Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

15872015_876463695789507_214497234535576

நம் பாரம்பர்ய உடையான வேட்டி தினம் இன்று...

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பல பேபிகளை சிரிக்கவைத்த பீன் பேபிக்கு இன்று பிறந்தநாள்...!

பல பேபிகளை சிரிக்கவைத்த பேபிக்கு இன்று பிறந்தநாள். நம் தந்தை நம்மிடம் 'சார்லி சாப்ளின்' பற்றிச் சொல்லியிருந்தால் நம் பிள்ளைகளிடம் இந்த மனிதரைப் பற்றிச் சொல்லலாம். அவர்தான் 'ரோவன் அட்கின்ஸன்'. இந்தப் பெயரை வைத்து இவரை அழைப்பதை விட 'Mr. பீன்' என்று அழைக்கும் கூட்டம்தான் அதிகம். ஒருவரைச் சிரிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் இவரின் காமெடிகளைப் பார்த்துச் சிரிக்காமல் யாராலும் இருக்க முடியாது. பேசாமலே சிரிக்க வைப்பதில் வல்லவர்.

ஒருவரை எப்படி வேணாலும் சிரிக்க வைக்கலாம் என்பவருக்கு மத்தியில் இப்படியும் சிரிக்க வைக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இவர். இவரது சிறப்பம்சங்கள் என்று பார்த்தால் இவர் ஓட்டும் கார், இவர் உடுத்தும் கோட் சூட், இவரது நெருங்கிய நண்பன் 'டெட்டி'. இந்த மூன்றும் இடம்பெறாமல் எந்த ஒரு எபிசோடும் இருப்பதற்கு வாய்ப்புக் குறைவு. 

அனைத்திலும் காமெடி :

காலை எழுந்து பல் துலக்குவது முதல் இரவு தூங்கப் போகும்வரை இவர் காமெடி செய்த காணொலிகள் அல்டிமேட் ஹிட் அடித்தன. காரில் சென்றுகொண்டிருக்கும்போதே பல் துலக்கி, ட்ர்ஸ் போட்டு, தலை சீவி, பவுடர் போட்டுக் கிளம்பும் திறன் இவரிடம் மட்டும்தான் உள்ளது. பல பேர் உயிரைக் கொடுத்து பேசி காமெடி செய்தாலே சிரிக்க வைப்பது எளிதான காரியமில்லை. ஆனால் சிறு அசைவிலும் காமெடி செய்யும் திறன் சார்லி சாப்லினுக்கு அடுத்தபடியாக இவரிடம்தான் உள்ளது. 

இவருக்கு வாய்த்த அடிமை :

'மிஸ்டர் பீன்' படங்களில் வரும் கார்

உன்னிப்பாக இவரின் எபிசோடுகளைக் கவனித்துப் பார்த்திருந்தால் இவருக்கு வாய்த்த அடிமையைப் பற்றி அறிந்திருக்கக்கூடும். யார் அவர்? ஆளைப் பார்த்திருக்க முடியாது  ஆனால் அந்த காரை பார்த்திருக்கலாம். இவர் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது அந்த ப்ளூ கலர் காரை வழியில் கண்டால் அதை வாரிவிட்டுதான் செல்வார். அப்படி என்ன தான் இவருக்கும் அந்த ப்ளூ கலர் காருக்கும் வாய்க்கால் தகராறு என்று தெரியவில்லை. 

கார் பிரியர் :

maxresdefault_%282%29_16364.jpg

இவருக்கு கார் என்றால் மிகவும் பிடிக்கும். இவரது முதல் கார் 'மோரிஸ் மைனர்'. பின் உயர்ந்த ரக கார்களான மெக்லாரன் எஃப்-1, ரினால்ட் 5 ஜி.டி டர்போ, ஆஸ்டின் மெட்ரோ ஆடி ஏ-8 போன்ற கார்களுக்குச் சொந்தக்காரானார். ஆனால் இவருக்கு 'போர்ஸே' என்ற ரகக் காரைப் பிடிக்காது என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இவர் ஒரு ரேஸரும்கூட.

சிறுவர்களின் நாயகன் :

bean_16067.png

சிறுவர்களுக்குப் பிடித்தமான காமெடி நட்சத்திரப் பட்டியலில் இவர்தான் முதலிடம் பிடித்திருப்பார். இவர் காதுகூட காமெடி செய்யும். கேப்டனுக்குக் கோபம் வந்தால் கன்னம் துடிக்கும், கண் சிவக்கும், கரன்ட் பாக்ஸ் வெடிக்கும். ஆனால் இவர் காதை அசைத்தால்கூட காமெடிதான். முகம் அப்படியே இருக்கும் காதுகள் மட்டும் தனியாக ஆடும். அது சிறுவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. 

அனிமேட்டட் வெர்சன் :

மிஸ்டர் பீன் - அனிமேசன் வெர்சன்

நேரில்தான் இவர் காமெடியில் கிங் என்று நினைத்தவர்கள் மத்தியில் என் உருவத்தில் இருக்கும் அனிமேசன்கூட காமெடி செய்யும் பாஸ் என்று பதிலடி கொடுத்ததுபோல், இவரது அனிமேட்டட் வெர்சனில் வெளிவந்த எபிசோடுகளும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளுக்கு கார்ட்டூன்களின் மேல் உள்ள ஆர்வம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று அதிலும் வலம்வந்து வெற்றிபெற்றவர் பீன்.

ஷாப்பிங் சென்ற பீனுக்கு வந்த சோதனை :

உலகத்தை வேறு கோணத்தில் பார்க்கும் ஆள்தான் பீன். பொதுவாகக் காரை ஒட்டுநர் சீட்டில் இருந்து ஓட்டுவதுதானே வழக்கம். ஷாப்பிங் சென்று வாங்கிய பொருட்கள் அதிகமாகச் சேர்ந்ததால் கார் முழுவதும் பொருட்களை வாங்கி குவித்துவிட்டார். எங்கே அமர்ந்து ஓட்டுவது என்று சந்தேகம் எழுந்த பீனுக்கு வந்தது ஒரு யோசனை. நாம் ஏன் காரின் மேல் அமர்ந்து வண்டியை ஓட்டக் கூடாது என்ற எண்ணம் தோன்ற, அவர் கார் மேல் ஒரு சோபாவை அமைத்து ஸ்டியரிங்கில் கயிற்றைக் கட்டி துடைப்பக் குச்சியில் ப்ரேக் போடும் காட்சியைக் கண்டு ரசியுங்கள்.  

 

 

vikatan

  • தொடங்கியவர்

உலகில் 8500 அடியிற்க்கு மேலிருக்கும் மலசல கூடம்!

 

உலகிலே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்றான சைபீரியா மலை படுக்கைகளின் கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில்ஒரு மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

toilet-paling-berbahaya-di-dunia.jpg

குறித்தப்பகுதியில் பகுதியில் வானிலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. அதில் 4 வானிலை ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தேவைக்காக அங்கு மலசலக்குடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

குறித்த மலசலகூடத்திற்கான காகிதங்கள் ஹெலிகொப்டர்  மூலம் கொண்டு வரப்படுகிறது. மேலும் இது உலகின் மிகவும் பயங்கரமான மலசலக்கூடம் என அழைக்கப்படுகிறது.

போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத இவ் ஆய்வுமையத்திற்குள் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மலசலகூடத்திற்கு தேவையான  காகிதங்கள் ஹெலிகொப்டர்  மூலம் கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!

பாடம் எடுக்கும் கணக்கு டீச்சர் தெரசா

ரசுப் பள்ளி என்றால் கேட்குற விஷயத்தில் சுருதி குறையும் இந்த காலத்தில், கணிதத்தை வெகு எளிதாக சொல்லிக்கொடுத்து அதை தன் செல்போனில் பதிவுசெய்து பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூபில் பதிவேற்றம் செய்து அசத்தி வருகிறார் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  கணக்கு டீச்சர் ரூபி கேத்தரின் தெரசா. இவர் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள் என்பது வாவ் தகவல்.

“1986-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து அதன்பிறகு  2007-ம் ஆண்டில் சேலம் அருகிலுள்ள சின்ன சீரகங்கபாடி அரசு பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்குள்ள குழந்தைகள் படிக்க சிரமப்படுவது தெரிந்தது அதை போக்க வழிகளை தேடினேன். பிள்ளைகளுக்கு வித்தியாசமாக சொல்லி கொடுப்பது எப்படி என்று இணையத்தில் தேடினேன். அதைவைத்து எனக்கிருந்த அனுபவத்தோடு சேர்த்து எளிதாக சொல்லிக் கொடுக்க, பிள்ளைகள் 98, 99 வாங்க ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து ஆரம்பித்தது என் கற்பித்தலின் உற்சாக பயணம்” என்றவரின் வார்த்தைகளில் அத்தனை வாஞ்சை, அவரது வீடியோவைப் போல்.

‘‘பொதுவாக நான் வகுப்புக்குள் நுழைந்தவுடன் பிள்ளைகளிடம் “என்னை ஆசிரியரா நினைக்காதமா. உன்னுடைய அம்மாவாகவோ அல்லது உனக்கு யாரைப் புடிக்குமோ அவங்களா நினைச்சுக்கோடா கண்ணு. அப்படினா நீ நல்லா படிச்சுருவ” என்பேன். பொதுவாக அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் இல்லாமல், அல்லது பெற்றோரில் ஒருவர் இல்லாமல் படிக்க வருகின்ற குழந்தைகள்தான் ஏராளம். அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் கண்ணீரில் கரைக்க வைக்கும். அதனாலேயே பாப்பு, செல்லம் என்பது போன்ற வார்த்தைகளை உபயோகித்து பாடங்கள் சொல்லி கொடுப்பேன். கண்டிக்கும்போது ‘பாப்பு’ என்கிற சொல்லை தவறவிடமாட்டேன்” என்கிறவர் தான் வாட்ஸ்அப்பில் வந்த கதையைச் சொன்னார்.

