Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சீறி பாய்ந்த ராக்கெட்...பார்த்து ரசித்த சென்னை மக்கள்!

இன்று மாலை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆறு செயற்கைகோள்கள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இந்த முறை மாலையில் விண்ணில் ஏவப்பட்டதால் விண்ணில் சீறி நெருப்பு பிழம்புடன் பாய்வதை சென்னை மக்கள் தெளிவாக கண்டனர்.

12369037_1038167462908710_74641876205776

12341303_1038167582908698_66233026187489

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறு அடி நிலமே சொந்தமடா...

தென் கொரிய நிறுவன ஊழியர்களுக்கு சவப்பெட்டி சடங்கு!

 

  • தொடங்கியவர்

12391012_1855172428042492_80660148836745

'பாட்டில் ஆக்ஸிஜன்' விலைக்கு வாங்கும் சீனர்கள்

சீனாவில் காற்று மாசின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள். தற்போது, சுத்தமான காற்றை 'வைட்டலிட்டி ஏர்' என்ற கனடா நாட்டு நிறுவனத்திடம் விலை கொடுத்து வாங்க உள்ளனர். முதற்கட்டமாக, 500 பாட்டில்களை சீனாவுக்கு அந்நிறுவனம் அனுப்பியுள்ளது.

என்ன வாழ்க்கையடா:(

  • தொடங்கியவர்

1933273_955838504464844_3626641930549243

மேற்கிந்தியத் தீவுகள் கிர்க்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக கலக்கிய 'குட்டி ராட்சதன்' ரிக்கார்டோ பவல் பிறந்தநாள்

  • தொடங்கியவர்
சித்தார்த்தின் கருத்து எவ்வளவு உண்மையாகிவிட்டது - 5 வருடம் கழித்து வைரலாகும் வீடியோ!
 

தொடர்ந்து பெய்த மழையால் சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் தீவிரமாக உதவிகள் செய்தனர்.

சென்னை மட்டுமின்றி கடலூர் பகுதிகளிலும் சித்தார்த் சென்று உதவிகள் செய்தார். மழையால் சித்தார்த்தும் பெரிதாக பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தத் தடையும் சித்தார்த்தை நிறுத்தவில்லை. இந்நிலையில் சித்தார்த் ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு மனிதராகவும் இளைஞர்கள் மத்தியில் இடம்பிடிக்க பல வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய வீடியோக்கள், நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் என இப்போது வாட்ஸப், முகநூல் உள்ளிட்ட தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் முகநூல் குழுக்களை இணைப்போம் என்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோ தற்போது மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. நாம் வாழும் உலகம் எவ்வளவு அவசரமாக இருக்கிறது, எவ்வளவு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறது என்பதை மும்பையில் நடந்த குண்டு வெடிப்பை மேற்கோள் காட்டி சித்தார்த் பேசிய ஆங்கிலப் பேச்சு இப்போதைய நிலைக்கு அப்படியே பொருந்தும்படி இருக்க அதை அதிகம் பகிர்கிறார்கள்.

Siddharth-Looking-Sweet-5-7.jpg

 

மும்பை குண்டு வெடிப்பு நடந்த போது எல்லா மீடியாக்களும், டிவிக்களும் விடாது பேசினார்கள் அப்படியே சில நாட்கள் கழித்து நானும் என் நண்பர்களும் அதே மும்பையில் அதிகாலையில் நடந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட ஆச்சர்யம் ‘எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள்,உண்மையில் இவர்கள் மறந்துவிட்டார்கள்’; என்பதுதான் எனக் கூறும் போது கண்டிப்பான உண்மையாகவே படுகிறது அந்த வீடியோ. நாம் வாழும் தலைமுறைகள் வயதை அடிப்படையாகக் கொண்டு இடைவெளியில் இல்லை நேரத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. ஒரு நிகழ்வுக்கு சில மணி நேரங்களோ, அல்லது நாட்களோ தான் அங்கீகாரம் என்பதை விளக்கும் வீடியோவாக வெள்ளம் - பீப் பாடலால் மறைக்கப்பட்ட நிலையைக் கொஞ்சம் அதிகமாகவே உணர்த்துகிறது எனலாம்.

வீடியோவிற்கு: 

http://www.vikatan.com/cinema/article.php?aid=56436

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 17

 

625varalru.jpg1398 : சுல்தான் மெஹ்­மூதின் படை­களை டில்­லியில் வைத்து தைமூர் படைகள் தோற்­க­டித்­தன.

