரியா _ ஹங்­கேரி தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.

 

1923 : முதலாம் உலகப் போர்: துருக்­கியின் இஸ்­தான்­புல்லில் இருந்து பெரும் வல்­ல­ர­சுகள் வெளி­யே­றின.

 

1927 : முத­லா­வது பேசும் பட­மான "த ஜாஸ் சிங்கர்" வெளி­யா­னது.

 

1939 : இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இரா­ணுவ அணி ஜேர்­ம­னிய படை­க­ளிடம் சர­ண­டைந்­தது. 

 

1955 : அமெ­ரிக்­காவின்  வயோமிங் மாநி­லத்தில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 66 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1973 :  சிரி­யா­வுடன் இணைந்து எகிப்து இஸ்ரேல் மீது தாக்­கு­தலை ஆரம்­பித்­தது. இது யோம் கிபூர் யுத்­தத்­துக்கு வழி­வ­குத்­தது.

 

1976 : பார்­ப­டோஸில் இருந்து புறப்­பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் கெஸ்ட்­ரோ­வுக்­கெ­தி­ரான தீவி­ர­வா­தி­களால் குண்­டு­வைத்துத் தகர்க்­கப்­பட்­டதில் 73 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1976 : தாய்­லாந்தில் அர­சுக்கு எதி­ராக இடம்­பெற்ற மாணவர் போராட்டம் இரா­ணு­வத்­தி­னரால் நசுக்­கப்­பட்­டது. நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

1977 : மிக்-29 ரக யுத்த விமானம்  தனது முத­லா­வது பறப்பை மேற்­கொண்­டது.

 

1981 : எகிப்­திய ஜனா­தி­பதி அன்வர் சதாத் கொலை செய்­யப்­பட்டார்.

 

1987 : பிஜி குடி­ய­ர­சா­கி­யது.

 

1995 : சூரி­ய­னுக்கு அடுத்­த­தாக, தன்னைச் சுற்­றி­வரும்  கோள் ஒன்றைக் கொண்ட பெரும் 51 பெகாசி எனும் நட்­சத்­திரம் கண்­ட­றி­யப்­பட்­டது.

 

2002 : பிரெஞ்சு எண்ணெய்த் தாங்கி யேமனில் குண்டு வைத்துத் தகர்க்­கப்­பட்­டது.

 

2007 : பிரிட்டனைச் சேர்ந்த ஜேஸன் லூயிஸ் என்பவர் மனித சக்தியின் மூலம் உலகைச் சுற்றிவந்த முதல் மனிதரானார்.

 

2008 : அநுராதபுரத்தில் இடம்பெற்ற  குண்டுத்தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

metronews.lk

  • தொடங்கியவர்

தலைமுடியினால் மக்கள் மத்தியில் பிரபலமான 2 மாத குழந்தை

லண்டனில் கடந்த 9 வாரங்களுக்கு முன் பிறந்த ஜுனியர் காக்ஸ் நூன் தனது தலைமுடியினால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

இவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதனால் உலக முழுவதும் பிரபலமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே குறித்த குழந்தையின் தாய்  குழந்தைக்கு சிகை அலங்காரம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வாரந்தோறும் பல்பொருள் அங்காடியிற்கு குழந்தையை தூக்கிச் செல்லும் போது,40 நிமிடத்தில் முடியும் வேலை 2 மணி நேரம் இக்குழந்தையினை பிறர் கொஞ்சுவதால் செலவாகின்றது என்று அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

3916D7A200000578-3821989-image-a-33_1475

3916D7D500000578-3821989-image-a-34_1475

3916D78A00000578-3821989-image-a-37_1475

3916D7EA00000578-3821989-image-a-36_1475

3916D7DE00000578-3821989-image-a-35_1475

 

  • தொடங்கியவர்
லண்டனில் தோட்டக்கலை சமூகத்தினரின் அறுவடைக் கண்காட்சி
 

பிரித்தானிய ரோயல் தோட்டக்கலை சமூகத்தின் அறுவடைக் கண்காட்சி லண்டனில் நேற்று ஆரம்பமாகியது. வித்தியாசமான வகையில் விளைவிக்கப்பட்ட ஏராளமான மரக்கறிகள், பழங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

 

19756259013-01-02.jpg19756259010-01-02.jpg

19756259015-01-02.jpg

19756259011-01-02.jpg

 

metronews.lk

  • தொடங்கியவர்

14492462_1147948161920543_78960798426883

 
 
தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னி மோர்க்கலின் பிறந்தநாள்.
Happy Birthday Morné Morkel
  • தொடங்கியவர்

சிக்ஸர் சரிதை!

பரிசல் கிருஷ்ணா

 

p82b.jpg

பாலிவுட்டின் முடிவில்லா பயோ பிக் வரிசையில் இப்போது களம் இறங்கியிருப்பது கேப்டன் கூல் தோனியின் சிக்ஸர் சரிதை.

பீஹார் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மைதானத்துக்குத் தண்ணீர் தெளித்துப் பராமரிக்கும் பம்ப்-மேன், அப்பா பான் சிங் தோனி (அனுபம் கெர்). ‘ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான் பையன்’ கேரக்டரில் தோனியின் அம்மா. தம்பியின் கனவுகளுக்குத் தோள் கொடுக்கும் அக்கா என்று, சராசரிக் குடும்பம். 

எப்போதும் ஃபுட்பாலே கதியாகக் கிடக்கும், கோல் கீப்பரான தோனியிடம், `விக்கெட் கீப்பிங் செய்றியா?’ எனக் கேட்கிறார் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர். ‘சின்ன பந்துல யாராச்சும் விளையாடுவாங்களா?’ என ஆரம்பத்தில் மறுக்கிற தோனி, பிறகு அவரிடம் மறுக்க முடியாமல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடுகிறார். அடிப்படையில் பேட்டிங்கில் ஆர்வம்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அதிலும் பயிற்சி மேற்கொண்டு... ஒருகட்டத்தில் ரயில்வேயில் அவருக்கு வேலையும் கிடைக்கிறது.

தொடர்ந்து இப்படியே வேலைசெய்வதா, அல்லது கிரிக்கெட் விளையாடப் போவதா என இடைவேளையில் முடிவெடுக்கும் அவர், என்ன செய்தார் என்பதும், அதன் பின்னான சாதனைகளும் நாம் எல்லாம் அறிந்த கதைதான். ஆனால், அதைப் படமாக்கிய விதத்துக்காக நீரஜ் பாண்டேவுக்குப் பூங்கொத்து நீட்டத் தோன்றுகிறது.

