Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

மார்ச் – 15

 

கி.மு. 44 : ரோமன் குடி­ய­ரசின் மன்னன் ஜூலியஸ் சீசர், மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்­டர்­களால் குத்திக் கொல்­லப்­பட்டான். 


933 : பத்து வரு­ட­கால அமை­திக்குப் பின்னர் ஜேர்­மா­னிய மன்னன் முதலாம் ஹென்றி ஹங்­கே­ரிய இரா­ணு­வத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் தோற்­க­டித்தார். 


1493 : கொலம்பஸ், அமெ­ரிக்­கா­வுக்­கான தனது முத­லா­வது பய­ணத்தை   முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்­பினார். 


1776 : தற்­போ­தைய அமெ­ரிக்க மாநி­ல­மான தெற்கு கரோ­லினா பிரித்­தா­னி­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக அறி­வித்­தது. பிரித்­தா­னி­யா­விடம் இருந்து சுதந்­திரம் பெற்ற முத­லா­வது அமெ­ரிக்கக் குடி­யேற்ற நாடு இது­வாகும். 


1802 : இலங்­கையின் முத­லா­வது அரச வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது. 


varalaru251848 : ஹங்­கே­ரியில் புரட்சி வெடித்­தது. ஹாப்ஸ்பேர்க் ஆட்­சி­யா­ளர்கள் சீர்­தி­ருத்தக் கட்­சியின் முக்­கிய நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­ய­தா­யிற்று. 

 

1877 : முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்­துக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்பேர்ன் நகரில் ஆரம்­ப­மா­னது. 


1917 : ரஷ்­யாவின் இரண்டாம் நிக்­கலாஸ் சார் மன்னன் முடி துறந்தார். 


1922 : எகிப்து ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து முறை­யாக விடு­தலை அடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்­ன­னானார். 


1943 : இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்­ம­னியப் படைகள் யுக்­ரைனின் ஹார்க்கொவ் நகரை சோவியத் இரா­ணு­வத்­திடமிருந்து கைப்­பற்­றினர். 


1961 : தென் ஆபி­ரிக்கா பொது­ந­ல­வாய நாடு­களில் இருந்து வெளி­யே­றி­யது. 


1970 : எக்ஸ்போ '70 உலகக் கண்­காட்சி ஜப்­பானின் ஒசாக்கா நகரில் ஆரம்­ப­மா­னது. 


1985 : உலகின் முத­லா­வது .கொம் இணை­யத்­தள பெயர்  (symbolics.com) பதி­வு­ செய்­யப்­பட்­டது. 


1988 : ஈராக்­கியப் படைகள் குரு­திய நக­ரான ஹலப்ஜா மீது இர­சா­யன நச்சுக் குண்­டு­களை வீச ஆரம்­பித்­தது. 5,000 பேர் கொல்­லப்­பட்­டனர். 


1990 : மிக்கைல் கொர்­பச்சோவ், சோவியத் ஒன்­றி­யத்தின் முத­லா­வது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வானார். 


1991 : இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்­ம­னியின் ஆதிக்க நாடு­க­ளான ஐக்­கிய இராச்­சியம், பிரான்ஸ், ஐக்­கிய அமெ­ரிக்கா, சோவியத் ஒன்­றியம் ஆகி­ய­வற்­றிடம் இருந்து ஜேர்­மனி முழு­மை­யான விடுதலையைப் பெற்றது. 


2007 : இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். 

http://metronews.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

துறவிக்கு மட்டும் தெரிந்த ஆற்றங்கரை ரகசியம்! #MorningMotivation

morning motivation

இந்த குட்டிக் கதையின் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மிஸ் பண்ணிடாதீங்க... 

காட்சி 1 :

அழகிய மரங்கள், அடுக்கடுக்கான மலைக் குன்றுகள், வருடம் முழுவதும் வற்றாமல் பாயும் ஆறு, எங்கும் பசும் புல்வெளிகள் எனப் பச்சை போர்வையைப் போர்த்தியிருந்தது அந்த எழில் மிகு கிராமம். கிராமத்தை ஒட்டியிருந்த சின்ன வனப்பரப்பில் அமைந்திருந்தது அந்த துறவியின் ஆசிரமம். அந்த கிராம மக்கள் அனைவருக்கும் அவர்தான் குரு. சுற்றியிருக்கும் ’18 பட்டி’களிலிருந்தும் கல்வி கற்க தங்களது பிள்ளைகளை அவரிடம்தான் அனுப்பி வைப்பார்கள். அவ்வப்பொழுது குறுநில மன்னர்களின் பிள்ளைகளுக்கும் கூட அதுதான் பாடசாலை. அதிகமாக யாரிடமும் பேச மாட்டார் அந்த துறவி, அப்படி அவர் பேசும் தருணத்தில் அதை கவனிக்காமல் கேள்வி கேட்டு சத்தம் எழுப்ப ஆரம்பித்து விடுவார்கள். துறவி சொல்லும் எந்த விஷயமும் அவர்கள்து காதுகளில் ஏறாது. இந்த மாதிரியான நேரங்களில் சத்தம் போட்டு பேசவிடாமல் செய்பவரை மட்டும் தனியே அழைத்து காதில் கிசுகிசுப்பார் துறவி. அடுத்த நாள் இருவரும் ஆற்றங்கரைக்கு சென்று  வருவார்கள். அதற்கு பிறகு அப்படி சத்தம் போட்ட நபர் எப்போதும் வாயையே திறக்க மாட்டார்.   

காட்சி 2 :

நல்ல உச்சி வெயில் நேரம். ஆதவனின் வெப்பம் கண்களை பறிக்கும் அளவுக்கு தகித்துக் கொண்டிருந்தது. மக்கள் யாரும் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. கோட்டையைச் சுற்றியிருந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி உல்லாச மாளிகை கட்டுவதற்கு ஆணையிட்டு இருந்தான் பட்டத்து இளவரசன். நகரத்தைச் சுற்றியிருந்த வனப்பகுதி முழுவதும் உல்லாச மாளிகைக்காக அழிக்கப்பட்டது. கிணறுகளில் துளி கூட தண்ணீர் இல்லை. தண்ணீர் முழுவதையும் தனது ஓய்வு விடுதியின் குளத்தில் ஊற்றி நிரப்பவும் கட்டளை போட்டிருந்தான். தலை நகரமே பிரமை பிடித்தது போல இருந்தது. இளவரசனின் தொல்லைகளை மன்னரிடம் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. இப்படியே நாட்கள் கடந்து கொண்டிருந்த நிலையில் விஷயம் எப்படியோ மன்னரின் காதுக்கு எட்டிவிட்டது. மன்னருக்கு கோபம் தலைக்கேறியது. வேட்டைக்கு போய் இருந்த இளவரசனைத் திரும்பி வர ஆணையிட்டார் மன்னர். இளவரசனை நாடு கடத்துவதற்கான வேலைகள் துரிதமாகின, மந்திரிகளுக்கோ அச்சம். மன்னருக்கு அடுத்ததாக நாட்டை ஆளப் போகிறவன் இளவரசன்தான். நாடு கடத்தி விட்டால் நாட்டின் நிர்வாகம் சீர்குலையும். மக்கள் இன்னும் பெரும் துனபத்திற்கு ஆளாவார்கள். மூத்த அமைச்சர் மட்டும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மன்னரிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னார். "மன்னா, எனக்கு நன்கு தெரிந்த துறவி ஒருவர். நம் நாட்டின் எல்லையில் தனது ஆசிரமத்தை அமைத்து இருக்கிறார். அவரிடம் நம் இளவரசரை அனுப்பி வைத்தால் தக்க பாடம் கற்பித்து அனுப்புவார்." என தயங்கித் தயங்கிச் சொல்ல கோபம் குறையாத மன்னரோ "அவனை எங்காவது அனுப்பி விடுங்கள்.. என் கண் முன்னே நிற்க கூடாது." எனக் கூறிவிட்டு சென்று விட்டார். 

காட்சி 3 : 

வேட்டையில் தீவிரமாக இருந்த இளவரசனுக்கு தகவல் போய் சேர்ந்தது. நேரடியாக   நாடு கடத்தும் விஷயத்தைச் சொல்ல தைரியம் இல்லாததால் மன்னர் உடனே உங்களை அழைக்கிறார் என்று மட்டும் சொன்னார்கள். குழப்பத்தோடு கிளம்பி அரசவைக்கு வந்தான் இளவரசன். தயங்கி நின்றார்கள் அமைச்சர்கள். ஓர் அமைச்சர் மட்டும் "இளவரசே, இங்கு இப்போது வெயில் கடுமையாக தகித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் கொஞ்ச நாள் ஓய்வெடுக்கும் பொருட்டு நம் எல்லை கிராமத்துக்குப் போய் வாருங்களேன். அங்கே நம் மூத்த மந்திரிக்கு தெரிந்த துறவி ஒருவர் இருக்கிறார். அவருடன் தங்குமாறு மன்னர் சொல்லியிருக்கிறார்." எனக் கூற சிறிது யோசித்த இளவரசன் "சரி, ஏற்பாடுகளை செய்யுங்கள். கிளம்புவோம்" என்று பயணத்துக்கு தயாராகிவிட்டான்.  அவனைப் பொறுத்தவரையில் இது சுற்றுலா திட்டம்.

ஆற்றங்கரை ரகசியம்

காட்சி 4 :

இளவரசன் வந்து கொண்டிருக்கும் செய்தியும், இளவரசன் துறவியுடன்தான் தங்கியிருக்க வேண்டும் என்ற மன்னரின்  உத்தரவும் அந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தது. மூத்த அமைச்சரிடம் இருந்து ஓலை ஒன்றும் தனியாக துறவிக்கு வந்து சேர்ந்தது. அதில் "இளவரசனால் நாட்டு மக்களுக்கு நிறைய இன்னல்கள். அவன் யார் பேசுவதையும் காத்து கொடுத்து கேட்க மாட்டான். அவனுக்கு புரியும்படி சொல்லிவிட்டால் அதைத் தட்ட மாட்டான். அவனை நீங்கள்தான் நல்வழிப்படுத்தி சிறந்த ஆட்சியாளனாக உருவாக்க வேண்டும்." எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. துறவி அதை படித்ததும் எதையோ நினைத்துச் சிரித்த்துக் கொண்டார்.

அன்று மாலையே இளவரசன் வந்து சேர்ந்தான். கிராமமே அல்லோலகல்லோலப்பட்டது. இளவரசனை அழைத்து வந்த வீரர்கள், ஆசிரமத்தில் அவனை விட்டு விட்டு உடனே கிளம்பி விட்டார்கள். இளவரசன் கேட்ட எல்லா கேள்விகளுக்கும், "துறவியிடம் பதில் இருக்கிறது. அவர் அனுமதியுடன்தான் தலைநகர் திரும்ப வேண்டும் என்பது மன்னர் உத்தரவு" எனச் சொல்லி விட்டார்கள். அவனுக்கோ கோபம் தலைக்கேறி துறவியிடம் சென்று கத்தத் துவங்கினான். துறவி எல்லாவற்றையும் அமைதியாக கேட்க மட்டும் செய்தார் பதில் பேசவில்லை. இளவரசனுக்கோ ஆத்திரம் பொங்கியது. "இப்படி கத்துகிறோம் எதற்குமே பதில் இல்லை" எனச் சொல்லி வாளை உருவ.. அசராத துறவியோ "நாளை அதிகாலையில் ஆற்றங்கரையில் சந்திப்போம்" எனச் சிரித்தவாறு சொல்லி நகர்ந்துவிட்டார்.

morning motivation

காட்சி 5 : 

இளவரசனுக்கு யாரிடம் கேட்டும் ஆற்றங்கரை ரகசியம் கிடைக்கவில்லை. "துறவி நம்மிடம் ஏதோ ரகசியமாக சொல்ல நினைக்கிறார் போல.."என மனதை சமாதானப்படுத்திக் கொண்டு அசந்து தூங்கி விட்டான். அடுத்த நாள் அதிகாலை துறவியும், இளவரசனும் மட்டும் தனியே ஆற்றங்கரைக்கு நடந்து கொண்டிருந்தார்கள். வழியில் இளவரசன் கேட்ட எந்த கேள்விக்கும் துறவி பதில் சொல்லவில்லை. இருவரும் ஆற்றை அடைந்தார்கள். இளவரசனை பின்னாலேயே வருமாறு சைகை காட்டிவிட்டு, துறவி பொறுமையாக குளிர்ந்த நீரில் இறங்கி ஆற்றில் நடக்க தொடங்கினார். இடுப்பு வரை தண்ணீரில் மூழ்கியிருக்க.. துறவி இளவரசனை உற்றுப் பார்த்தார். இளவரசனோ எதோ சொல்ல விரும்புகிறார் போல நினைத்துக் கொண்டு அருகில் செல்ல உடனே அவனை ஆற்றில் பிடித்து அழுத்த தொடங்கினார் துறவி. உறுதியான அவருடைய பிடியிலிருந்து அவனால் நழுவ முடியவில்லை. சிறிது நேரம் அப்படியே பிடித்திருந்து விட்டு விட தண்ணீருக்கு மேல் வந்த இளவரசனால் எதுவும் பேச முடியவில்லை. நன்றாக காற்றை சுவாசிக்க தொடங்கினான். இழுத்து இழுத்து மூச்சு விட்டான். கண்கள் சிவந்திருந்தன, துறவி மென்மையான குரலில் அவனிடம் சொன்னார்... 

"தண்ணீருக்குள் இருந்து மேலே வந்ததும் எப்படி நீ காற்றின் அருமையை உணர்ந்தாய் அல்லவா, அதே போல உன் ஆட்சி சிறப்பாக தொடர உன் நாட்டு மக்களின் நிம்மதி முக்கியம், அதற்கு நீ அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களது கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும். நீ இங்கிருந்து போகலாம்!" எனச் சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார்.

கதை சொல்லும் விஷயங்கள் ரொம்பவே சிம்பிள்!

தண்ணீருக்குள் இருக்கும்போதும் கொஞ்சநேரம் தாக்குப் பிடிக்கலாம். அதற்குப் பிறகு காற்றைத் தேடும் உடல். அது கிடைத்ததும், ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். அத்தனை அழுத்தங்களுக்குப் பிறகு கிடைக்கும் சுதந்திரம் மட்டற்றது.

ஆகவே மக்களை ஒரு அழுத்தத்திற்கு நீ ஆட்படுத்தினால், அவர்கள் ‘மூச்சு’ வேண்டி, உன்னை மீறி எதுவும் செய்ய வாய்ப்புண்டு. அவ்வளவு அழுத்தத்திற்கு அவர்களை ஆளாக்காதே. 

அடுத்தது, அவரவர்களுக்கு அவரவர் மொழியில் சொல்ல வேண்டும் என்பதே. இளவரசரை.. உட்கார்ந்து நீதி போதித்திருந்தால்கூட இத்தனை சீக்கிரம் புரிந்து கொண்டிருப்பாரா என்று தெரியவில்லை.

துறவியின் இந்தச் செயலுக்குப் பிறகு படாரென்று நடையைக் கட்டிவிட்டார் இளவரசர்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மெக்ராத், வார்னேவைக் கதற வைத்த லட்சுமண் - டிராவிட் இணை! க்ளாஸிக் மேட்ச் நினைவுகள் #OnThisDay

அந்த கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்தவர்களால், வாழ்நாளில் அவ்வளவு எளிதில் அந்த மேட்ச்சை மறந்துவிட முடியாது.  ஒரே ஒரு டெஸ்ட் போட்டிதான் அது. அந்த ஒரே ஒரு மேட்ச்சை ஜெயித்ததற்குத்தான் இந்தியாவே கோலாகலம் பூண்டது. டீக் கடைகளில், சலூன் கடைகளில், ஆஃபீஸ்களில், மேன்ஷன்களில், ஹால்களில், பெரிய பெரிய ஷோரூம் வாசல்களில், மாணவர்களின் விடுதி அறைகளில் ... என அத்தனை இடங்களிலும் மேட்ச் முடிந்தவுடன் வெறித்தனமாக சந்தோஷக் குரல் எழுப்பினார்கள். சக நண்பர்களை ஆரத் தழுவினார்கள். முதன்முறையாக ஒரு டெஸ்ட் போட்டியை ஜெயித்ததற்கு நாடு முழுவதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். லட்சுமண் ஆட்டத்தால் ரசிகர்களுக்குப் பெருமை தாங்கவில்லை. பாசிட்டிவ் எனர்ஜி பொங்கியது. அப்படி என்ன சிறப்பு, அந்த வெற்றியில்? 

1983-ல் இந்தியா உலககோப்பையை வென்றதற்கும், 2011-ல் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை ஜெயித்ததற்கும் இணையான ஒரு நிகழ்வு அது. ஏன்?  

