Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

துணையற்றவர்கள் தினம்

சீனாவில் காதலர் தினத்தை எதிர்க்கும் தினமாக இந்த ‘துணையற்றவர்கள் தினம்’ முதலில் தொடங்கியது.ஆனால் 2009ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனம் அதை ஒரு இணையம் வழி பணம் சம்பாதிக்கும் வணிகமாக மாற்றிவிட்டது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஸ்மார்ட் போனில் ‘தாய்ப்பால் ஊட்டல்’ எமோஜி விரைவில்.. 

ஸ்மார்ட் போன்களில் தாய்ப்பால் ஊட்டல் (breastfeeding), ஹிஜாப், யோகா உள்ளிட்ட புதிய எமோஜிக்கள் அறிமுகமாக உள்ளன.

1194440_19287.jpg



அடுத்த வருடம்  சர்வதேச கூட்டமைப்பான யுனிகோட் நிறுவனம் 51 புதிய ஸ்மார்ட்போன் எமோஜிக்களை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது. தலையில் ஸ்கார்ஃப் அணிந்த நபர், தாடி வைத்துள்ள நபர், வயதான தம்பதிகள் என புதிய ஐகான்கள் சேர்க்கப்பட உள்ளன. ஜெர்மனியை சேர்ந்த 15 வயது சிறுமி அல்ஹுமெதி, ஹிஜாப் அணிந்திருக்கும் பெண் ஐகானை எமோஜி பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்ததை அடுத்து ஹிஜாப் ஐகான் சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

vikatan

  • தொடங்கியவர்

 

Germany is the first country to make water bridge!

  • தொடங்கியவர்

 

“என்னை கலாய்ப்பாங்க, இருந்தாலும் பரவாயில்லை..!”-டான்ஸ் ஷோவிற்குள் டி.ஆர் வந்த கதை!

  • தொடங்கியவர்

நாளை 'Google-Doodle' ஆக வரப்போகும் படம் எது தெரியுமா?

Anvita%201%20400_20550.jpg

நாளை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தை கொண்டாட, கூகுள் நிறுவனம் வித்தியாசமாக விஷயத்தை செய்துள்ளது. அதற்காக, தனது முகப்பு பக்கத்தில வைக்கும் டூடுள் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எண்ணி ஒரு போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியின் கரு 'நான் எவருக்கேனும் ஏதாவது கற்றுத்தர நினைத்தால்,அது..'. இந்த கருவுக்கு ஏற்றார் போல் யார் டூடுள் வரைகிறார்களோ, அவர்களின் டூடுளை கூகுள் நிறுவனம், குழந்தைகள் தினத்தன்று முகப்பு பக்கத்தில் வைக்கும் என கூறி இருந்தது.

google%201%20400_20560.jpg


இந்த போட்டியில், புனேவைச் சேர்ந்த 11 வயதுடைய அன்விதா பிரசாந்த் தெலாங் என்ற சிறுமி வரைந்த 'இப்போது வாழ்வது' என்ற ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவரின் ஓவியம், நாளை கூகுளின் டூடுளாக இருக்கும். இது பற்றி அன்விதா,'என் ஓவியத்தில் நான் காண்பிக்க நினைத்தது 'நிகழ்காலத்தில் வாழ்வது' பற்றி தான். நான் எதைப் பற்றியும் அதிகம் கவலை கொள்ளாமல் நிகழ்காலத்தில் வாழவே முயல்வேன். அது தான் என்னை மகிழ்வுடன் வைத்திருக்கிறது.' என்று கூறியுள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

60 நொடிகளுக்குள் ஹேக் செய்யப்பட்ட கூகுள் பிக்ஸல்

தென் கொரியாவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில், சீனாவைச் சேர்ந்த white hat hackers, கூகுள் பிக்சல் ஃபோனை ஒரு நிமிடத்திற்குள் ஹேக் செய்துள்ளனர்.

pix%201%20400_19523.jpg


கூகுள் நிறுவனம், தனது ஃபோனின் பாதுகாப்பு தன்மையை தெரிந்துகொள்ள, தொழில் ரீதியாக ஹேக் செய்பவர்களுக்கு இந்த மாநாட்டில் அழைப்பு விடுத்திருந்தது. அப்போது தான் சீனாவை சேர்ந்த Qihoo 360 என்ற அமைப்பினர் கூகுள் பிக்சல் ஃபோனை 60 நொடிகளுக்குள் ஹேக் செய்து காட்டியுள்ளனர்.


அதன் பிறகு, Qihoo 360 அமைப்பினர், பிக்சல் ஃபோனில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிகாட்டியுள்ளனர். இதற்கு, கூகுள் நிறுவனம் அவர்களுக்கு 1,20,000 டாலர்களை பரிசாக தந்தது.

vikatan

  • தொடங்கியவர்
இயங்கு சக்தியின் ஆதார சுருதி ஈர்ப்பு!
 

article_1479099597-ligo.jpgஈர்ப்பு அன்றேல் செய் கருமங்கள் சீராய் அமையாது. கணவன், மனைவி ஆகியோரிடத்தில் ஈர்ப்பு இல்லாது விட்டால், குடும்ப வாழ்க்கையில் களிப்பு நிலவாது. 

கல்வி, ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையானாலும் கரிசனை கூடிய லயிப்புத் தோன்றிட வேண்டும்.  

விண்வெளி, பிரபஞ்சம் பற்றிய தற்போதைய ஆய்வுகளின்படி, சூரியனைச் சுற்றும் கிரகங்கள் மட்டுமல்ல, இந்த அண்டை சாகரத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஈர்ப்பு சக்தியினாலேயே இவைகள் முட்டிமோதாமல் ஸ்திர நிலையில் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.  

இப்படி இருக்க எல்லா உயிரினங்களும் ஈர்ப்பினால் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்வதில் புதினம் ஏதுமில்லை.இயங்கு சக்தியின் ஆதார சுருதி ஈர்ப்பு! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

70 ஆண்டுகள் கழித்து இரவில் வானில் தோன்றிய 'சூப்பர் மூன்'

 

எழுபது ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய மற்றும் அதிக பிரகாசமிக்க முழு நிலவு உலகம் முழுவதும் இரவு நேரத்தில் வானில் தோன்றி வருகிறது.

70 ஆண்டுகள் கழித்து இரவில் வானில் தோன்றிய 'சூப்பர் மூன்'

 

 70 ஆண்டுகள் கழித்து இரவில் வானில் தோன்றிய 'சூப்பர் மூன்'

நிலவின் நீள் வட்டப்பாதை காரணமாக, பூமி மற்றும் நிலவு இரண்டும் வழக்கத்திற்கு மாறாக மிக நெருங்கி வருவதன் காரணமாக, பெரிதாகத் தோற்றமளிக்கும் நிலவை சூப்பர் மூன் என்றழைக்கிறார்கள்.

இந்த நிலவு, பூமிக்கு மிக அதிக தொலைவில் இருக்கும் போது தெரிவதைக் காட்டிலும், இந்த சூப்பர் மூன் நிலையில், 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் பிரகாசமாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதோடு, 2034 ஆம் ஆண்டில் தான் அடுத்த முறை இதே போல முழு நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.  இதோடு, 2034 ஆம் ஆண்டில் தான் அடுத்த முறை இதே போல முழு நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.

முழு நிலவானது அடிவானத்தில் குறைவான உயரத்தில் இருக்கும் போது மரங்கள் மற்றும் உயரம் கொண்ட கட்டடங்களுக்கு அருகே இந்த நிகழ்வை சிறப்பாக காண முடியும்.

இதோடு, 2034 ஆம் ஆண்டில் தான் அடுத்த முறை இதே போல முழு நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வரும்.

BBC

  • தொடங்கியவர்

120p1.jpg

சர்ச்சையைக் கிளப்பு!

ஸ்பெயினைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக்கே, கிளப் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக ஆடிவருகிறார். காயம் காரணமாக சமீபத்தில் அவர் போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், அவரது பெயரான Gerard Pique டிவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ‘உலகின் மிகச்சிறந்த வீரருக்குத் தங்கப்பந்து (பால்லோன் டி’ஆர்) விருது தரப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டிலிருந்து அந்த விருதை லியோனல் மெஸ்சிதான் வென்றிருக்க வேண்டும்’ என டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துதான் அதற்குக் காரணம். இந்த விருதிற்கான பட்டியலில் ரொனால்டோவின் பெயர் அடிபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், பிக்கேவின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விருதுன்னாலே சர்ச்சைதானே!


120p2.jpg

தலைவர்டா!

சூப்பர்ஸ்டார் பேரைச் சொன்னாலே சோசியல் மீடியா அதிரும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ‘கத்தி’, ‘ஐ’, ‘அனேகன்’, ‘தெறி’ போன்ற பல முன்னணித் தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் டப்பிங்கில் செம பிஸியாக இருப்பவர் ரவீணா ரவி. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தோடு சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதன் காரணமாக இவரது டிவிட்டர் ஐ.டியான @raveena116 இந்திய அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அட!


120p3.jpg

புகை மண்டலமாகும் தலைநகரம்!

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தீபாவளி முடிந்தபின் காற்று மாசுபாடு அதிகரித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனாலும் காற்று மாசுபாடு குறையாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் இது குறித்துப் போராட்டாங்கள் நடத்தியதோடு, டிவிட்டரிலும் #letssavedelhi என்ற டேக்கில் சமூக ஆர்வலர்கள் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நிம்மதியா மூச்சுகூட விட முடியலையே!


120p4.jpg

பிரமாண்டம்!

சர்ச்சைக்குப் பெயர்போன இயக்குநரான ராம்கோபால் வர்மா முதல்முறையாக சர்வதேசப் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் தயாராகவிருக்கும் ‘Nuclear’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.340 கோடி. இந்தியாவில் மட்டுமன்றி அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஏமன் நாடுகளிலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இத்தகவலை ராம்கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த சிறிது நேரத்தில் #RGVNUCLEAR தேசிய ட்ரெண்ட் ஆனது. நெசமாத்தான் சொல்றியா!


