Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
செய் கருமம் பூரணமெனில், காரிய சித்தி
 
 

article_1487825989-ZBIRD6.jpgநாம் கருமத்தைச் செய்யும்போது அதனை மட்டுமே செய்ய வேண்டும். அடுத்த கருமத்தில் புலனைச் செலுத்தக்கூடாது. மனதை ஒருமைப் படுத்தாமல் பற்பல விடயங்களை நெஞ்சில் இருத்துதல் கூடாது.

மிருகங்கள், பறவைகளின் இயல்புகளைப் பாருங்கள். அவை திடசிந்தையுடன் செயற்படுகின்றன. அவை உணவைத் தேடும்போது சோர்ந்துவிடுவதில்லை. 

புலி, சிங்கங்கள் மட்டுமல்ல; எல்லா மிருகங்களுமே வேட்டையாடும்போது, அதனை மட்டுமே செய்து முடிக்கும். இரை கிடைத்ததும் சுதந்திரமாக உலாவி வரும். 

மனிதர்களோ எல்லாப் பிரச்சினைகளையும் மனதில் இருத்தி, அதனைத் தீர்க்க முடியாமலும் ஒரு கருமத்தையும் ஒழுங்காகச் செய்ய முடியாமலும் திணறுகின்றார்கள். 

செய் கருமத்தின் நோக்கத்தைப் பூரணமாக உணர்ந்தாலே போதும். காரிய சித்தி தானாகவே வந்து எய்திவிடும்.

மனம் தளராத செயல் நிலைபெற்ற வாழ்வைத் தரும். 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கவுந்த கப்பலுக்கும் கன்னத்துக்கும் என்ன தொடர்பு? - விளக்குகிறார் மிஸ்டர் K #ThursdayThoughts

ந்த வார ஆனந்த விகடனைக் கையில் வைத்துக்கொண்டு பகபகவென்று சிரித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து, ‘மறுவார்த்தை பேசாதே...’ என்று பாடிக்கொண்டே உள்ளே வந்தான், மிஸ்டர் K.

"என்ன சிரிப்பு?"

"வலைபாயுதேல, ‘மண்ணெண்ணெ, வேப்பெண்ணெ, வெளக்கெண்ணெ’னு ஆரம்பிக்கிற ஒரு பழமொழியை உல்டா பண்ணின ஒரு ட்வீட் படிச்சு சிரிச்சேன்" என்றேன்.

"சரியாப்போச்சு. அது, பழமொழியே இல்ல. ஒரு நிகழ்ச்சில கிண்டலா சொல்லப்பட்டதில்லையா? அதெல்லாம் எப்ப பழமொழி ஆச்சு?" - என்று கொஞ்சம் காரமாகவே கேட்டான்.

"சரிப்பா... இவ்ளோ கோச்சுக்கிறதுக்கு அதுல என்ன இருக்கு?"

"அப்டி இல்லை. பழமொழிகள் எல்லாமே ஒரு அர்த்தம் சொல்பவை. அவை, ரொம்ப நாள் நிலைச்சு நிக்கணும். அதோட அர்த்தம் தலைமுறை தாண்டி எல்லாருக்கும் போய்ச் சேரணும்ங்கிற காரணத்துல, ஒரு எதுகை மோனையோட சொல்லப்படுது. ஆனா, பல பழமொழிகள் இஷ்டத்துக்கு திரிச்சு, என்னென்ன அர்த்தத்துலயோ பகிரப்படுவது எவ்ளோ பெரிய தப்பு!"

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்வீட்டு வராண்டாவில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துகொண்டிருந்த ஒரு பெண்ணின் கையை, அவள் அம்மா - போகிற போக்கில் - எடுத்துவிட்டுப் போனார். அதைக் கவனித்ததும் சடாரென்று என் பக்கம் திரும்பினான் மிஸ்டர் K.

"இப்ப அந்தம்மா ஏன் பொண்ணு கையை எடுத்துவிட்டாங்க?” 

“தெரியாதமாதிரி கேட்காத. ‘கப்பல் கவுந்தாலும் கன்னத்துல கைய வைக்காத’ன்னு கேள்விப்பட்டிருப்பியே... அதான் காரணம்.”

கப்பல் கவிழ்ந்தாலும், மிஸ்டர் K

"முட்டாள்தனமா, பழமொழியோட அர்த்தத்தைத் திரிக்கிறதால வர்ற பிரச்னை. கன்னத்துல கைய வெச்சா என்ன தப்புனு அறிவியல் ரீதியா யோசிச்சிருக்கியா? இல்ல, அதுக்கும் கப்பலுக்கும் என்ன சம்பந்தம்னு பகுத்தறிவு ரீதியா சிந்திச்சிருக்கியா? ஒண்ணும் இல்ல. அப்டியே ஒரு அர்த்தம் கற்பிச்சு அதையே கொண்டுபோகவேண்டியது. இது தப்பில்லையா?”

எனக்கு அவன் சொல்வது சரிதான் என்று பட்டது. `ஆமாம்ல... கப்பலுக்கும் கன்னத்துல கை வைக்கிறதுக்கும் என்ன தொடர்பு? எதுகை மோனைக்காக மட்டுமே சொல்லிருக்க மாட்டாங்களே’ என்று தோன்ற, அவனிடமே கேட்டேன்.
 

“நீயே சொல்லேன்...”

“அந்தக் காலத்துல, ‘திரைகடலோடி திரவியம் தேடுற’ நோக்கத்துல நம்ம நாட்ல இருந்து  ரங்கூன் மாதிரி வெளிநாடுகளுக்கு - கடல் கடந்து- பொருள் ஈட்டப் போவாங்க. ‘கிளைகள் வானத்தை நோக்கி உயர்ந்தாலும், வேர்கள் விரும்புவது மண்ணைத்தான்’-ங்கிற மாதிரி  எப்படா தமிழ்நாடு வர்லாம்னுதான் இருப்பாங்க.  அஞ்சு வருஷமோ, 10 வருஷமோ சம்பாதிச்ச பணத்தை, தங்கமா, பணமா எடுத்துட்டு - ஒரே ஊரைச் சேர்ந்தவங்க, ஒரே கப்பல்ல - திரும்ப தாய்நாடு நோக்கிப் பயணிப்பாங்க.

இப்ப இருக்கிற அளவு பாதுகாப்பு முறைகள், இயற்கை மாற்றங்கள் குறித்த அறிவிப்பு  நடவடிக்கைகள்லாம் அப்போ குறைவுதானே. அப்படிக் கப்பல்ல வர்றப்ப, இயற்கைச் சீற்றம் காரணமா கப்பல் கவிழ்ந்துடுசுனா... தப்பிச்சு தாய்நாட்டுக்கு வர்றவங்களுக்கு ஒரே சிந்தனைதான் ஓடும். ‘இத்தனை வருஷம் உழைச்சுச் சம்பாதிச்சது போச்சே’னு கப்பல்ல வந்த நண்பர்கள் ஒண்ணு சேர்ந்து ’இனி திருடித்தான் பொருள் சேர்க்கணும்னு முடிவுக்கு வருவாங்க.

வீட்டுச் சுவத்துல பெரிய துளைபோட்டு, ஒரு ஆள் உள்ள போய் பொருட்களை எடுத்துட்டு வந்து, வெளில நிக்கிற கூட்டாளிகிட்டு குடுத்து, இப்படித் திருடுவாங்க. அப்டி  துளைபோட்டுத் திருடுறதத்தான் ‘கன்னம் வைக்கிறது’னு சொல்லுவாங்க"

"அட ஆமாம். நீ சொல்றப்பதான் ஞாபகம் வருது. சந்திரபோஸ் பாட்டுகூட ஒண்ணு இருக்கு... ’காக்கிச்சட்டை போட்ட மச்சான் களவு செய்ய கன்னம் வெச்சான்’”  - நான் பாடினேன்.

“ஆமா..‘கடப்பாறையால் இடப்படும் பெரிய துளை’ அப்படின்னு  கன்னம்-ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லப்படுது.

அத்தனை வருடம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, பொருள் ஈட்டிக்கிட்டு வந்து, அதெல்லாம்  'கப்பல் கவிழ்ந்ததால பாழாச்சே'ன்னு இப்படி கன்னம் வைக்கிற வேலைல ஈடுபடுறாங்கனுதான் ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கை வைக்காதே’, அதாவது கன்னம் வெச்சு திருடுற வேலைல கைவண்ணத்தைக் காட்டாத-ன்னு சொல்லப்பட்டது. புரியுதா இப்ப?”

நான் மிஸ்டர் Kஐ பிரமித்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். நெஜம்மா யாருமே எனக்குச் சொன்னதில்லை என்றேன். 

“இல்லை... நிறைய பேருக்குத் தெரிஞ்சும் இருக்கலாம். ஆனா, திரும்பத் திரும்ப சொல்லி, எல்லாருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கணும்னு சொல்றேன்” என்றவனை ஆமோத்தித்துத் தலையசைத்தேன்.  

இந்த வியாழன் இப்படி ஒரு நல்ல தகவலோடு விடிந்தது எனக்கு! உடனே, இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். உங்களுக்கும் அப்படித்தானே..? 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கால்களால் கின்னஸ் சாதனை படைத்த மெக்ஸிகோ பெண்!

Most-candles-lit-with-the-feet_tcm25-462

ரண்டு கைகள் இல்லாவிட்டால் என்ன, தன்னம்பிக்கை உள்ளது என்று நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,  மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த அட்ரியானா ஐரீன் மாசியாஸ் ஹெர்னாண்டஸ் (Adriana Irene Macías Hernández). இவருக்கு, பிறக்கும்போதே கைகள் இல்லை. ஆனாலும் தன் வேலைகளைக் கால்கள் மூலமாகச் செய்ய பழகிக்கொண்டார். சமீபத்தில், கின்னஸ் ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஒரு நிமிடத்தில் 11 மெழுகுவத்திகளைத் தன் கால்களால் பற்றவைத்து, ரெக்கார்டு பிரேக் செய்துள்ளார்.
இதன்மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த அஷ்ரிதா ஃபர்மனின் (Ashrita Furman) சாதனையை முறியடித்துள்ளார் அட்ரியானா. இவர், சட்டப் படிப்பு முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: பெப்ரவரி – 23

 

1861 : அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த ஆபிரகாம் லிங்கன், பால்டிமோர் நகரில் தன்னை கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்திலிருந்து தப்பி, இரகசியமாக வொஷிங்டன் டி.சி. நகரை சென்றடைந்தார்.