படத்தின் காஸ்டிங்கைத் தேர்வுசெய்த குழுவுக்கு இரட்டைப் பூங்கொத்து. ஹீரோவாக சுஷாந்த் சிங் ராஜ்புத்... அத்தனை பொருத்தம். கொஞ்சம் கொஞ்சமாக என்றெல்லாம் இல்லாமல், முதல் ஃப்ரேமில் இருந்தே தோனியாக  நம் மனதில் உட்கார்ந்துவிடுகிறார். அவர் உழைப்பு நடிப்பில் மிளிர்வது மட்டும் அல்ல... கிரிக்கெட்டிங் ஷாட்களிலும் கன கச்சிதம்.

கிரிக்கெட் தெரியாத ரசிகர்களையும் மனதில் கொண்டு வசனங்களை அமைத்திருக்கிறார் இயக்குநர். ‘பீஹார்காரங்களுக்கு கிரிக்கெட்டை விட பாலிட்டிக்ஸ் ரொம்பப் பிடிக்குமே’, ‘வாழ்க்கையும் கிரிக்கெட் மாதிரிதான். பாலுக்குத் தகுந்த மாதிரி அடிக்கக் கத்துக்கோ. எல்லா பாலும் அடிக்கிற பாலாவே வராது’, ‘வேலை வேணும்கிறதுக்காக எல்லாம் அவுட் ஆக மாட்டேன்’ என ரசிக்க வைக்கிற பன்ச் வசனங்கள்.

சாக்‌ஷியின் காதல் ஆரம்பிக்கிற விதம் அழகு. அதற்குப் பிறகு அலுப்பு. படத்தின் ஸ்பீடுக்கு பிரேக் போடுகின்றன அந்தக் காட்சிகள். அதன் பிறகு ரசிகர்களை இழுக்கவைக்க, ஒரிஜினல் மேட்சையே காட்டுகிறார்கள்.

எல்லாம் சரி... ஆனால் இது உண்மையிலேயே தோனியின் பயோ பிக் என்றால் அவரது அண்ணன் எங்கே? முக்கியமான முடிவாக சீனியர் ப்ளேயர்களை நீக்கியதை ஜஸ்ட் லைக் தட் காட்டி நகர்ந்துவிட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் வந்து கையெழுத்துப் போட்டதோடு சரி, அந்தப் போட்டிகளைக் காட்டவே இல்லையே... அதற்கும் தடையா என்ன? கிரிக்கெட் என்பதே குழு விளையாட்டு தானே! படத்தில் தோனி, தோனியைத் தவிர ஒன்றும் இல்லை எனக் களம் இறங்கியது சரியா? அவர் பற்றிய சர்ச்சைகளே இல்லையா? படம் முழுக்க அத்தனை நல்லவராகவே காட்டியதன் மூலம், ‘சினிமாவுலகூட இவ்வளவு நல்லவனைப் பார்க்க முடியாதே’ என நினைக்க வைத்துவிட்டார்கள்!

ஒரு பயோ பிக்கை இத்தனை சுவாரஸ்யத்துடன் கொடுக்க முடியும் எனக் காட்டியதற்காக நம்ம தல தோனிக்குப் பெரிய விசில் போடலாம்!

vikatan

  • தொடங்கியவர்

 

உயிர் பிழைத்த பூனை
===================
சிங்கப்பூரின் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் பன்னிரெண்டாவது மாடியின் ஜன்னல் வெளியே விழுந்த இந்த பூனை பத்திரமாக மீட்கப்பட்டது.

  • தொடங்கியவர்

14502850_1147947278587298_58658276328075

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவராகப் புகழ்பெற்று விளங்கியவரும், உலகின் தலைசிறந்த ஆங்கில கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளராகக் கருதப்படுபவருமான ரிச்சி பெனோடின் பிறந்தநாள்.
கடந்த ஆண்டு இவர் காலமானபோது கிரிக்கெட் உலகமே கவலையுற்றது,
Happy Birthday Richie Benaud

  • தொடங்கியவர்

தைல மரத்தின் கதை!

 

 
thailam_3034289f.jpg
 

யூகலிப்டஸ் தைலம் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது யூகலிப்டஸ் மரம்தான். உயரமான மரங்களில் யூகலிப்டஸ் மரமும் ஒன்று. மருத்துவக் குணங்கள் உள்ள யூகலிப்டஸ் மரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

யூகலிப்டஸ் ‘மிர்டேஷியே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. யூகலிப்டஸில் சுமார் 700 இனங்கள் உள்ளன. யூகலிப்டஸ் என்ற வார்த்தை, ‘யூகலிப்டோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு ‘நன்றாக மூடிய’ என்று அர்த்தம். யூகலிப்டஸ் மரத்தின் மலர் மொட்டுகளைக் கிண்ணம் போன்ற மெல்லிய தோல் மூடியிருப்பதால், இந்தப் பெயர்.

பெரும்பாலான யூகலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை. பப்புவா நியூகினியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சில வகை யூகலிப்டஸ் மரங்கள் தோன்றின. இங்கிருந்துதான் உலகின் மற்ற நாடுகளுக்கு யூகலிப்டஸ் மரங்கள் கொண்டு செல்லப்பட்டு, பயிரிடப்பட்டன.

வெப்ப மண்டல நாடுகளில் 15 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் யூகலிப்டஸ் மரம் நன்றாக வளரும். யூகலிப்டஸ் மரங்கள் மிகவும் உயரமாக வளரக்கூடியவை. சராசரியாக 33 அடியிலிருந்து 200 அடிவரை உள்ள யூகலிப்டஸ் மரங்கள்கூட உள்ளன. ‘யூகலிப்டஸ் அமிக்டாலினா’ (Eucalyptus amygdalina) என்ற வகையைச் சேர்ந்த மரம் 480 அடி உயரம் வரைகூட வளருமாம். இதுவே உலகின் உயரமான மரம் என்றும் சொல்கிறார்கள்.