120p5.jpg

டோலிவுட்டில் அனிருத்!

இளைஞர்களின் இதயம் கவர்ந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவரது இசையில் வெளிவரும் ஆல்பங்கள் எல்லாம் சொல்லிவைத்து ஹிட் அடித்துக்கொண்டிருக்கின்றன. இது டோலிவுட் உலகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளதால், திரிவிக்ரம் இயக்கத்தில், பவன் கல்யாண் நடிக்கும் 25-வது படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனிருத். இதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் அனிருத் அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து #WelcomeToTollywoodAnirudh என்ற டேக்கில் மனவாடுகள் சரவெடி வெடித்ததில், தேசிய ட்ரெண்ட் அதிர்ந்தது. ஆலுமா டோலுமா டோலிவுட்லமா!


120p6.jpg

வெள்ளி விழா!

இயக்குநர் மணிரத்னம், இசைஞானி இளையராஜா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி மெகா கூட்டணியில் உருவான ‘தளபதி’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்திருக்கின்றன. தொலைக்காட்சிகளில் எத்தனை முறை ஒளிபரப்பானாலும், இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ‘கிளாஸிக்’ திரைப்படம் எனப் போற்றப்படும் இத்திரைப்படத்தின் வெள்ளி விழா #25yearsoficonicthalapathi என்ற டேக்கில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர். மணிரத்னம்டா!


120p7.jpg

டீசரில் புதுமை!

‘பாகுபலி’ திரைப்படம் பல சாதனைகளைப் படைத்தது எனச் சொல்வது சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கும் என்பது போலிருக்கும். இதன் இரண்டாம் பாகத்தை வெளியிட இத்திரைப்படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. சமீபத்தில் வெளியான இதன் மோசன் போஸ்டர் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ள இந்த நேரத்தில், இத்திரைப்படக்குழு வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் டீசரைக் காணும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. இந்த அனுபவத்தை #BaahubaliVR என்ற டேக்கில் ரசிகர்கள் பதிவுசெய்ததால் தேசிய அளவில் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளது. இங்கே கடையை எப்போ சார் திறப்பீங்க!

vikatan

  • தொடங்கியவர்

உலக நாடுகளில் தென்பட்ட “சுப்பர்  மூன்” ; இன்று இலங்கையில் ; காணத்தவறாதீர்கள் (புகைப்படங்கள் இணைப்பு)

 

 

சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய “சுப்பர் மூன்” (வழமையை பெரிதாக தோன்றக்கூடிய நிலவு) நேற்று இரவு அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் தோன்றியுள்ளது.

asd1.jpg

இந்த அரிய காட்சியின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும்போது நிலவானது வழமையை விட பெரிதாக தோன்றும். இதுவே “சுப்பர் மூன்”  என அழைக்கப்படுகின்றது.

3A59728200000578-3932218-image-a-100_147

குறித்த நிலவானது இம்முறை வழமையை விட 14 மடங்கு பெரிதாக தோன்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிலவு அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பார்க்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இன்று இரவு 7.30 மணியளவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தோன்றிய “சுப்பர் மூன்” இன் அற்புதமான படங்கள் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.

article-3932218-3A59D24400000578-444_6363A58318800000578-3932218-image-a-4_14790

3A59492900000578-3932218-Residents_in_Lo

3A57418200000578-3932218-image-a-29_1479

3A57561600000578-3932218-image-a-55_1479

3A59212E00000578-3932218-image-a-82_1479

3A57390900000578-3932218-image-a-38_1479

3A5966A800000578-3932218-image-a-98_1479

3A58228C00000578-3932218-image-a-6_147903A5961C200000578-3932218-image-a-89_14793A5924A600000578-3932218-image-a-55_1479

3A5905F200000578-3932218-image-a-74_1479

3A5769BD00000578-3932218-image-a-61_1479

3A5823C800000578-3932218-image-a-90_1479

3A5703B400000578-3932218-image-a-37_1479

3A596A9C00000578-3932218-image-a-95_1479

3A591FB900000578-3932218-image-a-54_1479

3A594FED00000578-3932218-image-a-52_1479

3A574DA500000578-3932218-The_supermoon_c

3A576D6800000578-3932218-image-m-47_1479

3A570D5200000578-3932218-image-a-30_1479

3A573EA900000578-3932218-image-m-45_1479

3A58FBF700000578-3932218-image-m-83_1479

3A58DD2100000578-3932218-image-a-75_1479

3A58DCEE00000578-3932218-image-a-68_1479

3A58DD0500000578-3932218-image-a-86_1479

3A58DCE100000578-3932218-image-a-69_1479

3A58DCCD00000578-3932218-image-m-51_1479

3A57F39200000578-3932218-image-a-1_14790

3A58D0A000000578-3932218-image-a-102_147

3A56FC0C00000578-3932218-image-a-35_1479

3A56FE9000000578-3932218-image-m-42_1479

virakesari.lk

  • தொடங்கியவர்

இதைத்தான் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்..! பள்ளி குழந்தைகளின் திறந்த மடல்! #ChildrensDay

school_13393.jpg

தங்களுடைய குழந்தைப் பருவத்தை மாணவர்கள் பெரும்பாலும் வீட்டை விட பள்ளியிலே அதிகம் கழிக்கின்றனர். பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் குழந்தைகளிடம் நெருங்கிப் பழக, ஆசிரியர்கள் சில விஷயங்களை கடைபிடித்தும், சில பழக்கங்களை விடுவதும் நல்லது. மாணவர்களிடையே நண்பரைப் போல பழகும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே அன்புக்கு உரியவர்களாகின்றனர். பள்ளிகள் மாணவர்களின் அறிவுத்திறன், கற்பனைத் திறன், நல்லொழுக்கம், தன்னம்பிக்கைப் போன்ற பல அம்சங்களை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டியது அவசியம். நாளைய சமுதாயத்தை உருவாக்கும் மாணவர்களின் கையில் கொடுக்கவிருக்கும் சிறப்பம்சங்களை ஆசிரியர்கள் நிச்சயம் தர வேண்டும். அதற்கு முன்பு மாணவர்கள் ஆசிரியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஆசிரியர் படிப்பு படிக்கும் பொழுதே உளவியல் பாடத்தை கற்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே...!

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்... குழந்தைகள் தினமான இன்று பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்களிடம் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் வகுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது குறித்து விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் 'நல்லாசிரியர் விருது' பெற்ற ஆங்கில ஆசிரியர் திலீப் அவர்களின் வகுப்பு மாணவர்களிடம் கேட்டோம், அவர்களின் விருப்பங்களை ஒரு மடலாகவே கொடுத்து விட்டார்கள். 

அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம், 

student_13525.jpg

1. நன்றாக பாடம் நடத்தும் ஆசிரியர் வேண்டும்.

2. ஆசிரியரின் நடை, உடை, பாவனை முறையாக இருக்க வேண்டும்.

3. கையெழுத்துப் பயிற்சி அளிக்க வேண்டும்.

4. படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

5. பொறுமையாக நடத்த வேண்டும்.

6. புரியும் வகையில் நடத்த வேண்டும்.

7. அடிக்கக் கூடாது. தவறு செய்தால் கண்டிக்க வேண்டும்.

8. வீட்டுப் பாடம் கவனிக்க வேண்டும்.

9. ஒழுக்கம் கற்றுத்தரும் ஆசிரியர் வேண்டும்.

10. அன்பாக பேசவேண்டும்.

11. வேறுபாடு மாணவர்களுக்கிடையே பார்க்கக் கூடாது.

12. ஆசிரியர், மாணவர்களிடம் நண்பரைப் போல் பழக வேண்டும்.

13. விளையாட்டோடு சேர்ந்த கல்வி அளிக்க வேண்டும்.

14. மாணவர்கள் செயல்பாடுகள் செய்வதற்கு ஆசிரியர் உதவ வேண்டும்.

15. ஆசிரியர் இரண்டாவது பெற்றோராக இருக்க வேண்டும்.

16. வகுப்பறையில் கோபமாக இருக்கக் கூடாது. சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்.

17. மாணவர்களின் மனநிலை புரிந்து பாடம் கற்பிக்க வேண்டும்.

18. குறுந்தேர்வு எழுத வைக்க வேண்டும்.

19. தினமும் ஒரே மாதிரியான கற்பித்தல் முறை பயன்படுத்தக் கூடாது.

20. மாணவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆசிரியர் விளங்க வேண்டும்.

vikatan

குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைக்கச் செய்யும் பரிசு #Children'sDay


குழந்தை

குழந்தைகளை பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். அவர்களின் சேட்டைகளை ரசித்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. இன்று குழந்தைகள் தினம். இந்த தினத்திற்கு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டிருக்கிறது. அவர்களுக்கு பரிசாக என்ன தரலாம் என்ற யோசனையில் இருப்பீர்கள். பொம்மை, கேக், ஸ்வீட் என வழக்கமாக தருவதோடு வித்தியாசமான பரிசையும் இந்த ஆண்டு கொடுக்கலாமே... அதென்ன வித்தியாசமான பரிசு... புத்தகங்கள்தான். அதுதான் பாடப் புத்தகங்கள் இருக்கின்றனவே என்று நினைக்கிறீர்களா... அவற்றைத்தாண்டியும் புத்தகங்களை குழந்தைகள் அவசியம் வாசிக்க வேண்டும். அவை குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும். 'காட்டில் ஒரு சிங்கம் பசியோடு அலைந்துகொண்டிருந்தது...' என்று ஒரு கதையைப் படித்தால் குழந்தைகள் மனதிற்குள் ஒரு காட்டையும் சிங்கத்தையும் உருவாக்கி கொள்வார்கள். பறவைகள் பற்றி படிக்கும்போது, குழந்தைகள் தங்களுக்கே சிறகுகள் முளைத்தாக மகிழ்வார்கள். அப்படியான மகிழ்ச்சியைத் தரும் பத்து தமிழ்ப் புத்தகங்கள் பற்றி அறிமுகம் இதோ!