 

1718 : ஸ்பெயி­னுக்கு எதி­ராக பிரிட்டன் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1819 : சிமோன் பொலிவர், கொலம்­பி­யாவின் விடு­த­லையை அறி­வித்தார்.

 

1834 : அயர்­லாந்தின் முத­லா­வது ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1862 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போரின்­போது, டென்­னஸி, மிசி­சிப்பி, கென்­டக்கி ஆகிய மாநி­லங்­களில் இருந்து யூதர்கள் வெளி­யேற்­றப்­பட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

 

1903 : ரைட் சகோ­த­ரர்கள் அமெரிக்­காவின் வட கரோ­லி­னாவில் முதன்­மு­தலில் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய இயந்­திரம் கொண்ட  வான்­க­லத்தில் பறந்­தனர்.

 

1907: பூட்டானின் முத­லா­வது மன்­ன­ராக உகியென் வங்க்சுக் முடி­சூட்­டப்­பட்டார்.

 

1926 : லித்­து­வே­னி­யாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியை அடுத்து ஜன­நா­யக அரசு கலைக்­கப்­பட்டு அண்­டானஸ் சிமெத்­தோனா ஆட்­சியைக் கைப்பற்றினார்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: ஜப்­பா­னியப் படைகள் வடக்கு போர்­ணி­யோவில் இறங்­கினர்.

 

1961 : கோவாவை இந்­தியா, போர்த்­துக்­க­லிடம் இருந்து கைப்­பற்­றி­யது.

 

1967 : அவுஸ்­தி­ரே­லியப் பிர­தமர் ஹரோல்;ட் ஹோல்ட் விக்­டோ­ரியா மாநி­லத்தில் போர்ட் கடலில் நீந்­தும்­போது காணாமல் போனார். பின்னர் இவர் நீரில் மூழ்கி இறந்து விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

 

1970 : போலந்தில் கிதி­னியா நகரில் ரயிலில் இருந்து இறங்­கிய தொழி­லா­ளர்­களை நோக்கிச் சுட்­டதால் பலர் கொல்­லப்­பட்­டனர்.

 

1973 : ரோம் நகர விமான நிலை­யத்தை  தீவி­ர­வா­திகள் தாக்­கி­யதில் 30 பய­ணிகள் கொல்­லப்­பட்­டனர்.

 

1983 : லண்­டனில் பல்­பொருள் சந்­தையில் குண்டு வெடித்­ததில் 7 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1986: போதைப் பொருள் வர்த்­த­கத்­துக்­கெ­தி­ராகக் குரல் கொடுத்த கொலம்­பி­யாவின் ஊட­க­வி­ய­லாளர் கில்­லெர்மோ இசாசா சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

 

1989 : 25 ஆண்­டு­களின் பின்னர் பிரே­ஸிலில் முத­லா­வது பொதுத்­தேர்தல் இடம்­பெற்­றது.

 

2009: லெப­னா­னுக்கு அருகில் கப்­ப­லொன்று மூழ்கியதால் 44 பேர் பலியாகினர்.

 

2014: அமெ­ரிக்­கா­வுக்கும் கியூபாவுக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வுகள் 55 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் ஸ்தாபிக்­கப்­பட்­டன.
 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=625#sthash.YpwyHmPc.dpuf
  • தொடங்கியவர்

12339240_956303794418315_638817747603985

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், மிகச் சிறந்த வீராங்கனையுமான சார்லட் எட்வர்ட்ஸின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

12346563_1038264426232347_19966380145943

டிசம்பர் 17: ரைட் சகோதரர்கள் முயற்சியினால் முதன் முதலாக வானில் விமானம் பறந்த நாள் இன்று. (1903)

உலகை சுருக்கிய ரைட் சகோதரர்களுக்கு நமது வாழ்த்துகளை பகிர்வோம்..