1999 இறுதியில் இருந்து 2001 பிப்ரவரி  வரை ஆஸ்திரேலியா ஆடிய டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை பதினைந்து. இதில் ஒரு போட்டி கூட தோற்கவில்லை ஆஸி!  மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் ஒரு போட்டிகூட டிரா ஆகவும் இல்லை. பதினைந்து டெஸ்ட் போட்டியையும் ஜெயித்து கெத்து காண்பித்தது ஆஸ்திரேலியா. இந்தப் பதினைந்து வெற்றிகளுக்குள் இந்தியாவை 3-0  என ஒயிட்வாஷ் செய்ததும் அடங்கும். 1999-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 285 ரன்கள் வித்தியாசத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில், இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் என வரிசையாக மிகமோசமான தோல்விகளைச் சந்தித்தது, 

sachin tendulkar

அந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றிகளை வாரிக்குவித்து, கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத டானாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் இந்தியாவோ மேட்ச் பிக்சிங், படுதோல்விகள் எனத் தள்ளாடியது. சச்சின் தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒயிட்வாஷ்  ஆன  கையோடு, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடமும் 0-2 என ஒயிட் வாஷ் ஆகியிருந்தது. இதற்கு விலையாக சச்சினின் கேப்டன் பதவி பிடுங்கப்பட்டு, கங்குலியிடம் கேப்டன்சியை கொடுத்திருந்தார்கள். கங்குலி கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் டெஸ்ட் தொடர் ஜிம்பாப்வேவுக்கு எதிராகத்தான். அதில் சச்சின், டிராவிட் ஆகியோரின் சதங்கள் மற்றும் இரட்டைச் சதங்களால் இந்தியா 1-0 என வென்றது. 

2001 பிப்ரவரி இறுதியில் தொடர்ச்சியாக வெற்றிக் கொடியை நாட்டிய தெம்புடன் இந்தியா வந்து இறங்கியது ஆஸ்திரேலியா. தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த இந்திய அணியோ, மீண்டும் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவுடன் மோத வேண்டுமா என அயர்ச்சியாகி இருந்தது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 0-3 என இந்தியாவை வாஷ் அவுட் செய்யும் என அப்போதைய  கிரிக்கெட் விமர்சகர்கள் கட்டுரைகள் எழுதிக் குவித்தார்கள். "கங்குலியின் கேப்டன்சிக்கும் இது மிகப்பெரிய சவால். அவரால் இந்த பிரஷரை தாங்க முடியாது. அவர் கேப்டனாக பணியாற்றும் கடைசித் தொடராகக் கூட இது இருக்கக்கூடும்" என ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கேலி செய்தன. "1970-க்குப் பின்னர் முப்பது ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை ஜெயிக்கவில்லை. இந்தத் தொடரை ஜெயித்துக் காட்டி சாதனை படைப்போம். எங்களது தொடர் வெற்றியை இந்திய அணியால் தடுக்க முடியாது" என சூளுரைத்தார் ஆஸி கேப்டன் ஸ்டீவ் வாக் 

ஸ்டீவ் வாக்

பிப்ரவரி 27-ம் தேதி மும்பையில் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பித்தது. சொன்னதுபோலவே அந்தப் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது ஆஸ்திரேலியா. 'இவங்க தேற மாட்டாங்க'  என முடிவு கட்டி அடித்தன பத்திரிகைகள். "EDEN எங்களின் DEN. கொல்கத்தா எனது சொந்த மண், இங்கே நிச்சயம் ஜெயிப்போம்" என வங்காள பத்திரிகைகளில் எழுதியிருந்தார் கங்குலி. இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் மார்ச் 11, 2001 அன்று தொடங்கியது. ஸ்டீவ் வாக் டாஸ் ஜெயித்தார். பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்திய மண்ணில் சேஸிங் செய்து ஜெயிப்பது சாதாரண விஷயமில்லை என்பதால் தலையில் கை வைத்தனர் ரசிகர்கள். 

அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இருந்த வீரர்கள் யார் யார் தெரியுமா? 

மைக்கேல் ஸ்லாட்டர், மாத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், மார்க் வாக், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே, காஸ்புரோவிச், கில்லெஸ்பி, மெக்ராத். அப்போதைய இந்திய அணியில்  டிராவிட், சச்சின், கங்குலி தவிர வேறு யாரும் நட்சத்திர வீரர்களே கிடையாது. தாஸ், சடகோபன் ரமேஷ், லட்சுமணன், மோங்கியா, ஹர்பஜன், ஜாகீர்கான், வெங்கடபதி ராஜு, வெங்கடேஷ் பிரசாத் என இளம் வீரர்கள் நிறைந்திருந்தனர். 

டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியா, பந்துகள் நன்றாகத் திரும்புவதை உணர்ந்து பொறுமையாக பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஹைடன் மட்டுமே பவுண்டரிகள் விளாசிக்கொண்டிருந்தார். அவர் 97 ரன்களில் அவுட் ஆனார். மதியம் தேநீர் இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது ஆஸ்திரேலியா. அதன் பின்னர் 66-வது ஓவரில் மார்க் வாக் அவுட் ஆனார். 71-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 251  ரன் எடுத்திருந்தது. அப்போது தான் அந்த மேஜிக் ஓவரை வீசினார் ஹர்பஜன் சிங். பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்னே ஆகிய மூவரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். முதன்முறையாக சர்வதேச போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து மைதானம் முழுவதும் ஓடினார். 

ஹர்பஜன்

"ஆறு மாதத்துக்கு முன்னாடி அப்பா இறந்துட்டாரு. அவர் முன்னாடி என் திறமைய காமிக்கணும்னு ஆசையா இருந்தேன். இதோ இப்போ சாதிச்சிருக்கேன், ஆனா இதை பாக்குறதுக்கு அவர் இல்லையே" என விழியோரத்தில் கண்ணீர் கசிய பேட்டியில் சொன்னார் பாஜ்ஜி. ஹர்பஜன் வீசிய அந்த 72-வது ஓவருக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா கையில் இருந்த மேட்ச், மூன்றே பந்துகளில் இந்தியா பக்கம் சாய்ந்தது. முதல் நாள் முடிவில் ஆஸியின் ஸ்கோர் 291/8. " நாளை  காலை முதல் பத்து ஓவருக்குள் மேட்ச் முடித்து விடுவோம். 300 -310 ரன்களுக்குள் அவர்களை சுருட்டுவோம்" எனச் சொன்னார் வெங்கடேஷ் பிரசாத். அப்போது ஸ்டீவ் வாக் என்ற அபாயகரமான பேட்ஸ்மேன் களத்தில் இருப்பதை அசட்டையாக எடுத்துக்கொண்டது இந்திய அணி. 

மேட்ச் முடிந்த, அன்றைய தினம் இரவு சுமார்  இரண்டரை மணி நேரம் கில்லெஸ்பிக்கும், மெக்ராத்துக்கும் ஹர்பஜன் பந்துகளை சமாளிப்பது எப்படி என வகுப்பெடுத்தார் ஸ்டீவ் வாக். மறுநாள் கில்லெஸ்பியுடன் களமிறங்கினார் ஸ்டீவ் வாக். ஹர்பஜனின் பந்துகளுக்கு மட்டுமல்ல, எளிதில் அணியைச் சுருட்டிவிடலாம் என நினைத்த கங்குலியின் கனவுக்கும் சேர்த்து இரண்டு பேரும் முட்டுக்கட்டை போட ஆரம்பித்தார்கள். "ரன்கள் எடுப்பது முக்கியமல்ல எவ்வளவு நேரம் பேட்டிங் ஆடுகிறோமோ அவ்வளவு நல்லது" என கில்லெஸ்பியிடம் சொல்லியிருந்தார் ஸ்டீவ் வாக். இதனால் ஓரளவு நல்ல பந்துகளைக் கூட அடிக்காமல் டொக் வைத்தனர் இருவரும். விரக்தியின் உச்சத்துக்கே சென்று இந்திய பவுலர்கள் தவறான பந்துகளை வீசினால், அதை மட்டும் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு ரன்களை குவித்தனர். இதனால் ஒவ்வொரு ரன்னாக குவிய ஆரம்பித்தது. 

ஸ்டீவ் வாக் - கில்லெஸ்பி

291-ல் இருந்து 300 ...325 ...350 ...400 என விக்கெட்டே விழாமல் ஸ்கோர் அதிகரிக்க டென்ஷன் ஆனார் கங்குலி. சுமார் 45 ஓவர்களுக்கும் மேல் இணைந்து பேட்டிங் பிடித்த இந்த இணை 133 ரன்களை குவித்தது. அதன் பின்னர் வந்த மெக்ராத்தும் இந்திய பவுலர்களை வெறுப்பேற்றினார். அவர் 28 பந்துகளில் 21 ரன் குவித்தார். மெக்ராத்தின் பொறுப்பான இன்னிங்ஸால் மறுபக்கம் தனது 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் ஸ்டீவ் வாக். கடைசி விக்கெட்டாக ஹர்பஜன் பந்தில்  எல்பிடபுள்யு முறையில் அவுட் ஆனார் ஸ்டீவ் வாக். அப்போது அவர் 203 பந்துகளில் 110 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா 445 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. 

இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி,  மெக்ராத்தின் பந்துவீச்சில் பொலபொலவென சரிந்தது. 97/7 என தத்தளித்த இந்திய அணியில் ஆறுதலாக விளையாடிய ஒரே வீரர் லட்சுமண் மட்டும் தான். 128/8 என்ற ஸ்கோரோடு இந்தியாவின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்தது. நாளை ஃபாலோ ஆன் கொடுத்து மேட்ச்சை ஆஸ்திரேலியா ஜெயித்து விடும். மூன்று நாளிலேயே மேட்ச் முடிந்தது. ஆஸ்திரேலியா வரலாறு படைத்தது என கட்டுரைகள் சுடச்சுட இரண்டாவது நாள் இரவே ரெடியாகிக் கொண்டிருந்தன. "தோல்வி என்பது நிச்சயம். கொஞ்சம் போராடிப் பார்த்து கவுரமான தோல்வியாக இருந்தால் நலம்" என்பதே இந்திய ரசிகர்களின் கருத்தாக ஒலித்தது. மறுநாள் காலையில், எடுத்த எடுப்பிலேயே ஒன்பதாவது விக்கெட் விழுந்தது. 129/9 என்றானது ஸ்கோர். அப்போது தான் வெங்கடேஷ் ப்ரஸாத்துடன் ஜோடி சேர்ந்தார் லட்சுமண். வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகளாக விளாசித் தள்ள ஆரம்பித்தார் வி.வி.எஸ். வெங்கடேஷ் ப்ரஸாத் அவுட்டாகி விடக் கூடாது எனக் கவனமாக விளையாடினார். 83 பந்துகளில் 12 பவுண்டரிகள் விளாசி 59 ரன் எடுத்து வார்னே பந்தில் வீழ்ந்தார் லட்சுமண். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 171.  

274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியாவுக்கு ஃபாலோ ஆன் தந்தது ஆஸ்திரேலியா. தாஸ், ரமேஷ்  இருவரும் முறையே 30,38 ரன்கள் எடுத்தார்கள். சடகோபன் ரமேஷ் அவுட் ஆனவுடன் லட்சுமணை அனுப்பினார் கங்குலி. வழக்கமாக ஆறாவது இடத்தில் களமிறங்கும் லட்சுமண் ஒன் டவுனாக இறங்கியதால், ஆஸ்திரேலிய பவுலர்கள் ஜெர்க் ஆயினர். ஏனெனில் 2000-ம் நடந்த சிட்னி டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கி 167 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய பவுலர்களை அலற விட்டிருந்தார் லட்சுமண். அந்த இன்னிங்ஸ் மீண்டும் கண் முன்பு வந்து போக, உஷாரானது ஆஸ்திரேலியா.  லட்சுமணுக்கு எதிர் முனையில், எந்த பேட்ஸ்மேனையும் நிற்க விடக்கூடாது என முடிவு செய்தனர்.

லட்சுமண் - டிராவிட்

தாஸ் அவுட் ஆனவுடன், சச்சின் உள்ளே வந்தார். கில்லஸ்பியை வைத்து பத்தே ரன்களில் சச்சினை முடித்து அனுப்பினார் ஸ்டீவ் வாக். கங்குலியை 48 ரன்னில் அவுட் ஆக்கினார் மெக்ராத். அப்போது தான் லட்சுமணுடன் ஜோடி சேர்ந்தார் டிராவிட். இனிமேல் அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால்  கவனமுடன் ஆடியது இந்த இணை. இதற்கிடையில் தனது இரண்டாவது சதத்தை 166 பந்துகளில் பூர்த்தி செய்தார் லட்சுமண். மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 254/4. (லட்சுமண் -109, டிராவிட் -7) . அன்று இரவு டின்னரில், வர்ணனையாளர் டோனி கிரேக்,  "நாளை தேநீர் இடைவேளை வரை கூட மேட்ச் செல்லாது, ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றுவிடும். நாம் மாலையே கோல்ப் விளையாடச் செல்லலாம்" என இயான் போத்தமிடம் சொல்லியிருந்தார். கிரேக் மட்டுமல்ல, இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய வீரர்களே கூட மறுநாள் ஒரு மாபெரும் வரலாற்றுச்  சிறப்புமிக்க நாளாக அமையப்போகிறது என எண்ணியிருக்க வாய்ப்பில்லை. 

நான்காவது நாள்  ஆட்டம் தொடர்ந்தது. ஸ்டீவ் தனது கிரிக்கெட் வாழ்கையிலேயே மிக மோசமான தினம் இது தான் என மார்ச் 14ஐத்தான் பின்னாளில் குறிப்பிட்டார். நான்காவது தினத்தன்று ஆஸ்திரேலிய பவுலர்கள் எவ்வளவு முயற்சித்தும் டிராவிட் - லட்சுமண் இணையின் உடும்புப்பிடி ஆட்டத்தை ஒன்றுமே செய்யய முடியவில்லை. மெக்ராத்தும், வார்னேவும் வெறுத்துப் போனார்கள். சுழற்பந்துக்கு சாதகமான பிட்சில், இந்த இருவரையும் எந்த டெக்னிக் பயன்படுத்தியும் வீழ்த்த முடியாததால் கடுப்பானார். இவர்களை வீழ்த்த பாண்டிங் முதல் லாங்கர் வரை அத்தனை பேரையும் பந்துவீச வைத்தார் ஸ்டீவ் வாக்.  மெக்ராத், கில்லெஸ்பி, மார்க் வாக், வார்னே, ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், ஸ்லாட்டர், ஹைடன், லாங்கர், காஸ்பிராவிச்  என விக்கெட் கீப்பர்  கில்கிறிஸ்டைத் தவிர பத்து பேரும் பந்துவீசினார்கள். ரிக்கி பாண்டிங் 12 ஓவர்களை வீசினார். ஆனால் இவர்கள் யாருக்கும் டிராவிட், லட்சுமண் பேட் சரணடைய வில்லை.

 

அந்த ஒரே ஒருநாளில் 255/4 என்றிருந்த ஸ்கோர் 589/4 என்றானது. 334 ரன்களை அன்று மட்டும் குவித்தார்கள் இருவரும். லட்சுமண் இரட்டைச் சதம் கடந்து 275 ரன்களுடன் நாட் அவுட்டாக நின்றார். ஏறக்குறைய இரண்டு நாட்கள்... சுமார் 165 ஓவர்கள் களத்தில் நின்ற கால்களில் அன்று இரவு உறங்கச்செல்லும்போது அவ்வளவு வலி! நான்காவது நாளில் ஆட்டமே வேற லெவலுக்கு சென்றுவிட்டதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் குவிந்தது. விளங்காது என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள், டிராவிட்- லட்சுமண் இணையின்  உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து ஆடிய இன்னிங்ஸை பார்த்த பிறகு, ஐந்தாவது நாள் மைதானத்தில் திரண்டார்கள். 80,000 பேர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு வந்தனர்.

ஒரே நாளில், மேட்ச் தலைகீழாக மாறியதால், எப்படியாவது டிரா செய்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தது ஆஸி. லட்சுமண் முச்சதம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அந்த நிகழ்வை காண பலத்த கரகோஷம் கொடுத்து அவரை வரவேற்றனர் ரசிகர்கள். ஆனால் மேலும் ஆறு ரன்கள் சேர்த்த நிலையில் லட்சுமண் 281 ரன்களுக்கு அவுட் ஆக, அடுத்தடுத்து இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடினார், முடிவாக 178 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 657 ரன் எடுத்து இன்னிங்ஸை முடித்தது இந்தியா. ஃபாலோ ஆன் ஆன பிறகு ஒரு அணி இவ்வளவு ஸ்கோர் குவிப்பது இது இரண்டாவது முறை. 

75 ஓவர்களில் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஹைடன், ஸ்லாட்டர் இருவரும் அமைதியாக ஆடினார்கள். மதியம் தேநீர் இடைவேளைக்கு செல்லும்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 161/3. மேட்ச் டிரா தான் என்ற முடிவுக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது தான் மீண்டும் ஹர்பஜன் இரண்டாவது இன்னிங்ஸிலும் தனது மேஜிக்  ஓவரை வீசினார். ஸ்டீவ் வாகையும், பாண்டிங்கையும் ஒரே ஓவரில் காலி செய்தார். பாண்டிங் டக் அவுட். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பாண்டிங் தன் வாழ்நாளில் மறக்க விரும்பும் ஆட்டம் இதுதான் என பின்னாளில் கூறினார்.

