Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கணவன் மனைவி இடையே பிரியம் பெருக்கும் 10 பழக்கங்கள்!

கணவன்

 

'ஒருவனுக்கு ஒருத்தி...' 
சொல்லும்போதே காதுகள் இனிக்கிறதல்லவா? சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்வு மொத்தமும் அங்கேயே தொடர்ந்தால், மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும்? தம்பதியரின் கைகளில்தான் அதற்கான மந்திரச் சாவியும் உள்ளது. 'இவன் எனக்குத்தானே', 'இவள் எங்கே போய்விடப்போகிறாள்?' என்கிற எண்ணத்தில், தனது இணைக்கு சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கான வாய்ப்பை அளிக்கத் தவறும்போது, அந்த உறவே சிக்கலாகிறது. தனது விருப்பம், ஆர்வம் எல்லாவற்றையும் ஒத்த அலைவரிசையில் தன்னைப் புரிந்துகொள்கிற இன்னொருவரிடம் கொட்டத் தொடங்கி, அதுவே ஆழமான நட்பாக வேரூன்றுகிறது. கணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது? கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இதோ அவை... 

* இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். அது, ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இருக்கலாம். 

* எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள். 
ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும். 

* ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும். 

கணவன்

 

* தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள். 

* ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்..உணவு, உடை உட்பட. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும். 

* சோஷியல் மீடியாக்கள் இரண்டாவது துணை அல்லது இணை என்பது போல ஆகிவிட்டது. குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது. 

* ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும் அது உரிமையற்ற உறவு. எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதுபோன்ற உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான பாதுகாப்பு. 

* காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள். 

* கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும். 

* பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். 'நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்' என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும். ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிக்க இனிக்க வாழுங்கள். வாழ்த்துக்கள்! 

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எத்தியோப்பியாவில் பழங்குடியினர் இடையே நடைபெறும் விநோதப் போட்டி (படங்கள் இணைப்பு)

 

எத்தியோப்பியாவில் பழங்குடியினரிடையில் வருடா வருடம் இடம்பெறும் விநோத போட்டி இவ்வருடமும் இடம்பெற்றுள்ளது.

தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஓமோ ஆற்றின் அருகில் போடி எனப்படும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியன இவர்களின் பிரதான தொழிலாகும். மேலும் ஆற்றின் கரையோரங்களில், கோப்பி மற்றும் சோளம் போன்ற பயிர்ச் செய்கைகளிலும் ஈடுபடுவர்.

nintchdbpict000312297609.jpg

குறிப்பாக இந்த இனத்தின் ஆண்கள் மிகவும் பருத்த தோற்றத்தில் காணப்படுவர். இவர்கள் கூடுதலாக காட்டு தேனை உண்டு வருவதால் இவ்வாறு உடல் பருத்து காணப்படுவர்.

சிலவேளை இங்குள்ள ஆண்கள் இடுப்பை சுற்றி மாத்திரம் பருத்தி துணித் துண்டை அணிவார்கள். அல்லது நிர்வாணமாக இருப்பார்கள்.

இந்நிலையில் இந்த பழங்குடியினர் இடையே வருடா வருடம் விநோனமான போட்டியொன்று இடம்பெற்று வருகின்றது. அதாவது ஆண்களின் பருத்த உடலின் இடையளவை அளந்து பார்ப்பதாகும்.

nintchdbpict000312297620.jpg

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள திருமணமாகாத ஆண்கள் இந்தப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்பது இவர்களின் மரபு.

இப்போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு பழங்குடியினரால் கேடயம் வழங்கப்பட்டு புகழ் சூட்டப்படும்.

இப்போட்டியில் பங்கு பெறும் ஆண்கள் போட்டி நடைபெறுவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னரே மாட்டின் பாலையும், இரத்தத்தை உணவாக உட்கொள்வார்கள். 

nintchdbpict000312297623.jpg

போட்டியில் பங்குபெறும் ஆண்கள் ஆறு மாதங்களுக்கு தாம் தங்கயிருக்கும் குடில்களுக்கு  செல்ல முடியாது. இவர்களுக்கு தேவையான பால் மற்றும் மாட்டின் இரத்தம் போன்றவற்றை ஒவ்வொரு நாள் காலையிலும் பெண்கள் கொண்டுச் சென்று கொடுப்பார்கள்.

இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற போட்டியிலும் ஒருவர் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

nintchdbpict000312297644.jpg

nintchdbpict000312297647.jpg

nintchdbpict000312297848.jpg

nintchdbpict000312297923.jpg

nintchdbpict000312298397.jpg

nintchdbpict000312298403.jpg

Untitled-2.jpg

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

உலகின் முதலாவது தங்கப் பாதணி

 

 

இத்தாலியை சேர்ந்த பாதணி தயாரிப்பவர் ஒருவர் உலகின் முதலாவது 24 கரட் தங்கத்தலான செருப்பை உருவாக்கி தயாரித்துள்ளார். 

3EB0BB4E00000578-4357326-image-a-167_149

துரின் நகரைச் சேர்ந்த அந்தோனியோ வியட்றி என்ற மேற்படி நபர் முப்பரிமாண ஊடுகாட்டும் கருவியின் உதவியுடன் அளவீடுகளை மேற்கொண்டு 230 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி இந்த செருப்பை உருவாக்கியுள்ளார். 

3EB0BB5700000578-4357326-image-a-169_149

இதன் பெறுமதி 21,000 ஸ்ரேலிங் பவுணாகும். இதனை எண்ணெய் வளம் மிக்க செல்வந்த பிராந்தியமான வளைகுடா பிராந்திய சந்தையில் விற்பனை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

3EB0BC8500000578-4357326-image-a-170_149

 
 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

முல்தானில் முச்சதம் விளாசி பாகிஸ்தானுக்கு ஷேவாக் மரணபயம் காட்டியதை மறக்க முடியுமா?! #ThrowbackMemories #OnThisDay

2004ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்று.  காரணம், இந்த தொடரில் தான் வீரேந்திர ஷேவாக் 300 ரன்கள் அடித்து அசத்தினார். இதுதான் முதன்முறையாக ஒரு இந்திய வீரர் முச்சதம் அடிப்பது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் ஜிம்பாவேவிற்கு எதிராக 380 அடித்ததே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர்.

12 ஆண்டுகளுக்கு முன், இந்த நாளில் அந்த சாதனை நிகழ்ந்தது. இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் நியூஸ் சேனல்களிலும் ஷேவாக்கின் முகம் வந்து காட்சியளித்தது. ஒரு 26 வயது இளைஞனை கொண்டாடித் தீர்த்தது கிரிக்கெட் உலகம். சச்சின் சச்சின்... என்று  குரல்கள் மேலோங்கி நின்றுகொண்டிருக்க , அதே தருணத்தில் தன் பெயரையும் நிலை நிறுத்தினார்  வீரு. அந்த சமயத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு என ஆடுபவர் ஆகாஷ் சோப்ரா. அவரும் ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கினார்கள். பலத்த எதிர்ப்பார்ப்புடன் நடந்த இந்த போட்டி முல்தானில் நடைபெற்றது. நிதானமாக ஆடிய இந்த ஜோடி 160 ரன்கள் சேர்த்தது. சோப்ரா 42 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பிறகு, அவருடன் சேர்ந்த அணியின் கேப்டன் டிராவிட் அவ்வளவாக சோபிக்கவில்லை. வெறும் 6 ரன்கள் எடுத்து சமியின் வசம் வீழ்ந்தார். பிறகு, கைகோர்த்த சச்சினும் ஷேவாக்கும்  பாகிஸ்தான் பௌலர்களை திக்குமுக்காட செய்தனர். சிறப்பாக ஆடிய ஷேவாக்  இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். அரங்கம் முழுதும் ஷேவாக் பெயரை சொல்ல ஆரம்பிக்க, இவரது ஆட்டம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்த்தது. சச்சினும் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக விளாசினார். முதல் நாள் முடிவில் அணியின் ஸ்கோர் 356 அதில் ஷேவாக் 228 ரன்களும் சச்சின் 60 ரன்களும் எடுத்து களத்தில் நின்றிருந்தனர்.

வீரேந்திர சேவாக்

இரண்டாம் நாள் (மார்ச் 29, 2004) இந்த ஜோடியின் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அதிரடியாக ஆடிய ஷேவாக் பாகிஸ்தான் பௌலர்களை கதறவிட்டார். இதற்கு முன், ஒரு இந்திய வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 281. விவிஎஸ் லஷ்மன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2001ல் அடித்திருந்தார். இந்த சாதனையை ஷேவாக் முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார். சச்சினை போலவே, இவருக்கும் ஸ்டாமினா அதிகம்.. பெரிய அளவில் இந்திய அணியில் ஜொலிப்பார் என்றல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர் கிரிக்கெட் விமர்சகர்கள். 281 ரன்னை அவர் தாண்டியதும் ஒட்டுமொத்த இந்தியாவுமே இவரின் 300க்காக காத்திருந்தது.  

