Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தச் சிறுமியின் டூடுலுக்கு கூகுள் அளித்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? #GoogleDoodle

லகின் மிகப்பெரிய தேடுதல் தளமான கூகுள் உலகின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும், பிரபலங்களின் பிறந்த நாளன்றும் தனது முகப்புப் பக்கத்தில் உள்ள லோகோவில் அதைக் குறிப்பிடும்படி சிறிய மாற்றம் செய்து கவுரவப்படுத்தும். இதை கூகுள் டூடுல் என அழைக்கிறார்கள். கூகுள் டூடுல் என்பது உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஒரு கவுரவச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. புத்தாண்டுப் பிறப்பு தொடங்கி வருடத்தின் இறுதி நாள் வரை கூகுள் வெளியிடும் டூடுல் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடன் இருக்கும்.

கூகுள் நிறுவனத்தின்  பரிசை வென்றிருக்கும் சாரா

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் 'டூடுல் 4 கூகுள் (Doodle 4 Google)' என்ற பெயரில் போட்டிகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா முழுவதும் கடந்த ஆண்டில் நடைபெற்ற போட்டியில், எதிர்காலத்தில் பார்க்க விரும்புவதை மாணவர்களிடம் வரையச் சொன்னார்கள். இந்தப் போட்டியின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கனெடிகட் மாகாணத்தைச் சேர்ந்த சாரா ஹாரிசன் எனும் 15 வயதுச் சிறுமி பரிசை வென்றிருக்கிறார்.

'A Peaceful Future' என்ற தலைப்பின் கீழ் சாரா வரைந்த ஓவியத்துக்குப் பரிசாக 30 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19.44 லட்சம்) மதிப்புள்ள உதவித்தொகையும், அவர் படிக்கும் பள்ளிக்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.32.40 லட்சம்)  மதிப்புள்ள தொழில்நுட்பக் கல்விக்கான கொடையையும் கூகுள் வழங்கியிருக்கிறது. மேலும், இந்த ஓவியத்தைத் தனது லோகோவில் மாற்றம் செய்து டூடுளாகவும் வெளியிட்டுக் கவுரவப்படுத்தியிருக்கிறது கூகுள்.

சாராவின் டூடுள்

வெவ்வேறு மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்த சிறுவர்களும் ஒற்றுமையாக இருப்பது போன்று இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. "எனது எதிர்கால உலகம் என்பது அனைவரும் மதம், பாலினம், இனம், நிறப்பாகுபாடு போன்ற அனைத்தையும் கடந்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும்படி இருக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதோடு, யார் எங்கு சென்றாலும் அவர்களுக்கான தனித்துவத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பது எனது எதிர்காலக் கனவு" என்ற வரிகளோடு தனது ஓவியத்தைப் பதிவு செய்திருக்கிறார் சாரா.

மதம், இனம், நிறப்பாகுபாடு காரணமாக உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவும் இந்நேரத்தில், பன்முகத்தன்மை கொண்ட வடிவில் சாராவின் ஓவியம் இருந்ததால் அதைத் தேர்வு செய்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தனது ஓவியம் பரிசு வென்றது மிகுந்த உந்துதலையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக சாரா தெரிவித்துள்ளார்.

டூடுல் குறித்த சில சுவாரசியத் தகவல்கள் :

  • 1998-ம் ஆண்டிலிருந்து கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுளை வெளியிட்டு வருகிறது.
  • ஆரம்ப காலத்தில் டூடுல்கள் வெளியாட்கள் மூலம் வரையப்பட்டிருக்கின்றன. அதன் பின் டூடுல்களை வரைவதற்காக 'Doodlers' என்ற பெயரில் தனியொரு குழுவே இயங்கி வருகிறது.
  • 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐசக் நியூட்டனை கவுரவப்படுத்தும் விதமாக வெளியிட்ட டூடுல் தான், முதல் அனிமேட்டட் டூடுல் ஆகும்.

Jennifer Hom

  • அதிகமான கூகுள் டூடுல்களை வரைந்திருப்பவர் என்ற பெருமை ஜெனிஃபர் ஹாம் என்ற சீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணிக்கே சொந்தம்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இளமை .நெட்: ‘ஹோக்ஸி': ஃபேக் நியூஸுக்கு முடிவு?

 

 
 
 
hoaxy_3149127f.jpg
 
 
 

இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. புதிய தேடியந்திரம் என்றவுடன், கூகுளுக்குப் போட்டியாக இன்னொரு தேடியந்திரமா என்றெல்லாம் நினைக்க‌ வேண்டாம். இது முற்றிலும் வேறுவிதமான தேடியந்திரம். இணைய உலகம் இப்போது எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சினையை அலசி ஆராய உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தேடியந்திரம் இது.

ஆம், ‘ஹோக்ஸி’ எனும் இந்தத் தேடியந்திரம், இணையத்தில் பொய்ச் செய்திகள் பரவும் விதத்தை அலசி ஆராய்ந்து தெளிவு பெற உதவுகிறது. அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக ஊடகத்திற்கான ஆய்வகம் சார்பில் இந்தத் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக‌ச் சொன்னால் பொய்ச் செய்தி எப்படி எல்லாம் பரவுகிறது எனப் புரிந்துகொள்ள இந்தத் தேடியந்திரம் கைகொடுக்கிறது.

வதந்தியின் புதிய வடிவம்

‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச் செய்திகள் இணைய உலகை உலுக்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பொய்ச் செய்தி முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்து சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. தேர்தல் முடிந்த பிறகும் பிரச்சினை தொடர்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பொய்ச் செய்திகளின் பங்கு என்ன எனும் விவாதமும் தொடர்கிறது. அமெரிக்க அரசியல் மட்டும் அல்ல, இணைய உலகம் முழுவதும் வெவ்வேறு அளவுகளில் பொய்ச் செய்தி பிரச்சினையாகத்தான் இருக்கிறது.

வதந்தி பரவுவதும், பாதிப்பை ஏற்படுத்துவதும் எல்லாக் காலத்திலும் உள்ள பிரச்சினை என்றாலும், சமூக ஊடக யுகத்தில் இந்தப் பிரச்சினை பொய்ச் செய்தி வடிவில் புதிய பரிமானம் எடுத்துள்ளது. பல நேரங்களில் வில்லங்கமாகவும் விவகாரமாகவும் ஆகிவிடுகிறது.

நன்கு அறியப்பட்ட இணையதளம் அல்லது பிரபலமான செய்தித்தளம் போன்ற தோற்றம் கொண்ட பொய்யான இணையதளங்கள் மூலம், சூடான செய்தி போல கவனத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட, ஆனால் பொய்யான தகவல்களைக் கொண்ட செய்திகளே பொய்ச் செய்தி எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் உண்மையான செய்தி போலவே இருக்கும் என்பதால் கவனத்தை ஈர்க்கின்றன. பல நேரங்களில் இவை உள்நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் பிரச்சினை என்னவெனில் எதையும் பார்த்துவுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைச் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியிருப்பதால் இத்தகைய பொய்ச் செய்திகள் உடனடியாகப் பகிரப்பட்டு இணைய உலகில் வெகுவேகமாகப் பரவிவிடுகின்றன. இணையவாசிகள் அதை இன்னும் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்ளும்போது நிலைமை இன்னும் மோசமாகிறது. திடீரெனப் பார்த்தால் சமூக ஊடக வெளி முழுவதும் விலங்கமான செய்திகள் வலம்வரத் தொட‌ங்கிவிடுகின்றன.

ஆதாரம் என்ன, மூலம் என்ன என்பன போன்ற விவரங்கள் இல்லாத செய்திகள் எல்லாம் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்படுவது இந்த வகையைச் சேர்ந்த பாதிப்பு தான்.

நவீன குடிசைத் தொழில்

இத்தகைய பொய்ச் செய்திகளை உருவாக்குவது யார் என்பதைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. அதைவிட முக்கியமாக அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தை அறிவது இன்னமும் கடினமாக இருக்கிறது. ரஷ்யா மற்றும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் பொய்ச் செய்திகளை உருவாக்குவதைத் தொழில்நுட்பக் கில்லாடிகள் நவீன குடிசைத் தொழிலாகச் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு எதிராகத் திட்டமிட்டு பொய்ச் செய்தித் தளங்களைப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் பின்னணியில் இன்னும் பல இருண்ட பக்கங்களும், திடுக்கிடும் உண்மைகளும் இருக்கின்றன. விஷயம் என்னவெனில் பொய்ச் செய்தி பிரச்சனை இணையத்தின் நம்பகத்தன்மையைப் பாதித்திருக்கிறது என்பதுதான். யாரோ ஒரு சிலரின் ஆதாயத்திற்காக உருவாக்கும், ஆதாரம் இல்லாமல் உருவாக்கும் பொய்ச் செய்திகள் இணைய உலகில் வேகமாகப் பரவ வாய்ப்பிருக்கும் தன்மை அனைத்துத் தரப்பினருக்குமே பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது.

சமூக ஊடகங்களும், தேடியந்திரங்களுமே இவற்றுக்கான வாகனமாகக் கருதப்படுவதால் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள் பொய்ச் செய்திகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்திவருகின்றன.

பொய்ச் செய்தி பரவல் அறிய...