இம்மரத்தில் உள்ள இலைகளைப் பிரித்துச் சாறு எடுக்கிறார்கள். அதை ஆவியாக்கி யூகலிப்டஸ் எண்ணெய் தயாரிக்கிறார்கள். இந்த எண்ணெயில் மருத்துவத் தைலம், தொழிற்சாலை எண்ணெய், வாசனைத் திரவியம் என்று மூன்று பல தரங்கள் உள்ளன. யூகலிப்டஸ் மரம் ஓர் இடத்தில் இருந்தால், தண்ணீரை வேகமாக உறிஞ்சுவிடும். மற்றெந்த வகை தாவரத்தையும் வளர விடாது. கூட்டமாக யூகலிப்டஸ் மரங்கள் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் ரொம்பக் குறைவாக இருக்கும்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

14591860_1147947725253920_77086870061965

பிறப்பால் இவர் தென் ஆபிரிக்கர்,
விளையாடியது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு - இங்கிலாந்தின் முன்னாள் அணித் தலைவர்
வாழ்ந்தது அவுஸ்திரேலியாவில்..
நேர்முக வர்ணனையாளராக ரசித்ததும் நேசித்ததும் இலங்கை கிரிக்கெட் அணியை..

மறைந்த டோனி கிரேய்க்கின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Tony Greig

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம் 03: கண்ணாமூச்சி கண்ணாடி!

 

 
glass_3034282f.jpg
 

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் விபத்து செய்தியை டி.வி., செய்திதாள்களில் பார்த்திருப்பீர்கள். இதேபோலவே சூடான நீரையோ, காபியையோ கண்ணாடி டம்ளரில் ஊற்றும்போது அது விரிசல் விட்டு வெடித்ததைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? சிலருக்காவது இந்த அனுபவம் கிடைத்திருக்கும். கிராமத்துக் கடைகளில் டீ குடித்தால் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கலாம். கண்ணாடி டம்பளரில் டீயை ஊற்றிவிட்டு, அதில் எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டுச் சர்க்கரையைக் கலக்குவார்கள். சில வீடுகளில்கூடக் கண்ணாடிக் கோப்பைகளில் டீயை ஊற்றுவதற்கு முன்பு அதில் ஒரு எவர்சில்வர் கரண்டியைப் போட்டு வைத்திருப்பார்கள்.

கண்ணாடிக் கோப்பைகள் ஏன் உடைகின்றன என்ற ரகசியத்தைத் தெரிந்துகொண்டால், கரண்டியை டம்ளர்களில் போடும் நம் நாட்டு அறிவியல் அறிவை நினைத்து நீங்களெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

ஏன் உடைகின்றன?

கண்ணாடி டம்ளரில் சூடான காபியை ஊற்றும்போது அது உடனடியாக டம்ளர் முழுவதும் சூடாகிவிடாது. முதலில் கண்ணாடியின் உட்புற அடுக்கு சூடாகும். வெப்பத்தால் இந்த உட்புற அடுக்கு விரிவடையும். உட்புற அடுக்கு விரிவடையும்வரை வெளிப்புற அடுக்கு குளிர்ந்தே இருக்கும். வெளிப்புறத்தைவிட உட்புறம் மேலும்மேலும் விரிவடைவதால் ஒரு கட்டத்தில் கண்ணாடி டம்ளர் வெடித்துச் சிதறுகிறது. கண்ணாடி வெடிப்பதற்கு இதுதான் காரணம்.

தடிமனான கண்ணாடிக் குவளைகளைப் பயன்படுத்தினால் வெப்பத்தால் உடைவதிலிருந்து பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், முடியாது. ஏனென்றால், அடுக்குகள் அதிகமாகும்போது அது இன்னும் வேகமாகவே உடைந்து சிதறும். உடையாத கண்ணாடி டம்ளர்கள் வேண்டுமானால் அதன் சுவர்கள் மெலிதாக இருக்க வேண்டும். அது போலவே கண்ணாடி டம்ளரின் அடிப்பகுதி பலமானதாக இல்லாமல் மெலிதாக இருக்க வேண்டும். ஏனெனில் காபியைக் கண்ணாடி குவளையில் ஊற்றும்போது அதன் பக்கவாட்டுப் பகுதிகளைக் காட்டிலும் அடிப்பகுதி மிக வேகமாகச் சூடாகி உடைந்துவிடும்.

சூடான நீரால் மட்டுமல்ல, சில சமயம் குளிர்ந்த நீராலும்கூடக் கண்ணாடி டம்ளர்கள் உடைந்துவிடுவதுண்டு. இதற்கு என்ன காரணம்? மிகக் குளிர்ந்த நீரில் கண்ணாடி டம்ளரை வைத்தால், அதன் வெளிப்புற அடுக்கு குளிர்ந்து சுருங்க ஆரம்பிக்கும். இது உட்புற அடுக்கை வேகமாக அழுத்துவதால் கண்ணாடி டம்ளர் உடைகிறது.

எப்படி?

அப்படியென்றால் குளிரிலும், வெப்பத்திலும் உடையாமல் இருக்கும் கண்ணாடிக் கோப்பைகள் இல்லவே இல்லையா? முன்பே சொன்னதுபோல இதற்குக் கண்ணாடி கோப்பைகளின் பக்கவாட்டுப் பகுதிகள் மெலிதாக இருக்க வேண்டும். இந்த அறிவியல் தத்துவத்தைப் பயன்படுத்திதான் கொதிகலன்களில் (பாய்லர்கள்) நீர்மட்டக் கருவிகள் செய்யப்படுகின்றன. கொதிகலன்களின் நீர்மட்டக் கருவிகள் மெலிதான கண்ணாடிச் சுவர்களால் தயாரிக்கப்படுகின்றன. அதனால் நீர்மட்டக் கருவிகளில் வெப்பநிலை சீராகப் பரவி உடையாமல் இருக்கச் செய்கிறது.

காரணம்

அதெல்லாம் சரி, டீ கடைகளில் சூடான டீயைக் குடிக்கும்போது கண்ணாடி டம்ளர்கள் உடைவதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். நாம் குடிக்கிற டீ அவ்வளவு சூடாக இல்லை என்பதே உண்மை. இருந்தாலும், கிராமத்து டீக்கடைகளிளோ வீடுகளிலோ ஸ்பூனைப் போட்டுக் கொடுப்பதற்குக் காராணம் இல்லாமல் இல்லை. ஒருவேளை கொடுக்கும் டீ ரொம்பவும் சூடாக இருந்தால், டம்ளரில் போடப்படும் ஸ்பூன் அந்த வெப்பத்தை தாங்கிக்கொண்டுவிடும். இதனால், சூடு குறைந்து கண்ணாடி விரிவடைவது தடுக்கப்பட்டுவிடும். இதனால், கண்ணாடி உடையாமல் இருக்கும்.