 

1887 : பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 

varalru1893 : டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமையை ருடொல்ஃப் டீசல், பெற்றார்.

 

1903 : குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு கியூபா முடிவற்ற குத்தகைக்குக் வழங்கியது.

 

1904 : 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.

 

1905 : அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் றோட்டரி அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

 

1917 : ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரி புரட்சி ஆரம்பமானது.

 

1919 : இத்தாலியில் பெனிட்டோ முசோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார்.

 

1941 : அமெரிக்க இரசாயனவியலாளர் கலாநிதி கிளென் ரி.சீபோர்க்கினால் புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.

 

1944 : செச்னிய மற்றும் இங்குஷ் மக்கள் கட்டாயமாக மத்திய ஆசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா ஜப்பானிய படைகளிடமிருந்து அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.

 

1945 : ஜேர்மனியின் பேர்ஸெய்ம் நகரில் 379 பிரித்தானிய விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின.

 

1947 : சர்வதேச தரநிர்ணய தாபனம் (ISO) ஆரம்பிக்கப்பட்டது.

 

1966 : சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

 

1991 : தாய்லாந்தில் இராணுவ தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

 

1997 : ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

 

1998 : அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சுழற்காற்றில் 42 பேர் கொல்லப்பட்டனர். 2014: ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெற்றது.

 

http://metronews.lk

  • தொடங்கியவர்

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா? #GoodParenting

Good Parenting

மக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு. 

பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தைதானே அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம். சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கிறார்கள்.

இது குறித்து மனநல மருத்துவர் மீனாட்சி கூறுகையில், ‘‘பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு டிரஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷயங்களும் தெரியும். ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம்  தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தைகளுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்பதில்லை. ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப்படவில்லை. சமூகமும் அதுபோன்று மாறவில்லை எனும்போது நாம்தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உடை மாற்றும்போது நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. அவை அப்படியே தொடரும்போது பாலியல் குழப்பத்துக்கு ஆளாவார்கள்.

குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும். 

வீட்டில் இருக்கும் போது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரான ஆண், பெண் இருவருமே குழந்தைகள் முன் முகம் சுழிக்கும் படியாக உடுத்தக் கூடாது. எந்த சூழலிலும் கண்ணியமாக உடுத்த வேண்டும். மற்றவர்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும் படி உடுத்துவது குழந்தைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவே அமையும். 

நல்ல விஷயங்களை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முன்னுதாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்...

* உங்கள் குழந்தைக்கான இடங்களில் நீங்கள் அவர்களுக்கான நன்மதிப்பையும் கூட்ட கடமைப்பட்டவர்கள். குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கண்ணியமாக உடுத்துங்கள். இதுவே உங்களைப் பற்றியும், உங்களது குழந்தை பற்றிய எண்ணங்களையும், மற்ற குழந்தைகள் மனதில் பதிக்க காரணமாக அமையும். 

* எவ்வளவு கோபமான சூழலிலும் உங்கள் குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  பிறகு, அவர்களுக்கும் வழக்கமாக மாறிவிடும். 

* வீட்டில் கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்தாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குழந்தைகளிடம்  மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதைத் தவிர்க்கவும்.  இது பெற்றோர் மீது குழந்தைகளின் மதிப்பீட்டை குறைக்கும். 

* மார்டன் என்ற பெயரில் குழந்தைக்கு டைட்டாகவும், மற்றவர்கள் முகம் சுழிக்கும் படியும் உடை உடுத்திவிடும் பழக்கத்தை கை விடவும். குழந்தைகள் கம்ஃபோர்டாக பீல் பண்ணும்படி டிரஸ் செய்வதே என்றும் நல்லது. 

* உங்கள் குழந்தை கண்ணாடி போன்ற பொருட்களை எடுக்கும் போது, உடனே உடைத்து விடாதே என்று சத்தம் போட வேண்டாமே. அவர்களுக்கும் அது தெரியும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

* உங்கள் குழந்தையிடம் எந்த சூழலிலும் ‘நீ உருப்படவே மாட்ட’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது அவர்களது ஆளுமையையும், நம்பிக்கையையும் சிதைக்கும் வார்த்தை. குறைகளை மிகைப்படுத்தாமல் பாசிட்டிவாகப் பேசுங்கள். 

* வீட்டில் உங்களது குழந்தைக்கு என்று தேவையான விஷயங்கள் இருக்கட்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு திருடும் எண்ணம் ஏற்படும். 

* வீட்டில் உள்ள வேலைக்கார்களை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். நம்மையே நம் குழந்தைகள் பின்பற்றுகின்றனர். அவர்களிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கம் பாராட்டுவதையும் தவிர்க்கலாம். இது பின்வரும் ஆபத்துகளைத் தடுக்க உதவும். 

* உங்கள் குழந்தை வெளியில் செல்லும் போது, உங்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 

* வீட்டில் மூடிய அறைகளுக்குள் நுழையும் போது அனுமதி பெறும் பழக்கம் அவசியம். நீங்களும் பழகிக் கொள்ளலாம். 

* புதிய சூழலையும், புதிய மனிதர்களையும் பணிவோடு அணுகும் பக்குவத்தை உங்களது குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். 

இது போல் எந்தெந்த விஷயத்தில் உங்கள் குழந்தை பெட்டராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்களோ அதிலெல்லாம் உங்களை நெறிப்படுத்துங்கள் பெற்றோரே!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

இது புதையல் வேட்டை நேரம்

சங்கேதக் குறிகளை வைத்து புதையல் தேடும் நேரம் இது.

  • தொடங்கியவர்

TRAPPED - ஹிந்திப் பட ட்ரெய்லர்...

Trapped

நகரத்தின் அடுக்குமாடிக் கட்டடத்தில் வசிக்கும் ஓர் இளைஞன்  நீர், உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே மாட்டிக் கொண்டால் என்ன ஆகும் என்பதுதான், 'ட்ராப்பெட்' (TRAPPED) ஹிந்தித் திரைப்படத்தின் ஒன்-லைன். விக்ரமாதித்ய மோத்வானே படத்தை இயக்க, வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இளைஞராக ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்,  இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். இந்தத் திரைப்படம், வரும் மார்ச் மாதம் 17-ம் தேதி திரைக்கு வருகிறது. வீடியோவை க்ளிக் செய்து, வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் 'ட்ராப்பெட்' திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பாருங்கள்.

 

 

 

  • தொடங்கியவர்

அச்சு எந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு!

ஆங்கிலேயர் ஆட்சி குறித்து நமக்குப் பல கசப்பான நினைவுகள் இருந்தாலும் வரலாற்றுரீதியாக சில முக்கியமான மாற்றங்கள் மறக்கமுடியாதவை; மறக்கக்கூடாதவை.

கல்வியை அனைவருக்கும் பொதுவாக்கியது, நவீன வசதிகளை அறிமுகப்படுத்தியது எனப் பலவற்றைப் பட்டியலிடலாம். அதில் முக்கியமானது ஐரோப்பிய பாதிரியார்கள் சிலரின் தமிழ்த்தொண்டு. வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, ஜி.யு. போப், கால்டு வெல் ஆகியோர் வரிசையில் முக்கியமானவர் பாதிரியார் சீகன் பால்கு. இவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். 

தமிழில் முதல் புத்தகம் அச்சடித்த சீகன் பால்கு

சிறுவயதில் இருந்தே நோய் வாய்பபட்டு நோஞ்சான் போலத்தான் சீகன் பால்கு இருப்பாராம். சீகனின் தாய் மிகுந்த இறைப்பற்று கொண்டவர். அதே இறைப்பற்று சீகனிடம் இருந்தது. பைபிளைக் கற்றுத் தேர்ந்தார் சீகன். பாதிரியார்கள் இந்தியாவுக்கு வந்து பணியாற்றுவதில் பலவித இடையூறுகள் அப்போது இருந்தன. 

அப்படி சீகனுக்கும்  சில இடையூறுகள் இருந்தன. டென்மார்க் அரசரால், இறை சேவைக்காக சீகன் அனுப்பப்படுவதை, இந்தியாவில் இருந்த டானிஷ் கவர்னர் ஹாசியஸ் விரும்பவில்லை. தமது செயல்பாடுகளை வேவு பார்க்கவே சீகனை டென்மார்க் அரசர் அனுப்புவதாக கவர்னர் கருதினார். 1705ம் ஆண்டு தமிழகத்தில் தரங்கம்பாடி பகுதிக்கு சீகன் கப்பலில்வந்தடைந்தார். ஆனால், அவர் கரை வந்து சேர படகு அனுப்பப்படவில்லை. 

ஏற்கெனவே கடலில் பலவித போராட்டங்களைப் பார்த்து பார்த்து சீகன் நொந்துபோயிருந்தார். கடல் பயணத்தின்போது இறந்து போனவர்களின சடலங்களைக் கடலில்  வீசும் காட்சிகளைக் கண்டு பயந்து போயிருந்தார். மென்மையான மனசுக்காரரான சீகன் பாலால் இது போன்ற காட்சிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இறுதியில் மூன்று நாட்களுக்குப் பிறகு படகு ஒன்று கப்பலுக்கு அனுப்பப்பட்டது.  

