Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

15170840_1496697493679990_88026458050644

இன்று சர்வதேச ஆண்கள் தினம்

(IMD – International Men’s Day)

நவம்பர் 19-ம் நாள்

ஆண்கள் தங்கள் உரிமையை நினைவூட்ட/ வலுப் படுத்த/ ஆராய்வதெற்கென்றே அனுமதிக்கப்பட்ட தினமிது.

ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

மேலும் உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுது.

ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

Today...

International Men's Day1f44d.png?

15079073_1496887216994351_73089676966100

இன்று சர்வதேச ஆண்கள் தினம்

 

400_08460.jpg

1999-ம் ஆண்டு டிரானிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டு, பின்னர் ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட நாளாக இந்நாள் திகழ்கிறது. ஆணினத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைக் களையப் பாடுபடுவதற்காக அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) அமைப்பு சார்பில் இன்று நாடெங்கும் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நவ. 19: இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!

 

ரு அமைதியான பெண்மணியாக அரசியலில் வாழ்வைத்துவங்கி, நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து தானே அதை தகர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திராவுடையது.

விடுதலை போரில் குடும்பமே கலந்து கொண்ட சூழலில்தான் இந்திரா பிறந்தார். அப்பாவும்,தாத்தாவும் அடிக்கடி சிறைக்கு போவதையும் விடுதலைப்போரில் ஈடுபடும் எண்ணற்றோர் வந்து போவதையும் பார்த்தே அவரின் இளமைக்காலம் நகர்ந்தது. கூடவே,அவரே வானர சேனை என்கிற அமைப்பை அமைத்து சிறுவர்களை கொண்டு விடுதலைப்போருக்கு உதவவும் செய்தார். சாந்தி நிகேதனில் பெற்ற கல்வி,நேருவின் கடிதங்கள் அவரை செதுக்கின. இந்திராவுக்கு ஜோன் ஆப் ஆர்க் மிகப்பெரிய ஆதர்சம் .

indira1.jpg



இந்திரா தன் அன்னை உடல்நலம் இல்லாத பொழுது அவரை கவனிக்க வந்த பெரோஸ் காந்தியுடன் காதல் பூண்டார். சில போராட்டங்களுக்கு பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். விடுதலை பெற்ற பின் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனதும் அவரின் பி.ஏ போலவே இந்திரா பங்காற்றினார். பெரோஸ் காந்தி காங்கிரஸ் எம்.பி யாக இருந்தாலும் முந்த்ரா ஊழல்,காப்பீட்டு ஊழல் என்று ஊழல்களை வெளியே கொண்டு வந்து காங்கிரசுக்கு சிக்கலை உண்டு செய்தார்.

நேருவும் முறையான விசாரனைக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுத்தார். இந்திராவுக்கும்,பெரோஸ் காந்திக்கும் இடையே இருந்த விரிசல் ஒட்டுப்படுவதற்கு முன்னமே பெரோஸ் இறந்து போனார். கையில் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள்.

நேருவுடன் இந்திரா தொடர்ந்து செயலாற்றினார். ஒரு முறை அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆக்கினார் நேரு. அப்பொழுது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை கலைக்கச்சொல்லி நேருவை கட்டாயப்படுத்தி அதை சாதிக்கவும் செய்தார். நேரு இவரை தனக்கு அடுத்து வாரிசாக ஆக்க எண்ணவில்லை. தன்னுடைய நெருங்கிய தோழிக்கு எழுதிய கடிதத்தில் சீக்கிரம் அமெரிக்காவில் வந்து செட்டில் ஆகலாம் என்று எண்ணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

indira4.jpg



நேருவின் மறைவுக்கு பின்னர் சாஸ்திரி பிரதமர் ஆனதும் இந்திராவை மொத்தமாக லண்டனுக்கு தூதுவராக அனுப்பி மொத்தமாக அரசியல் வாழ்வை அஸ்தமித்து விடலாம் என்று எண்ணினார். அவர் தாஷ்கண்ட்டில் இறந்து போக, சொன்ன பேச்சை கேட்பார் என்று நம்பி சிண்டிகேட்டின் காமராஜர், நிஜலிங்கப்பா முதலியோர் இந்திராவை பிரதமர் ஆக்கினார்கள்

நாடாளுமன்றத்தில் குங்கி குடியா (ஊமை பொம்மை ) என்று லோகியா குறிக்கிற அளவுக்கு ஆரம்ப காலங்களில் திணறிக்கொண்டுதான் இருந்தார் இந்திரா. சிண்டிகேட்டின் ஆதிக்கம் அவரை வெறுப்பேற்றியது. அவர்களை மீறி ரூபாயின் மதிப்பை குறைத்தார் ; மொரார்ஜி தேசாயை பதவி இறக்கம் indira3.jpgசெய்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜகஜீவன் ராமை இவர் ஆதரிக்க போக சிண்டிகேட்டோ இவருக்கு தொல்லை தரக்கூடிய சஞ்சீவ ரெட்டியை நிறுத்தியது. இவரின் ஆசி பெற்ற சுயேச்சை வேட்பாளர் வி.வி.கிரியை மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று சொல்லி வெல்ல வைத்தார் இவர். கட்சி உடைந்தது.

பிற கட்சிகளின் உதவியோடு ஆட்சி செய்து வந்த இந்திரா பின்னர் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றார். நேருவின் காலத்தில் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார். அவருக்கு ஆமாம் சாமி போடுகிறவர்கள் மட்டுமே முதல்வராக தொடர முடியும் என்கிற நிலை உண்டானது. நகர்வாலா ஊழல் தொடங்கி மாருதி திட்டம் வரை ஊழலின் உருவம் பெருத்துக்கொண்டே போனது.

பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு,பசுமைப்புரட்சி,வங்கதேச உருவாக்கம்,வங்கிகள் தேசிய மயமாக்கம் என்று சாதனைகளும் இந்திரா செய்தார். மாநில அரசுகளை ஒரு வகையான இறுக்கமான சூழலிலேயே இந்திரா தன் காலத்தில் வைத்திருந்தார்.
மொத்தமாக ஒன்பது,பத்து அரசுகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துகிற அளவுக்கு ஜனநாயகத்தை மறந்தவராக போனார் அவர். உச்சபட்ச சோகம் ராஜ் நாராயண் வழக்கால் வந்தது

எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா, அரசாங்க சம்பளம் பெற்ற அவரின் செயலாளரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தினார்,அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட அதிகமான உயரத்தில் கூட்டத்தில் பேசினார்,அரசாங்க நிலத்தில் அமைந்த மேடையை பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவரின் தேர்தல் வெற்றி செல்லுபடியாகாமல் போனது என்று அலகாபாத் கோர்ட் அறிவித்தது.

ஏற்கனவே கேசவனந்தா பாரதி வழக்கில் அரசு எண்ணிய மாதிரி அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியாது என்று தீர்ப்பு வாசித்து இருந்தார்கள். அதனால் மூன்று நீதிபதிகள் முன்னணியில் இருந்தும் தனக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னவரை தலைமை நீதிபதி ஆக்கி நீதித்துறைக்குள் அரசியலை கலந்தார் இந்திரா.

ஊழல் மலிந்து போயிருந்த குஜராத் மற்றும் பீகார் அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஜெபி போராட்டங்கள் ஆரம்பித்து அசைத்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் உள்நாட்டு கலகம் என்கிற வார்த்தையின் படி அவசரநிலையை பிரகடனம் செய்தார்.

எல்லா வகையான சுதந்திரங்களும் பிடுங்கப்பட்டன,ஒரே நாளில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நாடாளுமன்றம்,உச்சநீதிமன்றம் எல்லாமும் செயலிழந்தது. எழுத்து,பேச்சு சுதந்திரங்கள் பறிபோயின. சஞ்சய் காந்தி வந்தார் ; பல லட்சம் முஸ்லீம்கள்,தலித்துகள் உட்பட்ட எண்ணற்ற எளிய ஏழை மக்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தார். ஊரை அழகாக்குதல் என்று டெல்லியில் பல லட்சம் மக்களை வெளியேற்றி துப்பாக்கி சூட்டில் பல மக்கள் இறக்க நேர்ந்தது.

சட்டத்தின் சரத்துகள் திருத்தப்பட்டு இந்திராவின் வெற்றி செல்லுபடியாக்கப்பட்டது. பிரதமர் முதலியோரின் தேர்வை கோர்ட் விசாரிக்க முடியாது என்று மாற்றப்பட்டது. இந்த காலத்தில் பேருந்துகள் முதலிய எல்லா சேவைகளும் ஒழுங்காக நடந்தது. விலைவாசி குறைந்தது ; மக்கள் விதிகளை பின்பற்றினார்கள். என்ன சுதந்திரம் தான் இல்லவே இல்லை.

indira5.jpg



தேர்தல்களை வென்று விடலாம் என்று நம்பி இந்திரா அறிவித்தார். அமைதியாக காத்திருந்த மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். ஜெபியின் ஒருங்கிணைப்பால் இணைந்த ஜனதா கட்சி இவரை,இவர் கட்சியை தோற்கடித்தது. வனவாசம் போனார். ஷா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்த பொழுது ரகசிய காப்பு பிரமாணத்தை காரணம் சொல்லி பதில் சொல்ல மறுத்தார்.

ஸ்டாம்பை ஒட்டாமல்,போலீஸ் காவல் கேட்காமல் இவர் மீதான வழக்குகளில் கோட்டை விட்டார்கள். காந்தி தேசாயை இந்திரா காத்ததற்கு நன்றிக்கடன் போல மொரார்ஜி தேசாய் இவரை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கவில்லை. சட்ட திருத்தங்களை திரும்ப பெற்றார்கள். உள்நாட்டு கலகத்தின் போது அவசரநிலை என்பதை ஆயுத புரட்சியின் பொழுது என்று மாற்றினார்கள். இவர்களும் மாநில அரசை கலைத்தார்கள். பதவிக்காக அடித்து கொண்டார்கள். மக்கள் நொந்து போனார்கள்.

மூன்றே வருட இடைவெளியில் மீண்டும் இந்திரா வந்தார். பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளத்தை சமாளிக்க ஆதரவளித்த பிந்தரன்வாலே குழு பஞ்சாபை வன்முறை பூமியாக்கி கொண்டிருந்ததது. பொற்கோயில் உள்ளே எக்கச்சக்க ஆயுதங்கள்,பஞ்சாபில் பெருங்கொலைகள் என்றிருக்க இந்திரா பல்வேறு அமைதி முயற்சிகளுக்கு பிறகு ராணுவத்தை அனுப்பினார். போர்க்கள பூமியானது பஞ்சாப். அந்த வன்மத்தோடு அவரின் உயிரை அவரின் காவலாளிகள் பறித்தார்கள். இந்தியாவை கட்டி ஆண்ட ஒரு வரலாறு முடிவுக்கு வந்தது.

vikatan

  • தொடங்கியவர்

5 மில்லியனை தாண்டிய கீர்த்தி சுரேஷ்!