new_aamai__12424.jpg


1. ஆமை காட்டிய அற்புத உலகம்! -  யெஸ். பாலபாரதி. வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ 60/-

ஐந்து சிறுவர்களை, ஓர் ஆமை கடலுக்குள் அழைத்துச் செல்லும். அப்படிச் செல்லும்போது, கடலுக்குள் இருக்கும் பலவற்றைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அதே சமயம் அவர்கள் ஆபத்து ஒன்றிலும் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதை அனிமேஷன் படம் பார்க்கும் உணர்வைத் தருவதுபோல எழுதியிருக்கிறார் பாலபாரதி. கதையின் நடுவே கடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய பெட்டிகளும் உண்டு.

thevathai-kathaikal-10000096-800x800_120

2. தேவதைக் கதைகள் - முரளிதரன் விகடன் பிரசுரம், சென்னை. விலை ரூ.105/-

குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளில் நிச்சயம் ஒரு தேவதை வந்துவிடுவாள். அந்த தேவதை செய்யும் அதிசயங்களும் மாயஜாலங்களாலும் குழந்தைகள் வளர்ந்தாலும், தேவதையை மறக்கவே மாட்டார்கள். அதுபோன்ற தேவதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். ஒவ்வொரு கதைகளிலும் தேவதையின் வருகை எப்போது நிகழும். அது என்ன மேஜிக் செய்து சிக்கலைத் தீர்க்கும் எனும் ஆவலைத் தூண்டும் விதத்தில் இருக்கின்றன. முழு வண்ணத்தில் உள்ள இந்தப் புத்தகத்தில் ஹாசிப்கானின் ஓவியங்கள், கதைகளைக் காட்சியாக்கும் பங்கைச் சிறப்பாக செய்கின்றன. சுட்டி விகடனில் தொடராக வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற கதைகள் இவை.

doora_varai1_12233.jpg

 

3. டோரா வரை... கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு - ஆயிஷா நடராஜன், வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ 70/-

குழந்தைகள் டிவியில் விரும்பி பார்ப்பது கார்ட்டூன் சேனல்களே. தங்களுக்கு வாங்கும் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் உள்ளிட்டவற்றில் அந்த கதாபாத்திர படங்கள் இருந்தால் உடனே வாங்க சொல்வார்கள்.  கார்ட்டூன் கதாபாத்திரங்களை தங்கள் நெருக்கமான நண்பர்களாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். டோரா வரை... எனும் இந்தப் புத்தகம் பென் டெனிசன், ஸ்பைடர் மேன், சோட்டோ பீம், பார்பி உள்ளிட்ட 25 கதாபாத்திரங்களுடன் சுவையான உரையாடலாக அமைந்திருக்கிறது. ஆயிஷா நடராஜனின் எளிமையான மொழி நடை ஈர்க்கிறது.

pandya%20ku_12220.jpg

4. பந்தயக் குதிரைகள் - பாலு சத்யா - வெளியீடு: அம்ருதா பதிப்பகம், சென்னை- 90

பந்தயக் குதிரைகள் பரபரப்பாக செல்லும் துப்பறியும் நாவல். கும்பகோணத்திலிருந்து சென்னை வந்தக் குட்டிப் பெண், உறவுக்கார சிறுவனுடன் ஊரைச் சுற்றிப்பார்க்க செல்லும்போது, அந்தச் சிறுவன் காணமால் போய்விடுகிறான். அவனை, கண்டுபிடிக்க அவள் எடுக்கும் முயற்சிகள் விறுவிறுவென சம்பவங்களால் சுவாரஸ்யமாக கொண்டுச் சென்றிருக்கிறார் பாலு சத்யா.

maga_kadikaram_12557.jpg

5. மாகடிகாரம் - விழியன் - வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ 30/-

மாகடிகாரம் அறிவியல் கலந்து புனைவு நாவல். தீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும், சாகசமும்தான் கதை. அதில் தீமன் செல்லும் இடம், ஊர் ஆகியவை எல்லாம் நிஜம். அதில் நடக்கும் சம்பவங்கள் கற்பனை. உலகத்தின் நேரமே நின்றுபோகப் போகிறது எனும் ஆபத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் விழியன்.

edu_kal_12109.jpg

6. எட்டுக்கால் குதிரை : கொ.மா.கோ.இளங்கோ வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ 30/-

ஒரு பயணம் என்றால் மனிதர்கள் அல்லது விலங்குகள் செல்வது என்றுதான் இருக்கும். ஆனால் ஒரு வகுப்பறையில் எண்கள் (Numbers) படிக்கின்றன. ஒவ்வோர் எண்ணும் இருக்கும் மகிழ்ச்சி, சிக்கல் ஆகியவற்றை சொல்லும்விதமாக கதை தொடங்குகிறது. எழுத்துகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கதையில் வருகிறது. இவை எல்லாம் சேர்ந்து ஒரு பயணம் செல்லத் திட்டமிடுகின்றன. அந்தப் பயணத்தில் சந்திக்கும் எட்டுக்கால் குதிரை இவர்களை என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் மீதி கதை. தொடக்கம் முதல் முடிவு வரை சோர்வு தராத வகையில் எழுதியிருக்கிறார் கொ.மா.கோ.இளங்கோ.

15086929_1488043974558435_529982439_n_12

7. சிறகு முறைத்த யானை - கிருங்கை சேதுபதி - வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14 விலை: ரூ 85/-

தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே ரைம்ஸ் பாடிக்கொண்டிருக்கிறார்கள், தமிழில் அப்படி ஏதும் இல்லையா எனக் கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும். கிருங்கை சேதுபதி குழந்தைகளை ஈர்க்கும் தலைப்புகளில் சந்தத்தின் சுவை குறையாமல் பாடல்களாக எழுதியிருக்கிறார். கேள்வி - பதில் வடிவில் இருக்கும் பாடல்கள் திரும்ப திரும்பவும் பாட வைக்கும்.

13672032_278872949135131_8453204_n_12542

8. மாயக்கண்ணாடி - உதயசங்கர் வெளியீடு விலை ரூ 70/-

சிறுவர்களுக்காக தொடர்ந்து எழுதியும் வேறு மொழிகளிலிருந்து சிறந்த படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வரும் உதயசங்கள் எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு இந்த நூல். சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய அன்பினையும் அதிகாரத்தின் முகங்களை புரிந்துகொள்ள வேண்டியது பற்றியும் சுவையாக சொல்லப்பட்டிருக்கும் கதைகள்.

parakkum-pappi-poo-final_12083.jpg

9 பறக்கும் பப்பிப்பூவும் அட்டைக் கத்தி ராஜாவும். மு.முருகேஷ் வெளியீடு: அகநி பதிப்பகம், வந்தவாசி விலை ரூ.40/-

குழந்தைகள் சிரித்துகொண்டே படிக்கும் விதத்திலான கதைகள் அடங்கிய தொகுப்பு. பப்பி எனும் பறக்கும் பூ அட்டை கத்தி ராஜாவை படாத பாடு படுத்தியதை படிக்க படிக்க அவ்வளவு நகைச்சுவையாக இருக்கிறது. ஒரு விஷயத்தை மிக அழகாக தேவையான அளவில் சொல்வதைச் சிறப்பாக செய்திருக்கிறார் மு.முருகேஷ்.

14390914_1103327113077547_21295748461199

10.  சிவப்புக்கோள் மனிதர்கள் - க.சரவணன் வெளியீடு:  புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை ரூ . 50/-

பள்ளியில் தன் வகுப்பு நண்பனின் வீடு இருக்கும் பகுதியில் மின்சாரமே கிடையாது எனும் செய்தியைக் கேட்டு ஆச்சரியமாகிறாள் பவித்ரா. ஒருநாள் நண்பனின் வீட்டில் தங்குவதற்கு பெற்றோரின் அனுமதியோடு செல்கிறாள். அங்கு திடீரென்று வரும் வேறுகிரகத்து வாசிகளால் பவித்ராவும் அவளது நண்பர்களும் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அங்கு இவர்களுக்கு காத்திருந்தது பெரும் ஆபத்து. அதிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதை அருமையாக எழுதியிருக்கிறார் க.சரவணன்.  

vikatan

  • தொடங்கியவர்
ட்ரம்ப் தோல்வியடைவார் எனக் கூறிய பேராசிரியர்; பந்தயத்தை நிறைவேற்றுவதற்காக வண்டை உட்கொண்டார் (வீடியோ இணைப்பு)
 

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்­வி­யு­றுவார் என பந்­த­யம் ­பி­டித்த பேரா­சி­ரியர் ஒருவர், வண்டு ஒன்றை உட்­கொண்­டுள்ளார்.

 

20617sam-wang-bug_cnn.jpg

 

நியூ ஜேர்ஸி மாநி­லத்­தி­லுள்ள பிரின்ஸ்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்­றுபவர் கலா­நிதி  சாம் வாங். இவர் ஒரு நரம்­பியல் விஞ்­ஞா­னி­யாவார்.

 

இம்­ முறை அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் நாடா­ளு­மன்றத் தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்­பாக தனது இணை­யத்­த­ளத்தில் நுட்­ப­மான ஆய்­வு­களை அவர் வெளி­யிட்­டி­ருந்தார்.

 

குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்­வி­ய­டைவார் என்றே அவரும் கணித்­தி­ருந்தார். அமெ­ரிக்க ஜனா­திபத் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு 270 தேர்தல் கல்­லூரி வாக்­குகள் தேவை.

 

இந்­நி­லையில், டொனால்ட் ட்ரம்ப் 240 தேர்தல் கல்­லூரி வாக்­கு­க­ளை ­விட அதி­க­மான வாக்­கு­களைப் பெற்றால் தான் வண்டு ஒன்றை உட்­கொள்ளத் தயார் என சி.என்.என். தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பான “ஸ்மேர்­கோனிஷ்” எனும் நிகழ்ச்­சியில் பேரா­சி­ரியர் சாம் வாங் கூறினார்.

