Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

‘பிளாஸ்டிக் ஜெர்சி’ அகமதிக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு... வாவ் மெஸ்சி!

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பேஸ்புக் கவரிமான் ராஜாக்கள்!

 

 

16p1.jpg

நாம சின்னப்புள்ளையா இருந்தப்போ, `எதிர்காலத்துல லைக்குனு ஒரு பட்டன் இருக்கும், அதை அழுத்துறதுக்கு மனித இனம் கௌரவம் பார்க்கும்'னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனா இன்னைக்கு அது உண்மையாகிடுச்சு. `ஒரு ஆள் எத்தனை லைக் வாங்குகிறார்?' என்பதில் ஆரம்பித்து ஒருத்தருக்கு `லைக் போடலாமா வேண்டாமா'னு யோசிக்கிறதுவரை மக்கள் கௌரவம் பார்க்கிறது ஒருவகையில பார்த்தோம்னா செம்ம காமெடியா தோன்றும். இப்பேர்ப்பட்ட ஃபேஸ்புக் கௌரவ சாம்ராஜ்யத்தில் சாதாரண குடிமகனாகிய உங்க நட்பை ஒருத்தர் மதிக்கிறாரா இல்லையா என்பதை இப்படிலாம் தெரிஞ்சுக்கலாம் பாஸ்...
16p7.jpg
ஒருத்தரோட பதிவுகளால ஈர்க்கப்பட்டோ அல்லது உங்க ஃப்ரெண்டுனு நீங்க நினைச்சுக்கிட்டிருக்கிற நபருக்கோ ரிக்வெஸ்ட் அனுப்பினா, நீங்க ஒரு  டம்மிபீஸ்னு நினைக்கிறவங்க பார்த்திட்டு உடனடியா டெலிட் பண்ணிடுவாங்க. இதைக்கூட ஒரு வகையில் சேர்த்துக்கலாம். ரிக்வெஸ்ட்ட கிடப்புல போட்டுவிட்டு இன்னைக்கோ நாளைக்கோ அக்செப்ட் பண்ணிக்குவாங்க என்கிற நம்பிக்கையிலயே வருஷக்கணக்கா தொங்கல்ல விடுறதெல்லாம் எதுல சேர்க்கிறது... ஹய்யோ ஹய்யோ!

சரி போனா போகுதுன்னு சிலர் அக்செப்ட்  பண்ணிப்பாங்க. `நட்பில் இணைத்தமைக்கு நன்றிகள்!'னு நவில்ந்திட்டு நல்லபிள்ளையா லைக் போட  ஆரம்பிப்பீங்க. அவர் காலைல `ஹாய்' சொல்ற  பதவுகளிலிருந்து, `இன்னைக்கு மேய்ந்த டின்னர் இதுதான்'னு கடைசியா படுக்கப்போறதுவரைக்கும் போடுற சுமார் பத்து சுமார் பதிவுகளுக்கு லைக் லைக்கா அப்படியே கர்ணப்பிரபுவா அள்ளிக் கொட்டியிருப்பீங்க. ஆனா நீங்க கண்முழிச்சு ரிசர்ச் பண்ணிப் போடுற சூப்பர் பதிவுகளுக்கு அங்கே இருந்து துளி ரியாக்‌ஷன் வராது.

கொஞ்சநாள் லைக் போட்டு போட்டு போரடிச்சு ஒரு பொம்மைப் பட கமென்ட் போடுவீங்க. கண்டுக்கிட மாட்டாங்க. அப்புறமா பதிவிட்ட நல்ல கவிதை, கட்டுரையை பயங்கரமா விதவிதமா பாராட்டி ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பின்னூட்டம் போடுவீங்க. வரிசையா எல்லாத்துக்கும் லைக் போடுறவங்க, உங்க கமென்ட் வந்ததும் ஒரு லாங்க் ஜம்ப் பண்ணி கீழே ஒருத்தி `Hey why you always Writing in tamilya'னு போட்டிருக்கிறதுக்கு லைக் போட்டு கடகடனு ரிப்ளேயும் போட்ருப்பாய்ங்க.

16p2.jpgசரி நீளமா போட்டதுனால லைக் பண்ணல போலிருக்கு, ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா போடுவோம்னு, `தங்கள் நகைச்சுவைக்கு எனது இந்த ஒரு லைக்கையே நூறு லைக்காகக் கொள்ளவும்'னு அறிவிஜீவியா கமென்ட் போட்ட கையோட சமணக்கால் போட்டு ரிப்ளேக்காகக் காத்திருப்பீங்க. டிக் டிக் டிக்... கமென்ட்டோட உங்களையும் ஒரேயடியா தூக்கி அடிச்சு ப்ளாக் பண்ணிடுவாய்ங்க. பின்னே கவிதைனு நினைச்சு அவங்க போட்டதுக்குப் போய் இப்படி கமென்ட் பண்ணுனா எப்படி பாஸ்?
16p3.jpg
அவங்க சார்ந்த மதத்தின் பண்டிகையின் போதோ பிறந்தநாளின்போதோ பொம்மை பொக்கேயோட வாழ்த்து அனுப்புவீங்க. அதுபோய் மெசஞ்சர் வாசல்லயே முட்டி நின்றும், உள்ளே விடாமலேயே துரத்திவிட்டிருப்பாய்ங்க. உங்களைக் கண்டுக்க வைக்க கடைசி முயற்சியா, `இது நண்பரின் அற்புதமான கவிதை. இது அன்பரின் அட்டகாசமான ஆர்ட்டிகள்'னு வரிசையா ஷேர் பண்ண ஆரம்பிப்பீங்க. ம்ஹூம். `நமக்கு வாய்த்த அடிமைகளில் ஒன்று நமது பெயரை நல்லா பிரபலப்படுத்துது'ங்கிற லெவல்லதான் அவங்க நினைச்சுக்கிட்டிருப்பாங்க..

16p4.jpgஇப்படி நீங்க ஆசையா பழகிப்பார்க்கிறதுக்காக பண்ணின வித்தை எல்லாத்தையும் கேர் பண்ணாதவங்க தான், திடீர்னு ஒருநாள், `ஹாய் ப்ரெண்ட்ஸ் திஸ் இஸ் மை ஷார்ட்ஃப்லிம்.காட் நேஷனல் அவார்ட். மகிழ்ச்சி'னு நீங்க ஸ்டேட்டஸ் போட்டதும், முதல் முறையாக போறபோக்குல ஒரு லைக்கை லைட்டா தட்டிட்டு போவாங்க. இனிமே உங்களையும் ஒரு ஆளா கவனிப்பாங்க அப்படீங்கறதுக்கான முதற்கட்ட சிக்னல் இது.

கொஞ்சநாள் கழிச்சு, `ஜாய்ண்ட் அஸ் ஆன் அசிஸ்டென்ட் டைரக்டர். தாங்யூ மணி சார்!'னு அப்லோடு செய்த போட்டோவுக்கு ஓடி வந்து ஹார்ட்டினை தட்டிட்டு ஓடியிருப்பாய்ங்க. அடுத்த நாளிலிருந்து உங்க ஸ்டேடஸ்க்கு அப்பப்போ அவிய்ங்ககிட்ட இருந்து லைக் விழும்னு எதிர்பார்க்கலாம்.
16p5.jpg
பொழுது இப்படியே போய்க்கிட்டு இருக்குறப்போ ஒரு பொன்மாலைப்பொழுதில், `இதான் என்னோட டெப்யூட் ஃபிலிம் போஸ்டர்'னு டெரரா ஒண்ணைப் போடுவீங்க. `கங்கிராட்ஸ் ப்ரோ'னு ஃபர்ஸ்ட் கமென்ட் பறந்து வரும். அப்புறம் ஒருநாள்,   `நாளை என்னோட படம் `மதியை மதி' ரிலீஸாகுது. எல்லோரும் தியேட்டர்ல போய்ப் பாருங்க ப்ளீஸ்'னு சொல்லியிருப்பீங்க. டோலர் அதை ஷேர் பண்ணுவாப்ல.

16p6.jpgஅடுத்த நாள் `குட் ரெஸ்பான்ஸ் கம்மிங்... தாங்ஸ் டூ மை டீம்'னு ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த செகண்டே மெசஞ்சர் க்ளிக் சவுண்ட் கொடுக்கும். `ஹாய்’ அனுப்பிருப்பாப்ல டோலர். பதில் `ஹாய்' அனுப்புற நீங்க, இதுவரை அவங்க உங்களுக்கு செஞ்சதை  நீங்க இன்னொரு ஆளுக்குச் செய்ய ஆரம்பிப்பீங்க. அவங்க உங்க அளவுக்கு வளர்கிறவரை. எப்பூடி..! 

  • தொடங்கியவர்

 

சௌதியில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்த பிறகு என்ன நடந்தது? - காணொளி

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

p56a.jpg

குச்சிப்பை ரகசியங்கள்

வ்வொரு முறையும்
அம்மாச்சி வீட்டுக்குச் செல்லும்போது
பின்னால் ரெண்டு அடி வால் முளைக்கிறது
எனக்கு அல்ல... அம்மாவுக்கு.
கிளம்பும்போது எங்கிருந்தோ
குச்சிப்பையை எடுத்துவருகிறாள் அம்மாச்சி.
கோலநோட்டு இட்லிப்பொடி
காபித்தூள் முறுக்குமாவு
ரேஷனில் வாங்கிய சர்க்கரை
மட்டையோடு தேங்காய்
ஹமாம் சோப்பு (பெருசு)
தெருமுனையில் வீட்டுக்காரனுக்குத்
தெரியாமல் பறித்த முருங்கைக்கீரை
மருதாணி டிடெர்ஜென்ட் பவுடர்
பாரம் அதிகமாகும்
அத்தை மாமாக்களின் கொஞ்சூண்டு பொறாமையால்.
இப்போது அக்கா
வீட்டுக்கு வரும்போதெல்லாம்
அம்மா தன் உலகத்தை
குச்சிப்பையில்
மடக்கி அழுத்தித் தருகிறாள்
‘கொஞ்சம் மிச்சம் வெச்சுட்டுப் போடி...’ எனக்
கிளறிக்கொண்டே கிண்டலடிப்பேன்.
அக்கா இப்போதெல்லாம் திட்டுவதில்லை
மகன்களின் ஸ்கேனிங் பார்வைக்கு
புரியவே புரியாது
குச்சிப்பையின் ரகசியம்.
வெறும் பொருள் மட்டும் அல்ல
அதில் இருப்பது
அம்மா குச்சிப்பையில் அம்மாச்சியும்
அக்கா குச்சிப்பையில் அம்மாவும்!