 

ஹர்பஜன் அந்த ஓவரை வீசிய பின்னர்,  தனது ரகசிய ஆயுதமான டெண்டுல்கரை  அழைத்தார் கங்குலி. இந்த தொடரில் கும்ளே ஆபரேஷன் காரணமாக ஆட முடியாமல் ஓய்வில் இருந்ததால், சரியான லெக் ஸ்பின்னர் இல்லாமல் தவித்தது இந்திய அணி. ஆனால் டெண்டுல்கரின் வேகமாக பந்து வீசும் லெக்ஸ்பின் டெக்னிக் குறித்து நல்ல புரிதலோடு இருந்தார் கங்குலி. சச்சினை பந்து வீச அழைத்ததற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கில்கிறிஸ்ட் டக் அவுட் ஆனார். அதன் பின்னர் அடுத்த ஓவரிலேயே வார்னேவை போல்டாக்கி அமர்களப்படுத்தினார் சச்சின். 59.4 ஓவர்களில் 191/9 என இருந்தது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர். அப்போது இந்த மேட்சில் இன்னொரு டிவிஸ்ட்டாக காஸ்பிரோவிச்சும், மெக்ராத்தும் இணைந்து விக்கெட் விழுந்து விடாமல் அபாரமாக ஆடினார்கள். 15 ஓவர் வரை களத்தில் நின்றால் மேட்ச்சை டிரா செய்து விடலாம் என்பதால் நம்பிக்கையுடன் விளையாடினார்கள். 

அடுத்த பத்து ஓவர்களில் இந்த அணி 21 ரன்கள் குவித்தது. விக்கெட் விழாததால் பதட்டமானார் கங்குலி. சூழல் வலை அமைத்து ஹர்பஜனை பந்து வீசச்சொன்னார். ஹர்பஜன் பந்தில் 69-வது ஓவரில் மெக்ராத் அவுட் ஆக, 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது இந்திய அணி.  ஃபாலோ ஆன் பெற்ற பின்னர் ஒரு அணி மீண்டு வந்து இப்படியொரு மாபெரும் வெற்றியை பெற்றது அசாத்திய நிகழ்வு. உலகின் தலை சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இன்னமும் இந்த  டெஸ்ட் கருதப்படுகிறது. கடைசி நாளில் ஹர்பஜன் எடுத்த ஆறு விக்கெட்டுகளும், டெண்டுல்கரின் மூன்று விக்கெட்டுகளை வெற்றியை எளிதாக்கின. 

ஹர்பஜன் ஹாட்ரிக்; ஸ்டீவ் வாக் சதம், கில்லெஸ்பி - வாக் இணையின் 133 ரன்கள்; இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் சொதப்பல்; லட்சுமணின் விஸ்வரூபம்; டிராவிட் - லட்சுமண் இணையின் மாரத்தான் இன்னிங்ஸ்; டெண்டுல்கரின் மேஜிக் ; ஹர்பஜனின் 13 விக்கெட்டுகள் என பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத இந்த டெஸ்ட் போட்டி என்றும் நம் நினைவில் இருக்கும். 

இந்த டெஸ்ட் போட்டியில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு மகத்தான வீரர் டிராவிட். லட்சுமணுடன் அவர் ஆடிய ஆட்டம் கிளாஸிக். அந்த 180 ரன்களை நாம் கொண்டாடியே ஆக வேண்டும். நினைவு கூர்வோம்; கொண்டாடுவோம். 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டது எப்படி?

ஜூலியஸ் சீசர்“சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாகச் சாவதேமேல்'' என இந்தச் சாட்டையடி வார்த்தைக்குச் சத்ய பிரமாணம் எடுத்தவர் ஜூலியஸ் சீசர்.  இந்தப் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகள் அரசு அதிகாரத்துக்கு அடையாளமாக நீடித்த ஒன்று. இவர் பெயரும், இவரது தந்தையின் பெயரும் ஒன்றே.  கேயஸ் ஜூலியஸ் சீசர் என்பதே அது. அவர் கொல்லப்பட்ட தினம் இன்று.

தலைமைப் பதவிக்குத் தேர்வு!

தன்னுடைய 18-வது வயதில், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார், சீசர். அவர், சிறந்த சொற்பொழிவாளராகவும், வழக்கறிஞராகவும் வளர்ந்தார். கிரீஸ் நாட்டுக்குக் கிழக்கே உள்ள ரோட்ஸ் தீவுக்குச் சென்றபோது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டார். பின்னர், அவர்களிடமிருந்து விடுதலையான அவர், தன்னுடைய கப்பற்படை மூலம் அந்தக் கொள்ளையர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றார். பின்னர் ரோம் திரும்பிய ஜூலியஸ், கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நில விநியோகம் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினார். செனட் சபையில் நடந்தவற்றைப் பதிவு செய்து, பொது இடத்தில் வைத்தார். 

ரோமின் முதல் மூவராட்சி!

இந்தக் காலகட்டத்தில் பாம்பே (ராணுவத் தளபதி),  சிராசஸ் (செல்வந்தர்), ஜூலியஸ் சீசர் ஆகிய மூவரும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு ரோமை ஆட்சிபுரிந்தனர். ரோம் வரலாற்றில் இது முதல் மூவராட்சி எனப்படுகிறது. பின்னர் நடந்த போர் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட்டார். அதனால், அந்த மூவர் ஆட்சி அத்துடன் முடிவு பெற பாம்பேவுக்கும் சீசருக்கும் இடையில் அதிகாரப் போட்டி வலுத்தது. வலிமையும் புகழுமிக்கவராக இருந்த சீசரிடம், ''தங்களுடைய படைகள் கலைக்கப்பட வேண்டும்''  என பாம்பே வேண்டுகோள் வைத்தார். அதற்கு, சீசர் மறுத்தார். இதன் காரணமாக உள்நாட்டுப்போர் மூண்டது. பாம்பே, கிரீஸ் நாட்டுக்குத் தப்பிச் சென்றார்.  பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். பின், அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே  சென்றபோது... சீசருக்கு பாம்பேயின்  வெட்டப்பட்ட தலை நட்பின் பரிசாக அளிக்கப்பட்டது. அதன் பிறகு, எகிப்திய மன்னன் டாலமியைப் போரில் வென்று, அவரது மனைவியான பேரழகி கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி, தன் காதலியாக்கினார்.

''ஜூலியஸ் சர்வாதிகாரி!''

சென்ற இடமெல்லாம் வெற்றி வீரனாக வலம் வந்தார். இதனால் ''ஜூலியஸ் சர்வாதிகாரிபோல மாறிவிடுவார்'' என்று நினைத்த செனட், ''தன்னுடைய படைகளை விட்டுவிட்டு மிகச் சாதாரண ஒரு குடிமகனாக வரவேண்டும்'' எனக் கூறியது. செனட்டின் பதிலை ஏற்காத ஜூலியஸ், அவருடைய படைகளுடனேயே நாட்டுக்குள் நுழைந்தார். இதனால், அவருக்கும் செனட்டுக்கும் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போரில், ஜூலியஸே வென்று ரோமின் சர்வாதிகாரியாக இடம்பிடித்தார். ''நாட்டில் குடியாட்சி மலராமல் போனதே'' என்று அவர்மீது வருத்தப்பட்ட சிலர், அவரைக் கொல்லத் திட்டமிட்டார்கள். 

சீசரின் மரணம்!

சீசரின் மரணத்தைப் பற்றி ஓர் வரலாற்று ஆசிரியர், ''சீசரைக் கொல்ல நினைத்தவர்கள் எப்படி, எங்கே அவரைத் தீர்த்துக்கட்டலாம் என நிறையத் தீட்டங்கள் பற்றிப் பேசினர். அதில் சிலர், 'சீசர் எப்போதும் நடந்துசெல்லும் புனித பாதையில் மடக்கிக் கொன்றுவிடலாம் என்றும், தேர்தலின்போது கொன்றுவிடலாம் என்றும், கத்திச்சண்டை போட்டி நடக்கும்போது அவரைத் தீர்த்துக்கட்டிவிடலாம் என்றும், அரசவையிலேயே வைத்துக் கொன்றுவிடலாம்' என்றும்... அவர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த ஐடியாக்களைக் கொடுத்தனர். 

ஜூலியஸ் சீசர்

சதித் திட்டம் அறிந்தவர்கள்!

இதில், பெரும்பாலானவர்கள், சீசரை அரசவையில் வைத்துக் கொன்றுவிட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். காரணம், அங்கு உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அத்துடன், கத்திகளை மறைத்துவைப்பதும் சுலபமாகிவிடும். இந்தக் கொலை குறித்துச் சதித் திட்டம் நடக்கும் செய்தியறிந்த சீசரின் நெருங்கிய நண்பர்கள், 'தாங்கள் அரசவைக்கு வரவேண்டாம்' என்று சீசரிடம் வேண்டுகோள் வைத்தனர். அந்தச் சமயத்தில் உடல்நிலையைக் கவனிக்குமாறு வற்புறுத்திய மருத்துவர்களும், அவரை 'அரசவைக்குப் போக வேண்டாம்' என்று வற்புறுத்தினர். இதுதவிர, தாம் கண்ட கெட்ட கனவுகளால்... எங்கே, தம் கணவருக்கு ஆபத்து வந்திடுமோ என்று அஞ்சிய சீசரின் மனைவியும், அவர் அரசவைக்குச் செல்வதை விரும்பவில்லை. 

மனதை மாற்றிய ப்ருட்டஸ்!

இதனால் மனமுடைந்திருந்த சீசரிடம்... ப்ருட்டஸ் (அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்களில் முதலாமவன்), 'இது என்ன பைத்தியக்காரத்தனம்... ஒரு பெண் கண்ட அர்த்தமில்லாத கனவுகளையும் சில அறிவில்லாதவர்களின் வார்த்தைகளையும் கேட்டு அவைக்குச்  செல்லாமல் இருக்கலாமா... இது அவைக்கு நீங்கள் செய்யும் அவமானமில்லையா? நான் சொல்வதைக் கேளுங்கள். யார் யாரோ சொல்வதைக் கேட்டு அவைக்கு வராமல் இருக்க வேண்டாம்' என்று மாம்பழத்துக்குள் இருக்கும் வண்டுவாய் சீசரின் நெருங்கிய நண்பனாய் இருந்து அவரது மனதை மாற்றினான்.

ப்ருட்டஸின் வார்த்தையில் மனம் மாறிய சீசர் அவைக்குச் செல்ல நினைத்தார். அவர், அரசவை செல்லும் முன் அவரது குருமார்கள் அவருக்காக பலி ஏற்பாடு செய்யப்பட்டபோது கண்ட சகுனங்கள் பற்றி எடுத்துச் சொல்லி, 'மாலை வரை அரசவைக்குச் செல்ல வேண்டாம்' என்று எச்சரித்தனர். சீசரும் இதற்கு ஒப்புக்கொண்டார். இதனால் தங்கள் திட்டம் வீணாகிவிடுமோ என்று எண்ணிய ப்ருட்டஸ், மீண்டும் சீசரிடம் சென்று... 'யாரோ, சிலர் வேலையில்லாதவர் உளறுவதைக் கேட்டு அரசவைக்கு வராமல் இருக்காதீர்கள். தாங்கள் கூட்டிய அரசவை, தங்களுக்காகக் காத்திருக்கிறது. கெட்ட சகுனங்களையே மாற்றி நல்லவைகளாக்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது. வாருங்கள்' என்று கூறி அவரது வலதுகையைப் பிடித்தப்படியே அவரை அரசவைக்கு அழைத்துச் சென்றான். 

''தாம் எதையும் கேட்கவில்லை''!

கொலுமண்டபத்துக்குச் சென்ற சீசரை அங்கிருந்த உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் அவர் அருகில் நின்றனர். அதில் ஓர் உறுப்பினர், நாடு கடத்தப்பட்ட தன் சகோதரனைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்த அந்த வேளையில், சீசரின் கரங்களை மேலங்கியுடன் சேர்த்துத் இறுகப் பிடித்துக்கொண்டார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்றுணர்ந்த அவருடைய எதிரிகள், அவரைப் பதம்பார்த்தனர். ஒவ்வொருவரும் சீசரது கொலையில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதுபோல் தொடர்ந்து குத்தியுள்ளனர்'' என்கிறார், அந்த வரலாற்றாசிரியர்.

அந்தச் சமயத்தில், ப்ருட்டஸும் கத்தியை உயர்த்துவதைப் பார்த்ததும், ''நீயுமா குழந்தையே'' எனச்  சிலர் சொன்னதாக அந்த வரலாற்றாசிரியர் குறிக்கிறார். ஆனால், ''தாம் எதையும் கேட்கவில்லை'' என்றே அங்கே இருந்த பிளினி முதலிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பானுமதி முதல் ஸ்ருதி ஹாசன் வரை.. பெண் இசையமைப்பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்!

ஸ்ருதி ஹாசன்

மொழிகள் கடந்து எல்லோரையும் ரசிக்க வைப்பது இசை. ஒருவர் இசை உலகில் சாதிப்பதற்கு, தன் வாழ்வின் பெரும் பகுதியாக இசையை உணரவேண்டும். அப்படி இசைத்துறையில் சாதித்த பெண்கள் ஏராளம். ஆனால் தமிழ் சினிமாவில் தடம் பதித்த பெண் இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை சொற்பமே. ஆனாலும் தங்கள் திறமையால் அற்புதமான மெட்டுகளை உருவாக்கி, பலராலும் விரும்பி, ரசிக்கப்படும் பாடல்களைத் தருவதில் வியக்க வைக்கிறார்கள். பெண் இசையமைப்பாளர்களின் வருகை முக்கியம். ஏனெனில், திரைப்படத்தில், ஒரு பெண் காதல் வயப்பட்ட காட்சிக்கு பாடல் தேவைப்படுகிறது என்றுகொள்வோமானால், அந்தப் பாடல் உருவாக்கத்தில் இசையமைப்பாளர், பாடல் எழுதுபவர் என இரண்டு முக்கியமானவர்கள் ஆண்களாவே இருப்பர். அப்போது ஒரு பெண் மனநிலை நூறு சதவிகிதம் வரும் என சொல்லிவிட முடியாது. ஆனால், அதே இடத்தில் அந்த இருவரும் பெண்களாக இருக்கும்பட்சத்தில் கதையில் வரும் பெண் பாத்திரத்தின் முழு உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக பாடல் உருவாகும் என நம்பலாம். அல்லவா..

தமிழ் சினிமாவில் தன் இசைத் திறமையால் அசத்திய சிலரின் பாடல்களைக் காணவும் கேட்கவும் தயாரா?

பானுமதி:

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமானவராக கொண்டாடப்படுபவர். நடிப்பதோடு, திரைப்படம் இயக்குவது, தயாரிப்பது, இசையமைப்பது என பன்முக ஆளுமை நிறைந்தவர் பானுமதி. 1975-ம் ஆண்டு பானுமதி நடித்து, இசையமைத்து இயக்கியப் படம் இப்படியும் ஒரு பெண். அதில் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களுக்கு அறிவுரைகளைத் தரும் இனிமையான பாடல்.

 

 

பவதாரிணி:

இசைஞானி இளையராவின் இசை வாரிசு பவதாரிணி. மிக இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். 'பாரதி' படத்தில் இவர் பாடிய 'மயில்போல..' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர மை ஃப்ரெண்ட்' படம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'வெள்ளச்சி' எனும் படத்தில் 'பொய்யா போச்சே என் காதல்' எனும் பாடல் பவதாரிணி இசையில் அவரின் சகோதரர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருப்பார்.

 

 

ஏ.ஆர்.ரெஹானா:

ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி இவர். சிவாஜி, கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். பாடகர் க்ருஷ் நாயகனாக நடித்த 'புரியாத ஆனந்தம் புதிதான ஆரம்பம்' படத்துக்கு ரெஹனாதான் இசை. ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மற்றும் அமீனா இணைந்து பாடிய பாடல் இது.

 

 

எஸ்.ஜெ.ஜனனி:

இன்னும் திரைக்கும் வராத, 'பிரபா' எனும் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஜெ.ஜனனி. பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா திரைப்படத்தில் கடைசியாக பாடிய 'பூவே பேசும் பூவே' பாடலுக்கு இசையமைத்தவர். பாடல் வரிகள் ஶ்ரீதேவி, இயக்கம் நந்தன்.

 

 

ஶ்ரீவித்யா கலை:

புதுமுகங்கள் நடிக்கும் 'என்னை பிடிச்சிருக்கா' படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீவித்யா கலை. இசையோடு பாடல்களை எழுதவும் செய்கிறார். அவரின் இசையில் உருவான அழகான பாடல்..

 

 

ஸ்ருதி ஹாசன்:

நடிகர் கமல்ஹாசனின் மகள். அவரைப் போலவே நடிப்பு, பாடல் ஆகியவற்றிலும் ஆர்வத்துடன் இயங்கி வருபவர். கூடுதலாக, 'உன்னைப் போல ஒருவன்' படத்தின் இசையமைப்பாளரும்கூட. அந்தப் படத்தினைப் பிரபலப்படுத்தும் விதத்தில் வெளியிட்ட 'வானம் இல்லை' என்ற இந்தப் பாடல் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஸ்ருதிக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவித்தன.

தமிழ் சினிமாவில் சொந்தக் குரலில் பாடும் நடிகைகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதைப் போல, பெண் இசையமைப்பாளார்களின் வருகையும் அதிகரிக்கட்டும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவு
 
அங்கீகரிக்கப்பட்ட முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1877-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. மார்ச் 19 வரை நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்களில் வெற்றி பெற்றது.

DF306806-9CF4-4F56-963E-46F722E5837F_L_s

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இதனை சிறப்பிக்கும் விதமாக பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு கவுரவித்துள்ளது.