அதன் பிறனே சீகன் பால்குவால் கரையேற முடிந்தது. ஆங்கிலேயேர்கள் பொதுவாக தமிழ் கற்க ஆர்வம் காட்டமாட்டார்கள். சீகனுக்கும் அதே எண்ணம்தான். தமிழ் மக்களிடையே பழகப் பழக தமிழ் மொழியின் செழுமையை அறிந்துகொண்டார். அதற்குப் பின்னரே அவருக்கு தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. தமிழ் கற்றால்தான் இங்கு சேவையாற்ற முடியும் என்பதையும் புரிந்து கொண்டார். 

தமிழகத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் அவர் தமிழ் கற்க உதவியாக இருந்தனர். மிக விரைவாக தமிழைக் கற்றுத் தேர்ந்த சீகன் பால்குவுக்கு கவர்னர் ஹாஸியஸ் தொடர்ந்து பலவித இன்னல்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்.. ஒரு கட்டத்தில்  சீகன் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி, சிறையிலும் அடைத்து வைத்திருந்தார். சுமார் 4 மாத காலம் சிறையில் அவர் காலம் கழித்தார். சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த, சீகன் பால், ‘புதிய ஏற்பாட்’டைத் தமிழில் அச்சடிக்க முடிவு செய்தார். பைபிளில் சொல்லப்பட்ட பல வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தேர்வு செய்வது அவருக்குக் கடும் சவாலாக இருந்தது. 

அச்சு எந்திரம் கொண்டு வருவதற்கும் எழுத்துகளைக் கோக்கவும் பலவித இன்னல்களைச் சந்தித்தார். ஒரு வழியாக 1713ம் ஆண்டு புதிய ஏற்பாடு அச்சு கோக்கும் பணி தொடங்கியது. சுமார் 2 ஆண்டுக் காலம் இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, 1715ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பணிகள் முடிவடைந்தன. புதிய ஏற்பாடு முழுவதும் தயாராகியிருந்தது. தமிழில் புத்தக வடிவில் முதன்முதலில் வெளிவந்த நூல் ‘புதிய ஏற்பாடு’தான். தமிழில் புத்தகங்கள் அச்சடிக்க அடித்தளம் அமைத்த சீகன் பால்கு 37 வயதிலேயே மரணம் அடைந்தார். தரங்கம்பாடியில் அவர் எழுப்பிய புதிய ஜெருசலேம் ஆலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த ஆலயத்தில் சீகன் பால்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று நாம் பல புத்தகங்களை அச்சு வடிவில் படிப்பதற்குக் காரணமாய் இருந்த சீகன் பால்குவின் நினைவு தினம் இன்று. வரலாறு உங்களை வணங்குகிறது சீகன்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அண்ணா ஆன்மாவும் எம்.ஜி.ஆர் ஆன்மாவும் பேசிக் கொண்டால்..? #MarinaChat #VikatanExclusive

"அம்மாவின் ஆன்மா எங்கிட்டதான் பேசுச்சு!'' என ஓ.பி.எஸ்ஸும் சசிகலாவும் குந்தாங்கூறாக அரசியல் குட்டையைக் குழப்பினாலும் அதே மெரினா கடற்கரையில் துயில் கொண்டு மக்கள் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும்  முன்னாள் முதல்வர்கள் அண்ணாவின் ஆன்மாவும் எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் வாக்கிங் போய்விட்டு சமாதிக்குத் திரும்பி வரும்போது என்ன பேசிக் கொண்டிருந்திருக்கும் எனச் சின்னதாய் ஒரு கற்பனை...

அண்ணா

அண்ணா: தம்பி! நடக்கும் கொடுமைகளைப் பார்த்தாயா? 

எம்.ஜி.ஆர்: நாட்டில் பல கொடுமைகள் நடக்கிறது அண்ணா! எந்தக் கொடுமையைச் சொல்கிறீர்கள் அண்ணா..?  சட்டப் பேரவையில் சட்டைக் கிழிப்பு, மேசை உடைப்பு என மாண்புகள் மாண்டுவிட்ட கொடுமையை நல்லவேளை நீங்கள் பார்க்கவில்லை!

அண்ணா: ஐயகோ கொடுமை..! ஆனால், நான் அதைச் சொல்லவில்லையடா தம்பி.  முணுக்கென்றால் நாளொன்றுக்கு மூணுமுறை மெரினாவுக்கு ஓடி வந்துவிடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கண்மணிகள் என்னைச் சீந்துவதே இல்லை. கட்சியின் பெயரில் மட்டுமே நான் வாழ்வதை அவமானமாக நினைக்கிறேனடா என் இதயக்கனி! 

எம்.ஜி.ஆர்: ஐய்யோ அண்ணா..! நீங்கள் வேதனைப்படுவதைப் பார்க்கும்போது என் இதயத்தைக் கீறிய வலியை உணர்கிறேன் அண்ணா. என் நூற்றாண்டு விழாவிலும்  என் படத்தைக்கூட எங்கும் வைக்கவில்லை. ஆட்டோக்காரர்களும், அழிந்தே போன ரிக்‌ஷாக்காரர்களாலும் தான்  அண்ணா நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! நல்லவேளை மிமிக்ரி என்ற அளவிலாவது சில கலைஞர்கள் என்னை இளைய தலைமுறையினருக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அண்ணா: அந்த விஷயத்தில்கூட நான் கொடுத்து வைக்கவில்லையடா தம்பி. என் கரகரத்த குரலைக்  கல்லக்குடி வென்ற என் தம்பி கருணாநிதி இரவலாகப்பெற்றுவிட்ட காரணத்தால் என் குரல் எப்படி இருக்கும் என்றுகூட இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாமலே போய்விட்டது.  ஆனால், ஒன்று... எந்தத் தலைமுறையினருக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லையோ அதே தலைமுறையினர் கல்வி பயிலும் பெருங்கல்விக் கூடமாம் பொறியியல் பல்கலைக் கழகத்திற்கு அண்ணா பல்கலைக் கழகம் என வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடக்கூட முடியவில்லை.  தமிழகத்தில் இருக்கும் பொறியியல் மாணவர்கள் தங்கள் தேர்வின் முடிவுகள் வரும்போதெல்லாம் மிகக் கடுமையான வார்த்தைகளால் என்னையும் சேர்த்து சபிக்கிறார்களடா..! 

எம்.ஜி.ஆர்: நல்லவேளை நான் தப்பித்தேன் அண்ணா! என் பெயரை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் வைத்து விட்டார்கள். (ஏதோ ஞாபகம் வந்தவராய்..) அதிருக்கட்டும் அண்ணா... உங்கள் முகம் ஏன் இன்று இவ்வளவு வாட்டமாக இருக்கிறது? 

எம்.ஜி.ஆர்

அண்ணா: தமிழ்நாடு என பெயரிலேயே தமிழை வைத்து தனிப்பெரும் மாநிலமாக ஆக்கியவன் நான். ஆட்சி செய்தது இரண்டே வருடங்கள் தான் என்றாலும் மக்கள் மனதில் இன்றும் குடி கொண்டிருக்கிறேன்.  `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று சொன்னவன் நான். ஆனால், இன்றைய அரசியல் சூழலில் `ஒன்றே கட்சி ஒவ்வொருவனும் தலைவன்' என்கிற ரீதியில் ஆகிவிட்டதடா தம்பி. `கடமை கண்ணியம் கட்டுப்பாடு'  என்ற என் கொள்கையை  தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் மறந்தே விட்டதடா ராமச்சந்திரா! சட்டப்பேரவையில்கூட கடமையை மறந்து கட்டுப்பாடே இல்லாமல் சண்டை போடுகிறார்கள். 

எம்.ஜி.ஆர்: சண்டை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. நான் 'குலேபகாவலி' காலத்திலிருந்து சுத்திச் சுத்திக் கத்திச் சண்டை போட்டிருக்கிறேன். என் ஆடை கிழிந்ததே இல்லை. நண்பர் கருணாநிதியின் மகனார் ஸ்டாலினாருக்கு சட்டைப் பாக்கெட் கிழிந்ததைப் பார்த்தேன். காலம் எவ்வளவு கொடூரமாய் மாறிவிட்டது பார்த்தீர்களா அண்ணா..? `கத்தியின்றி ரத்தமின்றி சட்டையொன்று கிழியுது' என்று பாட்டுப்பாடவல்லவா தோன்றுகிறது?!

அண்ணா: ஆமாம்... உன்னிடம் ஒன்றைக் கேட்க மறந்துவிட்டேன். பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் நிலநடுக்கம் வந்ததை நீ உணர்ந்தாயா..? மூன்றுமுறை நிலநடுக்கத்தை உணர்ந்து நான் மிகவும் கவலைப்பட்டேனடா தம்பி. உன்னை அன்று அழைத்தேன். ஆனால், நீதான் என்னைக் கவனிக்கவில்லை!

எம்.ஜி.ஆர்: (சிரிக்கிறார்) அண்ணா என் அண்ணா... அது நிலநடுக்கம் அல்ல. சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்த கடுப்பில் ஜெயலலிதாவின் சமாதியில் சசிகலா கோபமாக அடித்த அடிகள் அவை. எனது கைக்கடிகாரம் ஓடுகிறதா என என் சமாதியில் அப்பாவி மக்கள் காது வைத்துக் கேட்ட வண்ணம் இருப்பதால் நான் நன்றாகத் தூங்கி பல வருடங்கள் ஆயிற்று. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எல்லோரின் கவனமும் அந்தப் பக்கம் இருந்ததால் சமீப நாட்களாகக் கொஞ்சம் தூங்க முடிந்தது. அன்று அந்த மூன்று அடியில் பக்கத்து சமாதியில் இருந்த நானே எழுந்து விட்டேன். பாவம் ஜெயலலிதா... இன்னும் எழுந்திருக்கவில்லை. 'என்னடா இது சோதனை' என நினைத்த எனக்குத் தாமதமாகத்தான் தெரிந்தது அது `சத்திய' சோதனை என்று! 

 

அண்ணா: (சிரிக்கிறார்) ஹாஹாஹா... அதிருக்கட்டும்  நிஜமாகவே உன் கடிகாரம் இன்னும் ஓடுகிறதா..? கொஞ்சம் காது வைத்து கேட்கலாமா..? 
(என்றபடி அண்ணா அருகில் வர... சிரித்தபடி ஓடுகிறார் எம்.ஜி.ஆர்.)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

28 வயது வாலிபருக்கும் 82 வயது பாட்டிக்கும் திருமணம் நடந்த அதிசயம்!