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவதற்கும் இதுதான் காராணம். வெப்பம் காரணமாகக் கண்ணாடியின் உள் அடுக்கு அழுத்தம் அதிகரித்து உடைந்திருக்கலாம் அல்லது குளிர்ச்சியின் காரணமாக வெளிப்புற அடுக்கு குறைந்தும் உடைந்திருக்கலாம்.

கண்ணாடிக்குள் எத்தனை அறிவியல்!

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu.

  • தொடங்கியவர்

 

யானைகளை காப்பாற்ற ‘வானிலிருந்து குதிக்கும்’ நாய்கள்
=====================================
தென் ஆப்ரிக்காவில் வானில் ஹெலிகாப்டர்களிலிருந்து அதிகாரிகளுடன் குதிக்கும் நாய்கள்,
சட்டவிரோத வேட்டைக்காரர்களை பிடிப்பதில் பயிற்சி பெற்றுள்ளன.

BBC

  • தொடங்கியவர்

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர்

 

 
GeorgeWestinghouse_3035331f.jpg
 

அமெரிக்காவின் எலக்ட்ரிகல் தொழில் முன்னோடியான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர் (George Westinghouse Jr) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*நியூயார்க்கின் சென்ட்ரல் பிரிட்ஜ் என்ற இடத்தில் பிறந்தார் (1846). தந்தை இயந்திர சாதனம் விற்பனையாளர். தனது 15-வது வயதில் அமெரிக்காவில் நியூயார்க் நேஷனல் கார்ட் படையில் சேர்ந்தார். பெற்றோர் வலியுறுத்தியதால் வீடுவந்தார்.

*ஆனால், 1863-ல் பெற்றோர் அனுமதி யுடன் மீண்டும் படையில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே ராணுவத்திலிருந்து விலகி, துணைப் பொறியாளராக கப்பற் படையில் சேர்ந்தார்.

*இயந்திரங்கள், மின்சாரம் குறித்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 19-ம் வயதில் ரோட்டரி நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்து அதற்கான காப்புரிமையும் பெற்றார். 21-வது வயதில் ‘கார் ரீப்ளேசர்’ என்ற சாதனத்தைக் கண்டறிந்தார். இது தடம் மாறும் ரயில்களை மீண்டும் அவற்றின் பாதையில் செல்ல வழிகாட்டியது.

*ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் தனித்தனியான பிரேக்குகள் இருந்தன. எனவே ப்ரேக் பிடிப்பதற்காக ஒவ்வொரு பெட்டியாகச் செல்ல வேண்டியிருந்தது. 1869-ல் இதற்கு ஒரு தீர்வு கண்டார். காற்றுத் தடுப்புக் கருவியில் உள்ள ஒற்றை பைப் ரயில் முழுவதும் இணைக்கப்பட்டு அனைத்துப் பெட்டிகளின் பிரேக்குகளையும் கட்டுப்படுத்தியது. இதன்மூலம் ஒரே நேரத்தில் அத்தனை பெட்டிகளுக்கும் சேர்த்து பிரேக் போட முடிந்தது.

*ரயில்வே சிக்னல் அமைப்பிலும் பல மேம்பாடுகளைக் கொண்டுவந்தார். தனது ‘சிக்னலிங் மற்றும் ஸ்விட்சிங்’ கண்டுபிடிப்பு சாதனங்களை உற்பத்தி செய்வதற்காக 1881-ல் ‘யூனியன் ஸ்விட்ச் அன்ட் சிக்னல்’ நிறுவனத்தைத் தொடங்கினார். மின் ஆற்றல் பகிர்மானம் குறித்து பல மின் பொறியாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அமெரிக்காவின் ஆரம்பகட்ட மின்னமைப்பை வடிவமைப்பதில் தாமஸ் ஆல்வா எடிசனின் போட்டியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.

*இவரது மின் விநியோக அமைப்பு மாறுதிசை மின்னோட்ட முறையை அடிப்படையாகக் கொண்டது. இது எடிசனின் நேர்திசை மின்னோட்ட முறைக்கு மாற்றானது. 1886-ல் மின்சார நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் பரவின. பிரபல மின்பொறியாளர் நிக்கோலா தெஸ்ஸாவுடன் இணைந்து மாறுதிசை மின்னோட்டம் மின்மாற்றியை உருவாக்கினார்.

*இந்நிறுவனம் தொலைதூர மின் பரிமாற்றம் மற்றும் உயர் மின்ன ழுத்த மாறுதிசை மின்னோட்ட அமைப்புக்கான முன்னோடி யாகவும் விளங்கியது. இவை வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கும் மின்கடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தன. இதனால் இந்நிறு வனம் அமெரிக்கா முழுவதும் மின்சாரத்தைக் கொண்டு சேர்த்தது.

*1893-ல் இவரும் நிக்கோலா தெஸ்ஸாவும் இணைந்து உருவாக்கிய, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பான மாறுதிசை மின் னோட்ட மின்மாற்றி, முதன்மையான மின்னோட்ட மின்மாற்றியாக உருவெடுத்தது.

*60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்கினார். இவர் மட்டுமே 631 காப்புரிமைகளைப் பெற்றார். மாறுதிசை மின்னோட்டத் துறையில் இவரது குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுக்காக எடிசன் பதக்கமும், பல்வேறு விருதுகளும் கவுரவங்களும் பெற்றார்.

*இவரது நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைபரப்பியுள்ளது. இறுதிவரை தன் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தவரும், ‘அமெரிக்கத் தொழிற்துறையின் கேப்டன்’ என்று போற்றப்பட்டவருமான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர் 1914-ம் ஆண்டு மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
பாரிஸ் பெஷன் வீக்
 

பாரிஸ் பெஷன் வீக் கண்காட்சிகள் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் தற்போது நடைபெறுகின்றன.

 

1671.jpg

 

167_2.jpg

 

167_3.jpg

 

167_4.jpg

 

167_2016-10-02T182921Z_1621919609_S1BEUE

 

167_2016-10-02T183529Z_118526903_S1BEUER

 

உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப் பட்ட ஆடைகளை உலகின் முன்னிலை மொடல்கள் பலர் அணிந்து காட்சிப்படுத்துகின்றனர்.

