Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ராஜஸ்தான் சமையலறை டைல்ஸ்களில் ஜெயலலிதா முகம்!

தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்குச் சுற்றுலா சென்றவர்கள், அங்கு ஒரு உணவு விடுதி சமையலறையில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிய டைல்ஸ்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Jayalalithaa face

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற ஊருக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இருந்த ஒரு உணவு விடுதி சமையல் அறையின் தரைதளத்தில் போடப்பட்டிருக்கும் டைல்ஸ்களில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். மேலும், அங்குள்ள சந்தையில், ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டிய டைல்ஸ்கள் மலிவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் முகப்பில் ஜெயலலிதா முகம் பதித்த டைல்ஸ்களை ஒட்டுவது வழக்கம். அதற்காக தயாரிக்கப்பட்ட டைல்ஸ்கள் பிற மாநிலங்களுக்கு மலிவு விலைக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் டைல்ஸ் ஏற்றுமதி வணிகர்கள்!

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜென் கதை: வாழ்க்கை ஒரு நெடும் கனவு

காணும் கனவை எப்படி நாம் நம் விருப்பப்படி இயக்க முடியதில்லையோ, அதே போல் தான் வாழும் வாழ்வையும் முழுமையாக அதன் போக்கில் நாம் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

 
 
 
 
ஜென் கதை: வாழ்க்கை ஒரு நெடும் கனவு
 
அதிகாலை நேரம்.. தூக்கத்தில் இருந்து விழித்த ஜென் துறவி, தன்னுடைய சீடர்களை அழைத்தார். குருவின் குரல் கேட்டதும் சீடர்கள் அனைவரும் அவர் முன்பாகப் போய் நின்றனர்.

துறவி தன் சீடர்களைப் பார்த்து, ‘என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு விடை காண்பதற்காகவே உங்களை அழைத்தேன்’ என்றார்.

சீடர்களுக்கு திகைப்பு. ‘நம் குருவைத் தேடி எவ்வளவு பேர் வந்து சந்தேகம் கேட்டுச் செல்கின்றனர்? அப்படிப்பட்ட அவருக்கே சந்தேகமா?. அதுவும் நம்மால் தீர்த்து வைக்கக் கூடியதா?’.

இருப்பினும் அந்த சந்தேகத்தை அறியும் ஆவல், சீடர்களுக்கு இருந்தது. ‘என்ன சந்தேகம் குருவே?’ என்றனர்.

‘நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன். ஒரு தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களில் அமர்ந்து தேன் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென எனக்கு விழிப்பு வந்துவிட்டது. இப்போது என் கேள்வி, கனவிற்கான பலன் கிடையாது. இப்போது நான் யார்? என்பதுதான்.

சீடர்கள் திருதிருவென விழித்தார்கள்.

51F42466-47B5-4969-A832-F51114BC5E18_L_s

குரு தொடர்ந்தார். ‘கனவில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருந்தேன். விழித்த பிறகு பார்த்தால் நான் ஒரு துறவியாக இருக்கிறேன். இப்போது எது விழிப்பு? எது தூக்கம்? என்ற சந்தேகம் வந்துவிட்டது. துறவியாக நான் தூங்கிய போது கனவில் வண்ணத்துப்பூச்சியாக மாறினேனா? அல்லது அந்த வண்ணத்துப்பூச்சி தான் தூக்கத்தில் துறவியாக மாறியதாக கனவு காண்கிறதா?. நாம் விழித்த பின்புதானே அது கனவு என்பது தெரிகிறது. அதுவரை அது மிக தத்ரூபமாக அல்லவா இருக்கிறது? ஆகையால்தான் எனக்கு இந்த சந்தேகம்.

எல்லா உயிர்களுக்கும் நினைவு உண்டு. நான் ஒரு துறவி. நான் கனவில் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறினேன் என்றால், ஏன் அந்த வண்ணத்துப்பூச்சி தன் கனவில் துறவியாக மாறியிருக்கக் கூடாது?’ என்றார்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த சீடர்கள் மேலும் குழம்பிப் போனார்கள். ஒரு சீடன் மட்டும், ‘குருவே! நாங்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டோம். இதுவரை நாங்கள் நம்பி வந்த அடிப்படை கோட்பாடுகளையே இது அடியோடு தகர்த்து விட்டது. இந்தக் கணம் வரை நாங்கள் உறங்கும்போது காணும் காட்சிகளை கனவு என்றும், உறக்கம் கலைந்த பிறகு நடப்பதை நனவு என்றும் கருதி வந்தோம். இப்போது உங்கள் கேள்வி எங்களைப் பெரிய பிரச்சினைக்கு எதிரில் நிறுத்திவிட்டது. இதற்கு விடை காண எங்களுக்கு திறமை போதாது’ என்றான்.

இப்போது குரு சொன்னார். ‘நாம் இரவில் கனவு காணும்போது, பகலில் நடந்த எந்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருவதில்லை. விழிப்பு நிலையில் கனவுகள் மறந்து விடுகின்றன. நினைவுகள்தான் முக்கியம் என்றால், பகலில், இரவில் கண்ட கனவுகள் ஓரளவுக்குத்தான் ஞாபகம் வரும். ஆனால் கனவிலோ பகலில் நடந்ததில் ஓர் இம்மி அளவு கூட நினைவில் இருப்பதில்லை. பகலின் காட்சிகளை விட கனவில் நடப்பவை முழுமையாக உண்மையாக இருக்கின்றன. தூங்கச் செல்பவன் விழிக்காமல் தூங்கிக் கொண்டிருந்தால், அவன் காணும் கனவு உண்மையல்ல என்ற உணர்வே அவனுக்கு வராது.

வாழ்க்கையும் கூட ஒரு பெரிய தூக்கத்தில் நாம் காணும் தொடர் கனவாக ஏன் இருக்கக் கூடாது? மரணம் தான் அதன் விழிப்பாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். காணும் கனவை எப்படி நாம் நம் விருப்பப்படி இயக்க முடியதில்லையோ, அதே போல் தான் வாழும் வாழ்வையும் முழுமையாக அதன் போக்கில் நாம் வாழ வேண்டும்’ என்றார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பானங்களை பறிமாறும் ரோபோ

ஸ்காட்லாண்டில் நடந்த ரோபோடிக் நிபுணர்கள் கூட்டத்தில் இந்த ரோபோ பானங்களை பறிமாறியது. ரோபோக்கள் மனிதர்களின் எதிர்கால வேலைகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  • தொடங்கியவர்

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரிலிருந்து சீனாவின் ஷாங்காய் நகரை நோக்கி 12,000 கிலோமீற்றர் தூரம் ஓடும் நபர்

ஜேர்­ம­னியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்­ம­னியின் வட பிராந்­திய நக­ரான ஹம்­பர்க்­கி­லி­ருந்து, சீனாவின் கிழக்குப் பிராந்­திய நக­ரான ஷாங்­காயை நோக்கி ஓடும் பய­ணத்தை ஆரம்­பித்­துள்ளார்.

china-1

ஆசிய, ஐரோப்­பிய கண்­டங்­களின் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான நீண்ட தூர பயணங்­களை மோட்டார் வாக­னங்கள், துவிச்­சக்­க­ர­வண்­டிகள் மூலம் மேற்­கொண்­ட­வர்கள் குறித்து அறிந்­தி­ருப்போம்.

ஆனால், கெய் மார்க்கஸ் ஸியோங் எனும் இவர், தனது கால்­களின் பலத்தின் மூலம் ஜேர்­ம­னியின் ஹம்பர்க் நக­ரி­லி­ருந்து சீனாவின் ஷாங்காய் நகரை நோக்கி ஓடு­கிறார்.

C6L6g53WQAA-je_

இப்­ ப­யணத் தூரம் சுமார் 12,000 கிலோ­மீற்­றர்­க­ளாகும். கடந்த 12 ஆம் திகதி பிற்­பகல் 12.15 மணி­ய­ளவில் ஹம்பர்க் நகரில் அவர் தனது பய­ணத்தை ஆரம்­பித்தார். தற்­போது அவர் ஜேர்­ம­னியின் அயல் நாடான போலந்தை அடைந்­துள்ளார்.

இப்­ ப­ய­ணத்தை பூர்த்தி செய்­வ­தற்கு அவருக்கு 235 நாட்கள் தேவைப்­படும் என கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் நவம்பர் மாதம் அவர் ஷாங்காய் நகரை சென்­ற­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  தினம் 50 முதல் 70 கிலோ­மீற்­றர்­வரை அவர் ஓடு­கிறார்.

1111

இப் ­ப­ய­ணத்தில் அவர் மொத்­த­மாக 1 கோடியே 85 இலட்சம் அடி­களை (ஸ்டெப்ஸ்) எடுத்து வைக்க வேண்டும். தற்­போது சுமார் 150,000 அடி­களை கடந்­துள்ளார்.

44 வய­தான கெய் மார்க்கஸ் ஸியோங் இரு பிள்­ளை­களின் தந்­தையாவார். உடற்­ப­யிற்சி, உடற்­தி­டத் தைப் பேணு­வதில் தீவிர ஆர்­வ­மு­டை­யவர்.