அதன் பிறகு, இவர் சந்தித்த ஒவ்வொரு பந்துகளையும் இந்திய முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் உன்னித்து கவனிக்க ஆரம்பித்தனர். 300 ரன்களை நெருங்கப் போகிறோம் என்ற பதட்டம் சிறிதளவும் இல்லாமல் பாகிஸ்தானின் புயல் வேக பந்துகளை எதிர்கொண்டு ஆடினார். 294 ரன்களில் வந்து நிற்க மைதானமே அமைதியில் இருந்தது. காரணம், இவர் தன் அதிரடி ஆட்டத்தால் 300 ரன்களை பூர்த்தி செய்வார் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் இருந்தது. சக்லைன் முஸ்தக் பந்தில் ஷேவாக் இரண்டு அடி எடுத்து வைத்து இறங்கி வந்தார். பந்து தரையில் இருந்து மேலே எழ ஆரம்பித்த அந்த நொடி, ஷேவாக்கின்  பேட் பந்தை விளாசியது.   எதிர்முனையில் இருந்த சச்சின் உட்பட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரின் பார்வையும் வானத்தை நோக்கியது. அரங்கமெங்கும் நிறைந்திருந்த ரசிகர்கள் ஒரு கணம் மூச்சுவிட மறந்து பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மைதானத்தில் இருந்த கேமராமேன் பந்தை நோக்கி கேமராவை திருப்ப, மைதானம் மட்டுமல்லாமல் வீட்டில் இருந்து பார்த்த அனைவரின் முகமும் ஒருவிதமான அதிர்ச்சியுடன் தலையை திருப்பிப் பார்க்க..

பந்து பவுண்டரி கோட்டை தாண்டி விழுந்தது. சிக்ஸர்!

இந்த சிக்ஸர் இவரது சாதனைக்கு வழிவகுத்தது. அடுத்த நிமிடம் ஹெல்மட்டை கழற்றி பேட்டை உயர்த்தி சிரித்தார் அதிரடி நாயகன் வீரு. ஓடி வந்து எதிர்முனையில் இருந்த ஜாம்பவான் சச்சினை கட்டித்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சிக்ஸரின் மூலம் 300 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷேவாக். 309 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சமி வீசிய பந்தில் முதல் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த டஃபிக் உமரின் வசம் பிடிப்பட்டார். 375 பந்துகளில் 309 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த இந்தியாவையே தன் பக்கம் திருப்பியிருந்தார்.  இதில் 39 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இந்த ஜோடி 336 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானை ஒரு கை பார்த்தது. அடுத்து விளையாடிய லஷ்மண்  29 ரன்களும், யுவராஜ் சிங் 59 ரன்களும் எடுத்தனர். இறுதி வரை தன் நிதான ஆட்டத்தில் 194 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார் சச்சின் டெண்டுல்கர். இந்தியா 675 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

வீரேந்திர ஷேவாக்

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 407 ரன்கள் எடுத்தது, ஃபாலோ ஆனில் விளையாடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு சுருண்டது. இந்த இன்னிங்ஸில் கும்ப்ளே 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். ஆக, இந்திய 52 ரன்களுடன் இன்னிங்ஸில் வெற்றியும் பெற்றது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த போட்டிக்கு பிறகு, (மார்ச் 28) சென்னையில் நடைபெற்ற தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வாசிம் ஜாஃபரும் ஷேவாக்கும்   இணைந்து முதல் விக்கெட்டிற்கு 213 ரன்கள் சேர்த்தனர். 278 பந்துகளில் 300 ரன்களை தாண்டி குறைந்த பந்துகளில் முச்சதமடித்து சாதனை புரிந்தது மட்டுமல்லாமல் 319 ரன்கள் குவித்து மீண்டும் வரலாற்றில் இடம் பிடித்தார் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன். இதில் 42 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் ஷேவாக்.. ஏப்ரல் 2004 ல் இங்கிலாந்திற்கு எதிராக மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர நாயகர் ப்ரைன் லாரா 400 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கம்பீரமாக நின்றார். அதுவே, இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர். இதுவரை இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த வரிசையில் ஷேவாக் மட்டும் தனிமையில் இருந்தார். பின், கருண் நாயர் 303 ரன்கள் குவித்து அந்த வரிசையில் இடம்பிடித்தார். ``இந்த வரிசையில் ரொம்ப நாட்களாக தனிமையில் இருந்தேன்.. என்னை அந்த தனிமையில் இருந்து விடுவித்துவிட்டாய்`` என்று தம்ஸ் அப் காட்டி கருண் நாயரை வாழ்த்துகள் சொல்லி வரவேற்றார் இந்த மழலை சிரிப்பு கொண்ட மகத்தான பேட்ஸ்மேன்.

டெஸ்ட், ஒரு நாள், டி20 என எந்த ஃபார்மெட்டாக இருந்தாலும் ``இது தான் என் ஸ்டைல்.. என் வழி தனி வழி.. ``என்று தன் அதிரடி பாணியின் மூலம் கிரிக்கெட் உலகில் தனி இடத்தினை பிடித்துள்ளார் என்று சொன்னால் அதற்கு ஷேவாக்கின் உழைப்பும் மன உறுதியும் தான் காரணம்.  ஷேவாக்கின் இடத்தை நிரப்ப ஒருவர் மீண்டும் பிறந்து வரணும்!

வீ மிஸ் யூ வீரு பாய்...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கொடுக்கும்போது எடுக்கும் எண்ணம் நுழையலாகாது
 

article_1490850741-help.jpgநாங்கள் அனுபவிக்கும் சந்தோசங்கள் பெரும்பாலும் எமது சுயத்துக்கானது. 

ஆனால், எங்களால் பிறருக்கு அளிக்கும் சந்தோசங்களே முழுமையான எமது அகத்தில் எழுச்சியை நல்கும் களிப்பு நிலையாகும்.

எமது முயற்சி, உழைப்புகளை எமக்கு மட்டும் வழங்குவதால், எங்களது கடமைகளை முழுமையாகச் செய்ததாகக் கருதமுடியாது.

இன்று புண்ணியம் செய்கின்றவர்களின் எண்ணங்கள் அதற்கான பிரதிபலன்களை எதிர்பார்ப்பதால் அது ஒரு வியாபார நிலைக்குச் சமமாகி விடுகின்றது.

கொடுக்கும்போது அதனூடு எடுக்கும் எண்ணம் நுழையலாகாது. பரந்த மனப்பாங்கு என்பது இயல்பாகச் சுரக்கும் மனக் கசிவு ஆகும்.

உலோபித்தனமானவர்கள் தங்கள் இதயத்தைப் பூட்டி, அதனை அடிமைப்படுத்தும் கொடிய செயலைப் புரிபவர்களாகின்றனர். வழங்குபவனுக்கு சந்தோசம் நிரந்தரம். 

Yarl 19

19ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கடவுளின் ஃபேஸ்புக் அக்கவுண்டும்.. காவியன் அடைந்த தெளிவும்! #MorningMotivation

Morning Motivation

இளஞ்சூரியன் வானை பொன் மஞ்சளாக்கிய தன் பயணத்தை தொடங்கியிருந்த அதிகாலை நேரம். கண்களை கசக்கியவாறு படுக்கையிலிருந்து எழுகிறீர்கள். கண்களை திறந்து பார்த்தால் உங்கள் முன் ஒரு மங்கலான உருவம் தெரிகிறது. நன்றாக விழித்துப் பார்க்கிறீர்கள் உங்கள் முன் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஒரு நபர் அமைதி கலந்த புன்னகையோடு உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் அவரை நீங்கள் எங்குமே பார்த்தது இல்லை. வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்ற குழப்பத்தோடு சுற்றிலும் பார்க்கிறீர்கள். யாரும் வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த சூழலை நன்றாக யோசித்து பாருங்களேன். என்ன செய்வீர்கள்? பதறியடித்து எழுந்து, யாரையாவது கூப்பிடுவீர்கள்தானே!? 

