Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

செருப்பு பொருந்தியதும் கால்களை மறந்துவிடுகிறோம்! -ஓஷோ #OshoBirthday

ஓஷோ

"நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும்." என்று சொன்னவர் தத்துவஞானி ஓஷோ. ஓஷோ சொன்ன சொற்கள் அழியாமல் கல்வெட்டுகள் பதிந்துவிட்டது. கடல் அலைகள் ஓயாமல் கரையை தொடுவதுபோல... ஓஷோவின் தத்துவங்கள் கோடிக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டே இருக்கின்றன. 

1931-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஓஷோ. சுதந்திரமாக வளர்ந்தவர். எதையும் எளிதில் கற்றார். பல தியான முறைகளை அறிந்தார். கல்லூரியில் சேர்ந்து தத்துவம் பயின்றார். பலரது எடக்கு மடக்கான கேள்விக்கும், புதிர்களுக்கும், வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கும் எளிமையான விளக்கம் கொடுத்தார். இன்று அவரது பிறந்தநாள். 

வாழ்வில் நீங்கள் எந்த நிலையிலும் இருக்கலாம், சந்தோஷமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு பிரச்னையில் இருந்தாலும்  சரி.... உங்களுக்கான ஒரு ஆரம்பமோ, தீர்வோ, முடிவோ, நம்பிக்கையோ ஓஷோவின் இந்த தத்துவ வார்த்தைகளில் அடங்கி இருக்கலாம்.  படியுங்கள். வாழ்வை கொண்டாடுங்கள்.

 

ஓஷோ

* ‘நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது

* இதுவரை கேட்டது அனைத்தையும் மறந்துவிடு. உனது கோப்பையைக் காலியாக வைத்திரு!

* இருள் என்ற ஒன்று இல்லை. வெளிச்சத்தை எடுத்துச் செல், இருள் மறைந்துவிடும். இருள் இருக்கிறதா? 

* மரத்துக்கு அருகில் செல்லுங்கள். யாரும் பார்க்காதபோது அதனுடன் பேசுங்கள்.மரத்தை தழுவிக் கொள்ளுங்கள். உங்களை நல்லவர் என்று அந்த மரம் உணரட்டும்! 

* சிலவற்றைப் பார்க்கும்போது உங்களுக்கு அழகாய் தெரிகிறது. அப்படியானால் உங்களுக்குள் அழகு இருக்கிறது!

* ஒருவரது கண்ணைப் பார்க்கும்போது உங்கள் இதயத்தை உங்கள் கண்ணுக்குக் கொண்டு வாருங்கள்!

* அனைத்தையும் குழந்தையின் பார்வையில் பாருங்கள்- குழப்பம் இருக்காது!

* வாழ்க்கை தருவது யாவும் சரியானதே! வாழ்க்கை பறித்துக் கொள்வது யாவும் சரியானதே!

* அன்பு வெறுப்பு இல்லாமல் அமைந்திராது! நீ விரும்புகிற நபரையே தான் வெறுக்கவும் செய்வாய்.

* செருப்பு பொருந்தியதும் கால்களை மறந்துவிடுகிறோம்!

* என்ன செய்வது என்பது கேள்வி அல்ல! எதையும் எப்படிப் பார்ப்பது என்பதுதான் கேள்வி!

* எல்லா ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். எல்லா பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஏனென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவாக்கியது தான் ஆணும் பெண்ணும்! இதில் ஆண் யார்? பெண் யார்?

* நண்பன் என்பவன் குறைந்த அளவு பகைமை கொண்டவன். பகைவன் என்பவன் குறைந்த அளவு நட்பு கொண்டவன்.

* பேசும்போது பயப்படாதீர்கள்! பயப்படும்போது பேசாதீர்கள்! 

* எல்லாவித ஆனந்தங்களும் தற்காலிகமானதாக இருக்கும் போது தண்டனை மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்? 

* ரசித்ததைப் பாராட்டாதவன் கலைக் கொலைகாரன்!

* உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்.

* நேராக வளரும் மரம் தான் முதலில் வெட்டப்படும்.

* உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, அதேபோல உன்னை விட தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நீ ஏற்றுக் கொள்ளுதலே உண்மையான எழுச்சியாகும்.

* புத்திசாலியான மனிதன் மாறிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஆடிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பான். அவனுக்கு வானம் கூட எல்லையாக முடியாது.

* தியானம் உன்னை உன்னுடைய உள்ளே இருக்கும் புனிதத்தலத்திற்கு கூட்டிச்செல்லும். நீ அங்கே கடவுளை காணலாம், வேறு எங்கும் காண முடியாது.

* பக்குவம் என்பது யாரையும் சாராதிருப்பது.

* குழந்தைகள் உங்களுடையவர்களல்ல, உங்கள் மூலம் வந்துள்ளவர்கள் அவ்வளவே. 

*  சமூகம், வாழ்வின் மூன்று முக்கிய விஷயங்களை அமுக்கப் பார்க்கிறது – அவை செக்ஸ், மரணம், வாழ்வின் பயனற்ற தன்மை.

* பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மக்கள், அதிகம் உளறுகிறார்கள் – எந்தப் பயனுமற்ற இரைச்சல் இது.

* குடும்பம், நண்பர்கள், மகன், மகள் போன்ற எல்லாமே வெறும் வசதிகளே, பழக்கங்களே, ஊட்டப்பட்ட நம்பிக்கைகளே.

* நட்சத்திரங்கள், பாறைகள், நதிகள் என இவையாவும் உணர்வின்றி இருக்க முடியாது. உணர்வுதான் அவற்றின் வாழ்க்கையே. மனிதன் தலைகீழாகி விட்டான். மூளை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேலும் மூளை உணர்வை அடக்கிவைக்கிறது.

* உண்மையான சுதந்திரம் உன்னிடமிருந்து சுதந்திரமடைவதுதான்.

* நீங்கள் விழித்திருக்கிறீர்களா? வெற்றி உங்களுடையதே!

* கடவுளுக்குப் பிடித்தமானது சிரிப்பு! கடவுள் மகிழ்ச்சியாக இருப்பவர்களை நேசிக்கிறார்! 

* நீங்கள் உறங்கி எழுந்த பின்னால் தான் தூங்கியதையே உணர்வீர்கள்

* நாக்கில் சொற்களின் சுவையை உணருங்கள்

* நீந்தப் பழகாதீர்கள்! மிதக்கப் பழகுங்கள்!

* துளி கடலில் இருக்கிறது! கடல் துளியில் இருக்கிறது!

* இரண்டு முயல்களை விரட்டினால் ஒன்றைக்கூடப் பிடிக்கமுடியாது!

* கொந்தளிப்பு இல்லாத கடல் திறமையான மாலுமியை உருவாக்குவது இல்லை!

 

ஓஷோ

* எப்போதும் வயிற்றைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்கள் தலையைப் பட்டினி போடுகிறார்கள்!

* திறமையான தச்சன் மரச்சாமான்கள் செய்யும் போது குறைந்த வெட்டுகளையே வெட்டுவான்

* இருவருக்கும் விருப்பம் இல்லாமல் சண்டை நடக்காது!

* சொல்லாதவற்றின் பாடலே கண்ணீர்!

* கணவனாக இரு; எப்போதும் கணவனாகவே இருக்காதே! தாயாக இரு; ஆனால் எப்போதும் தாயாகவே இருந்துவிடாதே!

* சிரித்த முகம் இல்லாதவன் சொந்தமாகக் கடை வைக்கக்கூடாது

* ஒரு மலை உச்சியில் ஏறி நின்றால்தான் இன்னொரு மலை உச்சியைப் பார்க்க முடியும்

* வாள் உறையை வெட்டாது

* நீ என்ன பூவாக வேண்டுமானாலும் இரு; ஆனால் பூக்க மறக்காதே!

 கோவில் என்பது உண்மையில் ஒன்றே ஒன்றுதான். அது நீதான். நீ உனக்குள் செல்ல வேண்டும்.

* ஆசைப்பட்டால் இழப்பீர்கள்; ஆசைப்படாவிட்டால், அது உங்களுடையதே!

* எல்லாவற்றையும் ஓய்வாக எடுத்துக்கொள்ளுங்கள்.

* எல்லா நம்பிக்கைகளும் விஷம்போன்றது.

* உங்கள் சக்தி அனைத்துமே பாலுணர்வு சக்தியே. வெளிப்பாடுதான் வெவ்வேறு விதமாக இருக்கிறது.

* என்றாவது ஒருநாள் உன்னுள் அணு வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தே தீரும்.

.vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

124p1.jpg

யுவி திருமணம்!

நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகை கஸல் கீச் உடன் மணவாழ்க்கையில் இணைந்தார். இந்து முறைப்படியும், சீக்கிய முறைப்படியும் இருமுறை இவர்களது திருமணம் நடைபெற்றது. கபில்தேவ், பார்த்திவ் படேல், முரளி விஜய், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், நெக்ரா, முகமது கைஃப் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் மணமக்களை நேரில் வாழ்த்தினர். ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்துகளால் ஒரு வார காலத்திற்கு #YuvarajSingh பெயர் ட்ரெண்ட்டில் இடம்பிடித்து சாதனை படைத்தது. #நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்...


124p2.jpg

சதுரங்க ராஜா!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், ரஷ்யாவின் செர்ஜி கர்யாகினை வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கார்ல்சன் தொடர்ந்து 3-வது முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கார்ல்சனுக்குப் பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் 3.6 கோடியும், இரண்டாவது இடத்தைப் பிடித்த செர்ஜி கர்யாகினுக்கு ரூ. 3.2 கோடியும் வழங்கப்பட்டது. சம பலம் கொண்ட வீரர்கள் கலந்துகொண்டதால் இறுதியாட்டம் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. வெற்றிபெற்ற சிறிது நேரத்தில் #carlsen பெயர் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. #ராஜாதி ராஜன் இந்த ராஜா!


124p3.jpg

சச்சினின் இரண்டாவது இன்னிங்ஸ்!

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எழுதிய சுயசரிதை ‘Playing it my Way’ என்ற பெயரில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. விற்பனையில் லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்ததோடு, உலக அளவிலும் சாதனை படைத்திருந்த இந்தப் புத்தகம், மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது. 14-வது ரேமண்ட் குறுக்கெழுத்துப் புத்தக விருதில், சுயசரிதைப் பிரிவில் இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. “வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸிலும், ரசிகர்கள் எனக்கு ஆதரவளித்து வருகின்றனர்” என இது குறித்து சச்சின் நன்றி தெரிவித்துள்ளார். Playing it my Way மற்றும் சச்சின் பெயர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ட்ரெண்ட்டில் முதலிடம் பிடித்தன. #நீ ஆடு தல!


124p4.jpg

யோகாவைக் கௌரவித்த யுனெஸ்கோ!

ஐ.நா சபையின் முக்கிய அங்கமான யுனெஸ்கோ கடந்த வாரம் இந்தியக் கலையான யோகாவை, பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய பொக்கிஷங்கள் (Intangible world heritage) பட்டியலில் இணைத்து கெளரவித்துள்ளது. `ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கடைப்பிடிக்கப்படும்' என ஐ.நா சபை ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று க்யூபா மற்றும் பெரு நாட்டின் பாரம்பரிய நடனங்களும் கலாசாரப் பொக்கிஷங்கள் பட்டியலில் இந்த ஆண்டு இணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் உலக அளவிலான ட்விட்டர் ட்ரெண்ட்டில் #Yoga இடம்பெற்றது. #மகிழ்ச்சி!


124p5.jpg

மில்லியன் லைக்ஸ் அழகி!

