Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
பௌத்திரமான காதல் பெரும் பாக்கியமாகும்
 
 

article_1481810101-love.jpgகாதலர்கள் ஒருவரை ஒருவர் சரிவர முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கிடையே ஊடல் கொள்வது பொருத்தமாகாது. 

 ஆழமான அன்பு கொண்டால் ஊடல் புரிவது வழக்கமான ஒன்றுதான். இதனையும் அதிக நேரமாகக் கொள்வது மிகத் தவறாகும்.   

காதல் இறுக்கமடைய இறுக்கமடைய, உரிமையின் நிமித்தம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைப் பிரயோகத்திலும் நாகரிகம் இருக்க வேண்டும். ‘இவள் என்னவள்’ தானே என்று காதலனும் ‘இவர் என்னவர்’ என்று காதலியும் என்ற உரிமையில் கண்டபடி வார்த்தைகளை வௌிப்படுத்தக்கூடாது. 

மனம் எத்தருணத்திலும் காயப்படக்கூடிய ஒன்றுதான். சூழ்நிலை தெரியாமல், மனப்பாங்கு  புரியாமல் பேசுவது புத்திசாலித்தனமான காரியம் அல்ல!

நல்ல பௌத்திரமான காதல் கிட்டுவது, கணவன் மனைவிக்குரிய பெரும் பாக்கியமாகும். திருமணமாகாத காதலர்களுக்கும் இது பொருந்தும்.  

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
 

நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்!

 

லீப்

இந்த 2016 பலருக்கும் ஒரு நீண்டஆண்டாக இருந்திருக்கும், கவலை வேண்டாம்! அது இன்னும் நீளப்போகிறது.இம்முறை புத்தாண்டுக்கு10,9,8... கவுண்ட்டவுனுக்கு பதில் 11,10,9... என இருக்கவேண்டும். ஏனென்றால் எப்போதும் 12 மணிக்கு கொண்டாடப்படும் புத்தாண்டு இவ்வாண்டு 12 மணி 1 வினாடிக்கு கொண்டாடப்படுமாம். ஏன் என்று தெரியுமா?

இந்த டிசம்பர் 31-ம் தேதி அனைத்து நேரகாப்பாளர்களும் 'லீப் செகண்ட்' என அழைக்கப்படும் ஒரு வினாடியை தங்களது கடிகாரங்களில் கூட்டுவர்.லீப் இயர் நாம் அறிந்ததே, பூமி சூரியனை சுற்றிவர சரியாக 365.25 நாட்கள் ஆகும். மீதம் இருக்கும் 0.25 நாள் 4 வருடங்களில் 1 நாள் ஆவதே லீப் இயர், அந்த நாள் தான் பிப்ரவரியில் சேர்க்கப்படும் 29-ம் தேதி. அதே போல் நேரத்தை பூமியின் சுழற்சியுடன் சரிவர இருக்க சேர்க்கப்படுவதே லீப் செகண்ட்.அதாவது பூமி ஒரு சுழற்சிக்கு சரியாக 24 மணிநேரம் எடுப்பதில்லை, அது 86400.002 வினாடிகள் எடுக்கும். அந்த 0.002 விநாடிகள் தான் சேர்ந்து இப்போது 'லீப் செகண்ட்'டாக சேர்க்கப்படவுள்ளது.

இப்போது உலகளாவிய நேரநிலையான கோஆர்டிநேட் யூனிவேர்சல் டைம்மில்(UTC) இந்த டிசம்பர் 31-ம் தேதி 23:59:59லிருந்து 23:59:60க்கு சென்றபிறகு தான் 00:00:00க்கு செல்லுமாம் UTC யின் கடிகாரம்.இந்த லீப் செகண்ட் சேர்க்கும்முறை 1972ல் செயல்படுத்தப்பட்டது அதில் 27 ஆண்டுகளில் லீப் செகண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. 

லீப் நொடியால் பாதிப்பா?

 1972-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப் நொடி, கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியோடு சேர்க்கப்பட்டது. அந்த நாளில் பல பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தன.  மிகப்பெரிய நிறுவனங்களான மொஸில்லா, ரெடிட், ஃபோர் ஸ்கோயர், யெல்ப், லிங்க்டுஇன் மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி முடங்கிப்போயின. லினெக்ஸ் செயல்பாடுகள் முடங்கிப்போனது பாதிப்புக்கு காரணமாகின. மேலும் சில ஜாவாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் முடங்கின. 

 2015-ம் ஆண்டு  ஜூன் 30-ம் தேதி இந்த லீப் செகண்ட் வந்தபோது பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது கூகுள்,  இந்த ஒரு நிமிடத்தை கடக்க புதிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறியது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு முன்னதாக கூகுளின் அனைத்து சர்வர்களும் இணையத் துவங்கும். இந்த செயல்பாடு முடியும்போது லீப் நொடி கடக்கப்பட்டிருக்கும் என கூகுள் கூறியது.

இப்படி ஒரு வினாடியைத் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பது உலக அளவில் பிரச்னையாகியிருக்கிறது. சேர்த்துக் கொள்வதால் பிரச்னை ஏற்படுகிறது. ஆகவே "கூடாது, இதை நிறுத்த வேண்டும்" என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமையிலான நாடுகள் வற்புறுத்துகின்றன. லீப் வினாடியைச் சேர்க்கும் ஏற்பாடு இல்லாமல் போனால் கால வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகும். 500 ஆண்டுகளில் இது ஒரு மணி நேரமாக அதிகரித்து விடும்.

தானாக அப்டேட் ஆகிக்கொள்ளும் மொபைல்களும், கம்ப்யூட்டர்களும் நேரத்தை மாற்றிகொள்ளும்.மத்த கடிகரங்களில் நீங்களே மாற்றலாம், ஆனால் நமது தேவைக்காக 5,10 நிமிடங்கள் கூடவும்,குறையவும் வைக்கும் நமக்கு ஒரு வினாடி பெரியவிஷயம் இல்லையே!

vikatan

  • தொடங்கியவர்

பிரேக்ஃபாஸ்ட் மிஸ் பண்ணவே கூடாது... ஏன் தெரியுமா? #BreakfastYMust

 

பிரேக்ஃபாஸ்ட்

காலைப் பொழுது, இன்று நம் கையில் இல்லை. கடிகார முள் நகர நகர, ஒவ்வொருவருக்கும் கூடுகிறது பிரஷர். பணியிடம், கல்விக்கூடம், வியாபாரத்தலம்... என்பதை நோக்கி விரைகிற அவசர தருணம் அது. ஒவ்வொருவருக்கும் அவரவர்பாடு, அவரவர் வாழ்க்கை. இதில் பெரும்பாலானவர்களுக்கு நிறுத்தி, நிதானமாகச் சாப்பிட நேரம் இருப்பதில்லை... அதாவது பிரேக்ஃபாஸ்ட். இருக்கிற உணவை ருசி, பசி அறியாமல் வாய்க்குள் அடைத்துக்கொண்டு, வீட்டைவிட்டுக் கிளம்பி ஓடுவது ஒன்றே குறிக்கோள் என்பதுபோல அப்படி ஒரு ஓட்டம். அப்படிப்பட்டவர்கள் கவனத்துக்காக ஒரு செய்தி!

பிரேக்ஃபாஸ்ட்... இரவில் சாப்பிட்டுவிட்டு, அதன்பிறகு எடுத்திருந்த நீண்ட நேர இடைவெளிக்கு உணவு உட்கொள்வதன் மூலம் தடை போடுவதுதான் பிரேக் ஃபாஸ்ட். உங்களுக்குத் தெரியுமா..? காலை உணவைத் தவிர்ப்பது மிக மோசமான பக்கவிளைவுகளை நமக்கு ஏற்படுத்திவிடும். நாம் உயிர் வாழ, நம் உடல் இயங்கத் தேவையான சக்தியைத் தருவது உணவு. அதிலும் காலையில் நாம் சாப்பிடும் உணவில், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கவேண்டியது அவசியம். இவையெல்லாம் இருந்தால்தான், அன்றைக்கு முழுவதற்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைக்கும்.

பிரேக்ஃபாஸ்ட் ஏன் முக்கியம்?

இரவு உணவு சாப்பிடுகிறோம். அதற்குப் பின் ஆறில் இருந்து பத்து மணி நேரங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இந்த இடைவெளியில், இரவில் உடலும் மூளையும் ஓய்வுநிலையில் இருக்கும். மறுநாள் காலையில் இரண்டுக்கும் சக்தி தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடும் உணவு, மூளையில் இருக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டர்களை சிறப்பாகச் செயல்பட வைத்து, நினைவுத்திறன் அதிகரிக்க உதவுகிறது. அதோடு, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

 

shutterstock_155810708_14291.jpg

 

பிரேக்ஃபாஸ்ட் தொடர்ந்து சாப்பிடவில்லை என்றால்...

குழந்தைகளுக்கு...

பகல் பொழுதிலேயே தூக்கம் வரும்; படிப்பில் கவனமின்மை, நாள் முழுவதும் சோர்வு, நினைவாற்றல் இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இளம் வயதினர்களுக்கு...

முடி உதிர்தல், உடல் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு, சோர்வு, தலைசுற்றல், குமட்டல், உடல் எனர்ஜி குறைதல், அல்சர், சர்க்கரைநோய் டைப்-2, நினைவாற்றல் இழப்பு, உடல் எடைக் குறைவு போன்றவற்றை ஏற்படும்.

வயதானவர்களுக்கு...

நாள் முழுக்க உடல் மற்றும் மனச்சோர்வு, இதய நோய்கள், சர்க்கரைநோய், தலைசுற்றல், வயிற்று எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

 

shutterstock_90642307_14225.jpg

பிரேக்ஃபாஸ்ட்: யாருக்கு... எப்போது... எவ்வளவு?

காலை உணவு 7-9 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.

நைட் ஷிஃப்டுக்குச் செல்பவர்கள், கண்டிப்பாக காலை உணவை சாப்பிட்ட பிறகுதான் ஓய்வு எடுக்க வேண்டும். நீண்ட நேரம் தூங்கும்போது, இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் நன்கு சுரக்கும். காலை உணவைத் தவிர்த்தால், வயிற்றில் புண் தோன்றி, அமிலம் உணவுக்குழாய்க்குச் சென்று நடுக்காதை அடையும். மேலும், ஒற்றைத் தலைவலியையும் ஏற்படுத்திவிடும்.

காலை உணவாக ஏதாவது ஒரு பழம், லேசாக புளித்த மாவு கொண்டு தயார் செய்யப்பட்ட எளிதில் செரிமானம் ஆகும் உணவைச் சாப்பிட வேண்டும். கொழுப்புச்சத்தும் அவசியம். அதற்காக அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வேண்டாம். சரிவிகித உணவாகச் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு, நன்றாக காய்ச்சிய பாலை அருந்தக் கொடுக்கலாம். பால் குடிக்காதவர்கள், கடலை போன்ற பருப்பு வகைகளைச் சாப்பிடலாம். அவித்த முட்டை, ஆம்லெட் சாப்பிடலாம்.

 

shutterstock_91378382_14401.jpg

கேரட், தக்காளி, வெங்காயம், வெள்ளரி ஆகியவை அடங்கிய வெஜ் சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.

இளம் வயதினர், பச்சை இலைக் காய்கறிகள், வேரில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், கிழங்குகள், சிறுதானியங்கள், நார்ச்சத்து மிகுத்த வெள்ளரி, பீன்ஸ், பயறு வகைகள், முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடலாம்.

வயதானவர்களுக்கு... கேழ்வரகு இட்லி, இட்லி, தோசை - சாம்பார், ஆப்பம், சாம்பாருடன் இடியாப்பம், தக்காளி-பட்டாணி சாதம், வரகரிசி-தக்காளி சாதம், கேழ்வரகு ஸ்டஃப்டு இட்லி, வெங்காயப் பொடி தோசை, உளுந்து கஞ்சி, ஓட்ஸ் உப்புமா, ராகி உப்புமா, கேழ்வரகுக் கூழ் போன்ற எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும்.

 

shutterstock_218578489_14120.jpg

 

சரியான நேரத்தில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால்...

* நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்படத் தேவையான சக்தி கிடைக்கும்.

* மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக்கும்.

* இதயம், செரிமான மண்டலம், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

* அல்சர் மற்றும் வயிற்று எரிச்சல் வராமல் தடுக்கும்.

ஆக, என்ன அவசரமானாலும், காலை உணவை ஆற, அமர மென்று, நிதானமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்காதீர்கள். என்றென்றும் ஆரோக்கியம்... நிச்சயம்!

vikatan

  • தொடங்கியவர்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் (டிச.30- 2006)

சதாம் உசேன் 1937ம் ஆண்டு பிறந்தார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார். ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

 
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் (டிச.30- 2006)
 
சதாம் உசேன் 1937ம் ஆண்டு பிறந்தார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9, 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.  ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

 

 

சிக்காகோவில் நாடக அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 600 பேர் பலி (டிச.30- 1903)

சிக்காகோவில் 1903-ம் ஆண்டு ஒரு நாடக நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று ஏற்பட்ட தீவிபத்தினால் 600 பேர் பலியாகினர். மேலும் இதே தேதியில்

 
சிக்காகோவில் நாடக அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 600 பேர் பலி (டிச.30- 1903)
 
சிக்காகோவில் 1903-ம் ஆண்டு ஒரு நாடக நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று ஏற்பட்ட தீவிபத்தினால் 600 பேர் பலியாகினர்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த நிகழ்வுகள்:-

* 1853 - ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 கிமீ² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
* 1862 - வட கரொலைனாவில் ஐக்கிய அமெரிக்காவின் மொனிட்டர் என்ற கப்பல் மூழ்கியது.
* 1870 - ஸ்பெயின் பிரதமர் ஜுவான் பிறிம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.
* 1896 - பிலிப்பீன்சின் தேசியவாதி ஜோசே ரிசால் மணிலாவில் ஸ்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.

* 1903 - சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் 600 பேர் இறந்தனர்.
* 1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
* 1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
* 1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
* 1924 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.

* 1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
* 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
* 1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
* 1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
* 1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.

* 1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.
* 1972 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
* 1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
* 1996 - அஸ்ஸாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
* 1997 - அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.

* 2000 - பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
* 2004 - ஆர்ஜெண்டீனாவின் புவனஸ் அயரெஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் கொல்லப்பட்டனர்.
* 2006 - ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட் நகரில் அனைத்துலக விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
* 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

* 2006 - நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது.
* 2006 - முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

உலகின் தற்போதைய முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும், இங்கிலாந்து அணியின் எதிர்காலத் தலைவராகக் கருதப்படும் துடுப்பாட்டத் தூணுமான ஜோ ரூட்டின் பிறந்தநாள்
Happy Birthday Joe Root

  • தொடங்கியவர்

உலகில் அதிகம் விற்கும் பிராண்ட்

 

1a21461_06152.jpg

44 நாடுகளில் 300 பில்லியன் பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் கோக் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிராண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டாப் 5 இடங்களை கோக், கோல்கேட், லைஃப்பாய், மேகி, லேஸ் ஆகிய பிராண்டுகள் இடம்பிடித்துள்ளன என்று கான்டர் வேர்ல்ட் பேனல் ஆய்வு கூறுகிறது. இந்த சர்வேயை ஒரு வருட காலத்தில் எடுத்துள்ளனர். 

  • தொடங்கியவர்
Kein automatischer Alternativtext verfügbar.
 

உங்களுடைய நன்மைக்காக ஒரு முறை படியுங்கள் !!

நீங்க உங்கள் சமையலறையில்
plastic cutting board ( பிளாஸ்டிக் கட்டிங் போட் ) ஐ கொண்டு காய்கறிகளை நறுக்குகின்றீர்களா ?

அப்படிஎன்றால் இந்த பதிவை படித்தவுடன் உங்கள் plastic cutting board ஐ கொஞ்சம் கவனியுங்கள். நீங்க உபயோகிக்கும் plastic cutting board காய்கறிகள் நறுக்கும் பொழுது உங்கள் கத்தி அந்த கட்டிங் போர்டையும் சேர்த்து சிறிது சிறிதாத நறுக்கப்பட்டு உங்கள் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு சிறிது துண்டுகள் நீங்க நறுக்கும் காய்கறிகளுடன் சேர்ந்து உங்கள் சமையலில் சேர்ந்து நீங்கள் சாப்பிடும்போது அது உங்கள் வயிற்றில் சென்றடைகின்றது.

பிளாஸ்டிக் எப்பொழுதும் ஜீரணிப்பதில்லை. இதனால் உங்களுக்கு உங்கள் உடம்பில் குடலோடு ஒட்டி உடல் சம்பந்தமான நோய்களை உருவாக்கி உங்களை மரணம் வரைக்கும் கொண்டுசெல்கின்றது.

இந்த பாதிப்பு அதிகமாக சிறுவர்களுக்கே ஏற்படுகின்றது. உங்கள் plastic cutting board ஐ கவனித்து பார்த்தீர்களானால் புரியும். எவ்வளவு இதிலிருந்து உங்கள் சமையலோடு கலந்து சாப்பிட்டு இருக்கின்றீர்கள் என்று.

எனவே நீங்கள் எப்பொழுதும் உங்கள் wood cutting board பலகை கட்டிங் போர்ட் கொண்டே உபயோகிக்கும் பழக்கத்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள். பலகை சிறிது துண்டுகளாக தூள்கள் சமையலில் கலந்துஅதை அடுப்பில் வைத்து வேகவைத்தால் அது உடம்புக்கு கேடு விளைவிக்காது. ஜீரணிக்கும்.

நீங்களும்உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும் பல நோயிகளிலிருந்து பாதுகாக்கலாம். இந்த தகவலையும் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.....

  • தொடங்கியவர்

2016 டாப் 10 இளைஞர்கள்

 

விகடன் டீம்

 

24p1.jpg

மண்ணுக்கான ஈர விதை 24p11.jpg

மல்லிகா (சமூகச் செயற்பாட்டாளர்)

ளியர் சமூகத்தைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, நமக்கான நம்பிக்கை வெளிச்சம். தந்தையின் விவசாய நிலத்தை ஆதிக்கச் சாதியினர் ஏமாற்றிப் பிடுங்கிவிட, அதை மீட்கக் களம் இறங்கியதில் தொடங்கியது மல்லிகாவின் போராட்ட வாழ்வு. அதை ஒடுக்கப்பட்ட தன் இன மக்களுக்கான போராட்டமாக மாற்றியதுதான் அற்புதம். இன்றைக்கு இவர் கொடைக்கானல் பகுதி பழங்குடி மக்களின் தேவதை. ரேஷன் கார்டு வாங்கித் தருவது, வீடுகட்ட உதவுவது, பழங்குடிப் பிள்ளைகளுக்குக் கல்வி பெற்றுத்தருவது... என ஒவ்வொரு நாளும் களத்தில் நிற்கிறார். அரசு உதவியோடு 30-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகளையும் விவசாய நிலங்களையும் பெற்றுத்தந்திருக்கிறார். தேனி சின்னூர் காலனி தோட்டக் காடுகளில், சம்பளம் இன்றிக் கொத்தடிமைகளாக வைத்திருந்த மக்களைப் போராடி மீட்டு, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் பெற்றுத்தந்தார். இப்போது பழநி மலையில் ஆதிவாசிகளுக்கான இடங்களை மீட்கும் போராட்டத்தில் நிற்கும் மல்லிகா, பள்ளிக்கூடமே போகாதவர். இவரிடம் கற்க, எவ்வளவோ இருக்கிறது நமக்கு!


24p2.jpg

லட்சிய இளைஞன்

இளம்பகவத் (ஐ.ஏ.எஸ் அதிகாரி)

ல்லூரிக் கல்வியையே தொடர முடியாமல் நின்ற இந்த இளைஞன், இன்று இந்திய அளவில் 117-வது ரேங்க் அடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. தஞ்சாவூர் பக்கம் சோழன்குடிகாடு கிராமம். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு கல்வியைத் தொடர வழி இல்லாமல் வாரிசு வேலைக்குக் காத்திருந்தார். ஏழு ஆண்டுகள் போராடியும் வேலை கிடைக்காமல் இழுத்தடித்தார்கள். ‘வாரிசு வேலை தேவை இல்லை... போட்டித் தேர்வு எழுதி அரசு வேலையில் சேருவேன்’ என வைராக்கிய சபதம் எடுத்தார். முதல் முயற்சியில் காவல் துறையில் ‘இளநிலை உதவியாளர்’. அங்கு இருந்தே குரூப் 2 தேர்வு எழுதி ‘இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்’, குரூப் 1 தேர்வு எழுதி ‘ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்’, அடுத்து சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.ஆர்.எஸ்., பிறகு போலீஸ் டி.எஸ்.பி என அடுத்தடுத்து உழைத்து, உயரங்கள் தொட்டார். இப்போது ஐ.ஏ.எஸ் இலக்கும் இவர் வசம். தன்னைப் போன்ற இளைஞர்களின் திறமையை வறுமை தின்னக் கூடாது என ‘இலவசப் பயிற்சி மையம்’ தொடங்கி திசைக்காட்டியாகவும் நிற்கிறார் இந்த நம்பிக்கை நண்பன்.