அப்படி ஒரு தருணம் காவியனுக்கும் வாய்த்தது. ஐடி நிறுவனம் ஒன்றில் கடை நிலை ஊழியன். காலை 9  முதல் மாலை 5 வேலை நேரம்.  முந்தைய நாள் இரவு இரண்டு மணி வரை தன் தோழியிடம் அலைபேசியில் பேசி விட்டு 3 மணிக்கு தான் தூங்கியிருந்தான். அந்த பெண் அவனது காதலி. அந்தப் பேச்சில் முழுக்க முழுக்க அவனுடைய புலம்பல்கள் தான் நிறைத்திருந்தன என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். புலம்பல்கள் என்றால் தன்னை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும், அலுவலகத்தில் எவ்வளவு உழைத்தாலும் அடுத்த படியில் கால் வைக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையும் அவன் காதலியிடம் சொல்லிப் புலம்பியிருந்தான். இந்தக் கவலை அவனது அன்றாட நிகழ்வுகளையும் பாதிக்கத் தொடங்கியிருந்தது. தோழியிடம் இரவு புலம்பித்தள்ளிவிட்டு எழுந்தவன் முன் தான் கடவுள் தோன்றியிருந்தார். பதறியடித்து எழுந்தவன் முன் அமைதியாக அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தவர் தன்னை கடவுள் என்று தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதனால், நாமும் அவரை கடவுள் என்றே வைத்துக் கொள்வோம்.

வீட்டில் வேறு யாரும் இல்லை, இவரை முன் பின் பார்த்ததும் இல்லை. வெள்ளை வேட்டி, சட்டை, முகத்தில் எந்த கவலையும் இல்லாத பிரகாசமான புன்னகை. கத்தி ஊரை கூட்டலாம் என்று பார்த்தால் யாரை கூப்பிடுவது என்று கூட தெரியவில்லை. அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் முகம் கொடுத்துக் கூட பேசியதில்லை. என்ன செய்வது என்ற குழப்பத்தில் திகைத்து படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தவனிடம் கடவுளே பேசத் துவங்கினார்.

"பயப்படாதே தம்பி, நான்தான் கடவுள்."

இவ்வளவு கனிவான வார்த்தைகளை அவன் கேட்டே பல நாட்கள் ஆகியிருந்தது. புதிய மனிதர் வேறு நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். இது எல்லாம் சேர்ந்து கோபத்தில் கத்தத் துவங்கினான்.

"என்னாது கடவுளா?  இங்கே எதுக்குங்க வந்திங்க? நீங்க தேடி வந்திருக்கிற ஆள் நானில்லை பக்கத்து வீட்டுல இருக்காங்க. அங்கே போங்க" 

"தம்பி, பொறுமையாக நான் சொல்வதைக் கேள். எந்த கவலைகளும் மனதில் இல்லாமல், இப்படி சிரிப்பவனை இதற்கு முன் எங்காவது பார்த்திருக்கிறாயா? இதற்கு மட்டும் பதில் சொல் நான் உடனே கிளம்பி விடுகிறேன்."

morning motivation

இந்த பதில் கொஞ்சம் அவனை யோசிக்க வைத்ததில் அமைதியானான் காவியன். ‘கடவுளோ, யாரோ கொஞ்சம் பேச்சுக் கொடுத்துதான் பார்ப்போம; ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு ஒரு மேட்டர் சிக்கியிருக்கு. ஏதாச்சும் தேறுதான்னு பார்ப்போம்’ என மனதில் நினைத்துக் கொண்டு பேசத் துவங்கினான்.    

"சரி உட்காருங்க கடவுள் சார். உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு இங்க வந்தீங்க?"

பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டவர், 

"பெரிய விஷயம் ஒண்ணுமில்லை தம்பி. ஃபேஸ்புக்கில் எனக்கும் ஒரு அக்கவுண்ட் இருக்கிறது. அதில் மனிதர்கள் பதிவிடுகிற ஃபோட்டோக்களையும், ஸ்டேட்டஸ்களையும் படிப்பது தான் என் பொழுதுபோக்கு. அதில் யாருக்காவது பிரச்னை இருப்பது தெரியவந்தால் உடனே அவர்கள் முன் தோன்றி ஆறுதலாக நாலு வார்த்தை பேசுவேன். என்னுடைய ஃபாலோயர் லிஸ்ட்டில் நீயும் இருக்கிறாய். சமீப காலமாக உன்னுடைய ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் சோக மயமாகவே இருக்கிறது. என்னாச்சு உனக்கு? என்னிடம் சொன்னால் முடிந்ததை செய்ய பார்க்கிறேன்."

"சார், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. உடனே இடத்தைக் காலி பண்ணுங்க.. போலீசைக் கூப்பிடுவேன்." எனச் சொல்லி போனை எடுத்து போலீசுக்கு அழைக்க முயற்சித்த காவியனின் மொபைலில் காலிங் டூ கடவுள் எனக் காட்டியது. தன் 'ஆரஞ்ச்' மொபைலை எடுத்துக் காட்டி சிரித்தவர்.

"நீ யாருக்குக் கூப்பிட்டாலும், அது எனக்குத் தான் வரும். பயப்படாமல் உன் கவலைகளை என்னிடம் பகிர்ந்து கொள்." என சொன்னவரைப் பார்த்து வியர்த்து கொட்டியது காவியனுக்கு.

"உண்மையாவே நீங்க கடவுள் தானா?" பயம் கலந்த மரியாதையுடன் பேசத் துவங்கினான் காவியன்.

"ஆம், சொல் உனக்கு என்ன பிரச்சனை. உலகம் முழுவதும் ஒரே சோக ஸ்டேட்டஸாக எல்லோரும் போட்டுக் கொண்டிருந்தால் எனக்கு போரடிக்கும் அல்லவா? அதனால்தான் நானே களத்தில் இறங்கிவிட்டேன். என்னால் முடிந்ததை செய்யலாமென்று..."

அமைதியாக தன் பிரச்னைகளை சொல்லத் துவங்கினான் காவியன் "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல சார். நல்ல நண்பர்களையே அமைச்சுக்க முடியல. யாருகிட்டயும் முகம் கொடுத்து பேச தயக்கமா இருக்கு. இதுக்கெல்லம் என்ன காரணம்னே தெரியல. உங்கள மாதிரி எந்த கவலையும் இல்லாதவங்களை பாக்கறதே அதிசயமா இருக்கு. நம்பறதுக்கே பயமா இருக்கு. நான் உங்ககிட்ட வரமெல்லாம் கேட்கல. நீங்கதான் இதெல்லாம் சரியாகுறதுக்கு ஒரு யோசனை சொல்லுங்க, சரி பண்ணப் பாக்குறேன். அதையும் சுருக்கமா சொன்னீங்கன்னா இன்னும் நல்லது." எனச் சொல்லி முடித்து அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ‘பையன் ஃபேஸ்புக் மட்டுமில்லாம, ட்விட்டருக்கும் மேட்டர் தேத்தறான்.. அதான் சுருக்கமா கேக்கறான்’  என்று நினைத்துக் கொண்டார்.  

MorningMotivation

"நீ ஃபேஸ்புக்லதான் ஆக்டிவா இருக்க. நாம அந்த ரூட்லயே போவோம். நீ ஒரு ஸ்டேட்டஸ் போட்டதும் என்ன பண்ணுவ?”

“போட்டு அஞ்சு நிமிஷத்துல அதுக்கு லைக்ஸ் எவ்ளோ வந்திருக்குனு பார்ப்பேன்”

“அப்பறம்?”

“கமெண்ட்ஸ் என்ன வந்திருக்குனு பார்ப்பேன். நல்ல கமெண்ட்ஸை லைக் பண்ணுவேன். பிடிக்காதத டிலீட் பண்ணுவேன்”

“அப்பறம்?”

“என் ஸ்டேட்டஸை யாரும் ஷேர் பண்ணிருக்காங்களானு பார்ப்பேன்”

“உனக்கு ஆயிரத்துச் சொச்சம் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா இந்த 4 வருஷத்துல உன் ஒரு போஸ்டுக்கு கிடைச்ச அதிகபட்ச லைக்ஸே, 359. கரெக்டா?”

“கில்லியா இருக்கீங்களே.. ஆமா கடவுளே. வெள்ள நிவாரண டைம்ல..”

“அது எந்த  ஸ்டேட்டஸ்ங்கறத விடு. அப்ப பாக்கி ஆயிரம் பேரு டிஸ்லைக் பண்ணிருக்காங்களா?”

“அதுல டிஸ்லைக் பட்டனே இல்லையே? அப்டினு சொல்ல முடியாது. படிச்சுட்டு டக்னு போயிருக்கலாம். ஆனா அது 100க்கு மேல ஷேர் ஆச்சு. அதுல ஒண்ணு ரெண்டு பேஜ்ல ஆனது 10000 லைக்ஸ்லாம் வாங்கிச்சு” - உற்சாகமானான் காவியன்.

“அவ்ளதான் காவியா லைஃப். ஃபேஸ்புக்லயே டிஸ்லைக் பட்டன் இல்ல. வாழ்க்கைல எதுக்கு நமக்கு எத்தனை டிஸ்லைக்ஸ் வந்திருக்குனு யோசிச்சு யோசிச்சு மருகற? ஆயிரம் பேருக்கு மேல பார்க்கலன்றத விட, 300க்கு பேருக்கு மேல பார்த்து விரும்பியிருக்காங்கங்கறதுதானே சந்தோஷம் தருது. ஆஃபீஸ், பொதுவெளில ஏன் எல்லாரும் பாராட்டலனு யோசிக்காத. ஒருத்தராவது பாராட்னாங்களா, உன் வேலை பத்தி பேசினாங்களானு யோசி.