சோசியல் மீடியாக்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அதிக லைக்குகள் வாங்கிய புகைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பட்டியலில் பாப் பாடகி, பாடலாசிரியர் மற்றும் நடிகை எனப் பல துறைகளில் சாதனை படைத்துவரும் செலினா கோம்ஸ் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். டாப்-10 புகைப்படங்களில் முதல் ஐந்து இடங்களை இவர் பிடித்ததோடு, மொத்தம் இவரது எட்டுப் புகைப்படங்கள் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படங்களாகத் தேர்வாகியுள்ளன. மீதி இரு இடங்களை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த செலினாவின் புகைப்படத்திற்குக் கிடைத்த லைக்ஸ் எவ்வளவு தெரியுமா? 5.9 மில்லியன் லைக்ஸ். #அம்மாடியோவ்!


124p6.jpg

சிறந்த நபர் பட்டியலில் மோடி!

உலகப் புகழ்பெற்ற இதழான ‘டைம்’ ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டிற்கான சிறந்த நபரைத் தேர்ந்தெடுக்கும். 2016-ம் ஆண்டிற்கான சிறந்த நபரைத் தேர்ந்தெடுக்க அந்த இதழ் நடத்திய வாக்கெடுப்பில், இந்தியப் பிரதமர் மோடி அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், ட்ரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகியோரைவிட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து அனைவரையும் வியக்க வைத்தார். இறுதி நிலவரப்படி மோடி 18% வாக்குகளும், ஒபாமா, ட்ரம்ப் ஆகியோர் 7% வாக்குகளையும் பெற்றிருந்தனர். ‘டைம்’ இதழாசிரியர்கள் இறுதி அறிவிப்பை வெளியிடுவர். இதன் காரணமாக உலக ட்ரெண்ட்டிலும் #Modi பெயர் இடம்பிடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. #மோடிடாவ்வ்வ்வ்வ்வ்!


124p7.jpg

இரும்பு மனுஷிக்கு இரங்கல்கள்!

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கட்சி பேதமின்றி இந்தியத் தலைவர்கள் நேரிலும், அறிக்கைகள் மூலமாகவும் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர். ஜெ. மறைவை அடுத்து குவிந்த லட்சக்கணக்கான ட்வீட்களால், இந்திய அளவிலான ட்ரெண்ட்டில் #puratchithalaivi #ironladyoftn #ammaforever உள்பட 15 டேக்குகள் இடம்பெற்றன. ஆழ்ந்த இரங்கல்கள்!

vikatan

  • தொடங்கியவர்

உடல் முழுவதும் தீபங்கள் ஏற்றி யோகாசனம்: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாமிய சிறுவன்

 

 
 
உடல் முழுவதும் கார்த்திகை தீபங்களை ஏற்றி யோகாசனம் செய்த சிறுவன் அப்துல் பாஷா. படம்: ஆர். அசோக்
உடல் முழுவதும் கார்த்திகை தீபங்களை ஏற்றி யோகாசனம் செய்த சிறுவன் அப்துல் பாஷா. படம்: ஆர். அசோக்
 
 

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திருக்கார்த்திகை விழாவை வரவேற்று முஸ்லிம் சிறுவன் ஒருவர் தனது உடலில் 30 அகல் விளக்குகளை ஏற்றி யோகாசனம் செய்தார்.

திருக்கார்த்திகை திருவிழா நாளை (திங்கள்கிழமை) கோலா கலமாக கொண் டாடப்படுகிறது.

மதுரை மகபூப்பாளையத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர், அப்துல்பாஷா (12), மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பத்மாசனத்தில் அமர்ந்தபடி தனது உடலில் 30 அகல் விளக்குகளை ஏற்றி நேற்று யோகாசனம் செய் தார்.

இந்த சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யது.

இதுகுறித்து அப்துல்பாஷா கூறியதாவது: பெங்களூருவில் 16-வது தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகள், ஜன. 8-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

யோகாசனம் குறிப்பிட்ட மதத்துக்கானது அல்ல. யோகாசனத்தை முறையாக கற்றால் பல நோய்களை விரட்டலாம். ஆனால், பலர் இக்கலையை ஆர்வமாக கற்றுக் கொள்ள முன்வருவதில்லை.

திருக்கார்த்திகை வரும் இந்நாளில் யோகாசனத்தை பிரபலப்படுத்தவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் உடல் முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி யோகாசனம் செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறுவன் அப்துல்பாஷா, அகல் விளக்குகளுடன் சுமார் 30 நிமிடம் அசையாமல் பத்மாசனத்தில் இருந்தார். முஸ்லிம் சிறுவனின் முயற்சியையும், நல்லெண்ணத்தையும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மகாகவி பாரதி பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

 

பாரதி - 25

 

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்..!

bharathi_13132.jpg

சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!

எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பாலபாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!

எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி, ‘பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!’

ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள். பாரதி என்றால் சரஸ்வதி.

இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!

14 அரை வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண் டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன்முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. ‘சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

பாரதிக்கு பத்திரிகை குரு ‘தி இந்து’ ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் ஆசான், திலகர். ஆன்மிக வழிகாட்டி, அரவிந்தர். பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி!
தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும், ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. ‘ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்!

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து ‘பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்!

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்!

கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிவித்தார். பாரதி பூணூல் அணிய மாட்டார். ‘பூணூலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது!

கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

"மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறுநாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. "அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி" என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந் தார் காந்தி. "இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலை யில் அழைத்துச் செல்வார். ‘பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், ‘நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். போலீஸ் விசாரணையின்போது, ‘நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?’ என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது. தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந் தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க… அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் ‘கோயில் யானை’ என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

‘ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20-க்கும் குறைவானவர்களே.

vikatan

  • தொடங்கியவர்

தனுஷ்கோடியில் ஃபிளம்மிங்கோ பறவைகள்

 

400_08458.jpg

ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தனுஷ்கோடி கடற்கரை பகுதிக்கு வந்துள்ளன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் நிலவும் இதமான பருவநிலையால் ஃபிளமிங்கோ பறவைகள் கண்டங்களை கடந்து இங்கு வந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. 

  • தொடங்கியவர்

 

பாலிவுட்டில் சன்னி லியோனி - காணொளி

  • தொடங்கியவர்

டிச.11: வில்லன், குணச்சித்திர வேடம் என்று அசத்திய ''மார்க் ஆண்டனி' ரகுவரன் பிறந்த தினம் இன்று...

 

நா ன் சென்னைக்கு வந்த புதுசு. வடபழனியில ரோட்டை க்ராஸ் பண்றதுக்காக நிக்கிறேன். உடம்பு நடுக்கத்தோடு, சரியா கண்ணும் தெரியாத கிழவி, ‘ரோட்டைத் தாண்டி விட்ருப்பா’னு கையைப் பிடிக்குது. ரோட்டைத் தாண்டி விட்டுட்டுத் திரும்பி நடக்கும்போது, ‘யப்பா... பத்திரமா போப்பா’ன்னு சொல்லுது. எனக்குக் கோபம். ‘இதுவே இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்குற கேஸ். இது நம்மளை பத்திரமா போகச் சொல்லி அட்வைஸ் பண்ணுதே’ன்னு ஒரு சின்ன எரிச்சல். இப்ப அந்த நினைப்பு ஏனோ வருது. அன்னிக்கு அது ‘பத்திரமா போன்னு சொன்னது ரோட்ல இல்லை’னு இப்போ புரியுது. அனுபவஸ்தனோட ஒவ்வொரு வார்த்தைக்குள்ளேயும் ஒரு பூங்கொத்து இருக்கு... ஒரு கத்தி இருக்கு! எல்லாம் லேட்டாதான் புரியுது!’’ - சிகரெட் புகை வளையங்களுக்கு நடுவே புன்னகைக்கிறார் ரகுவரன். சினிமாவில் தொலைந்து போவதும், திரும்ப வருவதும் அவரே நடத்துகிற விருப்ப விளையாட்டு. ஆனால், தமிழ் சினிமா எப்போதும் தேடுகிற நிஜக் கலைஞன்.

‘‘எதுவோ என்னைப் பிடிச்சுக் கட்டி வைக்குது. அப்புறம் அதுவே என்னை அவிழ்த்தும் விடுது. ஒவ்வொ ருத்தனுக்கும் அவன்தான் பெரிய ரகசியம். காலையில கழுவிவிட்ட மாதிரி இருக்குற மனசு சாயங்காலமே சாக்கடை மாதிரி ஆயிடுது. நிரந்தரம்னு எதை நினைக்கிறீங்க நீங்க? மனசு சொல்றதை புத்தி கேட்கும்போதெல்லாம் நான் தொலைஞ்சு போயிருக்கேன். புத்தி சொல்றதை மனசு கேட்கும்போதெல்லாம் திரும்பி வந்திருக்கேன். இங்கே புத்திக்கும் மனசுக்கும்தான் போட்டி. மத்தபடி ரகுவரன் ஜெயிக்கிறதும் இல்லை... தோக்குறதும் இல்லை!’’ - ஒரு ஞானி போலச் சிரிக்கிறார் ரகுவரன்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘தீபாவளி’, ‘பீமா’, ‘சிவாஜி’ என மனிதர் மறுபடி பரபரப்பாக இருக்கிறார்.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. திரும்பவும் வரிசையா படம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே?’’

‘‘நடிப்பு எனக்கு அலுக்கவே இல்லை. தெருத் தெருவா அலைஞ்சாலும் திரும்ப நிலைக்கு வர்ற தேர் மாதிரி, எங்கே போனாலும் சினிமாவுல தான் வந்து நிக்குறேன். எப்பவும் யாராவது போன் பண்ணிட்டே இருக்காங்க. ‘இந்த ரோலை நீங்கதான் சார் பண்ணணும்’னு சொல்லாம கொள்ளாம வீட்ல வந்து நிப்பாங்க. நான் வேணாம் வேணாம்னு ஓடுற தும், அவங்க விடாம துரத்துறதுமான இந்த விளையாட்டு பத்து வருஷமா நடந்துட்டு இருக்கு. ‘பார்த்தியா, எனக்கு எவ்ளோ தேடுதல் இருக்கு’னு பெருமையில, திமிர்ல இதைச் சொல் லலை. கலை ஒரு கட்டம் வரைக்கும்தான் அடையாளம். அப்புறம் அதுவே அனுபவமா மாறிடுது. அந்தச் சமயத்துல கேரக்டர்களை யோசிச்சு தேர்ந்தெடுப்போம். லவ்வர் மாதிரி, பெண்டாட்டி மாதிரி கேரக்டர் மேல ஒரு பிரியமே வந்துடும்.

அபூர்வமா சில பேர் கதை சொல்லும் போது, ‘அட, ஆமாம்ல... நாமதான் இதைப் பண்ணணும்’னு மனசு அதுவாவே விழுந்துடும். அந்த நிமிஷமே உள்ளே இருக்கிற நடிகன் ஸ்பாட்டுக்கு நடிக்கக் கிளம்பிடுவான். அப்படி ஒரு அனுபவம்தான் ‘பீமா’. ‘ரன்’ல நான் பார்த்த லிங்குசாமி இப்ப இல்லை. வேற மாதிரி வளர்ந்து நிக்கிறார். படத்துல என் கேரக்டர் பேரே ‘பெரியவர்’. அந்தப் பெரியவருக்கு சரியான சவால் விடுறார் விக்ரம். இவரும் நான் ‘உல்லாச’த்தில் பார்த்த விக்ரம் இல்லை. விக்ரமுக்குள்ளே இருக்குற நெருப்பு இன்னும் பெரிய உயரத்துக்கு அவரைக் கொண்டுபோகும். அப்புறம் ‘சிவாஜி’...’’