இந்தப் பின்னணியில்தான் ஹோக்ஸி தேடியந்திரம் அறிமுகமாகியுள்ள‌து. ஹோக்ஸி பொய்ச் செய்திகளைக் கண்டறிய வழி செய்யாவிட்டாலும், அவை பரவும் விதத்தை ஆய்வு செய்ய உதவுகிறது. வழக்கான தேடியந்திரம் போலவே இதையும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட செய்தியின் உண்மைத்தன்மையில் சந்தேகம் எனில் அந்தச் செய்தி தொடர்பான குறிச்சொற்களை ஹோக்ஸியில் சமர்பித்தால், அந்தக் குறிச்சொற்கள் தொடர்பான செய்தி தொடர்பான அறிக்கையை அளிக்கிறது இந்தத் தளம்.

செய்தி பரவிய விதம் மற்றும் அவை சரி பார்க்கப்பட்ட விதம் குறித்தும் தகவல்களைக் கொண்டதாக இந்த அறிக்கை அமைகிறது. பொய்ச் செய்தி பரவிய விதத்தின் காட்சி ரீதியான விவரிப்பாகவும் இது அமைகிறது. இந்த அறிக்கையை அலசுவதன் மூலம் குறிப்பிட்ட பொய்ச் செய்தி எப்படி எல்லாம் பரவியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அறிக்கையில் உள்ள எந்தத் தகவலை வேண்டுமானாலும் கிளிக் செய்து மேற்கொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, பொய்ச் செய்திகளின் பிறப்பிடம் என அறியப்பட்டுள்ள இணைய தளங்களிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளின் இணைப்பை அடிப்படையாகக் கொண்டு ஹோக்ஸி செயல்படுகிறது. இவை தவிர ‘ஸ்னோப்ஸ்’, ‘ஃபேக்ட்செக்’ போன்ற உண்மை அறிதலை நோக்கமாகக் கொண்ட தளங்களிலிருந்து பகிரப்படும் இணைப்புகளையும் ஆய்வு செய்கிறது. எனவே பொய்ச் செய்திகள் பரவிய விதம் பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம். குறிப்பிட்ட செய்தியை யாரெல்லாம் பகிர்ந்து கொண்டனர், எப்படிப் பகிர்ந்துகொண்டனர் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பொய்ச் செய்தி பரவிய விதத்தை அறிய உதவுகிறதே தவிர, குறிப்பிட்ட செய்தி உண்மையா, பொய்யா என்பதை அறிய இந்தத் தேடியந்திரம் வழி செய்யவில்லை. இது அதன் நோக்கமும் அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தேடியந்திரம் போல விழிப்புடன் இருந்து பொய்ச் செய்தி பரவும் விதம் பற்றிய சித்திரத்தை இது அளிக்கிறது. முதல் கட்டமாகக் குறும்பதிவுச் சேவையான ட்விட்டரில் பகிரப்படும் இணைப்புகளே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களிலும் பொய்ச் செய்திகள் அதிக அளவில் பரவுவதால் இந்தத் தேடியந்திர ஆய்வை முழுமையானது எனக் கொள்ள முடியாது. ஆனால் பொய்ச் செய்திகள் பரவலின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள நிச்சயம் உதவும். எல்லாவற்றுக்கும் மேல், பொய்ச் செய்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண, வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு உட்காந்திருக்க முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியாகவும் இது அமைகிறது.

இணைய முகவரி: https://hoaxy.iuni.iu.edu/

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பாடசாலைக்குச் செல்வதற்குத் தாமதமானதால் மகனை ஹெலியில் அனுப்பி வைத்த தந்தை (வீடியோ))

யுக்­ரைனைச் சேர்ந்த அர­சி­யல்­வாதி ஒருவர், தனது மகன் உரிய வேளைக்குப் பாட­சா­லைக்குச் செல்­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அவனை ஹெலி­கொப்­டரில் அனுப்பி வைத்­துள்ளார்.

யுக்­ரைனின் தலை­நகர் கீவ் இலுள்ள பாட­சா­லையின் வெளி­யி­லுள்ள வாகனத் தரிப்­பி­டத்தில்  தரை­யி­றங்­கிய ரொபின்சன் ஆர்22 பீட்­டார ரக ஹொலி­கொப்­ட­ரி­லி­ருந்து இச் ­சி­றுவன் வகுப்­பறை நோக்கி செல்­வதை சிலர் படம் பிடித்­துள்­ளனர்.

helicopter

இச் ­சி­றுவன் யுக்­ரைனின் முன்னாள் விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் அன்ட்ரே பெல்­செவ்ஸ்­கியின் மகன் எனக் கூறப்­ப­டு­கி­றது. இது தொடர்­பாக அன்ட்ரே பெல்­செவ்ஸ்கி கருத்துத் தெரி­விக்­க­வில்லை. ஆனால், ஹொலி­கொப்­டரில் மாண­வனை பாட­சா­லைக்கு அனுப்பி வைத்­தமை தொடர்­பாக சமூக வலைத்தளங்களில் பலர் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ:

 

http://metronews.lk/

  • தொடங்கியவர்

உலக குழந்தைகளின் புத்தக நாள்: ஏப்.2- 1967

1967-ம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People-IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 
 
உலக குழந்தைகளின் புத்தக நாள்: ஏப்.2- 1967
 
1967-ம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People-IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. 1. புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல். 2. குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாடும் முன்முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பு, ஒவ்வோராண்டும் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு நாட்டுப் பிரிவிற்கு வழங்கப்படும். அந்நாடு அவ்வாண்டிற்கான கொண்டாட்டக்கருத்தை முடிவு செய்து, தன்நாட்டின் சிறந்த எழுத்தாளரை அழைத்து உலகக் குழந்தைகளுக்கு அவ்வாண்டிற்கான செய்தியை எழுதவும் நன்கறியப்பட்ட ஓவியரை அழைத்து அவ்வாண்டிற்கான சுவரொட்டியை வடிவமைக்கவும் செய்யும். அந்த செய்தியும் சுவரொட்டியும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு புத்தகங்கள், படித்தல் ஆகியவற்றின் மீதான ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
 
* 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
 
* 1902 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.

* 1902 - ரஷ்ய பேரரசின் உள்நாட்டமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
 
* 1930 - ஹைலி செலசி எதியோப்பியாவின் மன்னராக முடி சூடினார். * 1972 - நடிகர் சார்லி சப்ளின் 1950-களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்ட பின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.
 
* 1975 - வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
 
* 1975 - கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும்.
 
* 1982 - போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டினா முற்றுகையிட்டது.

* 1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
 
* 1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
* 2007 - சாலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை விளைவித்தது.
 
* 2007 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அவித்த முட்டைக்குள் வைரக்கல்: இங்கிலாந்துப் பெண்ணுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் (Photos)

 

அவித்த முட்டைக்குள் வைரக்கல்: இங்கிலாந்துப் பெண்ணுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் (Photos)

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண்ணுக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது.

சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவாக அவித்த முட்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நறுக்கென்று கல் போன்ற ஒரு பொருள் அவர் பல்லில் சிக்கியது.

என்னவென்று சுத்தம் செய்து பார்த்த பொழுது பட்டை தீட்டப்பட்ட குபிக் சிர்கோனியா என்ற ஒரு வகை வைரக்கல் என்பது தெரியவந்தது.

தனக்கு கிடைத்த வைரம் குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.

இதனையடுத்து, முட்டைக்குள் எவ்வாறு வைரம் சிக்கியிருக்க முடியும் என பலதரப்பினரும் விளக்கங்களை முன்வைத்து வருகின்றனர்.

கோழி அந்தக் கல்லை விழுங்கியிருக்கலாம் எனவும் பின்னர் அந்தக் கல் செரிமாணம் ஆகாமல் முட்டைக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் திருமணம் செய்துகொள்ளப்போகும் தாம்சனுக்கு வைரக்கல் கிடைத்திருப்பதால், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

 

3E7B5AA000000578-0-Miss_Thomson_claimed_to_have_felt_something_in_her_mouth_before_-a-13_1490102592937

3E7B5B2B00000578-0-image-m-12_1490102583851

3E7B5B1F00000578-0-image-a-5_1490102405185

http://newsfirst.lk

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person
 

முன்னாள் அவுஸ்ரேலிய அணியின் தலைவரும் மனிதநேய குணமும் மகத்தான துடுப்பாட்ட திறமையும் கொண்ட மைக்கல் கிளாக்கிற்கு இன்று பிறந்தநாள்

Happy Birthday Michael Clarke

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹோலிவூட் படங்களின் லோகோக்கள் உருவான விதம் (வீடியோ)

 

ஹோலிவூட் படங்களின் லோகோக்கள் உருவான விதம் (வீடியோ)

 
வௌ்ளித் திரையுலகில் பல முற்போக்கான சாதனைகளை படைத்து வரும் ஹோலிவூட் திரைப்படங்களின் லோகோக்கள் உருவான விதம் பற்றி உங்களுக்கு தெரியுமா.

20த் சென்சூரி பொக்ஸ், வால்ட டிஸ்னி, கொலம்பியா மூவிஸ் உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்ப காலத்திலும், டிஜிட்டல் காலத்திலும் தமது தயாரிப்பு குறியீடுகளை எவ்வாறு தயாரித்தன.

அவற்றுக்கு வடிவம் கொடுத்த காரணமாக அமைந்த விடயங்கள் என்ன என்பது பற்றிய விளக்கம் இதோ.

 
 
 
 
  • தொடங்கியவர்

வசந்த காலத்து வளர்மதி அவள்
 
 

article_1491192382-%5Bo%5D%5Bhi.jpgஎன்னை எனது அப்பா இராணுவக் கட்டுப்பாட்டுடன் ஒரு கைதி போலவே நடத்திவந்தார். ஒருவருடனும் பழக விட்டதேயில்லை. அம்மாவும் பயத்துடன் கணவரின் சர்வாதிகாரத்துக்கு எதிராக எதுவும் பேசுவதேயில்லை.