24p4.jpg

ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை தீபங்கள்

சரண்யா - பூபாலன் (சமூக ஆர்வலர்கள்)

பூபாலன்-சரண்யா தம்பதியின் வாழ்வும் போராட்டமும் நம் ஒவ்வொருவருக்குமான நம்பிக்கை உதாரணம். இருளர் இனத்தைச் சேர்ந்த இருவருக்கும் 25 வயதுதான். பூபாலன் பார்ப்பது கூலி வேலை. டிப்ளமோ நர்ஸிங் படித்த சரண்யாதான் அந்த ஊரிலேயே அதிகம் படித்தவர். இதுதான் வாழ்வு என முடங்கிவிடாமல், அடுத்த தலைமுறைக்கு விதை போட்டது இவர்களின் பேரன்பு. செங்கல் சூளைக் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 500 இருளர் குடும்பங்கள், திருவள்ளூர், பாலவாக்கம் ஜெ.ஜெ நகரில் வசிக்கிறார்கள். வறுமைக்கும் அடக்குமுறைக்கும் நடுவில் தவிக்கும் இந்தக் குடும்பங்களின் 60 பிள்ளைகளுக்கான கல்விப் போராட்டத்தைத் துவக்கியது இந்தத் தம்பதி. தினமும் இலவச ட்யூஷன், அவர்களின் கல்விக்கான நிதி உதவி, அடுத்தடுத்த பயணத்துக்கான வழிகாட்டல்கள் என, இதையே வாழ்க்கையாக்கிக் கொண்டார்கள். ‘கல்வியால் மட்டுமே ஒரு சமூகத்தின் அடிமைத்தனத்தை உடைக்க முடியும்’ என்கிற இவர்களின் குடிசையில் இருந்து ஒளிர்கிறது நம்பிக்கையின் விளக்கொளி!


24p3.jpg

அசத்தல் அதிரடி போலீஸ் மங்கை

வந்திதா பாண்டே (ஐ.பி.எஸ் அதிகாரி)

.பி.எஸ் தமிழக கேடரில் 2010-ம் ஆண்டு பேட்ச். சொந்த ஊர் உ.பி அலகாபாத். கடந்த ஐந்து வருடங்களாக இவர் நிகழ்த்திய நேர்மைப் பணிகளுக்கு, தமிழ்நாடே சல்யூட் வைக்கிறது. குற்றவாளிகளிடம் மட்டும் அல்ல, காவல் துறையிடமும் இவர் கண்டிப்பு பிரசித்தம். சமரசம் இல்லாத நேர்மைக்காகவே இடமாற்ற நெருக்கடிகளை எதிர்கொண்டார். ஆனாலும் அசராமல்போன இடங்களில் எல்லாம் அதே துணிவோடு அதிரடித்தார். உயர் போலீஸ் அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கைச் சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கி, அஞ்சாமல் சட்டப்படி வழக்கு பதிவுசெய்தார். பரிசாகக் கிடைத்தது கரூருக்கு மாற்றல். அங்கே தேர்தல் நேரத்தில், அன்புநாதனிடம் 4¾ கோடி பறிமுதல் செய்ததில் தொடர்ந்தது இவரின் இரும்புக் குணம். கொலை மிரட்டல்கள், இடமாற்றல்கள், மன அழுத்தங்கள்... அத்தனையையும் உடைத்துப் பாயும் வந்திதாவின் உறுதிக்குப் பெருமித வணக்கங்கள்!


24p5.jpg

இனிய இயற்கை நேசன்

செந்தமிழன் (பன்முகப் பண்பாட்டு ஆளுமை)

த்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் என அடையாளங்கள் இருந்தாலும் இயற்கை விவசாயியாகத் தன்னை முன்னிறுத்தியதில் தொடங்கியது செந்தமிழனின் நம்பிக்கைப் பயணம். ‘செம்மை வாழ்வியல் நடுவம்’ என இவர் தொடங்கிய அமைப்பு, இயற்கை மீட்புக்கான அர்த்தமுள்ள முயற்சி. இயற்கை வாழ்வியலைக் கற்றுத் தரும் ‘பிரண்டைத் திருவிழா’, இயற்கை விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை விற்கக் கூடும் ‘ஊர் சந்தை’, வேளாண் தொழில் கற்பவர்களுக்காக ஆச்சாம்பட்டியில் செயல்படும் ‘செம்மைவனம்’ என செந்தமிழன் நிகழ்த்தும் ஒவ்வொன்றும் நாளைய தலைமுறைக்கான நல் வழித்தடம். விகடனில் இவர் எழுதும், `ஆயிரம் சூரியன்... ஆயிரம் சந்திரன்... ஒரே ஒரு பூமி’ தொடர் உள்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து ஒலிக்கிறது இவரது குரல்... தொடர்ந்து விதைக்கிறது இவர் கரம்.


24p6.jpg

நம்பிக்கை நாயகி

ஐஸ்வர்யா ராஜேஷ்  (நடிகை)

‘காக்காமுட்டை’யில் ஏழைத்தாயாக கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த வருடம் முழுவதும் வசீகரித்தார். நடித்த ஒவ்வொரு பாத்திரத்திலும் பளிச்சிட்டது இவரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும். பாசக்கார மனைவியாக ‘ஆறாது சினத்தில்’ உருக்கினார், ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’-ல் டபராக்குத்து போட்டுத் தெறிக்கவிட்டார், ‘குற்றமே தண்டனை’யில் காட்டியது நவீனம் என்றால், ‘தர்மதுரை’ காமக்காப்பட்டி அன்புச்செல்வி ஆசம். பார்த்துப் பார்த்துப் பாத்திரங்களைத் தேர்ந் தெடுப்பதும் அதற்காகத் தன்னைச் செதுக்கிக் கொள்வதுமாக... ஐஸ்வர்யா சமகால நடிகைகளில் நம்பிக்கை அடையாளம்!


24p7.jpg

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன் (எழுத்தாளர்)

சென்ற ஆண்டுதான் முதல் நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’ வெளிவந்தது. அதற்குள் அடுத்தடுத்து மூன்று நூல்கள். சமீபத்தில் வந்த இவரது ‘அஜ்வா’ நாவல், அதிர்வு நரம்புகளை மீட்டியது. சமகால இலக்கியத் தளத்தில், தவிர்க்க முடியாத குரல் சரவணனுடையது. எளிமையும் ஆழமுமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன. நம் கால வாழ்வியலின் துயரங்களை, பிரச்னைகளைப் பேசும் விரல். ஒருபக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை... இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப் படுத்துகிறது!


24p8.jpg

நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைக் காதலன்

அருண்  (சினிமா ஆர்வலர்)

சினிமாவுக்கு என்றே பிரத்யேகமாக, ‘ப்யூர் சினிமா’ என்கிற புத்தகக் கடை நடத்துகிறார். இங்கேயே சினிமா நேசர்களுக்கான நூலகமும் உண்டு. தொடர்ச்சியாக மாற்று சினிமா திரையிடல்கள், திரைக் கலைஞர்களோடு கலந்துரையாடல்கள், பயிற்சிப்பட்டறைகள் நிகழ்த்துகிறார். ‘பேசாமொழி’ பதிப்பகமும், ‘படச்சுருள்’ சிற்றிதழும் இவரின் நன்முயற்சிகள். மென்பொருள் துறை வேலையைத் துறந்துவிட்டு, ‘தமிழ் ஸ்டுடியோ’ என்ற அமைப்பைத் தொடங்கி, இவர் முன்னெடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் அடிப்படைக் காரணம், நல்ல சினிமாவுக்கான தேடலும்... காதலும்.


24p9.jpg

தமிழோடு இசை பேசு!

பிரதீப்குமார் (பின்னணிப்  பாடகர்)

ண்டு முழுவதும் இசை ரசிகர்களை தன் மேகக்குரலால் நனைத்த `மாயநதி’ பிரதீப்குமார். தமிழர்களின் இனிய இரவுகளின் புதிய வரவு.  நண்பர்களுடன் சேர்ந்து இண்டிபெண்டன்ட் ஆல்பங்கள் மூலம் யூ-டியூபில் ஹிட்ஸ் வாங்கிக்கொண்டிருந்த இளைஞர். சினிமாவுக்கு வந்த பிறகு இவர் பாடுபவை எல்லாமே பட்டையைக் கிளப்பும் ஹிட்டுகள். 2016-ம் ஆண்டு எல்லா இசைப்பட்டியல்களிலும் இவரின் பெயர் மூன்று முறையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும். `வானம் பார்த்தேன்’ பாடலில் சோகம், `மாயநதி’யில் பிரிவு, `இணைவோம் இணைவோம்’ல் வீரம், `வீரத் துரந்திரா’வில் தைரியம்  என இந்த ஆண்டு பிரதீப் காட்டியவை எல்லாமே காதுக்கு இனிய காம்போ!

`குக்கூ’, `மெட்ராஸ்’ என 2014-ம் ஆண்டில் பிரதீப்பின் கிராஃப் மேலே ஏறியது. அது இந்த ஆண்டு `இறுதிச்சுற்று’, `மாவீரன் கிட்டு’, `கபாலி’ என ஹெலிகாப்டர் ஷாட்களாகப் பறந்திருக்கின்றன. கிட்டாரில், ஸ்லைடு கிட்டார் என்பது தனிவகை. அதில் பிரதீப் அபாரக் கலைஞன். `உலக இசைக்கலைஞன் கில்பார்ட்டோ தனது ஃபேவரைட்’ எனக் குறிப்பிடும் பிரதீப்பிடம் தெரிவதோ பக்கா தமிழ்க் குரல். உருகும் குரலும் உளறாத தமிழும் உணர்வோடு கலந்த இசையும் பிரதீப்பின் பலம். மெகா பைட் கணக்கில் இருக்கும் இவரது ஹிட் கலெக்‌ஷன், டெர்ரா பைட் அளவுக்கு ஏறப்போவது நிச்சயம்!


24p10.jpg

தங்கத் தமிழச்சி

சூர்யா  (தடகள வீராங்கனை)

ந்திய அளவில் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் போட்டிகளில் இப்போது இவர்தான் நம்பர் ஒன். அதிரடி அம்பாகப் புறப்பட்டு அத்தனைப் போட்டிகளிலும் தங்கத்தடம் பதித்தார். கௌஹாத்தியில் நடந்த தெற்காசியப் போட்டிகளில், இந்தியாவுக்கு இரண்டு தங்கங்கள் அடித்து வந்தது தமிழகத்தின் பரவசத் தருணம். 12 வயதில் தொடங்கிய ஓட்டம், பதக்கங்களை அள்ளுகிறது. சில விநாடிகள் வித்தியாசத்தில் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தாலும் அடுத்தடுத்த சர்வதேசப் போட்டிகளுக்காகத் தளராமல் தயாராகிறார். 2020-ம் ஆண்டு ரஷ்ய ஒலிம்பிக் கனவுகளோடு தடதடக்கும் சூர்யா, நமது தங்க நம்பிக்கை!

vikatan

  • தொடங்கியவர்

தொழில்நுட்ப உலகம்: சுவடுகளும் புதிய போக்குகளும்!

 

 
 
Desktop_3110679f.jpg
 
 
 

2016- ல் தொழில்நுட்ப உலகைத் திரும்பி பார்க்கும்போது, சைபர் தாக்குதல்கள், பொய் செய்தி பிரச்சினைகள், தாக்காளர்கள் கைவரிசை ஆகிய நிகழ்வுகள் ஆதிக்கம் செலுத்தின. பாட்கள் (Bots) எனப்படும் தானியங்கி மென்பொருள்களின் எழுச்சி, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதம், இணையச் சமநிலைக்கான குரல் ஆகிய போக்குகளும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கூகுளின் பிக்சல் போன் அறிமுகம், ஸ்மார்ட் போன் பிரியர்களைப் பித்துப்பிடித்து அலையவைத்த போக்கேமான் கோ விளையாட்டு, ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ போலப் பிரபலமாகி வரும் ‘மேனிக்வன் சேலஞ்ச்’ போன்ற போக்குகளும் முக்கியமாகத் திகழ்கின்றன. விடைபெறும் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை:

‘ஃபிரீ பேசிக்’சிற்குத் தடை

இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண முறையைக் கடைப்பிடிக்கக் கூடாது எனத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்த தடையாணை இணையச் சமநிலைக்கு ஆதரவான உத்தரவாக அமைந்தது. இந்த உத்தரவை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது சர்ச்சைக்குரிய ‘ஃபிரீ பேசிக்ஸ்’ (Free Basics) திட்டத்தை இந்தியாவில் விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. இணையதளங்களை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்வதாக பேஸ்புக் கூறினாலும், ஒரு பகுதி இணையத்தை மட்டுமே அணுக வழி செய்வதால் இந்தத் திட்டம் இணையச் சமநிலைக்கு எதிரானது எனக் கடும் விமர்சனத்திற்கு இலக்கானது.

‘வாட்ஸ் அப் என்கிரிப்ஷன்’

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப், செய்திகள், ஒளிப்படங்கள், வீடியோக்கள் என அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் என்கிரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது இணைய உலகில் என்கிரிப்ஷன் தொடர்பான முக்கியத்துவத்தையும் உண்டாக்கியது. தரவுகள் பரிமாற்றத்தை சங்கேத குறியீடுகள் மூலம் பாதுகாக்கும் இந்த முறையால் அனுப்புகிறவர், பெறுபவர் மட்டுமே உரிய செய்தியை வாசிக்க முடியும்.

அத்துடன், வாட்ஸ் அப் தன்னுடைய தனியுரிமைக் கொள்கையை மாற்றி அமைத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்படி, பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களைத் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வாட்ஸ் அப் அறிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

போக்கேமான் கோ மோகம்

ஸ்மார்ட் போன்களில் அறிமுகமான போக்கேமான் கோ விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்று புதிய மோகமாக உருவெடுத்தது. ‘ஆக்மெண்டட் ரியாலிட்டி’ எனப்படும் மேம்படுத்தப்பட்ட யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, போக்கேமான் ஜீவராசிகளைத் தேடிப் பிடிப்பதற்காக ஸ்மார்ட் போன் பிரியர்களை வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் அலைய வைத்தது. இந்த விளையாட்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வரவேற்பைப் பெற்றது.

பொய்ச்செய்தி பிரச்சினை

சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மூலம் பகிரப்படும் பொய்ச் செய்தி பிரச்சினை கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யாவை மையமாகக் கொண்ட போலி இணையதளங்கள் சார்பில் உலாவவிடப்பட்ட பொய்ச் செய்திகள் விவாதத்தை ஏற்படுத்தின. பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக பேஸ்புக்கும் கூகுளும் அறிவித்தன.

சைபர் தாக்குதல்

2016-ல் ஏதேனும் ஒரு வகையில் சைபர் தாக்குதல்கள் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றுக்கொண்டே இருந்தன. யாஹு நிறுவனம், தனது லட்சக்கணக்கான பயனாளிகளின் தகவல்கள் தாக்காளர்கள் கைவரிசைக்கு இலக்கானதாகத் தெரிவித்தது அதிர்ச்சியை உருவாக்கியது. அமெரிக்கத் தேர்தல் செயல்முறையைப் பலவீனப்படுத்தும் வகையிலான செயலில் ரஷ்யவைச் சேர்ந்த தாக்காளர்கள் குழு ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஜனநாயகக் கட்சியின் பிரச்சார வலைப்பின்னலும் தாக்குதலுக்கு இலக்கானது.

ராகுலும் தப்பவில்லை

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், கூகுள் சி.இ.ஒ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோரும் தாக்காளர்களின் கைவரிசைக்கு இலக்கானார்கள். இந்தியாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கமும் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கமும் தாக்குதலுக்கு இலக்காயின.

பாட்களின் எழுச்சி

பாட்கள் (Bots) எனக் குறிப்பிடப்படும் தானியங்கி மென்பொருள்கள் தொடர்பான செய்திகள் பெருமளவு கவனத்தை ஈர்த்தன. அரட்டைக்கான பாட்கள், வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும் பாட்கள் உள்ளிட்டவை வருங்காலத்தில் புதிய போக்காக அமையும் என வல்லுநர்கள் தெரிவித்தனர். வங்கிச் சேவை உள்ளிட்டவற்றில் இந்த வகை மென்பொருள்களே வழிகாட்டும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதே போலவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகளும் தீவிரமாகியுள்ளன. தானியங்கிமயமாக்கலின் விளைவாக வேலை இழப்பு ஏற்படும் அபாயம் பற்றியும் ஆய்வுகள் வெளியாகின.

யு.பி.ஐ. செயலி அறிமுகம்

தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய யு.பி.ஐ. செயலி அறிமுகமானது. ஸ்மார்ட் போன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் அனுப்ப, பெற உதவும் இந்தச் செயலியை முன்னணி வங்கிகள் அறிமுகம் செய்தன. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான விவாதமும், விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், யு.பி.ஐ. கவனத்தை ஈர்க்கிறது.

‘கபாலி தி பாஸ்’

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினி காந்தின் கபாலி திரைப்படம் இணையத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியானபோது இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் கபாலிடா எனும் பதம் டிரெண்டானது. முன்னோட்ட காணொளி யூடியூப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான போதும் டிவிட்டரில் ரஜினியின் செல்வாக்கை வெளிப்படுத்தும் குறும்பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன.

சுஷ்மாவின் சுறுசுறுப்பு

வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றார். டிவிட்டர் பயன்பாட்டில் முன்னுதாரணமாகத் திகழும் ஸ்வராஜ், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலையும் டிவிட்டர் மூலமே பகிர்ந்துகொண்டார். இணையவாசிகள் அவர் நலம்பெற விரும்பிக் குறும்பதிவுகளை வெளியிட்டனர்.

கலைநயமான செயலி

ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்காக எண்ணற்ற செயலிகள் அறிமுகமானாலும், பிரிஸ்மா செயலி பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. பயனாளிகள் தங்கள் ஒளிப்படங்களை நவீன ஓவியம் போல மாற்றிக்கொள்ள வழி செய்யும் இந்தச் செயலி வாயிலாகப் பகிரப்பட்ட படங்கள் அவற்றின் கலைநயமான தோற்றத்திற்காக வரவேற்பைப் பெற்றன.

‘கூகுள் பிக்சல்’ போன்

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த பிக்சல் ஸ்மார்ட் போன்கள் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் அறிமுகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கூகுள் நிறுவனத்தால் நேரடியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட் போன் எனும் அந்தஸ்து, இதன் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் பரவலாகப் பேசப்பட்டன. புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இது அறிமுகமானது. ஐபோன் 7பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 7, மோட்டோ இசட், ஜியோமி ரெட்மி 3எஸ் பிரைம், எச்டிசி 10 உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க ஸ்மார்ட் போன்களாக அமைந்தன. இவற்றில் கேலக்ஸி 7 போன்கள் தீப்பிடித்துக்கொள்ளும் தன்மைக்காகச் சர்ச்சைக்கு இலக்காயின.

‘ஸ்னேப்சேட்’ கண்ணாடி

தானாக மறையும் ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்ள வழிசெய்யும் ஸ்னேப்சேட் நிறுவனம், புதிய மூக்குக் கண்ணாடியை அறிமுகம் செய்தது. ஸ்னேப்சேட் ஸ்பெக்டகல் எனும் இந்தச் சாதனம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவிவருகிறது. இது அணிகணிணி உலகில் புதிய போக்காக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சாய்வாலா’ புகழ்

இணையம் மூலம் பல படங்களும், வீடியோக்களும் வைரலாகப் பரவிப் புகழ் பெற்றன என்றாலும், பாகிஸ்தானில் டீக்கடை ஒன்றில் பணியாற்றிய வாலிபர் ஒரு ஒளிப்படத்தால் ஒரே நாளில் இணையம் முழுவதும் பிரபலமானார். அர்ஷ்த் கான் எனும் அந்த வாலிபர் டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் காட்சியை ஒளிப்படக் கலைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். அந்த வாலிபரின் அழகான தோற்றமும், பச்சை நிறக் கண்களும் இணையவாசிகள் அனைவரையும் கவர்ந்திழுத்தன. அவரது ஒளிப்படத்தை லட்சக்கணக்கானோர் பகிர்ந்தனர். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தது இந்தியர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது. இணையப் புகழ் காரணமாக இந்த வாலிபருக்கு விளம்பரப் பட வாய்ப்பும் தேடி வந்தது. இதே போல அமெரிக்காவில் டேம் டேனியல் எனும் வாலிபர் தனது அழகான தோற்றத்திற்காக இணையப் புகழ் பெற்றார்.

இணைய மயக்கம்

பெண்மணி ஒருவரின் கால்களின் தோற்றமும் இணையத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அந்தப் படத்தில் உள்ள கால்களின் தோற்றம் பளபளப்பாக இருக்கிறதா, அல்லது அவற்றின் மீது வெள்ளை பெயிண்ட் பூசப்பட்டிருக்கிறதா, எனும் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல முடியாததே இந்தப் படத்தை பற்றிப் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது. இணையம் இதற்குப் பதில் அளிப்பதில் சரி பாதியாகப் பிரிந்து நின்றது. அதே போலப் பள்ளி மாணவர்களுக்கான குதிரைப் படங்களைக் கொண்ட அல்ஜீப்ரா புதிரும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

வைரல் வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்ந்த நீரை மேலே கொட்டிக்கொள்ளும் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் வீடியோ வைரலானது போல 2016 இறுதியில் சிலையாக நிற்கும் ‘மானிக்குவன் சேலஞ்ச்’ வைரலானது. பின்னணியில் இசை ஒலிக்க, ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்போதே இடையே சிலையாக நிற்பது போலக் காட்சி தரும் வகையிலான வீடியோவைப் பகிர்வது புதிய போக்காக உருவாகி இருக்கிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சிறுவர்களின் நினைவில் வனத்தைப் புதைத்த ருட்யார்ட் கிப்ளிங்! #JungleBookMan

 

குழந்தை

'தி ஜங்கிள் புக்' திரைப்படத்தை எவராலும் மறக்க முடியாது. இப்படத்தை பற்றி தெரிந்தவர்கள் பலருக்கும், 122 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படத்தின் கதையை நாவலாக எழுதியவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குழந்தைகளை மையப்படுத்திய தன் நாவல்கள், கவிதைத் தொகுப்புகளின் வாயிலாக புகழ்பெற்ற நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் ஜோசப் ருட்யார்ட் கிப்ளிங்கின் பிறந்த தினம் இன்று. 