 

‘‘ஆரம்பத்தில் இணையத்தளத்தில் வீடியோ போடாலாமா வேண்டாமா என்ற பயம் இருந்துக்கொண்டே இருந்தேன். பிறகு, எளிய வகையில் வாய்பாடு கற்றுக்கொள்வதற்கு உதவியாகவும், காது கேட்காத குழந்தைகளும் பார்த்து புரிவது போல அனிமேஷன் செய்திருந்த அந்த வீடியோ அதிக வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து பேஸ்புக்கில் ‘வர்க்கப்படுத்துவது எப்படி?’ என்பதை வீடியோவாக பதிவேற்றம் செய்தேன். பலரால் பார்க்கப்பட்டது இந்த வீடியோ. மூன்று வழிகளில் பெருக்கல் செய்வது எப்படி என்கிற வீடியோவை ஏராளமானவர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்று சொல்லி வாயடைக்கிற ரூபி, இதுவரை 200 வீடியோக்களுக்கு மேல் எடுத்து அப்லோட் செய்திருக்கிறார்.

‘‘என்னோட வீடியோவ பார்த்துட்டு டீச்சர் இதைப் பத்தி போடுங்க, அந்த கணக்கு கஷ்டமா இருக்கு, அந்த முறை சொல்லி கொடுங்கனு பசங்க, அம்மாக்கள் ஆர்வமா கேக்க ஆரம்பிச்சாங்க. பத்தாம் வகுப்பு படிக்கின்ற குழந்தைகளுக்காக என்னுடைய பிளாக்கில் (http://rubitheresa.blogspot.in/) பல பகுதியில் இருந்தும் டீச்சர் இதைப்போடுங்க, இதை சொல்லிக்கொடுங்க என்று அழைத்து சொன்னார்கள். குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு என்னுடைய வீடியோ உதவியாக இருக்கிறது என்று சொல்லும்போது மகிழ்வாக இருக்கிறது.

whatsapp_11003.jpg

உங்களுடைய வீடியோக்களை டவுன்லோடு செய்தே செல்போன் மெம்மரி தீர்ந்துவிடும் போலிருக்கிறதே, வீடியோ அதிகமாக இருப்பதால் செல்போன் ஹேங்க் ஆகுதே என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். குரூப் 4 தேர்வு எழுதுபவர்கள் என்னுடைய முறையினை கடைப்பிடிப்பதாகவும், எங்களுக்கு பயிற்சி கொடுங்கள் என்கிறார்கள். வெளிநாட்டினர் என்னுடைய வீடியோவைப் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்”  என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

நீங்கள் வீடியோவில் பாடம் நடத்தும்போது சொல்லுடா கண்ணு, கவனிடா கண்ணு என்று சொல்கிறீர்களே?

“பாடம் நடத்தும்போது சொல்லுடா கண்ணு, பாருடா கண்ணு என்று குழந்தையை அழைக்கும் விதத்தை நிறைய பேர் பாதித்திருக்கிறது. எப்படி டீச்சர் இப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள். பொதுவாக குழந்தைகளிடம் அன்பாகப் பழகும்போது தான் அவர்களுடைய குணாதியசங்களும் மாறும். வெறும் படிப்பு மட்டுமல்ல, அவை பண்பையும் வளர்க்க வேண்டும். பாடம் சொல்லிக்கொடுக்கும் முறையிலேயே பண்பையும் சொல்லிக்கொடுக்க முடியும். என்னடா கண்ணு, என்னடா பாப்பு என்று பேசும்போது தான் என் மீது ஆசிரியர்கள் மீது பிடிப்பு ஏற்பட்டு. எந்த வளமும் இல்லாம அதே நேரம் படிக்கவும் சிரமப்படுற குழந்தைங்களுக்குத் தான் நான் தேவை.  

வீடியோ டெக்னாலஜி எப்படி கையாளுகிறீர்கள்?

“வகுப்பில் கடைசி பத்து நிமிடம் வீடியோவுக்காக செலவழிக்கிறோம். இதற்காக சிம் போடாத போனைத் தான் உபயோகிக்கிறேன். வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே யூடிப் மற்றும் வாட்ஸ்அப்பில் அப்லோடு செய்து விடுவேன். இதற்கு என் மகனும், மகளும் உதவி செய்வார்கள்."

அரசு பள்ளியில் இருந்துகொண்டு இதனை எளிதாக செய்ய முடிகிறதா?

“தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு நிறைய வசதிகள் அரசுப் பள்ளிகளில் இருக்கிறது. நாம் எந்தளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் இருக்கிறது. டெக்னாலஜி மூலமாக குழந்தைகளுக்கு எப்படி கல்வி கற்றுக்கொடுப்பது என ஒவ்வொரு மாவட்ட அளவிலும் பயிற்சி வழங்கி வருகிறார்கள். நல்ல அங்கீகாரமும் இருக்கிறது. எங்கள் பள்ளிக்கு இயக்குநரே நேரடியாக வந்து பாராட்டி இருக்கிறார்.

உங்களுடைய குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

“என் அப்பாதான் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தார். அம்மா மனநிலை பாதிக்கப்பட மிகுந்த சிரமத்துக்கு இடையில் அப்பாவின் உதவியோடு படித்து முன்னேறினேன். எனக்கு ஏற்பட்ட சிரமம், மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்திருக்கிறேன். மாரடைப்பு என்கிற கொடிய நோயால் என் கணவரும் பிரிந்துவிட என் மகன், மகள் துணையால் நான் இன்று நடமாடிக் கொண்டிருக்கிறேன். மகன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். என் மகளுக்கு சென்னையில் படிக்க வாய்ப்பு கிடைத்து, எனக்காக இங்கேயே கல்லூரியில் படிக்கிறாள். இப்படிப்பட்ட தங்கமான பிள்ளைகள் இருப்பதாலேயே என் பள்ளி வாழ்க்கை நிறைவாக போய்க்கொண்டிருக்கிறது" என்றபடி வகுப்பறைக்குச் செல்கிறார் ரூபி டீச்சர்.

வாழ்த்துகள் டீச்சர்....

vikatan

  • தொடங்கியவர்

 

பள்ளிக்கூடத்தில் நிஜமான விஞ்ஞானம்

பிரிட்டனில் குட்டி விஞ்ஞானிகளுக்கு தட்டுப்பாடு. ஒன்பது முதல் பதினொரு வயது வரையிலான சிறுவர்களில் பதினைந்து வீதத்தினர் மாத்திரமே விஞ்ஞானத்தை எதிர்காலத்தில் பாடமாக படிக்க விரும்புகிறார்கள்.
எதிர்காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்களை அறிவியலை நோக்கி ஈர்க்க பிபிசி ஒரு திட்டத்தை இப்போது ஆரம்பித்துள்ளது.
‘Terrific Scientific’ என்ற இந்த திட்டம், பிரிட்டன் எங்கிலுமுள்ள பள்ளிக்கூடங்களில் நிஜமான அறிவியல் சோதனைகளை நடத்தி, யதார்த்தமாக அறிவியல் முக்கியத்துவம் மிக்க முடிவுகளை அங்கேயே கண்டறிய விளைகிறது. இந்த பிரச்சார நடவடிக்கை, மிக அதிக அளவில் பிள்ளைகளை விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் நோக்கி ஈர்க்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பிபிசியின் காணொளி.

  • தொடங்கியவர்

15800756_761131637370510_415462847208522

:grin::grin:

  • தொடங்கியவர்

மறைந்து போகிறதா மனிதம்?

லண்டனைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான படேல் தன் வழிகாட்டும் நாய் உடலில் ஒரு கேமராவை மாட்டி தான் தினமும் பயணப்படுவதை வீடியோக்களாக எடுக்கிறார். அதில், அவரையும் அவர் நாயையும் சிலர் தினமும் அவமானப்படுத்துவது பதிவாகியுள்ளது. அவற்றை அப்படியே சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றுகிறார் படேல். 'எனக்கு வழிவிடாமல் மறித்துக்கொண்டு நிற்பார்கள். கிகா(நாய்) அவர்களைத் தாண்டி போக முற்பட்டால் குடைகள், பைகளால் அடிப்பார்கள். சில பயணிகள் 'கிகா இறங்கினால்தான் நாங்கள் பேருந்தில் ஏறுவோம்' என கத்துவார்கள். ஆனாலும் மனிதம் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு உதவும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்' என நம்பிக்கையோடு பேசுகிறார் படேல்.

patel_23501.jpg

vikatan.

அண்டார்டிகாவில் இருந்து பிரியும் ஐஸ்பாறை

Larsen C என பெயரிடப்பட்டுள்ள பிரமாண்ட ஐஸ்பாறை அண்டார்டிகா கண்டத்தில் இருந்து பிரியப் போகிறது. 5,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்புளவுள்ள இந்த ஐஸ்பாறை பிரிந்தால் அண்டார்டிகாவின் பரப்பளவில் மாற்றம் ஏற்படும். கடல் மட்டம் இதனால் உயர்ந்தாலும், எந்தவித ஆபத்தும் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்கு முன்னால் Larsen B என்ற ஐஸ்பாறை 2002-லும் Larsen A என்ற ஐஸ்பாறை 1995-லும் பிளவுபட்டது குறிப்பிடத்தக்கது.

larsen_23170.jpg

சிலையால் நேர்ந்த சிக்கல்!