ஜேர்­ம­னியின் பவே­ரியா பிராந்­தி­யத்தில் அவர் வளர்ந்­த­போ­திலும், சீனாவின் மீதும் அவர் நேசம் மற்றும் மதிப்பு வைத்­தி­ருக்­கி­றாராம். கெய் மார்க்கஸ் ஸியோங்கின் தாத்தா பாட்டி சீனாவைச் சேர்ந்­த­வர்கள். ஏற்­கெ­னவே சீனா­வுக்குப் பல தட­வை கள் பயணம் செய்­துள்ளார் கெய் மார்க்கஸ் ஸியோங்.

Kai-Markus-Xiong1

தனது தோளிலில் ஏற்­பட்ட வலியை மேற்­கத்­தேய மருந்­தினால் குணப்­ப­டுத்த முடி­யா­த­போது, சீன பாரம்­ப­ரிய வைத்­தி­யத்தின் மூலம் அவ்­ வலி குணப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அவர் கூறு­கிறார்.

இப்­ ப­ய­ணத்தில் கெய் மார்க்கஸ் ஸியோங்கின் பொருட்­களை அவரின் நண்­ப­ரான விக்டர் நியூபர், வொக்ஸ்­வோகன் கார் மற்றும் அத­னுடன் இணைக்­கப்­பட்ட கரவன் மூலம் கொண்டு செல்­கிறார்.

xiong110_v-vierspaltig

கெய் மார்க்கஸ் ஸியோங்­கின்  பயணம் தொடர்­பான விப­ரங்­களை www.runmysilkroad.com. எனும் இணை­யத்­த­ளத்தில் அறிந்­து­கொள்­ளலாம்.

போலந்­தி­லி­ருந்து பெலாரஸ், ரஷ்யா, கஸக்ஸ்தான், உஸ்­பெ­கிஸ்தான், கிர்­கிஸ்தான் ஊடாக சீனாவை இவர்கள் அடை­ய­வுள்­ளனர். 8 நாடு­க­ளுக்­கி­டையில் கலா­சார பாலத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது, சமூக பொறுப்­பு­டை­மையை ஊக்­கு­விப்­பது, இளம் தலை­முறை­யினர் தமது இலக்­கு­களை பின்­பற்ற உந்­துதல் அளிப்­பது, தப்­ப­பி­ரா­யங்­களைக் களை­வது ஆகி­யன இப்­ப­ய­ணத்தின் நோக்­கங்­க­ளாகும் என கெய் மார்க்கஸ் ஸியோங் கூறு­கிறார்.

 

சீனா குறித்த தyou-should-run-hereப்ப­பிப்­பி­ர­யாங்­களை நீக்­கு­வதும் தனது பய­ணத்தின் நோக்கங்களில் ஒன்று என அவர் கூறுகிறார். சீனப் பொருட்கள் தரமற்றவை என்ற கருத்தை முறியடிப்பதற்காக தனது இப்பயணத்தில் சீனப் பொருட் களை பயன்படுத்தி அவை நீடித்து உழைக்கக் கூடியவை என்பதை நிரூபிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் செய்த யூரி ககாரின் இறந்த தினம்: மார்ச் 27-1968

யூரி அலெக்சியேவிச் ககாரின்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார். யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது

 
 
 
 
விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் செய்த யூரி ககாரின் இறந்த தினம்: மார்ச் 27-1968
 
யூரி அலெக்சியேவிச் ககாரின்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955-ல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School)-ல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957-ல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

1960-ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்.

ககாரின் ஏப்ரல் 12, 1961-ல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில், நெடுஆரம் 203 மைல், குறுஆரம் 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

இவர் 1968-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி மரணம் அடைந்தார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

 

சார்லி சாப்ளினை உயரத்தில் வைத்தது எது?

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆரின் தொப்பியும்... 20 சுவையான சம்பவங்களும்...!

எம்.ஜி.ஆர்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனது வெற்றிக்கு அடித்தளமான இரட்டை இலைச் சின்னத்தை இழந்து நிற்கிறது. அதிமுக பிளவுபட்டதால் தேர்தல் கமிஷன் கொடுத்த இந்த தண்டனையை  இரண்டு அணிகளுமே அனுபவிக்கவேண்டியதாகியிருக்கிறது. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் இப்போது தினகரன் அணிக்கு வழங்கப்பட்டிருக்கும் சின்னமான தொப்பியும் கூட இரட்டை இலைக்கு ஈடாக எம்.ஜி.ஆரின் மனதுக்கு நெருக்கமான ஒரு சின்னம்தான். உண்மையில் இரட்டை இலையை விட கூடுதலாக அவரது வாழ்வில் பயணித்த ஒரு பொருள் தொப்பிதான். 

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் இரட்டை இலைக்கு உள்ள முக்கியத்துவம் போல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொப்பிக்கு தனியிடம் உண்டு. 

இரண்டு பொருட்களை நீங்கள் சொன்னால் ஒருவருக்கு எளிதாக எம்.ஜி.ஆரை நினைவுட்டிடமுடியும். அவை தொப்பியும் கறுப்பு கண்ணாடியும்! உண்மையில் எம்.ஜி.ஆர் எப்போது தொப்பி அணிய ஆரம்பித்தார் எனத்தெரியுமா...

எம்.ஜி.ஆர்எம்.ஜி.ஆருக்கு விதவிதமான தொப்பி கண்ணாடிகள் அணிவதில் சிறுவயதிலிருந்தே மிக விருப்பம்.  சினிமாவில் நடிக்கத்துவங்கிய காலத்தில் பொது இடங்களில் ரசிகர்களின் அன்புப்பிடியில் இருந்து தப்பிக்க தனது பாகவதர் கிராப் தலைமுடியை மறைக்க ஒரு துண்டை தலைப்பாகை போல தலையில் கட்டி லாவகமாக மறைத்துக்கொள்வார். 

திரைப்பட நடிகரானபின் தான் இளமையோடும் அழகோடும் தெரிவதற்கும் கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக்காட்டவும் பல படங்களில் விதவிதமான தொப்பி  அணிந்து நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப்போல் வேறொரு நடிகருக்கு தொப்பி பொருந்தியிருக்குமா என்பது சந்தேகமே.

காவல்காரன் படத்தின்போதுதான் எம்.ஜி.ஆர் சுடப்பட்டிருந்தார். இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின் எடுக்கப்பட்டவை. இதனால் பல காட்சிகளில் முகம் சோர்ந்தும் குரல்வன்மை கரகரவென கவர்ச்சியில்லாமலும் இருக்கும். படத்தில், “நினைத்தேன் வந்தாய் நுாறு வயது” பாடல் எடுக்கப்பட்ட அன்று எம்.ஜி.ஆர் வித்தியாசமாக தெரிய வெள்ளைத் தொப்பி அணிந்து சில காட்சிகளில் ஆடினார். பாடல்காட்சி முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் அங்கிருந்தவர்கள், “அண்ணே, நீங்க தொப்பியில் நீங்க 10 வயசு குறைஞ்சி தெரியறீங்க” எனப் புகழ்ந்து தள்ள, தன் இமேஜ் மீது எப்போதும் பெரிய அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு வெட்கமாகப்போய்விட்டது. தன் முகப்பொலிவும் கவர்ச்சியும் குறைந்துபோயிருந்ததாக வருத்ததத்தில் இருந்தவருக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்தது. இதன்பின்னர் வந்த படங்களில் எம்.ஜி.ஆர் விதவிதமாக தொப்பிகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினார். 

திரைப்படங்களில் மட்டும் அதுவரை தொப்பி பயன்படுத்திவந்தவருக்கு அடிமைப்பெண் திரைப்படம், நிரந்தரமாக தொப்பி அணியக் காரணமானது. படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது பாலைவனத்தில் நடந்த படப்பிடிப்பினால் எம்.ஜி.ஆர் சோர்ந்துபோனார். படப்பிடிப்பை காணவந்த நண்பர் ஒருவர் முதன்முதலாக புஸ்குல்லா எனப்படும் வெள்ளைத்தொப்பியை கொடுத்தார். ஜெய்ப்பூரின் கடும் வெயிலை தொப்பியினால்தான் எம்.ஜி.ஆரால் சமாளிக்கமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்தபின் எம்.ஜி.ஆர் அதன் பயன்பாட்டைக் கருதி தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களிலும் வெயிலை சமாளிக்க பயன்படுத்த ஆரம்பித்தார். 'தொப்பி' எம்.ஜி.ஆர் வழக்கமான எம்.ஜி.ஆரை விட இளமையாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிய தொப்பியை அன்றுமுதல் நிரந்தரமாக்கிக்கொண்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு தொப்பி அடையாளமான வரலாறு இதுதான். கண்ணாடியை ஏற்கனவே அணிந்துவந்திருக்கிறார். 

பின்னாளில் எம்.ஜி.ஆர் இந்த தொப்பியின்றி வெளியிடங்களுக்கு வருவதையோ, படம் எடுப்பதையோ விரும்பியதில்லை. தொப்பி நிரந்தரமானபின் நெருக்கமான நண்பர்கள் குடும்ப உறவினர்கள் தவிர வேறுயாரிடமும் தொப்பியின்றி காட்சி தரமாட்டார். ஆரம்பத்தில் தொப்பிக் கடைகளில் ரெடிமேட் தொப்பிகளை அணிந்துவந்த எம்.ஜி.ஆர் ரசாக் என்ற தொப்பி தயாரிப்பாளரிடம் தனக்கென பிரத்யேகமாக தொப்பிகளை தயாரித்து தர பணித்தார். இவரே எம்.ஜி.ஆருக்கு இறுதிவரை தொப்பி தயாரித்துக் கொடுத்தார். 

