Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆப்பிளின் 300 டாலர் புத்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா?

 

400_14193.jpg

ஆப்பிள் நிறுவனம் 300 டாலர் மதிப்புள்ள புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'Designed by Apple in California' எனப்படும் இந்தப் புத்தகம் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்பிள் தயாரிப்பின் டிசைன் அம்சங்களை சிறப்பிக்கிறதாம். மொத்தம் 450 புகைப்படங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அத்தனையுமே ஆப்பிளின் தயாரிப்புகள்தான். ஆப்பிளின் பிரபல டிசைனர் ஜானி ஐவ் முன்னுரை எழுதியுள்ளார். இதைத் தவிர புத்தகத்தில் வேறு ஏதும் கட்டுரைகள் இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளது ஆப்பிள். 

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்தியாவின் சர்ச்சையை கிளப்பிய ஆடம்பர திருமணம் (புகைப்பட தொகுப்பு)

 

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவில், அம்மாநில முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமண வைபவம் உலகின் மிக ஆடம்பர திருமணங்களில் ஒன்றாக விமரிசையாக நடந்தேறி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜனார்த்தன ரெட்டி குடும்பத் திருமணம்

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவில், அம்மாநில முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமண வைபவம் உலகின் மிக ஆடம்பர திருமணங்களில் ஒன்றாக நடந்தேறியுள்ளது; அத்திருமணத்திற்கு 74 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக செலவழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனார்த்தன ரெட்டி குடும்பத் திருமணம்

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதது என்று அறிவித்ததிலிருந்து பல மில்லியன் மக்கள் பணப்புழக்க நெருக்கடியால் சிரமப்படும் போது, இந்த திருமணத்துக்கு செய்யப்பட்ட பகட்டான செலவு, மக்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

மணப்பெண்ணின் புடவை 170 மில்லியன் மதிப்பிலானது அவர் அணிந்திருக்கும் நகைகள் 900 மில்லியன் மதிப்பிலானது.

மணப்பெண்ணின் புடவை 170 மில்லியன் மதிப்பு; அவர் அணிந்திருந்த நகைகள் 900 மில்லியன் மதிப்பிலானது.

23 வயது மணமகன் ராஜீவ் ரெட்டி ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வாரிசு

23 வயது மணமகன் ராஜீவ் ரெட்டி ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வாரிசு

விருந்தினர்களை மகிழ்விக்க நடந்த பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் பிரேசில் நாட்டு சம்பா நடனமும் ஒன்று

விருந்தினர்களை மகிழ்விக்க நடந்த பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் பிரேசில் நாட்டு சம்பா நடனமும் ஒன்று

ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம்

இத்திருமணத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், திருமணச் செலவுகளை ஆறுமாதத்திற்கு முன்பே முடித்துவிட்டதாகவும் மேலும் சொத்துக்களை அடகு வைத்து திருமணம் நடத்துவதாகவும் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார்.

தங்க முலாம் பூசப்பட்ட திருமண அழைப்பிதழ், பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் ஆகியவை தேவையில்லாத ஆடம்பர பகட்டு என பலர் குறை கூறுகின்றனர்.

தங்க முலாம் பூசப்பட்ட திருமண அழைப்பிதழ், பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் ஆகியவை தேவையில்லாத ஆடம்பர பகட்டு என பலர் குறை கூறுகின்றனர்.

பரந்துவிரிந்த பெங்களூரு அரண்மனையில் திருமணச் சடங்குகள் நடப்பதற்காக பழங்கால ஹிந்து கோவில்களை போன்ற தற்காலிக அமைப்புகள் போடப்பட்டது.

பரந்துவிரிந்த பெங்களூரு அரண்மனையில் திருமணச் சடங்குகள் நடப்பதற்காக பழங்கால ஹிந்து கோவில்களை போன்ற தற்காலிக அமைப்புகள் போடப்பட்டது.

ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம்

50,000க்கு அதிகமான விருந்தாளிகள் இத்திருமணத்தில் பங்கேற்றனர்; விருந்தாளிகளை அழைத்து வர 2000 டாக்ஸிகள் பயன்படுத்தப்பட்டது; மற்றும் சிறப்பு விருந்தாளிகளை அழைத்து வர 15 தற்காலிக ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன

 

BBC

  • தொடங்கியவர்

15039572_1187677251280967_70902944448877

தமிழ்த் திரையுலகின் மும்முடி மன்னவர்களில் ஒருவராக விளங்கிய, 'காதல் மன்னன்' ஜெமினி கணேசனின் பிறந்த தினம் இன்று.

அனைத்து காலகட்டங்களிலும் தனி முத்திரை பதித்த ஜெமினி, காலமாகும் வரை திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்த நாயகர் இவர்.

  • தொடங்கியவர்

அதிபர் தேர்தலில் தோற்றவர்களுக்கு மரியாதை! அமெரிக்கப் பெண்ணின் புதுமையான முயற்சி

 

அதிபர் தேர்தலில்

தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பெயர் மக்கள் மனதில் பதிந்துவிடும். ஆனால் தோற்றவர்களை மறந்துவிடுவார்கள். 'போட்டியில் தோற்றவர்களையும் வெற்றியாளர்களுக்குச் சமமாகத்தான் கருதவேண்டும்' என்கிறார் அமெரிக்காவின் சேர்ந்த நினா கட்சடோரியான்(Nina Katchadourian).

சமீபத்தில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் ஹிலரி கிளின்டன் மற்றும் ட்ரம்ப் போட்டியிட்டனர். தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வானார். மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலரி தோல்வியைத் தழுவினார்.


அதிபர் தேர்தலில் தோல்வியுற்றாலும் ஹிலரி தேர்தல் பணிகளில் காட்டிய ஆர்வமும் செயல்பாடும் முக்கியமானவை. மற்றவர்களுக்கு அது வழிகாட்டும் விதத்தில் அமைந்திருந்தன. 'ஹிலரி மட்டுமல்ல... அமெரிக்கத் தேர்தலில் தோல்வியுறும் ஒவ்வொரு போட்டியாளருமே போற்றுதலுக்குக்கு உரியவர்தான்' என்று சொல்லும் நினா, அப்படி தோல்வியுற்ற வேட்பாளர்களின் விவரங்களைச் சேகரித்து கண்காட்சியாக நடத்திவருகிறார்.

monument-to-the-unelected-62_09064.jpg

அமெரிக்காவின் புரூக்ளீஸ் நகரில் உள்ள 'லெஃபெர்ட்ஸ் ஹிஸ்டாரிக் ஹவுஸ்' (Lefferts Historic House) என்ற கட்டடத்தில் 'மானுமென்ட் டு த அன் எலெக்டட்(Monument to the Unelected)' என்ற பெயரில் சமீபத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தோற்ற ஹிலரி மட்டும் அல்ல, இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர்களின் பெயர்களும் இடம்பெற்றன.

கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சைன் போர்டுகள், பார்வையாளர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த சைன் போர்டுகள் கண்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. தேர்தலின்போது, அந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் பயன்படுத்தியவைதான். 'பார்வையாளர்கள் இந்த சைன் போர்டுகளைப் பார்த்ததும், தேர்தலின்போது இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறார்கள்' என்று கூறும் நினா, 1796-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ஜான் ஆடம்ஸ் முதல் தற்போது ட்ரம்பிடம் வெற்றியை நழுவவிட்ட ஹிலரி வரையிலான 57 பேர்களின் சைன் போர்டுகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

2008 முதல், அமெரிக்காவில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அதிபர் தேர்தல் முடிவுறும்போது, இந்தக் கண்காட்சியைத் தொடங்குவார் நினா. இந்த வருடத்தின் வரவு, ஹிலரி.

நவம்பர் 13-ம் தேதியோடு நிறைவடைந்துள்ளது இந்தக் கண்காட்சி. அடுத்த தேர்தலில் வேறோர் இடத்தில் இதை நடத்த உள்ளார் நினா.

தோற்றவர்களையும் கொண்டாடும் மனம் நினாவுக்கு வாய்த்திருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

30 வினாடிகளில் உங்கள் கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்படலாம்..!?

 

poisontap2%201_17359.jpg

சேமி கம்கர் என்ற அமெரிக்கர், 30 வினாடிகளுக்குள் கம்ப்யூட்டரை ஹேக் செய்யும்படியான Poison tap என்ற  பொருளை கண்டுபிடித்துள்ளார். எப்படிப்பட்ட கடவுச்சோல் வைத்து கம்ப்யூட்டரை பாதுகாப்பாக வைத்திருந்தாலும், இந்த ஹேக் சாத்தியம் என்று கூறப்படுகிறது. இதன் விலை 5 டாலர்கள். இந்திய மதிப்பில் 340 ரூபாய் மட்டும் தான்.

சேமியின் இந்த Poison tap, இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள் மற்றும் ஐந்து டாலர் விலையுடைய Raspberry Pi Zero என்ற வன்பொருள் மட்டும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Poison tap-ஐ கம்ப்யூட்டருடன் இணைத்தாலே போதும், 30 விநாடிகளில் கடவுச்சொல்லை கடந்த கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்பட்டு விடுமாம்.

vikatan

  • தொடங்கியவர்

இவ்வாண்டின் சர்வதேச வார்த்தை எது தெரியுமா..?

 

donald-trump%20400_14192.jpg

ஆக்ஸ்போர்ட் அகராதி இந்த ஆண்டுக்கான சர்வதேச வார்த்தையாக 'Post-truth'-யை தேர்ந்தெடுத்துள்ளது. 'உண்மைக்குப் பின்' என்று இந்த வார்த்தையை மொழிப்பெயர்க்கலாம். இந்த வார்த்தைக்கான அர்த்தமாக ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி,'பொது கருத்து என்பது உண்மைகளை கடந்தும், தனிப்பட்ட உணர்வுகளை மற்றும் நம்பிக்கைகள் சார்ந்து உருவாக்குவதில் அங்கம் வகிப்பது' என்று விவரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி அவ்வாண்டுக்கான வார்த்தையை வெளியிடும். ஆக்ஸ்ஃபோர்டின் அமெரிக்க பதிப்பும், பிரிட்டன் பதிப்பும் சில நேரங்களில் வெவ்வேறு வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும்.