‘‘ ஆமா... ரஜினிக்கும் உங்களுக்கும் ரொம்ப நாள் ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. இப்ப ‘சிவாஜி’அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘ரஜினி ரொம்ப அபூர்வம். பணம், புகழ், அதிகாரம் அதெல்லாம் இல்லை விஷயம்... எப்பவுமே அவர்கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியைப் பார்த்துட்டே வர்றேன். அதான் நான் தேடுறதும்! நீங்க உங்களுக்கே நேர்மையா இருக்கிறது இருக்கே, அது பெரிய சவால். ரஜினி அந்த சவால்ல ஜெயிச் சவர்.

ரொம்பப் பரபரப்பா தளும்பி நின்ன ரஜினியையும் நான் பார்த்திருக்கேன். இப்போ ‘சிவாஜி’யில் நான் சந்திச்சது இன்னும் பக்குவமான ரஜினி. ஆழ்கடல் மாதிரி அமைதியான ரஜினி. தெளிவா... தீர்க்கமா மாறியிருக் கார். அவர்கிட்டே மாறாத விஷயம் நடிப்பு மேல இருக்குற துடிப்பு. ‘ரகுதான் இதைப் பண்ணணும்’னு ‘சிவாஜி’க்கு அவர்தான் என்னைக் கூப்பிட்டார். ஷங்கர் நுணுக்கமா செதுக் குறார். படம் ரொம்பப் பிரமாண் டமா வரும். படத்தைப் பத்தி இன்னும் பேசணும்னா ரஜினியோ ஷங்கரோ தான் பேசணும். எனக்கு இவ்வளவுதான் அனுமதி’’ என்று புன்னகைக்கிறார் ரகுவரன்.

‘‘நடிப்பு தவிர, ரஜினியையும் என்னையும் இணைக்கிற பாலம் ஆன்மிகம். கடவுள், தியானம், வாழ்க் கையைப் பற்றிய அவரோட பார்வை என்னை ஆச்சரியப்படுத்துது. எனக்கும் அவருக்கும் இடையில் புரிபடாத ஒரு அலைவரிசை இருந்துட்டேயிருக்கு. ரஜினியும் நானும் ஃபீல்டுக்கு வந்து 25 வருஷமாகுது. இந்த வாழ்க்கையில நான் நிறைய தவறவிட்டிருக்கேன். ஆனா, எதையும் தவறவிடாம உழைக்கிறதுதான் ரஜினியோட சீக்ரெட். அவரை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவ ராகவே ரிட்டையர் ஆனாதான் உண்டு. அதுவரைக்கும் அவர்தான் மாஸ்... அவர்தான் பாஸ்!’’

‘‘சரி, உங்க பர்சனல் லைஃப் எப்படிப் போயிட்டிருக்கு?’’

‘‘அன்னிக்கு ஒரு நாள் ராத்திரி காரை எடுத்துட்டு மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குப் போயிருந் தேன். வாசல்ல ஒரு வயசான கிழவர் அழுக்கா படுத்திருக்கார். திடீர்னு முழிச்சு ‘எம் பொண்டாட்டியக் காண லையே’னு பதறித் திட்டுறார். கொஞ்ச தூரம் தள்ளித்தான் அவர் பொண்டாட்டி இருட்டுக் குள்ள உட்கார்ந்திருக்கு. பார்த்துட்டு, ‘தெரி யாமத் திட்டிட்டேன்டி’ன்னு புலம்பறார். ‘போய்யா! நீதான் சாப்பிடாம படுத் துட்ட’ன்னு கோவிக்குது அந்தக் கிழவி. அப்புறம் ரெண்டு பேரும் துணி மூட்டையைப் பிரிச்சு, சாப்பிட்டுட்டுப் படுத்துட்டாங்க. பார்க்கும்போதே மனசு மழை விழுந்த மாதிரி பூத்துப் போச்சு. நினைச்சுப் பார்த்தா, அதே மனசு பெரிய துயரமா கனக்குது. அடுத்த ஜென்மத்துல அந்தக் கிழவனா பிறக்கணும்னு மனசு ஏங்குது.

இன்னொரு நாள் சிக்னல்ல, கார்ல காத்திட்டிருக்கும்போது ஏழு வயசுக் குழந்தை இந்தியில பேசி சட்டையப் புடிச்சு இழுத்தது. ஏதோ நெனப்புல சட்டுனு குழந்தை கையைத் தட்டிட்டு வந்திட் டேன். ஏன்னு தெரி யலை... திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை முகமே ஞாபகத்துல வந்துட் டிருந்தது. மறுபடி காரெடுத்துப் போய்த் தேடினேன். அந்தக் குழந்தை யைக் காணோம். உடனே என் மகன் ரிஷிக்கு போன் பண்ணி, ‘உன்னைப் பாக்கணும் போல இருக்குடா. நாளைக்கு வர்றியா?’னு கேட்டு, வரச் சொல்றேன்.

இப்படித்தான் நான் இருக்கேன். எல்லாருக்குள்ளேயும் என்னைத் தேடுறேன். தனிமையில் மத்தவங்களைத் தேடுறேன். நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது. தனிமை சிலரை கெட்டவங்களா மாத்திடும். ஆனா, என்னை அழகா செதுக்கி வெச்சிருக்கு. துக்கத்தைத் தூக்கி உதற பழகிட்டேன். என் உலகத்தைச் சந்தோஷமா மாத்திக்கிற வித்தையைக் கத்துக்கிட்டேன். என் அப்பாவையும் அம்மாவையும் நினைச்சு பொசுக்குனு கண்ணீர் உடையுது. எவ்ளோ வருஷம் என்னை மாதிரி ஒரு ஆளை நெஞ்சில் சுமந்திருக் காங்க. இப்ப அவங்க கூடவே இருக் கேன். அப்புறம் என் பையன் ரிஷி. எப்பவும் எனக்கு அவன் ஞாபகம் தான். என் உலகத்தை அற்புதமாக்கு றான் ரிஷி. அப்புறம், இருக்கவே இருக் கார் என்னை அன்பால் ஆசீர்வதிச் சுட்டே வருகிற சாய்பாபா.’’

‘‘ஆமா... ஒரு மியூஸிக் ஆல்பம் பண்றீங்கள்ல..?’’

‘‘இசை எப்பவும் என்னை புதுசாக் கிட்டே இருக்கு. ‘காரணம் இன்றிக் கண்ணீர் வரும், உன் கருணை விழிகள் கண்டால்..’னு ரமண மாலை பாட்டைக் கேட்டால் இப்பவும் அழுகை வருது. உலகத்தின் மேல் அளவில்லாக் காதல் வருது. உலகத்தின் மீதான என் அன்பை வெளிப் படுத்துற மாதிரி நானே பாட்டெழுதி இசை அமைச்சு, ஆல்பம் ரெடி பண்ணிட்டு இருக்கேன். அப்புறம் ஒரு புத்தகம் எழுதிட்டு இருக்கேன். நான் உணர்ந்த விஷயங்களை, அனுபவிச்சு சொல்லிட்டுப் போகிற முயற்சி அது. சீக்கிரம் அதுவும் வெளிவரும்!’’ என்கிற ரகுவரன் கை குலுக்கிப் புன்னகைத்துச் சொல்கிறார்...

‘‘பார்த்து பத்திரமா போங்க!’’

Bild zeigt 2 Personen , Personen, die sitzen und Innenbereich
 
 
 

vikatan

  • தொடங்கியவர்

நியூ யார்க் சாந்தாகோன்: மதுவகங்களை தேடும் மகிழ்ச்சி கொண்டாடுவோர் (புகைப்படத் தொகுப்பு)

 

விழாவுக்குரிய ஆடையணிந்து நியூ யார்க் நகரில் மகிழ்ச்சியை கொண்டாடுவோர் சாந்தாகோன் என்று அறியப்படும் மதுவக தொடர் கடைகளுக்கு சென்று வருகின்றனர். அது பற்றிய புகைப்படத் தொகுப்பு

ஆண்டுதோறும் நடத்தப்படும் சாந்தாகோன் என்று அறியப்படும் மதுவக தொடர் கடைகளை மூடிவிட வேண்டும் என்று சில நகரவாசிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு நியூ யார்க் நகரில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.
 

ஆண்டுதோறும் நடத்தப்படும் சாந்தாகோன் என்று அறியப்படும் மதுவக தொடர் கடைகளை மூடிவிட வேண்டும் என்று சில நகரவாசிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு நியூ யார்க் நகரில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.

விழாவுக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டு மதுவகங்களுக்கு சென்று மகிழ்ச்சி கொண்டாடுவோரை இந்த சாந்தாகோன் தொடர் கடைகள் உபசரிக்கின்றன. ஆனால், இது மிகவும் போக்கிரித்தனமாக மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.

விழாவுக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டு மதுவகங்களுக்கு சென்று மகிழ்ச்சி கொண்டாடுவோரை இந்த சாந்தாகோன் தொடர் கடைகள் உபசரிக்கின்றன. ஆனால், இது மிகவும் போக்கிரித்தனமாக மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஆடை பராம்பரியங்களையும், சிறந்த உற்சாகத்தையும் கொண்டாட உதவுவதாக கூறுகின்ற சாந்தாகோன் ஏற்பாட்டாளர்கள், அறக்கட்டளைக்காக லட்சக்கணக்கான டாலர்களை பெறுவதற்கும் இது வழிவகுப்பதாக கூறுகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஆடை பராம்பரியங்களையும், சிறந்த உற்சாகத்தையும் கொண்டாட உதவுவதாக கூறுகின்ற சாந்தாகோன் ஏற்பாட்டாளர்கள், அறக்கட்டளைக்காக லட்சக்கணக்கான டாலர்களை பெறுவதற்கும் இது வழிவகுப்பதாக கூறுகின்றனர்.

சாந்தாகோனின் தகவல்களின்படி, ஆண்டுதோறும் நடக்கின்ற இந்த மதுவக தொடர் கடைகள் அமெரிக்கா முழுவதும் 380 நகரங்களிலும் 51 நாடுகளிலும் நடைபெறுகின்றது.

சாந்தாகோனின் தகவல்களின்படி, ஆண்டுதோறும் நடக்கின்ற இந்த மதுவக தொடர் கடைகள் அமெரிக்கா முழுவதும் 380 நகரங்களிலும் 51 நாடுகளிலும் நடைபெறுகின்றது.

வெள்ளிக்கிழமை இரவு டிராஃபால்கர் சதுக்கத்தில் சிறப்பு தொப்பி அணிந்த ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தோன்றுவதோடு, சாந்தாகோன் உற்சாகம் மிகுந்து காணப்படும் நகரங்களில் லண்டன் ஒன்றாகும்.

வெள்ளிக்கிழமை இரவு டிராஃபால்கர் சதுக்கத்தில் சிறப்பு தொப்பி அணிந்த ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தோன்றுவதோடு, சாந்தாகோன் உற்சாகம் மிகுந்து காணப்படும் நகரங்களில் லண்டன் ஒன்றாகும்.

 

BBC

  • தொடங்கியவர்

p99.jpg

சாண்டல்வுட் : பாவனா ராவ்

ஷிமோகாவில் பிறந்த சிலை. பரதநாட்டியம் அரங்கேற்றம் முடித்து சேனல்களில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவரை ஆரவாரமாக வரவேற்றது சாண்டல்வுட். `காலிப்பட்டா' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஒரு பெரிய பிரேக். `கொல கொலயா முந்திரிக்கா' தமிழ்ப் படத்தில் ரீ-என்ட்ரியானவர் `விண்மீன்கள்', `வனயுத்தம்' போன்ற படங்களில் தரிசனம் தந்துவிட்டு மீண்டும் சாண்டல்வுட்டுக்கே சென்றார். இந்த ஆண்டு `பரபஞ்சா' என்ற படத்தில் நடித்தவர் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக வெயிட்டிங். நாங்களும்!