பந்து வீச்சாளர் பந்து வீசுவது போலவும், பேட்ஸ்மேன் அதனை அடிப்பது போலவும், பீல்டர்கள் அதனை தடுக்க முயல்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டூடுல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மொபைல் இல்லை... லேப்டாப் இல்லை... உலகின் மிகச் சிறந்த "ஊர்சுற்றி”!

"பயணம் வலிக்கும். கொஞ்சம் சிரிக்க வைக்கும், நிறைய அழ வைக்கும். நீங்கள் அறிந்திராத உங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தும். அந்த முகம் அசிங்கமானதாகவும் இருக்கலாம். இதுவரை நீங்கள் நம்பிய அத்தனை உண்மைகளையும் பொய்யாக்கும். பொய்களை உண்மையாக்கும். நடுங்கச் செய்யும், நெகிழச் செய்யும். இதையெல்லாம் கடந்த பிறகு தான், பயணம் உங்களைப் பக்குவப்படுத்தும். பயணிக்கத் தொடங்குபவர்களுக்கு, தங்களது பயணத்தை எப்பொழுது முடிக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்..." பயணங்களைப் பூக்களின் பாதையாகவே அறியும் நமக்கு, அவர் சொல்லும் யதார்த்தம் புரிய சில நிமிட யோசனை தேவைப்படுகிறது.

பயணம் ஊர்சுற்றி உலகம்

13 வயது சிறுவன் அவன். 1967 ஆம் ஆண்டு... ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் வாழும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் கால்கள் ஒருபொழுதும், ஒரு இடத்தில் நிலை கொண்டதில்லை. ஒரு மழைக் கால இரவு. வீட்டில் தன் அப்பாவின் மேஜையில் இருக்கும் அட்லஸைப் பார்க்கிறான். உலகம் இவ்வளவு சின்னது தானா?. சரி கிளம்பலாம் என முடிவு செய்கிறான்.  அன்று தொடங்கிய பயணம்... பனி சூழ்ந்த துருவங்கள், அனல் கக்கும் பாலைவனங்கள், மழைப் பொழியும் மலைக் காடுகள், மக்கள் நிறைந்த நகரங்கள் என உலகின் அத்தனை நாடுகளையும் சுற்றி முடித்திருக்கிறார்... தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார், 62 வயதான ஜார்ஜ் சன்ஷேஸ் (Jorge Sanchez). ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவைச் சேர்ந்த சான்ஷேஸ், உலகின் மிக சிறந்த "ஊர்சுற்றியாக" கருதப்படுபவர். இணைய வழியில் அவரை தொடர்பு கொண்டோம்...

பயணம் ஊர்சுற்றி உலகம்கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் பயணத்தில் கழித்திருக்கிறீர்கள் ? ஏன் பயணம்?

"பயணம் மீதான ஆர்வம் எனக்கு இயற்கையாகவே இருந்தது. பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னரே பயணங்களைத் தொடங்கிவிட்டேன். இந்த உலகை என் யூனிவர்சிட்டியாக மாற்றிக் கொண்டேன். ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு பாடமாக எடுத்துக் கொண்டேன். பயணங்களின் வழிப் படித்தேன். இந்துக் கோயில்களில், சர்ச்களில், மசூதிகளில், புத்த கோயில்களில், சாதுக்களின் குகைகளில் என பல்வேறு இடங்களில் தங்கியுள்ளேன். எதையும் தெரிந்தவனாக நான் எங்கும் செல்லவில்லை. எதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பயணித்தேன். சிறகற்ற பறவையாய் திரிந்து, மனிதனாய் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளேன்..."

பயணிக்க பணம்?

"நான் ரொம்பவே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். பயணிக்க வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மட்டுமே என்னிடம் இருந்தது. கிடைத்த வேலைகளைச் செய்தேன். கார்பெண்டராக, ஹோட்டலில் பாத்திரம் தேய்ப்பவனாக, பேருந்து கிளீனராக, சுரங்கத் தொழிலாளியாக... என கிடைத்த வேலைகளையெல்லாம் செய்தேன். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பயணித்தேன். என் பயணத்திற்கும் பெரிய செலவுகள் இருக்காது. தங்குவதற்கு பெரும்பாலும் ரூம் எடுக்க மாட்டேன். இந்தியாவில் பாலங்களின் அடியில் தூங்குவேன், சீனாவில் டெலிபோன் பூத், பிரேசிலில் மரங்களின் மேல்...  சில மணி நேரம் தூங்க ஒரு இடம் தேவை அவ்வளவு தான். ஐரோப்பிய நாடுகள் முழுக்க வண்டிகளில் லிப்ட் கேட்டுத்தான் பயணித்தேன்...எனக்குப் புகை, மது என எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. ஒரு மாதம் வீட்டிலிருந்தால் செய்யும் தொகையைவிட, பயணத்தில் குறைந்த அளவே செலவாகும்." 

இந்தியப் பயணம்?

"இதுவரை 7 முறை இந்தியா வந்துள்ளேன். இந்தியாவில் எனக்கு மிகப் பிடித்த இடம் மகாபலிபுரம். சென்னையில் இருந்து மகாபலிபுரத்திற்கு பஸ்சில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது என் பக்கத்தில் இருவர் காஞ்சிபுரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே இறங்கி காஞ்சிபுரம் போனேன். அங்கிருந்து திரும்பும் போது, திருப்பதி பற்றி கேள்விப்பட்டு அங்குப் பேனேன். ஒரு வழியாக மகாபலிபுரமும் பார்த்தேன். அவ்வளவு அழகாக இருந்தது. என் பயணம் மக்களை விட்டு விலகியதில்லை. மக்களோடு மக்களாகவே பயணிக்கிறேன்..."

இந்தியப் பயணங்களில் மறக்க முடியாதது?

"ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு சாதுக்களோடு, ரயிலின் கூரையில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது என்னால் மறக்க முடியாதது. அதே போன்று கன்னியாகுமரியின் சூரியோதய காட்சியும், விவேகானந்தர் பாறையும் எனக்குள் ஒரு பெரிய அமைதியை ஏற்படுத்தித் தந்தன..."

       பயணம் ஊர்சுற்றி உலகம்                                 பயணம் ஊர்சுற்றி உலகம்

பயணங்களில் பிரச்சினைகள்?

"தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்க்கில் ஒருமுறை என்னைத் தாக்கி கொள்ளையடித்தார்கள். ஆனாலும் அந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிக்கும். 1989யில் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விசா இல்லாமல் பயணித்தேன். என்னை உளவாளி என்று சந்தேகித்து, 4 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள். பரவாயில்லை இலவசமாக தங்க இடம் கிடைத்தது என்று இருந்துவிட்டேன்... (சிரிக்கிறார்). அதே போன்று ஜியார்ஜியா, கொலம்பியா, பராகுவே போன்ற இடங்களிலும் சில மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன். மற்றபடி எந்தப் பிரச்சினைகளும் வந்ததில்லை. சாதாரண மக்களிடம் மனிதம் ஓங்கியிருக்கிறது... " 

பயணம் ஊர்சுற்றி உலகம்இன்று பயணம் என்பது ஒரு ஃபேஷன் ட்ரெண்டாக உருமாறியிருக்கிறதே?

"பயணம் ரொம்ப பெர்சனலான விஷயம். அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணர்வை, பார்வையைக் கொடுக்கும். விடுமுறை நாட்களில் போகும் வெக்கேஷன்களைப் பற்றி நான் சொல்லவில்லை. பயண வாழ்க்கைக்குள் வர விரும்புவோர்... வெறும் அதன் மீதான் ஈர்ப்பில் வரக் கூடாது. ஒரு ஊர்சுற்றியாக உருமாற உடல் பலமும், மன வலிமையும் அதிகம் தேவைப்படும். பயணங்கள் ரொம்ப உணர்ச்சிகரமானவை. அதை சமாளிக்க வேண்டும். பயணத்தில் என்ன பெறுகிறோம், என்ன கொடுக்கிறோம் என்ற தெளிவிருந்தால் பயணம் சிறக்கும்..." என்று சொன்னவர் சில நிமிடங்களில் வருகிறேன் என்று சொல்லி சென்றார். 

வெகுஜன மக்களின் தொடர்பை முற்றிலும் துண்டித்துவிட்டு, தனியாக ஒரு கூட்டத்தில் வாழ்வதல்ல பயணம் என்பது ஜார்ஜின் வாதம். பயணம் மக்களிடம் அதிகம் நெருங்க, இந்த சமூகத்தின் கவனிக்கப்படாத பக்கங்களை புரிந்து கொள்ள அவசியம் என்கிறார். ஜார்ஜிடம் செல்ஃபோன், லேப்டாப் போன்ற கருவிகள் கிடையாது. முதுகில் மூன்று கிலோ அளவிற்கான பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டு பயணிக்கிறார். தற்போது துபாயில் நடக்கும் ஒரு "ஊர்சுற்றிகளின் திருவிழா"வில் கலந்து கொண்டிருக்கிறார் ஜார்ஜ். அங்கு ஒரு ப்ரெளசிங் சென்டரில் யதேச்சையாக அவர் தன் மெயில்களைப் பார்க்க, சரியாக நாமும் அதே நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்ள, இந்த இணைய சந்திப்பு சாத்தியமானது. ஜார்ஜ் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. தன்னுடைய பயணங்களில், தன் குடும்பத்தையும் இயன்றவரை கூட்டி செல்கிறார். 

தன் குழந்தையுடம் ஸ்கைப் கால் முடித்துவிட்டு மீண்டும் நம்முடன் பேசத் தொடங்குகிறார்...

பயணம் ஊர்சுற்றி உலகம்

தன் குழந்தையுடன் ஜார்ஜ்...

உங்களைப் பார்த்து நிறைய இளைஞர்கள் பயணிக்கத் தொடங்குகிறார்களாமே?

"ஆமாம்... ஆனால், அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் பயணம் திட்டமிடாமல், தெளிவில்லாமல் இருக்கலாம். அது அப்படித்தான் இருக்கும். ஆனால், ஒரு பயணி அடிப்படைத் தெளிவில்லாமல் வெறும் ஈர்ப்பின் காரணமாக மட்டுமே பயணிக்கத் தொடங்கினால், அது அவரின் வாழ்வையே பாதிக்கலாம். பயணத்தைவிடவும் முக்கியமான விஷயங்கள் இங்கு நிறைய இருக்கின்றன. முக்கியமாக உங்களை நம்பியிருக்கும் குடும்பம்..."

பயணம் ஊர்சுற்றி உலகம்

பயண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தற்கு என்றாவது வருத்தப்பட்டது உண்டா?

"நிச்சயம் இல்லை. நான் மழைக் காலத்திற்கு சேமித்து வைக்கும் எறும்பாக வாழவில்லை. மழையை ரசித்து ஆடும் ஒரு வெட்டுக் கிளியாகவே இருந்துள்ளேன். அதன் பாதிப்புகளையும் நான் எதிர்கொள்கிறேன். இது என் வாழ்க்கை. ( யோசிக்கிறார்...) என் அப்பா, அம்மாவுடன்... குறிப்பாக என் அம்மாவுடன் இன்னும் கொஞ்ச காலத்தைக் கழித்திருக்கலாம் என்ற ஏக்கம் மட்டும் இன்னும் மனதில் இருக்கிறது...” என்று சொல்லி மெளனமாகிறார். பின்னர், ஒரு சிறிய புன்சிரிப்போடு நமக்கு விடை கொடுக்கிறார். 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

”வைல்ட் ஃபோட்டோகிராஃபி-யின் ப்ளஸ் மைனஸ்கள் இவைதான்!" - போட்டோகிராபர் வருண் ஆதித்யா #VikatanExclusive

வைல்டு லைஃப் போட்டோகிராபி உயிரைப் பணயம் வைக்கும் விஷயம். கரணம் தப்பினால் மரணம் என்கிற இந்தத்துறையிலும் இளைஞர்கள் சாதிக்கின்றனர்.  அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் வருண் ஆதித்யா... தற்போது 25 வயதுதான் ஆகிறது. விலங்குகள் நிறைந்த ஆப்ரிக்க காடுகளிலேயே கிடந்தவர். பெரும்பாலான விலங்குகளை இவரது கேமரா புகைப்படமாக்கியுள்ளது. வெளிநாட்டு பயணங்களின் போது, அவர் சந்தித்த சவால்கள், ஆபத்துகள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

வன விலங்கு புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யா

ஆபத்து மிகுந்த இந்த துறையை தேர்வு செய்தது எப்படி? பாதுகாப்பான விஷயங்கள் என்ன?

ஒவ்வொருவரும் இதே போன்ற கேள்வியைத்தான் முன் வைக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காட்டுக்குள் செல்வது தடை செய்யப்பட்ட விஷயம். அரசாங்கம் இது போன்ற விஷயங்களில் பாதுகாப்புடன் ஈடுபட அனுமதித்தால் இந்த கேள்வி எழாது. திறந்த வெளி ஜீப்புகளில் மக்களை வனத்திற்கு அழைத்து செல்லலாம். ஆப்ரிக்காவில் இதனை 'கேம் டிரைவ்' என்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் எல்லா நாடுகளிலும் சட்டத்திட்டம் ஒன்றுதான். வனவிலங்குகளை அதன் வாழ்விடங்களுக்குள் சென்று ரசிப்பது த்ரில் நிறைந்தது. வனவிலங்குகளை பொறுத்த வரை இரண்டு விஷயங்கள் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனை நோக்கி நீங்கள் முன்னேறினால் அவை பின் வாங்கும். நீங்கள் ஓடத் தொடங்கினால் உங்களை நோக்கி வரத் தொடங்கும். பொதுவாக விலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது. இது மிக முக்கியம்.

வன விலங்கு புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யா

இந்திய காடுகளுக்கும் ஆப்ரிக்க காடுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்திய காடுகள் அடர்ந்தது, உள்ளே சென்றாலே இருட்டாக காணப்படும்.  காலை 6 முதல் 8 மணி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஜங்கிள் சஃபாரிக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனால், ஆப்ரிக்க காடுகள் பரந்தவை. ஆங்காங்கே மரங்கள் இடம் விட்டு இடம் விட்டு வளர்ந்திருக்கும். அதிக வெட்டவெளிகள் காணப்படும். ஜீப் டிரைவர்களே... விலங்குகளின் காலடித் தடங்களை வைத்தே  பின் தொடருகின்றனர். குரங்குகள், மான்களின் சங்கேத ஒலிகள் புலி, சிங்கம், சிறுத்தைகளை நமக்கு காட்டிக் கொடுக்கும்.  விலங்குகள்  நமது உருவத்தைக் கண்டு பயப்படுபவை. நம்மைக் கண்டால் பெரும்பாலான சமயங்களில் அவை ஓடவே முயற்சிக்கும். அதற்குத் தொல்லை கொடுத்தால் மட்டுமே நாம் தாக்கப்படுவோம். விலங்குகள், தற்காத்துக் கொள்ளவே மனிதர்களைத் தாக்குகின்றன.

வன விலங்கு புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யா

வேட்டையாடும் நிகழ்வுகளை படம் பிடிக்கும் போது மனம் பாதிப்புக்குள்ளாகாதா?

ஒரு விஷயம்... இது ஒரு உணவுச் சங்கிலி.  மான்கள் படைக்கப்படுவதும் அசைவ விலங்கினங்களின் உணவுக்காகத்தான். நமக்கும் எப்படி சாப்பாடு கிடைத்தால் சந்தோஷமாக இருப்போமோ... அதே போல்தான் விலங்கினங்களும். இரை கிடைத்தால் சந்தோஷமாக வாழும். ஆப்ரிக்கக் காட்டில் 'மலைக்கா ' என்ற சிறுத்தைப் புலி இருந்தது. அங்குள்ள மக்கள் அந்த சிறுத்தை புலிக்கு இந்த பெயர் சூட்டியிருக்கிறார்கள். அதற்கு இரண்டு குட்டிகள்.  இரண்டு நாட்களாக அதற்கு உணவு கிடைக்கவில்லை போலும். குட்டிகளுடன் மலைக்கா ஒரு முறை சோர்வுடன் ஒட்டிய வயிறுடன் சுற்றித் திரிந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அசைவ விலங்குகளின் வாழ்க்கை சவால் நிறைந்தது என்பதை உணர்ந்தேன். ஒரு வேட்டைக்காக பல மைல்கள் அவை நடக்க வேண்டியது இருக்கும். காட்டெருமைகள் போன்றவற்றை வேட்டையாடும் போது உயிரே  கூட போய் விடும்.ஒரே மிதியில் கால்கள், இடுப்பு போன்றவை முறிந்து போன சிங்கம், புலிகள் கூட உண்டு. அதற்கான வாழ்க்கை அது என்பதாகத்தான் அதைப் பார்க்கவேண்டியுள்ளது. 

வன விலங்கு புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யா

ஆப்ரிக்க காடுகளுக்கு சுற்றுலா செல்லும் வழிமுறைகள் என்ன? 