-ரா.தினேஷ் வர்மா


பன்னாட்டு முனையம் T4

மேற்கூரை உடைந்து விழாத
மீனம்பாக்கத்தின் அதிகாலையில்
நீருக்குள் வைத்த காகிதமென மேலெழும்புகிறது
எங்கள் இருவருக்குமான பரிதி.
நாளை வேறு வேறு வானம்
வேறு வேறு விடியல்.
நிமிடங்கள் கரைய
கையசைத்து விடைபெறுகிறான்
கட்டட வேலைக்காகக் கடல் தாண்டும் கணவன்.
கரையில் தலை வைத்துக் கிடக்கும்
திமிங்கிலத்தின் திறந்த வாய்போல இருக்கிறது பன்னாட்டு முனையம் T4.
திரும்பிப் பார்த்தபடியே
அதன் தொண்டைக்குள் விழுந்து மறைந்துபோகின்றான் என் மணாளன்
காலம் எங்கள் பிரிவைச் சுவைக்கிறது.
வழியனுப்பிவிட்டுத் தனியாக
ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
திறந்த சிங்க வாய்க்குள்ளிருந்து தண்ணீரும்
என் கண்களிலிருந்து நீரும் வழியெங்கிலும் வழிந்துகொண்டிருந்தது.

- நிலாகண்ணன்.


நீயும் நானும் சமைத்த தருணம்!

எதிர்முனையின் `ஹலோ’வுக்குக் காத்திராமல்
`என்ன பண்றே?’ என்ற உனது கேள்வியில்
தொடங்குகிறது நமது சமையல்.
`லவ் பண்றதை வீட்ல சொல்லிட்டியா?’ என எண்ணெய் ஊற்றுகிறாய்.
`இங்கே பிரஷர் தாங்க முடியலை’
வெங்காயம் அரிவதாகக் கண்ணீர் வடிக்கிறாய்.
`கொஞ்சம் பொறுத்துக்க ரம்யா’ என்று
நான் கெஞ்சுகையில் உன் முகம்
அடுத்த சேர்க்கைபோலச் சிவக்கிறது.
`இன்னும் எவ்வளவு நாள்
மேக்ஸிமம் ஒரு மாசம்...
இல்லைன்னா வீட்ல யாரைச் சொல்றாங்களோ... எனக்குத் தெரியலை
செத்தாலும் செத்துடுவேன்’ என
உப்பு புளியோடு உறைப்பையும் சேர்க்கிறாய்
நான் வெந்துபோய் மௌனம் சாதிக்கும்போது
மூக்கை உறிஞ்சி `அப்புறம்?’ என்கிறாய்.
முடிந்த சமையலை அசைபோடும் தருணத்தில்
`சாப்பிட்டியா?’ எனக் கேட்கிறாய்
நான் என்ன சொல்வது?

- அஜித்

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 15

 

1891 :  கூடைப்பந்தாட்ட விளையாட்டை டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் அறிமுகப்படுத்தினார்.

 

1905 : அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.

 

866varalaru2.jpg1914 : முதலாம் உலகப் போரில் சேர்பிய தலைநகர் பெல்கிரேட்டை ஆஸ்திரிய, ஹங்கேரிய படையினரிடமிருந்து சேர்பிய இராணுவம் மீண்டும் கைப்பற்றியது.

 

1914 : ஜப்பானில் மிட்சுபிஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் உயிரிழந்தனர்.

 

1941 : யுக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாஸிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

1960 : நேபாள மன்னர் மஹேந்திரா அந்நாட்டு அரசாங்கத்தைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

 

1967 : அமெரிக்காவின்  ஒஹையோ மாநிலத்தில்; ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

 

1970 : சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகியதும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.

 

1970 : தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் கொல்லப்பட்டனர்.

 

1978 : மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

 

1981 : லெபனானின் பெய்ரூத் நகரில் ஈராக்கிய தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெலனானுக்கான ஈராக் தூதுவர் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர்.

 

1994 : இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.

 

1997 : தஜிகிஸ்தான் விமானமொன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொறுங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

 

1997 : தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.

 

2000 : செர்னோபில் நகரில் மூன்றாவது அணு உலை மூடப்பட்டது.

 

2001 : பைஸாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

 

2006 : கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.

 

2009 : போயிங் நிறுவனத்தின் 787 விமானம் முதல் தடவையாக அமெரிக்காவின் சியாட்டில் நகரிலிருந்து பறந்தது.

 

2010 : புகலிடக் கோரிக்கையாளர்கள் 90 பேரை ஏற்றிச் சென்ற படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் பாறையில் மோதி உடைந்தால் 48 பேர் உயிரிழந்தனர்.

 

2014 : அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஹோட்டலொன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். பொலிஸாரின் முற்றுகையின்போது துப்பாக்கிதாரி உட்பட  மூவர் கொல்லப்பட்டனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜே.கே ரௌலிங் புத்தகத்தின் கையெழுத்து பிரதிக்கு இத்தனை கோடியா?

harry-potter-play-jk-rowling_03322.jpg

சிறுவர்களை மந்திரத்தால் மயக்கியதைப்போல கட்டிப்போடும் கதைத்தான் ஹாரிப்பாட்டர். அந்தளவுக்கு ஒவ்வொரு பாகத்தையும் சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் ஜே.கே. ரௌலிங்.  இதன் ஒவ்வொரு பாகம் வெளிவரும்போதும், உலகம் முழுவதும் இதன் வாசகர்கள் கடைகளில் முன்பதிவு செய்தும் வரிசைக் கட்டி நின்றும் வாங்குவதைப் பார்க்க முடியும். இந்தக் கதை திரைப்படமாக பல பாகங்கள் எடுக்கப்பட்டு, பெரியவர்களையும் ஆவலோடு பார்க்க வைத்தது.

ஹாரிபாட்டர் எழுதி முடித்த பிறகு என்ன எழுதலாம் என்கிற யோசனையில் இருந்த ஜே.கே.ரௌலிங்கிற்கே ஹாரிபாட்டர் கதையிலிருந்தே ஒரு ஐடியா கிடைத்தது. ஹாரிபாட்டர் நாவலின் கடைசி பாகமான Harry Potter and the Deathly Hallows சீரீஸில் ஹாக்வர்ட்ஸ் ஸ்கூலின் ஹெட்மாஸ்டர் டம்பிள்டோர் ஹெர்மாயினியிடம் ஒரு புத்தகம் கொடுப்பார். The Tales of Beedle the Bard என்ற மாயாஜாலக் கதைகள் கொண்ட அந்த புத்தகம் உண்மையில் ஒரு கற்பனைப் புத்தகம். அதே தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினால் என்ன? என்பது தான் ஜே.கே.ரௌலிங்கிற்குத் தோன்றிய ஐடியா. 

2007-ம் ஆண்டு முழுக்க முழுக்க ஜே.கே ரௌலிங்கின் கையெழுத்தில் உருவான இந்தப் புத்தகம், ஏழே பிரதிகள்தான் போடப்பட்டது. இதில் ஒரு புத்தகத்தை மட்டும் 2007-ம் ஆண்டு ஏலத்தில் விட்டார். மீதம் ஆறு பிரதிகளையும் ஹாரிபாட்டர் நாவல் எழுதிய போது தனக்கு உதவிய ஆறு பேருக்கு பரிசாகக் கொடுத்தார். அதில் ஒருவர் ஹாரிபாட்டரின் முதல் பாகத்தை வெளியிட்ட பதிப்பாளர். அவர்தான் தற்போது தன்னிடம் இருக்கும் அந்த நூலை ஏலத்தில் விட்டிருக்கிறார்.

6000 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க தன் கைப்பட எழுதி, படங்களும் வரைந்து இருக்கிறார் ரௌலிங். விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட அட்டையுடன் கூடிய இந்த கையெழுத்து பிரதி,  470000 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ 3 கோடியே 17 லட்சத்து 33 ஆயிரம்) விற்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு ஏலத்தில் கேட்கப்படும் என முன்னரே எதிர்பார்த்திருந்தனர்.. இந்தத் தொகை முழுவதும் ஜே.கே.ரௌலிங்கின் தொண்டு நிறுவனத்துக்கே செல்லும் என்றும் அறிவித்திருக்கிறார் அந்தப் பதிப்பாளர். 

vikatan

  • தொடங்கியவர்

உங்களின் தினம் இன்னும் அழகாக இதெல்லாம் செய்யலாமே! #ThursdayThoughts

அழகாக

ஒரு நாளைக்கு மூன்று முறைதான் பேருந்து வரும் கிராமம் அது. நடுத்தர வயதுள்ள ஒரு பெண் தினந்தோறும் மீன் விற்க வருவார். சற்று தொலைவில் இருக்கும் கடற்கரை ஊரைச் சேர்ந்தவர். அந்தக் கிராமத்தில் அநேகம் பேர் அவரிடம்தான் மீன் வாங்குவர். தலையில் மீன் கூடையோடு, காலையில் வந்தார் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் கதைப் பேசி, கூடை காலியாக உச்சி வெயில் வந்துவிடும்.  
சில நாட்களாக அந்தப் பெண் மீன் விற்க வரவில்லை. 'ஏன்... என்னாச்சு...' ஊருக்குள் இதே பேச்சு! அப்போது ஒருவர் தன் யூகத்தைச் சொன்னார்.

"சுனாமியில் அந்தப் பெண்ணும் கடலுக்குள் அடிச்சிட்டு போயிருக்கலாம்."

அதைக் கேட்டதும் பெண்கள் முகம் வாடின. அதன்பின்னும் சில நாட்கள் அவர் மீன் விற்க வராததால், இறந்திருப்பார் என்றே எல்லோரும் நினைத்துவிட்டனர். ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் கூடை நிறைய மீன்களோடு சத்தம் எழுப்பியப் படியே வந்தார். அவரைப் பார்த்த பெண்கள், ஓடிச் சென்று கட்டிப் பிடித்து அழுதனர். அந்தப் பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு ஏதும் புரிய வில்லை.

பொருள் விற்பவர், வாங்குபவர் என்பதோடு இல்லாமல் அவர்களுக்குள் ஓர் உறவு இருந்தது. அதுதான் அழுகையாகவும் கண்ணீராகவும் வெளிப்பட்டது. இந்தக் கதை ஏனென்றால்,  தற்போது இதுபோல நிலை இருக்கிறதா...