 

இந்­நி­லையில், 270 இற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்று டொனால்ட் ட்ரம்ப் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கி­யுள்­ளதால், தனது வாக்­கு­று­தியை நிறை­வேற்றும் வித­மாக வண்டு ஒன்றை பேரா­சி­ரியர் சாம் வாங் உட்­கொண்டார்.

 

நேற்­று­ முன்­தினம் ஒளி­ப­ரப்­பான சி.என்.என். “ஸ்மேர்­கோனிஷ்” நிகழ்ச்­சி­
யி­லேயே பேரா­சி­ரியர் சாம் வாங், வண்டை உட்­கொண்டார். அன்­றைய தினம்­வரை டொனால்ட் ட்ரம்ப் 290 தேர்தல் கல்­லூரி வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இத் ­தேர்தல் பெறு­பேற்றை கணிப்­பதில் ஏரா­ள­மான நிபு­ணர்கள் தோல்­வி­ய­டைந்­ததை அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். “இதில் ஏரா­ள­மானோர் தோல்­வி­ய­டைந்­துள்­ளனர்.

 

ஆனால், நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவதைப் போல் வேறு எவரும் செய்யவில்லை” எனக் கூறி வண்டை வாயில் போட்டுக் கொண்டார் பேராசிரியர் சாம் வாங்.

வீடியோ:

 
 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கலீசிடா... அழகிடா!

 

p100a.jpg

கியூட் அழகியான நடிகை எமிலியா க்ளார்க்கைத் தெரியுமா?

பிரிட்டனைச் சேர்ந்தவர். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண்போல சமர்த்தாகத் தெரியும் இவர், ‘எஸ்கொயர்’ என்ற அமெரிக்கப் பத்திரிகையின் 2015-ம் ஆண்டிற்கான செக்ஸியான பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.அதற்குத் தகுந்தாற்போல் போட்டோஷூட் நிகழ்த்தி சூடு பறக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அண்மையில் வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தைக் கன்னாபின்னாவென்று கெடுத்திருக்கிறார்.

HBO நிறுவனத்தின் தயாரிப்பில் மெகா ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் எமிலியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் இவரைப் புகழின் உச்சத்திற்கே கொண்டுசென்றுள்ளது. முதலில் இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறொரு நடிகை ஒப்பந்தமாகி, அதன்பின் அவர் நீக்கப்பட்டார்.  எமிலியா ஒப்பந்தமானதும் இந்தத் தொடருக்கு இன்றைய ஆண் விசிறிகளின் எண்ணிக்கை எகிறிடுச்சு! தனது இயற்பெயரைவிட இந்தத் தொடரில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் ஒரு பெயரான ‘கலீசி’ என்றே இவர் ரசிகர்களால் அறியப்படுகிறார்.

‘எஸ்கொயர்’ பத்திரிகையின் இந்த விருதுக்கு ஒரு ராசி இருக்கிறது. இதற்குத் தேர்வான அனைவரும் தொடர்ந்து லைம் லைட்டிலேயே இருந்துள்ளனர். அந்த ராசி எமிலியாவிற்கும் தொடர்கிறது. அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர் உடன் இவர் நடித்த ‘Terminator Genesys’, 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இந்த ஆண்டு வெளியான ‘Me Before you’ திரைப்படம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் சின்னத்திரையில் மட்டுமன்றி, வெள்ளித்திரையிலும் ராசியான நடிகையாக எமிலியா பெயர் வாங்கியிருக்கிறார். இவருக்கு நடிப்பைத்தவிர பியானோ, ஃப்ளூட், கித்தார் வாசிக்கவும், பாடவும் தெரியும்.

சென்ற ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மெகா ஹிட் ஆன ‘50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே’ படத்தில் நடிக்க முதலில் எமிலியாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது. படத்தில் நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். ஆனால், தான் நடித்து வெளிவரும், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் தாராளக் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மகிழ்விக்கத் தயங்கவில்லை. ‘இப்போதைக்கு நடிப்புதான் முக்கியம். இன்னும் திருமணம் பற்றி யோசிக்கவில்லை’ என்கிறார் சமீபத்தில் 30 வயதை நிறைவு செய்திருக்கும் இந்தப் பேரழகி!

vikatan

  • தொடங்கியவர்

பவர் ரேஞ்சர்ஸ், டெக்ஸ்டர் இவங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா?

90's  கிட்ஸ் ஒரு சில விஷயங்களை மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. அந்த வகையில் நாம் சின்ன வயதில் ரசித்து ருசித்த சில கார்ட்டூன்ஸ்!!!

Scooby Doo:

                               scooby%20doo_18218.jpg

ஸ்கூபி டூ என்று சொன்னவுடன் நினைவிற்கு வருவது அதில் வரும் 'கிரேட் டேன்' நாய் தான். நண்பர்களாக சேர்ந்து ஒரு பச்சை வண்டியில் பயணம் செய்து பல திகில் வாய்ந்த மர்ம சம்பவங்களை அனுபவிப்பார்கள். இந்த கார்ட்டூன் ஆனது 1969-ல் இருந்து இன்றுவரை வெவ்வேறு வெர்சனில் வருகிறது. ஹன்னா பார்பேரா ப்ரொடக்‌ஷனில் ஜோ ரூபி, கென் ஸ்பியர்சால் இந்த கார்ட்டூன் உருவாக்கப்பட்டது.

Popeye The Sailor Man:

                              popeye_18469.jpg

வாயில் சுருட்டை வைத்துக்கொண்டு பாப்பாய் தி செய்லர் மேன் பாம் பாம் என்று வரும் அவரை யாராலும் மறக்க முடியாது. ஆபத்து வரும்போது அவரிடம் இருக்கும் ஸ்பிநாச்சை எடுத்து சாப்பிட்டு எதிரிகளை துவம்சம் செய்வார். இந்த கார்ட்டூனின் கதாநாயகி ஆலிவை  ப்ளுடோ எனும் வில்லனிடம் இருந்து காப்பாற்றுவதுதான் கதை. இதற்கு பல்வேறு க்ரியேட்டர்ஸ் உள்ளனர். முதலில் E.C ஷேகர் என்பவர் இதை உருவாக்கினார்.

Tom And Jerry:

                                tom%20and%20jerry_18233.jpg

இதைப் பார்க்காமல் யாரும் இருக்க முடியாது. குழந்தைகளுக்கே உரிய கார்ட்டூன் இது. அம்மாவிடம் அடம் பிடித்து இதை சிறு வயதில் பார்த்திருப்போம். ஜெர்ரி ஓட டாம் துரத்த ஜெம ஜாலியாக இருக்கும். இதில் வரும் டாமுடைய முதலாளி அம்மா முகத்தைக் கண்டவர் யாரும் இல்லை. 1940-ல் இதை வில்லியம் ஹன்னா, ஜோசப் பார்பேரா உருவாக்கினர்.

Power Rangers:

                              power%20rangers_18542.jpg

ஸ்கூல் முடிந்ததும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாய் ஓடிச்சென்று பார்க்கும் ஒரு நாடகம்தான் இது. பல கலர் ட்ரெஸ் அணிந்துகொண்டு தீய சக்திக்கு எதிராக போராடுபவர்கள். இது ஒரு படி மேலே சென்று பாதி மனிதன் பாதி அனிமாட்டேட் சீரியஸ் என வந்தது. இதில் எக்கச்சக்கமாக வெர்சன் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று ஃபேவரைட். முதல் வெர்சன்1993-ல் வந்தது.

Dexter's Laboratory:

                       dex%20lab_18178.jpg

இதில் ஆரஞ்ச் கலர் மண்டையுடன் டாக்டர் போல ட்ரெஸ் பண்ணிக்கொண்டு ரகசிய லேப் ஒன்று வைத்து அதை அதனுடைய தங்கச்சி 'டீடீ'யிடம் இருந்து காப்பாற்றும் வில்லங்கமான கதைதான் இது. இதற்கு பல்வேறு இயக்குநர்கள் உள்ளனர். முதலில் இதை 1996-ல் கென்டி டார்டாவோஸ்கி இயக்கியுள்ளார்.

Pokémon:

pokemon_18459.jpg

இதைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது மஞ்சள் கலரில் கன்னத்தில் இரண்டு சிவப்பு புள்ளிகள் வைத்துக்கொண்டு பூனைக்குட்டி போல் இருக்கும் பிக்காச்சுதான். ஏரியா விட்டு ஏரியா சென்று சண்டையிடுவதுதான் கதைச் சுருக்கம். ஹீரோ ஒரு பந்தை எறிந்தவுடன் உள்ளே இருந்து வந்து சண்டையிடும். 1996-ல் சாட்டோஷி டஜிரியால் இயக்கினார்.

The Powerpuff Girls:

powerpuff%20girls_18009.jpg

மூன்று பெண்கள் கொண்ட சூப்பர் ஹீரோயின்ஸ் கார்ட்டூன். இதில் மோசமான டெரர்ரான வில்லன் மோஜோ ஜோஜோ செய்யும் கெட்டதைத் தடுக்கும் மூன்று இளம் பெண்கள் தான் பவர் பப் கேர்ள்ஸ். குரங்கு மூஞ்சி போல தோற்றம் கொண்ட வில்லனைப் பறந்து பறந்து பந்தாடும் கதை. 1998-ல் கிரேக் மெக்ரேகன் இதை இயக்கியுள்ளார்.

Johnny Bravo:

johnny%20bravo_18167.jpg

கார்ட்டூன் ஹிஸ்டரிக்கே ஸ்டைலான ஸ்மார்டான ஹீரோதான் ஜானி பிராவோ. எப்பேர்பட்ட பெண்ணையும் தன் வசப்படுத்தி் திடகாத்திர உடலால் காதலிக்க வைத்து விடுவார். இதில் பல்வேறு சீசன்கள் உள்ளன. வான் பார்டிபல் இதை முதலில் இயக்கியுள்ளார். 1997-ல் வெளி வந்த கார்ட்டூன்.