3D83E83A00000578-0-image-a-22_1487759359

காதலுக்கு கண்ணில்லை என்பது இவர்கள் விசயத்தில் உண்மையாகிவிட்டது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சோஃபியன் லோஹோ தாண்டேல் எனும் 28 வயது மெக்கானிக், 82 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்து அனைவரையும் ஆச்சர்ய படுத்தியிருக்கிறார். சென்ற ஆண்டு மார்தா போடூஸ் என்ற 82 வயது பாட்டி தவறுதலாக சோஃபியன்  நெம்பருக்கு போன் செய்துவிட்டார்.


அவருடைய இனிமையான குரலைக் கேட்டு மயங்கிய சோஃபியன், தொடர்ந்து அவருடன் பேசிவந்தார். அந்த பாட்டியும் தனது வயதை தெரியபடுத்தவில்லை. அவரை பார்க்கவேண்டும் என்று துடித்தார். ஒருநாள் திடீரென்று அவரது வீட்டிற்கு சென்று போனில் பேசியவரை சந்தித்தார். அவர் கணவரை இழந்த 82 வயது பாட்டி என்று தெரிந்ததும் சோஃபியனுக்கு அப்படியே ஷாக் அடித்ததுபோல ஆகிவிட்டது. பிறகு சுதாரித்துக்கொண்டு, தன் காதலுக்கும்  வயதிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி அந்த பாட்டியிடம் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டார். முதலில் இரு வீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் பிடிவாதம் பிடித்து சம்மதத்தைப் பெற்று பிப்ரவரி 18-ம் தேதி இருவரின் திருமணம் நடைப்பெற்றது. 

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

28 வயது வாலிபருக்கும் 82 வயது பாட்டிக்கும் திருமணம் நடந்த அதிசயம்!

3D83E83A00000578-0-image-a-22_1487759359

காதலுக்கு கண்ணில்லை என்பது இவர்கள் விசயத்தில் உண்மையாகிவிட்டது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சோஃபியன் லோஹோ தாண்டேல் எனும் 28 வயது மெக்கானிக், 82 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்து அனைவரையும் ஆச்சர்ய படுத்தியிருக்கிறார். சென்ற ஆண்டு மார்தா போடூஸ் என்ற 82 வயது பாட்டி தவறுதலாக சோஃபியன்  நெம்பருக்கு போன் செய்துவிட்டார்.


அவருடைய இனிமையான குரலைக் கேட்டு மயங்கிய சோஃபியன், தொடர்ந்து அவருடன் பேசிவந்தார். அந்த பாட்டியும் தனது வயதை தெரியபடுத்தவில்லை. அவரை பார்க்கவேண்டும் என்று துடித்தார். ஒருநாள் திடீரென்று அவரது வீட்டிற்கு சென்று போனில் பேசியவரை சந்தித்தார். அவர் கணவரை இழந்த 82 வயது பாட்டி என்று தெரிந்ததும் சோஃபியனுக்கு அப்படியே ஷாக் அடித்ததுபோல ஆகிவிட்டது. பிறகு சுதாரித்துக்கொண்டு, தன் காதலுக்கும்  வயதிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி அந்த பாட்டியிடம் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டார். முதலில் இரு வீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் பிடிவாதம் பிடித்து சம்மதத்தைப் பெற்று பிப்ரவரி 18-ம் தேதி இருவரின் திருமணம் நடைப்பெற்றது. 

http://www.vikatan.com

பாட்டியின்ட பெயரில் நல்ல சொத்து இருக்கோ?

  • தொடங்கியவர்

மழைக்குப் பின்னே, இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

Glory hole

சில நாள்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால், அங்கிருக்கும் நீர்நிலைகளில் மழைநீர் வழிந்தோடியது. அரிதினும் அரிதான நிகழ்வாக, அமெரிக்காவின் மிக உயரமான அணையின் வடிகாலில் விரிசல் விழும் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. இந்த அசாத்திய இயற்கைச் சூழலால் மக்களும் மிகவும் அவதியுற்றனர்.

கடும் மழை காரணமாக கலிபோர்னியாவின் மற்ற நீர்நிலைகளைப் போல, பெரிசா ஏரியும் (Berryessa Lake) நிரம்பியது. இதனால், அந்த ஏரியின் குறுக்கே இருக்கும் மான்டிசெல்லோ அணையின், குளோரி ஹோலில் (Glory Hole) நீர் வழிந்தோடியது. இதை ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி வீடியோக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்தக் காட்சி யூடியூப்பில் வெளியாகி காண்பவர்களை ஆச்சர்யபட வைத்துள்ளது. 

இந்த 'ஹோல்', அணையின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு வடிகால். அணை உச்சக்கட்ட உயரத்துக்கு நிரம்பினால் மட்டுமே இந்த ஹோல் வழியாக நீர் வழிந்தோடும். கனமழை காரணமாக இந்த ஹோலில் இப்போது நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கலிபோர்னியாவின் 'க்ளோரி ஹோலின்' சிறப்பு, இதில் வழியும் நீர் கீழே இருக்கும் பெரிசா ஏரியில் கலந்துவிடுகிறது. கீழே இருக்கும் லின்க்கை கிளிக் செய்து வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும். இது தினமும் பார்க்கக்கூடிய காட்சியல்ல. ஆச்சர்யத்தைப் பார்க்கத் தயாராகுங்கள்...

 

 

 

 
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

ஏழு புதிய உலகங்கள் கண்டுபிடிப்பு: அங்கு மனிதர் வாழ முடியுமா?

பூமிக்கு வெளியே இருக்கக்கூடிய உயிர்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய முன் நகர்வை தாம் செய்திருப்பதாக வானியல் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


ஏழு புதிய கோள்களை சர்வதேச விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


தண்ணீர், திரவ வடிவத்தில் இருப்பதற்கு ஏதுவான சுற்றுச்சூழல் அவற்றில் நிலவுவதால் அங்கே உயிர்கள் வாழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பேரண்டம் குறித்த நமது புரிதலை மாற்றியமைக்கவல்ல கண்டுபிடிப்பு இதுவென வானியலாளர்கள் கூறுகிறார்கள்.


ஏராளமான தொலைநோக்கிகள் வானின் ஒரு குறிப்பிட்ட இலக்கை கண்காணித்தன.


குறிப்பிட்ட்தொரு நட்சத்திரத்தின் முன் கோள்கள் சுற்றிவரும்போது ஏன் சில சமயங்களில் மட்டும் தொடர்ந்து ஒளி மங்குகிறது என்பதை ஆராய்ந்தபோது இந்த புதிய உலகங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.


விஞ்ஞானிகள் இன்னமும் இவற்றை பார்க்கவில்லை. ஆனால் அவை அங்கே இருப்பது அவர்களுக்குத் தெரியும்.


நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் புதிய உலகங்கள் குறித்து கடந்த 25 ஆண்டுகளாக செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சி இந்த ஏழு புதிய உலகங்கள்.


இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான தொலைதூர புது உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


ஒரே நேரத்தில் ஏழு புது உலகங்கள் கண்டிபிடிக்கப்பட்டிருப்பது தற்போதைய புதுமை.

இவற்றில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கவல்ல சுற்றுச்சூழல் நிலவுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது.


இதில் மூன்றில் உயிர்வாழ்வதற்கேற்ற சூழல் நிலவுவதால் அங்கே உயிர்கள் இருக்கலாம் என்னும் ஆச்சரியமூட்டும் சாத்தியம் அதிகரித்துள்ளது.


ஆனால் அங்கே நம்மால் அவ்வளவு எளிதில் செல்ல முடியாது.


40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அவை இருக்கின்றன. ஏழு லட்சம் ஆண்டுகள் பயணித்தால் மட்டுமே அங்கு செல்லமுடியும்.


இந்த உலகங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன.


ஓவியர்களின் கற்பனையில் காட்டப்படுவதைப்போல் அங்கே உயிர்கள் வாழ ஏதுவான சூழல் நிலவுகிறதா என்பது அதில் முதன்மையானது.


அதைக்கண்டறிய மிகப்பெரிய முயற்சி மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் வானியலாளர்கள்.


விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் புதிய மேம்பட்ட பிரம்மாண்ட தொலைநோக்கிகள்,
இந்த தொலைதூர உலகங்களை நெருங்கிப்பார்க்க உதவக்கூடும் என்பது நம்பிக்கை.


உதாரணமாக அங்கே பெருங்கடல்கள் இருக்கின்றனவா? உயிர்கள் இருப்பதற்கான சான்றுகள் தெரிகிறதா போன்ற கேள்விகளுக்கான விடை தேடுவதே வானியலாளர்களின் முன்னிருக்கும் முக்கிய சவால்கள்.

  • தொடங்கியவர்

சென்னையில் வீடு தேடும் பன்னீர்செல்வம்

ops_1aa_15237.jpg

எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டின் நுழைவு வாயிலில் இருந்த அறிவிப்புப் பலகை 2 நாள்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.

தற்போது, பன்னீர்செல்வம், சென்னை பசுமைவெளிச்சாலையில் உள்ள அமைச்சர்களுக்கான இல்லத்தில் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்ததற்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து சென்னையிலேயே தங்கி வருகிறார். அவரைச் சந்திப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். எனவே, அவர் சென்னையிலேயே தொடர்ந்து தங்குவதற்கு முடிவு செய்துள்ளார். அதனால், அவர், சென்னையிலேயே வாடகைக்கு வீடு தேடி வருகிறார்.

 

ENGLISH OVERVIEW

Former Tamilnadu Chief Minister O.Panneer selvam search a rent house for his staying at Chennai

 

சிங்கப்பூரில் பயங்கர தீ விபத்து!

