Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

ஒக்டோபர் - 11

 

1138 : சிரியாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் சுமார் 200,000 பேர்  கொல்லப்பட்டனர்.

 

1634 : டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.

 

1801 : காளையார் கோயிலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனையும் சுற்றியுள்ள காடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

 

1811 : ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா என்ற முதலாவது நீராவிப் படகுக் கப்பலின் சேவை அமெரிக்காவின் நியூ யோர்க்கிற்கும் நியூ ஜேர்ஸிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.

 

1852 : அவுஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

 

825varalaru1.jpg1865 : ஜமைக்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

 

1899 : இரண்டாவது போவர் போர் தென் ஆபிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக ஆரம்பமானது.

 

1944 : துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது.

 

1954 : வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

 

1958 : நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.

 

1968 : நாசா முதற் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பலோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.

 

1984 : சலேஞ்சர் விண்ணோட்டத்தில் சென்ற கத்ரின் சலிவன், விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

 

1998 : கொங்கோவில் ஹொலி கொப்டர் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

 

2002 : பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப் பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இவ்ளோ இனிமையானதா வாழ்க்கை!? #வாழலாம்வாங்க

maxresdefault.jpg

ஒரு நிமிடம்... உங்களிடம் ஒரு கேள்வி... நீங்கள் ஏன் வாழ வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை உங்களுக்குள் நீங்களே ஒரு முறை சொல்லிவிட்டு... இவர்கள் சொல்லும் பதில்களைப் படியுங்கள். 

ஒரு சமையல்காரர்:

 " நான் ஒரு முறை கடற் கரையில் நடந்து கொண்டிருந்தேன். அது விடியற்காலை நேரம். நம் உள்ளங்கையில் வைக்கும் அளவிற்கான சின்ன சின்ன "ஆலிவ் ரிட்லி" ஆமைக் குஞ்சுகள். முட்டையிலிருந்து அப்பொழுது தான் வெளிவந்திருந்தன. அப்படியே... மெதுவாக ஊர்ந்து அலைகளிடம் சென்றன. முதன் முறை தண்ணீர் அதன் மேல் பட்டவுடன் ஒரு நொடி... குழப்பம், பயம், ஆச்சரியம் என பல உணர்வுகள்... பின்பு, இது தான் நம் வாழ்க்கை என்பது அவைகளுக்குப் புரிந்தன. அடுத்த அலை வரும் பொழுது உற்சாகமாக... அந்த அலைகளோடு கடலுக்குள் சென்று விட்டன... இது போன்ற இயற்கையின் பேரழகான காட்சிகளைக் காண நான் நிச்சயம் உயிரோடு இருக்க வேண்டும்..."

unnamed%20%281%29.jpg

 

ஒரு புகைப்படக்காரர்:

" தாஜ்மஹால் போயிருந்தேன்... அங்கு ஒரு குடும்பம்... அதைப் பார்த்து பிரமிப்பது... போட்டோ எடுத்துக் கொள்வது... குழந்தைகளோடு விளையாடுவது...ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என இருந்த அந்த குடும்பம் தாஜ்மஹாலைவிட எனக்கு அழகாகத் தெரிந்தது. " 

 

ஒரு கல்லூரி மாணவி:

" ஏனென்றால் எனக்கு சாக்லேட்டும், ஐஸ்கிரீமும் ரொம்ப பிடிக்கும்..."

unnamed%20%282%29.jpg

 

கட்டிட பொறியாளர்:

" காலையும், மாலையும் பறவைகள் பறப்பது அத்தனை அழகு..."

 

" வானவில்லைப் பார்க்க..." , "மழையில் நனைய...", " பட்டாம் பூச்சிகளைப் பிடிக்க...", " குதிரை ஓட்ட...", " கடலில் நீச்சலடிக்க...", " யானைகளின் தும்பிக்கையைத் தொட..." ," அடிபட்ட நாய்களுக்கு உதவிட..." இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணங்கள். இந்தக் குறிப்பிட்ட பதில்களை இங்கு சொல்ல முக்கிய காரணம்... வாழ்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் மிகவும் சிறியவை தான்... ஆனால், அது அவர்களுக்குத் தரும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது. 

"சிறியவை தான் பேரழகு"... வாழ்வின் ஓட்டத்தில் நாம் கவனிக்க மறுக்கும், மறக்கும் சின்ன சின்ன விஷயங்கள் தான் நமக்கான மகிழ்ச்சிகளை ஒளித்து வைத்திருக்கும் பெட்டகங்கள்.   உங்களின் பெட்டகம் எது என்பதை கண்டுபிடியுங்கள்... அந்த சின்ன விஷயத்தில் இருந்து உங்களுக்கான பெரிய மகிழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்... அதற்கு முன், சிறிய புன்னகையோடு இந்தக் கட்டுரையைப் படித்து முடியுங்கள். உங்களின் இன்றைய நாளை உற்சாகமாகத் தொடங்குங்கள்... மகிழ்ச்சி !!!!

vikatan

  • தொடங்கியவர்
கர்ப்பிணி போன்று 7 கிலோ எடையுள்ள ஆடையணிந்து வீட்டு வேலைகளில் ஈடுபட்ட ஜப்பானிய அரசியல்வாதிகள்
 

வீடு­களில் பெண்கள் செய்யும் பணிகள் குறித்து ஆண்கள் போதிய கவனம் செலுத்­து­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டு எல்லா நாடு­க­ளிலும் உள்­ளது.  

 

19868japan.jpg

 

இந்­நி­லையில், பெண்­களின் வேலைப்­பளு குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஜப்­பா­னிய ஆண் அர­சி­யல்­வா­திகள் மூவர், கர்ப்­பி­ணியைப் போன்று ஆடை­ய­ணிந்து நட­மா­டி­யுள்­ளனர். 

 

ஜப்­பானின் தென் மேற்கு பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஆளு­நர்கள் மூவரே இந்த விழிப்­பு­ணர்வுப் பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

 

1986814_40038151_-_30_09_2016_-_japan-pr

 

இவர்கள்  7 கிலோ எடை­யுள்ள “பிர­கனன்ட் வெஸ்ட் எனும் ஆடை­களை அணிந்த நிலையில் வீட்டு வேலை­களில் ஈடு­பட்­டனர்.  “ஆளுநர் ஒரு கர்ப்­பிணிப் பெண்” எனும் இந்த பிரசார வீடியோ ஜப்­பானை கலக்கி வரு­கி­றது.

 

“பெண்கள் குழந்­தை­யையும் சுமந்து­ கொண்டு வீட்டு வேலை­க­ளிலும் ஈடு­ப­டு­வது எவ்­வ­ளவு கடி­ன­மா­னது என்­பதை நான் உணர்­கிறேன்” என மியா­ஸக்கி பிராந்­திய ஆளு­ந­ரான சுன்ஜி கோனோ (52) தெரி­வித்தார்.