மல்லுவுட் : இஷா சர்வானி

p99a.jpg

குஜராத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து திருவனந்தபுரத்தில் செட்டிலான பைங்கிளி. அப்பா ஆஸ்திரேலியர், அம்மா குஜராத்தி என்பதுதான் இவரின் பளீர் வெண்மைக்குக் காரணம். கதக், களரிப்பயட்டு என வெரைட்டியாய் இவர் வெளுத்து வாங்குவதைப் பார்த்து பாலிவுட் உலகம் `கிஸ்னா' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது. அதன்பின் இந்தியில் வரிசையாக சில படங்களில் நடித்தவர் தமிழில் மாற்றானிலும் தலை காட்டினார். பின் பைலிங்குவல் படமான `டேவிட்'. அதற்குப்பிறகு மலையாள வாசம். `ஐந்து சுந்தரிகள்', `ஐயோபின்டே புஸ்தகம்', `டபுள் பேரல்' என வரிசையாக நடித்து அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டார். மிஸ் யூ இஷா!

டோலிவுட் : அஞ்சலி பாட்டீல்

p99b.jpg

நாசிக்கில் அச்சான பளபள புது நோட்டு. பேச்சுலர்ஸ் டிகிரி முடித்தவுடன் தேசிய நாடகப்பள்ளியில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொண்டார். அதன் வழியே சினிமாவில் நுழைந்தார். முதல் படம் `டெல்லி இன் எ டே'. அதன்பின் தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்தவரை தங்கள் ஊர்ப்பக்கம் அழைத்துச் சென்றார்கள் . `ப்ரதாயம்', `நா பெங்களூரு தள்ளி' என தெலுங்குப் படங்களில் நடித்தவர் இப்போது மீண்டும் பாலிவுட் வாசம் செய்கிறார். 2017 இறுதி வரை அம்மணியின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது. தமிழுக்கு வந்து பெயரை மாத்திடுங்க!

vikatan

  • தொடங்கியவர்

பஞ்சு மிட்டாயின் சுவையான கதை

 
cotton_candy_3099900f.jpg
 
 
 

மேகத்தைக் கொஞ்சமாகப் பிய்த்து அதற்கு ‘ரோஸ்’நிறத்தை ஏற்றிய ஒரு மிட்டாயைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குச்சியில் அழகாகச் சுற்றியோ பாக்கெட்டில் அடைத்தோ தருவார்கள். வாயில் போட்டால் கரைந்து போகும் அந்தத் திகட்டாத இனிப்பு மிட்டாயைத் திருவிழாக்கள், பொருட்காட்சி, திருமண மண்டபங்கள், பெரிய கடைகள், கடை வீதிகள், சர்க்கஸ் நடக்கும் இடங்களில் அதிகம் பார்த்திருப்பீர்கள். அதுதான் பஞ்சு மிட்டாய்! அந்தக் காலம் முதல் குழந்தைகள் மட்டுமே விரும்பிச் சாப்பிட்ட அந்தப் பஞ்சு மிட்டாய், இன்று உலகம் முழுக்க எல்லா வயதினராலும் விரும்பி சுவைக்கப்படுகிறது.

பஞ்சு மிட்டாயின் இனிப்புக்கு, அது முழுக்கச் முழுக்க சர்க்கரையால் செய்யப்படுவதே காரணம். சர்க்கரை வெண்மை நிறம் என்பதால் அதனுடன் வேண்டிய நிறமூட்டியைச் சேர்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், அதற்கான இயந்திரத்தில் அங்கேயே தயாரித்துத் தருவதையும் பார்க்க முடியும். குழந்தைகள் அதிகம் இனிப்பு சாப்பிட்டால், பல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று உங்கள் பல் மருத்துவர் எச்சரிப்பார் இல்லையா? அப்படியான, பல் மருத்துவர் ஒருவர்தான் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இயந்திரத்தையும் உருவாக்கினார்!

15-ம் நூற்றாண்டில் இத்தாலியில் பஞ்சு மிட்டாய் மாதிரியான இனிப்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில்தான் பஞ்சு மிட்டாய் பிரபலமானது. அப்போது இயந்திரம் இன்றி மிகவும் சிரமப்பட்டுப் பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்பட்டதால், அதன் விலையும் அதிகமாக இருந்தது. அதனால், ஏழைகளுக்கு அவை கிடைக்கவில்லை. பணக்காரர்கள் மட்டுமே பஞ்சு மிட்டாயை ருசித்து வந்தனர்.

அந்த நூற்றாண்டின் இறுதியில் பஞ்சு மிட்டாய் இயந்திரம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மிட்டாயின் தயாரிப்பு எளிமையானது. விலையும் குறைந்தது. 1897-ல் வில்லியம் மோரிஸன் என்ற பல் மருத்துவர், ஜான் வார்டன் என்ற மிட்டாய்த் தயாரிப்பாளருடன் சேர்ந்துதான் அந்த இயந்திரத்தை வடிவமைத்தார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1904-ல் நடைபெற்ற உலக அளவிலான கண்காட்சி வாயிலாகப் பஞ்சு மிட்டாய் பிரபலமானது.

அந்தக் கண்காட்சியில் 70 ஆயிரம் பெட்டி பஞ்சு மிட்டாய்கள் விற்றுத் தீர்ந்தன. சில ஆண்டுகள் கழித்து, மேம்பட்ட இயந்திரத்தை ஜோசப் லாஸ்காக்ஸ் என்ற மற்றொரு பல் மருத்துவர் உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாகப் பஞ்சு மிட்டாய்த் தயாரிப்புக்கான முழு தானியங்கி இயந்திரம் 1978-ல் உருவானது.

ஒரு ஸ்பூன் அளவிலான சர்க்கரையை, சுழலும் எந்திரத்தின் மையத்தில் கொட்டுவார்கள். அங்கே வெப்பமூட்டுவதன் காரணமாகச் சர்க்கரை உருகும். நிமிடத்துக்குச் சுமார் 3 ஆயிரம் சுழற்சிகள் என்ற வேகமான சுழற்சி காரணமாக, ‘மைய விலக்கு விசையால்’உருகிய சர்க்கரை இழைகள் நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறும். காற்றுடன் சேர்த்து அவற்றை ஒரு குச்சியில் அழகாகச் சுற்றி நமக்குச் சுவைக்கத் தருவார்கள். பஞ்சு மிட்டாயின் மென்மைக்கும், அதன் பெரிய உருவத்துக்கும் அதில் சேர்ந்திருக்கும் காற்றே காரணம்.

கால மாற்றத்தில் எத்தனையோ நவீன இனிப்புகள், தின்பண்டங்கள் வந்துவிட்டன. ஆனாலும், எளிய பஞ்சு மிட்டாய் அதன் சிறப்பை இழக்கவில்லை. கிராமமோ நகரமோ பல வகையான பஞ்சு மிட்டாய்களைக் குழந்தைகள் உட்பட அனைவரும் ருசித்து வருகிறோம். அதன் சிறப்பைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதியைப் பஞ்சு மிட்டாய் தினமாக (Cotton Candy Day) மேற்கத்திய நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.

அந்த நாளை முன்னிட்டுப் பல்வேறு நிறங்கள், சுவைகள், வடிவங்கள் மற்றும் பல்வேறு பெயர்களில் பஞ்சு மிட்டாயைத் தயாரித்து விற்கிறார்கள். பஞ்சு மிட்டாய் சாப்பிட விரும்பும் குழந்தைகள் அதன் சுகாதாரம், எப்போது தயாரிக்கப்பட்டது ஆகியவற்றைப் பெரியவர்கள் உதவியுடன் உறுதி செய்துகொண்ட பின்னர், அளவுடன் ருசித்து மகிழலாம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

 

விஸ்வநாதன் ஆனந்த் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி அவர் வேலை விஷயமாகப் பல ஊர்களுக்குப் பயணம் போக நேரிட்டதோடு, வீட்டில் தொலைகாட்சியில் பெரிதாக ஆர்வமில்லாமல் போகவே, அம்மாவுடன் சேர்ந்து செஸ் ஆட ஆரம்பித்ததுதான் திருப்பம்.

பின்னர்ப் பிலிப்பைன்ஸ் நாட்டில் அப்பாவின் வேலை விஷயமாக வசிக்கப் போன பொழுதும் செஸ் தான் ஒரே பொழுது போக்காக இருந்தது. டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் நிறைய செஸ் சம்பந்தப்பட்ட புதிர்கள் வந்த பொழுது அவற்றுக்குத் தொடர்ந்து சரியாகப் பதில் அனுப்பி,புத்தகங்களைப் பரிசாக விஷி அள்ளிக்கொண்டே இருக்கவே ,"இனிமேல் நீங்கள் போட்டியில் பங்குகொள்ள வேண்டாம். நீங்களே நிரந்தரச் சாம்பியன்!" என்று சொல்லி எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுமதித்து விட்டார்கள். அவர் அப்படி வாங்கிய முதல் பரிசு செஸ் பற்றிய ஒரு புத்தகம்.

viswanathan%282%29.jpg



டால் என்கிற ரஷ்ய க்ளப்பில் செஸ் விளையாட சேர்க்கப்பட்ட பொழுது, அங்கே ஜெயிப்பவர்கள் உட்கார்ந்து கொண்டும் தோற்பவர்கள் நின்று கொண்டும் ஆடவேண்டும். விஷி நின்றதே கிடையாது என்கிற அளவுக்குச் சிறப்பாக ஆடினார்.

2010-ல் உலகச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் நடைபெற்றது. ஆனந்த், ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் சோஃபியாவுக்குச் செல்ல வேண்டும். ஆனால், எரிமலை வெடிப்புக் காரணமாக விமானச் சேவைகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன 1,700 கி.மீ. தூரத்தை காரில் பயணித்துச் சோஃபியாவை அடைந்தார். அந்தப் பயணச்சோர்வு எதையும் காட்டிக்கொள்ளாமல் உலகச் சாம்பியன் ஆகி சாதித்தார் அவர்.

காந்தி அவரின் ரோல் மாடல். அன்புதான் மிகப்பெரிய ஆயுதம் என்று நம்புவர். போட்டியாளரை விமர்சித்தோ, திட்டியோ எந்தப் பேட்டியும் தரமாட்டார். ஆட்டத்தில் மட்டுமே முழுக்கவனமும் அவருக்கு. இந்தியாவின் தனி நபருக்கு வழங்கப்படும் எல்லா விருதுகளும் பாரத ரத்னாவைத் தவிர அவரை வந்து சேர்ந்திருக்கின்றன.

viswanathan1.jpg



சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் காலி பண்ணி, ஐந்து முறை மூன்று வெவ்வேறு வகையான நாக் அவுட், ரவுண்ட் ராபின், நேருக்கு நேர் போட்டி பாணிகளிலும் உலகச் சாம்பியன் ஆனவர் அவர். ஒரு முறை கூட வெற்றியை பெரிய அளவில் கொண்டாடி அவரைப்பார்க்கவே முடியாது. எதையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளும் ஜென் நிலை அது.