  • தொடங்கியவர்

12342719_946633895427237_428625606230346

உடல் நலம், மன நலம் காக்க
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…
 

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி
கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது ­.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள்
கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள்.
க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு
உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்
செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ­ ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்
ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச்தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும். உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும் ­. ஒழுங்காகசாப்பிடத்தோன்று ம். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது
பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருட ­ன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது
காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்

  • தொடங்கியவர்
 

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? | மக்கள் கருத்து

  • தொடங்கியவர்

12347798_956290491086312_134352620694589

இலங்கையின் தங்க மங்கை சுசந்திகா ஜயசிங்கவின் பிறந்த நாள் இன்று.
ஒலிம்பிக் பதக்கம், இன்னும் பல சர்வதேச பதக்கங்களையும் பெருமைகளையும் இலங்கைக்குப் பெற்றுத் தந்த குறுந்தூர ஓட்ட ராணி.

  • தொடங்கியவர்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் செல்போனை வாங்கியது எப்போது?

 

புதுடெல்லி: டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தான் முதன்முதலில் செல்போன் வாங்கியது எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

தேடல் இணையதளமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது முறையாக அவர் இந்தியா வந்துள்ளார்.

sundar%20pichai01.jpg

டெல்லியில் எஸ்.ஆர்.சி.சி மாணவ-மாணவிகளிடம் இன்று அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ''கல்விமுறை படைப்பாற்றலை ஊக்குவிக்கும் அற்புதமான இடம் கூகுள். இது உங்கள் கனவுகளை அடையவும், சாதிக்கவும் ஏற்ற இடம். மேலும், புதியதாக கண்டுபிடிக்க பல வாய்ப்புகளை கூகுள் ஏற்படுத்தி தருகிறது. எப்போதும் நல்லதை சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும்.

கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இன்னும் இணையதள வசதி குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு இணையதள வசதியை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதேபோல், பல பெண்களுக்கும் இணையதள வசதி குறித்து விழிப்புணர்வு இல்லாதததால், அது உலக பிரச்னையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது இந்தியாவில்தான் அதிகமாக பேசப்படுகிறது'' என்றார்.

"நீங்கள் உங்களுடைய முதல் செல்போனை எப்போது வாங்கினீர்கள்?" என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, " 1995 - 96 ல் வாங்கிய மோட்டாரோலா செல்போன்தான் முதலில் வாங்கியது. 2006 ல்தான் முதல் ஸ்மார்ட் போன் வாங்கினேன். என்னுடைய வீட்டில் 20 முதல் 30 ஸ்மார்ட் போன்கள் உள்ளன" என்றார்.

  • தொடங்கியவர்

16-1450278945-3.jpg

1920 : சரியாக 1920-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் இருக்கும் ஒரு ரஷ்ய ராணுவ வீரன், புதினின் முக ஜாடையோடு அதிகமாக ஒற்றுப்போவதை காண முடிகிறது.

16-1450278947-4.jpg

1941 : மேலும் அதே போன்று 20 ஆண்டுகள் கழித்து, அதாவது 1941-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்திலும் புதின் முகஜாடையோடு அதிகம் ஒற்றுப்போகும் ரஷ்ய ராணுவ வீரனை காண முடிகிறது.

16-1450279047-2f677bae00000578-3361468-i

டைம் டிராவல் : இதன் மூலம் ரஷ்ய அதிபர் புதின், மிகவும் மர்மமான கோட்பாடான டைம் டிராவல் (Time Travel) உடன் தொடர்பு உடையவர் என்று சில சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
 

 

புட்டின் பிறந்தது 1952. இது ஏதோ வேற பிரச்சனை. இதை பொது வெளியில் கதைக்க வேண்டாமே... :D:

  • தொடங்கியவர்

12362678_956292601086101_863230812009693

முன்னைய கதாநாயகி, குணச்சித்திர நடிகையாகவும் கலக்கும் ஜெயசுதாவின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 18
 

article_1450415405-2.jpg1642: ஆபெல் தாஸ்மென், நியூஸிலாந்தைச் சென்றடைந்த முதல் மனிதரானார்.

1878: அல் தானி குடும்பம் கட்டாரின் அரச குடும்பமாகியது.

1915: உட்ரோ வில்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பேது  எடித் போலிங் கால்ட் வில்சனை திருமணம் செய்தார்.

1935: லங்கா சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

1956: ஐ.நாவில் ஜப்பான் இணைந்தது.

1958: உலகின் முதலாவது தொலைதொடர்பு செய்மதி 'புரஜெக்ட் ஸ்கோர்' விண்வெளிக்கு ஏவப்பட்டது.