 

keerthi%20suresh_11289.jpg

ஃபேஸ்புக்கில் ஐந்து மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்து 'இது என்ன மாயம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் கீர்த்தி சுரேஷ். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்', 'ரெமோ'. தனுஷூடன் 'தொடரி', தற்போது 2017-ம் ஆண்டு வெளியாகவிருக்கும் 'பைரவா' படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தனது வசீகர நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். சமூகவலை தளங்களில் பலரும் அவரைத்  தொடர்ந்து வருகின்றனர். தற்போது அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஐந்து மில்லியன் ரசிகர்கள் ஃபோலோயர்களாக இருக்கிறார். இதற்காக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கீர்த்தி. 

  • தொடங்கியவர்

15110534_1189550267760332_83543162835661

தமிழ் சினிமாவின் கலக்கல் காமடி நடிகர்
கருத்துக்கள் பல சொல்லி
மக்கள் மனங்களில் நெருக்கமாய் வாழ்பவர்
சமூக அக்கறையும், சமூகப்பொறுப்பும் கொண்டவர்
சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும்
காமடி நடிகர் விவேக்கிற்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Vivek

  • தொடங்கியவர்

 

கிளிக் - தொழில்நுட்ப காணொளி

கூகிள் எர்த்தின் புதிய வசதி, மறுசுழற்சி செய்யக்கூடிய ஈக்கோ-ஹெல்மெட் , ட்ரோன்' மூலம் விநியோகம் செய்யப்படும் பிட்சா உள்ளிட்டவை அடங்கிய காணொளி

  • தொடங்கியவர்

ராணி லட்சுமி பாய் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

 

நவம்பர் 19: ராணி லட்சுமி பாய் பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு..

பித்தூர் மாவட்ட பெஷ்வாவிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் இவரின் தந்தை. அங்கே சுட்டிப்பெண்ணாக அவரை ஈர்க்கவே இவரை தன் சொந்த மகள் போல பெஷ்வா வளர்த்தார். மணிகர்ணிகா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட அவர் ஜான்சியின் அரசர்  கங்காதர் ராவுக்கு
திருமணம் செய்துவைக்கப்பட்டார். பிறந்த ஆண் குழந்தை நான்கே மாதங்களில் இறந்து போனது. அதற்கு பின் வாரிசு இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக உறவுக்கார பையனை தத்தெடுத்து தாமோதர் ராவ் என்று பட்டம் சூட்டினார்கள்.

டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர். ஏற்கனவே கப்பம் கட்டிக்கொண்டும்,அடிபணிந்தும் janciranilakshmibai.jpgகொண்டிருந்த அரசுகளை கைப்பற்ற கிளம்பினார். வாரிசுகளை தத்தெடுக்க கூடாது ; அப்படியே எடுத்தாலும் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதி தரவேண்டும். அப்படி தரப்படவில்லை என்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் போய்விடும் என்பது அவரின் புதுக்கொள்கையாக இருந்தது. இதை அவகாசியிலிக் கொள்கை என்று அழைத்தார் அவர்.

சத்தாரா, செய்ப்பூர், சம்பல்பூர் , நாக்பூர்  என்று அரசுகளை அள்ளிப்போட்டுக்கொண்டார் டல்ஹவுசி. ஜான்சியும் மன்னரை இழந்து ஜான்சி ராணி வசம் வந்திருந்தது. அதே காரணத்தை சொல்லி வாரிசை ஏற்காமல் அரியணையை விட்டு நீக்கி அறுபாதாயிரம் ஓய்வுத்தொகை என்றும் அறிவித்தார்கள். அமைதியாக அப்பொழுது இருந்தாலும்  காத்திருந்தார் லட்சுமி பாய்.


எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமிந்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள்
இப்பொழுது லேவா தேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் . அரசர்களின் இடங்கள் பறிக்கப்பட்ட பொழுது அங்கே வேலை செய்தவர்கள் நடுத்தெருவில் நின்றார்கள். அரசின் சதி ஒழிப்பு முதலிய நடவடிக்கைகள் மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் மத பிரச்சாரம் நாட்டில் அச்சத்தை உண்டு செய்தது.

சிப்பாய்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தது ; கடல் கடந்து போகவும் சொல்லி மதநம்பிக்கைக்கு எதிராக கட்டாயப்படுத்தினார்கள்.  பன்றி மற்றும் மாட்டு கொழுப்பால் ஆகியிருந்த கேட்ரிட்ஜை லோட் செய்ய மறுத்து மீரத்தில் புரட்சி வெடித்தது.  மத்திய மற்றும் வட இந்தியாவில் புரட்சி பரவியது.

ஜான்சியில் இருந்த ஆங்கிலேயே அதிகாரி எர்கினிடம் தன்னுடைய பாதுகாப்புக்கு படைகள் உருவாக்கிக்கொள்ள ஜான்சி ராணி அனுமதி கேட்டார். கிடைத்தது. ஒரு விழா நடத்தி ஆங்கிலேய அரசை பார்த்து பயப்பட வேண்டாம் என்று மறைமுகமாக மக்களுக்கு கோடிட்டு காட்டினார்.

ஆங்கிலேய படைகள் மற்ற இடங்களில் புரட்சியை அடக்கிவிட்டு ஜான்சி நோக்கி வருவதற்குள் ஜான்சியில் ஆயுதங்கள் பெருக்கப்பட்டு கோட்டை ராணியின் வசம் வந்திருந்தது. ஹூக் ரோஸ் சரணடைய சொல்லி கேட்ட பொழுது ,"போராடி வென்றால் வெற்றி இல்லையேல் மோட்சம் !" என்று கம்பீரமாக விடை அனுப்பினார் ஜான்சி ராணி.

கோட்டையை சுற்றி போர் நடந்து சுவர் தகர்க்கப்பட்டு ஆங்கிலேய அரசு உள்ளே நுழைந்தது. பெண்கள்,குழந்தைகள் என்று பலரும் ஆயுதம் ஏந்தி போர் புரிந்தார்கள். பெண்கள் ஆயுதங்களை தீட்டுவதும்,குதிரைகளை இயக்குவதும் ஆச்சரியம் தருகிறது என்று பதிவு செய்கிறார்கள் ஆங்கிலேயர்கள். சுவரேறி தன் வளர்ப்பு மகனோடு தப்பினார் ஜான்சி ராணி

குவாலியரை தாந்தியா தோப் உதவியோடு கைப்பற்றினார் லட்சுமி பாய். ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த மகாராஜா சிந்தியா இவரை எதிர்த்த பொழுது சிந்தியாவின் படைகள் அவரை கைவிட்டு இவரோடு இணைந்து வீர முழக்கம் கொட்டின. மீண்டும் ஆங்கிலேயருடன் போர் வந்தது. பிள்ளையை பின்பக்கம் குதிரையில் வைத்துக்கொண்டு போர் செய்தார் ஜான்சி ராணி. பின்புறம் இருந்து ஒருவன் தாக்கி அவரை கொன்றான். அவருடன் அவரின் அந்தரங்க காவலாளியாக இருந்த
முஸ்லீம் பெண்ணும் இறந்து போனாள்  இன்னமும் ஜான்சி ராணியைப்பற்றிய வீரக்கதைகள்,நாட்டுப்பாடல்கள் அப்பகுதிகளில் பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து மகாஸ்வேதா தேவி ஒரு நூலாக்கினார்.

போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல் என்று எண்ணிய அவரின் பிறந்தநாள் இன்று

vikatan

ஜான்சிராணியை ஏன் நாம் கொண்டாடுகிறோம் தெரியுமா? #HBDJhansiRani

 

               ஜான்சிராணி

ந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போரிடத் துணிந்தவர்களின் முன்னோடி, ஜான்சிராணி லட்சுமிபாய். 1835-ம் ஆண்டு நவம்பர் 19-ல், மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர். பெற்றோர் வைத்த அன்புப் பெயர் மணிகர்ணிகா. குடும்பத்தில் எல்லோரும் 'மனு' என்று செல்லமாக அழைத்தனர். ஆனால், அம்மாவின் பேரன்பை முழுமையாகப் பெறும் அதிர்ஷ்டம் அவருக்கு இல்லாமல் போகும் என அவர் நினைக்கவில்லை. நான்கு வயதிலேயே தன் அம்மாவை இழந்தார். மராத்திய வீர மரபில் பிறந்த மணிகர்ணிகா, விளையாடும் வயதிலேயே வாள்வீச்சு, குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் போன்ற வீரக் கலைகளைப் பயின்று, ஆண் வீரர்களையும் விஞ்சும் திறன் பெற்றார்.

  வீரமங்கை மணிகர்ணிகாவை ஜான்சியின் இளவரசர் கங்காதர ராவ் நெவல்கர் திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்து லட்சுமிபாய் என்று அழைக்கப்பட்டதோடு, ஜான்சியின் ராணியாகவும் ஆனார். இந்த இனிய தம்பதிக்கு, ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தாமோதர் ராவ் எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி, விரைவிலேயே மரணித்துவிடும் என்று அவர்கள் நினைக்கவில்லை. நான்கு மாதங்களிலேயே அந்தக் குழந்தை இறந்தது. உடனே ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். இந்து மரபின்படி அந்தக் குழந்தை மன்னர் தம்பதியரின் சட்ட வாரிசாகவே இருந்தது. அதற்கு தாமோதர் ராவ் என்றே பெயர் சூட்டினர். பெற்ற குழந்தையின் இழப்பிலிருந்து மன்னர் குடும்பத்தினர் மீண்டுவந்தபோதிலும் தன் மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளமுடியாமல் உடல் நலமிழந்த கங்காதர ராவ், 1853, நவம்பர் 21-ல் இறந்தார்.

ஜான்சிராணி

மன்னரின் மறைவுக்குப் பின், வளர்ப்புமகன் தாமோதர ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார், ஜான்சிராணி. ஆனால், அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் டல்கௌசி, பிரிட்டிஷ்  கிழக்கிந்தியக் கம்பெனியின் 'அவகாசியிலிக் கொள்கை'யின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்க முடியாதென மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு
தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி, ஜான்சி கோட்டையைத் தமது ஆட்சிக்கு உட்படுத்த முடிவெடுத்தனர் ஆங்கிலேயர். அதன்படி, 1854-ம் ஆண்டு ராணி லட்சுமிபாய்க்கு 60,000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து, கோட்டையைவிட்டு வெளியேறச் சொன்னார்கள்.