இணையதளத்தில் நிறைய ஏஜண்டுகள் இருக்கிறார்கள். கென்யாவில் ‘மாசாய் மாரா’னு ஒரு காடு. தான்சேனியாவுல செரங்காட்டி வனம்... இந்த மாதிரியான சுற்றுலாவுக்கு ரொம்ப பெயர் போனவை. காடுகளுக்குள்ளே மூன்று நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகளுடன் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து உள்பட ஒன்றரை லட்ச ரூபாய் செலவு ஆகும். கிட்டத்தட்ட 6 நாட்கள் அங்கே தங்கிக் கொள்ள முடியும். பாதுகாப்பு நிறைந்தவை. வன விலங்குகள் நாம் இருக்கும் இடத்துக்கே வரும். இந்திய உணவு வகைகளும் கிடைக்கும். கென்யா, தான்சேனியா போன்ற நாடுகள் இது போன்ற சுற்றுலாவை நம்பித்தான் இருக்கின்றன. மசாய் மாராவும் செராங்கெட்டி காடுகளும் வனவிலங்குகளின் சொர்க்கபுரி. காலை உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு, மத்தியானத்துக்கு தேவையான உணவினை கட்டி எடுத்துக் கொண்டு காட்டுக்குள் கிளம்பி விட வேண்டியதுதான். காட்டுக்குள் ஒருநாள் வாகனத்தில் சுற்ற 200 டாலர் ஆகிறது. 

வன விலங்கு புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யா

ஆப்ரிக்க மக்கள் ரொம்ப துணிச்சலாக வனவிலங்குகளை எதிர்கொள்கிறார்களே....

பொதுவாக சிங்கம்,புலி, சிறுத்தையின் உணவுப் பட்டியலில் மனிதர்கள் கிடையவே கிடையாது. ஆப்ரிக்க காடுகளில் சிறுத்தை சர்வசாதாரணமாக மனிதர்களுடன் பழகும். சிறுத்தைப்புலிதான் கொஞ்சம் டேஞ்சரானது. வனவிலங்குகள் தற்காப்புக்காகத்தான் மனிதர்களை தாக்குகின்றன. ஒரு முறை மனிதர்களைத் தாக்கி விட்டால் தொடர்ந்து மனிதர்களைத் தாக்கத் தொடங்கி விடும். மனிதர்களை விட அதற்கு எளிதான இரை ஏது... அத்துடன் அதன் மரபணுவிலும் பதிந்து விடும். அந்த விலங்கின் சந்ததியே மனிதர்களைத் தாக்கும். இதனால் ஆப்ரிக்காவில் ஒரு முறை மனிதர்களைத் தாக்கி விட்டால், அந்த விலங்குகளை பிடித்து வனவிலங்கு சரணாலயத்தில் அடைத்து விடுகிறார்கள்.

வன விலங்கு புகைப்படக் கலைஞர் வருண் ஆதித்யா

ஆப்ரிக்க மக்களை பொறுத்த வரை வனவிலங்குகள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அவற்றை பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறார்கள். ஒரு விவசாயி 40 ஆடுகள் வைத்திருந்தால், அதில் 2 ஆடுகளை வனவிலங்குளுக்கு என்றே நேர்ந்து விடுகிறார்கள். பொதுவாகவே சிங்கம், சிறுத்தை, புலி போன்றவற்றின் முன்பற்கள் விழுந்து விட்டால், கிட்டத்தட்ட தளர்வடைந்து விடும். மனிதர்களுக்கு பல் போனால் சொல் போச்சு... விலங்கினங்களுக்கு வாழ்க்கையே போச்சு. அவற்றால் பழைய வேகத்துடன் வேட்டையில் ஈடுபட முடியாது. முன்பற்கள்தான் இரையை கவ்வி பிடிப்பவை. இத்தகைய சூழலில்தான் விலங்குகள் கிராமங்களுக்குள் இரையைத் தேடி வருகின்றன.  

இந்தியாவிலும் இதுபோன்ற ஜங்கிள் ரிசர்ட்டுகள் இருக்கின்றனவா?

கர்நாடகாவில் பண்டிப்பூரில் ஜங்கிள் ரிசர்ட் இருக்கிறது. அதுபோல் ராஜஸ்தானில் ரதம்போர் காட்டில் இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கட்டணம். தமிழகத்திலும் கேரளத்திலும் மட்டும்தான்... ஜங்கிள் ரிசர்ட்டுகள் இல்லை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதலிக்கு காதலர் அளித்த 33 தொன் பரிசு!

 

 

முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்ற ருசிகரச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

 

லியு என்பவர் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார். அவரை மணந்துகொள்ள விரும்பிய லியு, குறித்த பெண்ணின் சம்மதத்தைப் பெற வித்தியாசமான முறையில் முயற்சி செய்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு தன் காதலியுடன் ஸிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி என்ற ஊருக்கு சுற்றுலாச் சென்றிருந்தார். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் விழுந்திருந்த பாரிய விண்கல்லையும் அவர்கள் இருவரும் பார்வையிட்டனர். அந்த விண்கல்லைக் கண்டு லியுவின் காதலி பிரமித்துப் போனார்.

இதை ஞாபகம் வைத்திருந்த லியு, தனது காதலிக்குத் தெரியாமலேயே அந்தக் கல்லை பத்து இலட்சம் யுவானுக்கு (ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் டொலர்) விலைபேசி வாங்கினார். பின், நேற்று (14) தனது காதலியை உரும்கிக்கு அழைத்துச் சென்ற லியு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து தன் காதலியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்டார்.

இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன அவரது காதலி, உடனடியாகத் தனது சம்தத்தைத் தெரிவித்தார். மேலும், “லியுவின் இந்த ஏற்பாடு என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. ஒரு வருடத்துக்கு முன் நான் சொன்னதை ஞாபகம் வைத்து, மறக்க முடியாத பரிசை எனக்குத் தந்திருக்கிறார். என் வாழ்நாளில் இதுபோன்ற பிரமாண்டமான விண்கல்லை நான் பார்த்ததேயில்லை. இப்போது இந்தக் கல் எனக்கே சொந்தம் எனும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குதூகலித்தார் அந்தப் பெண்!

எனினும், விண்கல் என்பது பொதுச் சொத்து, அதை யாரும் விற்கவும் முடியாது வாங்கவும் முடியாது, இது ஒரு பொய்ச் செய்தி என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா? #Nostalgic

தூக்கணாங் குருவி

தூக்கணாங் குருவிக் கூட்டை பார்த்திருக்கிறீர்களா? அதன் அழகைச் சொல்ல வார்த்தைகள் ஏது?. தன் சின்ன அலகால் கூடு கட்டும் அதன் நேர்த்தியே அலாதியானது. கிராமங்களின் வயல்வெளிகளில், வளர்ந்து நிற்கும் நெடுமரங்களின் கிளைகளில் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இந்த சின்னக் கூடுகள் சொல்லும் பாடங்கள் ஏராளம். அறிவியலின் வளர்ச்சியால் சிட்டுக் குருவிகளின் இனத்தை மெள்ள மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம் . இளம்மஞ்சள் நிறத்தில் அதிகாலையில்  கதிரவன் எழும் நேரத்தில் நம் வீட்டுத் தாழ்வாரத்தில் குறுகுறுவென கூச்சலிடும் சிட்டுக்குருவிகள் அதன் நிறத்தைப் போலவே சாம்பலாகிப் போன சரித்திரம் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது நம்மிடத்தில். சிட்டுக்குருவிகளைப் போலவே  தூக்கணாங் குருவிகளையும் தூரத்து கதைகளாக நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

குருவி

நம் அன்றாட வாழ்வில் குறைந்த பட்சம் வீட்டு விலங்குகளாக  நாய், பூனை, பசு, ஆடு இவற்றை எல்லாம் நேரடியாக தினமும் பார்த்துக் கொண்டிருந்தோம். பறவைகளாக காக்கை, கோழி, குருவி, இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். கிராமங்கள் தொலைந்த நகர வாழ்வில் கோழிகளை பிராய்லர் கோழிகளாகவும் காக்கைகளை நெரிசல் இல்லாத சாலைகளின் மின்கம்பங்களிலுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படியே போனால் மனிதன் அல்லாத மற்ற உயிரினங்களை இணையங்களில் மட்டுமே டவுன்லோடு செய்து பார்த்துக் கொண்டிருப்போம்.

பறவை


நேரடியாய் எதையும் கற்கவோ ரசிக்கவோ வாய்ப்பற்ற வாழ்க்கை முறை வாய்த்தவர்கள் நம் குழந்தைகள். டிஸ்கவரி சேனல்களில் மட்டுமே விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து கொண்டிருப்பதாய் அவர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பொம்மைகளாகவே டைகர், லயன், ஸ்பேரோ, க்ரோ ...என பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வரவேற்பறையில் இருக்கும் லெதர் சோபாவுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு விலங்கின் தோலைப் பற்றியோ, பால்கனியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் வார்னிஷ் பூசப்பட்ட மூங்கில் மரத்தின் வரலாறு குறித்தோ அவர்கள் அறியாமலேயே நகர்ந்து போகின்றது வீடியோ கேம்ஸ் வாழ்க்கை முறை.

குருவிகள்


நகரமயமாதல் என்பதே மனிதனை இயந்திரமாக்குவது தானே. இந்த அவசர யுகத்தில் கிராமங்களின் வாழ்க்கைமுறையை ஒருமுறையேனும்  தேடிப் பயணிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். 
’நான் படிச்சிட்டு இன்ஜினீயர் ஆகப் போறேன்’ என்று சொல்லும் குழந்தைக்கு இயற்கை கொடுத்திருக்கும் இன்ஜினீயரான தூக்கனாங்குருவி பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறோமா?. தேங்காய் நார், வைக்கோல், இலைகள் என தன் கண்ணுக்கு எட்டும்  எல்லாவற்றையும் தன் அலகால் எந்த அளவுக்குப்  பாரம் சுமக்க முடியுமோ அந்த அளவுக்கு தூக்கிக் கொண்டு வந்து தன் இணைக்கு கூடு கட்டும் தூங்கணாங் குருவி அன்பின் அடையாளம். இங்கே கட்டுவது என்றால் கொத்தனார் சிமெண்ட் கலவையை செங்கலில் பூசிக் கட்டுவாரே ... அப்படி அல்ல. ஒவ்வொரு நாரையும் அலகில் வைத்துக் கொண்டு கிளையில் அதை முடிச்சிட்டு மெதுமெதுவாய் வளைவு நெளிவுகளோடு முழுதாய் கூடு செய்யும் மாயப் பறவைகள் அவை. நினைத்துப் பாருங்கள். கைகள் இல்லாமல் ஒற்றை மூக்கால் ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்கும் அந்த சின்னக் குருவிகள் தன்னம்பிக்கையின் அடையாளம் அல்லவா?.

 

baya weaver


 நேராக ஒரு பின்னல். அதிலிருந்து தொடரும் தொப்பை போல ஒரு வளைவான அமைப்பு , அங்கிருந்து மீண்டும் குழாய் போல ஒரு வளைவு என முட்டையிடும் தன் இணைக்குப் பாதுகாப்பாய் வீடு செய்யும் தூங்கணாங்குருவி பாசத்துக்குச் சிறந்த உதாரணம். மின்விளக்கு இல்லாத காலத்தில் ராந்தல் விளக்குகளை வீடுகளில் பயன்படுத்தி இருப்போம். தூங்கணாங்குருவிகளுக்கு ராந்தல் விளக்கு எது தெரியுமா?. மின்மினிப் பூச்சிகள். கழனியில் சகதியில் இருந்து சின்ன களிமண் துளியை கொண்டு வந்து தன் கூட்டுக்குள் வைத்துவிட்டு அதில் மின்மினிப் பூச்சிகளை ஒட்ட வைத்து வீட்டுக்கு ஒளிகூட்டும் தூங்கணாங்குருவிகள் நம் எலெக்ட்ரீஷியன்களுக்கு முன் உதாரணம். காற்றில் விழாத அழுத்தமான பிடிமானத்தைக் கொண்டு தன் ஒற்றை அலகால் உறுதியாய் அறுந்து விழாத கூடு கட்டும் இந்த சின்னக் குருவிகள் உணர்த்தும் பாடம் இதுதான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!.
’ வாருங்கள். சில நாட்களாவது கிராமம் நோக்கிப் பயணிப்போம். குருவிகள் கூடு கட்டும் அழகை தூரத்தில் இருந்து ரசிப்போம். அதன் அருமைகளை நம் குழந்தைகளுக்குச் சொல்லி மகிழ்வோம். நீங்கள் மீண்டும் நகரத்துக்கு நகர நேர்ந்தாலும் நிச்சயமாக உங்கள் வீட்டு பால்கனியில் இறைந்து கிடைக்கும் தானியங்களைத் தேடி சில பறவைகள் அமர்ந்திருப்பதை நாளை உங்கள் குழந்தைகளும் நெருக்கமாய் கண்டு ரசிக்கலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிலந்திகள் சாப்பிடும் உணவின் அளவு - `மலை`க்க வைக்கும் தகவல்

 
 

உலகில் உள்ள அனைத்து சிலந்திகளும் 400-800 மில்லியன் டன் உணவுகளை ஒவ்வொரு வருடமும் உட்கொள்கின்றன என உயிரியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

சிலந்திகள் சர்வதேச உணவு வலையில் குறைந்து மதிப்படப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்படத்தின் காப்புரிமைDAVID E HILL Image captionசிலந்திகள் சர்வதேச உணவு வலையில் குறைந்து மதிப்படப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

சிலந்திகள் உட்கொள்ளும் இரை, மனிதர்களால் சுமார் ஒரு வருடத்தில் உண்ணப்படும் இறைச்சி மற்றும் மீன் மாமிசத்தின் அளவிற்கு சமமானதாக உள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு சிலந்தி இனத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது; இந்த கண்டுப்பிடிப்புகள் "இயற்கை அறிவியல்" என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வை வழிநடத்திய பாசல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளார் மார்டின் நிஃப்லெருக்கு, 1958 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் பிரிஸ்டைவ் எழுதிய "தி வேல்ட் ஆஃப் ஸ்பைடர்ஸ்" புத்தகம் ஊக்கமாக இருந்தது; அந்த புத்தகத்தில், சிலந்திகளால் கொல்லப்படும் பூச்சிகளின் எடை, பிரிட்டனின் மக்கள் தொகையின் மொத்த எடையை காட்டிலும் அதிகமானதாக இருக்கும் என எழுத்தாளர் ஊகித்திருந்தார்.

அவரின் ஊகத்தை தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த சிலந்தி வல்லுநரான நிஃப்லெர், சிலந்திகளின் நடவடிக்கை மற்றும் உலகம் முழுவதும் உள்ள சிலந்திகளின் சூழலியல் பற்றிய தகவல்களை சேகரித்தார்.

சிலந்திகள்படத்தின் காப்புரிமைDAVID E HILL

"நாற்பது வருட காலமாக, சிலந்திகள் பூச்சிகளை உண்ணும் விகிதம் மற்றும் இரையை தேர்ந்தெடுப்பது குறித்த மணிக்கணக்கான தகவல் சேகரித்த அனுபவம், சர்வதேச அளவில், ஒரு ஆண்டு காலத்தில் சிலந்திகளால் கொல்லப்பட்ட இரையைப் பற்றி எழுத தேவைப்பட்டது" என அவர் தனது மின்னஞ்சலில் தெரிவித்தார்.

இந்த நாற்பது ஆண்டுகால தகவல் சேகரிப்பிற்கு பிறகு, எட்டுக்கால் பூச்சி எவ்வளவு இரையை உட்கொள்கிறது என்ற போதுமான தகவல் அவருக்கு கிடைத்தது.

இந்த ஆய்வின் எண்ணிக்கைகள், சிலந்திகள் குறித்து அச்சம் கொள்ளும் எவரையும் பயமுறுத்தும் வண்ணம் உள்ளது; உலகில் உள்ள அனைத்து சிலந்திகளின் மொத்த எடை 25 மில்லியன் டன்னாக உள்ளது; அவை, ஆண்டு தோறும் 400-800 மில்லியன் டன் கணக்கான பூச்சியை இரையாக உண்ணுகின்றன என தெரிவிக்கிறார் நிஃப்லர்.

இந்த புள்ளிவிவரம் யாரையும் அச்சுறுத்தும் நோக்கிலானது அல்ல , இந்த ஆய்வு உலகளாவிய உணவு வலையில் சிலந்திகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என நம்புவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

"தாவர உணவு உண்ணி பூச்சிகளை சிலந்திகள் அதிக அளவில் கொல்கின்றன; இதன்மூலம் தாவரங்களில் பூச்சிகள் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து சிலந்திகள் பாதுக்கின்றன" என நிஃப்லர் தெரிவித்தார்.

"பூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன; சுமார் 8,000 முதல் 10,000 வரையிலான சிறப்பு பூச்சி இனங்களுக்கும், 3,000 முதல் 5000 வரையிலான பறவைகளுக்கும் சிலந்திகள் உணவாக உள்ளன", என்றார் அவர்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

சம்பா நடன வெற்றி ஊர்வலம்

பிரேஸிலின் சம்பா நடன விழா எனும் ரியோ களியாட்ட விழா கடந்த 24 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெற்றது. இவ் விழாவில் பல்வேறு சம்பா நடனப் பாடசாலைகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட சம்பா நடன ஊர்வலங்கள் இடம்பெற்றன.

இவ் விழாவில் சிறந்த சம்பா நடனங்களை நடத்திய நடனப் பாடசாலைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களின் வெற்றி ஊர்வலம் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்றது. இந்த வெ ற்றி ஊர்வலத்தில் பங்குபற்றிய சிலரைப் படங்களில் காணலாம்.