சின்ன டெஸ்ட் செய்து பார்ப்போமா?

news_paper_07201.PNG

உங்கள் வீட்டுக்கு தினமும் பேப்பர் போடுபவர் எத்தனை நாட்களாக அல்லது மாதங்களாக பேப்பர் போடுகிறார். அவரின் பெயர் என்னவென்று தெரியுமா?  மழை நாளில் லேசாக நனைந்து பேப்பர் கிடக்கும்போது, அதை கொண்டு வந்தவரும் நனைந்திருப்பாரே என யோசித்திருக்கிறீர்களா?

காய்கறிகளைக் கூவி விற்கும் பெண்ணிடம் பேரம் பேசியிருப்பீர்கள்... அவர் ஊரில் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்று என்றைக்காவது கேட்டிருக்கிறீர்களா... அவர் எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருக்கிறது என்று விசாரித்திருக்கிறீர்களா?

iran_06349.png

வெயில் படாதிருக்க இரண்டு மூங்கில்கள் நட்டுபழைய ப்ளக்ஸ் துணியை இழுந்து மாட்டியிருக்கும் அயர்ன் கடைக்கு வாரம் ஒருமுறையாவது செல்வீர்கள்தானே... உங்கள் பிள்ளையின் பள்ளி சீருடையை அவர் எவ்வளவு கவனமாக அயர்ன் செய்துதருகிறார். மழை நாட்களில் அவர் எங்கு வைத்து அயர்ன் செய்வார் எனக் கேட்டிருக்கிறீர்களா? வேலைக்கு காலையிலேயே வந்துவிடுவதால் சாப்பாடு கடையிலா... வீட்டிலிருந்து யாரேனும் எடுத்து வருவார்களா என விசாரித்திருக்கிறீர்களா?

water_06449.png

வாட்டர் கேன் வீட்டின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. வாரம் இருமுறையாவது வாட்டர் கேன் போடுபவர் உங்கள் வீட்டுக்கு வருவார் அல்லவா... அவர் எவ்வளவு தூரத்திலிருந்து கேன் எடுத்து வருகிறார். மோட்டார் சைக்கிள் கூட வைத்துக்கொள்ளாமல் சைக்கிளிலேயே ஏன் சுமக்கிறீர்கள் என என்றாவது கேட்டிருக்கிறீர்களா?

இவர்களைப் போலவே சிலிண்டர் மாற்றுபவர், மீன் விற்பவர், கழிவறை சுத்தம் செய்ய வருபவர் என உங்கள் அருகில் இருப்பவர்களிடம் தொழில் சாராமல் அவர்களின் நலன் சார்ந்து உரையாடியிருக்கிறீர்களா?

smile_06347.jpg

'ஆமாம். நீங்கள் கேட்டிருக்கிறீர்களா... விசாரித்திருக்கிறீர்களா... எனச் சொல்வதை விட அதிகமாக இவர்களைப் பற்றி எனக்குத் தெரியும்' என்று சொல்பவர்களுக்கு க்ரேட் சல்யூட்.

ஏனென்றால், நமது நலன் என்பது நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் சேர்த்துதான். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் என்றால் வீட்டு உறுப்பினர்கள் மட்டுமல்ல... நம்முடைய அன்றாட வாழ்க்கை இயங்க உதவுபவர்களையும் சேர்த்துதான்.  

அன்பு என்பது எப்போதும் ஒரு வழியாக இருக்காது. மற்றவர் மீது அன்பு செலுத்த இன்னும் அதிகமாக அது உங்களை வந்து சேரும். அது இன்னும் இன்னும் மகிழ்ச்சியை அள்ளித் தரும்.

vikatan

  • தொடங்கியவர்

டிசம்பர் 15 - சர்வதேச தேயிலை தினம்!

 

 
intnl_tea_day

 

இன்று உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் உள்ளது. தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன.

எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது. எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயி-லையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை  நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் திகதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு புதுதில்லியில் 2005 டிசம்பர் 15 அன்று நடந்தேறியது.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

''இரவின் அழகில்'' - மலேசிய புகைப்பட கலைஞரின் பிரமிக்க வைக்கும் படங்கள்

டைம் லாப்ஸ் என்ற புகைப்படமெடுக்கும் பாணியில், இரவு நேரத்தில் இந்த பிரமிக்கத்தக்க புகைப்படங்களை மலேசிய புகைப்பட கலைஞர் கிரே சோ எடுத்துள்ளார். தென் கிழக்கு ஆசியா முழுவதும் அவர் இது போன்ற படங்களை எடுத்திருக்கிறார்.

இந்தோனீஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள எரிமலையான , புரோமோ மலைக்கு மேலே நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் வானில் சுழன்று கொண்டிருப்பதை போல தோன்றுகிறது.

இந்தோனீஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள எரிமலையான , புரோமோ மலைக்கு மேலே நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் வானில் சுழன்று கொண்டிருப்பதை போல தோன்றுகிறது.

சோ தனது சொந்த ஊரான டெரங்கெனுக்கு சென்று கொண்டிருந்த போது , பால் வெளி நட்சத்திர மண்டலம் மேலே தெரிய, கீழே ஒரு கைவிடப்பட்ட படகு கிடக்கும் காட்சியைப் படமெடுத்தார்.

சோ தனது சொந்த ஊரான டெரங்கெனுக்கு சென்று கொண்டிருந்த போது , பால் வெளி நட்சத்திர மண்டலம் மேலே தெரிய, கீழே ஒரு கைவிடப்பட்ட படகு கிடக்கும் காட்சியைப் படமெடுத்தார்.

மலேசியாவின் கேமரூன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு காய்கறி பண்ணைக்கு மேலே பால்வெளி மண்டலத்தை காணலாம்.

மலேசியாவின் கேமரூன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு காய்கறி பண்ணைக்கு மேலே பால்வெளி மண்டலத்தை காணலாம்.

பால்வெளி மண்டலத்தில் தான் பூமி அமைந்துள்ளது. நமது சூரிய குடும்பமானது நட்சத்திர மண்டலத்தின் சுருள் கைகளில் ஒன்றாகும்.

பால்வெளி மண்டலத்தில் தான் பூமி அமைந்துள்ளது. நமது சூரிய குடும்பமானது நட்சத்திர மண்டலத்தின் சுருள் கைகளில் ஒன்றாகும்.

சூரியன் உதயமாவதற்குமுன், இந்தோனீஷியாவின் காவா இஜென் எரிமலையை மேலிருந்து காணும்படி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சூரியன் உதயமாவதற்குமுன், இந்தோனீஷியாவின் காவா இஜென் எரிமலையை மேலிருந்து காணும்படி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக பால்வெளி மண்டலத்தை காணும் போது, ஒரு திரைப்படத்திலிருந்து ஸ்பெஷல் எஃபக்ட் ஒன்றை பார்ப்பது போல உணர்ந்ததாக கூறுகிறார் சோ.

முதல்முறையாக பால்வெளி மண்டலத்தை காணும் போது, ஒரு திரைப்படத்திலிருந்து ஸ்பெஷல் எஃபக்ட் ஒன்றை பார்ப்பது போல உணர்ந்ததாக கூறுகிறார் சோ.

'' உண்மையான விஷயங்களை (இரவில் வானத்தின் அழகை) படம் பிடிக்க முடியும் என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம்'' என்கிறார் சோ.

'' உண்மையான விஷயங்களை (இரவில் வானத்தின் அழகை) படம் பிடிக்க முடியும் என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம்'' என்கிறார் சோ.

மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள கினாபாலு மலையின் உச்சியில் தாழ்வாக வந்த மேகங்கள் கொண்ட பகுதிக்கு மேலே இந்த படம் எடுக்கப்பட்டது.

மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள கினாபாலு மலையின் உச்சியில் தாழ்வாக வந்த மேகங்கள் கொண்ட பகுதிக்கு மேலே இந்த படம் எடுக்கப்பட்டது.

இறுதி புகைப்படமும் கினாபாலு மலையிலிருந்து எடுக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,435 அடி உயரத்தில் உள்ள உச்சியை அடைய 8 கி.மீ தூரத்திற்கு தன்னுடைய கேமரா சாதனங்களுடன் நடந்ததாக சோ தெரிவித்துள்ளார்.

இறுதி புகைப்படமும் கினாபாலு மலையிலிருந்து எடுக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,435 அடி உயரத்தில் உள்ள உச்சியை அடைய 8 கி.மீ தூரத்திற்கு தன்னுடைய கேமரா சாதனங்களுடன் நடந்ததாக சோ தெரிவித்துள்ளார்.

BBC

  • தொடங்கியவர்

2016ல் வெளியான டிரெய்லர்களின் ஹாட் ஹிட் கலெக்‌ஷன்! #2016Rewind

 

டிரெய்லர்

ரு திரைப்படம் வெளியாகும் முன்பு பத்திரிக்கைகளில் விளம்பரம், கட் அவுட்டுகள், வால் போஸ்டர்கள் என்பதையெல்லாம் தாண்டி. மோஷன் போஸ்டர், டிரெய்லர்,டீசர், பிரமோ சாங் என வேற லெவல் மார்க்கெட்டிங்கில் இறங்கி அடித்துக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. 2016 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களின் டீசர், டிரெய்லர்கள் பார்த்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் டாப் 10 இடங்களை பிடித்தவைகளை பற்றிய தொகுப்பு இது.

1. கபாலி :

நெருப்புடா டீசர் இது. ஏப்ரல் 30 இல் வெளியான கபாலி டீசரை இதுவரை 3,28,96,350 பேர் பார்த்திருக்கிறார்கள். மத்த தமிழ் படங்கள் டீசர்  மாதிரி இல்லையே. இது சூப்பர் ஸ்டார் டீசர் ஆச்சே பாஸ்..!!

 

 

2. தெறி : 

"பைபிள்ல என்ன சொல்லிருக்கு?" "பைபிள்ல நிறைய சொல்லிருக்கு, நீங்க என்ன எதிர்பாக்குறிங்க!?", "லவ்வை சொல்ல வெட்கப்படுறவன் வாழவே வெட்கப்படறான்னு அர்த்தம்ங்க" என டிரெய்லரில் வரும் எல்லா வசனங்களும் தெறியாக இருக்கும். மார்ச் 20 இல் வெளியான இந்த படத்தின் ட்ரைலரை இதுவரை 1,06,13,477 பேர் பார்த்து இருக்கிறார்கள்.

