Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நடிகர் விஜய் சொன்ன மாவோ கதையும்... தன்னம்பிக்கை தாட்ஸும் #MorningMotivation

விஜய்

நடிகர் விஜய் மேடைகளில் அதிகம் பேசாதவர். பேசும் சில இடங்களில் சினிமாவை தாண்டி சின்ன சின்ன இன்ஸ்பிரேஷன் தாட்ஸை இருவரிகளுக்கு சுருக்கி அழகாக சொல்வது வழக்கம். அப்படி சில இடங்களில் அவர் சொன்ன குட்டி குட்டி உற்சாகமூட்டும் விஷயங்கள்...

* "நிறைய பேர் வெற்றிக்கு பின்னாடி ஆணோ, பெண்ணோ இருப்பாங்கனு கேள்வி பட்டு இருக்கேன். ஆனா, என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள் தான் இருந்திருக்கு. யாராக இருந்தாலும் அவமானங்களை சந்திக்காமல் வெற்றியை சந்திக்க முடியாது."

* "நமக்கு தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கு ஒண்ணுமே தெரியாதுனு நினைச்சுடக்கூடாது. நமக்கு எல்லாத்தையும் கற்றுக்கொடுத்ததே மற்றவர்கள் தான். அதை மனசுல வைச்சுக்கணும்." 

* "நமக்கு பின்னாடி பேசறவங்களை பத்தி என்னைக்கும் யோசிக்கவே கூடாது. அவங்களை விட, நாம ரெண்டு அடி முன்னாடி இருக்கோம்னு நினைச்சுட்டு போய்ட்டே இருக்கணும்."

* "நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் என்னை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் நான் பெருசாக எடுத்து இருந்தேன்னா... இன்னைக்கு உங்க முன்னாடி ஒரு விஜயாகவே இருந்திருக்க முடியாது.  விமர்சனத்தை பெட்ரோலாக எடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டேனே தவிர, அதை எரிக்கும் நெருப்பாக பார்க்கலை. நீங்களும் விமர்சனத்தை இப்படி எடுத்துக்கோங்க." 

விஜய்

* "எப்பவுமே அடுத்தவங்க தொட்ட உயரத்தை இலக்கா வைச்சுகாதீங்க. நீங்க தொட்ட உயரத்தை அடுத்தவங்களுக்கு இலக்காக வைங்க."

* "தோல்விகளுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால், வெற்றிக்கு ஆயிரம் தோல்விகள் மட்டுமே இருக்க முடியும். அதனால், முயற்சி மட்டும்தான் என்றும் நிரந்திரம்."  

* "தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க. போட்டினு ஒண்ணு இருந்தால்தான், ஆட்டம் சுவாரஸ்யமா இருக்கும். தவிர, என்னிக்கோ ஒருநாள் நானும் அப்படி புதுமுகமா வந்தவன்தான். சினிமாவுக்கு நான் வந்தப்போ, என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. மூச்சுத்திணறித் திணறித்தான் நான் நீச்சல் கத்துக்கிட்டேன்."  

* "நல்லவன் எப்படி எல்லாம் வாழணும்னு நல்ல நல்ல அனுபவத்தை கொடுத்துட்டு போறான். கெட்டவன் எப்படி எல்லாம் வாழக்கூடாது அவமானத்தை கொடுத்துட்டு போறான். நமக்கு அனுபவத்தை கொடுத்த இந்த உலகத்திற்கு அவமானத்தை கொடுத்துட்டு போகவே கூடாது."

* "மனைவி கடவுள் தந்த வரம். தாய் கடவுளுக்கு நிகரான வரம். நண்பன் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம். லைப்ல இவங்களை மிஸ் பண்ணிடாதீங்க."

* தெறி ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன கதை இது. "முன்னாள் அதிபர் மாவோ ரோட்டில் போய்ட்டு இருக்கும்போது, ஒரு சின்னப் பையன் தலைவர்களின் படம் எல்லாம் வைச்சு விற்றுகொண்டு இருந்ததை பார்த்தார். உற்று கவனித்தபோதுதான் தெரிந்தது, எல்லா படங்களுமே அவருடைய படங்கள் தான். ரொம்ப கர்வப்பட்டார். அந்த கர்வத்தை எல்லாம் அந்த பையன்கிட்ட காட்டிக்கொள்ளாமல், அந்த பையனை அழைத்து 'என்னதான் என் மேல பாசம் வைத்து இருந்தாலும், என் படத்தை மட்டும் வைத்து விற்பது தப்புப்பா. மற்ற தலைவர்கள் படத்தையும் சேர்த்து விற்கணும்'னு சொன்னார். அதுக்கு அந்த பையன், 'மற்ற தலைவர்கள் படம்  எப்பவோ விற்று போய்டுச்சு... இதுதான் விற்காமல் அப்படியே இருக்குனு... அதுனால நாமமும் வாழ்க்கையில கர்வம் இல்லாமல் வாழணும்"  

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

'கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று

ns_29_3.jpg

நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு...

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்

ns_29_4.jpgடென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும், கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை  ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து  நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும்  அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய்  சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே  துவங்கி வைத்தார்.

சீர்திருத்த கருத்துகளை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டு உழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக  பகிர்ந்து கொள்ள  வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில்  ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது  எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று  மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை  நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன்; உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை  என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுடச் சொன்னார் ராதா .

என்.எஸ்.கே.,  லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்

ns_29_2.jpg

என்.எஸ்.கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்டபொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே
பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி

"நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற  பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.

ns_29_1.jpgஅக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்கிறேன்; கலைவாணர்  என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும்  நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி  சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று

சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.

vikatan

  • தொடங்கியவர்

19ம் நூற்றாண்டில் பிறந்து, 21ம் நூற்றாண்டையும் பார்த்துக்கொண்டிருக்கும் இத்தாலியப் பெண்மணி

 

உலகில் 19ம் நூற்றாண்டில் பிறந்து இன்னும் உயிருடன் இருக்கும் ஒரே நபராக அறியப்படும் ஒரு பெண்மணி தனது 117வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

எம்மா மொரானோ (கோப்புப்படம்)
 

இத்தாலியில் உள்ள மிலன் என்ற இடத்தில் பிறந்த எம்மா மொரானோ தான் வாழும் காலத்தில் இத்தாலியின் மூன்று அரசர்களின் ஆட்சிக்காலம், 11 போப்பாண்டவர்கள் மற்றும் இரண்டு உலகப் போர்களை பார்த்துவிட்டார்.

அவர் வாழும் மேகியோர் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள பலான்ஸா என்ற இடத்தில் உள்ள மக்கள், இந்தத் தருணத்தை நினைவுகூரும் வகையில், மூன்று நூற்றாண்டுகளின் வரலாறுகளை உள்ளடக்கிய ஒரு அலங்கார அணிவகுப்பை நடத்தினர்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்
பார்ஸிலோனா நகரின் மிக உயரமான கட்டடத்தின் சுவரில் பாதுகாப்பு சாதனம் எதுவுமின்றி ஏறி இறங்கிய 'பிரெஞ் ஸ்பைடர் மேன்'
 

ஸ்பெய்னின் பார்­ஸிலோனா நக­ரி­லுள்ள 38 மாடி கட்­ட­ட­மொன்றின் சுவரில், பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் என வர்­ணிக்­கப்­படும் அலெய்ன் ரொபரட்ஸ் எவ்­வித பாது­காப்புச் சாத­னங்­களும் இன்றி ஏறி இறங்­கினார்.

 

20955Alain-Robert-3.jpg

 

பிரான்ஸை சேர்ந்த 54 வய­தான அலெய்ன் ரொபர்ட்ஸ், கட்­ட­டங்­களின் சுவர்­களில் ஏறு­வதில் புகழ்­பெற்­றவர். “பிரெஞ் ஸ்பைடர்” மேன் என இவர் வர்­ணிக்­கப்­ப­டு­கிறார். 

 

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவர் ஸ்பெய்னின் பார்­ஸிலோனா நக­ரி­லுள்ள டொரி அக்பர் கட்­ட­டத்தின் சுவரில் ஏறினார்.