என்றாலும் கூட, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஓர் ஏழைப்பெண் என் கண்ணில்பட, அவளை அன்புத் தோழியாக்கிக் கொண்டேன். எனக்கு வயது பத்து; என்னிலும் ஓரிரு வயது குறைந்த வயது அவளுக்கு. களங்கமற்ற அன்பினை அன்றுதான் கண்டேன். வசந்த காலத்து வளர்மதி அவள்.

நாங்கள் பேசுவதைக் கண்ட அப்பா, கடும் கோபத்துடன், “அந்தஸ்து இல்லாத இவர்களுடன் என்ன பேச்சு” எனக் கண்டபடி அடித்து, ஓய்ந்துவிட்டார். உலகம் இருண்டது எனக்கு.

அப்புறம் உடனடியாக வந்த இடமாற்றத்துடன் நாங்கள் இடம்பெயர்ந்தோம். வருடங்கள் உருண்டோட, அந்த ஓட்டத்தில் எனது அம்மா இறந்து போய் விட்டார். எனக்கு அப்போது வயது இருபது.

அம்மா இறந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே, அப்பா புதிதாக ஒரு பெண்ணைஅழைத்து வந்து, “இவள் உன் சித்தி” என்றார். திடீரென எனக்கு வார்த்தை சூறாவழியாக, “அட நீயும் ஒரு மனுசனா” என்று வீட்டைவிட்டு வெளியேறினேன். இன்று என் தோழியைத் தேடியபடி..தேடியபடி, நான். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எதிர்ப்புகளை ஏறி மிதிக்க மிஸ்டர் K சொல்லும் 4Q ஐடியாஸ்! #MondayMotivation

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், நாம் அனுதினமும் எதிர்கொள்ளும் பல சிக்கல்களில் ஒன்று ஒருவரது எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்வது. 

‘அதெல்லாம் முடியாது. இன்னொருத்தங்க எதிர்ப்பார்ப்பை நான் ஏன் பூர்த்தி செய்யணும்?’ என்று நினைப்பவர்கள் வாழ்வில் வெல்லும் வாய்ப்பு மிகக்குறைவே. பெரும் தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்தாக வேண்டும். குடும்பஸ்தர்கள் தங்கள் இணையின் எதிர்பார்ப்பை. மேலாளர்கள் தங்கள் பாஸ் மற்றும் அவர்கள் கீழ் பணிபுரியும்  ஊழியர்கள், ஊழியர்களுக்கு - கேட்கவே வேண்டாம் - மேலாளர்கள். இப்படி யாருடைய எதிர்பார்ப்பையாவது பூர்த்தி செய்தே நாட்களைக் கடத்தவேண்டிய காலகட்டத்தில்தான் இருக்கிறோம்.

4Q Mister K

இதில் கொஞ்சம் போதாமை வரும்போது வாழ்வு சலிக்கிறது. சோர்வு பிறக்கிறது. இதை கையாள்வது எப்படி?

நமது செல்ல ஆலோசகர் மிஸ்டர் K-விடம் இதுபற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது போகிறபோக்கில் ஒரு கான்செப்ட் சொன்னான். 4Q என்பதே அந்த கான்செப்ட். அந்த 4Qவில் என்னென்ன இருக்கின்றன?

தரம் (Quality)

’நான் டெய்லி என் பொண்டாட்டிகூட உட்கார்ந்து பேசறேன். ஆனாலும் புகார் வாசிக்கறா’ 

‘நான் மேனேஜர் கேட்டதக் கொடுத்துட்டேன். ஆனாலும் அவருக்கு திருப்தி இல்ல’

இதெல்லாம் ஏன் வருகிறது தெரியுமா? நாம் அவற்றை Quality யாகச் செய்வதில்லை என்பதாலேயே. அரை மணிநேரம் பேசினாலும் குடும்பத்துக்கான Quality Time எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அங்கே நமக்கு பெயர். அலுவலகத்தில் கேட்டதைக் கொடுத்தாலும், அதை எந்த அளவுக்கு தரத்தோடு  கொடுத்தோம் என்பதைப் பொறுத்தே  அங்கே நமக்குப் பெயர். இந்த நான்கு Q-க்களில், முழுமுதல் கவனம் கொள்ள வேண்டியது.. இந்த Q தான். Quality. தரம்!

அளவு (Quantity)

மேலாளர் உங்களை ஒருநாளைக்கு ஒரு டாஸ்கை முடிக்கச் சொல்கிறார்.. நீங்க ரொம்பவும் சிரத்தையாக முழுத் தரத்துடன் இரண்டு நாளுக்கு ஒன்று கொடுத்தால்.. ஆரம்பத்தில் சரி என்று விடுவார். ஆனால் போகப்போக, ‘ஏன் ஒருநாளுக்கு ஒன்று என்ற Quantity வரவில்லை?’ என்று முகம் காண்பிப்பார். தரத்தோடு, தேவையான அளவு என்பது மிகவும் முக்கியம்! 

சரியான நேரத்தில்.. (Quickness)

‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்பதைப் படித்திருப்பீர்கள்.  எதையும் அவற்றிற்குரிய காலத்தில் செய்தால் செயலுக்குரிய பலன் கிடைக்கும். தாமதமாகக் கொடுத்தால் மேலாளருக்கு ஏற்படும் அழுத்தம், அவர் உங்களிடம் செயலாகக் காட்டும்போது வெளிப்படும். நீங்கள் மேலாளர் என்றால், உங்கள் ஊழியருக்கு தாமதமாக இன்க்ரிமென்ட்டுக்கு சிபாரிசு செய்தால், அது உங்கள் குழுவின் வேலையைப் பாதிக்கும். 

அமைதி (Quietness)

வேலை சொல்லும்போது மேலாளரோ, குடும்பத்தில் இணையரோ செய்யும் சில செயல்கள் எரிச்சலூட்டுகிறதா? இந்த நான்காவது Qவை லேசர் டாட்டூவாக மனதில் இருத்திக் கொள்ளுங்கள். Calm. Quiet. இது ஒன்றே மந்திரம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்த மந்திரத்தின் சூட்சுமம் ஒன்றுண்டு, மேலே சொன்ன 3 இல்லாமல், இந்த மந்திரம் வேலை செய்யாது. ஆம்.. உங்கள் பணியை ஆற்றிய பிறகான அமைதிக்கே மதிப்பு மிக அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவ்வப்போது எனக்கான மோட்டிவேஷனையும் கொடுப்பது, மிஸ்டர் K உடனான நேரங்கள்தான். ஆகவே, இதை எழுதிவிட்டு, வேறு எதும் இருக்கிறதா என்று அவனைக் கேட்டேன். அப்போது  மிஸ்டர் K சொன்னது குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

“இந்த நான்கையும் தினப்படி ஃபாலோ செய்தால் ஒருத்தனுக்கு எந்தக் குழப்பமும், சோர்வும் வராது. நான்கில் ஒன்று தவறுவதுதான்.. சோர்வுக்கு காரணமாக இருக்கும். எந்தச் செயலின்போதும், இந்த நான்கு Qவையும் மனதில் இருத்திக் கொண்டால்... ஐந்தாவது Qவுக்கு வேலையே இல்லை” என்றான்.

“அது என்ன ஐந்தாவது Q?"

”Quit. நம்மால் முடியாது என்று ஒதுங்குவது. இந்த நான்கும் இருந்தால், முடியாது என்ற சொல்லுக்கே இடமில்லை! எந்த சோகத்தையும், தளர்வையும், எதிர்ப்பையும் ஏறி மிதிக்கலாம்!” 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் முதல் செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்ட நாள்: ஏப்ரல் 3, 1973

 
 
 

நகர்ந்துகொண்டே பேசக்கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் செல்போன் என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. செல்போன்களுக்கு

 
 
 
 
உலகின் முதல் செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்ட நாள்: ஏப்ரல் 3, 1973
 
நகர்ந்துகொண்டே பேசக்கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் செல்போன் என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. செல்போன்களுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பி தொடர்பு தேவையில்லை. உலகின் முதலாவது செல்போன் அழைப்பு நியூயார்க் நகரில் 1973-ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இந்த செல்போன்கள் நகர்புறம் முதல் நாட்டுப்புறம் வரை பரவியுள்ளன.  செல்போன்களின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் செல்போன் என்பது ஒரு அந்தஸ்து குறியாக இருந்தபோதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1917 - வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்.

* 1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச்செயலாளரானார்.

* 1933 - நாசி ஜெர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.

* 1948 - தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

* 1958 - பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடுத்தது.

* 1974 - 13 அமெரிக்க மாநிலங்களில் கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர். 
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மனிதநேயத்தால் வங்கதேசத்தை நெகிழவைத்த ஏர் இந்தியா!

இந்தியாவின் தேசிய விமான நிறுவமான 'ஏர் இந்தியா' தனது மனிதநேய செயல்பாடு மூலம் வங்கதேசத்தை நெகிழவைத்துள்ளது.