"எப்படிச் சாத்தியம் ஆனந்த்?" என்று கேட்ட பொழுது ,"எப்படி வென்றேன் என்று கவலைப்படவே மாட்டேன்; என்னென்ன தவறுகள் செய்தேன். எதிராளி என்னென்ன தவறுகள் செய்தார் என்று மட்டுமே மண்டையில் ஓடும். திருப்பி அதைச் செய்யக்கூடாதில்லையா ?" வெற்றித் தோற்காமல் இருப்பதில் இல்லை ; தவறுகளைத் திருப்பிச்செய்யாமல் இருப்பதில் இருக்கிறது என்பது அவரின் மந்திரம். கல்வித்திட்டத்தில் செஸ் சேர்க்கப்பட வேண்டும் அது அவர்களின் திறனை அதிகப்படுத்தும் என்று வாதிடுபவர் அவர்.

vikatan

  • தொடங்கியவர்

ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும்: விஞ்ஞானிகள் தெரிவிப்பு

 

ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும்: விஞ்ஞானிகள் தெரிவிப்பு

பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமி, அதன் சுற்றுப்பாதை, விண்வெளி, சுற்றுச்சூழல் இவை தொடர்பாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆய்வு நடந்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணித்தியாலங்களை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது.
எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த கால ஆய்வுகளின் அடிப்படையில், இங்கிலாந்து ஆய்வாளர்களால் இந்த புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இது மிகவும் மெதுவான நிகழ்வாக இருக்கும் என தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்
எல்லோருமே நீதி, நியாயப்படி வாழ முடியும்
 
 

article_1481517533-jhhkjk.jpgஉங்களுக்குப் பொருந்தாத முகங்களை அணிய வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாரோ, எவரோ? மாதிரிப் பேசி நடிப்பதும் அவர்களைப் போல நடப்பதும் பொய்யான வேலிக்குள் அடைபட்ட மாதிரி ஆகிவிடும்.  

எங்களின் சிந்தனைகளைத் தூய்மையாக்கி, அவ்வண்ணமே இயங்குவதே சாலச் சிறந்ததாகும். எல்லோருமே நீதி, நியாயப்படி வாழ முடியும். உண்மையுடன் ஒழுகும் எவரின் பண்புகளையும் ஏற்பதும் மூதுரைகளின் படி ஏற்று நடப்பதும் சாலச்சிறந்ததாகும்.  

ஆனால், எமக்கான பாதையில் நல்லபடியே, சுதந்திரமாக இயங்க வேண்டும். ஆண்டவன் எல்லோருக்குமே பிரத்தியேகமான மற்றைய, எவரைப்போலல்லாத உருவத்தைப் படைத்துவிட்டான்.  

இதன் பொருள், நீ நீயாக, உள்ளபடி நற்பண்புடன் வாழ்ந்து கொள்வாய் என்பதாகும். அடுத்தவர் நடை, உடை, எமக்கு எதற்கு? நல்லதை ஏற்க நல்லபடி நடக்க எமக்குச் சகல உரிமையும் உண்டு. பொறுப்பும் உண்டு. எங்கள் பாத்திரப்படைப்பே எமக்கான சிறப்பு!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

செல்ஃப் மார்க்கெட்டிங் செய்திருக்கிறீர்களா? #MorningMotivation

மார்க்கெட்டிங்

குளாப் ஜாமூன்... அதென்ன குளாப் ஜாமூன்-ன்னு கேக்குறீங்களா...?  நம்ம சுத்தி இருக்குற பாதி பொருட்கள் ஒரு பொருளோட வேற ஒரு பரிமாணம் தான். அப்படி ஒரு பொருளோட பரிமாணத்தை பயன்படுத்த வெக்கிறது மார்க்கெட்டிங் தான். இதுக்கு நல்ல உதாரணம் அரிசி. அரிசியத் தான் காலைல இட்லியா சாப்பிடுறோம். மதியம் சாதமா, இரவு தோசையா சாப்புடுறோம். ஆனா நமக்கு ஒரே விஷயத்த தான் சாப்புடுறோங்குற ஃபீலே வர்றது இல்ல தானே. யார் நமக்கு சொல்லிக் கொடுத்தா காலைல இட்லி, மதியம் சாதம், இரவு தோசைன்னு..யாரோ ஒருத்தர் நம்ம உணவு முறைகள வழி வகுத்தாங்க. அத இன்றைய வியாபாரிகள் தெளிவா பிளான் பண்ணி மார்க்கெட்டிங் பண்ணிட்டு போயிட்டாங்க.

அதே மாதிரி தான் வாழ்கையிலயும். நம்ம கிட்ட இருக்குற திறமைகள சரியா மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிச்சோம்னாலே போதும், நமக்கு ப்ரொமோஷன், நல்ல ஜாப், நல்ல பிசினஸ் எல்லாமே கிடைச்சிடும். இந்த உலகத்துல யாருமே திறமை இல்லாதவர்கள் கிடையாது. ஆனா பல பேர் தங்களோட திறமைய வெளிக்காட்டாமலேயே இருக்காங்கங்குறது தான் உண்மை.

வாழ்கையில முன்னேற ரெண்டே வழி தான் 1. நிறைய விஷயங்கள கத்துக்கணும், 2. கத்துக்கிட்டத இடத்துக்கு தகுந்த மாதிரி யூஸ் பண்ணனும். இன்னக்கி இருக்குற கார்ப்பரேட் சூழ்நிலையில, அதிகம் கத்துக்குறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா நமக்கு தெரிஞ்சத, கச்சிதமான இடத்துக்கு தகுந்தா மாதிரி யூஸ் பண்றது முடியும் தானே. அப்ப நமக்கு ஒரு விஷயம் தெரியுங்குறத எப்புடி சொல்றது. அதுக்கு நம்மள நாமளே "எனக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியும் " -னு மார்க்கெட்டிங் பண்ணிக்கனும்.

அதற்கு சில கார்ப்பரேட் உதாரணங்கள் :
கே.சி தாஸ்ங்குற கம்பெனி  குளாப் ஜாமூனை எத்தன விதமா மார்க்கெட் பன்றாங்கனு பாருங்க. அதே மாவு தான், சர்க்கரை, நெய். ஆனா வேற வேற பொருள், வேற வேற விலை. வேற லெவல் லாபம். பவர் ஆஃப் மார்க்கெட்டிங்.


133_07266.jpg

1. குளாப் ஜாமூன் - நாம சாதாரணமா சாப்பிடுறது தாங்க
2. ட்ரை குளாப் ஜாமூன் - இதையும் தீபாவளிக்கு சாப்டிருப்போம்
3. கேஸர் குளாப் ஜாமூன்  - நாம சாப்பிடுற அதே ஜாமூன்ல குங்குமப்பூ போட்டு செஞ்சிருந்தாங்கன்னா அதுக்கு பேர் தான் இது
4. காலா ஜாமூன் - சாதாரன குளாப் ஜாமூனை விட ஜாஸ்தி ஃபரை பண்ணி சக்கர சிரப்ல் போட்ற ஜாமூன்

Marketing 2

5. நிகுதி கோல்கோல் - சின்ன கோளி குண்டு கணக்கா சின்ன சின்ன தா பிடிச்சி குளாப் ஜாமூன் பண்ணா அதாங்க இது.
6. லால் மோஹன் -  வழக்கத்தை விட கொஞ்சம் அப்னார்மல் சைஸ்ல வர்ர குளாப் ஜாமூன் .
7. சித்ர கட் - குளாப் என்றாலே வட்டம் தான், ஆனா இந்த குளாப் ஜாமூன் சதுரமா இருக்கும்.
8. சந்திர மோஹன் - நீள் வட்டமா இருக்குற குளாப் ஜாமூன் தாங்க
இதுல இன்னும் சில வெரைட்டீஸ் இருக்கு. ஸோ ஒரே குளாப் ஜாமூனை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்து பக்காவா மார்க்கெட்டிங் பண்ணி எப்புடி காசாக்குறாங்க.

ஸ்வீட் ஒரு சாப்பிடுற பொருள் தானே. அதனால் கலர் மாத்துறதும்,டேஸ்டுக்காக கொஞ்சம் சமையல் முறைகள சேஞ்ச் பண்றதும் வொர்க் அவுட் ஆகும்னு தோணுதுன்னு கேக்குறீங்களா.

அப்ப இத பாருங்க..  டாடா சால்ட்.

Marketing 4

ஒரே ஒரு உப்பு அதில் தூள் நார்மல், தூள் லைட், தூள் ப்ளஸ், தூள் நார்மல் ஸ்ப்ரிங்க்ளர், தூள் லைட் ஸ்ப்ரிங்க்ளர், தூள் ப்ளஸ் ஸ்ப்ரிங்க்ளர், கள் உப்பு, கள் உப்புக்கு ஸ்ப்ரிங்க்ளர், பிளாக் சால்ட், பிளாக் சால்ட் ஸ்பிரிங்ளர் என்று சில பல வெரைட்டிகளை காட்டி, மார்க்கெட்டிங் பண்ணி காசாக்குகிறார்கள். இப்ப சொல்லுங்க பாஸ் உப்புல என்ன பெரிய டேஸ்ட் வித்தியாசம் பாக்க முடியும். உப்புல என்ன கலர், ஷேப் மாத்த முடியும். ஆனா மாத்தினாங்க, பாக்கேடுல இருந்து, ஸ்ப்ரிங்க்ளருக்கு மாறி, எலைட் கஸ்டமர்களை பிடிச்சாங்க தானே. அது தாங்க மார்க்கெட்டிங். அத தான் அப்படியே நம்ம லைஃபுக்கும் அப்ளை பண்ணா போதும்.

ரியல் லைஃப் :
அதே மாதிரி தான் நம்ம லைஃப். நம்ம கிட்ட இருக்குற திறமை என்னன்ன் நமக்கு தெளிவா தெறியணும்.
1. நமக்கு நல்ல பேச வரலாம், நல்லா ரிச்சா டிரஸ் பண்ணலாம், நல்ல பொருட்களை சீப்பா அலஞ்சி தேடி வாங்கத் தெரியலாம்
2. பேச வராது, ஆனா 100 பேர ஒருங்கிணச்சி ஒரு ஈவன்ட் பண்ன முடியலாம்.
3. நாம வேலை பாக்குற டிபார்ட்மென்ட் இல்லாம, அக்கவுன்ட்ஸ்ல ஒரு நல்ல திறமை இருக்கலாம்.
4. மத்தவங்க மாதிரி இங்கிலிஷ், ஹிந்தி மட்டும் இல்லாம, கூடுதலா மலையாளம், கன்னடா பேசத் தெரியலாம்
5. நல்ல ஒரு ப்ரசென்ட்டேஷன பண்ணத் தெரியலாம். ஒரு ப்ரெசென்டேஷன சிறப்பா உருவாக்க தெரியலாம்
6. நல்லா சமைக்கலாம்

7. அவ்வளவு ஏன் ஃபேஷ்புக், ட்விட்டர், லிங்க்ட் இன் மாதிரியான சோசியல் மீடியா பத்தி இன் அண்ட் அவுட் தெரியுறது கூட ஒரு ஸ்கில் தான்

இப்படி ஒரு சின்ன விஷயம் நமக்கு சூப்பரா செட் ஆகுதுன்னா, அத ஒரு ப்ரெண்ட் பாராட்ட ஆரம்பிச்சா கூட தைரியமா அத வளத்துக்குங்க. அதை நம்ம ரெஸ்யூம்ல அப்டேட் பண்ணுங்க. ஆஃபீஸ்ல எக்ஸ்ட்ராவா இந்த விஷயங்கள அடிக்கடி கேட்டு வாங்கி செய்ங்க. சார் இது எனக்கு தெரியும்னு நம்ம பாஸ்கிட்ட நம்மள பத்தி தெளிவா மார்க்கெட்டிங் பண்ணுங்க. இதுல ஏதாவது ஒரு விஷயம் நமக்கே தெரியாம பட்டை திட்டப் பட்டுக்கிட்டே இருக்கும். ஒரு நாள் அந்த விஷயம் தான் ஒரு பெரிய போஸ்ட்ல போய் உக்கார்ரதுக்கோ, ஒரு பெரிய பிசினஸ ஸ்டார்ட் பண்றதுக்கோ, ஒரு பெரிய க்ளைன்ட்கிட்ட பேசுறத்துக்கோ ஹெல்ப் பண்ணும்.