 

20955Alain-Robert-1.jpg

 

38 மாடி­களைக் கொண்ட இக்­கட்­டடம் பார்­ஸி­லோனா நகரின் மிக உய­ர­மான கட்­ட­ட­மாக விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இக்­கட்­டத்தின் கண்­ணாடிச் சுவர்­களில் பாது­காப்புச் சாத­னங்கள் எது­வு­மின்றி அலெய்ன் ரொபர்ட்ஸ் ஏறு­வதை பொது­மக்­களும் பொலி­ஸாரும் திகைப்­புடன் பார்த்துக் கொண்­டி­ருந்­தனர்.

 

20955Alain-Robert-22.jpg

 

ஆனால், அலெய்ன் ரொபர்ட்ஸ் அச்சம் எது­வு­மின்றி இக்­கட்­ட­டத்தின் சுவர்­களில் ஏறி இறங்­கினார். 

 

இவர் உலகின் மிக உய­ர­மான கட்­ட­ட­மான துபா­யி­லுள்ள புர்ஜ் கலீபா கட்­டடம் மற்றும் ஈபிள் கோபுரம் உட்­பட 100 இற்கும் அதி­க­மான  கட்டடங்களின் சுவர்களில் பாது காப்பு சாதனங்களின்றி ஏறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அனைத்து ராசி அன்பர்களுக்கும்...பல்லேலக்கா ராசிபலன்...!

 

'நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது' என ஃபீல் பண்ணி புலம்பித்தள்ளும் கைப்புள்ளைகளைத் தெம்பூட்டும் விதமாக  கம்ப்யூட்டர் சிவகாமியின் இந்த வார ராசிபலன் இதோ...

ராசிபலன்

மேஷம்:

எவ்வளவு அடிச்சாலும் வடிவேலு காமெடியைப் பார்த்தது போல சிரித்த முகமாக இருக்கும் மேஷ ராசி அன்பர்களே...

ஆளும் கட்சியின் செய்தி சேனலைப் போல உங்கள் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டு. நீங்களே ஷாக் ஆகும்படி நீண்ட நாட்களாக டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த கடன் வசூலாகும். ஆனால் அந்தப் பணமெல்லாம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வந்து கன்னத்தில் கை வைக்கச் செய்யும். இந்த வருசமாவது கல்யாணம் காட்சி நடக்குமா என ஏங்கித் தவிப்போர் வழக்கம்போல ஊட்டிக்குத் தனியாகத்தான் போக வேண்டியிருக்கும். 

அதிர்ஷ்ட எண்: 111

அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், டார்க் பிங்க், லைட் பிங்க், 

 

ரிஷபம்: 

நண்பர்கள் சொன்ன ரகசியத்தை ஊருக்கே மைக் போட்டுச்சொல்லிவிட்டு அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே...

சீரியல் பார்க்கும்போது ரிமோட்டைப் பிடுங்குபவர்களை அடிக்க, அடிக்கடி கரண்டியைத் தூக்குவதால் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த நற்செய்தி புதிய 500 ரூபாய் நோட்டைப் போல தாமதமாக வந்து சேரும். தொடர்ந்து நாஞ்சில் சம்பத் போல பேசிக்கொண்டிருந்தால், பணிபுரியும் அலுவலகத்தில் அழகான பெண் அண்ணா என்றழைக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் வாய்ப்பேச்சைக் குறைக்கவும். வங்கியில் பணிபுரிவோருக்கு கனவிலும் பெரிய வரிசை கண் முன்னாடி வந்து செல்லும்.

அதிர்ஷ்ட எண்: 000000000000

அதிர்ஷ்ட நிறங்கள்: ராமராஜன் சட்டை நிறங்கள்

 

மிதுனம்:

எதைக் கேட்டாலும் தெரியாது எனச் சொல்லாமல் எகத்தாளமாய் பேசி எக்குத்தப்பாய் மாட்டிக்கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே...

இந்த வாரம் அனுகூலமான காரியங்கள் நடக்கும் வாய்ப்பிருக்கிறது. வங்கி வரிசையில் ஊரே காத்துக்கொண்டிருந்தாலும் நீங்கள் மட்டும் நைஸாக முன்னால் போய் நிற்பீர்கள். மாங்கு மாங்கென்று வேலை செய்தாலும் அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்கும் வாய்ப்பில்லை. இளைஞர்கள் பெற்றோர்களின் காலில் விழுந்து கதறி அழுதாவது வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. காதலியுடன் வழக்கம்போல் சண்டை போட்டு நீங்களே மன்னிப்பும் கேட்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: XIXI

அதிர்ஷ்ட நிறங்கள்: வானவில் நிறங்கள்

 

கடகம்:

சிங்கிளாக இருப்பதை மிகவும் பெருமையான விஷயமாக நினைக்கும் கடக ராசி வாசகர்களே...

கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இது. அலுவலகத்தில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டிருக்கும்போது உங்களை மேனேஜர் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் வீட்டிற்குச் செல்லும்போது அங்குள்ள குழந்தைகள் அங்கிள் என்றழைத்து பல்பு கொடுப்பார்கள். திருமண விஷயத்தில் சிக்கல் நீடிக்கும். திருமணமானவர்கள் ரிமோட்டிற்காக சண்டை போடாமல் இருப்பது நல்லது. சைட் அடிக்கும் பெண்ணிற்காக 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை மாற்றிக் கொடுத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். முக்கியமான நாளன்று முட்டக்குடித்துவிட்டு வீட்டில் மல்லாந்து கிடப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: எதுவுமில்லை

அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ளாக் & வொய்ட்

 

சிம்மம்:

மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சிம்ம ராசி வாசகர்களே...

வீட்டில் அனைவரும் வெளியூருக்குச் செல்லும் வாய்ப்பிருப்பதால், குடும்பத்தில் வெகுநாட்களாக நீடித்துவந்த கூச்சல், குழப்பம் நீங்கும். ஆழ்ந்த யோசனையில் தம்மடித்து விரலை சுட்டுக்கொள்வீர்கள். பெண்கள் கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துச் செய்வது நல்லது. நீண்ட நாள் தலை முடி உதிர்வுப் பிரச்னைக்கு மொட்டை அடித்து தீர்வு காண்பீர்கள். மீட்டிங்கில் உறங்கி உயர் அதிகாரிகளிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 0/2

அதிர்ஷ்ட நிறங்கள்: ரூபாய் நோட்டு நிறங்கள்

 

கன்னி:

வருடம் முழுவதும் 'நோ ஷேவ் நவம்பர்' கொண்டாடும் கன்னி ராசி அன்பர்களே...

கையில் இருக்கும் காசை எல்லாம் செலவழித்துவிட்டு, கடன் வாங்கி வாழும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. படியில் வழுக்கிவிழும் வாய்ப்பிருப்பதால் மிகுந்த கவனம் தேவை. புதிய முயற்சிகள் கைகூடும். அலுவலகப் பணிகளை வழக்கம்போல் கடைசி நேரத்தில் விரைந்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் ஓசி ட்ரீட் கிடைக்கும் யோகம் இருக்கிறது. தொழில் புரிவோருக்குப் பணவரவு உண்டு. வேலை கிடைக்காதவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்க வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட எண்: 7 1/2

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சோந்தி நிறம்

 

துலாம்:

கத்தையாகப் பணம் கேட்போருக்கு ஒத்தையாகக் கொடுத்து வெறுப்பேற்றும் சிக்கனமான துலாம் ராசி அன்பர்களே...

டயட் இருப்பதாய் சொல்லிவிட்டு பஜ்ஜி திங்கும்போது நண்பர்களிடம் சிக்குவீர்கள். செய்யும் தொழில் லாபகரமாக இருக்கும். மொக்கைப் படத்திற்குக் கூப்பிடும் நண்பர்களை அடித்துத் துரத்துவது உடம்புக்கு நல்லது. கடைசிக் கை சோற்றில் மிளகாய் கடிபட்டதுபோல சிற்சில துன்பங்கள் வந்து போகும். சகோதர சகோதரிகளுடன் மோதல் போக்கைக் கையாண்டு முகத்தில் குத்து வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் அடக்கி வாசிப்பது நல்லது ( நாங்க சொல்லல... கட்டம் சொல்லுது ).

அதிர்ஷ்ட எண்: 02

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள் மற்றும் சிவப்பு

 

விருச்சிகம்:

யார் என்ன சொன்னாலும் சொல்பேச்சைக் கேட்காமல் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே...