1865-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி மும்பையில் பிறந்த கிப்ளிங், போர் மற்றும் சுதந்திரப் போராட்ட சூழல்கள் நடைபெற்ற காலத்தில் தன் இளமைப் பருவத்தை உலகின் பல நாடுகளிலும் கழிக்க வேண்டிய சூழலை எதிர்கொண்டார். அப்படி தான் சிறு வயதில் அனுபவித்த கசப்பான, சோதனையான தருணங்களை கவிதை மற்றும் உரையாடல் நிகழ்வுகளாக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து, அப்படியே பின்நாட்களில் மிகச்சிறந்த கவிஞராகவும் புகழ்பெற்றார். 

'என் குழந்தைப் பருவத்தில் நான் மதிய வேளையில் தூங்குவேன். அப்போது என்னை வளர்த்தவர்கள் பல குழந்தைக் கதைகளை கூறியும், குழந்தைப் பாடல்களை பாடியும் என்னைத் தூங்க வைப்பார்கள். அவை அனைத்துமே என் மனதில் நன்றாக பதிந்துவிட்டன. அந்த நினைவுகளுடன் இருந்த நான் என் ஐந்து வயதில் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விடுதி போன்ற ஒரு வீட்டில் ஒரு பெண்ணால் கொடுமையான சூழலில் வளர்க்கப்பட்டேன். அந்த சூழலில் பல சண்டை சச்சரவுகளை தொடர்ந்து சந்தித்ததுதான், பிற்காலத்தில் என்னை ஒரு எழுத்தாளனாக மாற்றியது என நினைக்கிறேன்' என பின்நாட்களில் பல தருணங்களிலும் ஜோசப் ருட்யார்ட் கிப்ளிங் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு பல சிக்கலான அனுபவங்களை தன் இளமைப் பருவத்தில் சந்தித்துள்ளார்.

தொடர்ந்து பள்ளியில் படித்தபோது பல நல்ல நண்பர்கள் அவருக்குக் கிடைத்தனர். அந்த மகிழ்ச்சியான சூழலிலே தனது இலக்கிய ஆசைக்கு உயிர் கொடுத்தார். தன் இளமைக்கால அனுபவங்களை நூல்களாக அவ்வப்போது எழுதிவந்தவர், 1891-ம் ஆண்டு 'லைட் தாட் ஃபெய்ல்ட்' என்ற நாவலை எழுதி பலராலும் பாராட்டப்பட்டார்.

குழந்தை

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்ல பண நெருக்கடி ஏற்பட்டதால், பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் செய்தித்தாளில் உதவிப் பதிப்பாளராக வேலை செய்தார். அந்த பத்திரிகையாளர் அனுபவம் அவருக்கு மேலும், எழுத்து உலகைப் பற்றிய பார்வை மற்றும் புரிதலை அதிகப்படுத்தியது. 

குறிப்பாக கற்பனைக் கதைத் தொகுப்பு நூல்களை எழுதுவதில் மிகவும் சிறந்தவராக போற்றப்பட்டார் கிப்ளிங். மிகப்பெரிய காட்டில் ஓநாய்களால் ஒரு சிறுவன் வளர்க்கப்படுகிறான். அச்சிறுவனுக்கும், ஓநாய்களுக்கும் இடையேயான உணர்வுகளையும், அக்காட்டில் அச்சிறுவன் காணும் விலங்கினங்களுக்குமான நிகழ்வுகளை 1894-ம் ஆண்டு வெளியான தன் 'தி ஜங்கிள் புக்' என்ற நாவலின் வாயிலாக மிக அழகாக உயிரோட்டம் கொடுத்திருப்பார். தொடர்ந்து தி ஸ்டோரி ஆஃப் தி காட்பைஸ், தி செகன்ட் ஜங்கிள் புக், இஃப், லைஃப்ஸ் ஹாண்டிகேப், கிம், தி மேன் ஹீ வுட் பீ உள்ளிட்ட குழந்தைகளை மையப்படுத்திய ஏராளமான நாவல்களை எழுதி புகழ்பெற்றார். 

இதன் பின்னர் பிரபலமான எழுத்தாளராக உயர்ந்தவர், தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களுக்கான புத்தங்கங்கள் எழுதுவதையே பிரதானமாகக் கொண்டிருந்தார். இவரது குழந்தைகள் சார்ந்த புத்தகங்களில் வெறும் கற்பனை நிகழ்வுகளைத் தாண்டி, குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு, எதிர்காலம் குறித்து நிறைய பயனுள்ள விஷயங்கள் இடம்பெறும். குறிப்பாக இவரது புத்தகங்களை ஏராளமான சிறுவர், சிறுமியர்களும் படித்ததுடன், இவரிடம் கடிதங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் சந்தித்து பேசவும், விவாதிக்கவும் விரும்பினர். இவரும் அதற்கு இசைவு தெரிவித்து, கணிசமான நேரத்தையும் ஒதுக்கினார். இந்த தருணங்களில்தான், ஜோசப் ருட்யார்ட் கிப்ளிங் குழந்தைகளின் கவிஞர் எனவும் பலராலும் அழைக்கப்பட்டார்.

தான் நினைப்பதை அப்படியே எழுத்து வடிவில் புத்தகங்களாக கொண்டுவர நினைக்கும் இவர், ஒரு வரையறைக்குள் அடங்காத எழுத்தாளர் எனவும் சொல்லப்பட்டார். அதனால்தான் இவர் குழந்தைகள் நூல்களைத் தாண்டி, அரசியல், போர்ச் சூழல்கள் குறித்த பல நூல்களையும் எழுதினார். அவை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் எதற்கும் கவலைப்படாமல் தன் இலக்கியப் பணியை அறவே செய்துகொண்டிருந்தார்.

'ஒரு நூலை எழுதும் முன் அதற்கான கதைக்கருவை தெளிவு செய்வதற்கு அதிக நேரம் செலவிடுவேன். போதிய நேரத்தை சரியாக திட்டமிட்டு, அதன் பின்னர்தான் என் நூல்களுக்கு உயிரோட்டம் கொடுப்பேன். அதற்கு 1902-ம் ஆண்டு வெளியிட்ட ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ் ஃபார் சில்ட்ரன் நாவல் சிறந்த உதாரணம்' என்று அவரே சொன்னதுண்டு. இப்படி முறையான திட்டமிடலுடன் தான் எழுதிய குழந்தைகள் நாவல்களை அடிக்கடிப் படித்து, தானே சிரித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிப்ளிங் உரைநடை மற்றும் கவிதை நூல்கள் பலவற்றை எழுதி இலக்கியத்துறையில் புகழ்கொடி நாட்டினார். தொடந்து ஒரே நேரத்தில் பல தொகுப்புகளைக் கொண்ட கவிதை மற்றும் நாவல்களை எழுதிய இவர், அடுத்தடுத்து இந்தியா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்தார். பெரும் புகழ் மற்றும் பணத்தையும் சம்பாதித்தார். நாவல்கள், கவிதைகள் எழுதுவதைத் தாண்டி, பல்வேறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.

குழந்தை

இந்தியாவில் பிறந்தாலும், உலகின் பல நாடுகளிலும் மாறி மாறி வாழ்ந்ததால் தன்னை அடிக்கடி ஆங்கிலோ-இந்தியர் என்றே குறிப்பிடுவார். அதனாலேயோ என்னவோ, கிப்ளிங்கின் நூல்களில், நாடு சம்பந்தப்பட்ட அடையாளங்கள், கலாச்சார பிரதிபலிப்பு மற்றும் தேசியப் பற்றிணைவுகளை குறித்தும் அதிகம் எழுதிவந்தார்.

இலக்கியத்துறையில் புகழ்பெற்ற இவருக்கு, விளையாட்டுத்துறை மட்டும் கடைசி வரை கைக்கொடுக்கவே இல்லை. கோல்ஃப் விளையாட ஆசைப்பட்டு, பயிற்சி பெற்றார். ஆனாலும் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை என அவரே கூறி வருத்தப்பட்டதும் உண்டு. 

40 ஆண்டுகளுக்கும் மேல் இலக்கிய உலகில், புகழின் உச்சியில் இருந்தார் ஜோசப் ருட்யார்ட் கிப்ளிங். தன் இலக்கிய பயணத்தில் உச்சபட்ச அங்கீகாரம் மற்றும் சாதனையாக 1907-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆங்கிலேய எழுத்தாளரும், மிகக் குறைந்த வயதில் இப்பரிசைப் பெற்றவரும் இவர்தான் என அப்போது கூறப்பட்டது.

கவனிக்கும் திறனின் வலிமையை கருத்தில் கொண்டு, கற்பனையின் அசல்தன்மை, யோசனைகளின் வீரியம் மற்றும் வர்ணணையில் உள்ள அலாதியான திறமை  ஆகியவையே இந்த எழுத்தாளனின் படைப்புகளில் காணப்படும் குணாதிசியங்கள் என நோபல் பரிசு பெற்றபோது கூறியிருந்தார். இவரது இந்த கருத்தும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது, குறிப்பிடத்தக்கது. 

1930-ம் ஆண்டு வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார் கிப்ளிங். குறிப்பாக இவரது 'தி ஜங்கிள் புக்' நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு உலகம் முழுக்க மிகப்பெரிய வெற்றிபெற்றது. இவரது 'கிம்' நாவல் தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பலமுறை சொல்லியிருக்கிறார்.

தன் எண்ணத்தை பேனாவின் வாயிலாக உயிரோட்டம் கொடுத்த ஜோசப் ருட்யார்ட் கிப்ளிங், குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெறும் வியத்தகு கவிஞராக இருந்தார் என்றால் அது மிகையாகாது. இவர் 1936-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி தன் 71-ம் வயதில் மறைந்தார்.

கவிஞர்களுக்கு அழிவுண்டு. ஆனால் அவர்களின் படைப்புகளுக்கு அழிவே இல்லை என்பதுபோல, ஜோசப் ருட்யார்ட் கிப்ளிங், அவரது படைப்புகளின் வாயிலாக இன்னும் உயிரோட்டத்துடனே வாழ்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

இதற்காக... இப்படி... இப்போதுதான் மொபைல் பயன்படுத்துகிறார்கள்-அதிர்ச்சி சர்வே முடிவுகள்!

 

மொபைல்

மொபைலை தங்கள் உடலின் இன்னொரு பாகமாக பார்க்கிறது இன்றைய உலகம். தன்னிடம் இருந்து ஐந்து அடிக்குள் மொபைல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். பாத்ரூமோ, பாட்டு கிளாஸோ.. அலுவலக மீட்டிங்கோ, காதலியுடன் டேட்டிங்கோ. எங்கு சென்றாலும் மொபைல் இல்லாமல் செல்வதில்லை. எடுத்து செல்வதும் கூட சரி. அங்கேயும் மொபைலை நோண்டி கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய சிக்கல். மொபைலை பிரிய நேர்ந்தால் பசலை நோய் ஆட்கொண்ட மாதிரி பதறிவிடுகிறார்கள். 

இப்போதெல்லாம் மொபைல் வைத்திருப்பவர்களின் முக்கிய கடமையே அவ்வபோது வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்துருக்கா? பேஸ்புக்ல யாராவது நமக்கு லைக் போட்டங்களா? என்று செக் செய்வது தான். இதில்  தூங்கி எழுந்தவுடன் மொபைலை கையில் எடுப்பவர்கள் பலர்!

இது தொடர்பாக உலகளவில் ஒரு சர்வேயை டிலோய்ட் என்ற ஒரு நிறுவனம் நடத்தியது. அதில் கலந்துகொண்டவர்களிடம் அவர்களது மொபைல் பயன்பாட்டை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் கொஞ்சம் எதிர்பார்த்தவை தான் என்றாலும்,  எச்சரிக்கை மணியையும் அடிக்கின்றன

61% பேர் காலையில் கண் விழித்த 5 நிமிடங்களுக்குள் தங்கள் மொபைலை செக் செய்வதாக தெரியவந்துள்ளது.மேலும்,

88% பேர் எழுந்த 30 நிமிடங்களுக்குள் தங்கள் போன்களை செக் செய்வதாகவும்,96% பேர் ஒரு மணிநேரத்துக்குள் செக் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ,

74% பேர் தூங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் தங்கள் மொபைலை செக் செய்கின்றனர்.

இதில் காலை எழுந்தவுடன் மொபைலில் சோஷியல் மீடியாக்களையே அதிக பேர் பார்க்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில்  வாட்ஸ்அப்  போன்ற மெஸெஜிங் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. 

smartphone_app_241259312038_640x360_2351

இந்த சர்வே உலகம் முழுவதும் உள்ள 53000 பேரிடம் எடுக்கப்பட்டது, அதில் 2000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்தவர்களில் 50% பேருக்கு மேல் பணவர்த்தனைகளை மொபைல் மூலமாகவே செய்கின்றனர் . 54% பேர் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்பதை மொபைல் ஆப் மூலமாகவே பார்க்கிறார்கள். மின்கட்டனம், தொலைபேசி கட்டணம் போன்றவற்றை 52% மொபைல் மூலம் செலுத்துகிறார்கள்.

2000 இந்தியர்களில் 53 % தங்கள் மொபைலை ஆன்லைனில் வாங்கியிருக்கிறார்கள். மற்றவர்கள் கடைகளுக்குச் சென்று நேரில் வாங்கியிருக்கிறார்கள்.

இந்த சர்வேயிலிருந்து தினசரி வாழ்க்கையை சில ஆண்டுகளில் திறன்பேசிகள் எந்தஅளவு மாற்றியுள்ளது என்பது நன்றாக தெரியவந்துள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

சைக்கிளில் வலம் வரும் மணிப்பூர் இரும்பு மனுஷி

 

_5fe3538c-ce6c-11e6-840e-04a97aefc7ba_19

மணிப்பூரில், 16 வருட உண்ணாவிரத போராட்டத்துக்குப் பிறகு இரோம் ஷர்மிளா புதிய கட்சியை துவங்கினார். இந்நிலையில் இரோம் தற்போது மணிப்பூர் தலைநகர் இம்ஃபாலில் எங்கு சென்றாலும், சைக்கிளில்தான் செல்கிறாராம். 'நான் முதல்வரானால், அனைத்து மக்களையும் தெரியவேண்டும். அதற்கு சைக்கிள்தான் வசதியாக இருக்கிறது' என்கிறார் இரோம். குறிப்பாக இம்ஃபால் மாவட்டத்தில் 20 கி.மீ தூரம் என்றாலும், சைக்கிளில் சென்றுதான் மக்களைப் பார்த்து பேசி வருகிறார் இரோம் சர்மிளா.

நன்றி: Hindustantimes

  • தொடங்கியவர்

 

2016 ஆண்டின் மருத்துவ கண்டுபிடிப்புகள்

இந்த ஆண்டில் மனித வாழ்வை மேம்படுத்திய முக்கிய மருத்துவ கண்டுபிடிப்புகளின் தொகுப்பு.

  • தொடங்கியவர்

உலக அழகின்னா இவ்ளோதான்யா!

 

 

p90a.jpg

லக அழகின்னு சொன்னாலே ஐஸ்வர்யா ராய் மட்டும்தான் நம்ம ஞபாகத்துக்கு வருவாங்க. உலக அழகிப் போட்டி குறித்து எம்புட்டு விஷயங்கள் இருக்கு தெரியுமா? அதில் கொஞ்சமே கொஞ்சம் இங்கே...

red-dot4.jpg மிஸ் வேர்ல்டு போட்டி 1951-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

red-dot4.jpg மிஸ் வேர்ல்டு போட்டியில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அந்த நாட்டின் அழகிப் பட்டத்தை வென்றிருக்க வேண்டும் என்பதுதான் தகுதி.

red-dot4.jpg சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த உலக அழகிப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட 117 நாடுகளின் அழகிகள் பங்குபெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்றவர்கள் அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.

p90b.jpg

red-dot4.jpg ‘உலக அழகி -2016’ பட்டம் வென்ற போர்ட்டோரிகோவைச் சேர்ந்த ஸ்டெஃபானி டெல் வாலிக்கு இப்போதுதான் 19 வயது நிறைவடைந்துள்ளது.

red-dot4.jpg இவர் நியூயார்க்கில் இருக்கும் பேஸ் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறை மாணவி. படித்துக்கொண்டே மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

red-dot4.jpg போர்டோரிகோவிலிருந்து உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது நபர் ஸ்டெஃபானி.

red-dot4.jpg இந்தியா சார்பில் கலந்துகொண்ட மிஸ் இந்தியா அழகி ப்ரியதர்ஷினி சட்டர்ஜி டாப் 20-க்குள் நுழைந்திருந்தாலும், கடைசிக்கட்டப் போட்டிகளில் வெளியேற்றப்பட்டார். 

red-dot4.jpg இதுவரை கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் தனது ரோல் மாடலாகத் தங்களின் தாய் இருப்பதாகக் கூறியுள்ளனராம்.

red-dot4.jpg 1994-ல் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயையும் பலர் ரோல் மாடலாகக் கூறியுள்ளனர்.

p90c.jpg

red-dot4.jpg இந்தியா சார்பில் இதுவரை ப்ரியங்கா சோப்ரா, யுக்தா முகி, டயானா ஹைடன், ஐஸ்வர்யா ராய், ரெய்டா ஃபாரியா ஆகியோர் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளனர். சுஷ்மிதா சென் மற்றும் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றுள்ளார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

2016 டாப் 25 பரபரா

 

விகடன் டீம் - ஓவியங்கள்: கண்ணா

 

40p1.jpg 

செல்ஃபி வெடி!
40p26.jpg
‘வர்லாம் வர்லாம் வர்ர்ர்ர்லாம் வா…’ என ஆண்டு முழுவதும் ரிவர்ஸ் கியரிலேயே இருந்தார் நாஞ்சில் சம்பத். வாயில் பட்டாசைக் கவ்விக்கொண்டு சேனல் சேனலாகப் போய் செல்ஃபி வெடி வெடித்தார் சித்தப்பு. மூஞ்சி முழுக்க பாம்பு டான்ஸ் ஆட, ‘இப்ப நான் கொலைப் பசியில இருக்கேன்’ என இவர் தட்டிய அத்தனை பேட்டிகளும் ‘வர்தா’ வைரல்கள். ‘அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்’ என சேம் சைடு செய்வினை வைத்தார். ‘எறும்புகள் சாகின்றனவே என்பதற்காக யானை நடக்காமல் இருக்க முடியுமா?’ என சோறாக்கும் வீட்டுக்கே சூனியம் வைத்தார். உச்சகட்டமாக, ‘சாவு விழுந்துவிட்டதே என்பதற்காக, கல்யாணம் வைக்காமல் இருக்க முடியுமா?’ என வெள்ள நேரத்தில் இவர் வாயடிக்க... வெறியான கார்டன், கட்டம் கட்டிக் காயடித்தது. அசராமல், குற்றாலத் துண்டோடு கட்டஞ்சாயா குடித்தபடி நாகர்கோவிலில் இருந்து பேர்பாடி பேட்டிகள் தட்ட, வீட்டிலேயே ஒரு வேளை சாப்பாட்டை கட் பண்ணினார்கள். விடாமல் விசுவாச வெங்கலச் சொம்புகளை உருட்டித்தள்ள, மறுபடியும் கார் அனுப்பியது கட்சி. ‘டீசலைப் போடு… டீ சொல்லு…’ என மறுபடி சம்பத் கிளம்ப, ‘மீம்ஸ் மாமு… மீம்ஸ் மாமு...’ என ஜாலியானார்கள் நெட்டிசன்கள்.


40p2.jpg 

விமானநிலையக் கூரை 50 தரம்... 100 தரம்!

சென்னை விமானநிலையம்தான் சென்ற வருடத்தின் கொலவெறி ஸ்பாட். விமானநிலையத்தின் மேற்கூரைக் கண்ணாடி அடிக்கடி உடைந்து விழுந்து ஸ்க்ரோலிங் ஆக, ‘இது என்னய்யா புது இம்சையா இருக்கு!’ என டென்ஷன் ஆனான் தமிழன். பல விமானநிலையங்கள் அழகுக்கும் சுத்தத்துக்கும் பிரபலமாக, கூரைக் கண்ணாடிகள் உடைவதில் அகில உலக ஃபேமஸாகி மானபங்கப்பட்டது நம்ம சென்னை விமானநிலையம். ‘ஃப்ளைட்ல போறவனுக்கு எதுக்குய்யா ஹெல்மெட்டு?’ என்ற அளவுக்குப் பயணிகள் பயந்து திரிந்தார்கள். ‘66-வது தடவையா… 67-வது தடவையா?’ என கின்னஸ்காரன் நோட்பண்ணினான். ‘சர்வதேசியத்துக்கு முன்னாடி இது தமிழனுக்குத் தலைக்குனிவு…’ என டி.வி விவாதப் பார்ட்டிகள் கொந்தளித்தார்கள். இது, ஒரு தினுசான கூத்தாக இருந்தது. மனித உரிமை ஆணையம் வரை போய் விளக்கம் கேட்க, ‘கோழிமுட்டை ஸ்டைலில் ஏர்போர்ட்டைக் கட்டினதால இப்படி உடையுதோ?’ என, தாடையைச் சொறிந்தார்கள் அதிகாரிகள். ஆசியாவின் கேவலமான ஏர்போர்ட்களில் ஏழாவது இடம் பிடித்து, ஹிட்டடித்தது சென்னை ஏர்போர்ட். ஆனால், ஊரே கிறுகிறுத்த வர்தா புயலில் ஏர்போர்ட்டின் மேற்கூரைக் கண்ணாடி விழவில்லை என்பது ரொம்ப்ப்ப்ப முக்கியமான பிட்டு.


40p3.jpg 

அணிலா... ஆமைஸா?