126069-01-02

 

129851-01-02

125945-01-02

126000-01-02

126074-01-02

126429-01-02

129650-01-02

129682-01-02

129687-01-02

129689-01-02

http://metronews.lk

  • தொடங்கியவர்

“நம் பெர்சனல் டேட்டா இணையத்தில் பாதுகாப்பா இல்லை!” - வருந்தும் இணையத்தின் தந்தை டிம் பெர்னர்ஸ் லீ

டிம் பெர்னர்ஸ் லீ! இந்தப் பெயர் உங்களில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி உங்களால் இந்த வரிகளைப் படிக்க முடிவதற்கு இவர்தான் காரணம். இவர்தான் இணையத்தின் தந்தை. வேர்ல்டு வைடு வெப்(WWW) எனப்படும் வலையமைப்பின் மாதிரியை இவர் சமர்ப்பித்த மார்ச் 12-ம் தேதி இணையத்தின் பிறந்தநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. இணையத்தின் 28-வது பிறந்தநாளையொட்டி இணையதள வளர்ச்சி குறித்தும், இணையத்தில் தற்போது உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கியமான பிரச்னைகள் குறித்தும் எச்சரித்திருக்கிறார் டிம்.

எங்கே செல்கிறது இணையம்? வருந்தும் இணையத்தின் தந்தை டிம் பெர்னர்ஸ் லீ

இணையம் என்பது அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொதுவெளியாக இருக்க வேண்டுமென்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஃப்ரீ பேசிக்ஸ் என்ற சேவையின் மூலம் டேட்டா பேக் எதுவும் தேவையில்லாமல் இணையத்தின் அடிப்படை வசதிகளை இலவசமாகப் பெற முடியும் என ஃபேஸ்புக் விளம்பரப்படுத்தியது. மேலோட்டமாகப் பார்த்தால் இது பயனாளர்களுக்கு சாதகமாகத் தோன்றினாலும் இதனால் நெட் நியூட்ராலிட்டி அதாவது இணைய சமத்துவத்தன்மைக்கு பாதகம் ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பியது. இறுதியாக நெட் நியூட்ராலிட்டியைப் பாதிக்கும் என்பதால் ஃபேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் சேவையை நிராகரிக்க வேண்டும் என இணையத்தின் தந்தை டிம் பெர்னர்ஸ் லீ கேட்டுக்கொண்டார். அதன் பின், இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஃப்ரீ பேசிக்ஸ் சேவையை தற்காலிகமாக இந்தியாவில் முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நமது தகவல்களின் நேரடிக் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறோம் :

இணையத்தின் பிறந்தநாளையொட்டி டிம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இணையத்தின் சமநிலை பற்றி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் அதில், "இணையம் என்பது கலாச்சார மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் ஒருவருக்கொருவர், செய்திகளைப் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் திறந்த மேடையாக இருக்க வேண்டுமென்றே கற்பனை செய்திருந்தேன். பல பிரச்னைகளுக்கு மத்தியில் இந்த பார்வையை இணையம் பலவழிகளில் பூர்த்தி செய்திருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வருடமாக, இணையத்தின் மூன்று புதிய போக்குகள் என்னை கவலையடையச் செய்திருக்கின்றன. மனிதத்துக்கு உதவும் ஓர் ஆற்றல் வாய்ந்த கருவியாக இணையம் செயல்பட, அந்த மூன்று போக்குகளை நாம் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

டிம் பெர்னர்ஸ் லீ

இலவசமாக வசதிகள் சிலவற்றைக் கொடுத்து அதற்குப் பதிலாக அதைப் பயன்படுத்தும் தனிநபர் டேட்டாவை எடுத்துக்கொள்வதுதான் பல இணையதளங்களின் தற்போதைய வர்த்தக மாதிரியாக உள்ளது. நீளமாக எழுதப்பட்டுள்ள விதிமுறை மற்றும் நிபந்தனைகளைப் படித்துப் பார்க்காமல் நமது தகவல்களை எடுத்துக்கொள்ள சம்மதிக்கிறோம். நம்மிடம் இருந்து பெறப்படும் தகவல்களை நாமே கூட அணுக முடியாது. அதை யாரிடம் பகிரலாம், பகிரக்கூடாது என நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. அந்தத் தகவல்களின் நேரடிக் கட்டுப்பாடு நம்மிடம் இருப்பதில்லை. நமது தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், அரசுகள் மற்றும் பல நிறுவனங்களுடன் இணைந்தோ தனியாகவோ நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்கிறார்கள். தனிமனித ப்ரைவசியே கேள்விக்குறியாகியுள்ளது. அரசியல் ரீதியாக எதிர்ப்பாளர்கள் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படலாம், அரசை எதிர்த்து கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படவோ... கொலை செய்யப்படவோ கூட வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக சென்சிட்டிவ்வான எந்தப் பிரச்னை குறித்தும் பேசமுடியாதபடி கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என டிம் பெர்னர்ஸ் லீ வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் கூட இதைத்தான் செய்கின்றன. நமக்கு இலவசமாக பல சேவைகளைக் கொடுத்து, நம் தகவல்களை அதற்குப் பதிலாக எடுத்துக்கொண்டு, அதை வைத்தே லாபம் பார்க்கின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் மொபைலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அதிகம் தேடுகிறீர்கள் என்றால், அதைவைத்து 'பாட்ஷா' படம் ஆன்லைன் புக்கிங் பற்றிய விளம்பரம் உங்களுக்கு அடிக்கடி காண்பிக்கப்படும். நீங்களும் உடனடியாக அந்த லிங்கை கிளிக் செய்து டிக்கெட் புக் செய்வீர்கள். நீங்கள் டிக்கெட் புக் செய்த நிறுவனத்திடம் இதற்காக ஒரு கனிசமான தொகையை, விளம்பரப்படுத்திய நிறுவனம் பெற்றுக்கொள்ளும். நீங்கள் ரஜினி ரசிகர் என்பதை உங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து தெரிந்துகொண்டு அதற்கேற்ப அந்த நிறுவனம் வியாபாரம் செய்கிறது. மேம்போக்காகப் பார்த்தால் என் தேவையறிந்து எனக்காகப் பரிந்துரைப்பது நல்ல விஷயம்தானே என யோசிக்கத் தோன்றும், ஆனால் அதன்பின் இருக்கும் வியாபாரம் மிக மோசமானது. அது குறித்து தான் இணையத்தின் தந்தை டிம் பெர்னர்ஸ் லீ எச்சரித்திருக்கிறார்.

போலி செய்திகள் இணையத்தில் பரவுவது மிக எளிதாகியிருக்கிறது :

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் சமீபத்தில் இணையத்தில் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தின. இதை டிம் தனது அறிக்கையில் தெளிவகாக் குறிப்பிட்டுள்ளார். அவர், "செய்திகளையும், தகவல்களையும் தேடுதல் இயந்திரங்கள் மற்றும் சோஷியல் மீடியா மூலமாகத் தான் இணையத்தில் பலரும் எளிதாகப் பெறுகின்றனர். இந்தத் தளங்கள் நமக்கு சில லிங்குகளைக் காண்பித்து, அதை நாம் கிளிக் செய்வதன் மூலமே எளிதாக நிறையப் பணம் சம்பாதிக்கின்றன. நம்மிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை நெறிப்படுத்தி அதனடிப்படையில், நமக்கு என்ன லிங்க் காண்பிக்கப்பட வேண்டுமென்பதை இந்தத் தளங்கள் தான் தீர்மானிக்கின்றன. அதன் மூலம் பலனையும் அவை அறுவடை செய்கின்றன. நாம் எதை கிளிக் செய்வோம் என்பதை இந்தத் தளங்களே முடிவு செய்கின்றன. இதன் காரணமாக நமக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேரத் தரும் போலி செய்திகள் காட்டுத்தீ போல பரவ வாய்ப்பிருக்கிறது. வர்த்தகம் மற்றும் அரசியல் லாபங்களுக்காக போலி செய்திகள் பரவ நாமும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இதை முறைப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இணையம்

ஒரு சோப் உற்பத்தி செய்யும் நிறுவனம் தனது போட்டி நிறுவனம் பற்றி, '**** சோப் பயன்படுத்தியவருக்கு தோல் புற்றுநோய்' என போலியான செய்திகளை இணையத்தில் பரப்ப உதவுவதாக வைத்துக் கொள்வோம்.  இதன் காரணமாக அந்த போட்டி நிறுவனத்தின் வர்த்தகமும், நற்பெயரும் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதன் பின், அந்த நிறுவனம் தனது பழைய நற்பெயரைச் சம்பாதிப்பது மிகவும் கடினமான காரியமாகிவிடும்.

ஆன்லைன் அரசியல் விளம்பரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் :

உலகின் பல நாடுகளிலும் ஆன்லைன் மூலமாக அரசியல் விளம்பரங்கள் செய்வது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. வாக்காளர்களிடம் நேரடியாக விளம்பரத்தைச் சேர்ப்பதோடு, இதில் செலவும் மிகக்குறைவு என்பதால் அரசியல் கட்சிகள் ஆன்லைன் விளம்பரங்களை அதிகம் விரும்புகின்றன. இந்நிலையில், டிம் பெர்னர்ஸ் லீ இதில் உள்ள ஆபத்தையும் கருத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அவர், "தற்காலத்தில் ஆன்லைன் மூலமாக அரசியல் விளம்பரம் செய்வது அதிநவீனமாகியுள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடம் நேரடியாக இந்த விளம்பரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஃபேஸ்புக்கில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட அரசியல் விளம்பரங்கள் செய்யப்பட்டதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. டார்கெட்டட் அட்வர்டைசிங் (Targeted advertising) மூலமாக நெறிமுறையற்ற வழிகளில் வாக்காளர்கள் போலி செய்திகளை வெளியிடும் தளங்களைப் பார்வையிடும்படியான வழிமுறைகள் கையாளப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக போட்டியிடும் மற்றொரு கட்சி குறித்த தவறான செய்திகளால் வாக்காளர்கள் மத்தியில், அக்கட்சிக்கு களங்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது" என இதுகுறித்துத் தெரிவித்துள்ளார்.

இணையத்தைப் பொறுத்தவரை நமது மொபைல் தான் பல நிறுவனங்களின் உளவாளியாகச் செயல்படுகிறது. நமது தகவல்கள் எல்லாவற்றையும் சேகரித்து பல நிறுவனங்களும் விற்பனை செய்து கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 16
 
 

article_1426479787-idiAmin1614124c.jpg1906: சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 3886 பேர் பலியாகினர்.

1913: ஜப்பானில் பல்கலைக்கழகத்திற்கு முதல் தடவையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

1945: ஜப்பானிய பிரதமர் கன்டாரோ சுசுகியை படுகொலைசெய்வதற்கு முயற்சிக்கப்பட்டது.

1945: சீனாவின் கடைசி மன்னனான மன்சுகுவோ, சோவியத் படையினரால் கைது செய்யப்பட்டார்.

1946: இந்தியாவின் கொல்கத்தா நகரில் பாரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் 72 மணித்தியாலங்களில் சுமார் 4000 பேர் பலியாகினர்.

1960: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.

1960:  அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் கிட்டின்ஜர் 102,800 அடி உயரத்திலிருந்து பரசூட்டில் குதித்து சாதனை படைத்தார்.

1962: இந்தியாவில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

1963: பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கியதில் 11,000பேர் உயிரிழந்தனர்.

1966: நாசாவின் 12ஆவது மனிதரைக் கொண்டுசென்ற ஜெமினி 8 விண்கலம் ஏவப்பட்டது.

1968: வியட்நாம் போர் - மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1969: வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் உயிரிழந்தனர்.

1985: அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன், பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991இல் விடுதலை ஆனார்.

1988: ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2003: உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீன் சவூதி அரேபியாவில் காலமானார்.

2006: மனித உரிமைகளுக்கான ஐ.நா அமைப்பை உருவாக்குவதற்கு ஐ.நா.வின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டீக்கடைக்காரருக்கு ஜென் துறவி சொன்ன ஆலோசனை!! #MorningMotivation

Morning motivation

ரந்து விரிந்த வயல்வெளிகள், கிராமத்தைச் சுற்றிலும் வற்றாமல் இருக்கும் குளங்கள், ஊரை ஒட்டி ஒரு ஆறு, கிராமத்தின் நான்கு வீதிகள் இணையும் இடத்தில் கடைத்தெரு, கோயில்கள் என இப்படி ஒரு கிராமத்தை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? நானும் பார்த்ததில்லை. அதனால் அதை அப்படியே மனதில் கற்பனைசெய்துகொள்வோம். அந்த ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். ஊர் மக்களுக்கு அவர் மேல் அவ்வளவு பிரியம். நல்லது கெட்டது எதற்கும் அவரிடம் ஆலோசனை கேட்டுத்தான் செய்வார்கள். அவர் தெருவில் நடந்துவரும் அழகைப் பார்க்கவே கூட்டம் அலைமோதும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அவ்வளவு உற்சாகமாய் கிராமத்தை வலம்வருவார்.

கிராமத்தின் கடைத்தெருவில் டீ கடை ஒன்று இருந்தது. ஒரு நாள் அந்தத் டீ கடைக்காரருக்கும் வலிமையான மல்யுத்த வீரன் ஒருவனுக்கும் சண்டை வந்துவிட்டது. இருவரும் தெருவே திரும்பிப்பார்க்கும்படி திட்டிக்கொண்டார்கள். அப்போது, டீ கடைக்காரரை சண்டைக்கு அழைத்தான் மல்யுத்த வீரன். இவருக்கோ தயக்கம். ஆனால், எல்லோரும் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிறிது யோசித்தவர்,'சரி வருகிறேன்' எனச் சொல்லி ஒப்புக்கொண்டுவிட்டார். கோபத்தில் ஒப்புக்கொண்டுவிட்டாலும் டீ கடைக்காரருக்கு பயம். ‘தன்னை அடித்து வீழ்த்திவிடுவானே... என்ன செய்யப்போகிறோமோ’ என புலம்ப ஆரம்பித்துவிட்டான். இதைப் பார்த்த அவனுடைய நண்பர்கள்,  'நீ முதலில் நம் துறவியைப் பார்த்து வா, அவர் உனக்கு தக்க ஆலோசனை வழங்குவார். மல்யுத்த வீரனை எளிதாகத் தோற்கடித்துவிடலாம்' என ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தார்கள்.

டீ கடைக்காரரும் அன்று மாலையே ஜென் துறவியைச் சென்று சந்தித்தான். நடந்த எல்லாவற்றையும் மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான். எல்லாவற்றையும் பதற்றம் இல்லாமல் கேட்டுக்கொண்டார் துறவி.

"சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது?" எனக் கேட்டார்.

"இன்னும் 30 நாட்கள் இருக்கிறது"

"இப்போது என்ன வேலை செய்கிறாய்?"

"டீ ஆத்துறேங்கய்யா..."

"சரி போ... அதையே தொடர்ந்து செய்" எனச் சொல்லி அனுப்பிவிட்டார்.

டீ கடைக்காரருக்கோ ஒன்றும் புரியவில்லை. "இன்னும் 30 நாள்தான் சண்டைக்கு இருக்கு" இவரு வழக்கம்போல டீ ஆத்தச் சொல்றாரே என நொந்துகொண்டு அவர் சொன்னதுபோலவே அதைச் செய்ய ஆரம்பித்தார். நாட்கள் கடந்தன. 15 நாட்கள் கடந்து மீண்டும் துறவியைப் பார்க்கச் சென்றார்.

"ஐயா, இன்னும் 15 நாட்கள் இருக்கு.. நான் என்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா செஞ்சுடுவேன்." என பணிவுடன் கேட்டான். துறவி நிதானமாக, "அதையே ஈடுபாட்டோடு செய். இன்னும் வேகமாக டீ ஆற்று" எனச் சொல்லிவிட்டார்.

டீ கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. சரி இதையும் செய்துவிடுவோம் என முடிவுசெய்துவிட்டான். நண்பர்களும்கூட அவர் சொல்லுவதுபோலவே செய், அதுதான் சரியாக இருக்கும் எனச் சொல்லிவிட்டார்கள். அவரும் வழக்கத்தைவிட இன்னும் வேக வேகமாக டீ ஆற்ற ஆரம்பித்தார். கடைக்கு வந்த பொதுமக்கள் அசந்துபோனார்கள். "என்னப்பா இது இவ்வளவு வேகமா டீ ஆத்துறானே... இவனுக்குள்ள ஏதோ இருக்குப்பா." என பேசஆரம்பித்தார்கள்.

 

Morning Motivation

சண்டை நடக்கும் நாளுக்கு முன் நாள் துறவியை சென்று சந்தித்தார் டீ கடைக்காரர். 

"ஐயா, நீங்க சொன்னதுபோலவே வேகமா டீ ஆத்தினேன். எனக்குள்ள எந்த மாற்றமும் தெரியல.. ஆனா ஊருக்குள்ள எல்லோரும் எனக்கு எதோ புது சக்தி வந்துடுச்சுனு பேசிக்கிறாங்க. நாளைக்குதான் சண்டை நாள். நீங்கதான் அறிவுரை சொல்லணும்." எனக் கேட்டுக் கொண்டான். எங்கே மறுபடியும் டீ ஆற்ற சொல்லிவிடுவாரோ என்ற பயம் நம்மைப்போலவே அவருக்கும் இருக்கத்தான் செய்தது.

அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்ட ஜென் துறவி, "நாளை சண்டைக்கு முன் அவனை டீ சாப்பிட கூப்பிடு போதும்" எனச் சொல்லி சிரித்துக்கொண்டே அனுப்பிவைத்துவிட்டார். சண்டை போடப்போகும் நாளும் வந்தது. வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு வந்து கடை முன் நின்றுவிட்டார்கள். டீ கடைக்காரருக்கோ உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்,

"சண்டைக்கு முன் வந்து ஒரு டீ சாப்பிடு." எனத் தைரியமாக அழைத்துவிட்டார். மல்யுத்த வீரனும் 'ஒரு டீ தானே... குடிச்சுட்டா போச்சு' என நினைத்துக்கொண்டு ஒப்புக்கொண்டுவிட்டான். கடைக்குள் சென்றவர் வேக வேகமாக டீயைத் தயார்செய்ய ஆரம்பித்தார். மல்யுத்த வீரனுக்கோ பயம் தொற்றிக்கொண்டுவிட்டது. அவர் இவ்வளவு வேகமாக டீ ஆற்றி இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை. "டீயையே இவ்வளவு வேகமாக ஆற்றுகிறானே... சண்டைக்கு எவ்வளவு தயார் செய்திருப்பான்." என மனதுக்குள் நினைத்துக்கொண்டு "நாம் சமாதானமாகப் போய்விடலாம். உங்க தேநீருக்கு ரொம்ப நன்றி!" எனச் சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

டீ கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அப்போது தான் ஜென் துறவி சொன்னது நியாபகத்துக்கு வந்தது.. "உன் வேலையை எப்போதும்போல சிறப்பாகச் செய். அதை ஈடுபாட்டோடு செய்யும்போது, அதற்குரிய பலனைப் பெறுவாய்!"     

அந்த டீ கடைக்காரருக்கு ஜென் துறவி சொன்னதை நம் வாழ்வோடும் பொருத்திப் பாருங்களேன். நம் வேலையை உணர்ந்து அதை முழு ஈடுபாட்டோடு செய்ய ஆரம்பிக்கும்போது அதற்குரிய பலன் கிடைக்கும்தானே..!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்த மாடுகளுக்கு இனி கொம்பே கிடையாது..! அதிர்ச்சி ஆராய்ச்சி

"காம்பினில் பசும்பால் கறந்தால், அதுவா சாதனை???... கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன்... அது தான் சாதனை!!!"ன்னு தீர்க்கதரிசி கமல்ஹாசன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது. இப்போ, இங்க கொம்புல பால் கறக்கறத பத்தியில்ல,மாடுகளோட கொம்பே காணாமப் போற கதைய பத்தி தான் பார்க்கப் போறோம். 

மாடுகள் கொம்புகள்

பிரிட்டனில் ஒரு வருடத்திற்கு குறைந்தது 5 பேர் சாவதற்கு காரணமாக "மாடுகள்" இருக்குறதா சொல்லப்படுது. ஆ... காளை மாடுகள அடக்கி, வீர விளையாட்டுகள்ல ஈடுபட்டு எல்லாம் இல்ல. சும்மா அப்படியே நடந்து போகும் போது, மாடு முட்றது, முட்ற மாதிரி வர்ற மாட்டப் பார்த்து பயந்து ஓடிப்போய் விழுந்து சாவுறதுன்னு இப்படியான காரணங்கள். அதுமட்டுமில்லாம, பிரிட்டனில் மனிதர்களின் சாவிற்கு காரணமாக இருக்கும் பெரும் விலங்கு மாடு தான் என்று சொல்கிறார்கள். இதே "மாடு" காரணங்களால அமெரிக்காவில் வருடத்திற்கு 25 பேர் இறப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆக, மாட்டின் கொம்புகள் இந்த இருநாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலா இருக்கு. 

மனிதர்களைக் கொல்லும் கொடிய மிருகமாகப் பார்க்கப்படும் மாடுகள் விவசாயம் மற்றும் பால் பண்ணைகள்ல முக்கியமா வளர்க்கப்படுது. மாடுகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற, கன்னுக்குட்டியாக இருக்கும் போதே கொம்பை வெட்டிவிடுவது, சால்ட்ரிங் (Soldering) மெஷின் கொண்டு கொம்புகளைப் பொசுக்கிவிடுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள்." இது மனிதத்தன்மையற்ற செயல்", "காட்டுமிராண்டித்தனமான செயல்", "மனிதர்கள் உயிர் போகிறது என்பதற்காக மாட்டின் கொம்புகளை அகற்றுவதா?" என்று கோபம் கொண்டு பொங்கினார்கள் விலங்குகள் நலன் பேணும் சில ஆர்வலர்கள். அப்படியான ஆர்வலர்கள் இதற்கு மாற்று வழியைக் கண்டுபிடிக்க சில ஆராய்ச்சியாளர்களை அணுக, அசைக்க முடியா அறிவியலும் கை கொடுக்க, சில பல ஆராய்ச்சிகளைக் கடந்து, இப்போது கொம்புகளே இல்லாமல் பிறக்கும் மாட்டினைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

மாடுகள் கொம்புகள்

ஸ்பாட்டிகை மற்றும் புரி

டாக்டர் ஆலிசன் வேன் என்ற ஜெனிடிக் (Genetic) ஆராய்ச்சியாளர், CRISPR என்ற "ஜீன் எடிட்டிங்" (Gene Editing) முறையைப் பயன்படுத்தி கொம்பில்லா இரண்டு கன்றுகளை செயற்கை கருத்தரிப்பு (IVF) முறையில் உருவாக்கியுள்ளார். ஸ்பாட்டிகை (Spotigy) மற்றும் புரி (Buri) என்று அந்தக் கன்றுக்குட்டிகளுக்கு பெயரிட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பே இது செய்யப்பட்டிருந்தாலும்,தற்போது இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றிருப்பதாக சொல்லி, இதை ஒரு திட்டமாக முன்னெடுக்க உள்ளனர். 

கொம்புகள்ஹெரிபோர்ட் (HereFord) மற்றும் ஆங்கஸ் (Angus) என்ற மாட்டினங்களுக்கு இயல்பிலேயே கொம்புகள் இல்லை. இதன் "டிஎன்ஏ"விலிருந்து கொம்பு சம்பந்தப்பட்ட ஜீன்களை வெட்டியெடுத்து, அதை கொம்புகள் கொண்ட மாடுகளின் "டிஎன்ஏ"விலிருக்கும் கொம்பு வளர்தலுக்கான ஜீனோடு மாற்றி வைக்கிறார்கள். பின்பு, இந்த "டிஎன்ஏ"வை செயற்கை கருத்தரிப்பு முறையில் உருவாக்கும் போது, மாட்டின் கொம்பு இருக்க வேண்டிய இடங்களில் வெறும் "முடி" மட்டுமே இருக்கும். இதனால் கொம்பு குத்தி யாரும் இறக்க மாட்டார்கள். உலகளவில் பால் பண்ணைகளில் அதிகளவு வளர்க்கப்படும் ஹாலிஸ்டெய்ன் (Holistein) இன மாடுகளுக்குத் தான் இந்த "ஜீன் எடிட்டிங்" அவசியம் என்று கருதப்படுகிறது. 

இந்த மாற்றத்தை மாடுகளின் கலப்புகளின் மூலம் இயற்கையாகவும் கூட கொண்டுவரலாம். 

 

கொம்பில்லா ஆங்கஸ் மாடு X கொம்பிருக்கும் ஹாலிஸ்டெய்ன் மாடு = கொம்பில்லா கன்று.

கொம்பில்லா ஆங்கஸ் இன மாடு...

ஆனால், இந்தக் கன்று பாதி கறி மாடாகவும், பாதி கறவை மாடாகவும் இருக்கும். எனவே, இதை மீண்டும் ஒரு ஹாலிஸ்டெய்ன் மாட்டோடு இணை சேர வைக்க வேண்டும். பின்பு, அதற்குப் பிறக்கும் கன்று, கொம்பில்லா கறவை மாடாக இருக்கும். ஆனால், இதெயெல்லாம் நடத்தி முடிக்க 20 வருடங்கள் ஆகிவிடும். அதே சமயம், ஒரு ஊசியின் மூலம் சில மாதங்களிலேயே கொம்பில்லா மாட்டினை உருவாக்க உதவுகிறது இந்த ஆராய்ச்சி. 

மாடுகள் கொம்புகள்

கமல்ஹாசனை வைத்து தொடங்கியது மாதிரியே, அவரை வைத்தே முடித்துவிடுகிறேன்.

" இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சரியில்லைன்னு நான் சொல்லலை... சரியா இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்றேன்." 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சார்லி சாப்ளினின் கலகல நல்மொழிகள்...

17309822_1442708419121277_10890475454291

  • தொடங்கியவர்

இசான் சர்மாவின் முக பாவனையை கலாய்த்துவரும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் (வைரல் காணொளி இணைப்பு)

 

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் இசான் சர்மா ஆஸி அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பார்த்து மேற்கொண்ட முகபாவனை தற்போது சமுகவலைதளங்களில் வைராலாகி வருகின்றது.

 

இந்நிலையில் குறித்த முகபாவனையை பின்பற்றி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தாங்களும் அதே போன்று முகபாவனையை வெளிக்காட்டி காணொளியாக இணையத்தளங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களான பிரேட் ஹெய்டன் மற்றும் பிரட் லீ ஆகியோரும் அடங்குகின்றனர்.

 ஆஸி அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது  இசான் சர்மா குறித்த முகபாவனையை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' டைரக்டருக்கு இன்னைக்கு ஹேப்பி பொறந்த நாள்! #HBDGoreVerbinski

முக்கால்வாசிப் பேருக்கு இந்தப் படத்தின் டைரக்டர் இவர்தான் என்றே தெரியாது. அப்படிப்பட்ட லிஸ்டில் இந்தப் படம் மிகவும் முக்கியம் பாஸ். உங்களில் எத்தனைப் பேர் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்துக்கு ரசிகன்? இந்தப் படத்தை பிடிக்காதவர் இருக்க முடியுமா? அந்தப் பட சீரிஸின் முதல் மூன்று பாகத்தை இயக்கியவரின் பெயர் 'கோரி வெர்பின்ஸ்கி'. இவருக்கு இன்று ஹேப்பி பிறந்தநாள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படத்தை இயக்கும் இயக்குநர்தான் மிகச் சிறந்த இயக்குநர். அந்த லிஸ்டில் இவரும் கண்டிப்பாக இருப்பார். டி.வி-யில் இந்த படம் போடுவதைப் பார்த்தால் சேனலை மாற்ற கண்டிப்பாக மனசே வராது. அதற்குக் காரணம் அந்த படத்தின் ஹீரோ 'கேப்டன் ஜாக் ஸ்பேரோ'. இவரைப் பார்த்தவுடன் இந்தப் பெயர்தான் முதலில் ஞாபகம் வரும். இவர் அந்தப் படத்தில் தெறி ரகத்தில் நடித்திருந்தாலும் அந்த வாய்ப்பினை தந்தவர் இந்த டைரக்டர் தான். அந்தப் படத்தில் சிறப்பம்சங்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் மறுபடியும் நான் ஒரு தபா சொல்லியே ஆவேன்.

பைரேட்ஸ்

கேப்டன் ஜாக் ஸ்பாரோ :

Pirates Of The Caribbean

படத்தில் இவர்தான் மிக மிக முக்கியம். அனைவரும் ரசிக்கும்படியான பாடி லாங்வேஜ், நகைச்சுவை, நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் இறங்கியடித்திருப்பார் 'ஜாக் ஸ்பாரோ' ஸாரி ஸாரி 'கேப்டன் ஜாக் ஸ்பாரோ' ஆம் இவருக்கு அப்படிச் சொன்னால்தான் பிடிக்கும். படத்தில் இவர் நல்லவரா? கெட்டவரா? என்றே கண்டுபிடிக்க முடியாது. இவர் இன்ட்ரோவின்போது வரும் தீம் மியூஸிக் இன்னமும் பல பேரின் மொபைல்களில் ரிங்டோனாக உள்ளது. படத்தில் இவர் கெத்தோ கெத்து. நிறையப் பேர் மட்டம் தட்டினாலும் தனக்கென்ற ஓர் ஆளுமைத்திறன் இவரிடம் இருக்கும். பொதுவாக ஆங்கிலப் படங்களில் கெட்ட வார்த்தைகள் இருப்பது சகஜம். ஆனால் இந்தப் பட சீரிஸில் கெட்ட வார்த்தை இடம்பெறும் சீனே இருக்காது. போரடிக்கும்படியான சீன்களும் படத்தில் இருக்காது. ஒட்டுமொத்த கவனமும் இந்தப் படத்தின் கதாநாயகன் 'கேப்டன் ஜாக் ஸ்பாரோ' மேல்தான் இருக்கும். மூன்று பாகத்திலும் ஏதாவது பல்டியடித்து ரசிகர்களை ஈர்த்துவிடுவார் 'ஜானி டெப்' முதல் பாகத்தின் கடைசியில் ஒரு தங்கக்காசைத் திருடுவதிலிருந்து அவ்வளவு பெரிய கப்பலைக் கவிழ்த்துவிடுவது வரை செம. உண்மையிலேயே இவர் 'கேப்டன் ஜாக் ஸ்பாரோ' தான்.

சி.ஜி :

பைரேட்ஸ்

படத்தின் சிறப்பம்சம் என்று பார்த்தால் எல்லாமே இடம்பெறும். அதிலும் ஸ்பெஷல் என்றால் படத்தின் சி.ஜி-யைச் சொல்லலாம். முதல் மூன்று பாகங்களை ஓர் இருட்டு அறையில் தனியாக, முக்கியமாக ஹோம் தியேட்டர் அமைத்து படத்தைப் பார்த்தால் தன்னை மறந்து அந்த உலகத்துக்கே கொண்டு சென்றுவிடும். அந்த அளவுக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படத்தில் அமைந்திருக்கும். அந்தப் படத்தில் 'டேவி ஜோன்ஸ்' என்ற ஒரு கேரக்டர் மிகவும் பிரபலம். அவரின் முகமானது ஆக்டோபஸ் போல இருக்கும். அதற்காகப் பயன்படுத்திய சி.ஜி எல்லாமே படத்தில் டைரக்டர் அந்தர் பண்ணியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி, கதாபாத்திரங்களின் தோற்றம், கப்பல்கள் என நம்மையும் படம் பார்க்கும்போது ஒரு பைரேட்டாகவே மாற்றிவிடுகிறார். 

கேரக்டர்ஸ் : 

பைரேட்ஸ்

படத்தில் சின்னச் சின்ன கேரக்டர்ஸ்கூட பேசும். இந்தக் கதாபாத்திரம் இந்த சீனிற்கு தேவையில்லை என்றே இருக்காது. 'பர்போஸா' என்பவரின்கூடவே ஒரு குரங்குக் குட்டி வரும். அதிலிருந்து, ராட்சஸ வடிவில் ஒரு 'ஆக்டோபஸ்' வரும்வரை எல்லா கேரக்டர்ஸும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். பல்வேறு கதாபாத்திரங்கள் படத்தில் அவ்வாறே இடம் பெற்றிருக்கும். டைரக்டருக்கு எங்கிருந்து அப்படி யோசனை வந்ததென்று தெரியவில்லை. ஒருவேளை ரூம் போட்டு யோசித்திருப்பாரோ? 

அப் இஸ் டவுன் :

படத்தின் மூன்றாம் பாகத்தில் இந்த சீன் மிக மிகச் சிறப்பு. ஒரு கட்டத்தில் கப்பலே காலியாகும் நிலை ஏற்படும். அதில் எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடைந்து இருப்பார்கள். நம்ம ஜாக்தான் கெட்டிக்காரர் ஆச்சே. படுபயங்கரமாக யோசித்து 'அப் இஸ் டவுன்' என்ற ஒரு வார்த்தையை வைத்தே கப்பலுக்கு அங்கும் இங்குமாக ஓடுவார். அவரைப் பார்த்து ஏன் இப்படிச் செய்கிறான் என்று எண்ணி அனைவரும் அவரை மாதிரியே குறுக்கும் நெடுக்குமாக ஓடுவார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் தெரியவரும் 'சயின்ஸ்' படி கப்பல் தலைகீழாக இருந்தால்தான் உயிர் தப்பிக்க முடியுமென்று. அந்த வீடியோவைப் பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்க.

தீம் மியூஸிக் :

இந்தப் படத்தின் தீம் மியூஸிக் இன்னும் பல பேரின் செல்போனின் ரிங் டோனாகத்தான் இருக்கும்.  இசையமைத்தவரின் பெயர் 'ஹான்ஸ் ஜிம்மர்'. இவர்தான் அந்த ஊர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் பல அவார்டுகளைத் தட்டித் தூக்கியுள்ளார். இவர் இசையமைத்த 'ஷெர்லாக் ஹோம்ஸ்', 'டார்க் நைட்', 'மேன் ஆஃப் ஸ்டீல்' என எல்லாப் படங்களுமே வேற லெவல். அந்த வரிசையில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனும் முக்கியப் பங்கு வகிக்கும். அதில் 'ஹீ இஸ் பைரேட்' என்ற ஒன்றை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சவுண்ட் ட்ராக்கையும் கேட்டால் வேறு மாதிரியான ஃபீலைக் கொடுக்கும் பாஸ். நீங்களும் கேட்டு மெர்சல் ஆகுங்க.