Timon And Pumbaa:

o-TIMON-AND-PUMBAA-facebook_18148.jpg

இதைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் டைலாக் 'ஹ கூ ந ம டாடா'. அப்படியென்றால் கவலை ஏதும் இல்லை என்று அர்த்தம். டிமோன் என்ற காட்டுப் பூனையும் பூம்பா என்ற காட்டுப் பன்னியும் சேர்ந்து செய்யும் லூட்டிதான் இது. இரண்டு பேரும் மாறி மாறி சிக்கலில் மாட்டிக்கொள்ள ஒருவக்கொருவர் இருவரையும் காப்பாற்றிக் கொள்வர். 1994-ல் ஜோனாதன் ராபர்ட்சால் உருவாக்கப்பட்டது.

Courage The Cowardly Dog :

courage%20the%20cowardly%20dog_18020.jpg

இந்த நாடகம் திகிலான ஒன்று. இப்போது இந்த கார்ட்டூனைப் பார்த்தால் சிரிப்புதான் வரும். ஏனென்றால் இந்த கார்ட்டூனானது குழந்தையின் நைட் மேராகும். இதில் வரும் கேரக்டர் தனது முதலாளிகளை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றும். 1999-ல் ஜான் R. டில் ஒரத் இதை இயக்கினார். 

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம் 08: உடலைக் குண்டாக்கும் குளுகுளு நீர்!

 

 

 
water_3074122f.jpg
 

ஒரு கையில் பீட்சா, இன்னொரு கையில் கூல்ட்ரிங்க்ஸோடு வெளுத்து வாங்குபவரா நீங்கள்? அப்போ சீக்கிரமாகவே குண்டாகிவிடுவார்கள். கூல்ட்ரிங்ஸ் மட்டுமில்லை, தொடர்ந்து ‘ஐஸ் வாட்டர்’குடித்து வந்தாலும் உடல் குண்டாகிவிடும். நாம் புழக்கத்தில் உப்புத் தண்ணீர், சப்பைத் தண்ணீர், நல்ல தண்ணீர் என்று நீரின் சுவைக்குத் தகுந்த மாதிரிப் பெயர் வைத்து அழைக்கிறோம் (கோயம்புத்தூர் பகுதிகளில் உப்பு சப்பில்லாமல் வரும் தண்ணீரைச் சப்பைத் தண்ணீர் என்று சொல்வார்கள்).

அறிவியல் அடிப்படையிலும் நாம் தண்ணீரை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்ததுதான் நீர். ‘இயற்கையில் ஹைட்ரஜன் மூன்று விதமான வடிவங்களில் கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வித ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனுடன் இணையும் போது நமக்கு மூன்று விதமான நீர் கிடைக்கிறது. அவை, ப்ரோடியம் தண்ணீர், டியூட்ரியம் தண்ணீர், டிரைடியம் தண்ணீர்.

பொதுவாகக் குழந்தைகளுக்கு ‘ஐஸ்கட்டி’ மிகவும் பிடித்தமான பொருள். ஐஸ்கட்டியை வைத்து விளையாடுவது என்றால் அவர்களுக்குக் கொள்ளை சந்தோஷம். சர்பத்தில் போட்டிருக்கும் ஐஸ்கட்டியைக்கூட எடுத்து வைத்துக்கொண்டு விளையாடுவார்கள். ஐஸ்கட்டி மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுவதன் பின்னணியில் அழகான உளவியல் காரணம் இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்குமே இந்த ஐஸ்கட்டி மீது ஓர் ஈர்ப்பு ஏற்படவே செய்கிறது (ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் உண்டா என்ன?).

குட்டிச் சோதனை

நீங்களே இந்தச் சோதனையைச் செய்யலாம். உங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்த்தால் இந்தச் சோதனையைச் செய்து பார்க்க முடியும். நான்கைந்து ஆட்டுக் குட்டிகள் இருந்தால் அவற்றை இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு குழுவில் உள்ள ஆட்டுக்குட்டிகளுக்குச் சாதாரணத் தண்ணீரைக் கொடுத்துவரவும். இன்னொரு குழுவில் உள்ள குட்டிகளுக்கு ஐஸ்கட்டி உருகியும் உருகாமலும் இருக்கும் நீரை ( பாதி ஐஸ் கரைந்து மிதக்கும் தண்ணீரை) கொடுத்துவரவும்.

தண்ணீர் குடிக்கும்போதே சில அழகான காட்சிகளைப் பார்க்க முடியும். ஐஸ்கட்டி உருகி நிற்கும் தண்ணீரைக் குடிக்க அடிதடியே நடக்கும். அதன் மெல்லிய நல்ல சுவைதான் ஐஸ்கட்டி தண்ணீரைப் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கக் காரணம். இப்படியே இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தண்ணீர் காட்டுங்கள்.

காரணம் என்ன?

ஐஸ்கட்டியில் இருப்பது ஹைட்ரஜனின் இரண்டாவது வடிவமான டியூட்ரியம். இந்த ட்யூட்ரியம் உள்ள நீர் (அதாவது கன நீர்) உயிரினங்களின் வளர்ச்சியை வேகப்படுத்தக்கூடியது. அதனால்தான் இந்தக் கன நீரைக் குடிக்கும் உயிரினங்களின் வளர்ச்சியும் வேகப்படுத்தப்படுகிறது.

அது எப்படிக் கன நீர் உயிரினங்களின் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது?

நீர் திரவ நிலையில் இருக்கும்போது அதன் மூலக்கூறு கட்டமைப்பு ஒரு மாதிரியாகவும், அதே நீர் பனிக்கட்டியாக மாறும்போது பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பு வேறு மாதிரியாகவும் மாறிவிடுகிறது.

உயிரினங்களின் உடலுக்குள் இருக்கும் நீர்ச்சத்து பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பைப் போலவே இருக்கிறது. எனவேதான் பனிக்கட்டி உருகிய தண்ணீரைக் குடிக்கும்போது அது உடலில் உள்ள நீருடன் உடனடியாகக் கலந்துவிடுகிறது. அதேசமயம் பனிக்கட்டி நீரும் உடலில் உள்ள நீரும் ஒரே மாதிரியான மூலக்கூறு அமைப்பைப் பெற அவசியமும் இல்லாமல் போகிறது. எனவே சக்தி விரயமாவதில்லை. இதனால், விலங்குகள் பருகும் ‘ஐஸ் வாட்டர்’ உடனடியாகத் திசுக்களின் வளர்ச்சிக்குச் சென்றுவிடுகிறது.

சாதாரணத் தண்ணீரைக் குடிக்கும்போது அதன் மூலக்கூறு கட்டமைப்பானது உடலில் உள்ள நீர்ச்சத்துக்கு ஏற்ற மூலக்கூறு கட்டமைப்புக்கு மாற அதிக சக்தியை எடுத்துக்கொள்ளும்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பில் டியூட்ரியம் அதிகம் இருக்கும். ஆனால், நாம் பனிக்கட்டியைச் சாப்பிடுவதில்லை. உருகிய நீரைத்தானே குடிக்கிறோம். உருகிய நீர் என்பது சாதாரண நீர்தானே என நீங்கள் நினைக்கலாம். உங்கள் சந்தேகம் சரிதான். சாதாரண நீர் பனிக்கட்டியாக மாறும் தருணத்திலும், இந்தப் பனிக்கட்டி நீராக உருகும் தருணத்திலும் (அதிகக் குளிர்ச்சியாக இருக்கும் தருணம்) அது பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பையே பெற்றிருக்கிறது.

தண்ணீர் மட்டுமல்ல, மிகவும் குளிர்ச்சியாக உள்ள எந்த ஒரு பானமும் பனிக்கட்டியின் மூலக்கூறு அமைப்பையே கொண்டிருக்கும். எனவேதான் குளிர்பானங்களைத் தொடர்ந்து குடித்துவந்தால் குண்டாகிவிடுகிறோம்.

உடல் குண்டாகாமல் இருக்கக் கூல்டிரிங்க்ஸ் குடிக்கக் கூடாது என்று சொல்வதற்கு இப்போது காரணம் புரிந்துவிட்டதா?

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu.

  • தொடங்கியவர்

கமல்,சிம்பு,ஷாலினி - குழந்தை நட்சத்திரங்களின் க்யூட் மேனரிசம் #CuteChildrenGif

 

குழந்தை

குழந்தைகள் என்றாலே குறும்பு தான். அவர்களின் சின்ன சின்ன க்யூட் மேனசரிசத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். இப்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்ட நம் நட்சத்திரங்கள் சிலரின்  குழந்தைப் பருவ மேனரிசத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணலாம் வாங்க!

களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் ’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்று முருகனிடம் முறையிட்டுப் பாடுவார் கமல். அட.. அந்த முகத்தில் தான் எவ்வளவு அழகு!

giphy.gif

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என தலையை ஆட்டி வகுப்பறையில் பாடும் குட்டி பத்மினியின் அழகான கண்களுக்கு ஆயிரம் ஆயிரம் லைக்ஸ்களை கொட்டலாம்.

 

giphy.gif

‘அஞ்சலி...அஞ்சலி... அஞ்சலி...சின்னக் கண்மணி கண்மணி கண்மணி’ - அஞ்சலி படத்தில்  தத்தித் தத்தி நடக்கும் செல்லக்குட்டி ஷாமிலியின் பட்டுப் பாதங்களையும் கொஞ்சும் பப்ளி கன்னங்களையும் ஒன்ஸ் மோர் பார்க்கலாம்.

giphy.gif

சிம்புனா சும்மாவா? ‘ஐ’யம் எ லிட்டில் ஸ்டார்...ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்’னு அப்பவே செம ஸ்டைல் காட்டுவாரு..அதுவும் ரஜினி ஸ்டைல். கெத்துப் பையன்!

giphy.gif

‘பேபி பேபி...ஓ மை பேபி’ - ஷாலினியோட முயல் குட்டி மேனரிசத்தை ரிப்பீட் மோட்ல பாக்கணும் போல இருக்குல. வாவ் வாட் எ பியூட்டி!