நல்ல விஷயங்கள், பாஸிடிவான விஷயங்களை மட்டும் ஷேர் பண்ணு. வெளில இல்ல. உனக்குள்ள. உன் மனசுக்குள்ள. அப்பறம் என்னென்ன மேஜிக் நடக்குதுன்னு பாரு”

காவியன் கொஞ்சம் முகம் பிரகாசமாகி, புன்னகைக்க ஆரம்பித்தான். கடவுளின் மொபைலில் ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது.

“நம்ம ஃபாலோயர்தான். தேனம்மானு பேரு. ஏதோ புலம்பிருக்காங்க. அவங்க ட்விட்டர் ஆளு. இதே கதையை ரிட்வீட், லைக்ஸ், ட்வீட்னு உல்டா பண்ணிச் சொல்லணும். வர்ட்டா?” என்று புறப்பட்டார் கடவுள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

2017 சோனி விருதுகள் சிறந்த புகைப்படங்கள்

 

2017 சோனி விருதுகள் சிறந்த புகைப்படங்கள்

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஒரு நொடியை பில்லியனால் வகுக்கும் நாசா கடிகாரம்!

 

ஒரு நொடியை பில்லியனால் வகுத்தால் என்ன எண் கிடைக்குமோ, அந்த நேரத்தைக்கூட அளவிடும் கடிகாரத்தை, நாசா கண்டு பிடித்துள்ளது. இது, லேசர் பீம்களோடு இணைக்கப்பட்டு, விண்கலத்துக்கும் கோள்களின் தரைப் பரப்புக்கும் உள்ள தொலைவைக் கண்டறிய முடியும் என்றும், ஒளியின் வேகத்தில் நகரும் பொருளின் தூரத்தை அறிய இது உதவும் என்றும் கூறியுள்ளனர். 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏர்போர்ட்டுக்கு ரொனால்டோ பெயர்!

ronaldostatue_07191.jpg

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மடெய்ரா தீவில் அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு, போர்ச்சுக்கல்லின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயரை அந்நாட்டு அரசு சூட்டி, அவரை கெளரவப்படுத்தியுள்ளது. நான்கு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற இவர், போர்ச்சுக்கல்லின் அடையாளமாக விளங்குகிறார். இங்கு, அவரது உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.ரொனால்டோவின் குடும்பத்தினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

 

’பிரெக்சிட்’க்கு உதவிய 50ம் விதி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக கருதப்படும் ’பிரெக்சிட்’ வெளியேற்றத்தை சாத்தியப்படுத்தியது விதி எண் 50.

article 50

பிரிட்டன் பிரிவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியபின் நிறைவேற்றப்பட்ட பிரெக்சிட் மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியது லிஸ்பன் உடன்படிக்கை (EU's Lisbon Treaty )  50-வது விதி. 250 வார்த்தைகள் நிறைந்த இந்த 50ம் விதிதான் பிரிட்டன் தனி நாடாவதற்கான உரிமையை வழங்கியுள்ளது.

லிஸ்பன் உடன்படிக்கை விதி 50-ன் படி ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள எந்தவொரு நாடும் விரும்பினால், நாடாளுமன்ற ஒப்புதலுடன் தனித்து செயல்படும் நாடு என்ற உரிமையைப் பெறும். தற்போது, பிரிட்டன் தனது சொந்த அரசியலமைப்புச் சட்டத்துடன் வெளியேறலாம். மேலும், இவ்விதிப்படி வெளியேறும் நாட்டிற்கு இரண்டு வருட காலம் வர்த்தகம், இடம்பெயர்வு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை சார்ந்த சட்டநடைமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட பேச்சுவார்த்தைக் கால அவகாசம் வழங்கப்படும். தவறும் பட்சத்தில் எவ்வித புதிய ஒதுக்கீடுகளும் வழங்கப்படமாட்டாது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள இந்த 50ம் விதியை உபயோகிக்கும் முதல் நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இளம்வயதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பட்டம்! அசத்தினார் சென்னை இளைஞர்

இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டராக, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன் பட்டம் பெறுகிறார். 

sri

இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டராகத் தேர்வுபெற்றிருக்கும் ஸ்ரீநாத் நாராயணன், நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டராகவும் கருதப்படுகிறார். சமீபத்தில் நடந்த ’ஷார்ஜாஸ் மாஸ்டர்ஸ்- 2017’ உலக செஸ் போட்டியில், ஸ்பெயினின் டேவிட் ஆண்டன் கிஜாரோவை வீழ்த்தி, பட்டம் பெற்றுள்ளார். 

எட்டு வயதிலேயே, தேசிய அளவில் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த ஸ்ரீநாத், தனது 14-வது வயதில் சர்வதேச மாஸ்டரானார். தொடர்ந்து ஆசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல பட்டங்களை வென்றவர். இதுவரை ஐந்து மாஸ்டர் பட்டங்களை தன்வசம் வைத்துள்ளார். உயர்ந்த அங்கீகாரமாக ’இந்திய கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்த இளம் வீரரை, முன்னாள் செஸ் சாம்பியன் காமேஸ்வரன், கிராண்ட் மாஸ்டர் ரமேஷ், இந்திய பிரபல செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆன்ந்த் ஆகியோர் வாழ்த்தி, தங்கள் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெயிட்டுள்ளனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் ராஜ நாகம் - வைரலாகும் கலக்கல் வீடியோ

கர்நாடக மாநிலத்தில் உள்ள காய்கா கிராமத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று காட்டிலிருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது. அந்த காய்கா கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக ஊரில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை. அதனால் பாம்பு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்தது. 12-அடி நீளமுள்ள அந்தப் பாம்பிற்கு பயந்த பொதுமக்கள் வனத்துறைக்கு போன் செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். காட்டிற்குள் விடுவதற்கு முன்னர் அந்த பாம்பிற்கு பாட்டிலின் மூலம் தண்ணீர் கொடுத்தனர். அந்த ராஜ நாகம் பாட்டிலின் மூலம் தண்ணீரை பருகியது.

 

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஐந்தில் வளைந்தது, 98லும் வளைகிறது -- யோகா பாட்டி நானம்மாள்

 

கோயம்புத்தூரைச் சேர்ந்த 98 வயதான நானம்மாள், தற்போதும் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, கற்றுக்கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக ஜனாதிபதியின் பெண் சக்தி விருதை வென்றிருக்கும் நானம்மாள், இந்தியாவின் மிக வயதான யோகா ஆசிரியராவார்.

சில மாதங்களுக்கு முன்பாக கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும், தற்போதும் கடினமான பயிற்சிகள் செய்வதை அவர் விடவில்லை. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக யோகா பயிற்சியைச் செய்துவரும் நானம்மாளின் குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் தற்போது யோகாவைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

  • தொடங்கியவர்

ஜப்பானியர்களின் ‘என்றும் 16’ இளமையின் ரகசியம் இதுதான்!

உலக நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், பாரம்பர்யத்துக்கும், ஒழுக்கத்துக்கும், வாழ்வியல் முறைகளுக்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்வது ஜப்பான். ஆரோக்கியமான மக்கள் வசிக்கும் நாடும் இதுதான். குறிப்பாக, ஜப்பானியர்களின் வயதை அவ்வளவு எளிதாக யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. காரணம், அவர்கள் உடல்வாகு அப்படி! அழகிலும் சரி... ஆரோக்கியத்திலும் சரி...  இவர்கள் என்றும் 16 (!). அதைத் தக்கவைத்துக்கொள்ள இவர்கள் பின்பற்றும் 6 விஷயங்கள்... 

ஜப்பானியர்களின் சரிவிகித உணவு

சத்தான, சரிவிகித உணவு!

ஜப்பானியப் பெண்களின் உணவுப் பட்டியலில் கண்டிப்பாக இடம்பிடித்திருப்பவை... காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, கடற்பாசி, சோயா, அரிசி, மற்றும் கிரீன் டீ. இவை அனைத்துமே முதுமையைத் தள்ளிப்போடும் ஆற்றல் கொண்டவை. அதோடு, உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் தரக்கூடியவை. கவனிக்க... ஜப்பானியப் பெண்கள் பெரும்பாலும் ஜங்க் ஃபுட் மற்றும் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவை விரும்ப மாட்டார்கள்.

தவிர்க்கக்கூடாதது காலை உணவு! 