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் தொப்பி வழக்கத்துக்கு மாறான தன்மையில் தயாரிக்கப்படும். காஷ்மீர் போன்ற குளிர்பிரதேசங்களில் வளரும் வெள்ளை செம்மறி ஆட்டின் முடியை பதப்படுத்தி அதை பலகட்டங்களில் மேம்படுத்தி அவை தயாரிக்கப்பட்டன. இதனுள் 3 அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைக்கப்பட்டிருக்கும். சிறுசிறு வெளியே தெரியாத ஓட்டைகளினால் வெளிக்காற்று எளிதாக உள்ளே சென்றுவரும் என்பதால் தலையில் வியர்வையோ வேறு எந்த சங்கடங்களோ ஏற்படாது. அதிக எடை இல்லாத புஸ்புஸ் குல்லா தலையில் இருப்பதாகவே தெரியாது. அடிக்கடி தொப்பிகளை மாற்றும் இயல்புடைய எம்.ஜி.ஆர், மொத்தமாக  அரை டஜன் தொப்பிகளை ஆர்டர் வரவழைத்து அவற்றில் தனக்கு பொருத்தமான 2ஐ மட்டும் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அத்தனைக்கும் பணம் கொடுத்துவிடுவார். 

பின்னாளில் அவர் திமுகவிலிருந்து பிரிந்தபின் இந்த தொப்பி பெரும்பிரச்னையானது அவருக்கு.  திமுக மேடைகளில் அவரை தொப்பித்தலையா என தரம் தாழ்ந்து கிண்டலடித்தது திமுக. தலை வழுக்கையை மறைக்கவே அவர் தொப்பி அணிவதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். முதல்வரானபின் இன்னும் நிலைமை மோசம். ஆட்சியின் நிர்வாக விஷயங்களை விட்டுவிட்டு அவரது தொப்பிதான் அதிகம் விமர்சனத்திற்குள்ளானது. திமுக மேடைகளில் எம்.ஜி.ஆரை தொப்பித்தலையா என்று பேசி எம்.ஜி.ஆருக்கு எரிச்சலை தந்தனர்.  

பல சமயங்களில் ரசிகர்கள் என்ற போர்வையில் மேடையில் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிப்பதுபோல் அவரது தொப்பியை கழல வைக்க முயன்றனர் திமுகவினர். மதுரையில் ஒருமுறை அவருக்கு மாலையணிவிக்கும் சாக்கில் அவரது தொப்பியை தட்டிவிட்டார் ஒரு திமுக மாணவர். ஆனால் படங்களில் மட்டுமல்ல நிஜமாகவும் தனக்கு ஸ்டண்ட் தெரியும் என்பதை அவரிடம் நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் திமுகவினர் இந்த நேரடி சாகசத்திற்கு முற்றுப்புள்ளிவைத்தனர். ஆனால் மேடைகளில் தங்கள் தொப்பி விமர்சனத்தை கைவிடவில்லை. 

எம்.ஜி.ஆர்

இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேள்வி கேட்கப்பட்டபோது,“ நான் தொப்பி அணிவதை பலர் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்றாங்க. அந்தநாள்ல நான் ஜிப்பா போட்டிருந்தேன். பின்னாளில் காலர் வெச்ச முழுக்கைச் சட்டை போட ஆரம்பிச்சேன். ஒருமுறை சினிமா நிகழ்ச்சியில கலந்துக்கிட்டப்ப சட்டையின் கையில கிழிஞ்சிடுச்சி. அதை மறைக்க முழுங்கை வரை மடிச்சிவிட்டேன். உடனே 'எம்.ஜி.ஆர் ரவுடியைப்போல சட்டையை சுருட்டிவிட்டிருக்கார்'னு சொன்னாங்க. இதுக்கு என்ன சொல்றது. 

உடலமைப்புக்கு, பாதுகாப்புக்கு எதுதேவையோ அதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. சரி நானே ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். என் தலையில் முடியே இல்லைன்னு வெச்சிக்குவோம். அப்போ என்னை நீங்க எம்.ஜி.ஆர் னு ஏத்துக்கமாட்டீங்களா..? வடநாட்டில் இளமையான நடிகர்கள்கூட தலையில் பொய்முடி(விக்) வெச்சிக்கிட்டுத்தான் வெளியே வர்றாங்க. அதுக்கு என்ன சொல்றீங்க?... இன்னொருத்தருடைய வற்புறுத்தலுக்காக மற்றவங்க என்ன சொல்வாங்களோ, என்ன நினைப்பாங்களோங்கறதுக்காக நம்மை மாத்திக்கக்கூடாது. அத்தியாவசிய தேவைகளை குறைச்சிக்கக்கூடாது. ” என எதிர்கட்சிகளுக்கு பதிலடி தந்தார் எம்.ஜி.ஆர்.
தன் சினிமா கவர்ச்சியினால்தான் எம்.ஜி.ஆர் தேர்தலில் வென்றார் எனக்கருதி அவரது இளமை இமேஜை அடித்துநொறுக்குவது என்பதே எம்.ஜி.ஆர் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்கு காரணம்.

திமுகவின் குடும்ப இதழ் ஒன்றில் தலைமைச் செயலகத்தில் காலையிலும் மாலையிலும் எடுக்கப்பட்ட இருபடங்களை வெளியிட்டு எம்.ஜி.ஆரின் கிருதா வித்தியாசத்தைக் கூறி முதல்வருக்கு மட்டும் எப்படி சில மணிநேரங்களில் இத்தனை நீளமாக தலைமுடி வளர்கிறது என கேள்வி எழுப்பியிருந்தது திமுக. இப்படி எம்.ஜி.ஆரின் மீதான தொப்பி விமர்சனம் எல்லையற்றுப்போனது. இறுதியாக தொப்பி அரசியல் மக்களிடையே எடுபடாததால் கால ஓட்டத்தில் அந்த விமர்சனத்தை நிறுத்திக்கொண்டது திமுக.  

எம்.ஜி.ஆர்

ஆனால் திமுகவின் இந்த அஸ்திரத்தை திமுகவுக்கு எதிராகவே செயல்படுத்திய சந்தர்ப்பம் ஒன்று நிகழ்ந்தது. 1983 ம் ஆண்டு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்றைக்கு பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்கட்சியான திமுக எம்.ஜி.ஆர் அரசு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை  வைக்கப்போவதாக எம்.ஜி.ஆருக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் போனது. அதேசமயம் தொப்பி பற்றிய தாக்குதல் உச்சத்தில் இருந்தநேரம் அது. பேட்டியளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால் எம்.ஜி.ஆர் பதிலைக் கூறாமல் ஒரு காரியம் செய்தார். மெல்ல தன் தலையிலிருந்து தொப்பியை கழற்றி மேஜைமீது வைத்தார். அவ்வளவுதான் அடுத்த நொடி புகைப்பட .ஃப்ளாஷ்கள் மின்னத் துவங்கின. மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தி எம்.ஜி.ஆர் 'தலைச் செய்தி'தான். எம்.ஜி.ஆரின் தொப்பியற்ற தோற்றத்தை வெளியிட்ட பத்திரிகைகள் கருணாநிதியின் குற்றச்சாட்டை கடைசிப்பக்கத்தில் முக்கியத்துவம் இன்றி வெளியிட்டன. அதுதான் எம்.ஜி.ஆரின் சாதுர்யம். 

1984 ம் ஆண்டு தஞ்சை சென்ற எம்.ஜி.ஆர் ராஜராஜசோழன் அரண்மனைக்கு சென்றபோது மயங்கிவிழுந்தார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை பாதித்தது. அப்பல்லோவிலும் பின்பு அமெரிக்காவிலும் சிகிச்சையளிக்கப்பட்டபோது அவரது மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. நீண்டகாலமாக தலையில் தொப்பி அணிந்ததால் இது உருவானதாக சொல்லப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற சமயம் தன் இமேஜை கட்டிக்காப்பதில் பெரும் அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு ஒரு சோதனை வந்தது.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை என்பதாக தமிழகத்தில் பரவிய வதந்தியை முறியடிக்க அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆரின் பேசுவதும் சிரிப்பதுமாக வீடியோ எடுக்க திட்டமிட்டனர். வீடியோ படத்தில் தொப்பி அணியக்கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலில் வழக்கமான தோற்றத்தில் எம்.ஜி.ஆரை படம்பிடித்தது காமிரா. 