ல-தளபதி ரசிகச் சண்டைகள்தான் நான்சென்ஸ் ஆஃப் 2016. ‘ஸ்டேட்டஸ், கமென்ட், மீம்ஸ் என எதற்கெடுத்தாலும் இவர்கள் மாறி மாறி மண்ணைத் தூத்த, ‘இருக்குற பிரச்னையில இதுவேற…’ எனக் கடுப்பானது தமிழகம். ஃபர்ஸ்ட் லுக் வந்தால் சாணி அடிப்பது, டீஸர் வந்தால் சட்டையைக் கிழிப்பது, ட்ரெய்லர் வந்தால் கூலிப்படை வைப்பது, படம் வந்தால் பப்படமாக்குவது என வருடம் முழுக்க ரெண்டு குரூப்களும் குண்டுவைத்துக்கொண்டே இருந்தன. #Six-years-of-surada என விஜய் வெறியர்கள் ‘வாடா… வாடா…’ வலை விரிக்க, #ten-years-of-janada என அஜித் விழுதுகள் கிளம்பி வர, இந்த ட்ரெண்டிங் பாண்டிகளிடம் சிக்கிச் சின்னாபின்னமானது நெட்டுலகம். தெரியாமல் வந்து சிக்குகிறவர்களையும் உரித்து உப்பு மிளகாய் தடவினார்கள். கீபோர்டைத் தட்டினோமா... கெட்ட வார்த்தை பேசினோமா என வேலையைப் பார்க்காமல், ‘நான் தளபதி ரசிகன்’ என ட்வீட்டினார் ஜி.வி.பிரகாஷ். கூடவே, நக்கலடித்து தல ரசிகர்களுக்கு ஸ்க்ரூ போட்டார். ‘கமான்... கமான்…’ எனக் கிளம்பிய தல குரூப், ஜி.வி.பி-யை தொம்சம் பண்ணியது. அஜித் பல்கேரியாவில் பாராசூட்டில் பறக்க, விஜய் ‘கறுப்புப் பணம் ஒழிப்புல ஒரு பாய்ன்ட்டு…’என அரசியல் ஸ்கெட்ச் போட… ‘போங்கடா, போய் புள்ளக்குட்டிகளைப் படிக்கவைங்கடா…’ என எவன் சொன்னாலும் கேட்காமல், அலகுக் காவடி தூக்கிக்கொண்டே இருந்தார்கள் அப்பாவி ரசிக ரௌடிகள்.


40p5.jpg

வதந்திடா... பரப்புடா!

வாட்ஸ்அப்தான் வருடத்தின் சிறந்த வதந்தி வாகனம். பதஞ்சலி பக்தர்களில் இருந்து சன்னி லியோன் பித்தர்கள் வரை, வகைதொகை இல்லாமல் வாட்ஸ்அப்பில் குரூப் ஆரம்பித்து, குரல்வளையைக் கடித்தார்கள். அவனவன் எதையாவது கிளப்பிவிட, மெசேஜ் டோன் கேட்டாலே மெர்சலானான் தமிழன். ‘அவனா இவனா... உண்மையா பொய்யா’ என எதுவும் புரியாமல் பூராப் பயலுகளும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் திரிந்தார்கள். ‘உலகையே அழிக்கும் புயல் ஒன்று சென்னையை நோக்கி வருது ஓடுங்க!’ என நடுச்சாமத்தில் ஓலை வரும். ‘காந்தப் புயல் வந்தால் செல்போன் எல்லாம் அவுட்’ என மட்ட மத்தியானம் கிளப்பிவிடுவார்கள். ‘ரயிலில் தொலைந்துபோன இந்தச் சிறுமியைப் பார்த்தால் சொல்லுங்க’ என மெசேஜ் வரும். ‘பாஸு… இதை எல்லாம் ரெண்டு வருஷம் முன்னாடியே கண்டுபிடிச்சு ஒப்படைச்சுட்டாங்க. அந்தப் புள்ள இப்போ காலேஜ் போகுது…’ என பின்னாலேயே பின்னியெடுப்பார்கள். ‘ப்ளஸ் டூ மார்க்‌ஷீட்டை மாலதி இன்னும் தேடிட்டிருக்கு’, ‘யுனெஸ்கோ, இந்த வருஷமும் சிறந்த பிரதமர் என மோடியைச் சொல்லிடுச்சு. ‘ஓம் சாய்ராம்’ மெசேஜை 100 பேருக்கு ஃபார்வேர்டு பண்ணலைன்னா, கக்கத்துல கட்டி வரும்’ எனச் சுழற்றி அடித்தார்கள். இதில் வாய்ஸ் மெசேஜ்கள்தான் கிடுகிடு இம்சைகள். ‘அப்போலோவில் இருந்து அம்மாவின் குரல் பதிவு’, ‘சசிகலாவுக்கு எதிராக சசிகலா புஷ்பாவின் பகீர் ஆதாரங்கள்’, ‘பெண் போலீஸுக்கு எஸ்.பி-யின் மிட்நைட் ஸ்பீச்’, ‘ராஜராஜசோழன் எங்க சாதிங்கிறதுக்கு ஆதாரம்டா...’, ‘ஸ்வாதி கொலை வழக்கு ரகசியங்கள்’, ‘புது 2,000 ரூபாய் நோட்டுல டூப்ளிக்கேட்’ என மிமிக்கிரியிலும் மிரட்டலிலும் போட்டுப்பொளந்தார்கள். ஜெயலலிதாவுக்குக் கிச்சடி கொடுத்ததில் இருந்து, திண்டுக்கல் லியோனிக்கு டெத் சர்ட்டிஃபிகேட் எடுத்தது வரை வரிசை கட்டி வந்த வதந்திகளால் வருடம் முழுக்க ஜாம் ஆகிக்கொண்டே இருந்தது சிக்னல். 


40p4.jpg

ஓடி... ஓடி... ஒட்டணும்!

2016-ம் ஆண்டின் அராஜக அட்ராசிட்டி இது. மிக்ஸி, கிரைண்டரில் தொடங்கி ஆட்டுக்குட்டி, பாப்பா ஜட்டி வரை, சிக்கும் இடங்களில் எல்லாம் அம்மா ஸ்டிக்கரை அடித்து ஒட்டினார்கள் அ.தி.மு.க-வினர். ‘தெக்குத் தெரு முக்குல சுக்குப் பாட்டி மண்டையப் போட்ருச்சு… எடுக்கிறதுக்கு முன்னால அது நெத்தியில ஸ்டிக்கரை ஒட்டிருங்கடா!’ என ஊருக்கு ஊர் ஆவேசமாக அலைந்தது அம்மா படை. சென்ற வருடம் நிவாரணப் பொருட்களில் எல்லாம் ஸ்டிக்கரை ஒட்டி விசுவாச வெறி காட்டியவர்கள், சென்ற ஆண்டு உடுமலைப்பேட்டையில் நடந்த கல்யாணத்தில் மணமக்கள் நெற்றியில் கட்டிக் கலவரப்படுத்தினார்கள். ‘பால் சொம்புல ஒட்டுங்கடா!’ என ஃபாலோ பண்ணிப் போக, தெறித்து ஓடினார்கள் ஜோடிகள். உச்சகட்டமாக அம்மாவின் பிறந்த நாளுக்கு 668 உருப்படிகளைப் பிடித்து, அம்மாவின் உருவத்தை நெஞ்சிலும் கையிலும் கதறக் கதறப் பச்சை குத்தியது எல்லாம் தெறி பேபி டெர்ரரிசம்.


40p7.jpg
 

நாங்க வேற லெவலுங்க!

டி.ஆர் - சிம்பு, சென்ற வருடமும் ‘கலக்கப்போவது யாரு?’ ரவுண்டிலேயே இருந்தார்கள். யானைக்கவுனியில் பூந்திக்கடை போட்ட சேட்டுப் பையன் மாதிரி டெவலப் ஆகியிருந்தார் சிம்பு. ‘உடம்பைக் கொற தலைவா!’ என ரசிகர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டார்கள். `‘தள்ளிப் போகாதே’ பாட்டு ஷூட்டிங்குக்கு வர மாட்றாப்ல’ என கௌதம் மேனன் கொடும்பாவி கொளுத்தினார். ‘டைம்கிறது ஒரு சயின்ஸ். நான் சீக்கிரம் வருவேன்; லேட்டா வருவேன். ஆனா, கரெக்ட்டா வர மாட்டேன். ஏன்னா, டைம்கிறது ஒரு சயின்ஸ்…’ என சிம்பு கசக்கி ஊத, ‘எங்கேயோ போய் ஆசி வாங்கிட்டு வந்துட்டாப்ல’ என ஜெர்க்கானது கோடம்பாக்கம். ‘நான் போட்டியிலேயே இல்லைங்க. ஜீரோங்க. கிரிவலம் போறேங்க. என்ன ஏன் கூப்பிடுறீங்க?’ என சிம்பு செதறடிக்க, விஜய் டி.வி டிடி-க்கே கிறுக்கு பிடித்தது. பையனுக்கு உல்ட்டாவாக, ‘இன்னும் நான் போட்டியிலதான் இருக்கேன். மூவ்மென்ட்ஸ் பாரு…’ என இறங்கிக் குத்தினார் டி.ஆர். சன் டி.வி-யில் நீதிபதி கெட்டப், விஜய்யில் சதாவோடு யூத் செட்டப் என டி.ஆர் எப்பவும் ‘கலக்கு சித்தப்பு’தான். 


40p6.jpg

உடல் டப்ஸ்மாஷுக்கு... உயிர் லைக்குக்கு!

சென்ற வருஷம் ஓவராகவே எகிறிக் குத்தினான் இணையத் தமிழன். சாவை கன்ஃபர்ம் பண்ணாமலேயே ஆர்வக்கோளாறு ஃபீலிங்கில் `RIP’ போட்டு, பல பேர் அசிங்கப்பட்டார்கள். ஆனாலும் அடுத்த ஸ்டேட்டஸிலேயே ‘புஜ்ஜிம்மா சி.ஆர்.சரஸ்வதி, குட்டிம்மா வளர்மதி எல்லாம் வாங்க வாங்க’ என ஃபுல் ஜாலி ஆனார்கள். முட்டுச்சந்து, அடுப்படி, மொட்டைமாடி என எங்கெங்கும் மூஞ்சை நீட்டி நீட்டி டப்ஸ்மாஷ் என்ற பெயரில் கொரவளையைக் கடித்தார்கள். ஷாப்பிங் செய்தபடி ஃபேஸ்புக் லைவ்வில் பேசுவது, டவுசர் மாட்டியபடி டான்ஸ் ஆடுவது என அடுத்த கட்டத்துக்குத் தவ்வினார்கள். படம் பார்ப்பவர்களைவிட, விமர்சனம் செய்பவர்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பினார்கள். ‘படம் மொக்க… குறுக்கப் போட்டு அறுக்குறாய்ங்க’ ‘வி.எஃப்.எக்ஸ் சரியில்லை’ ‘காப்பிரைட் வாங்காம காப்பி பண்ணிட்டா’ என, இந்த வெள்ளிக்கிழமை ராமசாமிகளின் டார்ச்சர் ஓவரோ ஓவர். இருக்கிற இம்சையில், ஜியோக்காரன் இலவசமாக ஜீபி-க்களை அள்ளிவிட, அவனவனும் ஆறேழு அவதாரங்களுடன் திரிந்தார்கள். ட்விட்டரில் ஆர்டி பிச்சை எடுப்பது, நியாயம் கிடைக்கும் வரை ஷேர் பண்ணுங்க என முழங்கிவிட்டு ஆஃப்லைன் போவது, சிக்குகிற டாப்பிக்குகளில் எல்லாம் டாப்பைப் போடுவது என ‘எதை எடுத்தாலும் அஞ்சு நிமிஷம்… எதை எடுத்தாலும் அஞ்சு நிமிஷம்…’ எனப் போய்க்கொண்டே இருந்தான் கணினித் தமிழன்.


 40p8.jpg

டிவிரவாதிகள்!

2016-ன் அதிபயங்கரவாதம், செய்தித் தொலைக்காட்சிகளின் விவாத நிகழ்ச்சிகள்தான். எங்கே என்ன நடந்தாலும் நான்கைந்து பேர் கூடி, கட்டம் கட்டிக் கதற, தமிழ்நாட்டுக்கே காது அடைத்தது. ‘ஸ்டுடியோலயே டிபன் இருக்குங்க… ஷெர்வானி இருக்குங்க… ரோஸ் பவுடர் இருக்குங்க’ என போன் அடித்ததுமே கால் டாக்ஸிகளில் கிளம்பிவரும் 20 பேரால், தினசரி திருவிழா கொண்டாடினான் தமிழன். ‘என் கருத்தைப் பதிவு பண்ணவிடுங்க...’, `இருங்க முடிச்சுர்றேன்’ என ஒருவர் கதற, ‘உங்களுக்கு என்ன தெரியும்... ஆதாரம் இருக்கா?’ என ஒருவர் எகிற, ‘அடேய்… புள்ளைங்களைப் படிக்கவிடுங்கடா’ என டென்ஷன் ஆனார்கள் குடும்பத் தலைவிகள். மனுஷ்யபுத்திரனின் ஒயிலாட்டம், ஆவடி குமாரின் காவடியாட்டம், சி.ஆர்.சரஸ்வதியின் கரகாட்டம், ராகவனின் பால்குடம்… என மை முறுக்கு பார்ட்டிகள் அட்டகாசம். ‘நீங்க உண்மையைச் சொல்லுங்க சொல்லாமப்போங்க... ஊழலைத் தடுங்க தடுக்காமப்போங்க... எங்களுக்கு விஜயதரணியும் ஜமீலாவும் மொளப்பாரி தூக்கியே ஆகணும்’ என ஜாலியானது வருத்தப்படாத வாக்காளர் சங்கம். பத்திரிகையாளர் மணி, ஓய்வுபெற்ற சுப்பிரமணி, சமூக ஆர்வலர் சாந்தி… என புள்ளிவிவர குரூப்பின் புலியாட்டம் வேறு. நெறியாள்கை என்ற பெயரில் குணசேகரன்,  ரங்கராஜ் பாண்டே, கார்த்திகைச்செல்வன் செய்தவை எல்லாம்… டி.ஆர்.பி தாதாயிசம்.


40p9.jpg 

ஓட்டு போட வரலையே!

துதான் போங்கு 2016. ‘ஓட்டு போடுங்கோ… ஓட்டு போடுங்கோ…’ என லக்கானி அண்ட் கோ அடித்த கூத்து, செம ஊத்து. தேர்தலையொட்டி ‘மறக்காம ஓட்டு போடுங்க’ என விதவிதமாக விளம்பரம் செய்து, மாஸ் காட்டியது தேர்தல் ஆணையம். கார்ட்டூன்கள், பேனர்கள், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் என இந்தப் பிரசாரமும் பின்னியெடுத்தது. ஹாக்கி பேட் மீசையோடு வந்து, ‘ஓட்டு போடுறது உங்க கடமை…’ என சூர்யா உருக, தினேஷ் கார்த்தி குடும்பத்தோடு கோரிக்கைவைக்க, அஸ்வின் அறிவுரை சொல்ல, கமல் வார்த்தைகளை மாற்றிப்போட்டு கரகரக்க… ‘போடுறோம் பாஸு… போடுறோம் பாஸு!’ என தம்ஸ்அப் காட்டினான் தமிழன். ஆனால், தேர்தல் அன்று இப்படி கருத்துச் சொன்னவர்களிலேயே மூன்று பேர் ஓட்டுபோட வராமல் போக, ‘பகத்சிங்க அவுத்துவிட்ருவேன் பாத்துக்க!’ எனக் கடுப்பானது பப்ளிக்.


40p11.jpg
 

சந்தோஷமா வாங்க... சட்டையைக் கிழிச்சுக்கிட்டுப் போங்க!

2016-ம் ஆண்டின் பஞ்சர் பஞ்சாயத்து. ‘வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என ‘சொல்வதெல்லாம் உண்மை’க்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இன்னொரு பக்கம் ‘நிஜங்கள்’ என குபீர் என்ட்ரி கொடுத்தார் குஷ்பு. குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் இவர்கள் செய்தவை எல்லாம், கொடுமை… கொடுமை. ‘உன் புருஷன் இந்தப் பொண்ணை வெச்சிருந்தாரா?’, `அவரு தம்பி உன்னைக் கட்டாயப் படுத்தினாரா?’, `மாமனாரே அப்பிடியா… பயப்படாமச் சொல்லு’ என ஃபுல் மேக்கப்பில் அப்பாவிகளை உருட்டி எடுத்தனர். ‘அடிச்சிருவியா… தூக்கிப்போட்டு மிதிச்சிருவியா… சங்கக் கடிச்சிருவியா?’ என இவர்கள் டி.ஆர்.பி-க்கு ஏற்றிவிட, சமாதானம் பேச வந்தவர்களே சண்டையில் மண்டையைப் பொளந்துகொண்டனர். உச்சகட்டமாக, ‘டேய்... நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ எனப் பஞ்சாயத்துக்கு வந்தவனை குஷ்பு சட்டையைப் பிடித்து சவட்ட, சுந்தர்.சி-க்கே கிறுகிறுத்தது.  `என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா!’ என ஸ்ரீப்ரியா கருத்துச் சொல்ல, ‘நான் பண்றது பொதுசேவை’ என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன். தட்ஸ் ஆஃப்டர் தி பிரேக்.


40p10.jpg

அப்ரூவர் அய்யாசாமி!

ழ.கருப்பையாதான் சென்ற வருடத்தின் முந்திரிப்பருப்பையா. அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான அண்ணாச்சி, `கட்சியில என் மனசு புண்ணாச்சி…’ என திடீர் ஸ்டேட்மென்ட் தட்டினார். துக்ளக் மேடையில் ஏறி, ‘அந்த அம்மா வேஸ்ட்… அ.தி.மு.க-வே ஊழலாகிருச்சு. சீல் வெச்சுருச்சு…’ எனப் பற்றவைக்க, ‘பழம் என்ன திடீர்னு வெம்புது?’ என மெகா காமெடிக்கு ரெடியானது தமிழகம். ‘அவிய்ங்க மோசம்யா…’ என விகடனில் அப்ரூவர் பேட்டி தட்டினார். ‘கெண்டைக்கால் நரம்பை அறுத்துருவோம்மா?’ என அல்லக்கைகள் கொதிக்க, ‘பொறுத்துப் போடுவோம்…’ என கேட்டை மூடியது கார்டன். சொம்பு நிறைய காபி குடித்துவிட்டுத் தெம்பாகக் கிளம்பியவர், ரங்கராஜ் பாண்டேவிடம் சிக்கினார். ‘திடீர்னு எங்கே இருந்து வந்தது ரோஷம்?’ என பாண்டே கோழியை உரித்து அடுப்பில் காட்ட, சட்டியில் குதித்துப் பொரிந்தார் கருப்ஸ். போறவன் வர்றவன் எல்லாம் கதவிலும் காரிலும் கல் எறிய, ‘அறிவாலயத்துக்கு ஊபர் புக் பண்ணுப்பா’ என, கலைஞரைப் பார்த்து சமூகநீதி சீஸன் டூவில் ஐக்கியம் ஆனார் அண்ணாச்சி.


40p12.jpg 

ரணகள பாண்டே

ங்கராஜ் பாண்டேதான் சென்ற ஆண்டின் ரணகள பாண்டே. பேட்டி என்ற பெயரில் பல பேருக்குப் பட்டி டிங்கரிங் பார்த்தார். `வாங்க பாஸு... பப்ளிசிட்டி பின்னிருவோம்’ எனப் பலரை பார்சல் பண்ணிக்கொண்டுவந்து டவுசரைக் கழட்டினார். `பேரு பாண்டே... வாயைக் கட்டணும் தாயே’ எனக் காசு வெட்டிப்போட்டார்கள் கட்சிக்காரர்கள். வாக்அவுட் செய்த பழ.கருப்பையா எல்லாம் வயநாடு வரை போய் செய்வினை வைத்தார். `நான் நடுநிலை. நடுவுல உட்கார்ந்திருக்கேன் பாருங்க’ எனக் கூவியவர், சட்டமன்ற நேரத்தில் பொசுக்கென அம்மா ஸ்டிக்கர் ஒட்டினார். அம்மா பதவியேற்பு விழாவில், பச்சை நிறச் சட்டை போட்டுக்கொண்டு போக, `நம்மள காலி பண்ணிருவான்போலிருக்கே’ என அமைச்சர்களே பதற்றம் ஆனார்கள். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாதபோது, ஒரு ஜோசியரைக் கூட்டிவந்து, `அம்மா எப்போ குணமாவாங்க?’ என இவர் கருத்து கேட்டது எல்லாம் காமெடி யாவாரம்.  அப்போலோவில் ஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வருவதற்கு முன்னரே செய்தியாக்கிச் சிக்கிக்கொண்டு, `போடா... போடா சூனாபானா...’ எனத் துண்டைச் சுழற்ற, `நீ நல்ல்ல்லா வருவ தம்பி’ என வியந்தது அரசியல் அரங்கம்.


40p13.jpg 

டாப் வரப்புத் தகராறு!

ன்னும் குஞ்சே பொரிக்கலை, அதுக்குள்ள லெக்பீஸுக்கு அடிச்சுக்கிற கதையாக, எடுக்காத படத்தின் கதைக்காக பங்காளிச் சண்டையில் இறங்கினார்கள் பாரதிராஜாவும் பாலாவும்.

வேல.ராமமூர்த்தியின் `குற்றப்பரம்பரை’ நாவலை பாலா படமாக எடுக்கப்போவதாகச் செய்தி வந்தது. இதைப் பார்த்து, `குற்றப்பரம்பரை என் பரம்பரைக் கதை. தட் இஸ் மை ட்ரீம் புரொஜெக்ட். என் எச்சிலை பாலா தின்ன மாட்டான்’ என மூக்கு விடைப்புப் பேட்டி தட்டினார் பாரதிராஜா. உடனே மண்டை ஓட்டு மாலையோடு எகிறிவந்த பாலா, `எச்சரிக்கிறேன்’ என பிரஸ்மீட் வைக்க, `இன்னிக்கு ட்ரெண்டிங் இரை சிக்கிருச்சு’ என ஜாலியானான் தமிழன். இங்கிட்டு வேல.ராமமூர்த்தி, அங்கிட்டு ரத்னகுமார் என, பின்கள ஆட்டக்காரர்கள் வேறு `எனக்கு ஒரு பிட்டு... எனக்கு ஒரு பிட்டு’ என வர, `சீக்கிரம் முடிங்க பாஸு. அஸ்வின் ஆறு விக்கெட் எடுத்துட்டாப்ல. அங்கே போகணும்’ என அடுத்த வேலைக்குக் கிளம்பியது பப்ளிக்.