`காலையில், அரசனைப்போலச் சாப்பிட வேண்டும், இரவில், ஏழையைப்போல சாப்பிட வேண்டும்’ என்று கூறுவார்கள். இதைத் தவறாமல் பின்பற்றுபவர்கள் ஜப்பானியப் பெண்கள். அவர்களுடைய காலை உணவில் சூப், டீ, மீன், அரிசி சாதம், காய்கறிகள் இவை எல்லாம் தவறாமல் இடம்பிடித்திருக்கும். அதே நேரத்தில் மதிய மற்றும் இரவு உணவு கடினமாக இல்லாமல், எளிதில் செரிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள்.

அரிசி

ரொட்டியைவிட அரிசிதான்  பெஸ்ட்!

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்களின் உடல்பருமனுக்கு மிக முக்கியமான காரணம், ரொட்டி! ஜப்பானியப் பெண்கள் ரொட்டியைவிட அரிசி உணவுகளையே அதிகம் விரும்புவார்கள். அந்த அரிசி உணவுகளையும் உப்பு அல்லது சர்க்கரையைச் சேர்க்காமல்தான் சமைப்பார்கள். அதனுடன், காய்கறிகள் மற்றும் மீன்களை அதிக அளவில் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.

சமைக்கும் முறையில் வித்தியாசம்!

ஜப்பானியர்களின் சமைக்கும் முறை சற்றே வித்தியாசமானது. உணவை வேகவைப்பது, தீயில் வாட்டுவது, தவாவில் குறைந்த அளவு எண்ணெயில் வறுப்பது போன்ற ஆரோக்கியமான வழிமுறைகளையே பின்பற்றுவார்கள். காய்கறிகளை மிகப் பொடியாக  நறுக்குவார்கள். இதனால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்; அவற்றின் சத்துகளும் அப்படியே இருக்கும். அதோடு, செரிமான மண்டலம் சீராகச் செயல்படுவதற்கு உணவில் குறைந்த அளவே மசாலா மற்றும் கார வகைகளைச் சேர்ப்பார்கள். அஜினோமோட்டொ, கேசரி பௌடர் போன்றவற்றை ஜப்பானியப் பெண்கள் சேர்ப்பதில்லை.

உண்ணும் முறை

உண்ணும் முறை 

உணவை உண்பதற்கு குச்சிபோன்ற வடிவில் இருக்கும் சாப்ஸ்டிக்ஸை (Chopsticks) பயன்படுத்துவார்கள்.  இதைக்கொண்டு சாப்பிடும்போது, குறைந்த அளவு உணவை மட்டும்தான் எடுத்து விழுங்க முடியும். `நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு’ என்பார்கள் அல்லவா! அதுபோல உணவையும் மெதுவாகத்தான் மென்று விழுங்க முடியும். இதற்காக நாம் சாப்ஸ்டிக்ஸைத் தேடி ஓடவேண்டியதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் அழுத்தமாக வைத்திருந்தாலே போதுமானது. மேலும், உணவுகளை சிறிய தட்டில் வைத்துத்தான்  சாப்பிடுவார்கள்.  `இது, உணவை அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை எங்களுக்கு ஞாபகப்படுத்தும்’ என்கிறார்கள் ஜப்பானியப் பெண்கள். 

டெஸர்ட்டுக்கு (Dessert) நோ!

சாப்பிட்டவுடன் அல்லது சாப்பாட்டோடு இனிப்பு சாப்பிடுவது நம்மில் பெரும்பாலானவர்களின் பழக்கம். ஜப்பானியப் பெண்களோ இனிப்பு வகைகளை பண்டிகைக் காலங்களிலும்  விசேஷங்களின்போதும் மட்டும்தான் சாப்பிடுவார்கள். அப்படியே சாப்பிட்டாலும், குறைந்த அளவு சர்க்கரை உள்ள ஐஸ் க்ரீம் மற்றும் அரிசியால் தயாரிக்கப்பட்ட கேக்  வகைகளைத்தான் விரும்புவார்கள். 
ஜப்பானியப் பெண்கள் பின்பற்றும் இந்த ஆறு விஷயங்களை நாமும் கடைப்பிடிக்கலாம். இளமையோடு வலம்வரலாம். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் வினோத போட்டி: 'துர்நாற்றம் மிகுந்த ஷூ' போட்டியில் சிறுவன் வெற்றி

 
வெற்றி பெற்ற சிறுவன்
வெற்றி பெற்ற சிறுவன்
 
 

அமெரிக்காவில் 'துர்நாற்றம் மிகுந்த ஷூ' என்ற தலைப்பில் நடைபெறும் 42-வது சர்வதேச போட்டியில் சிறுவன் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

12 வயதான கானர் ஸ்லோகாபே என்ற 12 வயது சிறுவன் துர்நாற்றம் வீசும் ஷூவை அணிந்துகொண்டிருப்பவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 7 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றது குறித்து கானர் கூறும்போது, ''நான் என் அத்தைக்கு பண்ணை வேலைகளின்போது உதவி புரிவேன். அப்போது பண்ணையில் உள்ள கால்நடைக் கழிவுகள் பட்டு என் ஷூ-வை அசுத்தப்படுத்திக்கொள்ள நேர்ந்தது" என்றார்.

நாசாவின் வேதியியல் நிபுணர் ஜார்ஜ் அல்டிரிச் கூறும்போது, "இம்மாதிரியான துர்நாற்றம் நமது கண்களில் கண்ணீரையே வரவழைக்கும். இம்மாதிரியான துர்நாற்றம் ஷு களை வெறுங்காலுடன் அணிந்து சென்றாலோ, சேற்றில் நடந்து சென்றாலோ துர்நாற்றம் வீசக்கூடியவை" என்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற கானருக்கு 2,500 அமெரிக்க டாலர்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

ஏ வெர்மண்ட் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிறுவனம் 1974 ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது. தங்களது நிறுவனம் சார்ந்த புதிய தயாரிப்பு காலணிகளின் விற்பனையைக் கூட்ட 'வெர்மண்ட் ஷூ நிறுவனம்' வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இத்தகைய போட்டிகளை நடத்திவருகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மிஸ் நிக்கரகுவா 2017 அழகுராணி

நிக்­க­ர­குவா நாட்டின் புதிய அழ­கு­ரா­ணி­யாக ரமா ரெரேனிஸ் குவெ­ஸடா தெரி­வு­ செய்­யப்­பட்­டுள்ளார். அண்­மையில் நடை­பெற்ற மிஸ் நிக்­கர­குவா 2017 அழ­கு­ராணி போட்­டியில் வய­தான ரமா ரெரேனிஸ் குவெ­ஸடா மிஸ் யூனிவர்ஸ் நிக்­க­ர­குவா அழ­கு­ரா­ணி­யாக தெரி­வானார்.

ஹெலன் மார்ட்­டினஸ் இரண்­டா­மி­டத்­தையும் மார்தா மேஸா மூன்­றா­மி­டத்­தையும் பெற்­றனர். எதிர்­வரும் மிஸ் யூனிவர்ஸ் போட்­டியில் நிக்­க­ர­குவா சார்பில் ரமா ரெரேனிஸ் குவெஸடா பங்குபற்றவுள்ளார்.

ad77fc70123b11e78b620eb04a1bba78

 

1

2

b8522c29a1eb41b28817e53149b7c3d9

http://metronews.lk

  • தொடங்கியவர்

உலக சாதனைக்காக விற்பனை செய்யவுள்ள இளஞ்சிவப்பு வைரம்..!

 

000_N315Q.jpgஉலக சாதனைக்காக இளஞ்சிவப்பு நிறமான நட்சத்திர வைரம் ஒன்று விற்பனை செய்யப்படவுள்ளது. 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஹொங்கொங் நகரில்  நடைபெற உள்ள ஏல விற்பனையில் 60 மில்லியன் டொலரில் (இலங்கை ரூபா மதிப்பில் 912கோடியே 84 இலட்சம்) இருந்து ஏலம் ஆரம்பமாகும் என சொதேபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

விமான நிலையத்துக்கு பிரபல கால்பந்தாட்ட வீரரின் பெயர்! (படங்கள்)

போர்த்துகல் நாட்டில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடிராவில் உள்ள விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த யூரோ கால்பந்து தொடரில், போர்த்துகல் அணி கோப்பையை வென்றது. 

000_N33JA.jpg

சர்வதேச கால்பந்து போட்டிகளில், போர்த்துகல் வென்ற முதல் கிண்ணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ தலைமையில், போர்த்துகல் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி பெற்றமையினால் ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில், அவரது பெயரை விமான நிலையத்துக்கு சூட்ட, அந்த நாட்டு ஜனாதிபதி மிகுவேல் அலெகுரேக் உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து மெடிரா விமான நிலையம் கிறிஸ்டியானோ ரொனால்டோ விமானநிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

000_N332A.jpg

000_N333A.jpg

000_N337J.jpg

 
 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

குருவிகளுக்கு கூடுகட்டும் மனிதர்..!