 

19868pregnant-male-politicians-in-japan_

 

ஜப்­பானில் வீட்டு வேலை­களில் ஆண்கள் ஈடு­ப­டு­வது குறை­வா­க­வுள்­ளது. பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு, அபி­வி­ருத்­திக்­கான அமைப்­பினால் 2014 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வின்­படி ஜப்­பானில் பெண்கள் சரா­ச­ரி­யாக தினமும் 5 மணித்­தி­யா­லங்கள் ஊதியம் எது­வு­மற்ற வீட்டு வேலை­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

 

ஆனால், ஆண்கள் தினமும் ஒரு மணித்தியாலம் மாத்திரமே இத்தகைய வேலைகளில் ஈடுபடுகின்றனர் எனத் தெரியவந்தது.

 

19868image.jpg

 

metronews.lk

  • தொடங்கியவர்
யாழ். தமிழ் பெண்ணை கரம்பற்றிய வெள்ளையின மாப்பிளை தமிழர் மரபுப்படி நடந்தேறிய திருமணம்!
 

(பாறூக் ஷிஹான்)


யாழ்ப்­பாணம்  கைத­டியில் இடம்­பெற்ற திரு­மண விழா­வொன்று பல­ரையும் கவர்ந்­துள்­ளது. வெளி­நாட்டைச் சேர்ந்த வெள்­ளை­யின இளைஞர் ஒருவர், யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணைக்  கரம் பிடித்­துள்ளார்.  

 

19871VElliharan08.jpg

 

19871VElliharan06.jpg

 

இந்த திரு­மணம் தமிழர் மர­புப்­படி நடந்­தே­றி­யுள்­ளது. தோரணம், மாவிலை, வாழை கட்டி அலங்­க­ரிக்­கப்­பட்ட மண்­ட­பத்தில் மங்­கள இசை முழங்க பெற்றோர் பெரியோர் இறை ஆசி­யுடன் நடை­பெற்ற இந்த திரு­மண வைப­வத்தில் கலந்­து­கொள்ள வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து மண­ம­கனின் உற­வி­னர்கள், நண்­பர்­களும் வருகை தந்­தி­ருந்­தனர்.

 

19871VElliharan01.jpg

 

19871VElliharan03.jpg

 

19871VElliharan10.jpg

 

மண­மக்கள் மாட்டு வண்­டியில் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். பட்டு வேட்டு சால்வை தலைப் பாகை அணிந்து நெற்றி நிறைந்த திரு­நீற்­றுடன் மண மேடை யில் மண­மகன் காணப்பட்டார்.

 

19871VElliharan09.jpg

 

19871VElliharan02.jpg

 

ஹோமம், கன்­னிகா தானம், திரு­மாங்­கல்­ய­தா­ரணம், சப்தததி முதலாய கிரியை களும் இடம்பெற்றன.

 

19871VElliharan05.jpg

 

metronews.lk

  • தொடங்கியவர்

இப்படி ஆயுத பூஜை கொண்டாடினது யாரு தெரியுமா?

 

19956_thumb.jpg

 

நம்ம சைக்கிள், ஸ்கூட்டிக்கு அலங்காரம் செஞ்சு ஆயுத பூஜை கொண்டாடுறோம். இங்க துப்பாக்கி, அரிவாள் சகிதமா ஆயுத பூகை கொண்டாடியது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். படத்துல இருக்கிற கார் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட். ட'ரியல்' ஆயுத பூஜை போல!

http://www.vikatan.com/news/flashnews/19956-who-celebrate-ayuthapooja-like-this.art

  • தொடங்கியவர்

14581591_1152133741501985_78910156965815

 
 
அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் ஹிந்தித் திரையுலகின் உயர்ந்த நடிகர், என்றுமே புகழின் உச்சத்தில் நிற்கும் அமிதாப் பச்சனின் பிறந்தநாள்
Happy Birthday Amitabh Bachchan
 

 

  • தொடங்கியவர்

14517469_10155068123549578_2235149634488

பெண் குழந்தைகளை.. பெண் குழந்தைகளாக வாழ விடுங்களேன்! #WorldGirlChildDay

anitha03.jpg

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்! பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும்,  19- 12- 2011 அன்று ஐ.நா சபை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக  அறிவிக்கப்பட்டது.

இன்றைய தினம் ஃபேஸ்புக், ட்விட்டரில் #SaveGirlChild என்று பதிவுகள் போடும் முன், உங்களைச் சுற்றி இருக்கும்  பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். நம் சிறுமிகள் எத்தனை ஆபத்துகளுக்கு நடுவில் வளர்ந்து வருகிறார்கள் என்பதை, தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்..! 

எனக்கு புரிகிறது.. இந்த நாள் மட்டும் அல்ல. பெண்களுக்கான எந்த நாள் என்றாலும், அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை பற்றி பேசிக்கொண்டே இருப்பது படிக்கும் உங்களுக்கு அலுப்பையும், கசப்பையும் தரலாம். ஆனால் இன்று உலகில் சுமார் 1.1 பில்லியன் சிறுமிகள் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலான சிறுமிளை பாலியல் ரீதியாக மனித மிருகங்கள் சீரழிக்கிறார்கள். இந்த அவலம் மறையும்வரை, இந்தக் கசப்புக்கு நீங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும். காரணம், எந்த மனிதன் எப்போது மிருகமாகிறான் என்பது யாராலும் யூகிக்க முடிவதில்லை. 

 

anitha04.jpg



நவீன குழந்தைத் திருமணம் பற்றி தெரியுமா?

பெண் கல்விக்கு முக்கியத் தடையாக இருப்பது குழந்தைத் திருமணம். சீனாவைத் தவிர, உலகில் வளர்ந்த நாடுகளில் 18 வயதில் இருக்கும் மூன்று பெண் குழந்தைகளில் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. இதனால் அவர்களுக்குக் கல்வி தடைப்பட்டு, கணவரால் பதின் வயதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி, இளம் வயதில் தாயாகி, உடலாலும் மனதாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்குகிறார்கள் பெண் குழந்தைகள்.

இப்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் பரவலாகி இருப்பதால், பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் முடக்கி வைப்பதில்லை. பரவலாக, பெண் பிள்ளைகள் படிக்க வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், கல்லூரி செல்லும்போது காதலித்து விடுவார்களோ என்று பயந்து, பூப்படைந்தவுடன் அவர்களுக்குத் திருமணம் முடித்துவிடுகிறார்கள். இதுதான் குழந்தைத் திருமணத்தில் ஏற்றப்பட்ட நவீன மாற்றம்.  

உங்கள் பெண் குழந்தைக்கு என்ன தற்காப்புக் கலை தெரியும்?

இன்று டிவி ஷோக்களின் மோகத்தால் பாட்டு, நடன வகுப்புகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் அதிகம். தவறில்லைதான். ஆனால், அதைவிட குழந்தையின் பாதுகாப்புதான் முதல் தேவை. குறைந்தபட்சம் தன்னைத் தற்காத்துக்கொள்ள, பெண் குழந்தைகளுக்கு கராத்தே, குங்பூ போன்ற எதாவது ஒரு தற்காப்புக் கலை கற்றுக்கொடுப்பது அவசியம். இதனால் பாதுக்காப்புடன், அந்தப் பெண் குழந்தைகள்  தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கப்பெற்று, வாழ்வையும், சமூகத்தையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள். 