1857-ம் ஆண்டு மே 10-ம் நாள், இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமானது. காரணம், போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு பூசப்பட்டதால் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தியதால், இவர்களது தொல்லை இல்லாமல் இராணி இலட்சுமிபாய் ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவில் ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தது என்பதைக் காட்டுவதற்காகவும், ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாய், 'ஹால்டி' குங்குமப் பண்டிகையை ஏற்பாடு செய்தார். மக்கள் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆங்கிலேயர்களோ, ராணி லட்சுமிபாய் எந்த நேரத்திலும் தம்மை எதிர்க்கக்கூடும் என்ற அச்சத்திலேயே இருந்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் 1857-ம் ஆண்டு, ஜூன் 8-ம் நாள் ஜோக்கன் பாக்கில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி லட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகப் பொதுமக்களிடம் கூறி, ராணி லட்சுமிபாய் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைத்தனர்.

இதைக் காரணமாக வைத்து, 1858-ம் ஆண்டு மார்ச் 23-ல் ஹீரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் சுமார் 20 ஆயிரம் பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படையின் ஆயுதங்கள் ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால், தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியவில்லை. தாந்தியா தோபேயும், பான்பூர் மன்னரும் வரும் வழியில் தங்களது ஆயுத வண்டிக்காக காத்திருந்த சமயம், 1,000 பேர் கொண்ட ஹீரோஸ் தலைமையிலான குதிரைப்படை, துப்பாக்கிகளால் அவர்களைத் தாக்கி 1,500 ஜான்சி வீரர்களைக் கொன்றனர். மாவீரன் தாந்தியா தோபேயும் மிகுந்த மனவருத்தத்துடன் புறமுதுகிட நேரிட்டது. பின்னால் வந்த தாந்தியா தோபேயின் ஆயுத வண்டியும் கொள்ளையடிக்கப்பட்டு,
பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். ஜான்சி ராணிக்கு உதவுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள், அவருக்கே எதிராக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன.

ஜான்சிராணி

 

ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களின் பலம் இழந்த நிலையிலும் ஜான்சிராணி பிரிட்டிஷாரிடம் அடிபணிய மறுத்தார். ஆங்கிலேயர்களால் ஜான்சியைவிட்டு வெளியேறச்சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியுறச் செய்தது. தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார் லட்சுமிபாய். அதில் வீரம் மிக்க பெண்கள் படையும் இடம்பெற்றது. அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியா மீது படையெடுத்து, அந்த நாட்டு வீரர்களையும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். தமது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச்சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார். மூன்று நாட்கள் கடுமையான போருக்குப் பின், அத்துமீறி நுழைந்த ஆங்கிலேயர்கள், தமது பெரும் படையுடன் நகருக்குள் நுழைந்தனர்.

கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேயர், அரண்மனைக்குள் புகுந்து விலைமதிப்பற்ற பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்ததோடு, பெண்களுக்கும் இன்னல்கள் விளைவித்தனர். ஜான்சி ராணி 1858-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் நாள் இரவு, தனது மகனுடன் மதில் மேலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக்கொண்ட பாதுகாப்புப் படையுடன் நகரத்தை விட்டுச் சென்றார்.

இராணி இலட்சுமிபாய், தாமோதர ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று, தாந்தியா தோப்பேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து, குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டை ஒன்றைக் கைப்பற்றினார். பிறகு, ஆங்கிலேயப் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858-ம் ஆண்டு, ஜூன் 17-ல், 'கோட்டாகி சேராய்' என்ற இடத்தில் அவர்களை எதிர்த்தார். வீரத்தின் சக்தியாக நின்று போரிட்ட ஜான்சி ராணி, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்க்க முடியாமல் படுகாயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார். ஆண் வேடம் அணிந்திருந்ததால், வீழ்ந்தது ஜான்சி ராணிதான் என்று ஆங்கிலேயருக்கு தெரியவில்லை. அவரது உடல் உடனடியாக பூல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு ராணியின் படையைச் சார்ந்த ராமச்சந்திரராவால் தகனம் செய்யப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின்னர் குவாலியரை ஆங்கிலேயர் படை கைப்பற்றியது.

பிற்காலத்தில், ஜான்சியைக் கைப்பற்றி ஆங்கிலேய கொள்ளைக்காரர்களை விரட்டியடிக்கவும் பின் வந்த தலைமுறைகளுக்கு சுதந்திர வேட்கையை, துணிவை, நெஞ்சுரத்தை விதைத்த வீரத்திலகம் ஜான்சி ராணியின் மாவீரத்தைப் போற்றுவோம்... என்றும் நன் நினைவில் ஏற்றுவோம்!

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p36.jpg

red-dot.jpgபவன் கல்யாண்... டோலிவுட்டின் தல! நடித்ததில் 80 சதவிகிதப் படங்கள் தோல்வி என்றாலும், ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் எப்போதும் டாப் கியரில்தான். தன் ரசிகர்களை மகிழ்விக்க பவன் பிடித்திருக்கும் ரூட்... அடுத்தடுத்து இரண்டு அஜித் படங்களை ரீமேக்குவதே. அதில் ஒன்று `சிறுத்தை' சிவா இயக்கிய `வீரம்’. `காட்டமராய்டு' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், தமன்னா கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இரண்டாவது படம் `வேதாளம்' ரீமேக். இதற்கு அடுத்து தனது 25-வது படத்தை இயக்க, த்ரிவிக்ரமை ஓ.கே செய்திருக்கிறார் பவர் ஸ்டார். படத்துக்கு இசை நம்ம அனிருத். ஆலுமாலு டோலுமாலு..!

p36b.jpg

red-dot.jpgதமிழ் சினிமாவில் இப்போது எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்ப்பது தனுஷைத்தான். ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறார். அவர் தயாரித்த `விசாரணை’ படம் ஆஸ்கர் போட்டியில். ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். `பவர் பாண்டி’ படத்தை இயக்குகிறார். ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்கிறார். இந்த பிஸிக்கு நடுவில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், `விஐபி-2’க்குத் தயாராகிவிட்டார். இந்தப் படத்துக்கு கதை, வசனம்... தனுஷ். வேலை செய்யும் பட்டதாரி!

p36c.jpg

red-dot.jpgஹீரோ தன் மகனுடன் சேர்ந்து நடிக்கும் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது நடிகர் ஜெயம் ரவி. `மிருதன்’ பட இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் `டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவியும் அவரது மகன் ஆரவ்வும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். அடுத்த வாரிசு!

p36d.jpg

red-dot.jpg`எல்லாரும் சந்திக்கணும்னு ஆசை இருந்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு அமையலை. நடிகை சாரதாம்மா இந்த விஷயத்துல ரொம்ப ஆர்வம் காட்டினாங்க. கொஞ்ச நாளாவே இதைப் பத்தி அடிக்கடி பேசிட்டிருந்தாங்க.  திடீர்னு ஒரு நாள் குறிச்சு, நினைவுக்கு வந்தவங்களை எல்லாரையும் இன்வைட் பண்ணினாங்க. சென்னை டாக்டர்ஸ் கிளப்ல நாங்க மீட் பண்ணினோம். சாரதாம்மா, சச்சு, குட்டிபத்மினி, ஜெயமாலினி, ராஜஸ்ரீ, ராஜசுலோச்சனா, பாரதி, ஷீலா, ஹேமா சௌத்ரி, ஜெயந்தி கண்ணப்பன், நான்... என பெரிய கேங். `நாம எல்லாம் அப்போ...' என்ற நாஸ்டாலஜியா தொடங்கி, அடுத்த வருடச் சந்திப்பை இன்னும் பெருசா பண்ணும் ப்ளானிங் வரை பல விஷயங்கள் பேசினோம்' என சமீபத்தில் நடந்த செவன்ட்டீஸ் பியூட்டிகள் மீட் பற்றி சிலாகிக்கிறார் `70-களின் நயன்தாரா' லதா. அந்த நாள் ஞாபகம்!

red-dot.jpgஎக்மோர் அல்ஸாமால் எதிரே இருக்கும் அப்பார்ட்மென்ட்தான் சென்னையின் ஸ்டார் அப்பார்ட்மென்ட். இதில்தான் கோலிவுட் செலிப்ரிட்டீஸ் நயன்தாரா, அட்லீ, விக்னேஷ் சிவன், நிக்கி கல்ராணி ஆகிய நால்வரும் தனித்தனி ஃப்ளாட்களில் வசிக்கிறார்கள்.அட்ரஸ் தெரிஞ்சுப்போச்சு!

vikatan

  • தொடங்கியவர்

ட்ரம்ப் 'ஹேர் ஸ்டைலில்' ஒரு பறவை

 

don%204%20600_13541.jpg

சீனாவில் உள்ள ஒரு பறவையின் ஹேர் ஸ்டைல், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் ஹேர் ஸ்டைல் போலவே இருப்பது வைரலாக இணையங்களில் பரவி வருகிறது.


ஹேங்சோ சஃபாரி பூங்காவில் உள்ள, 'கோல்டன் பெசன்ட்' பறவையின் ஹேர் ஸ்டைல் ட்ரம்ப்பின் ஹேர் ஸ்டைல் போலவே இருந்ததை பார்த்த ஒரு உள்ளூர் பத்திரிகையாளர், அந்த பறவையை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றி உள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பற்றி பறவையை வளர்ப்பவர், 'நான் முன்னர் அப்படி நினைக்கவில்லை. ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அவரின் நிறைய புகைப்படங்களைப் பார்த்தேன். தற்போது, பறவைக்கும் அவருக்கும் இருக்கும் ஒற்றுமையை என்னால் உணர முடிகிறது' என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்

 

 
1_3083556f.jpg
 
 

9_3083548a.jpg

8_3083549a.jpg

7_3083550a.jpg

6_3083551a.jpg

5_3083552a.jpg

4_3083553a.jpg

2_3083555a.jpg

3_3083554a.jpg

 
 
  • தொடங்கியவர்
இது கடவுளின் கட்டளை
 
 

article_1479269945-war.jpgஎந்த வல்லரசுகளேயானாலும் தங்கள் சுயநலனுக்காக போர் என்ற விடயத்தில் நுளையாது இருக்க வேண்டும்.

எந்த நாடு அணு ஆயுதத்தை ஏந்துகின்றதோ, அதனை ஆரம்பித்த நாடு பெரும் அழிவை எதிர் கொண்டேயாக வேண்டும். இது கடவுளின் கட்டளையாகும். 

போரினை விரும்பும் நாடுகளுக்கு இது புரியாதது அல்ல; இன்று பெரும் போர் வரவுள்ளதாக ஆர்வத்துடன் எதிர்வு கூறுபவர்களுக்கு இதனால் என்ன மகிழ்ச்சியைக் கண்டுவிட்டார்களோ தெரியாது? 

இந்தப் பெரிய வல்லரசுகள் பேசாமல் தங்கள் சொந்த விசயங்களையே மட்டும் கவனித்தால் போதும். சமாதானப் புறாக்கள் உலகைக் களிப்புடன் வலம்வரும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த போட்டோ ஏன் வைரல் தெரியுமா?