இவ்வளவு ஏன் நம்ம பர்சனல் லைஃப்ல, நம்ம குடும்ப உறுப்பினர்கள் கிட்ட ஒரு விஷயத்தை சொல்றதுக்கு கூட இந்த ஸ்கில்ஸ் யூஸ் ஆகலாம். அன்னக்கி நம்மள ஒரே மாதிரி பாத்த குடும்பமே, டேய் உனக்குள்ள இவ்வளவு விஷயம்  இருக்கானு கேட்பாங்க.

ஸோ முதல்ல நம்ம கிட்ட இருக்குற திறமையை தயவு செஞ்சி பாராட்ட ஆரம்பிங்க. மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிங்க. ஒரு நாள் நிச்சயமா க்ளிக் ஆகும் பாஸ்.

vikatan

  • தொடங்கியவர்

பேசும் படம்: தனியொருத்தி...

 
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்
 
 

ஐஎஸ் பயங்கரவாதிகளால் யாஜிதி இன மக்கள் அனுபவித்த கொடுமைகள் கணக்கற்றவை. இராக்கின் வட மேற்கின் மலைப் பகுதிகளில் வசித்துவரும் யாஜிதிகளை, 'சாத்தானை வழிபடுபவர்கள்' என்று கூறி சித்ரவதை செய்யத் தொடங்கிய ஐஎஸ் அமைப்பினர், ஆயிரக்கணக்கானோரைக் கொன்றழித்தனர். பலரைக் கட்டாயப் பணியிலும் ஈடுபடுத்திய அவர்கள் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தியும் வருகின்றனர்.

இந்தப் பெண்களை மீட்க வரும் உறவினர்கள், செயல்பாட்டாளர்களிடம் பெருந்தொகை வாங்கிக்கொள்கிறார்கள். வடக்கு இராக்கின் துஹோக் மாகாணத்தில், கட்டி முடிக்கப் படாத வீடு ஒன்றில் வசிக்கும் இந்தச் சிறுமி, ஐஎஸ் வன்முறையால் வீடிழந்து நிற்கும் ஆயிரக்கணக்கான யாஜிதிகளில் ஒருவர்!

படம்: ராய்ட்டர்ஸ்

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 12

 

1812 : ரஷ்­யா மீதான பிரெஞ்சுப் படை­யெ­டுப்பு முடி­வ­டைந்­தது.

 

1817 : நியு சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்­கு­வாரி, அவுஸ்­தி­ரே­லியா என்ற பெயரை பிரித்­தா­னிய கால­னித்­துவ அர­சுக்கு பரிந்­து­ரைத்தார்.

 

864india-gate.jpg1862 : யாசு ஆற்றில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் யு.எஸ்.எஸ்.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்­ணி­ வெடியில் சிக்கி மூழ்­கி­யது.

 

1871 : யாழ்ப்­பா­ணத்தில் முழு­மை­யான சூரிய கிரகணம் அவ­தா­னிக்­கப்­பட்­டது. பிரித்­தா­னிய வானி­ய­லாளர் நோர்மன் லொக்­கியர் தலை­மையில் அறி­வி­ய­லாளர் குழு இதனைப் பார்­வை­யி­டு­வ­தற்கு யாழ்ப்­பாணம் வந்­தது.

 

1901 : அட்­லாண்டிக் கடல் ஊடாக முதன் முத­லாக இங்­கி­லாந்தில் இருந்து கன­டாவின் நியு­பௌன்ட்­லாந்தில் வானொலி சமிக்­ஞை­களை மார்க்­கோனி பெற்றார்.

 

1911 : இந்­தி­யாவின் தலை­ந­கரம் கல்­கத்­தா­வி­லி­ருந்து டெல்­லிக்கு மாற்­றப்­பட்­டது.

 

1923 : இத்­தா­லியில் போ ஆற்றின் அணைக்­கட்டு வெடித்­ததில் 600 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1939 : குளிர்­காலப் போர்: பின்­லாந்துப் படைகள் சோவியத் படை­களை டொல்­வ­ஜார்வி என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டித்­தன.

 

1940 : இங்­கி­லாந்தின் ஷெஃபீல்ட் நகரில் உண­வு­ வி­டுதி ஒன்றின் மீது ஜேர்­ம­னிய விமா­னங்கள் குண்டு வீசி­யதில் 70 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: பிரித்­தா­னியா பல்­கே­ரி­யாவின் மீதும், ஹங்­கேரி, ருமே­னியா ஆகி­யன ஐக்­கிய அமெ­ரிக்கா மீதும், இந்­தியா, ஜப்பான் மீதும் போர்ப் பிர­க­டனம் செய்­தன.

 

1941 : அமெ­ரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக் கரைக்கு அப்பால் நான்கு ஜப்­பா­னியக் கப்­பல்­களைத் தாக்கி மூழ்க­டித்­தது.

 

1941 : யூதர்­களை வெளியேற்றும் திட்­டத்தை ஜேர்­ம­னிய சர்­வா­தி­காரி அடொல்ஃப் ஹிட்லர் அறி­வித்தார்.

 

1942 : நியூபின்­லாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 100 பேர் கொல்­லப்­பட்டனர்.

 

1948 : மலே­ஷி­யாவில் நிலை கொண்­டி­ருந்த ஸ்கொட்­லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர் பொது­மக்கள் 24 பேரைக் கொன்று கிரா­மத்தைத் தீ வைத்து எரித்­தனர்.

 

1963 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து கென்யா சுதந்­திரம் பெற்­றது.

 

1979 : ரொடீ­சி­யாவின் பெயர் ஸிம்­பாப்வே என மாற்­றப்­பட்­டது.

 

1984 : ஆபி­ரிக்க நாடான மௌரி­டே­னி­யாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் ஜனா­தி­பதி முஹ­ம்மட் கவுனா ஹைடாலா பதவி அகற்­றப்­பட்டு மாவோ­வுயா சிட்­ அ­ஹ­மது டாயா புதிய ஜனா­தி­ப­தி­யானார்.

 

1985 : கன­டாவின் நியூ­ப­வுண்ட்­லாந்தில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 248 இரா­ணு­வத்­தி­னரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்­துக்­குள்­ளா­கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து வீரர்கள் உட்பட 256 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

 

1988 : லண்­டனில் இரண்டு ரயில்கள் மோதி­யதில் 35 பேர் கொல்­லப்­பட்டு, 100 பேருக்கு மேல் காய­ம­டைந்­தனர்.

 

1991 : சோவியத் ஒன்­றி­யத்­திடம் இருந்து ரஷ்ய கூட்­ட­மைப்பு சுதந்­திரம் பெற்­றது.

 


2000 : அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜோர்ஜ் டபிள்யூ புஷ், அல் கோர் ஆகியோருக்கு இடையிலான பிணக்கு தொடர்பாக அமெரிக்க உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது.

 

2012 : வடகொரியா தனது முதலாவது செய்மதியை வெற்றிகரமாக ஏவியது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

https://scontent-amt2-1.xx.fbcdn.net/v/t1.0-9/15380365_1216415528407139_4483861628321444651_n.jpg?oh=3e2337cac5724365deaaf88fa08e68e0&oe=58F16013

தமிழ் திரையுலகின் நிரந்தர Super Star ரஜினிகாந் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

1975 இல் அபூர்வ ராகங்களில் ஆரம்பித்தார் தன் திரை வாழ்க்கையை
மொழிகள் கடந்து தன் ரசிகர் பலத்தைக் கொண்டவர்
தமிழ் ரசிகர் மனங்களில் "தலைவர்" என்று வாழ்பவர்
தமிழ் சினிமாவின் Style என்ற வார்த்தையின் அகராதி
வசூலில் வேட்டையாடும் சாதனைச் சக்கரவத்தி.
நடிப்பின் சிகரம் இவர் சிறப்பின் உச்சம்!

 

‘அந்தக் காட்சி வேண்டாம்... அவர் எம்.ஜி.ஆர்!’ #ரஜினி #HBDRajini

ரஜினி

மிழ் சினிமா வரலாற்றை மட்டும் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் ரஜினியைத் தவிர்த்துவிட்டு நிச்சயம் எழுதமுடியாது.  அவர் தீவிர அரசியலில் இல்லைதான். அவர் பட வெளியீட்டு சமயத்தைத் தவிர, அவர் எப்போதும் அரசியல் பேசியதில்லைதான்... ஏன் அவர் ஒரு காலமும் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் திண்ணமாக, தன் கருத்தைக் கூறியதில்லைதான். ஆனால், சினிமாவில் வணிக நோக்கத்துக்காகக் கட்டமைக்கப்பட்ட ரஜினி எனும் பிம்பத்தின் நிழல், அரசியல் களத்தில் இன்னும் படர்ந்துதான் இருக்கிறது. ஒரு யுகத்தின் பழமையைக் கடந்த நிமிடத்தின் மீது, அள்ளிப் பூசும்... ஒளியின் வேகத்துடன் போட்டி போட எண்ணும் இந்தச் சமூக ஊடக காலத்திலும்... ரஜினி என்னும் பிம்பம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அதனால்தான் பிரதமர் வேட்பாளரே தமிழகத்துக்கு வந்தாலும், போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குச் சென்று ஒரு புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தேர்தல் காலங்களில், சம்பந்தமே இல்லாமல் ரஜினி என் நண்பர் என அரசியல் தலைவர்கள் பேட்டி அளிக்கிறார்கள். 

சரி, ரஜினி என்னும் பிம்பம் உருப்பெற்றது எப்போது...? அந்தப் பிம்பம் திரை வணிகத்துக்கு எந்த அளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். 

ரஜினி என்னும் பிம்பம் உச்சம்தொட்டது அண்ணாமலை திரைப்படத்துக்குப் பிறகுதான். அதற்கு முன்பே அவருக்கு சூப்பர் ஸ்டார் என்னு அடைமொழி அளிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பே அவர் பாக்ஸ் ஆஃபிஸில் முடிசூடா மன்னனாக இருந்தாலும், ரஜினி என்னும் ஆளுமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது அந்தத் திரைப்படம்தான்.

 “விளம்பரத் தட்டிகள் இல்லை”

Rajini_12013.jpgசுரேஷ் கிருஷ்ணா  “My days with Baasha" புத்தகத்தில் இவ்வாறாக எழுதுகிறார், “அண்ணாமலை திரைப்படம் வெளியான சமயத்தில், அரசியல் சூழல் ரஜினிக்கு சாதகமாக இல்லை. படம் வெளியாவது குறித்த எந்த போஸ்டர்களும், விளம்பர பதாகைகளும் இல்லை. ஆனால், படம் குறித்த இந்த மெளனம்தான், திரைப்படத்துக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது” என்கிறார். இதை படம் சார்ந்ததாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். எப்போதும் ரஜினியின்  மெளனம் அல்லது அளந்து பேசுதல் தான்... ரஜினி என்னும் பிம்பத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. ரஜினியின் சமகாலத்து நாயகனாக இருக்கும் கமலின் பிம்பம் பேச்சால் கட்டமைக்கப்பட்டதென்றால்... ரஜினியின் பிம்பம் மெளனத்தால் கட்டமைக்கப்பட்டதுதான்.  மெளனத்தை சரியாக தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த நாயகன் ரஜினி. 