தென் கொரியாவின் பூஸன் நகரில் ஜப்பான் தூதுரகத்திற்கு முன்னால் Comfort-Women என்ற பெயரில் ஒரு பெண்ணின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் வீரர்கள் தென்கொரிய பெண்களை பலாத்காரப்படுத்தியாக காட்டுகிறது என நினைத்த ஜப்பான் அரசு, கொரியாவுக்கான தன் தூதர்களை திரும்பப் பெற்றுள்ளது. இந்த சிலையை வைக்க முதலில் அனுமதி மறுத்தது கொரிய அரசு. கொரிய அரசை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்த, வேறுவழியில்லாமல் நிறுவப்பட்டது.

statue_23505.jpg

  • தொடங்கியவர்

15823002_1074756872652656_91332280248625

Bild könnte enthalten: 1 Person, Text

உலக கோப்பையை பெற்று தந்த கபில் தேவ் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

ஜனவரி 6: உலக கோப்பையை பெற்று தந்த கபில் தேவ் பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு

இந்தியர்களால் எதுவும் முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த கபில் தேவின் பிறந்தநாள் ஜனவரி ஆறு. கபிலிடம் படிக்க உண்டு பல பாடங்கள். பத்து மட்டும் இங்கே ..

கிடைக்கிற தருணத்தில் கில்லியாகு :

கிரிக்கெட் வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தார் கபில். 13-வது வய்தில் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்காக வந்த இடத்தில் ஒரு ஆள் குறைகிறது என்று சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தான் கபில். அப்பொழுதில் இருந்து அடித்து ஆடத்தொடங்கியது காலத்துக்கும் தொடர்ந்தது.

என்னால் எதுவும் முடியும் :

நாற்பது வருடங்களுக்கு முன்னால் பிராபோர்ன் மைதானத்தில் வீரர்களுக்கு உணவு கம்மியாக வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. பதினைந்து வயது சிறுவன் கபில் ,"எனக்கு கூடுதலாக சாப்பாடு போடுங்கள் ! நான் வேகப்பந்து வீச்சாளன் !" என்ற பொழுது இந்தியாவில் அப்படி யாருமே இல்லையே என்று நகைத்தார்கள் சுற்றி இருந்தவர்கள். அப்பொழுது எதுவும் சொல்லாத கபில் ஒய்வு பெற்ற பொழுது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்கள் அவர் வசமே இருந்தன

புலிகள் போலியாக ஜெயிப்பதில்லை :

ஆஸ்திரேலிய அணியுடனான 1978 ஆம் வருடப்போட்டி அது. ஒரு சிக்ஸர் கபில் இருந்த பக்கம் பாய்ந்து வந்தது. நடுவர் பவுண்டரி என்று அறிவித்தார். கபில் அதை சிக்சர் என்று சொல்லி மாற்றினார். இந்திய அணி ஒரு ரன்னில் தோற்றுப்போனது. கிரிக்கெட் என்னவோ ஜெயித்திருந்தது.

புதிய பாதை உன்னுடையது :

இந்தியர்கள் என்றால் சுழல்பந்து வீச்சுக்கு லாயக்கானவர்கள் என்கிற எண்ணமே எல்லா நாட்டவருக்கும் உண்டு. அதுதான் கபிலுக்கு முதல் டெஸ்ட் போட்டி. கபில் பாகிஸ்தானின் சாதிக் முகமதுக்கு பந்து வீசப்போனார். முதல் பந்தே இந்தியர் ஒருவர் அதுவரை வீசிய மிகவேகமான பவுன்சராக எகிறியது. உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது அப்பொழுது தான்.

கடந்தகாலம் கடந்து வா ! :

முந்தைய இரண்டு உலகக்கோப்பையை டெஸ்ட் போல ஆடிவிட்டு வந்திருந்தது இந்திய அணி. வெற்றி என்பதை சுவைத்ததே இல்லை என்கிற சூழலில் தான் உலகக்கொப்பைக்குள் நுழைந்தது அணி. கபில் தேவ் கூட்டு முயற்சியை தொடர்ந்து சாதித்தார். இறுதிப்போட்டியில் கம்மியான ஸ்கோர் அடித்ததும் ,"அடித்திருப்பது அருமையான ஸ்கோர். பந்து உங்களைத்தேடி வரக்கூடாது. பந்தை தேடி நீங்கள் போங்கள். கோப்பையோடு டெல்லி போகிறோம் நாம் !" என்று சொல்லி அடித்தார்.

போராடத்தான் வந்தோம் நாம் :

இந்திய அணியினர் ஒரு நாளையும் டெஸ்ட் போல ஆடிக்கொண்டு இருந்த காலம் அது. அணிக்குள் ஒரு வேகத்தை புகுத்தியது கபில் தான் ! உலகக்கோப்பையின் முதல் போட்டியில் உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டிப்போட்ட அந்த எனர்ஜியை கடைசி வரை அணியை விட்டுப்போகாமல் பார்த்துக்கொண்டார் அவர்.
"நாம் எதற்கும் லாயக்கில்லை என்பது எல்லாரின் கணிப்பும் ! நம்மால் முடிந்ததை செய்வோம் ; போராடிவிட்டுப்போவோம் !" என்பதே அவர் தந்த மந்திரம்

வெற்றிக்கும்,தோல்விக்கும் இடையே ஒரே கோடு :

உலககோப்பையில் ஜிம்பாப்வே அணியுடன் போட்டி. வென்றால் மட்டுமே அரையிறுதி போகமுடியும் அணி என்கிற சூழல். 17/5 என்று அணி தடுமாறிக்கொண்டு இருந்தது. வந்தார் கபில். அடித்து ஆடினார். 17/5 175 என்கிற அவரின் ஸ்கோர் ஆனது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள அந்த ஒரு கோடு உங்கள் மீதான சமரசமில்லா நம்பிக்கை

சுற்றி எதிரிகளா ? சுழன்று அடி :

இங்கிலாந்து அணியுட பாலோ ஆனை தவிர்க்கப்போராடி கொண்டிருந்தது இந்திய அணி. ஆல் அவுட் எப்பொழுது வேண்டுமானாலும் ஆகலாம் என்கிற சூழல். எட்டி ஹெம்மிங்க்ஸ் பந்து வீச வந்தார். சுழன்று அடித்தார் கபில்.
அதிகமில்லை-தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் நான்கு சிக்ஸர்கள். இந்தியா தப்பித்தது

ஓயாமல் ஓடிக்கொண்டிரு :

கிரிக்கெட் உலகின் ராட்சசன் விவியன் ரிச்சர்ட்ஸ் உலகக்கோப்பையை இந்தியாவிடம் இருந்து பறித்துக்கொண்டு போகிற மாதிரி ஆடிக்கொண்டு இருந்தார். மதன் லால் வீசிய பவுன்சரை தூக்கி அடித்தார். அது எங்கோ போய்க்கொண்டு இருந்தது. "கபில் மோசமான பந்தை வீசிவிட்டேன். விட்டுவிடு !" என்று மதன் லால் கத்திக்கொண்டே இருந்தார். கபில் பின்னோக்கி ஓடிக்கொண்டே அந்த பந்தை துரத்தினார். அந்த கேட்ச் இந்திய அணிக்கு கோப்பையை வென்று
தந்தது.

கொடுக்கப்பட்ட கத்தியை கூர்தீட்டு ! :

கபிலின் இன்ஸ்விங் யார்க்கர் வெகு பிரபலம். கடைசி வரிசை பேட்ஸ்மன்களை அதைக்கொண்டு காலி செய்தவர் அவர். அவரிடம் இதைப்பற்றி கேட்கப்பட்ட பொழுது "கடவுள் எனக்கு அவுட்ஸ்விங்கர் தந்தார். நான் மிச்சத்தை
வளர்த்துக்கொண்டேன் !". அதே போல பந்துவீச்சாளராக தொடங்கி ஆல் ரவுண்டரானதும் ஆட்டத்தின் மீதான காதலை கூர்தீட்டிக்கொண்டதால் தான்.