ஆனால், இந்த ஆண்டு 'போஸ்ட் ட்ரூத்' என்ற வார்த்தையைத் தான் இரண்டு பதிப்புகளும் தேர்ந்தெடுத்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற விஷயங்களால், இந்த வார்த்தை பயன்பாடு உலக அளவில் 2000 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி.

vikatan

  • தொடங்கியவர்

அதிகாரத்தை விரும்புபவர் சமாதானத்தை விரும்பார்
 
 

article_1479360612-fyghjg.jpgபோருக்கான ஆயுதங்களை வாங்குவதனாலேயே பல சராசரி பணபலம் உள்ள நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் இன்று பிச்சைக்கார நிலைக்கு வந்துவிட்டன.  

ஆனாலும் வீம்பு மட்டும் இந்த நாடுகளுக்குக் குறையவில்லை. வல்லரசு நாடுகளுக்கு நாங்கள் என்ன குறைந்தவர்களா? எவருக்கும் நாம் பயப்படமாட்டோம், என்று வேறு கூறி,  தமது நாட்டு மக்களைத் திருப்திப்படுத்திக் கொள்கின்றன. இது வேடிக்கையாகத் தெரியவில்லையா? 

தாங்கள், இதனால் வலிய நாடுகளிடம் கடன்பட்டே அடிமையாகும் உண்மையை எதற்காக ஒத்துக்கொள்ள மறுக்கின்றன? 

அரசியல் என்னும் குட்டையில் பொய்யுரை புனைந்து, அப்பாவி மக்களை ஏமாற்றுவதை மக்கள் உணர்வதாயும் இல்லை. அதிகாரத்தை விரும்புபவர் சமாதானத்தை விரும்பமாட்டார்கள். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த வெள்ளிக்கிழமையை யாருக்கு டெடிகேட் பண்ணப் போறீங்க? #MorningMotivation #FridayFeeling

 

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை என்றாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், விடுமுறை தினம் அருகில் என்பதே முதன்மையாக இருக்கும். பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு விடுமுறை தினங்களில் நண்பர்களோடு கூடிக் கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். அலுவலகம் செல்வோருக்கு ‘அப்பாடா... ரெண்டு நாள் (அ) ஒருநாள் வீட்ல ஹாயா இருக்கலாம்’ என்று எண்ணம் இருக்கும். ஆனால் எந்த வெள்ளிக்கிழமையையாவது யாருக்காவது டெடிகேட் செய்ததுண்டா நீங்கள்?
அதென்ன சம்பிரதாயம் என்கிறீர்களா? சொல்கிறேன்.

ஒரு வாரத் துவக்கத்தில், மனது உற்சாகமாய் உணரும்போது இந்த வாரத்தில் இதை இதை செய்வேன் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதையெல்லாம் செய்தீர்களா.. இல்லையா என்று எந்த வாரமாவது அலசியிருக்கிறீர்களா? ஆம் என்றால்.. சபாஷ்.. நீங்கள் அல்ரெடி லீடர். இல்லையென்றால்.. டோண்ட் வொர்ரி.. இதோ சில டிப்ஸ்.

ஒரு பேப்பரையும் பேனாவையும்.. சரி விடுங்கள்.. சிஸ்டத்தில் புதிய Blank Document ஒன்றை திறந்துகொள்ளுங்கள். இந்த வாரத்தில் நீங்கள் எதெதற்கெல்லாம் பாராட்டு வாங்கினீர்கள் என்று குட்டி லிஸ்ட் ஒன்று போடுங்கள். ரொம்ப சின்ன விஷயமாக இருக்கலாம்... பெரியதாகவும் இருக்கலாம்.  வாய் வார்த்தையாக இல்லாமல் செய்கை மூலமாகவும் அந்தப் பாராட்டு இருக்கலாம்.  சில உதாரணங்கள் பார்ப்போமா?

1. ப்ளூ கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸும் எனக்கு நன்றாக இருப்பதாக வினோத் சொன்னான். 

2 ஃபைலை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்ததாக மீட்டிங்கில் மேனேஜர் என் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

3. மகளுக்கு ஹோம்வொர்க்கில் சந்தேகம் நிவர்த்தி செய்தபோது அவள் கட்டிப்பிடித்து தேங்க்ஸ்பா என்றாள்.

4. ரோட்டில் ஒருவர் குறுக்கே வர, பைக்கை நிறுத்தியபோது அவர் நன்றி சொல்லும் விதமாய் புன்னகைத்துச் சென்றார். 

இப்படி நடந்ததையெல்லாம் மனசுக்குள் ரீவைண்ட் செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது பிரியுங்கள். மேலே உள்ள உதாரணங்களில் இருந்தே பார்க்கலாம்;

நம்பர் 1-ல் நீங்கள் பெர்சனலாக, பெர்சனாலட்டியில் சிறப்பாக இருந்திருக்கிறீர்கள்.

நம்பர் 2-ல்: ஒரு அலுவலக ஊழியராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறீர்கள்.

நம்பர் 3-ல் குடும்பஸ்தராக, குடும்ப உறுப்பினராக நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்கள்.

நம்பர்4-ல் சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக யாரோ ஒருவரால் ஒருநொடி அடையாளம் காணப்பட்டிருக்கிறீர்கள்.

நீங்கள் ஒருவர்... ஒவ்வொரு சூழலிலும் அந்தச் சூழலுக்கு தகுந்த மாதிரி செயல்பட்டு பெயரெடுத்திருக்கிறீர்கள்.
இதில் எந்தப் பாராட்டு உங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது என்று கொஞ்சம் பின்னோக்கிச் சென்று யோசித்துப் பாருங்கள். அந்த விஷயம்தான் உங்களுக்குப் பிடித்த - உங்களின் உள்ளுணர்வு சொல்லும் - நீங்கள். அதற்காக மற்றவை உங்களுக்கு விருப்பமில்லை என்றோ..  தேவையில்லை என்றோ அர்த்தமில்லை. அவை உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். நான்குமே கூடப் பிடித்திருக்கலாம் தப்பில்லை. அப்படி நீங்கள் விரும்பி செய்த, அல்லது செய்து பிறரால் பாராட்டுப் பெற்று நீங்கள் மகிழ்ந்த விஷயத்துக்காக இந்த வெள்ளிக்கிழமை நீங்களே உங்களை தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, இந்த வாரம் செய்யலாம் என்று நினைத்து செய்யாமல் விட்ட விஷயங்களை எழுதுங்கள்.  அடுத்த வாரம் இதை  முடிப்பேன் என்று சபதமெல்லாம் தேவையில்லை. எழுதி முடித்தபிறகு பார்த்தால், தேவையில்லாமல் நாமாக சில விஷயங்களை செய்வதாக கமிட் ஆகிக்கொண்டிருப்போம். அதெல்லாம் வேஸ்ட்.. செய்யவே போவதில்லை... செய்யவும் கூடாது என்று தோன்றும். அதை மனதிலிருந்து CTRL+ALT+DELசெய்யுங்கள். அதன்பிறகு எஞ்சியிருப்பதை அடுத்த வாரம் செய்கிறீர்களா.. இல்லையா என்று சும்மா நினைத்துக் கொள்ளுங்கள்.’கண்டிசனா செய்வேனாக்கும்’ என்றெல்லாம் நிர்பந்தித்துக் கொள்ளாதீர்கள். 


ஓகேவா? Done? இனி என்ன என்கிறீர்களா? இனி என்ன...  திங்கட்கிழமையை உற்சாகமா எதிர்கொள்ளணும்னா...வார இறுதியை எப்படி மாத்தலாம்னு சில யோசனைகள் இருக்கே.. அதுபடி எதாவது பண்ணுங்க. மேல டாகுமெண்ட்ல எழுதினது / டைப்பினதை சும்மா சேமிச்சு வெச்சு அடுத்த வெள்ளி எடுத்துப் பார்த்துக்கோங்க.

விஷயம் என்னன்னா, ரொம்ப சிம்பிள். ரீவைண்ட் பண்ணிப் பார்க்காததால நிறைய விஷயங்களை நாம கவனிக்கறதில்லை. தேவையில்லாம சில கமிட்மெண்ட்கள்ல மாட்டிக்கறது, முடிக்கணும்னு நினைச்சு ஈஸியா முடிக்காம இருக்கற சில விஷயங்கள், நாம சிறப்பா சில செயல்களை செஞ்சிருந்தாலும், அதை நாமளேகூட உணராம இருக்கறது இப்படி.  இந்த மாதிரியான ரீவைண்ட் மெக்கானிசம் பெரிய மாற்றங்களை நிச்சயம் கொண்டுவரும்.  வெள்ளிக்கிழமையின் உற்சாகத்தை அது பன்மடங்கு அதிகரிக்கும்.

ஆக..  இதையெல்லாம் பண்ணினா, இந்த வெள்ளிக்கிழமையை யாருக்கு டெடிகேட் பண்ணணும்னு ஒரு தெளிவு கிடைக்கும். கிடைச்சுதா? யாருக்குன்னு தெரிஞ்சதா?


என்னது.. இவ்ளோ யோசனை சொல்ற எனக்கா? அட.. போங்க பாஸு..  அந்த மாதிரி ரீவைண்ட் லிஸ்ட் போட்டா, உங்களுக்கு  நீங்களே  டெடிகேட் பண்ணிப்பீங்க.  Yes.. You Are The Best! 
 

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

நவம்பர் - 18

 

1421 : நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

 

1477 : இங்கிலாந்தில் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான  "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.

 

851South-Africa-map.jpg1493 : கொலம்பஸ் புவர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாகக் கண்டார்.

 

1626 : புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

 

1803 : ஹெயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது ஹெயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.

 

1863 : டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டார்;. இது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.

 

1883 : கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.

 

1903 : பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

 

1909 : நிக்கரகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.