வங்கதேச நாட்டில்  உள்ள ஒரு கிராமம் மெஹர்பூர். அங்கே  பழம் வியாபாரம் செய்யும் டோஃபஸல் ஹூசைன் என்பவருக்கு அப்தஸ்(24), ராஹினுல்(14) என இரண்டு மகன்கள். இருவருமே பிறந்தது முதல் தசைநார் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்காக தன்னால் இயன்ற வரை மருத்துவம் பார்த்து சோர்ந்துபோனார் டோஃபஸச் ஹூசைன். இந்நிலையில் ஷோரப் என்ற அவரது எட்டு வயது பேரனுக்கும் அதே  குறைபாடு இருப்பதைப் பார்த்து  நொந்துபோனார். 

ஏர் இந்தியா

இதற்கு மேல் அவர்களுக்கு சிகிச்சை  அளிக்க தன்னிடம் பணம் இல்லை. எனவே, மூன்று பேரையும் கருணைக் கொலை செய்ய அனுமதி வேண்டும் என தன் நாட்டு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார் ஹூசைன்.

இதையறிந்த மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, அவர்களுக்கு உதவ முன்வந்து அழைப்பு விடுத்தது. அவர்களும் வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்துவிட்டனர். ஆனால், மும்பைக்குச் செல்ல போதுமான பணம் இல்லை. மருத்துவர் ஒருவர் மூலம் இந்த விஷயத்தை அறிந்த ஏர் இந்தியா நிறுவனம், அவர்களுக்கு உதவ முன் வந்தது. 

''அந்த மூன்று பேருடன் மேலும் மூன்று பேர் மும்பைக்குச் செல்வதற்கும் சிகிச்சை பெற்று மீண்டும் திரும்புவதற்கும் விமானத்தில் இலவச பயணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம்'' என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மனிதம் பேசும் குறும்படம்... 170 டப்ஸ்மாஷ்... அசத்தும் 19 வயது மாணவர்! #ShortFilm

ராஜ கணேஷ், இயக்குநர்

“எனக்குள் இருந்த படைப்பாற்றலை வெளிக்கொண்டுவந்ததில் விகடனின் பங்களிப்பு முக்கியமானது. சுட்டி விகடனின், 'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்' என்ற பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தில் ஓர் ஆண்டு மாணவ நிருபராக என் படைப்பு பயணத்தை ஆரம்பிச்சேன். இந்த 19 வயசுக்கு 170 டப்மாஸ், குறும்படம் இயக்குநர் என வந்திருக்கேன். இந்தப் பயணத்தில் இன்னும் ரொம்ப தூரம் போகவேண்டி இருக்கு'' என்கிற ராஜ கணேஷ், கல்லூரி மாணவர் என்று சொல்வதை சந்தேகமாகவேப் பார்க்கவேண்டி இருக்கிறது.

காரணம், இப்போதுதான் எட்டிப் பார்க்கும் அரும்பு மீசை. ஆனால், சமூகம் பற்றிய பார்வையும் பேச்சும் மிகவும் ஆழம். ''எனக்குச் சொந்த ஊர் திருச்சி. இப்போ, சென்னையில் தங்கி காலேஜ் படிச்சுட்டு இருக்கேன். சின்ன வயசுல இருந்தே கதைகள் கேட்கவும் சொல்லவும் பிடிக்கும். விலங்குகள் கதைகள், மாயாஜால கதைகள் மூலமாக நம்மளை இன்னொரு உலகத்துக்கு கூட்டிட்டுப்போறதோடு, நாம எப்படி வாழணும், எப்படி வாழக் கூடாதுனு மனசுக்குள் விதைக்கிறதும் கதைகள்தான். குழந்தைப் பருவத்தில் மனசுல விதைக்கப்படும் எண்ணங்கள், எத்தனை வயசானாலும் மாறாது. அதனால்தான் என்னோட முதல் குறும்படம், குழந்தைகளை மையமா வெச்சு இருக்கணும்னு நினைச்சேன். இன்னிக்கு கொஞ்சம் கொஞ்சமா காணாமல் போய்ட்டு இருக்கும் மனிதநேயத்தையும் சொல்ல நினைச்சேன். அதுதான் என்னுடைய நான்கு நிமிட 'மனிதநேயம்' குறும்படம்'' என்கிறார் ராஜ கணேஷ்.

படத்தை இயக்கி இருப்பதோடு, மனநிலை சரியில்லாத பிச்சைக்காரன் வேடத்திலும் நடித்திருக்கிறார் ராஜ கணேஷ்.

''குறும்படத்துக்கான ஸ்கிரிப்ட், ஆர்வத்தைத் தவிர கையில் பைசா கிடையாது. சினிமா ஆர்வம் இருக்கிற நண்பர்கள், தெரிஞ்சவங்ககிட்டே பேசிப் பேசி ஒவ்வொரு விஷயத்தையும் தயார்செய்தேன். இந்தக் குறும்படத்தில் நடிச்சு இருக்கிற எல்லோருமே திருச்சியைச் சேர்ந்தவங்க. சிறுவனா நடிச்சு இருக்கும் சுசில் ஜோசப், விஜய் டிவியில் சின்னச் சின்ன புரோகிராம்களில் கலந்துக்கிட்டு கலக்கினவன். இப்போ, புதுசா வரப்போகும் 'கிங்ஸ் ஆஃப் ஜூனியர்ஸ்' புரோகிராமுக்கும் செலக்ட் ஆகி இருக்கான். இது 'கலக்கப் போவது யாரு?'வின் குட்டீஸ்கள் வெர்ஷனாம். மனநிலை சரியில்லாதவர் வேடத்துக்கு நிறையப் பேரைக் கேட்டும் மறுத்துட்டாங்க. அதனால், நானே மொட்டை அடிச்சுக்கிட்டு கேமரா முன்னாடியும் வந்துட்டேன். படத்தைப் பார்த்துட்டு நிறையப் பேர் பாராட்டினாங்க. 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் இயக்குநர் (மோகன் ஜி) குறும்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்'' என்கிறார் ராஜ கணேஷ்.

குறும்படம் குழு

வீட்டில் பாடம் படித்துக்கொண்டிருக்கும் சிறுவன், அதில் வரும் 'மனிதநேயம்' என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தன் அம்மாவிடம் கேட்கிறான். அப்போது, அவன் வீட்டு வாசலுக்கு வரும் ஒரு மனிதன், இன்னொரு இடத்தில் நடக்கும் ஒரு சம்பவம் என இயல்பாக நமக்குள் பதிலைக் கடத்துகிறது இந்தக் குறும்படம்.

''இந்தப் படத்தை பல ஆன்லைன் வீடியோ தளங்களுக்கு கொடுத்துப் பார்த்தேன். 'என்ன தம்பி... மனிதநேயம், குழந்தைகளுக்குக் கருத்துனு சொல்லிக்கிட்டு... இதெல்லாம் ஆயிரம்கூட தொடாது. காதல், குறும்பு, நையாண்டி சப்ஜெட்டா எடுத்துட்டு வாங்க. அதுதான் நிறையப் பேர் பார்ப்பாங்க'னு சொல்றாங்க. அந்த மாதிரி எடுக்கிறதுக்கு நிறையப் பேர் இருக்காங்க சார். சின்ன வயசுல இருந்து நான் படிச்ச கதைப் புத்தகங்கள், கேட்ட நீதி கதைகள்தான் இந்தச் சமூகத்தின் மோசமான பல பாதைகள் பக்கம் போகவிடாமல் என்னைத் தடுத்துட்டு இருக்கு. இனிவரும் குழந்தைகளும் அந்தப் பாதைக்குப் போகாமல் இருக்க என்னால் முடிஞ்ச சின்ன விஷயமா எனக்குத் தெரிஞ்ச மொழியில் தொடர்ந்து சொல்லிட்டே இருப்பேன்'' என்று புன்னகையுடன் நம்பிக்கை விதைக்கிறார் இந்த மாணவ இயக்குநர்.

ராஜ கணேஷின் 'மனிதநேயம்' குறும்படத்தைப் பார்க்க...

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரோமன் ரைன்ஸிடம் தோல்வி: WWE-வில் இருந்து விலகினார் அண்டர் டேக்கர்!

Undertaker

அதிரிபுதிரியுடன் முடிந்திருக்கிறது, WWE WrestleMania. முக்கியமாக, WrestleMania கில்லியான அண்டர் டேக்கரை, ரோமன் ரைன்ஸ் தோற்கடித்துள்ளார். 23 WrestleMania-களில் பங்கேற்றுள்ள அண்டர் டேக்கருக்கு, இது 2-வது தோல்வி. 25 WrestleMania போட்டிகளில் பங்கேற்ற ஒரே நபர் என்ற பெருமையையும் அண்டர் டேக்கர் பெற்றுள்ளார். இந்தத் தோல்விமூலம் WWE போட்டிகளில் இருந்து அண்டர் டேக்கர் விலகியுள்ளார். இது, அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Undertaker

WWE சாம்பியனுக்கான ஆட்டத்தில் ரேண்டி ஆர்டன், ப்ரே வொய்ட் மோதினர். இதில், ப்ரே வொய்ட்டைத் தோற்கடித்து WWE சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தார், ரேண்டி ஆர்டன். யுனிவர்சல் சாம்பியனுக்கான ஆட்டத்தில் ப்ராக் லெஸ்னர், கோல்டு பெர்க் மோதினர். இதில், கோல்டு பெர்க்கைத் தோற்கடித்து, ப்ராக் லெஸ்னர் வெற்றிபெற்றார்.

Roman Reigns

இந்த WrestleMania-வில் மேட் ஹார்டி , ஜேஃப் ஹார்டி ரிட்டர்ன்ஸ் ஆகியுள்ளனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா!