 

vikatan

  • தொடங்கியவர்

p100a.jpg

ங்கே மட்டுமல்ல உலகம் முழுவதும் ரியாலிட்டி ஷோக்கள் மீதான விமர்சனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அமெரிக்க நடிகையான மிஷா பார்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Dancing With the Stars ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். சில வாரங்களிலேயே அவர் எலிமினேட் செய்யப்பட இத்தனை நாள் அமைதி காத்தவர் திடீரென பொங்கிப் பொங்கல் வைத்திருக்கிறார். `அது பாப்புலாரிட்டிக்கான ஷோ. அங்கே திறமைக்கு எல்லாம் மரியாதையே இல்லை' என அனல் தெறிக்கிறது அவர் வார்த்தைகளில். # ஹேப்பி நியூ இயர் மேடம்!

p100b.jpg

ஃபேஷன் இதழ்களின் அட்டைப் படங்களை ஒல்லி பெல்லி அழகிகள்தான் இதுவரை அலங்கரித்து வந்திருக்கிறார்கள். இந்தப் பலகால சம்பிரதாயத்தை உடைத்து முன்னணி ஃபேஷன் இதழான `வோக்' அட்டைப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார் பிளஸ் சைஸ் மாடலான ஆஷ்லி கிரஹாம். `உடல் பருமனான பெண்கள் ஒதுக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அதைத் தடுக்க என்னாலான முயற்சிகளைத் தொடர்ந்து எடுப்பேன்' என கான்ஃபிடென்ட் ஸ்டேட்மென்ட் விடுகிறார் ஆஷ்லி. # ப்ளஸ்ஸோ ப்ளஸ்!

p100cv.jpg

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மார்கட் ராபியின் ரசிகர்கள் கொஞ்சம் சோகம், கொஞ்சம் ஹேப்பி என காக்டெயில் உணர்ச்சிகளில் தவிக்கிறார்கள். பிரிட்டிஷ் இயக்குநரான டாம் அக்கர்லீயுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அதையும் அவர் இன்ஸ்டாவில் போட்டிருந்த படத்தில் தெரிந்த மோதிரத்தை வைத்துதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். `ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல' என்பதுதான் ரசிகர்களின் மைண்ட்வாய்ஸ்.  # விருந்தாவது வைங்க!

p100d.jpg

செலிபிரிட்டிகள் தங்களுக்கு விருப்பமானவர்கள் மறைந்தால் அவர்களைப் பாராட்டி எழுதுவது வழக்கம். அந்த வரிசையில் சமீபத்தில் மறைந்த தன் முன்னாள் மாமனார் ஆலன் திக்கிற்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார் பவுலா பேட்டன். `எனக்கு 15 வயதாகும் போதிருந்தே ஆலன் பழக்கம். அவரால் என் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் நிறைய நடந்திருக்கின்றன. அவரின் சிரிப்பைக் கண்டிப்பாக மிஸ் செய்வேன்' என உருக, ஆறுதல் சொல்லி வருகிறார்கள் ரசிகர்கள்.  # மீண்டு வாருங்கள்!

vikatan

  • தொடங்கியவர்

பிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது?

பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம்.

 
பிராணாயாமத்தை சரியாக எப்படிச் செய்வது?
 
பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும்.

ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு மந்திரங்களைப் பயன்படுத்துதல்... என்று நிறைய முறைகள் உள்ளன.

சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.

நபருக்கு ஏற்பவும், பயிற்சிக்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும், ஏன்... நேரத்திற்கு ஏற்பவும் கூட பிராணாயாமத்தைத் தேர்வு செய்து பலன் பெறலாம்.

பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது.  

முதலில் செய்யும்போது, உடலை - மூச்சுப்பாதைகளைச் சுத்தம் செய்வது முக்கியம். அப்போது உடலில் இறுக்கம் இருக்கலாம். பயிற்சிக்கு முழுதும் உடல் தயாராக இல்லாமல் இருக்கலாம்.

அவ்வாறு மெல்ல மெல்ல தயார் செய்து கொண்டபின்பு பிராணாயாமப் பயிற்சியை நன்றாகச் செய்ய முடியும்; தரமானதாக இருக்கும். பிறகு அடுத்தடுத்த கட்டங்கள் என்பது எளிதாகவும் சரியாகவும் நடக்கும்.

மூச்சை நன்கு நீட்டிக் கொண்டு, உடலையும் மூச்சுக் குழாயையும் சுத்தம் செய்து கொண்டபின்பு நுட்பமான நாடி சோதனை போன்ற பிராணாயாமத்திற்குப் போகும்போது, அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. சுயத்தைப் பற்றிய அறிவு கூடும்; தெளிவு அதிகமாகும். அமைதியின் ஆழம் மேலும் அதிகரிக்கும். இதனால் பலன்கள் நிறைய இருக்கும்.

பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?

ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 07
 
 

Operation.jpg1610: கலிலியோ கலிலி ஜூபிட்டர் கிரகத்தின் நான்கு பெரிய சந்திரன்களை முதல் தடவையாக அவதானித்தார்.

1782: அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கியான அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1785: பிரான்ஸை சேர்ந்த ஜீன் பியரி பிளங்கர்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் ஜெவ்ரி ஆகியோர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸுக்கு பலூனில் பறந்தனர்.

1797: இத்தாலியின் நவீன தேசிய கொடி பாவனைக்கு வந்தது.

1919: சேர்பியாவுடன் மொன்டேநீக்ரோ இணைப்பதற்கு எதிராக மொன்டேநீக்ரோ கெரில்லாக்கள் கிளர்ச்சி செய்தனர். இப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றது.

1927: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடான முதலாவது தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1950: அமெரிக்காவின் டெவன்போர்ட் நகர வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி.

1952: அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அமெரிக்காவிடம் ஐதரசன் குண்டுகள் இருப்பதாக அறிவித்தார்.

1954: நியூயோர்க் நகரில் ஐ.பி.எம். தலைமையகத்தில் கணினி மூலம் மொழிபெயர்ப்பு செய்துகாண்பிக்கப்பட்டது.

1959: கியூபாவில் பிடெல்காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரித்தது.

1972: ஸ்பெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 104 பேர் பலி.

1980: 3 வருடங்கள் அதிகாரத்தை இழந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியது.

1990: இத்தாலியின் பைஸா சாய்ந்த கோபுரம் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1999: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மீதான நாடாளுமன்ற குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

2006: திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தன்னம்பிக்கைக்கு சாட்சி அந்த 644 கொக்குகள்!

sadako_08436.jpg

இரண்டாம் உலக போரின் காரணமாக ஜப்பான், அமெரிக்காவின் முத்து துறைமுகத்தைத்  தாக்கவே அதற்கு பதிலடி கொடுக்க விரும்பிய அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசி தாக்கியது. இத்தாக்குதல் பல லட்சகணக்கான மக்களை இறக்கவும், லட்சகணக்கானோரை பாதிக்கவும் செய்தது .

ஜப்பானின் ஹிரோஷிமாவைச்  சேர்ந்த இரண்டு வயது நிரம்பிய சிறுமி  சடோகோ ஸசாகியும் இந்த பாதிப்பிலிருந்து தப்பவில்லை .பாதிப்பின் தீவிரத்தை அறியாத ஸசாகி மகிழ்ச்சியாகவே தனது பள்ளி வாழ்கையை அனுபவித்தாள். வருடங்கள் ஓடியதே தெரியாத  ஸசாகி ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்தாள். பள்ளியின் சிறந்த தடகள வீராங்கணையில் ஒருத்தியாக விளங்கிய ஸசாகியின்  கனவு ‘’ஒரு நல்ல உடற்பயிற்சி ஆசிரியராக வேண்டும்’’என்பதாக இருந்தது .

ஒரு நாள் தனது அணிக்கு அன்றைய வெற்றியை பெற்றுக் கொடுத்த பின்னர், மிக அதிகமான சோர்வையும், தலை சுற்றலையும் உணர்ந்தாள். விளையாட்டின் காரணமாக சோர்வு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணி மற்றவர்களிடம் இது குறித்து கூறவில்லை. மற்றொரு நாள் மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்த ஸசாகி குறித்து சக மாணவர்கள் ஆசிரியரிடம் முறையிட்டனர்.

ஆசிரியர், ஸசாகியின் பெற்றோரிடம் கூறவே அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ‘’லுயுகேமியா’’ எனும் ‘’அட்டம்பாம்’’ என்ற நோயால் பாதிக்கபட்டுள்ளதை கூறினார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். தனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி அறிந்த ஸசாகி மிகவும் பயந்து அழுதாள்.
மருத்துவமனையில் நாட்கள் கழிந்த போது, ஒரு நாள் நலம் விசாரிக்க ஸசாகியின் நெருங்கிய தோழியான சிசுகோ தன் கைகளில் சில காகித கொக்குகளை கொண்டுவந்தாள். காகித கொக்குகள் குறித்து கூறும் போது, பல வருடங்களாக ஜப்பானில் வாழும் கொக்குகள் புனிதத்தின் அடையாளமாக விளங்குகின்றன. நோயுற்ற ஒருவர்,1000 காகித கொக்குகளை உருவாக்கினால்  அவர் உடல்நலம் பெறுவார் . ஆகவே நீ 1000 காகித கொக்குகளை உருவாக்கு என அன்புக் கட்டளை இட்டுச் சென்றாள்.

ஸசாகி காகித கொக்குகளை உருவாக்க முடிவு செய்தாள் . ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காகித கொக்குகளை உற்சாகமாக உருவாக்கிய போது ஓரளவு உடல் நலம் பெற்றாள். ஆகவே மருத்துவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தின் முடிவில் மீண்டும் நோய்வாய்பட்டாள். முன்பை விட மிக அதிகமான வலியும், வேதனையும் கூடியபோது கூட நம்பிக்கையை தளரவிடாமல் இருந்த போதும் கூட  மீளா உறக்கத்துக்குச் சென்று விட்டாள் சடோகோ ஸசாகி. அவளால் உருவாக்கப்பட்ட காகித கொக்குகள் மொத்தம் 644.