அதிகாலை வேளைகளில் குருவிகளின் சத்தத்தில் எழுவது என்பது எத்தனை ரம்மியமான ஒன்று. நகரமயமாதல் என்ற பெயரில் வாகன இரைச்சல்களைக் கேட்டு எழும் வாழ்க்கைக்கு அநேக மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

17619710_998690140262222_1115133640_n_18

இப்படியான உலகில் மனிதர்களுக்கே இரக்கம் பார்க்க நேரமில்லாதபோது குருவிகளுக்கு தன் வீட்டில் கூடுகட்டி வாழ்கிறார், கர்நாடக மாநிலம் கோளாரைச் சேர்ந்த சுப்பிரமணி. தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் சுப்பிரமணி தனது வீட்டில் 100-க்கும் மேற்பட்ட குருவிகள் தங்கிச் செல்வதற்கான கூடுகளை அமைத்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு தன் வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியில் குருவிகள் வந்தமர்வதை பார்த்த பின்பே இந்த யோசனை தனக்கு உதயமானதாகவும், அன்று முதல் குருவிகளை தன் வீட்டில் ஒருவராக பார்த்து வளர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

'குருவிகளின் சத்தமே தினமும் என்னை எழுப்புகிறது. அதிகாலை 4.30 மணி முதல் எங்கள் உறவு தொடங்கிவிடுகிறது' என்று கூறுகிறார் சுப்பிரமணி. குருவிகளின் உணவு தேவைக்காக தினமும் 30 கிலோ தானியங்கள் வாங்குகிறார் சுப்பிரமணி. மேலும் மற்ற விலங்குகளிடமிருந்து குருவிகளை காக்க வேலிகளையும் அமைத்துள்ளார். தான் மட்டுமல்லாது அருகில் இருக்கும் 25 வீடுகளில் பறவைகள் வந்து தங்கி செல்வதற்கான இடங்களை ஏற்படுத்த செய்திருக்கிறார் சுப்பிரமணி. உங்களால் முடிந்தால் இரண்டு குருவிகளுக்காவது தங்க இடமளிக்க முடியும் என்கிறார் சுப்பிரமணி. தேவையானது சிறிய கூடு ஒன்றும் தண்ணீர் வைக்க பாத்திரம் ஒன்றும் கொஞ்சம் மற்ற உயிர்களை நேசிக்கும் மனசு மட்டுமே.

Thanks:The News Minute

  • தொடங்கியவர்

இனி கடலில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவாள் ‘எமிலி’..! எப்படி?

பொங்கலுக்கு வீட்டை ஒழுங்குப்படுத்தினால் இண்டு இடுக்கில் எல்லாம் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது ரிமோட் கார்கள். விதவிதமான கலர்களில் ஏகப்பட்ட கார்கள் கிடைக்கும். வீடு முழுவதும் பொருட்களா, அல்லது நம்மிடம் இருக்கும் பொருட்களை வைக்கும் அளவுக்கே நம் வீடா எனத் தெரியாது. அந்த நெரிசலிலும் சாதூர்யமாக ரிமோட் கார் ஓட்டியிருக்கிறோம். எப்போதாவது அந்த தொழில்நுட்பத்தை ஒரு முக்கியமான பிரச்னைக்கு தீர்வாக மாற்றலாம் என யோசித்திருக்கிறோமா? எவ்வளவு சிறப்பான டெக்னாலஜி அது? அதை ஒருவர் யோசித்திருக்கிறார். விளைவு... பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

ரிமோட் எமிலி

EMILY -இதுதான் அதன் பெயர். யு.எஸ் கப்பல்படையின் தயாரிப்பான இந்த எமிலி, ஒரு ரோபாட்டிக் லைஃப்கார்டு. முழுமையாக 15 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னரே எமிலி தயாரானது. பலரது கூட்டு முயற்சியான எமிலி, சென்ற ஆண்டு  கடலில் சிக்கிய சிரியா அகதிகள் 300க்கு மேற்பட்டவர்களை காப்பாற்றியது.

எப்படி செயல்படுகிறது?
EMILY கிட்டத்தட்ட ஒரு நீச்சல் வீரனைப் போன்றதுதான். அதைக் கடலில் தூக்கிப்போட்டுவிட்டால் நீச்சல் அடிக்கும். ரிமோட் மூலம் அதன் வேகத்தையும், திசையையும் கட்டுப்படுத்தலாம். உதவி வேண்டுபவர் இருக்கும் திசை நோக்கி எமிலியை அனுப்பினால், அவர் அதை பிடித்துக் கொண்டால் போதும். கப்பல் இருக்கும் திசைக்கு அவரை பத்திரமாக கொண்டு சேர்த்துவிடும். ஒரு மனிதன் போகும் நேரத்தை விட வெகு சீக்கிரமாக போக வேண்டிய இடத்துக்கு எமிலியால் போக முடியும் என்பதும், நீச்சல் தெரியாதவர்களை சுமந்துகொண்டு வேகமாக நீந்தும் என்பதும் இதன் பலன்கள்.

பளிச் என கண்ணுக்குத் தெரியும் ஆரஞ்சு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் எமிலி நான்கு அடி நீளமும், 25 பவுண்டு (11 கிலோ) எடையும் கொண்டது. ஜெட்ஸ்கீ என்னும் நீர்ச் சறுக்கு இயந்திரத்தின் உள்ளே இருக்கும் டர்பைன்கள் தான் எமிலிக்கு உள்ளேயும் இருக்கின்றன. அவை, பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன. மணிக்கு 22 மைல்கள் வேகத்தில் எமிலி சீறும். 

இதனுடன் இரண்டு வழிகளில் தொடர்பு கொள்ள முடியும். ஒன்று, ரேடியோ அலைகள் உதவியுடன் ரிமோட் மூலம் அதை கட்டுப்படுத்தலாம். இன்னொன்று எமிலியில் இருக்கும் கேமரா மூலம் அதன் பாதையை அறியலாம். ஸ்மார்ட்போனில் தெரியும் லைவ் வீடியோ மூலமும் எமிலியை திசைமாற்றலாம். இரவு நேரங்களில், வெளிச்சம் குறைவான சமயங்களில் இந்த கேமரா உதவியாக இருக்கும்.

ஹெலிகாப்டரில் இருந்தோ, கப்பலில் இருந்தோ, பாலத்தின் மேல் இருந்தோ எமிலியை நீரில் வீசிவிட்டு, பின் ரிமோட் மூலம் அதை தேவையான பகுதிக்கு அனுப்பலாம். போர் விமானங்கள் செய்யப்படும் கடினமான பொருட்களால் ஆனது எமிலி. எனவே அதை உடைப்பதோ, சேதாரம் செய்வதோ கிட்டத்தட்ட இயலாத காரியம். ஒரு எமிலியை பிடித்துக் கொண்டு 8 பேர் வரை நீந்திச் செல்ல முடியும். 
தென் கொரியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் எமிலியை பயன்படுத்துகின்றன. 

தொழில்நுட்பம் ஒன்றுதான். அதை எப்படி, எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அந்த தொழில்நுட்பத்தின் வெற்றி இருக்கிறது. எந்த தொழில்நுட்பம் என்றாலும் அது மானுடத்தின் வாழ்வை சிறப்பாக்குவதும், இந்த பூமியை அழிக்காமல் இருப்பதும் அவசியம். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபரை, சந்திக்கிறார் சீன அதிபர்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, சீன அதிபர் ஜின்பிங் முதன்முறையாக சந்திக்க உள்ளார்.

Trump Jiping

சீன அதிபர் ஜின்பிங் ஏப்ரல் 6 -7 தேதிகளில், அமெரிக்க அதிபரை பிளோரிடாவில் சந்திக்கவுள்ளதாக சீன வெளியுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக முக்கியமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சீனாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார் அதிபர் ட்ரம்ப். மேலும் சீனாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகப்படுத்தப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் வட கொரியாவுக்கு பொருளாதார ரீதியாக சீனா உதவுவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இந்நிலையில் சீன அதிபர் பிளோரிடாவில் ட்ரம்ப்பை சந்திக்கவிருப்பதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அதிபர் ஜின்பிங் பின்லாந்து சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அதிபர்களின் சந்திப்பு மூலம் தென் சீன கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டு இரு நாட்டு உறவுகளுக்குள்ளும் சுமுகமான நட்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

விராட் கோலிக்கு பத்மஸ்ரீ விருது!

டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா  நடைபெற்றது. 