பூமி நிலா

ஷாப்பிங் மால்களிலும், பெரிய அடுக்குமாடி கட்டடங்களிலும் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல லிஃப்ட் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இந்த மாணவன் கொஞ்சம் வித்தியாசமாக பூமியில் இருந்து நிலவுக்கு லிஃப்ட் வைக்க ஐடியா கொடுத்துள்ளார். "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பாஸ்" என நீங்கள் கேட்கலாம். ஆனா இது ஒரு நல்ல ஐடியான்னு நாசா பாராட்டி இரண்டாம் பரிசு கொடுத்திருக்கு,

நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையம், சான் ஜோன்ஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியோடு இணைந்து 12-ம் வகுப்புக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியை நடத்தியது. இதன் தலைப்பாக மனிதர்கள் நிலாவில் வாழத்தகுதியான சாத்தியக்கூறுகளை அமைப்பது என அறிவித்திருந்தது. 

இதில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தங்களது ஐடியாக்களை அனுப்பி வைத்து போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சிங்கப்பூரில் வாழும் சென்னையை பூர்வீகமாக கொண்ட சாய் கிரண் என்ற மாணவன் கொடுத்த ஐடியாவைக் கண்டு வியந்துள்ளது நாசா. 

நாசா சாய் கிரண்

சாய் கிரண் 2013-ம் ஆண்டில் இருந்து தனது ஐடியாவைக் கூறி வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு ‘Connecting Moon, Earth and Space’ and ‘HUMEIU Space Habitats’ என்று பெயரிட்டுள்ளார். இதன் முக்கிய அம்சமே பூமியையும், நிலவையும் லிஃப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைப்பது தான். இதன் முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையே மனித போக்குவரத்துக்குப் பாதை அமைக்க வேண்டும். அப்போதுதான் அங்கு மனிதர்கள் வாழத் தேவையான விஷயங்களை ஏற்படுத்த முடியும் என்கிறார்.

இதில் முக்கியமான விஷயம் ஈர்ப்பு விசை, இது இல்லாமல் மனிதர்கள் அங்கு இருப்பது சாத்தியமற்றது. அதற்கான விஷயங்களோடு இந்த எலிவேட்டரை தயாரிக்க வேண்டும். வெறும் நிலவுக்குச் செல்வது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கமல்ல, அங்கு மறு உருவாக்கம், பொழுதுபோக்கு, ஆட்சியமைப்பு, விவசாயம் ஆகியவற்றையும் ஏற்படுத்த வேண்டும். ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அணுப்புவது அதிக செலவு எடுக்கும் விஷயம். இன்னமும் இந்த லிஃப்ட் போன்ற அமைப்பு பொருளாதார ரீதியாக தற்போதைக்கு சாத்தியமற்றது என்றாலும், பிற்காலத்தில் இது சாத்தியமாகலாம். மொத்தமாக 3.8 லட்சம் கிலோ மிட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்தை பூமியிலிருந்து நிலவுக்கு அல்லது நிலவிலிருந்து பூமிக்கு என்ற அடிப்படையில் செய்யலாம் என்ற திட்ட வடிவத்தை சமர்பித்தார் சாய் கிரண்.

மேலும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் வந்த திட்டங்களில் சாய் கிரண் சமர்பித்த திட்டத்தில் மனித வாழ்வாதாரங்கள், தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகள் மட்டுமின்றி மனித வாழ்வியல் சார்ந்த விஷயங்களுக்கும் இடம் அளித்திருந்தார். இதுதான் மற்ற திட்டங்களில் இருந்து அவரது திட்டத்தை தனித்துக் காட்டியுள்ளது. சென்ற மார்ச் மாதத்திலிருந்து சென்னையில் குடியேறி இந்த ஆராய்ச்சியைத் தொடர்கிறார் சாய் கிரண். ஏற்கெனவே இந்திய விண்வெளித்துறையை கண்டு வியக்கும் நாசா. தற்போது தமிழனின் திட்டத்தைக் கண்டு வியந்துள்ளது. 

இந்த திட்டத்தைக் கண்டு வியந்த நாசா இவருக்கு இரண்டாவது பரிசளித்து கெளரவித்துள்ளது. ஒருவேளை இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் உண்மையாலுமே ஹனிமூனுக்கு மூனுக்கே செல்லலாம். நிலவிலிருந்து விளைவிக்கப்பட்ட பழங்கள் என்று கூட விற்பனை செய்யப்படலாம்... இவையெல்லாம் நடக்கும்போது இதற்கு அடித்தளமிட்டது ஒரு தமிழன் என்று உலகம் வியந்து பேசும்...

வாழ்த்துகள் தமிழா...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா

அமெரிக்காவில் இருக்கும் பஸ்நெட் நடத்திய வாக்கெடுப்பில் உலகின் இரண்டாவது அழகியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் துறையில் நுழைந்திருக்கும் பிரியங்கா சோப்ரா மிக குறுகிய காலத்தில் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

Priyanka_sopra01_ok_17218.jpg

அமெரிக்காவின் பஸ்நெட் இணையதளம் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாப் பாடகியும் நடிகையுமான பியான்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா பிடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா 'குவான்டிகோ' என்னும் ஆங்கில தொடரில் நடிக்க தொடங்கிய பின்பு ஹாலிவுட்டிலும் முன்னணி நடிகையானார். இதையடுத்து, ஹாலிவுட்டிலும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் உருவாகினர். இந்தாண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில் பஸ்நெட் இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா. உலக அளவில் ரசிகர்களை கொண்ட ஏஞ்சலினா ஜோலி , ஏம்மா வாட்சன் உள்ளிட்டோர் பிரியங்காவுக்கு பிந்தைய இடங்களையே பிடித்துள்ளனர்.

மேலும், அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 6வது இடமும், லா லா லேண்ட் புகழ் எம்மா ஸ்டோன் 12 இடமும் பிடித்துள்ளனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மூளையும் இதயமுமில்லாத ஜெல்லிமீன்கள் 500 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதெப்படி?

அவற்றுக்கு மூளையோ இதயமோ இல்லை; ஆனால் அவற்றைப் பார்க்க நேர்ந்தாலே நம்மில் பலருக்கு கடலில் கால்வைக்கவே பயம் ஏற்படும். அவை ஜெல்லிமீன்கள்.
 

  • தொடங்கியவர்

எவர்க்ரீன் ஜாக்ஸன், குறும்பு டான்ஸர் பிரபுதேவாவுக்கு ஹாப்பி பிறந்த நாள்..! #HBDPrabhudeva

யக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பெஸ்ட் டான்ஸர். 'இந்து' எனும் படத்தில் 'பட்டாசு' கதாபாத்திரத்தில் அறிமுகமான பிரபு தேவாவுக்கு இன்னிக்கு ஹேப்பி பிறந்தநாள். அந்தப் படத்தைத் தொடர்ந்து நடித்த படங்கள் எல்லாமே பட்டாசுதான். தன்னுடைய இரண்டாவது படமே தமிழ் சினிமாவில் டாப் டைரக்டர்களீல் ஒருவரான 'ஷங்கர்' படத்தில். ஏ.ஆர். ரஹ்மான் இசை, வடிவேலு காமெடி எனப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெறறது. அதன்பின் 'மின்சாரக் கனவு, 'வி.ஐ.பி', 'காதலா காதலா', 'வானத்தைப்போல' என எவர்க்ரீன் ஹிட் அடித்தார். அதன் பின்னர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் வலம் வந்தார்.

பிரபு தேவா

பிரபு தேவா 3 ஏப்ரல், 1973 அன்று மைசூரில் முகுர் சுந்தர், மகாதேவம்மா சுந்தர் என்ற தம்பதியனருக்கு மகனாகப் பிறந்தார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் வளர்ந்தார். அவரது அப்பா முகுர் சுந்தர் சவுத் என்கிற சுந்தரம் மாஸ்டர். இந்தியன் சினிமாவில் மிகப் பெரிய நடன ஜாம்பவான். அவரைப் பார்த்து இவரும் நடனத்தில் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டு சினிமாவில் என்ட்ரி காட்டினார். முதன்முதலாக 'மெளன ராகம்' படத்தில் இடம்பெற்ற 'பனி விழும் இரவு...நனைந்தது நிலவு' பாடலின் இரண்டாவது பி. ஜி. எம்மில் வரும் புல்லாங்குழல் பீட்டினை திரையில் வாசித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 'அக்னி நட்சத்திரம்' படத்தின் மாஸ்டர் பீஸான ' ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலில் ஆடும் குரூப்பில் இவரும் ஒருவர். அதேபோல் 'இதயம்' படத்தில் இடம்பெற்ற ' ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல' பாடலில் தனித்துத் தெரிந்தார். பின்னாளில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இவருக்குச் சொந்தமாக டான்ஸ் அகாடமியும் உள்ளது. இவரது 39-வது பிறந்தநாளைக்கு முக்கிய பாலிவுட் ஸ்டார்களான அமிதாப்பச்சன், சல்மான் கான், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் கலந்துகொண்டனர்.  ஐ.பி.எல் ஒப்பனிங் செர்மனியில் பெர்ஃபார்ம் செய்தார். இந்தியாவின் முதல் டான்ஸ் 3டி படமான ஏ.பி.சி.டி (AnyBody Can Dance) படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு முறை 'பெஸ்ட் கொரியோகிராஃபர்' என்ற வரிசையில் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். அதில் ஒன்று தமிழில் வெளிவந்த 'மின்சாரக் கனவு' படத்துக்காக.   