 

167_2016-10-02T190323Z_1316934885_S1BEUE

 

metronews.lk

  • தொடங்கியவர்

 

மனித கோபுரங்கள்
-----------------------------

பதினெட்டாம் நூற்றாண்டு முதல் ஸ்பெய்னில் தொடரும் மனித கோபுரங்கள் அமைக்கும் போட்டிகள் குறித்த சுவாரஸ்யமானதொரு காணொளி

  • தொடங்கியவர்

60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்... எஸ்.ஜானகி எனும் அதிசயம்! #LegendSJanaki

fda.png


அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்து எட்டாயிரம் பாடல்கள், நான்கு தேசிய விருதுகள், முப்பத்து இரண்டு மாநில விருதுகள், மைசூர் பல்கலை கழகத்திலிருந்து கௌரவ முனைவர் பட்டம், தமிழ் நாடு அரசின் கலைமாமணி பட்டம் என இசையில் தனக்கென ஒரு சகாப்தத்தை படைத்தவர் பாடகர் ஜானகி. அவர் அண்மையில் இசைத் துறையிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியது இசை ரசிகர்களை பெரிதும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தென் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் இவர் வாழ்வில் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், இனி திரைப்படங்களிலும் சரி, மேடைகளிலும் சரி, பாடப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார்

மழலையாக இருக்கும் போதே பாடத் தொடங்கினார் ஜானகி. அவரின் முதல் மேடை நிகழ்ச்சியை மூன்று வயதில் பாடினார். தன் மாமாவின் அறிவுரைக்கு இணங்க இருபது வயதில் சென்னைக்கு பாடுவதற்காக வந்த இவர், ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பாடகராக சேர்ந்தார். 1957ம் ஆண்டு, “விதியின் விளையாட்டு” என்ற திரைப்படம் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் ஜானகி. அன்று முதல் இன்று வரை, தென்னிந்திய மனங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். “செந்தூரப் பூவே”, “இஞ்சி இடுப்பழகி”, “ஊரு சனம் தூங்கிருச்சி”, “மச்சானப் பாத்தீங்களா” போன்ற கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும், பசுமையான பாடல்களுக்கு தன் மழலை குரலை கொடுத்து மேன்மை படுத்தியவர் ஜானகி. எஸ்.பி. பால சுப்பிரமணியம் மற்றும் பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான். இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையை கொண்டவர் ஜானகி.

ஜானகியின் பாடல்களை திரையில் பார்க்கும் போது மட்டும், கதாநாயகியே பாட்டை பாடுவது போல தோன்றும். அவரின் பாடல்கள் இயற்கையான உணர்வுகளின் வெளிப்பாடு என்றே கூறலாம். குரலில் எந்த வித சிரமமும் தெரியாமல், பாடல் அழைக்கின்ற இடத்திற்கெல்லாம் சென்று வருவார் ஜானகி. “காதல் கடிதம் தீட்டவே” என்ற பாடலில், காதல் வழியும் என்றால் “சின்னத் தாயவள்” பாடலில் தாய்மை தாலாட்டும்.  “சின்னச் சின்ன பூவே” பாடலில் மழலை குரல், “ஊரு சனம் தூங்கிருச்சி”, “இஞ்சி இடுப்பழகி” போன்ற பாடல்களில், கிராமத்து பெண்ணின் குரல், “பொன் மேனி உருகுதே”, போன்ற பாடல்களில் விரகத்தின்கா வெளிப்பாடு, “எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்” பாடலில் குடி போதையில் ஆடும் பெண்ணின் தொனி என்று இசையின் பல பரிமாணங்களை குரல் வழியாகவே வெளிப்படுத்தியவர்  ஜானகி. “சிங்கார வேலனே தேவா” போன்ற நுணுக்கங்களை கொண்ட பாடலை, தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் இல்லாத காலத்தில் எவ்வாறு ஜானகி பாடி முடித்தார் என்று இசை உலகினர் இன்று வரை வியக்கின்றனர்.

அனைத்து மொழிகளிலும் மிகச் சரியான உச்சரிப்பை கொண்டவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. தனது இசை வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடிய “சிங்கார வேலனே தேவா” முதல், இப்போது பாடிய “அம்மா அம்மா” வரை தன் குரலால் மக்களை வசீகரிக்க முடிந்திருக்கிறது என்றால், அந்த பெருமை ஜானகியின் உழைப்புக்கும் திறமைக்குமே போய் சேரும். திரைப் பாடல்களுடன் பாரம்பரிய இசையை சேர்த்து அமைப்பது என்பது இளையராஜாவிற்கு கை வந்த கலை. அவ்வாறு அவர் இசை அமைத்த பாடல்களை மிகச் சரியாக பாடுவது ஜானகி தான் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். “காற்றில் எந்தன் கீதம்”, “புத்தம் புது காலை”, “சுந்தரி நீயும்” போன்ற பாடல்கள் இதற்கு சான்று. பாடலின் ஏதாவது ஒரு நொடியில் தவறு செய்தால் கூட உணர்வு சரியாக கேட்பவருக்கு போய் சேராது என்பது போல் மிகக் கடினமான பாடல்களை குரலில் சின்ன சிரமம் கூட தெரியாதவாறு பாடியுள்ளார் ஜானகி. “சங்கத்தில் பாடாத கவிதை”, “தென்றல் வந்து தீண்டும்போது” போன்ற பாடல்கள் இதற்கு சான்று.

ஜானகி முற்றிலும் வித்தியாசமான குரல்களில் பாடக் கூடியவர். “போடா போடா போக்க” பாடலில், கிழவியின் குரல், “மாமா பேரு மாறி” பாடலில் ஒரு ஆணின் குரலில் கூட பாடியுள்ளார். மேற்கத்திய இசையை தமிழ் திரையுலகிற்கு மிக சிறப்பாக கொண்டு\ வந்து சேர்த்த பாடகர்களில் ஜானகியும் ஒருவர். “பாடவா உன் பாடலை”, “ஒரு பூங்காவனம்”, “இது ஒரு நிலாக்காலம்” “ஓ ஓ மேகம் வந்ததோ” போன்ற பல்லாயிரக் கணக்கான மேற்கத்திய பாணி பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து ஜானகி பாடிய, “ஒட்டகத்த கட்டிக்கோ”, “கத்தாழங் காட்டுவழி”, “முதல்வனே” போன்ற பாடல்கள் என்றும் இனிமையானவை. “மார்கழி திங்களல்லவா” பாடல் ஜானகிக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதை பெற்றுத் தந்தது.