 

1918 : லத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

 

1926: பிரித்தானிய  இலக்கியவாதி ஜோர்ஜ் பேர்னாட் ஷா, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார். நோபல் பரிசு ஸ்தாபகர் அல்பிரட் நோபல், டைனமைட்டை கண்டுபிடித்தவர் என்பதே இதற்குக் காரணம்.

 

1929 : அத்திலாந்திக் சமுத்திரத்தில்  இடம்பெற்ற 7.2 ரிச்டர் பூகம்பம்  மற்றும் சுனாமி  காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.

 

1943 : இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.

 

1943 : யுக்ரைனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள், ஜேர்மனிய நாஸிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

 

1947 : நியூஸிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 41 பேர் கொல்லப்பட்டனர்.

 

1963 : இலக்கங்களை சுழற்றுவதற்குப் பதிலாக அழுத்தி செயற்படவைக்கும் தொலைபேசி பாவனைக்கு வந்தது.

 

1978 : கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் ஆலயத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.

 

1987 : லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

 

1993 : தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமையளிக்கும் புதிய அரசியலமைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் அங்கீகாரம் அளித்தன.

 

2003 : அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒரு பாலினத் திருமணத்துக்கு தடைவிதிப்பபது அரசியலமைப்புக்கு முரணானது என மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அமெரிக்காவில் முதல் தடவையாக மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

 

2013 : செவ்வாய் கிரகத்தை நோக்கி மாவென் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் ஏவியது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

15138347_1188497724532253_78161271742070

தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகை..
எல்லா ஹீரோக்களினதும் கனவு நாயகி..
பரபரப்புக்களுக்கு குறைவில்லாத கட்டழகி
தொடர்ந்து வரும் வெற்றிப் படங்களின் கதாநாயகி

நயன்தாராவின் பிறந்தநாள்.

Happy Birthday Nayanthara

 

 

 

 

தில் லேடி... ஜாலி கேடி...நயன்தாராவை ஏன் நமக்குப் பிடிக்குது தெரியுமா? #HBDNayanthara

 

நயன்தாரா

நயந்தாரா பர்த்டே ஸ்பெஷல் ஆல்பம்

“கதைகள் நிறைய வரும், அதுல எனக்குப் பிடிச்ச கதையில் தான் நான் நடிப்பேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாட்டாலும் நல்ல கதைன்னா, நிச்சயம் நயன்தாரா அந்த படத்தில் இருப்பாள்”

திரைக்கு வந்த சமயத்தில் நயன்தாரா சொன்ன வார்த்தைகள். இன்றுவரையிலும் பின்பற்றுவதே நயனின் அழகு. யாருக்குத்தான் பாஸ் நயன்தாராவை பிடிக்காமல் இருக்கும். எத்தனை பிரச்னைகள், கிசுகிசுகள் என்று அனைத்தையும் அசால்ட்டாக தாண்டி, சிக்ஸர் அடிக்கும் க்யூட் குயின் நயன்தாரா.  அழகு மட்டுமில்லை, தைரியமும், எடுத்த முடிவில் உறுதியும்தான் 11 வருட திரையுலகில் இன்றும் நம்பர் 1 நடிகை. ரசிகனுக்கு இந்த அளவுக்கு ஏன் நயனை பிடிக்கிறது?

லேடி சூப்பர் ஸ்டார்!

குடும்பம், நண்பர்கள், நடிப்பு என்று ஜாலியாக தன்னுடைய சினிமாவைத் தொடங்கினார் நயன். 2005ல் சரத்குமாருடன் நயன்தாரா நடித்த “ஐயா”,  தமிழ் சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு. அடுத்தப் படமே, ரஜினியுடன் சந்திரமுகி, தெறி லெவல் ஹிட். கஜினியில் இரண்டாவது நாயகியாக நடித்தார். விஜய்யின் சிவகாசியில் குத்துப்பாட்டுக்கு நடனம் என நயனுக்கு தமிழில்  மார்கெட் குறைகிறது. அந்த நேரத்தில் இவரை இரண்டு புயல் தொரத்தியடிக்கிறது. முதலில், வல்லவனில் சிம்புவுடன் கிசுகிசு. அதிலிருந்து மீண்டுவரும் நயன், தனுஷின் யாரடி நீ மோகினி, பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு படத்திலும் நடிக்கிறார். அந்த சமயத்தில் மீண்டும் காதல், அதனால் இந்துவாக மதமாற்றம், என்று பல பிரச்னைகள். இதற்கு நடுவே படங்களும் சரிவர அமையாத நிலை. இவற்றையெல்லாம் உடைத்தெறிந்து, ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டுவந்த நயனுக்கு கைகொடுத்த படங்கள்தான் அஜித்துடன் ஆரம்பம், ஆர்யாவுடன் ராஜா ராணி.  நடிப்பு வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருந்தவர், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைக்காக அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றெல்லாம் குழப்பிக்கொள்ள மாட்டார். 11 வருட திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். எந்த பிரச்னை வந்தாலும் வருடத்துக்கு ஒரு படமாவது நடித்துவிடும் போல்ட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.  

எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர் நயன்! 

மலையாளிப் பொண்ணு, அப்பா விமானப்படையில் அதிகாரியாக இருந்ததால் வட இந்தியாவில் தான் படித்து வளர்ந்தார். சினிமாவில் சாதிக்க வேண்டும், நடிகையாகவேண்டும் என்ற கனவுகளெல்லாம் நயனுக்கு ஆரம்பத்தில் கிடையாது. கல்லூரி படிக்கும்போது விளையாட்டாக நடிக்கலாம் என்று முயற்சிக்கிறார். 2003ல் ஜெயராம் ஜோடியாக, தாய்மொழியான மலையாளத்தில் முதல் படம்  “மனசினகாரே”. இப்படத்தில் நடிக்கவருவதற்கு முன்பு வரையிலும் ஷூட்டிங் ஸ்பாட் கூட பார்த்ததில்லை.  முதல் நாள், முதல் காட்சி... அன்றிலிருந்து இன்று வரை நடிப்புக்காக எந்தவித சிரமமும் கொண்டதில்லை.  தாவணி முதல் ஆக்‌ஷன் வரை எந்த கேரக்டர் என்றாலும் அசால்டாக நடிப்பது நயன் ஸ்டைல். 

Nayan%201_23088.jpg

பாசக்காரி! 

ஒருவரைப் பிடித்துவிட்டால், அவருக்காக எதையும் செய்வது நயனின் குணம். நயனுக்கு சினிமாவில் எக்கச்சக்க நண்பர்கள், எந்த நேரத்தில் உதவியென்றாலும் மறுக்காமல் செய்பவர்.  மேக்கப் ஆர்டிஸ்டையே தங்கமாக பார்த்துக்கொள்ளும் பாசக்காரி நயன். யாரையும் எளிதில் உதாசினப்படுத்தமாட்டார். ஓவர் சீன்னெல்லாம் இல்லாமல், படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், எல்லோரிடமும் ஜாலியாக பேசுவதே நயனுக்கு பிடிக்கும். ஆனால் ஒருவரை வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால், அவ்வளவு தான். திரும்பிப் பார்க்க மாட்டார். 

நடிப்பில் நயனின் பார்முலா! 

ஒரு காலத்தில் நயனிடம் கதைச்சொல்லி, அவரை நடிக்க வைப்பது சிரமம். பல பெரிய இயக்குநர்கள் வரிசையில் நின்ற காலம். ஆனால் இப்பொழுதெல்லாம், கதை பிடித்திருந்தால் அறிமுக இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க நயன் ரெடி.  அதுமட்டுமில்லை, லேடி சூப்பர் ஸ்டாராக பதவியேற்றாகிவிட்டது, இனி சின்ன நடிகர்களுடன் நடிக்கமாட்டேன் என்று பந்தா பேர்வழியும் கிடையாது. கதை பிடித்திருந்தால், யாருடனும் நடிப்பதுதான் நயனின் பார்முலா.  ஒவ்வொருமுறையும் வதந்தியில் சிக்கி மீளும்போதும், அவரின் சம்பளமும் உயர்ந்தது. கோடிகளில் சம்பளம் வாங்கிவந்தாலும், பட்ஜெட்டுக்கு ஏற்ற சம்பளத்தில் கரிசனம் காட்டுவார். குறிப்பாக மலையாளத்தில் நடிக்கும்போது லட்சங்களிலேயே சம்பளமும் பெறுவார்.  ஆறு படங்கள் வீதம், இந்த இரண்டு வருடத்தில் 12 படங்கள் நடித்துவிட்டார். இவர் நடித்தாலே ஹிட் தான் என்பதால் சினிமா வட்டாரத்தில் லக்கி கேர்ளாக வலம் வருகிறார்.  

ரசிகர்களின் குயின்! 

ஒவ்வொரு படத்துக்கும், தன்னுடைய நடிப்பு ஸ்டைலை மாற்றிக்கொண்டே இருப்பது நயன் ப்ளஸ். ஒரே நேர்கோட்டில் நடிக்காமல், ஜாலியாக ஒரு படமென்றால் படுசீரியஸாக மற்றொரு படம் என வெரைட்டியாக நடிப்பவர். சுடிதார் முதல் பிகினி வரை எந்த கேரக்டர் என்றாலும் ரசிகர்களை அரசடிக்கும் கில்லி.  என்னதான் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், எவ்வளவு தான் கிசுகிசுக்களில் சிக்கினாலும் நயன், ரசிகர்களின் மனதில் என்றுமே குயின்தான். பேச்சிலும், நடிப்பிலும், குணத்திலும் இனிமையாவர். தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகை. இவரின் வாழ்க்கை, மற்ற நடிகைகளுக்கு நிச்சயம் இன்ஸ்பெரேஷன் தான்.  அழகு மட்டுமல்ல, மனதிலும் இளமையான நயனிடம் ரசிகர்கள் கேட்பது ஒன்று மட்டுமே... இன்னும் நிறைய படங்கள்... அவ்வளவுதான் காதும்மா.... 