எடுத்த வேலையை முடிக்க முடியாமல் எடுத்த இடத்திலேயே நிற்கும்படி அலைச்சல் அதிகமாக இருக்கும். நீண்டநாள் கனவை நனவாக்குவீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மாணவர்கள் பிட் அடித்தாவது பாஸ் பண்ணி படிப்பில் முன்னேற்றம் காட்டுவார்கள். அதையும் மீறி வற்புறுத்தினால் வயிறு சரியில்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் படுத்துறங்கவும். வியாபாரிகளைப் பொறுத்தவரை கடன் தொகையை வசூல் செய்ய புது யுத்தியைக் கையாள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2.0

அதிர்ஷ்ட நிறம்: அஜித்தின் தாடி முடி நிறம்.

 

தனுசு:

கொடுத்த கடனைத் திருப்பிக்கேட்டால் உசேன் போல்ட்டைப் போல பாய்ச்சல் காட்டும் தனுசு ராசி அன்பர்களே...

குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவிவந்த சிக்கல்கள் குறையும். சிற்சில உடல் உபாதைகள் வந்து போகும். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். 'இம்புட்டு நேரம் திருட்டுப்பயகூடவா சவகாசம் வெச்சிருந்தோம்' எனத் தெளிவு பிறந்து சில நண்பர்களை அப்ரூட்டாக கட் செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள ஆசையிருந்தாலும் நிறைவேறாத காரணத்தால், 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பயணம் மேற்கொள்வீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் ஏரியா ஆட்டோக்காரர்களிடம் மானாவாரியாகத் திட்டு வாங்க நேரிடும்.

அதிர்ஷ்ட எண்: 994084084

அதிர்ஷ்ட நிறம்: டோலிவுட் செட் நிறம்

 

மகரம்:

சுட்டெரிக்கும் வெயிலிலும் மிஸ்டர் கூலாக நடைபோடும் மகர ராசி நேயர்களே...

சம்பளம் வந்த சில நாட்களுக்கு மட்டும் உங்களின் பொருளாதாரச் சிக்கல் நீங்கும். நிறையக் காரியங்களை செய்ய 'மட்டும்' நினைப்பீர்கள். முன் அனுபவம் இல்லாத வேலைகளைப் புதிதாக முயற்சித்து முக்கிக்கொண்டிருப்பதற்குப் பதில் உள்ள வேலையைச் செய்யுங்கள். நீங்கள் வாங்கிச் சாப்பிடும் எக்ஸ்ட்ரா ப்ளேட் பிரியாணி வயிற்றுச் சிக்கலை ஏற்படுத்தும். மனைவி வழி சொந்தங்கள் விருந்தினராக வந்து வீட்டைவிட்டுச் செல்வதற்குள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். திருமணமாகாதவர்கள் ஜொள்விட்டே பொழுதைப் போக்க நினைப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1x1x1x1x1x1x1x0

அதிர்ஷ்ட நிறம்: சூரிய நிறங்கள்.

 

கும்பம்:

வெளியில் கெத்தாகப் பேசித் திரிந்தாலும் உள்ளுக்குள் நடுநடுங்கும் கும்ப ராசி நேயர்களே...

இந்த ஒரு வாரத்திற்கு நங்கு நங்கென்று வாழ்க்கை உங்களை மல்லாக்கப் போட்டு கும்மும் வாய்ப்புள்ளது. எவ்வளவு அடித்தாலும் சத்தம் மட்டும் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதில் முனைப்பு காட்டுவீர்கள். பெண்களைப் பின்தொடரும்போது தெருவில் உங்களை நாய் துரத்தும். சகோதர சகோதரிகளால் சிற்சில பல்புகள் வாங்க நேரிடும். நண்பர்களுக்குக் கடன் தரும்போது கவனம் தேவை. எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவீர்கள். அடுத்து என்ன நடக்கும் என யோசிக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 420

அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு, காவி, பச்சை.

 

மீனம்:

அடுத்தவர் ட்ரீட் தந்தால்கூட அளவாய் சாப்பிடும் மீன ராசி நேயர்களே... 

உங்களின் எதிர்வீட்டுக்காரரைப் போல உங்கள் ராசிநாதன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் துன்பங்கள் விலகி ஓடும். புளி வைத்துத் தேய்த்தெடுத்த பித்தளைப் பாத்திரம் போல வாழ்க்கை துலங்கும். காதலியால் பணவிரயம் அதிகமாகும். இதுவரை உங்களிடம் பேசாதவர்களும் வந்து பேசி வாங்கிக் கட்டிக்கொள்வார்கள். அலுவலக நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஹெல்மெட் போடாமல் சென்றாலும் ட்ராஃபிக் போலிஸிடம் சிக்காமல் வீடு திரும்பும் யோகம் உள்ளது. எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் படுத்ததும் குறட்டைவிடும் அதிர்ஷ்டம் உண்டு.

அதிர்ஷ்ட எண்: -4, -3, -2, -1,

அதிர்ஷ்ட நிறம்: மேக நிறங்கள்.

 

 

குறிப்பு: மேற்சொன்ன ராசிபலன்கள் அனைத்தும் கற்பனையே! ஒருவேளை உங்கள் வாழ்க்கையோடு பொருந்திப் போனால் அதற்கு ராசிபலன் சொன்ன கம்ப்யூட்டர் சிவகாமி பொறுப்பல்ல! இன்று போனால், நாளை ஒரு நாள் கிடைக்கும். ஆனால், போன அந்த ஒருநாள் மீண்டும் திரும்ப கிடைக்கவே கிடைக்காது என்பதை உணர்ந்து உழைத்தால் எல்லா நாளும் இனிய நாளே!

http://www.vikatan.com

:grin:

  • தொடங்கியவர்

 

கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கிக்கொண்டே இருக்கின்றது...

இந்த வர்ணமயமான பண்டிகையை கொண்டாடுவதற்கு பல நாடுகள் ஆயத்தமாகி வருகின்ற நிலையில் ஜேர்மனியின் ஸிலிட்ஸ் நகரில் கண்கவர் கிறிஸ்மஸ் சந்தை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இங்கிலாந்து இரட்டைச் சகோதரிகள் (Photos)

100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இங்கிலாந்து இரட்டைச் சகோதரிகள் (Photos)

இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகள் தங்களது 100 ஆவது பிறந்தநாளை ஒரே மாதிரியான உடை அணிந்து ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.

இங்கிலாந்திலுள்ள ஸ்டூயர் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் இரெனே குரும்ப்- பிலிஸ் ஜோன்ஸ் இவர்கள் கடந்த 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி பிறந்தனர்.

தற்போது இவர்களுக்கு 100 வயது ஆகிறது. அதை தொடர்ந்து சமீபத்தில் இந்த இரட்டை சகோதரிகள் தங்களின் 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

அப்போது இருவரும் ஒரே நிறத்தில், ஒரே மாதிரியான உடை அணிந்து இருந்தனர். மேலும் ஒரே நேரத்தில் ‘கேக்’ வெட்டி மகிழ்ந்தனர்.

விழாவில் நண்பர்களும், குடும்பத்தினரும் பங்கேற்றனர். இருவரும் 25 நிமிட இடைவெளியில் பிறந்தனர். ஒரே பள்ளியில் படித்து, ஒரே அலுவலகத்தில் இருவரும் பணிபுரிந்தனர். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்கின்றனர்.

90 ஆவது பிறந்த நாளை யும், இருவரும் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். கடின உழைப்பு மற்றும் சிறந்த உணவே தங்களது உடல் நலனுக்கும், நீண்ட காலம் உயிர் வாழவும் உதவும் இரகசியம் என இவர்கள் தெரிவித்தனர்.

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
 
 

 

8-2.jpg

8-2.jpg

7-2.jpg

6-2.jpg

5-2.jpg

4-2.jpg

3-3.jpg

http://newsfirst.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
Miss Supranational - 2016 அழகுராணி போட்டியில்
 

மிஸ் சுப்­ர­நெ­ஷனல் 2016 (Miss Supranational 2016) போலந்தில் நடை­பெ­று­கி­றது. 71 நாடு­களின் அழ­குராணிகள் இப்­ போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றனர்.

 

20967Suriname-and-Sri-Lanka-Jaleesa-and-

சூரினாம் அழகுராணி ஜெலீஸாவுடன் இலங்கை அழகுராணி ஒர்னெலா குணசேகர

 

2096715171165_1155505507889846_675209639

 

2096715179109_1156351544471909_612137737

 

இலங்­கையின் சார்பில் ஒர்­னெலா குண­சே­கர பங்­கு­பற்­று­கிறார். இப்­ போட்­டியில் பங்­கு­பற்றும் அழ­கு­ரா­ணிகள் சிலரை படங்களில் காணலாம்.