அழகும் உடல்கட்டும் கொண்ட எம்.ஜி.ஆர் பரிதாபமாக நம் வீட்டுப்பெரியவர்போல படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்த காட்சி தாய்மார்களை இன்னும் கருணைப்படவைத்தது. அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் படுத்தபடியே வென்றார். 
1987 ம்ஆண்டு டிசம்பர் மாதம் 24ந்தேதி அதிகாலை தமிழகத்தை கண்ணீர் கடலில் மூழ்கவைத்தார் எம்.ஜி.ஆர். அரைநுாற்றாண்டு காலம் தமிழகத்தின் தவிர்க்கவியலாத தலைவராக வாழ்ந்து மறைந்த  எம்.ஜி.ஆரின் உடலோடு காலம் முழுக்க அவர் நேசித்து அணிந்து மகிழ்ந்த தொப்பியையும் சேர்த்து அடக்கம் செய்தனர்.

எம்.ஜி.ஆர்

தேர்ந்த ஒரு ஓவியரால் எம்.ஜி.ஆரை வரைய ஓரிரு நிமிடங்கள் போதும். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது உங்களுக்கு எம்.ஜி.ஆராகவே தெரியும். ஆனால் இந்த இரு அடையாளங்களுமின்றி எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்த எக்காலத்திற்குமான ஒர் அடையாளம் உண்டு. அது எம்.ஜி.ஆர் தன் தலைக்கு அணிந்த தொப்பி அல்ல; தன் உள்ளத்தில் அணிந்த மனிதநேயம்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று….

மார்ச் – 28

 

193 : ரோமப் பேர­ரசன் பேர்ட்­டினெக்ஸ் மெய்ப்­பா­து­கா­வ­லர்­களால் படு­கொலை செய்­யப்­பட்டான்.


845 : ரக்னார் லொட்­புரொக் என்­ப­வனின் தலை­மையில் நடந்­த­தாகக் கரு­தப்­படும் வைக்கிங் தாக்­கு­தல்­க­ளுக்கு பாரிஸ் அடி பணிந்­தது.


1802 : ஓல்பேர்ஸ் என்­பவர் 2 பேலெஸ் என்ற சிறு­கோளைக் கண்­டு­பி­டித்தார்.


1809 : மெடெலின் என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் ஸ்பெயினை பிரான்ஸ் வென்­றது.


varalaru-28-03-20161814 : சிலியின் வால்­ப­ரெஸ்ரோ நகரில் இடம்­பெற்ற சமரில் அமெ­ரிக்க கடற்­ப­டையை பிரித்­தா­னிய கடற்­படை வென்­றது.


1879 : ஆங்­கி­லோ-­சூலு போர்: பிரித்­தா­னியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்­பெற்ற சமரில் படு­தோல்­வி­ய­டைந்­தனர்.


1930 : துருக்­கியின் கொன்ஸ்­தான்­தி­நோபிள், அங்­கோரா ஆகிய நக­ரங்கள் இஸ்­தான்புல் மற்றும் அங்­காரா எனப் பெயர் மாற்றம் பெற்­றன.


1939 : ஸ்பானிய உள்­நாட்டுப் போரில் பிரான்­சிஸ்கோ பிராங்கோ மட்ரிட் நகரைக் கைப்­பற்­றினான்.


1979 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் பென்­சில்­வே­னியா மாநி­லத்தில் ஓடும் ஸஸ்­கு­வான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலை­யத்தில் விபத்து ஏற்­பட்­டது.


1994 : தென் ஆபி­ரிக்­காவில் சூலு இனத்­த­வர்­க­ளுக்கும் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் இடையில் ஜொஹன்ஸ்பேர்க் நகரில் இடம்­பெற்ற கைக­லப்பில் 18 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1999 : கொசோவோ அல்­பே­னி­யர்கள் 146 பேர் சேர்­பிய படை­யி­னரால் கொல்­லப்­பட்­டனர். 


2005 : இந்தோனேஷியாவின் சுமத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிச்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஒரு சொல் மந்திரம்.. தள்ளிப்போ! #MorningMotivation

உங்கள் நண்பரை 15செ.மீ நீளத்துக்கு ஒரு நூலை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். அதன் ஒரு முனையில் ஒரு குச்சியையும் இன்னொரு முனையில் ஒரு சாக்பீஸையும் கட்டச்சொல்லுங்கள். குச்சியை ஒரு இடத்தில் நிலையாகப் பிடித்துக்கொண்டு கயிறை இழுத்துப்பிடித்து மறுமுனையில் உள்ள சாக்பீஸால் தரையில்  ஒரு கோட்டை நூல் அனுமதிக்கும் போக்கில் வரையச் சொல்லுங்கள். இப்போது தரையில் ஒரு வடிவத்தை உங்கள் நண்பர் வரைந்திருப்பார். அது என்ன வடிவமாக இருக்கும் என்று உங்களால் யூகிக்கமுடிகிறதா? யூகிக்கமுடிந்தால் நல்லது. 

அந்த வடிவத்துக்கு நடுவில் நீங்கள் போய் நின்று கொள்ளுங்கள். இப்போது பொறுமையாக யோசித்துப்பாருங்கள். நீங்கள் மட்டுமே அந்த வடிவத்துக்கு நடுவில் இருக்கிறீர்கள். உங்களுடைய சிந்தனை மரபைப் பொறுத்து அந்த வடிவம் தான் இந்தப் பிரபஞ்சத்தின் மையப் பகுதியாக இருக்கலாம். இந்தப் பிரபஞ்சத்தின் மையத்தில் நீங்கள் நின்று கொண்டு இருக்கலாம். நீங்கள் இன்னொரு வகையான சிந்தனை மரபைச் சேர்ந்தவராக இருந்தால் கணக்கற்ற பிரபஞ்ச மையங்களில் ஒன்று அந்த வடிவத்துக்குள் இருக்கலாம். இரண்டு சிந்தனை மரபுகளிலுமே ஏதோ ஒரு வகையில் நீங்கள் பிரபஞ்சத்தின் மையத்தில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். 

இந்த இரண்டு சிந்தனை மரபுகளையுமே சாராமல் நீங்கள் வேறு ஒரு வகையான சிந்தனை மரபில் இருந்துகொண்டு பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்தாக்கத்தையே மறுப்பவராக இருக்கலாம். ஏன் இந்தப் பிரபஞ்சத்தையே மறுப்பவராகக் கூட இருக்கலாம். இந்தப் பிரபஞ்சத்தின் மையம் ஏதோ ஒரு பட்டாம்பூச்சியின் கனவில் இருப்பதாகவும் நீங்கள் நம்பலாம். ஏன், பிரபஞ்சமே அந்தப் பட்டாம்பூச்சியின் கனவில் இயங்குவதாகக் கூட நம்பலாம். எல்லாமே உங்கள் சிந்தனையைப் பொறுத்துதான். 

இந்த சிந்தனை மரபுகள், சிந்தனைகள், கொள்கைகள், கோட்பாடுகள், லொட்டு, லொசுக்கு எல்லாத்தையும் ஒரு ஓரமா ஒதுக்கித் தள்ளிட்டு சில விஷயங்களைய் யோசிச்சுப் பார்க்கலாமா? 

உங்கள் நண்பர் வரைந்த அந்த வடிவத்தை விட்டு வெளிய வாங்க. ஒரு இரண்டு அடி அந்த வடிவத்தை விட்டு தள்ளி நில்லுங்க. நீங்கள் பிரபஞ்சத்தின் மையைத்தை விட்டு வெளியே வந்திருக்கலாம், வேறு ஒரு பிரபஞ்ச மையப்புள்ளிக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம். 

 

motivation

நீங்கள் இதுவரை அடைத்து வைத்திருந்த அந்த இடத்தில் வேறு எந்த பொருளையும் கூட அங்கே நிறுத்திப் பார்க்கலாம். அந்த வடிவத்துக்குள் நீங்கள் மட்டுமல்லாமல் வேறு எந்தப் பொருளையும் கூட அங்கே வைக்க முடியும். அல்லது நீங்கள் இழுத்துப் பிடித்து வைத்திருந்த அத்தனையையும் அங்கேயே விட்டுவிட்டுக் கூட வெளியே வரலாம். பிரபஞ்சத்தின் மையத்தையே விட்டு கூட வெளியே வரலாம்.

உங்கள் கவலைகள், துக்கங்கள், துயரங்கள், வேதனைகள், சந்தோஷம், மகிழ்ச்சி, கண்ணீர் அத்தனை இத்யாதிகளையும் அங்கேயே விட்டுவிட்டு நீங்கள் இப்போது தள்ளி நிற்கிறீர்கள். நீங்கள் இல்லாத இடத்தில் உங்கள் துக்கங்களும், சந்தோஷங்களும் எப்படி இருக்கின்றன என்பதை ஒரு முறை யோசித்துப்பாருங்கள். நீங்கள் இல்லாத உங்கள் உடைமைகள் எல்லாமே பொருளற்றவையாகத் தான் தோன்றும்.

பொருளற்ற உங்கள் கவலைகளையும் பிரச்னைகளையும் சிக்கல்களையும் எதற்காகப் போட்டு யோசித்துக்கொண்டு இருக்க வேண்டும்? அவற்றை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்?

உங்கள் பிரச்னைகளையும் கவலைகளையும் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளுள் ஒன்று அவற்றை பொருளற்றவையாக ஆக்கிவிடுவது தான்.  

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் பிரச்னைகளில் இருந்து இரண்டு அடி தள்ளி நிற்பதுதான்.