பிரபு தேவா

நடிப்பில் கலக்கியதைத் தொடர்ந்து 2004-ல் டைரக்‌ஷனிலும் இறங்கினார். இவர் இயக்கிய முதல் படம் தெலுங்கில் சித்தார்த், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 'நுவ்வோஸ்தானன்டே நின்னோடான்டே'.  'சன் இன் லா' எனும் ஹாலிவுட் படத்தில் இன்ஸ்பையாராகி எடுத்த அந்தப் படம் மாபெறும் ஹிட்டானதைத் தொடர்ந்து 8 'ஃபிலிம் ஃபேர் அவார்டுகளும், 5 'நந்தி' விருதுகளும் பெற்றன. அதன் பின்னர் அந்தப் படம் 7 மொழிகளில் ரீமேக் ஆனது. தமிழில் ஜெயம் ரவி நடித்து வெளியான 'சம்திங் சம்திங்' இந்தப் படத்தின் ரீ-மேக்தான். பின்னர் தொடர்ந்து தமிழில் 4 படங்களையும், தெலுங்கில் 2 படங்களையும், இந்தியில் 6 படங்களையும் இயக்கியுள்ளார்.  

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டது டான்ஸில்தான். அப்படி இவரின் நடனத்தின் புகழ் பாடும் பாடல்கள் ஏராளம். 'காதலன்' பட 'பேட்டராப்' பில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான 'தேவி' படத்தின் 'சல்மார்' பாடல் வரை இவரது டான்ஸ் தெறி ரகம். இவரின் சகோதரர்களான ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகிய இருவரும் டான்ஸ் மாஸ்டர்ஸ்தான். சென்னையில் பல்கலைக்கழகத்தில் அமையப்பெற்ற மைக்கேல் ஜாக்ஸனின் உருவச் சிலை இவரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 

பிரபு தேவா

இப்படிப் பலத் திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் இந்திய மைக்கேல் ஜாக்ஸனிற்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்களும் வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகின் அழகான வீட்டு வகை

 

 
Desktop_3149579f.jpg
 
 
 

நம்முடைய நாட்டில் பாரம்பரியமான வீட்டுக் கட்டுமானக் கலையில் பல வகைகள் உள்ளன. உதாரணமாகத் தமிழ்நாட்டில் செட்டிநாட்டு வீடுகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோல் உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளில் மரபான வீடுகளில் பல வகைகள் உள்ளன. ஐரோப்பியர்கள் படையெடுப்புக்குப் பிறகு அங்குள்ள வீடுகளின் பாதிப்பில் பல வீடுகள் உருவாக்கப்பட்டன. இவை காலனிய வீடுகள் என அழைக்கப்பட்டன. ஆர்ட் டெக்கோ வீடுகள் என அழைக்கப்படும் வீடுகளை இன்று நம் நாட்டிலும் காண முடியும். இம்மாதிரி வீடுகளில் சிறந்த அழகான வீட்டுக் கட்டுமான வகை:

காட்டேஜ் வீடு

இந்த வகை வீடுகள் ஐரோப்பிய விவசாயிகளின் வீடுகளின் கட்டு மானத்தை அடிப்படையாகக் கொண் டவை. காட்டேஜ் (Cottage) என்னும் சொல்லே விவசாயி (cotter-farmer) என்னும் சொல்லில் இருந்துதான் வருகிறது.

cottage_3149580a.jpg

வரிசை வீடுகள்

19-ம் நூற்றாண்டில் இந்த வீட்டுக் கட்டுமான முறை புகழ்பெற்றது. நம் நாட்டில் இதை லைன் வீடுகள் என அழைக்கிறோம். நகரங்களில் மட்டும்தான் இந்த வகை வீடுகளைப் பார்க்க முடியும். நகரமயமாக்கலுக்குப் பிறகு இந்த வகை வீடுகள் உலகம் முழ்வதும் பரவலாகியது.

varisai_3149576a.jpg

ப்யூப்லோ மறுமலர்ச்சி

பூர்வ குடி அமெரிக்கர்களான ப்யூப்லோ இன மக்களின் வீட்டுக் கட்டுமான வகைதான் இந்த ப்யூப்லோ மறுமலர்ச்சி வீடுகள். நம் நாட்டில் உள்ள மண் வீடு போன்ற தோற்றம் கொண்ட வீடுகள் இவை.

publo_3149577a.jpg

கிரேக்க மறுமலர்ச்சி

இந்த வகை வீடுகள் 1830களிலும் 1940களிலும் அமெரிக்காவில் பிரபலமான ஒரு கட்டுமான முறை. இந்த வகை வீடுகள் கிரேக்கக் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டவை. கிட்டத்தட்ட காலனிய வீடுகளின் அமைப்பு முறையைப் போன்றது. ஆனால் பூ முகத்துடன் கூடிய முகப்பு பிரம்மாண்டமான தூண்களுடன் இருக்கும். சென்னையில்கூடப் பழங்காலத்து வீடுகள் இந்த வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

gree_3149578a.jpg

ஆர்ட் டெக்கோ வீடுகள்

பண்டைய எகிப்து, மியாமி கடற்கரை வீடுகள் போன்ற பல பாதிப்புகளால் இந்த வகை வீடுகள் உருவாக்கப்படுகின்றன. தட்டையான வெளிப்பரப்புடன் உருவாக்கப்படும் இதன் முன்பகுதி கொஞ்சம் அலங்காரங்களுடன் இருக்கும்.

art_3149581a.jpg

 

காலனிய வீடுகள்

இந்த வகை வீடுகள் 17-ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அதிகமாகக் கட்டப்பட்டன. இந்த வகை வீடுகளில் பெரிய ஜன்னல்களுடன் கட்டப்பட்டன. ஓட்டுக் கூரையுடன் இவற்றில் புகைக் கூண்டும் இருக்கும்.

colony_3149582a.jpg

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்!

சாதனை படைக்க வயது ஒரு தடை இல்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் (Peggy Whitson) நிரூபித்திருக்கிறார். கடந்த வாரம் இரு உலக சாதனைகளைப் படைத்திருக்கும் அவருக்குத் தற்போது 57 வயது ஆகிறது.

அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன்

எட்டாவது முறையாக விண்வெளி நடை என சொல்லப்படும் ஸ்பேஸ் வாக் (Spacewalk) செய்ததன் மூலம், அதிக முறை விண்வெளியில் நடந்த வீராங்கனை என்ற சாதனையை அவர் கடந்த வாரம் படைத்திருக்கிறார். விண்வெளிப் பயணம் 50-51 எனப் பெயரிடப்பட்டுள்ள மிஷன் மூலமாக, விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவர் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார். மேலும், அதிக நேரம் விண்வெளியில் செலவிட்ட வீராங்கனை என்ற சாதனையையும் அவர் தன் வசமாக்கி உள்ளார்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அவர், ஜூன் மாதம் வரை அங்கு இருப்பார். இந்த இரு சாதனைகள் மட்டுமின்றி, மேலும் பல சாதனைகள் பட்டியலில் பெக்கி விட்சன் பெயர் இடம்பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் விண்வெளிக்குப் பறந்தபோது, அதிக வயதில் விண்வெளிக்குப் பறந்த வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். 2007-ம் ஆண்டில் அமெரிக்காவின் பார்பரா மோர்கன் என்ற வீராங்கனை தனது 55-வது வயதில் விண்வெளிக்குப் பறந்ததே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பெக்கி விட்சன்

விண்வெளி நடை (Spacewalk) எனப்படுவது ஊர்திக்கு வெளியே விண்வெளியில் ஒரு வீரர் செயல்படுவதாகும். சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகங்களில் புதிய பாகங்களை இணைக்கவோ அல்லது இயந்திரக் குறைபாடுகளை சரிசெய்யவோ பொதுவாக விண்வெளி நடை மேற்கொள்ளப்படும். பெக்கி விட்சன் இதுவரை மொத்தம் 53 மணி நேரம், 22 நிமிடங்கள் விண்வெளி நடையில் செலவிட்டிருக்கிறார். இதன் மூலம் அதிக நேரம் விண்வெளியில் செலவிட்ட வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 50 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் விண்வெளி நடையில் செலவிட்டதே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல, சுனிதா வில்லியம்ஸ் இதுவரை ஏழு முறை ஸ்பேஸ் வாக் செய்திருக்கிறார். தற்போது இந்த இரு சாதனைகளையும் பெக்கி விட்சன் முறியடித்திருக்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் விண்வெளிப் பயணத்துக்குத் தலைமை தாங்கிய முதல் வீராங்கனை என்ற சாதனையும் பெக்கியின் வசம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாசாவின் இரண்டு மிஷன்களுக்கு அவர் இதுபோல் தலைமை தாங்கியிருக்கிறார். தனது வாழ்நாளில் மொத்தம் 500 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் அவர் செலவிட்டிருக்கிறார்.

Astronauts install shields on Tranquility despite inadvertent loss of one shield. https://t.co/qpyi2LM11l pic.twitter.com/dgazHDSBMW

— Intl. Space Station (@Space_Station) March 30, 2017

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே ஷேன் கிம்ப்ரோ என்ற சக விண்வெளி வீரருடன் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் கவசத்தைப் பொருத்துவதற்காக விண்வெளி நடை மேற்கொண்டபோது, அந்தக் கவசமானது பறந்துவிட்டது. அதன் பின், நிலைமையைச் சமாளிக்க கை வசம் இருந்த பழைய கவசம் ஒன்றைப் பொருத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற பல சோதனைகளைக் கடந்து தான் அவரால் பல சாதனைகளைப் படைக்க முடிந்தது. சோதனைகளும், வயதும் பெக்கி விட்சனை ஒரு போதும் துவண்டு விடச் செய்வதில்லை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சச்சின் இப்போ சிக்ஸர் சிங்கர்!