பாடத் தொடங்கிய பிறகு எந்த வித குரல் பயிற்சியும் செய்ததில்லை என்று கூறியுள்ளார் ஜானகி. “நான் பாடகி” என்ற செருக்கும் ஆடம்பரமும் எந்த விதத்திலும் தெரியாமல், மிகவும் எளிமையான தோற்றத்துடன் மேடைகளுக்கும்  நிகழ்ச்சிகளுக்கும் வந்து செல்வார். அவர் பாடும்போது உதடை தவிர கை தலை என்று உடலில் வேறு எந்த பாகமும் அசையாது. மைக்கை பிடித்து ஒரு இடத்தில் நின்றால், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே நின்று பாடுவார். உச்சஸ்தாயியில் பாடினாலும் சரி கீழ்ஸ்தாயியில் பாடினாலும் சரி, எந்த வித அசைவும் தெரியாது.

ஜானகியின் குரலை விட இனிமையான குரலை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம் தான். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் என நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார் ஜானகி. பிலிம் பேர், 1997ம் ஆண்டு, ஜானகிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. 2013ம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த “பத்ம பூஷன்” விருதை “மிக தாமதமாகக் கொடுப்பதாக கூறி நிராகித்தவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. “10 கல்பநகள்” என்ற மலையாள திரைப்படத்திற்காக அவர் பாடிய “அம்மபூவினு” என்ற பாடல் தான் அவர் கடைசியாகப் பாடிய பாடல்.

“மலையாள மொழியில் தான் கடைசி பாடலை பாட வேண்டும் என்பது திட்டமிடப்படவில்லை”, என்று கூறுகிறார் ஜானகி, ”நான் ஓய்வு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் அது தானாக அமைந்தது. சீமா விருதுகளில் நான் பாடியது தான் என் கடைசி மேடை நிகழ்ச்சி. நான் கடைசியாக பாடிய நேரலை நிகழ்ச்சி அதற்கு முன்னால் கோழிகோடில் நடை பெற்றது. பல மொழிகளில், ஆயிரக் கணக்கான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதெல்லாம் போதும்”  என்கிறார் ஜானகி.

 

 

இனி பாடுவதில்லை என முடிவெடுத்தால் வருந்தவேண்டியதொன்றுமில்லை. எத்தனையெத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் அவர். ஒவ்வொன்றையும் ஊன்றி கவனித்து சிலாகிக்கவே நம் வாழ்நாள் போதாதே!

vikatan

  • தொடங்கியவர்
இவர்கள் மனதில் நல்ல எண்ணம் இல்லை!

 

article_1475729098-kuliuhl.jpgதெருவில் இருவர் ஆக்ரோஷமாகக் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் அதனை சுவாரஸ்யமாக ரசித்த வண்ணமிருந்தனர். கூட்டத்தில் இருந்த ஒருசிலர், சண்டையில் பலமாக அடிவாங்கியவரை வெகுவாக மனதில் இரசித்தபடி இருந்தனர். ஏனெனில், அடி வாங்கியவர் இவர்களின் எதிரியாக இருக்கலாம். 

சற்று நேரத்தில் யாரோ ஒருவர் வந்து, சண்டையை விலக்கிவிட எத்தனிக்க, தாக்கிக்கொண்டு இருந்தவர் விலக்குப்பிடிக்க வந்தவரையும் தாக்க, முடிவில் பொலிஸார் வந்து அந்த மூவரையும் அழைத்துச் சென்றனர்.

இந்த அரிய போர்க் காட்சியை, இந்தப் பொலிஸார் கெடுத்து விட்டார்களே என மனதில் நொந்தபடி பார்வையாளர்கள் கூட்டம் கலைந்தது.  

சிலருக்கு சண்டை என்றால் சந்தோசம். தாக்கப்படுவது அவர்கள் அல்லவே! சமூகச் சீர்கேடு, அமைதியின்மை பற்றி ஆராய இவர்களுக்கு மனதில் நல்ல எண்ணம் இல்லை! மன த்தூய்மை தீயோருக்கு கிடையாது!  

  • தொடங்கியவர்

15,400 கோடிப்பே..!'

 

p72.jpg

சோவியத் யூனியனில் இருந்து 1991-ம் ஆண்டு உடைபட்ட நாடுகளில் துர்க்மேனிஸ்தானும் ஒன்று. 50 லட்சம் பேர் மக்கள் தொகையுடைய இந்த நாட்டில் இயற்கை எரிவாயுதான் முதன்மையான பொருளாதாரத்துக்கான ஆதாரம். ஆண்டுதோறும் 70 பில்லியன் டாலர் அளவிலான இயற்கை எரிவாயு இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இந்நாட்டின் பெயர் பன்னாட்டுச் செய்திகளில் ஒரு விஷயத்திற்காக அடிபடுகிறது. அந்த நாட்டின் தலைநகரான அஷ்காபாத்தில்(அனுஷ்காபாத் இல்லை பாஸ்!) புதிய பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  வல்லூறு வடிவில், இந்திய மதிப்பில் சுமார் 15,400 கோடி ரூபாய் செலவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அம்மாடியோவ்!

 ஒருமணி நேரத்தில் 1,600 பேரைக் கையாளக்கூடிய அளவுக்கு இதன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் என்ன விசித்திரமென்றால் கடந்த 2015-ம் ஆண்டு இந்நாட்டிற்கு வந்த மொத்தப் பயணிகளின் எண்ணிக்கையே 1,05,000 பேர்தான். அதாவது சராசரியாக ஒருமணி நேரத்திற்கு மொத்தம் 12 பேர்.

p72a.jpg

அப்புறம் ஏன்யா 1,600 பேரைக் கையாள்ற அளவுக்குப் பெரிசா கட்டியிருக்கீங்கனு நாம வேணும்னா கேள்வி கேட்கலாம். ஆனா இங்கே உள்ள மக்கள் இதைக் கேட்க முடியாது. ஏன்னா அங்கே எல்லாமே அப்படித்தான். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த மற்ற நாடுகளைப் போலவே, இங்கும் ஊழல் மலிந்து காணப்படுவதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மறுபடியும் ட்ரிப் போக மோடி இந்நேரம் பிளானைப் போட்டடிருப்பாரே!

vikatan

  • தொடங்கியவர்

14572841_1148787945169898_61234158134973

முன்னாள் உலக அழகியும், ஹிந்தி நடிகையுமான யுக்தா முகியின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Yukta Mookhey

 
  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

ஒக்டோபர் 07

 

1690 : பிரித்தானிய படைகள் கனடாவின்  கியூபெக் நகரைத் தாக்கின. 