பிறந்த நாள் வாழ்த்துகள் நயன்!

vikatan

  • தொடங்கியவர்

பணம்- சில படுத்தல்கள் | வாட்ஸ்அப் வறுவல்

3_3083465f.jpg

1_3083467a.jpg

 

2_3083466a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

மிக்கி மவுஸ் வந்த கதை

 

 
disney_3081994f.jpg
 
 

நவம்பர் 18: ‘மிக்கி மவுஸ்’ உருவான தினம்

காலையில பள்ளிக்கூடம் போவேன். சாயங்காலம் கடற்கரைக்கு வந்திடுவேன். உங்கக்கூட ஆமை முட்டைகள சேகரிப்பேன். ஜனங்க தூக்கி வீசின தண்ணி பாக்கெட்களையும் சேகரிச்சு குப்பை கூடத்துல கொண்டுபோய்க் கொட்டுவேன்”.

டென்மார்க் நாட்டில் பொது நூலகம் ஏதாவது ஒன்றில் உறுப்பினரானால், அந்த அடையாள அட்டையைக் காட்டி அந்த நாட்டின் எந்தப் பொது நூலகத்திலிருந்தும் புத்தகம் எடுக்கலாம்.

கடலில் வாழும் விலங்குகளுக்கு உடம்பு முடியாமல் போனால் யார் வைத்தியம் பார்ப்பது? அங்கும் சிகிச்சைக்குக் கவலையில்லை. இதற்காகவே ஆழ்கடலுக்குள் சில மீன்கள் ‘கிளினிக் ஸ்டேஷன்’களைத் திறந்து வைத்துக்கொண்டு வைத்தியம் பார்க்கின்றன.

மிக்கி மவுஸ் வந்த கதை!

டோரிமான், சின்சான், ஸ்கூபி டூ, ஸ்நோ வைட், டாம் அண்டு ஜெரி, பென் டென், டோரா, மொட்லு பொட்லு என்று இன்றைய குழந்தைகளைக் குஷிப்படுத்தும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ஏராளம். உங்கள் தாத்தா, பாட்டி குழந்தைகளாக இருந்த காலத்துக்கு முன்பிருந்தே குழந்தைகள் உலகின் முடிசூடா மன்னனாக இருப்பது ‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரம்.

மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யார் தெரியுமா? வால்ட் டிஸ்னி. இவரது குழந்தைப் பருவம் ரொம்ப சோகமானது. டிஸ்னியின் தந்தை ரொம்ப கண்டிப்பானவர். கோபக்காரரும்கூட. டிஸ்னி தனது 10 வயதில் வீடுவீடாக பேப்பர் போடும் பையனாக வேலைக்குச் சென்று, சம்பாதித்ததை அப்பாவிடம் கொடுப்பார். படங்கள் வரைவதென்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், அவரது அம்மாவிடம் அனுமதி வாங்கி நுண்கலைப் பயிற்சி வகுப்புகளுக்குத் தினமும் சாயங்கால வேளையில் போய்வந்தார். அப்போதுதான் அவருக்குள் ஓவியம், புகைப்படக் கலை, கார்ட்டூன்கள் மீது ஆர்வத்தை விதைத்தது.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, புதுமாதிரியான கார்ட்டூன்களை வரைவது தொடர்பான பணிகளில் டிஸ்னி ஈடுபட்டார். ஆனால் அவர் தொட்டது எல்லாமே தோல்வியானது. பல இடங்களில் டிஸ்னியின் திறமையைப் புரிந்துகொள்ளாமல், ‘உனக்குச் சரியாகப் படம் வரையத் தெரியல’ என்று வெளியே அனுப்பினார்கள். ஆனால், டிஸ்னி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை. அவர் முதலில் உருவாக்கியது ‘ஆஸ்வால்ட்’ என்ற முயல் கார்ட்டூன் கதாபாத்திரம். அப்போதைய சூழ்நிலையில் டிஸ்னி உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு அவரே உரிமை கொண்டாட முடியாமல் போனது.

எனவே வேறு ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அந்தக் கதாபாத்திரம் உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்ததாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். இதற்காகப் பல வருடங்கள் ஏராளமான உருவங்களை வரைந்து பார்த்தார்.

வழக்கமாக டிஸ்னி அறையில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு எலி உற்சாகமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் அந்த எலி செய்யும் சிறிய சேட்டைகளை டிஸ்னி வேடிக்கை பார்ப்பார். தனது உணவில் அந்த எலிக்கும் கொஞ்சம் கொடுப்பார். தனக்குப் பிடித்த அந்த எலியைக் கார்ட்டூனாக வரைந்து அதற்கு மனிதக் குணாதிசயங்களைப் புகுத்திக் கற்பனை செய்து பார்த்தார் டிஸ்னி. இப்படித்தான், வால்ட் டிஸ்னி தனது நண்பர் ஐவர்க்ஸ் உடன் சேர்ந்து ‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரத்தை உருவாக்கினார். அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘மார்டைமர் மவுஸ்’. குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்பெயர் மிக்கி மவுஸ் எனப் பின்னர் மாறியது.

மிக்கி மவுஸை மையமாக்கி எடுத்த இரண்டு அனிமேஷன் குறும்படங்களை யாரும் விநியோகிக்க முன்வரவில்லை. மூன்றாவதாக வெளியான ‘ஸ்டீம் போட் வில்லீ’யைக் குழந்தைகள் மட்டுமன்றிப் பெரியவர்களும் ரசித்து வரவேற்றார்கள். இந்தப் படம் வெளியான 1928, நவம்பர் 18-ம் நாளை மிக்கி மவுஸ் பிறந்த தினமாகக் கார்ட்டூன் ரசிகர்கள் உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

அனிமேஷன் படங்கள் வண்ண மயமானதும், மஞ்சள் காலணி, சிவப்பு கால்சட்டை, வெள்ளை கையுறையுடன் மிக்கி மவுஸ் மேற்கொள்ளும் சேட்டைகளும் சாகசங்களும் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. ஆரம்ப அனிமேஷன் படங்களில் மிக்கி மவுஸுக்குக் குரல் கொடுத்தவர் வால்ட் டிஸ்னி!. மிக்கி மவுஸ் தோழியாக மின்னி மவுஸ், தோழனாக டொனால்ட் வாத்து, காமெடிக்குக் கூஃபி நாய், வில்லனாக பீட் என்ற பூனை எனப் பல்வேறு கதாபாத்திரங்கள் உருவாக்கி, குழந்தைகளை மகிழ்வித்தன. இவர்கள் அனைவரும் அமெரிக்க நாட்டில் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்ட கலிசோட்டா மாகாணம் மவுஸ் டவுனில் வசிப்பதாக, டிஸ்னி தனது அனிமேஷன் படங்களை உருவாக்கினார்.

மவுஸ் டவுன் மற்றும் அதில் வாழும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே குழந்தைகள் நம்பினர். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் கேளிக்கைகளும் நிரம்பிய கனவு ஊரை நிஜமாக்க டிஸ்னி விரும்பினார். அப்படித்தான் அமெரிக்காவில் ‘டிஸ்னி லேண்ட்’ என்ற பிரபலக் கேளிக்கைப் பூங்கா உருவானது. அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகள் வந்தன. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.

மிக்கி மவுஸைப் பார்க்கும்போதெல்லாம் குஷியாகும் குழந்தைகளுக்கு, அதனை உருவாக்கிய வால்ட் டிஸ்னியும், தோல்விகளைக் கண்டு ஒதுங்காத அவரது விடாமுயற்சியும் ஞாபகத்துக்கு வரவேண்டும் அல்லவா?

tamil.thehindu

  • தொடங்கியவர்

15110995_1188507057864653_31793664073237

இலங்கை அணியின் உப தலைவரும் இளம் விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரரும்,
தற்போதைய கலக்கும் நம்பிக்கை நட்சத்திரமுமான துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமாலின் பிறந்தநாள்.

Happy Birthday Dinesh Chandimal

  • தொடங்கியவர்

 

உலகின் ரகசியமான இடங்களில் ஒன்று : காணொளி

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜப்பானில் மனித முகங்களைப் போன்ற பாறைகளைக் கொண்ட அருங்காட்சியகம் (Photos)

 

 

ஜப்பானில் மனித முகங்களைப் போன்ற பாறைகளைக் கொண்ட அருங்காட்சியகம் (Photos)

ஜப்பானின் Chichibu நகரில் அமைந்துள்ள பாறைகள் அருங்காட்சியகத்திற்கு தனிச்சிறப்புண்டு. காரணம், இங்குள்ள 1700 பாறைகள் மனிதர்களின் முகங்களை ஒத்திருப்பது தான்.

ஏனைய பாறைகள் மிக்கி மவுஸ் உள்ளிட்ட கார்ட்டூன்களின் முக அமைப்பை ஒத்திருக்கின்றன.

Shozo Hayama என்பவர் 50 வருடங்களாக இந்த பாறை உருவங்களை சேகரித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததன் பின்னர் அவரது மனைவி Yoshiko Hayama வினால் இந்த அருங்காட்சியகம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இயற்கையை விஞ்சிய ஓவியர்கள் உலகில் இல்லை என்பதே Shozo Hayama வின் நம்பிக்கையாக இருந்தது.

அதனடிப்படையிலேயே, அவர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.

இங்கு சாதாரண மனிதர்களின் முகங்களில் இருந்து இசைக்கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி, முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்கைல் கார்பச்சேவ் ஆகிய பிரபலங்களின் முகங்களை ஒத்த பாறைகள் வரை காணப்படுகின்றன.rockface-1 rockface-2 rockface-3 rockface-4 rockface-5 rockface-6 rockface-7 rockface-8 rockface-10

rockface-9

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

 

சுடச்சுட வண்டுப் பொறியல்
------------------------------------------------
மியான்மாரில் வண்டுப் பொறியலை சுவைத்தார் பிபிசியின் செய்தியாளர்.
அது நன்றாகவே உள்ளது என்றும், இப்படியான சவாலிலும் ஒரு சுவையுள்ளது என்கிறார் ஜோனா ஃபிஷர்.