ஸசாகியை பெருமை படுத்த எண்ணிய வகுப்பறை தோழர்கள் 39 பேர் சேர்ந்து காகித கொக்கு சபையை உருவாக்கினர் . ஸசாகியின் இறப்புக்குப் பின் மூன்று வருடங்களுக்கு பிறகு 1958 மே 5-ம் தேதி ஹிரோஷிமா அமைதி பூங்காவில் அவளுக்கென நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அவளின் நினைக்ச் சின்னம் இன்றளவும், நமக்கு உலகின் அமைதியைக் கூறி கொண்டே இருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: eine oder mehrere Personen

உலகின் முதல் கடல் தாண்டிய தொலைபேசி சேவை தொடங்கப்பட்ட தினம் இன்று (07-01-1927)

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

Bild könnte enthalten: 5 Personen, Personen, die stehen und Text

  • தொடங்கியவர்

p36a.jpg

red-dot.jpg`மென்மையான, பயந்த பெண்ணான என்னை, வலிமையானவளாக மாற்றியவள் `பாகுபலி' அவந்திகா. குதிரையேற்றம், வாள் வீச்சு என எல்லா வற்றையும் கொடுத்து என்னைத் தைரியமான பெண்ணாக மாற்றியவளை விட்டுப் பிரியப்போகிறேன்' என ஃபீலாகியிருக்கிறார் தமன்னா. `பாகுபலி'யில் தமன்னாவின் ஷூட்டிங் நாட்கள் விரைவில் முடிவடையப்போவதுதான் அவரின் சோகத்துக்குக் காரணம். மிஸ் யூ பேபி!


p36b.jpg

red-dot.jpgகான்களின் நட்புதான் இப்போது பாலிவுட்டின் வைரல். `குடும்பத்தினருடன் `தங்கல்' படம் பார்த்தேன். `சுல்தான்' படத்தைவிட மிகச்சிறந்த படம். பெர்சனலாக உன்னைப் பிடிக்கும் அமீர். ஆனால், தொழில்ரீதியாக வெறுக்கிறேன்' என சல்மான் கான் ட்விட்டரில் எழுத, பதிலுக்கு `சல்லு, உன் வெறுப்பிலும் ஓர் அன்பையே உணர்கிறேன்' என ரிப்ளை தட்டி லைக்ஸ் அள்ளியிருக்கிறார் அமீர்கான். நண்பேன்டா!


red-dot.jpgசெரீனா வில்லியம்ஸுக்குத் திருமணம். ரெட்டிட் சமூக வலைதளத்தின் நிறுவனரான அலெக்ஸிஸ் ஒஹானியெனை மணக்க இருக்கிறார் செரீனா. 35 வயதான செரீனாவைவிட, மூன்று வயது இளையவர் அலெக்ஸிஸ். `இன்று வீட்டுக்குக் கொஞ்சம் தாமதமாக வந்தேன். என் பைகள் பேக் செய்யப்பட்டிருந்தன. எனக்கான விமானம் தயாராக இருந்தது. சேரும் இடம் ரோம். அழைத்துச்செல்பவர் என் அழகன். ஆமாம், ரோமில்தான் எங்கள் நட்சத்திரங்கள் மோதிக்கொண்டன. நாங்கள் சந்தித்துக்கொண்ட அதே இடத்தில் இப்போது...' என கவிதையாக எழுதி நிச்சயதார்த்தத்தை உறுதி செய்திருக்கிறார் செரீனா. லவ் ஆல்!

p36c.jpg

red-dot.jpgஜெர்மனி டு சீனாவுக்கு ரயில் பறக்கப்போகிறது. இதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது ஜெர்மனி. `ஜெர்மனியில் தயாராகும் பொருட்களை  கடல் வழியாக சீனாவுக்குக் கொண்டுவர, 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. விமானம் மூலம் என்றால் செலவு அதிகம். அதனால் விரைவாகவும் குறைந்த செலவிலும் கொண்டுபோக, `சில்க் ரோட்' வழியாக இந்த ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்' என அறிவித்திருக்கிறது ஜெர்மன் ரயில்வே. போலந்து, ரஷ்யா, கஜகஸ்தான், மங்கோலியா எனப் பலநாடுகளைக் கடக்கப்போகிறது இந்த ரயில். மொத்தம் 12,000 கிலோமீட்டர் தூரம். இந்தியாவுக்கும் வாங்க!

  • தொடங்கியவர்

 

யானைக்குட்டிக்கு நீச்சல் பயிற்சி - காணொளி

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text und Nahaufnahme

கன்னடத்து பைங்கிளி "சரோஜா தேவியின்" பிறந்தநாள் இன்று

கறுப்பு வெள்ளை சினிமா காலம் கலர் சினிமாவாக மாறிய காலத்தில் நாடோடி மன்னன் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் தடம்பதித்தார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஜெமினி என்ற தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே ஆபூர்வத் தாரகையாக மின்னினார் சரோஜாதேவி. பொற்க்காலத் தமிழ் சினிமாவின் வசூல் மகாத்மியுமும் அவரே!

தமிழ்சினிமாவின் உச்சாணிக்கொம்பை தொட்ட சரோஜா தேவிக்கு  வாழ்த்துக்கள்.

Happy Birthday Saroja Devi

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விசித்திரமான சிற்பங்களை உருவாக்கும் பனித்திருவிழா!

பல்வேறு விசித்திரமான சிற்ப உருவாக்கங்களுடன் 8 இலட்சம் சதுர அடிப்பரப்பில் சீனாவின் ஹார்பின் நகரில் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. அதனால் தனித்துவ மிக்கப் பனிச் சிற்பங்கள் பல்வேறு கலைஞ்சர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

harbin-820_harbin-2017-11-13_.jpg

ஹார்பின் நகரிற்கு அருகில் இருக்கும் சோங்ஹுவா பணியாற்றிலிருந்து பனிக்கட்டிகள் வெட்டப்பட்டு சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன. அதில் விலங்குகள், கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற சின்னங்கள், கேலிசித்திர கதாபாத்திரங்கள் என விதவிதமான சிற்பங்களும், கட்டிடங்களும் பார்வையாளரை பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 

harbin-820_harbin-2017-13-01_.jpg

 

3261.jpg

ஹார்பின் நகரில் தற்போது -25 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இந்நிலையில் சுமார் 500 சிற்ப கலைஞ்சர்களின் உழைப்பில் இந்தப் பனிச் சிற்பங்கள் உருவாகியிருக்கின்றன. 

ss-170106-china-ice-festival-jpo-04_2694

4772.jpg

இவ் பனிச் சிற்பத் திருவிழா, மார்ச் மாதம் வரை நடைபெறும். மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து பனிச் சிற்பங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 1.5 கோடி பேர் வரை வரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

இந்த புகைப்படத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா..? (வீடியோ)

first optical illusion of 2017

இந்த புகைப்படத்தை நன்றாக பாருங்கள், அதைச் சுற்றியுள்ள இடங்கள் தெளிவாக இருக்கும் போது, நடுவில் இருக்கும் கறி மட்டும் எப்படி மங்கலாக தெரிகிறது. இப்படி மங்கலாக தெரிவதற்குக் காரணம், இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்களா... அதான் இல்லை. கறியை மிகவும் மெல்லியதாக பல துண்டுகளாக வெட்டி, அதை ஒன்றன் மீதொன்றாக அடுக்கி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

2017-ன் முதல் ஆப்டிகல் இல்லியூஷன் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படம். மெல்வின் என்பவர் இந்த புகைப்படத்தை தனது 'ரெடிட்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் எந்தவித எடிட்டும் செய்யப்படவில்லை, உண்மையானது என்று நிரூபிக்க மெல்வின், ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். கீழே வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்.

 

 

vikatan

  • தொடங்கியவர்

சிம்லாவில் கடும் பனிப்பொழிவு!

Shimla snowfall

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா மற்றும் மணாலி பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த பனிப் பொழிவால், சிம்லா மற்றும் மணாலி பகுதிகளுக்குப் போகும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல, சாலைகளில் உள்ள மரங்கள் விழுந்ததால் மின்சாரக் கம்பிகள் அறுபட்டு மின்சார வசதி பாதிப்படைந்துள்ளது.

இதனால் அங்குள்ள 50 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த சீசனில், இப்போதுதான் முதன்முறையாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. 

 

 

ஒடிசாவில் மகளின் சடலத்தை 15கி.மீ தூக்கி சென்ற தந்தை!

ஆம்புலன்சு தர மறுத்ததால் ஒடிசாவில், தனது மனனைவியின் சடலத்தை ஒருவர் 10 கி.மீ தூரத்துக்கு தூக்கி சென்றதை, யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் அதே ஒடிசா மாநிலத்தில் ஆம்புலன்சு தர மறுத்ததால், தற்போது ஒரு தந்தை தனது ஐந்து வயது குழந்தையை 15 கி.மீ தூரத்துக்கு தூக்கி செல்லும் அவலம் நடந்துள்ளது.

 

 

 

 

ஒடிசாவின் அங்குள் மாவட்டத்தின், பேசமுண்டி கிராமத்தைச் சேர்ந்த காடிதிபார் என்பவர், காய்ச்சல் காரணமாக தனது ஐந்து வயது மகள் சுமியை, பல்லஹாரா ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு ஆம்புலன்சு தர மறுக்கவே, தனது கிராமத்துக்கு (15 கி.மீ) குழந்தையின் சடலத்தை தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் இரண்டு பேர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

இந்த 20 நொடிகள் உங்கள் வாழ்வையே மாற்றலாம்!

பரபரப்பான வேலைச் சூழலில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதே சிரமமாகிவிட்டது. ஆனால் காலையில் கிளம்பும்முன் 20 நொடிகள் உங்கள் பார்ட்னரை ஆரத் தழுவினால் அன்று முழுவதும் உற்சாகமாக உணர்வீர்களாம். உங்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். குழந்தைகள் முன்னால் ஆரத்தழுவும்போது நம் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என அவர்கள் உணர்வார்கள். குடும்பம் விக்ரமன் படத்தில் வருவது போல ஜாலியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்! 

hug_23312.jpg

 

vikatan

  • தொடங்கியவர்

'அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல

கோபிநாத் மனைவி துர்கா

ப்ளி முகமும், பட்டாசு வார்தையுமாக மேடைகளை வசீகரிப்பவர் நீயா நானா கோபிநாத். அவர் நான்-வெஜ் பிரியர். மட்டன் பிரியாணியும், மீனும் அவரோட ஃபேவரைட் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது என்கிறார் அவரது மனைவி துர்கா கோபிநாத். தனது சுவையான சமையல் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் துர்கா.