 

400_11272.jpg

கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா பேப்பரில் வந்த புகைப்படம் இது. இப்போது செம வைரல். ஏன் என கணிக்க முடிகிறதா? ஒரு க்யூ ஏ.டி.எம்முக்கும், ஒரு க்யூ மதுக்கடைக்கும் நிற்கிறது. ஏ.டி.எம்முக்கான க்யூவில் வேட்டியை இறக்கி கட்டியுள்ளார்கள். மதுக்கடைக்கான க்யூவில் வேட்டியை மடித்துக் கட்டியுள்ளார்கள்.  இந்தப் புகைப்படத்தை கேரளாவில் கோழிக்கோடு ஆட்சியர் பிரசாந்த் நாயர் ஃபேஸ்புக்கில் பகிர, இன்னும் வைரலாகிவிட்டது. 

(படம் - Gokul Cheliya - Times of India)

  • தொடங்கியவர்

15069096_1190297024352323_78873452095429

சின்னக் குழந்தையாய்
தமிழ் திரைவானில் சிறகடித்து
காதலுக்கு மரியாதையில், தமிழ் மனங்களை களவாடி
அமர்க்களத்தில் ஆசை நாயகன் அஜித்தை
கைத்தலம் பற்றிய அழகுப்பதுமை.

என்றென்றும் அழகி ஷாலினிக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Shalini Ajith

  • தொடங்கியவர்

நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகள்

Desktop1_3086045f.jpg

1_3086043f.jpg

லே லொர்ரெயின், பெல்ஜியம்

8_3086036f.jpg

சல்புரா சோஷியல் ஹவுசிங், ஸ்பெயின்

6_3086037f.jpg

வையா வேர்ட், அமெரிக்கா

5_3086039f.jpg
விவாஸ் மியர்ஸ் சோஷியல் ஹவுசிங், ஸ்பெயின்
4_3086040f.jpg
ஹனிகோம்ப், ஸ்லோவேனியா
 
3_3086041f.jpg
ஹாட்டெர்ட் ஹவுசிங், நெதர்லாந்து
2_3086042f.jpg
மிராடுர் ஹவுசிங், ஸ்பெயின்

 

அடுக்குமாடிக் குடியிருப்புக்கு கி.மு.2-ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட வரலாறு உண்டு. ரோம் நாட்டின் கடற்கரை நகரான ஆஸ்டியாவில் பல்லாயிரம் வருடப் பழமையான அடுக்குமாடிக் குடியிருப்பின் சிதிலமடைந்த பாகங்கள் இன்றும் வரலாற்றுச் சாட்சியாக உள்ளன. நகர மக்களின் வசிப்பிடத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் வந்தது. இம்முறை இன்றைய பெரு நகர வீட்டுப் பற்றாக்குறையைத் தீர்க்கப் பேருதவியாக இருக்கிறது.

அதனால் நவீன காலகட்டத்தில் இந்த முறை உலகமெங்கும் பரவலானது. வட அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் இந்த முறையில் வீடுகள் கட்டப்பட்டன. இந்தியாவிலும் கடந்த சில பத்தாண்டுகளில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் வலுவாக வேரூன்றியிருக்கிறது. இன்றைக்கு உலகெங்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பல நவீன முறைகளில் கட்டப்படுகின்றன. அவற்றில் சிறந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அணிவகுப்பு இது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

மங்கள்யான் எடுத்த படம் நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழில்..!

 

mang%201_13092.jpg

செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியாவால் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் எடுத்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப்படத்தில் வந்துள்ளது.


கடந்த 2014ம் ஆண்டு, இந்தியா மங்கள்யானை விண்ணில் ஏவிய போது, ஆறு மாத காலமே அது தாக்குப்பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அது மூன்று ஆண்டுகளையும் தாண்டி ஆராய்ச்சி பணியை செய்து வருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிகக் குறைந்த விலையில் உருவாக்கி செலுத்தப்பட்ட மங்கள்யானில், மிகக் குறைந்த விலையிலான கேமராவே பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான், தற்போது நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழில் வெளிவந்துள்ளது.  


இதுவரை செவ்வாய் கிரகத்தின் தரமான புகைப்படம் மிகக் குறைவாகவே எடுக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் எடுத்த புகைப்படம் தரமாக இருக்கவே தான் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழ் அதை அட்டைப்படத்தில் பயன்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது. 

  • தொடங்கியவர்

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் (நவ.20- 1985)

 

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 முதல்முறையாக வெளிவந்த நாள். தற்போது விண்டோஸ் 8.0 வரை வந்துள்ளது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1910 - பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று. * 1917- உக்ரைன் குடியரசாக அறிவிக்கப்பட்டது. * 1923- ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்) * 1936- ஸ்பானிய அரசியல்

 
 
 
 
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் (நவ.20- 1985)
 
மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 முதல்முறையாக வெளிவந்த நாள். தற்போது விண்டோஸ் 8.0 வரை வந்துள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1910 - பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று. * 1917- உக்ரைன் குடியரசாக அறிவிக்கப்பட்டது. * 1923- ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்) * 1936- ஸ்பானிய அரசியல் தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார். * 1940 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.

* 1947- இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார். * 1962- சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. * 1977 - ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். * 1979 - சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் 6 ஆயிரம் பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது. * 1985 - மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

* 1988 - ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது. * 1992- இங்கிலாந்தில் வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. * 1993- மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.

* 1994- அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று. * 1998- பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது. * 1999- மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

maalaimalar

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: 'கடவுள் இருக்கான் குமாரு'- கைல காசு இல்ல!

 

 
kik1_3086121f.jpg
 
 

ராஜேஷின் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தியோடு நடித்துள்ள படம் 'கடவுள் இருக்கான் குமாரு’. படம் வெளிவந்து ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

S Arun Kumar

'கடவுள் இருக்கான் குமாரு' மாதிரி படம்லாம் வர்றப்ப தான் தோணுது. உண்மையிலேயே கடவுள் இருந்திருந்தா இந்த மாதிரி படம்லாம் வந்துருக்குமா குமாரு?

Sindhya ‏

கடவுள் இருக்கான் குமாரு நல்லா இல்லன்னு சொல்றவங்கள பார்த்தா எரிச்சலா இருக்கு., என்னமோ GVP இதுக்கு முன்னாடி காவிய படமா கொடுத்த மாதிரி. #KIK

Tamil

கடவுள் இருக்கான் குமாரு...

கொலைவெறியில் இருக்கிறேன் குமாரு.

Just Watch

கடவுள் இருக்கான் குமாரு மொத்தத்தில் - கவலை இல்லாமல், கதை இல்லாமல், ஒரு முறை கண்டுகளிக்க ஒரு காமெடி படம்.

deepanrdx

கடவுள் , இருக்கான் குமாரு....

ஆனா....

காமெடி இல்லையே!

Jaya Raj

தொடர் நகைச்சுவையைத் தனது பிரத்யேகமான திரைக்கதையாக உருவாக்குவது ராஜேஷின் பாணி. இந்த வகையில் ஒழுங்கும் கோர்வையும் மிக கச்சிதமாக ஒருங்கிணைந்து வந்த முன் உதாரணம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. ஆனால் இந்த மாயாஜாலம் 'கடவுள் இருக்கான் குமாரு'வில் நிகழாமல் போனது பரிதாபம்.

தமிழ்ப்பொண்ணு ‏

கடவுள் இருக்கான் குமாரு.

நல்லவேளை நான் பார்க்கல.....

eswaramoothi

"கடவுள் இருக்கான் குமாரு" - இந்த படத்த பார்த்துட்டு தியேட்டர்ல இருந்து உயிரோட வந்தா நிஜமாவே கடவுள் இருக்கான் குமாரு.

thatsrajamani ‏

கடவுள் இருக்கான் குமாரு படம் எப்டி..பார்த்தவா்கள் ரியாக்ஷன். இருக்கிற காசும் போச்சே குமாரு..

Mohammed Rafeek

பெரியார் எதற்காகச் சொன்னாரோ?

நிச்சயமாக கடவுள் இல்லை... .

இல்லை..... இல்லவே இல்லை.

இருந்திருந்தால்," கடவுள் இருக்கான் குமாரு "

படம் ஓடும் தியேட்டர்களில் சூலாயுதமோ, வேலோ, சங்கு சக்கரமோ பாய்ந்து வந்து திரையைக் கிழித்திருக்கும்.

kik_3086120a.jpg

யானும் தீயவன்

என்ன இது பாட்டு போட்டுட்டே இருக்காய்ங்க தியேட்டர்ல ஒருத்தர் கூட எந்திருச்சு வெளிய போகாம இருக்காங்க, ஒருவேளை பாட்ட ரசிக்கிறாங்களோனு எட்டிப் பார்த்தா பூராப்பயலும் தூங்கிக்கிட்டு இருக்காங்க.

மொத்தத்துல கடவுள் இருக்கான் குமாரு - காச வேஸ்ட்பண்ணிட்டேனே டோமரு!

ஹரி க்ரிஷ்ணா

இந்த படம் எடுத்ததுக்கு பதிலா ராஜேஷ் எங்கள மாதிரி நெட் கார்டு போட்டு மீம்ஸ் போடலாம்.

வெங்கட்

கைல காசு இல்ல. ஜிவி படத்துக்கு போகவே முடியாது!

கடவுள் இருக்கான் குமாரு..!

kuppan

கம்முனு நீங்க மியூசிக் போடவே போயிருங்க சிவாஜி @gvprakash. மிடில

tamil.thehindu

  • தொடங்கியவர்

இளவரசர் வில்லியம் அந்த நாட்.டின் பாடசாலை ஒன்றில் சிறுவர்களுடன் உதைபந்தாட்டத்தில்...

516432-01-025506496-copy-d09bb46616222b90813c5e4b5c3772ce2cd404e2.jpg

 

வியட்நாமில் நடைபெற்ற வனவிலங்கு தொடர்பான சர்வதேச கருத் தரங்குக்கு சென்றிருந்த பிரித்தானிய இளவரசர் வில்லியம் அந்த நாட்.டின் ஹனோய் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சிறுவர்களுடன் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது பிடிக்கப்பட்ட படம்.

virakesari.lk

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம் 09: ஆழ்கடலில் ஓர் அதிசய டாக்டர்!

 

 
reason_3081978f.jpg
 
 

நமக்கெல்லாம் உடம்பு சரியல்லாமல் போனால் எங்கே போவோம்? ஆட்டோவைப் பிடித்து டாக்டரைப் போய்ப் பார்த்துவிடுவோம் இல்லையா? சரி, விலங்குகளுக்கு

உடம்பு சரியில்லாமல் போனால் என்ன செய்யும்? அதற்குத்தான் ‘வெர்ட்டினரி டாக்டர்’ இருக்காரே என்று நீங்கள் சொல்லலாம். ‘வெர்ட்டினரி டாக்டர் வீட்டு விலங்குகளுக்கு மருத்துவம் பார்ப்பவர்.