 

None animated GIF

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'அன்பெனும் ஒற்றை வார்த்தையாய் இருப்போம்' - உலக ஆதரவற்றோர் தினப் பகிர்வு! #WorldOrphansDay

 

syrian-refugees_18116.png

லகின் ஒவ்வொரு போரிலும் எஞ்சுவது நிராதரவாய் நிற்கும் குழந்தைகள்தான். ஆதரவற்றோர் பற்றிய பதிவுகள் கி.மு 400-ம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசர்கள் காலம் தொடங்கியே நமக்குக் கிடைக்கின்றன. ரோமானியப் பேரரசு காலத்திலேயே அனாதை இல்லங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பைபிளுக்குப் பிறகு அதிகம் அச்சிடப்பட்டு விற்கப்படும் புத்தகம், இரண்டாம் உலகப்போரால் யாருமற்றவளாகி இறந்த சிறுமி ஆன் ஃப்ராங்கின் போர்க்கால நாட்குறிப்புகள்தான். இரண்டாம் உலகப்போர், ஆன் ஃப்ராங்க் போன்ற ஐந்து லட்சம் அனாதைச் சிறுவர்களை விட்டுச்சென்றுள்ளது என அன்றைய பதிவுகள் கூறுகின்றன. துரதிர்ஷ்டவசமாக போர் என்பது துப்பாக்கிகளால் மட்டுமே முடிந்துவிடுவதில்லை. பசி, பஞ்சம், நோய், உரிமைப்போர், சமூக முரண்பாடுகள் என போருக்குப் பல முகங்கள் இருக்கின்றன. உலகின் பெரும் ஆட்சியாளர்களும் மனிதநேயமிக்கவர்களும் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருந்தாலும் இன்றுவரை மனிதர்களை மனிதர்களே கைவிடும் சூழலுக்கு அவர்களால் எந்தவித பதிலும் தரமுடியவில்லை.

தாலிபன் மற்றும் ஆஃப்கன் மக்களிடையேயான 30 வருடப் போர், இரண்டு மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்களை அடுத்தவேளை எப்படி உயிர் வாழவைக்கப் போகிறது என்ற கேள்விக்குறியான சூழலுக்கு உட்படுத்தியது. 6,00,000 பேருக்கு இன்றுவரை தெருக்கள்தான் வீடு. உச்சகட்டமாக 4,00,000 பேர் தங்கள் உறவுகளிடமிருந்து பிரித்துவரப்பட்டு ஆயுதக் கடத்தல்காரர்களாகவும் மனித வெடிகுண்டுகளாகவும் பயன்படுத்தப்பட்டார்கள். அனாதையாக்கப்பட்டவர்களில் நான்கில் ஒரு பங்கு பிள்ளைகள் ஐந்து வயதுக்கு முன்பே இறந்துவிடுகின்றனர் என்று சொன்னால், அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா? ஆனால், நிகழ்ந்தது அதுதான். உணவு இல்லாமலும், நோய்வாய்ப்பட்டும், யாருமற்றும் பிரிதொரு நாளில் அந்தப் பிள்ளைகளின் உயிர்கூட அவர்களின் வசம் இல்லாமல் போனது. 

orphan1_18563.jpg

2009-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் உச்சகட்டத்தை அடைந்தபோது தாங்கள் உயிர் எஞ்சுவது கடினம் என்று அறிந்த பெற்றோர்கள், அங்குள்ள பௌத்த மடாலயங்களில் தங்கள் பிள்ளைகளை விட்டுச் சென்றனர். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைகூட அதற்கு விதிவிலக்கில்லை. 2008-க்குப் பிறகு, ‘தாங்கள் எந்தப் பிள்ளைகளையும் தமிழர்களின் ராணுவத்தில் சேர்க்கவில்லை’ என்று சொன்னாலும், 2005 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் புலிகளின் படையில் இருந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 1,018. அவர்களில் பெரும்பாலானோர் போருக்காகப் பெற்றோரிடமிருந்து வலிந்து பிரித்துவரப்பட்டவர்கள். அவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் போர்க்காலத்தில் முன்னணிப் படையில் செயல்பட்டார்கள். போர் முடிந்து எஞ்சியவர்கள் திரும்பிச் சென்ற நிலையில், அவர்கள் குடும்பம் இருந்ததற்கான தடயம் அங்கே இருக்கவில்லை. மற்றொருபுறம் போரினால் அகதிகளாக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் லட்சக்கணக்கில். உறவுகள் அற்றுப்போகும் மனிதன் அனாதை... நாடற்றுப் போகும் மனிதன் அகதி. இதில் பெருத்த வேறுபாடொன்றும் இல்லை.

ஆப்பிரிக்காவில் இது வேறு கதை. 12 சதவிகித குழந்தைகள் எய்ட்ஸ் போன்ற பெருநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள். அங்கு, அனாதை விடுதிகளும் குறைவு என்னும் சூழலில் பிள்ளைகளின் இறப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகம் என்றே சொல்லலாம். 10 வருடகாலமாக உகாண்டாவில் பசிக்கொடுமை தாங்க முடியாமல் மக்கள் இறந்துகொண்டிருக்க அதிலிருந்து பிழைக்க பயணப்பட்ட தனிமனிதர்கள் எண்ணிக்கை 1.6 மில்லியன். பயணப்படும் தருவாயில் அவர்களுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள இருந்தவர்கள் பசியால் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தனர். மக்களைத் தனித்துவிட, போருக்கு அப்போது துப்பாக்கிகள் தேவைப்பட்டிருக்கவில்லை.

orphan_18427.jpg

கொள்கையிருந்தும் மனிதநேயம் குப்பையில் என்பதற்கு உதாரணமாய் ரஷ்யாவைச் சொல்லலாம். வருடாந்திரமாக அங்கே 6,50,000 சிறார்கள் எவருமின்றித் தனித்து அனாதைகளாக விடப்படுகின்றனர். ஆதரவற்ற அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களின் 16 வயதுவரை அரசு ஏற்கிறது. அதன்பிறகு தங்கள் வாழ்வை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதன்பிறகு நடப்பதோ வேறு. 10 சதவிகித பிள்ளைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் சூழலில் 20 சதவிகிதம் பேர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். 40 சதவிகிதம் பேர் வீடற்று அதே சூழலுக்குத் திரும்புகின்றனர்.

refugees-hungary-p_3432984k_18322.jpg

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் யுத்தமாகக் கருதப்படும் சிரியப் போரால் இன்றுவரையில் உறவுகளிடமிருந்து பிரிந்து சிதறுண்ட மனிதர்களின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன். நடுக்கடலில் தத்தளித்து ஒரு விடியற்காலையில் துருக்கியின் கடற்கரையோரம் ஒதுங்கிய மூன்று வயது சிறுவன் அய்லான் குர்தியின் உடல் அதற்குச் சாட்சியம். எங்கோ ஒருவருக்கு அதீதமாகிக் போவதுதான் மறுகரையில் யாரோ ஒருவரை  எதுவுமற்றவராக்கிவிடுகிறது.

அனாதைச் சிறுவன் ‘ஆலிவர் ட்விஸ்ட்’ பற்றிய புனைவை எழுதிய சார்லஸ் டிக்கன்ஸ், “எல்லாம் தன்னை கைவிட்ட சூழலில் தன்னைப்போன்ற ஒரு சிறுவன் கூறிய அன்பான ஒற்றை வார்த்தையைத்தான் ஆலிவர் பற்றிக்கொண்டான்” எனக் கூறுகிறார்.

அந்த ஒற்றை வார்த்தையாய் நாம் இருப்போம்!

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 15
 

article_1479185148-up%20country.jpg1505: போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து, ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1864: அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டுப்படைத் தளபதி வில்லியம் ஷேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.

1889: பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.

1926: என்.பி.சி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.

1941: நாசி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

1942: இரண்டாம் உலகப் போர் - சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.

1943: நாசி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

1948: இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

1949: நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

1966: ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1969: வியட்நாம் போர் - வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.

1970: சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.

1971: இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.

1978: டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம், கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.

1983: வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.

1988: சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம், தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.

1988: பாலஸ்தீன நாடு, பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.

1990: அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

2002: ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

2000: இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

2007: வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வௌ்ளை மாளிகை புகைப்படப்பிடிப்பாளரின் கைவண்ணத்தில் ஒபாமா (PHOTOS)

வௌ்ளை மாளிகை புகைப்படப்பிடிப்பாளரின் கைவண்ணத்தில் ஒபாமா (PHOTOS)

பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வௌ்ளை மாளிகையின் உத்தியோகப்பூர்வ புகைப்படப்பிடிப்பாளரினால் எடுக்கப்பட்ட, ஒபாமாவின் 2 மில்லியன் புகைப்படங்களில் சிறந்த 55 புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஊடகங்களில் வெளியான அந்த சிறந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக…

3A3F8F6C00000578-3926100-image-a-124_1478837690142.jpg

3A3F8F4000000578-3926100-image-a-132_1478837729600.jpg+

3A3F8F5000000578-3926100-December_7_2015_Comedian_Jerry_Seinfeld_knocks_on_the_Oval_Offic-a-17_1478871703746.jpg

3A3F904000000578-3926100-image-a-117_1478837664404.jpg+

3A3F908000000578-3926100-April_9_2015_The_President_s_wave_aligns_with_a_rainbow_as_he_bo-a-23_1478871704057.jpg

3A3F914400000578-3926100-March_7_2015_iI_was_moving_around_trying_to_capture_different_sc-a-4_1478871703268.jpg

 

3A3F918800000578-3926100-image-a-129_1478837711473.jpg

 

3A3F919500000578-3926100-February_14_2013_The_President_genuinely_enjoys_being_with_kids_-a-1_1478871702995.jpg

3A3F921400000578-3926100-image-a-106_1478837578884.jpg

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

சானியா சந்தித்த ஐந்து சவால்கள்! #HBDSaniaMirza

 

டென்னிஸ் என்றாலே உலக அரங்கில் இந்தியாவின் முகம் சானியா மிர்ஸா தான்.  ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் அவர் மிகக் கடுமையாக போராடியிருக்கிறார் இந்த தில் லேடி. சிறுவயதில் இருந்து இப்போது வரை சானியா சந்தித்த ஐந்து சவால்கள் இவை.