ரஜினி என்னும் பிம்பத்தை வடிவமைப்பதில் இன்னொரு காரணி முக்கிய பங்காற்றி இருக்கிறது. அது அவரது ‘அப்பாவித்தனம்’. பணபலம், படைபலம் வைத்திருக்கும் வலிமையான வில்லனைதான் தன் திரைப்படங்களில் எதிர்த்துக் கொண்டிருப்பார். ஆனால், அதே சமயம், தன் அப்பாவித்தனத்தை திரைப்படங்களில் முன்னிலைப்படுத்துவதிலும் கவனமாக இருப்பார்.  பெரும்பான்மையான தமிழ் மனம், புத்திசாலிகளைவிட அப்பாவிகளைதான் விரும்பும். புத்திசாலிகள் ரசிகனுடைய ஈகோவுடன் மோதுகிறார்கள். ஆனால், அப்பாவிகள் ரசிகனின் மனதைக் கரைக்கிறார்கள்.  இந்த உளவியலை நன்கு அறிந்து வைத்திருந்தார் ரஜினி.  தன் படங்களில் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ. அதற்கு சற்றும் குறையாமல், அப்பாவித்தனமான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். மீண்டும் அண்ணாமலை படத்தையே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன். பால்காரரான ரஜினி, பால் விநியோகம் செய்வதற்காக பெண்கள் விடுதிக்கு செல்வார். அந்த சமயத்தில் அந்த விடுதியில் ஒரு பாம்பு நுழைந்து, விடுதியே அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்கும். பெண்கள் ரஜினி உதவியை நாடுவார்கள். ஆனால், ரஜினி அந்தப் பெண்களை விட அதிகம் பயம் கொள்வார். அதே நேரம், பெண்கள் ஒரு இக்கட்டில் இருக்கும்போது சினிமா மரபுப்படி நாயகன் விலகி செல்லல் ஆகாது. ரஜினி பயத்துடன் அந்த பாம்பைப் பிடிக்க எத்தனிப்பார். பாம்பு குளியலறை வழியாக வெளியே சென்றுவிடும். அந்த சமயத்தில் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் நாயகியை ரஜினி பார்த்துவிடுவார். அப்பாவித்தனமான வேடம் பூண்ட ரஜினி, தான் தவறு செய்துவிட்டதாக ஒரு விளையாட்டுதனமான ஒரு தோற்றத்தை பார்வையாளனுக்குக் கடத்த...“கடவுளே... கடவுளே...” என்ற வசனத்தை உச்சரித்துச் செல்வார்.  இந்த வசனத்தை இப்படத்துக்குள் கொண்டுவந்தது ரஜினி என்கிறார் அப்படத்தின்  இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. 
இக்கட்டுரைக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும், இன்னொரு தகவலையும் இங்கு பகிர்கிறேன், அண்ணாமலை படத்தில் ரஜினியின் மீது ஒரு பாம்பு ஏறும் அல்லவா...? அந்தப் பாம்பு விஷம் எடுக்கப்படாத பாம்பாம். அந்தக் காட்சி எடுத்து முடிக்கும்வரை இந்த தகவல் இயக்குநர், ரஜினி உட்பட யாருக்கும் தெரியாதாம். விஷயம் தெரிந்தவுடன் தான் பதறிவிட்டதாக, சுரேஷ் கிருஷ்ணா தன் புத்தகத்தில் பகிர்கிறார். 

“ரஜினி என்னும் பிராண்ட்”

Allari_Mogudu_12332.jpgசரி, மீண்டும் கட்டுரைக்கு வருவோம். ரஜினி இன்னொரு விஷயத்திலும் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார். தனக்காக திரைப்படங்களில் துதிபாடுவது எல்லைமீறிவிட கூடாது என்பது தான் அது. ‘மலை... அண்ணாமலை’ என்னும் வசனம் அண்ணாமலை திரைப்படத்தில் ஒரே ஒரு முறை தான் உச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது போல பாட்ஷா படத்தில் வரும், காலங்கள் கடந்து நிற்கும் வசனமான, “நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற வசனம் அந்தப் படத்தில் அதிகப்பட்சமாக ஆறு முறை தான் வருகிறது. இது ஏதோ ஏதேச்சையானது அல்ல... திட்டமிட்ட ஒன்று. தனக்காகத் துதிபாடுவது எல்லைமீறிச் சென்றால், அது தனக்கே எதிராகப்போகும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் ரஜினி. அவருக்குப் பின்னால் வந்த, அவர் போல ‘பாக்ஸ் ஆஃபிஸ்’ நாயகன் ஆகவேண்டும் என்று ஆசைப்பட நாயகர்கள் தவறவிடும் இடம் இது தான். 

அவர் திரைப்படம் தொடங்கும்முன், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என்ற வரைகலைக் காட்சி வரும் அல்லவா...?  அது அண்ணாமலை படத்தில்தான் முதன்முதலாக வந்தது. இந்த வரைகலையை திரையில் போடுவதற்கு, முதலில் ரஜினி ஒப்புக்கொள்ளவில்லையாம். நீண்ட தயக்கத்துக்கு பின், பாலசந்தரின் வற்புறுத்தலுக்கு பின் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் மறுத்ததற்கு  அவர் வைத்த வாதம், “ரஜினி ஒரு பிராண்ட் ஆகிவிட்டால்... அதற்கு நான் தொடர்ந்து தீனி போடவேண்டும். அது மிகவும் கடினம்” என்பதே... அவர் வாதம் பொய்க்கவில்லை, ரஜினி என்னும் பிராண்டின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யமுடியாத அண்ணாமலைக்குப் பிறகு வந்த பாண்டியன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

“பிம்பத்தை உடைத்து மீண்டும் எழுப்புதல்”

Baasha_12146.jpg

அண்ணாமலையில் கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடைவதைதான் ரஜினி விரும்பி இருக்கிறார். இதற்கு சினிமா என்னும் கலை சார்ந்த எந்தக் காரணமும் இல்லை. அந்தப் பிம்பம் உடைந்தால்தான், மீண்டும் அதை விட வலுவான பிம்பத்தைக் கட்டமைக்க முடியும் என்பதுதான் காரணம். அந்தப் பிம்பத்தை உடைக்க அவர் தேர்ந்தெடுத்தது, தெலுங்கு  “அலரி மொகுடு” திரைப்படம். இரண்டு மனைவிகள் உள்ள ஒரு நாயகனின் கதை. இதைத் தமிழாக்கம் செய்யலாம் என்று ரஜினி  கூறியபோது சுரேஷ் கிருஷ்ணா பதறிவிட்டாராம். அவர், “வேண்டாம். இது விஷப்பரிட்சை... நாம் முன்பே பேசியது போல ‘பாட்ஷா’ படத்தை செய்யலாம்” என்றிருக்கிறார். அதற்கு ரஜினி,  “இல்லை... நாம் அண்ணாமலையில் உண்டாக்கிய பிம்பத்தை உடைக்க வேண்டும். மக்களை மறக்கச் செய்யவேண்டும். அப்போதுதான், பாட்ஷா பார்வையாளன் மனதில் நிற்பான். அதற்கு நாம் 'அலரி மொகுடு' திரைப்படத்தை தமிழாக்கம் செய்யவேண்டும்” என்றிருக்கிறார்.  பாட்ஷாவிற்காக அவர் வடிவமைத்த செயல்திட்டம் தோற்கவில்லை.  ரஜினி என்னும் பிம்பத்தை வேறு வடிவில் வெளிப்படுத்திய, அலரி மொகுடின் தமிழ் பதிப்பான வீராவும் வெற்றி அடைந்தது. மீண்டும் ரஜினி பிம்பம் கட்டமைக்கப்பட்ட ‘பாட்ஷா’வும் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் ஆனது. 

வீராவில் அவர் இருமனைவிகளைக் கொண்ட நாயகனாக, குடும்பம் சார்ந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்த படத்துக்குப் பிறகும் அவர் பிம்பம் அப்படியேதான் இருந்தது.  எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் ஆர்.எம்.வீரப்பன் தான், ‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பாளர்.  அவர், ரஜினியை ஆனந்த்ராஜ் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சிக்கு ஒப்புக்கொள்ளவே இல்லையாம். அவர் சொல்லிய காரணம், “எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த ஒரு பிம்பத்தை நான் ரஜினிக்கு பார்க்கிறேன். நிச்சயம் அவர் ரசிகர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். என்னால், இந்தக் காட்சிக்கு சம்மதிக்கவே முடியாது” என்று கூறியுள்ளார். பின், ரஜினியே இதில் தலையிட்டுதான் இந்த காட்சிக்குச் சம்மதம் வாங்கி உள்ளார்.  “நாயகன் அந்தக் காட்சியில் அடிவாங்கினால் தான், பின் அந்த நாயகன் திரும்பி அடிக்கும் போது, ரசிகர்களின் மனநிலை உச்சத்தைத் தொடும்” என்றிருக்கிறார். அதுதானே நிகழ்ந்தது. 

கபாலி வரை அதுதானே நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. ரஜினி நிச்சயம் வெறும் சினிமா மட்டும் தெரிந்த நாயகன் இல்லை... ரசிகர்களின் உளவியல் அறிந்த நாயகன். அதனால்தான் அவரால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் சந்திரமுகியையும் தேர்ந்தெடுக்க முடிகிறது, வில்லனுக்குப் பயந்து ஓடும் வசீகரனாகவும் நடிக்க முடிகிறது.  அவரது முடிவுகள் சில நேரம் பிசகி இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒப்பீட்டளவில் மற்ற நாயகர்களைவிட, எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினிதான் ரசிகர்களின் உளவியலை நன்கு அறிந்திருக்கிறார். 
ரஜினி... உளவியல் அறிந்த நாயகன்!

vikatan

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியம்: ஸ்யாம்

 

p54b.jpg

ஏ.டி.எம்.

``ரொம்ப நாளா பூட்டியிருந்த இடம். காத்துக் கருப்பு இருக்கப்போகுது. பாத்து போ'' என, ஏ.டி.எம் போகும் மகளிடம் கூறினாள் அம்மா.

 - நந்த குமார்


கட்டிங்

கஸ்டமர் யாரும் இல்லாததால், முடி வெட்டிக்கொள்ள அமர்ந்தார் சலூன்கடைக்காரர். 

- ரியாஸ்


சமாதானம்

``பக்கத்து வீட்டுக்காரர், உங்ககூட சமாதானமாகிட்டார்னு எப்படிச் சொல்றீங்க?''

``எனக்கு ஃபேஸ்புக்ல லைக்ஸ் போட்டிருக்கார்.''

- பெ.பாண்டியன்


சம்பள அட்டை
                          
``முதல் மாசச் சம்பளத்தைக் கண்ணுல காட்டுடா'' என்ற தாயிடம், டெபிட், கிரெடிட் கார்டுகளைக் காண்பித்தான் மகன்.

- ஏந்தல் இளங்கோ

 

p54a1.jpg

காபி மேக்கர்

`கும்பகோணம் டிகிரி காபி'யை,  நெடுஞ்சாலை ஹோட்டலில் போட்டுக் கொண்டிருந்தான் பீகார்காரன்.

- பிரகாஷ் ஷர்மா


டைம்

``உனக்குக் கொடுத்த டைம் முடிஞ்சிருச்சு, செல்லைக் கொடு'' என்று மகனிடம் வாங்கி கேமைத் தொடர்ந்தார் அப்பா.

- வெ.சென்னப்பன்


பசி

தெருநாயின் பசியை உணர்ந்திருக்கிறான் பிச்சைக்காரன்.

- பெ.பாண்டியன்


அடம்

``எனக்கு, டெடிபேர் வேணாம்; பேய் பொம்மைதான் வேணும்!'' என அடம்பிடித்தது குழந்தை.

- கோ.பகவான்


ஏமாற்றம்!

அடித்துப்பிடித்து ஏறி அமர்ந்த பிறகு கிளம்பியது, பின்னால் நின்றிருந்த பேருந்து.

 - கி.ரவிக்குமார்


நகரத்து பயம்

தென்னைமரத்தின் மேல் அநாயாசமாக ஏறிய கிராமத்து அப்பா, ஷாப்பிங் மாலில் எஸ்கலேட்டர் ஏற பயந்து கீழேயே நின்றார்.