40p14.jpg 

சீமானின் ‘சிரிப்புடா’

‘எளையவனே… மூத்தாருக்கு வழுக்கையா ஒரு தேசிய பானம் வெட்டு’ என இளநீர் கடைக்காரரை இதயநிறுத்தம் பண்ணியதில் தொடங்கியது சீமான் தாக்குதல். சட்டமன்றத் தேர்தலில், ‘234 தொகுதிகளிலும் ஆட்களை நிறுத்துறோம்... ஒரு அள்ளு அள்றோம்’ என ஸ்கெட்ச் போட்டார். ‘அண்ணா, 200 பேர்தானே இருக்கிறோம். 34 பேருக்கு எங்கே போவோம் அண்ணா?’ என தம்பிகள் கேட்க, ‘போற வழியிலே பிடித்துக் கொள்வோம்டா’ எனக் கறுப்பு காரில் கிளம்பினார் சிவகங்கை சே குவேரா. போகிற வழி எல்லாம் முன் ஸீட்டில் இருந்து பின் ஸீட்டுக்குத் திரும்பி, `நம்ம ஆட்சியிலே திருச்சி தலைநகரம், மதுரை கலைநகரம், மட்டக்களப்பு மற்றொரு நகரம். வெளங்குதுதானே!’ எனப் பேசிக்கொண்டே வர, அதை ஃபைவ் டியில் எடுத்து, இணையத்தைத் தெறிக்கவிட்டார்கள் தம்பிமார்கள். ‘மத்தியான வெயிலிலே சனம் எப்படிடா வரும்… சாயங்காலம் வரலாம். அந்த மீன் குழம்பை இரவு உணவுக்கு எடுத்துவைடா’ எனப் பின்னியெடுத்தது பிரசாரம். ‘ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என அண்ணன் விட்ட தேர்தல் அறிக்கையும் செம ஹிட். டி.வி விவாதத்தில் அருணனை ‘யோவ்… லூஸாய்யா நீ?’ என ஒரண்டை இழுக்க, அதுவும் காமெடி வைரல்.


 40p15.jpg

வைகோ... 2.0 தந்திரன்!

‘கொடி பறக்குதா… கொடி பறக்குதா…’ என வருடம் முழுக்க பார்ட்டி கொந்தளித்துத் திரிய, ‘கொடிலாம் பறக்கலை… அடி கருகுது பாருங்க’ என டென்ஷனானது மிச்சசொச்சக் கட்சி. ‘வி கேன் சேஞ்ச்’ எனத் தேர்தலுக்கு மக்கள் நலக் கூட்டணி கட்டினார். முறுக்கு மீசை திருமா, மூக்குமுட்டி முத்தரசன், ஃபுல் ஷேவிங் ஜி.ஆர் என செம காம்பினேஷன் சிக்க, ‘ஸ்டார்ட் ம்யூஜிக்’ எனக் கிளம்பினார் வைக்ஸ். ‘தலைவா... உன் காலடியில் எத்தனையோ மணிவிளக்கு…’ என விஜயகாந்த்தைத் தேடிப் போக, ‘மக்க கலங்குதப்பா... மடி புடிச்சு இழுக்குதப்பா…’ என பின்னாலேயே மாலை கட்டிப் போனது திருமா அண்ட் கோ. கேப்டனும் வாசனும் வந்து சிக்க, கலவர ஃபார்முக்குப் போனார் கலிங்கப்பட்டியார். `72-லே… அண்ணா சாலையிலே…’ என ஸ்டேஜுக்கு ஸ்டேஜ் தலைவன் தம் கட்ட, கூட்டாளிகள் ஸ்டேஜிலேயே கோமா ஸ்டேஜுக்குப் போனார்கள். கடைசி நேரத்தில் கோவில்பட்டியில் பேக்கடிக்க, அதுவும் சூது. தேர்தலில் ம.ந.கூ வாஷ்அவுட் ஆக, ‘தி.மு.க ஆட்சிக்கு வரலைல்ல… அதான் என் ராஜதந்திரம்’ என்றார். ஃபர்ஸ்ட் ஆஃப்ல காமெடியன், செகண்ட் ஹாஃப்ல வில்லன் என அது புது ட்விஸ்ட். ‘கொண்டுபோய் செஞ்சுட்டாப்ல…’ எனக் கிறுகிறுத்தது கேப்டன் கூடாரம். கொஞ்ச நாளைக்கு பச்சை முண்டாசுக் கட்டி அலைந்தது சைடு டிஷ் காமெடி. கலைஞரை சாதி சொல்லிக் கலாய்த்து, பிறகு மன்னிப்பு கேட்டது மெயின் டிஷ் காமெடி. அம்மாவைப் பார்க்க அப்போலோ போய், ‘லண்டன் டாக்டர் விசிட்டிங் கார்டு குடுத்தாரு’ என்றது, காவேரி ஆஸ்பத்திரி முன்பு வலுவாக சிக்கியது… அத்தனையும் வண்டு முருகன் காமெடிகள்.


40p16.jpg 

கிக்கிக்கி மொழி!

`நிம்டா... போஸ்ரா... கோஸ்ராஸ் தெல்மீ... உன்னா கஸ்ட்ட்டாக்க்க்...’ என்ற `பாகுபலி’ மொழியை எல்லாம் லெஃப்ட்டில் அடித்தது கேப்டன் லாங்வேஜ். தி.மு.க-வுக்குப் பழத்தை உருட்டி உருட்டி விளையாடி, மடாரென ம.ந.கூ-வில் முதலமைச்சர் வேட்பாளர் ஆனது சிரிப்பு ட்விஸ்ட். அப்புறம் மேடைக்கு மேடை அவர் அடித்தது எல்லாம் கோழிக்கறி காமெடி. ‘என்ன... வொயர் எல்லாம் வந்து மாட்டுது மக்கழே!’ எனக் கொழகொழத்தார். ‘ழேய்... யார்றா அங்கே? இருக்கிறவன் எல்லாம் சொம்பைகளா?’ என வெளுவெளுத்தார். பொசுக்கென கண்ணீர்விட்டுக் கரகரத்தார். ‘கிங்கா... கிங் மேக்கரா சொல்லுங்க மக்களே!’ என பிரேமலதா அண்ணியார் கேட்க, ‘சில்ல்லுனு ஒரு கிங் ஃபிஷர் தலைவா…’ எனக் கூறி, உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது இடம் வழங்கினார்கள் மாண்புமிகு மக்கழ். 


40p17.jpg 

முக்குக்கு முக்கு முதலமைச்சர் வேட்பாளர்... முடியலை!

‘முடியட்டும் விடியட்டும்’ எனக் கிளம்பினார் மு.க.ஸ்டாலின். ‘மொதல்ல உங்க அப்பாவோட சி.எம் ஆசை முடியட்டும். அப்புறம்தான் உங்களுக்கு விடியும்’ எனக் கடுப்பானார்கள் எடுப்புகள். ‘முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்தான். ஆனா, முதலமைச்சர் நான்தான்’ எனக் கலைஞர் வேலையைக் காட்ட, பேராசிரியரிடம் குமுறிவிட்டு பேன்டை மாட்டிக்கொண்டு கிளம்பினார் தளபதி. போற இடத்தில் எல்லாம் அவர், ‘புலவர் சொன்னதும் பொய்யே… பொய்யே...’ எனப் பாட, ‘உங்களை பி.எம்-கூட ஆக்குறோம். பாடாதீங்க தளபதி’ என எகிறியது ஏரியா. ஒரு டஜன் ஏ.சி-க்களை வைத்துக்கொண்டு மேடையில் ஜெயலலிதா தனியாக உட்கார, கீழே வேட்பாளர்கள் நின்றது எல்லாம் அவல நகைச்சுவை. `அன்புமணியாகிய நான்...’ என மாம்பழ ஏரியா மஞ்சள் நோட்டீஸ் ஒட்டியதுதான் மகாமெகா காமெடி. ‘முதல் நாள் முதல் கையெழுத்து’ என சி.எம் கனவிலேயே அன்பு அலைய, ரூம் போட்டுச் சிரித்தார்கள் மக்கள். ‘முதலமைச்சர்னா… ஹரியானாவா இருந்தாலும் ஓக்கே, பீகாரா இருந்தாலும் ஓக்கே மக்கழே…’ என சுழற்றியடித்த விஜயகாந்த், ‘தள்ளு தள்ளு… நாளைய முதலமைச்சர் வர்றாரு’ என ஜிம்பாய்ஸ்களோடு பில்டப் கொடுத்த சீமான் என எல்லாமே ‘என்னமோ போடா மாதவா.’  


 40p18.jpg

சசிகலா புஷ்பாக்கா…  2016-ம் ஆண்டின் சொர்ணாக்கா!

கைதொகை இல்லாமல் அதிரடிகளை அள்ளிப்போட்டார் சசிகலா புஷ்பா. தலைநகரத்தில் இருந்தபடி கலவரங்களைக் கிளப்பியதில் இவருக்கே முதல் இடம். வாட்ஸ்அப் ஆடியோ, மழை டான்ஸ், பைக் ரைடு என, தினம் தினம் பதறவைத்தன ஒவ்வொன்றும். இந்த வருடம் திருச்சி சிவாவுடன் இவர் இருந்த போட்டோக்கள் ரிலீஸாக, `அது போட்டோஷாப்’ எனக் கதறினார்கள். கேப்பே விடாமல் டெல்லி ஏர்போர்ட்டில் சிவாவை எகிறி அறைய, மறுபடி பத்திக்கிச்சு. கார்டனுக்குக் கூப்பிட்டு ஒரு காட்டு காட்ட, பார்லிமென்ட்டையே அலறவைத்தார் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ‘சசிகலா கட்சியைக் கைப்பற்றப் பார்க்கிறார். விட மாட்டேன் நான்…’ என இவர் கேஸ் போட, சசிகலா வெர்சஸ் சசிகலா செம பப்ளிசிட்டி. அப்புறம் ஆ.வி., ஜூ.வி., டி.வி எல்லாம் புஷ்பாக்காதான்.


40p19.jpg 

தெறி பாட்டி!

க்சுவலி கஸ்தூரி பாட்டி, சினிமா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். தேர்தல் விளம்பரத்துக்காக தி.மு.க குரூப் கொண்டுபோய், ‘வானத்துல பறக்கிறவங்களுக்கு நம்ம கஷ்டம் எப்படிப் புரியும்? போதும்ம்மா… முடியட்டும் உங்க ஆட்சி’ எனக் கோப ஆக்ட் கொடுக்கவைத்தார்கள். மேட்டர் தெரியாமல் அடுத்த நாளே அ.தி.மு.க பார்ட்டிகள் தூக்கிப் போய், ‘பெத்தபுள்ளகூட சோறு போடலை. எனக்கு சோறு போட்ட தெய்வம் புர்ச்சித் தல்வி அம்மாதான்’ எனக் கதறவைத்தார்கள். ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களும் வர, ‘என்னங்க சார்... ஒங்க திட்டம்?’ எனக் கொந்தளித்தது ஏரியா. ‘அவங்க 1,000 குடுத்தாங்க... இவங்க 1,500 குடுத்தாங்கப்பா…’ என பாட்டி கையெடுத்துக் கும்பிட, ‘எங்களுக்கும் அப்படித்தான்!’ எனக் காசுக்கு ஓட்டைக் குத்திவிட்டு `மகிழ்ச்சி’ என சூப்பர் சிங்கர் பார்க்கப் போனது பொதுஜனம்.


40p20.jpg 

சபையக் கூட்றோம்... படத்த ஓட்றோம்!

‘யாருய்யா அந்த மூணு பேரு… எனக்கே பார்க்கணும்போல இருக்கே!’ என வார்னர் பிரதர்ஸில் இருந்து ஆள் அனுப்பும் அளவுக்கு அத்தனை படங்களிலும் சிரிப்ஸ் காட்டினார்கள் இந்த பாய்ஸ். ‘கேமரா இல்லாமக்கூட ஷூட்டிங் கிளம்பலாம். ஆனா,  மொட்டை ராஜேந்திரனும் யோகிபாபுவும் ரோபோ சங்கரும் இல்லாமக் கிளம்ப முடியாது’ என புது ரூல் போட்டது கோடம்பாக்கம். வெளியாகும் பேய் படங்களில் எல்லாம் பேய் இருக்கோ இல்லையோ... இவர்கள் இருந்தார்கள். அதுவும் ஸ்க்ரீனில் மொட்டை ராஜேந்திரன் வந்தாலே, யூத்துகள் அப்ளாஸ் அள்ளியது. கரகரக் குரலில் ஸ்பூஃப் டயலாக்ஸ் பேசிப் பின்னியெடுத்தார். பம்பத் தலையும் பக்கா கலாசலுமாக யோகிபாபு செம ஸ்கோர் அடித்தார். ரோபோ சங்கர் மிமிக்ரி, மோனோ ஆக்டிங் டான்ஸ் எனக் கலந்துகட்டிக் கலங்கடித்தார். அஜித், விஜய் படங்களில் இருந்து உப்புமா படங்கள் வரை அத்தனையிலும் இவர்கள் வந்து வந்து லந்தடிக்க, கெக்கேபிக்கேலாகின தியேட்டர்கள்.


40p21.jpg 

சதுரங்க வேட்டை... செம சேஸிங்!

‘நான் சூசைட் பண்ணிக்கப்போறேன்... நான் சூசைட் பண்ணிக்கப்போறேன்’ என எழுதி வைத்துவிட்டு ‘வேந்தர் மூவீஸ்’ மதன் எஸ்கேப்பாக, பரபரத்தது மீடியா. மெடிக்கல் ஸீட் மீடியேட்டராகப் பல கோடிகளைப் பதம் பார்த்த பார்ட்டியை வலைவீசித் தேடியது போலீஸ். ஃபேன்ல தொங்கிருப்பாரோ, ஆத்துல முங்கிருப்பாரோ என ஆளாளுக்கு யோசிக்க, வாரணாசி, கோவா, மேகாலயா என ஜாலி டூரில் இருந்தார் மாப்ளே. இன்டர் கட்டில் இது சம்பந்தமாக ஐ.ஜே.கே தலைவர் பச்சமுத்துவை காக்கிகள் விசாரிக்க, வேந்தருக்கே வேர்த்தது. இந்தக் களேபரங்களுக்கு நடுவே கீதாஞ்சலியோடு பிக்னிக், நிஷாவோடு டேட்டிங் என சாங் மான்டேஜ் கட் பண்ணிக்கொண்டிருந்தார் மதன். கடைசியாக திருப்பூர் சிநேகிதி வீட்டுப் பாதாள ரூமில் பதுங்கி இருந்தவரை, ‘பெரிய பின்லேடன்… வாடா’ என பொடங்கையில் போட்டுத் தூக்கியது போலீஸ். ‘புது 2,000 நோட்டாவே சில கோடிங்க வெச்சிருந்தாப்ல’ என நியூஸ் வர, ‘எங்க கார்டுக்கு மட்டும் ஒரு நோட்டுக்கு மேல வர மாட்டுதேடா!’ எனக் கொலவெறியானார்கள் மக்கள்.


40p22.jpg 

காமெடி காம்ரேட்!

‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே...’ ரிங்டோனை உடனடியாக மாற்றி, ‘சின்னம்மா என்றழைக்காத தா.பா இல்லையே’ என செட் பண்ணினார் தோழர். அம்மா விசுவாசத்தில் பன்னீருக்கே தண்ணி காட்டிய தாப்ஸ், சேப்புக் கட்சியிலேயே ஸ்லீப்பர் செல்லாக இருந்தார். மக்கள் நலக் கூட்டணியில் அவனவன் தலை காய்ந்து அலைய, இவர் மட்டும் ஃபுல் ஏ.சி-யிலேயே இருந்தார். தேர்தலில் கூட்டணி குடை சாய, ‘நாங்க கூப்பிட்ட இடத்துக்கு வந்திருக்கலாம்ல…’ எனத் தோழர்களை வெறுப்பேற்றினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ‘கட்சில எவனுக்குமே இல்லாத ஒரு கெட்ட பழக்கம் எனக்கு இருக்கு’ என இம்மிடியேட்டாகக் கிளம்பி கார்டன் போனவர், ‘கும்புடுறேன் சின்னம்மா’ என சரண்டரானார்’. `சின்ன அம்மாவுக்குப் பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது’ என ஆவேசப் பேட்டி வேறு தட்ட, ‘வேட்டியக் கட்டு பெரியப்பு…’ எனக் கடுப்பானார்கள் காம்ரேட்ஸ்.


40p23.jpg 

ஆதீனம் எண் 289!

துரை ஆதீனம்… அதே ஆசீர்வாதம், அதே அலப்பறை, அதே காமெடி.

வழக்கமாக மடத்தில் இருந்தே அரசியல் பண்ணும் ஆதீனம், இந்த முறை தெருவுக்கு வந்து அ.தி.மு.க பிரசாரத்தில் இறங்கினார்.  ‘மானம் அவமானத்தைப் பார்த்தால் மக்கள் பணி பண்ண முடியுமா?’ எனப் பிரசார மேடையில் பேச, ‘ஆமா சாமி… ஆமா சாமி…’ என ஜாலியானது கூட்டம். ‘கடவுள்தான் திருப்பரங்குன்றம் வேட்பாளராக ஏ.கே.போஸ் பெயரை அம்மாவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்’ என அடுத்த பிட்டைப் போட, ‘போடு சாமி… போடு சாமி’ எனத் திகுதிகுத்தது. ` ‘ஆல் மணி பிராப்ளம் ஜனவரில சால்வ்டு’னு சிவன் கனவுல சொல்லிட்டாரு’ எனப் போட, ‘கெளப்பு சாமி… கெளப்பு சாமி’ எனக் கலகலத்தது. ‘திருஞானசம்பந்தர் சைவம் வளர்க்க ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்துக்கு 289-வது ஆதீனமாக வந்த  அருணகிரிநாதர் அந்தக் காலத்து சினிமா நிருபர். அதனாலேயே சினிமா விழாக்களில் எல்லாம் சிறப்பு சேர்த்தார். கூடவே இப்தார் விருந்தில் கஞ்சி குடித்தார். அதனால ஆதீனத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குகிறோம்….’ என இந்து அமைப்புகள் கொளுத்திப்போட, ‘போங்க ராஸ்கேல்ஸ்…’ என கியர் போட்டு போய்க்கொண்டே இருந்தது சாமி.


40p24.jpg 

சின்னம்மா... காமெடி ட்ராஜடி!

‘அம்மா… அம்மா…’ என அலகு குத்திய அத்தனை பயலுகளும் ஓவர்நைட்டில் ‘சின்னம்மா… சின்னம்மா…’ எனத் தீச்சட்டி தூக்க ஆரம்பித்தார்கள். அம்மாவைக் கண்டாலே அத்தனை ஆசனங்களும் போடும் அமைச்சர்கள், இனிமேல் திருந்துவார்கள் என நினைத்தோம். ‘அப்படி எல்லாம் மானம் ரோஷம் வந்திருமா…’ என ‘சசிகலா பணிவு ஜிம்’மைத் தொடங்கி பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தார் பன்னீர். ‘புதுச் செயலாளரா வாங்கம்மா…’ என தம்பிதுரை, செங்கோட்டையன் எல்லாம் புரண்டு வர, ‘முதலமைச்சரா வாங்கம்மா…’ என பொன்னையன், வளர்மதி எல்லோரும் உருண்டு வர… ‘காலைக் காட்டுங்கம்மா… காலைக் காட்டுங்கம்மா…’ எனக் கொள்ளப் பேர் திரண்டு வர… அம்புட்டும் காமெடி. கிழக்கு பார்க்க நின்ற மகாதேவன், தெக்கால நின்ற திவாகரன், தலைமாட்டில் நின்ற பாஸ்கரன்… எவன் எப்போ வருவானோ என மக்கள் திகிலடித்துக் கிடக்க, அத்தனை ஃப்ளெக்ஸ் களிலும் சிரிக்கிறார் சின்னம்மா. ஜெயா டி.வி-யைத் திருப்பினாலே ‘சின்னம்மா... சின்னம்மா…’ எனக் காதில் கடப்பாறையை விடுகிறார்கள். `நீங்க பீச்சுல மொட்டை அடிங்க, மன்னார்குடியில வெள்ளை அடிங்க, எங்க வயித்துல அடிக்காதீங்கடா சாமிகளா!’ என ஏ.டி.எம் க்யூவில் நின்றபடியே புலம்புகிறான் தமிழன்.


40p25.jpg 

ரெய்டு ரெங்குடு!