 

anitha4.jpg
 

அதிகரிக்கும் இளம் வயது காதல்! 


சிறுமிகள் பதின் வயதில் அவர்களுக்கு ஏற்படும் கிளர்ச்சியை காதல் எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ''சமீபத்தில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி, 'என் எதிர்காலக் கணவரைப் பற்றின கனவு எனக்கு இருக்காதா?' என்று கேட்டபோது நான் அதிர்ச்சியாகிவிட்டேன்'' என்கிறார்,  மனநல மருத்துவர் பீனா. “இப்போது குழந்தைகளுக்கு குழந்தைப் பருவமே இல்லாமல் போய்விட்டது. அந்தக் கேள்வியைக் கேட்ட குழந்தையைபோல், இன்று பலர சிறுமிகள் காதல்(!) வசப்படுகிறார்கள்.  இதற்குக் காரணம் பெற்றோர்கள்தான். சிலர், 'நான் ரொம்ப சோஷியலா பழகுறேன்' என்று, குழந்தையிடம் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். இன்னும் சிலர் தங்கள் குழந்தையிடம் ராணுவ ஆட்சி செலுத்துவார்கள். இவை இரண்டுமே தவறு. 

 

குழந்தைகளிடம் சில நெறிமுறைகளோடு, நட்போடு பழக வேண்டும். அது கடினம்தான். இருப்பினும் சரியாகச் செய்தே ஆகவேண்டும். அதற்கு முதலில் அவர்கள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நட்பை ஆதரிக்கும் அதே நேரம், அவர்களுக்கான எல்லையையும் அவர்களின் மன நோகாதவாறு புரியவைக்கவேண்டும். 

உங்கள் பெண் குழந்தையின் மேல் உங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதும், அதைக் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். 

குட் டச், பேட் டச்... கற்றுக்கொடுங்கள்! 

பெண் குழந்தையின் உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்து அதைப் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். குழந்தைக்கு விபரம் தெரிந்ததுமே, அவர்களுக்கு குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக்கொடுப்பது காலத்தின் அவசியம்'' என்கிறார் உளவியல் நிபுணர் நப்பின்னை. 

 

girl02.jpg



''ஆண்கள், பெண்களுக்கு எதிரானவர்களே!"

''2014ல் 1,565 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார்கள். இதில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளின் எண்ணிக்கை 1,110. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில் 60% - 68% பெண் குழந்தைகள் மீது நடந்தப்படுபவையே. பெண் குழந்தைகளை வேட்டையாடும் சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். தங்களுக்கு நடக்கும் வன்முறையை வெளியில் சொல்லமுடியாத சூழலை சிறுமிகளுக்கு நாம் கொடுத்திருப்பதுதான் கொடூரத்தின் உச்சம். 

வெளியில் சொல்லக்கூடாது என்ற மிரட்டல் ஒரு பக்கம் என்றால், பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளியாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் குருட்டுப் பார்வை இன்னொரு பக்கம். பாலியல் வன்முறைக்கு ஆடைதான் காரணம் என்றால், சிறுமிகளையும் சேலையால் போர்த்த வேண்டுமா? பின் தொடர்ந்து வருவது, தவறான ஜாடை காட்டுவது, தொடுவது, அநாகரிகமாகப் பேசுவது என பலதரப்பட்ட வன்முறைகளை பெண்களும் பெண் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்" என்கிறார் சமூக ஆர்லவர் எவிடன்ஸ் கதிர்.

''நீதிமன்றங்களில் தண்டனை பெறும் பாலியல் வன்முறைகள் வெறும் 19% தான். இதில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் 3% கூட இல்லை. பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட பெண் பிள்ளைகளில்  80 % பேருக்கு 20 நாட்களுக்குப் பிறகுதான் பரிசோதனை நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தவுடனேயே எச்சில், நகம், முடி, காயங்கள் போன்ற நுணுக்கமான தடயங்கள் ஆராயப்படுகின்றன. இங்கு அதுபோன்று இல்லை என்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் மீட்கும் கவுன்சிலிங்கூட சரியாகக் கொடுக்கப்படுவதில்லை. 

vin.jpgபாலியல் கொடுமைகள் மட்டுமல்ல... குழந்தைத் திருமணம், பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, ஆணவக் கொலைகள் என இன்றும் கிராமப்புறங்களில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல... உலகத்தின் எல்லா நாடுகளிலும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. வன்முறையின் அளவுகோல் வேறுபடுமே தவிர, பெண் இனத்தை நசுக்காத சமூகம் இந்தப் பூமியில் இல்லை.


நான் உட்பட் எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரானவர்களாக ஏதோ ஒரு நேரத்தில் மாறிவிடுகிறார்கள். அது காந்தி, பெரியார், பாரதியார், அம்பேத்கார் என யாராக இருந்தாலும் பொருந்துகிறது. அவர்கள் பெரிய புரட்சி செய்திருக்கலாம்.  ஆனால் அனைவருமே ஏதோ ஓர் இடத்தில், 'நான் ஆண்' என்ற ஒரு திமிரான மனோபாவத்தை வெளிப்படுத்திவிடுகிறோம். எங்களுக்குத் தெரியாமலேயே அந்த எண்ணம் எட்டிப்பார்த்துவிடுகிறது. ஓர் ஆண் பிறந்து இறப்பதற்குள் தனக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் சதவிகிதத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்'' என்கிறார் எவிடன்ஸ் கதிர்.

 

 

 


பெண் பிள்ளை கடத்தல்!


பெரும்பாலும் 10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்தி கடத்தல்கள் நடக்கின்றன. இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் பாலியல் தொழிலுக்காகவும், ஆபாச படங்கள் எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம், 20 மாவட்டங்களில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக உள்ளது.  உங்களுக்குத் தெரிந்து குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை, பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், படிக்கத் தடை என்ற செயல்பாடுகள் நடந்தால்.. உடனே  1098 என்ற எண்ணுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இப்போது புரிகிறதா... உங்களைச் சுற்றியிருக்கும் பெண் பிள்ளைகள், எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள் என்பது. அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின் குழந்தைப் பருவக் கொண்டாட்டத்தை சிதைக்காமல் இருந்தால் போதுமானது. நீங்கள் முன் பின் அறியாத பெண் பிள்ளைகள் உட்பட, நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்த குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்து வாழவிடுங்கள். அதுவே பெரிய வாழ்த்தாக அமையும்!

vikatan

 

  • தொடங்கியவர்
Bild zeigt im Freien
 

ஜெர்மனியில், பிரெண்டன்பர்க் பகுதியில், இலையுதிர் காலத்தில் தரையில் விழுந்துள்ள வண்ணமயமான மேப்பிள் மர இலைகளை ஒருவர் ஒதுக்குகிறார். இது ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சி

சூரிய ஒளி குறைவதால், மரங்கள் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான பச்சையத்தை உற்பத்தி செய்வதை நிறுத்துவதால் இலைகளின் நிறம் மாறத் தொடங்குகிறது.