C8K933ZW0AAaUgD_20599.jpg

தேசிய அளவில் சாதனை புரிந்தோருக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இதில், பா.ஜ.கவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தீபா மாலிக், தீபா கர்மாகர், சாக்‌ஷி மலிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. கண்பார்வையற்றோருக்கான கிரிக்கெட் வீரர் சேகர் நாயக்கிற்கும் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் இலக்கியத்திற்கான பத்ம விபூஷண் விருது தேவிபிரசாத் திவேதிக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடகி அனுராதா பட்வாலுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்திய டார்ஜன் 'வனமகன்' ட்ரெய்லர்!

vana_1_19130.jpg

'தனி ஒருவன்', 'போகன்' என்று ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துவந்த ஜெயம் ரவியின் அடுத்த படம், 'வனமகன்'. 'காட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு மனிதன், நகரத்துக்கு வந்து ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்டால் என்ன ஆகும்' என்ற ஒன்-லைனை வைத்து கதைக்களம் அமைத்திருக்கிறார், இயக்குநர் விஜய். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, வேல ராமமூர்த்தி என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் எனப் பல ப்ளஸ்களுடன், இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது, 'வனமகன்'. 

 

 

 

 

  • தொடங்கியவர்

தெருவில் பணம் கிடந்தால் குனிந்து எடுக்க தயங்க மாட்டேன் (வீடியோ)

 

தெருவில் பணம் கிடந்தால் குனிந்து எடுக்க தயங்க மாட்டேன் (வீடியோ)

 

தலைப்பைப் பார்த்து யார் இதைக் கூறியிருப்பார்கள் என சிந்திக்கிறீர்களா?

உலகின் முதல் நிலை கோடீஸ்வரர்தான் இந்த கருத்தை வௌிப்படுத்தியிருக்கிறார்.

என்னதாக கோடிகளில் புரண்டாலும் அவர்களின் குணநலன் என்றும் எளிமையாகவே இருக்கும்.

நிமிடத்திற்கு ஆயிரம் டொலர்களை சம்பாதிக்கும் உலக கோடீஸ்வரர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
 

http://tamil.adaderana.lk/

  • தொடங்கியவர்
கொடுக்கும்போது எடுக்கும் எண்ணம் நுழையலாகாது
 
 

article_1490850741-help.jpgநாங்கள் அனுபவிக்கும் சந்தோசங்கள் பெரும்பாலும் எமது சுயத்துக்கானது. 

ஆனால், எங்களால் பிறருக்கு அளிக்கும் சந்தோசங்களே முழுமையான எமது அகத்தில் எழுச்சியை நல்கும் களிப்பு நிலையாகும்.

எமது முயற்சி, உழைப்புகளை எமக்கு மட்டும் வழங்குவதால், எங்களது கடமைகளை முழுமையாகச் செய்ததாகக் கருதமுடியாது.

இன்று புண்ணியம் செய்கின்றவர்களின் எண்ணங்கள் அதற்கான பிரதிபலன்களை எதிர்பார்ப்பதால் அது ஒரு வியாபார நிலைக்குச் சமமாகி விடுகின்றது.

கொடுக்கும்போது அதனூடு எடுக்கும் எண்ணம் நுழையலாகாது. பரந்த மனப்பாங்கு என்பது இயல்பாகச் சுரக்கும் மனக் கசிவு ஆகும்.

உலோபித்தனமானவர்கள் தங்கள் இதயத்தைப் பூட்டி, அதனை அடிமைப்படுத்தும் கொடிய செயலைப் புரிபவர்களாகின்றனர். வழங்குபவனுக்கு சந்தோசம் நிரந்தரம். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ ஓஷோவின் குட்டிக் கதை

வாழ்வின் ஒவ்வொரு செயலின் பின்னும் அர்த்தம் உள்ளது. இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய  வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்குகிறார்.

“நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்ல செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, "எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்போகிறேன்" என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

ஓஷோ கதைகள்

ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள் அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்? ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான். "நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்." "உங்களைப் போல நாங்களும் ஊர் ஊராகத் தேடுகின்றோம் , கிடைத்தால் சொல்லி அனுப்புங்கள்" என்று வெவ்வேறு விதமாக ஒரே பதில் தான் கிடைத்ததே தவிர ஆனந்தம் கிடைக்கவில்லை.

சோர்ந்து போன அந்தப் பணக்காரன் ஒரு கட்டதில் உயிரை மாய்த்து விடலாம் என்னும் அளவிற்கு வந்துவிட்டான். அப்போது ஒரு மரத்தடியில் சாது ஒருவர் அமர்ந்திருந்தார். இவர் நாம் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிப்பார் என்னும் நம்பிக்கையில் அவரை நெருங்கினான். சாதுவின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. கையிலிருந்த வைர மூட்டை நிரம்பிய ஒரு பையை அவர் காலடியில் வைத்து, "ஐயா ஊர் ஊராக நான் சுற்றி வருகிறேன் ஆனால் எனக்கு ஆனந்தம் மட்டும் கிடைக்கவில்லை" என்றான். 
சாது அவனைப் பார்த்து, "உண்மையாகச் சொல்கின்றாயா? இதுவரை உனக்கு ஆனந்தம் கிடைத்ததே இல்லையா?", அதற்கு அவன் சோகமாக"ஆமாம் சுவாமி உண்மையாகக் கிடைக்கவில்லை", நிஜமாகத்தான் சொல்கின்றாயா ஒரு முறையும் நீ ஆனந்தத்தை அனுபவிக்கவில்லையா? என்று பலமுறைக் கேட்ட பின்பு அவனுக்கு கோவம் வந்துவிட்டது, எத்தனைத் தடவை கேட்டாலும் இல்லை.. இல்லை தான் என்றான்.

ஓஷோ கதைகள்

அவன் பேசி முடிக்கும் முன்பு சாது, வைரங்கள்  நிறைந்த அந்தப் பையை தூக்கிக் கொண்டு ஓடினான். "ஐயோ என் வைரம்.. என் வைரம்.. யாராவது பிடியுங்கள்.. காப்பாற்றுங்கள்!" என்று அந்தச் சாதுவை துரத்திக்கொண்டே சென்றான்."கொள்ளைக் கொள்ளை! நீயும் ஒரு மனிதனா? நீயும் ஒரு சாதுவா என்று புலம்பிக்கொண்டே துரத்தினான். சாதுவிற்கு அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துச் சந்து பொந்துகளும் அத்துப்பட்டி. அதனால் வேகமாக ஓடிச்சென்றான். கிராமமக்களும் தனவானின் கதறலைக் கேட்டு சாதுவைத் துரத்தினர். ஒரு கட்டத்தில் அவர்கள் முடியாமல் ஓய்ந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டனர். பின் அவர்களிடம் சற்றும் எதிர்பாராத விதமாக, சாது அந்த வைர மூட்டையுடன் வந்து அமர்ந்தான். தனவான் பையை எடுத்துக்கொண்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, வானை நோக்கி கையை உயர்த்தி, "நன்றி இறைவா ! நன்றி" என்று ஆனந்தமாகக் கூறினான். அந்த இன்பத்தில் அருகில் இருக்கும் சாதுவையும் மறந்துவிட்டான்.
சாது கேட்டார், உனக்குச் சிறிதளவாவது ஆனந்தம் கிடைத்ததா? என்று..

சிறிதளவா? இதுபோன்ற ஆனந்தத்தை நான் அனுபவித்தே இல்லை.. இதுவே முதல் முறை என்றான். சாது விளக்கினார் : ‘ஆனந்தத்திற்கு முன்பு துக்கப்பட வேண்டியது அவசியம். அடைவதற்கு முன் இழக்க வேண்டியது அவசியம். முக்திக்கு முன் பந்தத்தின் அனுபவம் தேவை. ஞானத்திற்கு முன்   அஞ்ஞானம் இருக்க வேண்டியது அவசியம்.’ என்றார்..”

 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இயற்கைச் சூழலில்... இயற்கைக்காக ஒரு பள்ளி... தொடங்கி வைத்த இயற்கை ஆர்வலர்கள்!

அரை கிலோமீட்டர் நீளத்திற்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட மேடை இல்லை. இங்கு மண் தான் மேடை.  பெரிய கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இல்லை. மண்ணால் கட்டப்பட்ட குடில்கள் தான். வானைத் தொடும் ஆதி யோகி சிலைகள் இல்லை. கூழாங்கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கைத் தத்துவ தத்ரூபங்கள் மட்டுமே இருந்தன. நீளமான தாடி வைத்த சத்குருக்கள் இல்லை. குறுந்தாடி வைத்திருக்கும் சிவராஜ் அண்ணன் தான் இருந்தார். திறப்பு விழாவிற்கு நரேந்திர மோடி வரவில்லை. "குழந்தைகள் பொம்மைகளை உடைப்பது தான் பேரழகு" என்று சொல்லும் அரவிந்த் குப்தா தான் வந்திருந்தார். பணம் இருப்பவர்களுக்கு முன் வரிசை, பணம் இல்லாதவர்களுக்கு வரிசையிலேயே இடமில்லை என்ற கதை எல்லாம் இல்லை. இங்கு நீங்களும், நானும், யாரும் சமம் தான். அனைவருக்குமான நிலமாக உருவெடுத்திருக்கும் "குக்கூ காட்டுப் பள்ளியின்" முறையான தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. இன்றைய தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான நிகழ்வு அது. 