 

 

3. சிங்கம் 3 :

இது கொலப்பசி டீசர், வீடியோவை பிளே செய்வதற்கு முன் வால்யூம் கம்மியா இருக்குதான்னு பார்த்துட்டு பிளே பண்ணுங்கன்னு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாலும். நவம்பர் 7 இல் வெளியான 'சிங்கம் 3' டீசரை இதுவரை 84,99,645 பேர் பார்த்து இருக்காங்க.

 

 

4. இருமுகன் :

படத்தில் ஹீரோ, வில்லன் ரெண்டு பேருமே விக்ரம் தான் என்பதை டிரைலரிலேயே சொல்லிருப்பார்கள். ஆகஸ்ட் 1 இல் வெளிவந்த இருமுகன் டிரைலரை  இதுவரை 76,83,962 பேர் பார்த்து இருக்கிறார்கள். 

 

 

5. ரெமோ :

"அய்யயோ பார்த்துட்டா, பார்த்துட்டா" என்ற க்ளைமாக்ஸ் கவுன்டருக்காகவே ரெமோ நிறைய முறை பிளே பண்ணி பார்த்தவர்கள் இருக்கிறார்கள். செப்டம்பர் 19 இல் வெளியான ரெமோ டிரைலரை இது வரைக்கும் 71,62,579 பேர் பார்த்து இருக்காங்க.

 

 

6. காஷ்மோரா :

வரலாற்று பின்னணியுடன் கூடிய கதை களத்தை டிரைலரிலேயே அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்கள். வேற லெவல் கெட்டப்பில் கார்த்தி, நயன்தாரா, பின்னணிகள் என செம்ம டிரைலர். மொத்தம் 70,97,915 பேர் பார்த்திருக்கிறார்கள். அக்டோபர் 7 இல் வெளியிடப்பட்டது.

 

 

7. கொடி :

"நாம பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க, அவன் பொறந்ததே அரசியலுக்காக தான்" எனும் ஓப்பனிங் டையலாக்கோடு தனுஷ் என்ட்ரி கொடுக்கும் 'கொடி' டீசரை இதுவரையில் 58,76,415 பேர் பார்த்து இருக்கிறார்கள். அக்டோபர் 5 வெளியானது 'கொடி' டீசர்.

 

 

8. 24 :

டோலிவுட்டின் பிரபல இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவான படம் '24'. டைம் மெஷினை மையமாக கொண்ட சயின்ஸ் ஃபிக்ஷன் படம். ஆத்ரேயா குரலில் "ஹாப்பி பர்த் டே டூ மீ.." என வரும் அந்த ஓப்பனிங் வாய்ஸ் டிரைலருக்கு இன்னும் சுவாரஸ்யம் கூட்டும்.

 

 

9. தொடரி :

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படம் தொடரி. ரயிலிலேயே கதை பயணிக்க போகிறது என்பதை உணர்த்தியது டிரைலர். படத்தின் கதையை சுருக்கமாக சொல்லிய டிரைலரை இதுவரை 36,58,123 பேர் பார்த்திருக்கிறார்கள்.  

 

 

10. இது நம்ம ஆளு :

படம் முழுக்க ரெண்டு காதலர்களோட சேட்டிங்கை தான் பார்க்க போறீங்கன்னு சிம்பிளா சொல்லிருப்பாங்க. நயன்தாரா, சிம்பு, ஆண்ட்ரியா, பரோட்டா சூரி என ஒவ்வொருத்தரின் டையலாக்கும் அவ்வளவு இன்டெரெஸ்டிங். பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியான டிரைலர் 26,06,128 பேரால் பார்க்கப்பட்டு இருக்கிறது. அச்சம் என்பது மடமையடாவை விட இதை பார்த்தவர்கள் தான் அதிகம் பாஸ்.

 

 

vikatan

  • தொடங்கியவர்

இந்திய கால்பந்துக்கு கடவுள் கொடுத்த பரிசு  #HBDBaichungBhutia 

 

கால்பந்து

பத்ம ஸ்ரீ விருது பெற்ற , இந்தியாவின் புகழ்வாய்ந்த கால்பந்து வீரரான பைசூங் பூட்டியாவுக்கு இன்று நாற்பதாவது பிறந்தநாள். 1976ல் சிக்கிம் மாநிலத்தில் பிறந்தவர்  பூட்டியா.  சிக்கிம் ஸ்னைப்பர்  என்று தான் கால்பந்து ரசிகர்கள் இவரை அன்போடு அழைக்கிறார்கள்.  இந்தியாவுக்காக வெவ்வேறு காலகட்டங்களில் மிகச்சிறப்பாக  விளையாடி தேசத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் என பட்டியலிட்டால்,  அதில் விஜயன், பைசூங் பூட்டியா, சுனில் சேத்ரி ஆகியோர் பெயர்களை தவிர்க்கவே முடியாது. 

ஐந்தடி எட்டு அங்குல உயரம் கொண்டிருக்கும் பைசுங் பூட்டியா கால்பந்து மட்டுமின்றி பேட்மிண்டன், கூடைப்பந்து, தடகளம் போன்றவற்றிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். பூட்டியாவின் தந்தை ஒரு விவசாயி, பூட்டியாவுக்கு இரண்டு அண்ணன்களும், ஒரு தங்கையும் உண்டு, பள்ளியில் படிப்பதற்கு பெரிய வசதி இல்லை என்ற சூழ்நிலையில், கால்பந்தை தனது கேரியராக தேர்ந்தெடுத்தார்  பூட்டியா. அப்போது அவருக்கு வயது வெறும் எட்டு. சிறப்பாக கால்பந்து விளையாடுகிறார் என்பதால் ஸ்காலர்ஷிப் கிடைக்க, கொஞ்சம் தரமான ஆடுகளங்கள், நல்ல ஷூக்கள் போன்றவை வரிசையாக கிடைக்க ஆரம்பித்தன.

bhutia

தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிஸ் செய்துவிடவே கூடாது என்பதில் மிகுந்த கவனமாக  இருந்தார்  பூட்டியா. பதினாறு வயதில் சப்ரடோ கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரர் விருது வென்றார், பூட்டியாவின் ஆட்டத்தை கவனித்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட கோல்கீப்பர் பாஸ்கர் கங்குலி அவரை தனியாக அழைத்து பேசினார், "சிக்கிமில் பெரிய வசதிகள் கிடையாது, தவிர  தேசிய அணிக்குள் நுழைய வேண்டுமெனில் கால்பந்துக்கு ரசிகர்கள் அதிகமிருக்கும் இடங்களில் விளையாடி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அங்கே போ" என அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து கொல்கத்தாவுக்கு சென்றார் பூட்டியா.  பள்ளிப்படிப்பை உதறிவிட்டு ஈஸ்ட் பெங்கால் எப்.சி கிளப் அணிக்கு விளையாடச் சென்றார். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய அணியில் இடம் கிடைத்தது. 

1995 ஆம் ஆண்டு தாய்லாந்து அணிக்கு எதிரான நேரு கோப்பை போட்டியில் அறிமுகமானார் பூட்டியா, அவரின் ஆட்டத்தை பார்த்து சக இந்திய வீரர்களே மிரண்டனர். அதன் பின்னர் பூட்டியாவுக்கு எப்போதும் ஏறுமுகம் தான். 2009 ஆம் ஆண்டு நேரு கோப்பை போட்டியில் விளையாடிய போது, சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக நூறு போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 2011 ஆம் ஆண்டு காயம் காரணமாக கால்பந்து போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை, தனக்கு வயதாகிக்கொண்டே செல்வதை உணர்ந்த  பூட்டியா திடீரென ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக 104 போட்டிகளில் ஆடி 40 கோல்களை அடித்துச் சாதனை புரிந்தார் பூட்டியா.

கால்பந்து

கால்பந்தை பொறுத்தவரையில்  பூட்டியா மூன்று விஷயங்களை முக்கியமாகச் சொல்கிறார், "ஒவ்வொரு வீரருக்கும் தனி ஸ்டைல் இருக்க வேண்டும், சரியான வேகத்தில் ஓடுவதும், சரியான வேகத்தில் பந்தை உதைப்பதும், மிக நேர்த்தியான விளையாடுவதும் முக்கியம் "  என  அறிவுறுத்துவார், அதை அவரும் எப்போதும் பின்பற்றியே வந்திருக்கிறார்.  கால்பந்து அரங்கில் இந்தியாவை யாருமே மதிக்காத சூழ்நிலையில், பூட்டியாவின் ஆட்டம் பல சர்வதேச அணிகளை கவனிக்க வைத்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த கிளப் அணியான பர்ரி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட  போது, ஐரோப்பிய கால்பந்து கிளப் ஒன்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற பெருமைக்குச்  சொந்தக்காரராக மாறினார். அதன் பின்னர் பல ஐரோப்பிய கிளப் அணிகள் பூட்டியாவை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்த சமயத்தில், "இந்தியாவில் இப்போது கால்பந்து வேகமாக வளர்ந்து வருகிறது, இந்த நேரத்தில் தேசம் தான் முக்கியம்" எனச் சொல்லி இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமின்றி, இந்திய அணியில் இளம் ரத்தங்ளை தொடர்ச்சியாக அடையாளம் கண்டு அணியில் சேர்த்தார். 

bhutia

பூட்டியா புத்த மதத்தை பின்பற்றக்கூடியவர். திபெத் சுதந்திர இயக்கத்தை ஆதரித்து, ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் அருமையான வாய்ப்பை மறுத்தபோது சிறந்த மனிதனாக மக்கள் மனதில் நின்றார். மண்ணையும், மக்களையும் தொடர்ந்து பூட்டியா நேசித்தே வந்தார், அதற்கு அவர் எடுத்த சில முடிவுகள் அவ்வப்போது சர்ச்சையாகவும் மாறின. இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் பூட்டியாவை பற்றி பேசும்போதெல்லாம் இப்படிச் சொல்வார் "இந்திய கால்பந்துக்கு கடவுள் கொடுத்த பரிசு பைசூங் பூட்டியா". 

உண்மைதானே...!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பூட்டியா.

vikatan

  • தொடங்கியவர்

பேசும் படம்: நெஞ்சம் நெகிழவைத்த பிஞ்சு விரல்கள்!

 
படம்: ஜி.என்.ராவ்
படம்: ஜி.என்.ராவ்
 
 

தெலங்கானா மாநிலம் கம்மம் - தேலடாருப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிவராத்திரி ராமய்யா. தனக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, அதிகாரிகளை அணுகுவதற்காக புதன்கிழமை கம்மம் - ஜலகம் நகர் வந்தார். அவர் தனது மூன்று சக்கர வாகனத்தை ஒட்டுவதற்கு சிரமப்பட்டதைக் கண்ட அப்பகுதி பள்ளிச் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து, அவரது சைக்கிளைப் பின்னால் இருந்து தள்ளி உதவினர். அப்பகுதி மக்களை இது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

school2_3103789a.jpg

 
 

tamil.thehindu

  • தொடங்கியவர்

சூப்பர் ஸ்டார் பன்ச் தெரியும்... சூப்பர் ஸ்டார் பீட்ஸா தெரியுமா?