 

2096715107428_1155507214556342_566960636

 

2096715170770_1158577287582668_686411050

 

20967_15202508_1155506844556379_23677319

 

20967_15219992_1154866364620427_18845686

 

20967_15241298_1158577507582646_44754873

 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெர்மனியில் புலிக்குட்டிகளை வளர்க்கும் நாய்!

 

 

ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்காவில் 2 புலிக்குட்டிகளை, அதன் தாய் கைவிட்டுவிட்டது. இதையடுத்து அந்த பூங்காவில் பணிபுரியும் ஒருவர் அந்த குட்டிகளை தனது வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். அந்த புலிக்குட்டிகளை, அவர்கள் வீட்டில் உள்ள ஒரு நாய் கவனித்துக் கொள்கிறது. புலிக்குட்டிகளுடன் விளையாடுவது, குட்டிகளை என்டர்டெய்ன் செய்வது எல்லாம் அந்த நாய்தான்..  இந்த நெகிழ வைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக இது ஆறு வயதாகும் ஒரு ஆண் நாய். முக்கியமாக கடந்த 2012-ம் ஆண்டு இந்த நாய், ஒரு சிங்கக்குட்டியை வளர்த்தது குறிப்பிடத்தக்கது.
 

 

 

vikatan

  • தொடங்கியவர்

முத்தான 10 தாலாட்டுப் பாடல்கள்! #LullabySongs

 

                                                                                                           தாலாட்டுப் பாடல்

தாலாட்டு....ஒவ்வொருவரும் தங்களது பெற்றோர்களின் வாயிலாக குழந்தைப் பருவத்தில் பெற்ற ஒப்பில்லா மகிழ்ச்சித் தருணங்கள். அவை சினிமா பாடல்களாக, இலக்கியப் பாடல்களாக, கிராமியப் பாடல்களாக, கூத்துப் பாடல்களாக மழலைகளின் செவிகளில் பாய்ந்த இசை ஊற்று. தாலாட்டுப் பாடல்கள், நல்ல கருத்துகளை அவரவர் மண் வாசனைக்கு ஏற்ப பாடி குழந்தைகளை உறங்க வைக்கும். எவருக்குமே நீங்காத மகிழ்ச்சியைக் கொடுக்கும் தாலாட்டுப் பாடல்கள், தமிழ் திரை இசையிலும் ஏராளமாக ஒலித்திருக்கின்றன. அவற்றில் சிறந்த 10 பாடல்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு:

1. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே!
படம் : பார் மகளே பார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

இப்பாடலின் சில வரிகள்:

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....

குயிலே என்று கூவி நின்றேனே உன்னை 
என் குலக்கொடி உன்னை
துனையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே 
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா 
ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

2. காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!

படம்: சித்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

இப்பாடலின் சில வரிகள்:

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

3. கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
படம் : என் ஆசை மச்சான்
பாடலாசிரியர் : வாலி

இப்பாடலின் சில வரிகள்:

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

சின்ன மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

பூ விழி இமை மூடியே
சின்ன பூவே கண்ணுறங்கு
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

4. கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
படம் : பஞ்சவர்ணக் கிளி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

இப்பாடலின் சில வரிகள்:

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

5. மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
படம் : வால்டர் வெற்றிவேல்
பாடலாசிரியர் : வாலி

இப்பாடலின் சில வரிகள்:

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும்தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ


நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதிராஜன் இன்று பல தேசம் நீயும் வென்று 
வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென் மதுரை சீமை எல்லாம் அரசு ஆளும் உன்னை கண்டு
திரு தோளில் மாலை சூடும் மகாராணி யாரோ இங்கு
ஒளி விடும் எதிர்காலம் உண்டு உருவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

6. ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
படம் : தெய்வ திருமகள்
பாடலாசிரியர் : நா.முத்துகுமார்

இப்பாடலின் சில வரிகள்:

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஓ…இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

7. கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் 

படம் : கேளடி கண்மணி
பாடலாசிரியர் : மு.மேத்தா

இப்பாடலின் சில வரிகள்:

கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

 

 

8. அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
படம் : கற்பகம்
பாடலாசிரியர் : வாலி

இப்பாடலின் சில வரிகள்:

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
அதை மான் குட்டி கேட்டு கண் மூடும்

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

9. கண்கள்  நீயே..காற்றும்  நீயே
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை

இப்பாடலின் சில வரிகள்:

கண்கள்  நீயே..காற்றும்  நீயே
தூணும்  நீ ..துரும்பில் நீ
வண்ணம்  நீயே ..வானும்  நீயே
ஊனும் நீ ..உயிரும்  நீ

பல  நாள்  கனவே
ஒரு  நாள் நனவே
ஏக்கங்கள்  தீர்த்தாயே
இடையில்  பிழிந்து  உன்னை  நான்  எடுத்தேன்
நான் தான்  நீ ..வேறில்லை
முகம்  வெள்ளைத்  தாள்
அதில்  முத்தத்தால்
ஒரு வெண்பாவை  நான் செய்தேன்  கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும்  தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள்  நீ செய்தாய்  கண்ணே


தோளில்  ஆடும்  சேலை
தொட்டில்  தான்  பாதி  வேலை

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

10. ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ

படம் : சிறுத்தை
பாடலாசிரியர் : அறிவுமதி

இப்பாடலின் சில வரிகள்:

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலின் முழு வீடியோ பதிவைக் காணலாம்:

 

 

vikatan

  • தொடங்கியவர்

“பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் விஷயம்” - காணொளி

  • தொடங்கியவர்

15235386_1199166726798686_15767494031185

திரைப்பட நகைச்சுவைகள் மூலமாக தீர்க்கமான கருத்துக்கள் பரப்பிய சிந்தனையாளர் கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்

 

“இவரிடமிருந்துதான் இரக்கக் குணத்தைக் கற்றார் எம்.ஜி.ஆர்!''- என். எஸ்.கே பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

 

nsk001_13186.jpg

50-களின் மத்தியில் சென்னையின் மத்தியில் உள்ள அந்த பிரபல மண்டபம் பிரபலஸ்தர்களால் நிரம்பி வழிந்தது. விழா நாயகனை விழா எடுத்த பிரபலமும் விழாவுக்கு வந்த பிரபலங்களும் மேடையில் பாராட்டித்தள்ளினர். பணமுடிப்பும் பாராட்டும் குறைவின்றி கொடுக்கப்பட்டது விழாவின் நாயகனுக்கு. நடந்து முடிந்த அந்த விழா குறித்து திரையுலகமே பல மாதங்கள் ஆச்சர்யமாக பேசிக்கொண்டனர். காரணம் விழா நாயகன் சாதாரண ஒரு டிரைவர். தனக்கு பல ஆண்டுகள் காரோட்டிய டிரைவரை கவுரவிக்க அவருக்குப் பிரபலங்களைக் கூட்டி விழா எடுத்த அந்த மனிதநேயர் வேறு யாருமல்ல; கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை என்.எஸ்கிருஷ்ணன்.

நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், சாதாரண நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் தொடங்கி திரையுலகில் ஈடில்லாத நகைச்சுவை மேதையாகத்  திகழ்ந்தவர். திரையுலகில் தான் சம்பாதித்ததை வாரி வழங்கி மகிழ்ச்சியடைந்தவர் கலைவாணர்

nsk002_13363.jpg

பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவின் திரைப்படம் ஒன்றுக்காக கலைவாணர் மற்றும் இன்னும் சில நடிகர்கள் புனே சென்றனர். இந்தக் குழுவில் பின்னாளில் அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற மதுரம் அம்மையாரும் இடம்பெற்றிருந்தார். அதுதான் கலைவாணருடனானா முதற்படம். புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழிச்செலவுக்கு பணம் தருவதாக சொன்ன தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் மட்டும் அமைதியாக இருந்தார். அனைவருக்கும் முதல்நாள் பயணச் செலவை தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்துக்குப் போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு.

இது அபத்தமாக தெரிந்தாலும் மதுரம் அம்மையார் தன்னிடம் இருந்த கொஞ்சம் பணத்தை வெறுப்போடு தந்தார். ஆனால் கலைவாணரின் nsk003_13493.jpgசெயல் வெறுப்போடு கொஞ்சம் அவருக்கு ஆச்சர்யத்தையும் தந்தது. 'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை. அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட' கலைவாணரின் குணம் ஆச்சர்யம் தந்தது. படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது.

புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். இந்தமுறை எரிச்சலுடன் கலைவாணரை கோபித்துக்கொண்ட மதுரத்திடம் மெதுவான குரலில் இப்படிச் சொன்னார் கிருஷ்ணன். ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க... ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்கத் தவறிட்டாங்க. தெரியாம நடந்திருக்கலாம்...எப்படியும் பின்னாளில் பணம் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்கக் கூடாது. வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கப் போகிறவங்க... இன்னார் இப்படிப்பட்டவங்கன்னு ஃபீல்டுல தகவல் பரவினா அவங்க எதிர்காலம் பாதிக்கும்...சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது... அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது... இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார். என்.எஸ்.கிருஷ்ணனின் இந்த மனிதநேயத்தால் நெகிழ்ந்துபோனார் மதுரம். புனேயில் இருந்து திரும்பும்போது தம்பதியாக திரும்பினர் இருவரும்.

சாதாரண நடிகராக மட்டுமின்றி புகழின் உச்சிக்கு சென்றபின்னரும் கலைவாணரின் இரக்க குணம் சற்றும் குறையவில்லை. வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கினார். திரையுலகில் வள்ளல்குணத்துக்கு உதாரணமாக ஒருவரை காட்டச்சொன்னால் சிறுகுழந்தையும் எம்.ஜி.ஆர் என்ற மனிதரை அடையாளம் காட்டும். எம்.ஜி.ஆர் என்ற மனிதநேயரின் வள்ளல்குணத்துக்கு வழிகாட்டி கலைவாணர்தான். கலைவாணரிடமிருந்துதான்தான் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டேன் என பல மேடைகளில் எம்.ஜி.ஆர் பெருமிதமாகக் குறிப்பிட்டதுண்டு.

nsk004_13154.jpg

1966-ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலருக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்து எம்.ஜி.ஆர் எழுதியவற்றை பார்ப்போம். “புகழ் மிகுதியின் அடித்தளத்தில் என்.எஸ்.கிருஷ்ணனை அவரது அறிவும் பண்புமே நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால் காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல. பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால் திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள். சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால் அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.

இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம். கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.

இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

nsk005_13452.jpg

'மாய மச்சேந்திரா' படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம்.டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், படக் கம்பெனிச் சொந்தக்காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார். பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத் தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.
பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள்.

மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள். இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;

nsk006_13045.jpg

நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துக் கொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்து கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்து கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால் பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?

nsk007_13237.jpg

அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துக் கொண்டார்கள். இவர் தான் கலைவாணர்.
நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம். ஆனால் ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால் அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலினும் பெரியது; மலையினும் உயர்ந்தது. அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை.

nsk0014_13449.jpg

அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார்.ஆனால் பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்துக்குள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால் அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துக் கொள்வார்கள்.

கலைவாணர் அவருடைய கடைசி கால கட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி. அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன்.  பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போறாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!

nsk008_13011.jpg

அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது. இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்பு மிக்க செயல்கள்தாம். கலைவாணரின் மறைவின் போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சிபேதம், மொழி பேதம், இனபேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!

அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

vikatan

  • தொடங்கியவர்

சைத்தான் படத்தின் அடுத்த நான்கு நிமிடங்கள்

 

 

வரும் வியாழன் அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் சைத்தான். விஜய் ஆன்டனி நடித்து இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் 10 நிமிடங்களை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தார்கள். தற்போது அடுத்த நான்கு நிமிடங்களையும் விஜய் ஆன்டனி வெளியிட்டு இருக்கிறார்.

 

 

  • தொடங்கியவர்

 

குட்டைப் பாவாடை அணிவது குற்றமா?
------------------------------------------------------------------------
குட்டைப் பாவாடை அணிந்தால் ஆண்களின் கவனம் சிதறும் எனக் கூறி, சட்டக்கலூரி மாணவிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

BBC

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

ஓவியங்கள்: ஸ்யாம்

 

20p1.jpg20p12.jpg

மருத்துவம்

மருத்துவமனைக்கு வெளியே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான் மனநலம் குன்றியவன்.

- வெ.சென்னப்பன்


20p2.jpg

வீடியோ

சாலையில் விபத்து ஏற்பட்டதும், மக்கள் அவரவர் மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

- வெ.சென்னப்பன்


20p3.jpg

கெஞ்சல்

கடன் கேட்டபோது எல்லாம் `என்கிட்ட ஏது?' என்ற பக்கத்து வீட்டுக்காரர், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களைக் கொண்டுவந்து கொடுத்தார் எப்படியாவது மாற்றிதரச் சொல்லி!

- கோ.பகவான்


20p4.jpg

பதற்றம்

படத்தின் சண்டைக்காட்சிகளைப் பார்த்துப் பதறினாள்... ஸ்டன்ட் நடிகரின் மனைவி!

- பெ.பாண்டியன்


20p5.jpg

பேய்

பேய் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த குழந்தை, இரவு முழுவதும் அழுதது பேயைக் காட்டச் சொல்லி!

- சி.சாமிநாதன்


20p6.jpg

மொழிப்பற்று

மும்பை ஹீரோயின், தெலுங்கு ஹீரோ, கன்னட வில்லன், மலையாள இயக்குநர் இவர்களை வைத்து எடுத்த படத்துக்கு வரிவிலக்குக்காக, தமிழில் பெயர் வைத்தார் தயாரிப்பாளர்.

- பர்வீன் யூனுஸ்


20p7.jpg

சந்தேகம்

``அம்மாவுக்குப் பேய் பிடிச்சிருக்கு. அதான் கத்துறா...'' என்று பாட்டி சொன்னதும், `` `காஞ்சனா' பேயா... `அரண்மனை'ப் பேயா பாட்டி?'' எனக் கேட்டாள் பேத்தி!

- பெ.பாண்டியன்


20p8.jpg

முன்னெச்சரிக்கை

பதுக்கிவைத்திருக்கும் பணத்தை எல்லாம் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரே விநியோகித்தார் வேட்பாளர்.

 - கோ.பகவான்


20p9.jpg

பந்தோபஸ்து

``நெருக்கித் தள்ளாதீங்க, க்யூ-ல வாங்க!'' என  அதட்டிக்கொண்டே கவுன்ட்டரை நெருங்கிய போலீஸ்காரர், தன் பாக்கெட்டில் இருந்து நான்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்தார்.

- ச. செந்தில்வேலன்


20p10.jpg

தேடுதல்

தாத்தா இறந்ததும் எல்லோரும் தேடி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்... அவருடன் எடுத்த செல்ஃபியை!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

நவம்பர் - 30

 

1700 : சுவீடனின் 12ஆம் சார்ள்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.

 

1718 : நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் 12 ஆம் சார்ள்ஸ் இறந்தான்.

 

1782 : அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கு இடையிலான ஆரம்ப சமாதான உடன்பாடு பாரிஸில் கையெழுத்திடப்பட்டது.

 

859varalru-30-11-2016.jpg1803 : ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்ஸிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.

 

1806 : நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வோர்ஸோவைக் கைப்பற்றின.

 

1853 : ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.

 

1872 : உலகின் முதலாவது சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.

 

1908 : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.

 

1939 : சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசின.

 

1962 : பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட், ஐ.நா.வின் 3 ஆவது பொதுச் செயலராகத் தெரிவானார்.

 

1966 : ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் சுதந்திரம் பெற்றது.

 

1967 : ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் சுதந்திரம் பெற்றது.

 

1967 : சுல்பிகார் அலி பூட்டோ, பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

 

1981 : ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.

 

1995 : 1990 ஆம் ஆண்டு ஆரம்பித்த வளைகுடாப் போர் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தது.

 

2004 : இந்தோனே ஷியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

 

2012 :  கொங்கோவில் சரக்கு விமானமொன்று வீடுகளுக்கு மேல் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 6 பேரும் தரையிலிருந்த 26 பேரும் உயிரிழந்தனர்.

 

2013 : கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சியொன்றின் போது ஏற்பட்ட தீயினால் சுமார் 200 கண்டுபிடிப்பு பொருட்கள் தீக்கிரையாகின.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

3 நூற்றாண்டுகளிலும் பிறந்த நாள் கொண்டாடிய இத்தாலி பாட்டி!

பாட்டி

19-ம் நூற்றாண்டில் இறுதியில் பிறந்து, இன்றுவரை உயிர்வாழும் கடைசிப் பெண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், எம்மா மொனாரோ என்ற பாட்டி.