  • தொடங்கியவர்

கூரை வீடு இப்போ கீரை வீடு! அசத்தும் விருதுநகர் பால்சாமி!

 

கூரை வீடு

மாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பதைத்தான் பெரும்பாலும் பார்த்திருப்போம். கூரைவீட்டின் மேல் கீரை வளர்ப்பவரை பார்த்திருப்போமா?... ஆம், வீட்டின் தகரக்கூரைக்கு மேல் சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் 'சிறுகுறிஞ்சான்' கீரையை படர விட்டு வளர்த்து வருகிறார் கீரை விவசாயி பால்சாமி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா அத்திகுளம் கிராமத்தில் 'கீரை வீடு' எங்கிருக்கிறது? என யாரைக்கேட்டாலும் வழிகாட்டுவார்கள். வீட்டுக்கூரையின் மேல் நின்று சிறுகுறிஞ்சான்கீரை இலைகளை பறித்துக் கொண்டிருந்த பால்சாமியை சந்தித்து பேசினோம்.

Paul%20samy%20-%20keerai%20veedu%20%284%

 "20 வருஷமா கீரை விவசாயம் செய்துட்டு வர்றேன். ஆரம்பத்துல ரசாயன உரத்தை பயன்படுத்தான் கீரை விவசாயம் செய்துட்டு இருந்தேன். இப்போ நாலுவருஷமாத்தான் இயற்கை முறையில அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கன்னி, சிறுகீரைனு சாகுபடி செய்துட்டு இருக்கேன். வீட்டுக்கு தகரத்தால கூரை போட்டிருக்கேன். தகரத்தை மறைக்க ஏதாவது கொடி மாதிரி படரவிட்டா அழகா இருக்கும்னு தோணுச்சு. அதனால ஒரு நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து இந்த கீரையை வாங்கிட்டு வந்து நட்டேன். ஒரு வருஷத்துலயே வேகமாகப் படர ஆரம்பிச்சது. எங்கப் பகுதியில உள்ள ஒரு பாட்டியம்மா, "இது என்ன கொடி, வீடு கூரையில படர விட்டுருக்க"னு கேட்டாங்க. தெரியலை பாட்டி கூரையை மறைக்க அழகுக்காக படர விட்டிருக்கேன்னு சொன்னேன். அதுக்கு அவங்க "இது ஒரு மூலிகைக் கீரைடா, இதுக்கு சிறு குறிஞ்சான்னு பெயர். அயகம், அமுதடிசுப்பம், ஆதிகம், குரித்தைன்னு வேற பெயர்களும் இருக்கு. இது சர்க்கரை நோயைக் குணப்படுத்துற சர்க்கரைக்கொல்லி"னு விவரமாச் சொன்னாங்க. இவ்வளவு நாள் மூலிகையை அழகுச்செடியா நினைச்சுட்டோமேன்னு சிறு குறிஞ்சான் கீரையின் மருத்துவகுணம் பற்றி முழுமையாத் தெரிஞ்சுக்கிட்டேன்" என்றவர் தொடர்ந்தார்.

Paul%20samy%20-%20keerai%20veedu%20%2811

யார் வேண்டுமானாலும் பறித்துக்கொள்லலாம்:

    "இதை பயிரிட்டு 10 வருஷம் ஆச்சு. விவசாய நிலங்கள்ல, வேலி ஓரங்கள்ல தானாகவே இந்தக்கொடி முளைச்சு படர்ந்து இருக்கும். அதை களைன்னு நினைச்சு பிடுங்கிப் போட்டுருவாங்க. இதோட இலை சிறியதாகவும், முனை கூர்மையாகவும் பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி இலை போலவே இருக்கும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்துலயும், காய்கள் காய்ந்ததும் பஞ்சு மாதிரி நார்கள் வெளிவந்து பறந்து தானாகவே முளைச்சுடும். இலை, தண்டு, வேர் எல்லாமே மருத்துவ குணமுடையதுதான். முக்கியமா உடம்புல இருக்குற சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துறதுதான் இந்த இலையோட முக்கிய சிறப்பு. இதன் ஒரு இலையை வாயில் போட்டு மென்னுட்டு இனிப்பா எதைச் சாப்பிட்டாலும், இனிப்புத்தன்மையை உணர முடியாது. என்றவர் நிறைவாக, "மாதம் ஒரு தடவை அடியுரமா மண் புழு உரம் வச்சிடுவேன். ஊர் மக்கள் பறிச்சுட்டுப் போறதுனால, ஏதும் பூச்சிகள் தாக்காமால் இருக்குறதுக்காக வாரம் ஒரு முறை இஞ்சி-பூண்டுக் கரைசலையும், வேப்பிலைக் கசாயத்தையும் 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மில்லி என்ற கணக்குல சுழற்சி முறை கூரை மேல தெளிச்சுட்டு வர்றேன். என்னோட அனுமதி இல்லாம யாரு வேணுனாலும் இந்தக் கீரையை கூரை மேல ஏறி பறிச்சுக்கலாம். ஒரு நோயைக் கட்டுப்படுத்துற மூலிகையை வச்சு வியாபாரம் செஞ்சா அதை விடக் கொடுமை எதுவுமில்லை. கீரைக்காரர் வீடுன்னு அடையாளம் சொன்ன என் 'கூரை வீடு இப்போ கீரை வீடா' மாறிடுச்சு’’ என்றார்.

Paul%20samy%20-%20keerai%20veedu%20%281%

சிறுகுறிஞ்சானின் மருத்துவ குணம்:

மருத்துவ குணம் பற்றி பேசிய பால்சாமி, "இந்த இலையைப் பறித்து நிழலில் காயவச்சு பொடியாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் போட்டு குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். இந்தச் சிறுகுறிஞ்சான் கீரையை தண்ணீரில் அலசிவிட்டு பொடியாக நறுக்கி வெங்காயம் சேர்த்து வதக்கியும் வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வரலாம். உடலில் வரும் பத்து, படை, தடிப்புக்கும், இந்த இலையை அரைச்சுப் பூசி 5 நாட்கள் தொடர்ந்து இந்த இலையைக் கஷாயமாகக் குடிச்சு வந்தாலே சரியாயிடும். இந்த இலை கசப்புச் சுவையுடையதால் அதிகம் யாடும் சாப்பிட மாட்டாங்க. சர்க்கரையை நோயைக் கட்டுப்படுத்துறதோட விஷக்கடி, தோல்நோய், வயிற்றுப்புண், குடல்புண்ணையும் சரி படுத்துற மூலிகைக் கீரையா இருக்கு. ஒரு வீட்டுல அவசியம் இருக்க வேண்டிய மூலிகைகளான கண்டங்கத்தரி, தூதுவளை, துளசி, ஓமவள்ளி மூலிகைங்ககூட இந்தக் சிறுகுறிஞ்சான் கொடியும் கண்டிப்பா இருக்கணும்" என்றார்.

- இ.கார்த்திகேயன்.

.vikatan

  • தொடங்கியவர்

நட்புக்கு அடையாளம் சிவாவும் சிதம்பரமும்! #கப்பலோட்டியதமிழர்

 

கப்பல்

பண நோட்டுகளை மாற்ற மக்கள் அலை மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தனது மகளுக்கு 200 கோடிக்கு மேல் செலவழித்து திருமணம் நடத்தும் மனிதர்கள் வசிக்கும் அதே நாட்டில்தான் அந்த மனிதரும் பிறந்தார். பெயர் வ.உ. சிதம்பரம். சுருக்கமாக வ.உ.சி.கப்பல் ஓட்டிய தமிழர் என்றழைக்கப்படுபவர். தூத்தூக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சொந்த ஊர். பாரதியிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.  இருவரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 

வஉசி மிகப் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவர்.  மிகச்சிறந்த படிப்பாளி. வக்கீலுக்கு படித்தவர். எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். கடந்த 1890 முதல் 1900-ம் ஆண்டுகளில் நாட்டில் சுதந்திர வேட்கைத் தீவிரமடைந்த காலக்கட்டம். வஉசி, மராட்டிய வீரர் பாலகங்கதாரத் திலகரை குருவாக ஏற்றார். சென்னையில் ஒரு முறை விவேகானந்தரின் சீடர் ராமகிருஷ்ணரை சந்தித்தார் வஉசி. அப்போது 'நாட்டு சுதந்திரத்துக்கு ஏதாவது செய்யுங்கள் ' என வஉசியிடம் அவர் கோரிக்கை வைத்தார். 

தொடர்ந்து 1905-ம் ஆண்டு காங்கிரசில் இணைத்துக் கொண்ட வஉசி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினார். சுப்ரமணிய பாரதியும் தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல தொழில்களை வஉசி தொடங்கினாலும் சுதேசிக் கப்பல் கம்பெனிதான் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

'பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி' என்பது ஆங்கிலேயருக்கு சொந்தமானது. வஉசி தொடங்கிய கப்பல் நிறுவனத்தின் பெயர் சுதேசிக் கப்பல் கழகம். தொடக்கத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செயயப்பட வேண்டுமென்பது திட்டம். நிதி திரட்ட 40 ஆயிரம் பங்குகள் வெளியிடப்பட்டது. அதன் முகமதிப்பு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆசியாவைச் சேர்ந்த எவரும் பங்குகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்த ஜமீந்தார் பாண்டித்துரை நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பணம் அவ்வளவு எளிதில் திரட்ட முடியவில்லை.  பாரதி  ' இந்தியா' பத்திரிகையில் நிதி திரட்ட தலையங்கம் எழுதினார். ஆனாலும் குறைந்த அளவே நிதி  சேர்ந்திருந்தது. 

ship_12328.jpg

முதலில் சுதேசிக் கப்பல் கம்பெனி கப்பலை வாடகைக்கு எடுத்து தூத்தூக்குடியில் இருந்து கொழும்புக்கு ஓட்டியது. ஆனால் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி கொடுத்த நெருக்கடியில் கப்பலை வாடகைக்கு கொடுத்த நிறுவனம் குத்தகையை ரத்து செய்தது. இது வஉசிக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது. நாடு முழுவதும் சுற்றினார். பங்குகளை விற்று பணத்தை திரட்டும் பணியில் தீவிரமானார். 'ஒன்று கப்பல் வாங்குவேன் அல்லது கடலிலேயே கரைந்து விடுவேன் ' என சூளுரைத்தார். நிதி திரண்டது. தேவையான நிதி சேர்ந்ததும் முதலில் எஸ்.எஸ் காலியோ கப்பலை வாங்கினார். கப்பல் தூத்தூக்குடி வந்தடைந்ததும் பெரிய விழா எடுக்கப்பட்டது. காலியோவை தனது முதல் பிள்ளை என்பார் வஉசி. அடுத்து பிரான்சில் இருந்து லாவோ வந்தது. 