196_10146.jpg

இது தலைவர் சரவெடி... பீட்ஸா ஒரு கடி... தலைவர் வசனம் படி...மறக்காம ஒரு செல்ஃபி புடி... இது என்ன ஓவர் பில்டப்புன்னு நினைச்சா... அப்படித் தான். ஏன்னா, பேசறது சூப்பர் ஸ்டாரப் பத்தி. தலைவர் ரசிகர்களையும், பெசன்ட் நகர் ஏரியாவையும் க.மு, க.பின்னு ( கபாலிக்கு முன், கபாலிக்குப் பின்)  பிரிச்சுட முடியும். காரணம், இந்த சூப்பர் ஸ்டார் பீட்ஸா கடை தான். கபாலிக்குப் படத்தோட முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காத ஒரு ரசிகர் கூட்டம், தலைவர் பட ரிலீஸ் அன்னிக்கே, அவர் பேர்ல திறக்கப்பட்ட இந்த பீட்ஸா கடைக்கு படையெடுத்துச்சு. கடைக்குள்ள அடியெடுத்து வச்சா எல்லாமே சூப்பர் ஸ்டார் மயம் தான்...

படிச்ச உடனே, டப்புன்னு கூகுள் எடுத்து சூப்பர் ஸ்டார் பீட்ஸான்னு தட்னீங்கன்னா பிலடெல்பியாவுல இருக்க சூப்பர் ஸ்டார்ஸ் பீட்ஸா கடை தான் முதல்ல வரும். இந்தக் கடைக்கு வரணும்னா சென்னைல பெசன்ட் நகர் தான் நீங்க வரணும். அதுமட்டுமில்லாம திருச்சியிலயும் ரெண்டு கிளைகள் இருக்கு. ஐடி வேலையில இருந்த ராமநாதனுக்கு உணவு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு தொழில் பண்ண ஆசை. அதுலயும் வெரைட்டியா, வித்தியாசமா பண்ணனும்ங்குற வெறி. கூடவே சூப்பர் ஸ்டாரோட வெறித்தனமான ரசிகர் இவர். எல்லாம் ஒரு புள்ளியில ஒன்றினைஞ்சு உருவானது தான் இந்த தீம் பேஸ்டு (Theme Based) பீட்ஸா கடை.

இதனோட மெனு கார்டு, சூப்பர் ஸ்டார் படத்தோட ஒரு ஸ்கிரிப்ட் போர்டு (Script Board) மாடல்ல தான் இருக்கும். ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8 மணிக்கு, தங்கிலீஷ்ல ஸ்டாண்ட் அப் காமெடிகள் இங்க நடத்தப்படுது. சூப்பர் ஸ்டார் படத்துக்கு எப்பவுமே ரிப்பீட் ஆடியன்ஸ் அதிகம். அது மாதிரி தான் தன்னுடைய கடைக்கும், ரிப்பீட் கஸ்டமர்ஸ் அதிகம்ன்னு சொல்றாரு ராமநாதன். அதுக்காக... ஒரு முறை போயிட்டு... " நான் ஒரு தடவ வந்தா, நூறு தடவ வந்தா மாதிரி"ன்னு வசனமெல்லாம் பேசக் கூடாது. இதையெல்லாம் படிக்க படிக்கவே, அங்க போகணும் ஒரு பீட்ஸாவ பார்க்கணும்னு உங்களுக்கு தோணலாம். ஆனா, அதுக்கு முன்னாடி நீங்க உட்கார்ந்த இடத்தில இருந்தே, கடைய சுத்திப் பார்க்க கீழ இருக்க இந்த வீடியோவ ஒரேயொரு க்ளிக் செய்யுங்க...

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

15578785_1133906236708684_77376998803421

இது எப்படியிருக்கு......!

  • தொடங்கியவர்

2016-ல் சொதப்பிய 5 டெக் நிகழ்வுகள்! #2016Rewind

 

2016 எந்த அளவுக்கு டெக் புரட்சிகள் நடைபெற்றதோ அதே அளவுக்கு சொதப்பல்களுக்கும் நடந்திருக்கு. முன்னாடியெல்லாம் வெடிகுண்டு இருக்கானு செக் பண்ணது மாறி இப்போ இந்த கேட்ஜெட் இருக்கா உள்ள வராதீங்கனு தடைனு சொல்லுற அளவுக்கு டெக் உலகத்துல சோக நிகழ்வுகள் இருக்கு. இந்த வருடம் சொல்லி அடிப்போம்னு சொல்லி சொதப்பிய ஐந்து டெக் நிகழ்வுகள் இதோ....

1. நெருப்புடா கேலக்ஸி 7:

டெக்

சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்.  சுமார் 2.5 மில்லியன் எஸ் 7 போன்களைத் தயாரித்த சாம்சங் நிறுவனம் அதில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மொபைல்போன்களை விற்பனை செய்தது. ஆனால் இந்த சாம்சங் நோட் 7 மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள்.

சாம்சங் கேலக்ஸி நோட் 7  சார்ஜில் இருக்கும் வேளையில் தீடீரென தீப்பற்றி எரிகிறது என்பது தான் பிரதான குற்றச்சாட்டு.. பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் லித்தியத்தால் ஆனவை. அவற்றுள் இரண்டு எலக்ட்ரோடுகள் எதிரெதிர் திசையில் வைக்கப்பட்டிருக்கும். சார்ஜ் செய்யும்போது லித்தியம் அணுக்கள்  நகரும். ஆனால் ஒருபோதும் இந்த இரண்டு எலக்ட்ரோடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுவிடக்கூடாது. அப்படி நடந்துவிடாமல் தடுக்க அதில் செப்பரேட்டர் வைக்கப்படும். நோட் 7-ல் இந்த செப்பரேட்டருக்கான இடைவெளி  மிகவும் சிறியதாக அமைந்ததே அது வெடிப்பதற்கான காரணம். என கூறப்பட்டது. வாடிக்கையாளர்கள் மொபைலை நீண்ட நேரம் சார்ஜ் செய்வதும், பரிந்துரைக்கப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தாததுமே நோட் 7 வெடித்துச் சிதறக் காரணம் என சாம்சங் சமாளித்தாலும் இந்த வருடத்தில் மிக மோசமான டெக் சொதப்பல் இது தான்.  பின்னர் இந்த ஸ்மார்ட்போன்களை திரும்ப வாங்கி கொண்டது சாம்சங்.

2.  வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

 

sriramsathiyamoorthy

 

 

பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது. அந்த செயற்கைகோளின் பெயர் ஆமோஸ்-6. இதனை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக, எரிபொருள் சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில், அது திடீரென வெடித்துச் சிதறியதால், அதிர்ச்சியில் இருக்கிறது பேஸ்புக்.

அதன்படி, ஆமோஸ்-6 செயற்கைகோள் தயாரிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன்னரே துவங்கியது. அதை விண்ணில் செலுத்துவதற்காக உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள 'கேப்கனவெரல்' மையத்தில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ்ஸின் பால்கான்-9 என்னும் ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான பரிசோதனைகள்  நடந்து கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது. அந்த விபத்தில் அந்த ராக்கெட்டுடன் பேஸ்புக்கில் இருந்த 6 செயற்கைக்கோள்களும் முற்றிலுமாக அழிந்தது.  மிகப்பெரிய பொருட் சேதம், புதிய முயற்சியில் தோல்வி என கொஞ்சம் லைட்டாக ஃபீல் ஆன ஸ்பெஸ் எக்ஸ் தனது மார்ஸ் மிஷன் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறது. 

3. மார்க் சக்கர்பெர்க் செத்துட்டாரா?

FB_2_12549_13368.jpg

ஃபேஸ்புக் நவம்பர் மாதம் 20 லட்சம் பேருக்கு, அவர்கள் 'இறந்துவிட்டதாக' தவறான தகவலை, சம்பந்தப்பட்டவர்களின் முகப்பு பக்கத்தில் போஸ்ட் செய்தது.  இது பற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'இறந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்ற வேண்டிய தகவலை, தவறுதலாக உயிரோடு இருக்கும் பலரது பக்கத்தில் பதிவேற்றிவிட்டோம். ஆனால், சிறிது நேரத்துக்குப் பின்பு இந்த பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது' என்று கூறினார். இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இறந்துவிட்டார் என்று அவர் பக்கத்தில் வந்த நோட்டிஃபிகேஷன் தான்...என்ன கொடுமை மார்க் இது...

4. பறக்காத  ராசாளி - கோ ப்ரோ கர்மா ட்ரோன்

Master_%281%29_13561.jpg

கோப்ரோ கர்மா ட்ரோன் மணிக்கு 35 மைல் பறக்ககூடிய வகையில் தரையிலிருந்து 1000 மீ உயரத்தில் பறக்கும் என்று கூறப்பட்டு வெளியிடப்பட்டது . தெளிவான கேமரா வசதி, துல்லியமான அமைப்பு என மாஸ் என்ட்ரி கொடுத்த கோப்ரோ சொதப்பியது பவர் அமைப்பில்...பாதியில் பறக்கும் போதே சார்ஜ் இல்லாமல் செயலிழந்து விடுகிறது என்ற குற்றச்சாட்டில் அடிவாங்கியது. பாதி வழியில் நிற்பது பிரச்னை என்பதால் தயாரிப்பை திரும்ப பெற்றது க்ப்ரோ...