ஆனால், கடலில் வாழும் உயிரினங்களுக்கு உடம்பு முடியாமல் போனால் யார் வைத்தியம் பார்ப்பது? அங்கும் சிகிச்சைக்குக் கவலையில்லை. இதற்காகவே ஆழ்கடலுக்குள் சில மீன்கள் ‘கிளினிக் ஸ்டேஷன்’களைத் திறந்து வைத்துக்கொண்டு வைத்தியம் பார்க்கின்றன.

வீட்டு விலங்குகளுக்கு நோய் எப்படி வருகிறது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். விஷப் பூச்சிகள், அட்டைப் பூச்சிகள், ஒட்டுண்ணிப் பூச்சிகள் (உண்ணிப் பூச்சிகள்) கடிப்பதால் விலங்குகள் அதிகம் பாதிக்கப்படும். மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்துவிட்டுத் திரும்பும் ஆடு, மாடுகள் மீது அட்டைப் பூச்சிகள், உண்ணிப் பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் பாதிப்புகளுக்குக் கோழி, காகம், கொக்கு போன்ற பறவைகள்தான் வைத்தியம் பார்க்கும் டாக்டர். கால்நடைகளைக் கடித்துக்கொண்டிருக்கும் உண்ணிப் பூச்சிகளை இவை கொத்தித் தின்றுவிடும்.

இதுபோலவே ஆழ்கடலில் வாழும் பூச்சிகளால் மீன்கள் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போவதுண்டு. சிறு சிறு பூச்சிகள் பெரிய மீன்களின் உடலைக் கடித்து ஒட்டிக்கொள்ளும். இந்த மாதிரியான பூச்சிகள் பெரிய மீன்களின் வாய் உதடு, தொண்டை, தாடை போன்ற இடங்களில் கடித்துக்கொண்டு பெரிய மீன்களுக்குத் தொந்தரவைத் தரும்.

பெரிய மீன்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சுத்தம் செய்யும் மீன்கள் (Cleaner Fish) இருக்கின்றன. பெரிய மீன்களைக் கடித்துத் துன்புறுத்திப் பாதிப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகளை இந்த கிளீனர் மீன்கள் கடித்துச் சாப்பிட்டுவிடும்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட மீன்களைத் தேடி டாக்டர் மீன்கள் (கிளீனர் ஃபிஷ்) செல்வதில்லை. மாறாகப் பாதிக்கப்பட்ட பெரிய மீன்கள்தான் பாதிப்பைச் சரி செய்துகொள்ள டாக்டர் மீன்களைத் தேடிச் செல்கின்றன (நோயாளிகள்தானே டாக்டரைத் தேடிப் போக வேண்டும்). டாக்டர் மீன்களின் அருகில் வந்து தங்களுக்கு வைத்தியம் பார்க்கச் சொல்லும் விதமாக, வித்தியாசமான ஒலி எழுப்பி, அவை சுற்றிச் சுற்றி வரும். கிளீனர் மீன்கள் வாழும் இடங்களில் நோயாளி மீன்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றி வருவதை ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் பார்த்து உறுதிசெய்திருக்கிறார்கள்.

சம்பந்தமே இல்லாத ஓர் இடத்தில் பெரிய பெரிய மீன்கள் சுற்றிவந்தால், அங்கு டாக்டர் மீன் இருக்கிறார் என்று அர்த்தம். கூட்டம் கூட்டமாக அடித்துப் பிடித்து நீந்தி வந்து, இந்தப் பெரிய மீன்கள் சிறிய மீன்களிடம் மருத்துவம் பார்க்கச் சொல்லி ஒலியால் சமிக்ஞை கொடுக்கும். இறால்கள்கூட (Shrimp) இப்படி மருத்துவப் பணிகளைச் செய்வதுண்டு.

இறால் போன்ற சிறிய ரக மீன்கள், பெரிய மீன்களின் வாய்க்குள் சென்று அங்கே இருக்கும் நீர்வாழ் பூச்சிகளைச் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துவிடும். அதுவரை பெரிய மீன்கள் வாயைத் திறந்தே வைத்திருக்கும். இதில் சிலிர்ப்பான உண்மை என்னவென்றால், பெரிய வகை மீன்கள் சிறிய வகை மீன்களைத்தான் உணவாகச் சாப்பிடும். ஆனால், மருத்துவம் பார்க்கும்போது மட்டும் வாய்க்குள் சென்றால்கூட அவை சிறிய மீன்களைச் சாப்பிடுவதில்லை. இரு மீன்களும் சமிக்ஞைகள் செய்து இப்படி நடந்துகொள்கின்றன. எவ்வளவு பெரிய புரிந்துணர்வு?

பெரிய மீன்களுக்குச் சிறிய மீன்கள் பார்க்கும் வைத்தியம் அற்புதம் இல்லையா குழந்தைகளே!?

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

‘‘அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்!’’ - திப்பு சுல்தான் பிறந்த தின சிறப்புப் பகிர்வு

 

திப்பு சுல்தான்

தினாறாம் நூற்றாண்டின் மத்தியிலேயே விரிந்திருந்தது மைசூரு. இந்த நகரில் ஓரளவுக்கு வசதி படைத்த மனிதர் ஹைதர் அலி. இவரின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். படுக்கையைவிட்டு நகர முடியாமல் பக்கவாதத்தால் படுத்திருந்த ஷாபாஸ் பேகத்துக்கு, அழகான பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஆனாலும், அவர் மனதில் இருந்த கவலை... தன் கணவருக்கு ஓர் ஆண் குழந்தை இல்லை என்பதுதான். இதுகுறித்து கணவரிடம், ‘‘நீங்கள் நிச்சயம் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்றார். ‘‘வேண்டாம். பெண் குழந்தையே போதும். நீ ஓய்வெடுத்துக்கொள்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஹைதர் அலி. 

‘‘இந்தக் குழந்தை, இறைவன் பணிக்கு...’’

நம்மால் இனி எந்தப் பயனும் இல்லை என்ற மனநிலையிலேயே இருந்த ஷாபாஸ் பேகத்தை, கணவரின் மறுமொழி மேலும் வருத்தியது. இருந்தாலும், தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். தன்னை அடிக்கடி வந்து நலம் விசாரித்த ஃபக்ர் உன்னிஸாவை, தன் கணவருக்குத் திருமணம் செய்துவைத்தார். இரண்டு ஆண்டுகள் ஓடியும் இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனிடையே ஷாபாஸ் பேகம் இறந்துவிட்டார். கடவுளைத் தரிசித்து கண்ணீர் சிந்தினார் ஃபக்ர். 1750-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அப்போதே, ‘‘இந்தக் குழந்தை, இறைவன் பணிக்கு... இனி, பிறக்கும் குழந்தைகள் நமக்கு’’ என்று கணவரிடம் கோரிக்கை வைத்தார். ‘‘பார்க்கலாம்’’ என்றபடியே பதில் அளித்தார் ஹைதர் அலி.

அந்தக் குழந்தைதான் பின்னாளில் சூரப்புலியாக வளர்ந்த திப்பு சுல்தான். அவருடைய பிறந்த தினம் இன்று. அவருக்கு மதம் பாராமல் அனைத்துச் சம்பந்தமான பாடங்களும், கதைகளும் குருமார்களால் போதிக்கப்பட்டன. ‘‘திப்புவின் மனம் முழுவதும் இறைவன் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும்’’ என்றும் கட்டளையிட்டார் ஹைதர் அலி. அதன்படியே அவர்களும் போதித்தனர். ‘‘பிற குழந்தைகளைப்போல் இல்லை, திப்பு’’ என்றார் குருமார். ‘‘எப்படி’’ என்று வினவினார் ஹைதர் அலி. ‘‘ஒருநாள், ஓட்டப்போட்டி நடத்தியபோது திப்புதான் அதில் முதலாவதாக வந்தார். மற்றவர்கள் அவரைப் பாராட்டியபோதும், அவர் அமைதியாகவே இருந்தார்’’ என்றார். 

‘‘வாருங்கள் கிளம்பலாம்!’’

தன்னுடைய 15-வது வயதில் கல்வியுடன், போர்ப் பயிற்சியையும் முழுமையாக முடித்திருந்தார் திப்பு. பதின்மப் பருவத்தில் இருந்த திப்புவை, போர்க்களத்துக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்தார் தந்தை ஹைதர் அலி. அந்த நேரத்தில்தான் பெத்தனூரின் மன்னன், ஹைதர் அலியை வம்புக்கு இழுத்திருந்தார். போரை, திப்பு பார்க்க வேண்டும் என்பதற்காக, பாலம் என்ற நகரம் அருகே ராணுவத் தளபதி காஜிகான் பொறுப்பில்... அவரை விட்டுச்சென்றார் ஹைதர் அலி. சிறிது நேரத்தில் முன்னேறிச் சென்ற ஹைதர் அலியின் படைகள், காணாமல் போயின. மூன்று மணி நேரம் கடந்தது. பதில் எதுவும் ஹைதர் அலியிடம் இருந்து வரவில்லை. 500 வீரர்களை திப்புவிடம் விட்டுவிட்டு, காஜிகான் போர்க்களத்துக்குச் சென்றார். அவர் சென்றும் பதில் இல்லை. பொறுமை இழந்த திப்பு, ‘‘வாருங்கள் கிளம்பலாம்’’ என்று படை வீரர்களுக்குக் கட்டளையிட்டார். போர்க்களத்துக்குள் நுழையாமல் அவர்கள், ஒரு காட்டுப் பாதையில் சென்றனர். அப்போது, திப்புவின் முன் கைக்குழந்தையுடன் தோன்றிய பெத்தனூர் மன்னனின் மனைவி, ‘‘உங்களிடம் சரணடைந்துவிட்டோம். தயவுசெய்து எங்களை எதுவும் செய்துவிடாதீர்கள்’’ என்று மன்றாடினார். வீரர்களை நோக்கித் திரும்பிய திப்பு, ‘‘இவர்கள் மீது சிறு கீறலுமின்றிப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ என்று உத்தரவிட்டார். 

tipu3_16123.jpg

‘‘உனக்கு என்ன சன்மானம் வேண்டும்?’’