ம் கைகளில் இல்லாத 2,000 ரூபாய்த் தாள்களைக் கட்டுக்கட்டாகக் காண நேர்ந்தால் யாருக்குத்தான் காண்டாகாது. ரெய்டுவிட்ட இடங்களில் எல்லாம் அதுதான் கிடைத்தது. ஆளை அசைத்துப்பார்க்க அடிக்கடி ரெய்டுவிட்டு அலறவிடுவதுதான் இந்த ஆண்டின் அசால்ட் பாலிடிக்ஸ். தேர்தல் நேரத்தில் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு உற்சவம், தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு வரைக்கும் கன்டினியூ ஆனது. `ரெய்டுவிட்ட வீடு முழுவதும் கட்டிக்கட்டியாகத் தங்கம், கெட்டிக்கெட்டியாக புத்தம் புது 2,000 ரூபாய்த் தாள்கள்’ என பொதுஜனத்தின் மனசாட்சியில் முரட்டுக் குத்து குத்தின ரெய்டு செய்திகள். `படிச்சவங்க ஊழல் பண்ண மாட்டாய்ங்கனு இனி யாராச்சும் சொன்னீங்க... வாய்ல கத்திய வுட்டு ஆட்டிடுவேன்’ என்று மக்கள் கொந்தளிக்க... இன்னொரு பக்கம் `இதெல்லாம் எதுக்குத் தெரியுமா? மத்திய அரசு மாநில அரசைக் கட்டுப்படுத்த பண்ற டெக்னிக்கு’ என அரசியல் பேசி அலறவிட்டது அறிவுஜீவிகள் வட்டாரம்.

vikatan

  • தொடங்கியவர்

2016 - பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

 

 

p170a.jpgtwitter.com/Rajinthan077: பேசிட்டு இருந்த பொண்ணு, திடீர்னு பேசாம இருந்தா... அவங்க வீட்ல பேசி முடிச்சுட்டாங்கனு அர்த்தம்!

twitter.com/chevazhagan1: என் காதல் கதையை சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்த மனைவி, ‘என்னங்க, கதையில ஒரு ட்விஸ்ட்டுகூட இல்லை’ என்கிறாள் # அடிப்பாவி... அந்தத் திருப்புமுனையே நீதான்டி!

twitter.com/yugarajesh2: சூர்யா, நிஜமாவே சிங்கமாக மாறுகிற வரைக்கும் ஹரி படம் எடுத்துக்கிட்டே இருப்பார்போல! # `சிங்கம்-3’

twitter.com/chevazhagan1: சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்!

twitter.com/withkaran:  மிக்ஸிக்கு ஒரு சைலன்ஸர் கண்டுபிடிங்கய்யா... ‘சட்னி அரைக்கிறேன்’னு காலையிலயே எழுப்பிவிட்டுறாங்க!

twitter.com/venkatesh6mugam: பாரில் இருந்து வரும் ஆணும், பார்லரில் இருந்து வரும் பெண்ணும் ஒரு `மிதப்போடு’தான் வெளியே வருகிறார்கள்!

twitter.com/g_for_Guru: பர்த்டே பார்ட்டியில் ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கிறப்ப, பிரிக்க முடியாத மாதிரி பேக் பண்ணிக் குடுங்கப்பா, அங்கேயே பிரிச்சு அங்கேயே அடிச்சுக்குதுங்க!

twitter.com/udanpirappe: அம்மா அழைப்பு மையத்தை 20,000 பேர் தொடர்புகொண்டனர் - ஜெயா நியூஸ் # இதுக்குப் பெருமைப்படக் கூடாது சென்றாயன்... வெட்கப்படணும்!

twitter.com/king_prasath: இந்தப் பூமி,  வேறு ஒரு கிரகத்தின் நரகமாகவும் இருக்கலாம்!

twitter.com/Sathik_Twitz: பொண்ணுங்களைப் பொறுத்தவரையில், அவங்க யார் மேல இம்ப்ரஸ் ஆகுறாங்களோ... அவன் நல்லவன்; அவங்க மேல யார் இம்ப்ரஸ் ஆகுறானோ... அவன் கெட்டவன்!

twitter.com/sowmya_16: அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், `எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்!

twitter.com/i_Soruba: சாமி கும்பிடும்போது முகத்தை சீரியஸா வெச்சிக்க ட்ரை பண்ணுதுங்களே... அப்ப குழந்தைகள் அழகோ அழகு :-)

twitter.com/KartikThoughts: ராத்திரி முழுக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. ஆனா, காலையில எந்த பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது!

twitter.com/meenammakayal: எதைப் பற்றியும் ஓர் அளவுக்கு மேல் சிந்தித்தால், எல்லாம் முட்டாள்தனமாகத்தான் தோன்றுகிறது!

p170.jpg

twitter.com/deebanece:  நான் கிஸ்ஸிங் ஸ்மைலி அனுப்பினதுக்கு, நீ செருப்பு ஸ்மைலி அனுப்புனியே அப்போ அது ‘லவ்’தானே ஜெஸ்ஸி?!

twitter.com/VignaSuresh: அர்த்த ராத்திரியில் தெர்மக்கோல் நறுக்கிக்கொண்டிருக்கிறேன். பெற்றோரை டிசைன் டிசைனாக டார்ச்சர் செய்வது பற்றி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நன்கு அறியும்!

twitter.com/indirajithguru: பையில் இருந்த சிகரெட் காணாமல்போகும் வரை, மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்த விஷயம் பல தந்தைகளுக்குப் புரிவது இல்லை!

twitter.com/teakkadai: வேறு எந்தக் கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வது, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்!

twitter.com/SettuOfficial: `யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் நண்பன்;  `இப்ப யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் உயிர் நண்பன்! 

twitter.com/naiyandi: ரீசார்ஜ் செய்யக்கூட காசு இல்லை என்பதுதான் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது!

twitter.com/meenammakayal: `இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது!

twitter.com/Lalithajeyanth:
நான்: வாவ்..! Rainbow பாருடா!
மகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்மா.
நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை?
மகன்: சொன்னா, நீ rainbow-க்கு ஸ்பெல்லிங் கேப்ப.

twitter.com/indirajithguru: என் அம்மாவுக்கு என்னைவிட நன்றாகப் பொய் சொல்லவரும் என்பது, எனக்குப் பெண் பார்க்கப் போகும் போதுதான் தெரியும்!

twitter.com/kattathora:  ஸ்கூல்ல இருந்து திரும்பும் மகள், `அப்பா... இன்னிக்கு என் உண்டியல்ல இருந்து காசு எடுத்தியா?’ எனக் கேட்கும்போது, கொஞ்சம் மானக்கேடாதான் இருக்கு!

twitter.com/pshiva475: சண்டைக்கு அப்புறம் மனைவி என்ன சொல்லியும் சமாதானம் ஆகலைன்னா, உடனே சமையலறைக்குள்ள போயி, எல்லா பாட்டில்களோட மூடிகளையும் இறுக்க மூடிவிட்டுத் தூங்கிவிடுங்கள்!

twitter.com/navi_n: நாம் கழுவிவைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்!

twitter.com/paidkiller: என்னை நானே கதறக்கதற அடிச்சு, மிதிச்சு, தரதரனு இழுத்துட்டுப்போறேன்... ஆபீஸுக்கு!

twitter.com/Shiva__27: சாப்பிடும்போது `கடைசியில ரசம் ஊத்திக்கணும்’னு சொல்றது, தட்டை ஈஸியாக் கழுவுறதுக்காக ஏதோ ஒரு பொண்ணுதான் கண்டுபிடிச்சிருக்கணும்.

p170b.jpg

twitter.com/mekalapugazh:  சிவராத்திரிக்கு விடுமுறை அறிவிப்பது என்றால்... அடுத்த நாள்தானே விடணும்!

twitter.com/jroldmonk: ‘வீடு வாங்கியிருக்கேன்’, ‘காரு வாங்கியிருக்கேன்’னு சொல்றாங்க. ஆக்சுவலி நீங்க எல்லாம் கடன் வாங்கியிருக்கீங்க மக்கா!

twitter.com/withkaran: தே.மு.தி.க-வுல இனி எல்லாம் அண்ணிதானாம். `நான் எல்லாம் செக் பண்ணிட்டேன். நீங்க வீட்டைப் பூட்டிட்டு மட்டும் வாங்க’னு கேப்டன்கிட்ட சொல்லிருச்சுபோல!

twitter.com/thalabathe: பிரிஞ்சதுக்கு அப்புறம் `என்னைய மறந்துடு’னு பொண்ணுங்க கெஞ்சின காலம் போயி, `இப்ப தயவுசெய்து செல்ஃபியை டெலிட் பண்ணிடு’னு வந்து நிக்குதுக!

twitter.com/VignaSuresh: `இந்தா’ என, குழந்தை இரண்டு கைகளையும் நீட்டி தன்னையே தருகிறது!

twitter.com/urs_priya: அன்னக் கரண்டியை கைபோலவே வடிவமைத்தவரின் ரசனையை எண்ணி வியக்கேன்!

twitter.com/Lekhasri_g: ஒரு நாளைக்கு அஞ்சு டிரெஸ் போட, பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; குழந்தையாக இருந்தாலே போதும்!

twitter.com/ BoopatyMurugesh: ஆபீஸ்ல வேலை பார்க்கலாம்னு உட்காரும்போது `மீட்டிங்’னு கூட்டிப்போய்டுறாய்ங்க. மீட்டிங்ல வெச்சு `என்ன வேலைபார்த்த?’னு கேட்கிறாய்ங்க. :-(

twitter.com/ thoatta: `யார் யாருக்கு எவ்வளவு கோடி?’ங்கிறது எல்லாம் வைகோ தெளிவா சொல்றாரு, அப்ப த்ரிஷா, நயன் சம்பளம் எல்லாம் நிச்சயம் தெரிஞ்சுவெச்சிருப்பார்ல!

twitter.com/ aroobii: தனிமனிதத் தவறுகளை `தனிமனித சுதந்திரம்’ எனக் கடந்துவிடவும் ஏற்றுக்கொள்ளவும் பழகுகிறீர்கள்!

twitter.com/ arattaigirl: `நல்லா வாழ மாட்ட’ என்பதைவிட `நல்ல சாவு வராது’ என்பதுதான் மோசமான சாபம்!

twitter.com/ KingViswa: ஒரு பிரபலம் தன் நண்பனாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். தன் நண்பன் பிரபலமாவதை நிறையப் பேர் மனதார விரும்புவதும் இல்லை; ரசிப்பதும் இல்லை!

twitter.com/amuduarattai: பேக்குக்குள் ரகசிய அறை, ரகசிய அறைக்குள் பர்ஸ், பர்ஸுக்குள் போன், போனும் சைலன்ட் மோடு... என, பெண்களின் போன்கள், நான்கு அடுக்குப் பாதுகாப்பு நிறைந்தவை!

twitter.com/Rajeshveeraa: சின்னக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கய்யா... சிப்ஸ் பாக்கெட்ல ரெண்டு எடுத்தா கத்துது!

twitter.com/sorubaravi: நமது பொய்யைச் சட்டெனக் கண்டுபிடிப்பவர், ஏற்கெனவே அதைச் சொன்னவராக இருக்கக்கூடும்!

twitter.com/kavathu: மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்... அவனை மளிகைக்கடைக்கு அனுப்புனா மீதி காசு வராதுனு!

twitter.com/ikrthik: கடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்!

twitter.com/Prazannaa: டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்... ஓ.கே-யா? நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா? # மகளதிகாரம்!

p170c.jpg

twitter.com/Koothaadi: நாம் நேசிக்கும் ஒரு புத்தகத்தை யாரேனும் படிப்பதைப் பார்க்கையில், அந்தப் புத்தகம், நமக்கு ஒருவரைப் பரிந்துரைப்பதுபோல் உள்ளது!

twitter.com/mekalapugazh: கை கழுவும் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தால், நிறையத் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம்!

twitter.com/chevazhagan1: ரெண்டு கொசுவத்தியைத் தனித்தனியாப் பிரிக்கிறதுக்கு நான் படுறபாடு இருக்கே... ஸ்ஸப்பா!  எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் பிரிச்சாங்களோ!

twitter.com/arattaigirl: பழக்கடையில ஒரு அம்மா.... `ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?’ - கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?

twitter.com/unmaivilambbi: எல்லோர் அலைபேசியிலும் உள்ளது... முன்பு ஒருகாலத்தில் எல்லாமுமாக இருந்த ஒரு நபரின் தொலைபேசி எண்.

twitter.com/manipmp: `நாளையில் இருந்து படிக்கிறேன்’னு சொன்னவனும், `நாளையில் இருந்து குடிக்கலை’னு சொன்னவனும் ஜெயிச்சது இல்லை!

twitter.com/vandavaalam:  டிக்கெட் புக் பண்ணாம, ஊருக்கு பஸ் ஏறிய கடைசித் தலைமுறை நாம்!

twitter.com/pshiva475: லேடீஸ் துணிக்கடையில சேல்ஸ்மேன்கிட்ட இருந்து திட்டுவாங்காம தப்பிக்கிற ரெண்டு மெத்தட்ஸ்... இந்த கலர்ல வேற டிசைன் இருக்கா, இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா?

twitter.com/kumarfaculty:  `ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன!

twitter.com/cablesankar: மதர்ஸ் டேவுக்கு ரகசியமாக கிஃப்ட் வாங்கிவைக்கும் புள்ளைங்க,  ஃபாதர்ஸ் டேக்கு வந்து `என்ன ட்ரீட்?’னு கேக்குதுங்க. அப்பனா பொறந்தாலே கஷ்டம்யா!

twitter.com/urs_priya: கணவனை ஒரு சின்ன வேலை செய்யவைக்க எளிய வழி... அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே :-)

twitter.com/bommaiya: ஓடுற அத்தனை ட்ரெய்ன்லயும் ஓப்பன் டாய்லெட்டைக் கட்டிவெச்சுட்டு, `திறந்தவெளியில் மலம் கழிக்காதீர்கள்’னு பல ஆயிரம் கோடி செலவுல அட்வைஸ்  பண்றாங்க!

twitter.com/David_EXIM: `உங்களை மாதிரி இல்லை. நம்ம பையனை நான் நல்லவனா வளர்க்கிறேன்’கிறா... # எவ்ளோ நுட்பமா எங்க அம்மாவைத் திட்றா பாருங்கய்யா!

twitter.com/aruntwitz: மொபைல் கேமராவுக்கு விதவிதமா போஸ் கொடுக்க தெரியுது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு மட்டும் முகத்தை எப்படி வெச்சுக்கிறதுனுதான் தெரியலை!

twitter.com/iKappal: குழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி?’னு பார்க்கும்!

twitter.com/Sandy_Offfl: டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்!

twitter.com/vandavaalam: எங்கே பார்த்தாலும்... யாரைப் பார்த்தாலும் வெயிட் குறைக்கிறதுலேயே குறியா இருக்காங்க. ரெண்டு கிலோ குறையும்னா மூளையைக் கூடக் கழட்டி வெச்சுருவானுகபோல!

twitter.com/nithya_shre:  `அண்ணா’ எனச் சொல்லி பல கட்சிகள் வளர்ந்துள்ளன; பல காதல்கள் அழிந்துள்ளன!

twitter.com/mpgiri: எல்லாம் தெரிந்த பரமாத்மாவுக்கே தெரியாதது ஒன்று உண்டு என்றால், அது... இலையில் ஊற்றிய ரசம் எந்தப் பக்கம் செல்லும் என்பதுதான்!

twitter.com/srivishiva: குழந்தையின் காய்ச்சலுக்கு, குடும்பமே துவண்டுவிடுகிறது!

twitter.com/teakkadai: கட்டும் சேலைக்கு மேட்ச்சாக, பெண்கள் தினமும் தங்கள் மொபைல் கேஸை மாற்றிக்கொண்டிருக்கும் வரை பூமி பூப்பூப்பதை நிறுத்தாது!

twitter.com/twittornewton: `நம்மால் முடியாது’ என நினைப்பது தன்னம்பிக்கைத் துரோகம்!

twitter.com/iMaandiyar: டேய்... அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சுட்டு, உங்கள் கையில முத்தம் குடுத்துட்டுப் போறீங்க :(

twitter.com/chevazhagan1: டாஸ்மாக் பார்ல போன் வந்ததும் ஒருத்தன் தனியா போய்ப் பேசுறான்னா, போன் பண்ணது ஒண்ணு பொண்டாட்டியா இருக்கணும்; இல்ல மேனேஜரா இருக்கணும்!

p170d.jpg

twitter.com/Ulaganandha:  ஹெட்போன்ல வலது இடது இருக்கா?! இந்த விஷயம் தெரியாம 25 வருஷம் வாழ்ந்துட்டோமே... ச்சே!

twitter.com/sathik_twitz: ஒரு செகண்ட்ல கொலவெறி உண்டாக்குறவன்,  டிராஃபிக்கே இல்லாத ரோட்ல பின்னாடி இருந்து ஹார்ன் அடிக்கிறவன்தான்!

twitter.com/vandavaalam:   செக்யூரிட்டியே ஏழு மொழி பேசுறான்னு சந்தோஷப்படுறதா, இல்லை... ஏழு மொழி தெரிஞ்சவன் செக்யூரிட்டியா இருக்கானேனு வருத்தப்படுறதா?

twitter.com/karthekarna: எவனாவது சீரியஸா எழவு நியூஸ் சொல்லப்போறான். தாடையைத் தடவிக்கிட்டே ‘மகிழ்ச்சி’னு சொல்லிருவோமோனு பயமா இருக்கு. `கபாலி’ ஃபீவர்!

twitter.com/HaridiBaby: கழுதைகிட்ட 100 ரூபா நோட்டைக் கொடுத்தா, அப்படியே சாப்பிட்டுடும். அதுக்குத் தெரியாது அதுல மூணு கொயர் பேப்பர் வாங்கிச் சாப்பிடலாம்னு!

twitter.com/Mithrasism: வேலை பிடிக்கலைன்னா உடனே வேலையைவிடுற தைரியம்தான்... பொருளாதாரச் சுதந்திரம்!

twitter.com/aruntwitz: குப்பை போடுவதும், தொப்பை போடுவதுமே நாட்டின் தலையாயப் பிரச்னைகளாக இருக்கின்றன!

twitter.com/ashokcommonman : `ஜோக்கர்’ படம் ஆரம்பக் காட்சியில் ஒரு மணல் லாரி கிராமத்தைவிட்டுப் போகுது.  ஒரு ஆள் அதே ஊருக்குள்ள தண்ணி கேன் போடப்போறார். குறியீடு... குறியீடு!

twitter.com/SettuOfficial: புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி பூஜை போடுகிறார் ஒருவர். கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வார் என்ற ஆர்வம் எனக்கு???!!!!

twitter.com/ManiPmp: கால்கள் இரண்டையும் தரையில் தேய்த்து, உதடு மடித்து, அனுமார்போல் வைத்திருந்தால், பெண்கள் பைக்கை நிறுத்தப்போகிறார்கள் என அர்த்தம்!

twitter.com/altappu: `மோடி எப்படி ரிலையன்ஸ் மாடலாக வரலாமாம்?’ # அட லூஸுகளா... உங்க பிரதமர், ரிலையன்ஸ் மாடல் ஆகலை. ரிலையன்ஸ் மாடலைத்தான் நீங்க பிரதமர் ஆக்கியிருக்கீங்க!

twitter.com/Rama Periasamy: `அதை எடுத்துட்டு வா’னு அப்பா சொல்ல, `எது?’னு அம்மாவுக்கு மட்டும் புரியும் ரகசியம்தான் காதல்.

twitter.com/manipmp: ஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.

twitter.com/thoatta: சைக்கிள்ல எட்டு, பைக்ல எட்டு, ஏன்... கார்லகூட எட்டு போட்டுப் பார்த்திருக்கேன். ஆனா, சிரிக்கிறப்ப வாய்ல எட்டு போடுறது கீர்த்தி சுரேஷ்தான்!

twitter.com/kaviintamizh:  காமராஜர் எளிமையாக வாழ்ந்ததைவிட, `அப்புறம் தம்பி... எப்ப கல்யாணம்?’னு கேட்கிற சொந்தக்காரங்களை எப்படிச் சமாளித்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சர்யம்!

twitter.com/karuthu_ganesan: டிஸ்கவுன்ட் சேல்னாலும் தேவைன்னா மட்டும் வாங்குங்க. வாங்கலைனா, நமக்கு 100 சதவிகிதம் டிஸ்கவுன்ட்.

twitter.com/erode_kathir: இதுவரை வெளியான வதந்திகளிலேயே பெரிய வதந்தி, `ஓ.பி.எஸ்., எடப்பாடி ரெண்டு பேரும் காவிரிப் பிரச்னைக்காக கவர்னரைச் சந்திச்சாங்க’னு சொன்னதுதான்!

twitter.com/kumaresann01: வைகோவுக்கும் அதே வசனம்தான் குடுப்பானுக. ஆனா, பாடிலாங்வேஜ்ல அண்ணன் ஸ்கோர் பண்ணிருவாரு! #அப்போலோவில் வைகோ!

twitter.com/Kozhiyaar: கணவன்கள் உறங்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட்டு, சுத்தம்செய்வது மனைவிகளின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு!

twitter.com/mpgiri : நேத்து வரை `புத்தகத்தை எடுத்துவெச்சுப் படிக்க உட்கார்டா’னா... வீட்டுக்குள்ளகூட வரலை. இன்னைக்கு பூஜையில வெச்சப்புறம் `படிக்கணும்பா... எப்ப புக் தருவ?’ங்கிறான்!

twitter.com/Dhrogi: `ஹீரோயினை வெகுளியாக் காண்பிச்சா பசங்களுக்குப் பிடிக்கும்’னு எவனோ இயக்குநர்களுக்கு நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிவிட்டுருக்கான்!

twitter.com/mokrish:  இந்த டச் போனில் படித்ததில் பிடித்ததை `வெட்டி’னால் அதை வேறு இடத்தில் ஓட்டும் வரை எல்லா சொற்களும் விரல் நுனியில் இருப்பதுபோல் ஒரு ஃபீலிங்!

twitter.com/Aruns212:  தனியாக வீட்டில் இருக்கும்போது, டிஸ்கவரி சேனல் பார்ப்பவனை விடவா சிறந்த யோக்கியன் இந்த உலகில் இருந்துவிடப்போகிறான்!?

twitter.com/Jvs2020:  சில சம்பவங்களைத் தொந்தரவுசெய்யாதீர்கள்... அது உங்களுக்குத் தீர்க்கமான சில முடிவுகளைக்கூடக் கொடுக்கலாம்!

facebook.com/ArumugaSelvamV: ஜல்லிக்கட்டு நடக்க, மாட்டுப் பொங்கல் அவசியம் இல்லை. தேர்தல் மட்டுமே அவசியம் என்பதை உணர்ந்த வருடம் 2016.

facebook.com/vinayaga.moorthy.5070: எல்லா பசங்களும் ‘சிங்கிள்’னு அழுவுறாங்க. எல்லா பொண்ணுங்களும் ‘committed’னு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கே... ஒண்ணும் புரியலை. யாரு, யாரைத்தான் லவ் பண்றீங்க?

facebook.com/jill.kamatchirajan: ராஜீவ் காந்தி படுகொலை, பிரபாகரன் படுகொலை. இந்த இரண்டு துருவக் கொலைகளிலும் தி.மு.க மட்டும் தர்ம அடி வாங்குவது வரலாற்று விநோதம்!

facebook.com/iMuthuram: Jio சிம் வாங்காதவனை எல்லாம் `தேசத்துரோகி’னு சொல்லுவாய்ங்களேனு நெனச்சாதான் துக்கம் தொண்டையை அடைக்குது!

facebook.com/aruna.raj.35: பொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.

facebook.com/jv.balaji: கூரை மேல சோறு போட்டா காக்கா வருதோ இல்லையோ, வீட்டுக்காரன் வர்றான்... அசிங்கமா திட்டிக்கிட்டு. #வாடகை வீடு அட்ராசிட்டீஸ்!

facebook.com/rasanaikkaaran: நான் வளர்ற காலத்துல `அப்பா மூட்அவுட்ல இருக்கார். ஏதும் கேட்டு வாங்கிக் கட்டிக்காதே’னு எச்சரிக்கை செய்வார் அம்மா. இப்ப, `பாப்பா மூட் சரியில்லை. அவகிட்ட பேச்சு குடுக்காத’னு தங்ஸ்கிட்டேருந்து எச்சரிக்கை வருது. ஒரு குடும்பத் தலைவருக்கு நாட்டுல மரியாதை இல்லியா?!

facebook.com/saravanan.chan dran.77: இரண்டு நாட்களுக்கு முன்பு வரைக்கும் ரோட்டில் ஓர் இடத்தில் மட்டும் கூட்டம் தெரிந்தால், அது டாஸ்மாக்; இப்போது ஏ.டி.எம்!

facebook.com/prabhakrr: என்கிட்ட இருக்கிற ரெண்டு மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்ருவேன். பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல?

vikatan

  • தொடங்கியவர்

2016 -ல் சாதனை படைத்த 5 இந்திய வம்சாவளிப் பெண்கள்!