சானியா

1.ஆறு வயதில்  இருந்தே டென்னிஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் சானியா . அவரது ஆரம்பகால பயிற்சியாளரே  அவரது அப்பா இம்ரான் மிர்சா தான்  . 90 களின் ஆரம்பத்தில் இந்தியாவே சச்சின் வருகையால் கிரிக்கெட்டுக்கு ஜே போட்டுக்கொண்டிருக்க, ஒரு டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என திட்டமிட்டே வளர்த்தார் இம்ரான் . பள்ளிப்பருவத்தில்  வகுப்பில் இருந்த நேரத்தை விட கிரவுண்டில் இருந்த நேரம் தான் அதிகம். ஆனால் சானியா  டென்னிசில்  மட்டுமல்ல வகுப்பிலும் நல்ல ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார். டென்னிஸ் தொடர்களில் ஜொலிக்க வேண்டுமென்றால் திறமை மட்டும் போதாது பணமும் வேண்டும், ஏனெனில் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவேண்டி நேரிடும், தங்கும்  ஹோட்டல், சாப்பாடு ஆகியவற்றுக்கு பெருந்தொகை செலவிட நேரிடும். தனது அப்பாவுக்கு  சிரமத்தை குறைப்பதற்காக, நிறைய ஸ்காலர்ஷிப்கள் பெறுவதற்காகவே  தினமும் கூடுதல் நேரம் உழைத்து  படிப்பிலும் கில்லியாக இருந்தார் . ஒரு நல்ல விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் எக்காரணமும் படிப்பை விடக்கூடாது, நன்றாக படிக்கவும் செய்து, விளையாடவும் செய்தால் பணச்சுமையை எளிதில் தகர்க்கமுடியும் "என்பது  சானியா அட்வைஸ்.

2. தனது 16 வயதில், இளம்பெண்கள் இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் டைட்டில் வென்றார் . பெயர் பத்திரிகைகளில்  அடிபடதொடங்கவே சானியா மீது பலர் கவனம் குவித்தனர்.  இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண் எப்படி குட்டை பாவாடை அணிந்து விளையாடலாம் என சிலர் சர்ச்சைகளை கிளப்ப,   லைம் லைட்டுக்கு வந்தார், அந்த சர்ச்சைக்கு பிறகு சானியா மிர்சா விளையாடும் போட்டிகளை பலர் உற்று நோக்க தொடங்கினார்கள். "நான் போட்டியில் வென்றால், நான் அணிந்திருப்பது ஆறு இன்ச் உடையா, ஆறடி உடையா என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்  ஆனால் தோற்றுவிட்டால் அடுத்த மூன்று நாட்களுக்கு உடை குறித்து சர்ச்சை கிளப்ப ஆரம்பித்து விடுகிறார்கள். நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான்  தீர்மானிப்பேன் " என துணிச்சலாக பதிலளிக்க இந்தியா முழுவதும் சென்சேஷன் ஆனார் . ஒரு பெண், பல தடைகளை கடந்து டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெயர் வாங்கித்தரும் வேளையில் கிளாமர் கிராமர் குறித்த வகுப்பெடுப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது சானியாவின் துரதிர்ஷ்டம்.

சானியா

3. குஷ்பு ஒருமுறை திருமணத்து முந்தைய உடலுறவு குறித்து பேசியது இந்திய அளவில் சர்ச்சையானது. அச்சமயத்தில் சானியாவின் கருத்து  என்ன என பத்திரிக்கையளர்கள் கேட்க, " திருமணத்துக்கு முன்போ, பின்போ எதுவாக இருந்தாலும் பாதுக்காப்பான உடலுறவு இருப்பது அவசியம்" என்றார். ஏனெனில் அந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் குறித்த பேச்சுகள் ஊரெங்கும் நிரம்பியிருந்தது. சிலர் சானியாவின் கருத்தை சர்ச்சையாக்கி, திருமணத்துக்கு முந்தைய உடலுறவை ஆதரிக்கிறார் என செய்திகள் பரப்ப, நாடெங்கும் சானியாவின் உருவ  பொம்மைகள் எரிக்கபட்டது, அதன் பின்னர் "எக்காலத்திலும் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை  நான் ஆதரிக்க மாட்டேன், கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளபட்டது என அவர்  விளக்கம் கொடுத்த பின்னர் தான் பிரச்னை ஓய்ந்தது.

சானியா

4. சானியா மிர்சாவுக்கு அவரது பள்ளிபருவ நண்பர் சொஹ்ரப் மிர்சாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நின்று போனது. அதன் பின்னர் யாருமே எதிர்ப்பார்க்காத வண்ணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார் சானியா. சானியா பாகிஸ்தான் மருமகள் இந்தியாவுக்காக விளையாடக்கூடாது என பல அமைப்புகள் மீண்டும் சர்ச்சையை கிளப்ப நான் முதலில் 'இந்தியாவின் மகள்' இந்தியாவுக்காகத் தான் விளையாடுவேன் என பேட்டி தட்டி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மிர்சா .

சானியா

5. சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி,  புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர்  'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ் ஆவதில்லை. அதிலும் பெண்களாய் இருந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசம். திறமையால் வெற்றி கிடைத்தாலும்  'அவளுக்கு அதிர்ஷ்டம்ப்பா' என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள். திருமணம்,  அவதூறு போன்ற மனத்தடையையும், காயங்களால்  ஏற்பட்ட உடற் ரீதியான தடையையும்  தாண்டி  2-வது இன்னிங்ஸில், உச்சம்  தொட்டிருக்கிறார் சானியா. திருமணத்துக்கு பிறகு ஒற்றையர் பிரிவில் விளையாடுவதால் பல காயங்கள் ஏற்படவே ஒற்றையர் போட்டிகளுக்கு முழுமையாக முழுக்கு போட்டார். முன்கையில்  பலம் அதிகம். கிரவுண்ட் ஸ்ட்ரோக்கில்  கில்லி என்பதால் இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய உயரம் தொட முடியும் என்பதை உணர்ந்து கடைசி இரண்டு ஆண்டுகளாக இரட்டையர் பிரிவில் விளையாடி  தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். 83 வாரங்களாக இரட்டையர் பிரிவில் உலக அரங்கில் முதலிடத்தில் இருக்கும் சானியாவுக்கு இன்றோடு முப்பது வயது நிறைவடைகிறது.

இந்தியாவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 

vikatan

சானியா மிர்சா

 
sania_3063998f.jpg
 

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (Sania Mirza) பிறந்தநாள் இன்று (நவம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பெற்றோர் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். சானியா மிர்சா மும்பையில் (1986) பிறந்தார்.

* கிரிக்கெட்டில் ஆர்வமிக்க தந்தை, விளையாட்டுப் பிரிவு செய்தியாளராகப் பணிபுரிந்தவர். சானியாவின் 4-வது வயதில் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. அங்கு கிளப்பில் அப்பா, டென்னிஸ் விளையாடுவதைப் பார்த்த சானியாவுக்கும் டென்னிஸ் மீது ஆர்வம் பிறந்தது.

* டென்னிஸ் வகுப்பில் குழந்தையைச் சேர்க்க பெற்றோரின் பொருளாதார நிலைமை இடம் தரவில்லை. தனியார் பள்ளியில் சேர்க்கக்கூட பணம் இல்லாததால், 1992-ல் ஹைதராபாத் திரும்பினர். வந்ததும், பள்ளியிலும், டென்னிஸ் பயிற்சியிலும் சேர்க்கப்பட்டார் சானியா.

* சிறுவயது முதலே முழு பலத்தையும் பயன்படுத்தி அதிரடியாக ஆடும் திறன் பெற்றிருந்தார். 8 வயதில், தன்னைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக வயதுள்ள பெண்ணைத் தோற்கடித்து 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வென்றார்.

* நாடு முழுவதும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, 12, 14, 16, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் வென்றார். நாட்டின் முன்னணி வீராங்கனையாக முன்னேறினார். பல சர்வதேசப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினார். இதற்கிடையில், ஹைதராபாத் நாசிர் பள்ளியில் பயின்று, செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

* பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் 16 வயதில் வென்று உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டார். 2004-ல் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். 2003-ல் தொடங்கி, 2012-ல் ஒற்றையர் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் வரை, ஒற்றையர், இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளிலுமே நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற தரவரிசையில் இருந்தார்.

* சர்வதேசப் போட்டிகளில் அடுக்கடுக்கான வெற்றிகளை ஈட்டினார். 2015 ஆகஸ்ட் முதல் 2016 பிப்ரவரி வரை, விம்பிள்டன் உட்பட 41 முறை தனது இரட்டையர் போட்டி ஜோடியான மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து வெற்றிகளைக் குவித்தார்.

* விம்பிள்டன் வெற்றி, மகளிர் இரட்டையர் போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம், 21 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்கள், உலக டென்னிஸ் ஒற்றையர் போட்டிகளில் 27-வது இடம் என இவரது அனைத்து சாதனையும் இந்தியாவைப் பொருத்தவரை முதலாவது சாதனையாகும். இவரது ‘ஃபோர்ஹேண்ட் ஷாட்’ திறன், சர்வதேச அளவில் புகழப்படும் நுட்பமாகும்.

* தன் சொந்த சாதனைகளைவிட, இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதை முதல் முன்னுரிமையாகக் கொண்டவர். விளையாட்டின்போது ஏற்படும் காயம், அதற்கான சிகிச்சை, இந்த ஓய்வால் ஏற்படும் இடைவெளி, இதனால் தரிவரிசையில் இறங்குமுகம், கூடவே சர்ச்சைகள் என பல தடைகள் வந்தாலும் அவற்றை நெஞ்சுரத்துடன் சமாளிப்பது இவரது மிகப் பெரிய பலம்.