 
 0  0 
- See more at: http://www.tamilmirror.lk/161852/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.gplhicWP.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உங்க திருமணத்துக்கு இப்படி ஒரு போட்டோ ஷுட் வைக்கலாமா?

 

ரையில் இருந்து 350 அடி உயரத்தில், மலை உச்சியின் விளிம்பில் நின்று, உங்கள் திருமணத்தை நடத்தலாம் என்றால் ஒப்புக்கொள்வீர்களா? ஆனால் அள்ளு கிளப்பும் இதே விஷயத்தை ஜே பில்பிரிக் சொன்னால் “டபுள் ஓகே” சொல்லி, கல்யாணத்திற்கு தயாராகின்றனர் ஜோடிகள்.

w2.jpg

அமெரிக்காவை சேர்ந்த புகைப்படக்கலைஞர்தான் ஜே பில்பிரிக். சாதாரணமாக எல்லாரையும் போல, வெட்டிங் போட்டோகிராஃபி என மணமகன்-மணமகளை வேறு வேறு கோணங்களில் போட்டோ எடுத்து ஆல்பம் ஆக்கி தந்தால் கடமை முடிந்தது என இல்லாமல், “அதுக்கும் மேல” என்ன செய்யலாம் என யோசித்து பிடித்த ஐடியாதான், இந்த தில் திரில் வெட்டிங் போட்டோகிராஃபி.

w3.jpg

ஏற்கனவே மலையேற்றம் செய்ய வருபவர்களுக்கு கைடாக இருந்ததால், அந்த அனுபவத்தோடு இந்த ஐடியாவை கச்சிதமாக எக்ஸிகியூட் செய்திருக்கிறார் ஜே. அதே சமயம், இந்த முயற்சிக்கு முழு சம்மதம் சொல்பவர்களை மட்டுமே நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் இருக்கும், எக்கோ லேக் ஸ்டேட் பார்க் மலைக்கு அழைத்து செல்கிறார்.

முதலில் எங்கு நிற்க  வேண்டும்?, எந்த கோணத்தில் எடுக்க வேண்டும்?, ஜோடிகளுக்கு பாதுகாப்புக்காக கயிறுகளை எப்படி கட்ட வேண்டும்? என எல்லா விஷயங்களையும் ஜே முழுதாக திட்டமிட்டு விட்டு, பின்னரே களத்தில் ஏறுகிறார். போட்டோ எடுக்கப்போகும் நபருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாதவாறு, முழு பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டே கேமராவை சிமிட்டுகிறார் ஜே.

p1%281%29.jpg

இதனை முதன்முதலில் 2008-ல் தொடங்கியிருக்கிறார் ஜே. அப்போது, திருமணம் செய்துகொள்ளவிருந்த இரண்டு பேருமே மலையேற்றம் செய்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என்பதால், முதலில் இவர்களை வைத்தே இதை செய்யலாம் என தொடங்கியுள்ளார்.

பின்பு, அந்த விஷயம் அப்படியே பரவி லைக்ஸ் அல்ல, தற்போது ஜாலியாக ஒரு போட்டோஷூட் போலாம் என்றால்கூட, ஜே பில்பிரிக்கை அழைத்துக் கொண்டு மலையேறி விடுகின்றனர் அமெரிக்க மாடல்கள். ஜே போட்டோ எடுக்கும்போது, லைட்டிங் செட் செய்வது, மலையின் மறுமுனையில் ஜே இருக்கும்போது, ஜோடிகளிடம் போஸ் கொடுக்க சொல்வது என இன்னொரு கையாக இருப்பது அவரது மனைவி விக்கி.

w1.jpg

“எல்லாரும் போல இல்லாமல், வித்தியாசமாக ஏதாவது இருக்க வேண்டும் என கேட்டவர்களுக்கு நான் யோசித்த ஐடியாதான் இது. வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் என்றால் அது திருமண நாளாகத்தான் இருக்கும். அப்படி கொண்டாட வேண்டிய நாளை, இன்னும் ஸ்பெஷல் ஆக்குவதுதான் என்னுடைய வேலை. இந்த புகைப்படங்களை எப்போது பார்த்தாலும்,  அவர்களுக்கு மலை உச்சியில் நிற்கும் அதே சிலிர்ப்பு கிடைக்கும். அதுதான் என்னுடைய நோக்கம்" என்கிறார் ஜே.