இரு கப்பல்களும் பிரிட்டன் கப்பல் கம்பெனிக்கு எதிராக தூத்தூக்குடியில் இருந்து  கொழும்புவுக்கு ஓடத் தொடங்கின. போட்டி உருவானது. பிரிட்டன் கப்பல் கொழும்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் என்றது.சுதேசிக் கப்பல் 50 பைசாவுக்கு பயணிகளை அழைத்துச் சென்றது. ஆடிப் போனது பிரிட்டன் கப்பல் கம்பெனி. நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் வரை நஷ்டத்தை சந்தித்தது பிரிட்டிஷ் கம்பெனி. தேசப்பற்று மிக்க மக்கள் பிரிட்டிஷ் கப்பல்களை புறக்கணித்ததும் இதற்கு ஒரு காரணம்.

தூத்துக்குடியில் மதுரா கோட்சின் கோரல் மில் இயங்கி வந்தது. இந்த மில்லில் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து வஉசி போராடினார். சிதம்பரத்துடன் சுப்பிரமணிய சிவாவும் சேர்ந்து கொண்டார். சுப்பிரமணியம் சிவா மீதும் பிரிட்டன் அரசு பல வழக்குகளைப் போட்டிருந்தது. சிதம்பரமும் சிவாவும் ஸ்ட்ரைக்கை முன்னின்று நடத்தினர். இந்த ஸ்ட்ரைக் மற்ற ஆங்கிலேய நிறுவனங்களையும் பாதிக்கத் தொடங்கியது. சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த கோபமும் சிதம்பரம் மீது ஆங்கில அரசுக்கு இருந்தது. 

siva_14079.jpg

தூத்துக்குடியில் சிதம்பரமும் சிவாவும் கலகத்தை ஏற்படுத்துவதை அறிந்த ஆங்கிலேயே அரசு சிதம்பரத்தை மடக்க திட்டமிட்டது. திருநெல்வேலிக்கு சிவாவுடன் வருமாறு சிதம்பரத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஞ்ச் துரை கேட்டுக் கொண்டார். பேச்சுவார்த்தைக்கு வந்த சிதம்பரத்திடம் 'இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது போராட்டங்களில் ஈடுபடக் கூடாது' என ஆங்கிலேயே அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. சிதம்பரம் மறுத்தார். உடனடியாக கைது செய்யப்பட்டார். 1908 மார்ச் 12-ம் தேதி சுப்பிரமணிய சிவாவும் சிதம்பரமும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்தூக்குடியில் பெரும் கலவரம் வெடித்தது. வழக்கு நேர்மையாக நடைபெறதாத காரணத்தினால் விசாரணையில் பங்கேற்க வஉசி மறுத்துவிட்டார். முடிவில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 20 ஆண்டுத் தண்டனையும் அடங்கியிருந்தது. முதலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார் . தண்டனை விதிக்கப்பட்டபோது வஉசிக்கு 36 வயதே ஆகியிருந்தது. பின்னர் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மேல் முறையீட்டுக்கு பிறகு தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 

வஉசி சிறைக்கு சென்று விட்டதால், பங்குதாரர்களால் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்த முடியவில்லை. கப்பல்களை விற்க முடிவு செய்தனர். விடுதலையாகி வெளியே வந்தபோது, வஉசியை வரவேற்க அவரது ஆத்ம நண்பர் சுப்பிரமணியம் சிவா இன்னும் சிலர் மட்டுமே சிறைக்கு வந்திருந்தார்கள்.  அவரது முதல் பிள்ளையான எஸ்எஸ் காலியோ யாரை எதிர்த்து கப்பல் ஓட்டினாரோ... அவர்களுக்கே விற்கப்பட்டிருந்தது!.

- இன்று வஉசி நினைவு தினம்

vikatan

  • தொடங்கியவர்

மிக்கிக்கு மவுசு குறைவதே இல்லை! #HBD_MickeyMouse

 

மிக்கி மவுஸ்

ஞ்சள் நிற ஷூ, சிவப்பு கால்சட்டை, வெள்ளை க்ளவுஸ் என வண்ணமயமாக வந்து சேட்டை செய்யும் அழகிய ஹீரோ, உலக குட்டீஸ்களின் உள்ளத்தைக் கவர்ந்த சாகச நாயகன் மிக்கி மவுஸ்.

இந்த ஹீரோவுக்கு வயது 88. ஆனால், நிஜத்தில் எப்போதும் குழந்தைதான். சந்தோஷத்தை வாரி வழங்குவதிலும் இணையற்றவர். குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கியவர், வால்ட் டிஸ்னி.

கோபக்கார அப்பாவுக்கும் அன்பான அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர் டிஸ்னி. சிறு வயதில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்துவந்தார். இவருக்கு படங்கள் வரைவது ரொம்பப் பிடிக்கும்.
அதனால், ஓவியம் கற்றுத் தரும் தனி வகுப்பில் தன்னை சேர்த்துவிடச் சொல்லி அடம்பிடிக்க, அம்மாவும் சேர்த்துவிட்டார். அங்கே, ஓவியத்தோடு, புகைப்படம் எடுக்கவும் கார்ட்டூன்கள் வரையவும்
ஆர்வம் மிகுந்தது. நாளடைவில் கார்ட்டூன் மீது தனி கவனம் குவிந்தது. அவர் வரைந்த புதுமாதிரியான ஓவியங்கள் யாரையும் கவரவில்லை.

MM-2_15355.jpg

அதனால், 'உனக்குச் சரியாகப் படம் வரையத் தெரியவில்லை' என்று பலரும் சொன்னார்கள். 'இனி நான் வரையப்போகும் கார்ட்டூன் கதாபாத்திரம், உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும்' என மனதில் சபதம் கொண்டார். அதற்காக பலவிதமான உருவங்களை வரைந்தும் மனம் நிறைவுறாமல் அவற்றையெல்லாம் ஓரம்கட்டிவிட்டார்.

அப்போது, தன் அறையில் அங்கும் இங்குமாக தாவித் திரியும் எலி, அவரது கவனத்துக்கு வந்தது. இதற்குமுன் அந்த எலியின் சேட்டைகளைப் பார்த்து ரசித்திருக்கிறார். தான் சாப்பிடும்போதெல்லாம் அதற்கும் கொஞ்சம் கொடுப்பார். அதையே கார்ட்டூனாக வரைந்தார். தனது நண்பர், ஐவர்க்ஸுடன் சேர்ந்து 'மிக்கி மவுஸ்' கேரக்டரை உருவாக்கினார். அதற்குள் மனிதர்களின் குணங்களைப் புகுத்தினார்.
அவர் ஓவியங்களை யாரும் விரும்பாததைப் போலவே, அனிமேஷன் குறும்படங்களும் செல்லுபடியாகவில்லை. எந்த இழப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் மனம் தளராத டிஸ்னி, மூன்றாவதாக
 'ஸ்டீம் போட் வில்லீ' என்ற படத்தை உருவாக்கினார். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசித்து மகிழ்ந்தார்கள். உலகம் எங்கும் வரவேற்கப்பட்டது. படம் வெற்றியடைந்த 1928, நவம்பர் 18-ம் நாளே மிக்கி மவுஸ் பிறந்த நாளானது. உலகமெங்கும் உள்ள கார்ட்டூன் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.

waldisney_vc4_10308.jpg

மிக்கி மவுஸ் கேரக்டருக்கு ஆரம்பத்தில் வால்ட் டிஸ்னியே குரல் கொடுத்துவந்தார். படங்களில் மிக்கியின் நண்பர்களாக வந்து ரசிகர்களால் மறக்கமுடியாத இடத்தைப் பிடித்தவர்கள்...
முதல் திரைப்படத்திலிருந்து தோழியாக வந்த மின்னி மவுஸ், கோபக்கார தோழனாக வந்தாலும் ரசிகர்களை சிரிக்கவைக்கும் டொனால்ட் டக், ஒரு வேலையை உருப்படியாய்ச் செய்யாமல்
சொதப்பும் நகைச்சுவைக்காரர் கூஃபி, சுவாரஸ்யமான சேட்டைகள் செய்யும் வளர்ப்பு நாய் புளோட்டோ. வில்லனாக வரும் 'பீட்' என்ற பூனை கதாபாத்திரமும் ரசிகர்களால் மறக்கமுடியாதது.   

படங்களில் வரும் கதாபாத்திரங்களை குழந்தைகள் நிஜம் என்றே நம்பினார்கள். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் சந்தோஷங்களும் நிறைந்த கற்பனையான ஊரை நிஜமாக்க வேண்டும்
என டிஸ்னி விரும்பினார். அப்படித்தான் அமெரிக்காவில் 'டிஸ்னி லேண்ட்' என்ற பிரபல பொழுதுபோக்குப் பூங்கா உருவானது. அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகளாக உருவாகின. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.

மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை நாயகன் வால்ட் டிஸ்னி, ''தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.'' என்ற வாழ்க்கை அனுபவத்தைத் தரக் காரணமாக இருந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்!

vikatan

  • தொடங்கியவர்

p26a.jpg

ன்ட்ரி மியூஸிக் அசோசியேஷன் சார்பில் ஆண்டுதோறும் இசைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். செலிபிரிட்டிகள் மின்ன மின்ன டிரெஸ் போட்டு ரெட் கார்பெட்டில் நடந்து வருவதைப் பார்க்க செமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பாடகியான கசாடி போப் போட்டுவந்த டிரெஸ்ஸுக்குக் கண்டனங்கள் குவிகின்றன. ‘என்ன டிசைன் இது? இந்த வருஷத்தோட மோசமான காஸ்ட்யூம் இதுதான்’ எனக் கழுவி ஊற்றுகிறார்கள் ரசிகப் பெருமக்கள்.# ஆனாலும் பேசுவோம்!

p26b.jpg

ஹாலிவுட் நடிகை ரீஸ் விதர்ஸ்பூனுக்கு இந்த ஆண்டு பல்லேலக்கா ஆண்டு. தொடர்ச்சியாய்ப் படங்கள், மினி சீரிஸ் என கரன்சி கல்லா கட்டுகிறார். மேலும் தன் ஆடை பிசினஸையும் சூப்பராக நடத்தி வருகிறார். ‘இப்படி பேயா உழைக்கலைன்னா என்ன... பசங்க மிஸ் பண்ணுவாங்களே உன்னை’ என நண்பர்கள் கேட்டால், ‘இருக்கப் போறது கொஞ்சநாள். முடிஞ்ச அளவுக்கு கமிட்மென்ட்டோட இருப்போமே. பசங்க அதைப் பார்த்துக் கத்துக்குவாங்க’ எனத் தத்துவம் பேசி வாயடைக்கிறாராம்.# உதாரணப் பெண்மணி!

p26c.jpg

‘நீ சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் காணாமல் போவாய்’ என என்னிடம் நிறைய பேர் எச்சரித்தார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. இப்படி எந்த ஆணிடமும் சொல்வதில்லை. பார்க்கலாம் இன்னும் எத்தனை நாட்களுக்குப் பெண்களை இப்படி நடத்துகிறார்கள் என’ - இப்படிக் காட்டமாய் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் ஹாலிவுட் நடிகை மிலா குனிஸ். தன் கணவரின் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில்தான் இப்படிப் போட்டு உடைத்திருக்கிறார் அம்மணி.# கூல்மா!

p26d.jpg

ர்தாஷியன் குடும்பத்தில் இருந்து இந்த வாரம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது கெண்டால் ஜென்னர். புதிதாக இப்போதுதான் வீடு வாங்கிப் பால் காய்ச்சினார் கெண்டால். `மேட்டர் சப்புனு முடியுதே' என ரசிகர்கள் யோசிக்க, பற்ற வைத்துவிட்டார் கெண்டால். கொசகொசவென புது மாதிரி டிசைனில் ஜிகுஜிகுவென ஒரு சோபா வாங்கியிருக்கிறார் கெண்டால். சரி வாங்கிட்டுப் போறாங்க என்கிறீர்களா? அந்த ஒரு சோபாவின் விலை 35 லட்சம். கண்ணைக் கட்டுகிறதாம் ரசிகர்களுக்கு. # சோபா பேபி

vikatan

  • தொடங்கியவர்
சும்மா இருப்பது சௌகரியமல்ல!
 
 

article_1479458626-hnjnkmk.jpgபிறரிடம் கடன்பட்டு வாழ்வது மட்டும் வறுமை நிலை அல்ல! தேவையற்ற விதத்தில் தன்னால் முடிந்த கருமங்களைக் கூட, மற்றவரிடம் எதிர்பார்ப்பதும்கூட வறுமை நிலையினை ஒத்த சமாச்சாரம்தான்.  

இல்லாமையினை வறுமை என்கின்றோம். அப்படியாயின் துணிச்சல் இல்லாமையும் ஒரு வறுமை நிலைதான்.  

இதற்கும் மேலாக எவன் ஒருவன் கல்வி கற்றலில் நாட்டம் இன்றியும் கல்வி என்பதையே அறியாமல் வாழ்கின்றான் என்றால், பணம் இருந்தும் அவன் கல்வியில் வறுமை மிக்கவன் ஆகின்றான்.  

இன்று சகலரும் தங்கள் தங்கள் முயற்சியினால் வாழ வழி இருக்கின்றது. நோய், இயலாமை தவிர்ந்த காரணமின்றிப் பிறரிடம் கடமைப்படுவது சுய கௌரவத்தை இழப்பது போலாகும் அல்லவா? சும்மா இருப்பது சௌகரியமல்ல!    

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

"சாதாரண மனிதர்களால் குருசாமியாக முடியாது"- நம்பியார்சாமியின் வாக்கு! (நம்பியார் நினைவு தின பகிர்வு)

 

நம்பியார் 


வில்லன்...’ என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருபவர் நம்பியார். தமிழ் சினிமாவில் அவருடைய வில்லன் பாத்திரம் வேறு யாராலும் ஈடுசெய்ய முடியாதது. கட்டான உடல்வாகு, கர்ஜிக்கும் குரலில் அனல் பறக்கும் வசனங்கள், ஹீரோக்களுடன் போடும் சண்டைக் காட்சிகள், வில்லத்தனமான சிரிப்புடன் அவர்  கைகளைப் பிசைந்தபடி தலையைச் சாய்த்துப்பேசும் பாடிலாங்வேஜ்... நினைத்த மாத்திரத்தில் நம் மனக்கண்ணில் தோன்றுபவை.


சினிமாவில் அவர் காட்டிய முகம் வில்லன், கொடுமைக்காரன், பணத்துக்காக எதையும் செய்பவன், ஏழைகளையும் பெண்களையும் துன்புறுத்துபவன்... `அப்படிப்பட்டவர், நிஜ வாழ்க்கையிலும் மோசமான ஆளாகத்தானே இருப்பார்?’ என்று ரசிகர்களை எண்ணவைத்தன அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்.


நம்பியார்  அடிவாங்குகிறாரா? அதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி  ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று கொப்பளிக்கும். ஏதோ ஒரு பழி உணர்வைத் தீர்த்துக்கொண்ட திருப்தி ஏற்படும். ஒரு காலத்தில் பெண்களாலும் ரசிகர்களாலும் திரையரங்குகளில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என்.நம்பியாராகத்தான் இருக்க முடியும்.

nambiarwraper_14018.jpg


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, `நம்பியார்’ என்ற பெயர் உருவாக்கிய பிம்பம் இதுதான். ஆனால், திரைப்படங்கள் உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர் என்பதுதான் பலரும் அறியாத அச்சு அசல் உண்மை.
நம்பியாரின் ஆன்மிக முகம் பிரசித்தமானது. மிகச்சிறந்த ஐயப்ப பக்தர். அவரை அறிந்தவர்கள், நெருங்கியவர்கள் பக்தி கலந்த மரியாதையுடன் அவரை `குருசாமி’ என்றோ, `நம்பியார்சாமி’ என்றோதான் அழைப்பார்கள்.


அவரது 65 ஆண்டுகால ஆன்மிகப் பாதையில் அவருடன் பல பிரபலங்கள்  பயணத்திருந்தாலும், அவரது உள்ளம் கவர்ந்த ஐயப்ப பக்திப் பாடகர் குடும்பத்தைச்  சேர்ந்த ஒருவர் வீரமணி ராஜு. இவர், பிரபல ஐயப்ப பக்திப்பாடல் புகழ் கே.வீரமணியின் அண்ணன் மகன்.  இவர், நம்பியாரின்  மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர் நம்பியார் நினைவாக நடத்தும் பிறந்தநாள் விழாவில் தவறாமல் பங்கேற்று, பாடி வருபவர்.

veeramani_19564.jpg
அவர், நம்பியாருடன் சென்ற சபரிமலை யாத்திரை... குருசாமியாக நம்பியார் கூறிய ஆலோசனைகள்... அவருடனான தனது அனுபவங்கள்... அத்தனையையும் நம்பியாரின் நினைவு நாளான இன்று (நவம்பர் 19) நினைவுகூர்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட நம்பியார்சாமி குறித்த நீங்காத நினைவுகள்...


சபரிமலையைப் பிரபலமாக்கியவர்!


``சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில்  பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை  ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர். அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்.


இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே. எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி!

iyyapan_19276.jpg

யார் குருசாமி?

60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி’யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி’ என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்’ என்பார்.
அதேபோல குருசாமி யார்? என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி’ என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில்  உணர்த்தினார்.


ஐயப்பனுக்கு சீசனா?

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்’ என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்... இது என்ன  ஊட்டியா, கொடைக்கானலா?’ என்பார் அவர் பாணியில்.
`அந்த 41 விரத நாட்கள்,  நம்மை  தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி’ என்பார்.

 

மாதா, பிதா, குரு...

`சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான்  இறுதி  வரை பயன்படுத்த வேண்டும்’ என்பார்.

nambiar1_14352.jpg

புனித யாத்திரையில் கண்டிப்பு

`எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறைவுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது’ என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி.

 

எம்.ஜி.ஆரின் மரியாதை

நம்பியார் இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும்போது, அவரது மனைவி ருக்மணிதான் நெய்த் தேங்காயில் நெய் ஊற்றி பயணத்தைத் தொடங்கி வைப்பார். அதேபோல எம்.ஜி.ஆர் உயிரோடு வாழ்ந்த காலம் வரை, அவர் அனுப்பிவைக்கும் மாலைதான் முதல் மாலையாக நம்பியாருக்கு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது.


ஊருக்கு உபதேசம்!

'ஊருக்குத்தான் உபதேசம்' என்றில்லாமல் அவர் போதித்த விஷயங்களுக்கு அவரே முன்னுதாரணமாக அவற்றைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். விரத காலங்களில் மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் இறுதி வரை குடிப்பழக்கம், புகைப் பழக்கம் என எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத மாமனிதர் அவர். கறுப்பு வெள்ளைக் (சினிமா) காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. ஆனால், அதற்கான எந்த தலைக்கனமும் அவரிடம் இருந்ததில்லை. திரையில் வில்லனாகத் தோன்றினாலும், நிஜத்தில் எந்த கெட்டப் பழக்க வழக்கங்களும் இல்லாத கதாநாயகனாகத்தான் வாழ்ந்தார். இவரிடம் நடிகர்கள் மட்டுமல்ல, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.