அது உங்களால் முடியவில்லை என்றால் ஒரு அடியாவது தள்ளி நில்லுங்கள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரஹானே கற்றுக்கொடுத்த 4 பாடங்கள்! #LifeLesson

rahane kohli

தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியில், காயம் காரணமாக கோலி வெளியேறியுள்ள நிலையில் ரஹானே கேப்டனாகியுள்ளார். இதேபோல் தான் எல்லாருக்குமே அலுவலகத்தில் தலைமைப் பதவிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அவர்களது உயர் அதிகாரிகள் இளம் வயதில் இருந்தால் அந்த இடத்தை அடைய நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழலில் ஏதோ ஒரு நேரத்தில் ஒரு துறையை, தற்காலிகமாக வழிநடத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிர்வாகம் உங்களைத் தலைமைப்பதவிக்கு தகுதியான நபராக டிக் அடித்து வைத்துக்கொள்ளும். அலுவலகத்தில் இந்த நான்கு விஷயங்களில் ரஹானே போல் இருக்கப் பழகுவது அனைவரையும் தலைமை பதவிக்கு பக்குவப்படுத்தும்.

1. வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்!

ஒரு அணியை வழிநடத்த எப்போதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ..அப்போதெல்லாம் உங்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள். உங்கள் அணியை வழிநடத்தி வந்த தலைவர் இப்போது இல்லை என்ற எண்ணத்தை எந்த நேரத்திலும் உங்கள் அணியை உணர வைக்காமல், உங்கள் தலைமையின் கீழும் அணியால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வையுங்கள். கோலி காயத்தால் வெளியேறிய போது இந்திய அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் கோலி சொதப்பும் டி.ஆர்.எஸ் விஷயங்களிலும் கவனமாக செயல்பட்டு ரஹானே கவனம் ஈர்த்தார். இந்த வழிமுறையை அலுவலகத்தில் உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்ளுங்கள். 

2. அணியில் ஒருவராக இருங்கள்!

தலைவனாக வாய்ப்பு கிடைத்ததும் தனித்து விடாதீர்கள். அந்த அணியில் உங்களுக்கான வேலை என்னவோ அதனைச் செய்யும் ஒரு நபராக தொடருங்கள். உங்களுக்கான இலக்கு, அதனை நோக்கிய பாய்ச்சல் என உங்களை வடிவமைத்து கொள்ளுங்கள். தலைமைப்பதவி தற்காலிகமோ அல்லது நிரந்தரமோ உங்களது தனித்துவத்தை அது எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். ஒருவேளை நீங்கள் தனித்துவமாக இல்லையெனில் உங்களால் சூழலைக் கட்டுக்குள் வைத்திருக்க தெரியவில்லை என அடையாளப்படுத்தப்படலாம். ரஹானே ஒரு தேர்ந்த நடுவரிசை பேட்ஸ்மேன் என்பதிலிருந்து ஒருபோதும் மாறவில்லை. என்னதான் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் அடுத்த போட்டியில் தான் ஒரு பேட்ஸ்மேன். கேப்டன் பதவி தற்காலிகமானது தான் என்பதை உணர்ந்து கில்லியாக செயல்பட்டுள்ளார்.

office

3. செல்வாக்குச் செலுத்துங்கள்!

நீங்கள் ஒரு நல்ல தலைவன் என்பதை மற்றவர்கள் கூறும் அளவுக்கான செயல்களில் ஈடுபடுங்கள். தற்காலிகமாக ஒரு துறையை வழிநடத்தினாலும் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள் என உங்கள் உயர் அதிகாரியோ அல்லது க்ளைண்ட்டோ கூறும் அளவுக்கு சிறப்பான வேலைகளை செய்யுங்கள். இதனைத் தான் ரஹானேயும் செய்துள்ளார். கடைசி டெஸ்ட்டுக்கு முன் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ‘கோலியை விட ரஹானே சிறப்பாக செயல்படுகிறார்’ எனக் கூறும் அளவுக்குத் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாக செய்துள்ளார். இதே விஷயத்தை தான் தற்காலிக பொறுப்பு வழங்குபவரிடம் ஒவ்வொரு நிறுவனமும் எதிர்பார்க்கிறது.

4. உங்கள் மனநிலையில் இருந்து மாறாதீர்கள்!

உங்களுக்கு முன் இருந்த தலைவர் ஆக்ரோஷமான நபராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அதற்கு மாறாக மிகவும் கூலான நபராக இருக்கலாம். தலைமைப் பதவிக்கு வந்தவுடன் ஒரு போது நீங்கள் ஆக்ரோஷமாக  மாற முயற்சி செய்யாதீர்கள். உங்களது கூல் மனநிலைக்கு அணியை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது உங்களது தலைமையை உங்கள் குழுவும், நிர்வாகமும் ஏற்றுக்கொள்ளும். இல்லையெனில் உங்களுக்கும் முந்தைய தலைமைக்கும் வித்தியாசமில்லை என்று கூறிவிடுவார்கள். கோலி தலைமையில் ஸ்லெட்ஜிங் செய்த வீரர்கள் ரஹானே தலைமையில் ஸ்லெட்ஜிங் செய்யாமல் ஆடுவதுதான் ரஹானே தலைமையின் சிறப்பம்சம். இது தான் ஒரு தலைவனை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. 

இந்த நான்கு விஷயங்களும் - ரஹானே விஷயத்தில் அவர் ஒரு தற்காலிக கேப்டன் என்றாலும் - அவரது தலைமையை பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இதே போல் ஒரு அலுவலகத்தில் தலைமை வாய்ப்பு கிடைக்கும் ஒருவர் இந்த விஷயங்களை கவனமாக கையாண்டால்,  எந்த வயதில் இருந்தாலும் உரிய நேரத்தில் உங்களை தேடி தலைமைப் பதவி வரும்.

கெத்து காட்டுங்க!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கேலிக்குள்ளான சிறுமிக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக தனது சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்ட ஆசிரியை

பிரேஸிலைச் சேர்ந்த பாடசாலை மாணவியான ஒரு சிறுமியின் தலைமயிர் குறித்து சிலர் கேலி செய்ததால், அம் மாணவிக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக அச் சிறுமியைப் போன்று ஆசிரியை ஒருவரும் சிகையலங்காரம் செய்துகொண்டுள்ளார்.

பிரேஸிலின் சாவோ பவ்லோ நகரைச் சேர்ந்த அனா பார்பரா ஃபெரைரா எனும் இந்த ஆசிரியை தனது புதிய சிகையலங்காரத்துடன் மேற்படி மாணவியின் அருகிலிருந்து பிடித்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Teacher--Ana-Bárbara-Ferreira

மேற்படி மாணவியின் தலைமயிர் அசிங்கமாக உள்ளது என மாணவன் ஒருவன் கூறியதால் அம் மாணவி மிகவும் கவலை யடைந்திருந்ததாக ஆசிரியை அனா பார்பரா ஃபெரைரா தெரிவித்துள்ளார்.

“அம் மாணவி அழகாக இருக்கிறாள். சிலர் கூறுவதைப் பற்றி கவலையடைய வேண்டியதில்லை என்பதை மாத்திரமே அத் தருணத்தில் என்னால் கூற முடியும்” என பேஸ்புக்கில் அவர் எழுதியுள்ளார்.

1

ஆசிரியை அனா பார்பராவின் முந்தைய சிகையலங்காரங்கள்


ஆனால், வெறும் வார்த்தைகளால் மாத்திரம் அம் மாணவிக்கு ஆசிரியை அனா பார்பரா ஆறுதல் கூறவில்லை. மறுநாள் அச் சிறுமி பாடசாலைக்கு வந்தபோது தனது ஆசிரியை அனா பார்பராவும் தன்னைப் போன்ற சிகையலங்காரம் செய்திருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தாள்.

“அவள் என்னைக் கண்டவுடன், ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டாள். நான் அழகாக இருப்பதாக அவள் கூறினாள். அப்போது நான் உன்னைப் போல் அழகாக இருக்கிறேன்” என அவளிடம் கூறினேன்” என அனா பார்பரா ஃபெரைரா தெரிவித்துள்ளார்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

உதயநிதி ஸ்டாலினின் 'சரவணன் இருக்க பயமேன்'-ட்ரெய்லர்

Sara_1_10538.jpg

'கெத்து', 'மனிதன்' ஆகிய திரைப்படங்களின்மூலம் மீண்டும் ஹிட் அடிக்க ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படத்தின்மூலம் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குத் திரும்பியுள்ளார். அவருடன், ரெஜினா, சூரி மற்றும் பலர் நடிக்க, படத்துக்கு இசையமைத்து இருக்கிறார், டி.இமான். எழில், படத்தை இயக்கியுள்ளார். முதல்முறையாக, சூரி-உதயநிதி கூட்டணியில் காமெடி காம்போ படத்தில் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. 

 

 

 

 
  • தொடங்கியவர்

இந்தக் கேரளக் கோயிலில் முதலைக்குத்தான் முதல் பிரசாதம்!

கேரள மாநிலம், காசர்கோடு வட்டத்திலுள்ள கும்பளாவில் இருக்கிறது அனந்தபுரம். திருவனந்தபுரம் போலவே இங்கும் அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில், இப்பகுதி மக்களுக்கு ரொம்பவே விசேஷம். கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் காண்பித்து முடித்ததும் முதல் பிரசாதம் இங்குள்ள முதலைக்குத்தான்.