w8.jpg

ஆனால் இது ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே பாஸ்? என்றால், “நான் இத்தனை மணி நேரத்திற்கு, இத்தனை போஸ்க்கு இவ்வளவு என்றெல்லாம் பணம் வாங்கியதே இல்லை. நான் எடுக்கும் புகைப்படங்கள் உங்களுக்கு பிடிக்கும் வரை எடுப்பேன். உங்கள் மனம் திருப்தியடையவில்லை எனில், என் வேலையும் முடியாது. மலை விளிம்பில் நிற்பது மட்டுமல்ல, மலை உச்சியில், பனிப்பாறைகளின் முகட்டில், ஏன் தண்ணீருக்கு கீழே கூட, நான் போட்டோ எடுத்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம், உங்களின் மனவலிமையையும், சவாலை சந்திக்கும் திறமையையும் பொருத்தது” என்கிறார் ஜே.

http://www.vikatan.com/news/miscellaneous/56506-risky-wedding-photo-shoot.art

  • தொடங்கியவர்

12345586_956766571038704_878381945385131


ஹொலிவூட்டில் பிரம்மாண்டமான திரைப்படங்களை எடுத்து வசூல் குவித்தவர்,
மறக்கமுடியாத திரைப்படங்களை எடுத்து விருதுகளை வென்றவர்
தொழிநுட்ப பிரமிப்பில் எம்மை இன்றும் ஆழ்த்தும், படைப்பாற்றலும் கடும் உழைப்பும் கொண்ட இயக்குனர்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

இணைய ஹிட்...

  • தொடங்கியவர்

12373403_1038976859494437_70534106209083

டிசம்பர் 18: சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று...

புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை நிலைநாட்ட இத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது...

 
  • தொடங்கியவர்

12376148_956416211073740_406478159302513

அருந்தமிழும் சைவமும் வளர்த்த இலங்கையின் ஆன்மிகவாதி ஆறுமுக நாவலரின் ஜனன தினம் இன்றாகும்.

தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர்.

தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர்.
தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர்.
திருக்குறள்பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம்,பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
சைவ மாணவர்களுக்கு அப்போதிருந்த இன்னல்களைப் பார்த்து அவர்களுக்கென்று பிரத்தியேக பாடசாலையையும் ஆரம்பித்திருந்தார்.
 
 
aarumuga_navalar_2661955f.jpg
 

சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் (Arumuga Navalar) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார். 9 வயதில் தந்தை இறந்தார்.

l சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியாரிடம் குருகுல முறையில் உயர் கல்வி பயின்றார். தமிழ் இலக்கியம், இலக்கணம், சாஸ்திரங்கள், சிவாகமங்களைக் கற்றார். சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர்.

l யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார்.

l வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

l சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார்.

l சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.

l தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர்.

l ஒருமுறை சென்னை கடற்கரையில் இவர் நடந்து சென்றபோது, அருகே உள்ள குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கவேண்டி இருந்தது. ஆங்கிலத்தில் பேச முற்பட்ட இவரை நீதிபதி தடுத்து, தமிழிலேயே பேசுமாறும், அதை நீதிமன்ற அதிகாரிதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறவேண்டும் என்றும் கூறினார்.

l உடனே நாவலர், ‘‘அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’’ என்றார். மொழிபெயர்ப்பாளர் திணறிவிட்டார். ‘சரி சரி, ஆங்கிலத்திலேயே கூறுங்கள்’ என்று நீதிபதி சொல்ல, மறுத்த நாவலர், ‘சூரியன் உதிப்பதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்று தெரிவித்தாராம்.

l 20-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்த நாவலர் பெருமான் 57-வது வயதில் (1879) மறைந்தார்.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12347699_1038644519527671_59916729575648

திருவிளையாடல்

சண்முகம் பிள்ளை
மீனாட்சி அம்மாள்

மீனாட்சி: ஒரு நல்ல புராணப் படம் பார்த்ததிலே மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுங்களா?

சண்முகம்: ஆமாம் மீனாட்சி, கண் குளிர காட்சிகளையும், காதுகுளிர பாட்டுக்களையும் கேட்டு, நான் சில இடங்களில் மெய்சிலிர்த்துப் போனேன். அதிலும் கே.பி.சுந்தராம்பாளோட குரல்...