நமக்கு தெரிந்தவரையில் நூறு ஆண்டுகள் முழுமையாக வாழ்ந்தவர்களைப் பார்ப்பதே அரிது. ஒரு சில பேர்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், இத்தாலியில் பிறந்த பாட்டி 19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் தன் பிறந்த நாளைக் கொண்டியிருக்கிறார் எனும் செய்தி முதலில் ஆச்சர்யத்தை அளித்தாலும், பின் மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதானே.
 
நவம்பர் 29, 1899-ல் பிறந்த எம்மா மொனாரோ, உலகிலேயே மிகவும் வயதான பாட்டி என்ற சாதனையைப் படைத்துள்ளார். சமீபத்தில் தன் 117-வது பிறந்தநாளை மிக சிறப்பாகக் கொண்டாடிய இந்தப் பாட்டி, இத்தாலியில் பிறந்தவர். கடும் உழைப்பாளியான இவரது வாழ்க்கை தன்னம்பிக்கையோடு ஒருவர் வாழ்வதற்கான உதாரணமாக கொள்ள வேண்டியதாகும்.

இத்தாலியில் உள்ள லேக் மேகியோர் என்ற இடத்தில் வாழ்ந்துவரும் எம்மா பாட்டிக்கு, எட்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இப்போது குடுகுடு தாத்தா, பாட்டியாகிவிட்டபோதிலும், 'இத்தனை வயதுவரை ஆரோக்கியமாக இருக்கும் எங்கள் அம்மாவைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது' என்கிறார்கள். 1936-ல் தன் கணவரை இழந்த பிறகு, ஒரு சிறு தொழிற்சாலையில் கூலிவேலை செய்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றிவந்தார் எம்மா. தங்களை சிரமப்பட்டு வளர்த்ததை இன்றும் நெகிழ்வோடு உணர்கிறார்கள் பிள்ளைகள்.

 ''தினமும் இரண்டு முட்டைகள், அத்தோடு பிஸ்கெட்ஸ் சாப்பிடுகிறேன். பற்கள் இல்லாதனால் என்னால் அதிகமாக சாப்பிடி முடியாது என்று FAP நியூஸ் நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

emma-1_08261.jpg

நூறு ஆண்டுகளைக் கடந்த இவருக்கு புதிய விஷயங்கள் ஏதும் தெரியாது என நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி கூறும்போது,

'இன்று என் பிறந்தநாளைக்கு யாரையும் அழைக்கத் தேவையில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து என உலகில் உள்ள எல்லா மக்களும் இணையம் மூலம் என்னை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டு இருப்பார்கள்' என்று பொக்கை வாய் புன்னகையோடு கூறும் பாட்டி, 'சென்ற பிறந்தநாள் அன்று சிறு துண்டு கேக் சாப்பிட்டேன். இந்தப் பிறந்தநாளைக்கு அதுவும் சாப்பிடமுடியவில்லை' என்று வருந்துகிறார்.

'இப்போது படுக்கையைவிட்டு என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. கேட்பதும், பேசுவதும் குறைந்துவிட்டது. கண்பார்வை மங்கிவிட்டது. என் உடல் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து வருவதை என்னால் நன்றாக உணரமுடிகிறது' என்று சோகமாகும் பாட்டியை, உலகம் முழுக்க இருந்து குவிந்தவண்ணம் இருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் மூப்பின் அவஸ்தைகளையும் மீறி மலர்த்திக்கொண்டிருக்கின்றன. அந்த வாழ்த்துகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பாட்டி, அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறார்.

emma2_08579.jpg

19-ம் நூற்றாண்டின் கடைசி மனுஷியின் பிறந்தநாளுக்கு வாழ்த்த உறவினர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் ரிப்போர்ட்டர்கள், சாட்டிலைட் சேனல்கள் என அவர் வீடே நிரம்பிவிட்டது. 'மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெண்' என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற உள்ளார் பாட்டி.

எம்மா மொனாரோவை கௌரவிக்க உள்ளூர் திரை அரங்குகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இவரைப் பற்றிய சுய சுயசரிதை 'The Woman Who Saw Three Centuries' என்ற பெயரில் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலத்தின் சாட்சி!

vikatan

 

  • தொடங்கியவர்

15181260_1200439770004715_58288717694637

சதுரங்க உலக சம்பியன்  மக்னஸ் கார்ல்சனின் பிறந்தநாள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டென்மார்க்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் குடியிருப்புக்கள் (Photos)

டென்மார்க்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் குடியிருப்புக்கள் (Photos)

டென்மார்க் கட்டுமான நிறுவனம் ஒன்று சூழலுக்கு உகந்த, விலை குறைந்த குடியிருப்புக்களை உருவாக்கி வருகிறது.

அநேகமான நகரங்களில் வாடகை முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது, வசதி இல்லாதவர்களுக்காகவே புதுமையான மிதக்கும் கண்டெய்னர் குடியிருப்புக்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

துறைமுகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குடியிருப்புக்களில் மாணவர்களே அதிகம் தங்கியிருக்கின்றனர்.

கண்டெய்னர் குடியிருப்பில் தங்கிய பிறகு, கணிசமாகச் சேமிக்க முடிகிறது. அறைகள் நவீனமாகவும் அனைத்து வசதிகளுடனும் இருக்கின்றன என இங்கு தங்கியுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கண்டெய்னரில் 12 பேர் வசிக்கக் கூடியதாக இந்த குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டென்மார்க் முழுவதும் 20 இடங்களில் 240 குடியிருப்புக்களை உருவாக்கி வருகிறோம். ஸ்வீடனில் 288 குடியிருப்புக்களுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

உலகம் முழுவதும் எங்கள் கண்டெய்னர் குடியிருப்புக்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்கிறார் அர்பன் ரிகர் நிறுவனர் கிம் லோட்ரப்.

1

2

4

7

6

5

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

வாணி ஜெயராமின் இந்த க்ளாஸிக்குகளை கேட்டிருக்கிறீர்களா? #HBDvanijayaram

 

வாணி ஜெயராம்

பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக... வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம். பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின்  உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட்  பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர். இந்நாளில் அவருடைய  சிறந்த பாடல்கள்  சிலவற்றை பார்ப்போம்.

நித்தம் நித்தம் நெல்லு சோறு!

 

தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது. பாடல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்படியே ஒரு கிராமத்து பெண் பாடுவது போலவே பாடி  முடித்திருப்பார். இந்தப்பாடலை கேட்டு முடித்த பிறகும்  அதிலிருந்து மீண்டு வர சில நேரம் ஆகும். அப்படியான  இசையும், குரலும், வரிகளும் பின்னிப் பிணைந்து இருக்கும். 

"பச்சரிசி சோறு.. உப்பு கருவாடு...

சின்னமனூரு வாய்க்கா செலு கொண்ட மீனு

குருத்தான மொல கீற வாடாத சிறு கீற

நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது

அள்ளி தின்ன ஆச வந்து என்னை மீறுது"

என இளையராஜாவின் இசையில்,  கங்கை அமரனின் வரிகளில் மனதை மயக்கும் பாடல் இதோ!

 

மல்லிகை என் மன்னன் மயங்கும்....

 

 

 

கணவனுக்கு பிடித்த மல்லிகை பூவை சூடிக்கொள்ளவா ? என மனைவி கேட்டு பாடும்  பாடல் இது.

"குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி

கொஞ்சிப்  பேசியே அன்பை பாராட்டுது

என் கண்ணன் துஞ்சத்தான்

என் நெஞ்சம் மஞ்சம் தான்

கையோடு நான் அள்ளவோ"

என மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பெண்களின் மனம் கவர்ந்த பாடல் இதோ!

 

என்னுள்ளில்  எங்கோ ஏங்கும் ஜீவன்...

 

 

ஒரு பெண் காதல் வயப்படும்போது உணரும் உணர்ச்சிகளை குரலிலேயே தந்து அசத்தியிருப்பர் வாணி ஜெயராம். ரோசப்பூ  ரவிக்கைக்காரி படத்தில் வரும் இப்பாடல்  காட்சிக்கு பின்னே ஓடும். ஆனால்  கதாநாயகியின் உணர்ச்சிகளை பாட்டு வெளிப்படுத்தும்.

"என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்

ஏன் கேட்கிறது ஏன் கேட்கிறது

ஆனால் அதுவும் ஆனந்தம்"

என தொடங்கும் இப்பாடல் கவிஞர் புலமைப்பித்தன் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்ததாகும்.