பச்சைப் பசேலென பசுமைகட்டி நிற்கும் கேரளத்து வயல்கள் அங்கங்கே இருக்கும் ஆறுகள், சின்னச்சின்ன ஏரிகள் என இவையெல்லாமே மனதுக்கு மிகவும் இனிமையானவை. இத்தனையும் கடந்து போனால் வருகின்றது அனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோயில்.

பிரசாதம் முதலைக்கு வழங்கும் கோயில்

தலவரலாறு:

வில்வ மங்கல சுவாமிகள் என்பவர், அனந்தப்புராவில்  நாராயணனுக்கு பூஜைகள் செய்து தவவாழ்வு வாழ்ந்து வந்தார். ஒரு நாள், பேரழகுமிக்க ஒரு சிறுவன் அவரது நந்தவனத்தில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தான். ஆளரவமற்ற இந்த வனப்பகுதியில் இத்தனை பேரழகுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் யாராக இருக்கும் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. தன் உள்ளத்து எண்ணத்தைக் கேள்வியாக்கி அச் சிறுவனிடம் யாரென்று வினவினார். 

''நான் ஒரு அனாதை. என்னை கவனிக்க யாருமில்லை'' என்று கூறினான் அந்த சிறுவன். 'என்னோடு வா... நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றேன்'' என அழைத்தார் சுவாமிகள் . 

''உங்களுடன் வருகின்றேன். என்னை சிறிதளவே அவமானப்படுத்தினாலும், இங்கிருந்து கிளம்பிவிடுவேன்" என்று பெரிதாக ஒரு நிபந்தனை விதித்தான் சிறுவன். 

கோயில் பழைய படம்


மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதெனப் பேசும் சிறுவனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவராக தன்னுடனே அழைத்துச் சென்று தனது வீட்டிலேயே வைத்து வளர்த்தார். 

தீராத விளையாட்டுப் பிள்ளையாக வளர்ந்த அந்த சிறுவன், ஒருநாள் பூஜைக்கு வைத்திருந்த பால் முழுவதையும் குடித்து விட்டான். இதனால் கோபமுற்ற சுவாமிகள் சிறுவனை கோபித்துக் கொண்டார். அந்தக் கணமே, ''இனிமேல் நீ என்னைக் காண வேண்டுமானால் அனந்த காட்டுக்குத்தான் வரவேண்டும்" என்று கூறி மறைந்தான் சிறுவன்.

 

கோயில் தோற்றம்

உள்ளம் துடிதுடித்துப்போன வில்வமங்கல சுவாமிகள், சிறுவனை  பல வித துன்பங்களுக்கு இடையேத் தேடி அனந்தபுர காட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கே இலுப்பை மரத்தில் சிறுவனைக் கண்டு மகிழ்ந்தார். அடுத்த கணமே அங்கே நாராயணன் அனந்த சயனக் கோலத்தில் காட்சி தந்தார்.  இதுகாறும் தன்னுடன் வாழ்ந்தது, தன்னிடம் விளையாடியது எல்லாமே ஶ்ரீமன் நாராயணன்தான் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்து வணங்கி நின்றார். அந்த இடமே இப்போது ஆலயம் உள்ள இடமாகும்.      

ஏரி

இது கிபி 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயில் ஒரு ஏரியின் மத்தியில் இருக்கின்றது. கேரளாவில்  ஏரியின் நடுவில் இருக்கும் ஒரே கோயில் இதுதான். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இந்தக் கோயிலை  கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக ஒரு முதலை காவல் காத்துக் கொண்டு வருகின்றது. கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் காண்பித்து முடித்ததும் முதல் பிரசாதம் இங்குள்ள முதலைக்குத்தான். கோயில் குருக்கள் பிரசாதத்துடன் வந்து முதலையை அழைக்கிறார். முதலையும் ஏரியில் எங்கிருந்தாலும் இங்கு வந்து பிரசாதத்தைப் பெற்றுக்கொள்கின்றது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல்  பகல் 12.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை
பூஜை நேரங்கள்:
காலை: 7.30 மணி
பிற்பகல்: 12.30 மணி  
இரவு : 7.30 மணி

பிரசாதம் முதலை
 

முதலைக்கு பிரசாதம் கொடுக்கும் நேரம்: 

காலை 8.00 மணி,  பகல்: 12.00 மணி

எப்படிச் செல்வது?

கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் காசர்கோடிலிருந்து கும்ப்ளே வரை ரயிலிலோ பஸ்சிலோ சென்று, அங்கிருந்து கார் அல்லது ஆட்டோவில் செல்லலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

கான்கிரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கிய சிறுவன்

போஸ்னியாவில் கெரிம் அஹ்மெட்சஸ்பாஹிக், 111 கான்கிரீட் பலகைகளை 35 நொடிகளில் தன் தலையால் உடைத்து நொறுக்கினார். டேக்வாண்டோ என்ற தற்காப்பு கலையை பயிலும் பதினாறு வயதான இவர் இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

  • தொடங்கியவர்

ஆமையின் ஓட்டுக்குள் ஒரு பிராட்காஸ்ட் நிலையம்..! நம்பமுடியாத அதிசயம்

இன்னும் சில ஆண்டுகளில் இப்படி நடக்கலாம். நாட்டின் எல்லையில் அந்த இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவர்கள் நின்று கொண்டிருக்கும் அந்த புல்வெளிகளின் ஊடே ஒரு ஆமை மெதுவாக நகர்ந்து வரும். ஆமை தானே போகிறது என அவர்கள் அதைப் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். அது உயிருள்ள ஆமையா என்று வேண்டுமானால் அவர்கள் சந்தேகம் கொண்டு ஆராய்ந்துப் பார்க்கலாம். அது உயிருள்ள ஆமை என்றதும் அதைக் கீழே விட்டுவிடுவார்கள். அவர்களுக்குத் தெரியாது, அந்த ஆமையின் மூளை முழுக்க முழுக்க ஒரு மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது. தம் எல்லையிலிருக்கும் ராணுவ முகாம்களை வேவு பார்க்க அது வந்திருக்கிறது என்பது. சமயத்தில், மனித வெடிகுண்டு போல், அது ஆமை வெடிகுண்டாகவும் மாறலாம். ஏனெனில், அதைக் கட்டுப்படுத்துவது ஒரு மனித மூளை. 

மனிதர்கள் கட்டுப்படுத்தும் ஆமைகள்

இது என்  கற்பனையோ, சினிமாக் கதையோ அல்ல. இது இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு. இயந்திரங்களை உருவாக்கி, அதைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அறிவியல் ஆச்சர்யங்கள் இனி கிடையாது. உயிருள்ள உயிரினங்களின் மூளையை ஊடுருவி அதைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பூச்சிகளை வைத்து இது போன்ற ஆராய்ச்சிகளை மெற்கொண்டு வந்தனர். தற்போது, ஆமையைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் தென் கொரிய விஞ்ஞானிகள். 

மனிதர்களின் தலையில் "ஹெட் மவுண்டட் டிஸ்பிளே " (Head Mounted Display) ஒன்று மாட்டப்படும். இதில் BCI எனப்படும்  " Brain Computer Interface" மற்றும் CBI " Computer Brain Interface" ஆகியவை இணைக்கப்படும். இவை மனித மூளையை கணிணிக்கும், கணிணியின் உத்தரவுகளை மூளைக்கும் கடத்தும் கருவியாக செயல்படும். அதே போன்று ஆமையின் முதுகில் ஒரு கேமரா, வைஃபை ட்ரான்ஸ்சீவர், கம்ப்யூட்டர் கன்ட்ரோல் மாட்யூல் மற்றும் ஒரு பேட்டரி ஆகியவைப் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், கூடுதலாக ஒரு அரை  - உருளை (Semi-Cylinder) வடிவிலான உணர் கருவியும் (Sensor) அதன் முதுகில் பொருத்தப்பட்டிருக்கும். 

ஆமைகள் மனிதர்களுக்கு கட்டுப்படும்

ஆமையின் முதுகிலிருக்கும் கேமராவிலிருந்து அதன் சுற்றத்தை HMD பொருத்திய மனிதரால் உணர முடியும். இதைக் கண்டு அந்த மனிதர் ஒரு ஆமையாக மாறிட முடியும். அதாவது, " நெய்நிகர் யதார்த்தம்" (Virtual Reality) போன்ற முறையில், அவன் இருக்கும் இடத்திலிருந்தே ஆமை இருக்கும் இடத்திற்குப் போனது போன்ற உணர்வு ஏற்படும். அவனிடம் இருக்கும் BCI மற்றும் CBI அந்த மனிதனின் எண்ணங்களை EEG சிக்னல்களாக மாற்றி ஆமைக்கு சென்றடையச் செய்யும்.அதன் முதுகிலிருக்கும் உணர் கருவி (Sensor), மனிதன் செலுத்த நினைக்கும் திசைகளை அவைகளுக்கு உணர்த்தும். அதன்படி, அந்த ஆமையும் நகர்ந்து செயல்படும். 

உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க ஆமையை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆமைக்கு இயற்கையிலேயே இருக்கும் அறிவாற்றல், தடைகளை கண்டுணர்ந்து நகரும் இயல்பு, ஒளிகளின் அலைக் கீற்றை வேறுபடுத்த முடிகிற திறன் ஆகியவையே இந்த ஆராய்ச்சிக்கு இதை தேர்ந்தெடுக்க காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். 

இன்னும் சில ஆண்டுகளில் இப்படியும் நடக்கலாம். மனிதன் அடைய முடியாத ஆழ்கடலில் எத்தனையோ ஆச்சரியங்கள் புதைந்துக் கிடக்கின்றன. ஒரு ஆமையாய் மாறி மனிதன் ஆழ்கடலில் பயணித்து பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியலாம். மாயமான MH 370 மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்கலாம், சிதம்பரம் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இப்படி இந்த ஆராய்ச்சியின் எதிர்காலம் எதுவாகவும் இருக்கலாம். அறிவியல் ஆராய்ச்சிகள் அழிவிற்கானவை அல்ல... முதல் பத்தியை தேர்ந்தெடுப்பதா, கடைசிப் பத்தியைத் தேர்ந்தெடுப்பதா என்பது மனிதர்களின் கைகளில் தான் இருக்கின்றன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசெய்னின் பிறந்தநாள்.
இப்பொழுது இவர் ஒரு முன்னணி நேர்முக வர்ணனையாளர்
Happy Birthday Nasser Hussain

Bild könnte enthalten: 1 Person, Text

நடிகை சோனியா அகர்வாலின் பிறந்தநாள் இன்று...
Happy Birthday Sonia Agarwal

 

  • தொடங்கியவர்

ஜென் கதை- இருக்கலாம்!

jen3_1757634h.jpg
 

ஜப்பானில் ஒரு விவசாயி இருந்தார். எந்நேரமும் வயலில் வேலையே கதியாக அவர் இருப்பார். ஒரு நாள் அவரது பண்ணையில் வேலை பார்க்க வைத்திருந்த ஒரு குதிரை ஓடிப்போய்விட்டது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், அவரது அண்டை வீட்டினர் "என்ன ஒரு துரதிருஷ்டம்" என்று அவரிடம் வருத்தத்துடன் கூறினர்.
அதற்கு அந்த விவசாயி, "இருக்கலாம்" என்றார்.
அடுத்த நாள் காலை எதிர்பாராத வகையில் அந்தக் குதிரை அவரிடமே திரும்ப வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் குதிரையுடன் மூன்று காட்டுக் குதிரைகளும் வந்திருந்தன. "என்ன ஒரு ஆச்சரியம்" என்று அண்டை வீட்டினர் கூறினர்.


அதற்கும் அவர் "இருக்கலாம்" என்றே கூறினார்.
அதற்கு அடுத்த நாள், பழக்கப்படாத அந்தக் குதிரைகளில் ஒன்றின் மீது ஏறிய விவசாயியின் மகன், குதிரையைச் செலுத்த முயன்றான். அந்தக் குதிரை அவனைத் தூக்கியெறிய, அவனது கால் ஓடிந்து போனது. அப்போது விவசாயியின் அண்டை வீட்டினர், அந்த அசம்பாவிதம் தொடர்பாக அனுதாபமாகப் பேசினர்.
 "இருக்கலாம்" என்று மீண்டும் கூறினார் விவசாயி.
அதற்கு அடுத்த நாள், ராணுவத்துக்கு இளைஞர்களைச் சேர்ப்பதற்காக ராணுவ அதிகாரிகள் அந்த ஊருக்கு வந்தனர். விவசாயி மகனின் கால் உடைந்திருந்ததால், அவர்கள் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. கடைசியில் விஷயங்கள் எப்படி விவசாயிக்குச் சாதகமாக மாறிவிட்டன என்று கூறி, அண்டை வீட்டினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போதும் அவர் சொன்னார், "இருக்கலாம்".

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

28.03.1868: உலகப் புகழ் பெற்ற 'தாய்' நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று!

 

 
kaarky

 

மாக்சிம் கார்க்கி என்று அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் ரஷ்ய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'தாய்' என்ற புதினத்தை எழுதினார்.

மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 28.03.1868-இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். இவரது 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார்.

வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார்.

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர் 18.06.1936 அன்று மரணம் அடைந்தார்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  பனிக்கட்டி ஹோட்டல் (Photos)

 


சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  பனிக்கட்டி ஹோட்டல் (Photos)
 

சுற்றுலாப் பயணிகளின் ரசனைகள் வித்தியாசப்பட்டு வரும் நிலையில் அதனை உணர்ந்த விடுதி நிறுவனங்களும் விந்தையான விடுதிகளை கட்டுமானங்கள் அதிசயிக்க வைத்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது சுவீடனில் உள்ள ஐஸ் ஹோட்டல் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகி இருக்கிறது.

பருவ காலத்திற்கு ஏற்ற மாதிரி பனிக்கட்டியால் உருவான எத்தனையோ ஐஸ் ஹோட்டல்கள் இருந்து வந்தாலும், நிரந்தமாக இயங்கும் வகையில் ’ஐஸ் ஹோட்டல் 365’ விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், அம்சமான சுவர்கள் என ஒவ்வொன்றுமே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 2100 சதுர மீட்டர் கொண்ட இந்த ஐஸ் ஹோட்டலில் 20 அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுபோக்கிற்காக நாய்கள் பூட்டப்பட்ட சறுக்கு வண்டிகளில் சவாரி செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முப்பதாயிரம் லிட்டர் நீரைக் கொண்டு இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுக்கு 50,000 சுற்றுலாப்பயணிகள் வந்து தங்கிச் செல்கின்றனர்,

5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் சோலார் பேனல் மூலம் உருவான மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதி ஏதேனும் காரணங்களால் உருக ஆரம்பித்தால், மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

1

3

3C8FC3E700000578-4160900-image-a-21_1486107283563

4

5

6

7

8

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

மூளை வளர பழங்கள் காரணமா?

  •  

நம் முன்னோர்கள் பழங்களை தேடி உண்டதால் அந்த செயல்கள் அவர்களின் மூளை பெரிதாக வளர உதவியிருக்கும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.

மூளைபடத்தின் காப்புரிமைMEGAN PETERSDORF

இந்த கண்டுபிடிப்பு சமூக உறவுகள் தான் நமது அறிவு வளர காரணம் என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு கருத்துக்கு சவாலாக உள்ளது.

140க்கும் மேற்பட்ட குரங்குகள் மற்றும் மனிதக் குரங்கு வகையை சார்ந்த இனங்களின் உணவு நுகர்வு மற்றும் சமூக நடத்தையை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

இரண்டு விதமான குரங்குகளின் மண்டை ஓடுகள்படத்தின் காப்புரிமைMEGAN PETERSDORF

தங்களது உணவில், இலைகளை விட பழங்களை அதிகமாக உண்ட விலங்குகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அவற்றில் மூளை பெரிதாக இருப்பதாக அவர் கூறுகின்றனர்.

சமூகத்தில் இணைந்து இருப்பதற்கான தேவையை விட, எளிதாக அணுகமுடியாதபடி உள்ள பழங்களை தேடி அவற்றை உரித்து உண்பது போன்ற செயல்கள்தான் அவர்களின் மூளை வளர்வதற்கு முக்கியமாக இருந்திருக்க முடியும் என்று ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பிபிசி தமிழ்

  • தொடங்கியவர்
வேரறுக்காது விட்டால்…
 
 

article_1490763350-vazhkai-muzhumai-adaiநெஞ்சத்தில் வஞ்சனைகள், கோபம், குரோதங்களை வேரறுக்காது விட்டால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உறக்க நிலைக்குச் சென்றுவிடும்.

மனம் தன்வழியில் இயங்கிட அனுமதிக்கலாகாது. தீயவர்கள் கெட்ட மனதைத் தட்டிக் கொடுத்து அதனை விஷ்வரூபமாக்கி விடுகின்றனர்.

இதனை அடக்கி ஒடுக்குவதற்கு நல்லறிவு அவசியமானது. மனம் திரிபுபட்டால், அறிவு, புலன்களுக்குப் புரிவதில்லை.

நல்ல நுணுக்கமான சமூகப்பார்வை, சிறந்தவை மட்டும் கேட்பது, பார்க்கக் கூடாதவைகளை விழித்து, விரித்துப் பார்க்காமல் நல்வழியை மட்டும் நோக்குதல், நற்சிந்தனை கேட்பது, உடலுக்கு ஊறு செய்யும் உணவுகளைத் தவிர்ப்பதும்தான் இந்த ஆன்மாவைத் தூய்மையுறச் செய்யும்.