மீனா: 'முருகா’ என்று அந்த ஒளவைப் பாட்டி கூப்பிடறபோது நம்ப மனசெல்லாம்கூட உருகுதுங்க. அதே மாதிரி, சிவாஜி கணேசனுக்கு சிவன் வேஷம் என்ன பொருத்தமா இருக்குது!

சண்: அதிலும் ருத்ரமூர்த்தியா வரபோது, ரொம்பப் பொருத்தம்!

மீனா: பாண்டியன் சபையிலே வந்து நக்கீரனை மடக்கின காட்சி, என் கண் முன்னாலயே நிக்கு துங்க!

சண்: ருத்ர தாண்டவமும் பிரமாதமாத்தான் இருந்துது. மீனவனா வந்து ஒரு நடை நடக்கிறாரே... எப்படி?

மீனா: அழகா இருந்தது. ஆனா, கொஞ்சம் சிரிப்பும் வந்தது. அங்கே எனக்கொரு சந்தேகங்க! பிட்டுக்கு மண் சுமந்த கதையிலேதானே, ஈசன் உடம்பிலே பட்ட அடி எல்லார் உடம்பிலேயும் படறதாக வரும். இதுலே...

சண்: இதோ பார் மீனாட்சி, திருவிளையாடல் புராணம் ரொம் பப் பெரிசு! அதிலே எல்லாத்தையும் காட்டமுடியுமா? அத னால, ஒரு கதையிலே இன்னொரு சம்பவத்தைப் புகுத்தி இருக்காங்க... கதையா முக்கியம்? தத்துவம்தானே முக்கியம்! இவ்வளவு பெரிய புராணக்கதையை எடுத்துக்கிட்டு, சிறப்பா திரைக்கதை அமைச்சு, வசனம் எழுதி, டைரக்ட் செய்த ஏ.பி.நாகராஜனைக் கண்டிப்பா பாராட்டத்தான் வேணும்.

மீனா: பாலமுரளி கிருஷ்ணாவின் 'ஒரு நாள் போதுமா’ங்கற பாட்டு என் காதிலே இன்னும் ஒலிச்சுக்கிட்டிருக்குங்க!

சண்: எந்தப் பாட்டுதான் ஒலிக்கலே?! டி.ஆர்.மகாலிங்கம் பாடறாரே 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...’ அதைச் சொல்றதா, இல்லே 'பாட்டும் நானே’ங்கற டி.எம்.சௌந்தரராஜன் பாடற பாட்டைச் சொல்றதா? கே.வி.மகாதேவனுக்கு ஒரு 'சபாஷ்’ சொல்ல லாம்.

மீனா: எல்லாம் சரி... ஒரு தமிழ்ப் புலவரை வச்சுக்கிட்டு 'காமெடி’ பண்ணி இருக்க வேண்டாமோன்னு தோணிச்சு!

சண்: ஏன், நாகேஷ் ரொம்ப நல்லா பண்றாரே அதை! புரா ணப் படத்திலே ரொம்ப அழகா காமெடி கொண்டு வந்திருக்காங் கன்னுதான் எனக்குத் தோணுது!

மீனா: சமூகப் படங்கள் பெருகிப் போய்விட்ட இந்தக் காலத் திலே, இப்படி ஒரு புராணப் படம் வந்து, அதுவும் இவ்வளவு நல்லா அமைஞ்சது ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்க. அடுத்த வாரம் நான் இன்னொரு தடவை இந்தப் படத்தை போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன்.

சண்: போகும்போது சொல்லு; நானும் வரேன்!


விகடன் பொக்கிஷம்

சினிமா விமர்சனம் : திருவிளையாடல் (1965) 

அந்த காலத்தில் திருவிளையாடல் படத்திற்க்கு விகடனில் வந்த சினிமா விமர்சனம்

  • தொடங்கியவர்

12357131_956775104371184_389039994552958

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய கலக்கல் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜாவின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

ஹாலிவுட் மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - பிறந்த தின சிறப்பு பகிர்வு

 

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.

பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை .

steevanspel_1.jpg



தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு நிராகரிக்கப்பட்டது.மனம் தளராமல் கலிபோர்னியா மாகாண பல்கலையில் சேர்ந்தார்.ஆனால் அங்கேயும் தொடர்ந்து படிக்கவில்லை,சினிமா ஆர்வம் உந்தித்தள்ள உலகப் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோவில் சம்பளம் வாங்காத எடிட்டிங் துறை மாணவராக சேர்ந்து கொண்டார்.ஒரு நாள் கூட விடுமுறை இல்லாத வேலை அது.

யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக ஆம்ப்ளின் என்கிற குறும்படத்தை இயக்கியது தான் வாழ்வின் முதல் திருப்புமுனை.இருபத்து ஆறு நிமிடம் ஓடும் இப்படம் கவலைகள் இல்லாத ஒரு ஹிப்பி இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தை கடப்பதை நகைச்சுவையாக வசனமே இல்லாமல் பின்னணியில் கிடார் இசையை கொண்டு மட்டும் சொல்லும்.இது பலவேறு விருதுகளை ஸ்பீல்பெர்க் பெற உதவியது.

ரொம்பவும் கூச்சசுபாவம் உள்ளவர்.பெரும்பாலும் நண்பர்கள் இல்லாதவர். தன் இளமைக்காலத்தில் தந்தை மற்றும் தாய் விவாகரத்து பெற்று பிறந்ததன் தாக்கமும் ,ஒரு மூத்த அண்ணன் இல்லையே என்கிற ஏக்கமும் தான் உலக புகழ் பெற்ற ஈடி படம் எடுக்க உந்துதல் எனவும் சொன்னார்.

steevanspel.jpg



கடுமையாக தன் படங்களுக்கு உழைப்பார்.ஒவ்வொரு படமும் ஒரு மேஜிக்!அப்படிதான் பார்க்கிற ரசிகர்கள் உணரவேண்டும் என்பார்.அதிலும் குழந்தைகளுக்கான படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் !அப்படி எடுத்த படங்கள் தான் ஜுராசிக் பார்க்,ஈடி,டின்டினின் சாகசங்கள் போன்றவை.

புத்தகங்கள் படிப்பதை விரும்பாதவர். நன்றாக உற்று கவனிப்பார்.பலபடங்களை ஒரே வாரத்தில் பல முறை பார்த்தும் விடுவார்.கதை சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கவும் செய்வார்.ஜாஸ் கதையை படிப்பதற்கு முன் வரை அது ஏதோ பல் சம்பந்தப்பட்ட புத்தகம் என்றே நினைத்துக்கொண்டு இருந்தார்.படித்து முடித்ததும் உடனே படம் எடுக்கலாம் என கிளம்பிவிட்டார்.

நிஜம் இல்லாத உலகத்தை காட்டி படத்தை ஓட்டி விடுகிறார் என பிறர் சொன்னதும், 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' எனும் ஹிட்லரிடம் இருந்து ஆயிரம் யூதர்களை காப்பாற்ற போராடும் சிண்ட்லர் எனும் மனிதனின் கதையை கருப்பு வெள்ளையில் சொல்லி கண்ணீர் வரவைத்தார் !அந்த படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கரை பெற்றார் . இப்படத்தின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை ஷோஆ அறக்கட்டளையை நிறுவி ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து விட்டார் .

இவருக்கு ஏழு குழந்தைகள் .ஒரு அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்கு முன் தன் பிள்ளைகளிடம் கதையை சொல்லி அவர்கள் கண்கள் ஒளிர்கிறதா என பார்த்த பின்பே அதை படமாக எடுக்க சம்மதம் சொல்வார் .

"திரையரங்கில் படம் பார்க்கிற ஐநூறு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை மாதிரி மாறி என் படத்தை ரசிக்க வேண்டும் அதுதான் என் குறிக்கோள்" என சொல்கிற நம்பிக்கைக்காரர்.

http://www.vikatan.com/news/article.php?module=news&aid=36319

  • தொடங்கியவர்

1467487_586024644804375_240643781_n.jpg?

ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல்

‘அங்கேயே நில். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்’

அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து அவனை நடு நடுங்க வைத்தது.

இன்னும் சற்று தூரம் நடந்தான். மீண்டும் அதே குரல்

‘அங்கேயே நில். இல்லையேல் பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்’. அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன் வெலவெலத்தான்.

‘நீ யார்… ‘ பயந்த அவன் கேட்டான்.

‘நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன்’ குரல் சொன்னது.

எரிச்சலடைந்த் மனிதன் கேட்டான்… ‘இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்தறியே.. நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…’

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.