இந்த நிற மாற்றம், நேரம் மற்றும் மர இனங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.

BBC

  • தொடங்கியவர்

14523232_1152135354835157_57136683820929

 
 
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரயன் ஹரிஸ்ஸின் பிறந்தநாள்.
Happy Birthday Ryan Harris
  • தொடங்கியவர்
துபாய் அராப் பெஷன் வீக்கில் பலரையும் கவர்ந்த சவூதி அரேபிய ஆடை வடிவமைப்பாளரான தாயும் மகளும்
2016-10-11 13:16:09

அராப் பெஷன் வீக் (Arab Fashion Week) கண்­காட்சி ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் துபாயில் ஒக்­டோபர் 6 ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­யது. பல நாடு­களைச் சேர்ந்த ஆடை வடி­வ­மைப்­பா­ளர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை­களை இந்த பெஷன் ஷோவில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

 

19873designer-%282%29.jpg

 

198734.jpg

 

சவூதி ஆரே­பி­யாவைச் சேர்ந்த தாயும் மக­ளு­மான இரு பெண்கள் தமது வடி­வ­மைப்­புகள் மூலம் இந்த பெஷன் ஷோவில் அனை­வ­ரையும் கவர்ந்­தனர்.

 

198731.jpg

 

198732.jpg

 

சுஸான் பர்ஹோத் அவரின் மக­ளான லீன் அல் ஷீஷாக்லி ஆகி­யோரே இவ்­வி­ரு­வ­ரு­மாவார். சுஸான் பர்ஹோத் ஆடை­களை வடி­வ­மைக்­கிறார். லீன் அல் ஷீஷாக்லி பைகளை வடி­வ­மைப்­ப­துடன் இவர்­களின் வர்த்­த­கத்தை நிர்­வாகம் செய்­கிறார்.

 

198735.jpg

 

டெனிம் ஆடைகள் மீது அபி­மானம் கொண்ட இவ்­வி­ரு­வரும் ஒரு வரு­டத்­துக்கு முன்னர் (Jeans Coutrue) எனும் வர்த்­தக நாமத்தின் கீழ் ஆடை­களை இவர்கள் தயா­ரிக்க ஆரம்­பித்­தனர்.

 

19873284973-01-02.jpg

 

“டெனிமை கெஷுவல் சவூதி அரே­பி­யர்கள் ஆடை­யாக நோக்­காமல் சம்­பி­ர­தாய வைப­வங்­க­ளுக்கும் அணிய வேண்டும். சவூதி அரே­பி­யா­வுக்கும் மத்­திய கிழக்­குக்கும் டெனிமை கொண்­டு­செல்ல நாம் விரும்­பு­கிறோம்” என அமெ­ரிக்­காவில் கல்வி கற்ற 26 வய­தான  லீன் அல் ஷீஷாக்லி தெரி­வித்­துள்ளார்.

 

198733.jpg

 

அராப் பெஷன் வீக்கில் சுஸான் பர்ஹோத் அவரின் மக­ளான லீன் அல் ஷீஷாக்லி ஆகி­யோ­ரினால் வடி­வ­மைக்­கப்­பட்ட மினி ட்ரெஸ்கள், ஸ்கின் டைட் ஜக்கட், ட்ரான்ஸ்பரன்ட் பிளவுஸ் உட்பட பல ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் சில ஆடைகளை இங்கு காணலாம்.

 

http://www.metronews.lk

  • தொடங்கியவர்

வெற்றி, தோல்வி, அவமானங்கள்...அமிதாப் என்னும் யானை! #HBDamitabhbachchan

amith.jpg

பாலிவுட் 'யானை 'அமிதாப்பின் 74-வது பிறந்தநாள் இன்று. ஒரு நடிகராக அமிதாப் ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை. பார்க்காத வெற்றிகளும் இல்லை.  சந்திக்காத தோல்விகளும் இல்லை. பெறாத அவமானங்களும் இல்லை. அமிதாப்பை தவிர்த்துவிட்டு பார்த்தால் பாலிவுட்டை யோசித்துக்கூட பார்த்து விட முடியாது. உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் பிறந்த ஒருவரால் பிரமாண்டமான பாலிவுட்டை இத்தனை காலம் கட்டிப் போட முடிந்திருக்கிறது.  

வீட்டுக்கு அமிதாப்தான் மூத்தப்பிள்ளை. அஜிதாப் என்ற சகோதரனும் உண்டு. வாலிப பருவத்தில் கொல்கத்தாவில் கப்பலில் சரக்கு ஏஜண்டாக வேலை பார்த்தவர். .சினிமா மீதுள்ள  காதலால் மும்பைக்கு வந்து பாலிவுட்டுக்குள் பிரவேசித்தார். அவரது உயரேமே பெரிய பிளஸ்பாயின்ட்,. இவருக்கு முன் பாலிவுட்டில் இந்த உயரத்தில் எந்த ஹீரோவும் கிடையாது.   முதல் படம் 1969-ல் வெளியான சாட்ஹிந்துஸ்தானி. இந்த படம் தோல்வியடைந்தது. ஆனாலும் அமிதாப்புக்கு சிறந்த புதுமுக நடிகருக்கானத் தேசிய விருது கிடைத்தது.  அடுத்து வெளிவந்த 'ஆனந்த்'  வியாபார ரீதியாக வெற்றி கண்டது.

sols%20.jpg

1973-ம் ஆண்டு முதல் 75-ம் ஆண்டு வரைதான் அமிதாப்பின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் பாலிவுட்டில் அபார வளர்ச்சிக் கண்டார் அமிதாப். பிரபல நடிகை ஜெய பாதுரியைத் திருமணம் புரிந்துகொண்டார். '1975-ம் ஆண்டு வெளியான தீவார்' அமிதாப்புக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அடுத்த படம் பிரமாண்டமான ஷோலே. இந்த படமும் இதே ஆண்டு  ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்தது. அமிதாப்புடன் தர்மேந்திரா, ஹேமாமாலினி, சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி, அம்ஜத்கான் என பெரிய பட்டாளமே நடித்திருந்தது. ஜெயதேவ் பாத்திரத்தில் அமிதாப் பின்னி எடுத்திருந்தார்.  அமிதாப் - தர்மேந்திரா நட்பு கதைகளத்தில் உருவாக்கப்பட்டிருந்த விதம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. பாலிவுட்டின் அசைக்க முடியாத 'ஆக்ஷன் ஹீரோ'  அந்தஸ்த்தையும் ஷோலே அமிதாப்புக்கு பெற்றுத் தந்தது.