Fire accident SIngapore

சிங்கப்பூரில் கழிவு மேலாண்மை ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் 38 தீயணைப்பு வண்டிகளில் சென்று, போராடி தீயை அணைத்தனர். சுமார், 3 மணி நேரத்துக்கும் மேல், அதி நவீனக் கருவிகளின் உதவியுடன் போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வீரர் காயமடைந்துள்ளார்.

 

கெமிக்கல் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் பயன்படுத்தக் கூடிய ஆலையான இதில், கழிவுப் பொருள்களால் இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

http://www.vikatan.com/

 

 

டொனால்ட் ட்ரம்பின் புதிய அதிரடி

trump_18180.jpg

அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்தியா, மெக்ஸிக்கோ உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களை, அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில், பணியாளர்களின் ஊதியத் தொகை அதிகமாக இருப்பதால், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா, மெக்ஸிக்கோ உள்ளிட்ட வெளிநாடுகளில் உற்பத்தி செய்துவருகின்றனர்.

மேலும், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிலும் வெளிநாட்டவர்களை பணிக்கு நியமிக்கின்றனர். இதுதொடர்பான  விஷயங்களில் டிரம்ப் அதிபராக பதிவியேற்றதில் இருந்து அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எச்1 பி விசாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது, வெளிநாடுகளில் உற்பத்தியை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனங்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2000 முதல் 2010 ம் ஆண்டு வரை சுமார், 60 லட்சம் வேலைவாய்ப்புகளை அமெரிக்கா இழந்துள்ளது என்று அந்நாட்டு தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

ENGLISH OVERVIEW

Donald Trump To Seek Advice Today From Firms Offshoring Work To other countries

  • தொடங்கியவர்

 

சமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலா குறித்த நையாண்டி வீடியோ

 

தமிழக முதல்வர் பதவியில் அமருவதற்கான சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்தின் முயற்சிகளை நையாண்டித்தனமாக சித்தரித்து வெளியாகியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.

இந்தியா டுடே குழுமத்தால் வெளியிடப்படும் "சோ சாரி" என்ற பாலிட்டூன் எனப்படும் அரசியல் தொடர்பான நையாண்டி கார்ட்டூன் வீடியோ, தற்போது தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்த ஒரு நையாண்டி வீடியோவை வெளியிட்டுள்ளது.

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு போட்டிபோட்டதையும், சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவிற்கு சேவை செய்வது போலவும், இறுதியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலாவின் முதலமைச்சர் கனவு சிதைந்து போவது போலவும் அந்த கார்ட்டூனில் காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியில் இருந்த பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்தது, சசிகலாவை முதலமைச்சர் பதவிக்கு அதிமுக சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தது, அதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் சசிகலா தரப்பு என அதிமுக இரண்டாக பிரிந்தது பின்பு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதால் அவரின் முதலமைச்சர் கனவு கலைந்தது என்ற அரசியல் திருப்பங்களை பிரதிபலிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துகள், விமர்சனங்கள், நையாண்டி செய்திகள், மீம்கள் என பகிரப்பட்டுவருகின்றன.

இச்சூழலில் இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் பயன்பாட்டாளர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஆளில்லா விமானங்களை அழிக்க கழுகுகளுக்கு பயிற்சி!

eagle_23488.png

தீவிரவாதிகள் வான்வழியாகவும் தாக்குதல்களை நடத்திவருகிறார்கள். அதற்காக அவர்கள் சிறிய வகை ஆளில்லா விமானங்களை பயன்படுத்திகிறார்கள். இதனை முறியடிக்க  பிரான்ஸ் புதிய திட்டம் ஒன்றை அறிமுகபடுத்தி உள்ளது. வானில் பறக்கும் ஆளில்லா விமானங்களை (Drones) பிடிக்கும் பயிற்சியை கழுகுகளுக்கு பிரான்ஸ் விமானப்படை அதிகாரிகள் தற்போது அளித்து வருகிறார்கள்.


ட்ரோன்களில் உணவுகளை வைத்து அதனை பிடிக்க சொல்லி கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. கழுகுகள் மூல செயல்படுத்தப்படும் இந்த திட்டம் நல்ல பலன் தரும் என்று பிரான்ஸ் நாட்டு அரசு நம்புகிறது.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சீனா இதற்குக் கூட ட்ரோன்களைத்தான் பயன்படுத்துகிறது..!

வித்தியாசமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் சீனர்கள் நம்மை ஆச்சரியப்படுத்த எப்பொழுதும் தவறுவதில்லை. 

ட்ரோன்

தற்போதைய சூழ்நிலையில் குறுகிய தெருக்களாலும், அடுக்குமாடி குடியிருப்புகளாலும் நிறைந்துவிட்ட சீனக் குடியிருப்பு பகுதிகளில் பெரும் பிரச்சனையாக இருப்பது மாடிகளில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயர்மின் அழுத்த கம்பிகளில் சிக்கிக் கொண்டு தொங்கும் குப்பைகள். இதனை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதல்ல. மனிதர்கள் ஏறி சுத்தம் செய்ய வேண்டும் என்றால் அந்த பகுதியில் மின்தடையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் மின்தடை செய்வது பெரும் அசௌகரியத்தை உருவாக்கும். இதற்குத் தீர்வாகத்தான் நெருப்பை உமிழும் ஆளில்லா குட்டி விமானம் என்றழைக்கப்படும் ட்ரோன் (Drone) கருவியை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன், உயர்மின் அழுத்த கம்பிகளில் தொங்கிக்கொண்டு இருக்கும் குப்பையின் அருகே பறந்து சென்று அதன் மீது நெருப்பை பீச்சி அடித்து அந்த குப்பைகளை அங்கேயே எரித்து சாம்பலாக்கி விடுகிறது. 11 கிலோ எரிபொருளை இந்த ட்ரோன் சுமந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இதில் இருந்து வரும் நெருப்பு 400° செல்சியஸ் வரை வெப்பமாக்கும். 

இது சுற்றுசூழலை பாதிக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறினாலும், உயர்மின் அழுத்த கம்பிகளில் ஏறி மனித உயிரை பணயம்வைப்பதை விட இது எளிது என்று கூறுகிறது இந்த ட்ரோன் நிறுவனம்.

உலகளவில் ட்ரோன்கள் பல துறைகளில் பயன் படுத்தப்படுகிறன. உயர் ரக இயந்திர துப்பாக்கிகளை ஏந்தி சென்று எதிரி தளத்தை தாக்கும் ட்ரோன்கள் தற்பொழுது ராணுவத்தில் பிரபலமடைந்து வருகிறன. 

தீவிரவாதிகளும் ட்ரோன் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் ட்ரோன் போர் முறையை உலக நாடுகள் சில எதிர்க்கின்றன.

ராணுவ ட்ரோனின் செயல்திறனை

அமேசான் நிறுவனம் தங்களின் சேமிப்பு கிடங்கின் அருகில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 13 நிமிடத்தில் சிறு பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை சோதனை ஓட்டமாக பயன்படுத்தி வருகிறது. 

நம் நாட்டிலும் ட்ரோன்களின் வருகை ஆரம்பித்துள்ளது. தற்பொழுது  சினிமாத் துறையில் ட்ரோன் கேமராக்கள் பெரிதும் பிரபலமடைந்து வருகிறன. வானத்தில்  இருந்து ஏடுக்கும் காட்சிகளில் இது பெரும் பொருட்செலவையும், நேரத்தையும் மிச்சப் படுத்துகிறது. இப்பொழுதெல்லாம் Ariel Shot இல்லாத  சினிமாக்களே வருவதில்லை என்று சொல்லிவிடலாம். சினிமாவில் மட்டுமல்ல குறும்படங்களில், பெரும்பாலான திருமண வீடியோக்கள் முதற்கொண்டு ட்ரோன்கள் பயன் படுத்தப்படுகின்றது. 

drone

எதிர் எதிர் புறத்தில் சுழலும் நான்கு இறக்கைகள் ஒரு பொருளை மேல் எழும்பச் செய்யும் என்ற ஒரே அடிப்படை விதி தான். ஆனால் பலன்கள் பல. அவசர காலங்களில் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப ( சென்னை வெள்ளத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும்), காடுகளில் விதைகளைத் தூவ, செல்ஃபி  எடுக்க என்று ட்ரோன்களின் பரிமாணங்கள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன. 

உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தேனிக்களின் அழிவால் குறையும் மகரந்த சேர்கையை  செய்யவும் விஞ்ஞானிகள் ட்ரோன் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். வரும் காலங்களில் இதன் வீச்சு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை 

மகரந்த சேர்க்கை ட்ரோன்

 தற்பேதைய வாழ்வியலின் ஓர் அங்கமாகவே மாறி வரும் ட்ரோன்களை கூடிய விரைவில் நம் ஊர் வானங்களிலும் காணலாம். 

ஆனால் நம் நாட்டில் இன்றையத் தேதி வரை ட்ரோன்களை  பயன்படுத்துவதை குறித்து தெளிவான சட்ட வரைமுறைகள் இல்லை. ட்ரோன்களை எளிதாக தீய வழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் தெளிவான சட்ட திட்டங்கள் அவசியம் தேவை.

எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் மனித மலத்தை அள்ள மனிதனையே இறக்கும் கொடுமைக்கு இன்னும் ஒரு முடிவு வரவில்லை என்பதுதான் சோகம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

35p1.jpg

பார்வைக்குறைபாடு உள்ளோருக்கான கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாதான் எப்போதும் கில்லி. அதிலும் உலகக்கோப்பை வந்துவிட்டால், எப்போதும் நாம்தான் சாம்பியன். தொடர்ந்து இரண்டாவது முறையாக, பார்வைக்குறைபாடு உள்ளோருக்கான டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதித்துள்ளது நம் அணி. பெங்களூரில் நடந்த இறுதிப் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்திருக்கிறது. நிறைய வெளிச்சம் கிடைக்கட்டும்!