5. மைக்ரோசாஃப்ட் சாட் பாட் 

Master_13121.jpg

டாய் (Tay) எனும் மைக்ரோசாஃப்டின் சாட் பாட் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டது. ஆப்பிள் சிரிக்கு போட்டியாக கருதப்பட்ட இந்த பாட் தனது பதில்களில் துல்லியத்தன்மை இல்லாததாலும், சம்பந்தமில்லாமல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவறான பதில்கள் கூறியது. இதனால் இந்த சாட்பாட்டை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது மைக்ரோசாஃப்ட். மீண்டும் இதில் வேலை செய்து வரும் மைக்ரோசாஃப்ட் அடுத்த ஆண்டு வெற்றி பெறும் என அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஆப்பிள் போனில் ஆடியோ ஜாக் இல்லை, போக்கிமான் கோ உயிரை கொல்லும் என பல சர்ச்சைகள் நிறைந்த ஆண்டின் மோசமான பதிவுகள் இவை.
 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லா ஊபர் கார்கள் - காணொளி

  • தொடங்கியவர்
விட்டுக்கொடுக்கும் இல்வாழ்வில் பிரச்சினைகள் எழவே எழாது
 
 

article_1481813000-759-n-ew.jpgபொறுமையில்லாத காதலர்கள் வாய்த்தர்க்கத்தினால் வீம்புகொண்டு, பிரிந்து கொள்வதுண்டு. காதல் அரும்பும் நிலையிலேயே, ஒருவரை ஒருவர் புரியாமல் நடந்து கொண்டு, நல்ல பண்புள்ள ஆண் மகனும் நற்குணமுடைய மங்கையும் சச்சரவுக்குள்ளானால் பாதிப்படைவது யார்?  

திருமண வாழ்க்கையில் காலஓட்டங்களே காதலை ஸ்திரப்படுத்துகின்றன. ஓரிரு நாட்கள், மாதங்களுக்குள் நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுவிட்டோம் எனச் சொல்லுவது சரியானதாக ஏற்றுக் கொள்ள முடியுமா?  
ஆனால், விட்டுக்கொடுக்கும் இல்வாழ்வில் இந்தப் பிரச்சினைகள் எழவே எழாது. ஒருவர் தியாகத்தை ஒருவர் உணர, முதிர்ச்சியடைய காலநேரமும் அனுபவங்களும் தேவை.   

எந்தப் பொல்லாத தம்பதியினரும் பொறுமை, நிதானம், மாறாஅன்பு கொண்டால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழும் குணமிருந்தால் மென்மையான பூக்களாகி விடுவர். காதலே கனிவு; என்றும் நீடிக்கும் இனிது.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘பணக்காரர்கள் மட்டும்தான் அழுவார்கள்!’ என அவர்கள் சொன்னார்கள் #Demonetization

அழுவார்கள்

பிரபல ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கிலப் பத்திரிகையில் கடந்த புதன்கிழமை புகைப்படம் ஒன்று வெளியானது. டெல்லி அருகே குர்கானில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் வரிசையில் நின்ற பெரியவர் ஒருவர் தனது வரிசையை தவறவிட, வாய் விட்டு கதறி அழுவது போன்ற புகைப்படம் அது. அந்த முதியவர் முன்னாள் ராணுவ வீரரும் கூட. வயோதிகம் அவரை அழ வைத்து விட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் புகைப்பட கலைஞர் பிரவீன் குமாரால் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. 'பணமதிப்பு நீக்கத்தால், பணக்காரர்கள் மட்டும்தான் அழுவார்கள் என அவர்கள் சொன்னார்கள் ' என தலைப்பிட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பிரவீன் குமாரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. மனதை கரைய வைப்பது போன்ற அந்த புகைப்படம்  ஆயிரக்கணக்கானோரால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு அதிர்விலையை ஏற்படுத்தியது.  

வரிசையை தவற விட்டு அழுத்த அந்த முதியவரின் பெயர் நந்தா லால். குர்கானில் பத்துக்கு பத்து வீட்டில் வசிக்கிறார். ஒரு சிறிய படுக்கை, ஒரு டிரங்கு பெட்டி, பிளாஸ்டிக் சேர், ஆஸ்ட்ரே டப்பா, சிவன், விநாயகர்  புகைப்படங்கள்தான் இந்த முதியவரின் சொத்து. ராணுவ வாழ்க்கையில் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் படைகளுடன் தீரப் போரிட்டவர்தான் நந்தா லால், மனைவியை  30 ஆண்டுகளுக்கு முன்பே இழந்து விட்டார். 

தம்பதியருக்கு குழந்தை இல்லாததால், பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து, வளர்த்தனர்.  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்  மகளை ஃபரிதாபாத்தில் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் நந்தாலால். அதற்கு பிறகு பெரும்பாலும் தனிமைதான்.

அன்றைய தினத்தில் நடந்த சம்பவம் குறித்து நந்தாலால் கூறுகையில்,  'டிசம்பர் மாத பென்சன் தொகை 8 ஆயிரத்தில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாய் எடுக்க வேண்டியது இருந்தது. பால்காரர், வீட்டுக்கு வேலைக்கு வருபவர்களுக்கு கொடுக்க வேண்டியது இருந்தது. அதற்ககாகத்தான் ஏடிஎம்க்கு 3 நாட்களாக அலைந்து கொண்டிருந்தேன். இருந்தும் என்னால் பணம் எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஏராளமான கூட்டம் ஏடிஎம்மில் இருந்தது. வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. மூன்றாவது நாளில் என்னை கியூவில் இருந்து தள்ளி விட்டதால் அழுது விட்டேன். நாட்டில் இவ்வளவு பெரிய மாற்றத்தை செய்யும் அரசு அதற்கு தயாராக இருக்க வேண்டுமல்லவா?' என கேள்வி எழுப்புகிறார். 

நந்தாலாலின் வளர்ப்பு மகள், நந்தாலாலின் சொந்த வீட்டையும் விற்று விட்டார். அதனால் பத்துக்கு பத்து அறையில் வாடகை வீட்டில் வசிக்கும் நிலைக்கு நந்தாலால் தள்ளப்பட்டார். எப்போதாவது மகளும் நந்தாலாலுக்கு பணம் அனுப்புவது உண்டாம். அவ்வபோது மகள் தன்னை  வந்து பார்த்து விட்டும் போவதாக நந்தாலால் கூறுகிறார்.  

ஆனால், நந்தாலால் வீட்டருகே வசிக்கும் தீனானந் அகுஜா அதனை மறுக்கிறார்.' நந்தாலால் வளப்பு மகள் அவரை பார்க்க வந்து நான் பார்த்தே இல்லை. மகளை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் நந்தாலால் இப்படி கூறக் கூடும் 'என்கிறார். 

மேலும் ' நந்தாலால் வங்கிக்கு கடந்த 3 நாட்களாகவே அலைந்து கொண்டிருந்தார். நான்தான் 100 ரூபாய் கொடுத்தேன். அதனை வைத்துக் கொண்டு  சைக்கிள் ரிக்ஷாவில்தான் வங்கிக்கு பணம் எடுக்கப் போவதாக கூறி சென்றார்.' என அகுஜா தெரிவிக்கிறார். 

vikatan

  • தொடங்கியவர்

கொலவெறி கண்டுபிடிப்புகள்!

 

`செல்ஃபி'னு ஒரு விஷயம் பிரபலமானதும் `நவீன மூட்டைப்பூச்சிக் கொல்லி இயந்திரம்' மாதிரி ஊருக்குள் பல விஷயங்கள் உதயமாச்சு. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம், அறிவைக் கண்டு வியப்போம்...

10p1.jpg

செல்ஃபி பிரஷ் : செல்ஃபி பிரஷ் என்பது யாதெனில், இந்தத் தலைமுடி வாரும் சீப்பின் பின்புறம் உங்கள் மொபைல் போனை ஃபிக்ஸ் செய்து கொள்வதற்கான இடம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும். அம்புட்டுதேன். அப்புறம் என்ன, சமத்தா சைடு வகிடு எடுத்துத் தலைவாரிவிட்டு, சீப்பை பின்பக்கம் திருப்பி செல்ஃபி தட்ட வேண்டியதுதான்.

10p2.jpg

பெல்ஃபி ஸ்டிக் : நம் பின்னழகை நாமே செல்ஃபி எடுத்துக்கொண்டால் அதன் பெயர் `பெல்ஃபி' எனப்படும். எல்லாம் பெல்ஃபியும் செல்ஃபிதான். ஆனால், எல்லா செல்ஃபியும் பெல்ஃபி ஆக முடியாது என்பது கூடுதல் தகவல். இந்த பெல்ஃபி ஸ்டிக்கானது, நாம ரொம்ப சௌகர்யமா பெல்ஃபி எடுத்துக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான கருவி. 

10p3.jpg

செல்ஃபி ஹேட் : `அட போப்பா... செல்போனை கையில் தூக்கிட்டு, பட்டனைத் தட்டிகிட்டு...'னு செல்ஃபி எடுக்குறதுக்கே சோம்பேறித்தனம் படுறவங்களை மனதில் வைத்துதான் இதை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், அதற்காக இப்படி ஒரு ஐடியாவை எப்படி யோசித்தார்கள் என்பது தெரியவில்லை. அதாவது மக்களே, தொப்பியில் ஒரு டேபிளட்டை மாட்டி வெச்சுடுவாங்க, நாம அந்த தொப்பியை தலையில் மாட்டிக்கிட்டு இஷ்டத்துக்கு செல்ஃபி எடுத்துக்கலாம். எங்கிருந்துடா வர்றீங்க நீங்கள்லாம்?

10p5.jpg

செல்ஃபி டி- ஷர்ட் : செல்ஃபி டி-ஷர்ட்னு பெயரைக் கேட்டதும், `டி-ஷர்ட்டில் கேமராவை மாட்டி வெச்சுருப்பாங்களோ’னு உங்களை மாதிரிதான் நானும் யோசிச்சேன். ஆனால், இது அதுக்கும் மேல... இந்த டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டால் எக்ஸ்ட்ரா அழகா தெரிவோமாம். இது என்னடா புதுப் புரளியா இருக்குனு நீங்க கேட்கணும்னு நினைத்தால், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் தைமுர் கிம் என்பவரைக் கேளுங்க. ஏன்னா, அவர்தான் இதை டிசைன் பண்ணது.

10p4.jpg

பூ செல்ஃபி : நீங்கள் உங்கள் வீட்டு நாயோடு செல்ஃபி எடுக்க நினைத்து செல்போனை நீட்டினால், நாயோ கேமராவைத் தவிர வேறு எல்லா இடங்களையும் பார்க்கும். அதை நினைக்கையில் உங்க மனசு கிடந்து தவிக்கும். இனி நீங்க அப்படி தவிக்கக் கூடாதுனுதான் இந்த பூ செல்ஃபி கருவியைக் கண்டுபிடிச்சுருக்காங்க. உங்க மொபைல் மேல  அவங்க கொடுக்கிற டென்னிஸ் பந்தை செருகி வெச்சால் போதும், நாய் டென்னிஸ் பந்தை வெறித்துப் பார்க்கும்போது கேமராவுக்கு போஸ் கொடுத்த மாதிரி ஆகிவிடும், நீங்களும் ஜாலியா செல்ஃபி தட்டலாம்.

vikatan

  • தொடங்கியவர்
மிஸ் சைனீஸ் வன்கூவர் 2016
 

மிஸ் சைனீஸ் வன்கூவர் 2016 அழகுராணி போட்டி, கனடாவின் வன்கூவர் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது.