குக்கூ காட்டுப் பள்ளி குழந்தைகள்

கருப்பு நிற தார்ச்சாலையிலிருந்துக் கிளம்பிய அனலின் பிரதிபலிப்பு, கைகளைக் கருக்கியது. சிங்காரப்பேட்டையை அடைந்திருந்தேன். அங்கு கூடையில் வடை விற்றுக் கொண்டிருந்த அண்ணனிடம்... " ண்ணா இங்க அந்தப் பள்ளி..." "குக்கூ ஸ்கூல் தானே? அதோ அந்தத் தக்காளி மண்டியத் தாண்டி இடது பக்கம் திரும்புங்க. 5 கிமீ... காலைலேருந்து உங்கள மாதிரி ஆட்கள் நிறையப் பேரு போனாங்க. வடை சாப்பிடிறீங்களா... சூடா இருக்கு" . " நன்றி" சொல்லி வேண்டாம் என்பதாய் தலையாட்டி அந்த தக்காளி மண்டியைத் தாண்டி திரும்பினேன்.
உடைந்த தார்ச்சாலையைக் கடந்து, மண் சாலையில் பயணம் தொடர்ந்தது. வெயிலினால் சுணங்கிப் போயிருந்த முகம், மலையடிவாரத்திலிருந்து பரந்திருந்த அந்த நிலப்பரப்பைப் பார்த்ததும் சுறுசுறுப்பாகியது. பழைய மரத்தட்டிகளைக் கொண்டு செய்யப்பட்டிருந்த அந்த நுழைவு வாயில் அருகே, சாணியைக் கரைத்து மொழுகிக் கொண்டிருந்தார் அந்த அக்கா. தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் சுறுசுறுப்பாய் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர், இந்தியா முழுவதிலிமிருந்து வந்திருந்த இயற்கைத் தன்னார்வலர்கள். 

குக்கூ காட்டுப் பள்ளி இயற்கை

ஒரு குழு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மண் பானைகளில் வெட்டிவேரையும், எலுமிச்சம் பழத்தையும் போட்டு நீரை நிரப்பிக் கொண்டிருந்தது. ஒரு குழு மாலை நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தது. ஒரு சிலர் அயர்ச்சியில் அந்தக் குடில்களில் உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரு கூட்டம் கிணற்றில் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் வெயிலைப் பொருட்படுத்தாமல் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சில குழந்தைகள் தங்கள் உயரத்திற்கான சிறு கடப்பாரைகளைக் கொண்டு மண்ணைத் தோண்டி செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு யாருக்கும் எந்த அடையாளங்களும் இருக்கவில்லை. ஒருவொருக்கொருவர் உதவிக் கொண்டு, சிநேகப் புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டுமிருந்தார்கள். 

குக்கூ

மெல்லிய தேகம், செருப்பில்லா கால்கள், அழுக்கடைந்த பருத்தி வேட்டி, சட்டை, முகம் முழுக்கப் புன்னகை... சிவராஜ் அண்ணன். புளியனூர் கிராமக் குழந்தைகளின் " சோட்டா பீம்" . நம்மாழ்வாரின் சீடன். 

" ஒவ்வொருக் குழந்தையும் ஒரு தூய்மையான ஆத்மா. நம்முடைய இன்றையக் கல்விச்சூழல் அவர்களை மொத்தமாக நசுக்குகிறது. குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளர்க்கும் ஒரு முயற்சி, அவர்களின் இயற்கையை இயற்கையோடு இணைக்கும் ஒரு முயற்சி தான் குக்கூ காட்டுப் பள்ளி. குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியோடு, இயற்கை வழி விவசாயம் ,மருத்துவம்,அரசியல் குறித்த விவாதங்கள், விலங்குகள், பூச்சிகள், வானியல், நட்சத்திரம், குறித்த கற்பித்தல் , கூடை முடைவது, தையல் கலை ,காகிதம் தயாரிப்பது, மண்,மரம்,காகிதம்,சிரட்டை இவற்றைக் கொண்டு பொம்மைகள்,சிற்பங்கள் செய்வது,ஓவியம் வரைவது, பறவைகளின் சப்தம் கொண்டு இசைக் கோர்வை உருவாக்குவது,கதை சொல்லுவது,நாடகம் நடிப்பது,கூத்துப் பயிற்சிகள் என அவர்கள் உலகை அழகியலோடு தக்க வைக்கும் ஒரு இடம் தான் குக்கூ காட்டுப் பள்ளி..." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அரவிந்த் குப்தா அங்கு வந்தார். 

குக்கூ காட்டுப் பள்ளி அரவிந்த் குப்தாஅரவிந்த் குப்தா 1970களில் கான்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பு முடித்தவர். குப்பைகளிலிருந்து பலவிதமான பொம்மைகளை செய்யத் தொடங்கினார். இவரின் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைப் பெற்றால், கம்பெனிகள் கோடிகோடியாகக் கொட்டி கொடுத்திருக்கும். ஆனால், என் கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்காவை. அதில் பணம் பண்ணும் நோக்கம் எனக்கில்லை என்று சொன்னவர். aravindguptatoys.com என்ற வலைதளத்தில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான அறிவியல் விளக்கங்கள், கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களின் மின் - புத்தகங்களாக பதிவேற்றி, அதை யாரும் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளார். 

"குழந்தைகள் அழகான விதைகளைப் போன்றவர்கள். அவர்களை விதைக்க இங்கு வளமான மண் தான் சரிவர இல்லை... " என இன்றைய கல்விச்சூழலில் பெரும் அரசியலை மிக எளிமையாக சொல்லி நகர்ந்தார். இப்படியான பல மனிதர்களால் நிறைந்திருந்தது குக்கூ.

மாலை... வெயிலின் தாக்கம் குறைந்து இதமாக இருந்தது. சில மரக்கட்டைகள் நாற்காலிகளாக மாறியிருந்தன. குழந்தைகள் பாய்களில் உட்கார்ந்துக் கொண்டனர். வேலு சரவணனின் "கடல் பூதம்" நாடகத்தின் சிரிப்பொலியில் தொடங்கிய நிகழ்ச்சி, "நிலமற்றவர்களின் நிலம்" என்ற கோவை ஜெயராஜின் நாடகத்தோடு உணர்ச்சிப்பூர்வமாக முடிந்தது. 

குக்கூ காட்டுப்பள்ளி கடல் பூதம் - வேலு சரவணன்

"குக்கூ குழந்தைகளுக்கான இடம் மட்டுமே அல்ல. அய்லான்களும், இரோம் ஷர்மிளாக்களும், நீங்களும், நானும்... நிலமற்ற யாவருக்குமான இடம். கல்வி நல்சூழல் பறிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகாலையாகவும், மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கான ஓய்விடமாகவும், தாலாட்டும் அந்தியாகவும் இந்நிலம் இருக்கும். இது நிலமற்றவர்களின் நிலம். யாரும் இங்கு வரலாம். இது எல்லோருக்குமான இடம். " என்று விடைபெறும் நேரம், கைகுலுக்கி சிவராஜ் நம்மிடம் சொன்னார். அந்த இரவில் அடுத்த நாளைக்கான நெருக்கடிகள் இருந்த பலரும் கிளம்பினார்கள்... அது இல்லாதவர்களும், ஏதுவும் இல்லாத சிலரும் குக்கூவிலேயே தங்கினார்கள். "குக்கூ"... சொல்லிப் பாருங்கள். அந்த சத்தம் ஒருவித அமைதியை, நிம்மதியை, மகிழ்ச்சியை, பரவசத்தைக் கொடுக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 31
 
 

article_1427777921-IPKF.jpg1492: ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.

1866: சிலியின் வல்பரைஸோ துறைமுகம் மீது ஸ்பானிய கடற்படை தாக்குதல் நடத்தியது.

1885: இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.

1889: பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.

1909: பொஸ்னியா மற்றும் ஹேர்ஸகோவினா பிராந்தியத்தை ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதை சேர்பியா ஏற்றுக்கொண்டது.

1917: டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து 25 மில்லியன் டொலருக்கு வாங்கிய அமெரிக்கா அதை வேர்ஜின் தீவுகள் என பெயர்மாற்றம் செய்தது.

1918: அஸர்பைஜனர் சிவில் யுத்தத்தில் 3000 இற்கு அதிகமானோர் பலியாகினர்.

1921: ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1931: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 2000  பேர் பலியாகினர்.

1959: 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கயாட்ஸோ திபெத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றார்.

1966: சோவியத் யூனியனின் லூனா 10 விண்காலம், சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதலாவது விண்கலமாகியது.

1990: இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.

2004: கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.

2007: முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நிஜ உலகின் பொம்மைகள் பயன்படுத்தி புகைப்படங்கள்

 

நிஜ உலகின் பொம்மைகள் பயன்படுத்தி புகைப்படங்கள்

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.