‘‘அவர் வகை வகையாய் கேட்டு மலைக்க வைக்கிற உணவுப் பிரியர் கிடையாது. சமைத்துக் கொடுக்கும் எந்த உணவையும் ரசித்து சாப்பிடுவார். சின்னக் குறைகளுக்கும் முகம் சுளிக்காமல் 'நல்லாருக்கு'னு சொல்லுவார். என் மாமியார் செட்டிநாடு சமையல்ல ஸ்பெஷலிஷ்ட். அம்மாவின் சமையல்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும். நான் திருமணத்துக்குப் பின் மாமியார்கிட்டதான் சமையல் கத்துக்கிட்டேன்.

மட்டன் பிரியாணின்னா விரும்பிச் சாப்பிடுவார். செட்டி நாடு ஸ்டைல் சமையலானாலும் அவருக்கு காரம் குறைவாக இருக்கணும். காரம்தான் அவரோட மிகப்பெரிய எதிரி. அதனால பார்த்துப் பார்த்து சமைப்பாங்க மாமியார். மீனும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். மீன் வறுவல், மீன் குழம்பு என எதையும் விட்டு வைக்க மாட்டார். எங்கள் வீட்டு சமையல்ல நள மகாராணினு சொன்னா அது என் மாமியார்தான். மட்டன் பிரியாணி செய்யும் போது அவர் சொல்லச் சொல்ல தேவையான மசாலாக்களை அவர் சொல்லும் பக்குவத்தில் செய்து கொடுப்பேன். அவ்வளவுதாங்க. மத்தபடி எனக்கு சமைக்கத் தெரியாது. அவர் எந்த மூடுல இருந்தாலும் சாப்பிட உக்காரும்போது அவர் அடம் பிடிக்காத குழந்தை மாதிரி. எந்த உணவிலும் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வார். அவருக்கு சத்தான உணவை சமைத்துக் கொடுப்பதில் அலாதிப் பிரியம் அம்மாவுக்கு’’ என்கிறார் துர்கா கோபிநாத்.

‘‘அவர் டாக் ஷோலதான் மத்தவங்களை போட்டு வாங்குவாரு. ஆனா வீட்டுக்கு வந்தா சுட்டிப் பையன் மாதிரி எப்பவும் ஹியூமர்ல கலக்குவார். என் பொண்ணு வெண்பாவும் அவரும் சேர்ந்தா எனக்கு பிபியை எகிற வைக்கிற அளவுக்கு சண்டை இழுத்து பஞ்சாயத்துக்கு வருவாங்க. நிதானமா யோசிச்சா செம ரசனையான சண்டை அது. அதே சமயம் பொண்ணுக்காக மண்டிப்போட்டு அவளோட விருப்பங்களை, கண்டிஷன்களை எல்லாம் கேட்டுப்பார். வீட்டில் எப்பவும் வெண்பா ராஜ்ஜியம்தான். அவருக்கும் வெண்பாவுக்கும் இருக்கிற கெமிஸ்ட்ரி எப்படினா, தூக்கம், வலியில கூட வெண்பா அப்பானுதான் கூப்பிடுவா. மறந்தும் அம்மானு கூப்பிட்டதேயில்லை. நாங்க மூணு பேரும் சேர்ந்து இதுவரைக்கும் பல இடங்களுக்கு டூர் போயிருக்கோம். லோக்கல் மார்கெட்டுல ஆரம்பிச்சு பெரிய மால்கள் வரை எல்லாவிதமான உணர்வுகளையும் அவளுக்கு தரணும்னு அவர் விரும்புறார். நான் அதை ரசிக்கிறேன்.

ஒரு டாப்பிக் எடுத்தா அதுல உள்ள புகுந்து ரன்னிங் கமண்ட்ரி அடிக்கிறதுல அவர மிஞ்ச முடியாது. நான் சிரிச்சு சிரிச்சு டயர்ட் ஆகிடுவேன். அவருக்கு புத்தகங்கள் மேல அவளோ காதல். 1000க்கும் மேல புத்தகங்கள் வைச்சிருக்கார். வரலாறு தொடர்பான புத்தகங்கள் விரும்பிப் படிப்பார். எந்த நாட்டின் வரலாற்றைக் கேட்டாலும் மணிக்கணக்கில் பேசும் அளவுக்கு அவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். அவரோட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்" என்கிறார் துர்கா கோபிநாத்.

vikatan

  • தொடங்கியவர்

2017: கலக்கப்போகும் தொழில்நுட்பங்கள்!

 

 
glass_3114032f.jpg
 
 
 

காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்கக்கூடிய சாதனங்களை மூக்குக் கண்ணாடி போல அணிந்திருப்போம். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவைச் செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்... இவையெல்லாம் என்னவென்று வியக்கிறீர்களா? 2017 - ம் ஆண்டில், தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுநர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டுபவை இவை. தொழில்நுட்ப உலகின் மாற்றங்களும், முன்னேற்றங்களும் நாம் நினைப்பதையும், புரிந்துகொள்வதையும்விட வேகமாக உருவாகிவரும் நிலையில், இந்த ஆண்டு கவனத்தை ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பப் போக்குகள் பற்றிப் பார்ப்போம்:

அசத்தும் அணிகணினிகள்

‘வியரபில்ஸ்’ எனப்படும் அணிகணிணிகள் ஏற்கனவே வெகுஜனப் பழக்கத்துக்கு வர ஆரம்பித்துவிட்டன. கூகுள் கிளாஸ் தோல்வி கொஞ்சம் பின்னடைவாக அமைந்தாலும், ‘ஸ்னேப்சேட்டின் ஸ்பெக்டகல்ஸ்’ புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பேஷனுடன் இணைந்து, பாதுகாப்பையும், நவீனத் தகவல் தொடர்பு வசதிகளையும் அளிக்கும் நவீன காதணிகளையும் கழுத்துச் சங்கிலிகளையும் பார்க்க முடிகிறது. இந்த வகை அணிகணினிகள் மேலும் பாய்ச்சலை நிகழ்த்த உள்ளன.

ட்ரோன்கள், மேலும் ட்ரோன்கள்

drone_3114034a.jpg

ட்ரோன்கள் எனப்படும் ஆள் இல்லா விமானங்கள் அல்லது தானியங்கி விமானங்கள் தொழில்நுட்பப் பித்தர்களுக்கான நவீன விளையாட்டுச் சாதனங்கள் என்ற நிலையில் இருந்து முன்னேறி வந்துவிட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற நுகர்வோர் மின்னணுத் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்கில் பலவித ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகித்தன. மேலும் பேரிடர் மீட்புப் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ட்ரோன்களின் பங்களிப்பு அதிகரித்துவருகிறது. மின் வணிக நிறுவனங்கள் ட்ரோன் டெலிவரியில் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்த ஆண்டு ட்ரோன்களின் பயன்பாடு மேலும் பல துறைகளில் நுழையலாம். கூடவே ட்ரோன்களின் தொல்லையும் அதிகரிக்கலாம்.

மெய்நிகர் மாயம்

VR_3114031a.jpg

பேஸ்புக் ஒரு நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்துகிறது என்றால் எதிர்காலத்தில் அந்த நுட்பம் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வரப்போகிறது என உணர்ந்துகொள்ளலாம். அந்த வகையில், ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பேஸ்புக் தான் கையகப்படுத்திய ‘ஆக்குலஸ் ரிப்ட்’ நிறுவனத்தின் மூலம் இது தொடர்பான ஆய்வைத் தீவிரப்படுத்தியுள்ளது. சாம்சங், எச்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தப் பிரிவில் தீவிரமாக உள்ளன. மூக்குக் கண்ணாடி போல மெய்நிகர் சாதனத்தை மாட்டிக்கொண்டு முற்றிலும் புதிய அனுபவத்தில் திளைத்திருக்கும் சூழல் உருவாகலாம். வீடியோ கேம் முதல் உளவியல் சிகிச்சை வரை இந்த மெய்நிகர் மாயம் ஆதிக்கம் செலுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். நீங்கள் தயாரா?

இன்னொரு யதார்த்தம்!

கடந்த ஆண்டு உலகத்தை ஆட்டிப்படைத்த ‘போக்கேமான் கோ’ விளையாட்டு நினைவிருக்கிறதா? இது வெறும் ஸ்மார்ட் போன் விளையாட்டு அல்ல; நிஜ உலகையும், இணைய உலகையும் இணைக்கும் ஒரு புதிய வகை விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒரு ‘கலப்பு ஆக்மெண்டெட் ரியாலிட்டி’ அதாவது மேம்பட்ட யதார்த்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. நிஜ வாழ்க்கைப் பொருட்கள் மீது தொழில்நுட்பத்தை இணைத்து அவற்றை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சி இது. கல்வித் துறை உட்பட பல துறைகளில் இதன் பயன்பாட்டைக் காணும் நிலை வரலாம்!