 

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!

 

 

வாணி ஜெயராம் அவர்கள்,  இந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் சாங் இது. இந்த பாடல் தவிர்த்து, கேள்வியின் நாயகனே பாடலும் வாணி ஜெயராம் பாடியதுதான். படத்தின் முதல் பாடலையும்  இறுதிப் பாடலையும் வாணி ஜெயராமிடம் இயக்குநர் ஒப்படைத்திருக்கிறார் என்றால் பாருங்கள், அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் அளவுகோலை!  இந்த பாடலை  தத்துவப் பாடல் என்றே  சொல்லலாம். கவிஞர் கண்ணதாசனின்,

"ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்"

என்ற வரிகளில், எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அந்த பாடல் இதோ!

 

என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்!

 

 

 

காதலனை பார்த்து உருகி பாடும் பாடல் இது. காதலை கூறும்போது வெட்கத்துடன் நளினத்துடன் கூறுகிறாள் இந்த நங்கை. அது வேறு யாருமல்ல நம் பாடகி தான்.

"உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்

உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ

சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு

மாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்………"

என இளையராஜாவின் இசையில்  நனைந்திட அப்பாடல்  இதோ!

 

வேறு இடம் தேடி போவாளோ?

 

 

பாடல்களில் பல்வேறு உணர்ச்சிகளை கொடுப்பவர் வாணி ஜெயராம்  என்று முன்பே கூறியதற்கு உதாரணம் இப்பாடல். இயலாமையில், வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் பெண்ணின் மனக்குரலை பதிவு  செய்திருக்கிறார். உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் மனதை கணமாக்கும்.

"சிறு  வயதில் செய்த பிழை

சிலுவையென சுமக்கின்றாள்

இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ

மலரெனவே முகிழ்ப்பாளோ"

என்ற ஜெயகாந்தனின்  கனத்த வரிகளோடு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அந்த பாடல் இதோ!

தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

vikatan.

  • தொடங்கியவர்

 

போக்கிமோன் கோ விளையாட்டு எப்படி உருவானது?
அதை உருவாக்கியவர் பகிர்ந்துகொள்ளும் சுவையான தகவல்கள்

  • தொடங்கியவர்
I Am Bolt: யூசெய்ன் போல்ட்டின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் வெளியாகியது
 

குறுந்தூர ஓட்டத்தில் உலக சாதனையாளராகத் திகழும் ஜெமெய்க்கா வீரர் யூசெய்ன் போல்ட்டின் வாழ்க்கையை அடிப்டையாகக் கொண்ட திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

 

209872016-11-28T200057Z_1076220407_RC1EC

நடனக் கலைஞர்களுடன் யூசெய்ன் போல்ட்


 

'ஐ ஏம் போல்ட்' (I Am Bolt) எனும் இத் திரைப்படத்தின் வெளியீட்டு விழா லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் உட்பட பலர் இவ் விழாவில் பங்குபற்றினர். ஜெமெய்க்கா நாட்டைச் சேர்ந்த யூசெய்ன் போல்ட் 2008 முதல் 2016 வரை தொடர்ச்சியாக ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் 100 மீற்றர், 200 மீற்றர், 4X100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை, அதாவது 9 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர்.

 

209871.jpg

ஆர்செனல் கழக வீரர் ஒலிவர் கிரியொட், மனைவி ஜெனிபருடன்..., யூசெய்ன் போல்ட்


 

100 மீற்றர், 200 மீற்றர் போட்டிகளில் அவர்  உலக சாதனையாளராகத் திகழ்கிறார். தற்போது 30 வயதான யூசெய்ன் போல்ட், அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக மெய்வன்மை வல்லவர் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், அவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட I Am Bolt திரைப்படம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கால்பந்தா ட்டம், கிரிக்கெட் போட்டிகளிலும் ஆர்வம் கொண்ட யூசெய்ன் போல்ட், இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் கழகத்தின் ரசிகராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்.

 

20987usain-bolt-lead.jpg

ரியோ ஒலிம்பிக் போட்டியில்...


 

எனினும், லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப் படத்தின் வெளியீட்டு விழாவில் இங்கிலாந்தின்  ஆர்செனல் கழக வீரர்களான ஒலிவர் கிரியொட், சன்ட்டி கஸரோலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனான பிரித் தானிய ஓட்ட வீரர் மோ ஃபரா, விம்பிள்டன் முன்னாள் சம்பியனான ஜேர்மனிய வீரர் போரிஸ் பெக்கர் ஆகியோரும் இதில் பங்குபற்றினர்.

 

 I Am Bolt திரைப்படத்தில், அவரின் ஓட்டப்போட்டிகள், இப் போட்டி களுக்காக யூசெய்ன் போல்ட் மேற்கொள்ளும் கடினமான பயிற்சிகள், வீட்டில் அவர் ஓய்வெடுப்பது முதலானவற்றை சித்தரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

209872016-11-28T200154Z_1017404501_RC1CD

பிரித்தானிய ஓட்ட வீரர் மோ பரா, மனைவி டானியாவுடன்...


 

இப் படத்தின் வெளியீட்டு விழாவுக்கு முன்னர், லண்டனில் நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும் யூசெய்ன் போல்ட் பங்குபற்றினார். இம் மாநாட்டில்  அவர் பேசுகையில், 'பெரும்பாலான மக்கள், 'யூசெய்ன் போல்ட்டுக்கு அது இலகுவானது, கடின முயற்சிகள் தேவையில்லை எனக் கருதுகின்றனர்.

 

ஆனால், உண்மை அப்படியல்ல' என்றார். 'நான் இன்றுள்ள நிலையை அடைவதற்கு எவற்றையெல்லாம் கடந்து வந்தேன் என்பதை மக்கள் பார்க்க வேண்டும்' என நான் விரும்புகிறேன்' எனவும் யூசெய்ன் போல்ட் கூறினார்.

.metronews.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்? #WaystoProposeGirls

 

காதலை

 

ண்டதும் காதல், காணாமலே காதல், கடிதக் காதல், ஃபோன் காதல், கல்லூரிக் காதல், பேருந்துக் காதல், உறவுக் காதல், ஊர்க் காதல்,  ஃபேஸ்புக் காதல் என, காதல் முளைக்கும் களங்கள் கணக்கற்றவை. ஒரு ஆண் ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணிடமோ, தங்கள்  காதலை  வெளிப்படுத்தி, அன்பை இணையிடம்  தொடர்கிறார்கள். காதலை வெளிப்படுத்துவதை ஆங்கிலத்தில் புரபோசல்( love proposal) என்கிறோம். இந்த புரபோசலை பெண்களைவிட ஆண்களே முதலில் செய்கிறார்கள். அப்படி ஆண்கள் செய்யும் புரபோசல்கள் பெருமளவில் நிராகரிக்கப்படுகின்றன.
பெண்களைத் துரத்தித்துரத்தி  காதல் செய்வதால் ஒரு பயனும் இல்லை. மாறாக தன் மீது விருப்பம் இல்லாத பெண்ணின் மீது ‘காதலை வெளிப்படுத்துகிறேன்’ என்ற பெயரில்  தொந்தரவு செய்வதால், பெண்  உட்சபட்ச கோபம் அடையக் கூடுமே தவிர , எந்தவிதத்திலும் காதல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் முன் கீழ்காணும் விஷயங்களைப் பின்பற்றலாம்.

 

l3_15405.jpg

 

பொய் சொல்லக் கூடாது காதலா!


தான் விரும்பும் பெண் அழகினாலோ, கல்வி, வசதி வாய்ப்புகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ  ஈர்த்திருக்கலாம். ஆனால், தனக்கு காதல் வந்த காரணத்தை நேரடியாகச் சொல்லாமல், பொய்யான காரணத்தைத்  தனக்கு சௌகரியமாகச்  சொல்லி காதலை வெளிப்படுத்துவது கூடவே  கூடாது. நீங்கள் எந்த விஷயத்துக்காக அவரை விரும்புகிறீர்கள் என்பதை முதல் முறையிலேயே சொல்லிவிடுவது நல்லது.

உனக்குப் பிடிச்சா மட்டும் ஓகே சொல்லு!