 

வ்வோர் ஆண்டும், அந்த வருடத்தில் சாதித்தவர்களின் பட்டியல் பலராலும் வெளியிடப்படும். அந்தப் பட்டியல் நாடு, மாநில அளவில் பிரிக்கப்பட்டிருக்கும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் சாதிப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது அல்லவா... அவர்களின் வெற்றியும் சாதனையும் நமக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கக்கூடியதுதானே...

கியாரா நர்கின்: கூகுள் நடத்திய 2016-ம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சியில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த, 16 வயதான, இந்திய வம்சாவளி சிறுமி கியாரா நர்கின் முதல் பரிசு பெற்று சாதனை புரிந்துள்ளார். ஆரஞ்சு பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவதன்  மூலம் நிலத்தில் நீரைத் தக்கவைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெற முடியும் என்பதே, அவரின் கண்டுபிடிப்பு. பதினொன்றாம் வகுப்புப் படித்து வரும் கியாரா, தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, அறிவியல் கண்காட்சியில் சமர்ப்பித்த அவரின் 'தண்ணீர் இல்லா பயிர்கள் இனி இல்லை' கண்டுபிடிப்புக்கு, கூகுள் அவருக்கு 50,000 டாலர்கள் பரிசளித்துள்ளது.

பெண்கள்

இந்திரா நூயி: உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான 'பெப்சிகோ'வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயி,  பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துவருகிறார். சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்ந்தலில் வெற்றிபெற்ற டொனால்டு ட்ரம்ப், தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து வருகிறார். அந்த வகையில், அவர் உருவாக்கியுள்ள பொருளாதார ஆலோசனை குழுவில் இந்திரா நூயியும் இடம் பெற்றுள்ளார். இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

indira_1_16054_17484.jpg

சவிதா வைத்தியநாதன்: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணான சவிதா வைத்தியநாதன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள குப்பெர்டினா நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நகரில் சுமார் 2 ஆண்டுகளாக வசித்து வரும் சவிதா, எம்.பி.ஏ பட்டதாரி. ஆரம்பகாலத்தில் கணித ஆசிரியையாகப் பணியாற்றியவர், பின்னர் தனியார் வாங்கியில் பணியாற்றியதுடன் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் குபெர்ட்டினா நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டு அங்குள்ள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மேயராக பதவியேற்றுக் கொண்டார்.

savitha_17233.jpg

உப்மா விர்தி: ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் 26 வயது உப்மா விர்தி என்ற பெண், ஒரு வழக்கறிஞர். அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரிரேலியாவில் வழக்கறிஞராக பணிபுரிந்துகொண்டே அங்கு வாழும் இந்தியர்களுக்கு ருசியான டீ தயாரித்து விற்பனை செய்யும் 'சாய் வாலி'(Chai Walli)' என்ற கடையைத் தொடங்கினார். இவரின் தாத்தா ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவரிடம் ஹெர்பல் டீ தயாரிக்க கற்றுக்கொண்டு இவர் கடை ஆரம்பிக்க, அதன் ருசியும், மணமும் மக்களிடையே பிரபலம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிட்னி நகரில் நடந்த இந்திய - ஆஸ்திரேலிய பிசினஸ் மற்றும் கம்யூனிட்டி அவார்ட்ஸ் (IABCA) அமைப்பு, இவருக்கு 'சிறந்த பிசினஸ்வுமன் 2016' விருதை வழங்கி கௌரவித்துள்ளது. உப்மா, சண்டிகரில் பிறந்தவர்.

Uppma_17511.jpg

ப்ரித்தி பட்டேல்: இங்கிலாந்தில் பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் பதவி விலகியதைத் தொடர்ந்து, தெரசா மே பிரதமராக பொறுப்பேற்றார். இவருடைய தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவையில் இந்தியா வம்சாவளி பெண் ப்ரித்தி பட்டேல் சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். 44 வயதான இவர் குஜராத்தை பூர்விகமாகக் கொண்டவர்.

482440-469127-priti-patelreuters_17217.j

2017 ஆண்டில் இவர்களின் சாதனைப் பயணம் தொடரட்டும்.

vikatan.

  • தொடங்கியவர்

ரட்யார்டு கிப்ளிங்

 

 
sir_3110660f.jpg
 
 
 

நோபல் பெற்ற ஆங்கிலக் கவிஞர்

நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளரும், கவிஞருமான ஜோசப் ரட்யார்டு கிப்ளிங் (Joseph Rudyard Kipling) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பம்பாயில் (1865) பிறந்தார். தந்தை சிற்பி மற்றும் மண்பாண்ட வடிவமைப்பாளர். பம்பாயில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாய் கலைக் கல்லூரி பள்ளி முதல்வராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.

* சிறுவயதில் கிப்ளிங்கை வளர்த்த இந்தியப் பெண்மணி பல இந்தியக் கதைகள், பாடல்களை இவருக்குக் கூறுவார். அவை தன் நினைவை விட்டு அகலவே இல்லை என்று இவர் குறிப்பிட்டுள்ளார். 5 வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். இந்தியாவில் வாழும் ஆங்கிலேயர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் தம்பதியிடம் 6 ஆண்டுகள் வளர்ந்தார்.

* அந்த காலக்கட்டம் பயமும் பீதியும் கலந்திருந்ததாகவும், அவர்களிடம் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும் 65 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய சுயசரிதையில் நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து பெற்றோர் 1877-ல் இங்கிலாந்து திரும்பிய பிறகு, அவர்களுடன் வசிக்கத் தொடங்கினார்.

* ‘தி யுனைடட் சர்வீஸஸ்’ கல்லூரியில் பயின்றார். லாகூரில் வேலை கிடைத்ததால் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சிவில் அண்ட் மிலிட்டரி கெஸட் என்ற உள்ளூர் நாளிதழில் காப்பி எடிட்டிராகப் பணியாற்றினார். 1882-ல் பம்பாய் வந்தார். பல கவிதைகள் எழுதினார். 1886-ல் முதல் கவிதைத் தொகுப்பு ‘டிபார்ட்மென்டல் டிட்டீஸ்’ வெளிவந்தது.

* தொடர்ந்து, பல்வேறு இதழ்களிலும் கதைகள், கவிதைகள் எழுதினார். ஓராண்டுக்குள் இவரது 39 கவிதைகள், உரைநடைத் தொகுப்பு, 70-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்தன. அலாகாபாத்தில் உள்ள ‘தி பயனீர்’ இதழில் பணியில் அமர்ந்தார். அங்கும் எழுத்துப் பணி தொடர்ந்தது. பின்னர், 6 குறுங்கதைத் தொகுப்புகள் வெளிவந்தன.

* இந்தியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ சென்றார். அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டவர், ஏராளமான கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருந்தார். இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2 நூல்களாக வெளிவந்தன.

* லண்டன் திரும்பிய பிறகு, கதைகள் எழுத ஆரம்பித்தார். இந்தியாவில் வாழும் ஆங்கிலேயரின் வாழ்க்கை பற்றிய ‘லைஃப்ஸ் ஹேண்டிகேப்’ என்ற குறுங்கதைத் தொகுப்பு லண்டனில் வெளியிடப்பட்டது. 1892-ல் இவர் எழுத ஆரம்பித்த ‘தி ஜங்கிள் புக்’, பல கதைகள் கொண்ட நூலாக உருவானது. உலகம் முழுவதும் சிறுவர்கள் விரும்பும் கதைகளில் ஒன்றாகப் புகழ்பெற்றது.

* தொடர்ந்து பல கவிதை, சிறுகதை தொகுப்புகள், நாவல்களைப் படைத்தார். இவரது ‘கிம்’ நாவல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார். குழந்தை இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளியாகவும், குறுங்கதைக் களத்தின் முன்னோடியாகவும் இவர் போற்றப்படுகிறார்.

* இவரது பல படைப்புகள் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன.

* இலக்கியத்துக்கான நோபல் பரிசை 42-வது வயதில் பெற்றார். இதன்மூலம், மிகக் குறைந்த வயதில் நோபல் பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றார். ஆங்கில இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜோசப் ரட்யார்டு கிப்ளிங் 71-வது வயதில் (1936) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

முதுகு வலி, கழுத்து வலியை குணமாக்கும்

 

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் பிறையாசனம் அல்லது அர்த்த சக்ராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

 
முதுகு வலி, கழுத்து வலியை குணமாக்கும்
 
அரை சக்கரம் போல் இருப்பதால் அர்த்த சக்ராசனம் என்று சொல்லுவர். மேலும் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்ற பெயரும் உண்டு. இதனை தினமும் செய்து வந்தால் நாம் பெறக்கூடிய பலன்கள் அதிகம்.

செய்முறை :

முதலில் விரிப்பின் மீது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து நிற்க வேண்டும். பின்பு இரண்டு கைகளை மேலே தூக்க வேண்டும். பின் மூச்சை உள் இழுத்து கொண்டு நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பின்னால் வளைய வேண்டும்.

அதற்காக ரொம்ப சிரமப்பட்டு அதிகம் வளையக் கூடாது. ஆரம்பத்தில் சிறிது சிறிதாக வளைந்து செய்தால் நாளடைவில் நன்றாக வளைந்து செய்ய முடியும்.

இப்படி பின்னோக்கிய அரை சக்கர நிலையில் சுமார் இருபது வினாடிகள் (20 seconds) மூச்சை நிதானமாக உள்ளிழுத்து கொண்டும், வெளி விட்டுக் கொண்டும் இருக்க வேண்டும்.

இருபது வினாடிகள் கடந்த பின், ஒருமுறை மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பின் மூச்சை நிதானமாக வெளியிட்டு கொண்டே, அரை சக்கர நிலையிலிருந்து முன்னோக்கி நிமிர்ந்து பழைய நிலைக்கு வர வேண்டும்.

இதுவே பிறையாசனம் அல்லது அர்த்த சக்ராசனமாகும்.

இந்த ஆசனத்தை கைகளை மேலே தூக்காமல், இடுப்பை பிடித்து கொண்டும் செய்யலாம். இந்த ஆசனம் செய்யும் போது கால் மூட்டுகள் வளையாமல் இருக்க வேண்டும்.

இந்த ஆசனத்தை தொடர்ந்து மூன்று முறை செய்யலாம்… செய்த பிறகு இதற்கு மாற்று ஆசனமாக அஸ்த பாத ஆசனம் செய்ய வேண்டும்.
அப்போது தான் இந்த ஆசனத்துக்குரிய முழு பலனும் நமக்கு கிடைக்கும்.

பயன்கள் :

பின்புறம் வளைவதால் முதுகு தண்டுவடத்திற்கு நெகிழ்வு தன்மை கிடைக்கிறது. நீண்ட நாள் ஆஸ்துமா பிரச்சனை நாளடைவில் முற்றிலும் குணமாகிறது.

டிபி மற்றும் கிட்னி பிரச்சனைகளை சரி செய்கிறது. தொடர்ந்து செய்து வந்தால் முதுகுதண்டு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் பலம் பெறுகின்றது.

முதுகெலும்பு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம். முதுகு எலும்பு தேய்மானம் உள்ளவர்களும், கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளவர்களும் குருவின் மேற்பார்வையில் செய்யவும்.. இதய நோய் உள்ளவர்கள் மெதுவாக செய்யவும்.
  • தொடங்கியவர்
வலிந்து சேஷ்டை செய்தால், எளியவரும் வலியவர் ஆவார்
 

article_1475473338-images.jpgஎமது முன்னோர்கள் கூறிய சில விடயங்களை, தற்போதைய இளைய தலைமுறையினர், மூடநம்பிக்கை, ஆதாரம் இல்லாத பேச்சு எனக் கேலி செய்வதுண்டு.  

நாகபாம்பு என்கின்ற நல்ல பாம்பைக் கொன்றபின், உடனே எரித்து, மண்ணில் புதைத்துவிட வேண்டும் என முன்னோர்கள் கூறிய விடயத்தைக் கேலி பண்ணும் இவர்கள், அதன் உண்மை, விஞ்ஞான பூர்வமானது என்பதை அறிய வேண்டும்.

இறந்துபோன இந்தப் பாம்பில் இருந்து சுரக்கும் நீர், அதிலிருந்து எழும் மணம் என்பன, அதன் இனத்தைச் சேர்ந்த ஏனைய பாம்புகளை வரவழைக்கும்.

நாகபாம்பு வலிந்து தாக்க வருவதுமில்லை. படம் எடுத்து எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றுவிடும். எனவேதான், அதனை நல்ல பாம்பு என்று சொல்கின்றார்கள்.

வலிந்து சேஷ்டை செய்தால், எளியவரும் வலியவர் ஆவார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வந்தாரை வரவேற்காத நகரங்கள்!

 

 

p104a.jpg

‘ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என கெத்தாகக் காலரைத் தூக்கிவிடுபவர்களை அசைத்துப் பார்க்கும் வகையில், உலகின் சில நகரங்கள் மிகவும் ஆபத்தானவை. இந்த நகரங்களைப் பற்றி கூகுளில் தேடினால் ‘என்னப்பா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?’ என சென்னை ஆட்டோக்காரர்கள் போலக் கேட்கிறது.

ரியோ டி ஜெனிரோ :

பிரேசிலின் தலைநகரம் ரியோ டி ஜெனிரோ. அழகான கடற்கரை, உலகம் முழுக்கப் பிரபலமான ஜீசஸ் சிலை எனப் பல சுற்றுலா அம்சங்கள் இருந்தும், இந்த நகரம் பாதுகாப்பற்ற நகரமாகத்தான் கருதப்படுகிறது. உலகின் டாப்-50 மோசமான நகரங்களின் பட்டியலில், 21 இடங்கள் பிரேசிலைச் சேர்ந்தவை என்பது இன்னும் அதிர்ச்சியைத் தரும். காரணம், இங்கே பல்கிப் பெருகியுள்ள கேங் வார்களும், குற்றச்செயல்களும்தான். ஒரு வருடத்தில் துப்பாக்கி வெடிக்காத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடுமளவிற்கு, இங்கு தினம் தினம் தீபாவளி கொண்டாடுகின்றன போதைக்கடத்தல் கும்பல்கள்.  ஒலிம்பிக் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்த சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளை, பட்டப்பகலில் லாவகமாக அபேஸ் செய்ததெல்லாம் கொசுறுச்செய்தி.

மொகதிசு :

p104b.jpg

கடற்கொள்ளையர்கள் கலாசாரத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் நாடான சோமாலியாவின் தலைநகரம்தான் இந்த மொகதிசு. மோசமான நகரங்களின் பட்டியலில் மிக முக்கியமானது இது. தீவிரவாத இயக்கங்களுக்கு இடையேயான உள்நாட்டுப் போரால் பஞ்சர் ஆகியிருக்கும் இந்த நகரத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி, இந்த நகரத்திற்குப் போகாமல் இருப்பதுதான். அதையும் தாண்டி அடம்பிடித்துச் சென்றீர்கள் என்றால், ஆயுதம் ஏந்திய தனியார் பாதுகாவலர்கள் இல்லாமல் அறையை விட்டே வெளியே செல்லாதீர்கள் என்கின்றன பல நாடுகளின் தூதரகங்கள். கொஞ்சம் கலரான ஆட்களைப் பார்த்தாலே அலேக்காகத் தூக்கிச்சென்று அழகு பார்ப்பதுதான் பல தீவிரவாத இயக்கங்களுக்கும் வேலையாம்.

சான் பெட்ரோ சுலா :

p104c.jpg

ஹோண்டுராஸ் நாட்டின் சான் பெட்ரோ சுலா நகரமும், காரகஸ் போலவே வன்முறைகள் நிறைந்தது. நாம் தெருவில் நடந்து போகும்போது குப்பைகளைப் பார்த்துப் பழகிவிட்டதைப்போல, தினம்தோறும் கொலை செய்யப்பட்ட உடல்களைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள். கேங் வார் காரணமாகப் பலியாவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் காரணமாக, இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சவப்பெட்டி செய்யும் தொழிலுக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறதாம். காதல் மட்டுமில்லை. வன்முறையும் சொல்லிக்கொண்டு வருவதில்லை என்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அச்சப்படும் நகரங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

காரகஸ் :

p104d.jpg

வெனிசுலா நாட்டின் தலைநகரம்தான் காரகஸ். பெயரில் மட்டுமில்லாமல், அந்த நகரமே கொஞ்சம் காரசாரமானதுதான். போதைக்கடத்தல் கும்பல்கள் சர்வசாதாரணமா சண்டைபோட்டு துப்பாக்கிச் சூடு நடத்துவதால், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4,000 பேர் ‘மர்கயா’ என்கிறது ஒரு ரிப்போர்ட். டொரண்டினோ, ராம்கோபால் வர்மா படங்களை மிஞ்சும் அளவிற்கு ரத்தம் தெறிக்கும் வன்முறை நிரம்பிய இந்நகரத்திற்கு வெளிநாட்டுக்காரர்கள் சென்று வந்தாலே ஒரு வருடத்திற்கு கனவிலும் அடர்சிகப்பு நிறத்தில் ரத்தம் வருவது நிச்சயம் என அடித்துச் சொல்கிறார்கள். உயிர் மேல் ஆசையுள்ளவர்கள், இந்தப் பக்கம் தவறியும் போய்விடாதீர்கள் எனப் பல இணையதளங்களும் அறிவுறுத்துகின்றன.

கெளதமாலா :

p104e.jpg

உலகளவில் மிக அதிகமாய் ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடான கெளதமாலா குடியரசின் தலைநகரம்தான் கெளதமாலா. ராணுவப் புரட்சி, உள்நாட்டுக் குழப்பம் போன்ற காரணங்களால் நாட்டின் பல பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கின்றன. நாடு முழுக்க சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், வன்முறைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களால் பலரும் இந்த நகரத்திற்குச் செல்ல நடுங்குகின்றனர். பேருந்தில் ஏறிக் கொள்ளையடிக்கிறதுதான் நமக்குத் தெரியும். ஆனால் இங்கே பேருந்தையே கடத்திக் கொண்டுபோய்விடுவது சகஜம். இங்கு ஆட்களைவிட துப்பாக்கிகள்தான் அதிகம் பேசுகின்றன.

பொதுவாகவே லத்தீன் அமெரிக்க நாடுகளில் போதைப்பொருள் கடத்தல், கேங் வார் போன்ற காரணங்களால் பாதுகாப்பற்ற நிலைமை நிலவுகிறது. சில ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உள்நாட்டுப் போர், தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. சாலை, கடல் மார்க்கம், விமானம் என எப்படிச் சென்றாலும் ஆபத்துகள் கையசைத்து வரவேற்கின்றன. அது சரி... நாம ஏன் நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகப்போறோம்?

  • தொடங்கியவர்

உலகப் பிரத்திபெற்ற நகரக் கொண்டாட்டம்

நாளை புதிய வருடம் பிறக்க இருக்கிறது. நம்முடைய தோல்விகள், துக்கங்கள் எல்லாவற்றையும் இந்தப் பழைய வருடத்தைப் போல் நீங்கிச் சில புதிய நம்பிக்கைகளுக்கான தீர்மானமாக இந்த ஆண்டு வரவிருக்கிறது. புதிய ஆண்டை வரவேற்று ஆரவாரம் செய்வது உலகம் முழுவதும் வழக்கத்தில் இருக்கிறது. மக்கள் அனைவரும் ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி வரப்போகும் புதிய ஆண்டை வாண வேடிக்கையுடன் வரவேற்பார்கள். லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் நகர நிர்வாகமே இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான திருவிழாவை ஒருங்கிணைக்கும். லண்டன், லாஸ்வேகாஸ், பாரீஸ் போன்ற நகரங்களின் புத்தாண்டுக் கொண்டாட்டம் உலகப் பிரத்திபெற்றது. அம்மாதிரியான நகரப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது:

Desktop_3111283f.jpg

 
dubai_3111282f.jpg
துபாய் புத்தாண்டுக் கொண்டாட்டம், ஐக்கிய அரபு நாடுகள்

 

 
las_vegas_3111281f.jpg
லாஸ்வேகாஸ் புத்தாண்டுக் கொண்டாட்டம், அமெரிக்கா
 
 
paris_3111280f.jpg
பாரீஸ் புத்தாண்டுக் கொண்டாட்டம், பிரான்ஸ்
 
 
mosocy_3111279f.jpg
மாஸ்கோ புத்தாண்டுக் கொண்டாட்டம், ரஷ்யா
 
 
toronto_3111275f.jpg
டொரண்டோ புத்தாண்டுக் கொண்டாட்டம், கனடா

 

 
londn_3111276f.jpg
லண்டன் புத்தாண்டுக் கொண்டாட்டம், இங்கிலாந்து
 
dublin_3111277f.jpg
டப்ளின் புத்தாண்டுக் கொண்டாட்டம், அயர்லாந்து
 
sydney_3111278f.jpg
சிட்னி புத்தாண்டுக் கொண்டாட்டம், ஆஸ்திரேலியா

 

 

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

p6a.jpg

மணல் சிற்பத்தில் உலக சாதனை!

ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்னாயக். உலகின் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கடற்கரையில் மணல் சிற்பங்களைச் செய்வதில் பிரபலமானவர். இவர் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஒடிசா கடற்கரையில், தனது குழுவோடு இணைந்து 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இது தற்போது லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் 2012-ம் ஆண்டு 500 கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பங்களை உருவாக்கிய தனது சாதனையைத் தானே முறியடித்துள்ளார். இதை அடுத்து #SudarsanPattnaik பெயர் ட்ரெண்ட்டில் வலம் வந்தது. மண்ணிலே கலைவண்ணம் கண்டான்!

மல்யுத்த மனுஷி!

p7a.jpg

இந்திய மல்யுத்த வீராங்கனை கீதா பொகட் மற்றும் அவரது தந்தையும், பயிற்சியாளருமான மகாவீர் சிங் பொகட் ஆகியோரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘தங்கல்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு நாடு முழுவதும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியலில் கீதா பொகட் பெயர் முதலிடம் பிடித்துள்ளது. படம் தந்த மகிழ்ச்சியில், ‘என் வாழ்க்கையையே தங்கல் மாற்றிவிட்டது’ எனப் பெருமை பொங்கச் சொல்லியிருக்கிறார் கீதா. ட்விட்டர் ட்ரெண்ட்டிலும் #GeetaPhogat பெயர் முதல் இடம் பிடித்து பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல!

மீண்டும் பாட்ஷா!

p7b.jpg

சூப்பர்ஸ்டார் நடிப்பில் 21 வருடங்களுக்கு முன்பாக வெளியாகி வெறித்தனமான ஹிட் அடித்த திரைப்படம் ‘பாட்ஷா’. இப்படம் தற்போதைய தொழில்நுட்பங்களின் உதவியோடு ரீ-மாடல் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட டீஸர் சமீபத்தில் யூ-டியூபில் வெளியானது. புதிதாக வெளியாகும் படத்திற்கு இணையாக இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த டீஸரை யூ-டியூபில் பார்வையிட்டுள்ளனர். #Baasha டேக் ட்ரெண்ட் ஆனதோடு, இதுவரை ஏழாயிரத்திற்கும் அதிகமான ட்வீட்கள் குவிந்திருக்கின்றன. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

செல்லச் சண்டை!

p8a.jpg

அமீர்கான் நடித்த ‘தங்கல்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்களுக்காக இப்படம் ஒருநாள் முன்னரே சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது. இதில் தனது குடும்பத்தினரோடு கலந்துகொண்ட சல்மான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ‘தங்கல்’ திரைப்படத்தை என் குடும்பத்தினருடன் பார்த்தேன். அவர்களுக்கு `சுல்தான்’ திரைப்படத்தைவிட `தங்கல்’ திரைப்படம்தான் சிறப்பாக உள்ளதாம். அமீர், தனிப்பட்ட முறையில் நான் உன்னைக் காதலிக்கிறேன். ஆனால், தொழில்ரீதியாக உன்னை வெறுக்கிறேன்!” என அமீர்கானை மென்சன் செய்து ட்வீட் செய்தார். அதற்கு அமீர், “நான் உன் வெறுப்பிலும் காதலைத்தான் உணர்கிறேன் சல்லு!” எனப் பதில் அளித்தார். ட்விட்டர் முழுவதும் இது வைரல் ஆனது. சல்மான்கான் ட்வீட் மட்டும் 83,000-த்திற்கும் அதிகமான பேரால் லைக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமான போட்டி!

விருது நாயகன் வண்ணதாசன்!

p8b.jpg

2016-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்குக் கிடைத்துள்ளது. தனது ‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருதை அவர் பெறுகிறார். கடந்த 2000-ம் ஆண்டு வண்ணதாசனின் தந்தை தி.க.சிவசங்கரன், தான் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருந்தார். தந்தையும் மகனும் சாகித்ய அகாடமி விருதைப் பெறுவது இதுவே முதன்முறை. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நெல்லையைச் சேர்ந்தவர்கள் சாகித்ய அகாடமி விருதைப் பெறுவதும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வாசகர்களின் வாழ்த்துகளால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் சென்னை ட்ரெண்டில் #வண்ணதாசன் மற்றும் சாகித்ய அகாடமி பெயர் இடம்பெற்றன. வாழ்த்துகள்!

வைரல் குழந்தைகள்!

p9a.jpg

பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் - கரினா கபூர் தம்பதிக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலிகான் எனப் பெயரிட்டுள்ளனர். அதே நாளில் அந்தக் குழந்தை ட்விட்டர் ட்ரெண்ட்டில் முதல் இடத்தைப் பிடித்தது. ஒருபக்கம் வாழ்த்துகள் குவிய, இன்னொரு பக்கம், பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவைச் சூறையாடிய மன்னனின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டியது சரியா? என எதிர்ப்பு கிளம்பியது. எது எப்படியோ, பிறந்த அன்றே ட்ரெண்ட்டில் இடம்பிடித்து #TaimurAliKhan அசத்தினான். இதே போல், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது பெண் குழந்தை அர்ஹாவின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட, #Arha ட்ரெண்ட் ஆனதோடு, அந்தப் புகைப்படமும் வைரலானது. அதிர்ஷ்டக் குழந்தைகள்!

ஹாட்-ட்ரிக் அடித்த இந்திய அணி!

p9b.jpg

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் ஆசியக்கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. இலங்கைக்கு எதிராக கொழும்பில் நடந்த இறுதிப்போட்டியில், இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட் ட்ரிக் சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து #YouthAsiaCup #U19AsiaCup ட்ரெண்டில் முதலிடத்தைப் பிடித்தது. இத்துடன் இந்திய அணியின் கோச்சாகச் செயல்பட்ட ராகுல் ட்ராவிட்டுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. வெற்றிக்கூட்டணி!

vikatan

  • தொடங்கியவர்

மீன்களுக்குக் காது உண்டா?

 

fish_swim_3109463f.jpg
 
 
 

கடல் எப்போதுமே பேரிரைச்சலுடன் இருக்கிறது. கடலுக்குள் உள்ள எரிமலைகள் வெடித்துச் சிதறுகின்றன. கடலுக்குள் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அப்போது ஏற்படும் சத்தங்கள் கடலில் வாழும் மீன்களுக்குக் கேட்குமா? ‘கேட்கும்’ என்றே சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீன்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் அளவுக்குக் காதுகள் இல்லை. ஆனால் மீன்களுக்கு ஒலியை உணரும் அமைப்புகள் உள்ளன. அவை மீனின் தலைப்பகுதிக்குள் சிறு துளைகளோடு உட்புறமாக அமைந்துள்ளன. தண்ணீருக்குள் எழும் ஒலி அதிர்வுகளை, இந்தச் சிறு துளைகளின் வழியாக மீன்களால் உணர முடியும்.

மேலும் மீன்களின் உடலில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறுசிறு துளைகள் உள்ளன. இவற்றின் வழியாகவும் தண்ணீரில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை அவை உணரும். குறிப்பாக, வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கிறோமே தங்க மீன்கள், அவற்றுக்கு இந்த உணரும் ஆற்றல் ரொம்ப அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிறிய நீர் அதிர்வுகளைக்கூட இந்த மீன்கள் உடனே உணர்ந்துவிடும் . இதன்மூலம் எதிரிகள் தண்ணீரில் இருப்பதை அந்த மீன்களால் அறிந்துகொள்ள முடிகிறது.

உண்மையில் மீன் தண்ணீருக்குள் இருப்பதை மனிதர்களால் அறிய முடியாது. ஆனால், கரையில் நாம் நடமாடுவதை மீன்கள் உடனே உணர்ந்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடும்!

tamil.thehindu

  • தொடங்கியவர்

2016ல் மைதானத்துக்கு வெளியே நடந்த விளையாட்டு விநோதங்கள்! #2016Rewind

 

விளையாட்டு

கடைசி நிமிட த்ரில், பரபரப்பு, சேஸிங், ட்விஸ்ட்டுகளால் மட்டுமே நிறைந்தது அல்ல விளையாட்டு. சிலசமயம் களத்துக்கு வெளியிலும் சுவாரஸ்யங்கள் நிகழும். 2016ல் அப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகமாகவே அரங்கேறின. அவற்றில் சில இங்கே..

இந்த ரசிகர்களை திருப்திப்படுத்தவே முடியாது: கத்துக்குட்டி கால்பந்து அணியான லெய்செஸ்டர் சிட்டி, பிரீமியர் லீக் கோப்பையை வென்றால் உள்ளாடையோடு டி.வி நிகழ்ச்சியை தொகுப்பதாக சவால் விடுத்தார் அந்த அணியின் முன்னாள் வீரர் கேரி லினேகர். லெய்செஸ்டர் அணி கோப்பையை வென்றது. ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் விக்கித்து நின்றது. வேறு வழியில்லாமல் லினேகர் சொன்னபடி தன் வார்த்தையை நிறைவேற்றினார். ஆனாலும் அவர் அணிந்ததை முழுமையாக உள்ளாடை என ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் பொங்கினர். நொந்து போனார் லினேகர்.

வானவில்லில் கருப்புக்கும் இடமுண்டு: ஒருவழியாய் இனவெறி முடிவுக்கு வந்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணியின் பெயர்பெற்ற பேட்டிங் வரிசையில் ஒரு கருப்பின வீரர் இடம்பெற இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. டெம்பா பவுமா அணியில் இடம்பெற்றதன் மூலம் வானவில்லின் சாயல் மாற்றம் கண்டுள்ளது!

உண்மையை உணர?: ‘போஸ்ட் ட்ரூத்’ - உணர்வுப்பூர்வமான எண்ணங்களுக்கு மத்தியில் உண்மை உரைந்து போவது. இந்த ஆண்டின் ஆகச்சிறந்த வார்த்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை. அதில்தான் எவ்வளவு உண்மை. 327 பந்துகளில் 1009 ரன்கள் குவித்த பிரனவ் தனவாடேவை எல்லோரும் புகழ்ந்து தள்ளியதில், 30 யார்டு பவுண்டரி லைன், எதிர்த்து விளையாடிய வெறும் 10 வயதுச் சிறுவர்கள், 25 முறை கண்டம் தப்பியது போன்றவை யாராலும் கண்டுகொள்ளப் படவேயில்லை.

செஞ்சுரி அடிச்சாலும் சான்ஸ் இல்லை: 2016 ஜனவரி – 81 பந்துகளில் 104 ரன்கள் குவித்து, சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வெல்ல இந்திய அணிக்குப் பெரும்பலமாய் இருந்தார் மணிஷ் பாண்டே. அடுத்த ஜனவரியும் வந்து விட்டது. ஆனாலும் அணியில் இடம்பெற இன்னும் பிற வீரர்களின் காயத்தையும், ஓய்வையும் எதிர்பார்த்திருப்பது மணிஷின் துரதிர்ஷ்டம்.

மறுபிறவி: நேபாள 19 வயதுக்குட்பட்டோர் அணிக் கேப்டன் ராஜு ரிஜால், 10 ஆண்டுகள் முன்பு மும்பை 15 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடியவர் என்று புகார் கிளம்ப ரணகளமானது கிரிக்கெட் வட்டாரம்.

நெகியும் மதிப்பிழப்பும்: ரூ.8.5 கோடிக்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு ஆச்சரியப்பட வைத்தார் பவன் நெகி. ஆனால் அவருடைய இன்றைய நிலை நம் ஆயிரம் ரூபாய் நோட்டைப் போலத்தான். பல போட்டிகளில் வெளியில் அமர்த்தப்பட்ட அவரை அணியிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளது டேர்டெவில்ஸ் அணி. இந்த ஐ.பி.எல்லே இப்படித்தான்பா!

நான் கேள்வி கேட்டா?: வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர வைத்தார் தோனி. தன் ஓய்வைப் பற்றிக் குசும்பாகக் கேட்ட பத்திரிகையாளர் ஃபெர்ரியை தன் அருகில் அமரவைத்து. “2019 உலகக் கோப்பையில் நான் ஆடுவேனா?” என்று தோனி கேட்க, திணறிக்கொண்டே “நீங்கள் நிச்சயம் ஆட வேண்டும்” என்று ஃபெர்ரியே பதிலளித்தார். ஒரு கேள்வி எப்படித் துளைக்கும் என்பதை பத்திரிகையாளர் ஒருவருக்கு உணர்த்தினார் தோனி!

‘தலை’வலி குறைந்தது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் விராத்திற்கு பெரும் குழப்பம். அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் நல்ல ஃபார்மில் இருக்க யாரை தேர்ந்தெடுப்பதென்ற ஆனந்தச் சிக்கல். ஆனால் ஆண்டின் முடிவில் நிலமை தலைகீழ். பல ஆண்டு காலம் அணியில் இடம்பெறாத பார்த்திவ் படேலை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது இந்திய அணி. 11 போட்டிகளில் 5 வேறு வேறு காம்பினேஷன்களைப் பயன்படுத்தியுள்ளது நம் டெஸ்ட் அணி.

மும்பைகார் இல்லாமலே: இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு மும்பை வீரர் கூட இல்லாமல் இங்கிலாந்துடன் வான்கடேவில் களமிறங்கியது கோஹ்லி அண்ட் கோ. 1933ல் பாம்பே ஜிம்கானாவில் நடந்த இந்திய அணியின் முதல் டெஸ்டிலிருந்து இப்படியொரு நிகழ்வு நடந்திருப்பது இதுவே முதல் முறை.

பாஜி செய்த டர்ன்: ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதில்லை என்ற முடிவின் மூலம், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மெதுவாய் தானாக விலக்கிக்கொண்டிருக்கிறார் ஹர்பஜன் சிங். அஷ்வினுக்குத் தான் இப்போ ஜெய்ந்த் கிடைச்சுட்டாரே!

தென் அமெரிக்கா தெற்காசியா அல்ல: ரியோ ஒலிம்பிற்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த தெற்காசியப் போட்டியில் இந்தியா கோலோச்சியது. 188 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்கள் வென்ற நாடு ரியோவில் செய்த செயல்பாட்டை என்னவென்று சொல்வது. கஷ்டம்.

இது ஆரம்பமே: “பார்க்கவில்லை. நம்ப முடியவில்லை” என்று பாடினார் மார்க் ஆன்டனி. ஆனால் போர்டோ ரிகோ நாட்டவர் அதைக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். டென்னிஸ் வீராங்கனை மோனிகா புய்க் ஒலிம்பிக் தங்கம் வென்று அசத்த, அந்நாட்டுப் பாடகர் ரிக்கி மார்டினின் கீதம் காற்றில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

சீனா எங்கே?: ஒலிம்பிக் மகளிர் பேட்மின்டனின் ஒற்றையர் இறுதிப்போட்டி. ஒருபுறம் இந்தியாவின் சிந்து. மற்றொருபுறம் ஸ்பெயினின் கரோலினா மரின். ஆம் சீன வீராங்கனைகள் எவருமின்றி நடந்தேறியது ஒரு பேட்மிண்டன் ஃபைனல். ஃபைனலில் மட்டுமல்ல பதக்க மேடையில் கூட இம்முறை சீனப்பெண்களுக்கு இடமில்லை.

காதலில் விழுந்தேன்: ரியோ ஒலிம்பிக் சில அற்புத தருணங்களைக் கண்ட்து. டைவிங்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஹி ஜி க்கு மேலுமொறு ஆச்சரியம் காத்திருந்தது. தனது பாய் ஃபிரண்ட் கின் காய் அற்புதமாய் புரபோஸ் செய்ய காதல் கீதம் ரியோவில் படர்ந்தது.
சூஸ் தி பெஸ்ட் ஆன்சர்: 74 கிலோ மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கப் போவது யார்? அ) நர்சிங் யாதவ் ஆ)சுஷில் குமார் இ) பர்வீன் ரானா ஈ) யாருமில்லை. பதில் –ஈஈஈ தான். பலரின் சதியும் விதியும் சேர்ந்து காவு வாங்கியது ஏனோ இந்தியாவின் ஒரு பதக்கத்தைத்தான்.

அஷ்வினின் சிறந்த டெலிவரி: ஐ.சி.சியின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் விருதுகள் அஷ்வினின் கொண்டாட்டத்திற்குப் போதவில்லை. இதோ இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் சுழல் புயல். “இரண்டாவது கேரம் பேபியை 21ம் தேதி டெலிவரி செய்துள்ளேன்” என்று டுவிட்டரில் கேரம் பால் போட்டுள்ளார் அஷ்வினின் மனைவி பிரீத்தி.

ஆட்டோகிராஃப் வாங்கி அலறடித்தவர்: மைக்கேல் பெல்ப்ஸ் ஒருமுறை சிங்கப்பூர் சென்றிருந்த போது அவரிட ஆட்டோகிராஃப் வாங்க வந்தான் ஒரு பள்ளி மாணவன். ரியோவில் பெல்ப்சை வீழ்த்தி தங்கம் வென்று உலகிற்கு தன் ஆட்டோகிராஃபை பதிவு செய்திருக்கிறார் அந்த மாணவன் -  ஜோசப் ஸ்கூலிங்.

கிளைமாக்ஸ் கில்லர்ஸ்: ரியோ ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசி நிமிடத்தில் கோல்கள் அடித்து அலறடித்தது ஜெர்மனி ஹாக்கி அணி. இந்தியா 3 விநாடிகள் இருக்கையில் வீழ்ந்தது. அர்ஜென்டினாவின் வெற்றி 8 நொடிகள் இருக்கையில் கரைந்து போனது. நியூசிலாந்து அணியோ வெறும் 1 நொடி இருக்கையில் கோல் வாங்கி வீழ்ந்தது.

நாயகன் எங்கே: காயம் காரணமாக தென் ஆப்ரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்யவில்லை. காதநாயகன் இல்லாத சினிமா போல இருந்தது, இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு. 

ஜிம்னாஸ்டிக்கில் ஒரு லாங் ஜம்ப்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபா கர்மகர் என்ற பெயரை தீபா கர்மர்கர் என்றே நினைத்திருந்தார் சச்சின். ஒலிம்பிக்கில் தீபா ஜொலித்த பின், Produnova  என்ற வால்ட் பெயர் இந்தியா முழுக்க பிரபலம். அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் பார்சல்ல்....

எப்ப தேவையோ அப்ப ஆடுவோம்: அவர்கள் ஆட்டம் படு போர். 90 நிமிடங்களில் அவர்கள் கோல் அடிக்கவே இல்லை. குரூப் சுற்றின் முடிவில் மூன்றாவது இடம். யுரோ கோப்பையில் போர்ச்சுகல் அவ்வளவு வலிமையான அணியா அல்லது மற்றவர்கள் சொதப்பினார்களா என தெரியவில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். 2016ல் போர்ச்சுகல் யுரோ சாம்பியன். கடைசியாக, மெஸ்சியால் சாதிக்க முடியாததை ரொனால்டோ சாதித்து விட்டார். ரொனால்டோடா...

portugal_champion_13254.jpg

ஜட்டுவின் ஜாலம் : தன்னைப் பழித்தவர்களுக்கெல்லாம் தனது செயல்பாட்டால் சாட்டையடி கொடுத்துள்ளார் ‘சர்’ ரவீந்திர ஜடேஜா. பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பி இங்கிலாந்தை கிறங்கடித்தது இந்த ராஜ்கோட் சிங்கம். ‘சர்’-பிரைஸ்!

பேட்டா எங்கமா தர்றாங்க: மோடி 500, 1000 ரூபாய் செல்லாதுன்னு அறிவிச்சாலும் அறிவிச்சார், மகேஷ் பூபதி நடத்தும் இன்டர்நேஷனல் பிரிமியர் லீக் இந்த வருஷம் வந்ததும் தெரியலை. போனதும் தெரியலை. பணத் தட்டுப்பாடு காரணமாக இரண்டாவது மல்யுத்த லீக் சீசனும் ஒத்தி வைப்பு. பேட்டா எங்கம்மா தர்றாங்க... என புலம்பினர் ரஞ்சி டிராபி பிளேயர்ஸ். 

இப்படியெல்லாமா சாபம் விடுவாங்க: சிகாகோ கப்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் அணி. இந்தமுறை அந்த அணி வேர்ல்ட் சீரிஸ் சாம்பியன்ஸ். ஏப்ரல் 21ம் தேதிக்கு முன்புவரை ஒரு வெற்றி கூட பெறாத அணி, ஏழு மாதம் கழித்து ஒரு சரித்திர சாதனை படைத்தது.  அந்த சாதனையில் 108 ஆண்டு கால சாபத்துக்கு விமோசனம் கிடைத்தது. அதென்ன சாபம்? தான் வளர்த்த ஆட்டுக்குட்டிக்கு மைதானத்தில் தனி சீட் கொடுக்காததால், விரட்டியடிக்கப்பட்ட ஒரு ரசிகன் சாபம் விட்டார். அந்த சாபம் தான், அந்த அணியை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கோப்பையை நெருங்க விடாமல் தடுத்தது என்கின்றனர் பேஸ்பால் ரசிகர்கள். ஒரு வழியா ஜெயிச்சாச்சு!

vikatan.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.