2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி  உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால், ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே  ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் நம்புகிறோம்.’’

vikatan

  • தொடங்கியவர்

ரெமோ தாத்தா!

 

 

p42a.jpg

ந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீதான தடை, அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் இரண்டையும் தாண்டி, கடந்த வாரம் உலகம் முழுவதும் 80 வயது சீனத்தாத்தா ஒருவர் வைரல் ஆகியுள்ளார். வாக்கிங் ஸ்டிக் பிடித்து நடக்கும் இந்த வயதில், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் இவர் ஒய்யாரமாக நடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுதான் இதற்குக் காரணம்.

வாங்க் தேஷன் என்ற இந்தத் தாத்தா ஒரு நடிகரும், ஃபேஷன் ஷோ மாடல்களுக்கான வகுப்பு எடுப்பவரும்கூட. பளபளக்கும் சில்வர் நிறக் கூந்தலும், சிக்கென்ற உடம்பும் கொண்ட இந்தத் தாத்தா சமீபத்தில் 80 வயதை நிறைவு செய்திருக்கிறார். கடந்த ஆண்டு முதன்முறையாகத் தானே மாடலாகக் களமிறங்கி நாடு முழுவதும் பேசப்பட்டவர். இவர் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு காத்தோட்டமாக ஃபேஷன் ஷோவில் நடந்ததில், சீனாவின் டீன் ஏஜ் பியூட்டிகள் முத்தங்களைப் பறக்கவிட்டுள்ளனர். இணையத்தில் இவருக்கு சீனாவின் `Hottest Grandpa' என்ற செல்லப் பெயரும் கிடைத்திருக்கிறது.

p42b.jpg

ஒரு நாளைக்கு மூன்றுமணி நேரம் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் இந்தத் தாத்தா `பிடித்த விஷயங்களைச் செய்ய வயது ஒரு தடையே இல்லை' என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார். சீனாவில் மட்டுமன்றி உலகம் முழுக்க இவருக்குத் தற்போது வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன!

vikatan

  • தொடங்கியவர்

பீட்டர் ஃபெர்டினன்ட் ட்ரக்கர்

 
security21_3085997f.jpg
 
 

அமெரிக்க வேளாண்மை முன்னோடி

‘நவீன வணிக மேலாண்மைத் துறையின் தந்தை’ எனப் போற்றப்படும் அமெரிக்க எழுத்தாளர், பீட்டர் ஃபெர்டினன்ட் ட்ரக்கர் (Peter Ferdinand Drucker) பிறந்த தினம் இன்று (நவம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா வில் யூதப் பெற்றோருக்குப் பிறந்த வர் (1909). தந்தை வழக்கறிஞர். தாய் மருத்துவர். முதலில் வியன்னா விலும் பின்னர் இங்கிலாந்திலும் பயின்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு சர்வதேச சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

* சிறுவயது முதலே தன்னைச் சுற்றிலும் காணப்படும் அன்றாட நிகழ்வுகளில் அதிகக் கவனம் செலுத்தி வந்தார். இங்கிலாந்தில் ஒரு பன்னாட்டு வங்கியில் பொருளாதார நிபுணராகப் பணியாற்றினார். 1937-ல் அமெரிக்கா சென்றார். அங்குள்ள பெனிங்டன் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

* பின்னர் நியுயார்க் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பட்டக் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1971-ல் கலிபோர்னியாவில் க்ளேர்மாண்ட் பட்டக் கல்லூரியில் சமூக அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். எழுத்தார்வம் காரணமாக வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு, ப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகவும் பிசினஸ் ஆலோசகராகவும் களம் இறங்கினார்.

* வாசிப்பில் அளவு கடந்த நாட்டம் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய விஷயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அது தொடர்பாக ஏராளமான நூல்களைப் படிப்பார்.

* வர்த்தகம், நிறுவனம், தொழிலாளர் - முதலாளி குறித்த திட்டவட்டமான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார். நிர்வாகத் திறனுக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பார். தனது 30-வது வயதில் ‘தி என்ட் ஆஃப் எகனாமிக் மேன்’ என்ற நூலை எழுதியதன் மூலம் இதை நிரூபித்தார். இந்த நூலைப் படித்த வின்ஸ்டன் சர்ச்சில், ‘தனது அதிரடிக் கருத்துகளால் நம் சிந்தனையைத் தூண்டியவர்’ எனப் பாராட்டினார்.

* நிர்வாகத் திறனை அனுபவம் மூலமாக மட்டுமே பெற முடியும் என்பதை இவரது பேச்சுகளும் எழுத்தும் மாற்றியமைத்தன. எதிர்பாராத வெற்றி, தோல்வி இரண்டுமே பரிசீலிக்கப்பட வேண்டியவை என்றார்.

* பிசினஸ், மேலாண்மை குறித்து ஏராளமாக எழுதினார். பொருளாதாரம், தொழில்நுட்பம், மனோதத்துவம், கலை இவை அனைத்தும் வர்த்தகத்திலும், மேலாண்மையிலும் இரண்டறக் கலந்துள்ளன என்று கூறினார். இவரது மேலாண்மைக் கோட்பாடுகள் ‘மேனேஜ்மென்ட் பை ஆப்ஜக்டிவ்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன.

* ‘பிராக்டிஸ் ஆஃப் மேனேஜ்மென்ட்’, ‘தி இன்ட்ரொடக்டிவ் வ்யு ஆஃப் மேனேஜ்மென்ட்’, ‘ஹான்ட்புக் ஆஃப் மேனேஜ்மென்ட் பை ஆப்ஜக்டிவ்’, ‘மேனேஜ்மென்ட் சாலஞ்சஸ் ஃபார் ட்வன்டி ஃபர்ஸ்ட் சென்சுரி’ ஆகியன மற்றும் சுயசரிதை, இரண்டு நாவல்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

* இவரது பல நூல்கள் தமிழ் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளன. அமெரிக்காவின் ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ப்ரீடம்’, ‘கிரான்ட் சில்வர் மெடல்’, ‘ஆஸ்திரியன் கிராஸ் ஃபார் சயின்ஸ் அன்ட் ஆர்ட்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

* உலகம் முழுவதும் உள்ள 25 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. 92 வயது வரை எம்.பி.ஏ. மாணவர்களுக்கு பேராசிரியராக வழிகாட்டியவர். நிர்வாகவியல் சிந்தனைகளின் முன்னோடியாகப் போற்றப்பட்ட பீட்டர் ஃபெர்டி னன்ட் ட்ரக்கர், 2005-ம் ஆண்டு 96-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

அகில உலக கனவுக் கன்னியாகத் திகழ்ந்த மர்லின் மன்றோவின் ஆடை 4.8 மில்லியன் டொலருக்கு விற்பனை

 

அகில உலக கனவுக் கன்னியாகத் திகழ்ந்த மர்லின் மன்றோவின் ஆடை 4.8 மில்லியன் டொலருக்கு விற்பனை

உலகெங்கிலும் ஏராளமான இரசிகர்களை தனது அழகாலும் கவர்ச்சியாலும் கட்டிப்போட்ட பேரழகி மர்லின் மன்றோவின் ஆடை ஒன்று 4.8 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

நடிப்பில் சிறந்து விளங்கிய ஹொலிவுட் நடிகைகள் பலருண்டு. ஆனால், அகில உலக கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் மர்லின் மன்றோ மட்டுமே.

பேரும் புகழும் பெற்றிருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு நிம்மதியைத் தந்திருக்கவில்லை.

இளமையில் வறுமையை அனுபவித்த அவர், பல போராட்டங்களின் பின்னரே திரையுலகிற்குள் நுழைந்தார்.

வெளி உலகத்தில் மர்லின் மன்றோ பெரும் புகழ் பெற்றிருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை துயர் சூழ்ந்தது.

மர்லின் மன்றோ தனது தினசரி வாழ்க்கையில் மன அமைதிக்கும், செயற்திறனுக்கும் மாத்திரை மருந்துகளையே நம்பியிருந்தார். அதற்கு அடிமைப்பட்டுக்கிடந்தார்.

அக்காலப் பெரும் பணக்காரர்கள் கூட மன்றோவின் கண் பார்வைக்குக் காத்துக்கிடந்தும், அவரது திருமண வாழ்க்கை கண்ணாடித்துண்டுகள் போல உடைந்து சிதறியது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜோன் எஃப் கென்னடியுடன் மர்லின் மன்றோவுக்கு இரகசிய தொடர்பு இருப்பதாக பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1962 ஆம் ஆண்டு ஜனாதிபதியான ஜோன் எஃப் கென்னடியின் 45 ஆவது பிறந்தநாளில் பங்கேற்ற மர்லின் மன்றோ, ஒரு ஆடம்பரமான உடையை அணிந்திருந்தார்.

இதன்போது, மேடையில் ஏறி மர்லின் மன்றோ ‘Happy Birthday Mr. President’ என்ற வாழ்த்தை பாடலாகவே பாடி அசத்தினார்.

இந்நிகழ்வு நடைபெற்ற 3 மாதங்களுக்குப் பின்னர் அளவுக்கு அதிகமான போதை மருந்தை எடுத்துக்கொண்டதன் விளைவாக மர்லின் மன்றோ உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, 1963 ஆம் ஆண்டு ஜோன் எஃப் கென்னடி ஊர்வலம் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜோன் எஃப் கென்னடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது மர்லின் மன்றோ அணிந்திருந்த அந்த ஆடை தான் தற்போது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

சுமார் 2,500 படிகங்கள் பதிக்கப்பட்ட அந்த ஆடையை Ripley’s Believe It or Not என்ற அருங்காட்சியகத்தின் உரிமையாளர் 4.8 மில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5241

The dress worn by Marilyn Monroe when she sang "Happy Birthday Mr. President" to US President John F. Kennedy in May 1962, is displayed in a glass enclosure at Julien's Auction House in Los Angeles, California on November 17, 2016, ahead of its auction this evening. / AFP PHOTO / Frederic J. BROWN

 

http://newsfirst.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.