35p2.jpg

சச்சினின் 100-வது சதம் போலவே தள்ளித் தள்ளிப் போகிறது `சச்சின்' பட ரிலீஸ். சென்ற ஏப்ரலில் போஸ்டர் வெளியிட்டு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்ட திரைப்படம், ஒருவழியாக ‘வரும் மே 26-ல் கன்ஃபர்ம்ப்பா’ என்ற இன்பச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். `தோனி பயோபிக்'கில் தோனியாக வேறு ஒருவர் நடித்ததற்கே கொண்டாடித் தள்ளினார்கள். இதில் சச்சினாக, சச்சினே நடித்திருக்கிறார். படத்துக்கு இசை, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு சச்சின்ன்ன்ன்ன்... சச்சின்!

தமிழக ட்விட்டர்களின் டார்லிங்காக மாறிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். தன்னுடைய துணிச்சலான அரசியல் கருத்துகளைத் துள்ளலாகப் போட்டுத்தாக்க ஆரம்பித்திருக்கிறார். மாட்டிறைச்சி, ஜல்லிக்கட்டு, கூவத்தூர் எம்.எல்.ஏ சிறைபிடிப்பு... என எல்லா அரசியல் விவகாரங்களிலும் தயக்கமே இல்லாமல் தடாலடியான கருத்துகளை உதிர்க்கிறார் கமல். `சசிகலா முதலமைச்சராகப்போகிறார்' என்ற செய்தி வெளிவரத் தொடங்கியதும், நேரடியாகவே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவுசெய்ய... கொண்டாடித் தீர்த்தது இணைய சமூகம். அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ... ஒத்திக்கோ!

35p3.jpg

கரீனா கபூர் மீண்டும் வந்துவிட்டார். `என்னால் வேலையையும் குடும்பத்தையும் சரியாக நிர்வகிக்க முடியும். அதனால்தான் குழந்தை பிறந்த பிறகும்கூட தொடர்ந்து நடிக்க முடிவுசெய்திருக்கிறேன்' எனச் சொல்லி, அடுத்து நடிக்கவிருக்கும் `வீர் டி வெட்டிங்' படத்தில் பிஸியாகி விட்டார் கரீனா. `இப்போதுதான் மகன் பிறந்திருக்கிறார் எப்படிஜி?!' என விசாரித்தால், `மகன் தைமூரையும் ஷூட்டிங்கையும் சரிசமமாகச் சிறப்பாகக் கையாளுவேன்' என்கிறார் கரீனா கபூர். வருக... வருக!

தடகள வீரர் உசேன் போல்ட்டும், ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பெய்ல்ஸும் விளையாட்டு உலகின் ஆஸ்கர் விருதான `லூயஸ்' விருதைத் தட்டிச்சென்றிருக்கிறார்கள். போல்ட்டுக்கு விருதை வழங்கிய முன்னாள் தடகள ஜாம்பவான் மைக்கேல் ஜான்சன்,`என்னுடைய சாதனைகளை எல்லாம் உடைத்துவிட்டீர்கள்' எனச் சொல்ல, `உங்கள் சாதனைகளை மீறியதற்கு மன்னியுங்கள். நான்காவது முறை நான் வாங்கும் லூயிஸ் விருது இது. விருதிலும் ரோஜர் ஃபெடரரின் சாதனையைச் சமன் செய்திருக்கிறேன்' என மகிழ்ந்தார் போல்ட். மின்னல் மன்னன்! 

35p4.jpg

பிரபல மலையாளப் பெண் எழுத்தாளர் கமலா தாஸ், இஸ்லாம் மதத்துக்கு மாறி `கமலா சுரயா' என தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் ஏராளமான கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். கடந்த 1985-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற கமலா தாஸின் வாழ்க்கை வரலாறு, மலையாளத்தில் சினிமாவாக எடுக்கப்படவுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் கமலின் கனவுப் படம் இது. கமலா தாஸ் வேடத்துக்கு மஞ்சு வாரியாரைத் தேர்வுசெய்துள்ளது படக்குழு. சூப்பர் சாய்ஸ்!

35p5.jpg

இசைப் புயல் குடும்பத்திலிருந்து இன்னொரு புயல்! ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ஃபாத்திமாவின் மகன் இ.ஆர்.ஹசார் காசிப்தான் புதிய இசையமைப்பாளர். காதலர் தின ஸ்பெஷலாக ‘கண்ணாலே...’ என்ற காதல் பாடலை இசையமைத்து வெளியிட்டிருக்கிறார் காசிப். இதில் மற்றொரு ஹைலைட், அந்தப் பாடலில் நடித்திருப்பது ஜி.வி.பிரகாஷ்குமாரின் சகோதரி பவானி. மாமா ரஹ்மானின் `வான் வருவான்...' வெளியான அதே தினத்தில் தன்னுடைய பாடலையும் வெளியிட்டு அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார் ஹசார் காசிப். இசை வாரிசுகள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆலன் மெக்லியோட் கர்மக்

 
sce_3136734f.jpg
 
 
 

நோபல் பெற்ற தென்னாப்பிரிக்க இயற்பியலாளர்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆலன் மெக்லியோட் கர்மக் (Allan McLeod Cormack) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜோஹன்னஸ்பெர்க் நகரில் பிறந்தவர் (1924). தந்தை 1936-ல் மறைந்தார். ஆசிரியராகப் பணியாற்றி வந்த அம்மா குடும்பத்துடன் கேப் டவுனில் தங்கிவிட்டார்.

* பள்ளியில் பயின்றபோது விவாத மேடைகளில் ஆர்வத்துடன் பங்கேற் றார். வானியலில் நாட்டம் பிறந்தது. இது தொடர்பான நூல்களுடன் கணிதம், இயற்பியலையும் ஆர்வத் துடன் கற்றார்.

* பள்ளிப் படிப்புக்குப் பின்னர் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மின்பொறியியல் பயின்றார். பின்னர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இயற்பியலுக்குத் திரும்பிவிட்டார்.

* 1944-ம் ஆண்டில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அங்கேயே படிகவியலில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்றார். 1950-ல் நாடு திரும்பிய இவர், கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அணு இயற்பியலிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்கா மிகச் சிறந்த களமாக இருக்கும் என்பதாலும் அமெரிக்கப் பெண்ணான தன் மனைவிக்காகவும் அமெரிக்கா சென்றார். 1957-ல் மசாசூசெட்ஸ், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு இயற்பியல் துறைத் தலைவராகவும் செயல்பட்டார்.

* 1966-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். அங்கே முக்கியமாக துகள் இயற்பியல் (particle physics) துறை மற்றும் அணு இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒரு மருத்துவமனையின் கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் பகுதிநேர இயற்பியலாளராக பணியாற்றியபோது எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினார்.

* மென்மையான திசுக்களின் தட்டையான பகுதிகளில் எக்ஸ்-ரே இமேஜ்களின் அடர்த்தி மாறுபடுவதால் பிரச்சினைகளைத் துல்லியமாக கண்டறிய முடியாமல் இருந்தது. எனவே வெவ்வேறு கோணங்களில் எக்ஸ் கதிர்களை செலுத்தி, மென்மையான திசுக் களின் தட்டையான பகுதிகளைத் துல்லியமாகக் கணக்கிட முடியும் என்பதை விளக்கினார். இதன்மூலம் சி.ஏ.டி. ஸ்கேனுக்கான கணித நுட்பத்தை வழங்கினார். இந்த நுட்பம், கோட்பாடு அடிப்படையிலான சி.டி. ஸ்கேனிங் முறையைக் கண்டறிய வழிகோலியது.

* இவரது ஆராய்ச்சி முடிவுகள் ஜர்னல் ஆஃப் அப்ளைட் சயின்ஸ் என்ற இதழில் இரண்டு கட்டுரைகளாக வெளிவந்தன. ஏற்கெனவே தான் ஈடுபட்டு வந்த ஆராய்ச்சிகளிலும், கற்பித்தலிலும் தொடர்ந்து கவனம் செலுத்தத் தொடங்கினார். 1971-ல் இங்கிலாந்தின் பொறியாளரான காட்ஃப்ரே ஹவுன்ஸ்ஃபீல்ட் மற்றும் அவரது சகாக்கள் முதல் சி.டி. ஸ்கேனரை உருவாக்கிய பின்னரே, இவரது கோட்பாடு கணக் கீடுகளின் முக்கியத்துவம் வெளிப்பட்டு, நிஜ பயன்பாட்டுக்கு வந்தது.

* இவரது கோட்பாடு மூலம் கணினி உதவியுடனான ‘எக்ஸ்-ரே கம்ப்யுட்டட் டோமோகிராஃபி’ (CT) மூலம் எக்ஸ்-ரே கதிர்களை உடலில் செலுத்தி, உள் உறுப்புகளை முப்பரிமாண வடிவத்தில் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காணமுடிந்தது. இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக காட்ஃப்ரே ஹவுன்ஸ்ஃபீல்டுடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு 1979-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

* அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கமும் பெற்றார். தென்னாப்பிரிக்காவின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் மபுங்குப்பே’ என்ற கவுரவம் இவரது மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது. மருத்துவத் துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆலன் மெக்லியோட் கர்மக் 1998-ம் ஆண்டு 74-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

 

சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
 

சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய 8 விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

மொத்தம் 82 டைனோசர் படிமத்தளங்கள், 6 டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்யதுள்ளனர்.

ஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.

ஷெய்ஜங் பகுதியைச் சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 புதிய டைனோசர் இனங்கள், படிமங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஷெய்ஜங் பகுதியில் அதிக டைனோசர்கள் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஷெய்ஜங் அருங்காட்சியகத்தின் துணை பொறுப்பாளர் ஜின் சிங்ஷெங் தெரிவித்துள்ளார்.

புதிய கண்டெடுப்புகள் பல்வேறு வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்கள் அழிவுற்றிருப்பதை தெரியப்படுத்தியுள்ளன.

சிறுகோள் மோதியதால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் மூலம் எரிமலை சீற்றம் உள்ளிட்டவை ஏற்பட்டு டைனோசர் இனம் அழிந்து போயிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

dinosaur_647_022117030537

Dinosaur-egg

http://newsfirst.lk/tamil

  • தொடங்கியவர்
பேதம் என்ன மானிடர்களே?
 