 

1737 : இந்தியாவின் வங்காளத்தில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 300,000 பேர் இறந்தனர் என மதிப்பிடப்பட்டது.

 

823_Afghanistan.jpg1769 : பிரித்தானிய  நாடுகாண் பயணி கெப்டன் ஜேம்ஸ் குக் நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தார். 

 

1806 : பிரிட்டனைச் சேர்ந்த ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது. 

 

1840 : இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னராக முடிசூடினார். 

 

1916: அமெரிக்காவின்  கம்பர் பல்கலைக்கழகத்துடனான கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஜோர்ஜியா டெக் கல்லூரி 222:0 விகிதத்தில் வென்றது. அமெரிக்க வரலாற்றில் மிக ஒருபக்கச் சார்பாக அமைந்த கூடைப்பந்தாட்டப் போட்டி இது.

 

1919 : நெதர்லாந்தின் கே.எல்.எம். விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது. 

 

1940 : இரண்டாம் உலகப் போரில் ருமேனியாவை ஜேர்மனி  தாக்கியது. 

 

1942 : ஐக்கிய நாடுகள் சபையை  ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா அறிவித்தன. 

 

1944 : இரண்டாம் உலகப் போரில் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் யூதக் கைதிகளின் கிளர்ச்சி இடம்பெற்றது. 

 

823CV-Vigneswaran1_.jpg1949 : ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி) உருவாக்கப்பட்டது. 

 

1950 : திபெத்து மீதான தாக்குதலை சீனா  ஆரம்பித்தது. 

 

1958 : பாகிஸ்தான் ஜனாதிபதி இஸ்காண்டர் மிர்ஸா, ஜெனரல் அயூப் கான் ஆதரவுடன் 1956 அரசமைப்பை நிராகரித்து இராணுவ ஆட்சியை ஏற்படுத்தினார்.

 

1959 : சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தொலைவிலுள்ள பகுதிகளின் புகைப்படங்களை முதல் தடவையாக பூமிக்கு அனுப்பியது. 

 

1962 : சோவியத் ஒன்றியம் நோவயா சிம்லியா என்ற இடத்தில் அணுக்கரு சோதனையை நிகழ்த்தியது. 

 

1963 : ஹெயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றை சூறாவளி  தாக்கியதில் 7,190 பேர் கொல்லப்பட்டனர். 

 

1984: காத்தான்குடியில் பிறந்து, செய்னம்பு நாச்சியார் மான்மியம் உட்பட பல நூல்களை எழுதி புகழ்பெற்ற கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை காலமானார். 

 

1987: இந்தியாவிலிருந்து "காலிஸ்தான்" சுதந்திரம் பெறுவதாக பஞ்சாப்பின் சீக்கிய தேசியவாதிகள் பிரகடனம் செய்தனர். அது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

 

2001 : ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு  ஆரம்பமாகியது. 

 

2003 : ஆஸ்திரியாவில் பிறந்த ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநருக்கான தேர்தலில், வெற்றி பெற்றார்.

 

2004 : கம்போடியாவின் நொரொடொம் சிஹானூக், மன்னர் பதவியில் இருந்து விலகினார். 

 

2013 : வட மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றார்.

metronews.lk

  • தொடங்கியவர்

14494746_707695636047444_737927723651486

ஆப்பிள் பென்...!

  • தொடங்கியவர்

அலோ உங்களைத்தான்... சிரிச்சா என்ன குறைஞ்சா போவீங்க?!

Chaplin-charlie-chaplin-600%20450.jpg

சிரி!
நீ ஒவ்வொரு முறை
சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடை அடிக்கப்படுகிறது!
                               
 - வைரமுத்து.

புன்னகை எவ்வளவு அழகாயிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். அப்படி இருந்தும் பலர் புன்னகைக்க மறந்துவிடுகிறார்கள். அல்லது மறுத்து விடுகிறார்கள். புன்னகை என்பது ஒரு மனிதனின்கூடவே இணைந்திருக்கும் அழகிய உணர்வின் வெளிப்பாடு. பிறந்த குழந்தையும்கூட காரணமின்றிச் சிரிக்கிறது. மனிதர்களைப் புத்துணர்ச்சியோடு எந்நேரமும் வைத்திருக்கப் புன்னகை உதவுகிறது என அறிவியல் சொல்கிறது. நீங்கள் நடந்து வரும்போது எதிரில் பார்க்கிற ஒருவர் மெலிதாய்ப் புன்னகைக்கையில் உங்களுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியாய் இருக்குமோ அதைப் போலவேதான் உங்களைப் பார்க்கிறவர்களுக்கும் இருக்கும். உடலை நோய் நொடியின்றி வைத்துக்கொள்வதற்கு எப்போதும் மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டேயிருங்கள், போதும். வாழ்க்கை அழகாகிவிடும். 

எதிரிகளையும் நண்பர்களாக்கும் சக்தி உங்களது சிறு புன்னகைக்கு உண்டு. எப்படிப்பட்ட கணத்திலும் புன்னகைப்பது அப்போதிருக்கும் சூழலை உற்சாகமாக்க உதவுகிறது. ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. அந்தச் சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை. அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தைப் பார்க்கும்போது, எத்தனையோ பிரச்னைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, 'பெர்சனாலிட்டி'யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். ஆகவே, மற்றவர்களுடான உறவைக் கட்டிக்காக்க முகத்தில் எப்போதும் புன்னகையைப் படரவிட்டபடி இருங்கள். 

artworks-000014863586-pjuamq-crop.jpg

புன்னகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஜென் கதை ஒன்று உண்டு. 

குரு மொகுஜென் தன்னுடைய வாழ்நாளில் சிரித்ததோ, லேசாகப் புன்னகை செய்ததோ கிடையாது. எப்போதும் முகத்தினை கடுமையாக வைத்துக்கொண்டிருப்பார். இறக்கும் தருவாயில் இருந்தபோது தன்னுடைய நம்பிக்கைக்குரிய சீடர்களை அழைத்து, "நீங்கள் கடந்த பத்து வருடமாக  என்னிடம் கற்று வருகிறீர்கள். நீங்கள் ஜென்னைப் பற்றி புரிந்துகொண்டதைப் பற்றி என்னிடம் விளக்கிக் காட்டுங்கள். யார் ஒருவன் மிகத் தெளிவாக விளக்குகிறானோ அவனே எனக்குப் பிறகு இந்த மடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முடியும். அவனுக்கே என்னுடைய மேலங்கியும், திருவோட்டையும் தருவேன்" என்று கூறினார்.