கிரிக்கெட் உலகில் எல்லாச் சாதனைகளையும் படைத்துவிட்ட சச்சினின் புதிய அவதாரம், சிங்கர். 

16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின், இந்திய கிரிக்கெட் அணியில் 20 ஆண்டுகளாக நட்சத்திர வீரராக ஜொலித்தார். இந்தியர்கள் பலரும் கிரிக்கெட் ரசிகர்களாக மாறியது, சச்சின் மட்டையைச் சுழற்றிய பிறகுதான். ஏன், இப்போது இந்திய அணியில் பின்னி எடுக்கும் பல வீரர்கள், சச்சினின் ரசிகர்களாக  கிரிக்கெட் விளையாட்டுக்குத் தூண்டப்பட்டு வந்தவர்கள்தான். 

சச்சின்

கிரிக்கெட்டில் பெற்ற புகழின் மூலம், விளம்பரப் படங்களிலும் ஜொலித்தார் சச்சின். இப்போது, பிரபல பாடகர் சோனு நிஹாம் உடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.  அதுதான், இன்றைய சமூக வலைதளங்களின் தெறி ஹிட்.

'நாச்சோ... நாச்சோ' எனத் தொடங்கும் 'Sachin's Cricket Wali Beat'  என்ற அந்தப் பாடலில்,  கிரிக்கெட் பற்றி துள்ளலான வார்த்தைகள், இந்திய கிரிக்கெட்  வீரர்களின் பெயர்கள்,  கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் விளாசும் அசத்தல் கிராபிக்ஸ் என படு உற்சாகமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சோனு நிஹாம் உடன் இணைந்து சச்சின் பாடும்போது அவர் முகத்திலும் உடல் மொழியிலும் உள்ள உற்சாகம், ஒன் டே மேட்சில்  டிரிபிள் செஞ்சுரியை பார்த்த உணர்வை அளிக்கிறது.

''இசை  எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தாலும், பாடுவேன் என்றெல்லாம் நினைத்தில்லை. சோனு நிஹாமுக்கும்  மற்றவர்களும் இணைந்து என்னை பாட வைத்துள்ளனர்' என்றும் பேசி இருக்கிறார் சச்சின்.

 

 

மீண்டும் வருகிறது 'The Mummy'...!!!

mummy

திகிலுக்கு பஞ்சம் வைக்காத படம் 'தி மம்மி'. தற்போது, வேறு பரிமாணத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் நடிப்பில் புதிதாக வெளியாக இருக்கிறது. அலெக்ஸ் கர்ட்ஸ்மேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல ஹாலிவுட் ஸ்டார்களான ரஸ்ஸல் க்ரோவ், ஆனபல் வாலிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். எகிப்து இளவரசி அஹமனெட்டாக (மம்மி) சோஃபியா பவுடெல்லா மரண பயம் காட்டியுள்ளார். மனதை மரணப்பிடியில் வைத்திருக்கும் அந்த எகிப்து வாசம் என்னவோ கொஞ்சம் கம்மிதான்..!

 

 

  • தொடங்கியவர்

03.04.1924: பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன்  பிராண்டோ பிறந்த தினம் இன்று!

 

 
marlon_brando

 

மார்லன் பிராண்டோ 03.04.1924 அன்று அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர்.  த காட்ஃபாதர், அப்போகலிப்ஸ் நவ், ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர்.

இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார். ஒரு நடிகராக மட்டுமல்லாது, சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.அமெரிக்க திரைப்படத்துறை வரலாற்றின் மிக முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவர்

இறுதியாக 01.07.2004 அன்று தன்னுடைய எண்பதவித்து வயதில் காலமானார்.

http://www.dinamani.com/

Bild könnte enthalten: 1 Person, Text

இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேராவின் பிறந்த நாள் இன்று
இலங்கை இரசிகர்களால் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Thisara Perera

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கலக்கிய திஸர மீண்டும் இலங்கை T20 அணியில் இடம்பிடித்திருக்கிறார். இனிய வாழ்த்துக்கள்

Bild könnte enthalten: 1 Person, Text

காந்தக்குரலோன் ஹரிஹரனுக்கு இன்று பிறந்நாள்

ரோஜாவில் தமிழா தமிழா பாடலோடு தமிழுக்கு இசைப்புயலால் அழைத்து வரப்பட்ட இவ்வற்புதமான பின்னணிப் பாடகர்
எங்கள் காதுகளுக்கு இசையின் ஸ்வரங்களை காற்றோடு கலந்து இனிக்க செய்தவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

நடனப் புயல் பிரபு தேவாவுக்கு இன்று பிறந்தநாள்.

உடல் அசைவில் உற்சாகம் கொண்டவர் நடிப்புலகில் நட்சத்திரமாய் ஜொலிப்பவர்
இயக்குனராய், தயாரிப்பாளராய் தமிழ் சினிமாவில் தடம் கொண்டவர்.
நடனமே உயிரென கொண்டு நாற்றிசையெங்கும் பெயர் கொண்டவர்
ஆடிய ஆட்டத்தில் எம்மையெல்லாம் ஆட வைக்கும்
நடனப் புயலுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள் Prabhudeva

  • தொடங்கியவர்

தோனியைத் தேடி வந்த பதவி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, கல்ஃ ப் ஆயில் இந்தியா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனியைக் கவுரவிக்கும் வகையில், கல்ஃப் ஆயில் நிறுவனம் இந்தப் பதவியை வழங்கியுள்ளது.

dhoniCEO

இந்திய அணியின் மிகச்சிறந்த தலைவராகப் புகழப்படும் தோனி, பல முக்கியப் போட்டிகளில், அணி வெற்றிபெறுவதற்கான வியூகங்களை வகுத்து வெற்றியை நாட்டியவர். இவர், சமீபத்தில் தனது கேப்டன் பதவியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமைதாங்கிய விராட் கோலி, கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், தோனிக்கு தலைமைச் செயல் தலைவர் பதவி அளித்துள்ளது, கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனம்.

1983-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, 27 வருடங்கள் எட்டாக்கனியாக இருந்த கோப்பையை, தோனி தலைமையேற்று பெற்றுத்தந்தார். ஏப்ரல் 2 , 2011ல் இலங்கையுடனான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.  ஆறு வருடங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், தோனியைக் கவுரவப்படுத்தும் நோக்கில் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக,  கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் டிக்கெட் பரிசோதகராக ஆரம்ப காலத்தில் பணியாற்றிய தோனி, இந்திய அணியின் தலைவராகி, இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தோனியின் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் புகழாரம் சூட்டிவருகின்றனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
மமதை கொள்ளல் வீண் பெருமை
 

article_1491278887-brain_2410886f.jpgஅதிகாரத்தைப் பிரயோகிப்பது என்னும் விடயத்தில் உயர்பதவி வகிப்பவர்கள் மட்டுமல்ல, எல்லாத் தரத்தினர்களுமே தத்தமது தொழில்கள் விடயத்தில், மற்றவர்களிடம் தங்களது தொழிலுக்கு ஏற்ப, அதிகார தோரணையிலேயே நடந்துகொள்கின்றார்கள்.

நீங்கள் ஓர் அலுவலகத்துக்குச் செல்கின்றீர்கள். அங்கே உங்களுடன் பேசவரும் சிற்றூழியர் முதல் பெரும்பாலானவர்கள் தமது அதிகார நிலையைக் காட்டவே விழைவார்கள். இதுகூட மானுட இயல்புதான். கோபப்பட்டால் எமது காரியம் முடியாது. 

மனிதர்களுக்கு ஆதிக்க உணர்வு வருவதற்கு தாழ்வுமனப்பாண்மையும் ஒரு காரணம்தான்.

ஆனால், அறிவுமுதிர்ச்சி, அனுபவமுடையவர்களில் சிலரே மட்டுமே, இந்த நிலை அநாவசியம், நிலையில்லாதது என்று உணர்வார்கள். அன்பானவர்கள் கடமையைப் புன்முறுவலுடன் செய்வார்கள். மமதை கொள்ளல் வீண் பெருமை.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோனியின் CEO புகைப்படம் சொல்லும் பாடங்கள்! #MorningMotivaion

தோனி

ஒரு  C.E.O (Chief Executive Officer)  எப்படி இருக்க வேண்டும்? எந்த C.E.O போல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இப்படி பல விஷயங்கள் இருக்கும். ஆனால் தோனியிடம் ஒரு சிஇஓ இந்த பாடங்களை கற்க வேண்டும் என்பது தான் இங்கு ஆச்சர்யம். ஆம் நேற்று கல்ஃப் ஆயில் இந்தியா தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தோனியை கெளரவிக்கும் வகையில் தோனியை அந்த நிறுவனத்தின் C.E.O-வாக அறிவித்தது. தோனி C.E.O  இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது. இந்தப் புகைப்படத்தில் தோனியின் லுக் மற்றும் அவரை சுற்றியிருந்த விஷயங்கள் ஒரு C.E.O எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது. 

1. பிராண்டுடன் அசோசியேட் ஆகுங்கள்!