தனக்கு ஏற்கெனவே தெரிந்த பெண்ணாக இருந்தாலும் சரி, புதிதாக அறிமுகமாகி இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் காதலை வெளிப்படுத்திய நொடியில் இருந்து அவரிடம் இருந்து ‘ஆம்’ என்ற பதிலே வரவேண்டும் என்பதை எதிர்ப்பார்க்காதீர்கள். ‘இது என் விருப்பம், அதே போல உனக்கு என்னைப் பிடித்திருந்தால் மட்டும் சம்மதி’ என்று சொல்லலாம். இப்படிச் செய்வது உங்கள் மீது மரியாதையை உயர்த்தும்!

l4_15172.jpg

எடுத்ததும்  ஐ லவ் யூ வேண்டாமே!


‘எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாமா?’ , வீட்ல கூட பேசிட்டேன்...உனக்கு ஓகேவா?’, ‘நான் உன்னை லவ் பண்ணிடுவேனோனு பயமா இருக்கு. ஆனா, லவ் பண்றேன்னு நினைக்கிறேன்,’  இப்படி முதல் புரபோசல் 'ஐ லவ் யூ' என்ற வாக்கியமாக இல்லாமல் ,வேறு எப்படி எல்லாம் இருக்கலாம் என்று சிலர் தேடிப்பிடித்து முயற்சித்து, வித்தியாசமாகச் சொன்னாலும் பெருமளவில் ‘ஐ லவ் யூ’ என்கிற வாக்கியமே காதலை வெளிப்படுத்த  பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ‘ஐ லவ் யூ’ வை தனக்குப் பிடித்த பெண்ணிடம் சொல்வதற்கு முன்பாக , உங்கள் மீது சிறு அளவிலாவது அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு 'ஐ லவ் யூ' சொல்லுங்கள்.


‘நான் இப்படித்தான்’னு சொல்வதுதான் பெஸ்ட்!


நீங்கள் விரும்பும் பெண் உங்களுடைய தோற்றம், பேச்சு, பழகும் விதம் இதையெல்லாம் பார்த்து உங்கள் மீது வேறொரு பிம்பத்தை வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் அவர்களின் நினைப்புக்கு அப்படியே நேர்மாறாக இருக்கலாம். பார்த்ததும் காதல் என்பது  திரைப்படத்திற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். அதனால், உங்கள் கல்வி, வேலை, குடும்பச்சூழல், உங்கள் எதிர்காலத் திட்டம், பிடித்தவை, பிடிக்காதவை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் அவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டார்களா என்று தெரிந்த பின் காதலைச் சொல்வது நல்லது. அதே போல பெண்ணைப் பற்றிய முழு விவரங்களை நீங்களும் தெரிந்துவைத்துக்கொள்வதும் அவசியம்!

 

l1_15548.jpg

தயக்கமும் வேண்டாம் நெருக்கமும் வேண்டாம்!


காதலைச் சொல்லும்போது பயந்த நிலையில் ஏனோதானோவென்று சொன்னால், உங்கள் மீதான நம்பிக்கை குறையக்கூடும். கையில் ஒரு  ரோஜா மலரோடு மண்டியிட்டுதான் காதலைச் சொல்ல வேண்டும் என்றில்லை. முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்து, சிறு புன்னகையுடன் வெளிப்படுத்துங்கள். அதே போல  தைரியமானவர் என்பதை வெளிப்படுத்த, அவசரப்பட்டு ஆரம்பத்திலேயே தொடுதல் உள்ளிட்ட செய்கைகள் மூலம் காதலைச் சொன்னால், அதுவும்கூட உங்கள் மீதான மதிப்பீட்டைக் குறைத்துவிடும். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை அவசியம் இங்கு!

 

பொது இடங்களில் கேர்ஃபுல்!


காதலைச் சொல்ல இயற்கையான சூழல்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல மனநிலையைக் கொடுக்கும். அதே நேரத்தில் பீச், பார்க் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களாகவும் இருந்தால், நீங்கள் காதலை வெளிப்படுத்தும்போது, அது மற்றவர்களின் கவன ஈர்ப்பைச் செய்வதாக இருக்க வேண்டாம். நீங்கள் அப்படிச் செய்வது உங்கள் இணைக்குப் பிடிக்காதபட்சத்தில், அவர் உங்களை நிராகரிக்கக்கூடும். அதனால், பொது இடங்களில் காதலை வெளிப்படுத்தும்போது அவருக்கு எந்த வகையிலும் தொந்தரவு இல்லாத சூழலை உருவாக்கிக்கொண்டு காதலைச்  சொல்லுங்கள்!

3_15257.jpg

 

செல்போன் புரபோசல் வேண்டவே வேண்டாம்!


 இணையத்தின் வழியிலேயே பல வேலைகள் நடந்துவிடுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமான தகவல் தொடர்பு செல்போன் வழியே பரிமாறப்பட்டாலும் நீங்கள் முதன் முதலாக வெளிப்படுத்தும் காதல், நேரில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. நேரில் சொல்லும்போது, அந்தத் தருணத்தில் உங்கள் முகங்களில் வெளிப்படும் மலர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும் வாழ்நாள் பொக்கிஷம். அந்த அனுபவத்தைத்  தவறவிடாதீர்கள். செல்போன் இருக்கிறது என்பதால் மனதில் பட்டதை எல்லாம் பட்டென்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் விரும்பத்தகாத வார்த்தைகளைப்   பிரயோகம்செய்வது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். அதனால், இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

காதலிக்கு என்ன பிடிக்கும்?


புரபோஸ் செய்யும் முன், தான் விரும்பும் பெண்ணுக்குப் பிடித்த நிறத்தில் உடை அணிந்து செல்லலாம். அவள் ரசித்தப் பாடலை உங்கள் செல்போனின் ரிங் டோனாகவும், காலர் டியூனாகவும் வைத்திருக்கலாம். நீங்கள் விரும்பும் பெண்ணுக்குப் பிடித்த பொருட்கள் நிறைய இருக்கலாம். அவர் வாங்கிக்கொள்ளும் விருப்பம் உள்ளவராக இருந்தால்,  நீங்கள் காதலை வெளிப்படுத்தும் நாளில் அதை அவரிடம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யலாம். அல்லது அவர் பொருட்கள் வாங்குவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தால், தயவுசெய்து அப்படிச்  செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

 

l5_15208.jpg

கட்டாயப்படுத்துவது கூடவே கூடாது!


ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் விருப்பம் இல்லாதவரிடம் கட்டாயப்படுத்திக் காதலைச் சொல்வது நல்லதல்ல. அதனால், நீங்கள் காதலிக்கும் நபர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளப் போதுமான அவகாசம் கொடுங்கள். ரத்தத்தால் கடிதம் எழுதுவது, அழுது கெஞ்சுவது, போகும் இடமெல்லாம் பின் தொடர்வது இதெல்லாம் காதலில் சேராது. உங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி காதலிக்க வைத்தால், அதுவும் கட்டாயப்படுத்துவது போலத்தான். அதனால், காதலை மெல்லிய பூங்காற்றாய் நுகரப் பழகுங்கள்.

காதலை வெளிபடுத்தும் உத்திகள் தனிநபரின் விருப்பத்தில் இன்னும் கூட பல வகைகளில் மாறுபடலாம். ஆனால், அவை எப்படி இருந்தாலும்,  துன்புறுத்திப் பெறாமல் இருப்பதே சிறந்தது.

லவ் இஸ் வெல்! ஆல் தி பெஸ்ட்!

vikatan

  • தொடங்கியவர்

‘தள்ளிப்போகாதே’ பாடல் வீடியோ..!

 

maxresdefault%20%281%29_18260.jpg

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொன்றாக இணையத்தில் ரிலீஸ் செய்யத் தொடங்கியதுமே, எப்போது ‘தள்ளிப்போகாதே’ பாடலின் வீடியோ வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்பைப் பூர்த்தி செய்ய இன்று அந்த பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழு. பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் பலரது ஃபேவரைட்.

 

 

 

  • தொடங்கியவர்

1 நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக சாதனை

 

ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 
1 நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக சாதனை
 

மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார். மின்னின் இந்த சாதனையை மற்றொரு மலேசிய பெண்ணான சில்வியா லிம் 1 நிமிடத்தில் 18 ஆடைகள் மாற்றியதன் மூலம் முறியடித்தார்.

இதனால் சற்றும் மனம் தளராத மின் தற்போது 1 நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மின்னின் பெயர் மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.  

மின் செக் லூ நிகழ்த்திய இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட, 19 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி இந்த வீடியோ தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவைக் காண:

 

http://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.