யாரும் பதில் கூறாமல், மொகுஜென்னுடைய கடுமையான முகத்தினைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வெகு காலமாக குருவுடன் இருந்த சீடன் என்சோ, குருவின் படுக்கையின் அருகே வந்தான். அருகில் இருந்த மருந்துக் கோப்பையை ஆசிரியரை நோக்கி நகர்த்தினான். அதுதான் அவன் ஆசிரியருக்கு அளித்த பதில்.

அதனைப் பார்த்த ஆசிரியரின் முகம் முன்பைவிட கடுமையானது. "இவ்வளவுதானா நீ புரிந்துகொண்டது?" என்று நம்பிக்கை தேய்ந்த குரலில் கேட்டார். என்கோ மறுபடியும் படுக்கையின் அருகே சென்று கோப்பையை முன்பிருந்த இடத்திற்கே நகர்த்தினான்.

முகம் மலர்ந்த குரு மொகுஜென் அழகிய புன்னகையுடன் அவனை அருகே அழைத்து, "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்திருந்தாலும் என்னுடைய முழு உடலையும் நீ பார்த்ததில்லை. என்னுடைய மேலங்கியையும், திருவோட்டையும் எடுத்துக்கொள். அது உன்னையே சேரும்" என்று கூறினார்.

எவ்வளவு பெரிய மனிதராக, மரியாதைக்குரியவராகக் கருதப்பட்டாலும், அவர்களின் முகத்தில் காணப்படும் புன்னகையே அவர்களின் மதிப்பை எடைபோடுகிறது. பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் புன்னகையைப் பரிசளித்து நலமோடு வாழ்வோம். 

#WorldSmileDay

vikatan

  • தொடங்கியவர்

14611014_1148776641837695_91082033779297

 

கலகல வீரர், ரசிகர்களைக் களிப்பூட்டும் வீரர் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரருமான ட்வெய்ன் பிராவோவின் பிறந்தநாள்.
Happy Birthday Dwayne Bravo

 

  • தொடங்கியவர்

தாமஸ் மைக்கேல் கினேலி

 

 
tho_3037054f.jpg
 

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் மைக்கேல் கினேலி (Thomas Michael Keneally) பிறந்தநாள் இன்று (அக்டோபர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் (1935) பிறந்தார். ஆரம்பக் கல்விக்குப் பிறகு, பாதிரியார் ஆவதற்காக 6 ஆண்டுகள் மதக் கல்வி பயின்றார். பின்னர் எழுத்து மீதான ஆர்வத்தில் கதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

*வருமானத்துக்காக பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது ‘தி ப்ளேஸ் அட் விட்டன்’ என்ற முதல் நாவல் 1966-ல் வெளிவந்தது. அடுத்து ‘தி ஃபியர்’ என்ற நாவலை எழுதினார். இவை இரண்டும் பாராட்டுகளைப் பெற்றன. இதற்காக ‘மைல்ஸ் ஃபிராங்க்ளின்’ விருது, ‘கேப்டன் குக் பி-சென்டனரி’ பரிசு பெற்றார்.

*நிறைய படிப்பார். வீட்டில் சொந்தமாக நூலகம் வைத்திருந்தார். பின்னாளில் அந்த நூலகத்தை ஒரு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார். ‘வேறு எதையும்விட புத்தகங்கள் நமக்கு அதிக மனநிறைவை அளிக்கின்றன’ என்பார்.

*இவரது முதல் 2 நாடகங்கள் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸில் உள்ள நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளர் பணி கிடைத் தது. தொடர்ந்து நாவல்கள், நாடகங்கள் எழுதினார்.

*ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நாவல், நாடகம், கட்டுரை எதுவாக இருந்தாலும், எழுதத் தொடங்கும் முன்பு அதுசம்பந்தமாக விரிவாக, ஆழமாக ஆராய்ச்சி செய்வார். இவர் எழுதும் பாணி உளவியல் ரீதியிலானது. இவரது பல நாவல்கள் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.

*தனது நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படங் களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.

*போல்டெக் ஃபெஸர்பெர்க் என்ற யூதரை 1980-ல் சந்தித்தார். அவர் நாஜிக்களின் சித்ரவதை முகாமில் இருந்து தப்பிப் பிழைத்தவர். தான் உட்பட ஏராளமான யூதர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்கர் ஷிண்ட்லர் என்ற ஜெர்மன் அதிகாரி குறித்து தான் எழுதிவைத்த குறிப்புகளை இவரிடம் தந்தார்.

*அதில் மிகவும் கவரப்பட்ட கினேலி, அதை நாவலாக எழுத முடிவு செய்தார். இருவரும் சேர்ந்து ஷிண்ட்லருடன் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று தகவல் சேகரித்தனர். இதுதான் இவரது உலகப் புகழ்பெற்ற ‘ஷிண்ட்லர்ஸ் ஆர்க்’ நூலாக வெளிவந்தது. இந்த நூலுக்காக 1982-ல் புக்கர் பரிசு பெற்றார்.

*இந்த நாவலை அடிப்படையாக வைத்து ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ என்ற பெயரில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் திரைப்படம் எடுத்தார். இது 1993-ல் ஆஸ்கர் விருது பெற்றது. ஆரம்ப காலத்தில் பெற்ற விருதுகள் தவிர 5 சர்வதேச விருதுகள், ஆஸி. பிரதமர் இலக்கிய விருதுகள், ஹெல்மெரிச் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

*இவர் கையெழுத்திட்ட சுயசரிதை நூலை 2009-ல் ஆஸ்திரேலியாவின் நினைவுப் பரிசாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கினார் ஆஸி. பிரதமர் கெவின் ரூட். ஆஸ்திரேலியாவின் ‘வாழும் பொக்கிஷம்’ எனப் போற்றப்படும் பிரபல படைப்பாளியான தாமஸ் மைக்கேல் கினேலி இன்று 81-வது வயதை நிறைவு செய்கிறார்.

tamil.thehindu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.