இந்தச் செய்தி பெத்தனூர் மன்னனின் காதில் விழுந்த அடுத்த நொடி, அவர் ஹைதர் அலியிடம் சரணடைந்தார். விவரம் அறிந்த ஹைதர் அலியின் படைத்தளபதி மக்பூல்கான், ‘‘சபாஷ் திப்பு... உன் வீரத்துக்கு இதைவிடச் சிறந்த சான்று இருக்க முடியாது’’ என்று புகழ்ந்துரைத்தார். ‘‘இல்லை மக்பூல். நான் அவர்களைச் சிறைபிடிக்கவில்லை. அவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறேன்’’ என்று பதிலுரைத்தார் திப்பு. அதை, காதில் வாங்காத மக்பூல்கான் அவர்களை நோக்கி நகர்ந்தான். ‘‘நில் மக்பூல். அவர்களை நெருங்காதே’’ என்று கத்தினார். புன்னகைத்தபடியே மீண்டும் முன்னேறினான் மக்பூல்கான். அடுத்தநொடி, துப்பாக்கியால் அவனைச் சுட்டுத் தள்ளினார் திப்பு. கொலையையும், ரத்தத்தையும் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தார் திப்பு. சிறிது நேரத்தில் ஹைதர் அலி, காஜிகான், பெத்தனூர் மன்னன் ஆகியோர் அங்கு வந்தனர். ‘‘அருமை திப்பு. சொல், உன் கைதிகளை விடுவிக்க உனக்கு என்ன சன்மானம் வேண்டும்’’ எனக் கேட்டார் ஹைதர் அலி. ‘‘அப்பா... இவர்கள் பெண்கள். கூடவே குழந்தைகள். ஆகவே, இவர்களை விடுவித்துவிடுவதுடன் தக்க மரியாதையுடன் அனுப்பிவைக்கவும்’’ என்று கனிவோடு சொன்னார் திப்பு. இதைக் கண்ட பெத்தனூர் மன்னன் திப்புவின் முன்னால் மண்டியிட்டு, ‘‘பயத்தின் காரணமாக உங்கள் தந்தையிடம் மண்டியிட்டேன். இப்போது மரியாதைக்காக உங்களிடம் மண்டியிடுகிறேன்’’ என்றார் கண்ணீர் மல்க.  

‘‘வலி எல்லோருக்கும் பொதுவானது!’’HyderAli_22452_16386.jpg

இதற்குப் பிறகு திப்புவுக்கு நன்றாகப் போர் பழகிப்போனது. ஆனாலும், ஹைதர் அலி அவருடைய அருகில் இருந்து இன்னும் பல நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தார். 1767-ல் ஆங்கிலேயர்களை எதிர்த்தார். அப்போதுதான் திப்புவுடைய முழுத் திறமையும் வெளிப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் தன்னுடைய படைக்கு புலி சின்னம் பொறித்த கொடியை உருவாக்கினார் திப்பு. 1780-ல் காஞ்சிபுரத்தில் ஆங்கிலேயரான பெய்லியை சிறைபிடித்து, தந்தையிடம் அழைத்துச் சென்றார். ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார் பெய்லி. ஆங்கிலேயர் சரித்திரத்தில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி இது. அவர்களுக்கு எதிராக திப்பு சுல்தான் சிம்ம சொப்பனமாக விளங்கியதும் இந்தப் போரில்தான். அவருடைய போர்த் திறன் ஆங்கிலேயர்களிடம் விவாதிக்கப்பட்டது.

அவர், வில், அம்பு பயன்படுத்தியதையும், வாள் சுழற்றியதையும் ஆங்கில வரலாற்றுக் குறிப்புகள் பதிவுசெய்தன. இந்தப் போர் திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது. காரணம், முதன்முதலாக பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமை. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார் திப்பு. வலியால் வேதனைப்பட்டவர்களிடம் அக்கறையுடன் நலம் விசாரித்தார். ‘‘திப்பு... வா நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் ஹைதர் அலி. ‘‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது அப்பா. அந்த வலியை நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது’’ என்று வருந்தினார். 

‘‘அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்!’’

தந்தையுடன் பல போர்களில் வெற்றி கண்ட திப்பு, 1782-ம் ஆண்டு தன் தந்தையை இழந்தார். சாதாரண குதிரை வீரனாக இருந்து மன்னரான தன் தந்தைக்குப் பிறகு, தன்னுடைய 32-வது வயதில் அரியணை ஏறினார் திப்பு. ‘மக்கள், அரசை நேசிக்க வேண்டும்... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்’ என்ற நல்லெண்ண அடிப்படையில் அவரது ஆட்சி மாற்றம் இருந்தது. எந்த சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தம்; ஆதரவற்ற சிறுமிகளை தேவதாசிகளாகக் கோயில்களுக்கு விற்கும் நடைமுறை ரத்து; உள்நாட்டு வணிகம் ஊக்குவிப்பு; மத நம்பிக்கைகள் மீது மரியாதை போன்ற புதிய தளங்களில் கால்பதித்தார். பட்டு உற்பத்தி, பிராணிகள் வளர்ப்பு, முத்துக் குளித்தல் போன்ற துறைகளை முதன்மைப்படுத்தினார். குறிப்பாக 1787-ம் ஆண்டு மதுவை உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் கூடாது என்று ஆணை பிறப்பித்தார். இதுகுறித்து மிர் சாதிக் என்பவர், ‘‘மது விற்பனையைத் தடை செய்தால், அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார். அதற்கு அவர், ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான். அரசாங்கத்துக்கு அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான். அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’ என்று பதிலுரைத்தார். 

‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு!’’

இப்படி அவர் அறிவித்த ஒவ்வோர் ஆணைகளையும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். குற்றம் புரிந்த விவசாயிகளுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்பட்டு வந்தது. அதற்குப் பதில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வைத்தார். அதுமட்டுமல்லாது எதிரிகளிடம்கூட விசுவாசத்துடன் நடந்துகொண்டார். ஒருமுறை மங்களூர் கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தது திப்புவின் படைகள். ஆனாலும் கோட்டையைப் பலப்படுத்திக்கொண்டே இறுதிவரை போராடிக் கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில், இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன் கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல். எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து, ‘‘உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’ என்று பாராட்டினார். மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல், ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில். 

tipu%202_16030.jpg

ஜாகோபியன்களுக்கு ஆதரவு!

ஃபிரான்ஸ் மன்னர் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஜாகோபியன்களுக்கு ஆதரவு அளித்தார் திப்பு. இதனால் அவர்கள் ஃபிரான்ஸிலிருந்து விரட்டப்பட்டனர். அவர்களை மைசூருக்கு அழைத்து உபசரித்தார். பின்னர், ஜாகோபியன்களின் புரட்சி வெற்றி பெற்றபோது அந்த விழாவில் கலந்துகொண்டார். இதில்தான் திப்புவுக்கு, அவர்கள் ‘குடிமகன் திப்பு’ என்னும் பட்டத்தை அளித்தனர். அத்துடன், ஆங்கிலேய சிப்பாயைக் கடித்துக் குதறும் இயந்திரப் புலி கொண்ட உருவத்தையும் பரிசாக வழங்கினர். அந்தப் புலியின் தோள்பட்டையில் விசை ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதை, திருகினால் ஆவேசமாக உறுமிக்கொண்டே கீழே விழுந்து கிடக்கும் சிப்பாயைக் கடித்துக் குதறும் ஒலி வடிவில் அது அமைக்கப்பட்டிருந்தது. 

‘‘மணி ஓசை எந்த மதத்தைச் சேர்ந்தது?’’

‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’ என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்தவர் திப்பு. துரோகிகளைக்கூட மன்னித்துவிடக் கூடியவர். இவருடைய நெருங்கிய கமாண்டர் முகம்மது அலி. அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார். ‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்டார். ‘‘அவன் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன் முன்பு செய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’ என்றார். அதுபோல் எல்லா மதங்களையும் உயர்வாகவே கருதினார். எல்லோரிடமும் அன்பாகவே நடந்துகொண்டார். மசூதி ஒன்றைக் கட்டவேண்டி நிதி கேட்டு திப்புவிடம் மதகுரு ஒருவர் வந்திருந்தார். அவருக்குத் தாராளமாக நிதி அளித்து உதவி செய்தார். அப்போது மதகுரு, ‘‘இதுபோன்று கோயில்கள், தேவாலயங்கள் கட்டவும் நிதி தருகிறீர்களே... அப்படியென்றால், நீங்கள் இஸ்லாத்தை நம்பவில்லை என்றுதானே பொருள்? இஸ்லாம் மீது நம்பிக்கை இருப்பின் எதற்காக இதர இறை சிந்தனைகளை வளர்க்கிறீர்கள்’’ என்று சந்தேகத்துடன் வினவினார். திப்பு உடனே அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்று... அங்கு தெரிந்த ரெங்கநாதன் கோயிலைக் காட்டி, ‘‘இங்கு ஒலிக்கும் மணி ஓசை எந்த மதத்தைச் சேர்ந்தது’’ என்று வினவினார். பதில் தெரியாத மதகுருவிடம் மதத்தைப் பற்றிப் பேசி நிறையப் புரியவைத்தார். 

ஒருநாள் திப்புவின் திருமண நாளன்று ஹைதர் அலி, ‘‘உனக்கு என்ன பரிசு வேண்டும்’’ என்று கேட்டார். ‘‘ஒரு நூலகம் அமைத்துக் கொடுங்கள்’’ என்றார் திப்பு. ‘‘படிக்க வேண்டிய அனைத்தையும் படித்து முடித்துவிட்டாய் என்று அல்லவா நினைத்தேன். இங்குள்ள அத்தனை நூல்களிலும் ஒவ்வொரு பிரதியை வாங்கிவரச் சொல்கிறேன்’’ என்றார் தந்தை. சிரித்தபடியே திப்பு, ‘‘இங்கு மட்டுமில்லை, அப்பா... உலகம் எங்கிலும் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் சேகரிக்க விரும்புகிறேன்’’ என்றார். ‘‘ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு மொழியில் அல்லவா இருக்கும்’’ என்றார் தந்தை. ‘‘அதனால்தான் அவைகளை மொழிபெயர்க்க விரும்புகிறேன்’’ என்றார் திப்பு. அவருடைய விருப்பப்படியே அது, பெரிய நூலகமாக பின்னாளில் வளர்ச்சி பெற்றது.

sword_16196.jpg

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்!’

‘நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற கொள்கையிலேயே எல்லோரிடமும் போரிட்டார். இதனால் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் அச்சத்தை விதைத்த அசகாய சூரராக திப்பு விளங்கினார். ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ என்று அவரது அரசை லண்டன் பத்திரிகைகள் எழுதின. ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டு இறந்துபோனார் திப்பு. அவருடைய வீரமரணத்தைக் கேள்விப்பட்ட ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ், ‘‘இன்று முதல் இந்தியா நம்முடையது’’ என்றான். 

மனதளவில் யாருக்கும் துன்பம் தரக் கூடாது என்று கல்வி பயின்ற அவர், பின்னாளில் ஆங்கிலேயர் போற்றும் அளவுக்கு ஒரு சிறந்த போர் வீரனாக விளங்கினார். ‘‘திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா, எப்போதோ விடுதலை பெற்றிருக்கும்’’ என்று திப்புவைப் பற்றி பின்னாளில், காந்தியடிகள் ஒரு நாளிதழில் எழுதியிருந்தார்.

சிறுவயது முதல், புத்தகப் புழுவாக அமைதியான வாழ்க்கை நடத்திவந்த திப்புவை... ஆக்ரோஷமான விடுதலைப் போர் வீரனாக உருமாறச் செய்த பெருமை, அவரைச் சுற்றியிருந்த எதிரிகள் மற்றும் ஆங்கிலேயரையேச் சாரும்.

vikatan

  • தொடங்கியவர்

விஜய்யின் ரசிகர் உருவாக்கிய ‘பைரவா’ பாடல்..!