paas.jpg

1982-ம் ஆண்டு தயாரான 'கூலி ' திரைப்படம் அமிதாப்பின் உயிரை பறிக்க இருந்தது. சண்டைக் காட்சிகளில் பெரும்பாலும் அமிதாப் டூப் போட மாட்டார். இந்த படத்துக்காக புனித் இஸ்ஸாருடன் மோதும் சண்டைக் காட்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மேஜை மீது ஆமிதாப் விழுவது போல காட்சி. அப்போது, மேஜையின் கூர் முனை  அமிதாப்பின் வயிற்றுப் பகுதியை கிழித்து ஆழமாக பாய்ந்தது. அதிக அளவு ரத்தம் வெளியேறியது. மண்ணீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்ட அமிதாப், மீண்டும் நடிக்க ஒரு வருட காலம் பிடித்தது. கூலி திரைப்படம் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.

piks%20.jpg

கடந்த 1984-ம் ஆண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு. அரசியலுக்குள் நுழைந்தார். குடும்ப நண்பர் ராஜிவ்காந்தியின் ஆதரவு இருந்ததால், அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் எச்.என்.பகுகுணாவை தோற்கடித்து எம்.பி ஆனார். ஆனாலும் அமிதாப்பின் அரசியல் வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குள் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அமிதாப், அவரது சகோதரர் அஜிதாப் பச்சன் ஆகியோர் போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர்கள் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 'குற்றமற்றவர்' என்பதை நிரூபிப்பதற்காக அமிதாப் பதவியில் இருந்து விலகினார்.

கடந்த 1996-ம் ஆண்டு ஏபிசிஎல் நிறுவனத்தைத் தொடங்கினார் அமிதாப். இந்த நிறுவனத்தின் முதல்படம் 'தேரே மேரே சப்னே' வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை இந்த படத்தில் இருந்து தமிழுக்கு ஒரு சூப்பர் ஹீரோயின் கிடைத்தார். அவர்தான் சிம்ரன். தேரே மேரே சப்னேவால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த லாபம் சிம்ரன்  அமிதாப்புக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. சொல்லப் போனால், ஏபிசிஎல். தயாரித்த படங்கள் ஒன்று கூட உருப்படியில்லை.  தமிழில் எடுக்கப்பட்ட   'உல்லாசம்' திரைப்படமும் பிளாப் ரகம்தான். அது மட்டுமல்ல 1996-ல் ஏபிசிஎல் பெங்களுரில் நடத்திய உலகஅழகிப் போட்டியும் கூட பெரும் இழப்பை ஏற்படுத்தியது. கடனில் இருந்து மீள அமிதாப் தனது மும்பை 'பிராக்தீட்ஷா' பங்களாவையே கூட விற்க முயற்சித்தார்.

pin.jpg

 2000-ம் ஆண்டு அமிதாப்புக்கு மறுவாழ்வு கிடைத்தது. இந்த முறை அமிதாப்புக்கு கை கொடுத்தது சின்னத்திரை. ஸ்டார் தொலைக்காட்சியில் 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை அமிதாப் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.  இந்த நிகழ்ச்சிதான் அமிதாப்புக்கு சினிமா வாழ்க்கையையே மீட்டும் தந்தது இதே ஆண்டில் வெளி வந்த யாஷ் சோப்ராவின் 'மொஹாபத்தியன் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை ' ஆதித்யா சோப்ரா இயக்கியிருந்தார்.  பிளாக் (2005)  பா ( 2009)  பிகு (2015) இந்த 3 படங்களிலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற அமிதாப், காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு  தற்போதைய 'பிங்க்' வரை கதாபாத்திரங்கள் வழியாகத்தான் ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

 

“வெற்றி பெற உடுத்தல்”
‘ஆள் பாதி ஆடை பாதி‘ என்பதை உறுதி செய்யும் விற்பனையாளர்

BBC

  • தொடங்கியவர்

  14642099_1455047294511677_42308190401359

  • தொடங்கியவர்

ஜப்பானில் விநோத திருவிழா: குழந்தைகளை அழ வைக்கும் சுமோ போட்டி

Fotorcreated

 

ஜப்பானில் தேசிய விளையாட்டுகளுக்குள் ஒன்று சுமோ எனும் மல்யுத்த போட்டி. இந்த போட்டி விநோதமாக நடைபெறுகிறது. குழந்தைகளை மையமாக வைத்து அவர்களின் ஆரோக்கியத்திற்காக விளையாடுவதாக கூறப்படுகிறது.

சுமோ நானூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட விளையாட்டு ஆகும். ஆண்டுதோறும் டோக்கியோவில் உள்ள புத்தர் கோயிலில் இந்த மல்யுத்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஆறு மாத குழந்தை முதல் மூன்று வயது குழந்தைகள் வரை பங்கேற்கின்றனர். போட்டியன்று, குழந்தைகள் கோயிலில் உள்ள புத்த துறவியால் ஆசிர்வதிக்கப்பட்டு, போட்டிக்கு அனுப்பப்படுகின்றனர்.

இரண்டு மல்யுத்த வீரர்கள் குழந்தைகளை தூக்கி மேலும், கீழும் தூக்குவது, இடதும், வலதுமாக அசைப்பது போன்ற பல விநோத செயல்களை புரிகின்றனர். இப்படி செய்யும் போது குழந்தைகள் வேகமாக அழ தொடங்கி விடுமாம். அப்படியும் அழாமல் இருக்கும் குழந்தைகளை பேய் முக மூடி அணிந்து பயம் காட்டுகின்றனர்.

வீரர்களின் கையில் உள்ள குழந்தைகளில் எந்த குழந்தை முதலில் அழுகிறதோ அதுவே வெற்றி பெற்ற குழந்தை என அறிவிக்கின்றனர். அதன் பின் அந்த குழந்தைக்கு பரிசுகளும், கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகிறது. இப்படி இந்த போட்டிகளில் வெல்லும் குழந்தைகள் நீண்ட ஆயுளுடன், நோயின்றி வாழ்வதாக பெற்றோர்கள் தெரிவின்றனர்.

 

http://tv.puthiyathalaimurai.com

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt Essen
 

*நவீன திரு(உப்புமா)விளையாடல்*

*_(உப்புமா பிரியர்களுக்கான சிறப்புப் பதிவு)_*

சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?

நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.

சிவன் : என்ன குற்றம் கண்டீர்?

நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?

சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி
ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே
கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து
எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து
வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே!

நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?

சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே இதன் பொருள்.

நக்கீரர் : இப்பாட்டிலிருந்து எம்மன்னருக்குத் தாங்கள் கூறும் முடிவு?

சிவன் : ஹஹஹா! புரியவில்லை? பெண்களுக்கு இயற்கையிலேயே ரவா உப்புமா செய்யும் ஆற்றல் உண்டு என்பதுதான் நான் கூறும் முடிவு.

நக்கீரர் : ஒருக்காலும் இருக்க முடியாது. அன்னையிடம் சமையல் நன்றாகக் கற்றுக் கொள்வதாலும், தொடர்ந்து சமையல் செய்யத் தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

சிவன் : தேவலோகப் பெண்களுக்கு?