செயற்கை நுண்ணறிவு

ai_3114038a.jpg

‘ஏ.ஐ’ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு வெகு வேகமாக முன்னேறிவருகிறது. இதன் செயல்பாடு பல துறைகளில் இன்னமும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும், வங்கித் துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய சேவை வடிவில் இதனுடன் கைகுலுக்கும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போது, பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஆர்வம்காட்டிவருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுமே அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த நுட்பத்தை அதிகம் நம்பியுள்ளன. அதனால், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செய்திகளையும் முன்னேற்றங்களையும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கலாம். இதேபோல, பாட்கள் எனப்படும், தானியங்கி புரோகிராம்களின் வளர்ச்சியும் தீவிரமடையும் எனச் சொல்கின்றனர். அரட்டைக்கு உதவுவது முதல், சேவைகளுக்கு வழிகாட்டுவது வரை பலவித பாட்கள் உருவாக்கப்பட உள்ளன. ‘எனக்கொரு பாட் வேண்டுமடா’ எனப் பாடும் அளவுக்குத் தனிநபர் உதவியாளர் பாட்களும் பெருகலாம்.

புத்திசாலி செயலிகள்

app_3114037a.jpg

இப்போது விதவிதமான செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இனி வரப்போகும் செயலிகள் இப்போதுள்ள செயலிகளைவிடப் புத்திசாலித்தனம் மிக்கதாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். உதாரணமாக, மின்னஞ்சல் சார்ந்த ஒரு செயலி என்றால், உங்கள் சார்பாக முக்கியமான மின்னஞ்சல்களைக் கண்டறிந்து ‘இவற்றை மட்டும் படியுங்கள் பாஸ் போதும்’ எனப் பரிந்துரைக்கும் செயலிகள் அதிகரிக்கலாம். திட்டமிடல், பயணம், வர்த்தகம், திரைப்பட நுகர்வு என எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான செயலிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இவற்றின் அடிநாதமும் செயற்கை நுண்ணறிவுதான்!

எதிர்கால கார்கள்

ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் போல கார்களும் ஸ்மார்ட்டாகிவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்தப் போக்கு இன்னும் தீவிரமாகும். ஏற்கெனவே தானியங்கி கார்கள் ‘எல்-போர்டு’ மாட்டிக்கொண்டு சோதனை முறையில் சாலைகளில் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. இதன் நீட்சியாக கார்கள் இன்னும் ஸ்மார்ட்டாக மாறக்கூடும். கார் வெறும் காராக இல்லாமல் தொழில்நுட்பக் கூடமாக மாறிவிடும். தானியங்கி கார்கள் மட்டும் அல்ல தானியங்கி ‘டிரக்’, பஸ்களும் பவனிவரத் தொடங்கியுள்ளன. இணைய ‘கால் டாக்சி’ நிறுவனமான ‘உபெர்’ நிறுவனமும் இதில் ஆர்வம்காட்டிவருகிறது.

சைபர் தாக்குதல் உஷார்

‘ஹேக்கர்ஸ்’ எனப்படும் தாக்காளர்களின் கைவரிசை இந்த ஆண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு, இணைக்கப்பட்ட பொருட்கள் அதிகரிப்பது தாக்காளர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துவிடுகிறது. பாஸ்வேர்ட்களைக் கொத்துக் கொத்தாகக் களவாடிச்செல்வதும், போன்களையும் கணினிகளையும் லாக் செய்து வைத்து மிரட்டுவதும், ‘பிஷிங்’ (Phising) வகை மோசடிகளும் அதிகரித்துவருகின்றன. இவை தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்பதால் என்கிரிப்ஷன் பாதுகாப்பு குறித்தெல்லாம் இணையச் சாமானியர்களும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பிக்டேட்டா பற்றிப் பெரிதாகப் பேசப்படும் நிலையில், நிறுவனங்கள் கையில் நம் டேட்டா எப்படி எல்லாம் பயன்படுகின்றன என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பேட்டரி ஆற்றல்

battery_3114036a.jpg

ஸ்மார்ட் போன் உள்ளிட்ட கேட்ஜெட்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் அவற்றுக்குத் தீனி போடும் பேட்டரிகளின் ஆற்றலை அதிகரிக்கும் தேவையும் அதிகமாக உணரப்படுகிறது. அதற்கேற்ப பேட்டரி தொடர்பான ஆய்வுகளும் தீவிரமடைந்துள்ளன. மேலும் புதுமையான பேட்டரி நுட்பங்களை எதிர்பார்க்கலாம்! அதே போல புதிய வகை ஸ்மார்ட் போன் மாதிரிகளையும் அதிகம் எதிர்பார்க்கலாம்.

இயர்போன் புதிது

earphone_3114033a.jpg

காதில் மாட்டிக்கொள்ளும் இயர்போன்கள் ‘வயர்லெஸ்’ நுட்பத்தில் புதிய அவதாரம் எடுத்துவருகின்றன. ஆப்பிளின் ‘ஏர்பாட்’ உள்ளிட்ட பல புதுமை சாதனங்கள் கவர்ந்திழுக்கின்றன. மேலும் புதுமையான இயர்போன்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

பிளாக்செயின் நுட்பம்

block_3114035a.jpg

தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்ற துறைகளைவிட நிதித் துறையில் அதிகம் நிகழ்வதை அண்மைக் காலத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த வகை நிறுவனங்கள் நிதி நுட்ப நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த வகை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் இயங்கிவருகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான கவனம் அதிகமாகியுள்ளதால் நிதி நுட்ப நிறுவனங்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளன. இந்தப் பிரிவில் முக்கியமாகப் பேசப்படும் பிளாக்செயின் (Blockchain) நுட்பம் வங்கிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. பிரபல மறை பணமான பிட்காயினுக்கு (Bitcoin) அடிப்படையாக விளங்கும் இந்த நுட்பம் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான அடித்தளமாகவும் கருதப்படுகிறது.

பொருட்களின் இணையம்

‘இண்டெர்நெட் ஆப் திங்ஸ்’ எனப்படும் பொருட்களின் இணையம் தொடர்பாகப் பல ஆண்டுகளாகவே பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போக்கு இன்னும் தீவிரமாகியுள்ளது. இணைய வசதி கொண்ட பொருட்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இத்துறையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவருவதால், புதுமையான சேவைகள் அறிமுகமாகும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

மோடிக்கு ரொனால்டோ ஜெர்ஸியை பரிசாக வழங்கிய போர்ச்சுகல் பிரதமர் WR_20170108010553.jpeg

 

 

போர்ச்சுகல் நாட்டு பிரதமர் அன்டோனியோ கோஸ்டா 7 நாள் அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் இன்று அன்டோனியா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்தனர். அப்போது, அன்டோனியா போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோவின் ஜெர்சியை, மோடிக்கு பரிசாக வழங்கினார். மேலும், இந்த சந்திப்பின் போது, இருநாடுகள் இடையே ராணுவம் உள்பட ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. என்.எஸ்.ஜியில் இந்தியா உறுப்பினராக இணைய தொடர்ந்து ஆதரவு தரும் போர்ச்சுக்கலுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி கூறினார்.

 

 

Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht und Text

பாரதிராஜாவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட கே.பாக்கியராஜாவின் பிறந்தநாள் இன்று
இயக்குனர், நடிகர், திரைக்கதை அமைப்பாளராக
தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட கே.பாக்கியராஜாவுக்கு வாழ்த்துக்கள்
Happy Birthday Bhagyaraj.K

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

எந்த ராசிக்காரர்களின் கால்கள் ஆழகானது? இந்த கொடுமையைப் பாருங்கள்! வீடியோ இணைப்பு

:grin::grin:

  • தொடங்கியவர்

பழங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி? #FruitBuyingTips


ந்தை, மார்க்கெட், தெருவில் கூவி விற்கும் வியாபாரிகளிடம் வாங்குவது போய், இன்றைக்கு சூப்பர்மார்க்கெட்டிலேயே கிடைக்கும் சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது பழங்கள். தஞ்சை வாழைப்பழம் தொடங்கி ஆஸ்திரேலிய ஆரஞ்சு வரை அத்தனையும் வாங்கலாம். குவித்து வைக்கப்பட்டு, பேப்பரில் சுற்றிவைக்கப்பட்டு, பாலிதீன் பைகளில் பேக் செய்யப்பட்டு அடுக்கிவைத்திருக்கும் பழங்கள் நிறத்திலும் சரி... பளபளப்பிலும் சரி, அத்தனை அழகு! ஆரோக்கியம்..? அதுதான் மிகப் பெரிய கேள்விக்குறி. சரி, பழங்களைப் பார்த்து வாங்குவது எப்படி? நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கும் அழகைப் பார்த்து, அந்தப் பழங்களில் எல்லாம் தரம், சுவை உள்ளது என நினைத்தால், அது தவறு. சில நேரங்களில் வீட்டுக்கு வந்து நறுக்கிப் பார்க்கும்போதுதான் தெரியும்... அதிகமாகப் பழுத்து, கொழகொழவென இருக்கும்; அல்லது பழுக்கவே பழுக்காத காயாக இருக்கும்; அழுகிப்போயும் இருக்கும். இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியுமா? பழத்தின் தரம் அதன் நிறத்திலோ, பளபளப்பிலோ, வாங்கும் சூப்பர்மார்க்கெட்டின் பிராண்ட் பெயரிலோ இல்லை. பழங்கள் வாங்கும்போது சில விஷயங்களை கவனித்தால், மோசமான, சரியில்லாத பழங்களை நாமே தவிர்த்துவிடலாம். அவை என்னென்ன என விளக்குகிறார்... சென்னையில், 'லோக்கோ ஃப்ரூட்ஸ்'  பழக்கடை வைத்திருக்கும் டி.அமீத் கான்.