 

21247_135894940_14813299043561n.jpg

 

21247_135894940_14813299042321n.jpg

 

21247_2.jpg

 

21247_004.jpg

 

கனடாவில் வசிக்கும் சீன வம்சாவளி யுவதிகள் இப் போட்டியில் பங்குபற்றினர்.

 

21247_9.jpg

 

21247_14915266_1215347205188701_83802742

 

22 வயதனா மரியா ரின்கொன் இப் போட்டியில் முதலிடம் பெற்று மிஸ் சைனீஸ் வன்கூவர் 2016 அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.

 

21247_135894940_14813299041221n.jpg

 

21247_135894940_14813299043251n.jpg

 

21247_135894940_14813299044031n.jpg

 

21247_n12.jpg

 

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்- 13: சகதியில் டிராக்டர் ஓடுவது எப்படி?

 

 
direc_3103633f.jpg
 
 
 

சகதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்ட முடியுமா? ஓர் அடி சகதியில்கூட ஓட்ட முடியாது. சகதியில் மாட்டிக் கொள்ளும் இல்லையா? ஆனால், வயல்களில் இரண்டு அடிக்கும் அதிகமான ஆழமுள்ள சகதியில் அவ்வளவு பெரிய டிராக்டர் சர்வ சாதாரணமாகச் சுற்றிச்சுற்றி வருவது எப்படி? டிராக்டர் ஏன் சகதியில் சிக்கிக் கொள்வதில்லை?

பத்துக் காகிதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொண்டு கை விரல்களால் துளையைப் போடுங்கள். துளையைப் போட முடிகிறதா? இல்லை அல்லவா? ஆனால், அதே பத்துக் காகிதங்களை, ஏன் இன்னும் பத்துக் காகிதங்களைக்கூடச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். சிறு ஊசியால் துளையைப் போடுங்கள். துளையைப் போட முடிகிறது அல்லவா? எப்படி?!

ஊசியின் முனை கூர்மையாக இருப்பதால் அதைக் கொண்டு எளிமையாக ஓட்டை போட முடிகிறது. ஊசி மாதிரி நம் கை விரல்கள் கூர்மையாக இல்லை என்றுதானே நினைக்கிறீர்கள்? சரிதான், கூர்மையாக இருப்பதால்தான் துளையிட முடிகிறது. கூர்மையாக இருப்பதால் எப்படி துளையிட முடிகிறது?

இதற்குக் காரணம் அழுத்தமும், பரப்பளவும்தான். இதற்கு மட்டுமல்ல, ஊசியால் துணிகளைத் தைப்பது, ஊசியால் தைப்பது, டிராக்டர் சகதியில் உழவு செய்வது போன்றவற்றுக்கும் இதுதான் காரணம்.

முதலில் ஊசி எப்படி, கடினமான துணிகளையும், தாள்களையும் தைக்கிறது என்று பார்ப்போம். ஊசியைக் கொண்டு தாள்களைத் தைக்கும்போது நாம் ஊசி மீது கொடுக்கும் முழு அழுத்தமும், அந்த ஊசியின் கூர் முனை வழியே இறங்குகிறது. நாம் செலுத்தும் முழு விசையும் பரப்பளவும் மிகவும் குறைந்த பகுதி வழியே செல்கிறது. அதிக அழுத்தம் குறைந்த பரப்பின் வழியே செலுத்தப்படுவதால் அது தாக்கும் பொருளைத் துளையிட்டுச் செல்கிறது.

சாகுபடி வயல்களில் உழவு செய்யும் டிராக்டர்களின் அழுத்தம், அதன் பெரிய சக்கரங்களின் வழியே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மிக அதிகமான அழுத்தமாக இருந்தாலும்கூட அது செலுத்தப்படும் பரப்பு அதிகம். அதனால், தரையின் மீது குறைந்த அழுத்தத்தையே அது தருகிறது. செயல், ஆற்றல், அழுத்தம், விசை ஒரு பொருளின் மீது செலுத்தப்படும்போது அது அமிழ்வதோ அல்லது மிதப்பதோ, அது செலுத்தப்படும் பரப்பளவைப் பொறுத்தே அமைகிறது.

மூன்று டன் எடையுள்ள டிராக்டர், ஒரு சதுர சென்டி மீட்டர் மீது சுமாராக 250 கிராம் அழுத்தத்தையே தருகிறது. இதன் காரணமாகத்தான் டிராக்டர் மணற்பாங்கான இடங்களில் எளிதாகப் பயணம் செய்கிறது.

இதேபோல பனிச்சறுக்கு விளையாட்டுகளின்போது ‘சறுக்கு மட்டைகள்’பயன்படுத்துவதைப் பார்த்திருப்பிர்கள். இதிலும்கூட இந்தத் தத்துவமே பயன்படுகிறது. பனி(ச்சறுக்கு) மலைகளில் நாம் தனியாக வெறும் கால்களில் நடந்தால் சதுப்பு நிலங்களில் கால்கள் உள்வாங்குவது போல அமிழ்ந்து மாட்டிக்கொள்வோம்.

ஆனால், பனிச்சறுக்கு மட்டைகளில் நாம் செலுத்தும் அழுத்தம், மட்டை முழுவதும் பரவலாகப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே நாம் எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது.

குறைவான பரப்பின் மீது அதிக அழுத்தம் பயன்படுத்துகிற தத்துவத்தின் அடிப்படையில் ஊசிகள், கத்திகள் மரம் அறுக்கப் பயன்படும் அரம், கோடரிகள், அரிவாள் போன்ற கருவிகள் செய்யப்படுகின்றன.

அதிகப் பரப்பின் மீது, அதிக அழுத்தத்தைப் பரவலாக்கி மிதக்கச் செய்கிற தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு வாகனங்களும் ( ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட) தயார் செய்யப்படுகின்றன. நாம் அன்றாடம் பார்க்கிற லாரிகள், பேருந்துகள், ரயில்கள் போன்றவைகூட இந்தத் தத்துவத்திலேயே இயங்குகின்றன.

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

குப்பைகளை இறக்குமதி செய்கிறது ஸ்வீடன்... ஏன்?

 

ஸ்வீடன் குப்பை

பெரும்பாலான நாடுகளில் சுகாதார சீர்கேடுகளுக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கும் காரணமாக இருப்பவை அந்நாட்டில் சேகரமாகும் குப்பைகள்தான். பல நாடுகள் தங்கள் நாட்டின் குப்பைகளை என்ன செய்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஸ்வீடன் அரசாங்கமோ வெளிநாடுகளில் இருந்து குப்பைகளை அதிகளவில் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டிவருகிறது. தங்கள் நாட்டில் இருக்கும் குப்பைகளின் அளவு போதவில்லை என்கிறது. அப்படி குப்பைகளை வைத்து ஸ்வீடன் என்ன செய்கிறது தெரியுமா?

மறுசுழற்சியில் அசத்தும் ஸ்வீடன்:

குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘waste to energy’ விஷயத்தில் முன்னோடியாக விளங்குகிறது ஸ்வீடன். தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் 99% குப்பைகளை ஸ்வீடன் ஆனது மறுசுழற்சி மற்றும் ஆற்றல் உற்பத்திக்காக பயன்படுத்திவருகிறது. மீதம் 1% மட்டுமே குப்பைகளாக அழிக்கப்படுகின்றன. இப்படி மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகள் அனைத்தும் வேறு பொருட்களாகவோ அல்லது மின்சாரமாகவோ மாற்றப்படுகிறது. அத்துடன் ஸ்வீடனில் இருக்கும் வீடுகளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கவும் இந்த குப்பைகள் பயன்படுகின்றன. தற்போது 32 மறுசுழற்சி நிலையங்கள் ஸ்வீடனில் செயல்பட்டு வருகின்றன. இவை மொத்தம் 810,000 வீடுகளுக்கு வெப்பத்தையும், 2,50,000 வீடுகளுக்கு மின்சாரத்தையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகள் பெறப்பட்டு அவை இந்த நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் மொத்தம் 2,270,000 டன் எடை கொண்ட குப்பைகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்பட்டுள்ளது. ஒருபொருளை புதிதாக உருவாக்குவதற்கு தேவைப்படும் ஆற்றலை விடவும், மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகளைக் கொண்டு புதிய பொருளை உருவாக்கவும் குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.

Sweden-Recycling-Flag_13474.jpg

மக்களின் ஒத்துழைப்பும், வெற்றி கண்ட மறுசுழற்சியும்:

குப்பைகளை மறுசுழற்சி செய்வது என்பது எளிதான காரியம் கிடையாது. எனவே இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஸ்வீடன் அரசுக்கு முக்கியமானது. எனவே வீடுகளில் இருந்து குப்பைகளை பெறும் போதே, மட்கும் குப்பைகள், பிளாஸ்டிக் குப்பைகள், உயிரிக் கழிவுகள், கண்ணாடிகள், மின்னணு கழிவுகள் என தரம்பிரித்து சேகரிக்கப்படுகின்றன. இப்படி பெறப்படும் குப்பைகள் அனைத்தும், மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதற்கு ஸ்வீடன் நாட்டின் குப்பைகள் மட்டுமே போதாது என்பதால் வெளிநாடுகளில் இருந்தும் குப்பைகளை இறக்குமதி செய்கிறது. அத்துடன் மின்சார உற்பத்திக்கு இந்த குப்பைகள் பெருமளவில் பயன்படுகின்றன. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை விடவும் இந்த குப்பைகள் எளிதாக கிடைக்கின்றன. இவற்றின் விலையும் மிகவும் மலிவு என்பதால், இவை மின் உற்பத்திக்கு சிறந்த எரிபொருளாக விளங்குகிறது.