ஒரு நிறுவனத்துக்கு நீங்கள் C.E.O என்றால் நீங்கள் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை ரசித்தாலும் உங்கள் பிராண்டை ரசிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் உங்களை பிராண்டுடன் இணைந்த நபராக பார்ப்பார்கள். ஆப்பிள் C.E.O ஆன்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துவது போன்ற புகைப்படம் ஒரு நாளும் இடம்பெறாது. அதையே தான் தோனியும் செய்திருக்கிறார். அவர் இருக்கும் C.E.O அறையில் பின்னால் உள்ள சுவற்றில் சி.எஸ்.கே உடை அணிந்த புகைப்படம் இருக்கும். கல்ஃப் ஆயில் இந்தியா சி.எஸ்.கே-யின் ஸ்பான்சர். அதற்காக தான் அந்த படத்தை மாட்டிருக்கிறார்கள். இந்திய கேப்டனாக உலகக் கோப்பையை வென்ற புகைப்படத்தை கூட மாட்டியிருக்கலாம். ஆனால் ஒரு C.E.O அந்த பிராண்டுடன் இணைந்திருக்க வேண்டிய அவசியத்தை தோனியின் புகைப்படம் உணர்த்துகிறது.

2. வேலை - குடும்பம் சமநிலை

என்னதான் ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தாலும் அவர் குடும்பத்தையும் அவர் கவனிக்க வேண்டும். வேலை மட்டுமே பிரதானமாக இருக்க கூடாது. குடும்பமும் முக்கியம் என்பது அனைவருக்குமான விஷயம். மார்க் சக்கர்பெர்க்  உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனத்தின் C.E.O. ஆனால் அவர் தன் குழந்தை , மனைவியுடன் அடிக்கடி நேரம் செலவிடுகிறார். இதுதான் அவரைத் தனித்துக் காட்டுகிறது. இந்தப் புகைப்படத்தில் தோனி அமர்ந்திருக்கும் மேஜையில் அவரது குழந்தை புகைப்படம் இருக்கும். இது ஒரு C.E.O வேலை-குடும்ப சமநிலையை சரியாக வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

3. மிஸ்டர். பர்ஃபெக்ட்

மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக ஒரு சிஇஓ இருக்க வேண்டியது அவசியம். அவரது உடை சரியானதாக இருக்க வேண்டியது அவசியம், ஃபேஸ்புக் C.E.O மார்க் க்ரே டி-ஷர்ட் என்று தன்னை அடையாளப்படுத்தினாலும் முக்கியமான மீட்டிங்கில் கோட் சூட்டுடன் வலம் வருவதைக் காணலாம். அதேபோல் ஒரு C.E.O தனக்கான வேலைகள் அடுத்து என்ன என்பதை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். தோனியின் புகைப்படமும் அதைத்தான் சொல்கிறது. கோட் சூட் உடை, மேஜையில் அடுத்த வேலைக்கான Agenda  என பர்ஃபெக்ட் C.E.Oவாக இருக்கிறார் மஹி.

இந்த விஷயங்களையெல்லாம் C.E.O ஆக விரும்புபவரும், C.E.Oவாக இருப்பவரும் கட்டாயம் பின்பற்றினால் வெற்றி உங்களை பிரபலமாக்கும். டிக்கெட் கலெக்டர் எம்.எஸ்.தோனி என்ற பெயர் பலகை C.E.O எம்.எஸ்.தோனி என மாறுவதற்குப் பின்னால் உள்ள உழைப்பையும், முனைப்பையும் நீங்களும் காட்டினால், உங்கள் பெயர்ப் பலகையிலும் மாற்றம் வரும் நாள்  வெகு தொலைவில் இல்லை பாஸ்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அட... தமிழ் சினிமால இப்படித்தான் எடுக்குறாங்களா பேய்ப் படம்?!

பொதுவாக பேய்ப் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அப்படி எல்லா மொழி பேய்ப் படங்களிலும் பொதுவான சில விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அந்த விஷயங்களையெல்லாம் கொஞ்சம் பார்ப்போம் வாங்க!

* படம் ஆரம்பிக்கும்போது 'கோலிவுட்', 'ஹாலிவுட்' என எல்லா 'வுட்' படத்துலையுமே நார்மல் ஃபேமிலி, ஆட்டம், பாட்டம், லவ், ரொமான்ஸ் என எல்லாமே கலந்த கலவையாய்தான் இருக்கும். சாதாரணமாக வீட்டு வாழ்க்கை எப்படிப் போகுமோ அப்படித்தான் போகும். என்ன ஒன்று படம் ஆரம்பிக்கும்போது குடும்பத்தோடு ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஷிஃப்ட் ஆகி வருவார்கள். அந்த இடம் பாழடைந்த பங்களாகவோ, காட்டுக்கு நடுவில் சுற்றிலும் எந்த வீடுகளும் இல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகவோ இருக்கும்.

பேய்ப் படம்

* வீட்டில் எல்லோரும் வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள். அந்த நேரத்தில் யாராவது ஒருவர் மட்டும்தான் வீட்டில் தனியாக இருப்பார். அநேகமாக அது ஹவுஸ் ஒய்ஃப் ஆக இருக்கும், கூடவே ஒரு கைக்குழந்தை இருந்தால் அது போனஸ். அந்த நேரத்தில் அவரைச் சுற்றி ஏதோ நடப்பது போல் தோன்றும். கிச்சனில் பாத்திரங்கள் திடீரென விழுந்து சவுண்ட் எழுப்புவது, கை தட்டும் ஓசை கேட்பது, நாய்க்குட்டி குறிப்பிட்டு இடத்தைப் பார்த்து குரைப்பது என இது போன்று பல விஷயங்கள் நடக்கும். 

* பின்னிரவு நேரத்தில் அழுகைக் குரல், யாரோ பேசுவது போன்ற குரல் இவ்வாறு அந்த வீட்டில் இல்லாத வேறு யாரோ ஓர் ஆளின் குரல் கேட்கும். அதுவும் குறிப்பாக ஒருவருக்கு மட்டும்தான் கேட்கும். மார்னிங் ஷிஃப்ட்டில் வேறு ஆள், நைட் ஷிஃப்ட்டில் வேறு ஆள். என ஷிஃப்டிங் பேஸிசில் பேய் பயம் காட்டும். என்ன சத்தம்? என்று தூக்கத்தில் இருந்து எழுந்து சென்று பார்க்க வழக்கம்போல் யாரும் இருக்க மாட்டார்கள். லைட்டா பயம் காட்ட நிழல் அல்லது கறுப்பு உருவம் கண்டிப்பாக ஆடியன்ஸைப் பயமுறுத்துவதற்காக நடக்கும். நிழலும் கறுப்பு உருவமும் இடம் பெறாத பேய்ப் படம் இருந்தால் அந்தப் படம் அம்போதான். 

பேய்ப் படம்

* படம் ஆரம்பத்திலிருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் ஒரு கேரக்டரை வைத்து பயம் காட்டியே வருவார் டைரக்டர். அந்த கேரக்டர் மட்டும் விசித்திரமாக ஏதாவது பண்ணிக்கிட்டேதான் இருக்கும். அப்படி எதுவும் செய்யவில்லையென்றால் அந்த கேரக்டரின் முகத்தைக் காட்டி திகில் பி.ஜி.எம் போட்டு பயத்தைத் தக்க வைப்பார் டைரக்டர். எந்த டயலாக்கும் அந்த கேரக்டருக்கு இருக்காது. மொத்தத்தில் அது டம்மிதான். ஆனால் கண்ணையெல்லாம் பெரிது பண்ணி கேமராவை முறைப்பதுதான் அந்த கேரக்டருக்கு வேலையாக இருக்கும்.

* படம் முழுவதுமாக இப்படியே போய்க்கொண்டிருந்தால் போர் அடிக்கத் தொடங்கிவிடும் என்று டைரக்டர் நினைக்க அப்போதுதான் கதைக்குள் வருவார். பயம் காட்டும் சீக்வென்ஸ் அதிகமாகி பேய்தான் இந்த வீட்டில் இருக்கு என்பதை எல்லோருக்கும் உணர்த்துவார். திடீரென எரிந்த முகம் நம் கண் முன்னாடி வருவது, ஒளிந்து பிடித்து விளையாடிய கறுப்பு உருவம் நேருக்கு நேர் வருவது என இது போன்ற சம்பவங்கள் நடக்கத் தொடங்கிவிடும். அந்த வீட்டின் ஓர் ஆளுக்குத்தான் பேய் பிடித்திருக்கும். அந்த ஆளையும் கடைசியில் பேயிடமிருந்து ரிலீஸ் பண்ணிடுவாங்க. 

பேய்ப் படம்

* கிட்டத்தட்ட படம் க்ளைமாக்ஸிற்கு நெருங்கிவிடும். அப்போதான் செகண்ட் ஹீரோவின் என்ட்ரி. அவர் வயதானவாராகக்கூட இருக்கலாம். வீட்டின் வாசலில் அவரது வலது காலை எடுத்து வைத்தே வீட்டில் பேய் இருக்கிறதா? இல்லையா? எனக் கண்டுபிடித்துவிடுவார். பின் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் அவரும் மெயின் ஹீரோவும் சில பல மாந்திரீகங்களைக் கையாண்டு பேயை விரட்டும் திட்டத்தில் இறங்கிவிடுவார்கள். தத்ரூபமான க்ராஃபிக்ஸ்களை யூஸ் பண்ணி படத்தின் சுவாரசியங்களை கூட்டிவிட்டு படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்திவிடும். நாமும் ஜாலியா வீட்டுக்கு வந்திடுவோம். 

 

இதான் பாஸ் பேய்ப் படம்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.