எல்லோரினாலும் செய்யக்கூடிய இவைகளை மறுக்க எண்ணுதல் மகா பாவம். உலக விழிப்பு மலர தனி மனித ஒழுக்கம் அவசியம்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கோலியின் கோபம், ஸ்மித்தின் பிரைன் ஃபேட் சிக்கல்கள்... அலுவலகத்தில் உங்களுக்கும் இருக்கிறதா? #BrainFade #MorningMotivation

Brain fade

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகும் வார்த்தை 'ப்ரைன் ஃபேட்' (Brain Fade) என்பது தான். இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் இந்த வார்த்தை வைரலனாது. முதலில் ஆஸ்திரேலிய மீடியாக்கள் இந்தியா முதல் டெஸ்ட்டை தோற்ற போது கோலி 'ப்ரைன் ஃபேட்' பிரச்னையால் அவதிக்குள்ளாகியுள்ளார் என விமர்சித்தன, பின்னர் இரண்டாவது டெஸ்ட்டில் பெவிலியனை நோக்கி ரிவ்யூவுக்கு பரிந்துரை கேட்டும், ஜடேஜாவின் பந்தை கவனிக்காமல் ஸ்டெம்புகள் சிதறி வெளியேறிய ஆஸி கேப்டன் ஸ்மித் 'ப்ரைன் ஃபேட்' பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விமர்சனம் எழுந்தது.

ப்ரைன் ஃபேட் என்றால் என்ன?

தற்காலிகமாக திடீரென சரியாக யோசித்து செயல்பட முடியாமல் போவதை தான் ப்ரைன் ஃபேட் என்கிறார்கள். ‘மூளை மழுங்கிடுச்சு’ என்பார்களே.. அப்படி. இது போன்ற பிரச்னை மாணவர்களுக்கும், அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கும் அடிக்கடி ஏற்படும். இதனைச் சமாளிக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். 

களத்தில் நின்று கொண்டு முடிவெடுக்காதீர்கள்:

ப்ரைன் ஃபேட் ஏற்பட முக்கிய காரணம். குறிப்பிட்ட சூழலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு சரியாக சிந்திக்க முடியாமல் செயலற்றுப் போவது தான். அப்படி இருக்கும் போது ப்ளான் ஏ மற்றும் ப்ளான் பி ஆகிய இரண்டையும் தயாராக வைத்திருங்கள்.  ஒருவேளை ப்ளான் ஏ சொதப்பினால், ப்ளான் பி-யை செயல்படுத்துங்கள். ஒரு செயலின் பாதியில் நின்று கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருப்பது தவறான முடிவுக்கு தான் அழைத்து செல்லும். கோலியும், ஸ்மித்தும் அந்த தவறை செய்ததுதான் அவர்களைத் தோல்விக்கு அழைத்து சென்றது.   

சூழலை கூலாக வைத்திருங்கள்:

அமைதியாக இருப்பது என்பது ஒரு பெரிய கலை. ஆக்ரோஷம் என்பது நல்ல விஷயம் தான், ஆனால் அது உங்களது சூழலை கெடுக்காத வரையில்தான்.  சூழலுக்குத் தொந்தரவை ஏற்படுத்தினால் அது உங்கள் கவனத்தை இலக்கிலிருந்து மாற்றிவிடும். ‘ஸ்லெட்ஜிங்’ என்பதை தொடர்ந்து செய்தால் மனம் ஸ்லெட்ஜிங்கில் இருக்குமே தவிர வெற்றியையும், ஆட்டத்தில் இக்கட்டான நேரத்தில் முடிவை எடுக்கவு உதவாது. அலுவலகத்திலும் இதே நிலை தான் மிகவும் பரபரப்பாக இருப்பதோ, உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு விழுந்தடித்து வேலை செய்வதோ, மற்றவரை அதட்டி வேலை வாங்குவதோ இலக்கை எட்ட உதவாது. சரியான திட்டமிடல், செயல்படுத்துதல் போன்றவை தான் இலக்கை நோக்கி நகர்த்தும். அப்படி கூலான சூழலில் இருப்பவரால் மட்டுமே ப்ரைன் ஃபேடில் சிக்காமல் இருக்க முடியும்.

brain fade

கட்டாய ஓய்வு அவசியம்:

ப்ரைன் ஃபேட் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணர்ந்தால் ஒரு நாள் முழு ஓய்வை தேர்ந்தெடுங்கள். அதில் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் மனம், உடல் இரண்டுக்கும் ஓய்வளியுங்கள். அது உங்களை உற்சாகப்படுத்தும். புத்துணர்ச்சியுடன் அடுத்த நாளை துவங்குங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். கவனம் எங்கும் சிதறாமல் இலக்கை நோக்கி செல்வீர்கள்.

ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ளுங்கள்:

நீங்கள் வெற்றி பெறுபவராக இருக்கலாம், அதிகமான அழுத்தத்தை ஈஸியாக கையாளுபவராக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல தலைவராக இருக்க ஆளுமைத் திறன் என்பது அவசியம். அணியில் ஒருவர் பிரச்னை கொடுக்கிறார், சூழலின் அமைதியை கெடுக்கவும் முயற்சிக்கிறார் என்றால் அவரை அமைதியாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதனை விட்டு அவர்களுக்கு ஊக்கமளிக்க கூடாது. கோலி, இஷாந்த் ஷர்மாவையும், ஸ்மித், மேக்ஸ்வெல்லையும் தடுக்காததுதான் அவர்களை ப்ரைன் ஃபேடுக்கு அழைத்து சென்றது. ஒற்றைக்கண் அசைவில் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரும் தோனி, ஒபாமா போன்றவர்களைத்தான் இந்த உலகம் தலைசிறந்த தலைவர்களாக கொண்டாடுகிறது.

ப்ரைன் ஃபேட் என்பது ஏதோ நோய் அல்ல, அது ஒரு பிரச்னை தான். அதற்கு இந்த விஷயங்களை சரியாக பின்பற்றி நடந்தால் முக்கியமான நேரத்தில் தடுமாறாமல் இருக்கலாம். அப்பறம் என்ன கோலி, ஸ்மித்தை காட்டிலும் நீங்க தான் கெத்து பாஸ்....!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

மார்ச் – 29 

 

1632 : கனடாவின் கியூபெக் பிராந்தியம் ஆங்கிலேயர்களிடமிருந்து பிரெஞ்சுக்காரரிடம் கைமாறியது.


1792 : 13 நாட்களுக்கு  முன்னால் சுடப்பட்டிருந்த சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தார்.


1831 : துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.


1849 : இந்தியாவின் பஞ்சாபை பிரித்தானிய படைகள் கைப்பற்றின.


1857 : பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். சிப்பாய் கலகம் எனும் கிளர்ச்சியே இது வாகும் பின்னர் இது இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.


varalaru-march--291867 : கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்திற்கு பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.


1879 : ஆங்கிலோ-சூலு போர்: தென் ஆபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் 20,000 பேர் கொண்ட சூலு படையை வென்றனர்.


1945 : இரண்டாம் உலகப் போர்: வி-1 எனும் ஜேர்மனியின் பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.


1971 : வியட்நாமின் மை லாய் படுகொலைகள் தொடர்பாக, அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


1973 : தெற்கு வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகளின் கடைசி துருப்புகள் வெளியேறின.


1974 : நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.


1999 : இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 103 பேர் உயிரிழந்தனர். 


2004 : பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.


2004 : அயர்லாந்து, உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் புகைத்தலை தடை செய்த முதல் நாடாகியது.


2005 : யாஹு 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.


2013 : சீனாவின் திபெத் பிராந்தியத்தில் மண்சரிவு காரணமாக சுமார் 66 பேர் இறந்தனர். 


2014 : மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தல்களில் ஐ.ம.சு.கூட்டமைப்பு வெற்றியீட்டியது.

http://metronews.lk

  • தொடங்கியவர்

லெக்கின்ஸ் ஆபாச உடையா?

அமெரிக்க விமானத்தில் பயணிக்கவந்த இரு பெண்கள் லெக்கின்ஸ் அணிந்திருந்ததால் தடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

  • தொடங்கியவர்

பாடசாலையில் திருடுவதற்காக சென்ற நபர் ; வேலியில் காற்சட்டை கொழுவியதால் தலைகீழாக தொங்கினார்

பாட­சா­லை­யொன்றில் திரு­டு­வ­தற்­காக நுழைந்த திருடன் ஒருவன் தப்பிச் செல்ல முற்­பட்­ட­போது, வேலியில் காற்­சட்டை கொழுவிக் கொண்­டதால் தலை­கீ­ழாக தொங்­கிய சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

fence-copy

அரி­சோனா மாநி­லத்தின் டக்சன் நக­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் நுழைந்த இந்­நபர், அங்­கி­ருந்து வெளியே­று­வ­தற்­காக இரும்பு வேலிக்கு மேலாக பாய்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

 

இதன்­போது, அவரின் காற்­சட்டை வேலியில் கொழுவிக் கொண்­டது. இத னால், அந்­நபர், தலை­கீ­ழாக தெங்­கி­ய­வாறு காணப்­பட்­டதை ஜெசி சென்­சிபார் என்­பவர் படம்­பி­டித்­துள்ளார்.

 

''அந்­ந­ப­ருக்கு உத­வு­வற்கு நான் முயன்றேன். நான் அவரை நெருங்­கி­ய­போது இரு கார்­களில் பொலிஸார் அங்கு வந்­தனர். பின்னர் 15 நிமி­டங்­களின் பின்னர் நான் அவ்­வ­ழியே வீடு திரும்­பி­ய­போது, அந்­ந­ப­ருக்கு பொலிஸார் கைவி­லங்­ கிட்டு, பொலிஸ் காரின் பின் ஆசன மொன்றில் அமர வைத்திருந்தனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.