 

article_1487737564-phoip9.jpgபௌர்ணமி நள்ளிரவில் பால் நிலவுஒளிரும் காலத்தில் சிறுகுடிசையில் சிவந்த நிறத்துடன் பிறந்தேன் நான்.

 

எவருக்குமே இல்லாத புதுவடிவத்துடன் எனது ஆன்மா உடை உடுத்துக் கொண்டது.

 

எனக்கு மட்டுமா புதுப்புது வடிவங்கள்? இந்த அவனியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் எவருக்குமே கிடைத்திடாத வடிவங்கள்தான் ஒவ்வொன்றுக்கும் அமைந்து விடுகின்றன.பராயங்கள் மாறிக்கொண்டே இருக்க, அவரவர்களின் வடிவங்களும் மாறியபடியே... மாறியபடியே...!

எனவே, நாங்ககள் எல்லோருமே பெருமைப்பட்டுக் கொள்வோமாக! கிடைத்தற்கரிய உருவங்களை மனிதன் மட்டுமல்ல, எல்லோருக்குமே கிட்டுகின்றன.  எனவே பேதம் என்ன மானிடர்களே?

இதில் அழகு பற்றிய பிரச்சினைகளே அர்த்தமற்றது. எல்லா வடிவங்களையும் கௌரவப்படுத்துக! போற்றிடுக. ஆண்டவனின் படைப்புகள்  அர்த்தம் நிறைந்தவை என உணர்வோம். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு மிகப் பிடித்த பிறந்த நாள் பரிசு எது தெரியுமா?

ஜெயலலிதா

"இந்த வலிமை - தைரியம் எங்கிருந்து வந்தது?'' என்று ஒருமுறை நிருபர் கேட்கிறார்.''எனக்குள்ளே இருப்பது! எங்கிருந்தாவது வருமா என்ன?அது எனக்குத் தெரியாது...'' என்று சிரிக்கிறார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு அவரிடம் தைரியமும், துணிச்சலும் கொட்டிக்கிடந்தது.

வேதவள்ளி - ஜெயராம் தம்பதிகளுக்கு 24.2.1948 -ம் ஆண்டு பிறந்த ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமலவள்ளி ஜெயராம். திரைப்படத்துறைக்கு வந்த பிறகு தனது பெயரை ஜெயலலிதா என மாற்றிக் கொண்டார். ஸ்ரீதர் இயக்கிய, 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கினார். அரசியலில் 'கொள்கை பரப்புச் செயலாளர்' பதவியில் தொடங்கி 'தமிழகத்தின் இரண்டாவது பெண் முதலமைச்சர்' என்ற உயரிய பதவிவரை இட்டுச்சென்றது.

ஆனந்த விகடனில் நினைவு கூர்ந்த ஜெயலலிதா !

ஆறுமுறை தமிழக முதலமைச்சர் பதவியை அலங்கரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி  உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். தைரியமும் துணிச்சலும் மிக்க பெண்மணியாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின்  69-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 'நடிகை முதல் முதலமைச்சர் வரை...' என பலப் பதவிகளை கடந்து வந்துள்ளார். அந்த காலக்கட்டங்களில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயலலிதாவுக்கு ரசிகர்கள், தொண்டர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள்... என அனைவரும் வரிசையில் நின்று வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.

ஆனந்த விகடன்

முதலமைச்சராக உயர் பதவியில் இருந்தபோது எளிதில் யாரும் அணுகமுடியாதவராக இருந்த ஜெயலலிதா , நடிகையாக இருந்தபோது அவருடைய எண்ணச் சிறகுகளை மிக அழகாக விரித்து பறந்துள்ளார். அவர் நடிகையானபிறகு கொண்டாடிய முதல் பிறந்த நாளில், தனக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்தவர்கள் குறித்து ஆனந்த விகடனில் மனம் திறந்துள்ளார். வாரம் ஒரு நட்சத்திரம் பகுதியில், 'ஜெயலலிதா பேசுகிறார்' என்று வெளியான கட்டுரையில்தான் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் "சென்னைக்கு வந்த நாள் முதலாக மாதவன்தான் எங்கள் குடும்ப டிரைவர். சிறு வயதில் இருந்தே என் பிறந்த நாளில் எனக்கு இனிப்பு வாங்கிக் கொடுப்பது மாதவனின் வழக்கம். இந்தப் பிறந்த நாளில் மாதவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தோம்.தினமும் வீட்டில் இருந்து வேலை ஆள் சாப்பாடு கொண்டு கொடுத்து வருவான். இந்த பிறந்த நாளன்று வேறு ஆள்மூலம் இனிப்பு வந்து சேர்ந்தது. அதை வாங்கிக் கொள்ளும்போது என் கண்கள் பனித்தது. பிறந்த நாளன்று எனக்குக் கிடைத்த எவ்வளவோ விலை உயர்ந்த பரிசுகள் எல்லாவற்றையும் விட, மாதவன் கொடுத்த அந்த இனிப்புதான் விலை மதிக்க முடியாதவை.'' என்று அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

அரசியல் களத்தில், அவர் வெற்றிடத்தை விட்டுச் சென்றாலும் திரைத்துறையில், ஆயிரம் ஆயிரம் நீங்கா நினைவுகளை பரிசாகத் தந்துவிட்டுச் சென்றுள்ளார் ஜெயலலிதா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

பெண்கள் ஆட்சி செய்த மர்மங்கள் நிறைந்த சாகோன் நாகரீகம்

 

 
 

பெண்கள் ஆட்சி செய்த மர்மங்கள் நிறைந்த சாகோன் நாகரீகம்
 

ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பின் படி சாகோன் எனும் மர்மம் நிறைந்த நாகரீகத்தை பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது சக்திகளை தங்களின் மகள்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

பூமி பிரபஞ்சத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாகோன்கள் இன்றைய நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.

மர்மம் நிறைந்த நாகரீகத்தினராக பார்க்கப்படும் சாகோன்கள் 100 இற்கும் அதிகமான அறைகள் கொண்ட லாவிஷ் கற்களால் ஆன வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

வரலாற்றில் இருந்து கி.பி 1140களில் மறைந்து போன இந்த பண்டைய நாகரீகம் பல்வேறு பெரிய கற்களால் ஆன வீடுகளை மட்டும் விட்டுச் சென்றுள்ளது.

இவற்றில் 100 இற்கும் அதிகமான அறைகள் இருப்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

432e34e50443e62b7e37d49f3d68cf2e

சாகோன் நாகரீகத்தின் மிகப்பெரிய வீடு நியூ மெக்சிகோவின் சாகோ காண்யோன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பியூப்லோ பாணிட்டோ என அழைக்கப்படும் இந்த வீட்டில் மொத்தம் 650 அறைகள் உள்ளன, பியூப்லோ பாணிட்டோ சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சாகோன் நாகரீகத்தை பெண்கள் தான் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

 

7512e9babd1a6f70b67fc2240e3449de

உயர் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட கல்லறைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சாகோன்கள் தங்களது சக்திகளை தாய்மரபு மூலம் கி.பி 800-1130 வரை தலைமுறையினரிடையே கடந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் சாகோன்களின் அறை எண் 33-இல் இருந்து உயர் பிரிவினரின் மரபணுக்களை சேகரித்துள்ளனர்.

அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்கள் பார்க்க ஒரே மாதிரியானதாகவும், ஒரே மரபணு குடும்பத்தை சேர்ந்ததாகவே இருந்துள்ளது.

40 வயதில் மரணித்தப் பெண்மனி, அவரின் பேர் மற்றும் 45 வயது பெண்மனி மற்றும் அவரின் மகளின் சடலங்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் தலையில் காயம் ஏற்படுத்தப்பட்டு 40 வயதில் மரணித்த ஆண் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

63c4e5a035c8c84ed3c9c5cd5b050621

http://newsfirst.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குறும்பு மாணவன், துப்பாக்கி மிரட்டல், காலி டப்பா, ஆப்பிள்... செம ரகளை ஸ்டீவ் ஜாப்ஸ்! #SteveJobs #apple

ஏப்ரல் 01 , 1976 அந்த 21 வயது இளைஞன், உடன் அவனைவிட 5 வயது அதிகமுள்ள இளைஞன் இருவரும் சேர்ந்து 1,300 டாலர் மூலதனம் போட்டு அந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அது கம்ப்யூட்டர் தயாரிக்கும் சிறிய நிறுவனம். கம்ப்யூட்டர்கள் அலுவலகப் பணிகளுக்குப் ,பிரம்மாண்ட உருவத்தில் அறையை அடைத்துக் கொண்டிருக்கும் காலம் அது. அந்தக் காலத்தில் தனிமனிதர்களால் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரை  வடிவமைத்து விற்க இந்த இளைஞர்கள் என்ன முட்டாளா?

அதிலும் அந்த இளைஞன் ரொம்பவும் மோசம். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்பவன். படிக்கும்போதே செம ரகளை மாணவன். ஒற்றை  புரோகிராமிங்கூட எழுதத் தெரியாதவன். ஒருநாள் பள்ளியில் ,"அனைவரும் நாளை வரும்போது செல்லப்பிராணிகளையும் எடுத்து வாருங்கள்" என எழுதி வைத்து இவன் செய்த சேட்டையில் பள்ளிக்கூடம் முழுவதும் கோழி, ஆடு, பூனை , நாய் என நிரம்பிக் கிடந்த நாளை நினைத்தால் அவன் அப்பா, அம்மாவுக்குக் கதிகலங்கும்.

ஒருநாள் 'LIFE' மாத இதழில் நைஜீரிய மக்களின் மெலிந்த பசி கொண்ட மக்களைப் பார்த்துவிட்டு வேகமாக சர்ச்சுக்கு ஓடிப் போய் பாதிரியாரிடம், "ஏன் இப்படி கடவுள் பாரபட்சமாய் உயிர்களைப் படைத்துள்ளார் ஃபாதர்?" என்றான். "உனக்கு இது புரியாது" என்ற பதிலைக் கேட்டவுடன், “எனக்குப் புரியாதது தேவையுமில்லை” என்று மதத்தைக் கைவிட்டவன் அவன்.