 

bairavaa_18096.jpg

‘பைரவா’ படத்தின் இசை இன்னும் வெளியாகாத நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வரிகளை பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பைரவா படத்தின் ஒபனிங் பாடல் மற்றும் ஒரு மெலடி பாடலின் வரிகளை வைரமுத்து வெளியிட்டிருந்த நிலையில், மெலடி பாடலின் வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு விஜய்யின் ரசிகரான கதிர், அந்த வரிகளுக்கு ஏற்ப இசையமைத்து அந்த பாடலை பாடி தற்போது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த பாடல் வைரலாக, அவரை தொடர்பு கொண்டு பேசினோம். 

kathir_18376.jpg

“எனக்கு இசையில் ஆர்வம் அதிகம். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் தான் இசை பயின்றேன். இப்போ நானும் இசையமைப்பாளராகணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதற்காக முயற்சியில் இருக்கும் போது தான் வைரமுத்து சார் பைரவா படத்தின் பாடல் வரிகளை வெளியிட்டிருந்தார். பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்பு பாடல் வரிகளை யாரும் வெளியிட மாட்டாங்க. ஆனால், வைரமுத்து சார் பாடல் வரிகளை வெளியிட்டதால், அதை பார்க்கும் போது இதற்கு ஏன் இசையமைத்து நாமே பாடக்கூடாதுன்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சது தான் இது. ஒரு வாரத்துல பாட்டை முடிச்சு ரிலீஸ் பண்ணிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்று குஷியாக பேசி முடித்தார் கதிர். 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

இந்தியாவில் நடந்த 6 பிரம்மாண்ட திருமணங்கள் எது தெரியுமா?

 

திருமணங்கள்

பிரமாண்டமாய் திருமணம் நடத்துவதில் மிகவும் பெயர்போன நாடு இந்தியா. இங்கு திருமணங்களுக்காகச் செலவிடப்படும் தொகை மற்ற நாடுகளைவிட அதிகம். இந்தியர்கள், தங்களின் ஆடம்பரத்தைத் திருமணத்துக்காகச் செய்யும் செலவுகளில்தான் வெளிப்படுத்துவார்கள். அப்படி இந்தியாவில் நடந்த 6 பிரமாண்ட திருமணங்கள் எவை எனப் பார்ப்போம்...

ஜனார்த்தன ரெட்டி இல்ல திருமணம் - 550 கோடி ரூபாய்!

1_06034.jpg

பி.ஜே.பி கட்சிப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி, தன் மகளின் திருமண அழைப்பிதழை எல்.சி.டி வடிவில் தயாரித்ததோடு... அதில், திருமணத்துக்கு அனைவரும் வரும்படி பேசியிருந்தார். மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியது. திருமணத்துக்கு பெங்களூரு அருகே 35 ஏக்கர் நிலப்பரப்பில், கன்னடத் திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றும் சசீதர் அடபாவைக்கொண்டு, விஜயநகர ராஜ்ஜியத்தைப்போன்று செட் அமைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக இதற்கான பணிகள் நடைபெற்றன. இந்தத் திருமண விழாவில் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில், பிரபல பாலிவுட், டோலிவுட் எனப் பல கலைஞர்கள் பங்கேற்றனர். மணப்பெண்ணின் முகூர்த்தப் பட்டின் விலை மட்டும் 8 கோடி ரூபாய் என்கிறார்கள். தங்கத்தால் சரிகை நெய்து, அதில் சிறுசிறு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட சேலையை மணமகள் பிராமணி அணிந்திருந்தார். மணமகனுக்கும் வைரக்கற்கள் பதித்த விலை உயர்ந்த ஆடை. 90 கோடி ரூபாய் அளவில் பெண்ணுக்கு நகைகள் சீதனமாய் வழங்கப்பட்டன. சமைக்க, உணவு பரிமாற மட்டும், 12,500 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரபலங்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். 

ரவி பிள்ளை மகள் திருமணம் - 55 கோடி ரூபாய்!

2_11198.jpg

வெளிநாட்டு வாழ் இந்தியரான ரவி பிள்ளை ஒரு தொழிலதிபர். அவர், தன் மகளின் திருமணத்துக்கு 55 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். இவர், மகள் ஒரு டாக்டர். திருமணத்துக்கு 30,000 விருந்தினர்கள் வந்திருந்தனர். பிரபல நடிகை, நடிகர்கள் பங்கேற்றனர். திருமணத்துக்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. ‘பாகுபலி’ பிரமாண்ட செட்டிங் அமைத்து ரசிகர்களை அசத்திய ஆர்ட் டைரக்டர் சாபு சிரில், மூன்று மாத உழைப்பில் இந்த செட்டை அமைத்துக்கொடுத்தார். இந்த செட்டுக்கு மட்டும் ரூ.23 கோடி செலவாகியுள்ளது. 600 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்தத் திருமணத்தையொட்டி 10 கோடி ரூபாய் பணத்தை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளைகள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தார் ரவி பிள்ளை. 

சஹாரா வீட்டுத் திருமணம் - 552 கோடி ரூபாய்!

3_11320.jpg

2004-ம் ஆண்டு சுப்ரதா ராயின் இரு மகன்களுடைய திருமணம் நடந்தது. இது, லக்னோவில் உள்ள சஹாரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இவர்களின் திருமண ஆடைகளை ரோஹித் பாலா, சபயாசாஷி என்ற கலைஞர்கள் வடிவமைத்தனர். திருமண மண்டபம் முழுவதும் மெழுகு விளக்குகளாலும், விலையுயர்ந்த கண்ணாடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 110-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கபில் தேவ், அனில் அம்பானி போன்ற பல பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். 

லக்ஷ்மி மிட்டல் வீட்டுத் திருமணம் - 350 கோடி ரூபாய்!

4_11447.jpg

2004-ம் ஆண்டு லக்ஷ்மி மிட்டலின் மகள் வனிஷாவுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. மாப்பிள்ளை அமிட் படியா. இது, வெர்சைல்ஸ் அரண்மனையில் மிகப் பிரமாண்டமாக நடந்த திருமண நிகழ்வாகும். இதில், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், அக்‌ஷய் குமார், சைஃப் அலி கான், ராணி முகர்ஜி போன்ற பாலிவுட் நடிகர், நடிகைகள் பங்கேற்று நடனம் ஆடினார்கள். இந்த நடனத்துக்கு ஃபரா கான் நடன இயக்குநராக இருந்தார். 

ஜி.வி.கே. குரூப் வீட்டுத் திருமணம் - 100 கோடி ரூபாய்!

5_06572.jpg

ஜி.வி.கிருஷ்ணா ரெட்டியின் பேத்தி மல்லிகாவுக்கும், இந்து குரூப் சித்தார்த்துக்கும் ஹைதராபாத்தில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். நல்ல வாசனைமிக்க மல்லிகைப் பூக்களைக்கொண்டு திருமண மண்டபம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் பலரும் அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் - 6 கோடி ரூபாய்!

6_11102.jpg

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் (சாந்தி) வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமிக்கும் ஜூலை 7, 1995 அன்று திருமணம் நடைபெற்றது. இதில், பந்தல் அமைக்க மட்டுமே 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2,500 வி.ஐ.பி நாற்காலிகளுக்குச் செலவான தொகை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய். 10,000 சாதாரண நாற்காலிகளுக்குச் செலவான தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். சாப்பாட்டு அறையில் 12,800 சேர்கள் போடப்பட்டு இருந்தன. அதன் செலவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய். 4,800 சமையல் மேஜைகள் போடப்பட்டு இருந்தன. அந்த நேரத்தில், 6 கோடி ரூபாய் என்பது ஒரு மிகப் பெரிய தொகை. இதில், அரசியல் தலைவர்களும், நடிகை நடிகர்களும் கலந்துகொண்டனர். 

பிரமாண்டமாய் திருமணத்தை நடத்த அதிகம் ஆர்வம் காட்டுவது பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டும்தான். ஆடம்பரத் திருமணங்கள்தான் ஒருவருடைய மதிப்பையும், மரியாதையையும் கூட்டும் என்ற நம்பிக்கையில், இன்றும் பலர் இரண்டு, மூன்று நாட்கள் சந்தோஷத்துக்காக பணத்தைத் தண்ணீர்போலச் செலவிடுகிறார்கள். இந்த ஆடம்பரத்தின் மீது இருக்கும் மோகம் எப்போது குறையும்??

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

99p1.jpg

facebook.com/saravanan.chan dran.77: இரண்டு நாட்களுக்கு முன்பு வரைக்கும் ரோட்டில் ஓர் இடத்தில் மட்டும் கூட்டம் தெரிந்தால், அது டாஸ்மாக்; இப்போது ஏ.டி.எம்!

facebook.com/prabhakrr: என்கிட்ட இருக்கிற ரெண்டு மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்ருவேன். பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல?

facebook.com/vinayaga.murugan.7: இந்தப் போர்களத்துலேயும் பெர்சனல் லோன் வாங்கிக்கச் சொல்லி செல்போனில் அழைப்பவர்களை என்ன சொல்வது? முன்வாசலில் அவ்வளவு கூட்டம் நிக்குது... பின்வாசல் வழியா கொடுப்பாங்களா?

twitter.com/SettuOfficial: ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு 2,000 ரூபாய் கொடுத் தால், `இதுதான் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டா?’னு வாங்கிப் பார்த்துட்டு, `சரி காசைக் கொடுங்க’ன்றான்!

twitter.com/Baashhu: `ஏன்டப்பா இவ்ளோ பணம் வெச்சுருக்க?’னு திட்டுவாங்குற முதல் தலைமுறை நாம்தான்!

99p2.jpg

twitter.com/ThirutuKumaran: ஒருத்தன் கேக்குறான்... `இன்னிக்கு 500, 1,000 ரூபாய்களை திருப்பதி உண்டியலில் போட்டா, அது பாவத்துல சேருமா... புண்ணியத்துல சேருமா?’

twitter.com/Kannan_Twitz: 1,000 ரூபாய் கொடுத்து ஐந்து நிமிடத்தில் கடவுளைப் பார்த்தவனையும், ஐந்து மணி நேரம் கழித்து ATM-ஐ பார்க்கவைத்த பெருமை மோடியையே சேரும்!

twitter.com/amas32: `கடமையைச் செய்... பலனை எதிர்பார்க்காதே’ என்ற வாக்கியத்துக்குச் சரியான எடுத்துக்காட்டு மீம் உருவாக்குபவர்கள்தான் # யாரு செஞ்சதுன்னே தெரிவது இல்லை!

twitter.com/anithatalks: சுவிஸ் பேங்க்ல இருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கச் சொன்னா, சுருக்குப் பையில இருக்கிற பணத்தைப் புடுங்குறானுங்க!

twitter.com/Kannan_Twitz: நம்மாளுங்க 500 ஓவா நோட்டைக் கொடுத்தாலே அஞ்சாறு ஆங்கிள்ல பார்ப்பாங்க. இதுல 2,000 ஓவா நோட்டைக் கொடுத்தா இருபது ஆங்கிள்ல வெரிஃபை பண்ணுவாங்களே!

twitter.com/erode_kathir: `கூட்டம் குறையட்டும் பேங்குக்குப் போலாம்’கிறது, `அலை ஓயட்டும் கடல்ல குளிக்கலாம்’ போல் ஆகிடும்னு நினைக்கிறேன் :)

vikatan

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person
 

புதிய 2000 ரூபாய் நோட்டு பார்பி பொம்மையின் பாவாடை போல இருக்கிறது என்று கிண்டல் அடித்து பதிவு போட்டிருந்தார் நண்பர். மேலோட்டமாக பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும், நிறைய யோசிக்க வைத்தது. இதற்குப் பின்னால் `Pink for girls Blue for boys' உளவியல் நம்மை இயக்குகிறதோ, நாம் அறியாமலே...