நக்கீரர் : அவர்களுக்கும்தான்

சிவன் : சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கித் தூங்கி வழிகிறானே கும்பகர்ணன்? அவன் மனைவிக்கும் இதே கதிதானோ?

நக்கீரர் : அவளென்ன! நான் அன்றாடம் என் நினைவில் வைத்திருக்கும் சமையற்கலை வல்லுனன் நளமகராஜனின் இடப்பக்கம் அமர்ந்துள்ள தமயந்திக்கும் இதே கதிதான்.

சிவன் : அங்காடியில் விழுந்து புரண்டு அரிசியும் பருப்பும் தலையில் சுமந்து டெபிட் கார்டில் உள்ள மினிமம் பேலன்ஸும் கரைத்து வீட்டிற்கு சென்று ஏன் தாமதமாக வந்தாய் என பல்பு வாங்கும் கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரன் : பல்பு வாங்குவது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – பல்பை
டெஸ்ட் செய்து வாங்குவோம்! உன்னைப் போல்
ஃப்யூஸ் போன பல்பாக ஒரு போதும் இருக்க மாட்டோம்!!

சிவன் : நக்கீரா! நன்றாக என்னைப் பார். நான் எழுதிய தமிழ்ப் பாட்டில் குற்றமா?

நக்கீரர் : நீரே முக்கண் முதல்வராயும் ஆகுக. உமது நெற்றியில் ஒருகண் காட்டிய போதும் உடம்பெல்லாம் கண்ணாக்கி சுட்ட போதிலும் குற்றம் குற்றமே! "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

சிவன் : நக்கீ. . . . . .ரா!

மன்னர் : இறைவா! சொக்கநாதா! ஜோதிச் சுடரே! ஆராயாமல் எதிர்வாதம் செய்த நக்கீரனை மன்னிக்க வேண்டும். விலை மதிப்பற்ற எங்கள் தலைமைப் புலவனை மீண்டும் உயிர் பெறச் செய்ய வேண்டும்.

சிவன் : செண்பகப் பாண்டியா! சினம் இல்லை எமக்கு. வேதனையை விடு. எமது விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. கொதிக்கும் ரேஷன் கடை பாமாயிலை மேலே ஊற்றியதால் ஏற்பட்ட காயத்தின் வெம்மை தாளாமல் அவதியுறும் நக்கீரர் நலமுடன் எழுந்து வருவார்.

நக்கீரர் : இறைவா! பரம்பொருளே!
உப்பும் நீயே!
பருப்பும் நீயே!
கோல்டு வின்னரும் நீயே!
பாசுமதி ரைஸும் நீயே!
கத்தரிக்காயும் நீயே!
புடலங்காயும் நீயே!
வெங்காயமும் நீயே!
தக்காளியும் நீயே!

அறியாமல் வாதம் செய்த என்னை மன்னியுங்கள்.

சிவன் : நக்கீரரே! உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம். வந்திருப்பது இறையென்றறிந்தும் சாப்பாட்டின் மீது உங்களுக்கிருந்த பற்றின் காரணமாக "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட உங்கள் வாதம் வெகு சூப்பர்!

 

Dedicated to *உப்புமா திருவிளையாடல்*

  • தொடங்கியவர்

முள்ளை முள்ளால்...

 

P108b.jpg

பூமியில் வாழ மனிதனுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சரிசமமான உரிமை உள்ளது. இதை உணராது நாம் வீசியெறியும் குப்பைகளாலும், பிளாஸ்டிக் பொருட்களாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, விலங்கினங்களும் பெருமளவு அழிகின்றன. போர்ச்சுகலைச் சேர்ந்த போர்டாலோ என்ற கலைஞர், மக்களிடம் இதுபற்றி வித்தியாசமான வகையில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார். என்னனு பார்ப்போம்!

p108a.jpg


எந்தக் குப்பையால் விலங்கினங் களுக்கு ஆபத்து ஏற்படுகிறதோ, அந்தக் குப்பைகளைப் பயன்படுத்தியே பல்வேறு பறவை மற்றும் விலங்கு களின் உருவங்களைத் தத்ரூபமாக வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் இவர். தவிர, இவர் வடிவமைக்கும் உருவங்கள் மிரட்சியான பார்வையோடு, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும்படி மனிதர்களிடம் கோரிக்கை வைப்பது போலவும் இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரியின் செல்ஃபி அடுத்த நொடியே கொட்டாம்பட்டி வரைக்கும் வைரலாகும் இந்த இன்டர்நெட் யுகத்தில், இவரது புகழும் இணையம் மூலமாக உலகெங்கும் பரவி வருகிறது. தங்கள் ஊரிலும் இப்படி விழிப்பு உணர்வு ஏற்படுத்துமாறு எஸ்தோனியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அழைப்பு வந்தபோது, `எங்க ஊர்லேயே நிறைய மாத்தணும் பாஸ்!' என மறுத்துவிட்டார், போர்டாலோ.

நல்லவங்க டயலாக் ரீச்சாகும் ப்ரோ! என்ன... கொஞ்சம் லேட்டாகும்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் முதல் தற்கொலைப் போராளி இந்த தமிழச்சி!

kuili.jpg

 

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி, குயிலி. பிறந்த மண்ணையும், வீர மங்கை வேலுநாச்சியாரையும் தன் உயிராக சபதம் கொண்டபோது குயிலிக்கும் வயது 18.

ஒருநாள், வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல், குயிலியிடம் ஓர் உதவி கேட்டார். சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் ஒரு கடிதம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த உதவி. அன்றிரவு, சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும், ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக ஓடிவந்து, கதறியழுதபடி கடிதத்தை நீட்டினாள்.

veelu%20naa.jpg

 

கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைப் பாராட்டினார். குயிலி, அன்றிலிருந்து வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானாள்.

1780-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5-ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து பலரின் எதிப்புகளைத் தகர்த்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்தாள். எதிர்த்த மல்லாரிராயனையும், தன் கணவரைக்கொன்ற ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்தையும் கொன்றார், நாச்சியார். காளையார் கோயிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. எத்தனை படைகள் இருந்தாலும், ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொடர் வெற்றிகளைக் குவித்துவந்த வேலுநாச்சியார் இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது?
.
 ''நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கிறார்கள். இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.” என்ற யோசனையைச் சொன்னாள், குயிலி.

போர்முரசு கொட்டட்டும் என ஆணையிட்டுச் சென்றார் வேலுநாச்சியார். வேலுநாச்சியாரும் சாதாரண பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. ஆயுதங்கள் அனைத்தையும்  கோட்டையின் நிலா முற்றத்தில் குவித்து வைத்திருந்தனர் ஆங்கிலேயர்கள். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன. வேலுநாச்சியார் கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றியது. ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள். கோட்டையில் பூஜை முடிந்து அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தபோது, பெண்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என உணர்ந்து, கையைத் தலைக்குமேல் உயர்த்தி, “வீரவேல், வெற்றிவேல்!” என்று விண்ணதிர முழங்கினார்.  பெண்கள் படை புயலாய்ச் சீறியது. வழிபடக் கொண்டுசென்ற மாலைக்குள் இருந்து திடீரென பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின. ஆயுதங்களைச் சுழற்றி, வெள்ளையர்களை வெட்டிச்சாய்த்தனர்.