* இவரது சுயசரிதை நூலான ‘ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்’, சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. தெலங்கானாவில் உலகத் தரத்திலான வசதிகளுடன் தன் பெயரில் டென்னிஸ் அகாடமி நடத்திவருகிறார். தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் சாதனை மங்கையான சானியா மிர்சா இன்று 31-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
சவக்குழிகளை தோண்டுபவர்களுக்கான சர்வதேச போட்டியில் ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் முதலிடம்
 

சவக்­கு­ழி­களை தோண்­டு­ப­வர்­க­ளுக்­கான சர்­வ­தேச போட்­டியில் ஸ்லோவாக்­கி­யாவைச் சேர்ந்த சகோ­த­ரர்கள் இருவர் முத­லிடம் பெற்­றுள்­ளனர். சட­லங்­களை அடக்­கு­வ­தற்­காக நேர்த்­தி­யான முறையில் சவக்­குழி­களை தோண்­டு­ப­வர்­க­ளுக்­கான இப்­ போட்டி ஸ்லோவாக்­கி­யாவின் ட்ரென்சின் நகரில் கடந்த வியா­ழக்­
கி­ழமை நடை­பெற்­றது.

 

206482016-11-10T165845Z_548573192_S1AEUM

 

பல நாடு­களைச் சேர்ந்த குழுக்கள் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­றின. ஒவ்­வொரு குழு­விலும் இருவர் அங்கம் வகித்­தனர். சவக்­கு­ழி­களின் உரிய அளவு, தோண்டும் வேகம், தரம் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இப் ­போட்­டியின் வெற்­றி­யா­ளர்கள் தெரிவு செய்­யப்­ப­டுவர் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

206482016-11-10T165806Z_1868612286_S1AEU

 

1.5 மீற்றர் ஆழமும் 2 மீற்றர் நீளமும் 90 சென்­ரி­மீற்றர் அக­லமும் கொண்­ட­தாக இச்­ ச­வக்­கு­ழிகள் அமைக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

 

206482016-11-10T165844Z_1176699661_S1AEU

 

இப் ­போட்­டியில் ஸ்லோவாக்­கி­யாவைச் சேர்ந்த லடிஸ்லூவ் ஸ்கிலாடன் (43), செபா ஸ்கிலாடன் (41) ஆகிய இரு சகோ­த­ரர்கள் முத­லிடம் பெற்­றனர். 

 

206482016-11-10T165817Z_772389129_S1AEUM

 

இவர்கள் 54 நிமி­டங்­களில் மேற்­படி சவக்­கு­ழியை தோண்­டி­மு­டித்­தனர். இவர்கள் அமைத்த சவக்­கு­ழி­யா­னது நேர்த்­தி­யா­கவும் இருந்­ததாக 5 பேர் கொண்ட நடுவர் குழாம் அறி­வித்­தது.

 

206482016-11-10T165826Z_735304431_S1AEUM

 

இரண்­டா­வது வரு­ட­மாக இந்த சர்­வ­தேச போட்டி நடத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த வருடம் இப்­ போட்­டியை ஆரம்­பித்த லடிஸ்லாவ் ஸ்டைரிஸ் கருத்துத் தெரி­விக்­கையில், “சவக்­குழி தோண்­டு­ப­வர்­களின் கடின உழைப்பை பாராட்­டு­வ­தற்கு நாம் விரும்­பினோம்” எனத் தெரி­வித்தார்.

 

206482016-11-10T165819Z_1592740366_S1AEU

 

“ஸ்லோவாக்­கி­யாவில் பெரும்­பா­லான சவக்­கு­ழிகள் மிக நெருக்­க­மா­ன­வை­யாக உள்­ளன. அவற்­றுக்கு இடை­யி­லான இடை­வெளி குறைவு, சவக்குழிகளை தோண்டுவதற்கு இயந்திரங்களுக்குப் பதிலாக மனிதர்கள் வேண்டும். அவர்கள் மழையிலும் பனியிலும் தொழில்புரிகின்றனர்” எனவும் லடி ஸ்லாவ் ஸ்டைரிஸ் கூறினார்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

நிலத்தில் புதையும் தொலைக்காட்சிப் பெட்டிகள்
---------------------------------------------------------------------------------
பிரிட்டனில் ஆண்டுதோறும் குப்பையில் வீசப்படும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து மதிப்புவாய்ந்த பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கையில் ஒரு நிறுவனம் இறங்கியுள்ளது.

BBC

  • தொடங்கியவர்

எழுத மறந்த கதை! #ILoveToWriteDay

 

எழுத்து

பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பே குழந்தைகளிடம் பல்பத்தையும் பலகையையும் கொடுத்துக் கிறுக்க வைத்த காலம் காணாமல் போய், இன்று டேப்லட் கொடுத்துப் பழக்கிக் கொண்டிருக்கிறோம். எழுத்து என்பதே மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உணர்வுகளைக் கொட்டிக் கடிதம் எழுதிய காலங்கள் போயே போச்சு! உணர்வுகள் சுருங்கிப் போன மாதிரியே கடிதங்களும் சுருங்கின. இ மெயிலிலும் வாட்ஸ்அப்பிலும் வார்த்தைகள் மட்டுமின்றி வாழ்க்கையும் குறுகிப் போனது.

எழுதிப் பழக வேண்டிய பள்ளிக் குழந்தைகள், ஸ்மார்ட் போர்டுகளின் பயன்பாட்டால் எழுத மறந்தனர்.

இப்படி கடிதம் எழுதுவது முதல் கையெழுத்து போடுவது வரை எல்லாம் டிஜிட்டல் மயமானதில், கிட்டத்தட்ட எல்லோருமே எழுத மறந்து போனோம்.

 

எழுத்து

எழுத மறந்தவர்களுக்கு மட்டுமின்றி, எழுத விரும்புவோருக்கும் ஒரு நாள் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவீர்களா?

யெஸ்...  வருடந்தோறும் நவம்பர் மாதம் 15-ம் தேதியை 'ஐ லவ் டு ரைட் டே' என்கிற பெயரில் கொண்டாடுகிறார்கள்.அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் ஜான் ரிடில் என்பவர்தான் இப்படியொரு தினத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.

''எதையாவது எழுத வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த நாள் அரிய வாய்ப்பு. தெரிந்தவர்களுக்குக் கடிதம் எழுதலாம். கதையோ, கவிதையோ, கட்டுரையோ எழுதுவதற்கான பிள்ளையார் சுழியை போடலாம். டைரி எழுதலாம். என்ன எழுதுவது, எதில் எழுதுவது எனத் தெரியாதவர்கள் அந்த நிமிடத்தைய உணர்வுகளை அப்படியே ஒரு வெள்ளைத்தாளில் எழுதிப் பதிவு செய்யலாம். இப்படி எல்லா வயதினருக்கும் எழுத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டவும், அதைத் தொடர வைக்கவுமே இப்படியொரு தினம்...'' என்கிறார் ஜான் ரிடில்.

ஐ லவ் டு ரைட் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமான எழுத்துப் பயிற்சிப் பயிலரங்குகள் நடைபெறுகின்றன.  சிறப்பாகவும் சரியாகவும் எழுதுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எழுத்தாளர்கள் மற்றும் புத்தக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நூலகங்களிலும்,  திறமையான எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டு அவர்களது எழுத்து அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

எத்தனையோ விஷயங்களை வெளிநாடுகளில் இருந்து காப்பியடிக்கிற நாம், எழுத்தைக் கொண்டாடும் இந்த நல்ல விஷயத்தையும் பின்பற்றலாம். யாருக்காவது திடீர் கடிதம் எழுதி ஆச்சர்யம் அனுப்பலாம். குழந்தைகளிடம் பேப்பரையும் பேனாவையும் கொடுத்து அவர்கள் கற்பனைக்கேற்ப என்ன நினைக்கிறார்களோ, எதை வேண்டுமானாலும் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தலாம்.
பள்ளிக் குழந்தைகளிடம் எழுத்துப் பயிற்சியை ஒரு குழு நடவடிக்கையாக செய்ய வைக்கலாம். யாருடைய கையெழுத்து அழகாக இருக்கிறது என்பதற்குப் போட்டிகள் வைப்பதற்குப் பதில் யாருக்கெல்லாம் எழுத வருகிறது என போட்டிகள் நடத்தலாம். எழுதுவதற்கான முயற்சிகள் எடுக்கும் குழந்தைகளுக்குப் பரிசுகள் தரலாம்.

தொடக்கக் கல்வியை முடித்து வெளியேறும் குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கு எழுத்துகளை வாசிக்கத் தெரிவதில்லை என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. அதற்குக் காரணம் அவர்களுக்கு எழுதுவதில் பயிற்சியின்மை என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.

பாடங்கள் மனதில் பதியவில்லையா...? பல முறைகள் எழுதிப் பழகுங்கள் எனப் பிள்ளைகளுக்கு போதித்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் இன்று அருகி விட்டனர். ஆசிரியர்களே முன்பிருந்த ஆசிரியர்கள் எழுதும் அளவுக்கு எழுதுகிறார்களா என்பது கேள்விக்குறிதான்! 

எழுத மறந்த கதையை எடுத்துச் சொல்கிற 'ஐ லவ் டு ரைட்' தினத்தை  எல்லோரும் கொண்டாடுவோம்!

vikatan

  • தொடங்கியவர்

 

உலகெங்கிலுமிருந்து 'சூப்பர் மூன்' படங்கள்

  • தொடங்கியவர்

Beauty and the Beast- 2017 வெர்ஷன்

 

 

 

 

 

பியூட்டி அன்ட் த பீஸ்ட், பல காலங்களாக 'fairy tale' கதையாக பலமுறை சொல்லப்பட்டதை, மீண்டும் ஒரு முறை திரையில் சொல்ல இருக்கிறது 'டிஸ்னி'. இந்த முறை பியூட்டியாக நடிப்பது, 'ஹாரி பாட்டர்' புகழ் எம்மா வாட்சன்.


இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 17ல் வெளியாகிறது. விஷூவலாக படம் fairy tale ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது மட்டும் ட்ரெயிலரைப் பார்த்தால் தெரிகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.