ஐ எம் பாக் :

டேவி ஜோன்ஸின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஜாக் ஸ்போராவைத் தேடி மற்றவர்கள் அனைவரும் அவரைத் தேடிப் போக பாலைவனத்தின் நடுவில் மாட்டிக்கொள்கிறார் ஸ்பாரோ. எப்படியாவது அங்கிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணி அங்கிருக்கும் நண்டுகளை வைத்தே அவர்கள் வந்து தேடிக் கண்டுபிடிக்கும் முன் இவர் இங்கிருந்து தப்பித்துவிடுகிறார். சொல்லும்போது காமெடியாத்தான் இருக்கும் பாஸ். நீங்களே அதைப் பாருங்க செம மாஸ் சீன்.

இப்படி ஒரு படைப்பைக் கொடுத்த டைரக்டர் 'கோரி வெர்பின்ஸ்கி' அவர்களுக்கு ஹேப்பி பொறந்த நாள்!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இந்த மெஷின் இருந்தா இனிமே கிஃப்டே வாங்க வேணாம் பாஸ்!

மெஷின்

காலண்டர்ல இருக்குற 365 நாளுக்கும் ஏதோ ஒரு நாள்னு பேர் வைச்சுடுற அளவுக்கு ஸ்பெஷல்  நாட்களோட எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்கு. பானிபூரிக்கெல்லாம் டே இருக்குனு ஃபேஸ்புக்ல  ஃபார்வர்டுகள் வருது. இதுல பிறந்த நாள், கல்யாண நாள், லவ் புரபோஸ் பண்ண நாள்ல்லாம் வேற. இந்த எல்லா நாளுக்கும் கிஃப்ட் வாங்கி கொடுக்க சொல்லி கேட்கும் உங்கள் அன்பானவர்களுக்கு இனி கிஃப்ட்டுக்காக காசு செலவழிக்கவே வேணாம். ஒரு மெஷின் வாங்குனா போதும்னு சொன்னா எவ்வளவு ஜாலியா இருக்கும். அப்படி ஒரு மெஷின் தான் எக்ஸ் பிளாட்டர். 

எக்ஸ் ப்ளாட்டர்ங்கறது ஒரு த்ரீ-இன்-ஒன் மிஷின். இந்த மிஷின் மூலமா படம் வரைய முடியும், எழுத முடியும், லேசர் மூலம் பொருட்களை வெட்டவும் முடியும். இதில் உள்ள ரோபாட்டிக் கைகள் மூலமாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட விதத்தில் இயங்கி எழுத்துக்களை நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் எழுதும். அதனை பேப்பர், மேட் என எதில் வேண்டுமேனாலும் எழுதும் வடிவில் இதன் ரோபாட்டிங் ஆர்ம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாழ்த்து அட்டைகளை இனி யாரோ பிரிண்ட் செய்த வடிவத்தில் பெற வேண்டாம். உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை பிடித்த வடிவத்தில் நீங்களே பிரிண்ட் செய்யலாம். 

எக்ஸ் ப்ளாட்டர்

அடுத்ததாக இந்த கருவியால் படம் வரைய முடியும், எழுத்துக்களை போலவே படத்தின் தன்மைகேற்ப அதனை இந்த கருவியால் வரைய முடிகிறது. இதில் நாம் எந்த மாதிரியான படத்தைக் கொடுத்தாலும் அதனை அப்படியே வரைந்து கொடுக்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியத்தன்மை என்பது கிட்டத்தட்ட கைகளால் வரைந்த படத்துக்கு இணையாக உள்ளது . மேலும் கைகளால் வரையும் போது உள்ள சிறிய மாற்றங்கள் கூட இதில் இருப்பதில்லை என்கிறது இந்நிறுவனம்.

மூன்றாவதாக என்க்ராவ் அதாவது தளங்களின் மீது வடிவங்களை ஏற்படுத்துதல், செதுக்குதல் போன்ற விஷயங்களை இதில் உள்ள லேசர் கன் செய்கிறது. இதன் மூலம் செல்போன் கேஸ்கவர்கள் மீது படங்களை பொதிப்பது. 3டி இமேஜிங் தொழில்நுட்பத்தில் பிரின்டிங் செய்வது. அதன் மூலம் அழகான பொருட்களை உருவாக்குவது என ஒரு கிஃப்ட் ஷாப்பாகவே மாறுகிறது இந்த மெஷின். மிகவும் கஸ்டமைஸ்டாக இருக்கும் இந்த மிஷின் மூன்று வேலைகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 599 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 39000 ரூபாய். மேலும் இதன் மூலம் வர்த்தக ரீதியான படங்களை வரைவதும், மரம், அலுமினியம், போன்றவற்றிலும் லேசர் கன் மூலம் பதிவுகளை ஏற்படுத்தவும் முடியுமாம். இது தனித்தனியாக மூன்று கருவிகளை வாங்குவதற்கு பதிலாக இருக்கும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மெஷினுக்கு பதில் தனித்தனியாக மூன்று மிஷின்களை வாங்கினால் 2.5 மடங்கு அதிக செலவாகுமாம். சிறு தொழில் புரிபவர்களுக்கு இந்த மெஷின் அதிக அளவில் பயன்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அப்பறம் என்ன பாஸ், இனிமே 365 நாள் முழுக்க உங்களுக்கு புடிச்சவங்களுக்கு எதாவது ஒரு கிஃப்ட் கொடுத்துட்டே இருங்க...இல்லையா ஒரு மிஷின வாங்கி போட்டு, அதன் மூலம் வருஷம் முழுக்க வருமானம் பாருங்க.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

24 மணி நேரத்தில் கட்டபட்ட உலகின் முதல் வீடு..! #3Dtechnology

வீடு

மேலும் படங்களுக்கு

உலகில் மனிதனின் தேவைக்கும் அவனின் சுமையைக் குறைப்பதற்கும் புதுப்புது கருவிகளும், தொழில்நுட்பங்களும் வந்த வண்ணமே இருக்கின்றன. தற்போது அதனுடைய தாக்கம்தான் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பிரதமர் மோடியை இழுத்தது எனச் சொல்லலாம். 2022-க்குள் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் வீடு எனும் மோடியின் அறிவிப்பும் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பாகம்தான். ஆனால் இப்போது ரஷ்யாவில் வெளிவந்திருக்கும் தொழில்நுட்பம் அதை உறுதிப்படுத்தும் விதமாக அறிமுகமாகியுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் மனிதனுக்கு இன்றைய சூழ்நிலையில் சொந்த வீடு என்பது சற்று கடினமான காரியம்தான். அதுவும் இடம் வாங்கி நல்ல பொறியாளர் ஒருவரிடம் வீட்டைக் கட்ட பணம் கொடுத்து, கடைசிக் கட்டத்தில் பொறியாளர் கை விரிக்க மீண்டும் கடன் வாங்கி வீடு கட்டி முடித்தால் கிட்டத்தட்ட 5, 6 மாதங்கள் கடந்திருக்கும், அதற்குள் சாதாரண வீடு கட்ட குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலவாகியிருக்கும். உங்களுக்காகவே புதிதாக வந்திருக்கிறது புதிய 3D தொழில்நுட்பம். 

இந்தியாவில் சாதாரணமாக கட்டப்படும் வீடுகளைத் தவிர்த்து புதிய தொழில்நுட்பமான ரெடிமேட் கட்டடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிக அளவில் பரவவில்லை என்பதே உண்மை. ஆனால் அதற்குள் ரஷ்யாவில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் புதிய கட்டடங்களை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தினை அபிஸ் கோர் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தி ஒரு வீட்டையும் கட்டியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின்படி, கம்ப்யூட்டரில் கட்டட வரைபடமானது 3D வடிவில் வரையப்படுகிறது. வீடு கட்டுவதற்கென்றே பிரத்யோகமாக 3D பிரிண்டிங் இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது, கட்டட 3D வரைபடத்துக்கு ஏற்ப கம்பி, சிமென்ட் கலவை ஆகியவற்றைக் கொண்டு தானே வடிவமைத்துக் கொள்கிறது. இந்த இயந்திரம் 360 டிகிரி கோணத்தில் சிமென்டையும், கம்பியையும் மாற்றி மாற்றிப் பொருத்துகிறது. இயந்திரத்தின் முன்னே உள்ள பகுதியில் சிமென்ட் கொண்டு கலவை நிரப்பப்படுவதால் எளிதாக அதனை எடுத்துக்கொள்ளும். இதன் மூலம் இயந்திரமானது துரித வேகத்தில் செயல்பட்டு கட்டடத்தை வடிவமைக்கிறது. 

வீடு

மேலும் படங்களுக்கு

இந்த இயந்திரமானது கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும்போதே ஆட்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் வரைபடத்தில் இருப்பதுபோல வடிவமைத்து விடுகிறார்கள். சுற்றுப்புற சுவர்கள் கட்டி முடிக்கப்படும்போது ஒரு பணியாள் துரிதமாகச் செயல்பட்டு கட்டடத்துக்கு வண்ணங்களைப் பூசுகிறார். இதில் இன்னொரு சிறப்பு, வீட்டின் உட்கட்டமைப்புக்கு ஏற்றார்போல் தண்ணீர் குழாய்கள், மின்சார வசதி என அனைத்து வசதிகளும் இந்த வீட்டில் அமைக்கப்படுகிறது. தற்போது அந்தத் தொழில்நுட்பத்தில் நான்கு அறைகளாக பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை முழுமையாகக் கட்டி முடிக்க ஆகும் மொத்த செலவு, 6.77 லட்ச ரூபாய் மட்டுமே என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த வீடு வெறும் 24 மணிநேரத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனுடைய ஆயுட்காலம் 175 ஆண்டுகளாகும். மேலும் இந்த வீடானது அனைத்துத் தட்பவெப்ப நிலைகளுக்கும் தாக்குப்பிடிக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தொழில்நுட்பமானது, அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அதனுடைய அறிவிப்பில் சொல்லப்பட்டது. மேலும் உலகில் ஒரே நாளில் கட்டப்பட்ட முதல் வீடு என்ற பெருமையையும் இந்த வீடு பெற்றுள்ளது. பிரதமர் மோடி 2022-க்குள் அனைவருக்கும் வீடு என அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் மூலம் ஏலம் விட்டு டெண்டர் கொடுத்து கட்டடம் சரியாகக் கட்டப்படாமல் ஆயுட்காலம் முடிவதற்கு முன்னரே கட்டடங்கள் சரியும் நிலையைத் தடுக்கலாம். ரஷ்யாவில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் போன்றே அதே தொழில்நுட்பத்தில் இங்கும் வீடுகளை வடிவமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யலாம். நாட்டின் நலன் என்ற பெயரில் பல்வேறு ஒப்பந்தத்தினை அமைக்கும் பிரதமர் இந்த விஷயத்திலும் காட்டலாமே... 
 

மேலும் படங்களுக்கு

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சார்லி சாப்ளினின் கலகல நல்மொழிகள்!

Bild könnte enthalten: 1 Person
  • தொடங்கியவர்

இரவில் ஒளிரும் பச்சைத்தவளை அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு

 

 

இரவில் ஒளிரும் பச்சைத்தவளை அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு
 
 

இரவு நேரங்களில் ஔிரும் புதிய வகை பச்சைத்தவளை இனம் அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பகற்பொழுதுகளில் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தவளை தென்படுகிறது. ஆனால், இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள புள்ளிகளும் அடர் நீல நிறத்திலும் மற்ற பகுதிகள் புளோரசென்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன.

குறுகிய அலை நீளம் கொண்ட ஒளியை உறிஞ்சி, பின்னர் நீண்ட அலை நீளத்தில் ஒளியை உமிழ்வது புளோரசென்ட்டின் இயல்பு. அந்த இயல்பு இந்த அரிய வகை தவளையிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவளப்பாறைகள், மீன், சுறாக்கள், கடல் ஆமை போன்ற பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களிடத்திலும், நிலத்தில் வாழும் சில வகை கிளிகள் மற்றும் தேள்களிடம் மட்டுமே புளோரசென்ட் இயல்பு இருந்தது முன்பு அறியப்பட்டது.

தற்போது தவளையிடமும் அந்த இயல்பு இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனிதனைத் தவிர, பிற உயிரினங்களுக்கு இந்த இயல்பு ஏன் இருக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.

எனினும், பாலின ஈர்ப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தென் அமெரிக்க நாடான சூரி நாமில் ஏற்கனவே ஊதா நிறத்துடன் மின்னும் தவளை 2006 ஆம் ஆண்டு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

giphy-downsized-large

 

 

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

மிரட்டும் 'பாகுபலி-2' ட்ரெய்லர்!

baahubali

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள படம், 'பாகுபலி.' இதன் முதல் பாகம் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

 

...

  • தொடங்கியவர்

சல்லி புருதோம்

 
 
sci_3144175f.jpg
 
 
 

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்ச் இலக்கியவாதி

பிரபல பிரெஞ்ச் படைப்பாளியும் இலக்கியத்துக்கான முதல் நோபல் பரிசை வென்றவருமான சல்லி புருதோம் (Sully Prudhomme) பிறந்த தினம் இன்று (மார்ச் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிறந்தார் (1839). இவரது முழுப்பெயர், ரெனே ஃபிரான்சுவா அர்மாண்ட் சல்லி புருதோம். பள்ளிப் பருவத்தில் அறிவியலில் நாட்டம் கொண்டிருந்தார். அறிவியலில் பட்டம் பெற்றார்.

* முதன்முதலாக ஒரு தொழிற்சாலை அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். பின்னர் ஆவண எழுத்துப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றினார்.

* ஆனாலும் இவரது அறிவியல் ஆர்வம், திறன், எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும் வழக்கம் எப்போதும் இவரைவிட்டு விலகவில்லை. ஒரு படைப்பாளியாகப் பரிணமித்த பிறகும், எந்த விஷயமானாலும் அலசி ஆராய்ந்த பிறகே ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டிருந்தார்.

* நிறைய வாசித்தார். இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். முதன்முதலாக ‘தி புரோக்கன் வேஸ்’ என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். 1865-ல் ‘ஸ்டான்சாஸ் அன்ட் பொயம்ஸ்’ என்ற இவரது தலைசிறந்த கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

* ‘தி ஈவன்ட்ஸ்’, ‘தி எவிடன்ஸ்’ உள்ளிட்ட கவிதைகள் வெளிவந்த பிறகு, ஒரு கவிஞராக இவருக்குக் கிடைத்த வரவேற்பும் புகழும் முழுமூச்சாக இலக்கியப் பணிகளில் இவரை ஈடுபட வைத்தது. பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை நன்கு அறிந்திருந்த இவர், உலகப் புகழ்பெற்ற பல படைப்புகளை மொழிபெயர்த்தார்.

* ரோமானியப் புலவரும் தத்துவமேதையுமான லுக்ரிடியசின் படைப்பை பிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அன்றைய காலகட்டத்தின் ரொமான்டிஸ பாணிப் படைப்புகளுக்கு எதிர்வினையாகவும், ‘கலை கலைக்காகவே’ என்பதை வலியுறுத்தியும், நளினம், சமநிலை மற்றும் கவிதை அழகியல் தரத்தை மீண்டும் உருவாக்கும் முனைப்பில் தொடங்கப்பட்ட ‘பார்னசியன் மூவ்மன்ட்’ என்ற இயக்கத்தின் முன்னணி உறுப்பினராகச் செயல்பட்டார்.

* ‘ட்ரையல்ஸ்’, ‘தி சால்டிட்யூட்ஸ்: பொயட்ரி’, ‘தி ரிவோர்ட் ஆஃப் ஃபிளவர்ஸ்’, ‘தி வெய்ன் டென்டர்னஸ்’, ‘லா ஜஸ்டிஸ்’, ‘தி பிரிசம்’, ‘வேரியஸ் பொயம்ஸ்’ உள்ளிட்ட இவரது கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

* கட்டுரைகள், குறிப்பாக தத்துவம் குறித்தும், மதம் உட்பட பல்வேறு விஷயங்களைத் தன் விருப்பத்துக்கேற்பத் தேர்ந்தெடுக்கும் மனிதனின் உரிமைகள் பற்றியும் நிறைய எழுதினார். டைரிக் குறிப்புகளையும் எழுதி வந்தார். ‘வொர்க்ஸ் ஆஃப் சல்லி புருதோம்’, ‘வாட் டு ஐ நோ?’, ‘தி ட்ரூ ரிலிஜியன் அகார்டிங் டு பாஸ்கல்’ உள்ளிட்ட இவரது கட்டுரைகள், ‘டைரி: தாட் லெட்டர்ஸ்’ என்ற டைரிக் குறிப்பு உள்ளிட்ட அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

* 1881-ல் பிரெஞ்ச் அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 26 ஆண்டு காலம் செயல்பட்டார். ‘பிரெஞ்ச் ரிலிஜியன் ஆஃப் ஹானர்’ என்ற கவுரவம் பெற்றார். 1901-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். முதன்முதலாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.

* ஏறக்குறைய இவரது அனைத்து கவிதைகளும் தொகுக்கப்பட்டு ‘பொயட்ரி’ என்ற பெயரில் 6 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இறுதிவரை எழுதி, பிரெஞ்ச் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த உன்னதப் படைப்பாளியான சல்லி புருதோம், 1907-ம் ஆண்டு 68-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.