பெண் ஆண் குழந்தைகளுக்கான பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்காக, குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் முன்வைக்கப்பட்ட `Pink for girls Blue for boys' கோஷம், 80களில், சந்தையில் உறுதியாக நிறுவப்பட்டதாக சொல்கிறார் வரலாற்றாசிரியர் Jo Paoletti. பிங்க் கலர் பெண்மைத்தன்மையையும், ப்ளூ கலர் ஆண்தன்மையையும் பிரதிபலிப்பதாக `கார்ப்பரேட் சந்தைக்கார்கள்' ஒரு `வெளக்கத்தை' எழுதினார்களாம்.

அதிலிருந்து ஏஞ்சல், பார்பி பொம்மை போல பெண் குழந்தைகளுக்கான `நளினமான' விளையாட்டு சாமான்கள், வேலைப்பாடான கவுன்கள் பிங்க் நிறத்திலும், பைக், கார்கள் மாதிரியான ஆண் குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், ஜீன்ஸ் பேண்ட், சட்டைகள் ப்ளூ நிறத்திலும் பெருவாரியாக வர ஆரம்பித்தன.

.இன்னைக்கும்...பிங்க்கும், ப்ளூவும் இருபாலரும் பயன்படுத்துகிற நவீன தலைமுறை சிறகடிக்கும் இன்னைக்கும்... இதில் பெரிய மாற்றமில்லை. கலரில் ஆரம்பித்து, விளையாட்டுப் பொருட்களின் தன்மை வரை அனைத்தும் பொம்பளப் பொண்ண `அழகு தேவதையாகவும்', ஆம்பளப் பய்யனை `உய்விக்க வந்த சூப்பர்மேனாகவும்' கருதுகின்றன. இதில் ஆரம்பிக்கிறது stereotyping of gender roles எனும் பாலினப் பேதம். இது பொது உளவியலிலும் ஆழப் பதிந்திருக்கிறது.

பெண்ணுக்காக வரையறுக்கப்பட்ட எதுவும் பிங்க்காக இருக்கும்பட்சத்தில் நமக்கு பிரச்சனையில்லை. `ச்ச்சோ ஸ்வீட்ட்'! ஆனால், ஆணுக்கானது என்பதில் பிங்க் இருந்தால் போச்சு ! அது மோசமாக கிண்டலடிக்கப்படும், பகடி செய்யப்படும். ராமராஜனின் `பஞ்சு மிட்டாய் சட்ட'யாகட்டும் ரூபாய் நோட்டாகட்டும்.

stereotyping of gender roleன் மிக மோசமான வடிவம் பர்பி பொம்மை, அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பெண்ணுக்கான கலராக பொதுசமுதாயம் நினைக்கும் நிறத்தில் (அதில் நமக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விசயம்) ரூபாய் நோட்டு இருக்கக் கூடாதா?

ரூபாய் நோட்டு பார்பி பொம்மையின் பாவாடைக் கலரில் இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை நண்பா ?

அதுசரி, ரூபாய் நோட்டு ஆணா பெண்ணா ? 1f642.png:) 1f642.png:)

(பிகு : இது அரசியல் பதிவுமல்ல, பெண்ணாதிக்க பதிவுமல்ல 1f61b.png:P )

vikatan

நாம ரூவா நோட்டை அடிக்க முடியாம திணறிக்கிட்டிருக்கோம்... ஆனா சைனாக்காரன் அதே டிசைன்ல மணி பர்ஸ் தயாரிச்சு நம்மூருக்கு அனுப்பிட்டான்!

15094959_1496846280331778_67752290582717

  • தொடங்கியவர்

15068914_1190300631018629_13026960956662

அவுஸ்ரேலியா அணியின் சுழல் பந்து வீச்சாளர்
நேத்தன் லியோன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்
 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Nathan Lyon

  • தொடங்கியவர்

126p1.jpg

ஹிட்டா? ஃப்ளாப்பா?

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக இனி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது எனக் கடந்த வாரம் பிரதமர் அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. கறுப்புப் பணத்திற்கு எதிரான அதிரடியான அறிவிப்பு என ஒருபக்கம் #indiafightsblackmoney #blackmoney #blackmoneycleanup டேக்குகளில் பாராட்டுகள் குவிந்தபோதும், கையில் இருக்கும் பணத்தை மாற்ற முடியாமலும், சில்லறைத் தட்டுப்பாட்டாலும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். இதன் காரணமாக #currencyban #modisurgicalstrikeoncommonman போன்ற டேக்குகளில் எதிர்ப்பலை கரை கடந்து ஓடியது. #அந்த ஸ்விஸ் பேங்க் கறுப்புப் பணம்..?


126p2.jpg

எதிர்பார்க்கலேல்ல...!

கருத்துக் கணிப்புகளைத் தாண்டி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற செய்தி பலரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ‘நான் எட்டாவது பாஸ். நீங்க எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயில்ணே’ மாதிரியான ரிசல்ட். ஏன்னா, ஹிலாரி கிளின்டனை விட அதிகத் தொகுதிகளில் ட்ரம்ப் வெற்றி பெற்றபோதும், ஹிலாரி பெற்ற வாக்குகள் அதிகம்.  அதிபரான செய்தி வெளியான கொஞ்ச நேரத்தில் அவரது எதிர்ப்பாளர்கள் பலரும் டி.வி-யை உடைத்தும், போராட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் #donaldtrumpwins #prayforamerica டேக்குகள் உலக அளவு ட்ரெண்ட் அடித்தது. #அமெரிக்காவுக்கு ஒரு பிரச்னைனா ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் வருவாங்கதானே?


126p3.jpg

காற்று வெளியிடை!

இயக்குநர் மணிரத்னத் தின்  ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இதில் நடிகர் கார்த்தி அடையாளமே தெரியாத அளவு பல வயது குறைந்தது மாதிரி இளைமைத் தோற்றத்தில் உள்ளார். இதனால் சினிமாப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரையும் இந்த போஸ்டர் கவர்ந்ததால், `500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற மேட்டரையும் தாண்டி #KaatruVeliyidai ட்ரெண்ட் ஆனது. #கொம்பன் இப்ப ஹேண்ட்ஸம் ஆயாச்சு!


126p4.jpg

சத்தமில்லாத சாதனை!

 இயக்குநர் ஹரி - நடிகர் சூர்யாவின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிங்கம்-3’ படத்தின் டீஸர் கடந்த வாரம் வெளியானது. டீஸரில்தான் சத்தம் அதிகமே தவிர, Youtube-ல் வெளியான ஒரு வாரத்தில் 64 லட்சம் பார்வைகளைக் கடந்து சத்தமில்லாமல் சாதனை செய்துள்ளது. டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என எது ஹிட் அடித்தாலும், உடனே ஹேஷ்டேக் போட்டுக் கொண்டாடுவது வழக்கமாகியுள்ளது. இதற்கும் #s3teaserhits6mviews என்ற டேக்கை ட்ரெண்ட் ஆக்கினர். 2.94 லட்சம் பேர் இதுவரை இந்த ஹேஷ்டேக்கைப் பார்த்ததாக ட்விட்டர் சொல்கிறது. #இவ்வளவு கூட்டம் தியேட்டர் வந்தாலே போதுமே பாஸ்!


126p7.jpg

என்னா வேகம்!

 நம்ம நாட்டுல புல்லட் ரயிலைவிட வேகமானது வதந்தி. புது 2,000 ரூபாய் நோட்டில் மைக்ரோசிப் இருக்கிறதாகவும், `இந்தப் பணத்தை சாட்டிலைட் மூலமாகவே ட்ராக் செய்யலாம்'னும் வதந்தி பரவி பலருக்கும் கிச்சுகிச்சு மூட்டுச்சு. அதே நேரத்துல வட கிழக்கு மாநிலங்களில் சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக சமையல் உப்பின் வரத்து குறைஞ்சதா வதந்தி பரவியதால மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகி இருக்காங்க. இந்த விஷயம் உண்மையா பொய்யானே யோசிக்காம 200 ரூபாய்க்கெல்லாம் உப்பை வாங்கி வெச்சிருக்காங்க பாவம். அங்கதான் அப்படின்னா... திருவள்ளூர் பக்கத்துலயும் இப்படி உப்பு வாங்க அடிச்சிக்கிட்டது அதைவிட சோகம். ட்ரெண்ட்டில் #salt இடம் பிடிச்சதும், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கில் வதந்திகளைப் பரப்பாதீர்னு சொல்ற அளவு நிலைமை போயிருக்கு. #உப்புப் பெறாத விஷயம் இல்ல!


126p5.jpg

வரலாற்று நாயகன்!

 கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வீரர் சச்சின் டெண்டுல்கர். முறியடிக்க முடியாத பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சின், தனது 200-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை 2013-ம் ஆண்டில் மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் விளையாடினார். இன்றுவரை அதிகப் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட போட்டியாக இது கருதப்படுகிறது. இப்பேர்ப்பட்ட மிக முக்கியமான போட்டி நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனாலும் இவரை மறக்க முடியாத ரசிகர்கள் #ThisDayThatYear எனத் தங்களது நினைவுகளை ஃப்ளாஷ்பேக் ஓட்டியதில் ட்விட்டர் சுவாரசியமானது. #மறக்க முடியுமா?


126p6.jpg

10 லட்சம்!

`ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுனுக்குத் தெலுங்கு தேசத்தைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் ட்விட்டரில் இவரைப் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டுதான் ட்விட்டரில் தனது கணக்கைத் துவக்கியிருந்தார் இவர். மிக விரைவில் 10 லட்சம் ஃபாலோயர்களைப் பெற்ற டோலிவுட் நாயகன் என்ற அதிரடி சாதனையைப் படைத்துள்ளார். #1MillionFollowersForAlluArjun என்ற டேக்கில் ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தச் சாதனை இலக்கை அடைய உதவிய அனைவருக்கும் தனது நன்றியை அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். #வாழ்த்துகள் பாஸ்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.