- நந்த குமார்

vikatan

  • தொடங்கியவர்
காலுக்குப் பதிலாக சக்கரம் பொருத்தப்பட்ட ஆமை
 

பிரிட்­டனில் கால் ஒன்றை இழந்த ஆமை­யொன்று நட­மாட உத­வு­வ­தற்­காக சக்­கரம் ஒன்று பொருத்­தப்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்தின் ஒக்ஸ்­போர்ட்­ஷ­ய­ரி­லுள்ள 7 வய­தனா இந்த ஆமை, காரா பெய்ன்டோன் என்­ப­வரின் வீட்டில் வளர்க்­கப்­பட்­டது.

 

2119025TORTOISE_0925.jpg

 

அவ் ­வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்ற இந்த ஆமை, காய­ம­டைந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் உள்ர் அய­ல­வர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதன்பின் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட இந்த ஆமைக்கு மருத்­து­வர்கள் சத்­தி­ர­
சி­கிச்சை செய்­தனர்.

 

21190TORTOISE_09.jpg

 

எனினும், இந்த ஆமை கால் ஒன்றை இழந்­தி­ருந்­தது. அதை­ய­டுத்து, நேதன் அலன் எனும் பொறி­யி­ய­லா­ளரின் உத­வி­யுடன் இந்த ஆமைக்கு சக்­கரம் பொருத்தப் பட்டதாக 33 வயதான காரா பெய்ன்டோன் தெரிவித்துள்ளார்.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

15350584_733657383452988_242135226824326

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்....
மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை

  • தொடங்கியவர்

இவான்காவைத் தெரியுமா?

 

 

14p1.jpg

வான்கா - மொத்த உலகமும் கூகுளில் தேடு தேடு என கீபோர்ட் தேயத் தேடுவது இவரைத்தான். `பேரு பரிச்சயமில்லாததா இருக்கே!' - இதுதானே உங்கள் மைண்ட் வாய்ஸ். முழுப்பெயரைச் சொன்
னால் `சென்னை 28' பிரேம்ஜி போல `கபால்'னு கேட்ச் செய்துவிடுவீர்கள். இவான்கா ட்ரம்ப் - டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகள்.

மாடல், பிஸினஸ் உமன், ட்ரம்ப் ராஜ்ஜியத்தின் அதிகார மையம் என இவான்காவிற்குப் பல முகங்கள் உண்டு. டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அவரின் முதல் மனைவியுமான இவானா ட்ரம்ப்பிற்கும் பிறந்த பியூட்டி குயின்தான் இவான்கா. தன் பெயரையே கொஞ்சம் மாற்றி மகளுக்கு வைத்தார் இவானா. மகளைப் போலவே இவானாவிற்கும் மாடல், ஆசிரியர், பிஸினஸ் உமன் எனப் பல முகங்கள் உண்டு. இவான்கா தன் அப்பா மாதிரி ரகளையான ஆள். 15 வயதிலேயே, `போர்டிங் ஸ்கூல் எல்லாம் ஜெயில் மாதிரி இருக்கு, என்னால அங்கெல்லாம் படிக்க முடியாது!' என கலாட்டா செய்து ஊர் விட்டு ஊர் மாறிய பெருமை இவான்காவிற்கு உண்டு.

ஸ்கூல், காலேஜ் முடித்தவுடன் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின் அங்கிருந்து வைர வியாபாரம். மான்ஹாட்டனில் தங்கம், வைரம், வைடூரியம் ஜொலிக்கும் நகைக்கடை ஒன்றை வைத்திருந்தார். பின் அதையும் மூடிவிட்டுத் தன் அப்பாவின் நிறுவனத்தில் இணைந்தார். இப்போது ட்ரம்ப் குழுமத்தின் எக்ஸிக்யூட்டிவ் வைஸ் பிரசிடென்ட் இவான்காதான்!

பிசினஸ் தவிர்த்து மாடலிங்கிலும் இவான்காவிற்கு அதீத ஆர்வம். `டாமி ஹில்பிஹர்', `சசூன்ஸ்' போன்ற நிறுவனங்களின் மாடலாக இருந்திருக்கிறார். அழகிப்போட்டிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். `ஃபோர்ப்ஸ்', `அவென்யூ' போன்ற இதழ்களின் அட்டைகள் இவான்காவின் போஸ் தாங்கி வெளியாகியிருக்கின்றன. இதுபோக சின்னத்திரையிலும் நடுவராக இருந்து மார்க் போட்டிருக்கிறார்.

14p2.jpg

அரசியல் ஆர்வம் ட்ரம்ப் குடும்ப ரத்தத்திலேயே ஊறியிருக்கிறதுபோல. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இன்று ட்ரம்ப் தோற்கடித்த இதே ஹிலாரிக்கு ஆதரவாக 2007-ல்  இவான்கா நிதி திரட்டிய டமால் டுமீல் காட்சிகள் எல்லாம் நடந்திருக்கின்றன. கடந்த ஆண்டு ட்ரம்ப்பின் பெயர் முன்மொழியப்பட்டபோதே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டார் இவான்கா. `பெண்களைப் பற்றிய என் கண்ணோட்டத்தை மாற்றியது இவான்காதான். நான் பெண்களை இந்த அளவிற்கு மதிப்பதற்குக்(?) காரணம் என் மகள்தான்!' என ட்ரம்ப் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுமளவிற்கு இவான்காவின் பங்கு இருந்தது. பாவம் இந்த அளவிற்குப் பிரசாரம் செய்தவரால் அப்பாவிற்கு ஓட்டுதான் போட முடியவில்லை. ஓட்டுப் பதிவிற்கான ரெஜிஸ்ட்ரேஷனை செய்ய இவான்கா மறந்துவிட்டதால் வந்த வினை.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை இவான்கா அப்பா மாதிரி. காலேஜ் படிக்கும்போது கிரேக் ஹெர்ஸ்ச் என்பவரோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதன்பின் குபேல்மேன் என்பவரோடு டேட்டிங். 2005-ல் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஜாரெட் என்பவரோடு காதலில் விழுந்தார். ஜாரெட் வீட்டில் இவான்காவை ஏற்றுக்கொள்ளாததால் பிரேக் அப் ஆனது. ஆனாலும் இறுதியில் அவர்களை சமாதானப்படுத்தி ஜாரெட்டையே திருமணமும் செய்தார் இவான்கா. இப்போது மூன்று குழந்தைகளுக்குத் தாய். இன்னும் நான்கு ஆண்டுகளில், ட்ரம்ப் குழுமத்தின் அதிகார மையமாக இருந்தவர் அமெரிக்காவின் அதிகார மையமாக ஆகிவிடும் வாய்ப்புகள் அதிகம்!

vikatan

  • தொடங்கியவர்

இயற்கையோடு வாழு!

 

 

4p1.jpg

தான்சானியா நாட்டின் நொராங்கொரா என்னும் இடம் அடர்ந்த காட்டுப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. காடுகளில் மரங்களுக்கு இடையே குடியிருப்புகளை அமைத்தல் பாதுக்காப்பில்லாததாலும், நகர்ப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வதாலும்  வித்தியாசமான முறையில் மரங்களுக்கு நடுவே வீடுகளை அமைத்திருக்கிறார்கள். அடர்ந்த மரங்களுக்கு நடுவே மரக்கட்டைகளை நட்டு எடை குறைவான, அதே நேரத்தில் வலிமையான பொருட்களைக் கொண்டு உருண்டை வடிவ வீடுகளை அமைத்திருக்கிறார்கள்.

4p2.jpg

  வீட்டின் உட்பகுதி ஸ்டார்  ஹோட்டல்களைப் போல எல்லா வசதிகளைக் கொண்டதாகவும் அழகாகவும் இருக்கிறது. விலங்குகளால் அச்சுறுத்தல் ஏற்படாவண்ணம் உயரத்தில் இருப்பதால் பாதுகாப்பாக உணர்வதாக இங்கே வசிப்பவர்கள் கூறுகிறார்கள். மேலும், நகரத்தைவிட்டு விலகி இருப்பதால் இயற்கையான காற்றை சுவாசித்து ஆரோக்கியமாகவும் வாழலாம். இந்த வீடுகள் தினசரி வாடகைக்கு ஹோட்டலாகவும் பயன்படுத்தப்படுகிறதாம். மரங்களை அழிக்காமல் காடுகளுக்கு மத்தியில் இயற்கையை ரசித்தபடி வாழ்வது பேரின்பம்தானே!

vikatan

  • தொடங்கியவர்

கருப்பு வெள்ளை முதல் மோஷன் கேப்சர் வரை... இந்திய நடிகர்களில் ரஜினியின் ’வாவ்’ சாதனை! HBDRajini

 

ரஜினிகாந்த் பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல!!! இந்த மனிதர் நடித்தால் மட்டும் போதும் சாதனைகள் வரிசையாய் வந்து சேரும். ஸ்டைலிஷ் ஹிரோவின் சினிமா வாழ்க்கை எந்த அளவுக்கு சாதனைகளை குவித்துள்ளது என்பது நாம் அறிந்ததே. ஆனால் நாம் அறியாத ஒரு சாதனையையும் இந்த மனிதர் சைலன்டாக செய்து வைத்துள்ளார்.

ரஜினி

சினிமா கருப்பு வெள்ளையில் துவங்கி  கலர் படங்கள், டிஜிட்டல் சினிமா, 3டி, மோஷன் கேப்சர் என பல வடிவங்களில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இந்த எல்லா வளர்ச்சியிலும் இந்த மனிதர் இருந்துள்ளார் என்றால் அது சாதனை தானே. இவ்வளவு தொழில்நுட்பத்திலும் நடித்த ஒரே இந்திய நடிகர் இவர் என்றால் உண்மையில் இவர் சூப்பர் ஸ்டார் தானே.

கருப்பு வெள்ளை

 

 

 கலர் படங்கள் 

 

 

டிஜிட்டல் சினிமா

 

 

3டி

 

 

மோஷன் கேப்சர் 

 

 


இதையெல்லாம் தாண்டி அடுத்த சோதனையான ஆகுமென்டட் ரியாலிட்டியிலும் கால் பதிக்கிறார் இந்த சிட்டி ரோபோ 2.0

 

 

 

இவ்வளவு தொழில்நுட்பத்திலும் கால்பதித்த இந்த நடிகரின் நடிப்பை சோதிக்க இனி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா தொழில்நுட்பத்திலும் தனது ஸ்டைல் மாறாமல், கெத்து காட்டும் ரனிஜிகாந்த்தின் பிறந்த நாள் இன்று..


இது போனஸ்!

அவர் நடித்த ஒரே ஆங்கிலபடத்தில் இடம் பெற்ற ஸ்டைலிஷ் காட்சி!!

 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

 

“நகர்புற விவசாயி” - காணொளி

  • தொடங்கியவர்

ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா?

 

 
alai

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு வசதியாகவே ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
மேலும் புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.


புயல் சின்னம் உருவாகும் போது எல்லாம் அதற்கு ஒரு பெயர் சூட்டும் வழக்கம் 20 நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது. பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகவும், புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை இதன்மூலம் தவிர்க்கலாம் என்பதற்காக மனிதர்களை போல புயல்களுக்கும் பெயர் சூட்ட தொடங்கியுள்ளனர்.


ஆஸ்திரேலியா தான் இந்த பழக்கத்தை முதன் முதலில் தொடங்கியது. பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953-இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.


வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.


கடைசியாக சென்னையைத் தாக்கிய "நடா' புயலுக்கு ஓமன் அப்பெயரைச் சூட்டியிருந்தது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தையும், தென் பகுதி ஆந்திரத்தையும் தாக்கியுள்ள "வர்தா' புயலுக்கு பாகிஸ்தான் அப்பெயரைச் சூட்டியுள்ளது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும்.


இந்த ரோஜாவின் தாக்கம் இன்று இரவு 7 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.