 “சார்ஜ்!” என்று கத்தியபடியே, பான்சோர் தன் இடுப்பில் இருந்த இரண்டு கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட்டான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடினர். வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்துக்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண், தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று கத்தியபடியே ஆயுதக்கிடங்கில் குதித்தாள். ஆயுதங்கள் அனைத்தும் தீ பிடித்து வெடித்துச் சிதறின. தப்பி ஓட முயன்ற பான்சோரை, வேலுநாச்சியாரின் வீரவாள் வளைத்துப் பிடித்தது. வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழி, குயிலியைத் தேடின.

 

 

 

 

போர் தொடங்கியபோது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால், இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றிபெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன்' என்று கூறியபடியே நாட்டின் விடுதலைப் போரில் தன்னை ஈந்தவர் குயிலிதான். உலகிலேயே முதன்முதலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய பெருமையைச் சூடிக்கொண்டாள்.

மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தாள் என்பதை அறிந்ததும், அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் கரைந்தன. குயிலி போன்ற தியாகிகளின் ஒட்டுமொத்த சக்திதான் இந்தியாவுக்கு விடுதலை வழிகாண வைத்தது. குயிலியின் தியாகத்துக்குத் தலைவணங்குவோம்!

vikatan

  • தொடங்கியவர்

ஜெர்ஹார்ட் எர்ல்

 

 
eral_3040429f.jpg
 

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் ஜெர்ஹார்ட் எர்ல் (Gerhard Ertl) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 10). அவரைப் பற்றிய 10 அரிய முத்துகள்:

* ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தில் பிறந்தார் (1936). அறிவியலும் வரலாறும் இவருக்கு பிடித்த பாடங்கள். கணிதத்திலும் சிறந்து விளங்கினார். உயர்கல்வி கற்கும்போது, வேதியியல் பரிசோதனைகள் பல அடங்கிய ஒரு நூலைப் படித்து, வீட்டிலேயே பரிசோதனைகளை செய்துவந்தார்.

* ரசாயனப் பொருட்களால் மகனுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த அம்மா அதைத் தடுத்தார். அதனால் இவரது ஆர்வம் இயற்பியல் பக்கம் திரும்பியது. பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு ஸ்டுட்கார்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். பாரீஸ், லுட்விக் மாக்சிமில்லியன் பல்கலைக்கழகங்களில் பயின்று இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* மியுனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 1965-ல் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் வேதியியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து நுண் ணலை கதிர்வீச்சு குறித்து ஆராய்ந்தார். மியுனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

* 1973-ல் ஹானோவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பின் னர் இயக்குநராகவும் பணியாற்றினார். லுட்விக் மாக்சிமில்லியன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மாக்ஸ் பிளாங்க் கெசெல்சாவ்ட்டின் ஃபிரிட்ஸ் ஹாபர் இன்ஸ்டிடியூட்டில் வேதியியல் பேராசிரியராக, ஓய்வு பெறும்வரை பணியாற்றினார்.

* இயற்பியல் வேதியியல் (physical chemistry) துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். வினையூக்கிகள் வழி இரும்பின் மீது, அமோனியாவை உற்பத்தி செய்யும் ஹாபர்-போஷ் (Haber Bosch) செய்முறையில் நிகழும் வேதியியல் வினை களைக் கண்டறிந்தார். 60 ஆண்டுகளாக புரியாமல் இருந்த செய்முறை, இவரது கண்டுபிடிப்புகளால் அனைவருக்கும் புரிந்தது.

* இந்த ஆராய்ச்சிகளின்போது பிளாட்டினம் மீது அலைவு (oscillatory) எதிர்வினைகள் குறித்த முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் அலைவளைவு (diffraction) உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினார். பல்லேடியம் (Palladium) மீது வினையூக்கி (catalytic) வழி கார்பன் மோனாக்சைடை ஆக்சைடாக்கும் முறையையும் கண்டறிந்தார்.

* தனது கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை கட்டுரைகளாக வெளியிட்டார். படிக மேற்பரப்பில் வினையூக்கி வழி நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக வேதியியல் துறையின் பெருமைமிகு உல்ஃப் பரிசைப் பெற்றார். நவீன புறப்பரப்பு வேதியியல் (modern surface chemistry) களத்துக்கான அடித்தளமிட்டார். இவை எவ்வாறு எரிபொருள் செல்கள், சுற்றுசூழலை மாசுபடுத்தாமல் ஆற்றலை உற்பத்தி செய்கின்றன என்பதை விளக்குவதற்கும் உதவியது.

* திண்மங்களின் மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக 2007-ம் ஆண்டில் இவரது 71-வது வயதில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* இவரது கண்டுபிடிப்புகள் குறித்த பாடங்கள் உயர்கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படுகின்றன. மேலும் இவை தொழில் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஓசோன் படலம் அழிக்கப்படுது குறித்தும்கூட இந்த புறப்பரப்பு வேதியியல் விளக்குகிறது.

* ஹாண்ட்புக் ஆஃப் ஹெட்ரோஜீனியஸ் காட்டலைசஸ், இன்ஜினீயரிங் ஆஃப் கெமிக்கல் காம்ப்ளெக்சிட்டி உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஜெர்ஹார்ட் எர்ல் இன்று 80 வயதை நிறைவு செய்கிறார்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

p100b.jpg

பாப் பியூட்டியான பியான்ஸ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோதான் இந்த வார வைரல். `ஒவ்வொரு நாளும் என் உடல் எவ்வளவு வலி தாங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே ஜிம்மில் கடுமையான பயிற்சிகள் செய்கிறேன். நான் சொல்வதை எல்லாம் என் உடல் கேட்கிறது' என வொர்க் அவுட் செய்துகொண்டே அம்மணி பேசும் அந்த டயலாகுக்கு எக்கச்சக்க லைக்ஸ். `இனி நாமளும் தினமும் ஜிம்முக்குப் போகணும்ப்பா' எனத் துண்டைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் ரசிகர்கள். #ஜிம் பாப்பா!

p100a.jpg

`அமெரிக்க நடிகையான நிக்கோல் ஸ்கெர்சிங்கரும், பிரபல பாடகருமான கால்வின் ஹாரிஸும் டேட்டுகிறார்கள்' என ஹாலிவுட் மீடியாக்கள் கிசுகிசு எழுத, கொதித்து எழுந்துவிட்டார் நிக்கோல். `ஒரு நிகழ்ச்சியில் நடந்து செல்லும்போது வழுக்கி விழப்போனேன். அப்போது சப்போர்ட்டுக்காக அவர் கையைப் பிடித்தேன். அதைப் படமெடுத்துக் கதை கட்டிவிட்டார்கள். இதெல்லாம் ரொம்ப ஓவர்' என அழகுக்கண்மணி ஆவேசமாக, `கூல் டவுன்...கூல் டவுன்' என அவரைத் தேற்றிக்கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள். #ஐ சப்போர்ட் மேம்!