இந்த இரு இளைஞர்கள் ஆரம்பித்த அந்த நிறுவனத்தின் இரண்டாவது மாடல் கம்ப்யூட்டர் ஆறு வருடங்களில் 751 மடங்கு லாபத்தை ஈட்டித் தந்தது. இன்றளவிலும் அமெரிக்க தொழில்முன்னேற்ற வரலாற்றில் மிக முக்கிய இடம், அந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. இருவரில் வயது மூத்த இளைஞர் ஸ்டீல் வாஸ்னியாக். இரண்டாவது இளைஞன் ஸ்டீவ். ஆம், ஸ்டீவ் ஜாப்ஸ். அந்த நிறுவனத்தின் பெயர் 'ஆப்பிள்'. சிறப்பான மனிதர்களாகக் கருதப்படுபவர்களுக்கு இருந்த எந்தக் குணமும் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இல்லை. சொல்லப் போனால் மிக வெறுக்கத்தக்க மனிதராக அவரின் சுற்றத்தாரிடம் பெயர் வாங்கியவர். 

ஸ்டீவ் ஜாப்ஸ்

1955 ல் ஜாண்டாலி-ஜோயன் என்ற சிரிய-அமெரிக்க ஜோடிக்குப் பிறந்த ஸ்டீவ் , பால் ஜாப்ஸ்-க்ளாரா இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். வளர்ப்புத் தாய்-தந்தை இருவருமே அன்பைக் கொட்டி ஸ்டீவ்வை வளர்த்தனர். ரேடியோ மற்றும் டிவி-களின் உபகரண பாகங்களை வாங்கி அசெம்பிள் செய்வதில் தீரா ஆர்வம் கொண்டிருந்தார். தன் நண்பன் வாஸூடன் சேர்ந்து ப்ளூ பாக்ஸ் என்னும் டெலிஃபோன் ஹேக்கிங் கருவியைத் தயாரித்து துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட அனுபவமெல்லாம் உண்டு. கல்லூரியில் பட்டமெல்லாம் படித்துவிட்டு சாமியார்களைத் தேடிப் புறப்பட்ட கதையைத் தெரிந்து கொண்டால் ரொம்பவும் ஆச்சர்யமாக இருக்கும். இந்தியாவில் ஏழு மாதங்கள் சுற்றி இமயமலையில் நீம் கரோலி பாபாவைப் பார்க்க மொட்டைத் தலையுடன் லைந்தார் ஸ்டீவ். பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம்தான், தாம் அதிக முறைதான் படித்த புத்தகம் என்கிறார். பின்நாளில் அவர் புத்த மதத்துக்கு வந்தடைந்தார்.

ராபர்ட் என்ற ஆன்மிக குருவின் ஆப்பிள் தோட்டம் மிகவும் பிடித்திருந்ததாகவும், நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று பெயர் வைக்க அதுவும் ஒரு காரணம் என்றும் ஸ்டீவ் சொல்லியிருக்கிறார். ஆப்பிள் -1 என்ற மாடல்தான்  ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர். Personal Computer என்ற வகையில் முதல் முயற்சி அதுதான். முழுக்க முழுக்க அதை வடிவமைத்தது வாஸ். ஸ்டீவ் விற்பனையைப் பார்த்துக் கொண்டார். நல்ல வரவேற்பு இருந்தது. ஆப்பிள் - 2 வில் நிச்சயம் நம் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிளாஸ்டிங் கேசிங் கொடுத்து அழகாய் உருவாக்கினார். சுத்தமாய் முதலீடு இல்லாத அன்றைய ஆப்பிள் நிறுவனத்தில் மூன்றே மூன்று கம்ப்யூட்டரை வடிவமைத்து அந்த வருடம் நடந்த கம்ப்யூட்டர்  கண்காட்சியில் ஸ்டால் முழுக்க வித்தியாசமான அலங்கரிப்புடன்  ஆப்பிள்-1 , ஆப்பிள்-2 மாடல்களைப் பார்வைக்கு வைத்தார். ஆப்பிள் 2 வின் தோற்த்தில் மயங்கிய மக்கள் எக்கச்சக்கமாய் ஆர்டர்களைக் குவித்தனர்.

அங்கு ஏராளமான பெட்டிகள். ‘வடிவமைத்ததே மூன்று கம்ப்யூட்டர்தானே...?’ - வாஸ் சந்தேகமாய் கேட்டார்.

"இத்தனை பெட்டிகளில் என்ன இருக்கிறது?” 

"வெறும் காலி டப்பாக்கள்" என்று கூலாய்ச் சொன்னார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆர்டர்கள் குவிய, அதன்பிறகு தயாரித்து அனுப்பினார்கள். அந்த மாடல்தான் அடுத்த பதினாறு ஆண்டுகளுக்கு Personal Computer யுகத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது. ஆப்பிள் நிறுவனம் விஸ்வரூபம் எடுத்தது.

Steve Jobs

தன் பேச்சிலும், செயலிலும் மெஸ்மரிசம் செய்வதில் ஸ்டீவ் கெட்டிக்காரர். பெர்சனல் வாழ்க்கையில் சில சர்ச்சைகள் இருந்தாலும், மூளைக்காரர். வித்தியாசமான ஆசாமி. பெரிய வீடு கட்டினார். ஏராளமான படுக்கையறைகளைக் கொண்ட அந்த வீட்டில் கட்டில்கள் மட்டும் இருக்கவில்லை. சுவரில் ஐன்ஸ்டீன் படமும், நீம் கரோலி பாபாவின் படமும் ஒட்டப்பட்டிருந்தது. 

ஆப்பிள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவினாலும், ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு 1984-ல் வெளியான 'மக்கின்டாஷ்' என்ற மாடலின் மேல் அளவுக்கதிக நம்பிக்கை இருந்தது. இதில்தான், மென்பொருள் உருவாக்கத்தில்  பில்கேட்ஸ் உடன் முதல் கூட்டணி வைத்தார் (பின்பு பில்கேட்ஸ்  மென்பொருள் உரிமத்தை வேறு கம்பெனிக்குக் கொடுத்ததாக ஸ்டீவ்  வழக்குத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் வென்றது வேறு விஷயம்.)

மக்கின்டாஷ் விளம்பரம் வித்தியாசமானதாய் இருக்கவேண்டும் என்று ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனரான ரிட்லி ஸ்காட்டை அணுகினார். அந்த விளம்பரம் உலகெங்கும் பேசப்பட்டாலும் மக்கின்டாஷ் தோல்வியைத் தழுவியது. ஆனால் லெட்டர் பிரஸ் முறையை மாற்றி பதிப்புத் துறையில் மிக முக்கிய மாற்றத்தைச்  செய்தது.

NeXT

1988-ல் 'NeXT' என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி  தோல்வி; PIXAR அனிமேஷன் நிறுவனத்தில் இணைந்து ஆரம்பத்தில் தோல்வி; பின் அசுர வளர்ச்சி என ஜாப்ஸின் அத்தியாயங்கள் நெடும் பக்கங்கள் கொண்டவை.1991-ல் லாரன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டபின், 1997-ல் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் பொறுப்பேற்றார் ஜாப்ஸ். காந்தி , சாப்ளின், ஐன்ஸ்டீன் என பல ஆளுமைகளின் படங்களில் 'Think Different' என்ற எழுத்துகள் தாங்கிய பதாகைகளுடன் விளம்பரம் செய்ய ஆரம்பித்தார் ஜாப்ஸ். 1998-ல் வெளியான ஐமேக் மாடலுக்காகத்தான் அந்த விளம்பரம். அது விற்பனையில் சக்கைப் போடு போட்டது. அடுத்தடுத்து ஆப்பிள் ஸ்டோர், ஐபாட் என தொட்டதெல்லாம் வெற்றி. ஒருவரியில் அடக்க முடிவதல்ல அந்த வெற்றி. பின்னால் ஏகப்பட்ட தழும்புகள்.

2003-ல் ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தீராத வயிற்றுவலி . கணையம், கல்லீரல் என அனைத்தையும் பாதித்திருந்த புற்றுநோய் அவரை ரணமாக்கியது.  சிறுநீரக அறுவைச் சிகிச்சை எல்லாம் நடந்தபின் கடைசி நாட்களை எண்ணத் துவங்கினார்.தன் மகள்களுடனும், மகனுடனும், மனைவியிடனும் நேரம் செலவழித்தார். தன் வாழ்நாளில்  திருமண நாளையே கொண்டாடாதவர், கடைசித் திருமண நாளை 2011-ல்  கொண்டாடினார். மகனின் பட்டமளிப்பு விழாவைப் பார்க்க விரும்பி, பார்க்கவும் செய்தார். 2011 ஆகஸ்டில் நடந்த ஆப்பிள் மாநாட்டில் பில்கேட்ஸுடன் கலந்து கொண்டார். அன்று க்ளவுட் கம்ப்யூட்டிங்கை அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் அவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி.  அக்டோபர் 5,2011-ல் மரணித்தார் ஸ்டீவ்.

ஆச்சர்யமாய் இருக்கிறது,Personal Computer வரலாற்றில் முதன்முதலில் கம்ப்யூட்டர் வாங்கியவர்களில் 36% பேர் ஆப்பிளை வாங்கியவர்கள்தான்.ஒருவகையில் இரண்டு தலைமுறையின் செயல்பாட்டை நிர்ணயித்த மாபெரும் மூளைக்காரர், தனக்குத் தோன்றியதைச் செய்தார். அதற்காக உழைத்தார்.எப்போதும் ஒரு பொருளின் தரத்தையே ஆணித்தரமாய் நம்பினார். ஆச்சர்யமான உள்ளுணர்வு கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்த ஆச்சர்ய மனிதனுக்கு இன்று பிறந்தநாள்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.