டிஸ்ட்ரிக்ட் ஹீட்டிங்:

ஸ்வீடன் போன்ற வெப்பநிலை குறைந்த நாடுகளில் இந்த டிஸ்ட்ரிக்ட் ஹீட்டிங் முறையானது பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு வீடுகளிலும் நீரை சூடாக்க அல்லது வெப்பத்தை உண்டாக்க எரிபொருள்கள், மின்சாரம் ஆகியவை வீணாக்குவதற்கு பதிலாக, குறிப்பிட்ட மறுசுழற்சி நிலையங்களில் இருந்து, கழிவுகள் எரிக்கப்பட்டு அதன் மூலம் உண்டாகும் வெப்ப ஆற்றல் வீடுகளுக்கு வெந்நீராக அல்லது வெப்ப ஆற்றலாக பகிர்ந்து அளிக்கப்படும். கழிவுகள் மட்டுமின்றி நிலக்கரி, உயிரி எரிவாயு போன்றவையும் எரிக்கப்பட்டு வெப்ப ஆற்றலானது வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் முறையே இந்த டிஸ்ட்ரிக்ட் ஹீட்டிங் ஆகும். பனி சூழ்ந்த ஒவ்வொரு வீட்டிலும் எரிபொருட்களை எரித்து வெப்பத்தை உருவாக்க அதிக செலவாகும். எரிபொருட்களின் தேவை அதிகமாகும். சுற்றுச்சூழல் அதிகம் மாசுபடும். இந்த சிக்கல்களை தவிர்க்க உதவும் தொழில்நுட்பம்தான் இந்த டிஸ்ட்ரிக்ட் ஹீட்டிங். 

5_mitentoimii_vari_13185.jpg

இதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேக நிலையங்களில் எரிபொருட்கள் ஆனது எரிக்கப்பட்டு, நீரானது சூடாக்கப்படும். இந்த சூடான நீரானது, குழாய்கள் மூலம் வீடுகளுக்கு அனுப்பப்படும். சரியாக வீடுகளுக்கு இந்த வெந்நீரை அனுப்புவதற்கு ஏற்ற குழாய்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும். இந்த தொழில்நுட்பம் பற்றி இங்கே கூறக் காரணம் என்னவெனில், இதிலும் எரிபொருளாக குப்பைகளையே பயன்படுத்துகிறது ஸ்வீடன். எனவே மின்ஆற்றல் மட்டுமின்றி, வீடுகளுக்கு வெப்பத்தை கடத்தவும் இந்த குப்பைகள் பயன்படுகின்றன. இவற்றில் மின்நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உருவாகும் வெப்ப ஆற்றலும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

Paper-recycling_13276.jpg

மரபுசார் எரிபொருட்கள் மீது ஸ்வீடன் அரசு 1991-ம் ஆண்டு முதல் கடுமையான வரியை விதித்துவருகிறது. எனவே அந்நாட்டின் பாதி மின் உற்பத்தி மரபுசாரா ஆற்றல்கள் மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் இந்த மறுசுழற்சி செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தனியார் நிறுவனங்களும் மறுசுழற்சி நிலையங்கள் அமைத்து, வீடுகளுக்கு வெப்பத்தை அழித்து வருகின்றனர். பல மறுசுழற்சி நிலையங்களில் இந்த கழிவுகள் எரிக்கப்பட்டாலும் கூட, இவை அனைத்தும் நாட்டின் ஹீட் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும். 

இதுபோன்ற வழிகளில் குப்பைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதால் அந்நாட்டில் குப்பைகளின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வருடமும் தேவைப்படும் குப்பைகளின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே சமயம் ஸ்வீடன் சொல்வது போல அந்நாடு 99% குப்பைகளை எல்லாம் மறுசுழற்சி செய்வது கிடையாது. பாதி கழிவுகளை மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் ஸ்வீடன், மீதி குப்பைகளை எரித்து சாம்பலாக்குகிறது. எனவே இது எல்லாம் மறுசுழற்சி கணக்கிலேயே வராது என்றும் வாதிடுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அதேசமயம் குப்பைகளை உபயோகமான வழிகளில் கையாள்வதில் ஸ்வீடன் சிறந்து விளங்குகிறது என்பதை மறுக்க முடியாது. 

vikatan

  • தொடங்கியவர்

பேசும் படம்: சிரிய அப்பாவி உயிர்களுக்காக ஓர் ஆர்ப்பாட்டம்

 

 
rau_3104644f.jpg
 
 
 

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு கிளர்ச்சிப் படைகள் செயல்பட்டு வந்தன. அந்த நகரின் மீது போரைத் தீவிரப்படுத்தியுள்ள அரசுப் படைகள் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை வசப்படுத்தியுள்ளன. தற்போது போர்முனையில் அப்பாவி மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்தப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக தனது படைகளை அதிக எண்ணிக்கையில் குவித்திருக்கிறது ரஷ்யா.

இந்த நிலையில், அலெப்போவில் உள்ள அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான மலேசிய மற்றும் சிரிய முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வீடியோ: உலகின் மிகவும் இளமையான விமானப் பணிப்பெண்

ஓய்வறியா உழைப்பும், சுறுசுறுப்பும் இளமைக்காலத்துக்கே உரித்தான வரப்பிரசாதம் என்றால் 80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக சோர்வின்றி பணியாற்றிவரும் இவர்தான் உலகில் மிகவும் இளமையான பேரிளம்பெண் என்று கருதலாம்.

 
 
வீடியோ: உலகின் மிகவும் இளமையான விமானப் பணிப்பெண்
 
நியூயார்க்:

அமெரிக்காவின் அதிபராக டுவைட் எய்சென்ஹோவர் என்பவர் பதவியேற்றிருந்த காலத்தில் தனது 21-வது வயதில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் (தற்போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்) ஏர் ஹோஸ்ட்டஸ் ஆக நுழைந்தவர், பேட்டே நாஷ்.

அதே நிறுவனத்தில் இன்னும் விமானப் பெண்ணாக இன்முகத்துடன் பணியாற்றிவரும் இவர், பணிஓய்வைப்பற்றி சிந்தித்துப் பார்க்க நேரமில்லை என்கிறார்.

B5E8CEBC-3AC7-42AE-BC1E-2BD3ED4E588F_L_s

வாஷிங்டன் நகரில் இருந்து பாஸ்டன் நகருக்கு செல்லும் விமானத்தில் தொடர்ந்து பணியாற்றிவரும் நாஷ், தனது பணிக்காலத்தில் கென்னடி உள்ளிட்ட அமெரிக்க அதிபர்களுக்கு சேவை செய்துள்ளதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

6730066D-5837-46AF-855F-4589032CE8E0_L_s

இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் பலரை தோழமையுடன் நலம் விசாரித்து, அன்புடன் உபசரிக்கும் இவருக்கு பலபேர் நண்பர்களாக உள்ளனர். தனது நண்பர்களை கட்டிப்புடி வைத்தியம் மூலம் பரவசப்படுத்தும் இவர் உடலில் சக்தி இருக்கும்வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

6CF3F532-6235-4507-8950-3CB76F574950_L_s

எப்போது ஓய்வு? என்று யாராவது கேட்டுவிட்டால், ஏன்? வேலை செய்வது ஆனந்தமாக தானே இருக்கிறது? இங்கிலாந்து ராணிபோல் எனது பணிக்காலத்தில் வைரவிழா காணவேண்டும் என்கிறார், பேட்டே நாஷ்.

இவரைப்பற்றி யூடியூபில் வெளியாகியுள்ள செய்தி தொகுப்பைக் காண..,
 

 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

35p1.jpg

கீர்த்தி சுரேஷ் இப்போது டோலிவுட்டிலும் லீடிங்! அக்கட பூமியில் ராமுடன் `நேனு ஷைலஜா' படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர், இப்போது அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு என நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டார். கொரட்டால சிவா இயக்கத்தில் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனதில் இருந்தே உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார் கீர்த்தி. நீ கலக்கு பேபிம்மா!

35p2.jpg

`பாபா ராம்தேவ் பயோபிக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்' என அதிரடித்திருக்கிறார் ரன்வீர் சிங். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில், ரன்வீரும் பாபா ராம்தேவும் கலந்துகொண்டார்கள். கூட்டத்தை கலகலப்பாக்க, ரன்வீர் சிங்கையும் பாபா ராம்தேவையும் டான்ஸ் ஆட மேடைக்கு அழைக்க, `என்னால் டான்ஸ் ஆட முடியாது. ஆனால், யோகா போஸ்களால் திணறடிக்கிறேன்' என ரெடியாக, இறுதியில் பாபாவின் யோகாவே வென்றது. `இப்ப தோத்துட்டேன்னு நினைக்காதீங்க. உங்க பயோபிக் எடுத்தால் அதில் நான்தான் நடிப்பேன் பாபா' என கால்ஷீட்டை கன்ஃபர்ம் செய்திருக்கிறார் ரன்வீர். தீபிகாவுக்கு ரோல் உண்டா?

35p3.jpg

ரே கட்சிக்குள்ளேயே கலவரங்கள் கலங்கடிக்கும் இந்தக் காலத்தில், கேரள அரசின் ஒற்றுமை இந்தியா முழுக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கேரள கவர்னர் சதாசிவம், கேரளத்தின் தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதால் ஆகிய நால்வரும் ஒரே விமானத்தில் சென்னைக்குப் பறந்து வந்தனர். ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்தியதோடு நின்றுவிடாமல், பத்திரிகைகளில் `வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு'- என்ற திருக்குறளை உதாரணம் காட்டி ஜெயலலிதா புகைப்படத்துடன் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது கேரள அரசு. நோட் பண்ணுங்க மக்களே!

35p4.jpg

`இருட்டிலேயே வாழ்றவன்டா!' என டெரர் என்ட்ரி கொடுத்த அர்விந்த் சுவாமி, இப்போது அடுத்தடுத்த படங்களில் செம பிஸி. `துருவா' படம் மூலம் தெலுங்கிலும் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். தமிழில் த்ரிஷாவுடன் நடித்துக்கொண்டிருக்கும் `சதுரங்க வேட்டை பார்ட்-2'வுக்கு அடுத்து மலையாளத்தில் மம்மூட்டி நடித்த `பாஸ்கர் த ராஸ்கல்' படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் சுவாமி. மலையாள ஒரிஜினலை இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்குகிறார். சுவாமிக்கு நல்ல நேரம்!

 மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் `வேதா இல்லம்', பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகத் திறக்காத இந்த இரும்பு கேட்டுக்குள் நுழைந்துப் பார்க்க, மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், வீட்டின் முகப்புப் பகுதியில் இருக்கும் பெரிய ஹால் வரைதான் அனுமதி. ஜெயலலிதா எங்கே நின்று விருந்தினர்களை வரவேற்பார், ஓய்வு நேரத்தில் எங்கே நடப்பார் என்பதை எல்லாம் கைடுபோல கட்சித் தொண்டர் ஒருவர் மக்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். அம்மா ஹவுஸ்னா சும்மாவா!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.