p100.jpg

`எல்லோருக்கும் 20 வயதுக் காலகட்டம் சுகமானதாக இருக்கும் ஆனால், எனக்கு அப்படி இல்லை. பொதுவாழ்க்கையிலும், பெர்சனல் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்னைகள், சர்ச்சைகள். அதெல்லாம் ஓய்ந்து இப்போது முப்பதுகளின் மத்தியில் நிம்மதியாய் இருக்கிறேன். ஐ லவ் தர்ட்டீஸ்' என ஸ்டேட்மென்ட் விட்டிருப்பது வேற யாருமில்லை, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் பிரிட்னி ஸ்பியர்ஸ்தான். #புதிதாய்ப் பிறப்போம்!

p100c.jpg

டிகையும் பாடகியுமான ஏரியல் வின்டர் பற்றி அடிக்கடி ஏதாவது கமென்ட்ஸ் கிளம்பும். அதில் முக்கால்வாசி அவரின் உடல்வாகு பற்றிய கிண்டல்களாய் இருக்கும். `எப்படி  இவ்ளோ கமென்ட்ஸ் வந்தாலும் கண்டுக்காம இருக்கீங்க?' எனக் கேட்டதற்கு, `இந்த ஹாலிவுட்டே இப்படித்தான் பாஸ். இங்கே ஒரு பொண்ணா நீங்க முன்னேறினா அது பொறுக்காம கிண்டல் பண்ற கூட்டம்தான் அதிகம்' என அசால்ட்டாக தில் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் ஏரியல். #துணிச்சலுக்கு சல்யூட்!

vikatan

  • தொடங்கியவர்
மூளை என்பதே ஓர் அனாவசியப் படைப்பு

 

article_1476165964-images.jpgதங்களது மூளைக்கு வேலை கொடுப்பது வீணான அலட்டல் முயற்சி என எண்ணி எதனையுமே சிந்திக்காமல் இயங்குபவர்கள் பலர் இருக்கின்றார்கள்.  

அவர்களைப் பொறுத்தவரையில் மூளை என்பதே ஓர் அனாவசியப் படைப்பு என எண்ணுகின்றார்கள் போல அவர்களது கருமங்கள் தோன்றும். 

மானிட வாழ்வில் ஏற்படும் பல இன்னல்களுக்கும் மனிதனே முழுமுதற்காரணமாகின்றான். சின்னச் சின்ன விடயங்களையும் செய்வதற்கு ஆராயாமல் குறுக்குவழியில் பயணித்து அகப்பட்டுக்கொள்கின்றார்கள்.  

எது சரி? எது பிழை? என ஆராய சிந்தனை செய்தே முடிவு எடுக்க வேண்டும். செய்யும் செயலில் தெளிவு இருக்க வேண்டும். ஆன்மபலம் மிளிர்ந்தாலே நல்ல இலட்சியங்களும் முன்நின்று வழிநடத்தும்! தான்தோன்றித்தனம் என்றும் நன்று அல்ல! 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

ஓசனிச்சிட்டு படைத்த கின்னஸ் உலக சாதனை

 
Bild zeigt Vogel, Pflanze und im Freien
 

ஓசனிச்சிட்டு படைத்த கின்னஸ் உலக சாதனை

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்துள்ளனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் மனிதர்கள் மட்டும் தான் இடம் பெறுவதென்றே இல்லை. பல விலங்குகளும் கூட அதில் சாதனைகளைப் படைத்து ஒரு இடத்தைப் பெற்றுவிட்டன. அப்படி கின்னஸ் உலக சாதனை படைத்த ஒரு பறவையைப் பற்றி அறிய விருப்பமா?

உலகிலேயே சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? 5 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 2 கிராம் நிறையைக் கொண்ட Bee Hummingbird என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒரு ஓசனிச்சிட்டு வகை தான் பறவைகளில் மிகச் சிறிதானது ஆகும். வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்கிற உலக சாதனையைப் படைத்தது மட்டுமில்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

அனைத்து ஓசனிச்சிட்டுகள் போன்றும் இந்த Bee Hummingbird முன்னே பறப்பது மட்டுமில்லாமல், மேலே, கீழே மற்றும் பின்னே பறக்கக்கூடிய பறவை ஆகும். இது எல்லாமே போதாது என்று, நின்ற நிலையிலேயே மிதக்கும் திறனையும் இந்தப் பறவை கொண்டதாகும். அட அப்படி மிதப்பதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று யோசிக்கின்றீர்களா? நண்பர்களே, ஒரு பறவையால் அப்படி மிதப்பது என்பது ஒரு அதிசயம் தான். ஏனென்றால், அப்படி மிதப்பதற்கு இந்தப் பறவை அதன் இறக்கைகளை ஒரே நொடியில் ஏறத்தாழ 80 தடவைகள் அடிக்க வேண்டும். இப்படி அதிவேகத்தில் அடிக்கும் இறக்கைகளை மனித கண்களால் பார்க்கவே முடியாது என்றால் யோசித்துப் பாருங்கள் அது எவ்வளவு பெரிய சாதனை என்று.

பொதுவாக இந்தப் பறவை ஒரு பூவில் இருந்து இன்னுமொரு பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், அதன் சிறிய பரிமாணம் மற்றும் பறக்கும் திறன் காரணமாக இந்த வல்லுநர்கள் ஒரு நாளில் மட்டுமே 1500 பூக்களைத் தொட்டு விடுகின்றன.

https://www.facebook.com/n.thillainathan?hc_ref=NEWSFEED&fref=nf

  • தொடங்கியவர்

அதிசய வண்ணத்து பூச்சி

 

2.jpg

ஹட்டனில் மரமொற்றின் பச்சை நிறத்திலான அதிசய வண்ணத்து பூச்சி ஒன்று  இன்று காலை காணக்கிடைத்தது.

இலைகளை உணவாக உட்கொண்டு வாழும் இவ் பூச்சி இனமானது இலையில் அமர்ந்திருக்கையில் அடையாளம் காண முடியாத வகையில் இலையை போன்று காட்சி தருகின்றது  

1.jpg

virakesari.lk

  • தொடங்கியவர்

14570695_1152978618084164_57228232077967

நடிகை 'புன்னகை இளவரசி' ஸ்னேகாவின் பிறந்த நாள்

தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் , அனைத்துத் தரப்பு ரசிகராலும் ரசிக்கப்படும், எல்லா முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடித்து உச்சம் தொட்டவர். இப்போதும் விளம்பரங்களில் கலக்குகிறார்.

 
  • தொடங்கியவர்

 

“ரகசிய லண்டன்“
கஃபே கலை திட்டத்தின் நோக்கம்

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.