ஆப்பிள்

 

பழங்கள்


நம் நாட்டு சிம்லா ஆப்பிள் இளஞ்சிவப்பாக அதிகச் சதையோடு இருக்கும். இதைச் சாதாரணமாக நீரில் கழுவிச் சாப்பிடலாம். ஆனால்,  ஃபிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கே கிடைக்கும் ஆப்பிள், அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஆப்பிள்கள், மூன்று மாதங்கள் வரைக்கும் கெடாமல் இருக்க, இவற்றின் தோல் மேல் மெழுகைத் தடவிவிடுகிறார்கள். எனவே, இந்த ஆப்பிள்களை வாங்கினால், தோலை கட்டாயமாக அகற்றிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்.   
எந்த ஆப்பிளாக இருந்தாலும் காம்பைக் கிள்ளிப் பார்க்க வேண்டும். உள்ளே லேசான பச்சை நிறம் தெரிந்தால், அது நல்ல ஆப்பிள். இதை வாங்கலாம். சிவப்பாக இருந்தால், அதிமாகப் பழுத்தது; சீக்கிரம் அழுகிவிடும். வாங்கக் கூடாது.


மாதுளை

 

மாதுளை


கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விளையும் மாதுளைகள் அதிகத் தரமானவை. சுவைமிக்கவை. அதிக சிவப்பாக இருக்கும் மாதுளைகள் ஆஃப்கானிஸ்தான், காபூலில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.இவற்றை வாங்கும்போது கவனம் தேவை.
மாதுளையின் மேல் தோலை நசுக்கிக் பார்க்கவும். தோல் கடினமாக இருந்தால், நல்ல மாதுளை. மிருதுவாக இருந்தால், அதிகம் பழுத்த அல்லது கெட்டுப்போன மாதுளை. கெட்டுப்போன பூச்சி உள்ள மாதுளையில் கருப்புப் புள்ளிகள், துளைகள் இருக்கும்.  


திராட்சை

 

திராட்சை


சமீபகாலமாக விதையில்லாத மரபணு மாற்றப்பட்ட சிறிய பச்சை திராட்சைகள் பிரபலமைடையத் தொடங்கிவிட்டன.  விதையில்லாத பச்சை திராட்சைகளைவிட, விதையுள்ள பெரிய நாட்டு திராட்சை சுவைமிகுந்தது; உடலுக்கு நன்மை தருவது.
திராட்சை வாங்கும்போது அதன் காம்பு பச்சையாக இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால், அது நல்ல திராட்சை. காம்பு கறுப்பாக இருந்தால், அதிகம் பழுத்த திராட்சை. திராட்சையை எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீர், அல்லது உப்புத் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனால் கை மூலமாகப் பரவும் கிருமித்தொற்றுகள் நீங்கும்.   


ஆரஞ்சு, சாத்துக்குடி

 

சாத்துக்குடி


இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அடர்ந்த மஞ்சள் நிறம்கொண்ட, சிறிதாக இருக்கும் கமலா ஆரஞ்சு; இள மஞ்சள் நிறம்கொண்ட, அளவில் பெரிதாக இருக்கும் சாத்துக்குடி. `கமலா ஆரஞ்சு’ என்று அழைக்கப்படும் நாட்டு ஆரஞ்சு, கொடைக்கானல், பெங்களூரு, நாக்பூர் ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பழுக்காத, பச்சை நிறமுள்ள சாத்துக்குடி சாப்பிட ஏற்றதல்ல. இதை வாங்கக் கூடாது. பழத்தின் மேல் பகுதியை அழுத்திப் பார்க்க வேண்டும். பழத்தின் மேல் மற்றும் அடிப்பகுதி கெட்டியாக இருக்கவேண்டும். மிருதுவாக இருந்தால் அதிகம் பழுத்தது என்று அர்த்தம். இது  சீக்கிரம் கெட வாய்ப்புள்ளது. இதனை வாங்கக் கூடாது.  பெரிய பழத்தை வாங்கக் கூடாது. இதன் உள்ளே சதை அதிகமாகப் பழுத்திருக்கும். சீக்கிரம் கெட்டுவிடும்.


பப்பாளி

 

பப்பாளி


நாட்டுப் பப்பாளியே உடலுக்கு ஏற்றது. நாட்டுப் பப்பாளி கறுப்புப் புள்ளிகள் கொண்டது. மரபணு மாற்றப்பட்ட பப்பாளியில் கறுப்புப் புள்ளிகள் இருக்காது. கடைக்காரர்கள்,  நாட்டுப் பப்பாளியை `நீட்டுப் பப்பாளி' என்று அழைப்பார்கள். இதன் சதைப் பகுதி சிவப்பாக இருக்கும்; விதை இருக்கும்; சுவை அதிகமாக இருக்கும். கனியாத, பச்சையாக உள்ள பப்பாளியை வாங்கக் கூடாது.
மரபணு மாற்றப்பட்ட பப்பாளியில் விதைகள் இருக்காது; உட்பகுதி மஞ்சளாக இருக்கும்; சுவை குறைவாக இருக்கும்.
வீட்டில்  பப்பாளியை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால்,  ஃபங்கஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க பழத்தைக் காகிதத்தில் சுற்றிவைக்கலாம்.   


வாழை

 

வாழை


மரபணு மாற்றப்பட்ட வாழை புத்தம் புதிதாக, கருப்புப் புள்ளிகள் இல்லாமல் பளபளவென இருக்கும். பழத்தோல் அடர்த்தியாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்,  பலவிதமான உடல் உபாதைகள், பாதிப்புகள் ஏற்படலாம். இதனைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். நாட்டுப்பழங்களில் பூச்சிகடித்ததன் அடையாளமாக, கறுப்புப் புள்ளிகள் இருக்கும். பழத்தோல் மெல்லியதாக இருக்கும். சதைப்பகுதி அதிகமாக இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். இவை தினமும் சாப்பிட ஏற்றவை.


மாம்பழம்

 

மாம்பழம்


இன்று, `மல்கோவா’, `பங்கனப்பள்ளி’ ரக மாம்பழங்கள், கார்பனேட் கல் போட்டு குறுகியகாலத்தில் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகிறன. நல்ல பழங்கள் எவை என சில அறிகுறிகளைவைத்துக் கண்டுபிடித்துவிடலாம். இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். பழத்தின் அனைத்துப் பகுதிகளும் சமமாகப் பழுத்திருக்காது. சில இடங்கள் கடினமாக, பழுக்காமல் இருக்கும். பழத்தின் மேல் பால் கறை இருக்காது. பார்க்க, பளபளப்பாக இருக்காது. இனிப்புச் சுவையுடன் இருக்கும். புளிப்பு சுவை இருக்காது.  


அன்னாசி

 

அன்னாசி


நல்ல அன்னாசிப்பழம், எல்லா இடங்களிலும் சமமாகப் பழுத்திருக்காது. பழத்தின் அடிப்பகுதியை அழுத்திப் பார்த்தால், கடினமாக இருக்க வேண்டும். மிருதுவாக இருந்தால், கெட்டுப்போன பழமாகவோ, அதிகமாகப் பழுத்த பழமாகவோ இருக்க வாய்ப்புள்ளது.

 
தர்பூசணி

 

தர்பூசணி


கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திர மாநிலங்களில் விளையும் மஞ்சள் தர்பூசணி தமிழகத்தில் விற்பனையாகின்றன. இவற்றைவிட இளம் பச்சை நிறம்கொண்ட, `வரி தர்பூசணி’ உடலுக்கு நல்லது. இவை சென்னை, கல்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் விளைகின்றன.   மரபணு மாற்றப்பட்ட, `ஊதா நிற தர்பூசணி’ இந்த ஆண்டு விரைவில் தமிழகக் கடைகளுக்கு வர உள்ளது.
தர்பூசணியைத் தட்டிப் பார்த்து வாங்கவேண்டும். தட்டும்போது 'தங்', 'தங்' எனத் தண்ணீர் சத்தம் வர வேண்டும். 'டப்','டப்' எனச் சத்தம் வந்தால், பழம் அதிகமாகப் பழுத்துவிட்டது என்று அர்த்தம். இதனை வாங்கக் கூடாது.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜனவரி 08
 

lasantha%283%29.jpg1297: மொனாக்கோ சுதந்திரம் பெற்றது.

1811: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் சார்ள்ஸ் டெஸ்லான்ட்ஸ் என்பவர் தலைமையில் கறுப்பின அடிமைகள் மேற்கொண்ட கலகம் முறியடிக்கப்பட்டது.

1835: அமெரிக்காவின் தேசிய கடன் தொகை முதல் தடவையாக பூச்சியம் ஆகியது.

1912: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1973: நெதர்லாந்தில் ரயில் விபத்தில் 93 பேர் பலி.

1973: அமெரிக்க வாட்டர்கேட் விவகாரத்தில் வாட்டர்கேட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்திற்குள் சட்ட விரோதமாக புகுந்த 7 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகின.

1978: வெளிநாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாக, வங்காளத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ விடுதலை செய்தார்.

1989: பிரிட்டனில் வீதியொன்றில் விமானம் விழுந்ததால் 47 பேர் பலி.

1996: ஸயர் நாட்டில் விமானமொன்று கோளாறுக்குள்ளாகி சந்தையொன்றில் விழுந்ததால் 350 பேர் பலி.

2009: பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பில்  இனந்தெரியாத நபர்களால் தாக்கி கொல்லப்பட்டர்.

.tamilmirror.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.